சனி, 8 பிப்ரவரி, 2020

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவு ... உங்களுக்கு மனதை உறுத்தி இருக்க வேண்டும்.

சிவசங்கர் எஸ்.எஸ் : மாண்புமிகு அமைச்சர் (டாக்டர்) விஜயபாஸ்கர்,
உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இந்நேரம் பதவி விலகி இருப்பீர்கள். ஆனால் வாய்ப்பே இல்லை.
டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவு உங்களுக்கு மனதை உறுத்தி இருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி வகையறாவான உங்களுக்கு அதெல்லாம் உறுத்தவே உறுத்தாது.
நாடு எக்கேடு கெட்டால் என்ன, நாட்டு மக்கள் எப்படி சீரழிந்தால் என்ன, என் கல்லா தான் முக்கியம் என ஆட்சியை நடத்தும் கல்லாபெட்டி பழனிசாமியின் கம்பெனி தானே நீங்கள்...
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, டாக்டர் லட்சுமி நரசிம்மன் அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் வழி நடத்தினார். அதற்கு அவரைப் பழி வாங்கினீர்கள். ராமநாதபுரத்திற்கு மாற்றல் செய்தீர்கள். அவர் அசரவில்லை. தனக்காக கவலைப்படவில்லை. தன்னோடு போராடியவர்களுக்கும் மாறுதல் வந்தது தான் அவருக்கு வருத்தம் தந்தது.
சங்கத்து நிர்வாகிகள் மாறுதல் செய்யப்படுவது அரசியல் வழக்கம் என்பது அவரும் அறிவார். ஆனால் அதைத் தாண்டி 200க்கு மேற்பட்டோர் மாறுதல் செய்யப்பட்டது தான் அவருக்கு மன அழுத்தம் வர காரணம். தன்னால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விட்டார்களோ என்ற வருத்தம் தான் அது.

காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை


தினகரன் : சென்னை: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தபின்னர், காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவர்கள், பிரிவினைவாத தலைவா்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.  இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை அடக்குமுறை சட்டமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல்- எந்தக் கேள்வியும் கேட்காமல் முன்னாள் முதல்வர்களையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பது, ஜனநாயகத்திற்கு கைவிலங்கும் கால்விலங்கும் போடும் கொடுமையான நிகழ்வு ஆகும்.

சினிமா வாய்ப்புக்காக - லீக்கானது ரகசிய ஆடியோ!


 வெப்துனியா :  பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார். தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சனம் ஷெட்டி. இதையடுத்து பேட்டி ஒன்றில் இது குறித்து கூறிய தர்ஷன்..... " ஆம் எங்கள் இருவரும் நிச்சயம் நடந்தது உண்மை தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்திருந்தேன். ஆனால், நான் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது பிகினி உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

2 கோடியை தாண்டிய கையெழுத்து: ஸ்டாலின்


மின்னம்பலம் : சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டோர் குறித்த தகவலை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கியது. சிஏஏவின் பாதிப்புகளை விளக்கி ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் கையெழுத்து பெறப்பட்டு வந்தது. இந்த கையெழுத்துக்கள் அனைத்தும் திமுக கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

7 பேரும் விரைவில் விடுதலை! மத்திய அரசிடம் ஆலோசிக்கும் கவர்னர் மாளிகை!

7 tamilsnakkheeran.in - இரா. இளையசெல்வன் : சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் சுதந்திரமாக முடிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதால் அவர்களின் விடுதலையில் வெளிச்சம் உருவாகியிருக்கிறது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கும் நிலையில் விடுதலை விவகாரத்தில் முக்கிய ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

டெல்லி Exit poll ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்

BBC :டெல்லி சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 54.15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டமன்ற தேர்தலில் அதாவது 2015 தேர்தலில் 67.12 சதவீதமாக இருந்தது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில், கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றுமென கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி அனைத்து கருத்திக்கணிப்புகளிலும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.
டைம்ஸ் நவ் கருத்து கணிப்பானது ஆம் ஆத்மி 44 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றுமென்றும், பா.ஜ.க 26 தொகுதிகளை கைப்பற்றுமென்றும் கூறுகிறது.
நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு ஆம் ஆத்மி 50 - 56 இடங்களை கைப்பற்றும் என்றும் பா.ஜ.க 10 - 14 இடங்களை கைப்பற்றுமென்றும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்லாது என தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் -ஜான் கி பாத் கருத்து கணிப்பு ஆம் ஆத்மி 48 -61 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், பா.ஜ.க 9 -21 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 0- 1 தொகுதியில் வெல்லும் என்றும் கூறுகிறது.
ஏ.பி.பி மற்றும் சி - வோட்டர் கருத்து கணிப்பானது ஆம் ஆத்மி 49- 63 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும், பா.ஜ.க 5 - 19 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும், காங்கிரஸ் 0 -4 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும் கணித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு : சந்தேகத்திற்கிடமானவர்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க சீனா உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு : சந்தேகத்திற்கிடமானவர்களை  தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க  சீனா அதிரடி உத்தரவு தினத்தந்தி : சீனாவின் வுகான் நகரில் சந்தேகத்திற்கிடமான அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளையும் சுற்றி வளைத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க சீனா உத்தரவிட்டு உள்ளது. வுகான்< கொரோனா வைரஸ் சீனாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தின் தலைநகரமான வுகான், தமிழக தலைநகர் சென்னையை விட பெரிய நகரம். கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் வுகான் நகரை விட்டு இப்பொது யாரும் வெளியே வரவோ அல்லது உள்ளே செல்லவோ முடியாத நிலை உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுகான் நகரத்தில், சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில், இப்படி அறிவிக்கப்படும் 6-வது முறை என்கிற தகவல்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
மத்திய சீனாவில் உள்ள அழகான நகரங்களில் ஒன்றுதான் வுகான். இது ஹூபே மாகாணத்தின் தலைநகரம்.  இந்த நகரத்தில்  இருந்துதான் முதன் முதலில் கொரோனோ வைரஸ்  கண்டறியப்பட்டது.  இங்கிருந்துதான் உலகம் முழுவதும் பரவியது என்பதால் இந்த நகரத்தை இப்போது மக்கள் வெறுக்கத் தொடங்கி உள்ளனர்.

மதிமாறன் : ரஜினிகாந்தை பார்த்து திமுக அல்ல டி.ராஜேந்தர் கூட பயப்படமாட்டார்


jkநக்கீரன் : குடியுரிமை சட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு என்றால் நான் முதலில் குரல் கொடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எழுத்தாளர் வே. மதிமாறனிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின்அதிரடியான பதில்கள் வருமாறு,
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நீங்கள் பேசி வருகிறீர்கள். அதற்கு எதிராக நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறீர்கள். குடியுரிமை சட்டத்திருத்தத்தை பற்றி ரஜினி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் கழுகு: ரஜினிக்கு டிக்... விஜய்க்கு செக்!

