சனி, 15 ஜூன், 2019

ஜெயமோகனை பின்னி எடுத்ததன் பின்னணி!! மனைவியை தாக்கியதால் கணவன் கோபம் ...

Vini Sharpana : வியாபாரிகள் பெரும்பாலான நேரங்களில் கஸ்டமர்களிடம் கனிவோடுதான் நடந்துகொள்கிறார்கள். ஆனால், கோபப்பட்டு தாக்குமளவுக்கு போகிறார்கள் என்றால் பிரபலம் செய்த பிராப்ளம் என்ன என்று சம்பந்தப்பட்டவர்களிடமே விசாரித்தேன்.
நாகர்கோயில் நேசமணி நகரிலுள்ள( ஒலக லெவல் நேசமணி அல்ல) மாவுக்கடையில் வழக்கம்போல் தோசைமாவு கேட்டிருக்கிறார் ஜெயமோகன். புதியமாவு தயாராகவில்லை. பழையமாவுதான் இருக்கிறது. கொஞ்சம் புளிப்பாக இருக்கும் என்று சொல்லித்தான் கொடுத்திருக்கிறார் மாவுக்கடை பெண்மணி. வாங்கிச் சென்றவருக்கு வீட்டில் என்ன டோஸ் விழுந்திருக்குமோ... கோபம் கொப்பளிக்க வந்தவர் திருப்பிக்கொடுத்துவிட்டு காசைக் கேட்டிருந்தால் பிரச்சனை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், மாவுப்பாக்கெட்டை பெண்மணியிடம் தூக்கி வீசிவிட்டு அசிங்கமாகவும் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியதோடு அத்துமீறியிருக்கிறார். தன் கண்முன்னே தன் மனைவியின் மீது கை வைத்தால் எந்தக் கணவனால்தான் பொறுத்துக்கொள்ள முடியும்?

சேத்துப்பட்டு .. “சுரேந்தர் இப்படி செய்வாருன்னு கனவில் கூட நினைக்கவில்லை” தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்

சேத்துப்பட்டு சம்பவம்; “சுரேந்தர் இப்படி செய்வாருன்னு கனவில் கூட நினைக்கவில்லை” தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்என் நிலைமையை சுரேந்தரிடம் சொல்லி புரியவைப்பதற்குள் என்னை அவன் அரிவாளால் வெட்டிவிட்டான்'' என்று தேன்மொழி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை, ஈரோடு மாவட்டம் கொண்டச்சி பாளையம் அருகே உள்ள களியங்காட்டு வலசு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி(வயது 26). இவரது தந்தை பெயர் வீரமணி. பட்டதாரியான இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு இவர் அந்த பணியில் சேர்ந்தார். சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி உள்ளார். இவரும் சுரேந்தர்(27) என்ற வாலிபரும் உயிருக்கு உயிராக காதலித்ததாக தெரிகிறது. சுரேந்தரின் தந்தை பெயர் விஜயராகவன். இவரும் ஈரோடு மாவட்டம் ரூபின் பாக் பகுதியைச் சேர்ந்தவர். பட்டதாரியான இவர் ஈரோட்டில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

மம்தா பானர்ஜி : போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் -மம்தா பானர்ஜி!zeenews.india.com: போராட்டத்தில் ஈடுப்படும் மருத்துவர்கள் மீண்டும் பணியை தொடர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுப்படும் மருத்துவர்கள் மீண்டும் பணியை தொடர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 11-ஆம் தேதி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி மருத்துவர்களை கொடூரமாக தாக்கினர்.

நிதி அயோக் மூன்று முதல்வர்கள் புறக்கணிப்பு .. மம்தா, . சந்திரசேகர ராவ் . அமிரீந்தர் சிங்

nitiதினமணி : புது தில்லி: பிரதமராக நரேந்திர மோடி மீண்டும்
பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டம் தில்லியில் இன்று பிற்பகலில் கூடியது.
சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவ், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகிய மூன்று பேரும் புறக்கணித்துள்ளனர்.
இவர்களைத் தவிர பிற மாநில முதல்வர்களும், தலைமைச் செயலாளர்களும், மத்திய அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

திரைப்படங்களுக்கு பிராந்திய மொழியிலேயே பெயர் வைக்கவேண்டும் .. மத்திய அரசு அறிவிப்பு

வெப்துனியா :இனிமேல் இஷ்டத்திற்கு டைட்டில் வைக்க முடியாது: மத்திய அரசின் உத்தரவால் திரையுலகினர் அதிர்ச்சி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு இனிமேல் அந்தந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய மொழிகளில் தான் டைட்டில் வைக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் டைட்டில் வைக்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்ற சட்டம் இருந்ததால் அனைத்து தமிழ்ப்படங்களுக்கும் தமிழ்ப்பெயர்கள் தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின்னர் வரிவிலக்கு நீக்கப்பட்டது. இதனை அடுத்து  திரையுலகினர் தங்கள் இஷ்டத்திற்கு ஆங்கில பெயர்களை டைட்டிலாக வைத்து வருகின்றனர். நேற்று ரிலீஸான ஒரு படத்திற்கு கூட 'கேம் ஓவர்' என்ற ஆங்கில டைட்டில் வைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியர்களிலுக்கு பிராந்திய மொழிகளில் தலைப்பு மற்றும் நடிகர்களின் பெயரை போட வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தண்ணீர் பஞ்சம்: எதிர்க்கட்சியினரின் கேள்விகளும், அரசின் பதிலும்!

மின்னம்பலம் : தண்ணீர் பஞ்சம்: எதிர்க்கட்சியினரின் கேள்விகளும், அரசின் பதிலும்!தமிழகம் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது. சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டதால், தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. சென்னையில் தண்ணீர் லாரிகள் வரும் நேரத்தில் தண்ணீர் பிடிக்கும் மக்கள் கூட்டம் அலைமோதுவதை நாம் நேரிலேயே காண முடிகிறது.
தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையிலுள்ள உணவகங்களில் மதிய உணவை ரத்து செய்ய ஆலோசித்து வருகிறார்கள். பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய பணித்திருக்கிறது. சென்னைக்கு வெளியே பல மாவட்டங்களில் கிராமப்புறங்களில் மக்கள் நெடுந்தொலைவு பயணப்பட்டு குடங்களில் தண்ணீர் பிடித்துவருகிறார்கள்.

