சனி, 6 ஜூலை, 2024

Chavakacheri டாக்டர் அர்ச்சுன்னாவை இடமாற்றம் செய்ய துடிக்கும் யாழ்ப்பாண மெடிக்கல் மாபியா

தேசம் நெட் : அருள்மொழி வர்மன்  : யாழ்ப்பாணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் வைத்தியர்கள் – அம்பலப்படுத்திய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல் நடத்திய வைத்தியர்கள்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட வைத்தியர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.  இச்சம்பவம் நேற்யையதினம் (04-07-2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் அங்கு இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாடு இன்றி காணப்பட்ட சுகாதார சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் செயற்பட்டார். சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் வீடியோ பதிவுகளை தனது முகநூலில் பதிவேற்றியிருந்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் நோக்கம் இல்லை": கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்

May be an image of text that says 'ym Naga SuGanthi Naga Suga...> > Kpy LIKe Sakthivel R ஆள் கடத்தல், கொலை முயற்சி, ரவுடியிசம் உள்ளிட்ட குற்றசெயல்களில் ஆம்ஸ்டிராங் மீதான7 வழக்குகள் விபரம்: 1.திருவிக நகர் காவல் நிலைய குற்ற எண் 696/2001 பிரிவு 147,148,341,336,420, 506(2)IPC 2.பெரவள்ளுூர் காவல்நிலைய குற்ற எண் 248/2002 பிரிவு 341,307,506(2) IPC. 3..செம்பியம் காவல் நிலைய குற்ற எண். 486/2002 பிரிவு 397,336,427,506(2) IPC. 4.செம்பியம் காவல் நிலைய குற்ற எண் குற்றஎண். 1182/2001 பிரிவு 341, 385,324,427,332,307 Comment as Mohamed Bashith'

மின்னம்பலம் -Selvam :  “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் நோக்கம் இல்லை”: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்
பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரசியல் நோக்கத்திற்காக கொலை செய்யப்படவில்லை என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஜூலை 6) தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் ராய் ரத்தோர்,
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். அரசியல் நோக்கத்திற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை. அவர் அரசியலுக்கு வந்த பிறகு, வேறு கும்பலுடன் அவருக்கு தகராறு இருந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணைகள் முடிந்த பிறகு தான் தகவல் தெரிவிக்கப்படும்.

2023 இல் ஆற்காடு சுரேஷை மர்ம கும்பல் படுகொலை செய்தது எப்படி? பின்னணி!

Armstrong BSP Chennai murder

tamil.oneindia.com - Vishnupriya R :  சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்ட நிலையில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆற்காடு சுரேஷ் யார் என்பது குறித்தும் தெரிந்து கொள்வோம்.
சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் ஆம்ஸ்ட்ராங் இருந்த போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில் போலீஸார் இந்த கொலை தொடர்பாக, 8 பேரை கைது செய்தனர். அவர்களில் ஆற்காடு சுரேஷின் தம்பியும் ஒருவர். தனது அண்ணன் கொலைக்கு பழித் தீர்க்கவே கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா ஒப்புக் கொண்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையும் திரு.அண்ணாமலையும்

Bahujan Samaj state president assassination - Annamalai condemned, பகுஜன்  சமாஜ் மாநில தலைவர் படுகொலை - அண்ணாமலை கண்டனம்,

