சனி, 8 நவம்பர், 2014

இந்தியாவிலும் எபோலா பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன! அரசின் மெத்தன போக்கு?


நோய் கண்டவரிடம் தொடர்பில் இருப்பவர்கள் 28 நாட்களில் இந்த நோய்க்கு ஆளாக நேரிடும்
மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியா நாட்டில் லோபா என்ற மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு அந்த மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தலையில் மூட்டை, கையில் குழந்தைகள், வியர்வை வழிந்தோடும் முகத்தில் மரண பயம்! ஆனால், பக்கத்து கிராமத்துக்குள் நுழைவதற்கு முன்பாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். உள்ளே வாராதபடி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
“உள்ளே நுழைந்தால் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டுகிறார்கள், பக்கத்து கிராமத்து மக்கள். அவர்களும் அச்சத்தால் உறைந்திருக்கிறார்கள். தங்கள் ஊருக்கும் எபோலா பரவிவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு. ஓடிவந்தவர்களுக்கோ தங்கள் கிராமத்துக்குத் திரும்பிப் போக பயம். கிராமத் தெருக்களில் எபோலா தாக்குத லால் கைவிடப்பட்டவர்கள் நினைவற்றுக் கிடக்கிறார்கள். சில உடல்களும் கேட்பாரற்ற முறையில் ஆங்காங்கே கிடக்கின்றன.  எபோலா வெளியில் இருந்து வரவேண்டியதில்லை நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகலிலேயே உருவாக்கிவிடுவார்கள்

ப.சிதம்பரம் : 2ஜி விவகாரத்தை அடுத்து மன்மோகன் சிங் ராஜினாமா செய்திருக்க வேண்டும்! பதவி இல்லைன்னா துடிக்கிறாரு பசி பசி பசி?


2ஜி அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தில்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் கூறும்போது, "2ஜி அலைக்கற்றை முறைகேடு மீதான வழக்கில் அமலாக்கத்துறை அளித்திருக்கும் அறிக்கைகள் காங்கிரஸ் கட்சிக்கு வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது.
இந்த விவாகாரத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முந்தைய மத்திய அரசு வேறு வகையில் கையாண்டு இருக்கலாம் அல்லது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிக்கு மறுப்பு தெரிவித்து, அனுமதி வழங்காமல் முதல் வருவோருக்கு முதல் உரிமை என்ற தவறான அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.
அல்லது ஒதுக்கீடு முடிந்த பிறகாவது, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் ஒதுக்கீடு உரிமங்களை அவர் ரத்து செய்து அவர் உத்தரவிட்டிருக்கலாம் என்பதே எனது கருத்து. அதாகப்பட்டது எனது உதவாக்கரை  மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்ற நிலையில் நான் என்ன செய்யமுடியும் ? எனக்கோ அல்லது எம்மவனுக்கோ  காங்கிரஸ் தலைவர் பதவி தந்திருக்கலாம்? தரல்லியே ?  இப்படி உங்கள் பெயரை ஏதாவது ஒரு வகையில் கேள்விக் குறியாக்கித்தான்  எனது அரிப்பை சொரிந்து கொள்ள முடியும்

நடிகரும் இசை கலைஞர் மீசை முருகேசன் காலமானார் .

உடல்நலக் குறைவால் நடிகரும், இசைகலைஞருமான மீசைமுருகேசன் காலமானார். அவருக்கு வயது 85 .
தவில் வித்வான் சுப்ரமணிய முதலியாரின் மகனாக பிறந்தவர் ஐ.எஸ்.முருகேஷ் எனும் மீசை முருகேசன். தந்தையை போலவே இவரும் இசையில் ஆர்வம் மிக்கவர். கொட்டாங்குச்சியில் இசை வாசிப்பதில் இவர் மிகப்பிரபலம். கே.பி.சுந்தரம்மாள், தியாகராஜா பாகவதர், டி.எம்.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமான இசை மேதைகளிடம் பணியாற்றி இருக்கிறார்.
இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் ஆர்வம் மிக்கவர். ஆண்பாவம், பூவே உனக்காக உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் மீசை முருகேசன். தமிழகம் தவிர்த்து உலகநாடுகள் பலவற்றிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். கலைத்துறையில் இவரது சேவையை பாராட்டி தமிழக அரசுக்கு, இவருக்கு கலைமாமணி விருது வழங்கியுள்ளது.தினமலர்.com

ஜெயலலிதாவின் Bio Data:அதிர்ச்சி அளிக்கும் மறைக்கப்பட்ட உண்மைகள் ! ஒரே கட்டுரையில்! வினவு.com

தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக,
தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா!தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி ! சதி என்ற சொல் ஜெயலலிதாவின் அரசியல்
வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அவர் தன்னை எம்.ஜி.ஆரின் உடன்கட்டை (சதி) என்று அறிவித்துக்
கொண்டவர்.தற்போது குன்ஹாவின் தீர்ப்புப்படி, அவர் கூடிச் சதி செய்து கொள்ளையடித்த குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது இ.பி.கோ 120 – பி பிரிவின் படியான சதி. அ.தி.மு.க. அடிமைகளின் கூற்றுப்படி அம்மாவுக்கு எதிரான இத்தீர்ப்பு ராஜபக்சே அரங்கேற்றியிருக்கும் சர்வதேசச் சதி. தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக,
தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா. இவை ஒருபுறமிருக்க, நாம் இங்கே கூறவிரும்பும் சதி என்பது தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பனச் சதி! இந்தச் சதியின் நாயகி – ஜெயலலிதா.

புட்டபர்த்தியில் ஆஸ்திரேலிய பெண் கொன்று புதைப்பு: 3 பேர் கைது

Toni Anne Ludgate, a devotee of Sri Sathya Sai Baba, who was on a pilgrimage to the town, was murdered by watchman of an apartment where she was staying.
Police began a search for the woman Friday morning after one of her family members who flew in from Australia lodged a complaint with the Puttaparthi police saying they had lost communication with her in August-end.
புட்டபர்த்தி: புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் ஆஸ்திரேலியா பெண் பக்தையை கொலை செய்து புதைத்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டோனி ஆன்னி லட்கேத் (75) சாய்பாபாவின் தீவிர பக்தை. ஆண்டுதோறும் இவர் புட்டபர்த்திக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து பக்தர்களுக்கு சேவை செய்வது வழக்கம். இந்நிலையில் புட்டபர்த்தியில் உள்ள சாய் குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்த இவர், கடந்த செப்டம்பர் 20-ம் தேதியிலிருந்து காணவில்லை. ஆகஸ்டு 28-ஆம் தேதி பெங்களூர் செல்வதாக கிரேட்விடம் கூறிவிட்டு புறப்பட்டார். மறுநாள் முதல் அவரைக் காணவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. செப்டம்பர் 12-ஆம் தேதி வரை காத்து இருந்த சக தோழியான கிரேட் இது குறித்து புட்டபர்த்தி போலீசில் புகார் செய்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள டோனியின் மகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து டோனி மகள் இந்திய தூதரகத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கினர். குடியிருப்பு வளாக காவலாளி பகவன்துடு மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் டோனியை அவர் கொன்று புதைத்தது தெரிய வந்தது.

ஹை... ஃபேஸ்புக்! சீனியர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள Facebook !

.ஆஷிகா,  படங்கள்: பா.காளிமுத்து, ர.சதானந்த்'ஃபே
ஸ்புக்... கடிவாளமற்ற இளைஞர் உலகம்’, 'முகநூல், முழு நேரத்தையும் விழுங்கிவிடும்’ என்பது போன்ற நெகட்டிவ் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், 'இந்த ஃபேஸ்புக் எங்களுக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது தெரியுமா?!’ என்று சீனியர்கள் பலரும் சப்போர்ட் செய்வது... ஆச்சர்யத்தை அள்ளி வீசுகிறது! 'ஃபேஸ்புக்’குக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன... இந்த சீனியர்களின் பாஸிட்டிவ் வார்த்தைகள்!
சுப்பிரமணியன் (ஓய்வுபெற்ற சீனியர் எக்ஸிக்யூட்டிவ், ரிசர்வ் வங்கி): ''என்னோட ரிட்டயர்ட்மென்ட் வாழ்க்கையை பரபரப்பாக்கிட்டு இருக்கிறது, ஃபேஸ்புக்தான். பல நிறுவனங்களில் ஆலோசகராகவும், உறுப்பினராகவும் இருக்கும் நான், இதுவரை 35 நாடு களுக்கு பயணம் பண்ணியிருக்கேன்.

ஜெயலலிதா விசாரிக்கிறார்: யார்யார் சிறைக்கு வந்தார்கள்? மண்சோறு சாப்பிட்டார்கள் ? யார்யார் ஒழுங்கா அழல்ல?கலக்கத்தில் கட்சியினர் ...

ஜெயலலிதா சிறைக்கு  சென்று வந்ததிலிருந்து கட்சி நடவடிக்கைகளை தீவிரமாக கவனித்து வருகிறார். உளவுத்துறை வழங்கிய ரகசிய ரிப்போர்ட் அடிப்படையில் தான் சிறையில்  இருக்கும்போது யார் யார் சிறைக்கு வந்தார்கள்? சிறைக்குள் வந்து தன்னை பார்க்க யார் யார் மனு செய்தார்கள்?
திருச்சி: கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி அதிமுகவில் மனுக்கள் குழு அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான செல்வராஜ்,அப்போதைய ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்பழகன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்பி குமார், அமைச்சர் கோகுல இந்திரா  உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். கட்சியினர் தங்கள் குறைகள், புகார்களை மனுவாக அளித்தால், மனுக்கள் குழுவினர் விசாரித்து ஜெயலலிதாவிடம் அறிக்கை  சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி மனுக்கள் குழுவினரை ஜெயலலிதா சந்தித்ததை அடுத்து, தொண்டர்களிடம் மனுக்கள்  பெறும் பணி துவங்கியது. கட்சி தலைமை அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. திருச்சி மாவட்டத்திலிருந்து முதல் நாளே 84 மனுக்கள் குவிந்தன. மொத்தம் 154  மனுக்கள் வந்தன.

கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நாடு ? 110 விதி அறிவிப்பு திட்டங்கள் தொடங்கப்படவே இல்லை.

பெரம்பலூர்: தமிழகத்தில் செயல்படாத ஆட்சி, கோமாளி ஆட்சி நடக்கிறது என்று பெரம்பலூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் பெரம்பலூரில் நேற்று மாலை நடந்தது. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தமிழக அளவில் 24 மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் இதர மாவட்டங்களிலும் ஆய்வுப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுவிடும். கடந்த தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. எத்தனை பெரிய சோதனைகள், வேதனைகள் வந்தபோதும் அயராமல் கம்பீரமாகமாக நிற்கக்கூடிய இயக்கம்தான் திமுக. எந்த தீயசக்தியாலும் இந்த இயக்கத்தை தொட்டுப்பார்க்கக்கூட முடியாது. தமிழகத்தில் இப்போது பினாமி ஆட்சி தான் நடந்துவருகிறது. ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், மத்தியில் ஆட்சி மாற்றத்தை இளைஞர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கும் நிலை உருவாகியுள்ளது என்றனர். இக்கருத்து எனக்கு புதுநம்பிக்கையை அளித்துள்ளது. ஓட்ரா ராஜா ஓட்ரா ராஜா ஓடு .....

மோ(ச)டி! கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள்தான்! வரலாறு கண்டிராத டுபாக்கூர் ஆட்சி?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம், ஊழலை ஒழிப்போம், கருப்புப் பணத்தை மீட்போம்” என நரேந்திர மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் மார்தட்டி வந்தார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள்தான் என்ற பழமொழிக்கேற்ப, தேர்தல் சமயத்தில் மோடி ஆரவாரமாக அறிவித்த இந்தச் சவடால்கள் அனைத்தும் இப்பொழுது பல்லிளித்துவிட்டன.
ஆட்சியைப் பிடித்த மறுகணமே ரயில் கட்டண உயர்வை அறிவித்துப் பொதுமக்களைத் திடுக்கிட வைத்த மோடி, இதுவும் போதாதென்று இன்னொரு இடியை இப்பொழுது மக்களின் தலையில் இறக்கி வைத்திருக்கிறார். டீசல் விலையை சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இனி எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ள அனுமதித்திருக்கிறது அவரது அரசு. அதாவது, டீசலுக்கு இனி ஒரு பைசாகூட மானியம் கிடையாது என்பதுதான் இந்த இடியின் பொருள்.

ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனிக்கு ஒபாமா ரகசியக் கடிதம்

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கோரி, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசியக் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் வெளியாகும் "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையில் வெளியான செய்தி:
ஈரானில் உச்ச அதிகாரம் படைத்த மதத் தலைவர் அயதுல்லா கமேனிக்கு, அதிபர் ஒபாமா கடந்த மாதம் ரகசியக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஈரானின் ஆதரவை அவர் கோரியிருந்தார்.
எனினும், நவம்பர் 24-ஆம் தேதி கெடுவுக்குள் அணுசக்திப் பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் காணப்பட்டால்தான், ஐ.எஸ். விவகாரத்தில் அமெரிக்காவும், ஈரானும் இணைந்து செயலாற்றுவது சாத்தியமாகும் எனவும் ஒபாமா தெளிவுபடுத்தியுள்ளார்.

வெள்ளி, 7 நவம்பர், 2014

இந்தியாவில் பெண்களுக்கு பொது இடங்களில் சிறுநீர் கழிக்க இடமே இல்லை! அதிர்ச்சி தரும் உண்மை விடியோ ,


சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண் இயற்கை உபாதைக்காக இடம் தேடுகிறார். அதற்கான இடம் எது? ஆப்ஷன் ஏ. ஸ்பென்ஸர் ப்ளாஸா, ஆப்ஷன் பி. பிரிட்டிஷ் லைப்ரரி. ஆப்ஷன் சி. கலைவாணர் அரங்கம் என லிஸ்ட் இசட் வரை நீண்டுகொண்டே இருக்கும். ஆனால் பதில். உண்மையில் சரசாரியாய் ஓர் இந்தியப் பெண் தன்னுடைய 'ப்ளாடர்’ எனப்படும் சிறுநீர்ப்பையில் 13 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் பொறுமை காத்துத் தாங்கிக்கொள்கிறாள் என்பதுதான் அவலம் நிறைந்த உண்மை. காரணம் அவளுக்கான ஒதுங்கிடம் இங்கு இல்லவே இல்லை. இது போன்ற பெருநகரங்களில் பொது இடங்களில் அவதிப்படும் பெண்களின் சிக்கல்களை காமெடியுடன் 'ப்ராங்க்’ எனப்படும் சோஷியல் எக்ஸ்பரிமென்ட் வீடியோ படமாக்கி இருக்கிறார் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண். அந்தப் பெண்ணின் பெயர்கூட அந்த வீடியோவில் இல்லை.