அமெரிக்காவில் அடைக்கலம் தேடிச் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி நாவறண்டு பலியான கொடூரம்

This is what's really going on at the bordermaalaimalar :உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய விரும்பி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் குவிந்தவாறு உள்ளனர்.
இப்படி வருபவர்களை லாரிகளில் கள்ளத்தனமாக கடத்தி அழைத்து வருவதற்கு சில இடைத்தரகர்களும் செயல்படுகின்றனர்.
ஆயிரக்கணக்கான டாலர்களை கட்டணமாக பெற்று, இப்படி அழைத்து வரப்படும் அகதிகள் மெக்சிகோ நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாலைவனத்தில் இறக்கி விடப்படுவதுண்டு.
அவ்வகையில், இந்தியாவை சேர்ந்த ஒரு தாயும் அவரது 6 வயது மகளும் இடைத்தரகர்கள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் உள்ள அரிசோனா பாலைவனப்பகுதியை வந்தடைந்தனர்.  பாலைவனத்தில் சுட்டெரிக்கும் 108 டிகிரி வெயிலில் தாயும் மகளும் சுற்றித் திரிந்துள்ளனர்.
இவர்களின் காலடித்தடங்களை மோப்பம் பிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் தீவிரமாக பின்தொடர்ந்த நிலையில் தாகத்தில் தவித்த தனது 6 வயது மகளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வருவதற்காக அடைக்கலம் தேடிவந்த இந்தியப் பெண் வேறொரு பெண்ணுடன் புறப்பட்டு சென்றார்.

கேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை


மாலைமலர் : கேரள மாநிலத்தின் மாவேலிக்காரா மாவட்டத்தில் இன்று பட்டப் பகலில் பெண் போலீஸ்எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் மாவேலிக்காரா மாவட்டத்திற்குட்பட்ட வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்த ஒருவர் இன்று பிற்பகல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த ஒருவர் பெண் காவலர் மீது திடீரென்று பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொளுத்தினார். இதில் உடல் கருகிய அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூன்று குழந்தைகளின் தாயான அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதாக தெரியவந்துள்ள நிலையில், அவரை விரட்டிவந்து தீயிட்டு கொளுத்திய நபரும் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்

ஜெயமோகன் மா பாக்கெட்டை தூக்கி எறிந்து கைகலப்பில் .. பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்:


jeyamohanநக்கீரன் : மாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து
பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி: நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் ஜங்ஷனில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள் செல்வம்- கீதா தம்பதியர். தனது கடையில் எழுத்தாளர் ஜெயமோகன் தோசை மாவு வாங்கியதாகவும், பின்னர் அந்த மாவு சரியில்லை என்று கொடுக்க வரும்போது, தோசை மாவை தூக்கி எறிந்து, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு கீதாவின் சேலையை பிடித்து இழுத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார் ஜெயமோகன். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வம் தடுக்கசென்றபோது அவருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும், இதனால் காயமடைந்த கீதா இரவு 10 மணிக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வந்த நேசமணி நகர் போலீசார் கீதாவை விசாரித்து வாக்குமூலம் பெற்று கொண்டனர். அதன் பிறகு கீதா கொடுத்த புகாரின் மேல் போலீசார் எப்ஐஆர் போடவில்லை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆந்திரா விமான நிலயத்தில் சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப். படை.. கையைத் தூக்குங்க.. அப்படியே நில்லுங்க..

naidu undergoes cisf check up in vizag airporttamil.oneindia.com - koya-lekhaka: விசாகப்பட்டனம்: சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப். படையினரால் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபர்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூன்று முறை முதல்வர், மூன்று முறை எதிர்க்கட்சித் தலைவர், இசட் ப்ளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஒருவரை நிறுத்தி சோதனை செய்வது முறையற்றது என தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் கொதித்து எழுந்துள்ளனர்.
மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் நிச்சயம் அவர்களாக சோதனை நடத்தியிருக்க மாட்டார்கள் என்றும், டெல்லியில் இருந்து வந்த உத்தரவை அடுத்து அவர்கள் சோதனை நடத்தியிருக்கிறார்கள் எனவும் அடித்துக் கூறுகின்றனர் தெலுங்கு தேசம் கட்சியினர்.

தினகரன் முக்கிய முடிவு .. கட்சியை தொடர்ந்து நடத்துவதா அல்லது .....?

தினமலர் :லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பின், கட்சியை தொடர்ந்து
நடத்துவதா அல்லது கலைத்து விட்டு, தாய் கட்சியான, அ.தி.மு.க.,வில் இணைவதா என்பது குறித்து, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்களுடன், அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன், சென்னையில், இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், 45 லட்சம் ஓட்டுகளை எதிர்பார்த்த, அ.ம.மு.க.,விற்கு, 22 லட்சம் ஓட்டுகள் தான் கிடைத்தன. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, தினகரன் சந்தித்தார்.அப்போது, சசிகலா கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கு பதிலாக, சட்டசபை இடைத்தேர்தலில், 22 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால், ஆட்சி மாற்றத்திற்கு, நாம் காரணமாக இருந்திருப்போம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்,ஏ.,க்களை மட்டும் தான், மீண்டும் தேர்தலில் நிறுத்தியிருக்க வேண்டும். தங்கதமிழ்செல்வன், பழனியப்பன் போன்றவர்களை, எம்.எல்.ஏ., தேர்தலில் தான் நிறுத்தியிருக்க வேண்டும். பிரதமர் வேட்பாளர் யார் என சொல்லாமல், எதற்காக, நாற்பது தொகுதிகளில் வீண் செலவு செய்தீர்கள்.இவ்வாறு, சசிகலா கேட்டுள்ளார்.

கடும் தண்ணீர் தட்டுப்பாடு - சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தந்தி டிவி : கடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கமாக சனிக்கிழமைகளில் இயங்கும் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. Facebook Twitter Mail தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகளில், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . சென்னை புனித தாமஸ் மலை உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகள் நாளை விடுமுறை அறிவித்துள்ளன. வேளச்சேரியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் கழிவறைகள் எல்லாம் பூட்டப்பட்டு இருக்கின்றன. மாணவர்களுக்கு தலா 3 லிட்டர் குடிநீர் கூட வழங்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை வெட்டி சாய்த்துவிட்டு ரயில் முன் பாய்ந்த காதலன்

தந்தி டிவி : சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், இளம்பெணை அரிவாளால் வெட்டிச்சாய்த்த காதலன், ரயில் முன் பாய்ந்தார். Facebook Twitter Mail கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அடுத்த ரயில்நிலையமான சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் அதேபோல மற்றொரு பயங்கரம் நடந்தேறியுள்ளது. தேன் மொழி என்ற இளம் பெண்ணை, சுரேந்தர் என்ற இளைஞர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், சரமாரியாக வெட்டியுள்ளார். இதை கண்டு சக பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். தேன்மொழி ரத்த வெள்ளத்தில் சாய்ந்த நிலையில், சுரேந்தர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடி கொண்டிருந்த தேன்மொழி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சுரேந்தர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் இருவரும், காதலர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

சென்னை ரவுடி வல்லரசு கொலை.. போலீஸ் என்கவுண்டர்

 The gun that exploded ...rowdy vallarasu  encountered nakkheeran.in - nagendran : நீண்ட நெடுநாட்களாக அமைதிகாத்த சென்னை காவல்துறை ரவுடியை சுட்டு வீழ்த்தியதின் மூலம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
 சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வல்லரசு. இவர் மீது தலைமை செயலக காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் கொலை செய்த எதிர் தரப்பினர் வல்லரசுவை கொலை செய்ய திட்டம் தீட்டியதால் அவர் மாதவரம் ரவுண்டானா அருகே குடியேறியுள்ளார். இந்நிலையில் ரவுடி வல்லரசு ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி மறைந்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
ரவுடி வல்லரசுவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை வியசார்பாடி காவல் உதவி ஆய்வாளர் பவுன்ராஜ்க்கு, கதிர் என்னும் நபர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வல்லரசு கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் பவுன்ராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்  ரமேஷ் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். 

உத்தர பிரதேசத்தில் புழுதி புயல் .. 13 பேர் இறப்பு


தினத்தந்தி : உத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் பலியாகினர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில் புழுதிப்புயல் வீசியது. சித்தார்த்தா நகர் மாவட்டத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. புழுதிப்புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக சித்தார்த்தா நகர் மாவட்டத்தில் 4 பேரும் அதை தொடர்ந்து தேவ்ரியா மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். 22 கால்நடைகள் உயிரிழந்தன. 93 வீடுகளும் சேதம் அடைந்தன. புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்ததற்கு உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். ரூ.4 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார். இதனிடையே, உத்தர பிரதேசத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை புழுதிப்புயல் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் தேதிக்கு பிறகு உத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தொடர்பான சம்பவங்களில், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்

சுப. வீரபாண்டியன் ரஞ்சித்திற்கு கேள்வி : ஆரியத்தைத் தாக்க வேண்டிய நீங்கள் ஏன் திராவிடத்தையே குறிவைத்துத் தாக்குகின்றீகள்?

திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் - தானுண்டு, தன் வேலையுண்டு என்று
திரைப்படங்களை மட்டும் இயக்கிக் கொண்டு, தனக்குக் கிடைத்துள்ள புகழைப் பணமாக்கிக் கொண்டு வாழும் தன்னலவாதியில்லை. சமூகச் சிந்தனையோடு பல நேரங்களில் குரல் கொடுப்பவர். அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, வெளிப்படையாக வெளியில் வந்து தன் கருத்துகளை வெளியிடும் போர்க்குணமுடையவர். தன் படத்தில் வரும் வில்லனை ஒரு இராம பக்தனாகக் காட்டக்கூடிய அளவிற்குத் துணிச்சல் உள்ளவர். படங்களை இயக்குவதோடு நின்றுவிடாமல், 'பரியேறும் பெருமாள்' போன்ற தரமான படங்களைத் தந்திருக்கும் தயாரிப்பாளர்.
சமூகநீதிக் கோட்பாட்டில் ஈடுபாடு உடையவர்கள், இயக்குனர் ரஞ்சித்தைப் பாராட்டுவதற்கு இவற்றை விட வேறு தகுதிகள் என்ன வேண்டும்? ஆதலால் நம் போன்றவர்களால் பாராட்டப்படக் கூடியவரே பா. ரஞ்சித்.
எனினும், சில வேளைகளில் அவர் நடந்துகொள்ளும் முறைகள், அவர் வெளியிடும் முரண்பட்ட கருத்துகள், ஒரு பெரிய சிக்கல் சமூக அரங்கில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அவர் இன்னொரு விவாதத்தை முன்னெடுத்து, அடிப்படைச் சிக்கலைத் திசை திருப்பிவிடும் விதம் ஆகியன, அவர் யார் என்னும் பெரிய வினா ஒன்றையும் நம்முள் எழுப்புகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார் .. புளித்த மாவு விவகாரம்: மளிகைக் கடைக்காரரால்

  எழுத்தாளர் ஜெயமோகன்  தாக்கப்பட்டார்tamil.news18.com: நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன், 60; தமிழ் மற்றும் மலையாளத்தில், பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர், பல்வேறு திரைப் படங்களுக்கு, வசனம் எழுதி உள்ளார்...
நேற்று இரவு, பார்வதிபுரத்தில் உள்ள  மளிகைக் கடையில் வாங்கிய தோசை மாவு புளித்துப்போனதால், திரும்பி தந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .அப்போது அங்கிருந்த கும்பல், எழுத்தாளர் ஜெயமோகனை அடித்தது. வடசேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
எழுத்தாளர் ஜெயமோகன். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படைப்புகளுக்காக பல விருதுகள் பெற்றவர். சில சினிமாக்களுக்கும் கதை, வசனம் எழுதியுள்ளார்.  கடைக்காரர்களால் தாக்கப்பட்டதாக வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜெயமோகன் சிகிச்சை பெற்று வருகிறார்

அஸாத் ஸாலி : கோட்டா - சஹ்ரான் நெருக்கமான உறவு .. வாய்திறக்காமல் இருக்க 500 மில்லியன் ரூபா தருவதாக ..

puthusudar.lk : கோட்டா - சஹ்ரான் நெருக்கமான உறவு
வாய்திறக்காமலிருக்க 500 மில்லியன் ரூபா பேரம் பேசினர்;
தெரிவுக்குழு முன்னிலையில் போட்டுடைத்தார் அஸாத் ஸாலி
"முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தெளஹீத் ஜமா அத்தின் தவறான செயற்பாடுகள் குறித்துப் பேசிய காரணத்தால்தான் நான் கைதுசெய்யப்பட்டேன். அதுமட்டுமல்ல, அவர்கள் குறித்து வாய்திறக்க வேண்டாம் எனக் கோட்டாபயவின் புலனாய்வுத் துறையினர் வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபா பணம் தருவதாகப் பேரம் பேசினார்."
- இவ்வாறு போட்டுடைத்தார் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி.
உயிர்த்த ஞாயிறு தினமன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனா தனது மக்களை படுகுழியில் தள்ளி விட்டு விட்டது ... உலக வல்லாதிக்க ஆசைக்காக ..

