சனி, 26 ஏப்ரல், 2025

அமித் ஷா அடாவடி : பாகிஸ்தானியர்கள் யாரும் இருக்கக்கூடாது : மாநில முதல்வர்களிடம் பேசிய Amit shaw Jain

மின்னம்பலம் -  Kavi : பாகிஸ்தானியர்கள் யாரும் நம் நாட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். Amit Shah spoke to state chief ministers
கடந்த 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் வரை உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அமைப்பான தி ரெசிடண்ட் ப்ரண்ட் பொறுப்பேற்றிருக்கிறது.
இந்தநிலையில் பாகிஸ்தான் மீது இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் சிந்து நதி நீரை நிறுத்தியது. இதற்கு பதிலடியாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்தது.

திருவள்ளுவரை வணங்கும் கேரளா மக்கள்

May be an image of 1 person, temple and text that says 'Exclusive: எங்களுக்கு 'திருவள்ளுவர் கடவுள்; 'திருக்குறள்' தான் வேதம்! 50 ஆண்டுகளாக வணங்கும் கேரள மக்கள்!- THIRUVALLUVAR TEMPLE IN KERALA கடந்த 50 ஆண்டுகளாக திருவள்ளுவரை ஞானகுருவாக கேரள மக்கள் போற்றி வணங்கி வருகின்றனர். ትዜማማ -'

 keral thiruvalluvarM Ponnusamy : எங்களுக்கு ‘திருவள்ளுவர்’ கடவுள்; ‘திருக்குறள்’ தான் வேதம்! 50 ஆண்டுகளாக வணங்கும் கேரள மக்கள்! கடந்த 50 ஆண்டுகளாக திருவள்ளுவரை ஞானகுருவாக கேரள மக்கள் போற்றி வணங்கி வருகின்றனர்.
இரண்டே அடியில் உலகையே அளந்த தெய்வப் புலவன் திருவள்ளுவருக்கு நிகரான மற்றொரு கவிஞரும், புலவரும் இந்த அகிலத்தில் இதுவரை பிறந்ததும் இல்லை; இனியும் பிறக்கப் போவதில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதனை உணர்ந்ததன் காரணமாகவே, அவரது ஈடு இணையற்ற நூலான திருக்குறள், உலகம் முழுவதும் பெருவாரியாக மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு தமிழுக்கும், தமிழர்களுக்கும் அழியாப் புகழை கொடுத்துவிட்டு மறைந்த ஐயன் திருவள்ளுவரை, ஒரு பகுதி மக்கள் கடவுளாக வணங்குகின்றனர்.
ஆனால், இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இதை செய்வது நமது அண்டை மாநிலமான கேரளாவில்தான்.

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

துருக்கியில் நிலநடுக்கம் 6.2 on the Richter scale||

 தந்தி டிவி : துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால்
மக்கள் அலறியபடி கட்டடங்களை விட்டு வெளியேறினர்.
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் அருகே ஏற்பட்ட இந்த
நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
ரிக்டர் அளவில் 6.2 ஆக் பதிவாகியுள்ள இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள், அந்நாட்டின் தொலைகாட்சி நேரலைகளில் பதிவாகியுள்ளன.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா? செந்தில்பாலாஜி, பொன்முடி வழக்குகள் விவகாரம்:

 hindutamil.i  :  சென்னை: அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி மீதான வழக்குகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுக உட்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில், திமுகவின் அமைச்சர்கள் சந்திக்கும் சட்டரீதியான பிரச்சினைகள், அமைச்சரவை மாற்றத்துக்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

மன்னாரில் இருந்து ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை சுற்றுலா பயணிகளுக்கு படகு சேவை

 காலைக்கதரி : மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
இப் படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (22) மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பத்திநாதன் மற்றும் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எம். கீர்த்தி ஸ்ரீ சந்திரரத்ன மற்றும் பிரதேச செயலாளர்,முப்படையினர், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வியாழன், 24 ஏப்ரல், 2025

பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் செல்ல தடை: முடிவுக்கு வந்த 65 ஆண்டு கால ஒப்பந்தம்

 தினத்தந்தி  : பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் செல்ல தடை.. முடிவுக்கு வந்த 65 ஆண்டு கால ஒப்பந்தம்
சிந்து நதி நீரை தேக்கிவைக்க வேண்டும் என்றால், இந்திய அணைகளின் கொள்ளளவை மேலும் உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம்மில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.