திரு ஆர்ம்ஸ்ட்ரோங் கொலையும் அண்ணாமலையும்  ஏற்கனவே பல சந்தேகங்களை எழுப்பி இருந்த நிலையில் இப்போது அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன!
பாஜக ஏனைய மாநிலங்களில் செய்து கொண்டிருக்கும் கட்டை பஞ்சாயத்து வசூல் .. ஜாதி கலவரங்கள்   ஜாதி தலைவர்களிடையே நடக்கும் மோதல்கள் எல்லாம் இப்போது அண்ணாமலை தலைமையில் தமிழ் நாட்டில் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டை கூறு போட்டு கொள்ளை அடிக்க கூட்டம் ஒன்று இரவு பகலாக வேலை பார்க்கிறது
கவனமாக இருங்கள் மக்களே!
சமூக ஊடகங்களில் வெளியான செய்தி இது :
:  ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதில் உள்ள நிறைய சந்தேகங்கள்...
1) ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர், புன்னை பாலா என்ற ஆற்காடு சுரேஷ் தம்பி. ஆற்காடு சுரேஷ் யாருன்னா ஆருத்ரா கோல்டு திருட்டு வழக்குல முதன் முதலில் கைது செய்யப்பட்டவன். அண்ணாமலைக்கு நெருக்கமானவன்.!
போன வருடம் இவன் கொல்லப்பட்டான். யாரால் என்று தெரியாது.!
ஆம்ஸ்ட்ராங், ஆருத்ராவால் பாதிக்கப்பட்டவங்களுக்கு  பணத்தை வாங்கிக் கொடுக்க உதவுவதில் இருவருக்கும் பிரச்சனையாம். அதனால் அவன் சாவுக்கு ஆம்ஸ்ட்ராங் காரணம்னு நினைச்சிருக்கானுக.!

ஆம்ஸ்ட்ராங் கொலை - 8 பேர் காவல் நிலையத்தில் சரண் -சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை

tamil.oneindia.com - Mani Singh S  :  சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கொலையாளிகளை 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டினர்.

யாழ்ப்பாணத்தில் 48% வீதம் மலையாளிகள் குடியேறியுள்ளார்கள்! போத்துக்கேயர்களின் உறுதி பத்திரங்கள் மூலம் நிரூபணம்

May be a black-and-white image

 Sinnakuddy Mithu :  யாழ்ப்பாணத்தில் மலையாளிகளின் குடியேற்றம் நடந்தது என்பதை  போத்துகேசரின் தோம்புகளின் அடிப்படையில் நிறுவ முற்படுகிறார்  இந்த கட்டுரையாளர்
மலையாளத்திலுள்ள முக்கிய சாதிகள் இருபத் தேளுள் பதினான்கு சாதிகள் யாழ்ப்பாணத்திற் குடி யேறியிருக்கின்றன என்பது போத்துக்கேயர் எழுதி வைத்த தோம்புகளால் அறியக் கிடக்கின்றது
 (2). தோம்புகளின் அடிப்படையில் இங்குவந்து குடியேறிய சகல மக்களுள் மலையாளத்தவர்கள் 48% குடியேறியுள்ளார்கள் என்று ஊகிக்கலாம்.

மாயாவதி : ஆம்ஸ்ட்ராங்கின் கொலை.. குற்றவாளிகளை அரசு உடனே தண்டிக்க வேண்டும் - BSP தலைவர்

 tamil.asianetnews.com -  Ansgar R :  BSP Leader Mayawati : பகுஜன் சமாஜ் கட்சியின், தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொடூர கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மாயாவதி.
இன்று மாலை பெரம்பூரில் தனது வீட்டு வாசலில் நின்று, தனது சகாக்களோடு பேசிக்கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை அரசு மருத்துவமனை முன்பாக அவரது ஆதரவாளர்கள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

BSP தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை! பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில

 tamil.oneindia.com  -Mani Singh S :  சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) இன்று இரவு 7 மணியளவில் அவரது வீட்டின் முன் நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலினர் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
bahujan samaj party armstrong chennai murder
அரிவாளால் வெட்டியதில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு பல இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வெள்ளி, 5 ஜூலை, 2024

அடையாளத்தை இழக்கும் மாஞ்சோலை -கூடாரம் காலி! அபலைகளுக்குக் கைகொடுக்கும் முதல்வர்!