; விஜய் வீட்டில் ரெய்டு நடந்தபோது...விஜய் - ரஜினிvikatan - கார்த்திகேயன் மேடி - சு.குமரேசன் - என்.ஜி.மணிகண்டன் - கே.ஜெரோம் - வி.ஶ்ரீனிவாசுலு 2021... பி.ஜே.பி ஆட்டம் ஆரம்பம் ‘‘ஜனரஞ்சகமாகத் தொடங்கிய ஜனவரி, பிகில் கிளப்பும் பிப்ரவரி... என 2020 அமர்க்களமாகப் போகிறதே!’’ என்று பரபரப்பான ‘இன்ட்ரோ’வுடன் சிறகுகள் படபடக்க வந்தமர்ந்தார் கழுகார். இளநீர்ப் பாயசத்தைப் பருகக் கொடுத்தோம். ரசித்து ருசித்த கழுகார், ‘‘வருமானவரித் துறை பலருக்கும் பாயசம் ஊற்றிக் கொண்டிருப்பதால், எனக்கும் பாயசம் அளித்தீரோ?’’ என்ற கிண்டலுடன் செய்திக்குள் தாவினார். ">விஜய் வீட்டில் ரெய்டு நடந்தபோது...
‘‘உம்மிடம் நாங்கள் எதிர்பார்க்கும் பாயசம் என்னவென்று உமக்குத் தெரியாதா?’’
‘‘சினிமா ஃபைனான்ஷியர், கோபுரம் ஃபிலிம்ஸ் உரிமையாளர், சினிமா விநியோகஸ்தர் என்று பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான அன்புச்செழியனின் மதுரை அலுவலகம், வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை ரெய்டு, சினிமா உலகையும் தாண்டி அரசியல் அரங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. பிப்ரவரி 5-ம் தேதி, மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள அவருடைய தலைமை அலுவலகம், காமராஜர் சாலையில் உள்ள அவரின் நண்பர் சரவணனின் வீடு, கீரைத்துறையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் சென்னையிலிருந்து வந்த ஐ.டி டீம் ரெய்டு நடத்தியது. அவரது சென்னை தி.நகர் வீடும் சோதனையிலிருந்து தப்பவில்லை.’’
‘‘அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் அவர் நெருக்கமானவர்தானே?’’

சீனாவில் கொரோனா வைரஸ் 717 பேர் இதுவரையில் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு தினத்தந்தி :  கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக உயர்ந்துள்ளது. பெய்ஜிங், சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

ரஞ்ஜீத் பச்சன் (40) '' விஸ்வ ஹிந்து மகா சபா '' தலைவரை ஆள் வைத்து சுட்டுகொன்ற இரண்டாவது மனைவி .


Mohamed Rafi : உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்த ரஞ்ஜீத் பச்சன் (40) '' விஸ்வ ஹிந்து மகா சபா '' என்ற அமைப்பின் தலைவர். சென்ற
ஞாயிற்றுக்கிழமை வாக்கிங் சென்ற போது இவரை அடையாளம் தெரியாத நபர் மண்டையில் சுட்டுக்கொன்று விட்டார்.
வழக்கம் போல முஸ்லிம்கள் மீது பழி சுமத்தப்பட்டது. இவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்ததாகவும், இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் செய்திருப்பார்கள் என்றும் இவர் மனைவி களிந்தி சர்மா தெரிவித்தார்.
ரூ. 50 லட்சம் பணம், வீடு , இவர் மனைவிக்கு அரசு வேலை வழங்கும்படி சங்கீகள் கோரிக்கை வைத்தார்கள்.
இந்தநிலையில் போலீஸ் விசாரணையில், செத்துப்போன ரஞ்சித் பச்சனின் இரண்டாவது மனைவி ஸ்மிருதி ஸ்ரீவத்சவா தன் கணவரை விவகாரத்து செய்துவிட்டு தேவேந்திரா என்பவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். விவகாரத்துக் கேட்டு 2016ல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. விவகாரத்து வழங்க ரஞ்சித் பச்சன் மறுத்து வந்துள்ளார்.

சில்லுக்கருப்பட்டி .. A Wonderful Feel Good Movie

Bilal Aliyar : அரைவட்டமாக கரிய நிறத்தில் இருக்கும் கருப்பட்டியின்
சுவையை நாம் உணர முடியாது .. அதே நேரத்தில் அதை சில்லு சில்லாக சிறிய பாகங்களாக உடைத்து சில்லுக்கருப்பட்டியாக்கி வாயில் போட்டால் அதன் சுவையை நீண்ட நேரம் உணர முடியும் ... அதைப்போல தமிழ் சினிமாவில் பல குறும் படங்களை ஒன்றிணைத்து, தித்திப்பான ஒரு உணர்வை, ஹைக்கூ கவிதைகளாக மாற்றி சில்லுக்கருப்பட்டியாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹலீதா சமீம் ...
சின்ன சின்ன காட்சியமைப்புகள், வீரியமான எளிய வசனங்களை போகிற போக்கில் பேசுவதன் மூலம் நடைமுறை வாழ்வின் சிக்கல்களை, எதார்த்த நிலையை வெகு இயல்பாக பேசுகிறது இந்த படைப்பு... நாடகத்தன்மையுடன் உணர வைக்கும் சில காட்சியமைப்புகளை தாண்டி உறவுகளுக்குள் நிகழும் உணர்வு பூர்வமான எதிர்பார்ப்புகளை அவரவர் பார்வையில் நிறுத்தி பேச வைக்கிறது இந்த படம்....
சமீபகால தமிழ் சினிமாவில் 25 வயது நிரம்பிய நாயகிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டதும், முதிர்பருவ உணர்வுகளை நுணுக்கமாக காட்சிப்படுத்தியதும், காதல், திருமண உறவு, சமூக அடுக்குகளில் பெரிய இடைவெளியுடன் கூடிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசுவதும் மிகுந்த கவனிப்பை பெறுகிறது..
A Wonderful Feel Good Movie

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

விஜய் வீட்டு ஐடி ரெய்டில் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யவில்லை.

எவ்வளவு முதலீடு tamil.oneindia.com : சென்னை: நேற்று நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் முடிவில் அவரின் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவரின் வீட்டில் இருந்து ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. நேற்றும் நேற்று முதல் நாளும் தமிழகம் முழுக்க 38 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. சென்னையில் ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. 
ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல் நேற்று நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது.
இந்த சோதனையின் முடிவில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஒரு ரூபாய் கூட விஜய் வீட்டில் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றவில்லை. அவரிடம் பொதுவான விசாரணை மட்டும் நடத்தப்பட்டது.

7 பேர் விடுதலையில் முடிவு எடுக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது- மத்திய அரசு

மாலைமலர் : சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதன் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கவர்னர் அமைதியாக உள்ளார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நளினி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக அமைச்சரவை எங்களை (7பேரை) முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்து தீர்மானம் இயற்றி பல மாதங்களாகியும், அதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இதனால், நாங்கள சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை நீதிபதிகள் தாமாக முன்வந்து ஒரு எதிர்மனுதாரராக சேர்த்தனர்.
இந்த வழக்கிற்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

குழந்தையை காப்பாற்ற 360 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த கர்நாடக ஆம்புலன்ஸ்

குழந்தையை காப்பாற்ற 360 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மாலைமலர்:  குழந்தையின் உயிரை காக்க 360 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 20 நிமிடத்தில் டிரைவர் கடந்து சென்றதால், அக்குழந்தைக்கு டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த பிறந்து 40 நாட்களே ஆன சைப்புல் அஸ்மான் என்ற குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தைக்கு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் ஆபரே‌ஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக அந்த குழந்தையை ஏற்றிக் கொண்டு மங்களூருவில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்புலன்ஸ் புறப்பட்டது. அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற போலீசாரும் ஒத்துழைத்தனர்.