கமலஹாசன் : சினிமா வலு பெறுவதற்கு, இலக்கியத்தின் பங்களிப்பு அவசியமாகிறது


‘உலக நாயகன்’ எனத் தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசனுக்கு 60-வது பிறந்தநாள். தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி, சக படைப்பாளியாகவும் பயணிக்கும் கமல் ஹாசனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து… உங்களுக்கு இதுவரை தமிழ் சினிமா செய்தவை என்னென்ன?
எதை நான் சொல்றது..? சம்பளம், பாடம், சவுக்கடிவரை எல்லாமே கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. நான் பெற்றவை எல்லாம் இங்கிருந்து பெற்றவைதான். கற்றவையும் துன்புற்றவையும் இங்கிருந்து வந்தவைதான்.
தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் மாற்றங்களை அப்டேட் செய்துகொண்டாலும்கூட, தமிழ் சினிமாவில் வர்த்தக ரீதியிலான சாதக நிலையை அனுபவிக்கும் சூழல் பரவலாகவில்லையே...
தொழில்நுட்பத்தை வளர விடமால், நாம் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். முற்காலத்தில் ஒரு கதை சொல்வார்கள்.

இந்திய தொழிலாளர்களின் உற்பத்தி திறன் 5 வீதம் உயர்ந்திருக்கிறது, ஆனால் சம்பள உயர்வு ஒரு வீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது ,

தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது
இந்தியத் தொழிலாளர்களைப் பற்றி நமது ஊடகங்கள் பேசும்போதெல்லாம் அவர்களின் வில்லத்தனத்தைப் பற்றிய பிம்பங்கள் பின் திரையில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. உற்பத்தியைப் பெருக்குவதில் நாட்டம் காட்டாதவர்கள், எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தம் செய்பவர்கள், சம்பள உயர்விலேயே குறியாக இருப்பவர்கள் போன்ற பிம்பங்களைக் காட்டுவதில் நமது ஊடகங்கள் குறியாக இருக்கின்றன.
வேலைநிறுத்தங்கள் குறைந்திருக்கின்றன. இந்தியத் தொழில்துறை கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்களின் படி 2003-ம் ஆண்டு வேலைநிறுத்தங்களினாலும் கதவடைப்புகளாலும் நாடு இழந்த உற்பத்தி நாட்கள் சுமார் 2.7 கோடி நாட்கள். இது பத்து வருடங்களில் 25 லட்சம் நாட்களாகக் குறைந்திருக்கிறது. அதாவது, 10 மடங்கு குறைந்திருக்கிறது.

நடிகை ஷ்ரேயா தனது ஒவிங்களை ஏலத்தில் விடப்போகிறார்,

நடிகை ஸ்ரேயா தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட்டு நிதி திரட்ட உள்ளார். ஸ்ரேயாவுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. சிறு வயதில் இருந்தே ஏராளமான ஓவியங்கள் வரைந்து வீட்டில் வைத்துள்ளார். குறிப்பாக பள்ளியில் படித்தபோது நிறைய ஓவியங்கள் வரைந்துள்ளார். தான் வரைந்துள்ள பகவான் கிருஷ்ணன் மற்றும் புத்தர் ஓவியங்களை ஏலம் விட ஸ்ரேயா திட்டமிட்டுள்ளார். இந்த ஏலம் மூலம் திரட்டும் தொகையை விசாகப்பட்டினம் புயல் பாதிப்பு நிதிக்கு வழங்கப் போகிறாராம். மற்ற ஓவியங்களையும் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் நிதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளார்.

வைகுண்டராஜன் ,ஜெகதீசன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி, அம்மாவின் மற்றொரு பினாமி !

மதுரை ஐகோர்ட் உத்தரவு தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக தலைவர் மா.சுப்பையா. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் வைகுண்டராஜனையும், அவரது தம்பி ஜெகதீசனையும் சிபிஐ குற்றவாளிகளாக சேர்த்தது.இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விவி மினரல்ஸ் பங்குதாரர்கள் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோர் மனுத்தாக்க்ல செய்திருந்தனர இந்த வழக்கு வியாழக்கிழமை நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவித்தததால் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி இரண்டு பேரின் முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.nakkheeran,in

சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியின் தேவை . உச்சநீதிமன்றம் சமுக நீதிக்கு எதிராக? ராமதாஸ் கருத்து ,


சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிய  உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயல்: ராமதாஸ் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவில் சமூகநீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1931 ஆம் ஆண்டு வரை சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்தியா விடுதலை அடைந்தபிறகு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், உண்மையான சமூகநீதியை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தான் ஒரேவழி என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.அருந்ததி ராய் அவர்கள் குறிப்பிடுவது போல மேல்ஜாதினர்கள்தான் பெரும்பாலும்  நீதிபதிகளாக இருக்கின்றனர் . சிதம்பரம் நடராஜர் கோவிலை எல்லாவிதமான  சட்டங்களையும் மீறி சுசாமி போன்றவர்களின் துணையோடு உச்சநீதிமன்றமே தீக்ஷதர்கள்  கையில் தாரைவார்க்க முடியும்  என்றால் நீதிதுறையை  பற்றி  என்னதான்  சொல்வது ?

அம்மம்மா ஜெயலலிதா மாறவில்லை? சகாயம் விவகாரத்தில் அதிமுக அரசின் செயல்பாடுகள் Same Old Jeya!

கதிர் Kathir
ஜெயலலிதா போயஸ் தோட்டத்துடன் அன்றாட வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு, ஆட்சிக்கு தலைமையேற்க பன்னீர் செல்வத்தை நியமித்த பிறகும் அதிமுக அரசின் செயல்பாடுகள் எதுவும் மாறவில்லை என்பது மட்டும் தெரிகிறது. சகாயம் விவகாரத்தை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். தமிழகத்தின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த பொதுநல வழக்கு தொடரப்படுகிறது. உயர் நீதிமன்றம் மனுதாரர் கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு, சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க ஆணையிடுகிறது. என்ன செய்திருக்க வேண்டும் பன்னீர் செல்வம் அரசு? நீதிமன்றத்தோடு இத்தனை காலமாக நடத்திய கண்ணாமூச்சி ஆட்டம் போதும். அதன் விளைவைத்தான் பெங்களூரில் பார்த்தோம்.

அப்புச்சி கிராமம்! பகைகள் எல்லாம் உறவாகிறது.கஞ்சன் எல்லாம் வள்ளல் ஆகிறார்கள் . பூக்காத காதல்கள் பூத்து குலுங்குகிறது. .

