சனி, 12 மே, 2012

நீதாண்டா மதுரை ஆதீனம் நான்தாண்டா நித்தி


லாக்-அப் கொலைகள்: கேட்பாரற்ற போலீசு ராஜ்ஜியம்!


கடந்த 2009-10 ஆம் ஆண்டில் நாடெங்கும் 1,324 கொட்டடிக் (லாக்அப்) கொலைகள் நடந்துள்ளன என்றும்,  இந்த எண்ணிக்கை அதற்கடுத்த ஆண்டில் (2010-11) 1,574 என அதிகரித்துவிட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்திருக்கிறது.  2010-11 ஆம் ஆண்டு நடந்துள்ள கொட்டடிக் கொலைகளுள் 37 சதவீதம் (597 கொலைகள்) உ.பி., பீகார், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களில் நடந்துள்ளன.  இம்மூன்று மாநிலங்களிலும் ‘தலித்’ சகோதரி மாயாவதியின் ஆட்சி நடந்த உ.பி.யில்தான் அதிகபட்ச கொட்டடிக் கொலைகள் (331) நடந்துள்ளன.

பார்ப்பனர்களுக்கு தினமும் 2,000 பசுக்கள் வெட்டப்பட்டு இறைச்சி வினியோகிக்கப்பட்ட History

"பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பானதாக இருந்தது" டி என் ஜா.பண்டைய இந்திய வரலாற்று நிபுணரும் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” புத்தகத்தின் ஆசிரியருமான டி. என். ஜா உடனான நேர்காணல்
"பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பானதாக இருந்தது" டி என் ஜா.
புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபிக்கிறார். “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.

நடராஜன் வாயைத் திறக்க, தஞ்சை போலீசுக்கு வியர்த்து கொட்டுகிறது!

viruviruppu.com சசிகலா குடும்பத்தில் இருந்து கைது செய்யப்பட்ட மூவரும், ஜாமீனில் வெளியே வந்து விட்டார்கள். இவர்கள்மீது புகார் கொடுக்க ஆள் பிடிக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.
குறைந்தபட்சம் தற்போதைக்காவது ஆள் தேடி அலைய வேண்டியதில்லை என்று காவல்துறை பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க, மூவரில் கடைசியாக வெளியே வந்த நடராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
பொதுவாகவே இப்படியான அரஸ்ட்-பெயில் விளையாட்டுகள் எல்லாமே ஒருவித ‘அன்டர்ஸ்டான்டிங்’ அடிப்படையிலேயே நடைபெறும். பெயிலில் விடப்பட்டால், “வாயை மூடிக்கொண்டு, ‘கம்’மென்று வீட்டுக்கு போனோமா, கோழி அடித்து சூப் வைத்து குடித்துவிட்டு படுத்தோமா என்று இருக்க வேண்டும்” என்று சொல்லித்தான் வெளியே அனுப்பவார்கள்.
ஜெயிலில் இருந்து பெயிலில் வெளியே வந்த சசி சின்டிகேட்டின் முதல் இரு ஆட்களும், இந்த இன்ஸ்ட்ரக்ஷனை கவனமாக ஃபாலோ பண்ணுகிறார்கள்.

கலைஞர், ஸ்டாலின் பெயர்களை பெயர்த்து எடுத்துவிடுமாறு ரகசிய உத்தர

கலைஞர் மற்றும் ஸ்டாலின் பெயர்களை பெயர்த்து எடுத்துவிடுமாறு ஒரு ரகசிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.- ஜெயலலிதா அரசு

முந்தைய தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையெல்லாம் முடக்கி வைத்திருக்கும் தற்போதைய ஜெயலலிதா அரசு, கடந்த 5 வருடங்களில் தி.மு.க. அரசு நடத்திய நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் கலைஞர் மற்றும் ஸ்டாலின் பெயர்களை பெயர்த்து எடுத்துவிடுமாறு ஒரு ரகசிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதனை, சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்ட பொதுப்பணித்துறையினர், கடந்த சில வாரங்களாக காவல்துறையின் உதவியுடன் சென்னையில் இப்பணியை நள்ளிரவு நேரங்களில் நடத்தி வருகின்றனர்.

ராமஜெயம் கொலை வழக்கில் துப்புகூட துலங்காதது ஏன்?

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் துப்பு துலங்காதது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் திமுக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்

நடராஜன்:ஜெயலலிதா என்னை சிறையிலடைத்து நேரடி அரசியலில் குதிக்க

திருச்சி: மறைமுக அரசியலில் இருந்த தம்மை கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் நேரடி அரசியலுக்கு இழுத்துவிட்டார் ஜெயலலிதா என்று எம். நடராஜன் தெரிவித்துள்ளார்.
நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்களின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடராஜன் நேற்று ஜாமீனில் விடுதலையானார்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
என் மீது போடப்பட்ட 6 வழக்குகளுமே பொய்யானவை. எனக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்களில் ஒருவரைக் கூட நான் நேரில் பார்த்தது இல்லை. இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்.

The Dirty Pictureரில் நயன்தாரா!

Nayantara Play Silk Smitha Role Tamil
 
இந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற தி டர்ட்டி பிக்சர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறார்.
மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை 'த டர்டி பிக்சர்' என்ற பெயரில் இந்தியில் தயாராகி ரிலீசானது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. இதில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
சில்க் ஸ்மிதா குடும்பத்தினர் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தாலும், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
டர்டி பிக்சர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு அப்படத்தை வேறு மொழிகளில் படமாக்க தயாரிப்பாளர்களை தூண்டி உள்ளது.

மங்காத்தா! இப்போது கிரிக்கெட் ஒரு விளையாட்டு அல்ல


இந்தியன் பிரீமியர் லீக் எனும் குத்தாட்ட கிரிக்கெட் போட்டியின் இரசிகனான பொறியியல் கல்லூரி மாணவன் ரவிச்சந்திரா,  ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஐந்து இலட்சம் ரூபாõயைத் தோற்றுவிட்டு, அதனை அடைப்பதற்காக ஒரு சிறுவனை கடத்தி, பிணையத் தொகை கேட்டுக் கொலையும் செய்துவிட்டான். இது ஆந்திரத்தின் கோதாவரி மாவட்டத்தில் ஒரு சிறுநகரில் நடந்திருக்கும் சம்பவம்.
ஒரு சிறுநகரிலேயே இப்படி.  அனைத்திந்திய அளவில் தற்போதைய ஐ.பி.எல் சீசனின் சூதாட்ட மதிப்பு தோராயமாக 6000 கோடி ரூபாõயை எட்டும் என்கிறார்கள். ஆங்காங்கே போலீசு இவர்களை கைது செய்தாலும் சூதாட்டம் மற்றும் மோசடி ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ்தான் வழக்கு போடமுடியும். அபராதத்தை மட்டும் கட்டிவிட்டு ஆட்டத்தை தொடருகிறார்கள் சூதாடிகள். சூதாட்டத்தையே சட்டப்பூர்வமாக்கிவிடலாம் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

இடைத்தேர்தலில் தேர்தல் கமிஷன் ஒருதலைபட்சம்

புதுக்கோட்டை: ""சங்கரன்கோவில் இடைத்தேர்தலைப் போன்று, புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும், தேர்தல் கமிஷன் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது,'' என, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினார். புதுக்கோட்டையில், மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த, "சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பிலான கண்டனக் கூட்டத்தில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழக சட்டசபையில், தொகுதி பிரச்னைகளை பேச எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு அளிக்க மறுப்பதால் தான், மக்கள் மன்றத்தில் பேச வேண்டிய நிலை, தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டு வருகிறது.

வெள்ளி, 11 மே, 2012

அழகுப் பெண்ணைப் பார்த்தால் பெண்ணுக்கும் வருமே காதல்...!

Women Are Sexually Attracted Their
ரொம்ப வித்தியாசமான தகவல்களைச் சொல்லியுள்ளது ஒரு கருத்துக் கணிப்பு. அதாவது உலகில் உள்ள பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஆண்களை விட பெண்கள் மீதுதான் அதிக ஈர்ப்பு ஏற்படுகிறதாம்.
ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்து பொறாமைப்படுவதைத்தான் இதுவரை கேள்விப்பட்டுள்ளோம். அவ என்ன பெரிய இவளா, எதுக்குப் போயி இவ பின்னாடியே போறாங்க என்று பொறுமலை வெளிப்படுத்தும் பெண்களைப் பார்க்கலாம். அவளை விட நான் ஒரு படி தூக்கலாத் தெரியனும் என்று வரிந்துக் கட்டிக் கொண்டு மேக்கப் உள்ளிட்ட இத்யாதிகளில் இறங்கும் பெண்களைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்த நிலை இப்போது வெகுவாக மாறி விட்டதாக இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. பெண்கள், ஆண்களிடம் நெருக்கமாக இருப்பதை விட பெண்களிடம் நெருக்கமாக இருப்பது அதிகரித்து வருகிறதாம்.

