சனி, 29 மே, 2021

நடிகர் விஷால் மீது நடிகை காயத்திரி ரகுராம் பாலியல் அவதூறு! பத்மாசேஷாத்திரிகளுக்கு எதிராக விஷால் பேசியதால் காயத்திரி டிராமா

May be an image of 2 people, people standing and text that says 'NEWS News18 Tamil Nadu 25m நடிகர விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் துன்புறுத்தல் புகார்.. #gayathriraguram #ActorVishal #SexualHarassment i NEWS18 TAMIL NADU Gayathri Raguramm: நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் துன்புறுத்தல் பு...'

Manoj Kumar  :   நேற்று தான்(28/05/2021) பத்ம சேஷாத்திரி பள்ளியின் பாலியல் வாத்தியார் ராஜகோபால் ரங்காச்சாரி மீதும்,அதன் நிர்வாக தலைமையான ஓய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசால் பேசியிருந்தார்,,,
அடுத்த நாளான இன்றே விசால் மீது பாலியல் புகாரை தூக்கிக் கொண்டு வந்து நிற்கிறார் இந்த ஆரிய பார்ப்பன பெண்மணி,,,
தங்களை எதிர்ப்பவர்கள் வாயை அடைக்க பார்ப்பன கும்பல் இதை ஒரு யுக்தியாகவே கடைபிடித்து வருகிறது,,,
பார்ப்பனரல்லாத ஆண்கள் இந்த தவறை செய்தார்களா,இல்லையா என்ற ஆராயச்சிக்கு உள்ளே எல்லாம் போக வேண்டியதில்லை,,,
ஆனால் இந்த ஆரிய பார்ப்பன கும்பல் இப்படிப்பட்ட புகார்களை எந்த நோக்கத்திற்காக,என்ன தேவைக்காக எழுப்புகின்றனர் என்பது தான் இங்கே முக்கியம் !!

சமையல் எண்ணெய்களில் உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் கலப்படம்! அதிர்ச்சி தகவல்

 Balasubramania Adityan T  :  தேங்காய் எண்ணை,கடலை எண்ணை,நல்ல எண்ணை,சூரியகாந்தி எண்ணை,கடுகு எண்ணை...
இவை உண்மையில் உண்மையான விதை எண்ணைதானா?!!.
ஜீம்.. பூம்... பா
அவசியம் படிக்க வேண்டியதும் பகிர வேண்டியதும் உங்கள் கடமை!...
சென்ற வாரம் என் நண்பர் ஓமான் நாட்டிற்குச் சென்றார்.
அவர் சென்றது ஒரு எண்ணெய் கம்பெனியின் வியாபாரத் தொடர்புக்கு சென்றவருடன்!.
சென்றவர்கள்,
அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலை என்று கூட்டிச் சென்றார்கள்.
அவரும் சோஹார் தாண்டி அபுதாபி திசையில் ஒரு ஊருக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.
அவர்கள் கூறிய படியே அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலைதான்!
அந்த தொழிற்சாலையின் பொருள் உற்பத்தியைக் கேட்ட போது நண்பர் மயக்கம் போடாதா குறைதான்!
ஆம்! அந்தத் தொழிற்சாலையில் குரூட் ஆயிலை உபயோகப் படுத்தி ஹெக்சென் கழிவில் ஒரு ஆயிலை தயாரிக்கிறார்கள்.
சரி அதனால் என்ன?.
அது நிறமற்ற, மணமற்ற அடர்த்தி குறைவான ஒரு பொருள்.
மூச்சை இழுத்துப் பிடியுங்கள்...
இங்கேதான் விஷயம்!
இந்தப் பொருளைத்தான் நாம் தினம் வாங்கும் சூரியகாந்தி எண்ணெய் , ரீபைண்ட் கடலை எண்ணெய் சனோலா எண்ணெய் என்று பெயரிட்டுள்ள அனைத்து பிரபல எண்ணெய்களிலும் 70 சதவீதம் கலக்கிறார்கள்!.

அமெரிக்க சுவாமி நாராயணன் கோயிலில் இந்திய கொத்தடிமைகள்! அமெரிக்க FBI போலீஸ் அதிரடி ரெயிட்

May be an image of text that says 'theprint.in Swaminarayan temple in US raided, workers taken from India treated as forced labour: Report 90 labourers removed from site by US federal agencies. In lawsuit, 6 workers alleged they were paid merely 10% of hourly minimum wage, forced to live in gruelling conditions. SHUBHANGI MISRA 12 May, 2021 Print BAPS Shri Swaminarayan Mandir, Robbinsville, New Jersey www.baps.org'

தமிழ் இளந்திரையன்  :   அமெரிக்காவில் பார்ப்பனர்களால் பொதுமக்களின் நன்கொடையில் கட்டப்பட்டு இயங்கிவரும் கோவில்களில் ஒன்றான ,
நியுசெர்சி மாநிலத்திலிருக்கும் சுவாமிநாராயணன் கோவிலில் சட்டத்திற்குப் புறம்பாக,
இந்தியாவிலிருந்து பிற்படுத்தப்படுத்த வகுப்பினரை அரசின் குறைந்தபட்ச சம்பள பரிந்துரைக்கும் 90% குறைவாக கொடுத்துப் பணியமர்த்தி,
அந்த பணியாளர்களை ஒரு குறிப்பிட்ட அரணுக்குள்ளேயே அடிமைகளாக வைத்திருந்தது தெரியவருகிறது. அமெரிக்க அரசின் FBI எனப்படும் குற்றப்புலனாய்வுத்துறை இந்த கோவில் மற்றும் அதன் ஆளுமைகளின் மீதும் வழக்குத்தொடுத்து ஆய்ந்துவருகின்றனர்.
மேலும் இந்தக்கோவிலின் அறக்கட்டளை பாசகவிற்கு 2.1 கோடி நன்கொடை அளித்ததும் தெரியவருகிறது. தமிழகத்திலும் அரசிடமிருந்து கோவில்களைப் பறிக்கப் போராடுவது பாசகவினரே என்பதை நோக்காமல் கடந்துசெய்வது கடினம்தான்.  swaminarayan-temple-us-raided

திருமதி ஆ. பரமேஸ்வரி- ராசாவின் பயணத்தில் துணையாக தூணாக நின்ற பெருந்தகை

May be an image of 1 person and text that says 'ஆழ்ந்த இரங்கல்'

மின்னம்பலம் :முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசாவின் மனைவி திருமதி பரமேஸ்வரி இன்று (மே 29) மாலை 7.10 மணியளவில் காலமானார்.
பரமேஸ்வரி கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனபோதும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலமானார்.
கடந்த 27 ஆம் தேதி மாலை அவர் கவலைக்கிடமாக உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ரேலா மருத்துவமனை சென்று பரமேஸ்வரியின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடமும் ராசாவிடமும் விசாரித்து அறிந்தார்,இந்த நிலையில் இன்று (மே 29) பிற்பகல் 2 மணிக்கு ரேலா மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருமதி பரமேஸ்வரியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்தது. மருத்துவ நிபுணர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தது அதேநேரம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மே 29) மீண்டும் ராசாவையும், ராசாவின் குடும்பத்தினரையும் சந்தித்தார்.

சங்கி – ஜக்கி பேக்கரி டீலிங் ! - மருதையன்

idaiveli.wordpress.com : “trying to find another angle to make more money” – என்று பி.டி.ஆர் கூறியிருப்பது நாடறிந்த உண்மை.நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,   ஜக்கி வாசுதேவை தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டதாகவும், பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது துரதிருஷ்ட வசமானது என்றும் இஷா மையம் டீசன்டாக  கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறது.  பி.டி.ஆரை  “நாய்” என்று சாடியிருக்கிறார் ஜக்கி.ஒருவேளை ஜக்கியை “நாய்” என்று பி.டி.ஆர் திட்டியிருந்தால்,  “நாயும் ஒரு ஜீவன்தானே” என்று தத்துவம் பேசி “லைக்”கை அள்ளியிருப்பார் ஜக்கி. பி.டி.ஆரின் சொல்லாண்மை அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. ஒவ்வொரு சொல்லும் ஜக்கியின் உயிர்நிலையைத் தாக்கி,  சத்குருவுக்கு உள்ளே இருந்த “நாயை” வெளியே இழுத்துப் போட்டு விட்டது.  

பி.டி.ஆர் கூறியிருக்கும் கருத்துகள் அனைத்தும் ஜக்கியைப் பற்றிய ஆகத் துல்லியமான மதிப்பீடுகள்.  “In the case of Jaggi, he is a publicity hound and charlatan who is trying to find another angle to make more money. He is a commercial operator using God and religion”

ஜக்கி ஒரு சுயவிளம்பர வெறியன், அறிவாளியைப் போல நடிக்கும் ஒரு டுபாக்கூர். கடவுளையும் மதத்தையும் வைத்துப் பணம் பண்ண முயற்சிக்கும் பேர்வழி – இதுதான் பி.டி.ஆர் கூறியிருப்பதன் பொருள்.  இதில் ஒரு சொல் கூட மிகை கிடையாது.