சென்னை: கோலிவுட்டில் புதியதாக வர இருக்கும் "அப்புச்சி கிராமம்" திரைப்படத்தினை ஏ.ஆர் முருகாதசிடம் உதவியாளராக இருந்த வி.ஐ.ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகங்கள் பிரவீன் குமார், அனுஷா கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் சுவாசிகா, சுஜா, கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, ஜோமல்லூரி, ஜி.எம்.குமார் ஆகிய பிரபல நடிகரகளும் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும் எனத்தெரிகின்றது. அறிவியல் வழியில் அன்பைச் சொல்லும் “அப்புச்சி கிராமம்” திரைப்படம்! பூமியை நோக்கி வரும் எரிகற்கள்: படத்தின் கதையின் படி, "சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியை நோக்கி ஆயிரக்கணக்கான எரிகற்கள் வந்து கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். எட்டு நாட்களில் பூமியின் அழிவு: இன்னும் 8 நாட்களில் அது பூமியை தாக்கும். அது தாக்குகிற இடத்தில் புல் பூண்டுகள் கூட தப்பிக்காது. 8 நாளில் கிட்டத்தட்ட உலகின் பெரும் பகுதி அழிந்து விடும். ஆனால் எந்தெந்த பகுதி அழியும், எது தப்பிக்கும் என்று தெரியாது. அப்புச்சி கிராம மனிதர்கள்: இந்த செய்தி உலகம் முழுவதும் பரவுகிறது. அப்புச்சி என்னும் கிராமத்துக்கும் செய்தி வந்து சேர்கிறது. பல்வேறு தரப்பட்ட வெள்ளிந்தியான மக்கள் வாழும் கிராமம் அப்புச்சி கிராமம். மனநிலையின் கோர்வைகள்: 8 நாளில் நாம் சாகப்போகிறோம் என்று கருதும் அந்த மக்களின் மனநிலையில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதுதான் கதை.

உறவினர்கள் அழுத்தி பிடிக்க கட்டாய தாலி !அதிர்ச்சி விடியோ ! கர்நாடகாவில் காட்டுமிராண்டித்தனம்!

துமகூரு (கர்நாடகா) : திருமண நிச்சயத்துக்கு பிறகு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று மணப்பெண் கூற, அதை ஏற்க மறுத்த பெற்றோர் கட்டாய தாலி கட்டச் செய்த சம்பவம் வீடியோவில் எடுக்கப்பட்டு யூடூப்பில் பரவியுள்ளது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள துமகூரு நகரைச் சேர்ந்த பெண் மது. இவரும் சோமசேகர் என்பவரும் ஏழு வருட காதலர்கள். சோமேசேகர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். காதல் விவகாரம் தெரிந்த நிலையில் ஓராண்டுக்கு முன்பே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து வைத்தனர் பெற்றோர்கள். ஆனால் சமீபகாலமாக சோமசேகர் செயல்பாடுகளில் மதுவிற்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவரை போல அவர் நடந்து கொண்டுள்ளார். எனவே சோமசேகரை திருமணம் செய்விக்க வேண்டாம் என்று பெற்றோரிடம் கூறத் தொடங்கியுள்ளார். ஆனால் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துமகூரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மணப்பெண்ணும் கட்டாயமாக அழைத்து வரப்பட்டார். ஆனால் தாலி கட்டும் நேரத்தில் முடியாது, வேண்டாம் என்று அவர் கத்தியபடி விலகபார்த்தார். இருப்பினும் மண மகன் கடமையே கண்ணாக தாலியை கட்ட, மணப்பெண்ணை பிடித்து அமுக்கி இரு தரப்பு உறவினர்களும் உதவியுள்ளனர். இந்த வீடியோ யூடூப்பில் போடப்பட்டுள்ளது. அதை பார்த்தால் கொடுமை தெரியும். இருப்பினும், தாலி கட்டும்போது கீழே விழுந்து உருண்டு அந்த தாலியை முழுமையாக கட்ட விடாமல் கழற்றிவிட்டார் மது. இதன்பிறகு போலீசார் தலையீட்டால் திருமணம் நிறுத்தப்பட்டது.
tamil.oneindia.com

திருட்டு சி.டி. சோதனை நடத்த நடிகர்களுக்கு அதிகாரம் இல்லை! விளம்பர ஸ்டன்ட்? முக்கால்வாசி படம் திருட்டு கதை,ஆபாசம்,வன்முறை, சமுக சீரழிவு !

சி.டி. கடைகளுக்குச் சென்று சோதனை செய்ய நடிகர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர்கள் தங்கள் படத்துக்கு விளம்பரம் தேட இவ்வாறு செய்கின்றனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
விஷால் நடித்த ‘பூஜை’ படம் சமீபத்தில் வெளியானது. படம் வெளிவந்த சில நாட்களில் நடிகர் விஷால் மற்றும் துணை நடிகர்கள் சிலர் பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளில் உள்ள சி.டி. கடைகளுக்கு சென்றனர். இங்கு திருட்டு சி.டி. விற்கிறார்கள் என்று அங்கேயே பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தனர். இவர்களைப் பார்க்க ஏராளமானோர் கூடியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
நடிகர் பார்த்திபனும் சமீபத்தில் இதுபோல் செய்தார். தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் திருட்டு சி.டி. விற்கப் படுகிறதா என்று சென்னையில் பர்மா பஜார் கடைகளில் முதலில் தன் உதவியாளர் மூலமாக சோதனை செய்தார். பிறகு அவரே நேரில் சென்று சோதனை நடத்தினார்.  பொதுவாகவே நடிகர்கள் முக்கால்வாசி வெறும் திருட்டு கம்மனாட்டிகள் என்று நடிகவேள் எம் .ஆர். ராதா சொன்னதை ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும்

புஸ்வானம் ! 628 Swissbank இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளில் பணம் இல்லை!

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 628 இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளில் பணம் இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படு கிறது.
இதுகுறித்த விவரங்களை அளிக்கு மாறு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சுவிட்சர்லாந்து அரசிடம் கோரி வருகின்றன. ஆனால் அந்த நாட்டு அரசு விவரங்களை அளிக்க மறுத்து வருகிறது.
இந்நிலையில் 2008-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் அந்த வங்கியின் வாடிக்கையாளர் விவரங்களை திருடி பிரான்ஸ் அரசிடம் அளித்தார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அந்த விவரங்களை பிரான்ஸ் அரசு மத்திய அரசிடம் அளித்தது.  கோழி மிதிச்சு குஞ்சு சாவுமா? எவன் வந்தாலும் அல்லாம் அம்பானி டாடா கையில தாண்டோய்? இப்ப புரியுதா ? எல்லோரும் ரொம்ப நல்லவிங்கடோய்! நீயும் நானும் அப்ப யாரு? ஒண்ணுமேபுரியல்ல 

மத்தியில் மீண்டும் மூன்றாவது அணி ? காங்., பா.ஜ., கூட்டணி அல்லாத கட்சி தலைவர்கள் சந்திப்பு!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 24ந் தேதி தொடங்கி நடக்கவுள்ள நிலையில் டெல்லியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் இல்லத்தில் மதிய விருந்துடன் கூடிய காங்., பா.ஜ., கூட்டணி அல்லாத கட்சி தலைவர்கள் சந்திப்பு வியாழக்கிழமை நடந்தது.இதில் லாலு பிரசாத், சரத் யாதவ், நிதிஷ் குமார், தேவே கவுடா, இந்திய தேசிய லோக்தளத்தின் மூத்த தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தனர்.

நடிகர் சல்மான்கான் மோடி சந்திப்பு ! மான்வேட்டை வழக்கு டீல் மேக்கிங் ?

நடிகர் சல்மான் கான் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை. அண்மையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதை முன்னோக்கி செயல்படுத்த 9 பிரபலங்களை நியமித்தார். அதில் சல்மான் கானும் ஒருவர் ஆவர். தூய்மை இந்தியா திட்டத்துக்கு தன்னை நியமித்ததற்காக மோடிக்கு சல்மான் கான் பாரட்டு தெரிவித்து இருந்தார்.அதேபோல், தூய்மை இந்தியா திட்டத்தில் அவராகவே தன்னை இணைத்து கொண்டார் என்று பிரதமர் மோடியும் சல்மான் கானை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

பாரிஸ் முனியாண்டி விலாசில் தமிழர்கள் கோஷ்டி மோதல்! தேமதுர தமிழோசை உலகமெல்லாம் ????


