சென்னை: ஜல்லிக்கட்டு
விவகாரத்தில் நடிகை குஷ்பூவுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் டிவிட்டரில்
கருத்திட்ட 'பீட்டா' அமைப்புக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தடை காரணமாக ஜல்லிக்கட்டு
விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில்
நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது
டுவிட்டர் பக்கத்தில் 'பீட்டா' அமைப்புக்கு எதிராக, 'மடகாஸ்கர் நாட்டு
ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது. இந்த விஷயம் எல்லாம்
'பீட்டா' அமைப்புக்கு தெரியாதே என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு நேரடியாக குஷ்புவுக்கு டிவிட்டரில்
பதிலளிக்கும் விதமாக 'பீட்டா' அமைப்பு ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தது.
ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஒரு வீடியோ லிங்கை
குஷ்புவுக்கு அனுப்பி, இவ்வாறெல்லாம் காளைகள் துன்புறுத்தப்படுவைத்தால்தான்
இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்டவிரோதமானது என்று கூறியது.