அரசு மருத்துவ மனைகளை அதானிக்கு கொடுக்க அமைச்சர் விஜபாஸ்கர் கொடுத்த அழுத்தத்தால் மருத்துவர் மரணம்?

Don VS : அரசு மருத்துவ சங்க தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் அவரகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அதிகமான புற அழுத்தத்தினால் ஏற்பட்ட மாரடைப்பால் 52 வயதில்
கொல்லப்பட்டிருக்கிறார்.
என்ன புற அழுத்தம்?
இரண்டு வருடங்களாக அரசு அவர் பார்த்த வேலைக்கு சம்பளம் தரவில்லை ; கட்டாய டிரான்ஸ்பர் ; அதிகப்படியான பணி நெருக்குதல்.
ஏன்? என்ன காரணம்?
அமைச்சர் விஜயபாஸ்கர் ஒத்துக்கொண்டு கையெழுத்து போட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி போராடியதால்.
அரசு மருத்துவமனைகளை அதானிக்கு கொடுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருந்ததால்.
அட, நமக்கு இதுவா முக்கியம், பாருங்க விஜயபாஸ்கர் சட்டையில சேறு ஒட்டிட்டு இருக்கு ; இன்னும் பாருங்க, விஜயபாஸ்கர் சைக்கிள்ல போறார்..
வாழ்க அமைச்சர் விஜயபாஸ்கர் ; வாழ்க எடப்பாடி பழனிச்சாமி

Bilal Aliyar : · குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க முடியாத உபி அரசை காப்பாற்ற கஃபில்கானை கூண்டில் ஏற்றினார்கள் அந்த நிலைமை தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என்று போராடிய மருத்துவர் லட்சுமி நரசிம்மனை இன்று இழந்து நிற்கிறோம். தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு ஸகாண்டிநேவியன் நாடுகளுடன் தான் ஒப்பிட பட வேண்டுமே தவிர மற்ற வடஇந்திய மாநிலங்களுடன் அல்ல என்று அரை நூற்றாண்டுகளாக எழுதிய பொருளாதார வல்லுனர்களின் கூற்றை, எடப்பாடி தலைமையிலான அடிமை அதிமுக அரசு மாற்றி வருகிறது... ஒரே இந்தியா என்று சொல்லி உத்திர பிரதேசத்தை போல தமிழகத்தை மாற்றி கொண்டிருக்கின்றனர்

கொரோனா: 20ஆயிரம் பேர் கருணைக் கொலை?

கொரோனா: 20ஆயிரம் பேர் கருணைக் கொலை?
மின்னம்பலம் : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 20,000 பேரைக் கொல்ல சீனா, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளி வந்தன.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொடர்பான பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்களும் பரவி வருகின்றன.
இதில், ”கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20,000 பேரை கருணைக் கொலை செய்யச் சீன நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் தினசரி 20 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும், சுகாதார ஊழியர்களைக் காப்பாற்றும் வகையிலும், 20,000 பேரைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியது. இதனை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 7ஆம் தேதியான இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கும்” என்ற தகவல் சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி வந்தது. இது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் ஆதீனம் !

மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் ஆதீனமா?மின்னம்பலம் : தருமபுரம் ஆதீனம் மேற்கொள்ளும் பட்டினப் பிரவேசத்தை நிறுத்த வேண்டும் என்று தி.க தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது ஆதினகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் டிசம்பர் 13ஆம் தேதி பொறுப்பேற்றார். வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்ற தருமபுரம் ஆதீனம், வெள்ளிப் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டார். அதுபோலவே திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி நடந்த பட்டினப்பிரவேச நிகழ்வில் அவர் கலந்துகொண்டார். இந்த நிலையில் மனிதர்கள் வைத்து பல்லக்கு தூக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு எதிர்ப்பு எழத் துவங்கியுள்ளது.

நேற்று வாடா.. இன்று வாப்பா.. பம்மிய திண்டுக்கல் சீனிவாசன்.. சிறுவனுடன் சமரசம்!


 /tamil.oneindia.com   : நீலகிரி: "நான் அமைச்சரின் செருப்பைக் கழற்றி விடுவதை எல்லாருமே வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.. இதை எல்லா டிவிகளிலும் ஒளிபரப்பினார்கள்.. நான் பெருத்த அவமானத்துக்கு உள்ளானேன்..
அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என பழங்குடியின சிறுவன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசில் புகார் தந்திருந்தார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிறுவன், அவரது தாய் உள்ளிட்டோரை அமைச்சர் நேரில் வரவழைத்து வருத்தம் தெரிவித்தார்.. இதையடுத்து அமைச்சர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக சிறுவனின் தாயார் கூறியுள்ளார்.
நேற்று முதுமலையில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.. நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, அமைச்சர் திரும்பி வரும் வழியில் கோயிலுக்குள் சாமி கும்பிட செல்ல நேர்ந்தது. அப்போது அவரது செருப்பை கழட்டிவிடும்படி அங்கிருந்த பழங்குடியின சிறுவனை கூப்பிட்டு சொன்னார்.. செருப்பு பக்கிள்ஸை சிறுவன் கழட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது.. "அந்த பையன் எனக்கு பேரன் மாதிரி" என்று சொன்னாலும் அமைச்சரின் விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை.. அதனால் பல்வேறு தரப்பில் அமைச்சர் மீது நடவடிக்கை கோரி புகார் தரப்பட்டு வருகிறது.

அன்புசெழியனை காப்பாற்றும் அமைச்சர்கள்!

 - madurai -நக்கீரன் : பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர். அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய தமிழ் திரைப்பட உலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பு இரண்டு முறை அன்புசெழியன் வீட்டில் சோதனை நடந்துள்ளது. ஆனால் ஒருமுறை கூட அவர் நேரில் ஆஜராகவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அன்புசெழியனுக்கு தமிழக அமைச்சர்கள் சிலர் அதிக செல்வாக்கு உள்ளது. இவர் மீது குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் அந்த அமைச்சர்கள் தலையிட்டு இவரை காப்பாற்றி விடுவார்கள். தற்போதும் அன்புசெழியனை அந்த அமைச்சர்கள்தான் காப்பாற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படப்பிடிப்புதளத்தில் பாஜக போராட்டம்... விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்தனர்!!

