சனி, 16 ஜூன், 2018

வடகொரிய அதிபர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்தார்! அமேரிக்கா வட கொரியா சந்திப்புக்கு..

maalaimalar :அமெரிக்க அதிபர் டொனால்டு
டிரம்புடனான வரலாற்று சிறப்பு மிக்க
சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சிங்கபூர் தமிழ் மந்திரிக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் நன்றி தெரிவித்தார்.
#TrumpKimSummit #USPresidentDonaldTrump டிரம்ப் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சிங்கப்பூர் தமிழ் மந்திரிக்கு வடகொரிய அதிபர் நன்றி சிங்கப்பூர்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உடனான சிங்கப்பூர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சீனாவுக்கு பின்னர் வட கொரிய ஜனாதிபதியின் 2-வது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ சிங்கப்பூர் வெளி விவகாரத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்திய வம்சாவளி தமிழரான விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் முக்கிய மந்திரியாக இருக்கிறார். தமிழ் சமூகத்தை சேர்ந்த தந்தைக்கும், சீன சமூகத்தை சேர்ந்த தாய்க்கும் மகனாக பிறந்தவர் பாலகிருஷ்ணன். 57 வயதாகும் பாலகிருஷ்ணனுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

குமாரசாமி : தண்ணீர் திறக்கப்படும்! வெள்ளம் ? அணை உடைந்துவிடும்?

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும்!மின்னம்பலம் :பருவ மழை தொடர்ந்து பெய்துவந்தால், கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குத் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போதிய நீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் திறக்க இயலாது என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் முதல்வர் தெரிவித்துவிட்டார்.
சமீப நாட்களாக கர்நாடகாவில் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தண்ணீரை உடனடியாக திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு, ஆணையம் ஆணையிட வேண்டும்
என்ற கோரிக்கை தமிழகத்திலிருந்து எழுந்தது.

ஐ நா : காஷ்மீர் சுய நிர்ணய உரிமையை இந்தியாவு பாகிஸ்தானும் அங்கீகரிக்க வேண்டும்!

காஷ்மீர் பிரச்சினை: ஐநாவின் முதல் அறிக்கை!மின்னம்பலம் :‘2016இல் காஷ்மீரில் நடந்த போராட்டங்களில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஐநாவின் உடன்பாட்டிலுள்ள சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டும்’ என்று ஐநாவின் மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரில் நடந்துவரும் போராட்டங்களில் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரித்து இதுவரை சர்வதேச மனித உரிமை அமைப்புகள்தான் அறிக்கை வெளியிட்டுள்ளன. முதன்முதலாக ஐநாவின் மனித உரிமைக் கவுன்சில் காஷ்மீர் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இரு நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ள ஐநாவின் 49 பக்க அறிக்கையில், ‘2016இல் நடைபெற்ற போராட்டங்களில் 10,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர். பெல்லட் குண்டுகளால் 1,200 இளைஞர்கள் பார்வை இழந்துள்ளனர். எண்ணற்ற இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து சர்வதேச உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

கௌரி லங்கேஷ் கொலை ..குற்றவாளி வாக்கு மூலம்

லங்கேஷை கொன்றது ஏன்? கொலையாளி வாக்குமூலம் !மின்னம்பலம் : மதத்தைக் காப்பாற்றும் நோக்கில்தான் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷை கொலை செய்தேன் என குற்றவாளியான பரசுராம் வக்மோர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிறப்பு புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் கௌரி லங்கேஷ், பத்திரிகையாளரான இவர், தலித்களுக்கு ஆதரவாகவும், மதவாதத்துக்கு எதிராகவும் தொடர்ந்து எழுதி வந்தார். பெங்களூரு, ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள தன் வீட்டின் முன்பாக மர்ம நபர்களால் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் பரசுராம் வக்மோர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பரசுராம் வக்மோர் நேற்று(ஜூன் 15) வாக்குமூலம் அளித்துள்ளார். மே 2017 ஆம் ஆண்டு மதத்தை காப்பாற்றுவதற்காக ஒருவரை கொலை செய்ய வேண்டும் என என்னிடம் ஒரு கும்பல் வந்தது. ஆனால், நான் யாரை கொலை செய்யப் போகிறேன்,எதற்காக என்று தெரியாது.

வைகோ : அணைகள் பாதுகாப்பு சட்டம் பெருங்கேடு! அணைகள் பறிமுதல் சட்டம் ?

அணைகள் பாதுகாப்பு மசோதா: தமிழகத்திற்குப் பெருங்கேடு!மின்னம்பலம் : அணைகள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கி தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
அணைகள் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா, 2018க்கு மத்திய அமைச்சகம் கடந்த 13ஆம் தேதி அன்று ஒப்புதல் வழங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டம் ஆக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி நடந்தபோது, கேரள மாநில அரசின் சார்பாக மத்தியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள், ‘அணை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் மிகத் தந்திரமாக ஒரு மசோதாவைத் தயாரித்தனர். அந்த மசோதா சட்டம் ஆக்கப்பட்டால், அந்தந்த மாநிலங்களின் எல்லைகளுக்கு உள்ளே இருக்கின்ற அணைகளின் மொத்த நிர்வாகக் கட்டுப்பாடும், பராமரிப்பு உட்பட அனைத்து முடிவுகளும், அம்மாநில அரசுகளுக்கே உரிமை ஆக்கப்படும். இதனால், இந்தியாவிலேயே அதிகமாகப் பாதிக்கப்படப்போகும் மாநிலம் தமிழ்நாடுதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர் எஸ் எஸ் நடிகை கஸ்தூரி வீட்டை நோக்கி திருநங்கைகள் படையெடுப்பு!

