சனி, 9 ஜனவரி, 2021

திருவிதாங்கூர் மன்னர் நிலங்களை சட்ட விரோதமாக விற்ற வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல்! – மன்னர் குடும்ப வாரிசுகளுக்கு சம்மன்!

King of Travancore files final report on illegal sale of land - Summons to the royal family heirs!
.nakkheeran.in - அதிதேஜா ; கேரள மாநிலம், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களை சட்ட விரோதமாக, இரு வெவ்வேறு தரப்பினருக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, திருவிதாங்கூர் மன்னர் குடும்ப வாரிசுகளான ஹெச்.ஹெச்.உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, ஹெச்.ஹெச்.பூயம் திருநாள் கெளரி பார்வதி பாய், ஹெச்.ஹெச்.அஸ்வதி திருநாள் கெளரி லட்சுமி பாய், ஹெச்.ஹெச்.அஸ்வதி திருநாள் ராமவர்மா, ஹெச்.ஹெச். மூலம் திருநாள் ராமவர்மா ஹெச்.ஹெச். அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா, ஏ.சி.ஆர். ராஜ் கணேசன், பி.ஆர். ராம்பிரபு ராஜ் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து (வழக்கு எண் 5075/2020),  நீதிமன்றத்தில் வழக்கின் இறுதி அறிக்கையினை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

BBC :கன்னியாகுமரி கடற்கரை கடைகளில் பயங்கர தீ: 66 கடைகள் நாசம்

கன்னியாகுமரியில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து ஒன்றில் கடற்கரையில் அமைந்திருந்த 66 கடைகள் எரிந்து நாசமாயின. கன்னியாகுமரி கடற்கரையில் பகவதி அம்மன் கோவில் பகுதியில் நெருக்கமாக தகர ஷீட்கள், இரும்புக்கம்பி, மூலம் நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அலங்காரப் பொருள்கள், நறுமணப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், கைவினைப் பொருள்கள், துணி வகைகள் என பலவிதமான பொருள்களை விற்கும் கடைகள் அவை. சனிக்கிழமை அதிகாலை இங்கு தீப் பற்றி கடைகள் எரியத் தொடங்கின. தீயணைப்புப் படையினர் அங்கு உடனே விரைந்து வந்தனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் தீயை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

சுமார் 3 மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ அணைக்கபட்டது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. கன்னியாகுமரி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் பல்கலை நினைவு தூபி தகர்த்தப்பட்டதற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை! – அமைச்சர் சரத் வீரசேகர

Metronews :யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இராணுவத்தினரோ, பொலிஸாரோ இடித்தழிக்கவில்லை. இதற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இச்சம்பவத்தை காரணம் காட்டி பிரச்சினைகளை ஏற்படுத்த இடமளிக்க முடியாது.    ஆகவே யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் தொழிலாளி தற்கொலை

maalaimalar : டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் பெருமாள் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் தொழிலாளி தற்கொலை
கோப்பு படம்
சென்னை: சென்னை அசோக்நகர் 10வது அவென்யூ பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பெருமாள்(வயது 72). இவர் மரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பெருமாள், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது, பெருமாளின் சட்டைப்பையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இரண்டு பக்க அளவில் நீண்ட அந்த கடிதத்தில், தனது சொந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தற்கொலை செய்து கொள்வதாகவும் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலை கழகமும் புலிகளும் .. சமூகவலைதளங்களில் என்னதான் பேசப்படுகிறது?

Sugan Paris : யாழ்ப்பாண மக்களுக்கான எஞ்சியிருக்கும் ஒரு இறுதிக் கல்வி ஆலயம் ..   அது ஒன்றும் பொற்கோவிலல்ல, பிந்ரன் வாலேக்கள் ஒளிந்துகொள்ள வாய்ப்பான இடமல்ல அது. மோசமாகப் பாதிக்கப்பட்ட யாழ் மண்ணில் இன்னும் ஏதோ நல்லது இருக்குமெனில் அது யாழ் பல்கலைக்கழகம்தான்.

Sugan Paris : புலிகள் என்பது ஒரு மனக் கட்டமைப்பு. நாஸிகள் அழிந்தாலும் அதன் மிச்சங்கள் நாஸி மனநிலைகள்இன்றும் இருக்கின்றன. 

அவ்வாறே இதுவும். புலிகளுக்கு எப்போதும் ஒரு தந்திர மனம் உண்டு. பொது நிறுவனங்கள் ,பொது அமைப்புகளை சுதந்திரமாக இயங்கவிடாது ,             இவற்றில் தம்மைத் திணித்து அல்லது அவற்றைப் பலிக்கடாக்களாக ஆக்கிச் சீரழித்து தம்மை அதிலிருந்து தற்காத்துக்கொண்டு தப்பிக்கொண்டு அப்பாவி மக்களை முன்தள்ளி பலியிடுவது,

அதனாலேயே அவர்களுக்காக நியாயம் சொல்ல இன்று ஒரு வெகுசன அமைப்புக்கூட இல்லை.
உண்ணாவிரதமிருந்த பல்கலைக்கழக மாணவர்களைக் கடத்தியதிலிருந்து தொடங்கியது அவர்கள் தலையீடு.
பின் பல்கலைக்கழக மாணவர் பேரவை இதில் தொடர்ந்த தலையீடு. பின்னணியில் இரு மாணவர் தலைவர்கள் ,கலாநிதி ராஜினி கொல்லப்பட்டது ,
இப்படியாக ...எதுவும் ஆக்கபூர்வமாக இயங்கினால் அவர்களுக்குப் பொறுக்காது.
உடனே தலையிட்டு அழித்துமுடித்தபின் வேறு அழிவு வேலைகளில் திட்டமிடுவார்கள்.
இந்த மனநிலையே முள்ளிவாய்க்கால் வரை அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தியது.
மக்களைப் பலியிட்டு பிரபாகரன் உட்பட அரசிடம் சரணடைந்து தங்களைத் தற்காத்துக்கொண்டதும் இந்த மனக்கட்டமைப்பின் இயல்புதான். 

மகாராஷ்டிரா மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தன!

malaimalar  :பண்டாரா: மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன. 7 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இந்த சம்பவம் மாநிலத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 தீ விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோப் தெரிவித்தார். .. 

>தீ விபத்து தொடர்பாக பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பண்டாராவில் நிகழ்ந்த, இதயத்தை நொறுக்கும் துயரமான சம்பவத்தில், நாம் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம் என்று கூறி உள்ளார்.

பார் கவுன்சில் அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்! சட்டப்படிப்பையும் எட்டாக் கனியாக்க திட்டமா?” -

 “சட்டப்படிப்பையும் எட்டாக் கனியாக்க திட்டமா?” - பார் கவுன்சில் அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

kalaignarseithigal.com :  முதுநிலை சட்டப் படிப்பிற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற இந்திய பார் கவுன்சிலின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.“முதுநிலை சட்டப் படிப்பிற்கு இனிமேல் அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற இந்திய பார் கவுன்சிலின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “முதுநிலை சட்டப் படிப்பிற்கு (எல்.எல்.எம்) இனிமேல் நீட் தேர்வு போன்று அகில இந்திய நுழைவுத் தேர்வு” என இந்திய பார்கவுன்சில் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்து விட்ட மத்திய பா.ஜ.க அரசு இப்போது, “இந்திய பார் கவுன்சில்” மூலமாக சட்டக் கல்வியையும் கிராமப் புற மாணவர்களுக்கு எட்டாக் கனியாக்கி விலக்கி வைக்கும் விதத்தில் இந்தத் தேர்வினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து- அதற்காக அரசிதழும் வெளியிட்டிருப்பது மாநில உரிமைகளுக்கும்- கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

பாஜக கூட்டணி- சசிகலா: அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது!

 பாஜக கூட்டணி- சசிகலா:   அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது!

minnamblam : அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று கூடுகிறது.  ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.அந்த வகையில் அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.   பொதுக் குழுவை முன்னிட்டு பொதுக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்களுக்கு முறைப்படி தனித் தனியாக கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுக் குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள் உள்பட 3,500 பேர் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே கணவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் 2 இந்திய இளம்பெண்கள்... காதல் திருமணம்…

online14media.com :அமெரிக்காவில் கணவனை விவாகரத்து செய்த இந்திய இளம்பெண் தனது தோழியின் கணவர் மீது காதல் கொண்ட நிலையில் மூவரும் சேர்ந்து ஒரே வீட்டில் 10 வருடமாக மகிழ்ச்சியுடன் வசித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Piddu Kaur (31) என்ற பெண்ணுக்கும், நபர் ஒருவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே ம ன க்க சப்பு ஏற்பட்டு Piddu Kaur கணவரை வி வா க ரத்து செய்தார். பின்னர் தனது பள்ளிகால நண்பர்களான Speetie Sing (36) மற்றும் அவர் மனைவி Sunny-ஐ Piddu சந்தித்துள்ளார். தங்கள் வீட்டில் வந்து ஒருவாரம் தங்கும்படி த ம் பதி Piddu-யிடம் கூற அவரும் வந்து தங்கினார் . அப்போது Speetieக்கும் Pidduக்கும் இடையே கா த ல் ஏற்பட்ட நிலையில் ஒருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். இதன்பின்னர் நடந்த சம்பவம் தான் ஆச்சரியம்! அதாவது Speetie,Sunny மற்றும் Piddu உடன் சேர்ந்து ஒன்றாக வாழ முடிவு செய்தார். 

தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னட செம்மொழி அந்தஸ்து ஆதார ஆவணங்களை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது

சொந்தமா எழுத்துருவே (Alphabet) இல்லாத சமஸ்கிருதத்திற்கு எப்படி செம்மொழி அந்தஸ்து கொடுக்க முடியும் என்று அடுத்து ஒரு வழக்கு போட்டு கேட்கணும்! 

Sivakumar Shivas : தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதற்கான ஆதார ஆவணங்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.                         சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் காந்தி, பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், “உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.                         இதில், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, தமிழ், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, இலக்கண, இலக்கிய நூல்கள் இருக்கும் மொழிகளுக்கு மட்டுமே இந்த அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த தகுதிகள் இல்லாத காரணத்தால், உலகில் பழமையான மொழிகள் என்று கூறப்படும் அரபிக், பெர்சியன் ஆகிய மொழிகளுக்குக்கூட செம்மொழி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்நிலையில், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிக்கு கடந்த 2005ஆம் ஆண்டும், மலையாளத்துக்கு 2013ஆம் ஆண்டும், ஒடியா மொழிக்கு 2014ஆம் ஆண்டும் மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கி இருக்கிறது.                    மொழி வளமை, இலக்கண, இலக்கிய பாரம்பரியம் உள்ளிட்ட எந்த ஒரு தகுதியும் இல்லாத மொழிகளுக்கு எல்லாம் தன் விருப்பப்படி மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி வருகிறது. அதனால் இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்” என தெரிவித்தார்.

வெள்ளி, 8 ஜனவரி, 2021

மேற்கு வங்க சட்டப்பேரவை வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்!

Mamata Banerjee rejects Amit Shah's allegations, denies making 'Corona  Express' remark | West Bengal News | Zee News
நக்கீரன் செய்திப்பிரிவு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு, வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதி கூட இருக்கிறது. இந்தச் சிறப்பு அமர்வில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட மசோதாக்கள், ஜி.எஸ்.டி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், சட்டீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாகை: கோயிலில் வைத்து பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை

minnambalam :இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கதுவா சிறுமியையும், ஹத்ராஸ் பெண்ணையும், புதுக்கோட்டைச் சிறுமியையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பாலியல் வழக்கில் தாமதமாக நீதி கிடைப்பதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் புதுக்கோட்டைச் சிறுமி, வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் ஆறே மாதத்தில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் 2020 டிசம்பர் 29 அன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவு வெளியாகி முழுமையாக இன்னும் 10 தினங்கள் கூட ஆகாத நிலையில், நாகையில் விதவை பெண் ஒருவர்  கோயிலுக்குள்ளேயே வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது  தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்து தனது இரு மகள்களுக்காகச் சித்தாள் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, கூடுதல் காட்சி- முதலமைச்சர் அறிவிப்பு

malaiamalar : சென்னை: கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.            கடந்த இரண்டு மாதங்களாக இதே நிலை நீடித்து வந்த நிலையில், திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது. திரையங்குகளில் 100 சதவிகித இருக்கை பயன்பாட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதற்கு பொதுமக்கள், மத்திய அரசு, மருத்துவத்துறையினர், நீதிமன்றம் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பல்வேறு தரப்பு விமர்சனங்களுக்கு பிறகு 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக வழங்கிய உத்தரவில் இருந்து தமிழக அரசு இன்று பின்வாங்கியுள்ளது.

பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் .. Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்

Maha Laxmi : · *பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன?* *இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்* 1.WHATSAPP ல் நீங்கள் அனுப்பும் Message யை அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும். அதை FACEBOOK யை சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள். (For Ex.) எடுத்துக்காட்டாக நீங்கள் உங்கள் நண்பருடன் பேசும் செய்தியை (Message) WHATSAPP நிறுவனம் எடுத்து FACEBOOK , INSTAGRAM etc., போன்ற அவர்களின் வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்தும். நீங்கள் பேசியதற்கு சம்பந்தமாக விளம்பரங்களைத் தருவார்கள்.
2.நீங்கள் அனுப்பும் forward messages யை இதுவரை WHATSAPP சேகரிக்கவில்லை. ஆனால் இனிமேல் அந்த forward messages யும் தங்களது சர்வரில் (Server ) சேகரித்துக் கொள்வார்கள்.
3.WHATSAPP ல் இருக்கும் Features (அம்சங்களை ) பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் Privacy Policy க்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.
அவர்கள் நீங்கள் பயன்படுத்தும் Features ல் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
(For Ex.)எடுத்துக்காட்டாக

காங்கிரசில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை! -ஆனந்த் சீனிவாசன் ஆவேசம்

Panneerselvam Natesapillai : காங்கிரஸ் கட்சியில் யாரும் உழைப்பதில்லை. கட்சியில் இருக்கிறார்கள். அவ்வளவுதான். தேர்தல் வரும் போது மட்டும் கட்சி இருப்பதை பதிவு செய்கிறார்கள். சென்னையை விட்டு வெளியே வருவதில்லை. கீழே இறங்கி வேலை செய்வதில்லை. பின்னர் கட்சி எப்படி வளரும்? இதை ஏன் அவர்கள் யோசித்து கூட பார்ப்பதில்லை? 

Swamy : உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்காத காங்கிரஸ் கட்சி. ராகுல் காந்தி மற்றும்  பிரியங்கா காந்தியால் மட்டுமே காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க முடியும். ஆனந்த சீனிவாசன் போன்ற காங்கிரஸ் கட்சிக்கு உழைப்பவர்களுக்கு மரியாதை மற்றும் நல்ல பதவி  கொடுத்து கெளரவிக்க வேண்டும்.           Jahir Hussain : காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் ராகுல் காந்தி யும் TWEETER அரசியல் தான் செய்கிறார் களத்தில் இறங்கவேண்டும் மக்களோடு இருக்கவேண்டும் காங்கிரஸ் யில் இருக்கும் பார்ப்பான்கள் கட்சிக்காக வேலை செய்யாமல் வெற்றி பெற்றவுடன் அதிகாரத்துக்கு வரும் பார்ப்பனர்கள் காங்கிரஸில் இருக்கிறார்கள் காங்கிரஸ் யில் இருக்கும் உழைக்கும் தலைவர்களுக்கு பதவி கொடுத்தால் காங்கிரஸ் நிச்சயமாக பெரிய தாக வளரும் பார்ப்பனர்கள காங்கிரஸில் இருந்துக்கொண்டு BJP யின் கொள்கைகளை ஆதரிக்கிறார்கள் ஒருசில பார்ப்பனர்கள் தான் கட்சிக்கு உண்மையாக இருக்கிறார்கள் ஆனந்த சினீவாசன் அவர்களை போல்

வாஷிங்டனில் வரலாறு காணாத வன்முறை!

  வாஷிங்டன், வரலாறு காணாத வன்முறை!
dhinamalar : வாஷிங்டன் அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் கூடியபோது, வாஷிங்டனில் வரலாறு காணாத வன்முறை நடந்தது. அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டு கபளீகரம் செய்தனர்.
அப்போது நடந்த பயங்கர கலவரத்தில், நான்கு பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். இவ்வளவு நடந்ததற்கு பின், அதிபர் பதவியை, ஜோ பைடனுக்கு விட்டுக் கொடுக்கும் வகையில், அதிகார மாற்றத்துக்கு, டொனால்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.   அமெரிக்க அதிபர் பதவிக்கு, கடந்தாண்டு, நவ., 3ல் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வென்றார். 'பாப்புலர் வோட்' எனப்படும், மக்களின் நேரடி ஓட்டுகளில், 70 லட்சம் வித்தியாசத்தில், குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்பை, அவர் வென்றார். 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும், மாகாணப் பிரதிநிதிகளின் ஓட்டுகளில், 306 - 232 என்ற அடிப்படையிலும், பைடன்
வென்றார். வரும், 20ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்; இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளை, அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் மோசடி நடந்ததாக அவர் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

குடியரசு தினத்தில் பெரிய அளவில் டிராக்டர் பேரணி... நேற்று நடந்தது ஒத்திகைதான்.. விவசாயிகள் அதிரடி!

dailythanthi.com : டெல்லியில் நேற்று நடந்தது ஒத்திகைதான் என்றும் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் குடியரசு தினத்தில் பெரிய அளவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 44வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கொரோனா தொற்றினால் இறந்த முஸ்லிம்களின் உடலை எரிப்பதற்கு எதிர்ப்பு.

இது ஒரு நண்பரின் உண்மை   கதை . இவர் சில மாதங்களுக்கு முன்பு வைரஸ் தொற்றினால் காலமானார். இவர் காஞ்சி சங்கர மடத்திற்கு மிக .... மிக நெருக்கமானவர். இவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இசை ஈடுபாட்டால் உருவானது . நல்ல மனிதர் சனாதனத்தை முற்று முழுதாக நம்பி அதை தன்னால் முடிந்த அளவு பரப்பவுதற்கு முயன்றவர். அதன் காரணமாக அவருக்கு மத்தியிலும் எல்லா மாநிலங்களிலும் நல்ல செல்வாக்கு இருந்தது . அந்த செல்வாக்கை தனிப்பட்ட விடயங்களுக்கு அவர் பயன்படுத்தவில்லை . மீண்டும் சொல்கிறேன் தனிப்பட்ட வாழ்வில் அவர் உண்மையிலேயே மிகவும் நல்லவர் .ஆனால் அவரது சிந்தனையில் தவறு இருந்தது. அது அவருக்கு புரியவே இல்லை .. அவரின் குடும்ப சூழ்நிலை எல்லாம் அதுதான் . எனவே அதுபற்றி குற்றம் கூற முடியாது. அவர் தஞ்சாவூரில் ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாளில் காலமானார் . இது சில மாதங்களுக்கு முன்பு நடந்தது .
அவரது உறவினர்கள் கேரளாவில் இருந்து வரமுடியவில்லை.
அவரது இறுதி கருமங்களை அரசே செய்து முடித்தது . அவரது இறுதி புகைப்படத்தையும் குடும்ப உறுப்பினர் வாட்சாப்பில் பெற்றுக்கொண்டனர் .
வெறும் பாலிதீன் பைகளால் சுற்றப்பட்ட ஒரு ... photo
எந்த வித சனாதன ஆசாரங்களும் வேத பராயணங்களும் இல்லாமல் எப்படி நடந்தது எங்கே நடந்தது என்ற வெறும் விஞ்ஞான தொழில் நுட்ப ரீதியான விபரங்களோடு மட்டுமே அது நடந்து முடிந்தது..
கொரோனா சூழ்நிலையின் காரணமாக .இதை அவரது குடும்பத்தினரோ வேறு யாருமோ எந்த விதமான விமர்சனங்களும் இன்றி இதை ஏற்று கொண்டனர்.

எளிமைக்கு பின்னே ஒழிந்திருக்கும் சமூக நோய்

நேர்மை எளிமை போன்ற சொற்கள் மிக மிக தவறாக புரிந்து

கொள்ளப்பட்டிருக்கிறது  மேற்கு நாடுகளில் இந்த பருப்பு வேகாது. தனிப்பட்ட ரீதியில் ஒருவர் சட்டத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்பதே பெரிதும் எதிர்பார்ப்பார்கள் ஒருவர் ஏழையாக இருந்தால் அவர் ஏன் அரசியலில் நேரத்தையும் சக்தியையும் வீணாக்குகிறார்? முதலில் தனது வாழ்வை வளம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடலாம் என்பது போன்று சிந்திப்பார்கள் மேலும் ஒருவர் உண்மையாகவே நேர்மையானவராக எளிமையானவராக இருந்தாலும் அவர் சமூக பிரச்சனைகளில் எந்த நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதையே அளவுகோலாக கருதுவார்கள்

குஜராத் படுகொலைகளை கண்டுகொள்ளாமல் விட்டாலும், அந்த கொலைகாரர்கள் உலக அரங்கில் தப்பிவிட உதவி புரிந்தாலும் மறைந்த அப்துல் கலாம் அய்யா  ரொம்ப எளிமையானவர் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையானவர் என்று கூறினால் காறி உமிழ்வார்கள் .
இதுதான் இந்திய சமூகத்தில் புரையோடி இருக்கும் தவறான சிந்தனை என்று எண்ணுகிறேன்.

Intaxseva மூலமாக Income Tax தாக்கல் செய்த... நிம்மதியான மகிழ்ச்சியான Feel வரும்பாருங்க!

Image may contain: one or more people, people standing, sky, grass, outdoor and nature
Karthikeyan Fastura : · Intaxseva மூலமாக கடந்த இரண்டு வாரங்களாக Income Tax தாக்கல் செய்து கொடுக்கும்போது ஒரு விஷயம் எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தங்களது நிறுவனத்தில் கொடுக்கும் Declaration Formஐ Fill பண்ணிவிட்டாலே தங்கள் நிறுவனம் தங்களுக்காக ஐடி தாக்கல் செய்கிறார்கள் என்று மிகவும் புத்திசாலி இளைஞர்கள் கூட தவறான புரிதலை கொண்டிருக்கிறார்கள். நிறுவனம் நமது வருமானத்திற்கான வரியை பிடிக்கும்போது அதில் எங்கெல்லாம் வரிவிலக்கு பெற உங்களுக்கு வழி இருக்கிறது என்று கேட்டு அதில் நீங்கள் எவ்வளவு திட்டமிட்டிருகிறீர்கள் என்ற கணக்கு மட்டும் தான் Declarationல் கேட்கிறார்கள் எவ்வளவு வரி பிடிக்கவேண்டும் என்பதற்காக. வருமானவரி தாக்கலை நாம் தான் செய்யவேண்டும். சம்பளம் தாண்டி உங்களுக்கு வந்த வருவாய், முதலீடு, பிற செலவுகள் நமக்கு தான் துல்லியமாக தெரியும். அதனால் அதை நாம் தான் தாக்கல் செய்ய வேண்டும்.

BPCL to vedanta 9 லட்சம் கோடி சொத்தும் 8 ஆயிரம் வருட வருமானமும் உள்ள பாரத் பெட்ரோலியத்தை 75 ஆயிரம் கோடி அடிமாட்டு விலைக்கு பாஜக அரசு..

  வேதாந்தா அனில் அகர்வாலுக்கும், பிரிட்டன் சென்ட்ரிகஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவின் மிகப்பெரிய சொத்தான பாரத் பெட்ரோலியத்தை அடிமாட்டு விலைக்கு பேசி முடித்துள்ளது மோடி அரசு. ஒன்பது லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன், வருடத்திற்கு எட்டாயிரம் கோடி ரூபாய் லாபத்துடன், ராஜ நடை போட்டு கொண்டு இருந்த பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை, நலிந்த நிறுவன லிஸ்டில் சேர்த்து, வெரும் 75 ஆயிரம் கோடிக்கு தனியாருக்கு தூக்கி தாரை வார்த்து கொடுக்கிறது மோடி அரசு. 9 லட்சம் கோடி ரூபாய் சொத்தை, 8 லட்சம் கோடிக்கும் அதிகமான நஷ்டத்தில் வாரிக்கொடுக்கும் இந்த எட்டப்பன் கும்பலுக்கு மனசாட்சியே இல்லையா?
பாஜக கும்பலின் அப்பன் வீட்டு சொத்தா இருந்தால் இப்படி கீழ்தரமான விலைக்கு தேசத்தை விற்பார்களா என்னா?
தேசத்தின் சொத்துக்களை விற்கும் இந்த தேச விரோதிகள் தான் தேசத்தை காப்பாற்ற போகிறார்களாம்.
இது எல்லாம் தொடக்கம் தான்...!
முடிவு இன்னும் அபாயகரமானதாக இருக்கும்.
60 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கி வளர்த்து எடுத்து, உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்கள் தர வரிசையில் FORTUNE 500 இல் இடம் பிடித்து உள்ள பொது துறை நிறுவனம் BHARAT PETROLEUM.
தன்னால் புதிதாக எதையும் உருவாக்க துப்பு இல்லாத இந்த மோடி அரசு, 60 வருட காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கி வளர்த்து எடுத்த பொது துறை நிறுவனங்களை வெட்கம் மானம் ரோஷம் சூடு சொரணை எதுவும் இல்லாமல் வித்து தின்னும் செயலை மட்டுமே செய்து கொண்டு வருகிறது.

வியாழன், 7 ஜனவரி, 2021

கரூரில் இளைஞர் ஆணவ கொலை பெண்ணின் தந்தை கைது

dhinakaran:  கரூர்: கரூரில் வேறு சாதி பெண்ணை காதலித்த இளைஞர் ஹரிஹரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண்ணின் தந்தை வேலன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் காமராஜபுரம் சாலையை சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன். இவர் அதே பகுதியில் உள்ள வேலன் என்வரது மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஹரிஹரன் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலித்த பெண்ணின் பெற்றோர் ஹரிஹரனிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு மிரட்டி வந்துள்ளனர். எனினும் இருவரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்துள்ளனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பெண்ணின் உறவினர்கள் நேற்று பட்டப்பகலில் கரூர் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் பெண்ணின் பெரியப்பா உள்ளிட்ட ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் ஹரிஹரனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.

ஜன.10- கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம்; கடைசி நபர் கைதாகும் வரை திமுக ஓயாது: ஸ்டாலின்

Image may contain: 1 person, text that says 'பொள்ளாச்சி பாலியல் கொடுரம்: காரணமான அ.தி.மு.க.,வினர் தண்டிக்கப்பட வேண்டும்! தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக அரசு சீரழித்துள்ளது. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் பொள்ளாச்சி பாலியல் கொடுரங்கள். அடிக்காதீங்கண்ணா. என்று கதறிய குரல் இதயத்தைக் கிழிக்கிறது. முழுக்க முழுக்க மேலிடத் ஆதரவுடன், இந்தப் பாலியல் கொடூரம் சம்பந்தப்பட்டுள்ள ஆளுந்தரப்பினரைக் காப்பாற்றுவதற்கு எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்கள்- தொடர்புடைய பார் காப்பாற்ற அமைச்சர் தொடங்கி காவல்துறை வரை முயன்றனர். ஜாமீன் வழங்கி மாவட்ட ஆட்சியரே சந்தித்துப் பேசினார். பாபு, ஹெரோன் பால், அருளானந்தம் ஆகிய மூவரை செய்திருக்கிறது. அருளானந்தம் பொள்ளாச்சி நகர செயலாளர்.! நகரச் செயலாளர் நிழல்; துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனால் வளர்க்கப்பட்டவர். ஜாமீன் கிடைப்பதற்கு வகுத்துவிடக்கூடாது. விரைந்து விசாரணை நடத்தி, அ.தி.மு.க.,வின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, தண்டிக்கப்பட்ு தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். mkstalin க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. 06-01-2021 dmk.in/JoinDMK'
  hindutamil.in :பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படும் வரை திமுகவின் நியாயம் கேட்கும் போராட்டம் ஓயாது, ஜன.10 அன்று பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் போராட்டம் நடக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 250-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த கொடூரர்களைக் காப்பாற்றிய ஆட்சி எடப்பாடி அதிமுக ஆட்சி, காவல் துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் பழனிசாமி, நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம் தீவிரமடையும் வரை இந்த வழக்கைக் கண்டுகொள்ளவில்லை.

ஏனோ தானோவென இருந்துவிட்டார். திமுக சார்பில் பல போராட்டங்கள் குறிப்பாக, மகளிரணியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு, தமிழகத்தின் தாய்மார்கள் அனைவரும் ஒருங்கிணைந்த குரல் எழுப்பிய பிறகு, முதலில் சிபிசிஐடிக்கும் - பிறகு சிபிஐக்கும் இந்தப் புகாரை மாற்றினார்.

இந்தக் காலகட்டங்கள் முழுவதிலும் - பத்திரிகைகளில், சமூக வலைதளங்களில் இளம்பெண்களைச் சீரழித்தவர்கள் அதிமுகவின் முன்னணிப் பிரமுகர்களுடன் சில அமைச்சர்களுடன் இருந்த காட்சிகள் தமிழகமெங்கும் வலம் வந்தன. ஏன், இன்னும் கூட அந்தக் காட்சிகளைச் சமூக வலைதளங்களில் காண முடிகிறது. 'அண்ணா அடிக்காதீங்க' எனும் கதறல் இன்னும் தமிழகத்தின் பெண் பிள்ளைகளை பெற்றோர் காதுகளில் பயத்தோடு கேட்டுக் கொண்டே இருக்கிறது.

BBC : அமெரிக்காவில் ஜனவரி 20இல் ஆட்சி மாற்றம் நடப்பதற்கு உடன்பட்டார் டிரம்ப் - அடுத்தடுத்த திருப்பங்கள்

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றி அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், "தேர்தல் முடிவுகளுடன் நான் உடன்படாதபோதும், ஜனவரி 20ஆம் தேதி முறைப்படி ஆட்சி மாற்ற நடவடிக்கை இருக்கும். நான் எப்போதும் தெரிவித்து வந்ததை போல, சட்டப்பூர்வ வாக்குகள் எண்ணப்படும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். மிகச்சிறந்த முதலாவது பதவிக்காலத்தின் முடிவை இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கும் வேளையில், அமெரிக்காவை மிகச்சிறந்ததாக மீண்டும் ஆக்குவதற்கான எங்களுடைய போராட்டம் தொடரும்," என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக டிரம்பின் சார்பில் 60க்கும் அதிகமான வழக்குகள் பல்வேறு மாகாணங்களில் தொடரப்பட்டிருந்தன. அவை அனைத்திலும் டிரம்புக்கு தோல்வியே மிஞ்சியது.

அழகிரி : நான் மைக்க புடிச்சி ஏதாவது பேசினா மட்டும் லைன்ல வருவீங்களா?

minnambalam : கடந்த ஜனவரி 3ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முக அழகிரி... "திமுகவுக்கு நான் எத்தனையோ வகைகளில் பாடுபட்டிருக்கிறேன். ஆனால் தொண்டர்களுக்காக நான் கேள்வி கேட்டதற்காக என்னை நீக்கி விட்டார்கள். ஸ்டாலினுக்கு திமுகவின் பொருளாளர் பதவியும் துணை முதல்வர் பதவியும் நான் சொல்லித்தான் கலைஞர் கொடுத்தார்.

நான் நீக்கப்பட்ட பிறகு கலைஞரை சந்தித்தபோது, ‘என்னை எப்போது சேர்த்துக் கொள்வீர்கள் என்று கேட்டேன். ‘இரு அவர்களின் ஆட்டம் அடங்கட்டும்’ என்று சொன்னார். ஆனால் அதன் பின் அவர் படுத்துவிட்டார். எத்தனையோ பேரை மந்திரியாக்கியிருக்கிறேன். எவனுக்கும் நன்றி கிடையாது. ஆனாலும் உங்களுக்காக ஒரு தொண்டன் அழகிரி இருக்கிறான். ஸ்டாலின் இந்தத் தேர்தலில் முதல்வர் ஆகவே முடியாது. நானும் என் ஆதரவாளர்களும் விடமாட்டோம்" என்று மிகக் கடுமையாகப் பேசியிருந்தார்.  

BJP 117 + Admk 117 ? பாஜகவுக்கு பாதி தொகுதிகள் வேண்டுமாம் .. கூட்டணி ஆட்சியாக வேறு இருக்கவேண்டுமாம் .

Vijayaragavan Rajasekaran : · அதிமுக பாஜக கூட்டணி குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள் உலா வருகின்றன. அதில் பல திடுக்கிடும் செய்திகளும் அடங்கி இருக்கின்றன. பாஜக தனக்கு பாதிக்கு பாதி (117 + 117 தொகுதிகள்) கொடுக்க சொல்லி வறுபுறுத்துவதாக கூறுகிறார்கள். தங்கள் பங்கில் அவர்கள் தங்களுக்கு போக மீதியுள்ள இடங்களில் பாமக, தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி போன்ற கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். அதாவது அதிமுகவோடு எந்த கூட்டணி கட்சிகளும் நேரிடையாக சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது. அதிமுக ஆட்சி அமைத்தால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். இது வரை பாஜகவின் இந்த திட்டத்தை அதிமுக ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு வேளை இந்த பேச்சு வார்த்தை முறியுமானால் பாஜக பாமக தேமுதிக புத பு நீ க போன்ற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும். தமாக நிலை குறித்து இன்னும் தெரியவில்லையாம். எம்பி பதவி கொடுத்ததால் அநேகமாக அதிமுகவின் விழியசைவில் அது இயங்கலாம்.
இன்னொரு திட்டமும் கைவசம் இருக்கிறதாம். பாஜக தனி அணியானால் சசிகலா ஓபிஎஸ் மூலம் அதிமுகவை பிளவு படுத்தி இரட்டை இலையை முடக்கும் எண்ணமும் இருக்கிறதாம். டிடிவியின் மௌனத்தை பலரும் சந்தேக கண் கொண்டு பார்ப்பதற்கு இதுதான் காரணம்.
இரட்டை இலை முடக்கப்பட்டால் திமுக இரண்டு கோணங்களில் சிந்திக்கும். தனி சின்னத்திற்காக முரண்டு பிடிக்கும் கூட்டணி கட்சிகளை கழற்றியும் விடலாம் அல்லது தனி சின்னத்தில் நிற்க அனுமதியும் கொடுக்கலாம்.
தேர்தல் நேரத்தில் பாஜக திமுகவிற்கு பலவிதங்களில் அழுத்தம் கொடுக்கவே முனைகிறது. ஆனால் அவை எல்லாம் திமுகவிற்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாகவே முடிகிறது.
ஏன் சார் வர வர உங்க பனிஷ்மென்ட் (punishment) எல்லாம் ட்ரீட்மென்ட்டாகவே (treatment) இருக்கிறது?

தி.மு.க. கூட்டணி கட்சிகள் திடீர் குழப்பம்! ம.தி.மு.க., - வி.சி., - ஐ.ஜே.கே. தனிச் சின்னத்தில் போட்டியிடுவதை...

தி.மு.க., கூட்டணி கட்சிகள், விவகாரம்,குழப்பம்
  dhinamalar : கூட்டணி கட்சிகள் விவகாரத்தால், தி.மு.க.,வில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வைகோ, திருமா, பாரிவேந்தர் என, ஆளாளுக்கு தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக கூறுவதால், முடிவெடுக்க முடியாமல், தி.மு.க., திணறுகிறது.    இதற்கிடையில், கூட்டணி தேவையா, வேண்டாமா என்பதிலும்; யாருக்கு எவ்வளவு, 'சீட்' கொடுப்பது என்பதிலும், தி.மு.க., நிர்வாகிகளிடம் காணப்படும் கருத்து வேறுபாடு, கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வரும் சட்டசபை தேர்தலில், 10 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆறு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளன. அதற்கு, தனி சின்னத்தில் போட்டியிட வேண்டியதும் அவசியம். பிடிவாதம்.... இந்த காரணத்திற்காக, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை, குறைந்தபட்சம் தலா, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என, தி.மு.க., கூட்டணியில் பிடிவாதம் பிடிக்கின்றன. ஆனால், இவ்வளவு தொகுதிகள் ஒதுக்கி, தனி சின்னத்தில், இக்கட்சிகள் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி என, தி.மு.க., கருதுகிறது.மேலும், இக்கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால், அந்த தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும், தி.மு.க., நம்புகிறது.

உருவாகிறாரா 'இளைய வீரபாண்டியார்?'... கண்ணீர் விட்ட மூதாட்டி... கவலை தீர்த்த டாக்டர் பிரபு வீரபாண்டி!

Image may contain: 1 person, standing and sitting
உண்மைத்தமிழன்: February 2011
nakkheeran.in - இளையராஜா : சேலம் மாவட்டத்தின் வளர்ச்சியில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு அளப்பரிய பங்கு உண்டு. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் வரும்போதெல்லாம், 'இது வீரபாண்டியார் மாவட்டம்' என்று புகழாரம் சூட்டவும் தவறுவதில்லை. ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு, வீரபாண்டி ராஜா பெரிதாக அரசியலில் சோபிக்கவில்லை. வீரபாண்டியார் உயிருடன் இருந்தபோதே ராஜாவை எம்.எல்.ஏ.வாக ஆக்கிவிட்டுப் போனாலும், அதை தொடர்ந்து முன்னெடுப்பதில் ராஜா சற்றே சறுக்கினார்.

 இந்த நிலையில்தான், சென்னையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி லீலாவதி மூலம் பிறந்த டாக்டர் பிரபு, சேலத்திலேயே நிரந்தரமாக குடியேறினார். அத்துடன், வரும் சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடவும் தயாராகி வருகிறார். அதுவரை கட்சியில் சாதாரண உறுப்பினராக இருந்த அவரை, தி.மு.க. தலைமை திடீரென்று இரண்டு மாதங்களுக்கு முன் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமித்தது. 

மருத்துவத்துறை சீரழியவில்லை ! அரசுடமை , தனியார்மயம் குறித்த பதிவு!

Image may contain: text that says 'Elam Barithi மருத்துவம் தவிர மற்றதை தனியார் மயம் ஆக்கலாம் Like Reply 3m Mariano Anto Bruno அதாவது Elam Barithi சார் இப்ப 70000 ரூபாய் சம்பாதிக்கிறார் எனவே அவரால் தனியார் பேருந்தில் செல்ல முடியும் தனியாரிடம் மின்சாரம் வாங்க முடியும் ஆனால் அவரால் தனியார் மருத்துவமனை கட்டணம் செலுத்த முடியாது எனவே அவருக்கு தேவைப்படுவதில் அவரால் காசு கொடுக்க முடியாததை மட்டும் அரசு குறைந்த செலவில் தரவேண்டும் ஆனால் அவரால் காசு கொடுக்க முடிவதை தனியார்மயமாக்க வேண்டும் இந்த சுயநலம் தான் இந்த குணம் தான் சார் பிசாசு Like Reply 1m'
Mariano Anto Bruno : · மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ் என்ன ஆச்சு, முதலில் நாய்கடிக்கு மருந்து இருந்தது, இப்ப இல்லையா அது இல்லை இப்பத்தான் மருந்து இருக்கிறது ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ் என்ன ஆச்சு, முதலில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறைய மாத்திரை இருந்தது, இப்ப இல்லையா அது இல்லை இப்பத்தான் நிறைய மருந்து இருக்கிறது
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் 25 மருத்துவக்கல்லூரி இருந்தது இப்ப இல்லையா
அது இல்லை
இப்பத்தான் நிறைய மருத்துவக்கல்லூரி இருக்கிறது
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் அனைத்து மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் இருந்தது இப்ப இல்லையா
அது இல்லை
இப்பத்தான் நல்லாயிருக்கு
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் பிரசவ கால இறப்பும் பச்சிளம் குழந்தைகள் இறப்பும் குறைவாக இருந்தது, இப்ப அதிகரித்துள்ளதா
அது இல்லை
இப்பத்தான் நல்லாயிருக்கு

வெள்ளை மாளிகை முற்றுகை: டிரம்ப் ஆதரவாளர் மீது போலீசார் துப்பாக்கி சூடு; பெண் உயிரிழப்பு

வெள்ளை மாளிகை முற்றுகை:  டிரம்ப் ஆதரவாளர் மீது போலீசார் துப்பாக்கி சூடு; பெண் உயிரிழப்பு
  daylithanthi :தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20ந்தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.  பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

ட்ரம்புகளின் கையிலிருந்து மீண்ட அமெரிக்கா .. மோடிகளின் கையிலிருந்து இந்தியா மீள்வது எளிதல்ல .. காத்திருக்கிறது பெரும் ....

Image may contain: one or more people, crowd and outdoor
Prabhakar Annamalai : · மனிதனுக்கு புகழ் போதையும், கர்வமும் கூடவே கற்றற்ற அறியாமையும் ஒன்றித்து தனக்கு தகுதியற்ற அதிகாரமும் கிடைத்துப் போனால் என்னவாகும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அதிபர் ட்ரம்ப். இவர் உலகமே அன்னார்ந்து பார்க்குமிடத்தில் இருக்கும் இத்தனை பெரிய மக்களாட்சி அரசாங்கத்திற்கு அதிபரனாது ஓர் விபத்து என்றால் மிகையாகாது. கடந்த நான்கு ஆண்டுகளும் இவர் மைனாரிடிகள் பொருட்டு காட்டி வந்த வெறுப்பு என்பது சொல்லிலடங்காதது. பிறக்கும் போதே வாயில் வெள்ளி ஸ்பூனூடன் பிறந்ததாலோ என்னவோ பிற மனிதர்கள் பொருட்டான கரிசனம் என்பது மருந்துக் கூட இவரிடம் காண முடியாது. இவரின் பேச்சும் ரசனையும் கொஞ்ச கொஞ்சமாக ஊர்ப்புறம் வாழும் படிக்காத வெள்ளையினத்தவரையும், படித்திருந்தாலும் பிற இன மக்களின் மீது வெறுப்பை வைத்திருப்பவர்களுக்கும் ஆதர்சனமான மனிதராகிவிட்டார். நான் வாழும் மாகாணத்தில் பார்க்க பண்பாடான மனிதராக இருக்கிறாரே என்று ட்ரம்ப் உதிர்க்கும் வார்த்தைகளை வைத்து, யேய், என்னப்பா இப்படியெல்லாம் பேசுகிறார் என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்பவர்களே அதிகம். அந்தளவிற்கு வெறுப்பு என்ற நச்சை ஊட்டி வந்தார்.

சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது அரசியல் கோட்பாடு அல்ல, அது Fantasy: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

Image may contain: 2 people
Rajes Bala - . London Thiruvalluvar
akazhonline.com - நேர்கண்டவர்: அனோஜன் பாலகிருஷ்ணன் : 84இல் என்று நினைக்கிறேன். புலிகள் அநுராதபுரத்தில் சாதாரண சிங்கள மக்களைக் கொலை செய்தார்கள் அல்லவா? அதேபோல எல்லைப் பகுதிகளில் எல்லாம் சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பிக்குகளைக் கொலை செய்த சம்பவங்களும் நடந்தன. இவற்றைப் பற்றி ராஜினியிடம் கேட்டால் அவர் சொல்வார். ‘சண்டை என்றால் மக்கள் இறப்பார்கள்’ என்று.... இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இங்கிலாந்துக்குப் புலம்பெயர முன்னரே இலங்கையில் எழுத்தாளராக நன்கு அறியப்பட்டவர். முற்போக்கு பாணியில் பல கதைகளை எழுதியிருக்கிறார். பெண்களின் மீதான் ஒடுக்குமுறைகள் உட்பட பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதியவர். உளவியல் நுட்பத்துடன் பல சிறந்த கதைகளையும் எழுதியிருக்கிறார். புலம்பெயர் இலக்கியத்தை, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டு பேச இயலாது. அவர் நம் முன்னோடிகளில் ஒருவர். எழுத்து தவிர்ந்தும், அவரது மனித உரிமை செயற்பாடுகள் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு பாரிய உதவிகளைச் செய்திருக்கிறது. அகதிகளுக்கான பிரித்தானியச் சட்டங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது. பிரித்தானியாவினால் அகதியாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒவ்வொரு தமிழருக்கும் இராஜேஸ்வரி அன்று பெற்றுக்கொடுத்த நலன்கள் இன்றும் உதவிபுரிகின்றன. அவருடனான நீண்ட நேர்காணல் இது.

அமெரிக்க கேப்பிட்டல் கட்டிடத்தை சூறையாடிய டிரம்ப் ஆதரவாளர்கள்! உள்ளே பூட்டப்பட்ட எம்.பிக்கள்

Veerakumar- tamil.oneindia.com : வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி கேப்பிட்டல் கட்டிட வளாகத்துக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையை மீறி போராட்டக்காரர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதால் கேப்பிட்டல் கட்டிடம் பூட்டப்பட்டது. 

துணை அதிபர் மைக் பென்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அதிக ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இந்த வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே, தேர்தல் முறைகேடு வழக்குகள் பலவும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.... 

குருமூர்த்தி : நான் வச்சிருக்கிறதே கறுப்பு பணம் .. பணம் எனக்காக வச்சிருக்கறதில்ல.. பெரியவாளுக்கு கொடுக்கிறதுக்காக..

 JrultySpm 2hhgu2,h uao2uns0gsruoe1re8d துக்ளக் ஆசிரயர் ஆடிட்டர் குருமூர்த்தி அண்மையில் காஞ்சி சின்ன பெரியவாள் முன்னிலையில் ஒரு பெரிய ஒப்புதல் வாக்குமூலத்தை உளறினார்.
நான் வச்சிருக்கிறதே கறுப்பு பணம் .. கறுப்பு பணம் எனக்காக வச்சிருக்கறதில்ல.. மத்தவாளுக்கு கொடுக்கிறதுக்காக ...அதாவது பெரியவாளுக்கு?
தான் பாம்பே டையிங் நஸ்லி வாடியாவின் அடியாளாக இருந்து அன்றைய ரிலையன்ஸ் திருபாய் அம்பானிக்கு எதிராக பத்திரிகைகளில் எழுதியும் இதர வழிகளிலும் வேலை பார்த்ததாக அவர் கூறியுள்ளதாக எனக்கு தெரிகிறது,
பாம்பே டையிங் என்வலப்பில் சுமார் முப்பத்தி ஐந்தாயிரம் இருந்ததாகவும் அதை மாற்றி வேறு ஒரு கவரில் வைத்து காஞ்சி மடம் என்று எழுதி வைத்து விட்டு டெல்லி சென்று விட்டதாக கூறியுள்ளார், பின்பு சி பி ஐ தனது வீட்டை சோதனை இட்ட பொழுது தான் அந்த கவரில் காஞ்சி மடம் என்று எழுதி இருந்ததால் தப்பி விட்டேன் என்றும் இல்லையென்றால் தான் பாம்பே டையிங் நஸ்லி வாடியாவிடம் கையூட்டு பெற்று விட்டதாக எண்ணி இருப்பார்கள் , கதையே முடிந்திருக்கும் ,
. பின்பு அந்த பணத்தை காஞ்சி மகா பெரியவாள் கேட்டதாகவும் தான் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்திய இலங்கை மீனவர்கள் மற்றும் இதர பிரச்சனை... அமைச்சர் ஜெய்சங்கர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு விபரம்

Image may contain: one or more people and people sitting
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - அமைச்சர் ஜெய்சங்கர்

அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை - கடற்றொழிலாளர் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் - மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்!

இலங்ககை - இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடார்பாகவும் இந்தியாவின் அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார். இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிகார அமைச்சருக்கம் இலங்கை கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் இன்று(06.01.2021 நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

புதன், 6 ஜனவரி, 2021

பொள்ளாச்சியில் களத்திலிருக்கும் பெண்கள் : அரசியல் பின்புலத்தோட இருக்கிறவங்க காப்பாத்தப்படுறாங்களா?'

vikatan :ொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு, மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2019-ம் வருடம் பிப்ரவரி மாதம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அளித்த ஒரு புகார், தமிழகத்தையே அதிர வைத்தது. அந்தப் பாலியல் புகார் விசாரணையின் அடுத்தடுத்த நகர்வுகளில், அவரைப்போல பல இளம் பெண்களும் கல்லூரிப் பெண்களும் குற்றம் சுமத்தப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதும், அந்தக் குற்றங்களில் அரசியல் பின்புலம் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.   இந்த வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஹெரோன் பால் (29), பைக்பாபு என்கிற பாபு (27), அருளானந்தம் (34) ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் - சிம்பு - தமிழக அரசு பேராசைக்கு நாங்கள் இரையாகனுமா? ... மருத்துவ பணியாளர்கள் கடும் கண்டனம்

Veerakumar - tamil.oneindia.com : சென்னை: உங்கள் பேராசைக்கு நாங்கள் இரையாக்க விரும்பவில்லை என்று, தியேட்டர்களில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், மருத்துவர் ஒருவர் எழுதிய செய்த பேஸ்புக் போஸ்ட் தற்போது வைரலாக சுற்றி வருகிறது.
பொங்கல் பண்டிகையொட்டி, மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய விஜய் மற்றும் சிம்பு நடித்த படங்கள் வெளியாகின்றன. எனவே 100 சதவீதம் ரசிகர்களுடன், தியேட்டர்கள் படம் பார்க்க அனுமதிக்க எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார் விஜய். சிம்புவும் அறிக்கை மூலம் இக்கோரிக்கையை முன்வைத்தார். முதல்வரும் இதற்கு சம்மதம் தெரிவித்து அனுமதி வழங்கிவிட்டார். இதை சுகாதாரத்துறை வல்லுநர்கள் கடுமையாக கண்டித்தபடி இருக்கிறார்கள். மூடிய அறைக்குள் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் அடைக்கப்படும்போது, கொரோனா வேகமாக பரவும் என எச்சரிக்கிறார்கள்.

தேவேந்திர குல வேளாளர் சான்றிதழ்: அரசு உத்தரவு!

minnambalam : பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்ப்பதற்கும் அரசுப்
தேவேந்திர குல வேளாளர் சான்றிதழ்: அரசு அதிரடி உத்தரவு!

பணிகளில் சேர்வதற்கும் குறிப்பாக பட்டியலின மக்கள் தங்களுக்கான சலுகைகளை முழுமையாகப் பெறுவதற்கும் சாதி சான்றிதழ் தேவை. குறிப்பாக ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கு தொடக்கத்திலும் சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் வருவாய் துறை அலுவலகங்களிலும் அரசு இ-சேவை மையங்களிலும் படையெடுப்பது தொடர்ந்து வருகிறது.   தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் அடுத்து வேறு பள்ளிகளில் சேர்வதற்கும் மாற்றுச் சான்றிதழில் தங்கள் சமுதாயத்தை உறுதிப்படுத்துவதற்கும் சாதிச் சான்றிதழ்களை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

புதுச்சேரி: திமுக முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்?

minnambalam :ுதுச்சேரி என்றாலே தெளிவில்லாமல்தான் இருக்கும் என்று சிலேடையாய் சொல்லுவார் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர். ஆனால், இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலினோ, புதுச்சேரியில் தெளிவற்ற சூழலைக் கருத்தில் கொண்டு ஒரு தெளிவான முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்,
புதுச்சேரி:  திமுக முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்?

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் அதிகமாகி வரும் நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும் காங்கிரசின் பலவீனத்தால் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கிடைத்த தகவல்களால்... புதுச்சேரியில் தனித்தே நிற்கலாமென்ற முடிவுக்கு வந்திருக்கிறது திமுக.இதுகுறித்து, திமுக காங்கிரஸ் உறவு முறிவு என்ற தலைப்பில் டிசம்பர் 16 ஆம் தேதியன்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதியில்லை: மத்திய அரசு உத்தரவு!

maalaimalar : தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல் என மத்திய உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்: மத்திய உள்துறை
தமிழக தியேட்டர்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதை தமிழக அரசு 100 சதவீதமாக உயர்த்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.இந்த நிலையில் தமிழக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறல். மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்?. மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா (தமிழர் ) யகநாதன் பிள்ளை சுட்டுக்கொலை ! சமூக சேவையாளர்? நிழல் உலக தாதா?

South African Drug King Pin, Teddy Mafia Shot Dead By Hired Assassins -  Gistmaniamaalaimalar : ஜோகன்னஸ்பர்க், 

தென்  ஆப்பிரிக்காவின்  டர்பன் நகருக்கு அருகில் உள்ள ஷால்கிராஸ் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யகநாதன் பிள்ளை. போதைப்பொருள் கடத்தல் மன்னனான இவர் போதைப்பொருள் கடத்தல் ஆயுத விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிழலுலக தாதாவாக விளங்கி வந்தார். சட்ட விரோதமாக பணம் ஈட்டிய போதிலும் தனது சமூகம் சார்ந்த மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். இதனால் அவர் அந்த பகுதியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் யாகநாதன் பிள்ளை வீட்டில் தனது மகளுடன் இருந்தார். அப்போது 2 பேர் அவர் வீட்டின் கதவை தட்டினர். இதையடுத்து யாகநாதன் பிள்ளை வீட்டின் கதவை திறந்தார். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்ததால் மர்மநபர்கள் 2 பேர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேர் கைது - சிபிஐ


Jeyalakshmi -   tamil.oneindia.com :  கோவை: தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கும்பல் ஒன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

என்.ஆர்.ஐ.,க்களுக்கு தபால் ஓட்டு; வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்

dhinamalar :புதுடில்லி : என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்கள்,
தேர்தல்களில், மின்னணு முறையில் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்கும், தேர்தல் கமிஷனின் பரிந்துரைக்கு, வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களின்போது, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டுகள் அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 'வெளிநாடுகளில் வேலை பார்க்கும், படிக்கும் மாணவர்கள், தங்கள் மாநிலத்தில் நடக்கும் தேர்தலில், மின்னணு முறை வசதியை பயன்படுத்தி, தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு தேவையான வசதிகள் உள்ளன' என, தேர்தல் கமிஷன், கடந்த, நவ., 27ல், சட்டத் துறை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தது.  இதை பரிசீலித்த வெளியுறவு அமைச்சகம், தேர்தல் கமிஷனின் இந்த பரிந்துரையை ஏற்றுள்ளது. இது தொடர்பாக, ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

ப.ஜீவானந்தத்தின் யாழ்ப்பாண தலைமறைவு வாழ்க்கை .. வல்வெட்டித்துறையிலிருந்து காரைக்காலுக்கு

Image may contain: 1 person, ocean and outdoor, text that says '500 भारत INDIA'
jaffnafashion.com : வல்வெட்டித்துறையிலிருந்து காரைக்காலுக்கு ரகசிய_பயணம்1948 ப.ஜீவானந்தத்தின் யாழ்ப்பாண தலைமறைவு வாழ்க்க . #முன்கதைச்சுருக்கம் அந்த விசைப்படகு இரண்டாவது உலக யுத்தம் முடிந்தபின் ஆங்கிலேயக் கடற்படையினரால் ஏலம் விடப்பட்ட விசைப்படகு. அதில் நவீன ராடார் கருவிகளும் இருந்தன. அதனை வல்வெட்டித்துறை மீனவர்கள் வாங்கித் தமது தொழிலுக்குப் பாவித்தனர். சுங்கப் பகுதியினரிடம்கூட அத்தகைய விசைப்படகுகள் இருக்கவில்லை. மிகவும் குறுகிய நேரத்தில் - ஓரிரண்டு மணித்தியாலயத்தில் - தமிழ் நாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அப்போது இருந்தது. அக்காலத்தில் சர்வசாதாரணமாக வல்வையில் உள்ளவர்கள் சிதம்பரம், நாகபட்டினம் போன்ற இடங்களுக்குப் பயணம் செய்து பண்டமாற்று செய்வதற்கும், எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் கச் சேரியைக் கேட்பதற்கும் , புதிய சினிமாப்படங்களைப் பார்ப்பதற்கும் சகஜமாகச் சென்று வந்தார்கள். நாங்கள் சென்ற படகு புறப்படமுன் படகோட்டிகள் செல்வச்சந்நிதி முருகனை வேண்டுதல் செய்து, தேங்காய் உடைத்து, கற்பூர ஆராதனை செய்து புறப்பட்டார்கள்.
#கேள்வி ப.ஜீவானந்தத்துடன் தாங்கள் சிலகாலம் யாழ்ப்பாணத்திலும் தங்கியிருந்ததாக அறிகிறோம். அக் காலத்தைய செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்.