Fans rallied in support of VijayFans rallied in support of Vijaynakkheeran.in - சுந்தர பாண்டியன் : விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி 2 வது சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விஜய் வீட்டில வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் சூட்டிங் தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்து சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனையடுத்து தற்போது இன்று மீண்டும் என்எல்சி 2 வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சரவணசுந்தரம் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தை முற்றுகையிட்டு   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது  'மிகவும் பாதுகாப்பு பகுதி என்று கடும் கட்டுப்பாடுகள் உள்ள பகுதியான சுரங்க பகுதியில் படப்பிடிப்பு நடத்த   என்.எல்.சி நிர்வாகம் எப்படி  அனுமதி அளித்தது என்றும், விஜய்யின் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது போல், தங்களுக்கும் குடும்பத்துடன் உள்ளே சென்று  வீடியோ, படங்கள் எடுக்க  அனுமதிக்க வேண்டும் என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மன் மரணம்

hindutamil.in : அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி
நரசிம்மனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் (51) மாரடடைப்பால் இன்று காலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அண்மையில், 7 நாட்கள் நடந்த மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்களில் முக்கியமானவர் லட்சுமி நரசிம்மன். போராட்டத்தில் ஈடுபட்ட 120 மருத்துவர்கள் தொலைதூரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய லட்சுமி நரசிம்மன், ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

ரஜினிக்கு சலுகை சசிகலாவுக்கு தண்டனை ..: வருமான வரித் துறையின் " நேர்மை : "

ரஜினிக்கு உண்டு, சசிகலாவுக்கு கிடையாது: வருமான வரித் துறை!மின்னம்பலம் : ரஜினிக்கு அளித்தது போல சசிகலாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித் துறைக்கு தவறான தகவல் அளித்ததாக நடிகர் ரஜினிகாந்துக்கு 2005ஆம் ஆண்டு 66 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான ரஜினிகாந்தின் முறையீட்டை ஏற்று, அபராதத்தை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து வருமான வரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கடந்த வாரம் வாபஸ் பெற்றது.
“1 கோடிக்கும் குறைவான அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை கைவிடும்படி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் 2019, செப்டம்பர் 8ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படுகிறது” என அதற்கு வருமான வரித் துறை விளக்கம் அளித்தது.

ஜெயக்குமாரை நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை!

tnpsc group 4 exam jayakumar tomorrow egmore court பா. சந்தோஷ் பி.அசோக்குமார் - நக்கீரன் : டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக சுமார் 30- க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.  இதையடுத்து டிஎன்பிஎஸ்சி வழக்குகள் அனைத்தும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் ஜெயக்குமாரை நாளை (07/02/2020) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை (07/02/2020) காலை ஆஜர்படுத்தும் வரை ஜெயக்குமாரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் உயிரிழப்பு 630 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்குதல் ; சீனாவில் பலி எண்ணிக்கை 630  ஆக உயர்வு தினத்தந்தி :  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. பெய்ஜிங், சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

புல்லட் ரெயில் திட்டத்துக்கு ரூ.5,600 கோடி ஒதுக்கிய மத்திய அரசு

புல்லட் ரெயில் திட்டத்துக்கு ரூ.5,600 கோடி ஒதுக்கிய மத்திய அரசு
புல்லட் ரெயில்  மாலைமலர் : மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் 508.17 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புல்லட் ரெயில் திட்டப்பணிகளை தேசிய அதிவேக ரெயில் கழகம் மேற்கொள்கிறது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் ​​2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் புல்லட் ரெயில் திட்டத்தை முடிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாடேடிகள் 2.. வன்மங்களை கடந்து திரைவரை வந்து கண்களை கலங்கவைக்கும்

Thangaraj Gandhi : நாடேடிகள் 2 விமர்சனம் செய்யாமல் கடக்க முடியாது.
படம் முழுக்க பெரியார். அம்பேத்கர்.
சாதி மறுப்பு
இதை ஒடுக்கப்பட்ட நாங்கள் பேசிடலாம. ஏனென்றால் இரத்தமும் வலியும் உயிரும் என இழந்தது இரண்டாயிரம் ஆண்டுகள்.
ஆனால்,
இப்படத்தில் முக்குலத்து சமூகமே ஒன்று கூடி தங்களது கதா பாத்திரத்தை‌ ஏற்றுக்கொண்டு சாதிக்கு எதிராக சாதியற்றோராக இணையலாம் என‌ ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைத்திருப்பதைக் காணும் போது சூரியனைப் போல பூர்வக்குடிகளாய் ஜொலிக்கிறார்கள்.
முன்பு ஒருமுறை, படையாட்சி ராமதாஸ் மருத்துவர் அவர்கள் அருந்ததிய உள்இட ஒதுக்கீடுக்கு குரல் கொடுத்தார்.
உள்ளபடியே, ஆதித்தமிழர் பேரவையின்
அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாட்டில் கொங்கு ஈஸ்வரன் பங்கேற்று கவுண்டர்களும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என தன்னை முன்னத்தியாய் முன்னிருத்தினார்.
ஆக, தமிழர்கள் நாம் இணைவதில் மனத்தளவில் அளவில் உருத்தாக உள்ளோம்.

ரெய்டில் சிக்கிய நடிகர் விஜய்… மதுரையில் நடத்திய ரகசிய கூட்டம் காரணமா?

விஜய்vikatan.com - நமது நிருபர் : நடிகர் விஜய்யிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்த விசாரணையின் பின்னணியில் மதுரையில் நடைபெற்ற ரகசியக் கூட்டம் ஒன்று காரணமாகச் சொல்லப்படுகிறது. 2006-ல் வெளிவந்த `திருட்டுப் பயலே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் சக்சஸ் தயாரிப்பாளராக அறிமுகமான ஏ.ஜி.எஸ் நிறுவனம், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘எங்கேயும் காதல்’, ‘அனேகன்’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான நடிகர் விஜய் நடித்த `பிகில்’ திரைப்படம், வியாபார ரீதியாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலில் பட்டையைக் கிளப்பியதாகத் தகவல்கள் வெளியாகின. இதைப் பல முன்னணி சினிமா விமர்சகர்களும், பி.ஆர்.ஓக்களும் தங்களது சமூக வலைதளக் கணக்குகளில் பதிவிட்டிருந்தனர்.

வியாழன், 6 பிப்ரவரி, 2020

பெரியாரியம் என்பது அடிப்படை உண்மையை சொல்வது .. எது உண்மையோ அதை சொல்வதே திராவிடம்.

Devi Somasundaram : பெரியாரியம் என்பது ஆரியத்திற்கு எதிரானது என்று மட்டும் புரிந்து கொள்ளப் படுவதை தடுக்கப் படனும் .
பெரியாரியம் என்பது அடிப்படை உண்மையை சொல்வது ..
ஆரியம் எதை செய்யச் சொல்கிறதோ அதற்கு எதிரா செய்வது தான் திராவிடம் என்று சொல்வது அரைகுறைத்தனம் .அப்ப நாளைக்கு பாப்பான் வாயல சாப்டுன்னு சொன்னா அதுக்கு எதிரா வேற எதாலயாச்சுமா சாப்டுவோம் ..
திராவிடம் என்பது எது நிஜமோ அதை சொல்வது தான் .
பாப்பான் சாதி இருக்குன்னு சொல்வதால மட்டும் சாதிய எதிர்க்கல .சாதி என்பது நிஜமாவே கிடையாது அதனால தான் சாதி இல்லன்னு சொல்கிறோம் .
பாப்பான் தன்னை விட மேல்சாதி பொண்ணை அதை விட கம்மியான சாதிகாரன் கட்டக் கூடாதுன்னு சொல்றான் அதனால மேல்சாதி பொண்ணை கட்டுவது தான் சாதி ஒழிப்புன்னு சொல்வது பகுத்தறிவில்லை .
பெரியார் சாதி மறுத்து தான் கல்யாணம் செய்யச் சொன்னார் .அது மேல் சாதி பொண்ண கட்டுவதுன்னு அர்த்தம் இல்லை ..அப்படி சொன்னா அப்ப ஒடுக்கப் பட்ட சாதிப் பெண்களை பகுத்தறிவாளர் கட்டிக்ககூடாதுன்னு அர்த்தமா ? ..
சாதி மறுப்பை அடிப்படை அறிவியலில் இருந்து பேச பழகுங்க ..சாதின்னு ஒன்னு கிடையாது . சாதிக்கு எந்த அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லை . சாதி என்பது கடவுள் நம்பிக்கை மாதிரி வெறும் நம்பிக்கை தான்..,it's a state of mind ..
திராவிடம் என்பது உண்மை ...ஆரியம் உண்மைக்கு எதிரானது என்று சரியாப் புரிஞ்சுக்கலன்னா நாம பகுத்தறிவாளர்னு சொல்லிப்பதில் அர்த்தம் இல்லை..
ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்று மட்டுமே கட்டமைப்பது திராவிடத்தை சார்பு நிலைப்படுத்தி விடும் ..