நக்கீரன் :அடையாளத்தை இழக்கும் மாஞ்சோலை - அபலைகளுக்குக் கைகொடுக்கும் முதல்வர்!
தலைமுறை வழியாய் 95 வருடங்கள்,
 நெல்லை மாவட்டத்தின் அம்பை பகுதியின் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பி.பி.டி.சி. கம்பெனிக்கு இரவுபகல் பாராது விசுவாசமாய் உழைத்தவர்கள். அப்படிப்பட்ட மக்கள் அடுத்த வேளை உணவுக்கு,
அவர்கள் தங்கள் பிள்ளைகளோடு என்ன செய்வார்கள் என்ற நன்றி உணர்வு இம்மியளவு கூட இல்லாமல் கடுமையாக நடந்து கொண்ட கார்ப்பரேட் கம்பெனி குத்தகை முடிவதற்கு இன்னும் நான்கு வருடங்கள் இருந்தபோதும் ஜூன் 17 முதல் கம்பெனி மூடப்படுகிறது.

பிரிட்டன் -தொழில் கட்சி பெருவெற்றி , ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் படுதோல்வி

 மாலை மலர் : பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று ,
14 வருடங்கள் களைத்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
கடந்த 2010 முதல் ஆட்சியில் இருந்த ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு மிகவும் பின்னடைவை சந்தித்து படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிராமராக பதிவியேற்க உள்ளார்.
61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர் தனது இளமைப் பருவத்தில் ப்ளூட், பியானோ, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞராக இருந்துள்ளார். தனது இளம் வயதிலேயே சோசியலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கெய்ர் தனது 16 வயதில் தொழிலாளர் கட்சியின் இளம் சோசியலிஸ்ட் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்கிறார்.

பெண்கள் குளிக்கும் இடத்தில் கமெரா பொருத்திய "சிவபூமி" அறக்கட்டளை!

May be an image of 1 person, temple and text

 Arun Ambalavanar  :   பெண்கள் குளிக்கும் இடத்தில் கமெரா பொருத்திய
சிவபூமி அறக்கட்டளை!
ஆறுதிருமுருகனின் சிவபூமி அறக்கட்டளையால் நடாத்தப்படும் சிறுமியர் இல்லத்தில் அவர்கள் குளிக்கும் இடத்தில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்கள் பற்றிய முறைப்பாடுகள் பொதுமக்களால் ஒரு மாதத்திற்கு முன்னரே செய்யப்பட்டது.
இருந்தும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பின்னர் மறுபடியும் பொதுமக்கள் முறையிடவே இவ்வாரம் இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1. துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் பத்துக்கு மேற்பட்ட மூடிய குளியல் அறைகள் உள்ளபோதிலும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் குளியல் அறைகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் வளவில் உள்ள திறந்த வெளி தொட்டி ஒன்றிலேயே குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். (சிவபூமி அறக்கட்டளை நிர்வாகத்தினருக்கே குறித்த மூடிய குளியல் அறைகள் அனுமதிக்கப்படுகிறது). குறித்த திறந்த வெளி குளியல் பகுதியை பார்க்கக் கூடியவாறு ஒரு சில CCTV கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சொல்வது..

மின்னம்பலம்  - Selvam :  கர்நாடகா மாநிலத்தில் பானிபூரி கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார்,

“பானிபூரி சாப்பிடுவதால் கேன்சர் வருகிறது என்று கர்நாடகா மாநிலத்தில் பானிபூரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

கேரளா - அவரே கொல்லச் சொன்னார்; மயக்க மருந்து கொடுத்து வலிக்காமல் கொன்றேன்’ – குமரி போலீஸை அதிரவைத்த நபர்!

தீபு - தீபுவின் உடல் கிடந்த கார்

  விகடன் கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாப்பனங்கோடு பகுதியை சேர்ந்தவர் தீபு (44). குவாரி நடத்திவரும் தீபு, கழுத்து அறுத்து கொலைச்செய்யப்பட்ட நிலையில் கடந்த திங்கள்கிழமை களியக்காவிளையில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த கொலை குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அம்பிளி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அம்பிளி சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு தீபு-வுடன் நட்பாக பழகிவந்ததாக கூறப்படுகிறது.

