சனி, 22 ஏப்ரல், 2017

பெண்களை கேவலப்படுத்தும் மனுதர்ம சாஸ்திரங்கள் .. குரானின் வாசகங்கள்

இந்து மதமும் இஸ்லாமிய மதமும் பெண்களை கேவலப்படுத்துகின்றன என்ற விதத்தில் குரானின் வாசகங்கள் , மனுதர்மத்தின் வாசகங்கள் சாம்பிளுக்கு...
//I. 213 இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்தக் காரணத்த்திற்காகவே, விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்பொது உஷாராகயில்லாமல் ஒரு போதும் இருக்கமாட்டார்கள்.
II. 214 ஏனெனில், இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி , ஒரு கல்விமானையும் பாதை தவறிசெல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும் கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உள்ளவர்கள்.//- மனுதர்மம்
//பெண்கள் என்றாலே தீமைதான்; அதனிலும் மோசம் என்னவெனில் அவர்கள் தேவையான தீமை.
-- பெண்களிடம் எந்த அறிவுரையையும் கேட்காதீர்கள்; அவர்களைப் பிற ஆண்களின் கண்களிடமிருந்து ஒளித்து வையுங்கள். (
அவர்களோடு அதிக நேரம் செலவிடாதீர்கள். அவர்கள் உங்களைத் தாழ்த்தி விடுவார்கள்.
ஆண்களே, பெண்கள் சொல்வதைக் கேட்காதீர்கள்.

விவசாயிகள் சிறுநீர் அருந்துவதை ரசிக்கும் மோடி அரசு!


இதுதான் அவமானம்
யாரும் நினைக்க முடியாதது மக்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்க வேண்டிய அரசோ, அவர்களை நிர்வாணப்படுத்தியும், சிறுநீரை குடிக்க விட்டும் ரசித்துக் கொண்டுள்ளது. Veera Kumar" டெல்லி: விவசாயிகளின் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரசிக்கும் அரசு எலிக்கறி, பாம்புக் கறி சாப்பிட்டது, பாதி தலை மொட்டையடித்தது, சேலை அணிந்து ஊர்வலம் என இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. எதை செய்தும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை.
இதன் உச்சமாக நிர்வாணமாக தெருவில் ஓடிச் சென்று போராட்டம் நடத்தி அதிர்ச்சியளித்தனர் விவசாயிகள். அப்போதும் மோடி இவர்களை சந்தித்து குறைகளை கேட்க நேரம் ஒதுக்காமல் பேரதிர்ச்சியை பரிசாக அளித்தது.

எடப்பாடி - பன்னீர் கோஷ்டி பேச்சுக்கள் ... பேரம் விரைவில் படியும் ... முழுசா 4 வருஷ கல்லா பாக்கி ...

டிஜிட்டல் திண்ணை:முதல்வர் பதவியை விட்டுத் தரலாம்! : எடப்பாடி டீமில் இருந்து முதல் குரல்“பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுக-வை இணைக்கும் முயற்சிகள் தொடங்கியிருந்தாலும் அதில் முன்னேற்றம் என்பது எதுவும் இல்லை. முதல்வர் பதவி என்பதுதான் இரண்டு அணிகளுமே முரண்டு பிடிக்கும் முதல் விஷயமாக இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளவர்கள் சார்பில் ஒரு குழுவை அமைத்தனர். வைத்தியலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் ஜெயக்குமார் உட்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏழுபேர் என்றாலும், பன்னீர் டீமில் உள்ளவர்களுடன் நேரடியாகப் பேசிவருவது அமைச்சர்கள் ஜெயக்குமாரும், தங்கமணியும்தான். பன்னீர் டீமில் இருக்கும் கே.பி.முனுசாமி, பொன்னையன், செம்மலை ஆகிய மூவரும்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் மூவருமே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் .. இறந்த உடலை வைத்து மாந்திரீகம் ... நரபலி பூசாரி கைது

மந்திரவாதியை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
இளம்பெண்ணின் உடலை வைத்து பூஜை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மந்திரவாதியை காவலில் எடுத்து விசாரிக்க பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் எம்.எம்.நகர் அருகே, செட்டிக்குளம் கிராமத்தில் இரண்டு மாடி குடியிருப்பில் மாந்திரீகம் செய்துவந்த கார்த்திகேயன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். கார்த்திகேயன் மூடநம்பிக்கையாக பல மாந்திரீக செயல்களைச் செய்துவந்துள்ளார். இறந்த இளம்பெண்ணிண் உடலை வைத்து பூஜை செய்வது, மண்டை ஓடுகளை வைத்து மை தயாரிப்பது, பில்லி சூனியம் வைத்து எடுப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வைகை தண்ணீருக்கு போர்வை போர்த்திய அமைச்சர் செல்லூர்ராசு


மதுரையிலுள்ள ஆஸ்பத்திரிகளில் ICU வில் அவசர கேஸ்களின் ஆவி போகாம இருக்க அதிரடியா தெர்மாகோல் ரூப்பிங் போட்டுட்டு இருக்காங்களாம்!!!

வைகை அணையில் தேங்கியுள்ள நீர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மாகோல் வைத்த, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் பலே ப்ளான் தான், தமிழகத்தின் சமீபத்திய சென்சேஷன். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன், ஷின்டக்ஸ் குடிநீர் தொட்டி வைக்க பத்துலட்ச ரூபாய் செலவு பண்ணியதாக சொன்னது, மக்களிடையே சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், அப்பிரச்னையை ஓவர் டேக் செய்துவிட்டது, 200 சதுர அடியில் வைகை அணையில் 10 லட்ச ரூபாய் செலவில் தெர்மாகோல் வைத்த திட்டம்.
சுமார் 6091 மில்லியன் கன அடி நீர்பிடிப்புப் பகுதியான வைகை அணையில், ஏப்ரல் 21ஆம் தேதியான நேற்று சுமார் 200 சதுர அடி அளவுள்ள தெர்மாகோலை மிதக்கவிட்டு, அதற்கு 10 லட்ச ரூபாய் செலவளித்தாக முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்தார், செல்லூர் ராஜூ.

சசிகலா : ஆட்சி போனால் போகட்டும் பதவியை விட்டு விலக முடியாது

ஓபிஎஸ் கோஷ்டி நிபந்தனைப்படி அதிமுக பொதுச்செயலர் பதவியை தம்மால் ராஜினாமா செய்யவே முடியாது என சசிகலா திட்டவட்டமாக கூறியுள்ளார். By: Raj
பெங்களூரு:  ஓபிஎஸ் அணியின் நிபந்தனைப்படி அதிமுக பொதுச்செயலர் பதவியை தாம் ஒருபோதும் ராஜினாமா செய்யவே முடியாது என பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் இரு அணிகள் ஒன்றாக இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியினர் சசிகலா, தினகரன் ராஜினாமா கடிதம் வேண்டும்; சசிகலா குடும்பத்தினர் 30 பேரை கூண்டோடு நீக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது.
கொந்தளித்த சசிகலா இது தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிபந்தனையைக் கேட்டவுடன் சசிகலா கொந்தளித்துவிட்டாராம்.

ஆப்கானிஸ்தான் ராணுவ தளம் மீது தாக்குதல் ! 140 பேர் மரணம்... தாலிபன் தற்கொலை தாக்குதல் !

ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவ தளத்தின் மீது தலிபான் தீவிரவாதிகளின் கோரத்தாண்டவத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த கொலைவெறி தாக்குதலுகு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் தலிபான் தீவிரவாதிகளுடன் போரிட்டு வரும் வடக்கு ஆப்கானிஸ்தானின் குன்டுஸ் பகுதி பிராந்திய ராணுவ தலைமையகம் ஒன்றுள்ளது. மஸார்-இ-ஷரிப் என்ற இடத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்துக்குள் பணியாற்றி வரும் வீரர்கள் அந்த வளாகத்தில் இருக்கும் மசூதிக்குள் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜும்மா தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் கைவிட முடிவு ! எதிர்க்கட்சிகளின் கடையடைப்பில் பங்கேற்கவும் தீர்மானம்!

திராவிட முன்னேற்றத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர்வரும் 25 ஆம் தேதியன்று விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து அனைத்து கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, இன்று (22-04-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்க ளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்

ஸ்டாலின்: எதிர்வரும் 25 ஆம் தேதி விவசாயிகளின் பிரச்சனைகளை மையமாக வைத்து, மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தக்கூடிய வகையில் தமிழகம் முழுவதும் ஒரு முழு அடைப்புப் போராட்டத்தை, ஏற்கனவே அனைத்துக் கட்சி சார்பில் கூடி முடிவெடுத்து அறிவித்து இருக்கிறோம். அந்தப் போராட்டம் எந்த வகையில் அமைய வேண்டும் என்பது இன்று திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

குஷ்பூ: தமிழகத்தில் மோடியின் கைப்பாவை ஆட்சி... தமிழகத்தில் தற்போது சர்கஸ் அரசியல் .

Image may contain: 3 people, text தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி சர்க்கஸ் போன்று உள்ளது, அதிமுக இணைப்பு இன்னும் 4 வருடம் சம்பாதிக்க, ஆளுநர் மோடியின் கைப்பாவை, தமிழகத்தில் ஆட்சி பிடிக்க பாஜக முயற்சி : குஷ்பு
இப்படி மிக துணிந்து ஒரு கருத்தினை யாராவது சொன்னார்களா?, இதுதான் குஷ்பூ , திமுகவில் கூட இப்படி அதிரடியான கருத்துக்கள் வராத நிலையில் குஷ்பூ பேசியிருப்பது என்ன சொல்கின்றது?
ஒரு காலத்தில் குஷ்பூவினை கட்சியினை விட்டு விரட்டியது தவறு என சொல்கின்றது
மதுரைக்கு வந்த குஷ்பூவிற்கு "நாம் பாண்டியர்" அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்,
மதுரையினை ஆண்ட ராணி மங்கம்மாளை குஷ்பூ வடிவில் காண்கின்றோம்,
"இரண்டாம் மங்கம்மாள்" வாழ்க‌
அட எவ்வளவு தைரியமான அதிரடியான கருத்துக்கள், ஒரே நேரத்தில் பாஜகவினையும், அதிமுகவினையும் போட்டு தாக்கும் தைரியம்...
நீ கலக்கு ராசாத்தி....  முகநூல் பதிவு  ஸ்டான்லி ராஜன்

திருமுருகன் காந்தி :கீழடி தொல்லியல் சான்றுகள் மீது ஆரிய திணிப்பு ,,, முறியடிப்போம் அணிதிரளுங்கள்


கீழடி’யில் ஆரிய அடையாளங்களோ, சின்னங்களோ, சமஸ்கிருத எழுத்துக்களோ கிடைக்காமல் முற்றும் முழுதாக தமிழர் நாகரிக தொல்லியல் சான்றுகள் அமைந்திருக்கின்றன. இந்த சான்றுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படுமானால் இந்தியா சமஸ்கிருதத்தினை தொன்மையான மொழியாக கொண்ட நாடு எனும் பித்தலாட்டம் அம்பலப்படும். ஆகவே ஆரிய அடையாளங்களை கீழடியில் வலிந்து திணிக்க மோடி-பாஜக அரசு முயல்கிறது. இதற்கு தடையாக இருக்கும் மரியாதைக்குரிய தொல்லியல் அறிஞர் அமர்நாத் அவர்களை இடமாற்றம் செய்துவிட்டு பார்ப்பனர் சிரிராம் என்பவரை அமர்த்த முயல்கிறது.
இது போன்ற அயோக்கியத்தனத்தை நேரடி மேற்பார்வை மூலம் நடத்தவும், ஆரிய தொல்லியல் அடையாளத்தை திணிப்பதற்காகவும் ’பாஜக-மோடியின்’ பண்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் ’மகேஷ் சர்மா’ வருகின்ற 28 ஏப்ரலில் கீழடிக்கு நேரடியாக வர இருக்கிறார். இவர் ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். ஆரிய இனவெறிக்கும், மதவெறிக்கும் பேர் போனவர்.

ஆதார் ... நவீன அடிமைசாசனம் ... யாரையும் வேவு பார்க்கலாம் .. பிரைவசிக்கு வேட்டு?

டிரஸ்ட் ஐடி - யின் விளம்பரம்உங்களுடைய வீட்டுப் பணியாளர்கள், கார் ஓட்டுநர், எலக்ட்ரீசியன், வீட்டு வாடகைக்காரர்கள், யாராயிருந்தாலும் ஆதாரை அடிப்படையாக கொண்ட எங்களுடைய ஆண்டிராய்ட் ஆப் மூலம் அவர்களது பின்னணியை பரிசோதித்துக் கொள்ளலாம்” என்கிறது அந்த ட்ரஸ்ட் ஐடி(TrustID) என்ற கம்பெனியின் விளம்பரம். “முகத்தைப் பார்த்து நம்பாதீர்கள், ட்ரஸ்ட் ஐடியைப் பாருங்கள்” என்கிற முழக்கத்தை வைத்துள்ளது அக்கம்பெனி.
டிரஸ்ட் ஐடி – யின் விளம்பரம்
அதாவது எந்த ஒரு தனிநபராக இருந்தாலும், அவரது தனிப்பட்ட தகவல்களை ஒரு தனியார் நிறுவனத்திற்கு காசு கட்டி நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதே மேற்படி விளம்பரத்தின் பொருள். ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் இந்தியக் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களைக் கையாள்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், உச்சநீதிமன்றமே ஆதாரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்பாடுத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ள நிலையிலும் தான் மேற்கண்ட விளம்பரம் வெளியாகியிருக்கிறது.

ஹிந்து – ஹிந்தி – இந்தியா... வடக்கு வெறியர்கள் தேங்காயை உடைக்க முடிவெடுத்து விட்டார்கள்?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையும் போர்க்குணமும் அதிகார வர்க்கத்தையும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலையும் அடிபணிய வைத்தது. அப்போது ஒட்டு மொத்த தமிழகத்திடமும் செருப்பால் அடிவாங்கிய மத்திய பாஜக அரசு மீண்டும் ஒருமுறை தன்னுடன் மோதிப் பார்க்க அறைகூவல் விடுக்கிறது. நாமும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பாம்பை எதிர்கொள்ள மீண்டும் ஒரு டெல்லிக் கட்டைத் தொடங்குவோம்.
இந்திய அரசின் அலுவலக மொழியாக இந்தியை கொண்டு வருவதற்கான 117 பரிந்துரைகளைக் கொண்ட ”அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் கமிட்டி”யின் அறிக்கை ந்திய அரசின் அலுவலக மொழியாக இந்தியை கொண்டு வருவதற்கான 117 பரிந்துரைகளைக் கொண்ட ”அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் கமிட்டி”யின் அறிக்கையை, சிறு  திருத்தங்களோடு சட்டமாக்குவதற்கு  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அறிக்கை மற்ற அமைச்சகங்களுக்கும், மாநிலங்களுக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் ஒப்புதல் பெற அனுப்பப் பட்டுள்ளது . ஒப்புதல் பெறப்பட்டவுடன் இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும் மோடி அரசால் சட்டமாக்கப்பட்டு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வறிக்கையின் படி, இனி அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் அனைத்து முக்கிய அரசு பிரமுகர்களும், அவர்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்கும் பட்சத்தில் ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும். ’ஏர்-இந்தியா’  நிறுவனத்தில் இனி டிக்கெட்டுகள், பத்திரிக்கைகள் மற்றும் செய்தித்தாள்கள் அனைத்தும் கணிசமான அளவில் ஹிந்தியில் மட்டுமே இருக்க வேண்டும். அதோடு தனியார் வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் இதனை வலியுறுத்த வேண்டும்.

சவுக்கு சாட்டை : எம்ஜிஆர் ஆட்சி காலம் முதல் தமிழகத்தை சீரழித்து வந்துள்ள லும்பன் கட்சி....

article-2120782-12583E28000005DC-831_634x443அதிமுக கட்சி ஒரு லும்பன்களின் கட்சி என்பதை சவுக்கு பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. மொழி, இனம், பார்ப்பன எதிர்ப்பு என்ற கொள்கைகளால் உருவான கட்சி திமுக.  ஆனால் வெறும் நடிகரின் முகத்தைப் பார்த்து உருவான கட்சி அதிமுக.  நடிகரால் உருவான ஒரு கட்சியை பின்னாளில் ஒரு நடிகை கைப்பற்றி, அந்த நடிகையின் காலில் விழுந்து கிடந்தவர்களே இன்றைய அதிமுக உறுப்பினர்கள்.     அந்தக் கட்சியில் லும்பன்கள் இல்லாமல் வேறு யார் இருப்பார்கள் ?
அந்தக் கூற்றை உண்மையாக்கும் சம்பவங்களைத்தான் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்கிறார்.  பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சசிகலா அதிமுகவின் பொதுச் செயலளாராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை எடுத்துக் கொண்டு பன்னீர் செல்வமே சசிகலாவை சந்திக்க போயஸ் தோட்டம் செல்கிறார்.   போயஸ் தோட்டம் சென்றதும், சசிகலாவின் காலில் விழுகிறார்.    அவரைத் தொடர்ந்து இதர அமைச்சர்களும் விழுகின்றனர்.

வைகை நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லூர் கண்டுபிடித்த கண்றாவி ... இதுவுல ஊழல் வேற?

வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ பத்து லட்ச ரூபாய் செலவில் தெர்மோகோல்களை கொண்டு வந்து அணையின் மேல் வைத்ததாகவும் அவை எல்லாம் நீரில் ஊறி கரை ஒதுங்கி வீணாகியதாக K7 Tamil செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியை பார்த்தேன். இது உண்மையா என்று தெரியவில்லை.
இது தொடர்பாக வேறொரு சம்பவத்தை இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே பேஸ்புக்கில் எழுதியதுதான். நீர் நாவலிலும் இதை பதிவு செய்துள்ளேன். சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது பால்வளத்துறை அமைச்சர் ரமணா எங்கள் பகுதிக்கு வந்தார். அவருடன் மேலும் சில அதிகாரிகள் வந்திருந்தார்கள். அமைச்சரும் அவருடன் வந்தவர்களும் எங்கள் பகுதியை பார்த்து திகைத்துவிட்டார்கள். இவ்வளவு தண்ணி எப்படி உங்க தெருவுக்குள்ள வந்துச்சு என்று கேட்க நாங்கள் திகைத்துவிட்டோம்.  
அட கூமுட்டைகளா...ஒங்களுக்கெல்லாம் ஐடியா குடுக்குற ஆளு யாருன்னு சொல்லுங்க...  இதுக்கு பேசாம அதிமுகவில இருக்கற எல்லா அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் வைகை அணை மீது படுத்துட்டா நீர் ஆவியாகாமல் தடுக்கலாம்... அவனுக அதுக்காவது பயன் படுராய்ங்களா பாப்பம் ..

எவிடென்ஸ் கதிர்: எங்கள் சேரி மைந்தன் இளையராஜா இதுவரை நீ கலையாய் கொடுத்தாய் ! இனி களமாக கொடு !

Vincent Raj :  அவர் சேரியில் வந்தவர் என்று சொல்லிவிட்டால் எங்கே இசை அறிவு எல்லாம் சேரிக்கு சொந்தமானது என்று பேர் கிடைத்துவிடுமோ என்று நீங்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். உங்கள் ஊருக்குள் எங்கள் சேரியில்லை. எங்கள் சேரிக்குள் வேண்டுமானால் உங்கள் ஊரை வைத்துக் கொள்ளுங்கள்.
இசையை இதுவரை நீ கலையாய் கொடுத்தாய், இனி நீ களமாக கொடுக்க வேண்டும். உரிமையோடு கேட்கிறேன். முடியாது என்றால் பிரச்சனையில்லை. காற்று காசு பார்த்தா மூச்சுக்கு கொடுக்கிறது. எங்கள் சேரியும் அப்படித்தான்.
இனி இசையை களமாக கொடு
சமீபத்தில் அரசியல் சாசன மேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடிய பட்டியல் சாதி மக்களிடம் இராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பியிருந்தனர். அதாவது அம்பேத்கர் பாடலை ஒலிபரப்பக்கூடாது. மாற்று சமூகத்தினர் வசிக்கிற வீதிகளில் அம்பேத்கர் படம் ஏந்தி ஊர்வலம் செல்லக்கூடாது போன்ற பல கெடுபிடிகள் இருந்தன. இந்தியாவிற்கே அரசியல் சாசனத்தை எழுதிக் கொடுத்த அம்பேத்கர் அவர்களை பட்டியல் சாதி மக்களின் தலைவராக இங்கே சுருக்கி பார்க்கப்படுகிறது. அரசும் அப்படித்தான் மக்களிடத்தில் பரப்புரை செய்கிறது.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