ஆதிவாசி சிறுவனிடம் தனது செருப்பை கழற்ற சொன்ன திண்டுக்கல் சீனிவாசன்.. போலீசில் முறையீடு செய்த சிறுவன் குடும்பம்

தனக்கு நேர்ந்த அவமரியாதை தொடர்பாக மசினகுடி காவல்நிலையத்தில் மாணவன் கேத்தன் வனத்துறை அமைச்சர் மீது புகார் அளித்துள்ளார்.

maalaimalar.com : தெப்பக்காடு யானைகள் முகாமில் சிறுவனை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழற்ற சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஊட்டி: தமிழக அரசு சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு ஆண்டு தோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது.இதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டில் டாப்சிலிப், முதுமலை தெப்பக்காடு பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கும் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் அந்தந்த முகாம்களிலேயே நடந்து வருகிறது.

வீரபாண்டி ராஜாவின் வீடு தேடிச் சென்ற செல்வகணபதி: சேலம் திருப்பம்!

 வீரபாண்டி ராஜாவின் வீடு தேடிச் சென்ற செல்வகணபதி: சேலம் திருப்பம்!மின்னம்பலம் : திமுகவின் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வகணபதி, இன்று (பிப்ரவரி 6) சேலத்துக்கு வந்தார். முதல் வேலையாக புதிய பஸ் நிலையம் அருகே இருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சகிதமாகச் சென்று மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியை தேர்தல் பிரிவு செயலாளரும் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான வீரபாண்டி ராஜா புறக்கணித்துவிட்டார்.

சிஏஏ பற்றி ரஜினி புரிந்துகொள்ளவில்லை: ஸ்டாலின்

சிஏஏ பற்றி ரஜினி புரிந்துகொள்ளவில்லை: ஸ்டாலின்மின்னம்பலம் : சிஏஏவால் ஏற்படும் பாதிப்புகளை ரஜினிகாந்த் புரிந்துகொள்ளவில்லை என ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சிஏஏ, என்.பி.ஆரை ஆதரிப்பதாக நேற்று பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என்று பீதி ஏற்படுத்தப்பட்டதாகவும், சில அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக இஸ்லாமியர்களை தூண்டிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முன்பு தீவிரமாக யோசிக்க வேண்டும். எஃப்ஐஆர் போட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிடும் எனவும் எச்சரித்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ரஜினிகாந்த் பாஜகவின் குரலாக ஒலிப்பதாக குற்றம்சாட்டினர்.

நடிகர் விஜய் ! 38 இடங்கள்; ரூ.300 கோடி ஆவணங்கள்; ரூ.77 கோடி ரொக்கம்!' - வருமான வரித்துறை சொல்வதென்ன? #ITRAID


பிந்தய செய்தி நடிகர் விஜய் வீட்டில் இருந்து எந்த ஆவணமும் கைப்பற்ற படவில்லை!
வருமான வரித்துறை சோதனைvikatan.com - ராம் பிரசாத் : வருமான வரித்துறை சோதனை<! பிரபல நடிகர், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஃபைனான்ஷியர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இரண்டு நாள்களாக நடக்கும் ரெய்டு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். வரி ஏய்ப்புப் புகார் காரணமாக இந்தச் சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது. இந்த நிறுவனம் சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட படம், 'பிகில்'. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. பிகில் படத் தயாரிப்புக்கு நிதியளித்தது, மதுரையைச் சேர்ந்த ஃபைனான்ஷியர் அன்புச்செழியன். இதனடிப்படையில், நடிகர் விஜய் மற்றும் ஃபைனான்ஷியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கினர்.

9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100 சதவீதம் உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது - முக ஸ்டாலின்

மாலைமலர் : சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியுள்ளதாவது: கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9, 10-ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
2015 -16ல் 8 சதவீதமாக இருந்த இடைநிற்றல், அடுத்த ஆண்டு 16 சதவீதம் என்ற அளவில் நூறு சதவீதம் அதிகரித்துள்ளதன் மூலம், அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை எந்த அளவு மிக மோசமான  சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்ற ஆதாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால், 2015-16ம் ஆண்டில் 3.76 சதவீதமும்,  2016-17இல் 3.75 சதவீதமும், 2017-18இல் 3.61 சதவீதமும் தான் இடைநிற்றல் ஏற்பட்டதாக சட்டமன்றத்தில், கொள்கை விளக்கக் குறிப்புகளில் பொய்யான புள்ளி விவரங்களை அதிமுக அரசு கூறுகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சீமானுக்கும் முதலவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் பணபரிமாற்றம்?

Shankar A : · திமுக மீது அதிபர் அண்ணனின் தாக்குதல்கள் இனி உக்கிரமாக
இருக்கும்.
 8 நாட்களுக்கு முன்னதாக, முதல்வரை அவரது வீட்டில் நள்ளிரவில் தனியாக சந்தித்துள்ளார் அதிபர் சீமான். நான் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் தரப்பில் என்ன பதில் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை.
இந்நிலையில் இன்றும், தலைமைச் செயலகத்தில் அதிபர் அண்ணன் முதல்வரை சந்திக்கிறார். பகலில் பார்த்து சந்தித்து விட்டு, கோரிக்கை வைத்தது தொடர்பாக பேட்டியளிப்பது நல்லதுதான். நள்ளிரவில் ஏன் சந்தித்தார் என்று அதிபர் விளக்குவாரா

3700 பயணிகளோடு நிற்கும் கப்பலில் 10 பேருக்கு பாதிப்பு.... கொரோனா வைரஸ்: ஜப்பான் துறைமுகத்தில்


BBC : ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கிட்டத்தட்ட பத்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டயமண்ட் பிரின்சஸ் என்ற பெயருடைய இந்தக் கப்பலில் உள்ள 3700 பேரில் 300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
கப்பலில் இருந்த 80 வயது ஹாங்காங் நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உடல் நலம் குன்றியதை அடுத்து பரிசோதனைகள் தொடங்கின.
3600 பேருடன் ஹாங்காங் துறைமுகத்துக்கு வந்துள்ள இன்னொரு சொகுசு கப்பலில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
சீனாவின் கிழக்குப் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக சுமார் 1.8 கோடி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோடிகளில் ஊழல்: ராதாரவிக்கு எதிராக சின்மயி சபதம்!

minnamblam :  நடிகர்கள் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், இயக்குநர்கள் சங்கத் தேர்தல், ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தல் எனத் திரைத் துறை சார்ந்து நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கிடையே நடைபெற்றவைதாம். இவற்றுக்குச் சற்றும் குறையாமல் நடந்து முடிந்திருக்கிறது, திரைத் துறையின் டப்பிங் ஆர்டிஸ்ட் அசோஷியேஷன் தேர்தல். இதில், பல வருடங்களாகத் தலைமைப் பொறுப்பேற்று வரும் ராதாரவிக்கு எதிராக, பின்னணிப் பாடகியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் புகழ்பெற்ற பாடகி சின்மயி போட்டியிட்டார். ஆனால், திடீரென சின்மயியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, போட்டியின்றி ராதாரவி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் சின்மயி.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சின்மயி “ஜனநாயக நாட்டில் நடைபெறும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தானே நடக்க வேண்டும்.