வியாழன், 4 ஜூலை, 2024

போலே பாபா சாமியாரின் கூட்டத்தில் பறிபோன 121 உயிர்கள்... கூட்டத்தில் என்ன நடந்தது

  மின்னம்பலம்  -vivekanandhan  :  உத்திரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவரின் ஆன்மீக பிரசங்கக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வளவு மக்கள் இறந்தது குறித்து அந்த சாமியாரிடமிருந்து இதுவரை எந்த வருத்தமும், விளக்கமும் வெளிவரவில்லை.
மேலும் அவர் இப்போது தலைமறைவாகி இருக்கிறார். யார் அந்த சாமியர் போலே பாபா? எப்படி இவ்வளவு மக்கள் உயிரிழந்தனர் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
யார் இந்த போலே பாபா?
போலே பாபா அல்லது நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அந்த சாமியாரின் உண்மையான பெயர் சூரஜ்பால் என்பதாகும். இவர் உத்திரப் பிரதேசத்தில் காவல்துறை உளவுப் பிரிவில் 15 ஆண்டுகள் கான்ஸ்டேபிளாக வேலை செய்தவர். 1997 ஆம் ஆண்டு இவர் பணிக் காலத்திலேயே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர் என்று என்.டி.டி.வி குறிப்பிட்டுள்ளது. இதே குற்றச்சாட்டிற்காக இவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். அதன்பிறகு 2002 ஆம் ஆண்டு சூரஜ்பால் காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று ஆன்மீகப் பணி செய்யப் போவதாகச் சொல்லி சிறிய அளவில் ஆன்மீக பிரசங்கக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார்.

புதன், 3 ஜூலை, 2024

இந்திய குடியுரிமையை தக்கவைத்து கொள்ள உங்கள் செல்போனை ரீ சார்ஜ் செய்வது அவசியம்?

 Selvakumar Ramasamy :  உங்கள் இந்திய குடி உரிமையை தக்க வைக்க நிபந்தனையை பின்னூட்டத்தில் காண்க
*இந்திய குடியுரிமைக்கு ரீசார்ஜ்..!*
*ஒரு காலம் ஒன்று இருந்தது*.
*ஒரு சிம் வாங்கினால்..பேசுவதற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டியது இருக்கும்.*
*மற்றபடி நீங்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு வரவேண்டிய போன் கால்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.*
*தொலை தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்குகிறது எனவே மாதம் 16 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.*
*அதன்படியே நாமும் மாத மாதம் 16 ரூபாய்க்கு டாப் அப் செய்து, இதன் மூலம் நமக்கான நம்பரை நாம் தக்க வைத்துக் கொண்டோம்.*
*நமது போனின் தொலை தொடர்பு நம்பரை தான் வங்கிக் கணக்கு, எரிவாயு பதிவு செய்தல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு என அனைத்திலும் பதிவு செய்ய சொன்னார்கள்,*
*நாமும் அப்படியே பதிவு செய்தோம்.*
*இதையே நல்ல வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்டு*
*இப்போது நமது தொலைபேசி எண்ணின் சேவையை தொடர மாதம் 199 ரூபாய் என கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க தொடங்கி விட்டார்கள்.*

மாரிதாஸ் அதிரடி : கொள்ளைக்காரர்களாக பார்த்து பார்த்து பாஜகவில் சேர்த்துள்ளார் ..இனியும் முட்டு கொடுக்காதீர்

May be an image of 1 person and text that says 'MARIDHAS மாரிதாஸ் தாஸ் FIR ON FACTS BASED NEWS- MISCHIEF OR TRYING TO DIVERT ATTENTION?'

மாரிதாஸ் மலைச்சாமி : முட்டு கொடுக்காதீர்.. எக்ஸ் தளத்தில் அதிரட!
தங்க கடத்தல் தொட்டு எல்லா கடத்தல்கள் செய்பவனை கட்சி உள்ளே சேர்த்தவிதத்தில் ஒரு விசயத்தில் தமிழக பாஜக நீண்டகால பற்றாளர்கள் சித்தாந்தவாதிகளிடம் இருக்கும் கேள்வி
 “எல்லாரும் அரசியல் கட்சியில் சேர்ந்த பின் கொள்ளை அடிக்க திட்டம் போடுவான்.
இங்கே கொள்ளை அடிச்சவன், அடிக்க திட்டம் போட்டவனா பார்த்து தான் அரசியல் உள்ளேயே வந்துள்ளார்கள். அதுவும் கடந்த 4 வருடம் தமிழக பாஜக ஆருத்ரா தொட்டு இன்று 200 கோடி தங்க கடத்தல் வரை”.
இது தேசியவாதிகளிடையே பாஜக மீது நம்பிக்கை கொண்ட நல்ல மனிதர்கள் பலருக்கு பெரும் தலைகுனிவை தந்துள்ளது.

தமிழ் நூல்களை புறக்கணித்து சைவ நூல்களை மட்டுமே பதிப்பித்த ஆறுமுக நாவலர் எப்படி தமிழ் தாத்தா ஆவார்?


பொ வேல்சாமி
: “தமிழ்த் தாத்தா” -  உ.வே.சாவா ? ஆறுமுகநாவலரா ?
நண்பர்களே…
அண்மைக் காலங்களில் YOUTUBE இல் பல்வேறு வகையான நபர்கள்   எவ்விதமான ஆதாரங்களுமின்றி பல தலைப்புகளில் உளறி வருகின்றனர்.
இவர்கள் இவ்வாறு ஆதாரமின்றி அபத்தமாகப் பேசுவதைக் கேட்கவும் செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒன்றிரண்டு  செய்திகளைப் பாருங்கள்.
1. ஒருசில நபர்கள் “தமிழ்த் தாத்தா” என்று உ.வே.சாமிநாத அய்யரைக் குறிப்பிடுவதை நக்கலடிக்கின்றனர். வரலாறு தெரியாத ஒருசில பாமரர்களும் ( இந்த பாமரர்கள் வெள்ளையும் சொள்ளையும் போட்டு படித்தவர்கள் போல இருப்பார்கள் ) ரசிப்பார்கள்.  

1860 இல்   உ.வே.சாவுக்கு 6 வயது இருக்கும்போது,
 அதாவது  சைவ வெள்ளாரான ஆறுமுக நாவலருக்கு “தமிழ்த் தாத்தா” ஆகும் அற்புதமான வாய்ப்புக் கிடைத்தது.
1860 இல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவருடைய தந்தையார் பொன்னுசாமி தேவரின் ஆதரவில் ஆறுமுகநாவலர் வெளியிட்ட,
 “திருக்கோவையார்” என்ற நூலில் ஒரு ஆச்சரியமான விளம்பரம் வெளியாகி உள்ளது.

ஹத்ராஸ் மருத்துவமனை வாசல் முழுக்க மனித உடல்கள்.. அழுகுரல்கள்.. 122 பேர் உயிரிழந்துள்ளனர்

 tamil.oneindia.com : ஹத்ராஸ் மருத்துவமனை வாசல் முழுக்க மனித உடல்கள்.. எங்கும் அழுகுரல்கள்.. இதயத்தை நொறுக்கும் காட்சிகள்.: 122 பேர் உயிரிழந்துள்ளனர்
ஹத்ராஸ் கூட்டநெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு வெளியே தரையில் கிடக்கின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
மருத்துவமனை முழுவதும் மரண ஓலமும், அழுகுரலும், காப்பாற்றுங்கள், எப்படியாவது காப்பாற்றுங்கள் என்ற சத்தமும் கேட்டபடியே இறந்தது காண்போரின் இதயத்தையே நொறுங்க வைத்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபாவின் (Bole Baba) நிகழ்ச்சி இன்று நடந்தது.

