சனி, 8 பிப்ரவரி, 2014

வடுவூர் சரணாலயத்திற்கு 24,000 பறவைகள் வருகை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மூலிகை ஆராய்ச்சித்துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியன் தலைமையில் 15 மாணவர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இதில் நாமக்கோழி, ஊசிவால் நாத்து, அரிவாள் மூக்கன், கூலக்கடா, ஜக்கானா, முக்குளிப்பான், பெரிய நீர் காகம், உன்னி கொக்கு, வக்கான் உள்பட 24 வகை வெளிநாட்டு பறவைகள் 24 ஆயிரத்திற்கும் அதிகமாக சரணாலயத்திற்கு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு 11 ஆயிரத்திற்கும் குறைவான பறவைகள்தான் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது. தற்போது பறவைகள் வருகை அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் தண்ணீர் இருப்புதான்.

U P : மாண்புமிகு எருமை மாடு ! ஆஸம் கான் ! மந்திரியின் எருமைகளை தேடி அலைந்த தனிப்படை போலீஸ்

முசுலீம்களின் வாக்குகளை வாங்கி அமைச்சரான ஆஸம் கானின் எருமைகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை.
ஆஸம் கான்"

கடந்த ஜனவரி 31-ம் தேதி, உத்திர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆஸம் கானின் பண்ணை வீட்டுக்குள் நுழையும் கள்வர்கள், அவருக்குச் சொந்தமான ஏழு எருமைகளை ஓட்டிச் சென்றுள்ளனர். தனது பிரியத்துக்குரிய மாடுகள் களவாடப்பட்டதை அறிந்த அமைச்சர் பதறிப் போயிருக்கிறார். நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவும் இருந்தாலும் தன்னுடைய எருமைகளுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை எண்ணிக் கொந்தளித்துள்ளார். அமைச்சரின் நியாயமான கொந்தளிப்பு காவல்துறையையும் தொற்றிக் கொண்டுள்ளது. மழை பெய்தாலும் கண்டு கொள்ளாத எருமை மாடுகளைப் போலன்றி அதிகார வர்க்கம் அலறிக் கொண்டு களத்தில் இறங்கியது.
உடனடியாக ஐந்து போலீசு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. ராம்பூர் மாவட்ட போலீசு சூப்பிரெண்டு சாதனா கோஸ்வாமி ஒரு படையையும், துணை கமிஷனர் தேவேஷ் பாண்டே ஒரு படையையும், டி.எஸ்.பி அலெய் ஹஸ்ஸன் ஒரு ப்டையையும் தலைமை தாங்கி வழி நடத்தியுள்ளனர். ஆக இரண்டு எருமைகளுக்கு ஒரு படை. ஜீவகாருண்யத்தில் இனி வள்ளலாருக்கு போட்டி ஆஸம் கான்தான். என்னே ஒரு எருமை பக்தி!மந்திரியின் எருமைகளை தேடி அலைந்த தனிப்படை போலீஸ்  

நடுரோட்டில் விஜயகாந்த்? கை கழுவும் கட்சிகள்.? நாதியற்று விடப்படுகிறார் ?


சென்னை: 'டிமாண்ட்' இருக்கிறதே என்பதற்காக ஓவராக முறுக்கிக் கொண்டே போனால் தேமுதிக நடுத்தெருவில் கேட்பாரற்றுதான் விடப்படும் நிலை உருவாகி உள்ளது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தேமுதிக உருவெடுத்தது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக உதவியுடன் சட்டசபை எதிர்க்கட்சியாகவும் வளர்ந்தது. ஆனால் சட்டசபை எதிர்க்கட்சியாக வளர்ந்த தேமுதிக, அடுத்த நிலைக்கு நகருவதற்கு முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இதைத்தான் கடந்த இரு ராஜ்யசபா தேர்தல் நிலைப்பாடுகளும் வெளிப்படுத்தின.
டெல்லியில் போய் போட்டியிட்டு 100,200 வாக்குகள் என மொத்தமே 2 ஆயிரம் வாக்குகளைப் பெற்று போட்டியிட்ட இடங்களிலெல்லாம் டெபாசிட்டை பறிகொடுத்தது தேமுதிக. லோக்சபா தேர்தலிலும் அனேகமாக இந்த கதிக்குத்தான் தேமுதிக ஆளாகுமோ என்பதை அக்கட்சியி தொடரும் நிலைப்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக என். சீனிவாசன் தேர்வு


கோலாலம்பூர்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கும் என்.சீனிவாசன் ஐ.சி.சி. தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஜூலை மாதம் அவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது. இன்றைய கூட்டத்தில் ஐ.சி.சி.யின் மறு சீரமைப்புக்கு ஒப்புதல் பெறப்பட்டது. 8 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் இலங்கை, பாகிஸ்தான் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன. மறு சீரமைப்பு ஒப்புதல் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளும் முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெறுகிறது. மேலும் இந்த 3 நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐ.சி.சி.யின் நிதியை அதிகமாக பெறும்.
tamil.oneindia.in

Andrea : லண்டனில் செட்டில் ஆகிவிட்ட இந்தியராக இருக்கவேண்டும்.

நடிகை, பாடகி, மாடல் என பலவகைகளில் திரையுலகுடன் நெருக்கமாக இருக்கும் ஆண்ட்ரியா, அவ்வப்போது கிசுகிசுவுக்கும் நெருக்கமாகிவிடுவார்.ஆண்ட்ரியாவிற்கு அனிருத் அடித்த லிப்-டூ-லிப் கிஸ்ஸிலிருந்து, சமீபத்தில் ஃபஹத் ஃபைசல் அடித்த கிஸ் வரை அனைத்தும் திரையுலகினரால் பேசப்பட்டது தான். சமீபத்தில் ஆண்ட்ரியா கலந்துகொண்ட ஒரு பேட்டியில் ‘நீங்கள் யாருடன் லிப்-லாக் கிஸ் அடிக்க ஆசைப்படுகிறிர்கள்?’ எந்த மாதிரியான கணவன் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்ட்ட கேள்விகளுக்கு ஆண்ட்ரியா “நான் இந்தி நடிகர் ரன்பீர் கபூருடன் லிப்-லாக் காட்சியில் நடிக்க ஆசைப்படுகிறேன். ரன்பீர் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானவர் இல்லையென்றாலும், அவரிடம் ஒரு அழகு இருக்கிறது. எனக்கு கணவனாக வரப்போகிறவர் லண்டனில் செட்டில் ஆகிவிட்ட இந்தியராக இருக்கவேண்டும். திருமணத்திற்குப் பிறகு நான் அவரோடு அங்கேயே இருந்துவிடுவேன்” என்று கூறியுள்ளார்

தங்கசாலை மேம்பாலத்தை திறக்க கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம் ! திமுக கட்டியதை திறக்கவிடாத ஜெயலலிதா


தங்கசாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப்பாதை ஆகியவற்றை திறக்க கோரி தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சேகர்பாபு, ஆர்.டி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:–
வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ. 23 கோடி செலவில் தங்கசாலை மேம்பாலம் கட்ட 2009–ம் ஆண்டு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதேபோல் ரூ. 15.76 கோடியில் ஸ்டான்லி சுரங்கப்பாதை அமைக்கவும் அடிக்கல் நாட்டினார். கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறப்பதற்கு மாநகராட்சியும், அரசும் காலம் தாழ்த்தி வருகிறது.
தங்கசாலை மேம்பாலம் 100 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டப்பட்டது. இதை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும்.

ஆராய்ச்சித் துறையில் இந்தியா அமெரிக்கா, சீனாவை விட மிகவும் பின்தங்கி உள்ளது

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய அறிவியல் மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைக்கு உலக அளவில், 2011-ல், 14,350 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டன.
இத்தொகையே தற்போது வரை நீடிக்கிறது.
2001-ஆம் ஆண்டுடன் (7530 கோடி டாலர்கள்) மொத்த முதலீட்டை ஒப்பிடும்போது சராசரியாக 6.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

1.50 லட்சம் கோடியாக உயரும் ஏற்றுமதி ! முட்டை, இறைச்சிப் பொருள்கள் !

முட்டை, இறைச்சி உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருள்களின் ஏற்றுமதி நிகழ் நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக, மத்திய அரசின் வேளாண், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி வாரியத்தின் ("அபிட்டா') செயலர் சந்தோஷ் சாரங்கி தெரிவித்தார். "அபிட்டா' சார்பில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் தீவன பரிசோதனை தர நிர்ணய மையத்துக்கு ரூ.4.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் ஏற்றுமதிக்கான கோழி முட்டை, இறைச்சிப் பொருள்களில் அடங்கியுள்ள வேதிப் பொருள்களைக் கண்டறிய நவீன இயந்திரம் நிறுவப்படுகிறது. இதன்மூலம், ஏற்றுமதிக்கான முட்டை, பால், இறைச்சிகளில் அடங்கியுள்ள வேதிப் பொருள்களை கண்டறிந்து, அவற்றைத் தடுக்க முடிவதால் இறக்குமதி நாடுகள் இந்திய உணவுப் பொருள்களை ரத்து செய்வதைத் தவிர்க்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நிறுவப்படும் நவீன இயந்திரத்தை அபிட்டா செயலர் சந்தோஷ் சாரங்கி, பொது மேலாளர் தருண் பஜாஜ் ஆகியோர் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.