சீனா .. கொரோனா.. 570 பேர் உயிரிழப்பு .. 28000 பேர் பாதிப்பு.. ஒரே நாளில் 73 பேர் ...


Shyamsundar /tamil.oneindia.com : - பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது 
யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. 
இந்த வைரஸ் காரணமாக எல்லா நோயாளிகளும் வுஹன் நகரத்தில் அடைத்து வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். வுஹன் நகரத்தை விட்டு வைரஸ் வெளியே செல்ல கூடாது என்பதால் நோயாளிகள் எல்லோரையும் அங்கேயே வைத்து சோதனை செய்து வருகிறார்கள். 
வுஹன் நகரத்தில் இதற்காக 6 நாட்களில் பெரிய மருத்துவமனை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு 2000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இத்தனை செய்தும் இந்த வைரஸ் வெளியே சென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

பதவி நீக்கத்தில் இருந்து தப்பினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

பதவி நீக்கத்தில் இருந்து தப்பினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தினத்தந்தி : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டது.
வாஷிங்டன், அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தன் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டுவதாகவும், உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து டிரம்ப் மீதான புகாரை விசாரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதி அளித்தது. அதன்படி விசாரணை நடத்தப்பட்டது.

பதவி பறிபோய்விடும் என்பது வதந்தி, ஆதாரம் இதோ!’- பெரியகோயில் சென்டிமென்ட் குறித்து தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு
தஞ்சை பெரிய கோயில்vikatan.com - கு. ராமகிருஷ்ணன் - ம.அரவிந்த் : 1997-ல்,  கலைஞர்  மட்டுமல்ல, பல அமைச்சர்கள், வாசல் வழியாகத்தான் பெரியகோயிலுக்குள் சென்று வந்தார்கள். அவர்கள் எவரும் பதவியை இழக்கவில்லை. மீதியிருந்த ஆட்சிக்காலத்தையும் முழுமையாக நிறைவு செய்தார்கள். உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் வருகையால் தஞ்சை நகரமே விழாக் கோலத்தில் காட்சியளிக்கிறது. ஆனால், இவ்விழாவில் அ.தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை. இது தஞ்சை மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தவிர மற்ற அமைச்சர்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.

டெல்லி பெரியார் படத்தை நீக்ககோரி பிஜேபினர் பகுஜன் திராவிட கட்சியினர்களிடம் வாக்குவாதம்..

BBCI Bahujan Broadcasting Company India : 2020 புதுடெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொது பகுஜன் திராவிட கட்சி திரு. ராஜபீர் அவர்களுக்கு சமத்துவ தூதர் ஜீவன் குமார் மள்ளா வாக்கு சேகரிக்கும் பொது உயர் சாதியை சேர்ந்த பிஜேபியினர்(BJP) தந்தை பெரியார் அவர்களின் புகைப்படத்தை நீக்கக்கோரி பிரச்சனை பண்ணினார்கள் ஆனால் பகுஜன் திராவிட கட்சி சகோதரர்கள் தந்தை பெரியார் புகைப்படத்தை நீக்க முடியாது என்றும் பகுஜன் திராவிட கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பிஜேபியினர் சிதறி ஓடினர்.. இதை கண்ட பொதுமக்கள் பகுஜன் திராவிட கட்சியின் நபர்களை வெகுவாக பாராட்டினார்கள்... BBCi செய்திப்பிரிவு .. புது டெல்லி...

11 வயது குழந்தையை வகுப்பறையில் வைத்து விசாரணை செய்த பாசிச போலீஸ் கர்நாடக

ram gopal : கடந்த 4 நாட்களாய் இந்த செய்தி என்னை அலைக்கழித்துக்
கொண்டே இருக்கிறது. தொடர் செய்திகளை படிக்கையில் கண்களில் நீர் முட்டுகிறது. இதெல்லாம் உண்மையில் நடக்கிறதா அல்லது நாம்தான் வேறு ஏதேனும் ஒரு உலகத்தில் இருக்கிறோமா என்பது தெரியவில்லை. இவையே மனசை பிசைகிறது என்றால் இன்னும் இன்னும் பாக்கி இருக்கோ என எண்ணுகையில்....
என் பெரிய குழந்தை வயது இருக்கும் அந்த பெண் குழந்தைக்கு, 11. காவல்துறையின் விசாரணை வளையத்தில் அந்தப் பெண்ணும் அவள் தோழிகளும் அவள் பள்ளியும். ஆமாம், பள்ளிக்கு வந்து அவள் வயதை ஒத்த குழந்தைகளை அதாவது 4, 5 &6 ஆம் வகுப்புகளில் படிக்கிற குழந்தைகளை பள்ளிக்கு வந்து சுமார் 45 நிமிடம், 3 மணி நேரம் என குறுக்கு விசாரணை தொடர்ந்து நான்காவது நாளாய். இவ்வளவிற்கும் அந்தக் குழுந்தைகளின் ஆசிரியர்களோ அல்லது பள்ளி நிர்வாகமோ இக்குழந்தைகளுடன் இல்லாமல் ஒரு "மேக் ஷிப்ட் விசாரணை ரூமில்" விசாரிக்கப்படுகிறார்கள். பள்ளியில் ஒரு "தற்காலிக விசாரணை ரூம்" என்பது ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இருந்ததா என நண்பர்கள் தெரியப்படுத்தவும். அக்குழந்தைக்கு தந்தை இல்லை. விவசாயம் நொடித்துப் போக கணவர் இறக்க வேறு வழியின்றி நிலத்தை குத்தகைக்கு விட்டு அக்குழந்தையின் கல்விக்காக அரசு உதவிப் பெறும் இந்த சிறுபான்மைப் பள்ளியில் ஏகப்பட்ட கனவுகளை நெஞ்சில் சுமந்து சேர்த்த அந்த எழுத்தறிவற்ற தாய் இப்பொழுது ஜெயிலில். அவருடன் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையும். பெயில் கிடைக்கவில்லை ஏனென்றால் ஜட்ஜ் அய்யா விடுப்பில் இருக்கிறார்.