Kasturi வெப்துனியா :18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை திருநங்கைகளோடு நடிகை கஸ்தூரி ஒப்பிட்டு தெரித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்ன் கஸ்தூரி வீட்டு முன் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரிது எதிர்பார்க்கபப்ட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.    இதனால், 3வதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி “அரசியல் ரீதியாக இது தவறான நகைச்சுவை.. இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே! 18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்! எனக் குறிப்பிட்டு இரு அரவாணிகளின் புகைப்படங்களை இணைத்திருந்தார்.

2,000 குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரித்த அமெரிக்கா

BBC :கடந்த 6 வாரங்களில் அமெரிக்க எல்லையில் சுமார் 2,000 குழந்தைகள்
அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக எல்லையை கடக்கின்ற வயதுக்குவந்தோர் கைது செய்யப்படுவர்' என்கிற அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கைதாகின்றவர்கள் உடன் வந்த குழந்தைகள் அவர்களின் பராமரிப்பில் இருந்து அகற்றப்பட்டு விடுகின்றனர்.
இந்தப் பிரச்சனை அமெரிக்க அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
எள்ளளவும் சகிப்புதன்மையற்ற இந்த அணுகுமுறையை நியாயப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் திருவிவிலியத்தை (பைபிள்) மேற்கோள்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோர் குற்றவியல் நடைமுறையில் தண்டிக்கப்படுகின்றனர். சட்ட விரேதமாக எல்லையை கடந்து அமெரிக்காவில் நுழைவது முதல்முறையாக இருந்தால், அதனை தவறான நடத்தை குற்றச்சாட்டாக கருதும் நீண்டகால கொள்கை முடிவில் இருந்து இந்த நடவடிக்கை மாறுபட்டதாகும்.
வயதுவந்தோர் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகிறபோது, அவர்களோடு வருகின்ற குழந்தைகள் பிரிக்கப்பட்டு, ஆதரவற்ற சிறார்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

வி.எச்.பி., தீவிரவாத அமைப்பு . சி.ஐ.ஏ., கருத்துக்கு ஆர் எஸ் எஸ் கடும் எதிர்ப்பு

Central Intelligence Agency’s World Factbook, Hindu right-wing outfits Bajrang Dal and Vishwa Hindu Parishad (VHP) have been categorised as ‘religious militant organisations’.
தினமலர் :புதுடில்லி : 'ஹிந்து அமைப்புகளான, வி.எச்.பி., பஜ்ரங் தளம் ஆகியவை, மதவாத தீவிரவாத அமைப்புகள்' என, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., வெளியிட்டுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., எனப்படும், மத்திய புலனாய்வு அமைப்பு, பல்வேறு தகவல்கள் அடங்கிய, 'வேர்ல்ட் பேக்ட்புக்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.அதில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய ஹிந்து அமைப்புகள், 'மதவாத, தீவிரவாத அமைப்புகள்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, அந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன."வி.எச்.பி.,தீவிரவாத அமைப்பா?,சி.ஐ.ஏ.,கருத்து,கடும் எதிர்ப்பு" இது குறித்து, வி.எச்.பி., செய்தி தொடர்பாளர், வினோத் பன்சால், நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ''சி.ஐ.ஏ., வெளியிட்டுள்ள புத்தகத்தில் உள்ள தகவல்கள் போலியானவை. நடவடிக்கை : ''இதுதொடர்பாக, மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். ''தவறான தகவலை கூறியதற்கு, சி.ஐ.ஏ., மன்னிப்பு கோர வேண்டும்,'' என்றார்.

ஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது!' - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
தங்க.தமிழ்ச்செல்வன்vikatan.com/ஆ.விஜயானந்த்: தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனின் திடீர் அறிவிப்பு, 17 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ' ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் நாம்தான் வெற்றிபெறுவோம். ஸ்டாலினும் தினகரனும் இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டிபோட வேண்டியது வரும்' எனப் பேசியிருக்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
' எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை' என்ற கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்தற்காக, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபாலின் இந்த உத்தரவை எதிர்த்து, 18 எம்.எல்.ஏ-க்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வழங்கப்பட்ட தீர்ப்பும் முரண்பட்டதாக அமைந்துவிட்டது. ' தகுதிநீக்கம் செல்லும்' என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், ' தகுதிநீக்கம் செல்லாது' என நீதியரசர் சுந்தரும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, மூன்றாவது நீதிபதியின் முடிவுக்கு இந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்படியொரு தீர்ப்பை எதிர்பார்க்காத தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன், ' இதை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றம் செல்ல மாட்டேன்' என்றவர், ' கட்சித் தாவல் தடைச்சட்ட வரம்புக்குட்பட்டு நாங்கள் வரவில்லை. ஆனால், பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்களும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

ஸ்டெர்லைட் - 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது..! போராடிய மருத்துவ மாணவர் உள்பட

medical studentநக்கீரன் : தூத்தக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மருத்துவ மாணவர் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வேதிக் கழிவுகளாலும், மாசடைந்த காற்றாலும் தங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். கடந்த மே 22ஆம் தேதி 100வது நாள் போராட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து அமைதியாக பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற மக்களை தடுக்க போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும் அறிவித்தார்.