குழந்தைக்காகவும் கல்விக்காகவும் காலமெல்லாம் அழுத MGR


எம்.ஜி.ஆரின் அன்புத் துணைவியார் சதானந்தவதி அம்மையார் காலமாகிவிட்டார் என்ற செய்தி கிடைத்த உடனே எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு தேவரண்ணன், அவருடைய தம்பி இயக்குனர் திருமுகம், இன்னொரு தம்பி மாரியப்பன், நான் ஆகியோர் எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு விரைந்தோம். வீட்டின் நடுக்கூடத்தில் எம்.ஜி.ஆர். சோகத்துடன் சோர்ந்து அமர்ந்திருந்தார். அவரைச் சூழ்ந்து சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி மற்றும் எல்லா நடிகர்களும், திரை உலகப் பிரமுகர்கள் பலரும் இருந்தனர். அரசியல் சார்ந்த பிரமுகர்களும் திரண்டு வந்து ஆங்காங்கே வீட்டின் உள்ளேயும், வெளியிலுமாக நின்று கொண்டிருந்தனர்.

மோடி : இந்துக்களும் முஸ்லீம்களும் ரதத்தின் இரண்டு சக்கரங்கள் !


நாட்டின் வளர்ச்சிக்கு மக்களிடையே ஒற்றுமை இருப்பது அவசியம் என்று குஜராத் முதல் மந்திரியும் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் முஸ்லீம்களின் வர்த்தக கண்காட்சியை குஜராத் முதல் மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி  துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் தெரிவித்தாவது:- இந்துக்களும் முஸ்லீம்களும் வளர்ச்சியின் இரண்டு சக்கரங்கள் போன்றவர்கள்.நாட்டில் நிலையான வளர்ச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவசியம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு எல்லோருடைய பங்களிப்பும் அவசியம்.வளர்ச்சியை வேகமாக கொண்டுவரவேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டில் 24 மணி நேர மின்சார வினியோகம்  அவசியம்.கடந்த 20 ஆம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் வளர்ச்சியை காணமூடிகிறது.சிறிய விஷயங்களில் ஏற்படும் மாற்றம் பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

கேப்டனின் அல்லது தினமலரின் கனவு கூட்டணி கணக்கு

'பிரதமர் கனவில் உள்ள ஜெயலலிதாவை, வீழ்த்தும் வகையில், தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., இடையே கூட்டணி அமைய வேண்டும்' என, விஜயகாந்த் விரும்புகிறார். இதுதொடர்பாக, சில யோசனைகளையும், அந்தக் கட்சிகளின் தலைமைக்கு தெரிவித்து உள்ளார் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தலுக்கு, விஜயகாந்தின் தே.மு.தி.க., உடன் கூட்டணி அமைக்க, பா.ஜ.,வும், தி.மு.க.,வும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனாலும், கூட்டணி தொடர்பாக, உறுதியான முடிவு எதையும் அறிவிக்காமல், இரு கட்சிகளுக்கும், போக்கு காட்டி வருகிறார் விஜயகாந்த்.காரணம் என்ன?அதேநேரத்தில், லோக்சபா தேர்தலில், ஜெயலலிதாவை வீழ்த்தி விட வேண்டும் என்பதில் குறியாக உள்ள விஜயகாந்த், தேர்தல் கூட்டணி தொடர்பாக, புதுகணக்கு ஒன்றை போட்டு வருகிறார். அதுவே, அவரின் கூட்டணி அறிவிப்பு வெளியாக, தாமதமாவதற்கு காரணம் என, அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கலைஞர்: அரிசிக்கு சேவை வரி ! ஆனால் கோதுமைக்கு NO சேவை வரி ! ஏன் இந்த வடக்கு தெற்கு பாரபட்சம் ?

அரிசிக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை, மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவரது அறிக்கை:மத்தியில் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்போருக்கு, விரைவில் லோக்சபா தேர்தல் வரப்போகிறது என்ற உணர்வே, அற்றுப் போய்விட்டது போலும். அந்த அளவிற்கு பொதுமக்கள் விரும்பாத, ஏற்றுக்கொள்ள இயலாத அறிவிப்புகள், என்னென்ன உண்டோ அவற்றையெல்லாம், தொடர்ந்து சவால் விட்டுச் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் ஒன்றாக, தென்னக மக்களின் அடிப்படை உணவான அரிசிக்கு, வரி விதித்துள்ளனர். அதற்கு பெயர் சேவை வரியாம். சேவை என்றால் என்ன என்பதற்கு, புதிய அர்த்தத்தை மத்திய அரசு கண்டு பிடித்திருக்கிறது.அரிசியை, வேளாண்மை விளை பொருள் பட்டியலில் இருந்து நீக்கிய நிதித்துறைச் சட்டம், கோதுமையை மட்டும் அப்படி நீக்கிவிடாமல், 'வேளாண்மை விளைபொருள்' எனச் சொல்லி, அதற்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது.ஏன் இந்த வடக்கு தெற்கு பாரபட்சம்; கோதுமைக்கு மட்டும் வரி விலக்கு; அரிசிக்கு கிடையாதா?

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் மீது மனைவி புகார் !

திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சுப்ரமணியபுரம்,ஈசன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவரும்,தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபாற்றுபவர் ஜேம்ஸ்வசந்தன்.இவரது மனைவி சுகந்தி இன்று அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கும் கடந்த 1991-ல் திருச்சியிலுள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. 23 வருடங்கள் ஆகிவிட்டது. எங்களுக்கு ஷில்பா என்ற மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளனர். ஆனால், எனது கணவன் ஜேம்ஸ் வசந்தனுக்கு அதிக பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததால் எங்களுக்குள் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்தது. வி.ஜி.பி. பிரசாத் தாஸின் முன்னாள் மனைவி ஹேமலதாவுடன் தவறான தொடர்பு வைத்திருந்த அவர் தற்போது தனது மனைவி என்று வெளிப்படையாக சொல்லி வருகிறார்.
உண்மையான மனைவி நான் உயிரோடு இருக்கும்போது என்னிடம் விவாகரத்தும் வாங்காத நிலையில் வேறொரு பெண்ணை மனைவி என்று எனது கணவன் ஜேம்ஸ் வசந்தன் சொல்லிவருவது எனக்கு கடுமையான மன உளைச்சலை உண்டாக்குகிறது. இதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். கண்கள் இரண்டால் என்ற இவரது பாடல் இவரை புகழின் உச்சிக்கு  விட்டது. இப்பாடல் ரீதிகௌல  ராகத்தில் அமைந்துள்ளது 

சவுதியில் ஆண் மருத்துவரை சிகிச்சைக்கு அனுமதிக்காததால் கல்லூரி மாணவி மரணம்

The family of a female Saudi student who died from heart failure said ... sections of restaurants and cafes where single males are not allowed to entமத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய விதிகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அங்குள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மகளிருக்கென தனியான ஒதுக்கீடுகளே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உணவகங்களில் உள்ள குடும்பத்தினருக்கான பகுதிகளிலும் பெண்களுக்கென தனி வழிகள் உண்டு. பெண்கள் வரும் இடங்களில் தனியாக வரும் ஆண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. அந்நாட்டின் உயர் மதகுரு இரு பாலினத்தவரும் கலந்து பழகுவதென்பது பெண் கற்பு மற்றும் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய தீவிரக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் அந்நாட்டின் ரியாத் நகரில் உள்ள கிங் சாத் பல்கலைக்கழகத்தில் மகளிருக்கான வளாகத்தில் கடந்த புதன்கிழமை அன்று அம்னா பவசீர் என்ற மாணவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவசரகாலத்தில் உதவும் ஆண் மருத்துவ ஊழியர்களை பெண்கள் வளாகத்தின் உள்ளே விடுவதற்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே அவர்கள் அனுமதி அளித்ததாகவும் அதற்குள் அந்தப் பெண் இறந்துவிட்டார் என்றும் பத்திரிகை தகவல் வெளிவந்தது.

சுமங்கலி திட்ட மோசடியால் கொத்தடிமைகளாக்க பட்ட சுமார் இரண்டு லட்சம் இளம்பெண்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை ?


  • தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கிராமப்புற பெண்கள் பெருமளவில் வேலைசெய்யும் துறையாக பஞ்சாலை இருக்கிறது.  இந்த தொழிற்சாலைகளில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பெண் தொழிலாளர்கள்.  கேம்ப்கூலி திட்டம், மாங்கல்யத்திட்டம், திருமகள் திருமணத்திட்டம் என்று பல்வேறு பெயர்களில் சுமார் இரண்டு லட்சம் வளர் இளம் பருவப்பெண்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள்.இத்தகைய தொழிற்சாலைகளில் பனியாற்றும் பெண்கள் மிகக்குறைந்த ஊதியம், கட்டாய வேலை, கல்வி மறுப்பு, பணிப் பாதுகாப்பின்மை, கூடுதல் வேலைப்பளு, வாரவிடுப்பு வழங்கப்படாமை, பாலியல் தொல் லைகள், மனரீதியான பிரச்சனைகள், உடல்சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்தப்பெண்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது.

சந்தர்ப்பவாதத்தில் சாதனை படைக்கும் பாசிச மோடி

நரேந்திர மோடிகடந்த புதன்கிழமை 5.2.2014 அன்று கொல்கத்தாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். “இடதுசாரி கோட்டைக்குள் மோடி அதிரடி பிரவேசம் – கம்யூ, திரிணாமுல் கலக்கம்” என்பதாக தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் இந்த கூட்டத்தைக் கொண்டாடின. மம்தா போன்ற மேற்கு வங்கத்து ஜெயாக்களையே பிரவேசிக்க வழியேற்படுத்திய போலிக் கம்யூனிஸ்டுகளது மாநிலம் மோடிக்கும் மட்டும் அருள்பாலிக்காதா என்ன?

கொல்கத்தாவில் மோடி நிச்சயமாக திரிணாமுல் கட்சியைப் பார்த்து கலங்கியிருக்கிறார்.
ஆனால் தினமலர் கொண்டாடுவது போல மம்தா இந்தக் கூட்டத்தைப் பார்த்து கலங்கினாரோ இல்லையோ மோடி மட்டும் நிச்சயமாக திரிணாமுல் கட்சியைப் பார்த்து கலங்கியிருக்கிறார். இதை நாம் கூறவில்லை, மோடியின் பேச்சே பகிரங்கமாக தெரிவிக்கிறது.
முதலில் மூன்றாவது அணி குறித்து மோடி உதிர்த்த முத்துக்களை பார்ப்போம். சில நாட்களுக்கு முன்புதான் “மக்களவை தேர்தலில் 3-வது அணி குறித்த பேச்சு, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கவே பெரிதும் உதவும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான அருண் ஜேட்லி வஞ்சப்புகழ்ச்சி பாணியில் சோகப்பாட்டு பாடியிருந்தார்.

கோச்சடையான் + அமிதாப் பச்சனின் ‘பூத்நாத் ரிட்டன்ஸ் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

வடக்க ஒரு வயசான குதிர, தெக்க ஒரு ஓய்ஞ்சு போன கழுதை விட்ட போடப் போவுதுங்கிறதெல்லாம் கொண்டாடுற அளவுக்கு வரலாறுன்னா அவ்வளவு கேவலமாடே?மசாலா: விஜய் டி.வியில் ஒளிபரப்பான மகாராணி, அவள் ஆகிய சீரியலை டைரக்ட் செய்த தாமரைக் கண்ணன் இயக்கும் சினிமாவின் பெயர் சூறையாடல். சூறையாடல் பற்றி டைரக்டர் கூறியதாவது: காதல், காமம், கோபம் இந்த குணங்கள் கொஞ்சம் அபாயகரமானவை அவற்றை சரியாக கையாளாவிட்டால் என்ன நடக்கும்? அவை நம்மையே சூறையாடிவிடும் என்பதுதான் படத்தோட மெயின் லைன்.
மருந்து: இந்த மூணு குணங்களை நாங்க புரிஞ்சிக்கிட்டா சென்டிமெண்ட், செக்ஸ், ஆக்சன்னு மக்கமாரை ஏமாத்தி நீங்க கல்லா கட்ட முடியுமாடே? அது சரிவே, சீரியல் டைரக்டரு சினிமா எடுத்தா கிளிசரின்னு எத்தனை லிட்டரு வாங்குவீரு?

செயற்கை கைகளுக்கு உணர்ச்சி: விஞ்ஞானிகள் சாதனை


A man who lost his arm and was making do with a prosthetic hand has now had his sense of touch restored - the first time this has ever been ...தொடுதல் உணர்வை செயற்கை கைகள் உணரும் வகையிலான கண்டுபிடிப்பை மேற்கொண்டு ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் அறிவியல் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து செயற்கை கைக்கு உணர்ச்சி அளிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
செயற்கை கைகளில் பொருத் தப்படும் சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ள எலக்ட் ரோடுகள், துண்டிக்கப்பட்ட கைகளின் முனையில் இருக்கும் நரம்புகளுடன் இணைக்கப்பட்டு உணர்ச்சிகளை உணரச் செய்கின்றன.இந்த செயற்கை உணர்ச்சிக் கருவி பொருத் தப்பட்ட கைகளின் மூலம், ஒரு பொருளை எடுக்கும்போது, அது மென்மையாக இருக்கிறதா, கடினமானதாக இருக்கிறதா என்பதை உணர முடியும். விபத்துகளில் கைகால்களை இழந்தவர்களுக்கு வரப் பிர சாதமாக இந்த புதிய கண்டு பிடிப்பு அமைந்துள்ளது.

பாலியல் தொழிலாளர்கள்: ATM கேண்டீன், போக்குவரத்து வசதிகளுடன் இடம் வேண்டும்!


ஏ.டி.எம்., கேண்டீன், போக்குவரத்து வசதிகளுடன் இடம் வேண்டும்! பாலியல் தொழிலாளர்கள் பேட்டி!
இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் நலச்சங்கத்தின் (பாலியல் தொழிலாளர்கள் சங்கம்) கருத்தரங்க கூட்டம் சென்னை எழும்பூர் ‘இக்ஸா’ மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கான ஏற்பாட்டினை இந்தியன் சமுதாய நல்வாழ்வு அமைப்பின் செயலாளர் ஏ.ஜே.ஹரிகரன் செய்திருந்தார்.
கருத்தரங்கிற்கு இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் நலச்சங்கத்தின் சங்கத்தின் தலைவர் பி.பேபி தலைமை தாங்கினார். செயலாளர் கே.கலைவாணி, பொருளாளர் பி.என்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் செயலாளர் கே.கலைவாணி பேசியதாவது:-
சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் சங்கத்தை சேர்ந்த 2,312 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 1,800 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

மோடி கூட்டத்தை வைகோ புறக்கணிக்க முடிவு ! தொகுதி பங்கீடு கடும் பிரச்னை ?

10 கேட்டா 5 தான்னு பதில் வருது! வண்டலூர் மோடி கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என வைகோ முடிவு? வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் மதிமுக கூட்டணி வைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் ஜனவரி 1ஆம் தேதி செய்தியாளர்களை அழைத்து தெரிவித்தார்.  இதைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் முரளிதர ராஜ், ராஜ்நாத் சிங், பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோரை வைகோ சந்தித்தார். இரு தலைர்களும் இரு கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
சனிக்கிழமை சென்னை வண்டலூரில் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில், தானும், மதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் பங்கேற்போம் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி அலை வீசுகிறது. இதில் மதிமுக 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று வைகோ பேட்டி அளித்தும், மேடைகளில் பேசியும் வந்தார்.

ஆண்கள் அடித்தால் சட்டப்படி அது குற்றம் இல்லை ! ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்


ஆப்கானிஸ்தானில் மனைவியை கணவன் அடித்தல் அது குற்றம் இல்லை என்று கூறும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாம். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அதையும் மீறி யாராவது சாதிக்க நினைத்தால் அவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் ஆண்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் சகோதரிகளை அடித்தால் அது குற்றமாகாது என்ற ஒரு சட்ட திருத்தம் ஆப்கானிஸ்தான் நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தம் தற்போது ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தத்திற்கு மட்டும் ஒப்புதல் கிடைத்துவிட்டால் பெண்கள் தங்களை கணவர் தாக்கியதாக புகார் கொடுத்தாலும் அதனால் பலனில்லை. எனவே பெண்கள் அடித்தால் அடியை வாங்கிக் கொண்டு வாய் மூடி இருக்க வேண்டிய அவல நிலை ஏற்படும். முன்னதாக பெண்களுக்கு எதிரான கொடுமையை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி குழந்தை திருமணம், பிரச்சனைகளை தீர்க்க பெண்களை விற்பது, வாங்குவது, அடித்து துன்புறுத்துவது, கொடுமை படுத்துவது ஆகியவை குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

ஜெயலலிதா வழக்கில் தி.மு.க.வின் அன்பழகனுக்கு எப்படி நம்மீது சந்தேகம் வரலாம்?


வெள்ளிப் பொருட்கள் எப்போது வந்து சேரும்?
வெள்ளிப் பொருட்கள் எப்போது வந்து சேரும்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானி சிங், தாம் ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக வெளியே கூறப்படுவதை மறுத்திருக்கிறார்.
“ஆனால், தி.மு.க. பொது செயலர் அன்பழகன் மற்றும் அக்கட்சியினர், ஆரம்பத்தில் இருந்தே என்னை சந்தேகக் கண்ணுடன் நோக்குகின்றனர்” என்றும் கூறியுள்ளார் அவர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோதே, அவ்வாறு தன்னிலை விளக்கம் கொடுத்தார், அரசு வழக்கறிஞர் பவானி சிங்.

நேற்று நடந்த விசாரணையில், கோர்ட் கைப்பற்றி வைத்திருந்த ஜெயலலிதாவின் வெள்ளிப் பொருட்களை, பாஸ்கரன் என்ற அவரின் உதவியாளர் பெற்றுச் சென்றது குறித்த விவாதம் நடந்தது.
ஜெயலலிதாவின் உதவியாளர் பாஸ்கரன் 1996-ல் சென்னை நீதிமன்ற அனுமதியுடன் பெற்று சென்ற வெள்ளிப் பொருட்கள் அவை. இரு தினங்களுக்கு முன்புதான், அந்த வெள்ளிப் பொருட்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி அரசு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான விவாதம் நேற்று நடந்தபோது, தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் சார்பில், “அரசு வழக்கறிஞர் பவானி சிங் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிக்கிறார்” என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி சிங் தாக்கல் செய்த மனுவில், “ஆரம்பத்திலிருந்தே என் நேர்மையை அன்பழகன் தரப்பினர் சந்தேகித்து வந்துள்ளனர். என் கடமையை நான் சரியாக செய்கிறேன்” என, குறிப்பிட்டிருந்தார்.

பெரியாரை கேவலப்படுத்திய BJP ராஜா ! திராவிட இயக்கங்களின் மெளனம் கவலை அளிக்கிறது

மிகப் பெரிய அறிவு குறியீடான பெரியார் மீது பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா தொடுத்துள்ள தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் தொடுக்காமல் திராவிட இயக்கங்களின் தலைவர்கள் மெளனம் காத்திருப்பது கவலை அளிக்கிறது என்று எழுத்தாளர் சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
தந்தை பெரியாரை மரியாதைக் குறைவாக ஹெச்.ராஜா பேசியதாக வெளியான வீடியோ பதிவிற்கு எதிராக, வடசென்னை - தென் சென்னை மாவட்டங்களின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனக் கருத்தரங்கத்தை சென்னையில் நடத்தியது.
கருத்தரங்கில், தமுஎகச பொதுச்செயலரான எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசியதாவது:
தந்தை பெரியார் குறித்து மிக மோசமாக பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா பேசியது பெரிய விஷயமல்ல. மிகப் பெரிய அறிவு குறியீடான பெரியார் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் தொடுக்காமல், சம கால அரசியலில், பெரியாரின் கருத்தியலின் வாரிசாக தங்களைக் காட்டிக் கொள்கிற திராவிட இயக்கங்களின் தலைவர்கள் மெளனம் காத்திருப்பதுதான் கவலை அளிக்கிறது.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

போலி என்கவுண்டர் வழக்கில் மோடியின் நண்பர் தப்பிவிட்டார் ! இஷ்ரத் ஜெகான் என்கவுன்டர்: 2-வது குற்றப்பத்திரிகையில் அமித் ஷா பெயர் இல்லை

இஷ்ரத் ஜெகான் என்கவுன்டர் வழக்கில், சிபிஐ தாக்கல் செய்துள்ள 2-வது குற்றப்பத்திரிகையில் அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயர் இடம்பெறவில்லை.
கடந்த 2004-ஆம் ஆண்டு, குஜராத் இளம் பெண் இஷ்ரத் ஜெகான் உள்ளிட்ட 4 பேர் தீவிரவாதிகள் என கூறி போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது போலி என்கவுன்டர் என பின்னர் கூறப்பட்டது, வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் இன்று சிபிஐ 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரஜிந்தர் குமார் மற்றும் அதிகாரிகள் பி. மிட்டல், எம்.கே. சின்ஹா, ராஜிவ் வான்கடே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அவர்கள் மீது பிரிவு 120(பி) கீழ் கொலை, ஆள்கடத்தல், ஆயுதங்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ராஜிந்தர் குமார் ஆயுதங்களை வழங்கிய, முக்கிய குற்றவாளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ, தனது 2-வது குற்றப்பத்திரிகையில் அமித் ஷாவின் பெயரை மட்டும் சேர்க்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷா மோடியின் நெருங்கிய நண்பர் ஆவார்.  போலி என்கவுண்டர் வழக்கில் மோடியின் நண்பர் தப்பிவிட்டார் tamil.thehindu.com/

180 நாட்டு பயணிகளுக்கு Entry Visa விமான நிலையத்தில் விசா!

புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க, வெளிநாட்டினருக்கு விசா வழங்கும் முறையில் எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. சீனா, பாகிஸ்தான், ஈரான், இலங்கை உள்பட 8 நாடுகளை தவிர மற்ற 180 நாடுகளுக்கு இந்த புதிய நடைமுறை பொருந்தும் என மத்திய அமைச்சர் சுக்லா தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த நாட்டின் விசாவை தூதரகங்கள் வாயிலாக முன்கூட்டியே பெற வேண்டும். சில நாட்டவருக்கு சில நாடுகள் விசா வழங்குவதில் சலுகை அளித்து வருகின்றன
இந்த நாட்டை சேர்ந்தவர்கள் முன்கூட்டியே விசா வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சலுகை உள்ள நாட்டின் விமான நிலையங்களிலேயே விசாவை பெற்றுக் கொள்ளலாம். இந்தியா வரும் பின்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விமான நிலையங்களிலேயே விசா வழங்கும் வசதி ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம் தயாரித்து மின்வாரியத்துக்கு விற்பனை ! அதிசயிக்க வைக்கும் விழுப்புரம் விவசாயி


விழுப்புரம் அருகே ஒரு விவசாயி தன் வீட்டில் சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து மின்வாரியத்துக்கு விற்பனை செய்கிறார் என்ற தகவலால் ஆச்சரியமடைந்து அவரை அவர் வீட்டில் 'தி இந்து' சார்பில் சந்தித்தோம்.
விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் கிராமத்தில் கரண்ட் விக்கிறவர் என்ற அடைமொழிப் பெயருடன் அழைக்கப்படும் சுப்புராயலுவை அவரது வீட்டு மொட்டைமாடியில் சென்று பார்த்தோம். சூரிய ஒளி தகடுகளைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்.
அவர் நம்மிடம் பேசியது: மின்தட்டுப்பாட்டால் அவதிப்பட்ட நேரத்தில்தான் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பாக அறிந்தேன். வீட்டுக்கான மின்சாரத்தைத் தயாரிக்க சோலார் நிறுவனங்களை அணுகினேன். அப்போதுதான் “எங்கும் மின் விளையும்...எம்மனையும் மின் நிலையம்” என்ற திட்டத்தின்மூலம் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம்
1200 வாட் திறன் கொண்ட கதிர் மின்னாக்கிகளை என் வீட்டு மொட்டைமாடியில் நிறுவினேன். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ஆகும்.

ஞாநி பதில்கள் :கட்சியில் அழகிரி இருப்பதே ஸ்டாலினுக்கு தேவையற்ற விஷயம்தானே ?

சொர்ணவள்ளி, திருவண்ணாமலை. டெல்லி லஞ்சப் புகார் ஹெல்ப் லைன் தொலைபேசிக்கு 7 மணி நேரத்தில் 4 ஆயிரம் அழைப்புகள் வந்ததாமே ?
 போன் போட்டு என்னைப் பத்தி புகார் சொல்லிடாதீங்கன்னு அதுக்கு லஞ்சம்குடுக்க ரெடியாயிருப்பாங்க இத்தனை நேரம்… அந்தக் கணக்கை எடுத்தா இன்னும் ஏழாயிரம் தேறலாம். புகார் குடுக்க பொதுவா பயப்படற ஜனங்க எண்ணிக்கைதான் எப்பவும் அதிகம். அதைக் கணக்கு செஞ்சா பல ஆயிரம் இருக்கும். மொத்ததுல வந்திருக்கறது பெரு வெள்ளத்துல ஒரு சிறு துளிதான்.