திமுக எம்.பி ஆ.ராசாவின் துணைவியார் பரமேஸ்வரி காலமானார்!!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மனைவி உடல்நலக்குறைவால் காலமானார் -  Dinakaran
nakkeeran :நீலகிரி திமுக எம்.பி ஆ.ராசாவின் துணைவியார் பரமேஸ்வரி காலமானார் என அவர் சிகிச்சை பெற்று வந்த ரெலா மருத்துவமனை தற்போது அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி (53) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த ஆறு மாத காலமாக புற்றுநோய்க்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று இரவு 7.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது. இவரின் மறைவுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
May be an image of 2 people, including Neela Megam, people standing and text that says 'BREAKING NEWS SUN NEWS திமுக எம்.பி. ராசாவின் மனைவி காலமானார்! திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை ரெலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்! SUNNEWS sunnewslhe.in BREAKING OI0OSINENSTAMEL SUNNEWSTAM'

எல் ஆர் ஜெகதீசன் :   சமகால அரசியல்வாதிகளின் மனைவிகளில் அதிகபட்ச சோதனைகளையும் மன உளைச்சலையும் அலைச்சலையும் சந்தித்தவர்.
இந்திய ஒன்றிய அரசாங்கத்தையும் அதன் பிரதமர்களையும் ஒரு பத்தாண்டுகாலம் நிர்ணயிக்கும் வலிமைபெற்றிருந்த திமுக என்கிற மாநில கட்சியையும் அதன் தலைவர் கலைஞரையும் குறிவைத்து டில்லி சுல்தானியமும் அதன் சூத்ரதாரிகளான முப்புரிநூலோரும் சேர்ந்து உருவாக்கிய திட்டமிட்ட சதிவலையில் பாரதப்போரின் அபிமன்யுவைப்போல் மோசமாக சிக்கிக்கொண்டவர் ஆ ராசா.

மத்திய அரசு கோவாக்ஸின் & கோவிஷீல்ட் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறது? மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி...?

 Araathu R : 8 கோடியே 50 லட்சம் டோஸ் கோவாக்ஸின் & கோவிஷீல்ட் ஒரு மாதத்திற்கு இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்று மத்திய அரசு கேரள உயர்நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது .
அப்படி என்றால் ஒரு நாளைக்கு 28, 33, 333 டோஸ்கள் என்ற கணக்கு வருகிறது.
இப்போது ஒரு நாளைக்கு 12 லட்சம் முதல் 13 லட்சம் டோஸ்கள்தான் போடப்பட்டு வருகிறது.
மீதி 15 லட்சம் டோஸ்கள் எங்கே ? ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கக்கூடும்.
ஏப்ரல் மாதத்தில் தினமும் 30 லட்சம் டோஸ்கள் போடப்பட்டு வந்தன.
இப்போது 12 - 13 லட்சம் என்று வந்து நிற்கிறது. கடந்த கால தவறை விட்டு விட்டு ,
குறைந்த பட்சம் இந்த மே மாதம் தயாரித்துக்கொண்டு இருக்கும் டோஸ்களையாவது ஏற்றுமதி செய்யாமல் இந்தியாவிற்கே வழங்கினால் , ஒரு நாளைக்கு 28 லட்சம் டோஸ்கள் போட முடியும். இதுதான் சுலபமானது & ப்ராக்டிக்கல்.
இருப்பதை விட்டு விட்டு , மாநிலங்களே க்ளோபல் டெண்டர் விடுவதும் , உனக்கெல்லாம் குடுக்க மாட்டேன் போ என வெளிநாட்டு மருந்து கம்பனிகள் துரத்திக்கொண்டு இருப்பதும் வேதனையான காலத்தில் நடக்கும் அபத்த நகைச்சுவைகள்.

தமிழ்நாடும் பார்ப்பனர்களும்! எந்த எதிரியையும் விட பார்ப்பனர்களால் இழந்ததுதான் அதிகம்! ஒரு வரலாற்று பார்வை

 Kandasamy Mariyappan  :  எனது நண்பர்கள் பலர், ஏன்டா எப்போதும் பார்ப்பணர்களை எதிரியாகவே பாக்குற என்று கோபத்தோடு கேட்கின்றனர்.!
எனக்கும் பார்ப்பணர்களுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறா என்ன.!
உண்மையில், எனக்கு பார்ப்பன நண்பர்கள்தான் அதிகம்.!
எனது கோபம் பாண்டிய, சோழ, சேர, பல்லவ, நாயக்க மன்னர்கள் ஆட்சி, பிரிட்டிஷ் அரசு, இன்றைய குடியரசின் அதிகாரத்தின் அருகில் இருந்து கொண்டு பொது மக்களுக்கு எதிரான சதிகளை தொடர்ந்து செய்து வரும் அந்த ஒரு சிறு கும்பலின் மீதுதான் கோபம்.!
இவர்கள் பின்னால் 90% பார்ப்பணர்களும் அணி வகுத்து நிற்கின்றனர்.!
ஜெயலலிதா, சு.. சாமி, வெங்கட்ராமன், பீஷ்ம நாராயண் சிங், ராஜீவ், சந்திரசேகர் சிங் என்ற பார்ப்பனர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து, 13 ஆண்டுகள் கழித்து 1989ல் ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியை கலைத்துவிட்டனர்.!
திமுக ஆட்சியை கவிழ்த்ததன் மூலம்...
Gateway of South India என்ற அந்தஸ்த்தை தமிழ்நாடு இழந்தது.!
ஆம், IT Industries தமிழ்நாட்டிற்கு வராமல் தான் பிறந்து வளர்ந்த பெங்களூருக்கும், தனது காதலர் ஷோபன் பாபு இருக்கும் ஊருக்கும் தள்ளி விட்டார் ஜெயலலிதா.!
இழப்பு தமிழ்நாட்டிற்குத்தானே ஒழிய ஜெயலலிதாவிற்கோ சு.. சாமிக்கோ இல்லை.!
1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து கலைஞர் 1000HP வேகத்தில் செயல்பட்டதால், தமிழ்நாடு IT Industryயில் இரண்டாம் இடத்திற்கு வந்தது.!
சற்றே சிந்தித்து பாருங்கள்.,

இளையராஜாவின் மலேசிய ரசிகர் இறுதி நிகழ்வில் இளமை என்னும் பூங்காற்று பாடி நண்பர்கள் இறுதி அஞ்சலி

சினிமா-மாலைமலர் : இளைஞர்கள் சிலர் இளையராஜா பாடல்கள் பாடி நண்பனின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
மலேசியாவில் வசித்து வந்த இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர், தான் உயிரிழந்த பின், தன்னை இளையராஜா பாடலோடு வழியனுப்பி வைக்கும் படி தனது நெருங்கிய நண்பர்களிடம் முன் கூட்டியே கூறி இருந்தாராம்.
சில தினங்களுக்கு முன் அந்த இளையராஜா ரசிகர் மறைந்து விட, அவரது இறுதி ஆசையை அவரின் நண்பர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அந்த இளையராஜா ரசிகரின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் காட்சிகளும், அவரது நண்பர்கள் மாஸ்க் அணிந்தவாறு கூடி நின்று, ‘இளமை எனும் பூங்காற்று’ உள்ளிட்ட இளையராஜாவின் சில பாடல்களை பாடி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
அந்த இளையராஜா ரசிகரின் வயது என்ன, அவர் எதனால் உயிரிழந்தார் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 600 படுக்கைகள் காலியாக இருக்கிறது

 மாலைமலர்: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 600 படுக்கைகள் காலியாக இருக்கிறது
கொரோனா தொற்று குறைந்து இருந்தாலும் சென்னையை பொறுத்தவரை உயிர் பலி தொடர்ந்து அதே நிலையில்தான் உள்ளது.
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சத்தமாக இருந்தது.
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக இவ்வாறு ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் இருந்தன.
ஆனால் இப்போது ஆம்புலன்ஸ் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசே‌ஷமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு மொத்தம் 2050 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவை எப்போதும் நிரம்பி வழிந்தன.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி- முதலமைச்சர் அறிவிப்பு

 மாலைமலர் :  கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் காலமானார்! தமிழ்க் கணினித் துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்

May be an image of 1 person, eyeglasses and text that says 'Konica'

Subashini Thf :    பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். தமிழகக் கணினித் துறை வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு அவருக்கு உண்டு என்பதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் தமிழ்க் கணினித் துறை வளர்ச்சி, உத்தமம் அமைப்பு தோற்றத்திற்குக் காரணமானவர்,
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின்  (TVU - Tamil Virtual University) உருவாக்கத்தில் பங்களித்தவர் எனபதோடு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பை நாங்கள் 2001ம் ஆண்டும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கிய போது அதன் தொடக்கத்தில் பங்கு கொண்டவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
2001ம் ஆண்டு தொடங்கி  2010ம் ஆண்டு வரை உத்தமம் அமைப்பின் ஆண்டுக் கருத்தரங்க விழாக்கள் ஒவ்வொன்றிலும் நான் கலந்து கொண்டேன். உத்தமம் அமைப்பின் ஐரோப்பியப் பகுதி செயலாளராகவும், அதன் உலகளாவிய அமைப்பில் செயற்குழு உறுப்பினராகவும் 2010 வரை  நான் இயங்கிய காலம் அது.  உத்தமம் அமைப்பு  உலகளாவிய அளவில் தமிழ்க்கணினி வளர்ச்சிக்கு தரம் அமைத்தல்,  மென்பொருள் உருவாக்க முயற்சிகளை ஒருங்கிணைத்தல் என்ற பல்வேறு பணிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.

ஜி எஸ் டி கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது .. முழு விபரம்

PuthiyathalaimuraiTV's tweet - "#BREAKING மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம்  இல்லை என்பதை நினைவில் கொள்வது சிறப்பு - தமிழக நிதியமைச்சர் பழனிவேல்  தியாகராஜன் ...

மனக்கசப்புடனும், வேண்டா வெறுப்புடனும் ”நன்கொடையாளராக” ஒன்றிய அரசு ஒருபோதும் செயல்பட முடியாது, செயல்படவும் கூடாது"-
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பேச்சு.
செய்தி வெளியீடு எண்:177           நாள்:28.05.2021
28.5.2021 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற
43வது  சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்
முனைவர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் உரையில் உத்தேசிக்கப்பட்ட கருத்துக்கள்]
மதிப்பிற்குரிய  மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மன்றத்தின் தலைவர் அவர்களுக்கும், ஜி.எஸ்.டி. மன்றத்தின் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும், பிற மதிப்புமிக்க சிறப்பு அழைப்பாளர்கள்.
மரியாதைக்குரிய தலைவர் அம்மையார் அவர்களே,
முதலாவதாக, இந்த மாமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது மாநிலத்தின் சார்பாக பங்கேற்பதற்கு என்னைப் பரிந்துரைத்த தமிழக அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குழுவில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில் பங்களிப்பை வழங்கிடவும், இந்த மன்றத்தின் பரிசீலனையில் உள்ள பல்வேறு விஷயங்களில் தமிழக அரசின் கருத்துகளை முன்வைக்கவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

GST கவுன்சில் கூட்டத்தில் PTR பழனிவேல் தியாகராஜன் பேசிய முக்கிய விடயங்கள்

 Sundar P  :   GST கவுன்சில் கூட்டத்தில் PTR பழனிவேல் தியாகராஜன் பேசியது....
சரக்கு மற்றும் சேவை வரியை அவசரமாகச் செயல்படுத்திய காரணத்தால், ஜிஎஸ்டி அமைப்பின் கட்டமைப்பு/வடிவமைப்பானது, குறைபாடுகளைக் கொண்டுள்ளது.
செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்களால், இந்தக் குறைபாடுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்பட்டன.
எந்தவொரு வரிசையிலும் இல்லாமல், அவற்றில் சிலவற்றை நான் குறிப்பிடுகிறேன் இது முழுமையான பட்டியல் அல்ல:
1. ஜிஎஸ்டி கட்டமைப்பின் உரிமை, இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு மாதிரியை மீண்டும் பரிசீலனை செய்து வலுப்படுத்த வேண்டும்.
2 .ஜிஎஸ்டி கட்டமைப்பின் வடிவமைப்பின் காரணத்தால், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அக்கட்டமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைப்பது கடினமாகிறது,
 உள்ளீடுகள் அல்லது உள்ளீட்டு வரவுகளுடன் தொடர்புடைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும்.
3. தனித்தனியாக இயங்கும் கண்காணிப்பு / அமலாக்க மாதிரி (மத்திய, மாநில அரசு ஆய்வாளர்கள் அதிகாரிகளுக்கு இடையில்) எளிமைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படல் வேண்டும்.

வெள்ளி, 28 மே, 2021

தோழர் இரா ஜவஹர் ! வாழ்நாள் கம்யூனிஸ்ட். தொழிற்சங்கவாதி எழுத்தாளர் பத்திரிக்கையாளர் நினைவு பகிர்வு! திரு எல் ஆர் ஜெகதீசன்

May be an image of 2 people

எல் ஆர் ஜெகதீசன்  :  தர்க்கம்; தன்னம்பிக்கை; உற்சாகம். இந்த மூன்றும் சேர்ந்து ஒரு மனித உருவெடுத்தால் அது தான் இரா ஜவஹர். வாழ்நாள் கம்யூனிஸ்ட். தொழிற்சங்கவாதி; எழுத்தாளர்; பத்திரிக்கையாளர்; பல இடதுசாரி பெண்ணியவாதிகளுக்கு வளர்ப்புத்தந்தை. இன்னும் பல அடையாளங்கள்.
சின்கக்குத்தூசி சார் அறையின் மாலை நேரக்கச்சேரியில் நிரந்தர உறுப்பினர்.
முதன்மை உறுப்பினரும் கூட. அவர் உற்சாகமின்றியோ தன்னம்பிக்கையின்றியோ ஒரே ஒருநாள் கூட பார்த்ததே இல்லை.
வாழ்வின் மீதும் சக மனிதர்கள் மீதும் அவ்வளவு நம்பிக்கை வைத்தவர். எத்தனை சண்டைகள். எத்தனை வாக்குவாதங்கள். எத்தனை தர்க்கங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அத்தனையின் முடிவிலும் தோளில் கைபோட்டபடி “சரி சொல்லுங்க தோழர்” என்கிற நிரந்தர அரவணைப்பு. பாராட்டுவதிலும் சரி தர்க்கிப்பதிலும் சரி அவர் மிகுந்த தாராளவாதி.

கரெண்டு கம்பியை கடிப்பாரா ராஜகோபால் ? .. பத்மா சேஷாத்ரி


idaiveli.wordpress.com :தோழர்  மருதையன் : பத்மா சேஷாத்ரி: கரெண்டு கம்பியை கடிப்பாரா ராஜகோபால் ?
30 க்கும் மேற்பட்டவர்கள் புகார் செய்த பின்னரும் ஒரு நிர்வாகம் அலட்சியமாக இருந்திருக்கும் என்பது நம்பக்கூடிய காரணமாக இல்லை.  
பாதிக்கப்பட்ட பெண்களிலும் ஆகப்பெரும்பான்மையினர் பார்ப்பன சமூகத்தினராகவே இருப்பர். எனவே,  பார்ப்பனர் என்ற காரணத்துக்காக ராஜகோபாலை நிர்வாகம் காப்பாற்றியிருக்கிறது என்ற ஊகத்துக்கும் இடமில்லை.
பள்ளியின் இமேஜைக் காப்பாற்றுவதற்காக ராஜகோபாலை காப்பாற்றியிருக்கிறார்கள் என்ற காரணமும் ஏற்கத்தக்கதல்ல. இந்த மாதிரியான பிரச்சனைகளில் குற்றம் செய்த நபரை காதும் காதும் வைத்தாற்போல பள்ளியை விட்டு வெளியேற்றுவதுதான் நடக்கும்.  பாலியல் அத்துமீறல் விவகாரம் பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணையும் நிர்வாகத்தையும் தவிர வேறு யாருக்கும் விசயம் வெளியே கசியாமல் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு ராஜகோபாலை வெளியேற்றியிருந்தால் அந்தப் பள்ளியின் கவுரவம் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்காது. எனவே “இமேஜைக் காப்பாற்ற” என்று கூறப்படும்  காரணமும் ஏற்புடையதல்ல.
உண்மையில் நடந்திருப்பது என்ன?
பள்ளியில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி  விசாரிக்கின்ற அதிகாரம் படைத்த, பள்ளியின் உள்ளக விசாரணைக்குழுவில் குற்றவாளி ராஜகோபாலும் ஒரு உறுப்பினராக இருக்கிறார். அதாவது  ராஜகோபாலுக்கு எதிராக பல பெண்கள் பல ஆண்டுகளாகப் புகார் செய்திருக்கும் நிலையிலும்,  நிர்வாகம் அத்தகைய நபருக்கு விசாரணைக்குழு உறுப்பினர் என்ற பதவியை வழங்கியிருக்கிறது என்றால் இதற்கு என்ன பொருள்?

பத்மா சேஷாத்திரிகள் பதட்டம் அடைவது ஏன்? மேலும் பல குற்றங்களை மூடிமறைக்கும் முயற்சி?

May be an image of outdoors and text that says 'PRAGNYA EDENPARK SIPCOT Park Siruseri PADMA SESHADRI BALA BHAVAN THE CONTEMPORARY SCHOOL BUILT ON TRADITIONAL VALUES Û BALA HAVAN SCHOOL SESHADRI SIRUSERI (Run (RunbyBalaBavanEducatinalTrust) by Bala Bhava Educational Trust READ NOW'

May be an image of 1 person and text

 Sellapuram Valliyammai :

பத்மா சேஷாத்திரிகள் மீது கைவைத்தால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்!
இவர் சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.
முன்பு திமுக புலிகளுக்கு ஆதரவு அளிக்கிறது என்ற கூறி கலைஞர் ஆட்சியை கவிழ்த்த சந்திரசேகர் ஆட்சியின் போது இதே சுப்பிரமணியன்தான் மத்திய சட்ட அமைச்சர்.
கர்நாடக மாநில முதல்வர் எஸ் ஆர் பொம்மை ஆட்சியை கவிழ்த்தமைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் படி அப்படி மாநில அரசுகளை இலகுவாக கவிழ்க்க முடியாது என்பது தெரிந்ததே.
ஆனால் சுப்பிரமணியன் சாமியின் பதட்டத்தை,
பின்னணியில் குற்றங்களை மறைக்கும் அவசரம் தெரிகிறது என்றெண்ணுகிறேன்.
எல்லோரும் எண்ணுவதை விட அங்கு பாரதூரமான குற்றங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்ற கோணத்திலும் பார்க்கவேண்டும்.

Small tip of iceberg மயிலாப்பூர் கிளப் ! கிரிக்கெட், டென்னிஸ் பயிற்சித் திடல், சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட தென் இந்திய விடுதிகள் 24 மணி நேர சொகுசு பார்..

May be an image of street, tree and road

Venkat Ramanujam  : திமுக  அமைச்சர் ..
இதை உலகம் முழுவதும்   பொது மக்கள் பார்வைக்கு வைக்கும் போது யாரும் இதை பார்வையிடலாம் என சொல்வதால்  இதனால் பாதிப்புக்கு உள்ளாக போவது யார் என்ற கேள்விக்கு ..
நிச்சயமாக தமிழகம் முழுவதும்  கோவில் கருவறையை சொந்தம் கொண்டாடும் ஒர் சாதியினர் தான் என்று எப்படி நாக்கில் நரம்பில்லாம்  திராவிட இன தமிழ் மொழி பற்றாளர்களால்  சொல்ல முடிகிறது ..
சிறு ஆதாரம்  .. Small tip of iceberg
மயிலாப்பூர் கிளப்  01- 01-1903 அன்று தொடங்கப்பட்டது .
இதில் கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு  தயார் படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ்,  ஜிம், வட இந்திய, தென் இந்திய உணவு விடுதிகள் முக்கியமாக  24 மணி நேர தண்ணியடிக்கும் சொகுசு  பார் போன்ற வசதிகள் உள்ளன் ..
அதன் முகவரியை பார்த்தாலே அது யாரின் இடம் என்பதும்  உள்ளங்கை நெல்லிகனியாக தெரிந்து விடும் ..
Mylapore Club
39, லஸ் சர்ச் சாலை ,
கபாலி தோட்டம், மைலாப்பூர்,
சென்னை, தமிழ்நாடு 2000
கடந்த 16 வருடமாக இந்த கிள்ப் அருகே  அடியேன்  வசிப்பதால் ..  

வங்கதேசத்திடம் கையேந்தும் இந்திய இலங்கை அரசுகள்! தெற்காசியாவின் கதாநாயகனாக உருவாகும் பங்களா தேஷ்

 Velmurugan P - tamil.oneindia.com : டெல்லி: இந்தியாவுக்கு கோவிட் நிவாரணப் பொருட்களை வழங்குவதிலிருந்து, இலங்கைக்கு அதன் நெருக்கடி நேரத்தில் நிதி உதவி வழங்குவது வரை, வங்கதேசம் தனது பொருளாதார பலத்தை வெளிப்படுத்த தொடங்கியது.
மேலும் அண்டை நாடுகளுடன் ஆழமான உறவுகளை ஏற்படுத்துவதற்கு வங்கதேசம் இந்த உதவிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், வங்கதேசம் இலங்கைக்கு 200 மில்லியன் டாலர் நாணய இடமாற்று வசதியை வழங்க ஒப்புக்கொண்டது.
இது அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும். இந்த உதவி தற்போது இலங்கை எதிர்கொள்ளும் உலகலாவிய கடன் நெருக்கடியை உதவும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு தெரிவித்தன.
ஏனெனில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் நிலைமை மோசமான கட்டத்தில் உள்ளது,

நடிகை சாந்தினியை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்! 5 ஆண்டுகள் குடும்பம் . அப்புறம் கிரேட் எஸ்கேப் . பொதுவெளிக்கு வந்த மாண்பு

minnambalam : சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, ஏமாற்றிவிட்டு, தற்போது கொலை மிரட்டல் விடுக்கிறார் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளார்.

இன்று (மே 28) அவர் அளித்த புகாரில், “நான் மலேசியா குடியுரிமை பெற்ற திருமணமாகாத பெண். சென்னையில் 2017ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். நான், மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தூதரகத்தில் பணிபுரிந்த போது அடிக்கடி என் பணி நிமித்தமாக இந்தியா வந்து செல்வது வழக்கம். கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழக தொழில் நுட்பத்துறை முன்னாள் அமைச்சரும், முன்னாள் ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சித் துறை சம்பந்தமாக என்னைப் பார்க்க விரும்புவதாக எனக்குத் தெரிந்த நண்பர் பரணி என்பவர் மூலம் என்னிடம் கூறினார். அதனால் நான் அமைச்சரின் இல்லத்தில் 3.5.2017-ல் நேரில் மணிகண்டனைச் சந்தித்தேன்.

பெரிய நடிகைகளின் சம்பள பட்டியல்

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.. யார் யார் எத்தனை கோடி வாங்குகிறார்கள் தெரியுமா?
Keerthy Suresh, Tamannaah Bhatia And Anushka Shetty's collection of sarees  is something to die for | IWMBuzz

  மாலைமலர் :நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.. யார் யார் எத்தனை கோடி வாங்குகிறார்கள் தெரியுமா?
நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்றும் படம் வெற்றிபெறும்போது சம்பளத்தை ஏற்றும் நடிகைகள், தோல்வி அடையும்போது குறைப்பது இல்லை என்றும் பட அதிபர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.
இந்த நிலையில் தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளின் புதிய சம்பள பட்டியல் இணையதளத்தில் பரவி வருகிறது. நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை கேட்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நயன்தாரா கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.
அனுஷ்கா ரூ.3 கோடி வாங்குகிறார். சமந்தா ஒரு படத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் படங்கள் உள்ளன. பேமிலிமேன் 2 வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

 மாலைமலர் :தமிழ்நாட்டில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், அடுத்த மாதம் 7-ந்தேதி வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க முதலில் இரண்டு வாரங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கடந்த திங்கட்கிழமையில் இருந்து ஒருவாரம் முழு ஊரடங்கு (தளர்வுகள் இல்லாத) அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் முழு ஊரடங்கு வருகிற ஜூன் 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு  அரசு தெரிவித்துள்ளது. நடமாடும் காய்கறி கடைகள், பழக்கடைகள் அதன்சார்ந்த துறைகள் மூலம் விற்கப்படும் நடைமுறை தொடரும் என அறிவித்துள்ளது.

பத்ம சேஷாத்ரி .... பாலியல் சீண்டலுக்கு மேலும் 3 ஆசிரியர்கள் உடந்தை?.. விசாரணையில்

 Vishnupriya R -  /tamil.oneindia.co :   சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் கைதான பத்ம சேஷாத்ரி ராஜகோபாலனுடன் மேலும் 3 ஆசிரியர்களுக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கே கே நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக இருந்த ராஜகோபாலன் (59) பல ஆண்டுகளாக அவரிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் வந்தன
இந்த புகார்களை முதலில் மறுத்த ராஜகோபாலன், பின்னர் மாணவிகளுக்கு அவர் அனுப்பிய மெசேஜ் ஆதாரங்களை காட்டியவுடன் தான் செய்ததை ராஜகோபாலன் ஒப்புக்கொண்டார்.
விசாரணை தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆசிரியரின் பாலியல் புகார் குறித்து பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் கீதா ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

கரோனாவுக்கு முதலில் பலியான போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பம் பரிதவிப்பு!

The family of the first police inspector who fell victim to the corona is devastated!
nakkheeran.in - அதிதேஜா : சென்னையில் தி.நகர் காவல் சரகம் என்பது மிக முக்கியமான மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. கொரோனா காலத்தில் அங்கு மக்கள் கூடுவதை, கூடுமானவரையிலும்  தடுப்பதோடு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதிலும் காவல் துறையின் பங்களிப்பு அளப்பரியது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இப்போது வரை, மாம்பலம், பாண்டிபஜார் போலீஸார், தங்களது உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் 17-ந்தேதி மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி, கொரோனா தொற்றால் உயிரிழந்தார். தமிழகத்தில் கரோனாவுக்கு எதிரான களத்தில் பலியான முதல் போலீஸ்காரர் இவர்தான்.

வியாழன், 27 மே, 2021

விலங்குகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய ரஷ்யா! உலகிலேயே முதல்முறை

 நக்கீரன் செய்திப்பிரிவு :   உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். அதேசமயம் கரோனா தொற்று விலங்குகளுக்கும் பரவியது. குரங்குகள், புலிகள் ஆகியவற்றுக்கும் கரோனா தொற்று பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேசமயம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், விலங்குகளுக்கு கரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
இந்தநிலையில் ரஷ்யா கடந்த மார்ச் மாதம், விலங்குகளுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. மேலும் அந்த கரோனா தடுப்பூசி நாய்கள், பூனைகள் மற்றும் நரிகள் ஆகிய விலங்குகளின் உடலில், கரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தாக ரஷ்யா கூறியது.

வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி டொமினிகாவில் பிடிபட்டார்! எப்படி? Mehul Choksi Arrested In Dominica

BBC : இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கடன் மோசடியில் தேடப்பட்டு வந்த பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, டொமினிகா என்ற கரீபிய நாட்டில் பிடிபட்டார்.
அவர் ஆன்டிகுவா தேச குடியரிமை பெற்றுள்ள நிலையில், அவரை இந்தியாவுக்கே நாடு கடத்துமாறு ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டின் பிரதமர் காஸ்டன் ப்ரெளன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஸ்டன் ப்ரெளன், “தங்களுடைய தீவில் இருந்து தப்பிச் சென்று மிகப்பெரிய தவறை மெஹுல் சோக்ஸி செய்து விட்டார்.
அவரை எங்களிடம் ஒப்படைக்காமல் நேரடியாக இந்தியாவுக்கே நாடு கடத்துமாறு ஆன்டிகுவா அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். அவரை நாங்கள் திருப்பி ஏற்கப் போவதில்லை,” என்று தெரிவித்தார்.

HLL Biotech தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தர வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

 

கலைஞர் செய்திகள் செங்கல்பட்டில் உள்ள HLL Biotech தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்துக்கு குத்தகைக்கு தருமாறு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் வருமாறு :
“கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஆதரவுக்கரம் நீட்டித்திருப்பதற்கு நன்றி. பெருந்திரளாக தடுப்பூசி செலுத்தப்படுவதே இந்தப் போரில் நமக்கு வாய்த்த பலம்பொருந்திய ஆயுதமாகும். எனவே, பிரதமரின் நோக்கமான 'தற்சார்பு இந்தியா'-வை அடைய உள்நாட்டில் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதை வேகப்படுத்த வேண்டும்.
சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள நவீன மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட தடுப்பூசி உற்பத்தி மையமான HLL பயோடெக் லிமிடெட் நிறுவனம், பயன்படுத்தப்படாமல் உள்ளதை தாங்கள் அறிவீர்கள்.

மாணவ, மாணவிகள் புகார்களைத் தெரிவிக்க ஹெல்ப்லைன்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

kalaignarseithigal.com : சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், இந்த வழக்கு குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும், இணைய வழி வகுப்புகளை கண்காணிப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, இணைய வழி வகுப்புகள் குறித்து சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் இணைய வழியாக கடந்த சுமார் ஓராண்டாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளின் செயல்பாடுகள் குறித்து, சமீபத்தில் வரப்பெற்ற சில செய்திகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்வதற்கு முதல்வர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வறுமையில் பெண் எம்எல்ஏ- பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே உணவு வழங்கும் நிலை .... மேற்கு வங்கம்

வறுமையில் தவிக்கும் பெண் எம்எல்ஏ- பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே உணவு வழங்கும் நிலை
மாலைமலர் : தினசரி கூலித்தொழிலாளியின் மனைவியான எம்.எல்.ஏ சந்தனா. தனது பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட நான்கு மத்திய படை வீரர்களுக்கு தினசரி உணவு அல்லது அவர்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை.
கொல்கத்தா:  மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின்  பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்தான பவுரி.  சமீபத்தில் நடந்து முடிந்த  சட்டசபை  தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்குவங்காளத்தில் நடைபெறும் வன்முறையால் அங்குள்ள பா.ஜ.க  எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும்  மத்திய பாதுகாப்பு படை வழங்கப்பட்டு உள்ளது . தனது கட்சியின் முடிவுக்கு  எம்.எல்.ஏ  சந்தனாவும் கட்டுப்பட்டு உள்ளார்.

பத்மா சேஷாத்திரி பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது குறித்து ஆலோசனை''-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

 நக்கீரன் :சென்னையில் தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பின் போது பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,
பிரச்சினைக்குரிய பத்மா சேஷாத்திரி பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கரோனா தடுப்பு பணிகளுக்காக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

வாட்ஸ் அப் வழக்கு.. சமூக ஊடங்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு

minnambalm : மத்திய அரசு வகுத்துள்ள விதிகள், பயன்பாட்டாளர்களின் தனியுரிமைக்கு எதிராக இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நேற்று (மே25) டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப்பின் மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக செய்திகள் வந்தன. ஆனால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது பற்றிய விவரங்கள் இல்லை.     இந்த வழக்கு குறித்து வாட்ஸப் செய்தி நிறுவனம், “வாட்ஸப்பில் பரப்பப்படும் செய்தியை முதன் முதலில் பதிவிட்டவர் யார் என்று கேட்பது வாட்ஸப் பயன்பாட்டாளர்களின் தனியுரிமையைப் பறிப்பது போன்றதாகும். வாட்சப் தனது பயன்பாட்டாளர்களின் தனியுரிமையை மீறும் வகையிலான, அழுத்தங்களை எதிர்ப்பதில் சிவில் சமூகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

பொருளாதார அறிஞர் அமர்தியாசென்னுக்கு ஸ்பெயின் நாட்டின் உயரிய விருது

பொருளாதார அறிஞர் அமர்தியாசென்னுக்கு ஸ்பெயின் நாட்டின் உயரிய விருது
daylithanthi : புதுடெல்லி, இந்திய பொருளாதார அறிஞர் அமர்தியா சென் 1998-ல் நோபல் பரிசு வென்றார். இவருக்கு தற்போது ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதான ‘பிரின்சஸ் ஆப் ஆஸ்ட்ரியாஸ்’ விருது கிடைத்துள்ளது. சமூக அறிவியலுக்கான பிரிவில் அவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ஸ்பெயின் நாட்டு அமைப்பு நேற்று வெளியிட்டது. சமூக அறிவியல் பிரிவில், 20 நாடுகளை சேர்ந்த 41 பேர் பரிந்துரைக்கப்பட்ட இந்த பரிசுக்கு 87 வயதான அமர்தியாசென் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘வறுமை மற்றும் பஞ்சங்கள்’ என்ற அவரது ஆராய்ச்சிக்காக இந்த பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது, சிறிய சிலையுடன், 50 ஆயிரம் யூரோ தொகை பரிசாக கொண்டது.

புதன், 26 மே, 2021

யார் இந்த "நுங்கம்பாக்கம் வசந்தி".. மொதல்ல அவரை விசாரிங்க.. கொளுத்தி போட்ட குட்டி பத்மினி!

வசந்தி

Hemavandhana  -  tamil.oneindia.com : சென்னை: "மொதல்ல நுங்கம்பாக்கம் வசந்தியை கூப்பிட்டு விசாரிங்க.. என்னை போல எத்தனையோ பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது உங்களுக்கு புரியும்" என்று பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு நடிகை குட்டி பத்மினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரம் சூடு பிடித்து வருகிறது.. தனிப்பட்ட நபரின் ஒரு பாலியல் தொல்லை பிரச்சனையால், மொத்த பள்ளி நிர்வாகமே சிக்கி கொண்டுள்ளது
ஒருபக்கம் பிள்ளைகளின் பாதுகாப்பை இழந்த முன்னாள் பெற்றோர்கள் கதறுகிறார்கள்..
மற்றொரு பக்கம் பள்ளி நிர்வாகத்தின் பல்வேறு முறைகேடுகள் ஆங்காங்கே வெடித்து வருகிறது..

மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது - அமைச்சர் துரைமுருகன்

 மாலைமலர் : சென்னை:   கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், மேகதாது பிரச்சினை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியால் தான் உயிர் பிழைத்தேன் என அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார்.
தமிழக அரசின் எதிர்ப்பால் காவிரி ஆணையத்தின் 3 கூட்டங்களில் மேகதாது பற்றி விவாதிக்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேகதாதுவில் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என்று பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


ராஜகோபால் லேப்டாப்பில் மாணவிகளின் ஆபாச போட்டோ.. பெரும்பாலும் விஐபிகளின் மகள்கள்.. அதிர்ந்த போலீஸ்

 Veerakumar  - tamil.oneindia.com :   சென்னை: பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால், கடந்த 5 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் ஆபாச படங்களை பெற்றதாக, அந்த படங்களை உடன் பணியாற்றும் 3 சக ஆசிரியர்களுக்கு பகிர்ந்து ரசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் வகுப்பு நடக்கும்போது வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு மாணவிகள் முன்பாக வந்து நிற்பது, ஆபாச மெசேஜ் அனுப்புவது என பல்வேறு புகார்களுக்கு உள்ளானவர் பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்
பிரபலமான பள்ளி இதனிடையே, பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது, பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ராஜகோபாலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கே.கே.நகரிலுள்ள பத்மசேஷாத்ரி சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளராக ஷீலா ராஜேந்திரன் உள்ளார். பிரபலமான பள்ளி இது. எனவே, சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் குழந்தைகள் என இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஆர்.கே. நகரில் உருவாக்கப்பட்ட கரோனா மருத்துவ மையம்..!

nakkeeran : இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்துத்தரப்பு மக்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கரோனா பரவலைத் கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தீவிர ஊரடங்கானது அமலில் உள்ளது. அதே போல் தமிழகத்திலும் 24ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கின்ற போதிலும் பலரும் வெளியே சுற்றி திரிக்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் தரப்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க மறுபுறம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். அதனால் பல மருத்துவமனைகளிலும் படுக்கைகள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் நோக்கில் தமிழக அரசானது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தட்டுப்பாடுகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நாயன்மார்கள் சங்கிகளின் முன்னோடிகள்! -- சங்கிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதற்கு பெரியபுராணமே சிறந்த எடுத்துக்காட்டு.

May be an image of text that says 'பெரிய புராணம் மானக் கஞ்சாற நாயனார்: மகளின் திருமண நாளன்று முனிவர் ஒருவர் மானக்கஞ்சாறர் இல்லத்திற்கு வருகிறார் அவரை வரவேற்று தனது மகளை முனிவரை வணங்கும் படி கூற,அவரும் முனிவர் காலில் விழுகிறார் திருமணக் கோலத்தில் இருந்த மகளின் கூந்தலை பஞ்சவடிக்காக (மயிரினால் பூணூலாகத் தரிக்கப்படும் வடம்) முனிவர் கேட்கிறார் முனிவரது விருப்பப்படி மகளின் கூந்தலை அரிந்து கொடுக்கிறார் மானக்கஞ்சாறர்'

Dhinakaran Chelliah   :  நாயன்மார்கள் சங்கிகளின் முன்னோடிகள்
 அறிந்தும் அறியாத நாயன்மார்கள்
சங்கிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதற்கு பெரியபுராணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் எனும் திருத்தொண்டர் புராணம்
பனிரெண்டாம் திருமுறையாக போற்றப்படுகிறது.இதில் 63 நாயன்மார்களின் கதைகளும் 9 தொகையடியார்களின் கதைகளும் உள்ளன.
63 நாயன்மார்கள் என்ற எண்ணிக்கையே சைவத்திற்கு முன்பு வாழ்ந்த 63 சமணப் பெரியார்களுக்குப் போட்டியாக எழுதப்படவை என்ற கருத்தும் நிலவுகிறது.காரணமே இல்லாமல் சிலர் நாயன்மார் பட்டியலில்  சேர்க்கப் பட்டிருப்பதை அவதானித்தால் இது உண்மை என்றே தோன்றுகிறது.
இந்தப் பதிவில்,கண்ணப்பர்,நந்தனார்,
சிறுத்தொண்டர்,அப்பர்,சுந்தரர்,சம்பந்தர்,
காரைக்கால் அம்மையார் போன்றவர்களை விடுத்து பெரும்பாலும் நாம் கேள்விப்படாத நாயன்மார்களின் கதைகளைச் சுருக்கி எழுதியுள்ளேன்.
நாயன்மார்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்தணர்களாவர்.இவர்களை பெரியபுராணம் மறையவர்,அந்தணர்,

வட இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடை உள்ள வரலாற்று தொடர்பு - பேராசிரியர் சிவலிங்கராஜா (யாழ் பல்கலை கழகம்) பேட்டி

 

செல்லபுரம் வள்ளியம்மை  : யாழ்ப்பாணத்தில் பூர்வீக தமிழர்கள் மட்டும்மல்லாது கேரளம் ஆந்திரம் கன்னடம் போன்ற பிற தென்னிந்திய மாநிலங்களில் இருந்தும் வந்து குடியேறிவர்களும் இருக்கிறார்கள் இது ஒன்றும் தவறான விடயம் அல்ல
காலத்திற்கு காலம் அண்டைய தேசங்களில் உள்ள மக்கள் அங்கும் இங்கும் குடிபெயர்வது சாதாரண நிகழ்வுகள்தான்.
சுமார் அறுபதுகள் வரைக்கும் தென்னிந்தியர்கள் யாழ்ப்பாணம் மட்டுமல்லாது மன்னார் சிலாபம் புத்தளம் நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் குடியேறி உள்ளனர் மட்டக்களப்பில் கூட பல இந்திய வம்சாவளியினர் குடிபெயர்ந்துள்ளனர்
இவை ஒரு புதிய செய்தி அல்ல . எல்லோருக்கும் தெரிந்ததுதான்
குடிவரவு சட்டங்கள் கெடுபிடியாக இல்லாத அந்த காலங்களில் அப்படி வருபவர்கள் உள்ளூர் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் அரிசி கூப்பன் (ரேஷன் அட்டையை பெற்றதும் அவர்கள் அடுத்த கட்டமாக வாக்குரிமையையும் பெற்று விடுவார்கள்
ஆனால் இந்த குடியேற்ற வாசிகள் கூடுமானவரை தங்களின் தென்னிந்திய அடையாளங்களை மறைத்து உள்ளூர் மக்களோடு கலந்து விடுவார்கள்
ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் அவர்களை போலீசார் பிடித்து தொந்தரவு செய்ய கூடிய ஒரு நிலையே இருந்தது. 

இந்த சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும்தான்
 ஸ்ரீமாவோ அம்மையார் அடையாள அட்டை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்

எம்ஜியார் வீட்டு சுவரை இறுதிவரை அலங்கரித்த கலைஞரின் படம்

May be an image of 2 people and indoor Radhakrishnan KS . :  அன்பு நண்பரும், எம்ஜிஆர் அவர்களின் பேரனுமான டாக்டர் குமார் ராஜேந்திரன் இன்று எனக்கு அனுப்பியது இந்தப் புகைப்படம்.  எம்ஜிஆரின்  ராமாவரம் தோட்டத்தில்  தன்னைக்  காண வருபவர்களைச்   சந்திக்கும்  வரவேற்பரையில் வைக்கப்பட்டிருந்தது தலைவர் கலைஞர் புகைப்படம். குமார் ராஜேந்திரன்
மேலும் குமார் ராஜேந்திரன் கூறியது, எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்டு அண்ணா திமுகவைத் துவக்கி  தமிழ்நாடு   முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த
போதும், எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்தில் இருந்த வரவேற்பறையில் கலைஞருடைய  புகைப்படத்தை எடுக்காமல்வைத்திருந்ததுநெழ்ச்சியைத் தருகின்றது.
எம்ஜிஆருக்கும்  கலைஞருகும் இடையே  கருத்து  வேறுபாடு இருந்தாலும், நட்பு ரீதியில் அன்பும், பாசமும் இருவருக்கும் இடையே அதிகமாகவே இருந்தது.

நடிகர் சிவகார்திகேயனின் அப்பா கோவிந்தராஜுபிள்ளை தாஸ் இழப்பு பற்றி ஒரு நினைவு பகிர்வு

May be an image of 4 people, people standing and people sitting
சிவகார்த்திகேயன் தாய் தந்தை சகோதரி
Actor Sivakarthikeyan True History/ நடிகர் சிவகார்த்திகேயன் வரலாறு..... -  YouTube

அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்   :  சிவகார்திகேயனின் அப்பா கோவிந்தராஜு பிள்ளை தாஸ்!
(அல்லது)
ஹெச்.ராஜா என்னும் சல்லிப்பயல்!  இதுதான் இந்த பதிவின் தலைப்பு.
இந்த பதிவு என் முகநூலில் ஜூலை மாதம் 2014 ல் என்னால் எழுதப்பட்டது.
இன்றைக்கு ஹெச்.ராஜா என்னும் பொறுக்கிப்பயல் சிவகார்த்திகேயனின் தந்தை யாரோ ஜெயப்பிரகாஷ் என பேட்டி கொடுத்த போது,
பொங்கியெழுந்து ஹெச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய கோ.தாஸ் அவர்களின் சகோதரர்கள் என் அத்தான்கள் கோ.ஜனார்த்தனம், கோ.பாலு, கோ.பாபு, கோ.சிவா போன்றவர்கள் போல என்னால் அமைதிகாக்க இயலாமையால் என்னால் இயன்ற வரை 2014 ல் நான் முகநூலில் எழுதிய அதே பதிவை இப்போது மீள்பதிவாக பதிகின்றேன்.
குறிப்பு : 1. இன்றைக்கு அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களின் வீடியோ டாப் ரகம்!
குறிப்பு 2 : கோ.தாஸ் அவர்கள் ஜெயிலர் அல்ல. சிறைத்துறை எஸ்.பி
குறிப்பு 3 : 2014 ல் நான் முகநூலில் எழுதிய பதிவு லிங் பின்னூட்டத்தில் இருக்கு. பாருங்கள்.
செம்பனார்கோவில் குடும்பம் - திருவீழிமிழலை குடும்பம்... இரண்டுமே பாரம்பரியம் மிக்க குடும்பங்கள். செம்பனார்கோவில் வகையறாவினருக்கு திருவீழிமிழலை குடும்பம் சம்பந்திகள்.

இலட்சத்தீவு... பாசிச பாஜகவின் அடுத்த குறி. காஷ்மீரை போல களவாடப்படும் பூமி

May be a Twitter screenshot of text that says '#savelakshadweep #standwithlakshadweep Twitter storm ESRAMS 2021 MAY 24 4.00 PM TO 9.00 PM 回 FRATERNITY TL MOVEMENT-KERALA'

SaveLakshadweep  கே.எஸ். அப்துல் ரஹ்மான்  : இலட்சத்தீவு... பாசிச பாஜகவின் அடுத்த குறி.
அரபிக்கடலில் அமைந்துள்ள அழகிய தீவுக்கூட்டம்தான் இலட்சத்தீவு.
சேர மன்னன், சேரமான் பெருமானின் காலத்தில் இங்கு மக்கள் குடியேறி வாழ ஆரம்பித்ததாக பழங்கால நூல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் இத்தீவு தீப இலக்ஷம் என அழைக்கப்பட்டது.
பிறகு திப்பு சுல்தானின் ஆளுகையின் கீழ் இத்தீவு நிர்வாகம் செய்யப்பட்டது. பிறகு ஆங்கிலேயர்கள் வசம் சென்றது. 1956ல் சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு இந்திய ஒன்றிய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது.
மொழியியல் மற்றும் கலாச்சார ரீதியாக கேரளாவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள இப்பகுதி மக்கள் மேல்மட்ட கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக கேரளாவையே சார்ந்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இங்குள்ள மக்கள் தொகை 64,473 ஆகும்.

பதறிய ஓய்.ஜி.மகேந்திரா, விலகிய கிரிஜா, ரஜினிகாந்த்..

May be an image of 6 people, people standing and text that says 'பாஜக பிரமுகர் மதுவந்தியின் PSBB பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை தமிழக அரசு மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும்'

Devamathi Venkatesh  :    பதறிய ஓய்.ஜி.மகேந்திரா, விலகிய கிரிஜா, ரஜினிகாந்த்
தங்கள் பள்ளிக்கு இப்படியொரு சிக்கல் வந்து சேருமென்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் ஓய்.ஜி.எம் குடும்பத்தினர்.
சென்னையின் மிக முக்கிய கல்வி அடையாளங்களில் ஒன்றும் நீண்ட நெடிய வருட குடும்பத்தின் பிரஸ்டீஜ் ப்ராப்பர்டிகளிலும் ஒன்றான பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளி ஆசிரியரான கோவிந்த வரதாச்சாரி ராஜகோபால் என்பவர் மீது ஒரே நாளில் அடுக்கடுக்காக எழுந்த பாலியல் சீண்டல் புகார்கள் வரிசையாக சமூக வளைதளங்களில் பகிரப்படவும் ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போயிருக்கின்றனர் ஓய்.ஜி.எம் குடும்பத்தினர்.
செய்தி வெளியான உடன் தன்னளவில் தனிப்பட்ட முறையில் செய்தியை விசாரித்த நடிகர் ஓய்.ஜி.மகேந்திரா, இது ஒரு நீண்ட நாள் சிக்கல் என்றும், ஒரு சில ஆசிரியர்கள் தாங்கள் குறிவைக்கும் மாணவிகளுக்கு வசதி படைத்த மாணவர்களை லவ் லெட்டர் கொடுக்க வைத்து, ஸ்பெசல் கிளாஸ் என்று விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரவைத்து அவர்கள் அசந்தர்ப்பமாக இருக்கும் நேரத்தில் படம் பிடித்து மிரட்டி தங்கள் பாலியல் தேவைகளை தணித்துக் கொண்டதையும், அப்படியான சில படங்களையும் வீடியாேக்களையும் தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டதையும் உறுதி செய்துக்கொண்டப் பின்னர், தனக்கும் பள்ளிக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லையென்ற அறிவிப்பை வெளியிட்டார்.
குடும்ப பாகப்பிரிவினையில் பள்ளியின் உரிமம் முழுவதும் தன் தம்பிக்கு போய்விட்டாலும் தான் அதில் ஒரு ட்ரஸ்டியாக மட்டுமே தொடர்வதாக ஒப்புக்கொண்டார்.

செவ்வாய், 25 மே, 2021

செல்வப்பெருந்தகை! புரட்சி பாரதம், புதிய தமிழகம், வி.சி.க, பகுஜன் சமாஜ் கட்சிகளில் பயணித்து காங்கிரசில் வந்துசேர்ந்தார்

சர்ச்சைக்குரிய மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதா? போராட்டம் நடத்திய  எம்.எல்.ஏ. விஜயதாரணி கைது! | Congress MLA Vijayadharani and other 50 arrest  when they protest ...
தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி

பிபிசி :தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?
போட்டியில் 3 பேர்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர், துணைத் தலைவர் ஆகியபதவிகளுக்கான தேர்வு குறித்து சத்தியமூர்த்தி பவனில் 2 முறை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 13 பேர் புதிய முகங்களாக இருந்ததால், `மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ ஆக தேர்வான சீனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்ற குரல்கள் எழுந்தன.

இதற்கிடையே, கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ், விஜயதரணி, முனிரத்தினம் ஆகியோர் இடையே தலைவர் பதவிக்கு போட்டி நிலவியது.

பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ராஜகோபால் வரதாச்சாரி மீது மேலும் 30 மாணவிகள் புகார்..

Velmurugan P  - tamil.oneindia.com : சென்னை: பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்..
போலீசார் கைது செய்த விசாரணையை தொடங்கிய போது, முதலில் குற்றத்தை மறுத்த ஆசிரியர் ராஜகோபால், சும்மா ஜாலிக்காக மாணவிகளிடம் பேசியதாகவும் ஆனால் அது விபரீதமாகிவிட்டதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபால், இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரில் ராஜகோபால் கைதானார்

மாணவி புகார் சமூக வலைதளங்களில் ஆசிரியர் ராஜகோபாலின் பாலியல் அத்துமீறல் குறித்த வெளியான இன்ஸ்டராகிராம் பதிவுகளை பார்த்து முன்னாள் மாணவி புகார் அளித்திருந்தார். ஆசிரியர் ராஜகோபால் மீது அப்போது பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை என்றும் அவரது பாலியல் தொந்தரவால் தான் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் புகாரளித்திருந்தார்.

13 லாரி டிரைவர்கள்-கிளீனர்கள் கொன்று புதைப்பு; 12 பேருக்கு தூக்கு! ஆந்திரா நெடுஞ்சாலைகளில்,...

nakkeeran : ஆந்திரா மாநில நெடுஞ்சாலைகளில், 2008- 2009 ஆண்டுகளில் பல்வேறு லாரிகள், அதன் ஓட்டுனர்கள் மற்றும் கிளினர்களோடு காணாமல் போயின. அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லாரியும் ஓட்டுநர் மற்றும் கிளினரோடு காணாமல் போனது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அதேபோன்ற மேலும் 4 சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த வழக்குகளில் நடத்தப்பட்ட விசாரணையின்போது முன்னா என்ற அப்துல் சம்மத் தலைமையில் அவரது கூட்டாளிகள், காவல்துறை உடையணிந்து லாரிகளை மறைப்பதும், பிறகு ஆவணங்களை சரிபார்ப்பது போல் லாரி ஓட்டுநர்களையம், கிளினர்களையும் கொன்றுவிட்டு பின்னர் லாரிகளை உடைத்து அதன் பாகங்களையும் உதிரிகளையும் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அம்மாநில காவல்துறை முன்னா மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்தது.

ஏ ஆர் ரகுமானை துரத்திய பத்ம சேஷாத்திரி பள்ளிக்கூடம்! பீஸ் கட்ட முடியாத உனக்கு படிப்பேன்? தெருவில் போய் வாசி யாரும் காசுபோடுவார்கள்.. திமிர் காட்டிய பத்மா ...

மின்னம்பலம் : பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினையுடன் தொடர்புடைய மற்ற சம்பவங்களும் தற்போது வெளியாகி வருகின்றன.

பிரபல பத்மா சேஷாத்திரி  பள்ளியில் பல சினிமா திரைபிரபலங்கள் படித்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் அங்குதான் படித்திருக்கிறார். அந்த நேரத்தில் ரகுமானுடைய குடும்பம் சூழ்நிலை காரணமாக பள்ளி கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை பள்ளியை விட்டு நீக்கியுள்ளது பள்ளி நிர்வாகம்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் பேசிய வீடியோவில், “ பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லையென்றால், கோடம்பாக்கம் "பிளாட்பார்ம்க்கு"  கூட்டிட்டு போங்க, அங்கே பணம் போடுவாங்க…இங்கே உங்க பையனை கூட்டிட்டு வராதீங்க என்று எனது அம்மாவிடம் கூறினார்கள்” என பேசியுள்ளார்.

பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க முடிவு” அமைச்சர் அன்பில் மகேஸ்!

“பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க முடிவு” : அதிரடி காட்டும் அமைச்சர் அன்பில் மகேஸ்!

kalaignarseithigal.com : சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

“பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க முடிவு” : அதிரடி காட்டும் அமைச்சர் அன்பில் மகேஸ்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பி.எஸ்.பி.பி பள்ளி நிர்வாகம் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், காவல்துறை இவ்வழக்கை கையில் எடுத்துள்ளது. தீவிர விசாரணை நடத்திய பின்பு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.    மேலும், ஆன்லைன் வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை யாரும் பின்பற்றவில்லை என்பது இவ்விவகாரம் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், மீண்டும் ஒருமுறை வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.     

பாலியல் புகாரில் சிக்கிய பத்ம சேஷாத்திரி பள்ளிக்கூட வாத்தியார் ராஜகோபாலன் வரதாச்சாரியார் கைது போக்சோ பாய்ந்தது

May be an image of 1 person and text that says 'முக்கிய செய்தி பாலியல் சர்ச்சையில் சிக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம் கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு மாணவிகளிடம் ண பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது அம்பலம் மா எவிகளின் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாக வாக்குமூலம் 24/05/2021 தந்தி Thanthi TV THANTHITV'
minnambalam : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கே.கே.நகரிலுள்ள  பத்ம சேஷாத்திரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் வரதாச்சாரியார் மீது மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்புவது, ஆன்லைன் வகுப்பின்போது அரைகுறை ஆடையுடன் வருவது, தவறான நோக்கத்துடன் தொட்டு பேசுவது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்னாள் மாணவர்கள் அமைப்பு வைத்தது. இதையடுத்து, ராஜகோபாலன் வரதாச்சாரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரச்சினை பெரிதாக வெடித்ததையடுத்து, ராஜகோபாலன் வரதாச்சாரியார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடமும், ராஜகோபாலனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வுக்குட்படுத்தினர்.

திங்கள், 24 மே, 2021

லாலு பிரசாத் யாதவ் மீதான லஞ்ச வழக்கில் ஆதாரம் இல்லை.. வழக்கை முடித்துக் கொண்ட சிபிஐ

Veerakumar - tamil.oneindia.com/ பாட்னா: பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மீதான லஞ்ச வழக்கில் ஆதாரம் இல்லை என்று கூறியுள்ள சிபிஐ, தனது முதல் கட்ட விசாரணையை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த போது 1996ம் ஆண்டு கால்நடைத் தீவன ஊழல் செய்தது தொடர்பாக அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு மொத்தமாக சுமார் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தும்கா கருவூலத்தில் இருந்து 3.13 கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பான 4வது வழக்கில் ஜாமீன் கோரி லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 3 வருடங்களுக்கு பிறகு லாலு, பீகாரிலுள்ள தனது வீட்டுக்கு வந்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொண்டர்களுடன் பேசினார்

பத்மா சேஷாத்திரி குடும்பம் பாலபவன் பள்ளியை கைப்பற்றியது . காமராஜர் கொடுத்த அரசு நிலத்தை சுருட்டிய YGP குடும்பம்

May be an image of text that says 'சந்தோஷ் நடராஜன் BALA BHAVAN SECONDARY SCHOOL FOUNDATION STONE LAIDB SRI .KAMARAJ CHIEF MINISTER MADRAS ON 11-1962 2h Like Reply PremP சந்தோஷ் நடராஜன் திமுக ஆட்சி Reply 2h Like கரிகாலன் கலைஞரிஸ்ட் Prem Pa ஏது.... 1962ல திமுக ஆட்சியா?? 17m Like Reply 1 Prem Pa கரிகாலன் கலைஞரிஸ்ட் அடக்கடவுளே, காமெடி புரியுமா புரியாதாயா உங்களுக்கெல்லாம்?? எழவெடுத்து கொட்றீங்க 16m Like Reply'

எல் ஆர் ஜெகதீசன் :உண்மையில் பத்மா சேஷாத்ரி பள்ளியின் முதன்மை உரிமை யாருக்கு என்பது தொடர்பில் ஒய்ஜிபி குடும்பத்தார் மீது நீண்டநாட்களாக ஒரு வழக்கொன்று நடந்துகொண்டிருந்தது.
அந்த பள்ளியை அவர்கள் சட்டவிரோதமாக கைப்பற்றிக்கொண்டார்கள் என்பது குற்றச்சாட்டு,.
இந்த பள்ளி, பாலபவன் என்கிற பெயரில் பொதுசேவையில் ஈடுபாடுகொட பெண்கள் சிலர் இணைந்து சங்கம் அமைத்து கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது என்றும்,
அந்த மகளிர் கூட்டு முயற்சிக்குதான்அன்றைய காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசாங்க நிலத்தை பொதுப்பள்ளியின் பயன்பாட்டுக்கு கொடுத்ததாகவும்,
ஆனால் காலப்போக்கில் அந்த பள்ளியின் நிறுவன உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஒய்ஜிபி குடும்பம் ஓரம்கட்டி மொத்த பள்ளியையும் தானே கைப்பற்றிக்கொண்டார்கள்,
என்பதும் தான் வழக்கின் பிரதான குற்றச்சாட்டே.!
பள்ளியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த திருமதி ஒய்ஜிபி பள்ளியின் பெயரையும் பால பவன் என்பதில் இருந்து தன் பேருக்கு மாற்றிக்கொண்டதோடு பொதுஅமைப்பாக இருந்த அந்த பள்ளியை தன் குடும்ப நிறுவனமாக மாற்றிக்கொண்டார் என்பது கூடுதல் குற்றச்சாட்டுகள்.

கொத்தடிமைகள் ஆவணப்படம் ! மாதம் ஆயிரத்தி சொச்சம் சம்பளம்.. வருடம் 365 நாளும் 20 மணி நேரம் கொத்தடிமை மக்களின் கதை...

வாஞ்சிநாதன் சித்ரா  :  மாதம் ஆயிரத்தி சொச்சம் சம்பளம் பெற்றுக்கொண்டு வருடம் 365 நாளும் 20 மணி நேரம் தங்களின் உழைப்பை கொத்தடிமையாக கொடுத்த மக்களின் கதை... 

இது 2020ல் நடந்தது..  2020ல் கொத்தடிமைத்தனமா? அதுவும் இவ்வளவு கொடூரமாகவா ? இதையெல்லாம் உண்மை என நம் மனம் ஏற்கவே நேரம் பிடிக்கும்...
 இன்றைய சமூக அவலங்களின் ஆழத்தை புரிந்துகொள்ள இந்த ஆவணப்படம் உதவும்...
30 நிமிடத்தில் பெரிய வலியை , அதை மக்கள் கடந்து வந்த பாதையை , சுயமரியாதை பெற்று அந்த மக்கள் வாழத்தொடங்கிய கதையை படமாக்கியுள்ளோம்..
நிச்சயம் பாருங்கள் . இது உங்களை உலுக்க மட்டும் செய்யாது சிந்திக்கவும் வைக்கும்.. நன்றி

பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ஆன்லைன் பாலியல் தொல்லை - சென்னை கே கே நகர்

BBC :சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் சர்ச்சையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ென்னை கே.கே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து எழுதிய புகார் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர், மாணவர்களுக்கு அக்கவுண்டன்சி மற்றும் பிசினஸ் ஸ்டடீஸ் பாடங்களை நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றியும் வருகிறார். அவர் தொடர்ச்சியாக மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவது, பாலியல் அர்த்தங்களுடன் பேசுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லூரி தேர்வுகள் தேதி விபரம் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

 மின்னம்பலம் : கல்லூரி தேர்வுகள்: தேதியை அறிவித்த அமைச்சர் பொன்முடி
கொரோனா வைரசால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வை எழுத முடியாமல், தேர்வு நடைபெறுமா இல்லையா என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மே 24) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “அண்ணா பல்கலைக் கழக தேர்வு நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.  
மேலும், “2017 ரெகுலேஷன்படி இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும். மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும். ஜூலை மத்தியில் தேர்வுகள் நிறைவுபெறும்.