டிடிவி தினகரன் அணியில் புதிய குழப்பம்? - சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவு

THE HINDU TAMIL : சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவெடுத்துள்ள நிலையில், மற்ற எம்எல்ஏக்கள் சட்டப்படி போராடுவார்கள் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் சபாநாயகர் உத்தரவு செல்லாது எனவும் உத்தரவிட்டார். இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராவிட்டால் நான் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாட்டேன் என தெரிவித்து இருந்தார். மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், சபாநாயகர் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தான் மட்டும் வாபஸ் பெற போவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பத்திரிகையாளர் கொலை..! குற்றவாளிகளின் படத்தை வெளியிட்ட காவல்துறை

காஷ்மீர்vikatan : கார்த்திக்.சி காஷ்மீரின் மூத்தப் பத்திரிக்கையாளர் சுஜாத் புஹாரியை சுட்டுக் கொன்றவர்கள் என்று சந்தேகப்படுபவர்களின் புகைப்படங்களை அம்மாநில காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகர் பகுதியிலிருந்து `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரின் பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், புஹாரியை சுட்டவர்கள் என்று சந்தேகப்படுவர்களின் சி.சி.டி.வி கேமரா எடுத்தப் புகைப்படத்தை அம்மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், மூன்று பேர் முகத்தை மூடிக்கொண்டு ஒரு பைக்கில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவன் கோணிப்பையில் ஏதோ ஒன்றை மறைத்துவைத்துள்ளான். அந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் குறித்து அடையாளம் தெரிந்தால் பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

18 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா?

டிஜிட்டல் திண்ணை: 18 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா? மின்னம்பலம் :  வலியுறுத்தும் தினகரன்
“டிடிவி தினகரன் தனது வீட்டுக்கு இன்றும் சில எம்.எல்.ஏ.க்களை வரவழைத்துப் பேசினார். தங்க தமிழ்ச்செல்வன், மாரியப்பன் கென்னடி உட்பட சிலர் மட்டுமே அங்கே போயிருக்கிறார்கள். அவர்களிடம் பேசிய தினகரன், ‘காலத்தைக் கடத்துவதற்காகத்தான் இப்படி ஒரு தீர்ப்பை திட்டம் போட்டு சொல்ல வைத்திருக்கிறார்கள். அவங்க ப்ளான்படி எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துக்கு இதை இழுத்துடலாம் என்று கணக்குப் போடுறாங்க. நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். அவங்க இனி என்ன உங்களை தகுதி நீக்கம் செய்வது? நீங்களே ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களாக ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டால் என்ன? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என நீங்கள் கடிதம் கொடுத்தால் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

தூத்துக்குடி ரஜினி மீது போலீஸில் புகார்!

minnambalam : தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி சென்றபோது, ரஜினி பேசிய பேச்சினை ‘கொலை மிரட்டலாக’ கருதி, வழக்குப் பதிவு செய்யுமாறு ஓசூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓசூரின், சென்னத்தூர் பகுதியைச் சேர்ந்த மனுதாரர் சிலம்பரசன், ஓசூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள மனுவில், “பொய்யான கருத்தை பரப்பி போராடினால் உயிர்பலி ஆகிவிடும் என எதிர்மறையாக தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் கொலை மிரட்டல் விடுத்து எச்சரிக்கை செய்து, மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடி, துப்பாக்குச் சூட்டுக்கு பலியான 13 பேர்களை சமூக விரோதிகள் என மறைமுகமாக பேசும் வகையில் கொச்சைப்படுத்தி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும், தியாகங்களையும், போராட்டங்களையும், அவமதிக்கும் வகையில் பேசி போராட்டத்திற்கு சமூக விரோதிகளே காரணம். போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் எனக் கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய மனுதாரர் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கொடுத்த புகாரின் பேரில் மனு” என்று குறிப்பிட்டிருப்பதாக காவல் நிலைய மனு ரசீது கொடுக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளி, 15 ஜூன், 2018

பெரியாரும் அண்ணலும் .. ஒரு தேவையில்லாத வாதம் பரப்பப்படுகிறது.. பார்ப்பனிய நோக்கம் பரப்பபடுகிறது?

Krishnavel T S : பெரியாரும் அண்ணலும்
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு தேவையில்லாத வாதம் பரப்பப்படுகிறது. அதாவது அண்ணல் உயர்ந்தவரா? பெரியார் உயர்ந்தவரா? என்ற ஒரு முட்டாள்தனமான வாதம்.
சமத்துவ சமுதாயத்தை பார்க்க வலது கண் முக்கியமா? இடது கண் முக்கியமா? என்பது போன்ற கேள்வியே அது, ஒரு கண் தான் முக்கியம் என்று சொல்லி இன்னொரு கண்ணை குருடாக்கும் முயற்சியே இது, இறுதியில் இரண்டு கண்ணையும் இழந்து நாம் குருடாக அலையவேண்டும் என்பதே பார்ப்பனிய நோக்கம்
பெரியாரும் அண்ணலும் இருவரும் சமூக வர்க்க அடிப்படையில் இருதுருவங்களில் பிறந்தவர்கள்,
பெரியார் மிகப்பெரிய கோடிஸ்வரர் குடும்பத்தில் பிறந்தவர் படிக்க வேண்டிய அவசியமோ வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய அவசியமோ இல்லாத சூழலில் பிறந்தவர், இவரின் கல்வித் தகுதி வெறும் நான்காம் வகுப்பு மட்டுமே, ஆனால் சமூக அக்கறையின் காரணமாக தன் வாழ்நாள் மற்றும் தனது அனைத்து சொத்துகளையும் திராவிட இயக்கத்துக்காக தியாகம் செய்தவர்.
அண்ணல் மிக ஏழ்மையான மற்றும் தீண்டாமையான குடும்பத்தில் பிறந்தவர், பள்ளி செல்வதே கனவு என்னும் சூழலில் தன உழைப்பால் லண்டன் சென்று பாரிஸ்டர் வரை படித்தவர், இந்தியா திரும்பியபின் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பு இவரை தேடிவந்த போது, அதை ஏற்றுக்கொண்டு பணக்கார கோமானாக வாழ்ந்திருக்க முடியும், ஆனால் என் பணி மக்கள் பணியே என்று அந்த பதவியை மட்டுமல்ல அது போன்ற பல்வேறு பதவிகளை தூக்கி எரிந்தவர்.
இவர்கள் இருவரும் இல்லை என்றால் இன்றும் இந்தியாவில் சமூக நீதி என்பது வெறும் கனவு மட்டுமே
1937-ல் அண்ணல் “Anihilation of Caste” என்ற நூலை எழுதி, அதற்கு காந்தியார் வரை பலர் எதிர்ப்பு தெரிவிக்க, இறுதியில் தனது சொந்த வெளியீடாக அவரே வெளியிட்டார்.
ஆனால் அதே 1937-ல் பெரியார், அண்ணலின் அனுமதியுடன், அந்த நூலை தனது குடியரசு நாளேட்டில் தொடராக வெளியிட்டு, பின்னர் அதனை தமிழில் நூலாகவும் வெளியிட்டார்.

சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை- தீக்குளிப்போம் என விவசாயிகள் அறிவிப்பு!

சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு- தீக்குளிப்போம் என அறிவிப்பு மாலைமலர் : சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தீக்குளிப்பதாகவும் அறிவித்துள்ளனர். #GreenWayRoad சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்< சேலம்: சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் போது, சேலம் மாவட்டத்தில் அரமனூர், மஞ்சுவாடி, ஆச்சாங்குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி, மூக்கனூர், ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, எருமாபாளையம், சுக்கம்பட்டி, வெள்ளையப்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், பூலாவரி அக்ரகாரம் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பலரது வீடுகளும் இடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

கிணற்றில் குளித்த தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்!


மின்னம்பலம் :மகாராஷ்டிராவில் விவசாயக் கிணற்றில் குளித்ததால் இரு தலித் சிறுவர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோவோம் மாவட்டத்தின் வகாதி கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் தலித் சிறுவர்கள் இருவர் ஜூன் 10ஆம் தேதியன்று குளித்துள்ளனர். குளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது அவர்களை வழிமறித்த அப்பகுதி இளைஞர்கள் 2 போ் சிறுவர்களின் ஆடைகளைக் களைந்து பெல்ட், கம்பால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அப்போது இளைஞர்கள் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். வீடியோ எடுக்கும்போது சிறுவர்கள் உடலை இலைகளால் மறைத்துக் கதறுகின்றனர். எனினும் சிறுவர்களைத் தொடர்ந்து தாக்குவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருவதைத் தொடர்ந்து சிறுவர்களைத் தாக்கிய ஈஸ்வா் ஜோஷி, பிரஹ்லாத் லோகா் ஆகிய இரு இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

7 பேர் விடுதலை மனு: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!

7 பேர் விடுதலை மனு: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!minnambalam :ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்றுவரும் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ் ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.

நாளை அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறை ரத்து: தமிழக அரசு அரசாணை வெளியீடு

நாளை அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விடுமுறை ரத்தானதால் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நீதிபதி எப்படி தீர்ப்பளித்தாலும் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுவது நிச்சயம்

tamilthehindu : மு.அப்துல் முத்தலீஃப் = 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு சிக்கல் என்ற கருத்து வைக்கப்படுகிறது. தற்போது 3-து நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டாலும் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது ஆளும் அரசுக்கு சிக்கலை தோற்றுவிக்கும் என்கின்ற கருத்து வைக்கப்படுகிறது.
18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தகுதி நீக்கம் செல்லும், செல்லாது என இரண்டு வகையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆளுங்கட்சிக்கு சிக்கல் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 234 இதில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எண்ணிக்கை 216 ஆக உள்ளது. அதனால் மெஜாரிட்டிக்கு 109 பேர் தேவை என்ற நிலையில் 110 பேர் உள்ள எடப்பாடி ஆட்சிக்கு பிரச்சினை இல்லாமல் உள்ளது.
தலைமை நீதிபதி அமர்வில் இரண்டு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்பை வெளியிட்ட நிலையில், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணை காரணமாக மேலும் 3 மாதங்கள் தள்ளி போகலாம்.

சின்னகுத்தூசி - தியாகராஜன் .. சுயமரியாதை; சுயசாதி மறுப்பு; சமூகத்துக்காக வாழ்தல்!

சிறப்புக் கட்டுரை: சுயமரியாதை; சுயசாதி மறுப்பு; சமூகத்துக்காக வாழ்தல்! மின்னம்பலம்: தனியன் - சின்னக்குத்தூசி பிறந்த தின (ஜூன் 15) கட்டுரை
சின்னக்குத்தூசி தியாகராஜன். மூத்த பத்திரிகையாளர்; பல பத்திரிகையாளர்களை உருவாக்கியவர். தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் விமர்சகர் என்பதாகப் பரவலாக இந்தத் தலைமுறையினரிடம் அறியப்பட்டிருக்கும் அவருக்கு வேறு பல தனிச் சிறப்புகளும் உண்டு.
இடைவிடாத படிப்பாளி. சமகால அரசியல் தொடர்பான புத்தகங்கள் முதல் சரித்திரச் சான்றாவணங்கள் வரை, உள்ளூர் தினசரி, வார, மாத சஞ்சிகைகள் முதல் அனைத்திந்திய ஆங்கிலப் பத்திரிகைகள் வரை ஒன்றுவிடாமல் சொந்தக் காசில் வாங்கி ஓயாமல் படித்தவர். பாதுகாத்தவர். வாழ்நாளின் பெரும்பகுதியில் எதையேனும் இறுதிவரை வாசித்துக்கொண்டே இருந்தவர்.
எதையும் வாசிக்காத நேரத்தில் இசையோடு வாசம் செய்வார். அவர் தேர்ந்த இசை ரசிகர். மரபுரீதியான கர்னாடக சங்கீதம் முதல் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் வரை அவர் கேட்டு ரசிக்காத இசை மரபோ, வடிவமோ ஒன்றில்லை. கலைகளை வளர்த்த காவிரி மண்ணின் மைந்தரான அவருக்குப் பிடித்தது மரபிசையான கர்னாடக சங்கீதமானாலும், இசையின் எல்லாப் புதிய போக்குகளையும் அவர் கேட்டு ரசித்தவர். அதன் மூலம் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருந்தவரும்கூட. ஒரு குழந்தையின் குதூகலத்துடன்.

பஞ்சமி நிலம் - பூர்வ குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை தேடி...

mumbaivizhithezhu iyakkam இது முதல் பகுதி , முழுமையான edit செய்த வீடியோ அல்ல , ஒரு விவாதத்தை பத்திரிக்கை , இயக்கம், கட்சி மூலம் தொடங்குவதற்காக சுற்றலுக்கு அனுப்பியது . இறுதி வடிவத்துடன் சென்னையில் விரைவில் வெளியிடுகிறோம். இன்னும் பல ஆளுமைகளிடம் பஞ்சமி நிலம் குறித்து நேர்காணல் எடுக்கப்பட உள்ளது அனுமதியும் வாங்கிவிட்டோம் . முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா , கருணாநிதி அவர்களிடம் முயற்சித்து முடியாமல் போனது ஆகையால் பல ஆண்டுகள் கழித்து தாமதமாக வெளிப்டுடுகிறோம் . பகுதி 2 இல் தமிழ் தேசிய தலைவர்கள் , புரட்சிகர அமைப்பு தலைவர்கள் , திராவிட இயக்க தலைவர்கள் , கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்கள் , மாற்று கருத்துக்கொண்ட தலைவர்கள் என பலரிடம் நேர்காணல் எடுக்கப்பட உள்ளது . பிரிட்டிஷ் இந்தியாவில் கலெக்டர் தீரண்மேற்க் அவர்களில் பெரும் முயற்சியால் பிரிட்டிஷார் அறிவிக்கப்பட்ட பஞ்சமி நிலம் பறிக்கப்பட்டதை பற்றி பிரிட்டிஷார் என்ன நினைக்கிறார்கள் என்று இங்கிலாந்து அரசிடமும் கேட்கவுள்ளோம் . காத்து இருக்கவும் .

வியாழன், 14 ஜூன், 2018

காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரி சுட்டுக்கொலை.. 'Rising Kashmir' editor Shujaat Bukhari shot dead


BBC :காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால்
சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.'ரைசிங் காஷ்மீர்' இதழின் ஆசிரியர் சுஜாத் புஹாரி மற்றும் அவரது அலுவலக பாதுகாவலர் ஒருவர், ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இன்று மாலை அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிபிசியிடம் பேசிய ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தித்தொடர்பாளர் வஹீத் பாரா, அலுவலகம் கொண்டுசெல்லப்படும் வழியில் புஹாரி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
"ஈத் பண்டிகைக்கு முந்தைய நாள் தீவிரவாதம் ஒரு இழிவான நிலையை அடைந்துள்ளது," என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் உமர் அப்துல்லா, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

முதல் தீர்ப்பு வந்தவுடன் எழுந்த ஆரவாரம் இரண்டாவது தீர்ப்பு வந்தவுடன் அடங்கியது

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது சென்னை ஐகோர்ட்      மாலைமலர் : 18   எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் தமிழக சட்டசபை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.  முதல் தீர்ப்பு வந்தவுடன் எழுந்த ஆரவாரம் இரண்டாவது தீர்ப்பு வந்தவுடன் அடங்கியது
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு அளித்தனர். இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் அரசாணை செல்லாது; அமைச்சரவையைக் கூட்டுக! மதுரை உயர்நீதிமன்றம் ..

ஸ்டெர்லைட் அரசாணை செல்லாது; அமைச்சரவையைக் கூட்டுக!மின்னம்பலம்: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை வலிமையாகவும், செல்லத்தக்கதாகவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு அனுமதி இல்லை என்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை புதிதாக வெளியிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஜூன் 14) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக தொடரப்பட்ட 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அடுக்கடுக்காக வினா எழுப்பியுள்ளது.

18 எம் எல் ஏக்கள் வழக்கு நீதிபதிகள் குழப்பம் ...இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு - 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றம்!

நக்கீரன்: 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா, நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜீ தெரிவித்துள்ளார். முன்னதாக, முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக் கோரி கடந்த ஆண்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார்.
 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். ஆனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.< இதன் பின், தகுதி நீக்கம் ஏன் செல்லும்? என விளக்கம் அளித்த நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது, சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.

வருமானம் தரும் முருங்கை இலை! - திருநெல்வேலியிலிருந்து துபாய்க்கு...

விகடன் :இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன் : இலை, காய் என அனைத்துப் பகுதிகளும் பயனளிக்கக்கூடிய தாவரங்களில் முருங்கையும் ஒன்று. உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துக்கள் முருங்கையில் கொட்டிக் கிடப்பதால், முருங்கைக்கு உலகம் முழுவதும் தேவை இருந்து வருகிறது.& முருங்கை அதிகம் விளையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், நம் நாட்டிலிருந்து அதிகளவில் முருங்கை இலை, காய்கள், விதைகள் ஆகியவை ஏற்றுமதியாகின்றன. அந்தவகையில் முருங்கைக் கீரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த டெல்சன்.
திசையன்விளையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடகுளம் கிராமத்தில்தான் டெல்சனின் முருங்கைத் தோட்டம் இருக்கிறது. ஒரு காலைவேளையில் இலை பறிப்புப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த டெல்சனைச் சந்தித்தோம்.

18 அதிமுக எம் எல் ஏக்கள் .. நேர்மையான தீர்ப்பு வரும் என்று எவரும் நம்பவில்லை ..

Shankar A : நம்பிக்கை.. நகைச்சுவையெல்லாம் ஒரு பக்கம் வைத்து
விடுவோம். இன்று வெளிவர உள்ள 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று என்னோடு வாட்சப்பில் விவாதிக்கும் உயர் மற்றும் உயர் உயர் அதிகாரிகளில் ஒரே ஒருவர் கூட, இந்தத் தீர்ப்பு நியாயமாக, சட்டத்தின்பாற்பட்டு வரும் என்று கூறவில்லை.
இல்லை சார். கர்நாடகாவில் எடியூரப்பா வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு இந்த 18 எம்எல்ஏ வழக்குக்கு அப்படியே பொருந்தும் என்று கூறினால், அட என்ன சங்கர் இன்னுமா இந்த கோர்ட்டை நம்பிக்கிட்டு இருக்கீங்க என்பதையே பெரும்பாலானோர் பதிலாக அளிக்கின்றனர்.
வழக்கறிஞர்கள் இன்னும் விபரமாக, தலைமை நீதிபதிக்கு வரவுள்ள உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை பிஜேபி அரசு எப்படி முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. நினைத்த தீர்ப்பை வழங்காத நீதிபதிகளை எப்படி பழி வாங்குகிறது என்பதை சுட்டிக்காட்டி, 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உதாரணமாக காட்டுகிறார்கள்.

தூத்துக்குடி: தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கனிமொழி

மின்னம்பலம்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு விரிவான புகார் ஒன்றை நேற்று (ஜூன் 13) அனுப்பியிருக்கிறார். அதில் போலீஸாரின் ஆவணங்களில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை தோலுரித்துக் காட்டியதோடு, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கனிமொழி வற்புறுத்தியிருக்கிறார்.
“தமிழக உளவுத் துறைத் தலைவர் பொறுப்பையும், கூடுதலாகத் தமிழகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்பையும் கவனிக்கும் சத்தியமூர்த்தி ஐபிஎஸ் மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கீடு செய்யவும் கணிக்கவும் தவறிவிட்டார். மேலும், இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் அவர் தவறிவிட்டார்.

சித்தராமையா : ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சி வழங்கினேன் .. மக்கள் ஏமாற்றி விட்டார்கள்

வெப்துனியா :மைசூரு : சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை
தேர்தலில், முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். இருப்பினும் வருணா பகுதியில் மகனை வெற்றி அடைய வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்றார்.
இதற்கிடையில் மைசூருவில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, மக்கள் என்னை முட்டாளாக்கி விட்டனர். இதுவே போதும். நான் வருணா தொகுதியில் போட்டியிட்டிருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருப்பேன். நீங்கள் என்னை தோற்கடித்திருக்க மாட்டீர்கள். 2008 ம் ஆண்டு வருணா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானேன். 2013 ல் முதல்வரானேன். நான் 40 வருடங்களாக அரசியலில் உள்ளேன். 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன். எதற்காக மக்களும், கட்சி தலைவர்களும் என்னை அந்த தொகுதியில் இருந்து வெளியேற்றினார்கள் என தெரியவில்லை. ஊழல், லஞ்சம் இல்லாத நிலையான அரசை தந்தேன். ஏழை மக்கள் மீதே என் கவனம் இருந்தது. கர்நாடக மக்கள் பசியில் இருந்து விடுபட அன்னபாக்யா திட்டத்தை கொண்டு வந்தேன். 4 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கினேன்.

சாரு நிவேதிதா : காலா தலித்களுக்கும் சமூகநீதி போராட்டத்துக்குமே எதிரானதாகத்தான் அமைந்து விட்டது

கரிகாலன் படம் முழுவதுமே உயர்ஜாதி ஹரிதாதாவுக்கு முன்னால் பதற்றப்படுகிறான். இந்தப் பதற்றம்தான் இந்தப் படம் முன்வைக்கும் ஆபத்தான தலித் உளவியல். படம் முழுவதுமே கரிகாலன் தாழ்வு மனப்பான்மையிலேயே செயல்படுகிறான்.
Charu Nivedita  : காலா
முன்வைக்கும் தலித் உளவியல்

இன்று காலை பா. வெங்கடேசன் பேசினார். கமல்ஹாசனின் படங்களை மதிப்பீடு செய்யும் போது என்னிடம் இருக்கும் சீரியஸான மனோபாவம் காலா விமர்சனத்தில் இல்லை என்று சொன்னார். உண்மைதான் என்றேன். காலா போன்ற ஒரு படத்தை நான் மதிப்பீடு செய்வதே தேவையில்லாததுதான்; ஆனால் அது தமிழக அரசியலோடு மிக நெருக்கமாகப் பிணைந்து விட்டதால் எழுதாமல் இருக்க முடியவில்லை என்று விளக்கினேன். பிறகு பா. வெங்கடேசன் சுமார் அரை மணி நேரம் பேசினார். பா. வெங்கடேசன் எழுத்தாளர், நாவலாசிரியர் மட்டும் அல்ல; 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஃப்ரெஞ்ச் அமைப்பியல்வாதத் தத்துவவாதிகளின் எழுத்தை மிக ஆழமாகப் பயின்றவர். கால் நூற்றாண்டுக்கு முன்னால் அவர் ஹொகனேக்கல்லில் அமைப்பியல்வாத ஆசிரியர்களில் ஒருவரான ரொலான் பார்த்தின் Image, Music, Text நூல் பற்றிப் பேசியது எனக்கும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
இப்போது நான் எழுதுவதெல்லாம் இன்று பா. வெங்கடேசன் காலா பற்றிப் பேசியதில் நான் புரிந்து கொண்டது. நீங்களே எழுதுங்களேன் என்றேன். அதற்கான சூழல் இல்லை என்றார். புரிந்தது. எனவே அவர் பேசியதன் சுருக்கத்தை நான் புரிந்து கொண்ட அடிப்படையில் தருகிறேன். அவரே எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு தீர்ப்பு