முத்துக்குமார், விழுப்புரம். இனி காங்கிரஸின் எதிர்காலம்? காங்கிரசை அவ்வளவு எளிதில் அழித்துவிடமுடியாது என்பதுதான் யதார்த்தம். நேரு குடும்பம் ஒதுங்கியிருந்த காலத்தில் கூட காங்கிரஸ் அழிந்துவிடவில்லை. வேறு சில கட்சிகளைப் போல அது முற்றிலும் தனி நபரை சார்ந்து இயங்குவதல்ல. வரலாற்று ரீதியாக காங்கிரசுக்கு சில வலிமைகள் இருக்கின்றன. சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட பிரிவினரும் அதில் சேர்ந்து இயங்கமுடியும் என்பது விடுதலைப் போர் காலத்தில் ஏற்பட்ட அடையாளம். அந்த வலிமை அதற்கு இன்னும் தொடர்கிறது. காங்கிரஸ் கொஞ்சம் திருந்தினால் கூட பழைய வலிமையை அடைந்துவிடும். திருந்துமா என்பதுதான் கேள்வி.

நடிகை ஷர்மிளா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

நடிகை ஷர்மிளா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் அலுவல கத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ’நான் ‘கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம், முஸ்தபா, இவன் வேற மாதிரி’ போன்ற 52 படங்களில் நடித்துள்ளேன். நடிகர்கள் பிரசாந்த், நெப்போலியன் ஆகியோருடன் கதாநாயகியாக படங்களில் நடித்து இருக்கிறேன். புகழின் உச்சியில் இருக்கும்போது, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டேன். தற்போது 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான். 1–வது வகுப்பு படிக்கஎனது கணவர் ஸ்ரீபெரும்புதூரில், செல்போன் கம்பெனியில் என்ஜினீயராக வேலைபார்க்கிறார். எங்கள் குடும்ப வாழ்க்கையில் இப்போது பெரும்புயல் வீசி விட்டது. எனது கணவரும், நானும் தனித்தனியாக பிரிந்து வாழ்கிறோம். நான் சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறேன்.
எனது கணவர் ஸ்ரீபெரும்புதூரில் அவரது தாயாருடன் வாழ்கிறார்.
எனது கணவர் என் மீது சந்தேகப்பட்டார். அவருக்கு சினிமாவில் நடித்து பணமும் சம்பாதித்து கொடுக்க வேண்டும். ஆனால், நான் யாருடனும் பேசக்கூடாது. சினிமா சூட்டிங்கிற்கு பகலில் மட்டும்தான் போகவேண்டும். அவருக்கு இரவில் நல்ல மனைவியாக நடந்து கொள்ளவேண்டும். அவரது தாயாருக்கு நல்ல மருமகளாகவும் இருக்க வேண்டும்.
சினிமாவில் நடித்ததால், எனது கணவர் விருப்பப்பட்ட மேற்கண்ட எதையும் நிறைவேற்றுவது கடினமாக இருந்தது. இதனால் எனக்கும், எனது கணவருக்கும் கருத்து வேறுபாடு, மோதல் ஏற்பட்டது. கணவரை விட்டு பிரிந்து விட்டேன். அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டேன்.

மீண்டும் விஜயகாந்த் புது யோசனை திமுக பாமக தேமுதிக பா ஜ க 40 க்கும் குறி ! ஜெயலலிதாவின், பிரதமர் கனவை தகர்க்க ?

முதல்வர் ஜெயலலிதாவின், பிரதமர் கனவை தகர்க்க வேண்டும்' என்பதில், விஜயகாந்த் தீவிரமாக உள்ளார். அதனால், பா.ஜ., - தி.மு.க., - தே.மு.தி.க., உட்பட, பல கட்சிகள் இணைந்து, பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடத் தலைவர்களிடம், தன் மைத்துனர், சுதீஷ் மூலம், புது யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க.,வும், பா.ஜ.,வும் முயற்சித்து வருகின்றன. இக்கட்சி களிடம், உளுந்தூர்பேட்டை மாநாட்டில், முடிவை அறிவிப்பதாக கூறிய, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, வரும், 8ம்தேதி, சென்னை வண்டலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இக்கூட்டத்தில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, கட்சி தலைவர்களை மேடை ஏற்ற, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் தே.மு.தி.க., இருந்து வருகிறது. அதேநேரத்தில், லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று விட்டால், டில்லியில், ஆட்சி அதிகாரத்தையும், பிரதமர் பதவியையும் பிடித்து விடலாம். தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், அதை பயன்படுத்தி சாதித்து விடலாம் என்பதே, ஜெயலலிதாவின் கணக்கு.ஆனால், ஜெயலலிதாவின் பிரதமர் கனவை தகர்க்க, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், புதிய வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் தான், தி.மு.க. - பா.ஜ., கட்சிகளுக்கு, கூட்டணி பற்றிய பிடிகொடுக்காமல், அவர் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல்காந்தி - திருமாவளவன் திடீர் சந்திப்பு

திமுக அணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை டெல்லி துக்ளக் லேனில் உள்ள தனது இல்லத்துக்கு புதன்கிழமை வரவழைத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து திருமாவளவன், ‘’ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலத்தின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தொடரில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த மசோதா; எஸ்சிஎஸ்பி எனப்படும் தாழ்த்தப்பட்டோர் நலன்கள் தொடர்புடைய துணைத் திட்டம், டிஎஸ்பி எனப்படும் பழங்குடியினர் துணைத் திட்டம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்; தனியார் துறை வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு, இந்திய ஆழ்கடல் பகுதியிலேயே தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வகை செய்யும் படகுகள், மீன் பிடி வலைகளை மத்திய அரசே வழங்க வேண்டும்; தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடங்களில் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்;

BJPயிடம் பிடிகொடுக்காத ராமதாஸ்: அன்புமணிக்கு ராஜ்யசபா 'சீட்' ?

'பா.ஜ., கூட்டணியில் சேர வேண்டும் எனில், பா.ம.க.,வுக்கு ஒன்பது தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; அன்புமணிக்கு ராஜ்யசபா, 'சீட்' வேண்டும்' என, அந்தக் கட்சியின் தலைவர், ராமதாஸ் அடம் பிடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

'தேசிய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை' என்ற முடிவில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் இருந்தார். ஆனால், அவரின் மகனும், கட்சியின் இளைஞர் அணி தலைவருமான, அன்புமணி, 'நீங்கள், இந்த முடிவில் இருந்தால், வரும் தேர்தல்களில், டெபாசிட் கூற முடியாது; விரைவில் கட்சியே காணாமல் போய் விடும்' என, ராமதாசை எச்சரித்ததோடு, லோக்சபா தேர்தலில், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, வலியுறுத்தினார் அதனால், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு, பா.ம.க., இறங்கி வந்தது. இதையடுத்து, பா.ஜ., தலைவர்கள் - ராமதாஸ் இடையேயான சந்திப்பு, சென்னையில் சமீபத்தில் நடந்தது. அப்போது, 'பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., சேர வேண்டும் எனில், லோக்சபா தேர்தலில், பா.ம.க.,விற்கு, ஒன்பது தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; அன்பு மணிக்கு ராஜ்யசபா, 'சீட்' பெற்றுத்தர வேண்டும்' என, ராமதாஸ் நிபந்தனை விதித்துள்ளார்.இதைக் கேட்ட, பா.ஜ., தலைவர்கள், 'கூட்டணி உறுதியான பின், தொகுதி பங்கீட்டை மேற்கொள்ளலாம்' என, தெரிவித்து உள்ளனர்.அதை ஏற்க மறுத்த ராமதாஸ், 'நாங்கள் கேட்டதை கொடுத்தால் மட்டுமே, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், மோடி பங்கேற்கும், வண்டலூர் பொதுக் கூட்டத்தில், பா.ம.க., பங்கேற்கும்' என, திட்டவட்டமாககூறியுள்ளார்.

வெளி்நாட்டு பண மோசடியா? CM கெஜ்ரிவாலுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

புதுடில்லி : விதிமுறைகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், அக்கட்சி தலைவர்கள், விதிமுறைகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும், டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு மீதான முந்தைய விசாரணையின் போது, 'நிதி சேர்ந்த விவரம், வங்கி பண பரிமாற்றம் குறித்த ஆவணங்களை தர வேண்டும் என, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு பலமுறை கடிதம் எழுதியும், பதில் அளிக்கவில்லை' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி, பிரதீப் நந்திராஜோக் முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது.