பஹல்காம் தாக்குதல் - கனடா கண்டனம்

 மாலை மலர் : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்தியாவை உள்ளடக்கிய G7 குழுவில் உறுப்பினராக நாடுகளில் கனடா மட்டும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தது. கனடாவின் மௌனம் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் தாக்குதல் நடந்து 30 மணி நேரம் கழித்து அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அஜித் தோவல்! இது ஒரு முக்கியமான பிளாஷ் பேக் செய்தி:- அஜித் தோவல்!


இது ஒரு முக்கியமான பிளாஷ் பேக் செய்தி:- அஜித் தோவல்!
1988 ஆம் ஆண்டு அமிர்த்தசாரஸ் சீக்கியர்களின் பொற்கோயிலை காலிஸ்தான் தீவிர வாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்
அந்த காலிஸ்தானியர்களின் இருப்பிடங்களை வேவு பார்ப்பதற்கு இந்திய உளவு பிரிவை சேர்ந்த இதே அஜித் தோவல் மாறுவேஷத்தில் உள்ளே நுழைந்தார்.
அதுவும் எந்த வேஷம்?
பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உளவாளி வேஷத்தில் உள்ளே நுழைந்து காலிஸ்தான் தீவிரவாதிகளோடு நல்ல உறவை ஏற்படுத்தி கொண்டார்
பொதுவில் இந்த விடயத்தில் தீவிரவாதிகளை பயங்கரவாதிகளை  ஏமாற்றுவது இலகுவல்ல.

தன்னை ஒரு இஸ்லாமியராக,
அதுவும் பாகிஸ்தானின் அரச உளவாளியாக காலிஸ்தானியர்களை நம்பவைத்தது சாதனைதான்.
அவர்களோடு நெருங்கி  அவர்களின் ஆயுத இருப்பிடங்களை அறிந்து கொண்டார்.

புதன், 23 ஏப்ரல், 2025

PTR சுயமரியாதை இயக்க பாரம்பரியத்தில் வந்த அசல் திராவிட இயக்க வாரிசு!

 Vimalaadhithan Mani :   நான் பெரிதும் மதித்து போற்றும் அண்ணன் PTR பழனிவேல் தியாகராஜனை எனக்கு ஏன் ரொம்ப பிடிக்கும் தெரியுமா ?
யார் இந்த PTR பழனிவேல் தியாகராஜன் ??
PT.இராசன்‌ - அவங்க தாத்தா நீதி கட்சியின் தலைவர், முன்னாள் சென்னை மாகாண முதல்வர்.
PTR பழனிவேல் ராஜன் - அவங்க அப்பா, தமிழக சட்டமன்ற சபாநாயகர், இந்து அறநிலையத்துறை அமைச்சர்.
PTR.பழனிவேல் தியாகராஜன் - உலகின் பல நிதி நிறுவனங்களில் பெரும் பொறுப்பு வகித்த புத்திசாலி மற்றும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர்,இன்று தமிழக ஐடி துறை அமைச்சர் (முன்னாள் நிதித்துறை அமைச்சர்).
இதுவரை PTR.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சுமார் 60 நாடுகளுக்கு பணி நிமித்தமாக பயணம் செய்துள்ளார் .

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

செங்கல்பட்டு ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு

 Hindu Tamil : சென்னை: “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக” சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, “செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சியில் உள்ள ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?” என அத்தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கேள்வி எழுப்பினார்.

ஈழத்தின் முதல் போராட்ட வீராங்கனை புஷ்பராணிக்கு வீரவணக்கம்

May be an image of 1 person and smiling

ராதா மனோகர்  : எந்த போராட்டமாக இருந்தாலும் அவற்றில் முதல் வரிசையில் நிற்பவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள்தான்.
இயல்பிலேயே போராட்ட குணம் இருப்பதுவும் ஒரு காரணம்
இதுவரை சக மனிதர்களாகவே மதிக்க மறுக்கும் தலைவர்கள் அல்லது இயக்கங்கள் போராட்ட ஆள் சேர்ப்பு என்ற நோக்கத்திலாவது நம்மை அழைக்கிறார்கள் என்று அவர்களின் அழைப்பு கரத்தை பற்றுவது ஒரு மானிடவியல்பு சார்ந்த விடயம்!
இதுவரை நேருக்கு நேர் பார்க்கவே தயங்கிய மனிதர்கள் நேருக்கு நேர் பார்த்து அழைப்பது அவர்களின் உள்மனதை தொட்டிருப்பதில் வியப்பில்லை.
தமிழரசு கட்சியின் ஜாதி அரசியலை புரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்