56,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை ரூ.720 கோடிக்கு விற்கத் துடிக்கும் மோடி அரசு.. தனியார்மயமாகும் BEML!

ரூ.56,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை ரூ.720 கோடிக்கு விற்கத் துடிக்கும் மோடி அரசு - தனியார்மயமாகும் BEML!
ரூ.56,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை ரூ.720 கோடிக்கு விற்கத் துடிக்கும் மோடி அரசு - தனியார்மயமாகும் BEML!
பkalaignarseithigal : .இ.எம்.எல் எனப்படும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்க மோடி அரசு தயாராகியுள்ளது. :பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான டெண்டர், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க தீவிரமாக முயற்சிகள் என பல்வேறு செயல்களை முனைப்புடன் செய்து வருகிறது.

ரூ.56,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை ரூ.720 கோடிக்கு விற்கத் துடிக்கும் மோடி அரசு - தனியார்மயமாகும் BEML!
குறிப்பாக சேலம் உருக்காலை, விமான நிலையங்கள், ரயில் பெட்டித் தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் ரயில்வே துறை என அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, மக்களுக்குச் சேவை செய்யப்போவதாக பா.ஜ.க அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.  

நீங்கள் கையெழுத்துப் போட்டிருந்தால் நான் இறந்திருக்கமாட்டேன்!" - எஸ்.பி. அலுவலகத்தை அதிரவைத்த கடிதம்!

nakkheeran.in - எஸ்.பி. சேகர் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படையைச் சேர்ந்த பெயரிடப்படாத போலீஸ்காரர் ஒருவர், 'தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக' மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.Unnamed letter sent to viluppuram SP office

 அந்த கடிதத்தில், "2013ஆம் ஆண்டு ஆயுதப்படைக்கு தான் காவலராகத் தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ளேன். கடந்த 8 ஆண்டுகளாக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறேன். குடும்ப சூழ்நிலையின் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு சென்னைக்கு மாறுதலாகிச் சென்று, மீண்டும் விழுப்புரம் ஆயுதப்படைக்கு வந்து சேர்ந்துவிட்டேன். இதனால், தன்னுடைய பணியின் முன்னுரிமை மாறிவிட்டது. என்னுடன் பணியில் சேர்ந்த சக போலீசார் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்குப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 5 ஜனவரி, 2021

வள்ளலாரின் மர்ம மறைவும் நாவலரின் சந்தேக மௌனமும்!.. சந்தேகம் வருமா வராதா?

Image may contain: 2 people

 செல்லபுரம் வள்ளியம்மை: வள்ளலாரின் மர்ம மறைவும் நாவலரின் சந்தேக மௌனமும்! வடலூர் ராமலிங்க சுவாமிகள் காணாமல் போய் அல்லது மர்மமாக இறந்து ஐந்து வருடங்களுக்கு பின்பாகத்தான் ஆறுமுக நாவலர் காலமானார். வடலூர் ராமலிங்க வள்ளலாரை கடுமையாக எதிர்த்து அவர் மீது பொய் வழக்கு போட்டு தோற்றுப்போனவர் ஆறுமுக நாவலர்! நாவலரின் பின்பலமாக நின்றவர்கள் வைதீகர்கள் . இராமலிங்க வள்ளலார் மீது நிகழ்த்தப்பட்ட கொடிய தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி இதுவரை ஒருவரும் கேள்விகள் எழுப்பியதில்லை. எந்த ஆத்மீகவாதிகளும் சரி எந்த வைதீக பெருமான்களும் சரி வள்ளலாரின் மறைவு பற்றி வாயே திறக்கவில்லை என்று தெரிகிறது .

எனவே இவர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள்தான்.
தமிழ்நாடு முழுவதும் அறிந்த ஒரு மாபெரும் ஆத்மீகவாதியின் மர்ம மரணம் பற்றி ஒரு ஆத்மீக பெருந்தகைகளும் சந்தேக கேள்வி எழுப்பாமை அவர்களும் கூட்டு குற்றவாளிகள்தானோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது.
அதிலும் குறிப்பாக ஆறுமுக நாவலர் இந்த குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது. 

சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் கொட்டி தீர்த்த கனமழை

maalaimalar சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்றதாக கூறப்பட்டாலும், கிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வருவதால் பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, வருகிற 12–ந்தேதி வரை தமிழகத்தில் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை தொடரும் என்றே தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

திரையரங்கில் 100% பார்வையாளர்கள் இருப்பது தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு

BBC :மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படம் ரிலீஸ்: நடிகர் விஜய், தமிழக அரசுக்கு மருத்துவர் எழுதிய ஆதங்கப்பதிவு.. திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளுறை மருத்துவராக பணியாற்றும் ஒருவர் மிகவும் உருக்கமான கடிதத்தை தமிழக அரசுக்கும் நடிகர் விஜயக்கும் எழுதியிருக்கிறார்.
விஜய்

இந்த கடிதத்தை தனது முகநூல் பக்கத்திலேயே அந்த மருத்துவர் பதிவிட்டிருந்தபோதும், அவர் எழுதியுள்ள கடிதம் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மருத்துவர் பதிவிட்டுள்ள கடிதத்தின் விவரம்: அன்புள்ள விஜய் சார் மற்றும் மதிப்பிற்குரிய தமிழக அரசு,

நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக இருக்கிறோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் களைப்படைந்து இருக்கிறார்கள். சுகாதார ஊழியர்கள் களைப்படைந்துள்ளனர். காவல் அதிகாரிகள் சோர்வடைந்து விட்டனர். சானிட்டரி தொழிலாளர்கள் சோர்வாக உள்ளனர்.

அழகிரி -ஸ்டாலின்: உள்ளுக்குள் நடக்கும் உண்மைகள்!

minnambalam : திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு க அழகிரி ஜனவரி 3 ஆம் தேதி மதுரையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால், ‘நான் என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று அந்தக் கூட்டத்தில் பேசியிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சஸ்பென்சை உண்டாக்கியிருக்கிறது.
அழகிரி -ஸ்டாலின்:  உள்ளுக்குள் நடக்கும் உண்மைகள்!

கடந்த தீபாவளி அன்று காலை தனது ஆதரவாளர்கள் பலருக்கும் போன் செய்த முக அழகிரி... "இன்னும் சில வாரங்களில் நாம செயல்வீரர்கள் கூட்டம் நடத்தணும். அதற்கான ஏற்பாடுகள்ல இறங்குங்க"என்று சொன்னதை அடுத்து நீண்ட நாட்களாக அரசியல் செய்ய முடியாமல் வெம்பி கிடந்த அழகிரி ஆதரவாளர்கள் வெடித்து கிளம்பினார்கள்.

அழகிரி நடத்தும் ஆலோசனைக் கூட்டம் என்றதும் வழக்கம்போல அவர் கலைஞர் திமுக என்ற பெயரில் கட்சி தொடங்கப் போகிறார் என்று தகவல்கள் பறந்தன. ஆனாலும் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆலோசனை கூட்டத்தில் தான் முடிவு செய்வேன் என்றும் பாஜகவில் சேரப் போவதாக சொல்வது காமெடி என்றும் தெரிவித்து வந்தார் அழகிரி.

இலங்கை பேராதனையில் தலிபானிசம் வளர்வதற்கு இடமளிக்கக் கூடாது.

Image may contain: 13 people, text that says 'Muslim Majlis University of Peradeniya Executive Committee 2021 President Faeulty ofSelence Malhmeed General5 A.M.MFarees ierTreasure Tarulty Managemen Saculty Engineering Saheel Faculty Paculty Mehamed Ayman Faculty Mediciae MJA Yanzmin Assistant cretary AbdarRahman Munawver Faculty EArts Management .J.M.Dilshad scretary Feeulty MAMSS M.H.M isham Finanela Mafasa Faculty A.Ladies Shakir Agriculture FacultyofAr M.M.Aski Reouree Feeulty Ahamed Auditer Webmaster Seience Farulty Engineering Abdul Haq Lareena மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் பேராதனை பல்கலைக்கழக மஜ்லிஸ் இப்படி அதன் பெண் அங்கத்தவர்களின் முக அடையாளத்தை மறைத்து வெளியிட்டிருப்பதானது வெட்கக்கேடானதும் பிற்போக்குத் அடிப்படைவாதம் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிலையும் என்ற துரதிருஷ்டவசமான உண்மையையே சொல்லாமல் சொல்லி நிற்கின்றது.'

Rishvin Ismath : · இது சஹ்ரான் நியமித்த NTJ யின் நிர்வாகக் குழு என்று நினைத்துவிட வேண்டாம், மாறாக இது இலங்கையின் முதன்மை நிலை அரச பல்கலைக் கழகமான பேராதனை பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் நிவாகக் குழு, அதுவும் 2021 ஆம் ஆண்டிற்கான நிர்வாகக் குழு. பெண்களின் முகத்தைக் கூட காட்ட முடியாத அளவிற்கு பலமான நிலையில் சஹ்ரானிஸம் பேராதனை பல்கலைக் கழகத்திற்குள் இருக்கின்றது என்பது ஆபத்தானது. இந்த சஹ்ரானிஸத்தை நியாயப் படுத்துவதற்காக "குறித்த பெண்கள் விரும்பாததால் தான் அவர்களின் புகைப்படங்களை போடவில்லை" என்று இலகுவான நொண்டிச் சாட்டை சொல்லிவிடக் கூடும், பெண்களில் ஒருவர் கூட தமது புகைப்படத்தை வெளியிட விரும்பாத அளவிற்கு அவர்களின் மனிநிலை மாற்றப் பட்டு இருக்கின்றது என்றால், அது மிகவும் திட்டமிடப்பட்ட ரீதியான அடிமைத்தனாமகவே இருக்க வேண்டும். ஒரு சஹ்ரான் மரணித்து விட்டான், ஆனால் சஹ்ரானிஸம் இன்னுமும் உயிருடன் இருக்கின்றது, வளர்கின்றது.

இந்தியாவில் வரும் 13-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி;விரைவில் யார் யாருக்கு என்ற பட்டியல்

  daylitythanthi :    டெல்லி கொரோனாவால் உலகமே பாதிக்கபட்டு உள்ள நிலையில் . மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகள் உலகின் பல நாடுகளிலும் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை 29 நாடுகள் தொடங்கியுள்ளன. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளன.வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் தொடங்கியுள்ளது; மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்காவில் சில நாடுகள்; மற்றும் ரஷியா ஆகியவை தொடங்கி உள்ளன. இந்தியாவில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு  தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்த பின்னர் தடுப்பூசி செயல்முறை தொடங்கி உள்ளது. 2021ஆம் ஆண்டின் மத்திக்குள், இந்தியா 30கோடி  பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது. 

புதிய நாடாளுமன்ற கட்டட வழக்கு- உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

nakkeeran : புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இருப்பதாக ராஜீவ் சூரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு இன்று (05/01/2021) உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது. அனைத்து வாதங்களையும் கேட்ட பின்னர், இன்றே தீர்ப்பும் வழங்கப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசி விலை அரசுக்கு ரூ.292 ஆக நிர்ணயம் - சீரம் நிறுவனம் அறிவிப்பு

maalaimalar :புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றன இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம், தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா கூறுகையில், ‘தடுப்பூசியின் விலை மலிவாகவும், அனைவரும் வாங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனவே இந்திய அரசு 3 முதல் 4 அமெரிக்க டாலர் (ரூ.219-292) என்ற மலிவு விலைக்கு தடுப்பூசியை பெறும். மிக அதிக அளவில் வாங்குவதால் இந்த விலைக்கு கொடுக்கப்படும்’ என்று கூறினார்.

முழு நீலகிரி மாவட்டத்திலும் சிலோன் அகதிகள் என்ற மலையக மக்களின் போராட்டங்களினால் சிவா நிபந்தனையின்றி ....

Image may contain: sky and outdoor
Image may contain: sky and outdoor
Murugan Sivalingam :; · சாஸ்திரி - சிறிமா வதைப்படலம் பழையன நினைத்தல் - 3 : சென்ற வாரப் பதிவில் சாஸ்திரி - சிறிமா வதைப் படலம் பற்றிய ஆய்வு நூல்களை அறிந்து நூற்றுக்கணக்கான அவதானிப்புக்களும்¸ கருத்துப்பகிர்வுகளும் முகநூல் நண்பர்களிடமிருந்து கிடைத்தமை மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரிய செயலாகும். இன்று நீலகிரி மாவட்டத்தில் கோத்தக்கிரியில் 1984 களில் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் அமைத்து செயற்பட்ட அமரர் இர.சிவலிங்கம் பற்றி நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததொன்றாகும்.
அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் இர.சிவலிங்கம் அவர்களும் திருச்செந்தூரன் அவர்களும் 1960களில் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள்.
மாணவர் மத்தியில் சமூக உணர்வுகளை உருவாக்குவதில் இருவரும் தீவிரமாக ஈடுபட்டனர். 
இருவரும் தமிழகத்தில் படித்து வந்த பட்டதாரிகளாவர். சிவா ஆங்கிலத்திலும்¸ தமிழிலும் பேச்சாற்றல் மிக்கவர். செந்தூரன் கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். இவரும் சிறந்த பேச்சாளர் ஆவார். இவர்கள் இருவரும் மலையக சமூகத்தின் கண்ணீரைக் கொட்டி மாணவர்களின் பாடப் புத்தகங்களை நனைத்தவர்கள். பள்ளி பாடங்களுக்கப்பால் மலையக சமூகத்தின் எழுச்சிகள் பற்றிப் போதித்தனர். 
நுவரெலியா¸ பதுளை¸ கண்டி¸ மாத்தளை ரத்தினபுரி என முழு மலையகத்திலும் இவர்களின் மூளைச் சலவையால் ஓர் ஆவேசப் பரம்பரை… ஓர் ஆத்திர பரம்பரை குமுறிக் கொந்தளிக்கத் தொடங்கியது.

*டி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்.. ஆந்திராவில்

Image may contain: 2 people, people standing, text that says 'P39P0069'

Maha Laxmi : · *டி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்* டி.எஸ்.பி. ஆன மகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிப்பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார். இந்நிலையில் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். அப்போது ஜெஸ்ஸி பிரசாந்தியின் வருகையைக் கண்ட ஷியாம் சுந்தர், பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தனது மகளுக்கு சல்யூட் அடித்தது தொடர்பாக கூறியுள்ள ஷியாம் சுந்தர், தனக்கு இது பெருமையான விஷயம் என தெரிவித்துள்ளார். வீட்டில் தான் அப்பா-மகள் உறவு எல்லாம் என்றும், பணியின்போது மகள் தனது உயர் அதிகாரி என்றும் அவர் பெருமிதம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள ஜெஸ்ஸி பிரசாந்தியும், தனக்கு இது பெருமையான நிகழ்வே எனக் கூறியுள்ளார்

தேனியில் ஆணி பிடுங்கும் திருவிழா!' டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கிவைத்தார்!


Nail Picking Festival theni

nakkeeran - சக்தி : தேனி மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து 'ஆணி பிடுங்கும் திருவிழா' என்ற பெயரில் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் இந்த களப்பணியை தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். தேனி, கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் களப்பணி நடத்தினர். இதன் விளைவாக தமிழகத்தில் மரங்களில் விளம்பரப் பதாகைகள் இல்லாத முதல் நகராட்சியாக தேனி நகராட்சியை மாற்றினர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களில் இருந்து ஆணிகளைப் பிடுங்கியுள்ளனர். தேனி மாவட்ட தன்னார்வலர்களின் 'ஆணி பிடுங்கும் திருவிழா' தொடக்க நிகழ்ச்சியை திண்டுக்கல் மற்றும் தேனி சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார். 

ஜூலியன் அசாஜ்சே வை நாடுகடத்த முடியாது! பிரித்தானிய நீதிமன்று அதிரடித்தீர்ப்பு!

ilankainet.com :

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் பத்திரிகையாளருமான ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது மீது பிரிட்டன் நீதிமன்றங்கள் ஜனவரி 4 திங்கட்கிழமை முடிவு செய்யும். அவர் போர் குற்றங்கள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள், சித்திரவதை மற்றும் ஏனைய மனித உரிமை துஷ்பிரயோகங்கள், அரசு ஊழல் மற்றும் உளவுபார்ப்பை அம்பலப்படுத்தியதற்காக தேசதுரோக சட்டத்தின் கீழ் அமையும் குற்றச்சாட்டுக்களுக்காக ஆயுள் தண்டனையை முகங்கொடுக்கிறார்.

நாடு கடத்துவதற்கான முடிவு ஏறத்தாழ முழுமையாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த விசாரணையானது, அசான்ஜின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்கிய ஒரு போலியான சட்ட கேலிக்கூத்தாக உள்ளது. இதன் தலைமையிலுள்ள மாவட்ட நீதிபதி வனசா பரைட்சர் இந்த வழக்கு விசாரணை நெடுகிலும் அசான்ஜைக் கண்கூடாகவே விரோதமாக கையாண்டுள்ளார். அப்பெண்மணியின் மேலதிகாரி, Lady Emma Arbuthnot, விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களில் தனிப்பட்டரீதியில் பெயரிடப்பட்ட ஓர் அரசு பிரமுகருடன் திருமணம் ஆனவர்.