புதன், 5 பிப்ரவரி, 2014

ஜெயாவின் ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் வருமான வரி மோசடியில் மாட்டினார்


சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றியை துள்ளியமாக கணித்ததற்காக கிடைத்த ரூ.10 லட்சம் அன்பளிப்பால் அவரது ஆஸ்தான ஜோதிடரான உன்னிகிருஷ்ண பனிக்கர் வருமான வரி பிரச்சனையில் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனன்காடியைச் சேர்ந்தவர் ஜோதிடர் உன்னிகிருஷ்ண பனிக்கர். முதல்வர் ஜெயலிலதாவின் ஆஸ்தான ஜோதிடர். கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆவார் என்று அவர் கணித்துக் கூறினார். கிரிமினல் வழக்குள் நிலுவையில் இருந்ததால் ஜெயலலிதாவால் அப்போதைய தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்றாலும் அதிமுக அபார வெற்றி பெற்றது. இதையடுத்து ஜெயலலிதா முதல்வர் ஆனார். அவர் முதல்வர் ஆவார் என்று துள்ளியமாக கணித்த பனிக்கருக்கு ரூ.10 லட்சம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மார்வாடி உக்கம்சந்துக்கு பதவி கொடுத்து எம்.ஜி.ஆரையே வீழ்த்திய அன்பழகன்


ஒரு கட்சிக்கு மகளிர் பிரிவு, மாணவர் பிரிவு, தொழிலாளர் பிரிவு, விவசாயிகள் பிரிவு இவைதான் தேவை. சிறுபான்மை பிரிவு தேவையில்லை.
ஆனால், ஓட்டு வாங்குவதற்கும் ‘நன்கொடை’ வசூலிப்பதற்கும் அது பயன்படும் என்பதற்காக அரசியல் கட்சிகள் அப்படி ஒரு பிரிவை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
சரி. அதையாவது சரியாக செய்ய வேண்டாமா?
திமுக வின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு தலைவராக  மார்வாடி வகுப்பைச் சேர்ந்த எஸ்.டி.உக்கம்சந்தை, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.
மா்வாடிகள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற கண்ணோட்டத்திலா இந்த தேர்தெடுப்பு?
என்ன ஒரு திராவிடப் பார்வை?
இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து அமைப்புகளை நன்கொடை கொடுத்தும் வளர்ப்பவர்கள் மார்வாடிகளே. மார்வாடிகள் உதவி இல்லை என்றால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே இல்லை.
உக்கம்சந்த் கட்சிக்கு உண்மையாக இருக்கிறார், அதற்காக அவருக்கு பதவி தரவேண்டும் என்றால், இதை விட வேறு முக்கியமான பதவியை தந்திருக்கலாமே?

ரூபாவுக்கு சான்ஸ் பெற்றுத் தந்த சுருள்முடி

ரூபா மஞ்சரிக்கு சுருள் சுருளான அவரது தலைமுடி ஹீரோயின் சான்ஸ் பெற்றுத்தந்தது. அழகும், இளமையும் ஹீரோயின்களுக்கு சான்ஸ் பெற்றுத்தருகிறது. திரு திரு துரு துரு பட ஹீரோயின் ரூபா மஞ்சரி விஷயத்தில் அது வேறாக உள்ளது. தலையில் சுருள் சுருளாக இருக்கும் கூந்தல்தான் அவருக்கு சிவப்பு பட ஹீரோயின் சான்ஸ் பெற்று தந்தது. இப்படத்தின் ஆடியோ, டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது இந்த ரகசியத்தை அவரே வெளியிட்டார். அவர் கூறியது:எனக்கு நகரத்து பெண் வேடம்தான் கிடைத்தது. கிராமத்து பெண்ணாக, குடிசைபகுதி பெண்ணாக நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்தேன்.

கிருஷ்ணசாமி தென்காசியில் மகளை களமிறக்கத் திட்டம் ! ஓட்டப்பிடாரத்தை கைவிடுவாரா ?


டாக்டர் கிருஷ்ணசாமிக்காக தென்காசி தொகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தேர்தல் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் தென்காசியில் கிருஷ்ணசாமி தனது மகளை நிறுத்தப் போவதாக செய்திகள் வருகின்றன.
தென்காசி தொகுதியை விட்டுத் தருவதாக தந்த உத்தரவாதத்தின் பெயரிலேயே அதிமுக அணியிலிருந்து டாக்டர் கிருஷ்ணசாமி திமுக பக்கம் மெதுவாக சாய ஆரம்பித்தார். இந்நிலையில், தனக்காக கேட்டுப் பெற்ற தென்காசி தொகுதியில் தனது மகள் சங்கீதாவை நிறுத்தும் முடிவில் அவர் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தொடக்கத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த தென்காசி தொகுதி, 1998-ம் ஆண்டுக்குப் பின் காங்கிரஸிடமிருந்து கைநழுவிப் போனது. அதே சமயம் 1998-லிருந்து இங்கே தனித்துப் போட்டியிட்டு ஒவ்வொரு முறையும் 1 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்து வருகிறார் கிருஷ்ணசாமி. இந்தமுறை வலுவான கூட்டணி பலத்துடன் களமிறங்க வேண்டும் என்பதற்காகவே திமுக-வுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.

Microsoft மைக்ரோசாப்ட் CEOவாக இந்திய-அமெரிக்கர் சத்யா நாதெல்லா


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய - அமெரிக்கரான சத்யா நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
பல மாதங்களாக நீடித்து வந்த இந்தத் தேர்வின் முடிவை மைக்ரோசாப்டின் நிறுவனர் பில் கேட்ஸ் இன்று அறிவித்தார்.
"இந்தத் தருணத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வழிநடத்த சத்யா நாதெல்லாவைவிடச் சிறந்த நபர் யாரும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
"சத்யா சாதித்துக் காட்டியுள்ள தலைவர். சிறந்த பொறியியல் திறன்கள், வியாபரத்திற்கான தொலைநோக்கு, மக்களை ஒன்றாக ஒருங்கிணைக்கும் திறமை என அனைத்துத் தகுதிகளையும் கொண்டவர். தொழில்நுட்பத்தை உலக மக்கள் எப்படி, எவ்வாறு பயன்படுத்துவது என அவர் வைத்திருக்கும் பார்வையே மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தேவை" என்று அவர் மேலும் கூறினார்.
இதுவரை வாரிய இயக்குனர்களின் தலைவராக செயல்பட்டு வந்த பில்கேட்ஸ், அந்தத் பதவியிலிருந்து விலகி, தொழில்நுட்ப ஆலோசகராக புதிய பொறுப்பை எடுத்துக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி கோர்ட்டில் கலைஞர், அன்பழகன் ஆஜராக உத்தரவு !


தென்காசி வடக்கு மவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகம்மது உசேன். இவர் 9–வது வார்டு அவைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டி முறைப்படி விண்ணப்பித்து, அதற்கான ரசீதும் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர், வக்கீல் இசக்கித்துரை மூலம் தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில்,   ‘’தி.மு.க.வின் 14–வது உட்கட்சி தேர்தல் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டது. தென்காசியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 2, 8, 11, 18, 19, 24, 25, 26, 29, 30 ஆகிய 10 வார்டுகளுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 23 வார்டுகளுக்கு முறைப்படி தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் கட்சி பத்திரிகையில் விடுபட்ட வார்டு, கிளை, வட்ட கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தென்காசி நகர தேர்தல் குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. இது ஜனநாயக நடைமுறைக்கு மாறுபட்டது.

இத்தாலியில் ஈரானியப்பெண்ணை கொன்ற இந்திய ஜோடி கைது

இத்தாலியில் ராஜேஷ்வர் சிங் (29) மற்றும் கங்காதீப் கவுர் (30) ஆகிய இருவரும் மிலன் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளனர். அவர்களுடன் ஆடை வடிவமைப்பாளர் பயிற்சி பெற்றுவந்த ஈரானை சேர்ந்த மெஹ்பாப் அஹட்சவோஜி (29) என்ற பெண்ணும் தங்கியிருந்தார்.

அப்போது மெஹ்பாப்பை பாலியல் இச்சைக்கு இவர்கள் உட்படுத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவர்கள் இருவரும் மெஹ்பாப் கழுத்தை இறுக்கி கொன்று இருக்கின்றனர். பின்னர் அவரது நிர்வாண உடலை ஒரு சூட்கேசில் அடைத்து லெக்கோ நகரில் உள்ள ஏரியில் வீச ரெயிலில் எடுத்து சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், மீண்டும் வெனிஸ் நகருக்கு ரெயிலில் எடுத்துச்செல்ல தீர்மானித்தனர். பிறகு அங்கிருந்த கால்வாயில் வீசிவிட்டு திரும்பிவிட்டனர். ஒரு வாரம் கடந்த நிலையில் மெஹ்பாப்பின் சடலமானது லிடோ தீவு அருகே போலீசார் கண்டெடுத்தனர்.

