ஜெயலலிதாவின்
உடல்நிலை விஷயத்தில் சசிகலா இப்போதைக்கு எந்த ரிஸ்க்கையும் எடுக்க
விரும்பவில்லை' என அப்பல்லோவில் நடப்பதைப் பற்றி நம்மிடம் மனம் திறந்தார்
அ.தி.மு.க.வின் முக்கியமான தலைவர் ஒருவர்.""ஜெ.
உத்தரவுகளை பிறப்பிக்கிறார் என நாங்கள் கீறல் விழுந்த ரிக்கார்டு போல
சொல்லி வந்ததெல்லாம் உண்மையில்லை. ஜெ.வுக்கு நுரையீரலில் வலுவான தொற்று
கெட்ட சளியாக நீர் கோர்த்து இதயப் பகுதிகளில் பாய்ந்தது உண்மை.
நுரையீரலிலும் இதயத்தின் தசை பகுதிகளி லும் உருவான நோய்த்தொற்று மிக மோசமாக
ஜெ.வை பாதித்தது. அவருக்கு இதயத்துடிப்பை வேகமாக்கும் பேஸ்மேக்கரும்,
தொண்டையின் இடது பாகத்தின் வழியாக டிராக்கோஸ்டமி எனும் மூச்சுக்குழாய்
பொருத்தப்பட்டு... அதன் வழியே வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை
சுவாசக்கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதும் உண்மை.மிகுந்த
வலியைத் தரும் தொண்டை, மூச்சுக் குழாய்களை ஜெ. தனது இடது கையால்
அகற்றக்கூடும் என்பதற்காக மயக்க மருந்துகளால் அவரது இடது கை முழுவதுமாக
செயலிழக்க வைக்கப்பட்டது. முழுவதும் மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டிருந்த
ஜெ.வுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் மூன்று விதமான நோய் எதிர்ப்பு
மருந்துகளை தனித்தனியாகக் கொடுத்தார்.
அந்த மூன்று மருந்துகளும் ஜெ.வின்
உடம்பில் உள்ள நோய்க் கிருமிகளிடம் தோற்றுப் போயின. பிறகு, அந்த மூன்று
மருந்துகளையும் ஒன்றாக சேர்த்து ரிச்சர்டு பேல் தயாரித்து ஜெ.வின் உடலில்
செலுத்தினார். அந்த மருந்துகள் வேலை செய்தன. ஜெ.வின் நுரையீரல் தொற்றும்
இதயத் தொற்றும் குணமாகத் தொடங்கின. படிப்படியாக ஜெ.வின் உடலில் முன்னேற்றம்
ஏற்பட்டது.

அவருக்கு
அளிக்கப்பட்ட செயற்கை சுவாசக்கருவி முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.
அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அவரது இடது கையை
முழுவதுமாக சகஜநிலைக்கு கொண்டுவந்துவிட்டனர். அவரை கால்களை கீழே வைக்கச்
சொல்லி சிகிச்சை அளித்தனர். அப்போது அவர் இடுப்பு வலிப்பதாக சொன்னார்.
அதற்கும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்பொழுது நார்மலாக இருப்பதற்கு
எம்.ஜி.ஆருக்கு ஜப்பான் டாக்டர் கானு போல ஜெ.வுக்கு லண்டன் டாக்டர்
ரிச்சர்டு பேல் சிகிச்சையளித்து சாதனை புரிஞ்சிருக்கிறார். இனி ஜெ.வை வேறு
ஒரு அறைக்கு டாக்டர்கள் மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். அந்த அறை
தற்பொழுது ஜெ. சிகிச்சை பெறும் அறையை விட பெரிய அறை. ஜெ.வை லண்டனுக்கோ,
சிங்கப்பூருக்கோ கொண்டு செல்லும் ஆலோசனை எல்லாம் இப்போதைக்கு இல்லை. புதிய
அறைக்கு கொண்டு சென்ற பிறகு நேரடியாக போயஸ் கார்டனுக்கு சசிகலா ஜெ.வை
கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்'' என்கிறார் மிகவும் விளக்கமாக.சசிகலா
உறவினர்களோ அ.தி.மு.க. தலைவர் சொன்ன விஷயத்தை வேறு விதமாக சொன்னார்கள்.
""அம்மாவை இதுவரை சிறப்பு வார்டுக்கு மாற்றவில்லை. தற்போது சிகிச்சை பெறும்
இரண்டாவது மாடியில் ஏழு அறைகளை தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.
அப்பல்லோவின் மூன்றாவது மாடிக்கோ நான்காவது மாடிக்கோ கொண்டு செல்லும்
யோசனையை சசிகலா வேண்டாம் என சொல்லி விட்டார்.அப்பல்லோவின்
இரண்டாவது மாடியில் ஜெ. தற்பொழுது சிகிச்சை பெறும் அவசர சிகிச்சைப் பிரிவு
உள்ளது. அத்துடன் ஆபரேஷன் தியேட்டர், பரிசோதனைக் கூடங்கள் என சகல
வசதிகளும் உள்ளன. எனவே மற்ற இடங்களுக்கு ஜெ.வை கொண்டு செல்வதை விட இந்த
ப்ளோரிலேயே ஜெ.வை தங்க வைத்து சிகிச்சையைத் தொடரலாம் என்பது சசியின்
திட்டம்'' என்கிறார்கள் அவரது உறவினர்கள்.இதற்கிடையே
அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சசிகலா
ஒரு பெரும் தொகை கொடுத்து உதவியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மகா
கும்பாபிஷேகத்துக்குப் பிறகு அப்பல்லோ மருத்துவமனை வளாகம் தொடர்ந்து
பூஜைகளுடன் கூடிய விழா நடக்கும் இடமாக மாறி வருகிறது. ""இந்தப் பூஜைகள்
முடிந்ததும் ஜெ.வை வேறு அறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். ""வருகிற
14 அல்லது 16ஆம் தேதி ஜெ.வை போயஸ் கார்டனுக்கு கொண்டு சென்றுவிடுகிவோம்''
என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் சசியின் உறவினர்கள்.அப்பல்லோ
டாக்டர்களோ, செயற்கை சுவாசத்திலிருந்து ஜெ. இன்னமும் முழுமையாக
வெளிவரவில்லை. தற்பொழுது பகல் நேரத்தில் மட்டும் 8 மணி நேரம் தொடர்ந்து
செயற்கை சுவாசமில்லாமல் இயற்கையாக சுவாசிக்க வைக்கிறோம். தூங்கும் நேரம்
உட்பட மீதி 16 மணி நேரமும் செயற்கை சுவாசத்தில்தான் ஜெ. இருக்கிறார். அவர்
தொடர்ந்து இயற்கையாக சுவாசிக்கிறாரா என 72 மணி நேரம் பரிசோதனை செய்த
பிறகுதான் அவர் செயற்கை சுவாசத்திலிருந்து முழுவதுமாக வெளியே வந்ததாக
மருத்துவர்கள் அறிவிப்பார்கள். அதற்குப் பிறகுதான் அறை மாற்றம், போயஸ்
கார்டனுக்கு போவது, லண்டனுக்கு போவது எல்லாம் நடக்கும்'' என்கிறார்கள்.நம்மிடம், ""ஜெ. உடல்நலம் தேறிவிட்டார். விரைவில் அவர் பேசுவார்'' என்கிறார் அ.தி.மு.க. அமைச்சரான பாண்டியராஜன். ""அம்மா
விரைவில் போயஸ் கார்டன் திரும்புவார்'' என்கிறார் டாக்டர் ராஜ மாதங்கி.
பிரிட்டன் தமிழர் துரைக்கண்ணன் தன்னிடம் டாக்டர் ரிச்சர்டு பீலே, "முதல்வர்
உடல்நலம் தேறியுள்ளார்' எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.இவர்கள் சொல்றது எல்லாம் அட்சரம் பிசகாமல் அப்படியே நடக்க வேண்டும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.
-தாமோதரன் பிரகாஷ் நக்கீரன்,இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக