சனி, 22 டிசம்பர், 2018

கமல் காங்கிரஸ் எம்பி தொகுதிகளில் சிலதை கேட்கிறார்?.. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு!

டிஜிட்டல் திண்ணை: திமுக -காங். கூட்டணியில் கமல் போட்டி?மின்னம்பலம் : "அடுத்த கட்டம் என்ன என்பதில் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார் கமல். மும்பையை சேர்ந்த ஒரு தனியார் சர்வே ஏஜென்சி மூலமாக சர்வே ஒன்றை எடுத்திருக்கிறார். அதில் தனித்து போட்டியிட்டால் வாக்கு சதவீதம் மிக குறைவாகவே இருக்கும் என சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகே கூட்டணி பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
இன்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்தும் விட்டார் கமல். அவரது மனதில் இருந்தது காங்கிரஸ்தான். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி வந்துவிடும்... காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வந்தார் கமல்.

33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.. சினிமா டிக்கெட் உட்பட வரி குறைப்பு

தினதந்தி ;உச்சபட்ச 28 சதவீத ஜி.எஸ்.டி. பிரிவில் 34 சொகுசு பொருட்களே உள்ளன என கூறினார்.
 புதுடெல்லி, ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு  சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன், வணிகவரித் துறை தலைமைச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். சரக்கு மற்றும் சேவை வரியினால் 2017 ஜூலை மாதத்திலிருந்து 2018 செப்டம்பர் மாதம் வரை தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகையான மூன்றாயிரத்து 230 கோடி ரூபாயினை மத்திய அரசு அளிக்க வேண்டும்.
ஐந்தாயிரத்து 454 கோடி ரூபாய் நிலுவைத் தொகையினை உடனடியாக மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக வர்த்தகர்கள் முன்வைத்துள்ள சில வரி குறைப்பு கோரிக்கைகளும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது என இதற்கான கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் 7 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 2 சதவீதத்தில்  இருந்து 18 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்துள்ளது.  மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 12  சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.;
கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-;
* இன்றைய கூட்டத்தில் 33  பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு உள்ளது. 28 சதவீத உச்சபட்ச  ஜி.எஸ்.டி.  பிரிவில் 34 சொகுசு பொருட்களே உள்ளன.
* டிவி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டு உள்ளது.

தனது இறுதிச்சடங்குக்கு தானே பொருட்களை வாங்கி வைத்துவிட்டு தலித் விவசாயி தற்கொலை


BBC : ``வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள
நகரத்துக்குச் சென்றவர் வீடு திரும்பவே இல்லை. இருந்தபோதிலும், வாங்கிய வளையல்கள், வெள்ளைத் துணி, மஞ்சள், குங்குமம், பூமாலை என அவர் வாங்கியவை கிராமத்துக்கு வந்து சேர்ந்தன. துரதிருஷ்டவசமாக தனது இறுதிச் சடங்குக்காக அவற்றை வாங்கியிருந்ததால், எதுவுமே வீட்டு உபயோகத்துக்கானவையாக இருக்கவில்லை'' இந்த வார்த்தைகளைக் கூறும்போது மாதவய்யாவின் தொண்டை துக்கத்தில் அடைத்தது. ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் கம்பதுரு மண்டல் பகுதியில் ராம்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவய்யாவின் தந்தை மல்லப்பா ஒரு விவசாயி. தனது இறுதிச் சடங்கு நடத்துவதற்குத் தேவையான, எல்லா பொருள்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். தன் குடும்பத்தினருக்கு தனது நினைவாக இருக்கட்டுமே என்று தன் புகைப்படத்தையும் லேமினேட் செய்து வைத்திருந்தார்.
பயிர் விளைச்சலில் இழப்பு ஏற்பட்டதால், விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் 2018 ஆகஸ்ட் மாதம் மல்லப்பா தற்கொலை செய்து கொண்டார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அமித் ஷாவுக்கு அதிர்ச்சி தந்த தேர்தல் முடிவுகள்

சவுக்கு : சில சமயங்களில் உண்மையின் தீவிரமானது வாயை அடைத்துவிடக்கூடும். இந்தி ராஜ்ஜியங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அடைந்த தோல்வியால் கட்சித் தலைவர் அமித் ஷா பிரதமர் நரேந்திர மோடியை விட அதிகமாக அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் என்று கட்சியினரே ஒப்புக்கொள்கின்றனர். கடந்த செவ்வாயன்று வெளியான தேர்தல் முடிவுகள் பற்றி பாஜக தலைவர் இதுவரை பேசவும் இல்லை, ட்வீட் செய்யவுமில்லை. மாறாக, வெற்றிக்கான வாழ்த்துச் செய்தியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு மோடி அனுப்பி வைத்தார்.
பாஜகவின் தலைவராகச் சில ஆண்டுகளுக்கு முன் பதவியேற்றதும் தனது இருப்பிடத்தை தில்லிக்கு மாற்றிவிட்ட தேர்தல் ‘மேலாளர்’ ஷா மோடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக ஆகிவிட்டதுடன் மக்கள் ஆதரவு பெற்ற பெரும் தலைவராகவும் முயற்சித்துவருகிறார். ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சியின் அடையாளமாக தேர்தல் பேரணிகளில் மோடிக்கு அடுத்து அதிகம் பேசுவது ஷா மட்டுமே. பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த 3 மாநிலங்களிலும் பிரதமரை விட அதிக எண்ணிக்கையிலான பொதுக்கூட்டங்களில் அமித் ஷா பேசியிருக்கிறார். தனது தலைமையில் கட்சி மூன்றில் 2 மாநிலங்களிலாவது (மத்தியப் பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும்) நிச்சயம் வெற்றி பெறும் என்ற ஒரு கனவிலிருந்த அவருக்குப் பேரதிர்ச்சிதான் கிட்டியது.

சிறையில் நக்சலைட் பத்மா உயிருக்கு ஆபத்து

nakkheeran.in  jeevathangavel : நக்சல் கடுப்பு பிரிவு போலீசாரால் கைது
செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மார்க்ஸ்சிஸ்ட் - லெனினிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த பெண்ணான பத்மாவுக்கு முறையான மருத்துவ சிகிச்சை தர வேண்டும் என தமிழ்நாடு மக்கள் சிவில் உரிமை கழகம் கூறியுள்ளது. அந்த அமைப்பின் மாநில தலைவர் கன. குறிஞ்சி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், &  "மார்க்சிய லெனினியச் செயற்பாட்டாளர் பத்மா 10 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு, திசம்பர் ஏழாம் நாள் தமிழகக் காவல்துறையிடம் சரண் அடைந்தார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்குத் திசம்பர் 10 ஆம் நாள் இதயநோய் தீவிரமான காரணத்தால், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படாமல், தண்டனைச்சிறைவாசிக்குரிய மருத்துவ சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது.<
திசம்பர் 13ஆம் நாளன்று மதியம் 1 மணிக்கு அவர் மருத்துவ மனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் உடல்
நிலை மோசமான காரணத்தால், இரண்டரை மணி நேரம் கழித்து, மதியம் மூன்றரை மணிக்கு, மீண்டும் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இரண்டு நாள்கள் மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதிக்கப்பட்டு, மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயரஞ்சன் : விவசாயம் .. காவு வாங்குவதைக் கைவிட்டால் மட்டுமே வேளாண் துறை உயிர்த்தெழும்

சிறப்புக் கட்டுரை: கடன் ரத்து மட்டும் தீர்வாகுமா? ஜெ.ஜெயரஞ்சன்மின்னம்பலம்:  கடந்த சில ஆண்டுகளாகவே வேளாண் துறையினர் பேரணிகள், கவன ஈர்ப்புப் போராட்டங்கள், உண்ணா நோன்புகள் எனப் பல வழிகளிலும் அரசின் கவனத்தை ஈர்க்கப் போராடி வருகின்றனர். கோவண ஊர்வலம், எலிக் கறி தின்னும் போராட்டம் என என்னென்னவோ செய்தும் தலைமை அமைச்சரோ, மற்ற ஒன்றிய அமைச்சர்களோ அவர்களை என்ன, ஏது, என்று கேட்கவில்லை. நாட்டில் பெரும்பாலான மக்கள் ஈடுபடும் ஒரு தொழிலில் நசிவு என்று அவர்கள் கதறும்போது ஆளும் அரசினர் கதைகளை அளந்தனர். தேர்தல்களில் தொடர் வெற்றியில் இருமாந்தும் இருந்தனர். ஊரகப் பிரச்சனைகள் தங்களை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை; அதற்கான மாற்றுக் கதையாடல்கள் தங்கள் கைவசம் உள்ளன; அவை வெற்றியும் பெறும் என உறுதியாக நம்பினர். அப்படியே நடந்தும் வந்தது.
ஆனால், விவசாயிகளின் அதிருப்தி நாளும் வளர்ந்தது. விளையும் பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை. மானிய வெட்டு, சீர்திருத்தம் என்ற பெயரில் நடந்தேறியது. இதன் காரணமாக இடுபொருட்களின் விலை உயர்ந்தது. விவசாயிகளின் கடன் தொடர்கதையாயிற்று. அவன் கடனில் தத்தளித்தான். தனது பாரத்தைக் குறைக்கும்படியும், தன் பொருள்களுக்கு தகுந்த விலை வேண்டும் என்று மன்றாடினான்.

2 ஜி போலி வழக்கால் அதிகம் இழந்தது தமிழகம்தான்.. ஆர் எஸ் எஸ் + தமிழ் தேசியர் + காப்பறேட் கூட்டுசதி..

Kathir RS : ஆ.ராசா பிறந்து வளர்ந்த பெரம்பலூர்
மாவட்டம் வேலூர் கிராமத்தில்
ஒரு தபால் அலுவலகம் கூட இல்லை, ஆனால் மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உயர்ந்தவர்.
கடந்த ஆண்டு இதே நாளில்தான்,
2ஜி வழக்கு புனையப்பட்ட பொய்யான வழக்கு என்று தீர்ப்பு சொல்லப்பட்டது..

இந்தத் தவறான குற்றச்சாட்டால் 7 ஆண்டுகள் தனது அரசியல் வாழ்க்கையை இழந்திருக்கிறார் ஆ.ராசா.
திஹார் சிறையில் கிடந்திருக்கிறார்.கட்சி மூன்று தேர்தல்களில் தோற்றிருக்கிறது. அதன் பயனாக இன்று மத்தியிலும் மாநிலத்திலும் கேவலமான ஆட்சி நடந்து வருகிறது.
சீமான் திருமுருகன் போன்ற சில்லரைகள் குரலை உயர்த்தி பேசத் தொடங்கிவிட்டனர்.
இலங்கை யுத்தத்தின் போது ஸ்திரமான முடிவுகளை எடுக்க விடாமல் கார்னர் செய்ததும் இந்த வழக்குதான்.
எதிர்கட்சிகள்,ஊடகங்கள் லெட்டர் பேட் கட்சிகள் போனவன் வந்தவன் எல்லோருக்கும்
கலைஞர் மீதும் கட்சியின் மீதும் உச்ச பட்ச காழ்ப்பு உருவாக காரணமாக இருந்த வழக்கு.
இதுதான் சரியான வாய்ப்பு என திட்டமிட்டே வெறுப்பை வளர்த்தனர்.
கலைஞர் ராசா கனிமொழி ஆகியோரைப் பற்றிய அருவருப்பான பிரசாரங்களை உருவாக்கினர்.

போலி பெரியாரிஸ்டுகள் புற்றீசல்கள் போல.... பின்னணி என்ன? திமுகவுக்கு எதிராக கொம்பு சீவி விடப்படுகிறது?


கருஞ்சட்டை பேரணியின் உள்நோக்கம்
Devi Somasundaram : வரலாறு விசித்திரமானது அது கீழிருந்து மேலாக
மேலிருந்து கீழாக....
உதாரணத்திற்கு : இருக்கும் இடம் தெரியாமல் முடங்கிக் கிடந்த ஓபிஎஸ் இபிஎஸ் போன்றவர்களை கோபுரத்தில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது...
இவைகளெல்லாம் எத்தனை நாள்களுக்கு என்று தெரியாது அது போல தான் புதிய புதிய புரட்சியாளர்களும் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
2009 தமிழக அரசியலில் ஈழப் போர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, அந்த தாக்கத்தின் பின்னணியில் இந்துத்துவ ஆட்கள் இருக்கிறார்கள் என்று நமக்கு சந்தேகம் இருந்து கொண்டு இருந்தாலும், அதை சமீபத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அதுபோல்தான் முற்போக்கு தளத்திலும் பல்வேறு போலிகளும், காலிகளும் சமூக மாற்றத்திற்கான தளத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்,
பல முற்போக்கு பேசும் புரட்சியாளர்கள் புற்றீசல்கள் போல் புதிது புதிதாய் 2009 இல் இருந்து கிளம்பி வந்துகொண்டே இருக்கிறார்கள் இவர்களாக வருகிறார்களா அல்லது இவர்களை யாராவது அனுப்பிவைக்கிறார்களா என்பது மிகப்பெரிய குழப்பம்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி IT விங் என்று ஒன்று மட்டும் இல்லை என்றால் இவர்கள் அரசியல் அனாதை ஆகியிருப்பார்கள்
ஆனாலும் இவர்களின் நடவடிக்கை அப்பட்டமாக இவர்கள் யார் என்பதை காட்டிவிடுகிறது. பல்வேறு சமயங்களில் தன்னையறியாமல் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்களின் நோக்கம் எல்லாம் எப்படியாவது இடைவெளி இருக்கும் முற்போக்கு தளத்தில் மூக்கை நுழைத்து உள்ளே புகுந்து அந்த தளத்தையே சீரழிப்பது அல்லது நீர்த்துப் போகச் செய்வது.
சீமான்,

வெள்ளி, 21 டிசம்பர், 2018

அதிமுக என்கின்ற பாஜக.. 20 எம்பி தொகுதிகளை பாஜகவுக்கு .. கேட்பது ஆர் எஸ் எஸ் .. ? ...ஆட்டம் ஆரம்பம்?