திராவிடத்தால் எழுந்தோம் - நிமிர்ந்தோம் என்பது எதிரிகளுக்கு தெரிந்திருக்கிறது!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற அண்மைக்கால சிலரின் குரல் -ஆழமான  வரலாற்றுப் புரிதல் இல்லாமையாலோ -திராவிட இயக்கத்தின் ஒரு நூற்றாண்டுக்கால பணியையும், பங்களிப்பையும், தாக்கத்தையும் தாண்டிக் கடைபரப்ப முடியாத விரக்தியாலோ அதன் மீது ஏதாவது குற்றப் பத்திரிகை படித்தே தீரவேண்டும் என்ற நெருக்கடியாலோ எழுந்த ஒன்றே!
திராவிட கட்சிகளின் ஆட்சியின் 50 ஆண்டுகள் என்பதைக் கடந்து, கடந்த ஒரு நூற்றாண்டுக்கால திராவிட இயக்கத்தின் பிரச்சாரங்களும், போராட்டங்களும் ஆட்சியின் விளைவுகளும் சாதாரணமானதல்ல. இன்னும் சொல்லப்போனால் கவுதம புத்தர் தொடங்கிக் கொடுத்த ஆரிய வருணாசிரம, கலாச்சார போர்த்தொடுப்பு எதிர்ப்பின் தொடர் பணியைத் தூக்கிச் சுமந்து வருவதுதான்  திராவிடர் இயக்கம்.

அதிமுகவில் மின்னல் வேகத்தில் மாறும் காட்சிகள் ..மோடியின் கனவுக்கு ஆப்பு வைக்க தினகரன் சூழுரை?

அ.தி.மு.க. கட்சியும் ஆட்சியும் ஓ.பி.எஸ்.சின் கையில் ஒப்படைக்கப்பட்டு, அதை தங்களின் இஷ்டம் போல் ஆட்டுவிக்க வேண்டும் என்பது மோடியின் விருப்பம். அதற்கு இடந்தர மறுக்கிறார் தினகரன். ""சித்தியைப் போல நானும் சிறைக்குப் போனாலும் பரவாயில்லை; மோடியின் திட்டம் மட்டும் நிறைவேறக்கூடாது'' என கங்கணம் கட்டியிருக்கும் தினகரன், அதற்கேற்ப காய்களை நகர்த்துவதால் அ.தி.மு.க.வில் மீண்டும் மீண்டும் பரபரப்புகள் அரங்கேறியபடி இருக்கின்றன.>மீண்டும் ரெய்டு மிரட்டல்!>அ.தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் நாம் விசாரித்தபோது, ""கட்சியை கட்டுப்படுத்தும் அதிகாரத்திலிருந்து தினகரனை எப்படி அப்புறப்படுத்துவதுங்கிற விவாதம் வந்தப்போ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் தினகரனுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். அதனை கட் பண்ணினால் போதும் எல்லாம் தானாக நடக்கும் எனவும் டெல்லிக்கு ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா!


சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா!சென்னையின் வெப்பம் 100 டிகிரியைத் தாண்டி அடித்துக்கொண்டிருந்தாலும், சினிமா காதலர்கள் குதூகலமாக மற்றொரு திரைப்பட விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் மற்றும் Delegation of The European Union to India இணைந்து நடத்தும், ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா நாளை (ஏப்ரல், 22) சனிக்கிழமை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தொடங்கவுள்ளது. மாலை 6.15 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விழாவை தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு தொடங்கிவைக்கிறார். போர்ச்சுக்கல் நாட்டு தூதர் திரு. Joao Da Camara சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மே 4ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் போர்ச்சுக்கல், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
திரையிடப்படும் படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கீழேயுள்ள எண்ணைத் தொடர்புகொண்டு திரைப்பட விழாவுக்கான டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
044-28212652  மின்னம்பலம்

தீபா மீது புகார் : விண்ணப்பம் விற்றதில் மோசடி?

தீபா மீது புகார் : விண்ணப்பம் விற்றதில் மோசடி?
அரசியல் பிரவேசமே இன்னும் முழுதாக அரங்கேறவில்லை. அதற்குள் தீபா மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மீது, சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என நேற்று (21.4.2017) புகார் அளிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து விண்ணப்ப படிவம் விற்றதில் மோசடி செய்துள்ளதாக நெசப்பாக்கம் ஜானகிராம் என்பவர் தீபா மீது புகார் கொடுத்திருக்கிறார்.
ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய பேரவையை தொடங்கினார். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்று பெயர்வைத்து கொடியை அறிமுகம் செய்தார்
தீபாவின் டிரைவர் ராஜாவின் ஆலோசனைப்படிதான் ‘எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை' ஆரம்பிக்கப்பட்டது என்று அப்போது தகவல் வெளியானது.

அருணாச்சல பிரதேசத்தில் சீன எழுத்தில்...ஆறு இடங்களின் பெயர்களை ... இந்தியா கண்டனம் எழுதியது

பெயர் மாற்றம்: சீனாவுக்கு இந்தியா கண்டனம்!
அருணாச்சல பிரதேசத்தின் ஆறு இடங்களின் பெயர்களைச் சீன எழுத்தில் எழுதியது குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் மேற்கு கமிங் மாவட்டத்தில் உள்ள மோம்டிலாவுக்குச் சென்றதில் இருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா - சீனா உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டதாக வெளிப்படையாக அறிவித்தது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, அருணாச்சல பிரதேசம் தொடர்பாகச் சீனாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை. அது, இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட பகுதி என்பதில் உறுதியாக உள்ளது. இந்தோ - சீனா போரின்போது சீனா கைப்பற்றிய பகுதிகள் தொடர்பாகத்தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.    இதை தடுக்க துப்பில்லை பெரிசா  தமிழ் எழுத்தை அழிக்க வந்துட்டாய்ங்க

தீபாவின் கணவர் மாதவன் புதியகட்சி தொடங்கினார் ... இனி தமிழகத்தில் பாலாறு தேனாறு ...

புதிய கட்சி தொடங்கிய மாதவன்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என்று இரண்டு அணிகளாகப் பிரிந்தனர். அதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா' என்ற பேரவையை தொடங்கினார். தொடக்கத்தில் மாதவனும் தீபா பேரவையில் இருந்தார். பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியேறிய தீபாவின் கணவர் மாதவன், புதுக் கட்சி தொடங்கப்போகிறேன் என்று அறிவித்தார்.

தனுஷ் வழக்கு தள்ளுபடி ... தங்கள் மகனாக அறிவிக்க கோரிய தம்பதிகளின் வழக்கை ...

பிரபல தமிழ் நடிகர் தனுஷின் பெற்றோர் தாங்கள்தான் என அறிவிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்று வந்தது.e>மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தனர். அதில், தற்போது பிரபலமாக உள்ள நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் கலைச்செல்வன் என்றும், 2002ஆம் ஆண்டில் பதினொன்றாம் வகுப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்குச் சென்றுவிட்டதாகவும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
பிரபல நடிகரான பிறகு கலைச்செல்வன் தன் பெயரை தனுஷ் என மாற்றிக்கொண்டுவிட்டதாகவும், தங்களை ஒதுக்கிவைத்துவிட்டதாகவும் தாங்கள் மிகவும் சிரமப்படுவதால், பராமரிப்புத் தொகையாக மாதம் அறுபதாயிரம் ரூபாய் தர வேண்டுமென்றும் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.

திருப்பதி அருகே லாரி மோதி 25 பேர் மரணம் .. பேருந்துக்கு நின்றவர்கள் மீது தறிகெட்டு மோதிய ..


பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி 25 பேர் உயிரிழப்பு! ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சித்தூர் மாவட்டம் ஏர்பேடு கிராமத்தில் சாலையோர கடைக்குள் லாரி புகுந்தது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மற்றும் இரசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 25 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பலர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சித்தூர்: திருப்பதி அருகே ஏர்பேடு பகுதியில் உள்ள கடைகளுக்குள் லாரி புகுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஏர்பேடு பகுதியிலுள்ள கடைகளை உடைத்தபடி, பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியுள்ளது. அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தின் எதிரே ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளது. அந்த போராட்டக்காரர்கள் மீதும் லாரி மோதியுள்ளது. இதனால் அந்த இடமே ரத்த வெள்ளமாக மாறியது. இதனிடையே லாரி மோதி, மின்சார கம்பம் சரிந்து மின்சாரம் பாய்ந்தும் சிலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காய்கறி விற்றவர்கள், பஸ்சுக்கு காத்திருந்தவர்கள், போராட்டம் நடத்தியவர்கள் என மூன்று தரப்பட்ட மக்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இவ்வாறு மொத்தம் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுமார் 20 பேர் படு காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சத்யராஜ் படத்துக்கு கர்நாடகத்தில் தடை என்றால், ரஜினியின் எந்திரன் 2.0 படத்திற்கு இங்கு?

சத்யராஜ் முன்பு எப்பொழுதோ கன்னடர்களை காவேரி பிரச்சினையில் திட்டிவிட்டாராம், யார்தான் திட்டவில்லை? உச்சநீதிமன்றம் வரை திட்டத்தான் செய்தது
அதனால் இப்பொழுது சத்யராஜ் மன்னிப்பு கேட்டால்தான், பாகுபலியினை கன்னடத்தில் வெளியிட அனுமதிப்பார்களாம், இதை வலியுறுத்தி போராட்டம் வேறு அந்த ஊர் சீமான் பால் தாக்கரே நடத்தபோகின்றாராம்
அவருக்கும் வேலை இல்லை, அவருடன் இருக்கும் கும்பலுக்கும் "வேலை" இல்லை, இப்படியான சந்தர்ப்பங்களில் மட்டும் வேலை பார்க்கின்றார்கள்
நதிகளும், கலைகளும் எல்லைகள் தாண்டியவை எல்லா மக்களுக்கும் பொதுவான விஷயம்
அப்படி சத்தியராஜ் மன்னிப்பு கேட்கவேண்டுமென்றால், நாம் கேட்டுகொள்ளலாம்
சரோஜாதேவியினை தமிழகத்தில் அனுமதித்தற்காகவும், ரஜினி முதல் மோகன், முரளி, பிரகாஷ்ராஜ் என சகலரையும் இங்கு அனுமதித்தற்காகவும் மன்னிப்பு கேட்கின்றோம்

தினகரன் உதவியாளர்கள் இசக்கி , ராஜேந்திரனை தாக்கிய பாலிமர் ஊடக ரவுடிகள் ...

ஊடக ரவுடித்தனம்.
டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது முதலாகவே, அவரின் அடையாறு வீட்டின் வாசலில் டிவி சேனல்களின் ஓபி வேன்களும், செய்தியாளர்களும், கேமராக்களோடு குவிந்து இருந்து வருகிறார்கள். இரு நாட்களுக்கு முன்பு, டிடிவி வீட்டுக்கு சம்மன் வழங்குவதற்காக, டெல்லி காவல்துறையிலிருந்து ஒரு உதவி ஆணையரும், ஆய்வாளரும் மற்றொருவரும் இரவு வந்திருந்தனர். சம்மன் வழங்கிய பின்னர், வாசலில் செய்தியாளர்கள் குழுமியிருப்பதால், அந்தத் தெருவின் முனையில் நிறுத்தியிருக்கும் தங்கள் வாகனம் வரையில் தங்களை விட்டு விடுமாறு டெல்லி காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, தினகரனுக்கு உதவியாக இருந்த இசக்கி, ராஜேந்திரன் மற்றொருவர் மூவரும் டெல்லி காவல்துறையினரை அவர்கள் வாகனம் வரையிலும் கொண்டு விட்டனர். அவர்களிடம் செய்தியாளர்கள் பேட்டியெடுக்க முயற்சித்தபோதும் அவர்கள் பேசவில்லை. காவல்துறையினர் சென்றதும், பாலிமர் செய்திச் சேனலின் செய்தியாளர் ஜெபர்சன் என்பவர், தன் மைக்கால் எங்களை ஏன் கேள்வி கேட்க விடாமல் தடுத்தாய் என்று இசக்கியை அடித்துள்ளார். இசக்கிக்கு வயது 65க்கு மேல் இருக்கும். இசக்கியை காப்பாற்றுவதற்காக ராஜேந்திரன் அவரை தடுத்துள்ளார். இசக்கியை விட்டு விட்டு ராஜேந்திரனை ஜெபர்சன் தாக்கியுள்ளார். ஜெபர்சனை தொடர்ந்து இதர செய்தியாளர்களும் ராஜேந்திரனை தாக்கியுள்ளனர்.

பாரிஸ் துப்பாக்கி சூடு போலீஸ் அதிகாரி மரணம் ,.. கொலையாளி தற்கொலை ... இஸ்லாமிய பயங்கரவாதிகள் உரிமை கோரினர்

பாரீசில் துப்பாக்கிச்சூடு: ஒரு போலீஸ் அதிகாரி பலி – மர்ம நபர் தற்கொலை – (அதிர்ச்சி வீடியோ) பாரீசில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாரீசின் வர்த்தக நகரமான சாம்ப்ஸ்-எலிசிஸில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் மற்றொரு நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அலிபாபா நிறுவனர் ஜாக் மாவின் கதை ... ஆன்லைன் வர்த்தகத்தில் உலகின் முதலிடத்தில் ...

உலகம் அறிந்த ஒரு சேல்ஸ் கதை ஒன்றை சொல்கிறேன். ஒரு எலெக்ட்ரானிக் நிறுவனத்தின் தலைவர் இரு சேல்ஸ்மேன்களை அழைத்து ஆப்ரிக்காவிற்கு செல்லுங்கள் அங்கு நமது டேப்ரிக்கார்டர்க்கு சந்தை இருக்கிறதா என்று பார்த்து வாருங்கள் என்று அனுப்பினார். இருவரும் ஆப்பிரிக்கா முழுதும் சுற்றிவிட்டு வந்து நிறுவனரிடம் ரிப்போர்ட் பண்ணினார்கள்.
முதல் சேல்ஸ்மேன் சொன்னார் “ நம்ம பொருளிற்கு அங்கு சந்தையே இல்லை. ஏனென்றால் அங்கு பெரும்பாலான ஊர்களில் கரண்டே இல்லை. மின்சாரவசதி இல்லாத ஊரில் எப்படி நம்ம பொருள் விற்கும்?” என்று கூறினார். இரண்டாவது சேல்ஸ்மேன் வந்தார். வரும்போதே அத்தனை மகிழ்ச்சி. “சார். நமக்கு ஆப்ரிக்காவில் பெரிய சந்தை இருக்கிறது. அங்கு ஒருத்தரிடம் கூட டேப் இல்லை. காரணம் கரண்டே இல்லை. ஆதலால் நம்ம டேப்ரிக்கார்டர்க்கு மட்டுமல்ல, நம்ம கம்பெனி ஜெனரேட்டர்க்கு, பேட்டரிக்கு, எல்லா எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் கூட அங்கு பெரிய சந்தை இருக்கிறது. இப்பவே நாம் அந்த சந்தையை பிடித்தால் நம்மை யாரும் அசைக்கமுடியாது” என்றார்.