Chennai நடிகைகளுக்கு ஆசைவலை வீசும் mumbai நடிகர்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!


கோலிவுட் நடிகைகளுக்கு ஆசைவலை வீசும் பாலிவுட் நடிகர்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!
தென்னிந்திய நடிகைகள் வடஇந்திய சினிமாவை வசப்படுத்துகிற சங்கதி ‘ஃபிலிம் தோன்றி பிரிண்ட் போட்ட’ காலத்திலிருந்தே நடப்பதுதான்! வைஜெயந்திமாலா, ஹேமாமாலினி, ஸ்ரீதேவி என வரிசைகட்டி விளையாடினார்கள்! இப்போ ‘டிஜிட்டல் தோன்றி ‘கியூப்’ காலத்திலும் வித்யாபாலன், அசின்.... என வடக்கத்தி மண்ணுல தெக்கத்தி பொண்ணுக... தூள் கிளப்புறாங்க! 

கனிமொழிக்கு சி.பி.ஐ. கொடுத்த mixed masala அதிர்ச்சி!

Viruvirupu
கனிமொழி டில்லி ஹைகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. “2ஜி-ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் எனக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. அவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்பதே கனிமொழி தாக்கல் செய்திருந்த வழக்கு.
இது பற்றி நாம் நேற்று வெளியிட்ட நியூஸ் ஸ்டோரியில், “சி.பி.ஐ. லாயருக்கு ஆர்டர் போயிருச்சா?” என்றும் தலைப்பு கொடுத்திருந்தோம். (லிங்க் கீழே உள்ளது, பாருங்கள்) நேற்றைய கோர்ட் விசாரணைக்கு சி.பி.ஐ. லாயர் ‘வெறும் கையுடன்’  வந்தே விட்டார்.
அதாவது கனிமொழியின் மனுவை நேற்று சி.பி.ஐ. மறுக்கவில்லை. கனிமொழிக்கும் கலைஞருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது சி.பி.ஐ.!

ராசாவுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு:

டெல்லி:  2ஜி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 மாதங்களாக திகார் சிறையில் உள்ள கோரி முதன் முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது ராசாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

Ranjitha: நித்தியை பற்றி பேச ஜெயேந்திரருக்கு தகுதியில்லை சபாஷ் சரியான போட்டி

Ranjitha Slammed Jayendirar குரு - சீடர் உறவு கொண்ட எங்களை கொச்சைப்படுத்துகிறார் ஜெயேந்திரர்! - ரஞ்சிதா

ஜெயேந்திரர் மீது சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர் என்னைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.


சென்னை: நித்யானந்தாவுடன் என்னை தேவையில்லாமல் தொடர்புபடுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ரஞ்சிதா.
நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெயேந்திரர், "நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. நடிகை ரஞ்சிதா எப்போதும் அவருடன் இருக்கிறார்," என்று கூறி இருந்தார்.
இதற்கு நித்யானந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

சினேகா பிரசன்னா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டினார்




நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.
நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.
நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

சி.பி.எம்.மாநாடு: வெங்காயம் என்பதா? வெண்டைக்காய் என்பதா?

உழைக்கும் மக்களின் போராட்டங்களைத் தலைமையேற்று வழிநடத்துவதாகக் காட்டிக் கொள்ளும் சி.பி.எம். கட்சி, தமது சந்தர்ப்பவாதங்களுக்கு சித்தாந்த விளக்கங்கள் அளித்து, தம்மைத் தக்கவைத்துக் கொள்ள பித்தலாட்டம் செய்யும் இன்னுமொரு பிழைப்புவாதக் கட்சியாக புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 4 முதல்  9 வரை கேரளத்தின் கோழிக்கோட்டில் நடைபெற்ற சி.பி.எம். கட்சியின் 20வதுஅனைத்திந்திய மாநாட்டுத் தீர்மானங்கள் இதை மெய்ப்பித்துக் காட்டுகின்றன.
“முந்தைய மாநாட்டில் காங்கிரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்தோம். இப்போதைய மாநாட்டில் காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

எல்லா தேசத்திலும் பார்வையாளர்களை உலுக்கி எடுத்திருக்கிறது வழக்கு எண் 18/2


களி மண்ணை பிசைந்து    கலைவண்ணம் படைத்திருக்கிறார்    பாலாஜி சக்திவேல் என்பதை நேற்றுதான் இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. வழக்கு எண் படத்தில் வரும் ரோசியக்கா, ‘நான் சூளையில பூ வித்துகிட்டு இருந்தேங்க. சாருதான் என்னைய செலக்ட் பண்ணி நடிக்க வச்சு அல்லாரையும் என்னை பாராட்டுற மாதிரி ஆக்கிட்டாரு’ என்றார்.
நான் ரெட்ஹில்சுல வீட்டு வேலை செஞ்சுட்டு இருந்தனுங்க. ரெண்டு பொம்பள புள்ளைங்க எனக்கு. நடிக்கிறீயான்னு கேட்டு இட்டுட்டு போனாங்க. அங்க சாரு சொல்லிக் கொடுத்ததை செஞ்சேன். இன்னைக்கு ஊரு உலகமெல்லாம் என்னை பாராட்டுறாங்க. என் குடும்பத்துக்கே விளக்கேத்தி வச்சுட்டாருங்க அவரு என்று கூறுகிற பார்வதியம்மா, படத்தின் ஹீரோயின் ஜோதிக்கு அம்மா.
கரும்பு வெட்டிகிட்டு இருந்தேங்க. அங்க கார்ல வந்தாருங்க டைரக்டரு. வேறொரு ஆளை கூப்பிட்டு வசனத்தை சொல்லி நடிக்க சொன்னாங்க.

குஜராத் கலவரங்களுக்கு எதிராக அப்துல்கலாம் ஏதும் சொல்லல்லை

குடியரசுத் தலைவர் பதவி அரசியல்ரீதியில் அவ்வளவு ஒன்றும் முக்கியமானதல்ல. யாராக இருந்தாலும் பெரிய தாக்கம் ஏதும் இருக்காது. அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவியை தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்துக்கொண்டார். நாடு முழுதும் சுற்றினார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேசினார். அவரால் பல லட்சக்கணக்காக மாணவர்கள் ஊக்கம் கொண்டனர். அதே நேரம் சில ஃப்ரிஞ்ச் ஆசாமிகள் அவரை ‘அரசவைக் கோமாளி’ என்றே அழைத்தனர். சில அரசியல் நோக்கர்கள், கலாம் மிகவும் ஆபத்தானவர் என்று கருதினர். முக்கியமாக அவருடைய அணு ஆயுத ஆதரவு, அணு மின் நிலைய ஆதரவு ஆகியவையும் குஜராத் கலவரங்களுக்கு எதிராக அவர் ஏதும் சொல்லாததும் அவர்களுடைய கோபத்துக்குக் காரணம்.

தேர்தல் நடத்தை விதியை தளர்த்தியது அ.தி.மு.க.,வுக்கு சாதகம்

 தமிழக தேர்தல் அதிகாரி அதிமுகாவின் கொபசே என்பது தெரிந்ததே 

சென்னை : புதுக்கோட்டையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தியுள்ளது, ஆளும் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக போய்விட்டது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறிஉள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:இடைத்தேர்தல்கள் நடைபெறும்போது, அத்தொகுதி அமைந்துள்ள மாவட்டம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். ஆனால், இப்போது தேர்தல் நடக்கும் தொகுதியில் மட்டும், நடத்தை விதிகளை கடைப்பிடித்தால் போதும் என, தேர்தல் கமிஷனர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தாத போதே, அரசின் நலத்திட்ட உதவிகளை, சர்வ சாதாரணமாக ஆளும் கட்சியினர் வழங்கி வந்தனர். இப்போது, நடத்தை விதி தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியினருக்கு சொல்லவா வேண்டும்.

