பெரியார் திடல் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிமோடி ஆட்சி அமைத்த பிறகு அதிகரித்து வரும் பார்ப்பன தாக்குதல்களின் ஒரு பகுதியாக புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பவிருந்த தாலி பற்றிய விவாதத்தை டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு மூலமும், மிரட்டல்கள் மூலமும் தடுத்து நிறுத்தியிருந்தனர் இந்துத்துவ ரவுடிகள். இந்தச் சூழலில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று, பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்வு மற்றும் மாட்டுக்கறி விருந்து நடத்தத் திட்டமிட்டிருந்தது திராவிடர் கழகம்.
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்வு மற்றும் மாட்டுக்கறி விருந்து.
ஏப்ரல் 13 அன்று இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது சென்னை மாநகர காவல் துறை. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றது திராவிடர் கழகம். விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன் வேப்பேரி உதவி ஆணையரின் ஆணைக்குத் தடை விதித்து திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் விழாவுக்கு அனுமதி கொடுத்ததோடு, காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஆணை பிறப்பித்தார்.