சனி, 3 ஜூலை, 2010

மலேசிய30 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியை சாமிவேலுவிலக கோரிக்கை வலுக்கிறது

கோலாலம்பூர்:மலேசிய இந்தியன் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து டத்தோ சாமிவேலு விலகும்படி, அக்கட்சியின் அதிருப்தியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.மலேசியாவின் ஆளும் கூட்டணியில் மலேசிய இந்தியன் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இந்த கட்சியின் தலைவராக டத்தோ சாமிவேலு உள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் இந்த கட்சி, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இக்கட்சி போட்டியிட்ட ஒன்பது இடங்களில் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கட்சியின் தலைவரான சாமிவேலுவும் எம்.பி., தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, இந்த கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இது குறித்து இந்த கட்சியின் அதிருப்தி தலைவர் கே.பி.சாமி குறிப்பிடுகையில், "கடந்த 30 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியை சாமிவேலு வகித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் அவர் இந்திய வம்சாவளியினர் முன்னேற்றத்துக்கு எதையும் செய்யவில்லை. சாமிவேலு பதவி விலகக்கோரி நாளை அமைதிப் போராட்டம் நடத்த உள்ளோம்' என்றார்.மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு மற்றும் இளைஞர் பிரிவு கூட்டத்துக்கு டத்தோ சாமிவேலு நாளை ஏற்பாடு செய்துள்ளார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சித் தலைவர் பதவியை தனக்கு அடுத்தபடியாக உள்ள பழனிவேலுவிடம் ஒப்படைப்பதாக, 73 வயதான டத்தோ சாமிவேலு குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா, ஜெ.கொடநாடு எஸ்டேட் 900 ஆயிரம் ஏக்கர் ,பங்களாக்கள், அழகான ஏரி, படகுகள் ,500 தொழிலாளர்கள்

 மினி போயஸ்கார்டனில் விதிமுறை மீறிய கட்டடம்; அதிகாரிகள் குழு இன்று நுழைகின்றனர்
ஊட்டி : கொடநாடு எஸ்டேட்டில் புதிய கட்டடம் கட்டுவதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆய்வு நடத்த ஐ.ஏ.எஸ்., தலைமையிலான அதிகாரிகள் குழு இன்னும் சில நாட்களில் எஸ்டேட்டுக்குள் நுழைகின்றனர். கோத்தகரியில் கிளம்பும் அரசியல் சூடு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பும் . நீலகிரி மாவட்டம் கோத்தகரியில் உள்ள சசிகலா, ஜெ., ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் தற்போது பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறது.

ஏற்கனவே வேலி அமைத்த விவகாரத்தினால் சில கிராம மக்கள் கடும் எதிர்ப்பை கிளப்பி மோதலில் போய் முடிந்தது. மேலும் ஜெயலலிதா செல்லும் பாதையில் உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் செக்போஸ்ட் அமைத்துள்ள பிரச்னையும் இன்னும் முடியவில்லை. ஓய்வுக்காக ஜெ., தற்போது எஸ்டேட்டில் தங்கி இருக்கிறார் என்பதால் கூடுதல் பரபரப்பு. கோவை செம்மொழி மாநாட்டில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதியிடம் கொடநாடு எஸ்டேட்டில் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் விதிமுறை மீறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை  : இதனையடுத்து ஒரிரு நாளில் இது தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன் தலைமையில் சிறப்பு குழுவையும் அமைத்து உத்தரவிடப்பட்டது. இவர் இன்று (சனிக்கிழமை ) ஊட்டி வந்தார். இவர் தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குப்புச்சாமி , மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று கொட நாடு எஸ்டேட்டுக்குள் சென்று ஆய்வு நடத்த வேண்டுமெனில் அதிகாரிகள் தரப்பில் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும் . ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. எஸ்டேட் அனுமதி இல்லாமல் அலுவலர்கள் நுழையும் பட்சத்தில் , எஸ்டேட் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும் . இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கோத்தகிரியில் ஏற்பட்டுள்ளது. பத்திரிகை நிருபர்கள், புகைப்படக்காரர்கள் அங்கு குவிந்திருக்கின்றனர்.

ரகசிய கூட்டம் இடமாற்றம் : ஊட்டி தமிழ்நாடு இல்லத்தில் நடந்த கூட்டம் லீக்கானதும், கூட்டத்தை மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நீலகிரி வடக்கு வனக்கோட்ட அலுவலக ஓய்வு விடுதியில் தற்போது கூட்டம் நடந்து வருகிறது. இதில் மாவட்ட கலெக்டர் அர்ச்னா பட்நாயக் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இங்குள்ள ஆலை கட்டடம் 141 ஆண்டுகள் பழமையானது என்பதால் புனரமைப்பு பணி மட்டும் அதுவும் அனுமதி பெற்று செய்யப்படுவதாக எஸ்டேட் நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ் ( தி.மு.க.,) அனுமதி வழங்கப்படவில்லை என்கிறார்.

2 பெரும் பங்களாக்கள் : இந்த எஸ்டேட் 900 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் டீ தூள் பேக்டரி, 2 பெரும் பங்களாக்கள், அழகான ஏரி, படகுகள் என உண்டு. 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

மாவட்ட ‌கலெக்டர் பத்திரிகை செய்தி வெளியீடு : இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் சார்ப்பில் பத்திரிகை நிருபர்களிடம் ஒரு செய்தி குறிப்பு வழங்கப்பட்டது, இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:  கொடநாடு எஸ்டேட்டில் விதிக்கு புறம்பாக தேயிலை தொழிற்சாலையில் கூடுதல் கட்டடம் கட்டுவது குறித்த உண்மை அறியும் உதயச்சந்திரன் ( இயக்குநர் , ஊராட்சி வளர்ச்சி ) தலைமையிலான ஒரு நபர் குழு முதற்கட்ட விசாரணை‌யை துவக்கியுள்ளது. ஊரகவளர்ச்சி, வருவாய்துறை, நகரபராமரிப்பு, மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்றும் ( சனிக்கிழமை) இந்த விசாரணை நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனி அலுவலர் உதயச்சந்திரன் பேட்டி: இன்று நடந்த ஆலோசனை குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது: 2 நாள் விசாரணை நடத்தியிருக்கிறேன். வருவாய், வேளாண், வன, பொறியியல் துறை அலுவலர்களிடம் நடத்திய விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் கள ஆய்வு ( எஸ்டேட் நுழைவு ) , உரிய நேரத்தில் செய்யப்படும் என்றார்.

எப்படி ஏமாற்றலாம் என்பது சம்பந்தருக்கு கைவந்த கலை. தான் என்ன நினைக்கின்றாரோ

சம்பந்தரின் மற்றுமொரு அரசியல் நாடகம்!
தமிழ் மக்களை மாத்திரமல்ல, தனது கட்சியிலுள்ளவர்களையே எப்படி ஏமாற்றலாம் என்பது சம்பந்தருக்கு கைவந்த கலை. தான் என்ன நினைக்கின்றாரோ அதனை கனகச்சிதமாக செய்து முடிக்கக்கூடிய வல்லமையும் சாதுரியமும் அவரிடம் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யவேண்டும் என்பது பலரின் விருப்பம்.அதாவது கட்சியிலுள்ள மற்றயவர்களின் விருப்பம். அது சம்பந்தருக்கு உடன்பாடானதல்ல.தனது தலைமையிலான தமிழரசுக்கட்சியிலேயே தமிழ்க் கூட்டமைப்பு தங்கியிருக்கவேண்டும் என்பது அவரின் விருப்பம். ஆனால் அதற்கு மாறாக சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் போர்க்கொடி தூக்கியதால் வேறு வழியிருக்கவில்லை சம்பந்தருக்கு.  அதனால் தமிழ்க் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு விண்ணப்பித்து விட்டார். தமிழக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு என்றே அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவர் அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்கு விண்ணப்பம் மட்டுமே செய்திருக்கிறார். அதனை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது தேர்தல் ஆணையாளரின் முடிவைப் பொறுத்தது. நான் அறிந்த வரையில், ஒரு கட்சியின் செயலாளராக இருப்பவர் இன்னுமொரு கட்சியின் செயலாளராக இருக்கமுடியாது. ஏற்கனவே ஈபிஆர்எல்எவ் என்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் மாவை சேனாதிராஜா. ஆனால் இவர்கள் இருவரும் புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர்கள். இதனை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை. சட்டத்தில் பல தசாப்த அனுபவஸ்தரான சம்பந்தர் இதனை தெரியாமல் செய்திருப்பார் என்று நம்பமுடியவில்லை. அவர் வழக்கம்போல தன் சகாக்களையே ஏமாற்றியிருப்பதாகவே தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்

திலீபனின் சிலை உடைப்புக்கு 50 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி விஜயகலா

டக்ளஸுக்கு எதிராக 50 கோடி ரூபா மான நஷ்ட ஈடு கோரி வழக்கு - விஜயகலா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக 50 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளார். இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு எதிராக அபாண்டமாக குற்றம் சுமத்தி வருவதாகவும் அவர் தமிழ்மிரர் இணையதளத்திடம் கூறினார். யாழ்ப்பாணம்,நல்லூரில் நிறுவப்பட்டிருந்த  தியாகி திலீபனின் சிலை உடைப்புக்கு விஜயகலா மஹேஸ்வரனே காரணம் என உள்நாட்டு,வெளிநாட்டு ஊடகங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிவருகின்றார். நாடாளுமன்றத்தில் வரவு,செலவுத்திட்ட  உரை மீதான விவாதம் முடிவடைந்ததும் தாம் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் விஜயகலா மஹேஸ்வரன் தமிழ்மிரர் இணையதளத்திடம் மேலும் குறிப்பிட்டார்

சட்ட சிக்கல்களுக்கு உள்ளாகப் போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!

-அர்ச்சுணன்
இதுவரையில் ஊடகத்திற்கான கட்சியாக மட்டுமே இருந்து வந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியானது, உத்தியோகபூர்வ கட்சியாக அதாவது அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை தேர்தல் ஆணையகத்திடம் வழங்கியுள்ளது. இவர்களின் இந்த விண்ணப்பத்தினை தேர்தல் ஆணையகம் ஆய்வு செய்து ,சட்ட விதிகளுக்கு ஏற்ப முறையில் விண்ணப்பம் கோரபட்டிருக்குமாயின் அந்த கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்கும். சட்ட விதிகளுக்கு ஒவ்வாத முறையில் அந்த விண்ணப்பம் கோர பட்டிருக்குமாயின் அதனை நிராகரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உண்டு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு விட்டதாக லண்டனில் இருந்து முழங்கும் வானொலி ஒன்று வெளியிட்ட செய்தி தவறானதாகும். அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் மட்டுமே, தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தேர்தல் ஆணையகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்பதே சரியான செய்தியாகும்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி சுரேஷ் அணி ஆகிய கட்சிகளின் கூட்டாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது கடந்த மூன்று தேர்தல்களில் தமிழரசு கட்சியின் “வீட்டு” சின்னத்திலேயே போட்டியிட்டு இருந்தது. தொடர்ந்து தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதின் மூலம் அந்த கட்சியின் பிரமுகர்களான சம்மந்தன் ,சேனாதிராஜா ஆகியோர்களின் கைகளே ஓங்கி இருக்கும் என்பதினால்! ரெலோ தலைவர் செல்வன் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் அதனை விரும்பவில்லை. இவர்கள் இருவருமே தமிழ் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருந்தவர்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்யும் போது அதி உட்ச அதிகார பதவியான செயலாளராக யாரை நியமிப்பது என்பதில் போட்டிகள் எழலாம் என்று எதிர்பார்கப்பட்டு இருந்தது. இந்தவேளையில் மூவர்கள் செயலாளர்களாக நியமிக்கப்பட்டதாக அறியவந்தது. செல்வன் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் செயலாளர்களாகவும், சம்மந்தன் தலைவராவும் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக அங்கீகரிப்பதில் இங்குதான் பிரச்சனைகள் எழலாமென எதிர்பார்க்கப் படுகின்றது. இலங்கை தேர்தல் ஆணையகத்தின் விதிகளுக்கு அமைய ஏற்கனவே ஒரு கட்சியின் செயலாளராக பதவி வகிக்கும் ஒருவர் மற்றொரு கட்சியின் செயலாளராக பதவி வகிக்க முடியாது. அது மட்டும் அல்லாது கட்சியின் செயலாளராக ஒருவருக்கு மேல் பதவி வகிக்க முடியாது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது மூவரை கட்சியின் செயலாளர்களாக தெரிவு செய்து விண்ணபத்தினை வழங்கியுள்ளது.
ஏற்கனவே தமிழரசு கட்சியின் செயலாளராக இருக்கும் சேனாதிராஜாவும், ஈ.பி,ஆர்,எல்.எவ் கட்சியின் செயலாளராக இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு இருப்பதினால்! தேர்தல் ஆணையகம் இந்த கட்சியின் விண்ணப்பத்தினை நிராகரிக்க கூடுமென தோன்றுகின்றது.
இருப்பினும் முதிர்ந்த அரசியல் அனுபவமும், வழங்கறிஞருமான இராவரோதயம் சம்மந்தருக்கு இது தெரியாமல் இருக்கமுடியாது.அது மட்டுமல்லாது சட்டவல்லுனர் என்பதற்காகவே தேசியல் பட்டியலின் மூலம் நாடாளமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்ட சுபத்திரன் என்பவர் தேர்தல் ஆணையகத்தின் சட்ட விதிகளை நன்றாக ஆராய்ந்த பின்னரே மேற்கூடப்பட்ட வகையில் பதவிகளை உள்ளடக்கிய விண்பத்தினை வழங்கியிருக்க வேண்டும். எனது சிற்றறிவிற்கு எட்டிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சட்ட சிக்கல்களை எதிர்நோக்கலாம் போன்றே தெரிகின்றது. முடிவு எப்படி வரும் என்பதினை பொறுத்திருந்து பார்ப்போம்

மோசடிவழக்கு, மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி மருத்துவக் கல்லூரிக்கு

மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரையடுத்து, சிபிஐ அதிகாரிகள் அந்த கல்லூரியை முற்றுகையிட்டு, 12 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது மருத்துவக் கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் (வகுப்பு அறைகள், போதிய ஆசிரியர்கள் இல்லாதது, ஆய்வு கூடங்கள் இல்லாதது) அங்கீகாரம் பெற்றுள்ளதை உறுதி செய்த சிபிஐ போலீசார், கல்லூரி மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், மேலும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட கேசான் தேசாய் காலத்தில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ராமதாஸ்,பொது வேலை நிறுத்தம்: பாமக பங்கேற்காது

பொது வேலை நிறுத்தம்: பாமக பங்கேற்காது: ராமதாஸ்
வரும் 5ஆம் தேதி நடக்க இருக்கும் பொது வேலைநிறுத்தத்தில் பாமக பங்கேற்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இடதுசாரி கட்சிகளும், பாஜகவும் ஒரே நாளில் முழு அடைப்பு என்ற பெயரில் அழைப்பு விடுத்துள்ளது. கொள்கை மற்றும் அரசியல் நிலைமைகளில் எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய இரு தரப்பினரும் மக்கள் நலன் என்பதைவிட அரசியல் ஆதாயத்தையே முன்னிலைபடுத்துகிறது.

வரும் 5ஆம் தேதி நடக்க இருக்கும் வேலை நிறுத்தத்துக்கு பாமக ஆதரவு அளிக்கிறது என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கூறியது உண்மையில்லை. எனவே 5ஆம் தேதி நடக்க இருக்கும் முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் பாமக பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சந்திரிக்கா மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.

இலங்கை அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் மாற்றங்களின் பின்னர் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க போட்டியிடலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் ஒருவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரு தடவைகளளே பதவி வகிக்கமுடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வரையறைனை 3 தடவைகளாக மாற்ற அரசியல் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் அதற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டால் சந்திரிக்கா தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை அவர் மேற்கொண்டுவருவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்காக தனித்து போராடுவதற்கான காலம் இதுவல்ல எனவும் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பையேற்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரிவித்துள்ளது.

மக்கள் பிரிவின் தலைவர்களான உபுலங்கனி மானவாடு அனுருத்திக திஸாநாயக்க ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனித் தனியாக சந்தித்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் அரசியல் ரீதியான அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உப்புலாங்கனி மானவடுமக்கள் பிரிவை கலைத்து விட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது குறித்து அடுத்த சில தினங்களில் நடைபெறவுள்ள மத்திய செயற்குழுவில் தீர்மானிப்பதாகக் கூறியுள்ளார்.

ஆசிரியைகள் "வெறியாட்டம்' எல்.கே.ஜி., குழந்தைக்கு பிரம்படி :உடலில் கை, கால், முதுகு, முகம் உள்ளிட்ட இடங்களில்

பண்ருட்டியில் எல்.கே.ஜி., குழந்தையை பிரம்பால் அடித்த ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாகூர் வீதியைச் சேர்ந்தவர் முஸ்தபா பராக். இவரது மகள் தன்சிராபெல்லா (3). கடந்த 20 நாட்களுக்கு முன், 2,800 ரூபாய் சேர்க்கை கட்டணம் செலுத்தி பண்ருட்டி தட்டாஞ்சாவடி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்தனர். பள்ளியில் குழந்தை நேற்று முன்தினம் குறும்பு செய்ததால் ஆசிரியை, பிரம்பால் அடித்துள்ளார். அதன் பிறகும் குழந்தை குறும்பு செய்யவே பக்கத்து வகுப்பில் இருந்த ஆசிரியையும் தன்சிராபெல்லாவை பிரம்பால் அடித்தார். மதியம் வீட்டிற்கு சோர்வுடன் வந்த குழந்தையை பெற்றோர் விசாரித்ததில், ஆசிரியை பிரம்பால் அடித்தது தெரியவந்தது. உடலில் கை, கால், முதுகு, முகம் உள்ளிட்ட இடங்களில் பிரம்படி தழும்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதைத் தொடர்ந்து தங்களது உறவினர்களுடன் பள்ளி முன் திரண்டனர். குழந்தையை தாக்கியது குறித்து விளக்கம் கேட்டு முற்றுகையிட்டனர். பள்ளி நிர்வாகம் உரிய பதில் கூறாமல் டி.சி., கொடுத்தனர். ஆத்திரமடைந்த பெற்றோர் அதை அங்கேயே கிழித்தெறிந்து விட்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அட பாவிங்களா...நீங்க எல்லாம் மனுசிங்களா....இல்ல அரக்கிகளா....பச்ச கொளந்தைய போட்டு இப்படி அடிச்சிருக்கீங்களே.....உங்களுக்கெல்லாம் பிள்ளைகள் இல்ல...சேட்டை பண்ணினால் பாரேன்ட்ஸ் கிட்ட சொல்லுங்க...அடிக்கிற உரிமைய யார் கொடுத்தா..??? அரசு இந்த பள்ளி மேல் எல்லாம் நடவடிக்கை எடுக்கணும். சும்மா வாயளவுல சட்ட திட்டங்கள் இருக்க கூடாது....
சஞ்சீவ் - bangalore,India
2010-07-03 06:22:03 IST
கிழிதெரிந்தது தவறு நண்பரே, கோர்டிற்கு போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும், இது போன்ற பள்ளிகள் மாண்டிசோரி என்றொரு கான்செப்ட் இருப்பது தெரியுமா? குழந்தைகளை கொட்டிலைபோல் அடக்கி வைத்து பாடம் நடத்தினால் குறும்பு செய்யாமல் என்ன செய்வர், 3 வயது குழந்தையை அடித்துள்ள ஆசிரியர் என்ன மாடா?...
Vaidyanathan - hyderabad,India
2010-07-03 06:05:46 IST
பிஞ்சு குழந்தைகளை அடிக்கும் ஈன புத்தி கொண்ட வக்கிரங்கள் எல்லா இடங்களிலும் இருக்கே. இந்த மிருகங்களை பள்ளி நிர்வாகம் மலிவுக்காக அமர்த்துகின்ற அவலம் மிகவும் கேவலம். சொன்னாலும் தெரியாத சுயமாவும் புரியாத பணத்தாசை மட்டுமே உள்ள பதர்கள் சில பள்ளியில் irukke....
jeni - california,India
2010-07-03 05:12:37 IST
அடிபாவி உருப்படவே மாட்ட . பச்ச பிள்ளைய இப்படி அடிசிருக்கியே ....உன்ன தெருவுல நிப்பாட்டி தோல உரிக்கணும் ....உனக்கு சம்பளமே அவங்க குறும்பெல்லாம் சஹிக்கிரதுக்கு தான்.....உன் பிள்ளைய எவளாச்சு சாத்துவா ....அப்போ புரியும் உனக்கு...எரும .......
maricar - london,Uruguay
2010-07-03 04:58:12 IST
அந்த இரு ராட்சசிகளையும் நடு வீதியில் நிற்க வைத்து அந்த குழந்தையின் தாய் தந்தையர், டீச்சர் என்ற கொம்பு முளைத்த அரக்கிகளுக்கு பிரம்படி கொடுக்க செய்ய வேண்டும். போலிசும் அரசும் ஆவன செய்ய வேண்டும் .இங்கிலாந்தில் டீச்சர் என்ன பெற்றவர்களே குழந்தைகளை அடித்தால் சிறை தண்டனையோடு குழந்தையையும் அவர்களிடம் இருந்து பிரித்து அரசே பராமரிக்கும். இந்த மாதிரி கடுமையாக தண்டித்தால் நம் நாட்டின் இளைய சமுதாயத்தை,வளரும் பிஞ்சு உள்ளங்களையும் ,அவர்களின் முன்னேற்றமான எதிர் காலத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியரின் அராஜகம் ஒழியும். ஆசிரியர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலால் இன்னும் எத்தனை குழந்தைகள் பாதிக்க படுகிரோதோ,எத்தனை பெற்றோர் வேறு வழி இல்லாமல் மனதில் வேதனை படுகிறார்களோ இந்திய அரசு இதற்கு கடுமையாக தண்டிக்க வேண்டும் ....
RAJ - LONDON,India
2010-07-03 04:45:47 IST

யாழ்ப்பாணத்தில் 75.இலட்சம் ரூபா மோசடி ,புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்று

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்று பொது மக்களிடமும் அதன் பணியாளர்களிடமும் சுமார் 75.இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன.இப்போது அதன் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்.கஸ்தூரியார் வீதியில் மாடிக்கட்டடம் ஒன்றில் இவ்வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிதி நிறுவனம் கடந்த 25.நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டுள்ளதோடு அதன் உரிமையாளரும் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிறுவனத்தில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டவர்களிடம் ஒரு லட்சம், ஐம்பதினாயிரம் என பணம் பெறப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக இணைகின்றவர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன.இதன் காரணமாக குறுகிய காலத்தில் 3500.வரையிலான வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டனர். தற்போது இதன் வாடிக்கையாளர்கள் தாங்கள் எமாற்றப்பட்டமை குறித்து பொலஸில் முறையிட்டு வருகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் நிதி நிறுவனங்களின் நிதி மோசடி இது முதற் தடவையல்ல. யாழ் உதயன் பத்திரிகையின் நிறுவனர் சரவணபவனின் நிதி நிறுவனமான சப்ரா பினான்ஸ் லிமிடடில் வைப்பிட்ட பலரும் தங்கள் சேமிப்பை இழந்தனர்.சிலர் தற்கொலைக்கும் முயற்சித்து இருந்தனர்.இன்று சரவணபவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
www.engalthesam.com

விஜய்சாந்தி, தலையை வெட்டிக் கொல்வேன்,தனி தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை

தனி தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை தலையை வெட்டிக் கொல்வேன் என்று பேசிய தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் முக்கிய தலைவரான நடிகை விஜய்சாந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதிகளுக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அக் கட்சியின் முக்கியத் தலைவரான விஜயசாந்தி,

இடைத் தேர்தலில் நமது கட்சி தான் எல்லா தொகுதிகளிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

தனி தெலுங்கானா மாநிலம் அமையும் வரை நான் ஓய மாட்டேன். தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை வெட்டுவேன். நான் தெலுங்கானாவைச் சேர்ந்தவள். யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றார்.

விஜயசாந்தியின் இந்த பேச்சு தெலுங்கு தனியார் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது.

இதையடுத்து மாநில தேர்தல் அதிகாரியான சுப்பா ராவ், நடிகை விஜயசாந்தி மீது பொது மக்களை கலவரம் செய்ய தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து பஞ்சரா ஹில்ஸ் போலீஸார் விஜயசாந்தி மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தேர்தல் கமிஷன் விஜயசாந்திக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.

இந் நிலையில் விஜய்சாந்தியை கைது செய்ய ஆந்திர போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரது வீட்டருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்று தெரிகிறது

தமிழரசுக்கட்சிக்கு துரோகம் ,நிர்வாகச் செயலாளர் குலநாயகம்

தமிழரசுக்கட்சிக்கு துரோகம் இழைப்போர் பதவிகளிலிருந்து உடனடியாக விலக வேண்டும் - நிர்வாகச் செயலாளர் குலநாயகம் வலியுறுத்தல
இலங்கைத் தமிழரசுக் கட்சி ,அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ ஆகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கி வரலாமேயன்றி தனி ஒரு அரசியல் கட் சியாகப் பதிவு செய்வதில் இலங்கை தமிழரசுக் கட்சி ஒரு போதும் பங்கு வகிக்க முடியாது. தமிழரசுக் கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளரும் தம் நலன்கருதி ஏதேச்சையாக நடந்து கொள்வதை கட்சி ஒரு போதும் அனுமதிக்காது என இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு, ஏற்கனவே தமிழ்க் கட்சிகளின் கூட்டணியான தமிழர் விடுதலைக் கூட்டணியில் மற்றவர்களைப் பலிக்கடாவாக்கி விட்டு பிரச்சினைக்கு பரிகாரம் காண வக்கற்றவர்கள் இப்போது தம் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள்.தமிழர் விடுதலைக் கூட்டணியில் தமிழரசுக் கட்சி தன் அடையாளத்தை தொடர்ந்து வைத்திருந்தது.இதனால் கூட்டணியில் பெரும்பான்மை ஆதரவை வைத்திருந்தும் கூட்டங்களைக் கூட்டி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது போனதினால் தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தற்காலிகச் செயலாளர் நாயகத்தோடு இன்று இயங்குகிறது.
இந்தவகையில் திருவாளர்கள் இரா.சம்பந் தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகி யோர் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பெரும் துரோ கம் விளைவித்துள்ளார்கள். கட்சியின் அனுமதியின்றி இவ்வாறு செயற்படுபவர்கள் தாம் வகிக் கும் கட்சிப் பதவிகளில் இருந்து விலகவேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனி அர சியல் கட்சியாகப் பதியப்பட்டதன் மூலம் இலங்கை தமிழரசுக் கட்சி அழிந்து போய்விடும் என பி.பி.சி தமிழோசைக்குப் பேட்டியளித்த புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தெளிவாகவே கூறியுள்ளார்.
இதனை எந்த தமிழரசுக் கட்சிக்காரனும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அனைத்துத் தமிழ் பேசும் இனத்தையும் இணைத்து தந்தை செல்வாவினால் கட்டி வளர்க்கப்பட்டு வந்த தமிழரசுக் கட்சியின் அழிவை தமிழ் பேசும் இனம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வேறு கட்சிகளின் சின்னங்களில் போட்டியிட்டார்கள் என்ற காரணத்தால் அவர்கள் வகித்த பதவிகளிலிருந்து நீக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்னொரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் இணைந்துகொண்ட திருவாளர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, பொ.செல்வராசா ஆகிய நாடாளுமன்ற உறுப் பினர்களும் பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.
ஏற்கனவே இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இரு பிரிவுகள் பிரிந்து செயற்படுகின்றன. தமிழ்க் காங்கிரஸ் முற்றாகவே கூட்டமைப்பிலில்லை. அ.விநாயகமூர்த்தி தலைமைப் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தனிப்பட்ட மனிதராகவுள்ளார் மீதமாவுள்ளது ஈ.பி.ஆர். எல்.எவ்., ரெலோ மட்டுமே.
திருவாளர்கள் சம்பந்தன், சேனாதிராசா ஆகியோர் தாம் மட்டும் நினைப்பதை கொழும்பில் செய்துவிட்டு வடக்குக்கிழக்கிற்கு வந்து கட்சியினர் மீது எதையும் திணித்து விடலாமென நினைக்கின்றனர். புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தமிழோசைக்குப் பேட்டி அளித்தது போன்றல்லாமல் தமிழரசுக் கட்சி அழிந்து விடும் என்ற நிலைப்பாட்டால் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப் புக்காணப்படுகிறது. எனவே திருவாளர்கள் சம்பந்தன், சேனாதிராசா, செல்வராசா ஆகியோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தாம் வகிக்கும் பதவியிலிருந்து உடன் விலகி கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளத

பங்காரு அடிகளாரிடம் விசாரணை,தனியார் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் ரெய்ட்-

ஒரே நேரத்தில் சுமார் 200 அதிகாரிகள் சோதனைகள் நடந்தினர்.

சென்னை& மேல்மருவத்தூர்: தமிழகம் முழுவதும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் இன்று ரெய்ட் நடத்தினர்.

மாணவர் சேர்க்கைக்காக பல்வேறு கல்லூரிகள் ஏராளமான அளவி்ல் நன்கொடை வசூலித்து வரும் நிலையில் இந்த ரெய்ட் நடந்து வருகிறது. இதனால் இன்று பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கவில்லை.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிகளின் தாளாளரும் பங்காரு அடிகளாரின் மகனுமான அன்பழனின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் கோவிலில் வைத்து பங்காரு அடிகளாரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பங்காரு அறக்கட்டளை தான் இந்தக் கல்லூரிகளையும் கல்வி நிறுவனங்களையும் நடத்துகிறது. அவை உரிய வரி செலுத்தாததால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்பழகன் தனது தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது குறி்ப்பிடத்தக்கது. இந்த வீட்டிலும் மேல்மருத்துவத்தூர் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் சுமார் 200 அதிகாரிகள் சோதனைகள் நடந்தினர்.

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் ஸ்ரீதேவி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் பங்காரு அடிகளாரின் மூத்த மகள் ஆவார். இவரும் மேல்மருவத்தூரில் தான் வசிக்கிறார்.

அதே போல நாகர்கோவில் சன் கல்லூரியிலும் சோதனை நடந்தது. இந்தக் கல்லூரிக்கு சமீபத்தில் அங்கீகாரத்தை ரத்து செய்தது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தக் கல்லூரியின் நிர்வாக அலுவலகம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளது. அந்த அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அதேபோல கும்மிடிப்பூண்டி ஆர்.எம்.கே. கல்லூரி, தாம்பரம் சாய்ராம், மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். கல்லூரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல பொறியியல் கல்லூரிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை கற்பகாம்பாள் நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் சோதனை நடக்கிறது.

இந்த சோதனைகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சோதனை நடைபெறுவதால் பல கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. வருமான வரித்துறையினரின் சோதனைகள் இரவு வரையும் தொடர்ந்தது.

பதிவு செய்தவர்: சுரேஷ்
பதிவு செய்தது: 03 Jul 2010 3:40 am
பங்காரு அடிகளா ஒரு அயோக்கியன்.. அவன் பசங்க பொறிக்கி கம்மனடிங்க... சாமி பேர சொல்லி பெரிய ஆளா ஆனா பின்னாடி சாமி கும்பிட கூட விட மாற்றனுன்ங்க.. இவன் தான் சாமியாம்.. பொறிக்கி பொறம்போக்கு...

பதிவு செய்தவர்: தி க தோழன்
பதிவு செய்தது: 03 Jul 2010 3:20 am
மெடிகல் படித்த 90 % டாக்டர் பார்.பானுங்க அமெரிக்காவில் சிட்டிசன்சிப் வாங்கி செட்டிலாகிவிட்டார்கள். ஒரு டாக்டரை உருவாக்க நம்ம அரசாங்கம் 18 லட்சம் செலவு செய்யுது. அவ்வளவும் நம்ம வரிப்பணம். எல்லாம் வேஸ்ட். இந்த நாய்களை படிப்பு முடித்தவுடன் 5 வருஷம் இங்கேயே அரசு ஆஸ்பத்திரியில் வேலைபார்க்க சட்டம் கொண்டு வரணும்.

ஜெயலலிதா, பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை, ஜூலை 2: இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையிலேயே பாடுபடுபவர்கள் தம்மை உணருவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும்  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை சட்டப் பேரவை வலியுறுத்தியது.

மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்துவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை மறந்துவிட முடியுமா?

இலங்கையில் சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச் சங்கிலிகளும், பொதுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

அப்போது அறிக்கை விடுத்த ஜெயலலிதா, ""ஒரு யுத்தம், போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. இலங்கையில் தமிழர்களை பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.

ஆனால், 2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என அறிவித்தவன் நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் உணருவார்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 2 ஜூலை, 2010

சிரஞ்சீவ, திருப்பதி கோவிலில்ஊழல், பல ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு

திருப்பதி கோவிலில் பல ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக, பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கிருஷ்ண தேவராயர் வழங்கிய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த விவகாரத்தில் தேவஸ்தான அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருகிறார்கள்.

ஒருவர் நகை மாயமாக வில்லை, உருக்கப்பட்டு விட்டது என்கிறார். இன்னொருவர் பழங்கால நகைகள் நிறைய உள்ளன. அதில் கிருஷ்ணதேவராயர் வழங்கிய நகைகள் எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்.

இதனால் திருப்பதி கோவிலில் பல ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

எனவே திருப்பதி கோவிலில் நகைகள் மாயமானது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும். இதற்காக நான் 9 ந்தேதி திருப்பதி வரும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மனு கொடுப்பேன்.

நகைகளை திருடி சென்றவர்கள் யார் என்பது பற்றி முறையான விசாரணை நடத்தி உண்மையை கண்டு பிடிக்க வேண்டும். நகைகளை உருக்கியபோது இருந்த நிர்வாக அதிகாரி யார்? அறங்காவலர் குழு தலைவர் யார்? என்பதை கண்டு பிடித்து விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை தெரிய வரும் என்றார்.

தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் உருவாக்கம்.

இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் இன்றையதினம் ஒன்றுகூடி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் உருவாக்கியதுடன் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர்.

இன்றுகாலை கொழும்பில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தமிழ்க் கட்சிகளுக்கிடையில், தமிழ் மக்களின் நலன்களுக்கான பொது வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து ஆராயப்பட்டது. கடந்த மாதம் 24ம் திகதி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் ஒன்றுகூடி தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கூடி ஆராய்வதற்கென ஆரம்பித்த பொது இணக்கப்பாட்டின் தொடர்ச்சியாகவே இன்றைய முக்கிய சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முதலில் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமற்போன கட்சிகள் தொடர்பாகவும் மேலும் இணைந்துகொள்ளக்கூடிய கட்சிகள் தொடர்பாகவும் அக்கட்சிகளை இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் சமகாலத்தில் மக்கள் எதிhநோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதன்பிரகாரம் தமிழ்க் கட்சிகளின் ஒன்றியமாக பொது நோக்கத்தின் அடிப்படையில் நோக்கங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதென்றும் அதற்கென ஓர் குழு அமைக்கப்பட்டு இதற்கான வரைபுகளை அக்குழுவானது எதிர்வரும் 4ம் திகதி ஒன்றுகூடி தயாரித்து எதிர்வரும் 7ம் திகதி மீண்டும் ஓன்றுகூடவுள்ள தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்திடம் கையளிப்பது எனவும் ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது. இக்குழுவில் ஆர்.சுரேந்திரன் ஆர்.ராகவன் ஏ.சி.கைலேஸ்வரராஜா தி.சிறிதரன் எம்.சந்திரகுமார் பேரின்பநாயகம் ரி.சிவாஜிலிங்கம் என்.குமரகுருபரன் ஷெரீன் சேவியர் ஆகியோர் அங்கத்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி தந்தை செல்வாவின் புதல்வரும் ஒவ்பர் அமைப்பின் இயக்குனருமாகிய திரு. செல்வநாயகம் சந்திரகாசன் மற்றும் பேரின்பநாயகம் நாபா ஈபிஆர்எல்எப் சார்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் திரு. வரதராஜப்பெருமாள் செயலாளர் திரு.தி.சிறிதரன் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சதானந்தம் மற்றும் ஆர்.ராகவன்  தமிழ் தேசிய விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் அதன் செயலாளர் ஏ.சி.கைலேஸ்வரராஜா கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. பூ.பிரசாந்தன் சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன் திரு. ஜீ.சுரேந்திரன் ஜனநாயக மக்கள் முன்னணி செயலாளர் திரு.நல்லையா குமரகுருபரன் மனித உரிமை ஆர்வலர் ஷெரீன் சேவியர் மற்றும் மேகலா ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் அசோக் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் சர்வதேச அமைப்பாளர் மித்திரன் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளை பிடிகாரன்,காப்பவனாக மாறிய மாயம்!



-அர்ச்சுணன்
முன்னாள் பெண் போராளிகளின் தற்போதை அவலை நிலை குறித்து நாடாளுமன்றத்தில் சிறீதரன் அவர்கள் குரல் கொடுததினை வரவேற்கும் அதே வேளை, அந்த பெண்கள் இன்று இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதற்கு அவரும் துணை போனவர் என்பதினை மக்கள் அறிய வேண்டும். புலிகளின் சிறப்பு தளபதியாக இருந்த தீபன் என்பவரின் சகோதரியை திருமணம் முடித்த சிறிதரன், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் தலமை ஆசிரியாக பணிபுரிந்தவர் ஆவார். இவர் தலமை ஆசிரியராக கடமையாற்றிகொண்டு,புலிகளுக்கு பிள்ளை பிடித்து கொடுக்கும் செயலமையும் புரிந்தவர் ஆவார்.
கிளிநொச்சி மக்கள் யாவரும் இதனை நன்றாக அறிவார்கள். பாடசாலை முடிந்து மாணவ, மாணவிகள் வீடு திரும்பும் வேளை அவர்களை இடைமறித்து சிறிலங்கா செஞ்சிலுவ சங்க(ளுடுசுஊ) ஜீப்பில் கடத்தி சென்றவர்களில் சிறீதரனும் ஒருவராவார். புலி உறுப்பினர்களுடன் இணைந்து மாணவிகளை கடத்தி சென்று அவர்களின் வாழ்கையினை சீரளித்துவிட்டு, தற்பொழுது அவர்களுக்காக குரல் கொடுக்கும் அவரின் செயல் மிகவவும் அருவருக்கதக்க செயலாகும்.
பாலியல் வல்லுறவிற்கும், உளரீதியான உபாதைளுக்கும் உள்ளாகிவரும் அந்த பெண்களின் ஏக்கங்களுக்கு சிறீதரன் பதில் கூறியே ஆகவேண்டும். தான் செய்த பாவத்திற்கு இவர் பரிகாரம் தேடவேண்டுமானால்! இவரின் கடந்த கால குற்றத்திற்கு பகீரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கோருவதோடு தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
மாணவ, மாணவிகளை பாதுகாக்க வேண்டிய தலமை ஆசிரியரே அந்த பிள்ளைகளை கடத்தி செல்லப்படுவதற்கு துணைபுரிந்தார் என்றால்! வேலியே பயிரை மேய்ந்தது போன்றது ஆகிவிடாதா? செய்ததையும் செய்து விட்டு அந்த பெண்கள் குறித்து கவலை கொள்வதும், அவர்கள் பாதிக்கப்படுவதாக முறையிடுவதும் கேவலமான செயல் என்பதினை அவரினால் புரிந்து கொள்ள முடியவில்லையா? இப்படிப்பட்ட சிவஞானம் சிறீதரனை நாடாமன்ற உறுப்பினருக்கான நியமனத்தினை வழங்கிய சம்மந்தரை நோவதா அல்லது, அவரை நாடாளுமன்றம் செல்ல வைத்த மக்களை மறதியாளர்கள் என்பதா?
மக்கள் தமது தரத்திற்கு ஏற்ப தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வார்கள் என்று உலக அறிஞர் பேனாட்சா கூறியதினை வட மாகாண மக்கள் உண்மை என்கின்றார்களா?
தமிழ் பெண்மையை வன்முறைக்கு பயன்படுத்துவதற்காக விடுதலை புலிகளின் தலமை வலுக்கட்டாயமாக பிடித்து சென்று தடுத்து வைத்திருந்தது. பெண்களின் கூத்தலுக்கு இயற்கையிலேயே மணமுள்ளதா அல்லது வாசனை திரவியங்களை பூசிக்கொள்வதினாலும், மலர்களை சூடிக்கொள்வதினாலும் மணம் உண்டானதா என்று பெண்களின் கூந்தல் குறித்து வாதம் புரிந்த தமிழர்கள்,புலிகளின் காலத்தில் கூந்தல் அறுக்கப்பட்ட பெண்களை பார்கவேண்டியது இருந்தது. 
புனர்வாழ்வு அமைச்சராக இருக்கும் மனிதாபியான டியூ. குணசேகரா அவர்களுடன் பழகியவன் என்ற வகையில் அவரின் அரசியல் பார்வை குறித்து என்னால் கூற முடியும். ஏனைய சிங்கள அரசியல் வாதிகள் போன்று வார்த்தையளவில் இனங்களுக்கு இடையிலான மீள் இணக்கப்பாட்டின் அவசியம் குறித்து பேசுபவர் அல்ல. தமிழ் இனத்திற்கு உரிய உரிமைகளும்,மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவர்.
2008 ஆம் இடதுசாரி கட்சிகளினால் நடத்தப்பட்ட மேதின கூட்டத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பினை தமிழ்கட்சி ஒன்று ஏற்படுத்தி தந்ததினை அடுத்து, டியூ. குணசேகரா, பேராசிரியர் திஸவிதாரண, வாசுதேவ நாணயக்காரா ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பெண்களுக்கான புனர்வாழ்வினை ஏற்படுத்துவதற்கான பொறுப்பில் இருக்கும் தன்னிடம் சிறீதரன் பேசாது, வரவு செலவு திட்டவாத இடைவெளியில் ஏன் பேசவேண்டும் என்று டியூ.குணசேகரா கேட்டிருக்கின்றார். இந்த சம்பவம் குறித்து விசாரனை செய்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டியூ.குணசேகரா அவர்களை கேட்டுக் கொள்கின்றேன்
 

கலாநிதி குமரகுருபரன் அனைத்து அமைப்புகளும் குறைந்தப்பட்ச வேலைத்திட்டதின் அடிப்படையில் ஒருமுத்த குரலிலே அரசாங்கத்துடனும்,

-ஜனநாயக மக்கள் முன்னணி
எமது முன்னணியின் தலைமைக்குழுவின் முடிவிற்கு அமைய இன்று கொழும்பில் நடைபெற்ற தமிழ் கட்சிகளின் ஒன்றிய கூட்டத்தில் எமது கட்சி கலந்துகொண்டுள்ளது. போருக்கு பிந்தியதான இன்றைய சவால்மிக்க காலகட்டத்தின் முக்கியத்துவம் கருதியும், தமிழினத்தின் ஒன்றுபட்ட செயற்பாட்டை அடையாளப்படுத்தும் முகமாகவும் எமது கட்சி இம்முடிவை எடுத்துள்ளது.

இன்றைய கூட்டத்தில் எமது கட்சியின் பொதுச்செயலாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் பிரதிநிதித்துவப்படுத்தினார். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் உடன் பிறப்புக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான போராட்டங்களுக்கு எமது கட்சி தொடர்ச்சியாக ஆதரவை வழங்கிவந்துள்ளதுடன், மனித உரிமை போராட்டங்களில் முதன்மை பங்காளியாகவும் இருந்துவந்திருக்கின்றது.
இந்த எமது வரலாற்று ரீதியான செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே நாம் இதை காண்கின்றோம். வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அமைப்புகளும் குறைந்தப்பட்ச வேலைத்திட்டதின் அடிப்படையில் ஒருமுத்த குரலிலே அரசாங்கத்துடனும், சர்வதேச சமூகத்துடனும் உரையாடலை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதை எமது கட்சி வரவேற்கின்றது.
இதற்கு சமாந்தரமாக வடகிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற இந்தியவம்சாவளி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் கட்சிகளும் படிப்படியாக இந்த ஒன்றுப்பட்ட செயற்பாட்டிற்குள் உள்வாங்கப்படவேண்டும். பாரம்பரியமான அரசியல் முரண்பாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே இன்றைய காலகட்டத்தில் நாடு முழுக்க வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பாக குழப்பம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் யார் என்பது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை குழப்பகரமான நிலைமை ஏற்பட்டது.
அந்த மாவட்ட அரச அதிபர் கே. கணேஷின் பதவிக்காலம் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து அவரின் இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டிருப்பதாகவும்   நேற்று வியாழக்கிழமை   கடமையைப்    பொறுப்பேற்கவிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், நேற்றுக்காலை யாழ்.கச்சேரிக்கு திருமதி சுகுமார் சென்றிருந்த போது கே.கணேஷின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது.   அரச அதிபர் கணேஷின் பதவிக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை அவருக்கு யாழ்.கச்சேரியில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றிருந்தது. ஆயினும் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கணேஷ் நேற்று தனது கடமைகளை மேற்கொண்டதாக யாழ்.கச்சேரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விடயம் குறித்து அரச அதிபரிடம் நிருபர்கள் தொடர்புகொண்ட போது,     யாழ்.மாவட்ட அரச அதிபராக மேலும்    6 மாத காலத்துக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பாகத் திருமதி சுகுமாரிடம் கேட்டபோது, யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் நியமனக் கடிதத்தை பொது நிர்வாக அமைச்சு எனக்கு வழங்கியுள்ளது. ஆனால், ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே கடமையைப் பொறுப்பேற்பது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறினார்.
www.ilakkiyiainfo.com 

இலங்கையின் முதலாவது கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றி!

இலங்கையின் வைத்திய வரலாற்றில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.இதன் மூலம் தேசிய வைத்தியசாலை மாபெரும் சாதனை படைத்திருக்கின்றது.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் மந்திக விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரே இந்த சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

40 வயதான ஒரு நோயாளிக்கு இந்த மாற்று கல்லீரல் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.மூளை செயலிழந்து வாழ முடியாத நிலையிலிருந்த நோயாளி ஒருவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கல்லீரல் ஒன்றே மேற்படி நபருக்குப் பொறுத்தப்பட்டுள்ளது.இவரிடமிருந்து சிறுநீரகமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சத்திர சிகிச்சைக்காக 24 மணி நேரம் செலவிடப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ள இதுவரையில் சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கே பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இதற்கு சுமார் 5 மில்லியன் ரூபா வரையில் செலவிட வேண்டியும் இருந்தது.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அரிய சாதனை இந்நிலைமையை மாற்றியமைத்துள்ளது.

ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்

எத்தனையோ இந்தியர்கள் இலங்கைக்கு போகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் போகிறார்கள். இந்திய கடற்படைத் தளபதி வருகிறார். அப்படி இருக்கையில் நான் படப்பிடிப்புக்கு போனதை மட்டும் தவறாக விமர்சிப்பது ஏன் என்று கேட்டுள்ளார் ஆசின்.

இலங்கைக்கு இந்தியத் திரையுலகினர் யாரும் போகக் கூடாது என திரைப்படக் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. அப்படி போவோருக்கு தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடிகை ஆசின் தற்போது சல்மான் கானுடன் இலங்கையில் முகாமிட்டு ரெடி என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதனால் தமிழ்த் திரையுலகினர் கடுப்படைந்துள்ளனர். இவ்வளவு சொல்லியும் ஆசின் போயிருப்பதால்அவருக்கு தடை விதிக்கப்படும் என ராதாரவி கூறியுள்ளார்.

ஆசின் தற்போது விஜய்யுடன் காவல்காரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆசின் கூறுகையில்,

நான் ஒரு நடிகை. படப்பிடிப்பு லொகேஷனை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது. தயாரிப்பாளரும், இயக்குனரும்தான் அதை முடிவு செய்கிறார்கள். ஆனாலும் தற்போதைய நிலைமைகளை அவர்களிடம் எடுத்துச் சொன்னேன், அவர்கள் கேட்கவில்லை.

ரெடி படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமாகி விட்டேன். எனவே படம் எடுப்பவர்களின் முடிவுகளை என்னால் மீற முடியாது. நான் வெறும் நடிகை. அரசியல்வாதி அல்ல. என்னை பிரச்சினைகளுக்குள் சிக்க வைப்பது சரியல்ல.

கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கை சென்று ஆசிய கோப்பைக்கான போட்டியில் விளையாடினார்கள். இந்திய கப்பல் படை தலைமை அட்மிரல் நிர்மல் வர்மா ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இலங்கை வந்திருக்கிறார். தினமும் சென்னையில் இருந்து ஆறு விமானங்கள் இலங்கை செல்கின்றன.

அவற்றில் நூற்றுக்கணக்கான இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை போகிறார்கள். என்னை மட்டும் தவறாக விமர்சிப்பது ஏன்? நடிப்பு என்பது எனது பணி. அதை செய்வதற்காகவே இலங்கை வந்துள்ளேன். சினிமாவையும் விளையாட்டையும் அரசியல் ஆக்க கூடாது.

இலங்கையில் உள்ள தமிழர்கள் என்னை சந்தித்தனர். எனது நடிப்பை பாராட்டி உற்சாகப்படுத்துகிறார்கள் என்றார் ஆசின்.

இலங்கை தமிழர்கள் தமிழ் திரைப்பட நட்சத்திரங்களை காண ஆர்வமாக உள்ளதை சல்மான் கான்

இலங்கைத் தமிழர்கள் தமிழ் நடிகர், நடிகைகளை காண ஆர்வமாக உள்ளனர். இதை நான் இலங்கை வந்தபோது உணர்ந்து கொண்டேன். ஆனால் ஏன் அங்கு போகக் கூடாது என தடை விதித்துள்ளனர் என்று தெரியவில்லை. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, இயற்கை எழில் சூழ்ந்த நிலையிலும், படப்பிடிப்புக்கு ஏற்ற வகையிலும் உள்ளதாக கூறியுள்ளார் சல்மான் கான்.
தற்போது இலங்கைத் தமிழர்களையும் தனது செயலுக்கு ஆதரவாக கூப்பிட்டுப் பேசியுள்ளார். அத்தோடு தமிழ்த் திரையுலகினருக்கும் அட்வைஸ் கொடுப்பது போல பேசியுள்ளார்.
தற்போது ஆசினுடன் இலங்கையில் முகாமிட்டுள்ள சல்மான் கான், ரெடி என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இதனால் ஆசினுக்கு தமிழ்திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்தியத் திரையுலகமே ஒன்று சேர்ந்து ரெட் கார்டு போடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சல்மான் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பையில் நான் இருந்தபோது இலங்கை செல்லவேண்டாம் என சில குறுந்தகவல்கள் வந்தன. ஆனால் இலங்கை தமிழர்கள் தமிழ் திரைப்பட நட்சத்திரங்களை காண ஆர்வமாக உள்ளதை நான் இப்போதுதான் அறிந்தேன். அவர்களை புறக்கணிக்கும் வகையில் ஏன் தடை விதித்துள்ளார்கள் என்று தான் புரியவில்லை.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, இயற்கை எழில் சூழ்ந்த நிலையிலும், படப்பிடிப்புக்கு ஏற்ற வகையிலும் உள்ளது. எனவே அதை புறக்கணிப்பது தேவையற்றது என்று கூறியுள்ளார் சல்மான்.

இன்று கொழும்பில் நடைபெற்ற சகல தமிழ் கட்சிகளின் கூட்டத்திற்கு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில், இன்று கொழும்பில் நடைபெற்ற சகல தமிழ் கட்சிகளின் கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் பங்குபற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்றைய கூட்டத்தில், அரசியல் அமைப்பு சீர்திருத்தம், மற்றும் தமிழ் மக்களின் நாளாந்த நிகழ்வுகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க தமிழ் கட்சிகள் உப குழுவொன்றை அமைத்துள்ளன.
இந்த குழுவில் இன்று பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகளில் தலா ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், இன்றைய கூட்டத்தில்
1.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,
2. தமிழ்ஈழ மக்கள் விடுதலைக் கழகம்,
3. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி,
4. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரதராஜப்பெருமாள் அணி,
5. ஜனநாயக மக்கள் முன்னணி,
6. தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு 
7. தமிழர் விடுதலைக் கூட்டணி

ஆகிய ஏழு கட்சிகள் கலந்து கொண்டன.
இதன் போது அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடப்படவில்லை என கூறப்படுகிறது.
இக்கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த போதும், அவர்கள் சரியான பதிலை வழங்கவில்லை. அத்துடன் இந்த கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கவில்லை.
இது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் கூட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்கலாம் என்ற நம்பிக்கை இந்த கட்சிகளுக்கு மத்தியில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இந்த கட்சிகள் எதிர்வரும் 17ம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கூடையில் அடைக்கப்பட்ட நண்டுக்கூட்டத்தின் கதையை அம்புலிமாமா வாங்கி படியுங்கள்.
பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்று சேராது என்று இரண்டு தசாப்த்தங்களை தனது சுயநல வீராப்புக்காக  வீணடித்த தந்தை செல்வநாயகத்தின் வழி வந்தத தமிழ் தேசிய கூட்டமைப்பினர். போதாக்குறைக்கு அந்த செல்வனயக்கதின் அதேபாணியை இன்னும் சற்று பயங்கரவாத சுயநலத்தையும் சேர்த்து மக்களையும் இதர போராளிகளையும் கொன்று குவித்த புலிப்பானிகல்தானே இவர்கள். ஒற்றுமை பார்த்து வெறுத்திடும் தமிழ் தலைவர்களே இன்னுமா பாடம் படிக்கவில்லை?

ஜாக்சனைப் பாதித்த 'விடிலிகோ' சரும நோய் மகனுக்கும் வந்தது!

லண்டன்: பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடல் மற்றும் முகத்தின் நிறத்தை கோரமாக்கிய விடிலிகோ என்ற சரும நோய் தற்போது ஜாக்சனின் மகன் பிரின்ஸ் மைக்கேல்-1க்கும் வந்துள்ளது.

மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருந்தபோது முகம் மற்றும் உடலின் நிறம் திடீரென மாறத் தொடங்கியது. அலங்கோலமாக மாறியதால் அவரது முகமும், உடலும் நலிவடைந்து போனது.

உடலின் கருமை நிறத்தை மறைக்க ஜாக்சன் செய்த ப்ளீச்சிங்கால்தான் இப்படி ஆனதாக அப்போது கூறினார்கள். ஆனால் உண்மையில் அவருக்கு வந்த விடிலிகோ என்ற சரும நோய்தான் இந்த அலங்கோலத்திற்குக் காரணம்.

ஜாக்சன் இதைக் கூறியபோது யாரும் நம்பவில்லை. இந்த நிலையில் தற்போது ஜாக்சனின் 13 வயது மகன் பிரின்ஸ் மைக்கேலுக்கும் இந்த சரும நோய் வந்துள்ளதால் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

சமீபத்தில் ஹவாய்க்கு தனது தங்கை பாரிஸ், தம்பி பிரின்ஸ் மைக்கேல்-2 ஆகியோருடன் சென்றிருந்தான் பிரின்ஸ். அப்போது அவனது அக்குள் பகுதியில் வெள்ளைத் திட்டுக்கள் இருப்பதைப் பார்த்தனர் குடும்பத்தினர்.

முதலில் இது சூரிய ஒளியால் ஏற்பட்ட திட்டுக்களாக இருக்கும் என சந்தேகித்தனர். ஆனால் மருத்துவ சோதனையில்தான் இது விடிலிகோ எனத் தெரிய வந்தது.

விடிலிகோ என்பது மரபு ரீதியாக வரும் நோயாகும். இது வந்தால் தோலின் நிறம் மொத்தமாக மாறிப் போய் விடும். உடலின் பொலிவே போய் விடும்.

தற்போது பிரின்ஸுக்கு இந்தப் பிரச்சினை வந்துள்ளதால் அவனது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

அதேசமயம், இப்போதாவது பிரின்ஸ்தான், மைக்கேல் ஜாக்சனின் வாரிசு என்பதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனராம்.

அரசாங்க அதிபர் பதவியை பதவியை ஏற்பதில் சில அரசியல் தலையீடுகள் தடையாக அமைந்து விட்டதாக

ஆண்களின் சொற்களுக்கு பெண்கள் மறுபேச்சு பேசக்கூடாது என்பதுதான் நம்மவர்களில் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஆங்காங்கே பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஆண்கள்  சிலர் இருந்தாலும், விகிதாசாரத்தில் பெண்கள் எதிர்த்துப் பேசாதவர்களாகவும் அதிகாரத்தில் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே பல ஆண்களின் விருப்பமாக இருந்து வருகின்றது.
உலகில் பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு பெருகி வருகின்றது. விண்ணைத் தொட்ட விஞ்ஞானிகளுள் பெண்களும் அடங்குவார்கள். விடுதலைப் போராட்டங்களின் ஈடுபட்ட போராளிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆயுதங்களை ஏந்தி அராஜகத்திற்கும் அடக்கு முறைகளுக்கும் எதிராக போராடினார்கள். போராடியும் வருகின்றார்கள்.
குறிப்பாக நமது ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தோற்றம் பெற்ற விடுதலை இயக்கங்களில் அதிகம் பெண் போராளிகளை கொண்டிருந்ததும் எண்ணிக்கையில் அதிகமான பெண்போராளிகளை களத்தில் பலி கொடுத்ததும் விடுதலைப் புலிகள் இயக்கமே. ஆனாலும் முதலில் போராட்டத்தில் குதித்து நின்ற ஈபிஆர்எல்எவ், ரெலோ, மற்றும் புளட் போன்ற இயக்கங்களிலும் அதிகளவு பெண் போராளிகள் அங்கம் வகித்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. முக்கியமாக தற்போதைய இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராளியாக அங்கம் வகித்த ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் பெண் போராளிகள் பிரிவு பலமிக்க ஒன்றாக இருந்தது என்பதை நமது தமிழ் மக்கள் அறிவார்கள்.
இவ்வாறாக பெண் குலத்தின் பங்களிப்பு என்பது நமது தமிழர் சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்று தலைமை தாங்கும் தகைமையைக் கொண்டிருந்தது என்று கூட கூறலாம்.
இவ்வாறான ஒரு காலகட்டத்தில்தான் யாழ் மாவட்டத்தின் பல அரசாங்க உயர் நிர்வாகப் பதவிகளில் நமது தமிழ் பேசும் பெண்மணிகள் அமர்ந்துள்ளார்கள் என்ற செய்தியும் காதுக்கு இதமான செய்தியாகவே நம்மவர்களில் பலருக்கு உள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதி உயர் நிர்வாகப் பதவியாக விளங்கும் அரசாங்க அதிபர் பதவியை  நேற்று காலை பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட திருமதி எமெல்டா தனது பதவியை ஏற்பதில் சில அரசியல் தலையீடுகள் தடையாக அமைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தாலும், இதையிட்டு பெண்குலம் மனம் தளர்ந்து விடக்கூடாது. இது ஒரு தற்காலிகத் தடையே.
எவ்வாறு விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தங்கள் தாக்குதல் இலக்குகளை நோக்கி நகரும்போது ஒரு ஆண் போராளிக்குரிய அத்தனை மனத்துணிச்சலோடு சென்று வெற்றி வாகை சூடினார்களோ  அதைப் போலவே வேறு பல துறைகளிலும் நமது பெண்கள் தலைமைத்துவ ஆற்றல் கொண்டவர்களாகவே விளங்குகின்றார்கள். நமது தமிழர் சமூகத்தில் உலகெங்கும் எத்தனை ஆயிரம் பொறியியலாளர்கள்? எத்தனை ஆயிரம் வைத்தியர்கள்? தங்கள் கடமைகளில் இவர்கள் முன்னணி வகிக்கின்றார்கள்.
இவர்கள் வழியொத்து நமது யாழ் மாவட்ட பெண்மணிகளும் தங்கள் ஆற்றலால் முன்னேறியுள்ளார்கள். இன்னும் எத்தனையோ பெண்கள் அவர்களுக்கு பின்னால் அணிவகுத்து நிற்கின்றார்கள். உயர் பதவிகளை எட்டிப்பிடிப்பதற்காக.. இதை ஆண்கள் சமூகம் தங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்று பார்க்காமல் ஆற்றலுக்கு பால் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாண அரசாங்க அதிபராக அந்த எமெல்டா தற்போது ஆசனத்தில் அமராமல் இருந்தாலும் அருகிருக்கும் மாவட்டம் ஒன்றில்தான் அவர் தற்போது பதவி வகிக்கின்றார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அங்கு உயர் நிர்வாகப் பதவிகளில் பிரகாசிக்கும் பெண் குலத்தின் பிரதிநிதிகள் தங்கள் பணிகளை செவ்வனே செய்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று உதயன் வேண்டுகின்றான்.
கனடா உதயன்: ஆசிரியர் தலையங்கம்

திருமாவளவன் குற்றச்சாட்டு, இதற்கு முன்பு விலைவாசி உயர்வு ஏற்பட்டது கிடையாதா? என்று

தேர்தலை மனதில் வைத்து முழு அடைப்பு நடத்துகிறார்கள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு மாவட்ட கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழா முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிக மிக முக்கியம் ஆகும். இதனை விடுதலைச்சிறுத்தை கட்சி வரவேற்கிறது. அப்போது தான் மக்கள் தொகை அடிப்படையில் அவர் அவருக்கு சமூக நீதி கிடைக்கும்.

ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயரும் போது மத்திய அரசு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வு காரணமாக தான் விலை உயர்வு ஏற்படுகிறது என்று கூறி வருகிறது. இதனை சமாளித்து சாதாரண மக்கள் வாங்கும் சக்தியை கொண்டு வந்து விலைவாசி கட்டுபடுத்துவது அரசின் கடமையாகும்,

உடனடியாக பெட்ரோல், டீசல், மண்எண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திருப்பபெற வேண்டும், வருகிற 5 ந்தேதி பா.ஜ.க உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர் வரும் தேர்தலை கணக்கில் கொண்டு தான் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகிறது. இதற்கு முன்பு விலைவாசி உயர்வு ஏற்பட்டது கிடையாதா? என்று கேள்வி எழுப்பினார்.

சரத்பொன்சேகா எச்சரிக்கை ,விடுதலைப்புலிகள் தொடர்பான விசாரணைகளை ்கேபி குழப்பிவிடுவார்

முன்னாள் விடுதலைப்புலிகளின் பிரதம  ஆயுத தரகர் குமரன் பத்மநாதன் (கேபி) ஒரு பயங்கரவாதி என்பதால் விடுதலைப்புலிகள் தொடர்பான விசாரணைகளை  இவர் குழப்பிவிடுவார் என்றும் அவர்மீது நம்பிக்கை வைக்கவேண்டாம் என்றும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கே.பி.கைது செய்யப்பட்டு  நீண்ட நாட்களாகியும் அரசாங்கம் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தவறியது ஏன் என்று ஊடகவியலாளர் கேட்டபோது, முன்னாள் விடுதலைப்புலி தலைவர் கே.பி.யுடன் அரசாங்கம் இணைந்து செயல்படுவது யுத்தத்தில் உயிரிழந்த சகல பாதுகாப்பு படையினரையும் அவமதிப்பதாகும்  என்று ஜெனரல்  பொன்சேகா தெரிவித்தார்.
அரசாங்கம் கே.பி.யை சிறையிலிடாமல் இருப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறினார். இந்த நபரிடம் பெரும் தொகை பணம் இருக்கிறது. அரசாங்கம் இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் அல்லது இவரை சிறையிலிடாமல் இருப்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். எத்தனையோ பிரிகேடியர்கள், ஜெனரல்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள போது பயங்கரவாதிகள் சுகபோகம் அனுபவிப்பது வெட்கக்கேடான விடயமாகும்.
யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர் அபிவிருத்தி திட்டங்களிலும் நல்லிணக்க நடைமுறைகளிலும் புலம்பெயர் தமிழர்களை ஈடுபடச் செய்வதற்கு அரசாங்கம் கே.பி.யின் உதவியை நாடியுள்ளது.   தமிழர் தேசிய கூட்டமைப்பினாலும் புலம் பெயர் தமிழர்களாலும் இந்தக் கோரிக்கை இதுவரை அலட்சியப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ரெய்டு,பங்காரு அடிகளாருடன் மேல் மருவத்தூர் கல்வி நிறுவனங்களில்

மேல் மருவத்தூர் கல்வி நிறுவனங்களில் ரெய்டு(Raid)

மேல் மருத்தூர் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் கல்லூர் அலுவலகம் மற்றும் கல்லூரி தாளாளர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சோதனைகளில் நன்கொடையாக மாணவர்களிடம் வசூலித்த பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதே போல் மேல்மருவத்தூர் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். மேல் மருவத்தூர் ஆதிபராசத்தி மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கல்லூரியின் தாளாளர் செந்தில் குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கல்லூரி தாளாளர் செந்தில் குமார், தமது தந்தை பங்காரு அடிகளாருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் ஸ்ரீதேவி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பங்காரு அடிகளாரின் மூத்த மகளான ஸ்ரீதேவியும் மருவத்தூரில் வசிக்கிறார்.

comments:
கடவுளின் பெயரால் காசு சேர்க்கும் நபர்களில் இவர் பெரிய ஆள்.இவர் தன்னை அம்பாள் தன்மீது குடி கொண்டு இருப்பதாக மக்களை நம்பவைத்து பணம் சேர்க்கிறார்.இவரது மனைவி மக்கள் எல்லோரும் இவரது கல்லூரிகள் போன்ற வர்த்தக நிறுவனங்களை (ஆமாம் கல்லூரிகள் எல்லாம் வர்த்தக நிறுவனங்களாகி ரொம்ப நாளைச்சி) அனுபவித்து வருகிறார்கள்.வாழ்க வாழ்க.

இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கும் இடம் உண்டு என்று முதல்வர் கருணாநிதி

பொறியியல் படிப்பில் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கும் இடம் உண்டு என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இலங்கை அகதியின் மகனாகப் பிறந்த ஒருவர் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்ற நிலையிலும் அவருக்கு பொறியியல் கல்வி பயில வாய்ப்பு தரப்படவில்லை என பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.

இதற்கு விளக்கம் அளித்து, முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

பாதிக்கப்பட்டதாக தெரிவித்த மாணவரே உயர்கல்வித் துறை அமைச்சரைச் சந்தித்து தனது குறையைத் தெரிவித்தார். உடனடியாக, அவரது குறை களையப்பட்டு அவர் தொழிற் கல்வி பயில வாய்ப்பு தரப்பட்டு விட்டது. அது மாத்திரமல்ல, பொதுவாகவே தமிழகப் பள்ளிக் கூடங்களில் படித்த இலங்கை அகதிகளுடைய குழந்தைகளைப் பொதுப் பட்டியலில், தரவரிசையின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, அதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்

ஏழு தமிழ் அரசியல் கட்சிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையில்

தேசியப் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. ஏழு தமிழ் அரசியல் கட்சிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தை நேற்றைய தினம் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும், சந்திரகாந்தனின் வசதி கருதி கூட்டத்தை இன்றைய தினத்திற்கு மாற்றியதாக சிறீரெலோவின் தலைவர் திரு உதயன் அவர்கள் தெரிவித்தார். இதேவேளை, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

தொண்டை அறுக்கப்பட்டு போலீசார் பலி : நக்சல்களின் அரக்க உணர்வு அம்பலம்

: சத்திஸ்கரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், தொண்டை அறுக்கப்பட்டு, தலைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் நக்சலைட்களால் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சத்திஸ்கர், நாராயண்பூர் மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது, நக்சலைட்கள் கடும் தாக்குதல் நடத்தினர். உயரமான மலைப் பகுதிகளில் பதுங்கியிருந்த நக்சலைட்கள், போலீசாரை சுற்றி வளைத்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 29 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலியானோரின் உடல்கள், ஹெலிகாப்டர்கள் மூலமாக ராய்ப்பூர் கொண்டு வரப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில், அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது, நக்சலைட்கள் முதலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர்கள் இறந்தபின், உடல்களை சேதப்படுத்தியுள்ளனர். பலியான போலீசாரின் தொண்டைகளை, கூர்மையான கத்தி போன்ற ஆயுதங்களால் கிழித்து, அறுத்துள்ளனர். பின், தலைகளையும் கல் போன்றவற்றை வைத்து நசுக்கி சேதப்படுத்தியுள்ளனர். சற்றும் மனிதாபிமானம் இன்றி, மிகவும் கொடூரமான முறையில் அவர்கள் இதைச் செய்துள்ளனர். இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

நக்சலைட்கள் தாக்குதலில் காயமடைந்த வீரர் ஒருவர் கூறியதாவது: நக்சலைட்கள் மரங்களிலும், மலை உச்சிகளிலும் பதுங்கி இருந்துள்ளனர். இது தெரியாமல் நாங்கள் அவர்களிடம் சிக்கி விட்டோம். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் தாக்குதல் நடத்தினர். நான்கு பக்கமும் இருந்து சுட்டதால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. 200க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் இந்த தாக்குதலில் பங்கேற்றனர். படுகாயமடைந்த சில வீரர்களை காப்பாற்ற முயற்சித்தேன். அதற்குள் என் உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்து விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று பேர் பலி: சத்திஸ்கர், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நேற்று, மூன்று கிராம மக்களை கடத்திச் சென்ற நக்சலைட்கள், அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, போலீசார் அங்கு விசாரணையை துவக்கியுள்ளனர்.

தொலைத்தொடர்பு கோபுரம் தகர்ப்பு: பீகார், கிழக்கு சாம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள சிரயு கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட நக்சலைட்கள், திடீரென துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நேற்று ஊடுருவினர். அங்கிருந்த தனியார் மொபைல் போன் நிறுவனத்தின் இரண்டு கோபுரங்களை குண்டு வைத்து தகர்த்தனர். பின், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டவாறு அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய நக்சலைட்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, கயா ரயில்வே ஸ்டேஷனில் பீகார் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிக்கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். இவர்கள் நக்சலைட் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் என்பதும், பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இறுதி மரியாதை: சத்திஸ்கரில் இரண்டு நாட்களுக்கு முன் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீசார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் எட்டு பேர் ஒரிசாவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் உடல்கள், சிறப்பு விமானம் மூலம் நேற்று புவனேஸ்வருக்கு கொண்டு வரப்பட்டன. முதல்வர் நவீன் பட்நாயக், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முழு அரசு மரியாதையுடன் அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

நக்சல் ஒழிப்பில் சென்னை பொன்னுசாமி: நக்சலைட்களை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு பதவியில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: நக்சலைட்களின் நடவடிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, அவர்களை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படைப் பிரிவில் சிறப்பு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளில் பொன்னுசாமி, நாதனேல் ஆகிய போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் முறையே, சத்திஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பணியாற்றுவர். இந்த பதவிகள் ஐ.ஜி., அளவிலானவை. பொன்னுசாமி, சென்னையில் டி.ஐ.ஜி., யாக பணியாற்றியவர். இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜய் படம் விவகாரம மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ச

நடிகர் விஜய் படம் விவகாரம் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜானி தாமஸ், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:

நான், கடந்த 2008ம் ஆண்டு ‘பாடிகார்டு’ என்ற மலையாள படத்தை தயாரித்தேன். படத்தை இயக்க கே.ஐ.சித்திக் என்பவரை நியமித்தேன். இவருக்கு ரூ.40 லட்சம் சம்பளம் ஒப்பந்தம் போடப்பட்டது. படம் முடிந்து கேரளாவில் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடியது. இயக்குநருடன் ஒப்பந்தம் போட்டபோது, 45 நாட்களில் படத்தை முடிப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால், 120 நாட்களில்தான் படத்தை இயக்குநர் முடித்துக் கொடுத்தார். இதனால், எனக்கு கூடுதல் செலவானது. தற்போது எனக்கு தெரியாமல் இந்த கதையை தமிழில் ‘காவல்காரன்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யை வைத்து சித்திக் தயாரித்து வருகிறார். என்னுடைய ஒப்புதல் இல்லாமல் என் படத்தை தமிழில் தயாரிக்க அவருக்கு உரிமை இல்லை. அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை 11வது மாஜிஸ்திரேட் விசாரித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மனுதாரர் சார்பாக வக்கீல் சிவராமன் ஆஜராகி வாதாடினார்.

'கருணாநிதி போர்க் குற்றவாளி'எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

முதல்வர் கருணாநிதி [^]யும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை:

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை தலைவரின் இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

ஐநா சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு நுழைவிசைவு தருவதை இலங்கை அரசு தனது இயல்பிற்கு ஏற்ப மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபக்சே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக் கூடாது.

பான் கி மூன் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா [^] மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங்கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால், இந்த மேன்மை மிகுந்த குழு ராஜபக்சேவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக் கொணரும் என்பதில் ஐயமில்லை.

விடுதலைப் புலிகளின் தலைமையை தீர்த்துக்கட்டியதை அடுத்து, 19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் [^] இருக்கப் போவதாக அறிவித்தார்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி. கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.

comments:
ஆஹா அம்மையார் தில்லான ஆடுவதை பார்த்தால் கலைஞர்தான் ஐம்பத்து நாலாம் பட்டாலியன் தளபதியாகவும் செயல் பட்டார் என்றுகூட சொல்லி விடுவார் போல இருக்கிறது. வந்துட்டாய்ங்க அம்மா வந்துட்டாய்ங்க இனி அடுத்த ஆறுமாதம் இதை வச்சு தாக்கு பிடிக்கலாம்

மூன்று மாதங்களில் 8502 விபத்து 202 பேர் பலி; 448 பேர் காரியம்



2009 ஆம் ஆண்டில் 33,721 விபத்துகளும் 2008 இல் 30,420 விபத்துகளும் இடம்பெற்றுள்ளன. விபத்துகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது ஐ.தே.க. கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில் வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், 2008 ஆம் ஆண்டு 30,420 விபத்துகள் இடம்பெற்றதுடன் அதில் 2157 விபத்துகள் மரணத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்   28,263 விபத்துகள் சாதாரண விபத்துகளாகும்.        2009 ஆம் ஆண்டில் 33,721 விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 2225  மரணம்   சம்பவிக்கக் கூடிய  விபத்துகள்   என்பதுடன்   31,496 சாதாரண விபத்துகளாகும்.
2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை 8502 விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 643 மரணத்தை விளைவிக்கக் கூடிய விபத்துகள் என்பதுடன் 7859 சாதாரண விபத்துகளாகும்.    மிக வேகமாக வாகனத்தை செலுத்தியமையால் 2008 இல் 4272 விபத்துகளும் 2009 இல் 4898 விபத்துகளும் 2010 இல் மூன்று மாதங்களில் 887 விபத்துகளும் இடம்பெற் றுள்ளன.
மது போதையில் 2008 இல் 1522 விபத்துகளும் 2009 இல் 1342 விபத்துகளும் 2010 இல் முதல் மூன்று மாதங்களில் 260 விபத்துகளும் இடம்பெற்றுள்ளன.      மிகவேகமாக வாகனத்தை செலுத்தியமையினால்  2008 இல்  522 பேர் பலியானது டன்    1312 பேர் படுகாயமடைந்துள்ளனர்.    2009  இல் மிகவேகமாக வாகனத்தை    செலுத்தியமையால்   579பேர் பலியானதுடன்   352 பேர் படுகாயமடைந்துள்ளனர்.   மதுபோதையினால் 2008 இல் 153 பேர் பலியானதுடன் 308 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
2009 இல் 112 பேர் பலியானதுடன் 256 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பதுடன் 2010 இல் முதல் மூன்று மாதங்களில் 32 பேர் பலியானதுடன் 96 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாட்டில் இடம்பெறும் விபத்துகளினால் அரசாங்கத்தின் செலவு அதிகரிக்கின்றது.  விபத்துகளை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறி பால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இரா.சம்பந்தன் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

சபையில் உறங்கிய உறுப்பினர்கள் சிரிப்பொலி; சுவாரஸ்யமான விவாதம் : சபையில் மெய் மறந்து தூங்கிய சம்பந்தன்
பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் தூங்குவது தொடர்பில் சுவாரஸ்யமான விவாதமொன்று ஏற்பட்டதால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அரச, எதிர்க்கட்சித் தரப்பு உறுப்பினர்கள் பலர் தமது ஆசனங்களில் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், பிரதியமைச்சர் டிலான் பெரேரா உரையாற்றிக் கொண்டிருந்த போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்த எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க திடீரென எழுந்து அங்குமிங்கும் பார்த்து விட்டு ஏதோ சொல்வதற்கு எழுந்தார். அப்போது டிலான் பெரேரா நீங்கள் இப்போதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளீர்கள். எனது பேச்சை முழுமையாகக் கேட்டிருக்க மாட்டீர்கள். அதனால் ஒன்றையும் கூறாதீர்கள் என்றார்.

அப்போது சற்றுத்தள்ளி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை அரச தரப்பினர் சுட்டிக்காட்டி பெரிதாக சப்தமிட்டு சிரித்த போதும் சம்பந்தன் தூக்கத்தை விட்டு எழுந்திருக்கவில்லை. அப்போது டிலான் பெரேராவும் ஏனைய சில அமைச்சர்களும் நித்திரைக் குளிசை கொடுத்தால் கூட தூங்கவைக்க முடியாதவர்கள் இங்கு வந்ததும் நன்றாகத் தூங்குகின்றனர் எனக்கூறினார்.

அதற்கு எதிர்க்கட்சியினர் அரச தரப்பினரின் பேச்சைக் கேட்கும் போது தூக்கம் தான் வருகிறது. அதனால் தான் உறுப்பினர்கள் தூங்குகின்றனர் என்றனர். அப்போது ஐ.தே.க.எம்.பி.சந்திராணி பண்டார "உங்கள் பக்கத்தில் மட்டும் என்னவாம்%27 என்று கூறி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தனவை சுட்டிக்காட்டிய போது சிரிப்புச் சத்தத்தால் சபையே அதிர்ந்தது.

இதனால் சம்பந்தன் எம்.பி.திடுக்கிட்டு எழுந்து கொண்டபோதும் மகிந்த யாப்பா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து பிரதியமைச்சர் மகிந்தானந்தா அளுத்கமகே புத்தகமொன்றைத் தூக்கி அமைச்சர் மீது வீசியபோது அது பட்டு அமைச்சர் துள்ளி விழுந்து எழுந்தபோது மீண்டும் பெரும் சிரிப்பொலி எழுந்தது. இதையடுத்து தூங்கிக் கொண்டிருந்த ஏனைய உறுப்பினர்களும் எழுந்துகொண்டனர்.

இவ்வாறு தூங்கி எழுந்த சிலர் சிரித்தவாறே சபையை விட்டு வெளியேறிச் சென்றனர். சபை நடவடிக்கைகள் இடம்பெறும் போது இவ்வாறு தூங்குவது சபையை அவமதிக்கும் செயலென சில உறுப்பினர்கள் சபைக்குத் தலைமை தாங்கியவருக்கு சுட்டிக்காட்டினர்.

 

லண்டனில் 17000 ஸ்ரேலிங் பவுண் மோசடி செய்த இலங்கைக் குடும்பம் கைது.

லண்டனில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று 1 மில்லியன் ஸ்டேலின் பவுன் சொத்துக்கள் மற்றும் BMW கார்கள் வைத்திருந்த நிலையில் அரசிடமிருந்து வீட்டுக்கடன் என கூறி, 170,000 ஸ்டேலின் பவுன் மோசடி செய்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

இந்த பண மோசடியுடன் தொடர்புடைய நான்கு பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 46 வயது நிரம்பிய பிரேம்குமார் பத்மநாதன் 14 மாதங்களுக்கும் அவருடைய சகோதரன் சிவகுமார் பத்மநாதன் 15 மாதங்களுக்கும் நல்லையா கௌரிதாஸ் என்பவர் 15 மாதங்களுக்கும் ஷாமினி கௌரிதாஸ் 6 மாதங்களுக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரேம்குமாரின் மனைவியான கல்யாணிக்கு 12 மாத சிறைதண்டனையும் 150 மணித்தியாளங்கள் சம்பளமற்று வேலைசெய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எங்கே சாதி இல்லை. நான் ஒரு யாதவர். சிலர் சர்மா என்கிறார்கள். சிலர் வர்மா என்கிறார்கள்; வன்னியர்கள்

இதே நாலு பேரை வைத்து உங்களை சுடுகாட்டுக்கு அனுப்ப முடியும்:  சென்னையில் லல்லு பேச்சு
சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை அடையாறில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முன்னாள் நடுவன் அமைச்சர்கள் லாலுபிரசாத், அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி,  முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி  ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ராஸ்டிரிய ஜனதாதளம்,  ’’இது போன்ற ஒரு கூட்டத்தை பாமகதான் முதலில் ஏற்பாடு செய்துள்ளது.  சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து இதுவரை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குளப்பமான பதிலையே தருகிறார்.
பாராளுமன்றத்தில் இது பற்றி நான் எல்லோரிடமும் பேசினேன்.  இதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று பதில் அளித்தார் பிரதமர்.   இன்னும் முடுவு எடுக்கப்படாத நிலையில் கணக்கெடுப்பை தொடங்கியுள்ளார்கள்.
யானைகளை கணக்கெடுக்கிறார்கள்.  மயில்கள், சிங்கங்கள், புலிகளை கணக்கெடுக்கிறார்கள்.  என்ன சொல்வது ....மனிதர்களை மட்டும் கணக்கெடுக்க மறுக்கிறார்கள்.
இந்த ஆட்சியில் எந்த புள்ளிவிபரமும் இல்லை.  மண்டல கமிஷனின் அறிக்கையை வைத்துக்கொண்டு தோராயமாக திட்டங்களை தீட்டுகிறார்கள்.
இந்த நாட்டில் சாதி இல்லை என்கிறார்கள். எங்கே சாதி இல்லை.  நான் ஒரு யாதவர்.  சிலர் சர்மா என்கிறார்கள்.  சிலர் வர்மா என்கிறார்கள்; வன்னியர்கள் என்கிறார்கள். ஏன்...சாமி என்றுகூட சொல்கிறார்கள்.
சாதிவாரியான கணக்கெடுக்கப்பட வேண்டும்.  இதையாரும் தடுக்க முடியாது.    இதற்காக நாடுதழுவிய இயக்கம் ஒன்றை மேற்கொள்வோம்.
என்னிடம் நான்கு எம்.பிக்கள் மட்டுமே உள்ளார்கள் என்று கிண்டல் செய்கிறார்கள்.   சுடுகாட்டுக்கு தூக்கிச்செல்வதற்கு நாலு பேருதான் வேண்டும்.
இதே நாலு பேரை வைத்து உங்களை சுடுகாட்டுக்கு அனுப்ப முடியும்’’ என்று பேசினார்.

விஜயகால மகேஸ்வரன்சிங்கள மொழியில் ஆவேசமாக குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகால மகேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த விஜயகால மகேஸ்வரன் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். எனினும் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரமே பயன்களை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட டக்ளஸ் தேவானந்தாஇ நீங்கள் அப்படி யாரை குறிப்பிடுகின்றீர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விஜயகால மகேஸ்வரன் அரசாங்கத்தில் பல கட்சிகள் இருப்பதாகவும் குற்றம் செய்தவர்களுக்கே உறுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒலி வாங்கி முடக்கிவிடப்படாத நிலையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.
கடும் வாய்த்தார்க்கத்தில் நீங்கள் தானே மகேஸ்வரனை கொலை செய்தீர்கள் என்று டக்ளஸ் தேவானந்தாவை பார்த்து சிங்கள மொழியில் ஆவேசமாக குற்றஞ்சாட்டினார்.
இவர்கள் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற போது ஆளும் தரப்பினர் கூச்சலிட்டனர். பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விஜயகால மகேஸ்வரனுக்கு ஆதராவாக கூச்சலிட்டனர்.
விஜயகால மகேஸ்வரனின் உரை முடிந்ததும் அவையிலிருந்த எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

சல்மான் கான 500 பேருக்கு தமது சொந்த செலவில் கண் சத்திர சிகிச்சை செய்வதற்கு

வடக்கு, கிழக்கு மற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் கண்ணில் விழிவெண்படலம் படர்ந்துள்ள 500 பேருக்கு தமது சொந்த செலவில் கண் சத்திர சிகிச்சை செய்வதற்கு இந்தியாவின் முன்னணி பொலிவுட் நடிகர் சல்மான் கான் முன்வந்துள்ளார். இது விடயமாக நடிகர் சல்மான்கான் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலம் நேற்றுமுன்தினம் கலந்துரையாடி தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கேற்ப இந்தியாவின் ஐந்து கண் சத்திர சிகிச்சை நிபுணர்களும், இச்சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களும் மருந்து பொருட்களும் அடுத்துவரும் இரண்டு மூன்று தினங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.
இக் கண் சத்திர சிகிச்சை கொழு ம்பு கண்ணாஸ்பத்திரியில் நடைபெ றும். அதேநேரம் கண் நோயாளர்க ளுக்குப் பாவிக்கவென ஒரு தொகை கண்வில்லைகளை வழங்கவும் நடிகர் சல்மான்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்

வியாழன், 1 ஜூலை, 2010

தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்கள் கைது

சென்னை: வயதான காலத்தில் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் பிள்ளைகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். பெற்ற தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டைவிட்டு துரத்திய மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெற்றோர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளைப் போலீஸார் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், 70 வயது தாயாருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு விரட்டிய 2 மகன்களை சென்னை வேப்பேரி போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட தாயின் பெயர் ஆதிலட்சுமி. இவரது கணவரான செங்கல்வராயன் காலமாகிவிட்டார்.

இவர்களுக்கு சண்முகம், மணி, ஜெகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சண்முகம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவர் தன் குடும்பத்தோடு தனியாக வாழ்ந்து வருகிறார். ஆட்டோ டிரைவர்களான 2-வது மகன் மணியும், 3-வது மகன் ஜெகனும் புரசைவாக்கம் பெருமாள்பேட்டையில் குடும்பத்தோடு வசித்து வந்தார்கள்.

ஆதிலட்சுமி இவர்களோடு தங்கி 2 மகன்கள் வீட்டிலும் முறைவைத்து சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு சாப்பாடு கொடுக்காமல் 2 மகன்களும் சேர்ந்து வீட்டை விட்டே துரத்திவிட்டனர்.



இதையடுத்து போக்கிடம் இல்லாமல் பசிக்கொடுமையால் பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது தான் வயதான பெற்றோரை தவிக்கவிடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அறிவித்திருந்ததை கேள்விபட்டார்.

இதையடுத்து தனது மகன்கள் மீது நேற்று வேப்பேரி போலீசில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரின் மகன்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த இரு மகன்களும், இனிமேல் தனது தாயாருக்கு ஒழுங்காக சாப்பாடு கொடுத்து அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக போலீசாரிடம் உறுதி கொடுத்துள்ளனராம்.

பதிவு செய்தவர்: பகுத்தறிவு
பதிவு செய்தது: 01 Jul 2010 6:58 pm
எல்லாம் வேல வாசி ஏறிப் போச்சில்ல. அதான். இன்னும் என்ன எல்லாம் ஏறப் போகுதோ. இந்த நாடு எங்க போகுது?

பதிவு செய்தவர்: anwar
பதிவு செய்தது: 01 Jul 2010 6:56 pm
முதுமையான உன் தாயை நீ கவனித்தால் தான் உன்னை முதுமையில் உன் மக்கள் கவனிப்பார்கள் . இது சத்தியம் /சத்தியம்