செவ்வாய், 2 ஜூலை, 2024

புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன

 hindutamil.in  :  புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று அமலுக்கு வந்தன. நாட்டின் முதல் வழக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரிலும், தமிழகத்தின் முதல் வழக்கு சென்னையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகியவற்றுக்கு பதிலாக, நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதாக்கள் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன.
 இதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷிய அதிநியம் ஆகிய 3 சட்டங்கள் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக!

 மின்னம்பலம் - Selvam :   புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக!
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் ஜூலை 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டத்துறைச் செயலாளரும்  மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ  தலைமையில், சட்டத்துறை தலைவர் விடுதலை முன்னிலையில் ஜூன் 29 அன்று திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

திங்கள், 1 ஜூலை, 2024

ஆ. ராசா : முகலாயர்கள் அந்நியர்கள் என்றால், ஆரியர்களும் அந்நியர்கள்தான்!

 ஆ. ராசா : எனது மூதாதையர்கள் வறுமையினால் கல்வி அறிவின்மையாலும் பிழைப்பதற்கு இலங்கைக்கு சென்றார்கள்
அவர்களின் பேரன் நான் இன்று நாடாளுமன்றத்தில் உங்கள் முன்னால் நிற்கிறேன்
ராகுல் காந்திக்கு அருகில் அமர்ந்திருக்கிறேன்
மோடியை எதிர்த்து கொண்டு ..
என் மகள் லண்டனில் ஒரு புகழ் பெற்ற பல்கலை கழகத்தில் படித்து கொண்டிருக்கிறார்
இதற்கு யார் காரணம்? யார் காரணம்?
இதையெல்லாம் எங்களுக்கு செய்தது பெரியார்
அண்ணா அம்பேத்கர் கலைஞர்
திராவிட கோட்பாடுதான்  இதை செய்தது

நடிகர் விஜய் திரிஷாவோடு குடும்பம் .. சங்கீதாவோடு சேருங்கள் .. பாடகி சுசித்ரா அதிரடி

Suchitra leaks :மாலை மலர் :  சுசி லீக்ஸ் மூலமாக பின்னணி பாடகி சுசித்ரா கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்மையில் சுசித்ரா ளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் குறித்தும் நடிகர் தனுஷ் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்!

 hirunews.lk :  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான இரா. சம்பந்தன் காலமானார்.
91 வயதான அவர் கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு (30) காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்யன் ஆனந்த் - போலி சான்றிதழ் மூலம் அமெரிக்க ஸ்காலர்ஷிப் . கைது செய்யப்பட்டு டிப்போர்ட் செய்யப்பட்டார்

 Vimalathithan Balakrishnan  : ஆர்யன் ஆனந்த் வீட்டு முன் பெரும் கூட்டம் கூடியிருந்தது.
+2வில் 45% மதிப்பெண் பெற்று பாஸ் செய்திருந்தான்.
அவனுக்கு அமெரிக்காவின் லீஹ் கல்லூரியில் இருந்து அட்மிஷன் கிடைத்திருந்தது.
தவிர முழு கல்விக்கட்டணம் தள்ளுபடி செய்யபட்டு,
அவனது விமான டிக்கட் முதல் உணவு வரை கல்லூரியே ஸ்காலர்ஷிப் ஆக கொடுப்பதாக கடிதம் எழுதி இருந்தது.
தவிர ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா வந்து போக டிக்கட் இலவசம்
அவனது நண்பர்கள், உடன் படித்த மாணவ்ர்கள், உறவினர்கள் எல்லாம் கூடி "உனக்கு எப்படி இது எல்லாம் கிடைத்தது?" என நம்ப முடியாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவனது அப்பாவும் "ஏன்டா உனக்கு கூட்டல், கழித்தலே சரியாக தெரியாது. உனக்கு எப்படிடா அமெரிக்காவில் அட்மிஷன் கிடைத்தது" என கேட்டார்
யாருக்கும் தெரியாத விஷயம் என்னவெனில் ஆனந்த் இரு ஆண்டுகளாக இதை திட்டமிட்டான்.

