சனி, 19 ஜூலை, 2025

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... ஒருவாரமாகியும் பிடிபடாத குற்றவாளி... தாய் கண்ணீர் மல்க பேட்டி!

மின்னம்பலம் - christopher  : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியை இன்னும் போலீஸ் கைது செய்யவில்லை அவரது தாயார் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். 
திருவள்ளூரில் கடந்த 12ஆம் தேதி 4ஆம் வகுப்பு பயிலும் 10 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது அடையாளம் தெரியாத நபரால் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் பெற்றோர் ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.

வீரலட்சுமியிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் அதிகாரிகள்

வெள்ளி, 18 ஜூலை, 2025

திருவாரூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த 3 போதை ஆசாமிகள் கைது

Thiruvarur government school

 tamil.oneindia.com  - Pavithra Mani  : திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி அரசு தொடக்கப்ப பள்ளி சமையலறையை சேதப்படுத்திவிட்டு, பள்ளியில் இருந்த குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. 
இச்சம்பவம் தொடர்பாக போதை ஆசாமிகள் மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேஜஸ்வி புகார்! ; பீகார் - வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறை ஆபத்தானது : தேர்தல் ஆணையம் மீது தேஜஸ்வி!

 கலைஞர் டிவி : பீகார் - வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறை ஆபத்தானது : இந்திய தேர்தல் ஆணையம் மீது தேஜஸ்வி புகார்!
பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பீகாரில் வாக்காளர் பட்டியலை மறு சீரமைப்பதற்காக எஸ்.ஐ.ஆர் எனும், Special intensive revision எனும் நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் பின்பற்றி வருகிறது. இதற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வியாழன், 17 ஜூலை, 2025

இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்

 தினமலர் : 1980ல் வெளிவந்த 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் வேலு பிரபாகரன். அடுத்து 1989ல் 'நாளைய மனிதன்' படம் மூலம் இயக்குனராக கால் பதித்தார்.
 அந்த படம் ஹிட் ஆனதால் அதன் இரண்டாவது பாகமாக 1990ல் 'அதிசய மனிதன்' என்ற படத்தை இயக்கி அதையும் வெற்றிப்படமாக்கினார்.
பின்னர் ஆர்.கே.செல்வமணி தயாரித்த 'அசுரன், ராஜாகிளி' படங்களை இயக்கினார். இந்த இரு படங்களும் தோல்வியடைந்தது. 
அருண் பாண்டியனை வைத்து கடவுள், நெப்போலியன் நடித்த சிவன், சத்யராஜின் புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கிய அவர் தோல்வியையே சந்தித்தார்.

புதன், 16 ஜூலை, 2025

திராவிட சினிமாவை வளர்த்த மாடன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் அவர்களின் பிறந்த நாள் இன்று

 திராவிட சினிமாவை வளர்த்த மாடன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் (16 July 1907 - 30 August 1963) அவர்களின் பிறந்த நாள் இன்று 
Chandran Veerasamy :  டி.ஆர். சுந்தரம், தனது எந்த சினிமா தயாரிப்புக்கும் வெளியிலிருந்து பணம் கடனாக வாங்குவதில்லை. 
தானே படத்திற்கான பட்ஜெட்டை தயாரித்து, குறித்த தேதியில் படப்பிடிப்பைத் தொடங்கி, 
குறித்த நேரத்தில் படத்தை வெளியிடுவார். 
தமிழ் நாட்டிலேயே வெளியிலிருந்து கடன் பெறாமல் சொந்தப் பணத்திலேயே படம் தயாரித்த ஒரே நிறுவனம், மாடர்ன் தியேட்டர்ஸ் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பட தயாரிப்பிற்காக அல்லாமல் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தை வளர்ப்பதற்காக, சுந்தரம் 100 ரூபாய் மதிப்பில் 5000 பங்கு பத்திரங்களை வெளியிட்டு, அந்த காலத்திலேயே ஐந்து லட்சத்தை திரட்டினார். 

சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு அது ஒரு coding மட்டுமே

 ராதா மனோகர் : சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல! அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!
ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்:
இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து., ‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என.ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.!
அதில கூறியிருப்பதாவது :எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை..
இனமே இல்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள், ஜ,ப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.
அதுபோல் ,தமிழர் தமிழையும் , ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.
அப்படி சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?.
இரண்டாவதாக , எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால்தான் மொழியாகும்! .
அப்படி பேசப்படவில்லையென்றால்... “First, solve the problem. Then, write the code.. அது ‘குறியீடு' எனப்படும் . எந்த இயல்பான மொழியும் பேச்சில் முதலில் தொடங்கி பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான் எழுத்து வடிவம் பெறமுடியும் .

இளையராஜா .. வனிதா விஜயகுமார் மோதல்! என்னதான் நடக்கிறது?

 tamil.filmibeat.com  - Karunanithi Vikraman  :  சென்னை: வனிதா விஜயகுமார் இயக்கிய Mrs&Mr படத்தால் கடந்த சில நாட்களாகவே திரைத்துறையில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. 
தன்னிடம் அனுமதி கேட்காமல் தான் இசையமைத்த பாடலை அந்தப் படத்தில் பயன்படுத்தியதற்கு எதிராக இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
அதுதொடர்பாக பேசும்போது வனிதா விஜயகுமார் கூறிய ஒரு கருத்து இந்த விஷயத்தை மேற்கொண்டு பரபரப்பாக்கியது.
நடிகையும், இயக்குநருமான வனிதா விஜயகுமார் இப்போது Mrs&Mr என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அவரது மகள் ஜோவிகா தயாரித்திருக்கிறார். ராபர்ட் மாஸ்டர், கிரண், ஷகிலா என பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

பா ரஞ்சித் படப்பிடிப்பில் விபத்து! ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழப்பு

May be an image of 1 person and grass

 Pa Ranjith  :   நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் - கண்ணீர் அஞ்சலி
ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில்,  
திறமையான சண்டைக் கலைஞரும்,  எங்களுடன் நீண்ட காலம்  பணியாற்றியவருமான,
  திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். 
அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. 
எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், 
பாதுகாப்பு ஏற்பாடுகள்,  எங்களின் வேண்டுதல்கள்,   வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், 

அல்பிரட் துரையப்பாவை பழிவாங்க SJV செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சி போட்ட திட்டம் !

 TSounthar Sounthar : செல்வா - அமீர் வளர்த்தெடுத்த துரோகி அரசியல்!:
தமிழ்தேசிய அரசியலின் "துரோகி" அரசியலால் விளைந்த தீமையும் - துரையப்பா தனிநபராக தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகளும்~ 

செவ்வாய், 15 ஜூலை, 2025

வைகோவுக்கு மல்லை சத்யா பதிலடி! நானா துரோகி? விஷத்தை கொடுத்திருக்கலாமே!

 minnambalam.com -Mathi : தம்மை துரோகி என்று குற்றம்சாட்டிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா விரிவான பதில் அளித்துள்ளார். Vaiko MDMK Mallai Sathya
இது தொடர்பாக மல்லை சத்யா தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன் ஆனால் கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை… அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை
மாத்தையா போல துரோகியா?

திங்கள், 14 ஜூலை, 2025

நடிகை சரோஜாதேவி காலமானார் ! முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்

 Hindu Tamil : சென்னை: தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.

இரண்டு மடங்கு தொகுதிகளை எதிர்பார்க்கும் விசிக

 Hindu Tamil  :கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்கு தொகுதிகளை எதிர்பார்க்கும் விசிக
சென்னை: கடந்த தேர்​தலைவிட இரண்டு மடங்கு தொகு​தி​களை பெறு​வ​தில் விசிக உறு​தி​யாக இருப்​ப​தாக கட்சி வட்​டாரத்​தினர் கூறுகின்​றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்ட​ணி​யில் இடம்​பெற்ற விசிக 6 தொகுதிகளில் போட்​டி​யிட்டு 4 தொகு​தி​யில் வெற்றி பெற்​றது. 
இதைத் தொடர்ந்​து, நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தலில் 2 தனித்தொகு​தி, 1 பொதுத்​தொகு​திக்​காக கடுமை​யாக போ​ராடியது.
ஆனால், 2 தொகு​தி​களை மட்​டுமே திமுக ஒதுக்​கிய நிலை​யில், இரண்​டிலும் சொந்த சின்​னத் தில் போட்​டி​யிட்டு மாநில கட்சி என்னும் அங்​கீ​காரத்​தை​யும் பெற்​றது. இந்த அங்​கீ​காரத்தை தக்க வைக்க வேண்​டிய நிலை​யில் விசிக உள்​ளது. இதற்​காக குறைந்த​பட்​சம் 8 தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டும். 

பாசிஸ்டுகளின் இலங்கை தமிழ் தேசியம் - ஒரு வரலாற்று பார்வை

"பாஸ்டர்ட்ஸ், பாஸ்டர்ட்ஸ்"! புலிகளால் கொலையான யாழ் எம்பி யோகேஸ்வரனின் இறுதி வார்த்தை

commemorate Tamils killed by LTTE ...
Suhan Kanagasabai: சத்தம் கேட்டு மங்கையர்க்கரசி, சரோஜினி மற்றும் சேனாதிராஜா ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு, பின்னால் இருந்த இரண்டாவது படிக்கட்டு வழியாக மாடிக்கு ஓடினர்.
 அமிர்தலிங்கம் தனது நாற்காலியில் இரத்தம் கசிந்து அசையாமல் அமர்ந்திருந்தார். 
கணவர் இறந்துவிட்டதை உணராத அவரது மனைவி அவரது தலைக்குப் பின்னால் ஒரு மெத்தையை வைத்து அவரைத் தூக்கிப் பிடித்தார். 
தரையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த யோகேஸ்வரன், சரோஜினி அவரது பக்கத்தில் மண்டியிட்டபோது, "பாஸ்டர்ட்ஸ், பாஸ்டர்ட்ஸ்" என்று ஆங்கிலத்தில் முணுமுணுத்தார்.
 சிவசிதம்பரம் பேசாமல் சுவரில் சாய்ந்து மயக்கமடைந்தார். 
ஆம்புலன்ஸ்கள் வந்தன, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஞாயிறு, 13 ஜூலை, 2025

துரை வைகோவின் பாஜக சகவாசம்..மதிமுக: திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் பத்திரிகையாளர் மணி!

 tamil.oneindia.com  - Yogeshwaran Moorthi  :  சென்னை: மல்லை சத்யாவை காரணமாக வைத்து, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகப் போவதாக பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே மதிமுக பிரமுகர்கள் சிலர் திமுகவில் இணைக்கப்பட்ட போது, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதற்கான முன்னோட்டமாக பார்ப்பதாக கூறிய பத்திரிகையாளர் மணி, வாரிசு அரசியல் காரணமாக மல்லை சத்யா மீது துரோகி பட்டம் சூட்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் வைகோ மற்றும் மல்லை சத்யா ஆகியோருக்கு இடையில் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதற்கு வாய்ப்பு இருப்பதாக குரல்கள் எழுந்துள்ளன.

தி.மு.க., தனித்து போட்டி? கூட்டணியினர் அலப்பரையால் முடிவு? தினமலர் :

 தினமலர் : கடந்த 2019 லோக்சபா தேர்தலில் இருந்து, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட்கள், வி.சி., - ம.தி.மு.க., மற்றும் முஸ்லிம் இயக்கங்கள் இருந்து வருகின்றன.
அடுத்தடுத்த தேர்தல்களிலும், இதே கூட்டணிக்கு வெற்றி கிடைத்து வருவதால், வரும் சட்ட சபை தேர்தலுக்கும் கொண்டு செல்ல தி.மு.க., தலைமை விரும்புகிறது.
தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகள், அரசியல் ரீதியாக சில நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.
ஆளும் தரப்பிலும், அதிகார மட்டத்திலும் முக்கியத்துவம் இல்லாததோடு, தேர்தலுக்கு தேர்தல் தொகுதிக்காக போராட வேண்டிய நிலையும், குறைந்த தொகுதிகளையே கொடுப்பதால், கட்சியினரை திருப்திபடுத்த முடியாத சோகமும் நீடிப்பதாக கருதுகின்றன.