வியாழன், 10 மே, 2012

ஆதீனகர்த்தருக்கு ஐந்து கோடி ரொக்கம்; தங்கச் சிம்மாசனம்; தங்கச் செங்கோல்

 Pazha Karuppiah Slams Aadheenam Issue 'நல்லவேளை ஆதீனங்களின் கனவில் நயன்தாரா வராமல் சிவபெருமான் வந்தார்''!

 பழ. கருப்பையா
துறவு என்பது பெருமளவுக்கு இந்தியச் சமயங்களுக்கு உரியது!
துறவு என்பது உடைமைத் துறவு மற்றும் காமநீக்கம்!
பற்று நீக்கம் என்பது துயர நீக்கம்! துயரம் என்பது உடைமை சார்ந்தும், காமம் சார்ந்தும் வருவதால், துயரத்திலிருந்து முற்றாக விடுபட விரும்புபவர்கள் இவை இரண்டிலிருந்தும் முற்றாக விடுபட்டு விடுவார்கள்!
பற்றில் உழல்பவர்களைப் பற்றற்ற துறவிகளே தூக்கி நிறுத்த முடியும் என்பதால், துறவிகளுக்கு இலக்கணம் வகுக்கின்ற பணியைப் புத்தன் செய்தான்!
ஒரே வீட்டில் மூன்று நாட்களுக்கு மேல் பிச்சை கொள்ள வேண்டாம் என்றான் புத்தன்! அது அவ் வீட்டாரோடு தொடர்பும், அதன் வழியாகப் பற்றும் வளரக் காரணமாகுமாம்!

மதுரா பிருந்தாவன விதவைகள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர்


புதுடில்லி, மே 10- பிருந்தா வனத்தில் தங்கியுள்ள விதவை களின் புள்ளி விவரத்தை சேக ரித்து அறிக்கை தாக்கல் செய்ய, 7 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா, பிருந்தாவனில் குடும்பத்தால் கைவிடப்பட்ட விதவைகள் ஏராளமான எண்ணிக்கையில் உள்ள னர். ஆதரவற்ற நிலையில் அவர்கள் பிச்சை எடுத்து வாழ்கின்றனர். மண்டபங்களில் தங்கும் இவர்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர்.

நடுரோட்டில் ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் ஜீயர் உடல்

திருச்சியில் நடுரோட்டில் ஆம்புலன்ஸில் ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் ஜீயர் உடல்

திருச்சி:  ஸ்ரீரங்கத்தில் உள்ள பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் 4வது பட்ட ஜீயர் லட்சுமண ராமானுஜ ஜீயரின் உடல் நடுரோட்டில் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. கடந்த 100 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த மடத்திற்கு என சுமார் ரூ. 50 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது. இந்த மடத்தின் 4வது பட்ட ஜீயராக இருந்த லட்சுமண ராமானுஜ ஜீயர் (90) கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி முதல் மாயமானார். இதையடுத்து அவரை கண்டுபடித்து தருமாறு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் மடத்தின் சிஷ்யர்கள் புகார் செய்தனர்.

EMAILலில் ஜெயலலிதா, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

 Bomb Threat Meenakshi Amman Andal Temples
 
மதுரை: முதல்வர் ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த இமெயிலை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும் மிரட்டல் வந்துள்ளது.
நேற்று இரவு 10 மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் ஒன்று வந்தது. அதில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், போயஸ் கார்டன் ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர்களுடன் சென்று கோவிலில் தீவிர சோதனை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்பதை உணர்ந்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

கனிமொழியை 2ஜி வழக்கிலிருந்து கழட்டி விடலாமா? சி.பி.ஐ இன்று முடிவு!


Viruvirupu
2ஜி-ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழியை கழட்டி விடுவதா, இல்லையா என்று இன்று (வியாழக்கிழமை) சி.பி.ஐ. கோர்ட்டில் சொல்லவுள்ளது.
கனிமொழி, மற்றும் கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் சரத் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
2ஜி-ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் எமக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. அவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்பதே கனிமொழியும், சரத் குமாரும் தாக்கல் செய்திருந்த மனு.

புலிகளின் முன்னாள் அரசியல் தலைவர்கள், சிங்கக் கொடி ஏந்தியபின் தமிழகம் வருகிறார்கள்!


Viruvirupu,
புலிகள் இயக்கத்தால் முன்பு உருவாக்கப்பட்டு, அவர்களது அரசியல் அமைப்பாக செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையைன் சிங்கக்கொடியை கையில் எடுத்திருப்பது குறித்து இலங்கை அரசு தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கையின் தேசிய கொடியை ஏந்தியது, எமக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளதற்கான சிக்னல்” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மேடையில் சிங்கக் கொடியை தமது கைகளில் ஏற்தி உயர்த்திப் பிடித்த நிலையில் நின்றிருந்தார்.
முன்பு புலிக்கொடி பறந்த கூட்டங்களில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சுரேஷ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் சிங்கக் கொடியேந்திய தமது தலைவரின் அருகே அணிவகுத்து நின்றிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக வருவார் என்று கூறப்படும் சுமந்திரனும், மேடையில் நின்றிருந்தார்.

யுனெஸ்கோ ஆலோசகராக ஒரு தமிழர்,திமுக ஜின்னா

ஐ.நா.வின் யுனெஸ்கோ (மனித உரிமைகள்-தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தமிழக வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா(வயது 34). தமிழர்களின் பிரச்சனைகளையும், ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளையும் ஐநா மனித உரிமையின் கவனத்துக்கு கொண்டு செல்ல, ஜின்னாவின் நியமனம் உதவியாக இருக்கும் என்று தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.அசன் முகமது ஜின்னா! தி.மு.க இளைஞரணி மாநில துணைச் செயலாளர்.  திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் நிர்வாக இயக்குநர். முற்போக்கு எண்ணங்கள் கொண்ட அரசியல் பிரமுகர். அவருக்குக் கிடைத்திருக்கும் புதிய வாய்ப்பு, தமிழர் நலனுக்குத் துணையாக அமையும்.

Obama:ஒரே பாலினத்தார் திருமணம் செய்து கொள்ளலாம்:

நியூயார்க்: ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை ஆதரித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.



 அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஒபாமா மீண்டும் போட்டியிடுவார்.
தங்களது திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்பது அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோரிக்கை. ஆனால் ஒபாமா இதற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். எதிர்க்கட்சி வேட்பாளரான மிட்ரோம்னியும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.

ரஞ்சிதா தற்போது என்னுடன் இல்லை.. பேச்சை வாபஸ் பெற ஜெயேந்திரருக்கு நித்தியானந்தா 10 நாள் கெடு!

 Nithyanantha Slams Kanchi Jayendrar Comments Ranjitha
மதுரை: நடிகை ரஞ்சிதா என்னுடன் இல்லை. இந்த விவகாரத்தில் ஜெயேந்திரர் தலையிடக் கூடாது. அவருக்கு 10 நாள் கெடு விதிக்கிறேன். அவர் தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் என்று நித்தியானந்தா கூறியுள்ளா.   தற்போது 
மதுரை ஆதீன மட வளாகத்தி்ல நித்தியானந்தா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நான் காஞ்சி மடத்தை மதிக்கிறேன். யாரோ கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் காஞ்சி பெரியவர் தவறுதலாக கூறி இருக்கிறார். நான் நடிகை ரஞ்சிதாவை எங்கு சென்றாலும் அழைத்து செல்வதாக கூறி இருக்கிறார். ரஞ்சிதா  தற்போது என்னுடன் இல்லை.

கல்யாணத்தை' Vijay TVக்கு விற்ற சினேகா - பிரசன்னா ஜோடி!

Sneha Prasanna Sells Wedding Telecast Rights
கோடம்பாக்க நட்சத்திரங்களுக்கு புதிதாக ஒரு வருவாய் வழியைக் காட்டியிருக்கிறார்கள், நாளை மறுநாள் தம்பதியராகப் போகும் சினேகாவும் பிரசன்னாவும்.
தங்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையை விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு விற்றிருக்கிறார்கள் இந்த இருவரும்.
பொதுவாக முன்பெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியின் வீடியோவை இலவசமாகத்தான் கொடுத்து வந்தார்கள் டிவிக்களுக்கு.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் ஸ்பான்சர்கள் பிடித்து டிவி நிறுவனங்கள் கல்லா கட்டுவதைப் பார்த்ததால், 'நாம லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் திருமண நிகழ்ச்சியை வைத்து இவர்கள் சம்பாதிக்கும்போது, அதில் கணிசமான பங்கை நமக்குக் கொடுத்தால் என்ன?' என்ற எண்ணத்தோடு சினேகாவும் பிரசன்னாவும் ரேட் பேச, டிவி நிறுவனமும் பெரும் தொகை தர சம்மதித்துவிட்டதாம்.

வீதியெங்கும், நாள் முழுவதும் குதூகல டான்ஸ்!

ம்ம்ம் வாழ தெரிஞ்சவங்க அல்லது கொடுத்து வைச்சவங்க . நாம பேசாம நம்ம கலாசார சம்பிரதாயங்களை தூக்கி வச்சுகுனு ஆனா நாக்கை தொங்க போட்டுகுனு இதையெல்லாம் வெறிச்சு வெறிச்சு பாப்போம் .

Viruvirupu,
பிரிட்டனின் கான்வாலில் உள்ள, ஹெல்ஸ்டன் டவுனில் இந்த ஆண்டுக்கான ஃபுளோரா தின கொண்டாட்டங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்து முடிந்துள்ளன.
பிரிட்டிஷ் பாரம்பரியத்தின் மிகப் பழமையான கொண்டாட்டம் இது. இப்படியான பழைய நிகழ்வுகளில் மிகச் சிலவே இன்றும் நடைபெறுகின்றன என்பதால், ஃபுளோரா தினத்துக்கு மவுசு அதிகம். பழமை விரும்பிகள் தவறவிட மாட்டார்கள். அதே நேரத்தில் இளைய தலைமுறையினரையும் காணலாம். டைரக்டர் ஷங்கருக்கு தெரிந்திருந்தால், ஒரு டூயட் சீன் எடுத்திருப்பார். அந்தளவுக்கு கலர்ஃபுல் பிளஸ் டான்ஸ்!

ஹஜ் யாத்திரைக்கு மானியம் பெறுவது முஸ்லிம் மதத்துக்குரியது அல்ல


ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அரசு படிப்படியாகக் குறைத்து, நீக்கிவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை, முஸ்லிம் அமைப்புகள் பலவும் வரவேற்றுள்ளன.  கடந்த பதின் ஆண்டுகளாகவே இந்தப் பிரச்னை பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. தங்களை இஸ்லாமிய நாடு என்று வர்ணித்துக்கொள்ளும் நாட்டில்கூட இல்லாத ஒரு புதிய மரபை வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா ஏற்படுத்தியது என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று.  இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் சலுகைபோலப் பெருவாரியான இந்துக்களுக்கும் ஏன் அமர்நாத் யாத்திரை போன்ற தீர்த்தாடனங்களுக்கு மானியம் வழங்கப்படக் கூடாது என்று இந்து மத அமைப்புகள் கேட்கத் தொடங்கின. அதன் அடுத்த கட்டமாகக் கிறிஸ்தவ வாக்கு வங்கியைக் குறிவைத்து ஜெருசலேம் போக மானியம் என்பதுவரை இந்தப் பிரச்னை நீண்டுகொண்டிருக்கிறது.  ஹஜ் மானியம் ஒரு பிரச்னையாக மாறியபோதே, முஸ்லிம் மதத் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் இந்த மானியம் தேவையில்லை என்பதை அறிக்கைகள் மூலமும், பேட்டிகள் மூலமும் மற்றவர்களுக்கும் அரசுக்கும் தெரிவித்தனர். ஆனால், அரசு அந்தக் கருத்தை உள்வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டது என்பதுதான் உண்மை.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் திட்டம் தமிழக அரசு செயல்படுத்த முன்வரவேண்டும்

சட்டமன்றத்தில் சி.பி.எம். உறுப்பினர் கோரிக்கை
சென்னை, மே 9- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு மீண்டும் முயற் சிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. தங்க வேல் கேட்டுக்கொண் டார்.
தமிழகச் சட்ட மன்றத்தில் நேற்று (8.5.2012) இந்து சமய அறநிலையத் துறைக் கான மானியக் கோரிக்கைமீது நடை பெற்று விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே. தங்க வேல் பங்கேற்றுப் பேசு கையில்,
பெரியார் நூற் றாண்டையொட்டி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அமைத்த நீதிபதி மகாராஜன் குழு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிட ஆகமங் கள் தடை விதிக்க வில்லை என்ற முடிவுக்கு வந்தது.

இங்கே ஒரு தலித் முதல்வராக முடியுமா? – தொல். திருமாவளவனுடன் ஒரு சந்திப்பு


முரண்பாடுகளோடு உறவாடாமல், முரண்பாடுகளோடு உரையாடாமல் இன்றைய தேதியில் அரசியல் களமாடுவது சாத்தியமல்ல என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர், தொல். திருமாவளவன்.  திமுகவோடு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், சங்கரன்கோயிலில் அக்கட்சியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். தலித் மக்களை அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதே தன் லட்சியம் என்று அறிவிக்கும் தொல். திருமாவளவன் அதை அடைவதற்கான பாதையில் உள்ள தடைக்கற்களே இந்த முரண்பாடுகள் என்பதை இந்தப் பேட்டியில் தெளிவுபடுத்துகிறார்.

நீ பிச்சைக்காரிடீ, கோடீஸ்வர நித்தியை வெளியேறச் சொல்ல நீயாருடீ.

  நித்தியின் கூலிப் படைக்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க

 

ஏனென்றால் ஆதீனங்கள் நீதிமன்றத்துக்கு செல்ல தேவையில்லை என்பது விதி'' என்று நித்தி ஆதீனமானதற்கான ரகசியத்தைப் போட்டு உடைத்தார்.

மதுரை ஆதீனத்தில் இப்போது சண்டை, சச்சரவு, அடிதடி, கொலைமுயற்சி என ஏகத்துக்கும் கிரிமினல் காரியங்கள் அரங்கேறத் தொடங்க, ஆதீன பக்தர்களும் ஆன்மீகவாதிகளும் தற்போது பலத்த கவலை யிலும் பதட்டத்திலும் மூழ்கியிருக்கிறார்கள்.
ஆதீனக் குளறுபடிகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் நக்கீரன், கடந்த இதழில் மதுரை ஆதீனத்துக்கு நெருக்கமான வைஷ்ணவி, கஸ்தூரி ஆகியோரின் பேட்டி யையும், பேட்டியில் அவர்கள் நித்தி தரப்புக்கு எதிராக எழுப்பிய குமுறல் களையும் அப்படியே வெளி யிட்டிருந்தோம்.

புதன், 9 மே, 2012

2ஜி: முதன்முறையாக ஜாமீன் கோரும் ஆ.ராசா..

டெல்லி:  2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கோரி முதன் முறையாக மனு தாக்கல் செய்துள்ளார்.

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு 42 வது முறையாக ஒத்திவைப்பு

ஜெயலலிதாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு 42 வது முறையாக ஒத்திவைப்பு

கடலூர்: பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு 42வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதை எதிர்த்து திமுக எம்.பி. குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடரலாம் என உத்தரவு பிறப்பித்தது.

DIG:பொண்ணு வீட்டைவிட்டு ஓடினா பிடித்து வந்து கொன்று விடுங்கள்

பொண்ணு வீட்டைவிட்டு ஓடினா பிடித்து வந்து கொன்று விடுங்கள் உ.பி. டிஐஜி டெல்லி:  பெண் வீட்டைவிட்டு ஓடிப்போனால் அவரை கொலை செய்யுமாறு உத்தர பிரதேச மாநில டிஐஜி சதிஷ் குமார் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மண்டல டிஐஜி சதிஷ் குமார் மாத்தூர் இன்று வழ்ககம்போல காவல் நிலையங்களுக்கு விசிட் கொடுத்தார். அப்போது ஒரு காவல் நிலையத்தில் பிரபுத்நகர் மாவட்டம் கசர்வா கிராமத்தைச் சேர்ந்த ஷௌகீன் முகமது என்பவரை மாத்தூர் சந்தித்தார். ஷௌகீனின் மகள் இஷ்ரத் ஜஹான்(14) ஓடிப்போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்ட டிஐஜி இஷ்ரத்தின் தந்தையைப் பார்த்து, உங்கள் மகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வர என்னிடம் மாயசக்தி ஒன்றும் இல்லை. உங்கள் மகள் ஓடிப்போயிருந்தால் நீங்கள் வெட்கி தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும். என் தங்கை மட்டும் இவ்வாறு செய்திருந்தால் அவளைக் கொன்றிருப்பேன் அல்லது நான் தற்கொலை செய்திருப்பேன் என்றார்.