Un gang agresse les clients d'un restaurant... by leparisien
பாரீஸ்: பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் கடைக்குள் புகுந்து கடுமையாக சண்டை போட்டுக் கொண்ட தமிழர்கள் சிலரால் கடையே சூறையாடப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களின் இந்த சண்டையை கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். பாரீஸின் லா செப்பல் என்ற இடத்தில் தமிழகத்தின் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உள்ளது. இது இப்பகுதியில் பிரபலம். தமிழர்கள் மட்டுமலல்லாமல் பிரெஞ்சுக்காரர்களும் கூட சிக்கன், மட்டன் பிரியாணி உள்ளிட்ட அசைவ வகையறாக்களை ஒரு பிடி பிடிக்க வருவது வழக்கம். இந்தநிலையில் இந்த ஹோட்டலில் சில நாட்களுக்கு தமிழ் இளைஞர்களின் இரு பிரிவுக்கிடையே கடையில் வைத்து கோஷ்டி மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் சரமாரியாக மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் கையில் கிடைத்ததை எடுத்து வீசிக் கொண்டனர். இதனால் கடையே சூறையாடப்பட்டது. இவர்களின் சண்டையில் சிக்கி காயப்படாமல் இருக்க மேசை, சேரை எடுத்து கேடயம் போல பயன்படுத்திக் கொள்ளும் நிலையும் கடைக்காரர்களுக்கு ஏற்பட்டு விட்டது. இந்த சண்டையை பிரெஞ்சுக்காரர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கும் அளவுக்கு சண்டை செம சூடாக இருந்தது.
tamil.oneindia.com

ஜாதி சுழலில் சிக்குகிறாரா முதல்வர்? : இறுகும் கண்காணிப்பு வளையம்

முதல்வர் பன்னீர்செல்வம், ஜாதி அரசியலுக்குள் சிக்குவதாக எழுந்திருக்கும் புகாரைத் தொடர்ந்து, அவர் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி, அதிகார மட்டத்திலிருந்து, சிலருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருப்பதாக, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.
கோபத்துக்கு ஆளாகக்கூடாது: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, தண்டனை அடைந்ததால், எம்.எல்.ஏ., பதவியையும், முதல்வர் பதவியையும் இழக்க வேண்டியதானது. இதனால், தமிழகத்தில் புதிய முதல்வராக, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக பதவி ஏற்றுக் கொண் டாலும், எந்த இடத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்பதில், தெளிவாக இருந்து செயல்படுகிறார்.   முதலில் இந்த குருபூஜைகளை தடை செய்யவேண்டும் அல்லது மக்களே அவற்றைத் தடுத்து நிறுத்தவேண்டும். அவை இனவெறியைத் தூண்டுவதைத் தவிர வேறு எதற்க்காகவுமல்ல

வியாழன், 6 நவம்பர், 2014

5 லட்சத்தில் ஒரு மலையாளப்படம் அள்ளியது சில கோடிகள்! படம் படுமோசம் ஆனாலும் பார்த்தார்கள்? பார்த்தார்கள்?


கிருஷ்ணனும் ராதையும்' என்றெரு மலையாள படம் கேரளா திரை உலகின் பாரம்பரியங்களை உடைத்தெறிந்து விட்டது, சந்தோஷ் பண்டிட் என்பவர் இந்த படத்தை வெறும்  ஐந்து லட்சம் ரூபாய்களில் தயாரித்து பெரும் வெற்றியும் பெற்று விட்டார். அதுமட்டுமல்ல வெறும் லூசுப்படம் என்று ஏறக்குறைய எல்லாராலும் விமர்சிக்கப்பட்ட இப் படத்தில் ஹீரோவா நடிச்சு, பாட்டும் எழுதி, பாடல்கள், இசை, சண்டைப் பயிற்சி, கலை, பின்னணி இசை, கிராஃபிக்ஸ், பாடகர், கதை, வசனம், திரைக்கதை, உடைகள், பி.ஆர்.ஓ, இயக்குநர், தயாரிப்பு என 18 ஒர்க்குகளை செய்து ரெக்கார்டு பிரேக்  பண்ணி கேரளாவையே அதிர வைத்திருகிறார்  சந்தோஷ் பண்டிட்
படத்துல வர்ற 3 பாட்டுக்களை Youtubeலயே வெளியிடறாரு.நிறைய வந்திருது, அதிகமில்லைங்க 5 லட்சம் hitsதான். ஆச்சர்யமா இருக்கா? அப்படியான்னு, அடுத்து இன்னும் 3 பாட்டுக்களை வெளியிட்டாரு, hits எகிர ஆரம்பிச்சிருச்சு. மக்களோட எதிர்பார்ப்பும் அதிமாயிருச்சு.  கடைசியா 2 பாட்டுக்கள், அப்புறம் Trailer. பட்டை லவங்கம் எல்லாம் சேர்த்து கெளப்பிருச்சு பாட்டுக்கள். Fans Clum அங்காங்கே முளைக்க வேற ஆரம்பிச்சிருச்சு.  இப்படி Youtubeஆலயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின படம் கிருஷ்ணனும் ராதையும். அதுவும் படம் வெளிவருவதற்கு முன்னமேயே. சரி, அப்படி என்னதான் அந்தப் பாட்டுக்களிலும், trailerலும் கேட்குறீங்களா. நீங்களே பார்த்துக்குங்க. இப்பொழுது கேரளாவில் ரிங் டோனாக வலம் வரும் பாடல் இது  நம்மூர் அஷ்டாவதானி டீ.ஆர் எல்லாம் தூரமா போய் நிக்கச் சொல்லுங்க. படத்துல இவரோட பங்களிப்பு என்னென்னு பாருங்க. எல்லாரும் லூசுன்னு சொன்னாலும் சாதனை சாதனைதான் இளையதலைமுறைக்கு ரசிப்பதற்கு இவரது படைப்பில் ஏதோ இருக்கிறது ?உண்மையில் இவரது கதையை திரைப்பட கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும் 

பிகினி உடையில் நீதிபதி ! மொல்டாவியாவில் ஆடை சுதந்திரம் ,

மோல்டோவியா நாட்டின் தலைநகர் சிசினவ் நகரை சேர்ந்தவர் மரியா கோசமா (வயது 27). இவர் அந்நாட்டின் சுப்ரிம் கோர்ட் நீதிபதி மைக்கேல்  பாலுங்கி( வயது 52) பேத்தியாவார்.  மரியா சமீபத்தில் தான் பிரதான குற்றவியல் நீதிமன்றமான சென்ரு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபட்டார். தற்போது இந்த அழகிய நீதிபதி  கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார்.>தற்போது  இவர் எடுத்து கொண்ட பிகினி புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலர் பெண் நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பலவேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  .. nakkheeran,in

சகாயம் IAS மதுரையில் மட்டுமே? டிராபிக் ராமசாமி புதிய வழக்கு !இதர மாவட்டங்களில் கனிமவள கொள்ளையில் யாரை பாதுக்காக்க பன்னீர் முயற்சி ?

சென்னை: கனிமவள முறைகேடு விசாரணை பபற்றி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, தமிழகம் முழுவதும் நடந்த கனிமவள முறைகேடு பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு குறித்து விசாணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்தது. அவர் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை 2 மாதத்திற்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.  கனிமவள முறைகேடு குறித்து விசாரணை நடத்த சகாயத்தை நியமிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று அரசு செயல்படவில்லை என டிராபிக் ராமசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளை பத்து மாவட்டங்களில்  நடப்பதாக தெரிகிறது, சுமார் ஐந்து லட்சம் கோடி கொள்ளை போயிருக்க வாய்பிருக்கிறது, அவர்களை எல்லாம் காப்பாற்றும் முயற்சிதான் சகாயத்தை மதுரையில் முடக்கும் முயற்சி, நீதித்துறையை கேலியாக்கும் பன்னீர்செல்வம்

சுப.வீரபாண்டியன் : கலாசார காவலர்களுக்கு முத்தம் பிடிக்காது ஆனால் பாலியல் வன்முறை? நாடெங்கும் நடக்கிறதே? எங்கே அந்த குண்டர்கள்?


நம் மீனவர்களை இலங்கை அரசு தூக்கில் போடுவேன் என்கிறது. மீனவர்களின் படகுகளை அவர்கள் பிடித்து வைத்துக் கொள்ளலாம் என்கிறார், இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டு இந்த மண்ணின் மக்களுக்கே துரோகம் செய்யும் சு.சாமி. ஏழைகள் வாழ்வைப் பாதிக்கும் வண்ணம் பால் விலை கூடியிருக்கிறது. இன்னும் எத்தனை எத்தனையோ சிக்கல்கள். இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பொது இடத்தில் முத்தம் கொடுக்கலாமா கூடாதா என்பது குறித்து நாம் பேசிக் கொண்டிருப்பது நியாயமா என்னும் கேள்வி நியாயமானதுதான். ஆனால் இந்த முத்தப் போராட்டம் ஓர் 'எதிர்வினை' என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். கேரளாவில் இது தொடங்கியது. கோழிக்கோட்டில் ஓர் உணவகத்தில் ஒரு காதல் இணையர்கள் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதனை ஒரு தொலைகாட்சி ஒளிபரப்பியது. உடனே புறப்பட்டுவிட்டனர் மத அடிப்படைவாதிகள். அடுத்த நாள் அந்த உணவகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தினர். அந்தப் 'பண்பாட்டுப் பாதுகாவலர்களால்தான்' தொடங்கியது முத்த யுத்தம்.

சோனியா அவசர அழைப்பு : இளங்கோவன், தங்கபாலு,ஜெயந்திநடராஜன் டெல்லி விரைந்தனர்

முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தன் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சித் தொடங்கியுள்ளார். திருச்சியில் விரைவில் நடைபெற உள்ள கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை வெளியிட திட்டமிட்டுள்ளார்.புதிய கட்சி தொடங்கி உள்ள வாசனுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள், 9 முன்னாள் எம்.பி.க்கள், 30–க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், 20–க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்களின் ஆதரவு உள்ளது. இந்த ஆதரவு பலத்தை மேலும் அதிகரிக்க செய்யும் முயற்சிகளில் வாசனுடன் உள்ள தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாசனின் புதிய கட்சி பெயர் பதிவு வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மாவட்ட வாரியாகவும் ஆள் பிடிக்கும் வேலை நடந்து வருகிறது.இந்த நிலையில் காங்கிரஸ் பலவீனப்படுவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈ.வி.கே.எஸ் .இளங்கோவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

வாசன் கட்சியின் பெயர் 'த.மா.தே.கா TMTC ?தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் !

இது குறித்த அறிவிப்பு கட்சி துவக்க விழாவில் வெளியிடப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்ட உடன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன். கட்சியை விட்டு வெளியேறிய அவர் தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியை துவங்க முடிவு செய்தார். கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை நடந்து வந்தது. இந்நிலையில் கட்சிக்கு தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.  கட்சியின் பெயர் திருச்சியில் நடக்கும் கட்சி துவக்க விழாவில் அறிவிக்கப்படுகிறது. அப்பொழுது கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்படும். திருச்சியில் கட்சி துவக்க விழா நடக்கும் என்று வாசன் அறிவித்தார். ஆனால் தேதியை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வரும் 22ம் தேதி அமாவாசை அன்று கட்சி துவக்க விழாவை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு வாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.com

பாவனா படதயாரிப்பாளரை திருமணம் புரிகிறார் ! காதலராம் !

திருவனந்தபுரம்: நடிகை பாவனா பட தயாரிப்பாளரை காதல் திருமணம் செய்கிறார்.‘சித்திரம் பேசுதடி’, ‘ஜெயங்கொண்டான்’, ‘வெயில்’, ‘தீபாவளி’, ‘ராமேஸ்வரம்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பாவனா. இப்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். 2012ம் ஆண்டு இவர் நடித்த ‘ரோமியோ’ என்ற கன்னடப் படத்தைத் தயாரித்தவர்களில் ஒருவர் நவீன். இவரும் பாவனாவும் காதலித்து வருவதாக முதலில் செய்தி வெளியானது. இதுபற்றி அப்போது கேட்டபோது, ‘நான் காதலிப்பது உண்மைதான். யார் என்பதை திருமணம் நடக்கும்போது சொல்கிறேன்’ என்று கூறியிருந்தார் பாவனா. நவீனும், ‘பாவனா என் தோழி’ என்று மட்டும் சொல்லி இருந்தார். இப்போது இந்தக் காதல் உண்மை என தெரியவந்துள்ளது. அடுத்த வருட தொடக்கத்தில் இவர்கள் திருமணம் பாவனாவின் சொந்த ஊரான திருச்சூரில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

சரிதா நாயர் : நான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்றே ஆபாச படம் வெளிட்டுள்ளனர்.

திருவனந்தபுரம், நவ 6 - கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் சரிதாநாயர். இவரது ஆபாச படங்கள் சமீபத்தில் வாட்ஸ் அப் மற்றும் இணையதளங்களில் வெளியானது. இது பற்றி சரிதா நாயர் போலீசில் புகார் செய்ததோடு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சரிதா நாயரின் வழக்கை விசாரித்த போலீஸ்காரர் ஒருவர் ஆபாச படங்களை வெளியிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் செல்போனில் பரவிய சரிதாநாயரின் ஆபாச படங்கள் சுமார் 28 ஆயிரம் பேரின் செல்போன்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த செல்போன் எண்களின் செயல்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம்! கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்?

இஸ்லாமிய தேசம்’ என்று சொல்லப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறார்களோ இல்லையோ, வெளிநாட்டினரின் தலைகளைத் துண்டிப்பதில்தான் பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். சிரியாவில் உள்நாட்டுப் போர்ச் செய்திகளைத் திரட்ட வந்த அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ் ஃபோலே, ஸடீவன் சாட்லாஃப்ட், பிரிட்டன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் ஹெயின்ஸ், ஆலன் ஹென்னிஸ்கின் முதலானோரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கழுத்தைத் துண்டித்துக் கொலை செய்தனர். பிணைக் கைதிகளுக்கு மட்டுமல்ல, எதிர்ப்பாளர்கள் மாற்று இனத்தவர்கள் போன்றவர்களுக்கும் மரணம்தான் தண்டனை.
கடவுளின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகவும், கடவுளின் ஆட்சியை நிலைநாட்டவே போராடுவதாகவும் சொல்லிக்கொள்ளும் இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஒவ்வொரு முறை பிணைக் கைதிகளின் தலையைத் துண்டிக்கும்போதும், துண்டிக்கப்பட்டுத் தரையில் வீழ்வது மனிதர்களின் தலைகள் அல்ல, மகத்தான ஒரு மார்க்கத்தின் மானமும் மரியாதையும்தான்.

Pakistan கிறிஸ்தவ தம்பதி உயிருடன் எரித்து கொலை.இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

லண்டன் : 'பாகிஸ்தானில், முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை அவமதித்ததாக கூறி, கிறிஸ்தவ தம்பதியை உயிருடன் எரித்து கொன்ற முஸ்லிம் பழமைவாதிகள் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சிறுபான்மையின மக்களை பாதுகாக்க போதிய சட்டங்கள் இயற்ற வேண்டும்' என, 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' எனப்படும் சர்வதேச பொது மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது. இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில், பிற மதத்தினருக்கு சம உரிமைகள், அதிகாரங்கள் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்கள், அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்களால் பல விதங்களில் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். வெளிப்படையான மத சுதந்திரம் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் அங்கு தாக்குதலுக்கு ஆளாகி
வருகின்றனர். அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில், கோட் ராதா கிஷன் என்ற கிராமத்தில், கிறிஸ்தவ தம்பதி, வன்முறை கும்பலால் நேற்று முன்தினம் எரித்து கொல்லப்பட்டனர்.

அதிருப்தி தேமுதிக 9 எம்எல் ஏக்களும் பாஜக போகிறார்கள் , அதிமுக சொன்னபடி சூட்கேஸ் பண்ணலையாம்ல ?

சென்னை: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 9 பேரும் ஏகோபித்த முடிவு ஒன்றுக்கு வந்துள்ளனர். இனியும் அதிமுகவை நம்பி குப்பையைக் கிளறிக் கொண்டிருக்க முடியாது. பேசாமல் போய் பாஜகவில் சேர்ந்து விடலாம் என்பதுதான் அந்த முடிவாம். ஜெயலலிதா இனியும் லைம் லைட்டுக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கையை அவர்கள் இழந்து விட்டார்களாம். அதை விட முக்கியமாக அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பினால் தருவதாக சொன்ன எதையுமே அதிமுககாரர்கள் தரவில்லை என்ற பெரும் அதிருப்தி அவர்களிடம் உள்ளதாம். இதன் காரணமாக சமீபத்தில் 9 பேரும் கூடிப் பேசி பாஜகவில் போய் கலந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம்.
tamil.oneindia.com/

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: ஐ.பெரியசாமியின் மகளுக்கு ஜாமீன்


மதுரை சின்னசொக்கிக்குளத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது, கொடைக்கானலுக்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா, கணேசன், பூங்கொடி, சங்கர், சித்திக், மாரிமுத்து உள்பட பலரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திரா, கணேசன் உள்ளிட்ட 6 பேர் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்திரா உள்ளிட்ட 2 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

கர்நாடகாவில் தொடர் பாலியல்வன்முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!


பெங்களூர்,
தொடர் கற்பழிப்பு சம்பவங்களை கண்டித்து பெங்களூரில் முதல்–மந்திரி வீட்டை முற்றுகையிட்டு பா.ஜனதா மகளிர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின்போது, ஷோபா எம்.பி.யை போலீசார் தாக்கியதாக கூறி தலைவர்கள் திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் அணியினர் ஊர்வலம் பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களை தடுக்க தவறிய மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி சார்பில் முதல்–மந்திரி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் 5–ந் தேதி (அதாவது நேற்று) நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வாகாவில் இந்திய பயணிகளை குறிவைத்து தற்கொலை தாக்குதல்? தவறுதலாக பாகிஸ்தானியர்களை பதம் பார்த்துவிட்டது?

டெல்லி: வாகா எல்லையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் இந்திய பகுதியை குறிவைத்தது தவறுதலாக அந்த பக்கம் நடந்துள்ளதாம். பாகிஸ்தானில் வாகா எல்லையில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த 12 கிலோ வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தேசிய கொடியிறக்கத்தை பார்த்துவிட்டு திரும்பியவர்களில் 60 பேர் பலியாகினர், 200 பேர் காயம் அடைந்தனர். குண்டு பாகிஸ்தான் பகுதியில் வெடித்தது. வாகா எல்லை தாக்குதல்: இந்தியாவை குறி வைத்து மிஸ்ஸாகிவிட்டது குருநானக்கின் பிறந்தநாளையொட்டி நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் இந்தியாவில் இருந்து லாகூரில் உள்ள தேவ் பிறந்த இடமான நான்கனா சாகேபுக்கு செல்வதற்கு முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புதன், 5 நவம்பர், 2014

பால் நாரிமன் ஜெயலலிதாவின் வழக்கில் அன்று எதிராக வாதம் இன்று ஆதரவாக வாதம்! மகனே நீதிபதி அப்பன் வழக்கறிஞர்? பழைய ஹிந்தி மசாலா படம்?

ஃபாலி நாரிமன்!
முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான 48 வழக்குகளை விசாரிக்க 1997-ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதிகள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.சம்பந்தம், பி.அன்பழகன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. விசாரணை தொடங்கியது. 98-ம் ஆண்டு மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தது. அந்த அரசில் அ.தி.மு.க இடம்பெற்றது. தம்பிதுரை சட்ட அமைச்சராக ஆனார். இப்படிப்பட்ட தனி நீதிமன்றங்கள் அமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது என்று சொல்லி ஓர் உத்தரவை பிறப்பித்தார். தனி நீதிமன்றங்களில் பரபரப்பாக விசாரிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் வழக்கமான நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. அப்படியானால் விசாரணைகள் காலதாமதம் ஆகும் என்பதுதான் இதன் நோக்கம். 98-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் நாள் இந்த உத்தரவு போடப்பட்டது. இந்த உத்தரவை தி.மு.க தலைமையிலான அரசு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதாடியவர்தான் ஃபாலி நாரிமன்.

அன்று ராம்ஜெத்மலானியின் அமைச்சு வாய்ப்பை பறித்து தம்பிதுரைக்கு கொடுத்த ஜெயலலிதா ! இன்று?

சாயம் போவது புதுத்துணியில் மட்டுமல்ல; சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் அவ்வப்போது நடப்பதுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவின் விவகாரத்திலும் பலர் அம்பலப்பட்டுப் போனார்கள். அதில் நான்கு பேரைப் பற்றி மட்டும் இங்கே:

ராம் ஜெத்மலானி!
இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் முதல் 10 பேரில் ஒருவர். அவரது ஒரு மணிநேர வாதத்துக்கான பைசா எவ்வளவு என்பது அவருக்கும் வாதிக்கும் மட்டுமே தெரியும். உச்ச நீதிமன்றத்தில்தான் தினமும் வலம் வருவார். பிரேமானந்தாவுக்காக புதுக்கோட்டை சப் கோர்ட்டுக்கும் இறங்கி வந்தவர். அவர்தான் ஜெயலலிதாவுக்கு தண்டனை தரப்பட்டதுமே, 'இது தவறான தீர்ப்பு’ என்று அறிக்கைவிட்டு, அதன் மூலமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது வாதாடும் வாய்ப்பைப் பெற்றார்.

கூடலூர் பஸ் விபத்து: பயணிகளைக் காத்த டிரைவர்... பிரமிக்க வைத்த பிரேமா!

இன்னும் மிரட்சியில் இருந்து மீளவில்லை அவர்கள். அவர்கள் ....?  கடந்த திங்கட்கிழமை கேரள மாநிலத்தின் சுல்தான்பத்தேரிஎன்ற ஊரிலிருந்து தமிழக பகுதியான கூடலுருக்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள்.
80 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த அப்பேருந்து பெரும் விபத்திலிருந்து மீண்டாலும், அதில் பயணித்தவர்கள் இன்னமும் தங்களைத்தாங்களே கிள்ளி்ப்பார்த்துக்கொள்ளாத குறையாய் அதிசயித்துக்கிடக்கிறார்கள்.
மொத்த பயணிகளின் கரங்களும் ஒரு பயணியை நோக்கி கும்பிடுகிறது. அவர் பிரேமா. இன்று அத்தனை உயிர்களும் நிம்மதியில் கிடக்க அவரும் ஒரு முக்கிய காரணம்.

நடிகர் கார்த்திக் காங்கிரசில் இணைந்தார்! பின்பு வழக்கம்போல குழம்பினார் ? இன்னும் இணையவில்லை ஆனால் ஆதரவு என்றார்! முடியல?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கட்சியின் பலத்தை அதிகரிக்கும் முயற்சியில்  இறங்கி உள்ளார். இந்த நிலையில், சத்திய மூர்த்தி பவனுக்கு இன்று பல்வேறு கட்சிகளைச்  சேர்ந்தவர்கள் வந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தனர். என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி, நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம்  தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட மணிரத்தினம் ஆகியோர் தலைமையில் 100க்கும்  மேற்பட்டவர்கள் காங்கிரசில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று இளங்கோவன் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள இந்த சூழ்நிலையில், நீங்கள் காங்கிரசில்  இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சோ அடித்த பல்டிகள்! ஊழலைப் பற்றி பி.ஜே.பி பேசுவது நகைச்சுவைக்கு மட்டுமே?

(துக்ளக் 13.8.97 ) சாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது!
''கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நாம் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறோம். அதை எல்லாம் மக்களிடம் முறையாக எடுத்துச் சொல்லவில்லை'' என்று ஜெயலலிதா சொல்லியதைக் குறிப்பிட்டு வாசகர் ஒருவர் கேள்வி கேட்டபோது, 'ஜெயலலிதாவுக்கு இந்த மனக்குறை தேவை இல்லை. அந்த சாதனையைத்தான் பல வழக்குகள் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே'' (துக்ளக் 13.8.97 - பக் 14) என்று பதிலளித்தார் சோ.
மத்திய பி.ஜே.பி ஆட்சி இந்த வழக்குகளை முடக்கும் நடவடிக்கையை எடுத்தபோது, ''ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் தாமதப்படுத்துவதற்கு உதவி செய்வது என்று தீர்மானித்து பி.ஜே.பி செயல்படுகிறது. இனி ஊழலைப் பற்றி பி.ஜே.பி பேசுவது நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படும் என்ற நிலைகூட வந்துவிடும் போலிருக்கிறது'' (துக்ளக் 20.1.99 - பக்.8) என்று பாய்ந்தவர் சோ.
ஜெயலலிதாவைக் குறிவைத்து சோ எழுதிவருவதைப் பார்த்து ஒரு வாசகர், ''ஜெயலலிதாவின் ஊழல் மட்டும் உங்கள் கண்களை ஏன் உறுத்துகிறது?'' என்று கேள்வி கேட்டபோது, ''தி.மு.க ஊழலில் இருந்து இந்திரா காந்தி ஊழல் உள்பட ஜெயலலிதா, லாலு பிரசாத் ஊழல் வரை எல்லா ஊழல்களும் உறுத்தத்தான் செய்கின்றன. இந்த உறுத்தல்களை துக்ளக் விவரித்துத்தான் வந்திருக்கிறது. உறுத்தல்கள் வளர்ந்து ஜெயலலிதா ஊழல் நோயாக முற்றிவிட்டது. அதனால்தான் கவலை அதிகம்'' என்று (10.2.99 - துக்ளக் பக்-15) விளக்கம் அளித்தவர் சோ.
''ஊழல் ஒரு குற்றமே அல்ல என்று நினைக்கும் அளவுக்குப் பெருந்தன்மை காட்டியவர் ஜெயலலிதா'' (27.1.99 துக்ளக் - பக்-8) என்று குற்றம் சாட்டியவரும் சோ-தான்.

பி.எஸ்.ராகவன் கருத்து :வட இந்தியத்தலைவர்கள் தமிழ்நாடு என்றால் இட்லி, தோசை, ரசம், சாம்பார் மாநிலம்???

முன்னாள் பிரதமர்கள் ஜவஹர் லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திராகாந்தி ஆகியோர் காலங்களில் மத்திய அரசின் உள்விவகார அமைச்சக அரசியல் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குநராக பதவி வகித்தவர் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன்.
தேசிய ஒருமைப்பாட்டு குழுவை நேரு ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்திரா காந்தி பிரதமராக இருந்த வரை அதன் செயலராக பதவி வகித்தவர். தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் களுக்கும் அரசியல் மற்றும் அரசு ரீதியாக ஆலோசனைகளை வழங்கிய அனுபவம் உள்ளவர்.
தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கிய ஜி.கருப்பையா மூப்பனாரின் பெரும் மதிப்பைப் பெற்றவரும் ‘பாரத ரத்னா’ சி.சுப்ரமணியத்துடனும் நெருங்கிப் பழகியவருமான பி.எஸ்.ராகவன், தற்போது காங்கிரஸின் உட்கட்சிப் பூசல் குறித்தும் காங்கிரஸின் வளர்ச்சிக்கு அடுத்த கட்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் தனது கருத்துகளை தெரி வித்துள்ளார். அவர் கூறியதாவது:
தேசியக் கட்சிகளில் காங்கிரஸ் ஆனாலும், பாஜக ஆனாலும்.. வட இந்தியத் தலைவர்களால் மட்டுமே டெல்லியில் இருந்து இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, வழிமுறைகள், உணவு முறை போன்ற எதையுமே டெல்லித் தலைவர்கள் தெரிந்து கொள்ளக்கூட முயற்சிப்பதில்லை. தமிழ்நாடு என்றால் இட்லி, தோசை, ரசம், சாம்பார் மாநிலம் என்று நினைக்கின்றனர்.

பட்டபகலில் அண்ணாநகரில் டாக்டரிடம் துப்பாக்கி முனையில் 70 சவரன் நகை கொள்ளை! நடிகர் லிவிங்க்ஸ்டனின் ex வீடு ....

சென்னை அண்ணாநகர் கிழக்கு 15-வது தெரு ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்தன். இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவராக உள்ளார். இவருடைய மகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்று ஆனந்தன், தனது மனைவி, பெரியம்மா மற்றும் வேலைக்கார பெண் மீனாவுடன் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டாக்டர் ஆனந்தன் வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியை காட்டி ஆனந்தனை மிரட்டி வீட்டின் பீரோ சாவியை வாங்கினர். பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் பணம், 75 சவரன் நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் ஆனந்தனையும், அவருடைய மனைவி, பெரியம்மா, வேலைக்காரி மீனாவையும் அறையில் கட்டிப்போட்டுவிட்டு அந்த 2 மர்ம நபர்களும் கொள்ளையடித்த பணம், நகைகளுடன் தப்பினர்.

கொல்கொத்தா துறைமுகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் திட்டம் அம்பலம்! Sub marraines நிறுத்தப்பட்டுள்ளது,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹால்டியா துறைமுகத்தில் இந்த வாரம் பாகிஸ்தான் கப்பல் படையின் உதவி பெறும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்த தகவல் துறைமுக பாதுகாப்பை கவனித்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய தொழில்பாதுகாப்பு படை, போலீசார், துறைமுக நிர்வாகத்தினர் கலந்து ஆலோசித்து 24 மணி நேரமும் துறைமுகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர்.