ஞாயிறு, 30 ஜூன், 2024

மதுவில் கிக் இல்லை... துரைமுருகனின் பேச்சு தமிழகத்துக்கு தலைகுனிவு : பிரேமலதா

 மின்னம்பலம் -Kavi :   அரசு விற்கும் மதுவில் கிக் இல்லை என்று  சீனியர் அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசியிருப்பது தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
இன்று (ஜூன் 30) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரேமலதா கோவை சென்றுள்ளார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டபேரவையில் மூத்த அமைச்சர், முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர், மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி மக்கள் செல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். முதல்வர் முன்னியிலையில் சொல்லியிருக்கிறார்.

இராமனை தொட்டவர் எவரும் நிம்மதியாக இருந்ததில்லை

 சாந்தி நாராயணன் :  இராமாயணத்தின்  உருவகப்படி இராமன்
இராமனைச் சார்ந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை.
பெற்ற தசரதன், ராமனின் தாய், வளர்ப்புத் தாய் கூனி ,
கட்டிய மனைவி,
லட்சுமணன் முதல் கூடப் பிறந்த சகோதரர்கள் யாரும் மகிழ்வோடு இல்லை.
நடந்த தேசத்திலெல்லாம் உறவுகளை மோத விட்டான்.
ஆண்ட நாட்டு மக்களையெல்லாம் அழுகையிலும் அவநம்பிக்கையிலும் வைத்தான்.
கூட்டுச் சேர்ந்த சுக்ரீவன் விபீஷ்ணன்
அரசியல் செய்த அத்வானி
கால் வைத்த இலங்கை
பிறந்த  உத்திரபிரதேசம் வரை
ராமனைச் சார்ந்த எவரும் நிம்மதியாய் இருந்ததில்லை.
வாழ்நாள் எல்லாம்
ராமனும் நிம்மதியாய் இருந்துவிடவில்லை.
பார்ப்பனியத்துக்கு பலியாளாக வாழ்நாள் எல்லாம்
துக்கமும் துயரமும் இரத்தமும் மனச் சஞ்சலமாகவுமே. வாழ்ந்து இறந்தான் ராமன்

கஸ்தூரி உனக்கு அசிங்க அசிங்கமா ... மீண்டும் களமிறங்கிய பாடகி சுசித்ரா!

tamil.filmibeat.com   -  Jaya Devi  :  சென்னை: பாடகி சுசித்ரா, தனது முன்னாள் கணவன் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் என பல நடிகர்கள் குறித்து மோசமான கருத்தை தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, சுசித்ராவிற்கு தற்போது மருத்துவ உதவியோ அல்லது மனநல உதவியோ ஏதோ ஒன்று தேவை என்று பேசி இருந்தார்.
 இது குறித்து ஒரு மாதத்திற்கு பின் வாய் திறந்துள்ள சுசித்ரா, கஸ்தூரியை கடுமையான வார்த்தையால் திட்டிஉள்ளார்.

India become champion! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

 தினத்தந்தி :  பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.
9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - விராட் கோலி களமிறங்கினர்.
இதில் முதல் ஓவரிலேயே 15 ரன்கள் அடித்து அதிரடியாக தொடங்கிய இந்தியாவுக்கு, 2-வது ஓவரை வீசிய கேஷவ் மகராஜா இரட்டை செக் வைத்தார். அந்த ஓவரில் ரோகித் 9 ரன்களிலும், பண்ட் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். அவரைதொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

மிஷல் ஒபாமா US அதிபர் தேர்தலில் - ஜோ பைடனுக்கு பதில் இவர் தேர்தல் வேட்பாளராக கூடும்!

 தினமலர் :  வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பொது விவாத நிகழ்ச்சியில், அதிபர் ஜோ பைடன், 81, சொதப்பினார். இதனால், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, அவருக்கு பதிலாக மிச்சைல் ஒபாமாவை நிறுத்த வேண்டும் என்ற வாதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி நடந்தது.

இதில் இருவரும் வரம்புமீறி, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜோ பைடன் வாதங்கள் வலுவிழந்து இருந்தது என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.