மோடியின் பினாமி அரசாகி விட்ட தமிழக அரசு!


பன்னீர் -எடப்பாடி பழனிசாமி இணையும் பின்னணி இதுதானா?2016 டிசம்பரில் அதிமுக-வுக்குள் வீசிய புயல் இன்னும் ஓயவில்லை. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ந்துபோய்க் கிடந்த அதிமுக மெல்ல மெல்ல கரைசேரக் காத்திருக்கிறது.
கட்சி பிளவு, சின்னம் முடக்கம், அமைச்சர் வீட்டில் ரெய்டு, தேர்தல் நிறுத்தம் ,சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து அகற்றம் என, நாளுக்கு நாள் டெம்ப் குறையாமலிருக்கிறது அதிமுக-வின் கூடாரம். பகையை மறந்து, இலையை மீட்க இப்போது பன்னீரும்-எடப்பாடியும் இணையப்போவதாக வரும் தகவல்களின் பின்னணியில் நடந்தது என்ன?
இரட்டை இலையை மீட்கவா இணைகிறார்கள்?
உட்கட்சி பிரச்னைகளை மறந்து இரட்டை இலையை மீட்டு, மீண்டும் உண்மையான அதிமுக-வை உருவாக்குவோம். முதல் கட்டமாக சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரையும் கட்சியிலிருந்து அப்பறப்படுத்திவிட்டு கட்சிப் பணிகளைத் தொடங்குவோம் என்று பன்னீர்செல்வம் தரப்பிலிருந்தும், எடப்பாடி பழனிசாமியின் தரப்பிலிருந்தும் முடிவெடுத்துவிட்டதாக மீடியாக்களிடம் சொன்னார்கள். இதற்கிடையில், நானே கட்சிப் பணிகளிலிருந்து வெளியேறிவிட்டேன் என்று தினகரன் சிரித்த முகத்தில் எந்தவொரு கோபமும் இல்லாமல் கூலாக பதில் சொல்லுகிறார். உண்மையில் நடந்தது என்ன? ஒரு இடைத்தேர்தலுக்கு எதிரெதிர் அணிகளாக இருந்தவர்கள், ஒருவரை ஒருவர் மாறி மாறி வீதியில் இறங்கி குற்றம்சாட்டியவர்கள் இறுதியாக, தன் தலைவியின் மரணத்தை கொலையெனச் சொன்னார்கள். இப்படிப்பட்ட இருவரும் இணைகிறார்கள் என்றால் இதன் பின்னணியில் நடந்த விஷயங்களைப் பற்றி அலசுவோம்.

பன்னீர் - பழனி பேரம் இழுபறி ....

டிஜிட்டல் திண்ணை:பன்னீர் - பழனிசாமி : முடியாத பேரம்!
“அதிமுக-வில் நேற்றைய நிலவரப்படி, முதல்வராக பன்னீர்செல்வம், துணை முதல்வராக எடப்பாடி பழனிசாமி என்று பேசி முடிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரவில் சூழ்நிலை மாறியது. எடப்பாடி அணியில் இருக்கும் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. ‘முதல்வர் பதவியை நாம எதுக்கு விட்டுக் கொடுக்கணும்? முதல்வராக எடப்பாடியே தொடரட்டும். அவருக்கு வேணும்னா துணை முதல்வரோ அல்லது பொதுச் செயலாளர் பதவியையோ கொடுக்கலாம். நம்மகிட்டத்தானே மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க. அதுவும் இல்லாமல் அடிக்கடி முதல்வரை மாற்றிக்கிட்டே இருந்தால், அது மக்களிடமும் கெட்ட பெயரைத்தான் உண்டாக்கும். அதனால அந்த டீம் பேசினாலும், நாம அதுக்கு சம்மதிக்கக் கூடாது’ என்று வேலுமணி சொல்லியிருக்கிறார். நேற்று இரவே இந்தத் தகவல் பன்னீர் டீமுக்கும் சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர்களோ, ‘ஏற்கெனவே பன்னீர்தான் முதலமைச்சராக இருந்தாரு. அம்மாவால் அடையாளம் காணப்பட்ட முதல்வரும் பன்னீர்தான். அதனால் அவர்தான் முதல்வராக இருக்கணும். சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்தானே எடப்பாடி பழனிசாமி. அவரை மாற்றுவதில் என்ன பிரச்னை? அவருக்கு வேறு பொறுப்பைக் கொடுங்க. முதல்வர் பன்னீர் அண்ணன்தான். அதில் எந்த மாற்றத்துக்கும் நாங்க சம்மதிக்க மாட்டோம்’ என்று சொல்லிவிட்டார்களாம்.

சத்தியராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் பஹுபாலி 2 .... வட்டாள் நாகராஜ் கோரிக்கை!

சத்யராஜை மிரட்டும் கன்னட அமைப்புகள்!
8 நாட்கள் தான் இருக்கிறது பாகுபலி 2 ரிலீஸுக்கு. நாட்கள் குறைய குறைய பாகுபலி 2 படத்தின் பிரச்னை மட்டும் அதிகரித்தபடியே இருக்கிறது. தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே ஏற்பட்ட காவிரி நதிநீர் பிரச்னையின்போது சத்யராஜ் கர்நாடகாவை விமர்சித்துப் பேசியதற்காக பாகுபலி 2 திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்யவேண்டும் என வட்டாள் நாகராஜ் உட்பட கர்நாடகாவில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் முடிவு செய்திருக்கின்றன.
பிரச்னை உருவான இத்தனை நாட்களாக சத்யராஜுக்கும் படத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. படத்தில் நடித்தார். அதற்கான பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். படத்தைத் தடை செய்வதால் சத்யராஜுக்கு எவ்வித பாதிப்பும் வரப்போவதில்லை என்று இத்தனை நாட்களாக பேசிவந்த ராஜமௌலி இப்போது இந்த பிரச்னை குறித்து சத்யராஜிடம் என்ன பேசினார் என்பதை வெளியிட்டிருக்கிறார்.

ஆளுநர் ,முதலமைச்சரை தம்பிதுரை சந்திப்பு ... மரியாதை நிமித்தம்னு சொல்லுவாய்ங்களோ?

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, நேற்று, தமிழக கவர்னர் மற்றும் முதல்வரை, அடுத்தடுத்து சந்தித்து பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து சந்திப்பு: தமிழகத்தில், ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது; அதை ஒன்றிணைக்க, முயற்சிகள் நடந்து வருகின்றன. இம்முயற்சி பலன் அளிக்குமா; இரு அணிகளும் இணைந்தால், முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர்வாரா அல்லது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், புதிய முதல்வராக பொறுப்பேற்பாரா என, பட்டிமன்றம் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ராஜ்பவன் சென்று, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். பரபரப்பு: இது குறித்து, அவர் கூறுகையில், ''நான் மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்தேன்; அவர் என் நண்பர். இதில், அரசியல் முக்கியத்துவம் இல்லை,'' என்றார். பின், தம்பிதுரை, அங்கிருந்து தலைமை செயலகம் சென்றார்; முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து, கவர்னரிடம் பேசிவிட்டு, அவர் கூறிய தகவலை, முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கவர்னர் மற்றும் முதல்வரை, அவர் அடுத்தடுத்து சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமலர்

தியேட்டர்களில் எல்லாமே கொள்ளை விலை .. எப்படி வருவான் ? டவுன்லோடுதான் செய்வான்!

அவனவன் தியேட்டருக்கு போய் படம் பாக்க வைக்கிறது இன்னைக்கி லெவல்ல ரொம்ப கஷ்டம் ஆனா அதையும் மீறி வரவைங்கள இந்த தியேட்டர்காரன் நிரந்தரமாக வரவிடாம பண்ணிடுவான் போல , இங்க ரோகிணில பார்க்கிங் 30 சரி தொலைஞ்சுபோகட்டும் வந்தா உள்ள தண்ணீபாட்டில் , கூல்டிரிங்க்ஸ் , பப்ஸ் , ஸ்நாக்ஸ் எல்லாமே டபுள் ரேட் அவங்க கிட்ட கேட்ட தியேட்டர்ல நிர்வாகம் அப்படித்தான் கொடுக்க சொல்லிருக்கு வேணும்னா மேனேஜர்கிட்ட கேளு சொல்றாங்க, இந்த தியேட்டர் ஓனர் தியேட்டர் அசோசியேசன் பொறுப்புல வேற இருக்கார் , இவரே இப்படி இருந்தா மக்கள் அப்பறம் எப்படிடா தியேட்டருக்குவருவான் .. இப்ப இந்த படம் பாக்க டிக்கெட் விலை 120 + 3டி 30+ புக்கிங் சார்ஜ் 35 + ஒரு பப்ஸ் + ஒரு வாட்டர்பாட்டில் 80 ஆக மொத்தம் 265 அப்பறம் அவங்க தியேட்டருக்கு நாம படத்துக்கு போறதுக்கு பார்க்கிங் கொள்ளை 30 ஆகமொத்தம் 295ரூ என் ஒரு ஆளுக்கு மட்டும் அப்ப ஒரு பேமிலி வந்தா மினிமம் 1000ரூ , ஒரு மாதத்துக்கு படத்துக்கு செலவு பண்ற பட்ஜெட்ட நீ ஒரு ஷோவுக்கு புடுங்குனா  முகநூல் பிறாண்டல்கள்   கேபிள் சங்கர்

தங்கத்தமிழ்செல்வன் MLA :ஜெயலலிதாவின் மரணம்.. பிரதமர் மோடியிடம் விசாரிக்க வேண்டும்! மோடிக்கு நிச்சயம் ஒரு ரோல் இருக்கிறது!

Modi should be inquired, says MLA Thanga Thamizhselvan சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றால் நீதிவிசாரணை நடத்த வேண்டும். அப்போது பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ ; தடாலடியாக அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓபிஎஸ் அணியினருக்கு என்ன டிமாண்ட் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு தேவை ஜெயலலிதா ஆட்சி. எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் அதைத்தான் விரும்புகிறோம். துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கட்சியும் ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பி விலகிவிட்டார்.
 அதிமுகவில் இவர் ஒருவர்தான் உண்மையை பேசி உள்ளார் ... நிச்சயமாக பிரதமர் மோடிக்கு  இதில்  ஏதோவொரு ரோல் இருக்கிறது ! பாதுகாப்பு படைகளின்  புரோட்டோகால் எல்லாவற்றையும்  உதாசீனம் செய்வது சசிகலாவால் சாத்தியமே இல்லை .. மோடியின் பங்களிப்பு  நிச்சயம் இருக்கிறது .. குடியரசு தலைவர்  பிரணாப்  முகர்ஜியிடம் கூட விசாரிக்கவேண்டும்

விகடன் : பன்னீர்செல்வத்தின் 15 ஆயிரம் கோடி பணம்... 15 ஆயிரம் ஏக்கர் நிலம்!, ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம்-10

ஓ.பன்னீர்செல்வம்
2016 மார்ச் மாதம்... தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டிக் களம் பரபரப்பாகிக்கொண்டிருந்தது. தி.மு.கவை ஆட்சியில் அமர்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்று சொல்லி சூறாவளிப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார். பா.ம.கவின் வெற்றிக்காக ‘மாற்றம்- முன்னேற்றம்-அன்புமணி’ என்ற கோஷத்தை முன்வைத்து விதவிதமான மேடைகளில், விதவிதமான ‘கெட்-அப்’புகளில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். மக்கள் நலக்கூட்டணியின் கௌரவத்தைக் காப்பற்றிவிட வேண்டும் என்ற தவிப்பில் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் ஆளுக்கொரு திசையில் போராடிக்கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட பரபரப்பான நேரத்தில் அ.தி.மு.க-வில்  உச்சக்கட்ட அவமானம் அரங்கேறிக்கொண்டிருந்தது. அந்தக் கட்சியின் கட்டமைப்பு, சட்டம்-ஒழுங்கு, உள்கட்சிப் பஞ்சாயத்துக்களைக் கண்காணிக்கும் சக்தி வாய்ந்த ‘ஐவர் அணி’யை மொத்தமாக போயஸ் கார்டன் ‘கஸ்டடி’ எடுத்திருந்தது. ஓ.பன்னீர்செல்வம் ஒரு வாரத்துக்கு மேலாக ஒளித்து வைக்கப்பட்டு இருந்தார்; நத்தம் விஸ்வநாதன் எந்தத் திசைக்குப்போனார் என்பதை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை; அமைச்சர் பழனியப்பன் ஆறு நாள்களாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்தார். அவர்களுக்கு என்ன ஆனது, எங்கு போனார்கள் என்பதெல்லாம்  அரண்மனை ரகசியம்போல் இருந்தது.

வியாழன், 20 ஏப்ரல், 2017

விஷால் : திரைப்படத்தின் காட்சிகள் பாடல்கள் தொலைக்காட்சிகளுக்கு இலவசமாக கொடுக்கவேண்டாம்!

தயாரிப்பாளர்களின் வளர்ச்சிக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதியோடு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் விஷால்.. அதிரடியாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் விஷால் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ‘அன்புள்ள திரைப்பட முதலாளிகளுக்கு நமது திரைப்படத்தின் பாடல்கள், கிளிப்பிங்ஸ் மற்றும் டிரைலர் போன்ற எதுவும் இனி எந்த ஒரு தொலைக்காட்சிக்கும்… இன்று முதல் இலவசமாக தர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மானம் காப்போம், வருமானம் பெருக்குவோம்’  என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   ரெட்டிகாரு ரோம்பதாய்ன் துள்ளுராறு ரொம்ப நாளைக்கு தாங் காது ... காது

Time செல்வாக்குள்ள மனிதர்கள் ... அதல பாதாளத்தில் விழுந்த மோடியின் செல்வாக்கு ..

டைம் இதழ் அட்டைப்படத்தில் மோடிஎம்.குமரேசன்: உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் யார் யார் இடம் பெற வேண்டுமென்று ‘டைம்’ இதழ் நடத்திய ஆன்லைன் வாக்கெடுப்பில் பிரதமர் மோடிக்கு எத்தனை ஓட்டுகள் விழுந்தன? புகழ்பெற்ற ‘டைம்’ இதழ் ஒவ்வொரு ஆண்டும் ‘Person of the Year’ என ஒருவரை தேர்வு செய்து அறிவித்து வருகிறது. முதல்கட்டமாக 100 பேர் அறிவிக்கப்பட்டு அதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த 100 பேர்களை ஆன்லைன் வழியாக டைம் இதழின் வாசகர்கள் தேர்வு செய்வார்கள் கடந்த 2012ம் ஆண்டு டைம் இதழ் அட்டைப் பக்கத்தில் முதன்முறையாக பிரதமர் மோடி இடம் பெற்றார். இந்திய பிரதமரான பிறகு 2015ம் ஆண்டில் டைம் இதழ் அவரிடம் பிரத்தியேக பேட்டி எடுத்திருந்தது. அந்த சமயத்திலும் டைம் இதழின் அட்டைப்படத்தில் மோடி இடம் பெற்றிருந்தார்.

கோகுலம் சீட்டு .. 79 இடங்களில் சோதனை 12 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு..

கோகுலம் சிட்ஸ் நிறுவனத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும், 'கோகுலம் சிட்ஸ் அண்ட் பைனான்ஸ்' நிறுவனத்தில், வருமான வரித் துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அந்நிறுவனத்துக்கு சொந்தமான, 79 இடங்களில் சோதனை நடந்தது. இதில், 12 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. < சென்னை, கோடம்பாக்கத்தில், கோகுலம் சிட்ஸ் அண்ட் பைனான்ஸ் நிறுவன தலைமை யகம் உள்ளது. இந்நிறுவனம், 1968ல், எம்.ஜி.ஆரால் துவக்கி வைக்கப்பட்டது. இதன் உரிமையாளர் ஏ.எம்.கோபாலன், அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கமானவர். இவர், திரைப்பட தயாரிப்பு மற்றும் வினியோக துறையிலும் ஈடுபட்டு வருகிறார். கோகுலம் நிறுவனத்துக்கு, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், ஏராளமான கிளைகள் உள்ளன. இந்நிலையில், அந்நிறுவனம், கறுப்பு பணம் பதுக்கல் மற்றும் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக, வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, அதற்கான ஆதாரங்களை தேடும் பணியில், வருமான வரித்துறையினர் இறங்கினர்.

புதுசேரியில் தருண் விஜய்க்கு எதிராக மாணவரகள் போர்க்கொடி ... போலீசார் வெளியேற்றினர் ..

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி. தருண் விஜய் இன்று கலந்து கொண்டார். அப்போது, தருண் விஜய் பங்கேற்பதற்கு பல்கலைக் கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நிறவெறி கருத்து தெரிவித்த தருண் விஜய்க்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர். தருண் விஜயை முற்றுகையிட முயன்ற மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தருண் விஜய் உடனடியாக பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேற வேண்டும், பல்கலைக் கழகத்தில் உரையாற்றக் கூட்டாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

காதலர்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ... ராஜஸ்தானில் .. காதலுக்கு எதிரிகளாம் ..

ராஜஸ்தானில், காதலர்களை நிர்வாணாமாக்கி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ளது ஷம்பூபுரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பில் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த கன்ஜுரா (20) என்பவர் 18 வயதுடைய அவரது உறவுக்காரப் பெண்ணை காதலித்துள்ளார். இது, பெற்றோருக்கு பிடிக்காததால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி குஜராத்தில் வசித்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அவர்களை தேடிக் கண்டுபிடித்த உறவினர்கள் அவர்களை வீட்டுக்கு அழைத்துவந்தனர்.

வருமான வரி சோதனைகளால் கட்சியையும், ஆட்சியையும், நாட்டையும் கா(கூ)ட்டி கொடுக்கும் அமாவாசைகள்

பிடியை இறுக்கிவிட்டது டெல்லி! வேதனைப்படும் அமைச்சர்கள்!
கடந்த 3 நாட்களாக அதிமுகவில் இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சுவார்த்தையோடு பரபரப்புகள் நிலவி வந்தது. இதற்கு பின்னணியில் பாஜக தலைமைதான் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியான சம்பவங்கள்தான், கடந்த இரண்டு நாட்களாக நடைப்பெற்று வந்தது. திடீரென சசிகலா குடும்பத்தை ஒத்திவைத்துவிட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதாகவும் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவதாகவும் மூத்த அமைச்சர்தகள் கூறினார்கள். இதற்கு ஓ.பி.எஸ். தரப்பிலும் வரவேற்பை கொடுத்தார்கள். கடந்த இரண்டு மாதமாக கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமை செலுத்தி வந்த துணைப்பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், திடீரென 'நான் ஒதுக்கிவிட்டேன்' என்று சாதாரணமாக கூறிவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். இவற்றிக்கெல்லாம் காரணம் பாஜகவினுடைய கடுமையான நெருக்கடிதான் என ’கூறப்படுகிறது.

நெருப்பாற்றில் நீந்தி 30 வயதில் நக்கீரன் ...

No automatic alt text available.Govi Lenin : நக்கீரன் இதழ் 30வது வயதில் அடிவைக்கிறது. வார இதழாகத் தொடங்கி, வாரமிருமுறை இதழாகி, தற்போது 3 நாட்களுக்கு ஓர் இதழ் என்ற வளர்ச்சியைப் பெறுவதற்கு காரணம், ஆசிரியர் நக்கீரன் கோபால் அண்ணனின் துணிச்சலும், நக்கீரன் நிறுவனத்தை ஒரு குடும்பமாக அவர் அரவணைத்துச் செல்லும் அன்பும்தான்.
நாட்டிலும் காட்டிலும் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த உண்மைகளை வெளிப்படுத்தியதால் வாசகர்களின் மனதை வென்ற நக்கீரனுக்கு ஆட்சியாளர்கள் தந்த ‘வெகுமதி’கள் ஏராளம். அவதூறு வழக்குகள், அடக்குமுறைகள், அராஜகத் தாக்குதல்கள், கைது நடவடிக்கை, பொடா சிறைவாசம் என 30 ஆண்டுகளில் பாதிக்கும் மேலான காலகட்டத்தை நெருப்பாற்றில் நீந்திக் கடந்தது நக்கீரன்.