HC to deliver verdict on 18 AIADMK MLAs Disqualification case on today tamil.oneindia.com/ Mathi :சென்னை: தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி கடந்த ஆண்டு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடரப்பட்டதையடுத்து தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரைத்தார். இதையடுத்து 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஜனவரி 24-ந் தேதி வழக்கு விசாரணைகளை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

புதன், 13 ஜூன், 2018

கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் இப்படி ஒரு ஆளையா பிரதமராக தேர்ந்தெடுப்பது?

Ashok.R : மோடி என்ன செய்தாலும் அவரிடம், “அழுகை வர்ற மாதிரி காமடி ல் அவரோ இந்நேரம் அந்த வீடியோவை பார்த்துப் பார்த்து, தன் திறமையை எண்ணி எண்ணி பூரித்துக் கொண்டிருப்பார்!! இந்திய வரலாற்றில் மட்டுல்ல, உலக வரலாற்றிலேயே கூட இப்படி ஒரு காமடி சைக்கோவை எந்த நாடும் தலைவராகப் பெற்றிருக்காது. ஏதோ ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என்றால் கூட பரவாயில்லை. ஜனநாயக ஆட்சியில் கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் இப்படி ஒரு ஆளையா பிரதமராக தேர்ந்தெடுப்பது? கொஞ்சமாவது அறிவு வேண்டாமா? ஆனால் ஒன்னு. என்னதான் சொல்லுங்க. தமிழனுக்கு கோடிகோடியா கொட்டிக்கொடுத்தாலும் இப்படி ஒருத்தருக்கு ஓட்டுப் போட மாட்டான்! தமிழன் தமிழன்தான். ‘இந்தி’யன் இந்தியன்தான்!
பண்ணாதீங்க ஜீ...,” என சொல்லக்கூட ஆள் இல்லை. டீமானடைசேஷன், ஜிஎஸ்டியில் இருந்து இன்று அவர் வெளியிட்டிருக்கும் உடற்பயிற்சி (??) வீடியோ வரை இதுதான் நிலைமை. அவர் பெருமையாக வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவைப் பார்த்தால் பெருங்குடலில் இருந்து சிறுகுடல் வரை குமட்டிக்கொண்டு வருகிறது. வடிவேலு, மிஸ்டர் பீன் என எல்லோரையும் கலந்த உடல்மொழி! உலகம் முழுதும் அந்தக் கருமத்தை பார்த்து நம்மை இந்நேரம் காறித் துப்பிக்கொண்டிருப்பார்கள். ஆனா
குறிப்பு: 2019யிலும் இவர் பிரதமர் ஆனால், ஆளுக்கொரு குழி நோண்டி உள்ளே படுத்துக்கொள்ளுங்கள். இயற்கையாக சாவு வரும்வரை காத்திருப்பதெல்லாம் பெரிய சித்ரவதையாக இருக்கும்!

மோடிக்கு குமாரசாமி பதிலடி : நாட்டின் பிட்னஸ் மீதுதான் எனக்கு அக்கறை!


கர்நாடகாவின் பிட்னஸ் மீது அக்கறை: குமாரசாமி மின்னம்பலம்: கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்று வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இதேபோல, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் தனது வீடியோவினைப் பதிவிட வேண்டுமென சவால் விடுத்தார். இதற்குப் பதிலளித்துள்ள குமாரசாமி, கர்நாடகாவின் பிட்னஸ் பற்றியே தான் அதிகம் அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த மாதம் தனது வீடியோ ஒன்றைச் சமூக வலைதளமொன்றில் வெளியிட்டார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதுபோல, ஒவ்வொருவரும் தாங்கள் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிட வேண்டுமெனக் கூறியிருந்தார்.

சொத்துகுவிப்பு வழக்கில் ராஜேந்திர பாலாஜி மாட்டினார் ..

வெப்துனியா :சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் எந்த நேரத்திலும் அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, அமைச்சராக பொறுப்பேற்ற பின் திருத்தங்களில் 75 செண்ட் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கியுள்ளார் எனவும், அதன் மதிப்பு ரூ.8 கோடி ரூபாய் எனவும், இந்த சொத்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர் வாங்கிய சொத்து, இதுபற்றி விசாரிக்க வேண்டும் என மகேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

BBC :இலங்கை இந்து விவகார துணை அமைச்சராக முஸ்லிம் ... எதிர்ப்பு கிளம்புகிறது

அமைச்சர் காதர் மஸ்தான்
இலங்கையில் இரண்டு ராஜாங்க அமைச்சர்களும் 5 துணை அமைச்சர்களும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.>இதில் ஒரு துணை அமைச்சரின் நியமனம் இங்கு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
நியமிக்கப்பட்ட கே. காதர் மஸ்தான் என்பவர் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி (வளர்ச்சி) மற்றும் இந்து மத விவகாரம் ஆகியவற்றுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்து மத விவகாரத்தை கவனிக்க ஒரு முஸ்லிமை பதவியேற்கச் செய்துள்ளது இலங்கையில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரம் ஆகியவற்றுக்கான அமைச்சராக டி. எம். சுவாமிநாதன் என்கின்ற இந்து மதத்தவரே இருக்கின்ற போதிலும் அவருக்கு துணை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மாற்று மதத்தை சேர்ந்தவராக இருப்பது குறித்து பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை ... Aircells Maxis வழக்கு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்மாலைமலர் :ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். புதுடெல்லி: ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சுமார் 3500 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் தடை விதித்திருந்தது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.& இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் நேற்று சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக இடைதேர்தலில் காங்கிரஸ் வெற்றி

பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி - சட்டசபையில் பலம் 79 ஆக அதிகரிப்பு
காங்கிரஸ் சவுமியா ரெட்டி
மாலைமலர் :கர்நாடக மாநிலம் ஜெயநகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா வெற்றி பெற்றார். இதையடுத்து சட்டமன்றத்தில் காங்கிரசின் பலம் 79 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரு: கடந்த மே 12-ந்தேதி கர்நாடக சட்டசபை தேர்தலின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. கடந்த 11-ந்தேதி அங்கு தேர்தல் நடந்தது.< காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியாவும், பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் தம்பி பிரகலாத்தும் போட்டியிட்டனர்.

ஜிண்டால் நிறுவனத்துக்காக சேலம் சென்னை 8 வழிச்சாலை .... தமிழக இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதற்கு..

பழனி ரமேஷ் குமார் : சேலம் To சென்னை விமான
சேவை 8 வழிச்சாலை
தொடக்கம்.. ஏன் தெரியுமா?
# சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள்
# இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்,
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி , # சென்னை - சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக அறிவித்துள்ளார். இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய்,
தமிழ் நாட்டிற்கு # எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத,
# மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க
# பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?
அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம்
அமையவிருக்கும் சாலையானது # கார்ப்பரேட் நிறுவனமான # ஜிண்டாலுக்காக .( Jindal steel)
ஆம், # ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக
தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது,
#ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை
புதியதிட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது.
அதில் முதன்மையான திட்டம் #சேலம் மாவட்டத்தில் உள்ள # கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது. இரண்டாவது # திருவண்ணாமலை மாவட்டம் # கல்வராயன்மலையில் இருந்து # இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பது,
இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும் # இரும்புத்தாது வளங்களை
வெளிநாடுகளுக்கு அதிவிரைவாக ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் சென்னை துறைமுகத்துக்கு கொண்டுச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் மலைகளின் ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள்.

ரஞ்சித் : பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம்.. நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா?

ஆலஞ்சியார் : பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம்.. நீங்கள் ஜெய்பீம் என
சொல்ல தயாரா என்கிறார் இளம் இயக்குனர் ரஞ்சித்..
..
ஏன் அண்ணலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. அண்ணல் அம்பேத்கர் மீது மரியாதை உண்டு .. ஒடுக்கபட்ட சமூகத்திலிருந்து உயர்ந்த பதவிகளை தன் திறமை மூலம் பெற்றவர்.. தான் பிறந்த மதத்தின் இழிவுகளை போக்க தன் சார்ந்த மக்களை புத்தமதம் தழுவ செய்தால் புனிதராகிவிடலாமென்ற நினைத்து மாறியவர் .. அதிலிருந்தே தான் தாழ்ந்தவர் என்ற எண்ணம் கொண்டிருந்தாரென அறிய முடிகிறது..
தான் சார்ந்த சமூக பின்னணியில் இருந்து மிகப்பெரிய மாற்றத்தை வடமாநிலங்களில் குறிப்பாக மராட்டியத்தில் அவரால் கொண்டுவர முடியவில்லையே.. வெகுமக்களை ஒருங்கிணைக்காத ..அல்லது வெகுமக்கள் ஆதரவில்லாத எதுவும் எந்த மாற்றத்தையும் தர முடியாது.. ஆனாலும் அம்பேத்கர் வாழ்க என்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.. ஆனால் பெரியாரை நாங்கள் ஏற்கவேண்டுமெனில் ஜெய்பீம் என அழைக்க வேண்டுமென்ற நிபந்தனை நிச்சயமாக தலித் மக்களை வெகு தூரத்தில் வைக்கவே பயன்படும்..

செவ்வாய், 12 ஜூன், 2018

சாரு நிவேதிதா எனும் ஒடுக்கப்பட்டவரை காலா விமர்சனத்திற்கு பின்னாலும் கொண்டாடுவேன்!

Shalin Maria Lawrence : எனது நண்பர் அறிவழகன்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர் நாகூரில் உள்ள ஒரு சேரி பகுதியில் ,அதுவும் கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்.
வங்கதேசத்து கம்யூனிஸ்ட் சாரு மஜ்முதார் நினைவாகவும்,நிவேதிதா அம்மையார் நினைவாகவும் சேர்த்து தன் பெயரை சாரு நிவேதிதா என்று மாற்றி கொண்டார்.
இன்று வரை ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலையும் தன் படைப்புகள் மூலம் பேசி கொண்டிருக்கிறார்.
பல வெளிநாட்டு ஆங்கில பத்திரிகைகளில் அவர் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி எழுதிய கட்டுரைகள் அதிகம்,அதிலும் குறிப்பாக லண்டனில் இருந்து வெளியாகும் "Art review Asia" என்கிற பத்திரிகையில் தொடர்ச்சியாக கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலங்களை பற்றிய அவருடைய கட்டுரைகள் பிரசித்தி பெற்றவை.
அந்த கட்டுரைகள் பல அவரின் "unfaithfully yours " புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன .
இன்று அறிவழகன்.... இல்லை சாரு நிவேதிதா காலவை பற்றி ஒரு விமர்சனம் பதிவிட்டார்.
பலரும் அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதற்கு எதிர்வினையாக கருத்தியல் சண்டை போடாமல் வலதுசாரிகளின் முறையான தனிமனித தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.