இன்றைய சீனாவின் கிராமத்து குடிசை 
R Chandrasekaran R Chanrasekaran : தோழர்களே ஒரு சோசலிச நாட்டில் நிச்சயம்
மக்களுக்கு இடையில் ஏற்றதாழ்வுகள் இருக்கும் இது படிப்படியாக குறையும்
ஆனால் சீனத்தில் கடந்த காலத்தை விட ஏற்றதாழ்வுகள் மிக வேகமாக விரிவடைந்து வருகிறது
பொது சொத்துக்களை சூறையாடி மிகப்பெரும் ஏகபோக மூலதனக்கூட்டம் உருவாகி விட்டது இந்த ஏகபோக கூட்டம் அமெரிக்காவுக்கு ஈடாவும் அதை விஞ்சி செல்லும் அளவுக்கு வளர்ந்து வருகிறது
மக்களில் பரவலாக குட்டி முதலாளிய கூட்டமும் நகர்புறங்களில் பெருகிவிட்டது கிராமப்புற ஏழைகள் பாடுதான் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறது
பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்யும் தொழிலாளர்கள் காலை எட்டு மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் உற்பத்தியை பெருக்குவோம் என உறுதிமொழி செய்து விட்டு 8,15
பணியில் இறங்கி விட வேண்டும்
உணவு இடைவேளை சிறு நீர் கழிக்க செல்வது அனைத்தும் கேமாரா மூலம் கண்காணிக்க படுகிறார்கள்

மேற்கு வங்க மாநிலத்தின் மொழி அடையாளம் சமரசம் செய்ய கூடியது அல்ல .. மம்தா

மம்தா : மேவங்கத்தில் இருக்கும் வட இந்தியர்கள் இனி வங்க மொழிதான் பேச வேண்டும்.
மே வங்கத்தில் உள்ள வங்கமொழி பேசாதவர்கள் பெரிதும் பாஜகவின் ஆதரவாளர்களாக மட்டுமல்லாது அவர்கள் இந்தி இந்து என்ற அடையாளம் பரப்பிகளாக இருந்ததன் பெறுபேறுதான் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வங்கமொழி பற்றிய அறிவிப்புக்கு காரணம்.
எந்த நாட்டில் அல்லது மாநிலத்தில் இருந்தாலும் அந்த மண்ணின் மைந்தர்கள் மீது சவாரி செய்யும் எண்ணத்தோடு இருந்தால் உள்ளூர் மக்களின் வெறுப்பை சம்பாதிக்கவேண்டி வரும்.
இது வெறும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் உரிய விடயம் அல்ல. இதே போன்ற நிலைதான் மகாராஷ்ட்ரத்தில் இருக்கிறது , கர்நாடகாவில் இருக்கிறது .. இன்னும் பல மாநிலங்களில் இந்த நிலை வேகமாக உருவாக்கி கொண்டிருக்கிறது .
ஆனால் ஊடகங்கள் இது பற்றி பேசுவதில்லை . அவர்களின் நேர்மைத்தன்மை பற்றி புதிதாக கூற வேண்டியதில்லை.
தமிழகத்தில் இருக்கும் பிற மாநில மக்களுக்கு இது ஒரு எசசரிக்கையாக அல்லது படிப்பினையாக இருக்க வேண்டும் .

மம்தா பிரகடனம் : வங்கத்தில் வட இந்தியர்கள் வங்காள மொழிதான் பேச வேண்டும்.. Mamata's ultimatum : If you are in Bengal you have to speak Bangla

Mathivanan Maran tamil.oneindia.com : கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வட இந்தியர்கள் வங்காள மொழிதான் பேச வேண்டும் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக வலியுறுத்தியுள்ளார். 
தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்தி மொழியை திணிப்பதையும் வட இந்தியர்கள் குடியேற்றத்துக்கும் எதிராகவும் மேற்கு வங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 
அண்மையில் ஆங்கில டிவி சேனல் விவாதத்தில் இந்தியில் பேசியவர்களுக்கு வங்க மொழியில் பேசி மூக்குடைத்தார் பேராசிரியர் கார்கா சட்டர்ஜி. 
தொடர்ந்து இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக தமிழகத்தைப் போலவே உக்கிர குரல் கொடுத்து வருகிறது மேற்கு வங்கம். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மமதா பானர்ஜி, வங்காள மொழியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

வெள்ளி, 14 ஜூன், 2019

விக்கிரவாண்டி திமுக எம் எல் ஏ திரு ராதாமணி காலமானார்

விக்கிரவாண்டி  தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி காலமானார்தினத்தந்தி :விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி காலமானார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். பதிவு: ஜூன் 14, 2019 09:26 AM மாற்றம்: ஜூன் 14, 2019 09:54 AM விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு. ராதாமணி. புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் திமுக எம்.எல்.ஏ, கே. ராதாமணி காலமானார்..

ஆண்டிமடம் திரு. சா.சிவசுப்ரமணியன் முன்னாள் எம் எல் ஏ.. எம்பி இயற்கை எய்தினார்...

Ambethkar Thangarajஆண்டிமடம் திரு. சா.சிவசுப்ரமணியன்,
தன்னுடைய இளைமைக்காலம் முதல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராகப் பணியாற்றி பின்னர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் திரு. சா.சிவசு்பரமணியம்.
1954 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் இண்டர்மீடியேட் வகுப்பில் சோந்த இவர், திராவிடர் கழக உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு டேமைகளில் உரையாற்றத் தொடங்கினார்.
1955 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற திரவிடர் கழகக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயம், வழங்கிய நிகழ்ச்சியில் கலந்தக்கொண்டார். 1960 முதல் 1966 வரை தமிழ்நாடு எங்கும் தந்தை பெரியார் அவர்கள் கலந்துக்கொண்ட கூட்டங்களில் இவரும் தந்தை பெரியாருடன் சுற்றுபபயணம் செய்தவர்.
1966 ஆம் ஆண்டு அரியலூரில் திரவிட கழக மாநாட்டில பொருளாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணிப்புரிந்தார்.

அசோக் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை.. DYIF மாவட்ட ...

BBC :திருநெல்வேலியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 23 வயதான அசோக்
என்பவர் தனது தாயாரை சாதி இந்துக்கள், இரு சக்கர வாகனத்தில் மோதியது தொடர்பாக காவல்துறையில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதன் பின்னர் சில தினங்களுக்குப் பின் ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.
கொலை செய்யப்பட்ட அசோக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விரு சம்பவங்களிலும் சாதிய மனநிலையே முக்கிய பங்காற்றி இருப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒரு சம்பவத்தில் 'தீண்டாமை' பிரச்சனையால் பதற்றமும் மற்றொரு சம்பவத்தில் சாதிய மனநிலையும் கொலைக்கும் வித்திட்டதாக கூறுகிறார்கள்.

கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் மகனுடன் பெற்றோர் தற்கொலை

tamil.oneindia.com C jeyalakshmi : நாகப்பட்டிணம்: படித்து போலீஸ் ஆக நினைத்த சிறுவனின் கனவு கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் சிதைந்து போனது.
மகனின் ஆசையை நிறைவேற்ற முடியலையே என்ற வேதனையில் நகை தொழிலாளி ஒருவர் குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரசு பள்ளிகளில் இலவமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அளிக்கப்படுகின்றன. அரசு வேலைக்கு ஆசைப்படும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. அதிக பணம் கட்டி தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகளில் கட்டணக்கொள்ளையால் பல பெற்றோர்கள் கடன் வாங்குகின்றனர்.
அம்மாக்கள் நகைகளை அடகு வைக்கின்றனர். அப்பாக்கள் தகுதிக்கு மீறி கடன் வாங்குகின்றனர். அதுவும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்காவிட்டால் உலகமே வெறுத்து போகிறது. கடைசியில் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற முடியலையே என்ற வேதனையில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா . தம்பதியராக மாறிய போராளியும் ராணுவ வீரரும்

BBC : கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11
மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் குழந்தைப் போராளியாக இருந்த கௌரிக்கு இப்போது வயது 26. ரோஷன் போன்றவர்களைக் கொண்ட அடக்குமுறை ஆட்சி என்று கூறப்பட்ட அரசுக்கு எதிராக போராடிய இயக்கத்தைச் சேர்ந்தவர் அவர்.
``நான் சிங்களர்களைப் பார்த்ததோ அல்லது பேசியதோ கிடையாது'' என்கிறார் கௌரி. ``அவர்கள் கெட்டவர்கள், எங்களைக் கொன்றுவிடுவார்கள் என்று நினைத்திருந்தோம்'' என்று அவர் கூறினார்.
ரோஷனை பொருத்தவரையில் விடுதலைப்புலிகள் வெறுப்புக்கு உரியவர்களாக இருந்தனர். 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் அவர்களுடைய தாக்குதல்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது அவர்களுடைய வெறுப்புக்குக் காரணம்.

மாதவிடாய் வலிக்குச் சட்ட விரோத மாத்திரை: தமிழக தொழிற்சாலைகளின் அக்கிரமம்..

மின்னம்பலம் : மாதவிடாய் வலிக்குச் சட்ட விரோத மாத்திரை: அதிர்ச்சித் தகவல்!மாதவிடாயின்போது, மருத்துவர்கள் ஆலோசனையின்றி சட்ட விரோதமான மாத்திரைகளைப் பெண்களுக்குத் தமிழகத் தொழிற்சாலைகள் வழங்குவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது வயிறு வலி, உடம்பு வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். சிலர் இந்த வலிகளைத் தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை உட்கொண்டுவருகின்றனர். தமிழகத்தில் செயல்படும் ஆடைத் தொழிற்சாலைகள் சில, தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு வலி ஏற்படாமல் இருக்க மருத்துவர்கள் பரிந்துரை இன்றி, சட்ட விரோதமாக மாத்திரைகள் கொடுத்துவந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆபரேஷனில் பாலியல் சீண்டல் அப்போலோ ஊழியர் கைது!

மின்னம்பலம் : ஆபரேஷனில் பாலியல் சீண்டல்: ஊழியர் கைது!சென்னை பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் பெண் நோயாளியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சவுமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 30 வயது மதிக்கத்தக்க பெண், கால் மூட்டு அறுவைச்சிகிச்சைக்காக, சென்னை பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையை நாடினார். கடந்த 6ஆம் தேதியன்று மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அறுவைச்சிகிச்சையின்போது, அப்பெண்ணின் உடலில் மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

பசு விழுங்கிய 5 பவுன் நகை 2 ஆண்டுக்கு பிறகு மீட்பு .. கேரளாவில்


தினத்தந்தி :கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சதயமங்கலத்தில் வசித்து வரும் ஆசிரியர் தம்பதி சுஜா உல்-முல்க், சஹினா. அண்மையில் இவர்களுக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. 6 மாதங்களுக்கு முன்பு வீட்டின் பயன்பாட்டுக்காக பக்கத்து கிராமமான கரவலூரில் இருந்து ஸ்ரீதரன் என்பவரிடம் இவர்கள் நிறைய வறட்டிகளை வாங்கி உள்ளனர்.
கடந்த 5-ந்தேதி அதில் ஒரு வறட்டியை எரிப்பதற்காக இரண்டாக உடைத்தபோது அதற்குள் 5 பவுன் தங்க சங்கிலி ஒட்டிக்கொண்டிருந்தது. அந்த சங்கிலியில் இலியாஸ் என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆச்சரியமடைந்த ஆசிரியர் தம்பதியினர் தங்க சங்கிலிக்கு உரியவரைத் தேடி அதை ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றிய தகவல் பரப்பப்பட்டது. அந்த தம்பதியின் விடா முயற்சிக்கு பலனும் கிடைத்தது. அவர்களின் விசாரணையில், சதயமங்கலத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துடயனூர் தெக்கில் என்னும் கிராமத்தில் வசிக்கும் இலியாசுக்கு அந்த தங்க சங்கிலி சொந்தம் என்பது தெரிய வந்தது.

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு


தினத்தந்தி : ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் தான் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தொடரும் நிலையில், ஓமன் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 எண்ணெய் கப்பல்களை குறிவைத்து, கண்ணி வெடி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 2 கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தன. எனினும் கப்பல்களில் இருந்த சிப்பந்திகள் 44 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் தான், என அமெரிக்கா நேரடியாக குற்றம் சாட்டி உள்ளது.
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறுகையில், உளவுத்துறையின் தகவலின்படி ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்பதற்கு அமெரிக்காவிடம் வலுவான ஆதாரம் உள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும், தாக்குதல் நடந்த விதத்தையும் பார்க்கிறபோது, இந்த பிராந்தியத்தில் ஈரானுக்கு மட்டுமே இதை செய்யக்கூடிய திறன் உள்ளது என்பது தெரிகிறது என்றார்.

ரயில்வே பணியாளர்கள் தமிழ் பேச விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கம்


மின்னம்பலம் : ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆகியோர் தமிழில் பேசத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழ் பேச விதிக்கப்பட்ட தடை வாபஸ்!
தெற்கு ரயில்வே அதிகாரி சிவா, அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும். ரயில்வே தொடர்பான விஷயங்களை பிராந்திய மொழியான தமிழில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்
”இருப்புப் பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம். ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது, ஆட்டின் குரல்வளையைத்தான். கலாச்சாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள், மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு" எனப் பதிவிட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தமிழ் தெரியாத இந்தி அதிகாரிகளை திருப்பி அனுப்பு.. கொத்தமங்கலம் கிராமத்தில் தொடங்கிய போராட்டம்


c
nakkheeran.in - bagathsingh :     மோடியின் பா.ஜ.க அரசு இந்தியா முழுவதும் ஒரே
மொழி என்பதை அயல்நாடுகளுக்கு காட்டவும், இந்தி தான் பிரதான மொழி என்பதை காட்டிக் கொள்ளவும் கல்வி கொள்கை முதல் அனைத்து மாநில வேலைவாய்ப்புகளிலும் தங்கள் அதிகாரத்தை அழுத்தமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. அதற்கு தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் தங்களின் மாநில சுயாட்சி என்கிற தத்துவத்தை அடகு வைத்துவிட்டு தலையசைத்துக் கொண்டு பச்சைக் கொடி காட்டி வருகின்றனர்.
அதன் பலனாகத் தான் முன்பு மத்திய அரசு வேலைகளில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து குடியேறிய நிலை மாறி தற்போது தமிழ்நாடு அரசு பணிகளிலும் பிற மாநிலத்தவர்கள் அதிகமாக கால் ஊன்றத் தொடங்கிவிட்டனர். அதற்கு 2016ம் ஆண்டும் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். கொண்டு வந்த சட்டத் திருத்தம் தான் காரணமாக அமைந்துள்ளது. மேலும் கட்டாயம் தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற சரத்தை மாற்றி வேலைக்கு சேர்ந்து 2 ஆண்டுகளில் தமிழ் கற்றுக் கொள்ளலாம் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாஹ் சாட்சியம் ..சஹ்ரானை சந்தித்தேன் –

வீரகேசரி :2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் நாம் மொஹமட் சஹ்ரானை சந்தித்ததாக தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், அவர் அப்போது தீவிரவாதியல்ல நல்ல மதவாதி எனவும் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தெரிவுக்குழு முன்னிலையில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்,  
கேள்வி:- நீங்கள் இலங்கையர் என நினைக்கிறேன், அவ்வாறு இருக்கையில் “இலங்கையில் நாங்கள் சிறுபான்மை, உலகில் பெரும்பான்மையினர் நாம் தான்’ என நீங்கள் கூறியது சரியா?< பதில்:- இது எனது அரசியல் கருத்து அல்ல, இது ஒரு பள்ளிவாசலில் நான் கூறிய விடயம். எமது மக்கள் அங்கு மிகவும் பயந்த சுபாவத்தில் இருந்தனர்.
அன்றாட வாழ்க்கை அனைத்துமே ஸ்தம்பிக்கப்பட்டு இருந்தன. வழமையாக எமது பெருநாள் பிரார்த்தனைகள் காலி முகத்திடலில் இடம்பெறும்.
இம்முறை அது நடக்கவில்லை. முஸ்லிம்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்தனர். ஆகவே அவர்களை அச்சம் அடைய வேண்டாம் என கூறி உங்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுங்கள் என்றேன்.
இதன்போதே நாம் உலகில் பெரும்பான்மை மக்கள். ஆகவே அச்சமடைய வேண்டாம் என கூறினேன். எனினும் ஊடகங்கள் இதனை முன்னும் பின்னும் வெட்டிவிட்டு பிரசுரித்து விட்டனர்.

தமிழக ஆட்சியாள அடிமைகள் எதையும் எதிர்க்கப் போவதில்லை. இது துவக்கம் மட்டுமே. ..

Subaguna Rajan : தோழர்களே! நாம் இப்போது விவாதித்துப் போராட வேண்டியது ராஜராஜன் சாதிவெறியனா ? அவனுக்கு முந்தைய ஆட்சியாளர்கள்வழி தொடர்ந்த சனாதனத் தொண்டனா என்பதை அல்ல .
மோடி தலைமையிலான நவீன சனாதனவாத ஒன்றிய அரசின் “புதிய கல்விக் கொள்கை” குறித்தே நாம் விவாதிக்க வேண்டும். கல்வியை மாநில உரிமையாக்குவது குறித்த விவாதத்தின் ‘ கருவறுக்கும் ‘ கொள்கை இந்தக் கல்விக் கொள்கை. பள்ளிக் கல்வி துவங்கி கல்வி உயராய்வுப் புலம் வரையான அனைத்தையும் ஒன்றிய சனாதன அரசின் கட்டுப்பாட்டிற்கு நகர்த்தும் தீர்க்கமான நகர்வு அது. மொழிக் கல்வி ,பயிற்று மொழி, பாடத்திட்டமென அனைத்து திட்டமிடல் / தீர்மானிக்கும் அதிகாரத்தையும் கபளீகரம் செய்யும் ஆயுதம் இந்தக் கொள்கை.
இது வரைவு அறிக்கை மட்டுமே, மக்கள் ஒப்புதலின்றி ஏற்கப்படாது என்ற விளக்கங்கள் ஏமாற்று வேலை. இந்த கொள்கை ஏற்கப்படுவதற்கு முன்னரே அரசு கல்விநிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மற்றும் உயராய்வு மையங்களிற்கான இளங்கலை கல்விக்கான அனுமதிக்கான ஒன்றிய கட்டுப்பாட்டிலான ‘ நீட் ‘ வகை நுழைவுத் தேர்வை கொள்கையாக அறிவித்து விட்டது . தமிழக ஆட்சியாள அடிமைகள் எதையும் எதிர்க்கப் போவதில்லை. இது துவக்கம் மட்டுமே.
ஏற்கனவே மாநில பொருளாதார உரிமைகளை ஜி எஸ் டி வழியாக முற்றாகப் பிடுங்கிவிட்டது ஒன்றிய அரசு. கல்வியையும் முற்றாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு நகர்த்தும் இந்தக் கல்விக் கொள்கையை கொண்டு வந்து விட்டால் பின்னர் மாநில அரசுகளை நிர்வகிக்க உருவாகப் போகும் எந்த அரசும் எந்த மக்கள் நலன் சார்ந்த எந்தக் கொள்கையையும் கொண்டிருக்க முடியாது . தெளிவாகச் சொன்னால் யார் வந்தாலும் ‘ அடிமை சேவக ஆட்சிதான் ‘ .

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதித்திட்டம்: வைகோ கண்டனம்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதித்திட்டம்: வைகோ கண்டனம்zeenews.india.com : நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பத்தில் தேவை இல்லாத சான்றுகளை இணைக்க கூறியிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது  என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்கி சாதாரண எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களின் கனவைத் தகர்த்து எறிந்தது பா.ஜ.க. அரசு. தமிழக சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கும் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதை, ஒரு பொருட்டாகவே பா.ஜ.க. அரசு கருதவில்லை; குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டது.
‘நீட்’ தேர்வால் மருத்துவக் கல்வி கிடைக்காமல் போனதால் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ரிதுஸ்ரீ, சைஷ்யா, மோனிஷா போன்ற மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

உதயநிதி பேச்சால் உடைகிறது கூட்டணி? நாங்குனேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியா?

வெப்துனியா :சமீபத்தில் திமுக கூட்டம் ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கிவிட்டு திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்.  தேர்தல் நேரத்தின் போது கட்சி தலைவர்கள் பேச வேண்டிய சென்சிடிவான   விடயத்தை . உதயநிதி தனது சிறுபிள்ளை தனமான பேச்சால் சொதப்பி உள்ளார்  என்று பலரும் கருதுகின்றனர். ராதாரவி விடயத்திலும் இப்படித்தான் தூக்கி எறிந்தமை  அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது.
காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியை திமுக கேட்பது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்று பொங்கி எழுந்துள்ள தமிழக காங்கிரஸ், டெல்லி தலைமைக்கு நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்க சம்மதிக்க கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது.

திருமாவளவன் :கடலூர் கல்லூரி மாணவி தற்கொலைக்கு விடுதலை சிறுத்தைகள் பொறுபேற்க முடியாது

வெப்துனியா :கடலூர் மாவட்டத்தில் முகநூலில் அவதூறாக பதிவு செய்யப்பட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பிரேம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்பதால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் பாமக ராம்தாஸ் அவர்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
;கடலூர் மாவட்டத்தில் முகநூலில் அவதூறாக பதிவிட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரேம்குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், துயரச்சாவுகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வலிய இணைத்து அவதூறு பரப்பும் செயலில் பாமக ஈடுபட்டுள்ளது.

சென்னை: கடும் தண்ணீர் பஞ்சம் .. ஓட்டல்களில் இனி மதிய சாப்பாடு கிடைக்காது... தமிழக ஓட்டல்கள் சங்க தலைவர்...

chennai,hotel,சென்னை,ஓட்டல்,lunch,மதியம்,நோ மீல்ஸ்,no meals
தினமலர் :சென்னை: கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, சென்னை ஓட்டல்களில், இனி, மதிய சாப்பாடு கிடைக்காது. தண்ணீர் இன்றி தவிக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை, அலுவலகம் வர வேண்டாம் என்றும், வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படியும், அறிவுறுத்தி உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், லாரி தண்ணீருக்கு செலவு செய்ய முடியாமல், வீட்டை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
மழை பெய்யாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன; நிலத்தடி நீரும் கிடைப்பதில்லை. இதனால் சென்னைவாசிகள் குடிக்க குளிக்க சமைக்க என அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல பல மாவட்டங்களிலும் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
சென்னையில் பல பகுதிகளில் வசிப்போர் 'கேன் வாட்டர்' வாங்கி குளிக்கவும் குடிக்கவும் பயன்படுத்துகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் லாரி தண்ணீருக்கு செலவு செய்ய முடியாமல் வீட்டை காலி செய்து சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். சென்னை ஓட்டல்களில் உணவு சமைக்கவும் குடிக்கவும் 'கேன்' தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. பாத்திரங்கள் கழுவ நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டது. தற்போது தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அதற்கான செலவும் அதிகரித்திருப்பதால் மதிய சாப்பாட்டை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

மதுரை அங்கன்வாடி பட்டியலினப் பெண்கள் இடமாற்றம் ரத்து: மனித உரிமை ஆணையம் ...

பட்டியலினப் பெண்கள் இடமாற்றம் ரத்து: மனித உரிமை ஆணையம் கேள்வி!மின்னம்பலம் : மதுரை மாவட்டத்திலுள்ள
எஸ்.வலையபட்டி கிராம அங்கன்வாடியில் பட்டியலினப் பெண்கள் உணவு வழங்கக் கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்களின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்தது ஆட்சியர் அலுவலகம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் கேட்டுள்ளது மாநில மனித உரிமை ஆணையம்.
கடந்த ஜூன் 3ஆம் தேதியன்று மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பித்தது மாவட்ட நிர்வாகம். இதன்படி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.வலையபட்டியில் அதே ஊரைச் சேர்ந்த 2 பட்டியலினப் பெண்கள் அங்கன்வாடி சமையலராகவும் உதவியாளராகவும் பணியில் அமர்த்தப்பட்டனர். இதற்கு அடுத்தநாள், இருவரும் பணியில் சேர்ந்தனர்.
ஆனால், வலையபட்டியைச் சேர்ந்த ஊர் மக்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரையும் இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். இவர்களை மாற்றும்வரை அங்கன்வாடிக்குக் குழந்தைகளை அனுப்பமாட்டோம் என்று தெரிவித்தனர். அதேபோல, ஒரு குழந்தை கூட அங்கன்வாடிக்கு வரவில்லை. இதனால், கடந்த ஒரு வார காலமாக அப்பெண்கள் சமைத்த உணவு வீணாகிப் போனது. இது பற்றி தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இணை இயக்குநர் மலர்விழி விசாரணை மேற்கொண்டார்.

இயக்குனர் ரஞ்சித்தை 19 தேதி வரை கைது செய்ய தடை .. மதுரை உயர் நீதிமன்றம்

ரஞ்சித் - ராஜராஜ சோழன்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?மின்னம்பலம் : ராஜராஜ சோழன் சர்ச்சை தொடர்பாக பா.ரஞ்சித் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் உமர் பாரூக்கின் நினைவு நாள் பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது சாதி, மத, இன ரீதியிலாக மக்களைப் பிளவுபடுத்தும் வகையிலான பேச்சு, கலவரத்தைத் தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பா.ரஞ்சித் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். அதில், “எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடமும் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களையே நானும் குறிப்பிட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கலைஞர் வழங்கிய இலவச நிலம்: 2 இலட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர்.. .வீட்டு மனைப் பட்டாக்கள்: 8 இலட்சத்து 30 ஆயிரத்து 495... தியாகுவிற்கு பதிலடி!

A Sivakumar : காலம் போன காலத்தில் பழைய நில உச்சவரம்பு சட்டம் எல்லாம் ஏன் திமுகவினரால் விவாதத்துக்கு உள்ளாக்கப்படுகிறது?
திருட்டு தமிழ் தேசியத்தின் ஒரு அங்கமான தியாகு தந்திருக்கும் பேட்டி தான் காரணம்.
காமராசரும், கலைஞரும் தங்கள் ஆட்சிக்காலங்களில் செய்தது என்ன என்று பாப்போம்.
முதல் 𝐓𝐡𝐞 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐋𝐚𝐧𝐝 𝐑𝐞𝐟𝐨𝐫𝐦𝐬 (𝐅𝐢𝐱𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐂𝐞𝐢𝐥𝐢𝐧𝐠 𝐨𝐧 𝐋𝐚𝐧𝐝) 𝐀𝐜𝐭 𝟏𝟗𝟔𝟏 சட்டம் பெருந்தலைவர் காமராசர் கொண்டு வந்தார். அதன் படி சராசரியாக 5 பேர் இருக்கும் குடும்பத்தில் 30 ஏக்கர் உச்சவரம்பும் கூடுதலாக தனித்தனியாக ஒவ்வொருவரும் கூடுதலாக ஆளுக்கு 5 ஏக்கர் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னது. இதுவே 1962ல் திருத்தப்பட்டு பெண்கள் சீதனமாக கொண்டு வரக்கூடிய நிலமாகயிருந்தால் கூடுதலாக 10 ஏக்கர் வைத்துக்கொள்ளலாம் என்றது.
அதற்கடுத்து திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வரானதும் குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்தின் அளவு குறைக்கப்பட்டு 30 ஏக்கர் என்றானது, 1970ல் Act 17 திருத்தமான இது 1972ல் 15 ஏக்கராக குறைக்கபட்டது.

மக்கள் போற்றும் மன்னரை இப்படி பேசலாமா..? பா.ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி


Bahanya - tamil.oneindia.com : முன்ஜாமீன் வழக்கில் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி
கேள்வி மதுரை: ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், சோழ மன்னர் ராஜ ராஜ சோழனை தரக்குறைவாக விமர்சித்தார்.
தலித்களின் நிலத்தை பறித்தவர் ராஜ ராஜ சோழன்தான் என்றும் சாடினார் ரஞ்சித். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதைத்தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள், கும்பகோணம் ஆகிய நகர காவல் நிலையங்களிலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வியாழன், 13 ஜூன், 2019

காத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும் வெளிப்படுத்தினார் அசாத் சாலி


சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத்
அமைப்பிற்கும்   இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.
அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டன என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டார். இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும்   இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தவ்ஹித் ஜமா அத்தின் தவறான செயற்பாடுகள் குறித்து பேசிய
காரணத்தினால் தான் நான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டும் அல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர்.
; 500 மில்லியன் ரூபாய்கள் பணமாக தருவதாக பேரம்பேசினர் எனவும் விசேட தெரிவுக்குழு முன்னிலையில் அசாத் சாலி மேலும் குறிப்பிட்டார். 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு சாட்சியமளிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மத் அசாத் சாலி இவ்வாறு வாக்குமூலம் வழங்கினார்.

வெயில் காலத்தில் காபி குடிப்பவரா? .. பழச்சாறுகள், இளநீர், கூழ், மோர். வெள்ளரி, தர்பூசணி .

coffee, summer, indigestion, body temperature, கோடை வெயில்,காப்பி, அஜீரணம், உடல் வெப்பநிலைtamil.indianexpress.com : வெயில் காலத்தில் அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.
நமது உடலின் தட்பவெப்பநிலை சீராக இல்லாமல், திடீர் என மாறிக்கொண்டே இருப்பது, உடலை வெகுவாக பாதிக்க செய்கிறது. வெயிலின் கொடுமையினால் நம் உடல் மட்டுமல்ல நமது தலைமுடி, கண்கள், சருமம் என அனைத்தையும் உஷ்ணம் ஒரு கை பார்த்துவிட்டுத்தான்
செல்லும்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை இழுத்தடிக்க போலீஸ்... பார் நாகராஜ் கைது நாடகம்


pollachi issues

nakkheeran.in - arulkumar : சி.பி.ஐ தீவிரமாக களம் இறங்கி விசாரித்துக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை, ஜவ்வாக இழுத் தடிக்க வைக்கும் பலவித டெக்னிக்குகளில் இறங்கியிருக்கின்றனர் பொள்ளாச்சி போலீசார். அதில் ஒரு டெக்னிக்தான் கடந்த 07-ஆம் தேதி இரவு ‘"பார்' நாகராஜ் கைது செய்யப்பட்டது. விஷயமும் இது தான், விஷமும் இது தான். கோட்டாம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞன் ‘பக்’ என்ற வகையைச் சேர்ந்த நாயை வளர்த்து வந்திருக்கிறான். பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன் மகன் சபரீசன், 25 ஆயிரம் ரேட் பேசி அந்த நாயை வாங்கியிருக்கிறான். நாய் விற்ற காசை வாங்கும் பிரச்சனையில் ரம்ஜான் அன்று இரவு அந்த இளைஞனையும் அவனது நண்பர்களையும் சபரீசன் தூண்டுதலில் வெளுத்துக் கட்டிவிட்டார்கள் பார் நாகராஜ் ஆட்கள். இரண்டு தரப்பிலும் 14 பேர் மீது கேஸ் போட்டு கைது செய்து கோவை மத்திய சிறையில் தள்ளிவிட்டனர் பொள்ளாச்சி கிழக்கு ஸ்டேஷன் போலீசார். ""இங்க தானுங்க சூட்சுமமே இருக்கு.
அடிதடி கேஸுங்கிறது சும்மா ஒப்புக்குத் தாங்க. பார் நாகராஜை உள்ளே தள்ளிட்டா, சி.பி.ஐ. விசாரணை தள்ளிப்போகும்னு எங்க ஆளுங்க பக்காவா ப்ளான் போட்டுட்டாங்க. அரெஸ்ட் ஆனவுடனேயே நெஞ்சு வலின்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில அட்மிட்டானான் பார் நாகராஜ்.

காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழப்பு -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழப்பு -அதிகாரப்பூர்வ அறிவிப்புதினத்தந்தி:  காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
புதுடெல்லி, 13 பேருடன் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானம் ஜூன் 3-ம் தேதி மதியம் 12.25 மணி அளவில் காணாமல் போனது. காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க விமானப்படை விமானங்கள், ராணுவம், மலைவாழ் மக்கள் உதவியுடன் ஒரு வாரமாக தேடும்பணி நடைபெற்றது. காணாமல் போன விமானத்தை கண்டறிவதில் மோசமான வானிலை காரணமாக சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அருணாச்சலப்பிரதேசம் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படையும் உறுதி செய்துள்ளது. அதில் பயணம் செய்த 13 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்து உள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது.

பேராசிரியர் இரா.மோகன் காலமானார் ..100-க்கு மேல் நூல்கள் நல்கிய

தினமணி : மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், தமிழ் ஆர்வலருமான இரா. மோகன் (69) உடல்நலக்குறைவால் புதன்கிழமை
காலமானார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக பணியாற்றிய இவர், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். பேராசிரியர் மோகன் ஒப்பிலக்கியம், தமிழாய்வு, தன் முன்னேற்ற சிந்தனைகள், தமிழ் வளர்ச்சி நூல்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 2011-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது பெற்றுள்ள அவர், சாகித்ய அகாதெமி அமைப்பின் பொதுக்குழு உறுப்பினராக 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
பேராசிரியர் இரா.மோகன் பணி ஓய்வு பெற்ற பின்னர் காமராஜர் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவருக்கு மனைவி, மகள் உள்ளனர். பேராசிரியர் இரா. மோகனின் இறுதிச் சடங்கு மதுரையை அடுத்த நாகமலைப்புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 94436-75931

பாண்டியன் சுந்தரம் : தமிழிலக்கியத்தில் தடம் பதித்த 100-க்கு மேல் நூல்கள் நல்கிய
இன்று காலமான பேராசிரியர் இரா.மோகன் நினைவாக...