காதல் குறித்த ஆழமான கிணற்றில் இறங்கி தூர் வாரும் தோற்றத்தை ஏற்படுத்தும் படம்

காதலில்-சொதப்புவது-எப்படி
காதலில் சொதப்புவது எப்படி‘. காதலை கொஞ்சம் எதார்த்தமாக அணுகியிருப்பதிலும் சரி, காதலின் மகத்துவத்தைக் கொஞ்சம் கிண்டல் செய்திருப்பதிலும் சரி பாலாஜி மோகன் சற்றே ஆச்சரியப்படுத்துகிறார்
உண்மையான காதலென்பது ஆவிகளைப் போல; அதைப் பற்றி அனைவரும் பேசுவார்கள் என்றாலும் பார்த்தவர்கள் சிலர்தான்.
- & François de La Rochefoucauld (17 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு எழுத்தாளர்)
எண்பதுகளில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை  முதல் தற்போது படையெடுக்கும் காதல் சார் திரைப்படங்கள் வரை இடம், காலம் மட்டும்தான் மாறியிருக்கின்றன; பொருள் மாறவில்லை. அன்று கிராமம், கடற்கரை, ஏழ்மை, சைக்கிள், பேருந்து, ஊரக விளையாட்டு என்றிருந்தவை இன்று காஃபி ஷாப், ஷாப்பிங் மால், மல்டி பிளக்ஸ், ஸ்கூட்டி, ஃபேஸ்புக், நடுத்தர வர்க்கம் என்று ’வளர்ந்தி’ருந்தாலும் காதலின் சித்தரிப்பு என்னவோ அதேதான்.

ஜெயாவின் நிர்வாகத்திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து! பாகம் – 2

அடாவடி, திமிர்த்தனம்தான் ஜெயாவின் துணிச்சல்; நீதித்துறையால் முகத்தில் கரிபூசப்பட்டதுதான் அவரது நிர்வாகத் திறமைசமச்சீர் கல்வி வழக்கில் தமிழக (ஜெயா) அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், “தமிழக அரசைச் சட்டரீதியாகச் சரியாக வழிநடத்தும் ஆளில்லை” என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அந்த வழக்கில் அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு, தோற்றுப்போன பிறகாவது பார்ப்பன பாசிச ஜெயாவுக்குப் புத்தி வந்திருக்க வேண்டாமா? அடாவடியான பல முடிவுகள் எடுத்து, பல வழக்குகளில் மூக்கறுபட்டும் ஜெ திருந்துவதாக இல்லை.
சொத்துக் குவிப்பு வழக்கில் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் இழுத்தடித்து, ஜெயாசசி கும்பலைக் காப்பாற்றி வந்த வழக்கறிஞர் ஜோதிக்குத் தக்க பரிசு (நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி) தரமறுத்து, நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டனர். இதன் விளைவாக அவர் தி.மு.க.வுக்கு ஓடிப் போனார். பிறகு அந்த வழக்கை ஒரு ஐந்தாண்டு காலம் இழுத்தடித்த “பட்டை போடும்” நவநீதகிருஷ்ணனுக்கு நன்றிக் கடனாக தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பதவியை வழங்கியது ஜெயா அரசு.
ஜெயலலிதா-ஆட்சிஜோதிக்குப் பிறகு, “வாய்தா ராணி” பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் ஜெயாவுக்கு விசுவாசமாக உழைத்த நவநீத கிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளிலும் தண்டனிட்டு, கூனிக் குறுகி நிற்கிறார்.

Poes Mafia திவாகரன் விஷயத்தில் மீடியா கப்சிப்! எழுதப்பட்ட கவர் ஸ்டோரி அச்சில் வரவில்லை!!

Viruvirupu “திவாகரனையும் ராவணனையும் வெளியே விடலாம். ஆனால், அவர்கள் வெளியே வருவது எந்த விதத்திலும் மீடியாக்களில் பரபரப்பாக அடிபடக்கூடாது. ஓகேயா?” இப்படியொரு சாய்ஸ் மன்னார்குடி குடும்பத்துக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு மன்னார்குடி சின்டிகேட்டின் ரியாக்ஷன் என்ன?
வெளியே வரவேண்டும் என்றால், பெரிய இழப்புகளையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் நினைத்து, ‘கையிருப்புகளை’ பதுக்க வேண்டிய இடங்களில் பதுக்கிய நிலையில், இந்த நிபந்தனை வெரி சிம்பிள். ஆனந்தமாக தலையசைத்தார்களாம்.
அதையடுத்து ‘மே(லி)டத்துக்கு வேண்டப்பட்டவர்களாக தற்போதும் அறியப்பட்ட சசி குரூப் வி.ஐ.பி. ஒருவர் களத்தில் குதித்தார். கையில் ஒரு பட்டியலுடன், மீடியாக்களில் யார் யாரைப் பிடிக்க வேண்டும் என்று செயல்பட்டார். “திவாகரன் மற்றும் ராவணன் ஜாமீனில் விடப்பட்டால், அந்தச் செய்தி அதிகபட்சம் ஒரு பெட்டிச் செய்திக்கு மேல் போகக்கூடாது.. ஓகேயா?” என்று இந்தப் பக்கத்தில் கேட்கப்பட்டது.

ரூ 86 கோடி மக்கள் பணத்தில்சொந்த பங்களாவை புதுப்பித்த மாயாவதி


சொந்பங்களாவபுதுப்பிக்ூ 86 கோடி மக்களபணத்தசெலவிட்டுள்ளாரஉத்திரபபிரதேசத்தினமுன்னாளமுதவரும், பகுஜனசமாஜகட்சிததலைவருமாமாயாவதி. கடந்த 2007-மாயாவதி உத்திரபபிரதேசத்தினமுதல்வராபதவியேற்றதுமஅவரினசொந்பங்களாவபுதுப்பிக்குமபணியஆரம்பித்தார். தனதபதவிக்காலமமுடியுமதருவாயிலபங்களாவபுதுப்பிக்குமபணியுமமுடிந்துள்ளது.

640 கோடிக்கு ஏலம் போன கூக்குரல் ஓவியம்

நியூயார்க், மே 5- பிர பல ஓவியர் மறைந்த எட் வர்ட் முங்க் என்பவர் வரைந்த, தி ஸ்கிரீம்' என்ற ஓவியம் உலகிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போனது. இந்த ஓவி யத்தை, 640 கோடிக்கு ஏலம் வாங்கியவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. 
நார்வே நாட்டில், 1863ஆம் ஆண்டு பிறந்த எட்வர்ட் முங்க் சிறந்த ஓவியராக கருதப் பட்டார். அவர், முகபாவங்களை தத்ரூப மாக வெளிக்காட்டும் ஓவி யங்களை வரைவதில் வல்லவராக திகழ்ந்தார். நோய் மற்றும் உறவினர் மரணத்தால் வாழ்க்கை யில், அவர் மிகவும் சிரமப் பட்டார். தனது வாழ்நா ளில், இவர், 5,500க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார் என் றாலும், அவர் வரைந்த, தி ஸ்கிரீம்' (கூக்குரல்) என்ற ஓவியம் தான் உலக புகழ்பெற்றது. இந்த ஓவியம் அமெ ரிக்காவில், சோத்பீ' என்ற ஏல நிறுவனம் நடத் திய ஏலத்தில், 11 கோடியே 99 லட்சத்து 22 ஆயி ரத்து 500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப் பில், ரூ.640கோடி) விற் பனையானது. இதை ஏலத் தில் எடுத்தவர் யார் என்பது தெரிவிக்கப்பட வில்லை.
தன்னைச் சூழ்ந்துள்ள மிக பெரிய அலைகளில் இருந்து காப்பாற்றக் கோரி, ஒரு பெண், தன் இரு காதுகளையும் கைகளால் பொத்தி, வேதனையை வெளிப்படுத்தி, அபயக் கூக்குரல் எழுப்புவது போன்ற காட்சியை தான், இந்த, கான்வாஸ்' ஓவி யத்தில் அவர் சித்தரித்து உள்ளார்.

நித்தியானந்தா அதிரடி: அனைவரது அறைகளிலும் இதோ ரகசிய கேமரா!


Viruvirupu




“என்மீது குற்றச்சாட்டு வைக்கும் அனைத்து ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தினால் தெரியும் சேதி” என்று எரிகிற நெருப்பில் எண்ணை வார்த்திருக்கிறார் நித்தியானந்தா. “மற்றைய ஆதீனங்களின் அறைகளுக்குள்ளும் ரகசியமாக எட்டிப் பார்த்தால், எத்தனை பேர் என்னைப்போல பாலியல் புகார்களில் சிக்குகிறார்கள் என்று தெரிந்துவிடும்” என்றும் சவால் விட்டிருக்கிறார் இந்த லேட்டஸ்ட், மதுரை இளைய ஆதீனம்.
சுருக்கமாக அவர் கூற வருவது என்னவென்றால், “எனது அறையில் கேமரா வைத்ததில் நான் சிக்கிக் கொண்டேன். உங்கள் அறைகளில் கேமரா வைக்காத காரணத்தால் நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்… முடிந்தால் வாருங்கள்,  கேமராவை வைத்துக் கொண்டு மோதிப் பார்ப்போமா?”
எல்லாம், ‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ் வையகம்’ பாலிஸிதான்.

9 வட மாநில கொள்ளையர்கள்- கூண்டோடு சிக்கினர்! நகைக்கடைக்குள் வெல்டிங் வைத்து புகுந்த

தர்மபுரி: தர்மபுரியில் உள்ள பிரபலமான நகைக் கடை ஒன்றுக்குள், கதவை வெல்டிங் வைத்து உடைத்து உள்ளே புகுந்த வட மாநிலக் கொள்ளையர்கள் 9 பேரும் கூண்டோடு போலீஸாரிடம் சிக்கினர். கடை உரிமையாளர் ஏற்படுத்தி வைத்திருந்த அட்டகாசமான பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக சிந்தாமல் சிதறாமல் அத்தனை கொள்ளையர்களையும் போலீஸாரால் எளிதில் பிடிக்க முடிந்தது. தர்மபுரியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி பஸ் நிலையப் பகுதியில் ஒரு பிரபலமான நகைக் கடை உள்ளது. அந்தக் கடைக்கு நேற்று நள்ளிரவு ஒரு கொள்ளைக் கும்பல் வந்துள்ளது. கடையின் கதவை வெல்டிங் வைத்து உடைத்துள்ளனர்.
கடை உரிமையாளர், அங்கு நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அதாவது கடையின் கதவை யாரேனும் சேதப்படுத்தினால் அல்லது தொட்டால் அதுகுறித்து கடையில் பொருத்தப்பட்டுள்ள நவீன பாதுகாப்பு சாதனம் மூலம், கடை உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ். போய் விடுமாம்.

ஹஜ் யாத்ரீகர்களுக்கான மானியத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

ஹஜ் பயணம் செய்யும் இஸ்லாமிய யாத்ரீகர்களுக்குத் தரப்படும் மானியத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மானியத்தை படிப்படியாகக் குறைத்து 10 ஆண்டுகளுக்குள் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை முற்றிலும் நிறுத்துமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் அல்தமஸ் கபீர் மற்றும் ராஜன்னா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
ஆண்டுதோறும் ஹஜ் பயணத்துக்கு பிரதமரின் நல்லெண்ண தூதர்களாக அனுப்பப்படுவோரின் எண்ணிக்கையை 2 ஆகக் குறைக்குமாறும் நீதிபதிகள் கூறியுள்ளனர். பயணிகளுடன் நல்லெண்ணத் தூதர்கள் என்ற பெயரில் 10 பேர் போவது கூட தேவையில்லாதது, அந்த எண்ணிக்கையை 2 ஆகக் குறைக்க வேண்டும் என்றனர்.
மேலும் இந்திய ஹஜ் கமிட்டி எப்படி செயல்படுகிறது என்பதையும்,
ஹஜ் பயணத்துக்கு யாத்ரீகர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதையும் ஆய்வு செய்யப் போவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

செவ்வாய், 8 மே, 2012

SunTv VijayTv போட்டி போட்டு மக்களை கோடீஸ்வரர்களாக்கும்

தமிழ்நாட்டு மக்களை கோடீஸ்வரர்களாக்க போட்டு போட்டுக்கொண்டு கோடீஸ்வர நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன சில தமிழ் தொலைக்காட்சிகள். இந்த நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகளை விட நிகழ்ச்சி நடத்தப்படும் அரங்குகளே பிரம்மாண்டமாய் இருக்கின்றன என்கின்றனர் ரசிகர்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி’, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ போன்ற நிகழ்ச்சிகள் மக்களை சற்றே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் வாரம் முழுவதும் அழுகை தொடர்களை போட்டு ஒப்பேற்றுகின்றனர். வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் கையில் ஒரு கோடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதனை தொகுத்து வழங்குபவர் நடிகர் ரிஷி. இவர் ஏற்கனவே ‘டீலா நோ டீலா’ நிகழ்ச்சியின் மூலம் சன் டிவி நேயர்களுக்கு அறிமுகமானவர்.

வீடியோ கேம்: தந்தையைக் கொன்ற சவுதி சிறுவன்!

கடந்த மார்ச் 2012 புதிய கலாச்சாரத்தில்தான் வீடியோ கேம் எப்படி சிறுவர்களின் ஆளுமையை வன்முறையாகச் சீரழித்து வருகிறது என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு அத்தாட்சியாக ஒரு துயரச் செய்தி சவுதியிலிருந்து வந்திருக்கின்றது. தெற்கத்திய ஜிசான் பகுதியைச் சேர்ந்த நான்கே முக்கால் வயது கொண்ட சிறுவன், தந்தையிடம் சோனியின் பிளே ஸ்டேசன் எனும் வீடியோ கேம் விளையாட்டுக் கருவியை வாங்கி வருமாறு அடம் பிடித்திருக்கிறான். வெளியே சென்று வீடு திரும்பிய தந்தை அதை வாங்கவில்லை என்பதை அறிந்து அவர் கழற்றி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவரைச் சுட்டுக் கொன்று விட்டான். இசுலாமிய நாடுகளிலேயே மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டிருப்பதோடு, தூய வடிவில் இசுலாத்தை பின்பற்றிக் கொள்வதாக பீற்றிக் கொள்ளும் சவுதியிலேயே ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரம் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று. சவுதி ஷேக்குகள் தமது பெட்ரோல் பணத்தை அமெரிக்காவில் முதலீடு செய்கிறார்கள். அமெரிக்காவோ தனது கேளிக்கைப் பண்பாட்டை சவுதியில் முதலீடு செய்கிறது. விளைவு இந்தக் கொலை!

சேது சமுத்திரம் புராணப் புளுகை வைத்து உச்சநீதி மன்றம் விசாரித்து

சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தும் விதமாக பாசிசக் கோமாளி சுப்ரமணிய சுவாமி உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதன்படி அங்கே ராமர் பாலம் இருப்பதாகப் புராணப் புளுகை வைத்து இந்த முட்டாள் கூறியதை ஒரு விசயமாக எடுத்துக் கொண்டு உச்சநீதி மன்றம் விசாரித்து வருகின்றது. இது புராணப் புரட்டு என்ற உண்மையைக் கூறினால் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ’இந்துக்களின்’ வாக்குகளை இழந்து விடுவோம் என்று அஞ்சும் காங்கிரசு அரசு இந்த வழக்கை நேரடியாக மறுத்து வாதாடவில்லை. இது குறித்து உச்சநீதி மன்றம் கருத்துக் கேட்ட போது, ‘மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்று மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது‘ என்று விளக்கமளித்த காங்கிரசு அரசு தற்போது இது குறித்து உச்சநீதி மன்றமே முடிவெடுத்துக் கொள்ளும்படியும் சொல்லி விட்டது.இனி குடுமி மாமா சு.சாமி சொன்னதைத்தான் மக்கள் கருத்தென உச்சிக்குடுமி மன்றம் ஏற்றுக்கொள்ளப் போகிறது. மேலும் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று பாசிச ஜெயாவும் கோரியிருக்கிறார். வானரங்கள் கையால் மண்ணை அள்ளிப் பாலம் போட்டார்கள் என்ற பொய்யெல்லாம் ஒரு நாட்டின் தேசிய சின்னமென்றால் இந்தியாவை இனி முட்டாள்களின் தேசமென்றும் அழைக்கலாம்.

கேபிபி சாமி திமுகவிலிருந்து விலகத் திட்டம்?- கனிமொழி மூலம் சமாதானம்??