இன்று பேஸ்புக்கிற்கு 10 வது பிறந்த நாள்

சமூகவலைத் தளங்களில் தன்னிகரற்ற இடத்தினை பெற்று விளங்கும் பேஸ்புக் பல்வேறு தடைகளைத் தாண்டி சீனா, பங்களாதேஷ், ஈரான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற சனத்தொதை அதிகமிக்க நாடுகளில் தடைவிதிக்கப்பட்ட பின்னரும் மக்களிடையே இன்று 1.2 பில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் இது ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன.ஹவார்ட் பலகலைகழக மாணவர்களிடையே அவர்களது மொழிவழக்கினைக் கொண்டு மார்க் ஷக்கபேர்கர் அவரது நண்பர்களான எடுவார்டோ ஸாவெரின், அன்ரூ மெக்கொலம், டஸ்டின் மொஸ்கொவிட்ஸ் மற்றும் கிறிஸ் ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி உருவாக்கப்பட்டதே பேஸ்புக் ஆகும்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

1984ல் சீக்கியர் படுகொலை ! ஜனாதிபதி ஜெயில்சிங் கோரிய உதவியை ராஜிவ் நிராகரித்தார்

டெல்லி: 1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலையின் போது தமது தந்தை உதவி கோரியதை அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியும் அவரது அரசும் புறக்கணித்துவிட்டது என்று அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங்கின் மகள் குர்தீப் கவுர் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த பேட்டியில், 1984ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க ராஜிவ் காந்தி அரசு முயற்சித்தது என்று கூறியிருந்தார். அத்துடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கும் இந்த படுகொலையில் தொடர்பிருப்பது உண்மைதான் என்றும் ராகுல் கூறியிருந்தார். இது சீக்கியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர் படுகொலையில் ஈடுபட்ட காங்கிரசார் பெயரை வெளியிடக் கோரி ராகுல் வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங்கின் ஊடக செயலரும், ராஜிவ் அரசு சீக்கியர் படுகொலையை தடுக்க தவறியது.  

2 G ஸ்பெக்ட்ரம் முழுக்க முழுக்க வெறும் கற்பனை குற்றச்சாட்டு !

2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டை பொய் என்று திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை: >திமுக தலைவர் கருணாநிதி: உங்களுக்கு என்ன வேண்டும்? செய்தியாளர்: இன்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், பிரசாந்த் பூஷன் அளித்த பேட்டியில், காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் பேசிய டேப்பை வெளியிட்டிருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியின் எம்.டி. சரத்குமார் ரெட்டி, ஆவணங்களையெல்லாம் திருத்தியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே? எல்லாம் பொய். >செய்தியாளர்:>உங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறாரே? நீங்கள் எல்லாம் செய்தியாளர்கள் தானே? சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று நடைபெறுகிறதே! அதிலே சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்க முடியுமா? முதல் அமைச்சரைச் சென்று இதைப் போல நீங்கள் காண முடியுமா? பவானிசிங் என்ற வழக்கறிஞரே தொடர வேண்டுமென்று கேட்பது முறையா என்று யாராவது கேட்டீர்களா? அவர் குற்றவாளிக்கு எதிராக வாதாட வேண்டியவர், ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே, அதைப் பற்றி யெல்லாம் யாராவது கேட்டீர்களா?

அம்மா பஜனைக்கு இழுத்துச்செல்லப்பட்ட மாணவர்கள் ! அம்மா… தாயே… வருங்காலமே… பாரதமே… வெங்காயமே… வெள்ளைப்பூண்டே

அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்? நாஞ்சில் சம்பத்துக்கு இனோவா கார்… பண்ருட்டியாருக்கு அண்ணா அவார்ட்…! அம்மா… தாயே… வருங்காலமே… பாரதமே… வெங்காயமே… வெள்ளைப்பூண்டே… என்று குட்டிச்சுவரைக்கூட விட்டுவைக்காத பிளக்ஸ் பேனர்கள்… அம்மா புராணம் பாடும் குத்தாட்டங்கள்… பொதுக்கூட்டங்கள்… என களை கட்டியிருக்கிறது, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரமும் அம்மாவின் பிரதமர் கனவிற்கான அச்சாரமும்! ‘பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அம்மா மட்டுமே’ என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் ‘பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அம்மா மட்டுமே’ என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ் இனி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆக மாறும்’ என்று ‘அம்மையாரும்’ தன் பங்குக்கு திரியை கொளுத்திப் போட, ர.ர.க்கள் பண்ணும் அலப்பறையைத் தாங்க முடியாமல் தகிக்கிறது தமிழகம்.

7வது நாளாக நர்சிங் மாணவிகள் போராட்டம் நோயாளிகள் பாதிப்பு

கீழ்பாக்கம்:கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகள் 7வது நாளாக இன்று போராட்டத்தை தொடர்கின்றனர். தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடப்பதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ கல்வித் துறை இயக்குனர் டாக்டர் கீதாலட்லசுமி ஆகியோர் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. நர்சிங் கல்லூரி மாணவிகளின் தரப்பில் திவ்யா, மோனிகா மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பொறுக்கி எடுத்த புரோக்கர் மேயர் சைதை துரைசாமி ! மேயரின் செட்டப் கூட்டம்

சைதை துரைசாமி பதவி ஏற்புமாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது நல சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்’ – இப்படி ஒரு செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது. இதைப் பார்த்தவுடன் சரி , இந்த கூட்டத்திற்கு கண்டிப்பாக போய் என்னதான் நடக்கிறது என்பதை பார்த்து வரவேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தோம். இந்த நிலையில் புமாஇமுவின் அலுவலக முகவரிக்கு மாநகராட்சியின் சார்பில் மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு நம்மை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், “உங்கள் சங்கம் சார்பில் 5 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. வெற்றிலைப்பாக்கு வைத்து கூப்பிட்டும் போகாமலா இருப்பது? ‘மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது நல சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்’ (2011-ம் ஆண்டு மேயராக பதவி ஏற்கும் சைதை துரைசாமி).
ஒய்.எம்.சி,ஏ. மைதானம் உள்ளே நுழைந்த உடன் மாநகராட்சி வாகனங்கள், போலீசு வாகனங்கள் என பலவும் நிரம்பி வழிந்தன. வாசலிலேயே மாநகராட்சி அதிகாரிகள் “ சார் ப்ளீஸ், இப்படி போங்க, சார் அந்த கட்ல திரும்புங்க” என்றார்கள். அலுவலகத்திற்கு சென்றால் மரியாதையை கிராம் கணக்கில் கொடுக்கும் இவர்கள் இங்கு கிலோ கணக்கில் வாரிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

மாநாட்டில் பங்கேற்க அழகிரிக்கு ஸ்டாலின் அழைப்பு? சமரச முயற்சி

தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, வரும், 15, 16ம் தேதிகளில், திருச்சியில் நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு வரும்படி, மு.க.அழகிரிக்கு, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் அழைப்பு விடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்மூலம், கட்சியில் நிலவும், சகோதர யுத்தத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்க, கருணாநிதியும், அவரின் குடும்பத்தினரும் தீர்மானித்துள்ளனர்.
தி.மு.க., தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த, அழகிரியின் பிறந்த நாளை ஒட்டி, அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய, சர்ச்சைக்குரிய போஸ்டர் விவகாரத்தினால், அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மன்னன் உட்பட, 11 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மிரட்டல்: மதுரை மாநகர மாவட்ட, தி.மு.க., கூண்டோடு கலைக்கப்பட்டு, பொறுப்பு குழு அமைக்கப்பட்டு, உட்கட்சி தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அழகிரி, 'உட்கட்சி தேர்தல் முறைகேடு தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவேன்' என, மிரட்டல் விடுத்ததோடு, தன் பிறந்த நாள் விழாவுக்கு, அதிக அளவில், ஆதரவாளர்களை வரவழைத்து, தி.மு.க., மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்தார். அதனால், அழகிரியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கலாம் என, ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட முடிவில், தி.மு.க., தலைமை மாற்றம் செய்துள்ளது.

திருஞான சம்பந்தர் ஒரு பாசிச படுகொலையாளி? 8000 சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப் பட்டனர்.

தமிழ் நாட்டில், சோழர் ஆட்சிக் காலத்தில், பிராமண மத மேலாதிக்கம் காரணமாக சமண மதங்கள் அழிக்கப் பட்டன. சமண மதத் துறவிகள், இரகசியமாக மலைக் குகைகளில் பதுங்கி இருந்து மத வழிபாடுகளை பின்பற்றி வந்தார்கள். இன்றைக்கும், தமிழகத்தில் பல இடங்களில், சமண மத அகழ்வாராய்ச்சிப் பகுதிகள் உள்ளன. ஆனால், அரசாங்கம் அது குறித்து அக்கறையின்றி இருக்கின்றது. தமிழகத்தில் உள்ள, இந்து மத மேலாண்மைவாதிகளும் அதனை கண்டுகொள்வதில்லை.
திருஞான சம்பந்தர், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால், ஹிட்லருக்கு நிகரான “ஒரு பாசிச இனப் படுகொலையாளி” என்று, தமிழக வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப் பட்டிருக்கும். சம்பந்தர் வாழ்ந்த 7 ம் நூற்றாண்டில், மதுரையில் 8000(எண்ணாயிரம்) சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப் பட்டனர். அந்த சமணர்கள் வேறு மொழி பேசிய, வேற்றின மக்கள் அல்லர். அவர்களும் தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தமிழர்கள் தான். அன்று மதுரையை ஆண்ட கூன் பாண்டியனும், திருஞான சம்பந்தரும், எண்ணாயிரம் தமிழர்களை, அவர்கள் சமண மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக இனவழிப்புச் செய்தனர். சமணர்களின் படுகொலைகளுக்கும், Holocaust எனும் யூத இனப் படுகொலைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? ஜெர்மனியில், ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட யூதர்களும் ஜேர்மனிய இனத்தவர்கள் தான். யூத மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக தான், அவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.
தமிழகத்தில், மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை கொன்ற வரலாற்றை, சமண மத நூல்கள் எதுவும் பதிவு செய்யவில்லை ?

திங்கள், 3 பிப்ரவரி, 2014

நல்லவேளை அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் முதல்வரானார்

web12ph247அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன் மற்றும் அன்பழகன் இவர்களைவிட எவ்வகையில் கருணா மேம்பட்டவர்? மற்றவர்கள் தம் தகுதியால் பெற்றதை தகுதியில்லாமலே கருணா தட்டிப் பறித்தது எப்படி?
-கோ. அருண்முல்லை.  பா.ஜ.க. பாசம் கொண்ட, பார்ப்பனர்களுக்கான திராவிட இயக்க துருப்புச் சீட்டு இரா. செழியனை ஏன் விட்டு விட்டீர்கள்?
anna_karunanidhi_500அண்ணாவிற்கு பிறகு, நெடுஞ்செழியன், அன்பழகன் இவர்களைவிட கலைஞர், தொண்டர்களிடம் நெருக்கமாக இருந்தார். அதுவே அவர் தலைவர் ஆனதற்குக் காரணம்.
அதுமட்டுமல்ல முதலியார்களால் சுற்றி வளைக்கப்பட்ட திமுகவின் தலைமைக்குள்,
மிக பிற்படுத்தப்பட்ட ஒடுக்குமுறைக்கு உள்ளான எண்ணிக்கையளவில்கூட ஜாதி செல்வாக்கு இல்லாத, மிக சிறுபான்மையான இசைவேளாளர் சமூகத்திலிருந்து, சிறிய அளவில்கூட ஜாதிய பின்னணியில்லாமல் ஒருவர் தலைமைக்கு வருவது, திறமை இல்லாமல் எப்படி முடியும்?
திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையான, இடஓதுக்கிட்டூக்கு எதிராக எம்.ஜி.ஆர் ஆட்சியில், ‘பொருளாதார அளவுகோளில் இட ஒதுக்கிடூ’ என்று சட்டம் வந்தபோதே, அப்போது அமைச்சராக இருந்த நெடுஞ்செழியனின் ‘திறமை’யை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.
அந்தப் பாசத்தில்தான், ‘கற்றாரை கற்றாரே காமுறுவர்’ என்ற அவ்வையாரியின் வழிகாட்டுதல்படி, படித்த பார்ப்பனர்கள், படிப்பறிவும், ஆட்சியத் திறமையும் கொண்ட நமக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்ற அசைக்க முடியாது நம்பிக்கையில், மைலப்பூர் தொகுதியில் சுயேச்சையாக நின்றார், திராவிட இயக்கத் தலைவரான ‘நாவலர்’.
ஆனால் படித்தப் பார்ப்பனர்கள், நெடுஞ்செழியனின் நம்பிக்கையை மட்டுமல்ல, அவர்கள் அவ்வையாரையே பொய்யாக்கி காட்டினார்கள்.
நெடுஞ்செழியனுக்கு டெபாசிட் பணத்தை நஷ்டமாக்கிய பார்ப்பனர்கள். மாறாக யாருக்கு அதிக வாக்களித்தார்கள் என்றால், சுயேச்சையாக நின்ற உலகின் மாபெரும் மேதைகளில் ஒருவரான எஸ்.வி. சேகருக்கு.
நெடுஞ்செழியனின் திராவிட இயக்க அரசியல் அறிவு, பார்ப்பனியத்தின் அடிப்படையை கூட புரிந்து கொள்ளாத தன்மையில் இருந்தது.
அவர் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைப்போல் அதிகாரத்திற்கு வர ஆசைப்பட்டார். ஆனால், ‘நாராயணசாமி’யாகத்தான் நடந்து கொண்டார். அவரின் தவறுக்கு தக்கப் பாடம் கற்பித்தது மயிலப்பூர்.
‘தகுதி, திறமையை’ விரும்பியது நெடுஞ்செழியனின் ‘தகுதியும் திறமையும்.’
‘தகுதி-திறமைகளோ’ பெரியாருக்குப் பிறகு அவருக்கு திராவிட இயக்க அரசியலை மீண்டும் கற்றுத் தந்தனர்.
நல்லவேளை அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் முதல்வரானார். ‘ஜஸ்ட் மிஸ்’ தமிழர்கள்.
mathimaran.wordpress.com/

தமுமுக தாலிபான்களை தமிழகத்தில் முறியடித்த தோழர் பாத்திமா

இஸ்லாத்தையும் அதன் பெண்ணடிமைத் தனத்தையும் காக்க வந்த ஆண்களின் ‘வீரம்’, ஜனநாயக உணர்வும் கம்யூனிச சிந்தனையும் கொண்ட பெண்ணின் போராட்டத்தின் முன் மண்டியிட்டது.
மலாலாவேறு கிராமத்து பையனை காதலித்த ‘குற்றத்திற்காக’ 23 வயதான பழங்குடியினப் பெண்ணை கிராமத்தினர் யார் வேண்டுமானாலும் வன்புணர்ச்சி செய்யலாம் என்று உத்தரவு போட்டு 13 பேரை விட்டு குதற வைத்தது மேற்கு வங்க “காப் பஞ்சாயத்து”. இது பழங்குடிச் சமூக காட்டுமிராண்டிகளின் பொறுக்கித் தனம் என்பதை நாடே ஒத்துக் கொள்கிறது. ஆனால், பெண்களுக்கு உரிய மதிப்பளிக்கப்படும் தமிழகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கவே முடியாது, இங்கு ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ளது, என்று யாராவது நம்பியிருந்தால் இந்த கட்டுரையைப் படித்த பின் அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி வடக்கு அம்மாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அனிஷ் பாத்திமா என்ற பெண் கோவை அரசு சட்டக்கல்லுரியில் இரண்டாம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். கோவை பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி அமைப்பிலும் செயல்பட்டு வருகிறார். இவரது அண்ணன் அலாவுதீனும் பு.மா.இ.மு தோழர்தான். சென்ற ஆண்டு வரை அதே கோவை அரசு சட்டக் கல்லூரியில் படித்து விட்டு தற்போது புதுக்கோட்டையில் வழக்கறிஞராகப் பணி புரிகிறார்.

தண்ணீர் கிடைக்காத மக்கள் ஆம் ஆத்மி எம்எல்ஏ கன்னத்தில் பளார்

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், மாதம் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானார். மீட்டர் வசதியுடன் குடிநீர் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மாதம் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தார். அதற்கு மேல் உபயோகப்படுத்தினால் மொத்த தண்ணீருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. டெல்லியில் பல பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பே இல்லை. அரசு அறிவிப்பால் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு பலன் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சங்கம் விகார் பகுதி எம்எல்ஏ தினேஷ் மொகானியா நேற்று தனது தொகுதியில் மக்களிடம் குறை கேட்க சென்றார். இந்த தொகுதியில் பல இடங்களில் மக்களுக்கு இலவச தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த பொது மக்கள், எம்எல்ஏவை வறுத்து எடுத்தனர். ஒரு பெண், எம்எல்ஏவின் கன்னத்தில் திடீரென அறைந்தார். அருகில் இருந்தவர்கள் எம்எல்ஏவை அங்கிருந்து உடனடியாக அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..dinakaran.com

ஆங்கில கல்வியை குறை கூறும் ஸ்டாலின் தனது பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிப்பித்தது ஏன்


ஸ்டாலின், தனது பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தாரா? இல்லையே! அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் வைத்திருக்கும் பள்ளிகளிலாவது தமிழ் மொழி வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை
ஆங்கில வழிக் கல்வியைக் குறை கூறுவோர் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தார்களா? என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது, "எனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை.