சனி, 15 பிப்ரவரி, 2025

போஸ் வெங்கட்டின் சார் படத்தை ரெட் ஜெயன்ட் வாங்கவில்லை? அந்த கோபம்தான் அவருக்கு?

சார்”❤️❤️❤️

கதிர் ஆர் எஸ் :  கன்னி மாடம், சார் போன்ற உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை இயக்கிய போஸ் வெங்கட் என்ற திரைத்துரை பிரமுகர் தன்னை திமுக என பிரகடனம் செய்து கொண்டு திரியும் ஒரு நபராவார்.
அவர்  தன் சந்தர்ப்பவாத முகமூடியை தானே கிழித்துக்கொண்டு அம்பலமான நிகழ்வு நேற்று நடந்தது.
இவரைப்போலவே திரைத் துறையில் தங்களை திடீர் திமுககாரர்களாக சொல்லிக்கொண்டு தலைவர்கள் அலங்கரிக்கும் மேடையில் ஃபுட்போர்டு அடித்துக் கொண்டு அங்கு 

Actor Bose Venkat indirectly criticizes ...

தலைமையுடன் தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை அருவருக்கத் தக்க வகையில் வெளிப்படுத்திக் கொண்டு திரியும் பலர் தாங்களாகவே முன்வந்து  இப்படி தங்களது முகமூடியை கிழித்துக் கொள்வார்களானால் அது ஒரு நல்ல முன்னெடுப்பாக இருக்கும்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு - பாஜகவால் ? விஜய்க்கு வழங்கப்பட்டது ஏன்?

 tamil.asianetnews.com  - Ganesh A  :  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார்.
அக்கட்சி தொடங்கி ஓராண்டு ஆகும் நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன, இந்தியாவில் எத்தனை விதமான பாதுகாப்பு பிரிவு உள்ளன... அவை யார் யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி திரு அமிர்தலிங்கம் அவர்கள் எழுதிய நூல்

May be an image of ‎text that says '‎இலங்கை -இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு CO9 திரு ரு.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் (இலங்கை முன்னாள் எதிர்கட்சி தலைவர்) TEA a ل‎'‎

ராதா மனோகர் :  இலங்கை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழர் விடுதலை கூட்டணியில் தலைவருமான அமரர் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் குடும்ப  இல்லத்தை ஒரு வரலாற்று நினைவகமாக
12  02- 2025  அன்று அமைத்துள்ளார்கள் என்று தெரிகிறது.
இலங்கை தமிழரின் வரலாற்றில் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை எந்த காலத்திலும் எவராலும் அழித்து விட முடியாது.
அவரின் உயிரை பறித்தவர்கள் எவ்வளவு பெரிய மூடர்கள் என்பதை காலம் மிக தெளிவாக காட்டி விட்டது.
கொழும்பில் சுயமரியாதை இயக்கத்திலும்  திராவிட கழகத்திலும் தனது அரசியலை ஆரம்பித்து பின்பு தமிழரசு கட்சியால் உள்வாங்கப்பட்டார்
திராவிட இயக்கத்தில் திரு எஸ் டி சிவநாயகம் செல்லையா இராசதுரை போன்ற திராவிட கோட்பாட்டு இளைஞர்களோடு தனது அரசியல் பயணத்தை  தொடங்கியதாலோ என்னவோ திராவிட  பேச்சாளர்களுக்கே உரிய நல்ல தமிழ் பேச்சு  இவருக்கு வாய்த்திருந்தது1
இவருக்கு பின்வந்த எந்த தமிழ் அரசியல்வாதிக்கும் இந்த நல்ல தமிழ் பேச்சு அமைந்திருக்கவில்லை!

வியாழன், 13 பிப்ரவரி, 2025

யாழ்ப்பாண வாள்வெட்டு குழுக்களின் அடாவடித்தனம்! Archchuna Ramanathan :

 Archchuna Ramanathan : யாழ்ப்பாணமும் வாள் வெட்டு குழுக்களின் அடாவடித்தனமும்!
நேற்றைய தினம் இரவு 10:25 மணி அளவில் நானும் தங்கை கவுசல்யாவும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கின்ற ஒரு பிரபல்யமான உணவு சாலை ஒன்றிற்கு உணவருந்த சென்று உணவு ஓடர் செய்துவிட்டு காத்திருந்த வேளை தங்கை கவுசல்யா என்னிடம் சொன்னாள் எங்களை யாரோ வீடியோ எடுக்கிறார்கள் என்று.
சரி எடுத்துவிட்டுப் போகட்டும்.
வெளிநாட்டுக்காரர்களின் பணத்தில் உல்லாசமாக உணவு உண்கிறோம் என்று நான்கு போஸ்ட்களை போட்டுக் கொள்வார்கள் விடுங்கோ என்று சொல்லிவிட்டு நான் நிதானமாக அவளுடன் உரையாடிக் கொண்டிருந்த வேளை முதன்முதலாக நிமிர்ந்து பார்த்த போது தங்கம் என்றும் ஐ லவ் யூ என்றும் கத்தியபடி இருவர் எங்களை நோக்கி வருவதை அவதானித்தேன்.

சிங்கள மக்கள் அசல் திராவிட மக்கள்தான்!

 ராதா மனோகர் : சிங்கள மொழியிலும் இலங்கை தமிழிலும் சமஸ்கிருதம் அளவுக்கு அதிகமாகவே கலந்திருப்பது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்
பார்ப்பன மயக்கம்  கொஞ்சம் அதிகமாகவே இருப்பது பற்றியும் ஆய்வு செய்தல் வேண்டும்!.
குறிப்பாக சென்ற நூற்றாண்டில் இலங்கை சிங்கள தமிழ் தலைவர்கள் தமிழக இந்திய பார்பனர்களோடு நெருங்கிய உறவை கொண்டிருந்தார்கள்
ுறிப்பாக லண்டனிலும் சென்னையிலும் கல்வி சார்ந்தும் தொழில்துறை சார்ந்தும் நல்ல தொடர்புகளை வைத்திருந்தனர்
ஏனெனில் அந்த காலக்கட்டங்களில் பார்ப்பனர்கள்தான் எல்லா உயர்ந்த இடங்களிலும் நிலை கொண்டிருந்தனர்
அதன் காரணமாகவே இலங்கை சிங்கள தமிழ் தலைவர்களுக்கு பார்ப்பனர்கள் மேல் ஒரு அளவு கடந்த மரியாதையை  அல்லது மயக்கம் இருந்தது

டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் MP மீது ஹோட்டலில் தாக்குதல்?

 Esther Vijithnandakumar வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் கைகலப்பில் ஈடுபட்ட CCTVஆதாரங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்
சும்மா போற ஒருத்தனை சீண்டினால் அதுவும் சிங்கத்தை சீண்டினால் இப்படித்தான் மண்டை பிளக்கும் என்பதற்கு தக்க சம்பவம்
இது பசியில் இருப்பவனை அவனது தன்மானத்தை சீண்டி தூசணவார்த்தையை பேசும்போது எப்பேர்பட்ட தர்ம புத்தனும் கொஞ்சம் ஆடுவான் டொக்டர் வெகு கச்சிதமாக ஆடியிருக்கிறார்
இதுதான் வேண்டும். இனி டாக்டர் பக்கத்தில் வரவும் யோசிப்பானுக
 டாக்டர் விசரன் பைத்தியம் லூசன் என பலர் சொன்னாலும் அதையெல்லாம் சுக்குநூறாக்கியிருக்கிறார் டொக்டர் முதலில் அவருக்கு வாழ்த்துகள்

புதன், 12 பிப்ரவரி, 2025

ஒரு இலட்சம் முஸ்லிம்களை துரத்திய பிரபாகரன! வழிப்பறி கொள்ளை அடித்த புலிகள் - வழக்கறிஞர் லஜபதி ராய்

பணக்கொழுப்பு” - பிரசாந்த் கிஷோரை விஜய் உள்ளிட்டோர் நாடுவதை விமர்சித்த சீமான்

 Hindu Tamil :  திருவண்ணாமலை: “நீங்கள் உடலில் கொழுப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். பணக்கொழுப்பு கேள்விப்பட்டுள்ளீர்களா?
எப்படி ஒருவருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்று கூறுவோமோ, அதுபோல பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். எனவே, அதைப்பற்றி பேசி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என்று விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்.12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தச் சந்திப்பு குறித்து ஊடக செய்திகள் மூலம் பார்த்து தெரிந்துகொண்டேன். தேர்தல் வியூக வகுப்புகளில் எல்லாம் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை.

செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு - அதிமுக முன்னாள் அமைச்சர்

 Hindu Tamil : ஈரோடு: கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழா நடந்தது.
முதல்வராக பழனிசாமி இருந்தபோது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான கே.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

ஹென்றிச் ஹிம்லர் ஹிட்லரின் கொடுமைகளை திட்டமிட்டு அரங்கேற்றிய ஆரிய வெள்ளை தூய்மை இனவாத கொலைகாரன்

 ராதா மனோகர் : ஹிம்லர் ..ஹிட்லரின் நம்பர் 2 ஆரிய வெள்ளை தூய்மை இனவாத கொலைகாரன்
ஹென்றிச் ஹிம்லர் ..  மிகவும் அமைதியானவன் . அசாத்திய திறமைசாலி . ஹிட்லர் அரங்கேற்றிய  இன அழிப்புக்களின் முக்கிய சூத்திரதாரியே இவன்தான்
ஹிட்லர் மீது எல்லையற்ற ஈடுபாடும்   எந்த குரூரத்திற்கும் அஞ்சாத ஒரு வித பக்தி உணர்வும் கொண்டவன்.
தனது அதிகார போட்டியில் தனக்கு எதிரானவர்களை ஒழித்து கட்டி மிக வேகமாக ஹிட்லருக்கு அடுத்த இடத்திற்கு   வந்து சேர்ந்தான்
ஆனால் நாசிகளின் எல்லைகடந்த அதிகாரம் முடிவுக்கு வந்தபோது  ஹிட்லருக்கு மிக மோசமான ஒரு நம்பிக்கை துரோகத்தையும் பின்பு செய்தான்

Starlink - Bhutan பூடான் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்த எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை!..

Elon Musk activates Starlink internet ...

மாலை மலர் : ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலக பணக்காரருமாக எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த டிரம்ப் அரசின் கீழ் அரசு செயல்திறன் துறை [DODGE] தலைவராக உள்ளார்.
அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. பிந்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் யுஸ் - எய்ட் அமைப்பின் நிதியை DODGE ஆலோசனையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.

தமிழகத்தில் 86,000 பேருக்கு பட்டா ! ஆட்பேசம் இல்லாத புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் :.. அமைச்சரவை ஒப்புதல்

 Hindu Tamil : சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்கள், மதுரை, நெல்லை மாநகராட்சிகள், பல்வேறு நகராட்சிகள், மாவட்ட தலைநகரங்களில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து உடனடியாக பணிகளை தொடங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி.கூட்டணி கணக்கை மாற்றினார்! டெல்லி தேர்தல் எதிரொலி! . “நாம் மட்டுமே போதும்”.!

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  :  கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக பிடிஐ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதற்கு சவாலாக உள்ளது.
 2019, 2024 லோக்சபா தேர்தலில், அங்கு பாஜக, அதிக தொகுதிகளில் வென்றது. 2021 சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் 121 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.

கோகுல இந்திராவின் குமுறலுக்கு காரணம் என்ன?-'மரியாதை இல்லை?

gogula indhraa  மாலை மலர் :  சென்னை: தமிழக சட்டசபைக்கு இன்னும் ஓராண்டிற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அடிமட்ட அளவில் உள்ள நிர்வாகிகளுடன் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை அண்ணா நகரில் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோகுல இந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:-

பெரியார் வேண்டும் என்றால் வெளியேறலாம் : சீமான் ஆவேசம்!

 மின்னம்பலம் -  christopher :  பெரியாரை ஏற்றுக் கொள்ளக் கூடிய தம்பிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறலாம் என சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். seeman again angry on periyar
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 10) செய்தியாளர்களை சந்தித்தார்.
2026ல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்!
அப்போது அவர், ”ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு இயந்திரம் முழுமையாக திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இருந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை தக்க வைக்க இன்னும் 1,000 வாக்குகள் தேவை.. அவ்வளவுதான்.

காசா’ வை அமெரிக்கா விலைக்கு வாங்க டிரம்ப் திட்டம் – மக்களை வெளியேற்ற தீவிரம்

மாலைமலர் :  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்குத் திரும்பி வருகிறார்கள். காசா எல்லையில் நிலைநிறுத்தப்பட்ட படைகளை இஸ்ரேல் திரும்பப்பெற்றுள்ளது.

சீமான் குண்டர்கள் லண்டனில் அடாவடி - ஈரோட்டில் சீமான் கட்சியின் தோல்வியால் விரக்தி?

 வி‌.சபேசன்  : ஈரோடு கிழக்குத் தேர்தல் தோல்வியால் தம்பிகள் விரக்தி! -
லண்டனில் தாக்குதல் முயற்சி!
யாரும் போட்டியிடததால் ஈரோடு கிழக்குத் தேர்தலில் உறுதியாக வெற்றி கிடைக்கும் என்று வெளிநாட்டுத் தம்பிகள் நம்பியிருந்தார்கள்.
ஆகக் குறைந்தது ஐம்பதாயிரம் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என்று எண்ணியிருந்தார்கள்.
ஆனால் பெரியார் பற்றி பேசி தம்பிகளின் கனவில் அண்ணன் சீமான் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் என்பதை அவர்கள் பாவம் அறிந்திருக்கவில்லை.
லண்டனில் இருந்து பனியிலும் குளிரிலும் உழைத்து அண்ணனுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு 'மகிழ்ச்சி கிடையாது,
எப்பொழுதும் பயிற்சி மட்டும்தான்' என்கின்ற செய்தியை ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் சொல்லத் தொடங்கியிருந்தன.

திங்கள், 10 பிப்ரவரி, 2025

கும்பமேளா - 300 கிலோமீட்டர் தூரம் வரிசை கட்டிய வாகனங்கள் - உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாம்:

 மாலை மலர் :  மகா கும்பமேளா உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது.
கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெறும்.
உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவுக்கு ரெயில் மற்றும் சாலை மார்கமாக பலவேறு இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

கழக உடன்பிறப்புகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் - இருநூறு இலக்கு... தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு!”

 கலைஞர் செய்திகள் பிரேம் குமார் : “வஞ்சிப்பது பா.ஜ.க. அரசின் பழக்கம். அதனையும் எதிர்கொண்டு, தமிழ்நாட்டை வாழவைப்பது தி.மு.கழகத்தின் வழக்கம் என்பதை ஆவடிப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றியபடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நம்முடைய பணிகள் தொடரும்” என கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

டெல்லி தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம்... ஆர்.எஸ்.பாரதி அதிரடி

 மின்னம்பலம் -  Selvam : “எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே டெல்லி சட்டமன்ற தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம்” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்ரவரி 9) தெரிவித்துள்ளார். Bharathi says Delhi Election
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “சில மாநிலங்கள் அவர்கள் வரி செலுத்துவதற்கு ஏற்ப மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்பது அற்ப சிந்தனை” என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “மத்திய அரசுக்கு தான் அற்ப சிந்தனை. தமிழ்நாடு அரசு 6.28 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வரிப்பகிர்வு அளிக்கிறது. ஆனால், 56 ஆயிரம் கோடி மட்டுமே தமிழகத்திற்கு மத்திய அரசு திருப்பி அளிக்கிறது.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

ஒருவரை ஒருவர் தோற்கடித்து மகிழுங்கள்- ஆம் ஆத்மி, காங்கிரசை கேலி செய்த உமர் அப்துல்லா

 மாலை மலர் :  டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிப் பெற்றுள்ளது. இதன் முலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்தனியே களம் கண்ட நிலையில் இரு கட்சிகளும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளன.
இதுதொடர்பாக காஷ்மீர் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான உமர் அப்துல்லா ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை கேலி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "உங்களுக்குள் இன்னும் கொஞ்சம் சண்டையிட்டுக் கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.