 Former Dmk Minister Kpp Samy Set Desert Party சென்னை: முன்னாள் அமைச்சர் கேபிபி சாமி கைதாகி பல நாட்களாகி, அவர் சிறையில் அடைபட்டுள்ள நிலையில் திடீரென அவர் மீது திமுக தரப்பில் பரிவு காட்டப்படுவது பலரையும் குழப்பியுள்ளது. ஆனால் அவர் திமுகவிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்தே அவர் மீது திமுக தலைமை திடீரென பரிவு காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லத்துரை, வேலு ஆகியோர் கடந்த 2006ம் ஆண்டு மாயமானயினர். அவர்களை அப்போதைய திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி, அவரது தம்பி சங்கர் ஆகியோர் அடியாட்கள் மூலம் கடத்தி கொலை செய்ததாக இருவரின் மனைவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கே.பி.பி.சாமி, அவரது தம்பி சங்கர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டின் சிறையில் இருந்து விடுதலை!

கோவை: லாட்டரி அதிபர் மார்ட்டின் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
கோவையை சேர்ந்த மார்ட்டின் மீது நில அபகரிப்பு, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை உள்பட அடுத்தடுத்து 14 வழக்குகளை போலீசார் தொடர்ந்தனர். இந்த 4 வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்பு, இவர் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தை பாய்ச்சி மீண்டும் கைது செய்தனர்.

சொல்ல சொல்ல கேட்காமல் சென்னையில் 4 வழித் தடங்களில் மோனோ ரயில் திட்டம்!

 Chennai Mono Rail Project Be Implemented

இன்னும் தன் கணவரின் காதலை முழுமையாக பெறவில்லை வெண்ணிலா.

நிலவைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். அப்படியிருக்க; ஒரு கவிஞரின் பெயரே வெண்ணிலா.
அ.வெண்ணிலா என்கிற அந்தக் கவிஞரின் பெயரைக் காணும்போதெல்லாம் ஓ! நிலவுக்கே இனிசியல் இருக்கே என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த வெண்ணிலாவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம். கவிஞர் மு.முருகேஷின் கரம் பிடித்த அவருக்கு இப்போது மூன்று நிலாக்கள். (பெண்ணுக்கு நிலா, ஆணுக்கு சூரியன் என்பதுதானே பொதுவில் இருக்கு )
கவிஞர் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், கட்டுரை ஆசிரியர் என்ற பன்முகங்கள் கொண்டவர் வெண்ணிலா. மிக முக்கியமாக பாடம் புகட்டும் ஆசிரியர் என்கிற முகமும் இருக்கிறது.
வசித்து வரும் வந்தவாசியிலிருந்து அவர் தொலைபேசி வாயிலாக தனது வாழ்வை வாசித்தார். இதோ - சென்னையில் பதிவான வெண்ணிலாவின் வெளிச்சம்.
நவீன இலக்கியத்தளம் விட்டு இடம்பெயரும் எண்ணமில்லையா?

தற்செயலாக கிடைத்த 100 ஆண்டு பழைய இந்திய போட்டோக்கள்!


Viruvirupu 100 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைக் காட்டும் 178 போட்டோ நெகடிவ்கள், தற்செயலாக ஒரு ஷூ பாக்ஸில் இருந்து கிடைத்துள்ளன.
எடின்பாரோ (ஸ்காட்லாண்டு) நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில் பழைய பொருட்களை தேடும்போது கிடைத்த பெட்டிக்குள், சுமார் 100 வருடங்கள் கைபடாத நிலையில் கிடைத்துள்ள கிளாஸ்-பிளேட் நெகட்டிவ்கள் (plate-glass negatives) இவை.
தற்போது தற்செயலாக ஸ்காட்லன்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த போட்டோ நெகடிவ்களை இந்தியா உரிமை கோரலாம் என்று ஸ்காட்டிஷ் அதிகாரி ராபர்ட் என்ட்லேவர் கூறியிருக்கிறார். இவர் கூறியதை மறுத்துள்ள மற்றொரு அதிகாரி, நெகடிவ்வில் உள்ள காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டவை என்றாலும், நெகடிவ், ஸ்காட்டிஸ்காரர் ஒருவருக்கு சொந்தமானது என்கிறார்.

Kanimozhi:சென்னை சங்கமம்' தற்காலிகமாகத் தான் ஒதுக்கப்பட்டுள்ளது

கட்சிக்காரர்களின் ஆரவார வரவேற்பின்றி, புழல் மத்திய சிறைக்கு தனியே வந்த எம்.பி., கனிமொழி, கொலை வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரை சந்தித்த பின், "எத்தனை வழக்குகள் போட்டாலும் தி.மு.க.,வை ஒடுக்கி விட முடியாது' என்று தெரிவித்தார்.

தி.மு.க., ஆட்சியின் போது, திருவொற்றியூரில் நடந்த மீனவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, கடந்த 6 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி நேற்று சந்தித்தார்.

ஜெயலலிதா: வரவேற்பு வளைவு வைத்து சாலைகளை தோண்டாத அரசு

சென்னை: ""நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, எந்த அரசு விழாவுக்காகவும், வரவேற்பு வளைவுகள் வைக்கப்படவில்லை; சாலைகளும் சேதப்படுத்தப்படவில்லை,'' என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான பொது விவாதம்:
ஆறுமுகம் - இந்திய கம்யூனிஸ்ட்: போக்குவரத்துத்துறை தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கு பெறும் தொழிற்சங்கம் குறித்து, கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

மேற்கு வங்கத்தில் அமெரிக்க முதலீடு: மம்தாவை சந்தித்த ஹிலாரி

அரசுமுறைப் பயணமாக, கோல்கட்டா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, மேற்கு வங்கத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சுற்றுலா, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில், அமெரிக்க நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் என, ஹிலாரி உறுதி அளித்ததாக, மம்தா கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் கோல்கட்டா வந்தார். தன் பயணத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திப்பதற்காக, கோல்கட்டாவில் உள்ள தலைமைச் செயலக அலுவலகமான "ரைட்டர்ஸ் பில்டிங்'கிற்கு நேற்று காலை 11 மணிக்கு வந்தார்.

திங்கள், 7 மே, 2012

வழக்கு எண்18/9.ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவிட்டது.

நிஜத்திலும் நெகிழ்ச்சி!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை(04.05.12) ரிலீஸான படம் வழக்கு எண்18/9. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவிட்டது. கோடம்பாக்கத்து இயக்குனர்கள் பலரும் இந்திய தரத்திற்கு ஒரு படம் என்று இந்த படத்தை பாராட்டியுள்ளனர். குடும்பம் குடும்பமாக சென்று வழக்கு எண் 18/9 படத்தை பார்த்து ரசிக்கின்றனர் ரசிகர்கள். இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.பாலாஜி சக்திவேல் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்ட, இயக்குனர் லிங்குசாமி தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். பாலாஜி சக்திவேல் சாமுராய், காதல், கல்லூரி ஆகிய படங்களை இயக்கினார்.  வழக்கு எண் 18/9 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்று(07.05.12) இந்த படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வழக்கு எண் 18/9 படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது ”நான் எடுத்த இந்த படம் வெற்றியடைந்ததற்கு லிங்குசாமியும் ஒரு காரணம். படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி என்ற வார்த்தையை சொல்ல விரும்பவில்லை. இப்போது நான் இங்கு செய்யப்போகும் செயல் சரியா? தவறா? எனத் தெரியவில்லை” எனக் கூறி லிங்குசாமியை பத்திரிக்கையாளர்கள் அருகில் அழைத்து,  அனைவரது காலிலும் சாஷ்ட்டாங்கமாய் விழுந்து வணங்கினார்.படத்தில் அனைவரது நெஞ்சையும் கனக்கச் செய்த பாலாஜி சக்திவேல் படத்தின் சக்சஸ் மீட்டிலும் அதை செய்யத் தவறவில்லை.

அமிர்கானின் ரியாலிட்டி ஷோ Super HIT

ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடத்தும் 








‘சத்ய மேவ ஜெயதே’ ரியாலிட்டி ஷோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
பாலிவுட் நடிகர்கள் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறுவது புதிதல்ல. அமிதாப்பச்சன், சாருக்கான், சல்மான்கான், ஹிருரித் ரோஷான் போன்றவர்கள் வரிசையில் அமீர்கானும் இணைந்துள்ளார். சத்ய மேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியின் வழியாக அவரும் சின்னத்திரையில் தோன்றியுள்ளார்.

