
ஒருங்கிணைக்கவே பா.ஜ.வுடன் சிவசேனா கூட்டணி வைத்தது என அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மத்திய அரசை குற்றம்சாட்டி பேசினார்.மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.முதல்வராக பா.ஜ.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். கூட்டணியில் சிவசேனா இருந்தாலும் மத்திய அரசின் செல்லாதநோட்டு அறிவிப்பு, ஜி.எஸ்.டி. மசோதா , எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை சிவசேனா கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் வருகிறது.இந்நிலையில் தசரா பண்டிகையையொட்டி மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் பேசியதாவது, இந்துக்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவே பா.ஜ.வுடன் சிவசேனா கூட்டணி வைத்ததே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. ஜி.எஸ்.டி.யால் வரி விதிப்பு முறை சீராக உள்ளது என்றனர். எங்கே சீராக உள்ளது. இந்தியாவை விட பாகிஸ்தானில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது.செல்லாத நோட்டு அறிவிப்பை ஆதரிப்பவர்கள் ‛தேசபக்தர்கள்' என அழைக்கிறீர்கள் எதிர்ப்பவர்களை ‛தேசதுரோகிகள்' என அழைக்கிறீர்கள்.