சென்னையின் 6 முக்கிய சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாறுகிறது-மாநகராட்சியின் திட்டம்!

 tamil.samayam.com -Subramani :  சென்னை மாநகராட்சியும், பெருநகர வளர்ச்சிக் குழுமமும் இணைந்து காமராஜர் சாலை உட்பட ஆறு முக்கிய சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்றும் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. இந்த விரிவாக்கம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) ஆகியவை இணைந்து ஆறு முக்கியமான சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்றும் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. இந்த விரிவாக்கம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு PTR அவர்களை DMK அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்ல!

 ஜெயதேவன் :  திரு பி டி ஆர் பழனிவேல் தியாக ராசன் அவர்களை அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அந்த ஆதங்கம் அவருக்கும் உள்ளுக்குள் இருப்பதை இன்றைய சட்டமன்ற பேச்சு மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது.
தன்னுடைய துறை சார்ந்த மானிய கோரிக்கை மீது ஒரு உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் சொன்னார் "நீங்கள் கேட்டுக்கொண்ட தேவையை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கான நிதியோ அதிகாரமோ என்னிடத்தில் இல்லை .
அதிகாரமும் நிதியும் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் நீங்கள் கேட்டால் ஆவன செய்யலாம் "என்று பொருள்பட சட்டமன்றத்தில் கூறினார்

திங்கள், 21 ஏப்ரல், 2025

திருமாவளவன் : நாம் திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? எந்த முடிவும் எம்மால் முடியும்

 மின்னம்பலம் - ஆரணி : “இன்று காலை ஆங்கில நாளேட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘பாமக…. திமுக கூட்டணிக்கு வரக்கூடும், விசிகவோ, அதிமுக கூட்டணிக்கு சென்றுவிடும் என்று சில பேச்சுக்கள் எழுந்துள்ளது.
அதனால் தான் ராமதாஸ், அன்புமணி இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறதே?’ என்ற கேள்விக்கு, ‘இந்த ஊகங்களை புறக்கணித்து விடுங்கள்.

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

துரை வைக்கோ மல்லை சத்தியா சமாதானம் .. அப்பா பிள்ளை நாடகம் தொடர்ந்து நடக்கும் ஓவர் ஓவர்

 மின்னம்பலம் ஆரன்  துரை வைகோ-மல்லை சத்யா… கட்டிப்புடிச்சி காம்ப்ரமைஸ்! நடந்தது என்ன?
மதிமுகவுக்குள் அதன் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிணக்குகள் இன்று (ஏப்ரல் 20) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்த்து வைக்கப்பட்டது.
காலை 10.30-க்கு தொடங்கிய இந்தக் கூட்டம் மதிய உணவு இடைவேளையோடு சேர்த்து பிற்பகல் 4 மணி வரை நடந்தது. கூட்டம் முடிந்த பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

துரை வைக்கோ மல்லை சத்யா மோதல்! உடையும் மதிமுக?

 Hindu Tamil  :  மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடனான மோதல் காரணமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
இன்று கூடும் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 அக்டோபர் மாதம் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்கெடுப்பு அடிப்படையில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அவர் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, மதிமுக இளைஞரணி செயலாளராக இருந்த கோவை ஈஸ்வரன், அவைத் தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

கருணா, பிள்ளையானின் வெளியேற்றமே புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்! முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன

 ceylonmirror.net   :  கருணா, பிள்ளையானின் வெளியேற்றமே விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் – தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறவே பிள்ளையானை அநுர அரசு கைது செய்தது.
“கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் வெளியேறியமையால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்ச்சியடைந்தது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அநுர அரசு அரங்கேற்றியிருக்கும் நாடகமே பிள்ளையான் கைதாகும்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
களுத்துறை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,