எம்எல்ஏ வேட்பாளரை பிரசாந்த் கிஷோர்தான் முடிவு செய்வாரா? திமுகவினர் கலக்கம்!

prashant kishor - mk stalin
MKS222nakkheeran.in - ஆதனூர் சோழன் : திமுகவின் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகத்தை வகுப்பதற்காக பிரசாந்த் கிஷோரின் உதவியை திமுக நாடியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. 70 ஆண்டு வரலாறைக் கொண்ட மாபெரும் இயக்கமான திமுக, தனது தொண்டர்கள் பலத்தையும், அமைப்புகளின் பலத்தையும், கட்சி நிர்வாகிகளின் தேர்தல் வேலையையும் நம்பாமல் ஒரு கார்பரேட் ஆளை எப்படி நம்புகிறது என்று திமுகவினர் கொந்தளிக்கிறார்கள்.
ஆனால், திமுகவினரில் ஒரு பகுதியினர், சமூக வலைத்தளங்களில் திமுகவுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்குவதை எதிர்கொள்ளவே பிரசாந்த் கிஷோரின் கார்பரேட் கம்பெனி உதவும் என்கிறார்கள். திமுகவின் இமேஜை டேமேஜ் செய்யும் முயற்சிகளை முறியடிக்கவும், மீடியாக்களில் திமுகவின் செய்திகளை பாசிட்டிவாக இடம்பெறச் செய்யவும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கம்பெனி உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

புதன், 5 பிப்ரவரி, 2020

என்கவுண்ட்டரால் ஆகாதெனினும், சட்டம் கூலி தரும்

savukkuonline.com : ஜூலை 2018.  தமிழ்நாட்டின் விடியல் திடுக்கிடலாய் அமைந்தது. செய்தித்தாள்கள் அன்று அனைத்துத் தரப்பினருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தன. அன்றாடம் தென்படுகிற செய்தியில் ஒன்றாய் அதைக் கடக்க யாராலும் இயலவில்லை. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அன்றாட நிகழ்வாகிவிட்ட பின்னரும் இந்த செய்தி அனைவரைம் பாதிப்பதற்கான காரணம் இருந்தது. பதினோரு வயதே ஆன மாற்றுத்திறனாளியான,  செவித்திறன் குறைபாடு கொண்ட சிறுமிக்கு பதினேழு பேரால் ஏற்பட்ட பாலியல் தாக்குதல் என்பது அனைவரையும் ஆழமாய் பாதித்தது. சம்பவம் நடந்தது சென்னை அயனாவரம் என்பதால் இது ‘அயனாவரம் வழக்கு’ என்றழைக்கப்பட்டு தொடர்ந்து செய்தித்தாள்கள் தகவல்களைத் தந்தன. தகவல்கள அனைத்துமே அதிர்ச்சியைத் தரக்கூடியன. பதினோரு வயதான பள்ளிக்கு செல்லும் சிறுமி தான் தினமும் சந்திக்கும் நபர்களால் ஆறு மாத காலத்துக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவித்திருப்பது தெரிய வந்தபோது அது பெரும் மனஉளைச்சலை அனைவருக்கும் ஏற்படுத்தியிருந்தது. குற்றவாளிகள் அனைவரும் 23 முதல் 60 வயதானவர்கள்.

ரஜினி ஒரு நேர்மையற்ற சுயநலமி மட்டுமல்ல. கோழையான சந்தர்ப்பவாதியும் கூட... சவுக்கு சங்கர்


savukkuonline.com : ரஜினிகாந்த் செய்வதும், சொல்வதும் செய்தியாகும் என்பது ரஜினிக்குத் தெரியும். ரஜினியே எதிர்பார்த்திராத ரசிகர் கூட்டம் இந்தியா கடந்தும் விரிந்திருக்கிறது. இதற்கு அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால் அந்த உழைப்பின் பலனை அவர் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவை அதே ரசிகர்கள் முன்னிலையில் அனுபவிக்கிறார்.
கடந்த 4 ஜனவரி அன்று, தர்பார் படத்தின் தெலுங்கு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஒரு அறிவுரை போல இவ்வாறு கூறினார். “கொஞ்சமாக ஆசைப்படுங்கள்”.  இது போல அவ்வப்போது, ரஜினி மனம் போன போக்கில் பல்வேறு பொன்மொழிகளை உதிர்ப்பார்.  ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் சொன்னதை தனக்கு அல்ல என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.
கடந்த வாரம், இந்து நாளேடு, ரஜினிகாந்த் பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்வதாக வருமான வரித் துறையிடம் தெரிவித்தார் என்று செய்தி வெளியிட்டிருந்தது.   இதையடுத்து, ரஜினிகாந்த் சமூக வலைத்தளங்களில், கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி இருந்தார்.  பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி, வருமான வரி பற்றிய கேள்விக்கு, “நான் ஒரு ஹானஸ்ட் இன்கம் டாக்ஸ் பேயர்.  சட்டவிரோதமாக எந்த காரியத்தையும் செய்யவில்லை.  வேண்டுமென்றால் ஆடிட்டரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்”  என்று மட்டும் மழுப்பலாக கூறி முடித்துக் கொண்டார்.

லண்டனில் 9 கோடி சம்பளம்... ஆபீஸ் கேண்டினில் திருடிய வட இந்தியர்


Velmurugan P -/tamil.oneindia.com/  -  லண்டனில் ஆபிஸ் கேண்டினில் சாப்பாடு திருடியதாக உயர்ந்த பதவியில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த சிட்டி குரூப் வங்கி அதிகாரி பரஸ் ஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உயர்ந்த பதவியில் அந்தஸ்தில் இருக்கும் சிலருக்கு சில்லண்டி தனமாக ஸ்பூனை திருடுவது, சிறிய சிறிய பொருட்களை திருடுவது என மோசமான பழக்கம் இருக்கும். அப்படி தான் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு ஆபிஸ் கேண்டினில் உணவை திருடும் கேவலமான பழக்கம் இருந்திருக்கிறது.
 பரஸ் ஷா வயது 31. இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சிட்டி குரூப் வஙகியில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும ஆப்பிரிக்கா பிரிவின் வர்த்தகத்தை தலைமை பொறுப்பை இருந்து கவனித்து வருகிறார். ஆண்டுக்கு 9.2 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்
பரஸ் ஷா கடந்த 2017ம் ஆண்டு சிட்டி குரூப்பில் சேர்ந்துள்ளார்.. அதற்கு முன்பு ஹெச்எஸ்பிசி வங்கியில் 7 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவர் லண்டனில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு உயர்ந்த பதவி, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பரஸ் ஷா, அங்கு அலுவலகத்தில் உள்ள கேண்டினில் உணவை திருடி சாப்பிட்டுக்கிறார்.

6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!!

1_Kinane  newlanka.lk ›  6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!! 6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!! 1 Kinane26 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!!newslanka :வேல்ஸ்,போர்த்மடோக் – குய்னெத்தைச் சேர்ந்த (Michael Kinane) மைக்கல் கினேன் (வயது 41) என்ற நபர் எஃப்.பி.ஐ மற்றும் பிரிட்டிஷ் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட ஒப்பரேஷன் புளூ கோஸ்ரலைத் நடவடிக்கையைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டார். லண்டனை தளமாகக் கொண்ட மருந்து முதலீட்டு நிறுவனமான அவிலியனின் (Avillion) மின்னஞ்சலுக்குள் ஊடுருவி பணம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். கனாபன் (Caernarfon) கிரவுன் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் மைக்கல் கினேனுக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கினேன் பணமோசடிக்குச் சதி செய்ததாகவும், மூன்று முறை மோசடி செய்ததாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிபதி நிக்கோலா ஜோன்ஸ் (Nicola Jones) தனது தீர்ப்பின்போது கூறுகையில்; குற்றவாளி தனது பேராசை மூலமே இந்தத் தவறைச் செய்துள்ளார் என்றும் இழைத்த தவறுக்கு மைக்கல் கினேன் உண்மையான கழிவிரக்கத்தைக் காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு

மாலைமலர் : டெல்லி மேல்சபையில் (ராஜ்ய சபா) மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.
கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில சிறந்து விளங்குபவர்களை ஜனாதிபதி நியமிப்பார்.
இந்த 12 பேர்களை தவிர்த்து மற்றவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

1. திருச்சி சிவா (தி.மு.க.)

2. டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)

3. சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.) தற்போது இவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.

4. விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.)

5. மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.)

6. முத்துகருப்பன் (அ.தி.மு.க.).

பிகில் ரெய்டும் மாஸ்டர் பிளானும்:நெய்வேலி டூ சென்னை!

பிகில் ரெய்டும் மாஸ்டர் பிளானும்:நெய்வேலி டூ சென்னை!மின்னம்பலம் : வருமான வரித் துறையினரின் சோதனைகள் மிக சாதாரணமாகவே இன்று(05.02.2020) காலை தொடங்கியது. ஆனால், நேரம் ஓட ஓட அவர்களது வேகமும் அதிகரித்தது. கிட்டத்தட்ட சினிமாவில் நடப்பது போன்றே இன்றைய ரைடுகளையும் நடத்தி முடித்துவிட்டு, விஜய் வீட்டிலிருந்து கிளம்பியிருக்கின்றனர் வருமான வரித்துறையினர்.
சினிமா ஃபைனான்சியரான அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடங்கிய வருமான வரித்துறையினரின் ரெய்டு, அங்கிருந்து அப்படியே ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினரின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டது. அன்புச்செழியனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு அதிக பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதை அறிந்ததனால் இந்த ரெய்டுகள் நடைபெறுவதாக அறிந்ததால், அடுத்து யார்? என்று பார்ப்பதற்கு பரபரப்பாக தயாரானது கோலிவுட். சென்னையில் இருப்பவர்களில் யார் வீட்டுக்கு ரெய்டு என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோதே, நெய்வேலியில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்தது மெசேஜ்.

நடிகர் விஜயை படப்பிடிப்பில் இருந்து அழைத்து சென்று வீட்டில் வருமானவரி சோதனை .. ஏஜிஎஸ், அன்புசெழியன் வீடுகளிலும் ரெயிட் .. பிகில் கறுப்பு பணம் ?


agsகலைமோகன் ஸ்டாலின் - நக்கீரன் : ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதலே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜயிடமும், விஜயின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வருமானவரி சோதனையில் 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில், 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏஜிஎஸ் குழுமத்தில் 25 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் : குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை- ரஜினிகாந்த்தினத்தந்தி : மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக எனக்கு சம்மன் வரவில்லை.
என்பிஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) நாட்டுக்கு அவசியம் முக்கியமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.
சிஏஏ சட்டத்தால் ( குடியுரிமை திருத்த சட்டம்) இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்தியா பிரிவினையின் போது எங்கும் போகாமல் இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. அப்படி வந்தால் நான் முதலாவதாக குரல் கொடுப்பேன்.

திமுகவும் பிரசாந்த் கிஷோரும் .. காலத்தின் தேவையா?

வளன்பிச்சைவளன் : புதிய யுக்திகளே வெற்றியை தந்தன வரலாறு
சொல்லும் பாடம் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து எந்த உயிரியும் வாழ முடியாது அறிவியல் உண்மை ஆரியர்கள் குதிரையோடு வந்தனர்.
அக்குதிரை திராவிடர்களிடம் இல்லாததே திராவிடர்களின் வீழ்ச்சி. ஆங்கிலேயர்கள் பீரங்கியோடு வந்தார்கள் வாளோடும் வில்லோடும் போர் புரிந்த இந்தியர்களை எளிதில் வீழ்த்தினார்கள்.
என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது திமுக நீண்ட வரலாறு கொண்ட இயக்கம் பிரச்சார பலம் பொருந்திய இயக்கம். திண்ணை பிரச்சாரம் பொதுக் கூட்டங்கள் பத்திரிக்கைகள் என மக்களிடம் நெருங்கிச் சென்று வெற்றி பெற்ற வரலாறு கொண்ட இயக்கம்.
ஆனால் இன்று பிரச்சாரம் வேறு பரிமணாமங்களோடு நடைபெறுகிறது. இவ்வேளையில் இம்மாற்றங்களுக்கு ஏற்ப திமுகவும் மாறியாக வேண்டிய கட்டாயம். சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்காத பல உயிரினங்கள் அழிந்து விட்டன.
இந்த அறிவியல் உண்மைகளுக்கு ஏற்ப திமுக வும் தனது பிரச்சார யுக்தியை மாற்றிக் கொண்டு ஒரு விளம்பர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நேரலை .... 10 அரிய செய்திகள்

முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் :
1. 1997ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு திருக்குடமுழுக்கு இன்று நடைபெறுகிறது. 1997க்கு முன்பாக, 1980ல் குடமுழுக்கு நடைபெற்றது.
2. தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
3. 1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.
. கோயிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன. முன்தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னிதி, சுப்ரமணியர் சன்னிதி போன்ற இந்தப் பகுதிகளைத் தவிர கோயில் மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டவை.
5. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்தக் கோயில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.
6. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! இபிஎஸ்-ஓபிஎஸ் தீவிர ஆலோசனை!

ops-epsnakkheeran.in - இரா. இளையசெல்வன் : துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கில், சபாநாயகர் தனபாலை நோக்கி உச்சநீதிமன்றம் எழுப்பிய அதிரடி கேள்விகளால் அதிர்ச்சியடைந்திருக்கிறது அதிமுக!
தலைமைசெயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் அதிகாரிகள் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு அமைச்சர்களிடம் மட்டும் தீவிர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதில் பல்வேறு அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து ஓபிஎஸ்சுடன் தனியாக ஆலோசித்தார் எடப்பாடி. அதில், பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை குறித்து விரிவாக அலசியிருக்கிறார்கள்.
இது குறித்து ஓபிஎஸ் ஆதரவு சீனியர்களிடம் விசாரித்தபோது, ‘’ உச்சநீதிமன்றம் என்னதான் உத்தரவிட்டாலும் சபாநாயகருக்கு ஆணையிடும் அதிகாரம் அதற்கு கிடையாது.

சி.பி.சி.ஐ.டி. பிடியில் சித்தாண்டி… `726′ அதிகாரிகள் டிஸ்மிஸ்?!

CBCID office, Chennaiபெரியகண்ணனூரில் உள்ள சித்தாண்டியின் வீடுசித்தாண்டிvikatan.com = ந.பொன்குமரகுருபரன் : ஆயுதப்படை எஸ்.ஐ. சித்தாண்டியை 8 நாள்களுக்கு முன்னரே சி.பி.சி.ஐ.டி கைது செய்துவிட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரகசிய விசாரணையில் என்ன சொன்னார் சித்தாண்டி? கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில், இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேர் முறைகேடாகத் தேர்வாகியிருப்பது தொடர்பான பிரச்னை சமீபத்தில் பூதாகரமாக வெடித்தது. இதுதொடர்பாக விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார், திருநெல்வேலி, சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 பேரை கைது செய்தனர். போலீசார் விசாரணையைத் தொடங்கியபோதே, இம்முறைகேட்டில் முக்கிய இடைத்தரகர்களாகச் செயல்பட்ட முகப்பேர் ஜெயக்குமார், ஆயுதப்படை எஸ்.ஐ. சித்தாண்டி இருவரும் தலைமறைவாகி இருந்தனர்.