 பாஜக கட்டளை?? tamil.oneindia.com Keerthi. : சென்னை: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்திக்க தயாராகி வருகின்றன. கருணாநிதி சிலை திறப்பு அதற்கு அச்சாரமாகி விட, சமீப கால தமிழக அரசியல் நடவடிக்கைகள் அதிமுகவை கொஞ்சம் திணறடித்திருக்கிறது. அதனை சற்று விரிவாக பார்ப்போம்...
2014ம் ஆண்டு மத்தியில் பொறுப்பேற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு 5ம் ஆண்டின் இறுதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 5 மாநில தேர்தல் கொடுத்த சறுக்கலில் படுகாயமடைந்த பாஜக கவனமாக தமது தேர்தல் பிரச்சாரத்தை ரேபரேலி தொகுதியில் இருந்து பிரதமர் மோடியின் பிரச்சாரத்துடன் தொடங்கி உள்ளது. தென் மாநிலத்தின் முக்கிய அரசியல் பெட்டகமான தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றி, தாமரையை மலர வைத்துவிடுவது என்று பாஜக பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.

தமிழகத்தில் திராவிட அரசியல் நீக்கமற நிறைந்திருப்பதால் முதல்ல... திண்ணையை பிடிப்போம்.... அப்புறம் வீட்டுக்குள்ள போவோம் என்ற வசனத்தின்படி காய் நகர்த்தி வருகிறது. அதற்கு அச்சாரமாக ஜெயலலிதா மறைவு என்ற திண்ணை வகையாக பாஜகவுக்கு கிடைக்க.. அதில் உட்கார்ந்து கொண்டு தாமரையை மலர வைக்கும் வேலைகளை தொடங்கி 2 ஆண்டுகளாக தொடங்கி நடத்தி வருகிறது.

தயாரிப்பாளர் சங்க கட்டிட சீல் உடைக்கப்பட்டது ! விசால் வருகை ... பிந்திய செய்தி

தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!NDTV : தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
தயாரிப்பாளர் சங்கம் சார்பில், நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவிவகித்து வரும் விஷாலுக்கு எதிராக சங்க உறுப்பினர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கூறி சங்க வளாகத்தில் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தைப் பூட்டிச்சென்றனர்.

உயிர்மெய் நூல்கள் வெளியீடு .. வட சென்னைக்காரி .. ஜென்சி ஏன் குறைவாக பாடினர்?.. ஷாலின் மரியா லாரன்ஸ்

நிகழ்வு:- புத்தக வெளியீட்டு விழா
நாள்:- 23.12.2018
நேரம்:- மாலை 6 மணி முதல்
இடம்:- தேவநேய பாவாணர் அரங்கம்முதல் தளம், மாவட்ட மைய நூலகம், 735, , ஆயிரம் விளக்கு அண்ணா சாலை, சென்னை. நூல்கள்:- 1). “வடசென்னைக்காரி”
2). “ஜென்ஸி ஏன் குறைவாக பாடினார்”
எழுதியவர்:- ஷாலின் மரிய லாரன்ஸ். வெளியீடு:- உயிர்மெய் பதிப்பகம்
சிறப்புரையாளர்கள்:- திரு. எவிடென்ஸ் கதிர். திரு. சாரு நிவேதிதா. திரு. மனுஷ்யபுத்திரன், மருத்துவர் ஷாலினி. திரு. ஜீவசகாப்தன் , திரு. கரன்கார்க்கி  அனைவரும் வருக! ..    www.wecanshopping.com

பிரசாதத்தில் விஷம்! – 15 பேர் உயிரழப்பு . சாலூர் இளைய மடாதிபதி கைது

குற்றம்சாட்டப்பட்டவர்கள்
இம்மடி மாதேவ்சாமி
இளையமடாதிபதி மாதேஸ்சாமி
அம்பிகா
மாதேஷ் மனைவி அம்பிகா
விகடன் : கர்நாடகாவின் சுள்ளுவாடி கோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சாலூர் இளைய மடாதிபதி இம்மடி மாதேவ்சாமி உள்ளிட்டோர் மீது சாம்ராஜ்நகர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். கர்நாடகாவின் சுள்ளுவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதில், பக்தர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக, சாலூர் மடத்தின் இளைய மடாதிபதி இம்மடி மாதேவ்சாமி உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். முடிவில் இதுதொடர்பாகப் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், மாதேவ்சாமியை முதல் குற்றவாளியாகவும், கோயில் ஊழியர் மாதேஸின் மனைவி அம்பிகா இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கர்நாடகப் போலீஸார்.

ஸ்டெர்லைட்: வேதாந்தா நிறுவனத்துக்குத் தடை! சென்னை உயர்நீதிமன்றம் ..

ஸ்டெர்லைட்: வேதாந்தா நிறுவனத்துக்குத் தடை!மின்னம்பலம் : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, போராட்டக் குழுவைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று (டிசம்பர் 21) விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. அப்போது “தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே வேதாந்தா நிறுவனத்துக்கு தீர்ப்பு நகல் கிடைத்தது எப்படி? அது மட்டுமல்லாமல், அது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது” என்று அதில் கூறப்பட்டிருந்தது. தீர்ப்பாயம் வழங்குவதற்கு முன்பே வெளியான தீர்ப்பு செல்லாது என்ற வழிகாட்டுதல் உள்ளதாகத் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைகோ வாதிட்டார்.

கணினிகளை கண்காணிக்கும் மத்திய அரசின் சர்வாதிகார நோக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்


தினகரன் : சென்னை: கணினி தகவல்களை
கண்காணிக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உத்தரவு தனிமனித உரிமையை பறிப்பதாக கூறியுள்ளார். எனவே மேற்கண்ட உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

THE HINDU TAMIL: நாட்டில் உள்ள எந்தக் கணினியையும் ஆய்வு செய்து தகவல்களை யாருடைய அனுமதியின்றி எடுக்க 10 அரசு முகமைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கட்சியும், அறிவிக்கப்படாத அவசரநிலை என்று ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரபஞ்சன் காலமானார் .. புதுசேரியில் புகழ் பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலை

BBC : புதுச்சேரியை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாதெமி விருது
பெற்றவருமான பிரபஞ்சன் இன்று காலை (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 73. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1945ஆம் ஆண்டு பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம்.
முறையாக தமிழ் கல்வி பயில வேண்டும் என்பதற்காக கரந்தை கல்லூரியில் சேர்ந்து தமிழ் புலவர் பட்டம் பெற்ற பிரபஞ்சன், தஞ்சாவூரில் தமிழ் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
பின்னர், ஒருகட்டத்தில் அந்த பணியை விட்டு விலகி முழு நேர எழுத்தாளரானார். 1995ஆம் ஆண்டு பிரபஞ்சனின் வரலாற்றுப் புதினமான 'வானம் வசப்படும்' என்ற புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
'வானம் வசப்படும்', 'மானுடம் வெல்லும்', 'இன்பக் கேணி', 'நேசம் மறப்பதில்லை' என மொத்தம் நான்கு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார் பிரபஞ்சன்.

சொராபுதீன் தம்பதிகள் கொலைவழக்கில் குற்றவாளிகள் 22 பேரும் விடுதலை.. போலி என்கவுண்டர் ...

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை தினத்தந்தி : சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மும்பை, குஜராத் மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக், அவரது மனைவி சவுசர்பி ஆகியோர் போலீஸ்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் என்று கூறி அவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.இந்த என்கவுண்டர் போலியாக நடத்தப்பட்டது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில் சொராபுதீன் ஷேக்கின் உதவியாளர் துளசி பிரஜாபதியும் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுவும் போலியாக நடந்த என்கவுண்டர் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த என்கவுண்டர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த போலி என்கவுண்டரில் குஜராத் மாநில அரசில் உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு அமித்ஷா கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த என்கவுண்டர் வழக்கு விசாரணை மும்பை சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டில் நடந்தது.

me_too பறித்த ஒரு உயிர்.. ஸ்வரூப் . 35 வயது ... பொய் குற்றச்சாட்டு .. தற்கொலை!


Trial at  press club
Devi Somasundaram : அடிப்படை ஆதாரம் அற்ற எந்த புகாரும்
நிராகரிக்கபடனும்
என்றாலும் சில புகார்கள் ஆதாரம் இல்லாத போதும் விசாரிக்கப் படனும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
.ஆனா குற்றம் சாட்டி விட்டாலே அவன் குற்றவாளி தான் என்ற முடிவுக்கு வரும் மன நிலை கொண்ட சமுக அமைப்பில் குற்ற சாட்டுகள் பொது இடத்தில் கூறப்படுவது எத்தனை ஆபத்தானது என்பதை இந்த சமுகம் உணரணும்.
நம் நீதித்துறை ஆதாரங்களின் அடிப்படையில் தான் எந்த குற்றச்சாட்டையும் ஆராய்ந்து தீர்ப்பு தரும்..வெறும் குற்றசாட்டே அவர் குற்றவாளி என்பதற்கான இறுதி தீர்ப்பு இல்லை .
அதனால் தான் குற்றம் சாட்ட பட்டவர்களை முகத்தை மறைத்து கைது செய்து அழைத்து செல்வது நம் நாட்டு நடை முறை..ஒரு வேளை அவன் தவறா குற்றம் சாட்ட பட்டு நிரபராதாய் இருந்தால் அவன் எதிர்காலம் பாதிக்க பட கூடாது என்ற மனித உரிமை .
.ஆனா me too என்ற போராட்டம் இந்த அடிப்படை சட்ட நீதிகளை புறந்தள்ளி பொதுவெளியில் யார் யார் மேல வேணா குற்றம் சாட்டலாம் என்ற ஒரு அதீத தன்மையை கட்டவிழ்த்து விட்டது ..
அது தான் பென்கள் உரிமை என்றும், பாதுகாப்பு என்றும் பகுத்தறிவாளர்களால் கூட பேச பட்டது ..

சீதக்காதி ... யோசிக்கும் துணிச்சலுக்காகவே இயக்குனரை பாராட்டிவிடலாம்.


BBC : நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் மூலம் திரும்பிப்
பார்க்க வைத்த பாலாஜி தரணிதரனின் அடுத்த படம். விஜய் சேதுபதிக்கு இது 25வது படம். இத்தோடு, விஜய் சேதுபதியின் வயதான தோற்றமும் சேர்ந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது 'சீதக்காதி'.
படத்தில் வரும் எந்தப் பாத்திரத்திற்கும் சீதக்காதி என பெயர் கிடையாது. 'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்ற பழமொழிதான் படத்தின் அடிப்படையான 'ஒன்லைன்' என்பதால் இந்தப் பெயர்.
தமிழில் நாடகக் கலை உச்சத்தில் இருந்தபோது புகழ்பெற்று விளங்கிய அய்யா ஆதிமூலம் (விஜய் சேதுபதி), தன் கண் முன்பே அந்தக் கலைக்கு மதிப்பில்லாமல் போவதைப் பார்க்கிறார். குடும்பத்தில் பணத் தேவை தொடர்பான நெருக்கடிகளும் அதிகரிக்கின்றன. ஒரு நாள் நடித்துக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடுகிறார்.
ஆனால், அவரது கலை இறப்பதில்லை. அது எப்படி நடக்கிறது, அதனால் நடக்கும் விசித்திரங்கள் என்ன என்பதையே எதிர்பாராத விதத்தில் சொல்கிறது படம்.

திருமாவளவன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு!மின்னம்பலம் : திமுக தலைவர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்த நிலையில், அதனை வழிமொழிவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (டிசம்பர் 20) மாலை ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் நடைபெறும் ‘தேசம் காப்போம்’ மாநாடு ஜனவரிக்குத் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் பங்கேற்பதற்கான தேதியை உறுதி செய்வதற்காகவே இந்தச் சந்திப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்புக்குப் பிறகு, புதிதாக திறக்கப்பட்ட கலைஞரின் சிலைக்கு அருகே சென்ற திருமாவளவன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

காணமல் போன குட்கா ஆவணம் ஜெயலலிதா வீட்டில் எப்படி வந்தது? சசிகலாவிடம் உயர்நீதிமன்றம் ...

THE HINDU TAMIL : குட்கா முறைகேடு தொடர்பாக வருமானவரித் துறை ஆவணங்கள் போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக வி.கே.சசிகலா பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கதிரேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக டிஜிபி டி.கே.ராஜேந் திரன், அவர் மீதான குட்கா முறை கேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து பதவி நீ்ட் டிப்பு பெற்றுள்ளார். டி.கே.ராஜேந் திரனுக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் குட்கா முறைகேடு தொடர்பான வருமானவரித் துறை கடிதம் கிடைக்கவில்லை என தலைமைச் செயலர் தெரிவித்தார்.

பாஜகவின் போக்ரான் அணுக்குண்டு தொகுதியில் சாமியாரை வீழ்த்திய காங்கிரஸ் இஸ்லாமியர்

Sadhu Sadhath : போக்ரான் மோடிக்கு போட்ட குண்டு ...  

pokhran-neta-BCCL
Saleh Mohammad - Mahant Pratap Puri,
போக்ரான் நமக்கு அணு குண்டு சோதனை நடத்தும் இடமாக தான் தெரியும் ... ராஜஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் இதே போக்ரானில் பிஜேபிக்கு மிகப் பெரிய குண்டு போட்டிருக்கிறார்கள் அந்த தொகுதி வாக்காளர்கள் ...
யோகி ஆதிநாத்தின் கோரக்பூர் மடத்தில் பொருப்பில் இருப்பவர் பூரி எனும் சாமியார் .. இவருடைய சொந்த ஊர் போக்ரான்.. அங்கு பிரபலமான சாமியாரும் கூட அதனாலேயே இவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது .. இந்த தொகுதியில் 89% இந்துக்கள் 11% முஸ்லீம்கள் வாழ்கிறார்கள் ... காங்கிரஸ் சார்பில் முகம்மது சலாஹ் நிற்க்க வைக்கப்பட்டார்
யோகி இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்யும் போது தான் பல பல பட்டாசுகள் ராகுலுக்கு எதிராக வெடிக்கப்பட்டது .. குறிப்பாக ராகுல் எந்த சாதி ? எந்த கோத்திரம் ? என்று கேட்க அதுவே பெரிய விவாதப் பொருளானது ... அடுத்து காங்கிரஸ் வேட்பாளரை அட்டாக் செய்ய .. அலியா இல்லை பஜ்ரங்பலியா என்று பார்ப்போம் என மதவெறியை கிளப்பினார் .. அது அந்த மாநிலம் முழுதும் எதிரொளித்தது ...

உபி .. டிசம்பர் 15 முதல் மார்ச் 15 வரை கான்பூர் உன்னாவோ மாவட்டங்களில் இறைச்சி தடை .3 லட்சம் தொழிலாளர்கள் நடுத்தெருவில் ..


Sadhu Sadhath : முட்டாள்களிடம் நாட்டை ஒப்படைத்தால் இப்படித்தான்..
அதிகாரத்தின் அட்டூஷியங்கள் ...
கான்பூர் உன்னாவோ ஆகிய இரண்டு மாவட்டங்களில் டிசம்பர் 15 முதல் மார்ச் 15 வரை டேனரிகள் , ஸ்லாட்டர் ஹவுஸ்,மற்றும் மீட் ப்ராசசிங் சென்டர்கள் இயங்க கூடாது என்று தடையுத்தரவை பிறப்பித்திருக்கிறது உபி மாநில அரசு .. கும்பமேளாவை காரணம் காட்டி ஏற்கனவே திருமணம் செய்ய தடைவிதித்திருந்தது தெரிந்தது தான் . அதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவும் வந்திருக்கிறது ..
அதனால் என்ன என்று கேட்டால் .. இதனால் நேரடியாக 300,000 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்க்கிறார்கள்
ஸ்லாட்டர் ஹவுஸ் ஆடு மாடுகளை வெட்டும் அறுவைக் கூடங்கள் இதில் எல்லோருமே தினக்கூலிகள் அன்றன்று வரும் வருமானமே அவர்கள் சொத்து .. அந்த ஸ்லாட்டர் ஹவுசிலிருந்து வரும் எலும்புகளை கொண்டுதான் சர்க்கரையை சுத்தப்படுத்தப் படுகின்றன .. பீங்கான் உற்பத்தி , கோட்டுகளில் தைக்கப்படும் பெரிய பெரிய பட்டன்கள் என ஒரு தொழில் சங்கலியே பாதிப்புக்குள்ளாகும் ..

பீகாரில் ஜாதி அடிப்படையில் வகுப்பறை.. விடியோ


dinamani :பாட்னா: பீகார் மாநிலத்தில் ஜாதி, மற்றும் மத அடிப்படையில் தனித் தனி வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது
பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தில் லால்கன்ஜ் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் 4 ஆண்டுகளாக ஜாதி மற்றும் மத அடிப்படையில் மாணவர்கள் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
மாவட்ட கல்வி அதிகாரி தலைமையிலான குழு, கல்வித் துறைக்கு எழுதியுள்ள பரிந்துரையில், பிரதானமான மீனா குமாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

ஒரு யானை நாடு கடத்தப்பட்டது.. அகதியாக்கப்பட்டது.!

ஒரு காட்டு யானை நாடு கடத்தப்பட்டது...! - ஓசை காளிதாசன்
மின்னம்பலம் ஓசை காளிதாசன் : யானைகளால் பிரச்சினை வரக் காரணம் என்ன? கோவை தடாகம் பகுதியில் பல ஆண்டுகளாக சுற்றித் திரிந்த ஆண் யானை அங்கிருந்து பிடிக்கப்பட்டு முதுமலை காட்டில் விடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த கானகத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள, தான் அறிந்திராத இன்னொரு காட்டுப்பகுதியில் யானையை விடுவது நாடு கடத்தல்தானே. உள்ளூர் மக்களால் விநாயகன் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த யானை என்ன தவறு செய்ததால் இப்படி நாடு கடத்தப்பட்டிருக்கிறது?
யானை என்ன செய்தது?
கோவை மாவட்டத்தில் வேளாண்மை மிச்சமிருப்பது மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில்தான். அங்குதான் ஓரளவு தண்ணீர் வசதி உள்ளது. இங்குள்ள தடாகம் பகுதி மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட அழகிய பகுதி. ஒரு காலத்தில் முழுவதும் விவசாயம் நடந்த இடம் இது. ஆனால் செங்கல் சூளைகள், கல்வி நிறுவனங்கள், புதிய குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை இப்பகுதியில் பெருகியதால் விவசாயம் நலிந்தது. ஆனாலும் தாங்கள் காலம் காலமாய் செய்துவந்த தொழிலை விட முடியாமல் இன்னும் கொஞ்சம் பேர் விவசாயம் செய்துவருகின்றனர். அவர்கள்தான் இந்த யானையைப் பிடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தவர்கள். காரணம் அவர்கள் பாடுபட்டு விளைவிக்கும் பயிர்களைக் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் சேதப்படுத்திவிடுகின்றன.

பிகார் பாஜக கூட்டணிக் கட்சி ராஷ்ட்ரிய லோக் சமதா காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தது

காங்கிரஸ் அணியில் பாஜக கூட்டணிக் கட்சி!மின்னம்பலம் : பாஜக கூட்டணியிலிருந்து விலகிய உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இன்று இணைந்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் பீகாரில் 4 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 3இல் வெற்றிபெற்றது. உபேந்திர குஷ்வாஹா மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராகவும் பதவிவகித்து வந்தார்.

மலேசியாவில் தவித்த 49 பேரை காப்பாற்றிய கனிமொழி

49 குடும்பங்களைக் காப்பாற்றிய கனிமொழிமின்னம்பலம் : திமுக மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்பி கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நெல்லை சென்றிருந்தார். அப்போது திமுக நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனுடன் வாசுதேவ நல்லூர் ஒன்றியம் தலவன் கோட்டையைச் சேர்ந்த பெண்கள் கனிமொழியை சந்தித்து ஒரு கோரிக்கையை முன் வைத்தார்கள்.
“எங்க ஊர்லேந்து 49 பேர் மலேசியாவுல மின்சார டவர் போடும் பணிக்காக போனாங்க. ஆனா கொஞ்ச நாளா அவங்களப் பத்தி எந்தத் தகவலும் இல்ல. இப்ப சில நாள் முன்னாடி ரொம்ப கஷ்டப்படுறதாவும், யாரோ பிடிச்சு வச்சிருக்கிறதாகவும் வீடியோவுல பேசி எங்களுக்கு அனுப்பினாங்க. நாங்க பல அதிகாரிகளைப் பாத்து சொல்லியும் எதுவும் நடக்கல. நீங்களாவது எங்க ஊர்க்காரங்களை காப்பாத்துங்க” என்று வேண்டுகோள் வைத்தார்கள்/
இந்நிலையில் கனிமொழி இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார். அப்போதுதான் அந்த 49 பேரும் விசா பிரச்னையில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடையில்லை!

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடையில்லை!minnambalam : ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
பதிவு செய்யப்படாத ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களுக்குக் காலாவதியான, போலியான மற்றும் தவறான மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. அதனால், ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் விதிகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் எனவும், அதுவரை ஆன்லைன் மருந்து விற்பனை செய்யக் கூடாது எனவும் தடை விதித்து உத்தரவிட்டது.

ஃபரூக் அப்துல்லா : காஷ்மீரில் ஆட்சி அமைத்த 30 நாட்களில் மாநில சுயாட்சி

farooqதினமணி : ஜம்மு-காஷ்மீரில் ஆட்சிக்கு வந்தால் 30 நாட்களுக்குள் பிராந்திய சுயாட்சி ஏற்படுத்தப்படும் என ஃபரூக் அப்துல்லா உத்தரவாதம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆட்சி உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இங்கு தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடைபெற வேண்டும்.
இங்குசட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு அதில் தனிப்பெரும்பான்மையுடன் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்தால், 30 நாட்களுக்குள்ளாக பிராந்திய சுயாட்சி அமல்படுத்தப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

டைப் 2 நீரிழிவா? தேநீர் தான் உங்களுக்கான ஒரே மருந்து

tamil.indianexpress.com : ஒரு நாளைக்கு இரண்டு கப்பிற்கும் அதிகமாக கிரீன் டீ எடுத்துக் கொண்டால், டைப் 2 நீரிழிவு கட்டுக்குள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இந்தியாவில் 72 மில்லியன் சுகர் பேஷண்ட்ஸ் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், நம்பித் தான் ஆக வேண்டும். உலகில் சர்க்கரை நோயால்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
ஒரு பிரபல ஆய்வு முடிவின்படி, 2030ல் இந்தியாவில் 98 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ‘டைப் 2’ டயபடிஸ் அடுத்த 12 வருடங்களில், உலகம் முழுவதும் 20 சதவிகிதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயாளிகளில் 90-95 சதவிகிதத்தினர் டைப் 2 நீரிழிவால் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகை நீரிழிவு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை மிக அதிகளவில் அதிகரித்துவிடும். இந்த டைப் 2 நீரிழிவை தற்போது உள்ள மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்பது மற்றொரு அதிர்ச்சி கலந்த உண்மை. இருப்பினும், நமது அன்றாட வாழ்க்கை முறை, சரிவிகித உணவு, உடற்பயிற்சி, உடல் எடையை அளவோடு வைத்திருத்தல் போன்ற செயல்பாடுகளால் டைப் 2 நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
ஆனால், நாம் தினமும் பருகும் டீ மூலம் ‘டைப் 2’ சுகர் பேஷண்ட்ஸ், இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது தெரியுமா?

டாக்டர் ஜெயச்சந்திரன் ..ஐந்து ரூபாயை தாண்டாத மக்கள் மருத்துவர்…. மறைந்தார்!


jeyachandran
jainakkheeran.in - சந்தோஷ் குமார் : சென்னையில் 44 வருடங்களாக ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் இயற்கை எய்தினார்.
சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள கொடைப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான இவர், சிறு வயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற கனவுடன் வளர்ந்தவர். தனது ஊரில் மருத்துவ வசதி இன்றி பலர் உயிரிழந்ததே மருத்துவம் படிக்க காரணமாக அமைந்தது. பெரியவனாவுடன் மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலேயே ஆழ்மனதில் பதிந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் இவர் மருத்துவரானார்.

வியாழன், 20 டிசம்பர், 2018

தஞ்சை பெரியகோவிலில் தனியார் நிகழ்சிகளுக்கு தடை .. மதுரை உயர்நீதி மன்றம்

tamilthehindu :தஞ்சை பெரிய கோயிலின் பழமை, பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கோயில் வளாகத்தில் தனியார் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடக்கவிருந்த தியான நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே தடை விதித்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு அமர்வு இன்று (வியாழக்கிழமை) பிறப்பித்த உத்தரவு:
தஞ்சை பெரிய கோயில் பாரம்பரியம் கொண்டது. கட்டிடக் கலைக்கு சான்றாக பெரிய கோயில் அமைந்துள்ளது. கோயிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். எனவே கோவில் வளாகத்தில் தனியார் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.

ஸ்டெர்லைட் ஆலை 2 மாதத்தில் திறப்பு!.. வேதாந்தா குழுமம் அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலை 2 மாதத்தில் திறப்பு!மின்னம்பலம் : ஸ்டெர்லைட் ஆலையை இரண்டு மாதத்திற்குள் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மூன்று வாரத்திற்குள் அதற்கான அறிவிப்பாணையும், மின்சார வசதியையும் ஏற்படுத்தித் தர மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆலையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பெரியாரை திட்டிவிட்டு ஓடக்கூடியவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரியார் பேரணி!

Devi Somasundaram : ஆரம்பம் முதல் ஈழத்தமிழருகாக உண்மையா போராடிய
சிலரில் முக்கியமானவர்கள் கொளத்தூர் மணி அண்ணனும் அய்யா சுபவீயும்...திமுக ஆதரிச்சாலும் எதிர்த்தாலும் சிலரை அவர்களின் கொள்கை பிடிப்பின் நேர்மைகாக விமர்சிப்பதில்லை.. அதில் தோழர் திருமா, கொளத்தூர் மணி அண்ணன், தோழர் ராம கிருஷ்ணன் போன்றவர்கள் அடக்கம். ..சுபவீ அய்யாவும் அதில் ஒருவர்.
தனது பேராசியர் பணியை விட்டு விலகி 83 முதல் ஈழத்தமிழர்காக உண்மையா போராடியவர்,
அதற்காக தடா, பொடா என்று பல முறை கைது செய்ய பட்டு ஜெயில் தண்டனை பெற்றவர் ..மிக அவசரமான, சர்ச்சைகுரிய காலத்தில் , புலிகள் தடை செய்ய பட்டு அவர்கள் செயல்பட இயலாத போது . தமிழகத்தில் அவர்களுகாக பேசியவர் சுபவீ .
ஈழ இன உண்ர்வாளரா காட்டி கொள்ளும் சிலர் நடத்தும் பேரணியில் சுபவீ, மதிமாறன் போன்றவர்கள் புறக்கணிக்க படுவதன் பிண்ணனியில் யார் இருக்கிறார்கள் .
வழக்கமா எங்க கூட்டம் இருக்கோ அங்கே நிகழ்ச்சியை நடத்தி தனது கூட்டமாக காட்டுவதில் திறமைவாய்ந்தவர் திரு முருகன் காந்தி....
அதுபோல் கூட்டமைப்பு என்கின்ற பெயரில் இப்போது நடை பெரும் கூட்டத்தையும் தன்னை ஒரு ஹீரோவாக வளர்த்துக் கொள்ளவே இப்படி ஒரு நிகழ்ச்சி....
அதனால்தான் கூட்டமைப்பின் குழுவில் பிரபலமானவர்கள் இல்லாமல் அரங்க குணசேகரன் போன்றோரை போட்டு காய் நகர்த்துகிறார்....
அரங்க குணசேகரனை நெறுக்கிப் பிடித்தால் பெரியாரை திட்டிவிட்டு ஓடக்கூடியவர் அவர் பெரியாரிஸ்டே கிடையாது..

தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் விஷால் விடுவிப்பு

மாலைமலர் : தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்று கைதான விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். சென்னை: நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்க தொடங்கினார்கள். பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் பாரபட்சம், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சங்க பொதுக்குழு கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.

கலைஞர் ஓய்வகத்தில் குடும்பம் குடும்பமாக .... ஆமாம் திமுக ஒரு குடும்ப கட்சிதான் ...

Srinivasan J : ஒவ்வொரு 6 மாதத்திற்கு, வழக்கமாக மூன்று நான்கு
டாக்டர்களிடம் பரிசோனை செய்து கொள்ள என் அப்பாவும் அம்மாவும் சென்னை வருவார்கள்.. அப்படிதான் இந்த முறையும் வந்தார்கள்.. ஆனால் வந்து இறங்கியவுடன் என் அப்பாவும் அம்மாவும் "டாக்டரை பார்க்கறமோ இல்லையோ முதலில் கலைஞர் ஓய்வகம் செல்ல வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.. ஆனாலும் முதலில் அவர்களை டாக்டர்களிடம் இந்த வாரம் முழுக்க காட்டிவிட்டு, இன்று ஊருக்கு திரும்ப டிக்கெட் போட்டுவிட்டேன்..
கலைஞர் ஓய்வகம் கூட்டி செல்லவில்லை என்று முந்தாநாள் எங்கப்பா என்னிடம் மிகவும் கோவித்துக் கொண்டார். அவரிடம் நாளை கூட்டி செல்கிறேன் , அதாவது நேற்று கூட்டி செல்கிறேன் என்று உறுதியளித்துவிட்டு, நேற்று இரவு சுமார் 7 மணிக்கு கூட்டி சென்றேன். கலைஞர் ஓய்வகம் சென்றவுடன் என் அம்மாவும் அப்பாவும் கலைஞரை வணங்கி அழ ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை தேற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டு ஒதுங்கி நின்றோம்.
அப்போது அங்கிருக்கும் ஒரு கட்சிக்காரர் எங்களிடம் வந்து "சார், தலைவர் குடும்பத்திலிருந்து வராங்க..கொஞ்சம் அப்படி ஓரமா செல்லுங்கள்" என்று சொன்னார். "ஓ அப்படியா" என்றவுடன், "ஆமாம் சார், தினமும் செல்வி அக்காவும் தமிழரசு அண்ணனும் வந்து ஒரு அரை மணி நேரம் இங்கு அமர்ந்து விட்டு செல்வார்கள்" என்றார்..

மூடிய உறைகளின் வில்லங்கத்தைக் காட்டும் ரபேல் தீர்ப்பு’

savukkuonline.com : “உண்மை நிலைமைகளைக் காணத் தவறிய உச்ச நீதிமன்றம், அரசாங்கம்தன்னை நியாயப்படுத்திய வாதங்களைத்தான் திருப்பிச் சொல்லியிருக்கிறது” என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி.
குறிப்பு: உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று (டிசம்பர் 14) அளித்த தீர்ப்பில், 2015 ஏப்ரலில் நரேந்திர மோடி அரசாங்கம் 36 ரஃபேல் போர்விமானங்களை வாங்க முடிவு செய்த விவகாரம் பற்றிய விசாரணைக்கு ஆணையிடக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர்களில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்குரைஞரும் சமூகச் செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் ஆகியோரும் உள்ளனர்.
ஏமாற்றமளிக்கும் தீர்ப்புதான், ஆனால் பின்னடைவல்ல. உச்ச நீதிமன்றத்தை நாடியது தவறான முடிவுமல்ல,” என்கிறார் ஷோரி.
ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக உங்களின் பொதுவான எதிர்வினை என்ன?

ஒபிஎஸ்-இபிஎஸ் நாடகம் அம்பலம் – ஒ.ராஜா ஆவின் தலைவர் பதவி ஏன் பறிக்கப்படவில்லை?

o.raja
eps ops

nakkheeran.in - athanurchozhan: அதிமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக ஒபிஎஸ்சின் தம்பி ஒ.ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஒபிஎஸ்சும், இபிஎஸ்சும் கூட்டாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ, மீடியாக்களில் பெரிதாக பரபரக்கப்பட்டது. தம்பியாக இருந்தாலும் தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் இல்லை என்பதை நிருபித்திருக்கிறார்கள் என்றெல்லாம் ஆளாளுக்கு பில்டப் செய்தார்கள். ஒ.ராஜா இப்போதுதான் களங்கம் ஏற்படுத்தினாரா? பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கு, மணல்கடத்தல் வழக்கு என்றெல்லாம் ஒ.ராஜா மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ஆனால், இப்போது திடீரென்று களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கூறுவதன் பின்னணி என்ன?
பெரியகுளம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து தேனி தொகுதியில் செல்வாக்கு மிக்கவர். அதிமுக மாவட்ட பொருளாளராக இருக்கிறார். இவருக்கு மதுரை ஆவின் கூட்டுறவு தலைவர் பதவியை பெற்றுத் தருவதாக ஒபிஎஸ் கூறியிருக்கிறார். ஆனால், ஒ.ராஜா தலைவர் பதவியைக் கைப்பற்ற மறைமுகமாக உதவியிருக்கிறார். இதனால் செல்லமுத்து ஒரு பெரிய கூட்டத்தோடு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேரப்போவதாக தெரியவந்தது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு: வீடுகளில் கறுப்புக் கொடி!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு: வீடுகளில் கறுப்புக் கொடி!மின்னம்பலம் : ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் கோரிக்கையைச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வகையில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி மக்கள்.
கடந்த சனிக்கிழமையன்று (டிசம்பர் 15) ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். மூன்று வாரங்களில் ஆலையைத் திறப்பதற்கான அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்குப் பல்வேறு கட்சிகளும் மக்கள் நல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமல்; விதிமீறலுக்கான தண்டனை என்ன?

tamil.thehindu.com/ தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன் படுத்துவதற்கான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர வுள்ள நிலையில், அதை மீறு வோருக்கான தண்டனை விதி களை அரசு இன்னும் அறிவிக்க வில்லை. அதனால் பிளாஸ்டிக் தடையை எப்படி அமல்படுத்துவது என தெரியாமல் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட ஆண்டறிக்கையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 2 லட்சத்து 5 ஆயிரத்து 724 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாவதாகவும், அதை மேலாண்மை செய்வதற்கான செயல்திட்டத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு நிலவரப்படி தினமும் 4 ஆயிரத்து 500 டன் குப்பைகள் உருவாவதாகவும், அதில் 9.54 சதவீதம் (425 டன்) பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பாஜகவின் நிகழ்ச்சி நிரலில் ஒரு பெரியார் பேரணியா?

தமிழ் மறவன் : யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு
செய்தவர் தந்தை பெரியார்!
அதற்காக கடுமையான உழைப்பை தன்னலமின்றி, தயக்கமின்றி செலுத்தியவர் தந்தை பெரியார்.
கருஞ்சட்டைகளின் ஒன்று கூடலில் தங்களின் அரசியல் நிலைப்பாடுகளை வெளியிடாமல் ஒன்று கூடுவதின் பயன் என்னவாக இருக்கும்?
தன் வாழ்நாளில் இன்றைய வாக்கரசியலின் யோக்கியதையை வெளிப்படையாக விமர்சித்த பெரியார், அரசியல் அதிகார தேர்தல் முறைமையில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதில் எப்போதும் கவனமாகவே இருந்தார்.
யாரை நாம் ஆதரிக்க வேண்டும்?
இன்றைய சூழலில் பார்ப்பனீய ஆதிக்க அரசியலை எதிர்கொள்ள யார் வெற்றி பெறுவது அவசியம் என்பதை நேர் பொருளில் குறிப்பாக பேசாமல்
பா.ஜ.க எதிர்ப்பு,
தமிழர் விரோத கட்சிகள் எதிர்ப்பு என்பதெல்லாம் எதையோ பூசி மொழுகும் செயலாகவே தோன்றுகிறது.
யார் வரலாம் என்பதைக் காட்டிலும் "யார் வரக்கூடாது" எனும் செயல் திட்டத்தை பேசப்படாத உட்கருவாய் பலர் வைத்திருப்பதை தோழர் அரங்க.குணசேகரன் அவர்களின் கைப்பேசி உரையாடல் அம்பலப்படுத்தி விட்டது.
தந்தை பெரியாரின் வழி என்பது பெரியாரை மட்டுமே பேசுவதல்ல!
நீதிக்கட்சி முதற்கொண்டு தி.மு.க வரையிலான திராவிடக் கோட்பாட்டை முன்னெடுக்கும் வாக்கரசியல் அமைப்புகள் ஆட்சி அதிகாரத்தின் வாயிலாக பெரியாரியலை நடைமுறைப்படுத்திய செயல்பாடுகள் மகத்தானது.
நீதிக்கட்சியின் தலைவர்கள்,

ஆக்ஸ்போர்ட் .. டாக்டர் மன்மோகன் சிங் இன் கட்டுரைகள் பேச்சுக்களை தொகுத்து வெளியிட்டுள்ளது

Swathi K : உலகத்தின் மிகப்பழமையான, புகழ் பெற்ற "Oxford University Press" Dr. ❤️❤️❤️..
மன்மோகன்சிங் அவர்களின் அனைத்து ஆய்வு கட்டுரைகள், பொருளாதாராம் சார்ந்த அவரது பேச்சுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து புத்தக தொகுப்பாக ("Changing India") வெளியிட்டு இருக்கிறார்கள்
இந்த புத்தக தொகுப்பில்,
** மன்மோகன் அவர்களின் நூற்றுக்கணக்கான ஆய்வு கட்டுரைகள்
** உலக மற்றும் இந்திய பொருளாதார முன்னேற்றத்துக்கு அவர் எப்படி உதவினார்
** உலகின் முக்கிய பொருளாதார அமைப்புகளுக்கு அவர் வழங்கிய அறிவுரைகள்
** உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் அவர் கொடுத்துள்ள பாடத்தொகுப்புகள்
** இந்தியா தவிர மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மன்மோகன் எப்படி உதவினார் என்பது பற்றி உலகத்தின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள்