மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஊழியருக்கு 300 ரூபாய் லஞ்சம் கொடுக்க
மறுத்ததால் தாமதமான சிகிச்சையால் மகனை பறிகொடுத்த தந்தை போலீஸில் புகார்
செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. தட்டச்சு வேலை செய்து
வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். மகன்
ராஜேந்திர பிரசாத்துக்கு, (18) கடந்த 2-ம் தேதி காலை 10.30 மணியளவில்
வலிப்பு ஏற்பட்டதால், 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மதுரை அரசு ராஜாஜி
மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் இறங்கியதும் உடனடியாக அவசர சிகிச்சை வெளிநோயாளிகள்
வார்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த மருத்துவர்கள்
உடனடியாக சிகிச்சை அளிக்காமல், மருத்துவர் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு,
அவசர சிகிச்சைப் பிரிவு உள்நோயாளிகள் பிரிவுக்குக் கொண்டு செல்லும்படி
கணபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.