முல்லைப் பெரியாறு:நீதிபதி கே.டி.தாமஸ் கேரளாவிற்கு துரோகம் விட்டாராம்

முல்லைப் பெரியாறு தீர்ப்பு  தமிழகத்திற்கு ஆதரவாக வந்துள்ளது என்றும் கேரளாவை சேர்ந்த நீதிபதி கே.டி.தாமஸ் கேரளாவிற்கு துரோகம் செய்து விட்டார் என்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சரான பி.ஜே.ஜோசப், கடுமையாக விமர்சித்து கேரள மக்களை நீதிபதி தாமசுக்கு எதிராக தூண்டி விட்டுள்ளார்.
  முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆராய முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அதில் தமிழகம் சார்பாக முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நீதிபதி தாமஸ்,
“அறிக்கையில் திருப்தி இல்லை என்றால் அதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் ஐவர் குழு மூலம்தான் புகார் தெரிவிக்க வேண்டும். ஜோசப் சொல்வதைக் கேட்டு்ச செய்வதற்காக என்னை உச்சநீதிமன்றம் நியமிக்கவில்லை. ஜோசப் கட்டுப்பாட்டோடு பேச வேண்டும்.

காதலிக்காமலேயே காதல் அதாவது, காதல் காட்சிகள் இல்லாமலேயே

கல்லூரிக்கு மேலே காதலுக்குக் கீழே

பண்ணையார் மகளை பண்ணையாள் காதலிப்பது… மதம் மாறிக் காதலிப்பது… காதலி அல்லது காதலனுக்கு உலகிலேயே தீர்க்க முடியாத நோய் வந்துவிடுவது… பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல், இறந்து போன காதலனின் கண்ணைப் பொருத்திக் கொண்டவன் மேல் காதல், காதலுக்காக வெட்ட முடிந்ததையெல்லாம் வெட்டுதல் என தமிழ் திரையுலகத்தினரிடம் மாட்டிக்கொண்டு காதல் படும் பாடு இருக்கிறதே… அனுபவித்தால்தான் புரியும். ஆனால், இந்த காக்கைக் கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டு தவிக்கும் சிறு குயிலாக ஒருவர் உண்டு. அவர்தான் பாலாஜி சக்திவேல்.
காதலை இதுவரை யாருமே சொல்லியிராத கோணத்தில் சொல்லவேண்டும் என்பதுதான் பாலாஜி சக்திவேலின் லட்சியமும் கூட. இந்தப் படத்தில் காதலிக்காமலேயே காதல் அதாவது, காதல் காட்சிகள் இல்லாமலேயே காதல் என்ற புதுமையான பாணியில் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

காற்றாலை மூலம் ஒரே நாளில் 2,500 மெகாவாட்

தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் ஒரே நாளில் 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. இது புதிய சாதனை ஆகும். இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.

 இங்கு 1980-ம் ஆண்டு முதலாவது காற்றாலை நிறுவப்பட்டது. இப்போது 10,882 காற்றாலைகள் உள்ளன. இவற்றின் மொத்த மின் உற்பத்தி திறன் 6,996 மெகாவாட் ஆகும். ஆனாலும், தொழில்நுட்ப கருவிகளின் பற்றாக்குறை, விநியோகத்தில் உள்ள பிரச்சினை ஆகியவை காரணமாக கிட்டத்தட்ட 3,500 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்ய முடியும்.  எனினும், இந்த உயர் அளவை ஒருபோதும் எட்டியதில்லை.கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்ச் 24 -ந் தேதி அதிகபட்ச அளவாக 2,300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

புதுக்கோட்டையில் அதிமுக அதிர்ச்சி சிபிஎம் போட்டி?.. திமுக, தேமுதிக, மதிமுக ஆதரவு?

சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக போட்டியிடாமல் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஜகா வாங்கி விட்ட நிலையில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொது கட்சியாக நிறுத்தி அக்கட்சிக்கு திமுக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
புதுக்கோட்டைக்கு ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மே 18ம்தேதி தொடங்குகிறது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்.

Khushboo:கேரளாவில் 100% கல்வியறிவு இருந்து என்ன புண்ணியம்?

Women Should Empower Themselves First
 
கேரளாவில் 100 சதவீத கல்வியறிவு உள்ளது. ஆனால் எத்தனை படித்த பெண்கள் வேலையில் இருக்கிறார்கள், வேலை பார்க்கும் தகுதியுடன் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலானோர் இல்லை என்பதே வியப்புக்குரிய பதிலாக உள்ளது என்று கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு.
கொச்சிக்கு வந்திருந்த குஷ்பு, அங்கு நிர்வாகவியல் மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இட ஒதுக்கீட்டைக் கோருவதற்கு முன்பு, தங்களைத் தாங்களே முதலில் சக்தி பெற்றவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

மதுரை ஆதீனம், நித்தியானந்தாவுக்கு வழங்கிய சுப்ரீம் சிவில் ரைட்ஸ்!

Viruvirupu “நித்தியானந்தா தமது இளவலாகி விட்டதால், இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவராகி விட்டார் என்கிறார். 
மதுரையில் இளைய ஆதீனமாக யாரை அறிவிக்க வேண்டும் என்ற அதிகாரம் எனக்கு மட்டும்தான் உள்ளது. அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது. யாருக்கும் அந்த உரிமை கிடையாது” என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சுவாமிகள்.
அந்த அதிகாரத்தை வைத்து இவர் இளைய ஆதீனமாக அறிவித்த நித்தியானந்தா விவகாரமே தற்போது இடியாப்ப சிக்கலாகி உள்ளது. மதுரை ஆதீனத்தின் இந்தச் செயலுக்கு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மடங்களின் மடாதிபதிகளும், இந்து மதத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்.

சீதனம் அனுகூலமானதாம்! - Jaffna university எஸ்.சந்திரசேகரம்

newsசீதனம் அனுகூலமானதாம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகரம்

யாழ். மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு சீதனம் அனுகூலமானதே! - பொருளியல் விரிவுரையாளர்
தற்போதும் காணப்டும் சீதன நடை முறைகள் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு அனுகூலமானது என யாழ்.பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். 

Hillary Clinton கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்

கொல்கத்தா, மே - 7- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வந்தார். வங்காளதேச சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று  மேற்குவங்க மாநில தலைநகரான கொல்கத்தாவுக்கு தனி விமானம் மூலம் வந்து சேர்ந்தார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கொல்கத்தா வந்த அவருக்கு  கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

துக்ளக் ராமசாமி..கலைஞர்..ஜெயலலிதா..இலங்கை

எதைக் கொண்டு; இதைப் பார்ப்பது?கலைஞர் கடிதம் (4.5.2012)

தி.மு.க. தலைவர் கலைஞர் முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:-
உடன்பிறப்பே, துக்ளக் ராமசாமியார்; இலங்கைப் பிரச் சினையில்  தி.மு.க.வின் நிலை என்ன? என்ற ஒரு கேள்விக்கு 2-5-2012 தேதிய  இதழில்,  தி.மு.க.வின் இலங்கைப் பிரச்சினை நிலை கெலிடாஸ்கோப்  மாதிரி, ஒவ்வொரு அசைவுக்கும் நிறம் மாறும், டிசைன் மாறும் என்றெல்லாம் பதில் அளித்து,  அதற்கு  நமது விடுதலை நாளிதழில்  சிறப்பானதோர் பதிலை தலையங்கமாகவே தீட்டியிருக்கிறார்கள்.

Andhra வில் ஜனாதிபதி ஆட்சி? இடைத்தேர்தலில் காங்., தோல்வி அடைந்தால் நிச்சயம்

ஆந்திராவில் நடைபெறவுள்ள 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அங்கு ஜனாதிபதி ஆட்சி நிச்சயம் அமலாகும் என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகனின் கடும் சவாலால், காங்கிரஸ் தலைவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஆந்திர சட்டசபையில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதற்கு ஆதரவாகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், 17 பேர் ஓட்டளித்தனர். இவர்கள் எல்லாம், ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள்.

France Sarkozhy தோல்வி ஹோலன்டா புதிய அதிபரானார்

பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் சர்கோசி தோல்வியடைந்தார். இதனையடுத்து புதிய அதிபராக ஹோலன்ட் பதவியேற்க உள்ளார்

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, கடந்த மாதம் 22ம் தேதி, அதிபர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், சர்கோசி இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட் கட்சி சார்பில், பிராங்காய்ஸ் ஹோலன்ட் போட்டியிடுகிறார். முதல் கட்ட தேர்தலில் வேட்பாளராக 10 பேர் களத்தில் இருந்தனர்.முதல் கட்ட தேர்தலில், 50 சதவீத ஓட்டுகள் யாருக்கும் கிடைக்காத நிலையில், நேற்று இரண்டாவது கட்ட தேர்தல் நடந்தது.