பார்ப்பன ஆதிக்கமும் பால் பொருள் நுகர்வும்லையும் மலையும் சார்ந்த இடமும் எதுவென்று கேட்டால் குறிஞ்சி என்று சொல்வோம். பாலும் பால் சார்ந்த இடமும் எதுவென்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பார்ப்பனியம் என்று சொல்கிறது தேசிய மாதிரி ஆய்வு கழகம் (National Sample Survey Organization). இதுபற்றிய செய்தி, இந்து ஆங்கில நாளேட்டில் 19-03-2015 அன்று “உண்ணும் உணவை சாதியும் தீர்மானிக்கிறது” எனும் தலைப்பில் வெளிவந்திருக்கிறது பால் பொருட்களுக்கான நுகர்வு பார்ப்பன ஆதிக்க சாதிகளிடையேதான் மிகுந்து காணப்படுகிறது.