சனி, 11 ஏப்ரல், 2015

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் வெளியீடு


கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் சென்னையில் நாளை திரையிடப்படுகிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய நினைவு தொகுப்புகளை மையமாக வைத்து பு.சாரோன் என்பவர் இயக்கியுள்ள 2.30 மணி நேரம் ஓடக்கூடிய ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. பட்டுக்கோட்டையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ஆவணப்படத்தின் குறுந்தகட்டினை (வீடியோ சி.டி.) திரைப்பட இயக்குனர் கே. பாக்கியராஜ் வெளியிட கவிஞர் கல்யாணசுந்தரத்தின் மனைவி கவுரவம்மாள் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகளில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதில் ஒருகட்டமாக சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நாளை (12-ம் தேதி) காலை சுமார் 11 மணியளவில் இந்த ஆவணப்படம் திரையிடப்படுகின்றது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடன் நெருக்கமாக இருந்த சிலர் அவரைப் பற்றிய அரிய தகவல்களை இந்த படத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த பதிவுகளுடன் கவிஞர் இயற்றிய மிகவும் பிரபலமான பாடல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

திருப்பதி படுகொலை! அனைத்து கட்சியினரின் அவசர ஆலோசனை கூட்டம் - எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் ( படங்கள்)

20 அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திர அரசையும் காவல்துறையையும் கண்டித்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுதல் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்ற (ரிப்போர்ட்டஸ் கில்டு) அரங்கில் இன்று (11.04.2015) தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.>இக்கூட்டத்தில் வைகோ, பொதுச்செயலாளர், ம.தி.மு.க. , தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வை. காவேரி, பொதுச்செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி,எஸ்.எம்.ஹாரூன் ரசீது, மனித நேய மக்கள் கட்சி தெஹ்லான் பாகவி, எஸ்.டி,பி.ஐ. பிரின்சில்லா ஜான்பாண்டியன், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், த. வெள்ளையன், தலைவர், வணிகர் சங்க பேரவை, ஆர்.சி. பால் கனகராஜ், தமிழ் மாநில கட்சி, பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சுப. உதயகுமாரன், அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு பொழிலன், பொதுச்செயலாளர், தமிழக மக்கள் முன்னணி, குணங்குடி அனீபா, த.மு.மு.க, மாநில துணைத் தலைவர், தடா அப்துல் ரஹீம், இந்திய தேசிய லீக் கட்சி, ராமகிருஷ்ணன், திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம், கா. திருமுருகன், மே 17 இயக்கம், வீரசந்தானம், தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம், தியாகு, தமிழர் தேசிய விடுதலை இயக்கம், குடந்தை அரசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, தபசிகுமரன், திராவிடர் விடுதலைக் கழகம், எஸ்.எம். பாக்கர், இந்திய தவ்ஹீத் ஜமாத், கோசுமணி, மீனவர் மக்கள் முன்னணி, முரளி, மனித உரிமைகள் கழகம், வேணு மணி- தமிழர் எழுச்சி இயக்கம், செந்தில்குமார், இளந்தமிழகம், பாவேந்தன், தமிழ்த் தேச நடுவம், திருமலை, தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம், வழக்கறிஞர் காந்திகுமார் 

மே.வங்கம் : 2 ஆண்டாக தந்தை, மாமன், சகோதரனால் 16 வயது பெண்.....அவர்கள் உறவினர்கள்தானே அட்ஜஸ்ட் செய் என்றாள் தாய்!


மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி பகுதியில் தந்தை, மாமன், சகோதரனால் 2 ஆண்டுகளாக ஒரு இளம் பெண் சீரழிக்கப்பட்டு வந்த கொடூரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உலகத்தில் இப்படியும் நடக்குமா? என்று எல்லோராலும் பதறக்கூடிய கொடூர சம்பவம் ஒன்று மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு 16 வயது இளம் பெண்ணை, அவளது தந்தை, சகோதரன் மற்றும் மாமனும் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, போலீசார் அந்த கொடூரர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி பகுதியில், கடந்த வியாழக்கிழமை 16 வயது இளம் பெண் ஒருவர் தன் பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் தான் அனுபவித்து வரும் கொடூரத்தை கூறி இருக்கிறார். அதை கேட்டு பதறிப்போன அந்த ஆசிரியர், இந்த தகவலை பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் தெரிவித்து இருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளிக்க வைத்துள்ளனர்.

அக்ரி கிருஷ்ணமுர்த்தியை சந்தித்து பேச ஜெயில் வார்டன்களுக்கு தடை! ரகசியங்களை பாதுக்காகவாம்?

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச ஜெயில் வார்டன்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி அதிகாரிகளின் நெருக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது பாளையங்கோட்டை சிறையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் விசாரணை கைதிகளையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் தண்டனை கைதிகளையும் அவர்களது உறவினர்கள் சந்தித்து பேச முடியும். எல்லா நாட்களிலும் வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி உண்டு. அதனால், சிறையில் இருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவரது வழக்கறிஞர் தினமும் சந்தித்து பேசி வருகிறார்.

ரேவதி நடித்த Margarita with a straw அமீர்கானை அழவைத்த படம்!


பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி, சிறந்த நடிகை உட்பட பல சர்வதேச விருதுகளை குவித்துள்ள படம் தான் ‘மார்கரிதா வித் எ ஸ்ட்ரா’. இந்த படத்தின் டிரைலரை பார்த்தாலே மனம் அன்பு நிறைந்து வலியால் மவுனமாக அழுகிறது. உடல் வளர்ச்சி குன்றியதால் சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து வரும் இளம் பெண்ணின் வாழ்க்கையை துளியும் சினிமாத்தனமின்றி வெகு இயல்பாக சித்தரித்துள்ள படம் தான் ‘மார்கரிதா’. இதில் அந்த இளம் பெண்ணாக நடித்துள்ள ‘கல்கி கொச்லின்’ சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் பெண்ணின் மன உணர்வுகளை மிக நுட்பமாக பிரதிபலித்துள்ளார். அவரது தாயாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரேவதி நடித்துள்ளார். ஷோனாலி போஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சகாயம் IAS இன் உதவியாளர் சாலைவிபத்தில் பலி? சகாயத்தை மிரட்ட திட்டமிட்ட சாலைவிபத்து கொலை?


கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவுக்கு படம் எடுத்து கொடுத்தவர் சாலை விபத்தில் பலியான சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு, மதுரை மாவட்டம் முழுவதும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. மலை மற்றும் கரடு முரடான பாதைக்கு சகாயம் நேரடியாகவே சென்று கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்டார ஆட்கள் சென்று பார்க்க முடியாத இடங்களுக்கு ஆளில்லாத குட்டி விமானங்களை கொண்டு ஆய்வு நடத்தினார் சகாயம். இந்த குட்டி விமானங்களை இயக்கியவர் பார்த்தசாரதி. இவர் மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள வீராபாஞ்சனூரில் வசித்து வந்தார். இவருக்கு சீனியம்மாள் என்ற மனைவியும், பூரணி என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர், ஏரோநாட்டிக்கல் படிப்புக்கு ஆய்வு மேற்கொள்வதற்காக ஆளில்லாத 20 குட்டி விமானங்களை வைத்துள்ளார். சகாயம் குழுவினர் கேட்டுக் கொண்டதின் பேரில் ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு ஆளில்லாத குட்டி விமானங்களை அனுப்பி படங்கள் எடுத்தார். 10 நாட்களாக குட்டி விமானம் மூலம் படங்கள் எடுத்த பார்த்தசாரதி, அண்மையில்தான் குட்டி விமானம் எடுத்த அனைத்து படங்களையும் சகாயம் குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.

(தேஜோ மகாலயா) தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு!


உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், ஆக்ராவில் அமைந்துள்ளது. இந்த தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வக்கீல் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் 6 வக்கீல்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.அந்த மனுவில் அவர்கள், 1212 ஆம் ஆண்டு ராஜாபரமர்திதேவ் தேஜோ மகாலயாவை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜாமான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார். 1632 ஆம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டிடங்களில் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த மாதம் (மே) 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.  /tamil.webdunia.com/

தெலுங்கான ஆந்த்ரா இரண்டு என்கவுன்டர் கொலைகள் ! காவல்துறை பயங்கரவாத துறையாகிறது?

தெலங்கானா, ஆந்திர மாநில ஆட்சியாளர்கள் முன்னாள் ஆந்திரப் பிரதேசத்தைப் போலவே, என்கவுன்டர்களையும் பங்கு போட்டுக் கொள்வதாகத் தோன்றுகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தெலங்கானாவின் நால்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அலயருக்கு அருகில், வாரங்கல் சிறை யிலிருந்து ஹைதராபாத் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 5 விசாரணைக் கைதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நாளில், ஆந்திரத்தின் செம்மரக் கடத்தல் தடுப்புத் தனிப்படைப் போலீஸாரால் 20 தமிழகக் கூலித் தொழிலாளர்கள் (15 பேர் பழங்குடி இனத்தவர்) ‘என்கவுன்டர்’ செய்யப்பட்டனர்.
தெலங்கானா ‘என்கவுன்டர்’ பட்டப்பகலில் நெடுஞ் சாலையொன்றில் நடந்துள்ளது. சிறை வேன் ஒன்றில் இருக்கைகளோடு சேர்த்துப் பிணைத்திருந்த விலங்குகளை அந்த 5 விசாரணைக் கைதிகளுக்குப் பூட்டி அழைத்துச் சென்றவர்கள் ஏ.கே. 47 ரகத் துப்பாக்கி ஏந்திய 17 போலீஸ்காரர்கள். அந்த 5 பேரும் வேனுக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்டதைப் பற்றிய போலீஸ் விளக்கம், இந்திய ஊடகங்கள் மிகப் பெரும்பாலானவற்றால் எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்படியே பரப்பப்பட்டது.

பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது 36 Rafale fighter jets


பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் ரஃபேல் ஜெட் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா - பிரான்ஸ் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தமானது.
இதன்படி, ரூ.79,000 கோடி மதிப்பில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இரு நாடுகளிடையே கடந்த மூன்றாண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இளங்கோவன் : சொத்துக்குவிப்பு வழக்கோ, ஊழல் வழக்கோ என் மீது இல்லை!

அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமியை குற்றம் சாட்டியதற்காக தன் மீது மான நஷ்டஈடு வழக்கு போடப்பட்டிருப்பதன் மூலம் தான் முன்பு கூறிய 14 குற்றச்சாட்டுகளும் உண்மை என்பதை அதிமுக அரசு ஒத்துக்கொள்கிறதா என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தங்க சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி நடைபெறாமல், ஊழல் மட்டுமே நடைபெறுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்றத்தில் இருந்து தமிழக அரசு மீது எல்லா விளக்கங்களுளோடு 15 ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளேன். அப்படி இருக்கும்போது அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமான சேலம் குடோனில் பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது கூறிய குற்றச்சாட்டுக்கு மட்டும் மான நஷ்டஈடு வழக்கு போடப்பட்டிருப்பதால், முன்பு கூறிய 14 குற்றச்சாட்டுகளும் உண்மை என்பதை அதிமுக அரசு ஒத்துக்கொள்கிறதா.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஆந்திர செம்மர மாபியாகளின் ஏவல் நாய்களாகிவிட்ட வனத்துறை ! ராமச்சந்திர ரெட்டி, கிஷோர் குமார் ரெட்டி போன்றவரகளை அல்லவா....

இருபது அப்பாவி உயிர்கள் நர வேட்டையாடப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் படுபயங்கரமான கடத்தல்காரர்கள் என்று சித்தரிக்கின்றது ஆந்திர போலீசு. ஆந்திரப் போலீசின் கதையில் வரும் பயங்கர ஆயுதம், ஒரே ஒரு கத்தி மட்டுமே! பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தங்களை தாக்க முனைந்ததாகவும், தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதில் அவர்கள் இறந்ததாகவும் கதையளக்கிறது ஆந்திர போலீசு. என்கவுண்டருக்காக இந்திய போலீசு கூறும் அரதப்பழசான பச்சைப் பொய் இது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆய்வின் படி ஒரே ஒரு கத்தியைத் தவிர வேறு ஆயுதங்கள் எதுவும் அப்பகுதியில் இல்லை. அதாவது ஆந்திரப் போலீசின் கதையில் வரும் பயங்கர ஆயுதம், ஒரே ஒரு கத்தி மட்டுமே!
சுட்டுக் கொல்லப்பட்ட 20 கூலித் தொழிலாளர்களின் உடல்கள் திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா ருயா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பிரேத பரிசோதனை முடிவுகளோ நடந்தது அப்பட்டமான போலி மோதல் கொலைகள் என்று நமக்கு உணர்த்துகின்றது. கொல்லப்பட்ட உடல்களில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்ததால் ஏற்பட்ட காயங்களைப் பரிசோதித்த போது, அவை மிக அருகில் இருந்து சுடப்பட்டதால் ஏற்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், தோட்டாக்கள் மிகச் சரியாக உயிராதாரமான பகுதிகளான மார்பு, கழுத்து, தலை போன்ற உறுப்புகளைத் தாக்கியுள்ளன. குண்டு காயம் பட்ட பல தொழிலாளர்களின் உடல்கள் அழுகிக் காணப்பட்டதாகவும், அவர்கள் திங்கட்கிழமையே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

நேரடி சாட்சியம் : பஸ்சில் சென்றவர்களை இறக்கி இழுத்துச் சென்று காட்டுக்குள் வைத்து சுட்டுக் கொன்றார்கள்

ஆந்திர போலீசார் பஸ்ஸில் சென்றவர்களை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றதாக தப்பி வந்த ஒருவர் திடுக்கிடும் பேட்டியினை அளித்துள்ளார். இதனால் பஸ்சில் ஆந்திரா சென்ற தமிழகத் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக இறக்கி இழுத்துச் சென்று காட்டுக்குள் வைத்து சுட்டுக் கொன்றார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் 7 பேர், பஸ்சிலிருந்து ஆந்திர போலீஸாரால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது.  இதனை நிரூபிக்கும் முக்கிய சாட்சியான சேகர் என்பவர், ஆந்திர போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பிவந்தார். அவரை இந்த வழக்கின்போது ஆந்திர கோர்ட்டில் ஆஜர்படுத்த தொண்டு நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. எனவே சேகரை தொண்டு நிறுவனம் ஒன்று பாதுகாப்பாக ரகசிய இடத்தில் வைத்து உள்ளது. ஆந்திர ஹைகோர்ட்டில் சேகர் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டிலும் சேகரை ஆஜர்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெயகாந்தன்! இலக்கியவாதிகளின் தலையில் அடித்து திருத்திய சீர்திருத்த சிறுகதை சூரியன்!

ஜெயகாந்தனின் அடையாளம் ஆரம்பக் காலம் தொட்டே அவருடைய கம்பீரமும் கர்வமும்தான்!  அவரே தமிழ் எழுத்தாளர்களின் கம்பீர முகம். ஜெயகாந்தன் ஒரு சுயம்பு. 1934-ல் கடலூரில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்போடு பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டார். அப்புறம் காலம் அவரை விழுப்புரத்தில் தூக்கிப்போட்டது. தாய்மாமன் வடிவில் பாரதியின் எழுத்துகளும் பொதுவுடைமைச் சிந்தனைகளும் ஜெயகாந்தனுக்குள் வந்து விழுந்தது அப்போதுதான்.
அன்றைக்குத் தொடங்கி அவர் எப்படியெல்லாம் அவருடைய வாழ்க்கைப் பாதையைக் கடந்து வந்தார் என்பதை அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், “நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்... மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்ட்ரல் சினிமாவில் ‘வேலைக்காரி’ சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸிலிருந்து பத்திரிகைகள் - புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் இன்ஜினுக்குக் கரி கொட்டியது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது, ஃபுரூஃப் ரீடர், பத்திரிகை உதவி ஆசிரியர்…”

மாட்டுஇறைச்சி- பார்ப்பனர்,புத்தர்,பெரியார்,டாக்டர்.அம்பேத்கர்- எழுத்தாளர் வே. மதிமாறன்

ஆந்திர போலீசார் மீது கொலை வழக்கு ! ஐகோர்ட் அதிரடி உத்தரவு! 20 தமிழர்களை கொன்ற....

20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆந்திர ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திராவில், கடந்த செவ்வாய்க்கிழமை செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் நடந்தது. செம்மர கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது போலி ‘என்கவுன்டர்‘ என்றும், 20 பேரையும் போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

கமர்கட் படத்தை கமரகட்டு என பெயர் மாற்றி ....ர் வரக்கூடாதாம் செண்டிமெண்டு!

கோலிவுட் சென்ட்டிமென்ட் கமர்கட் படத்தையும் விட்டுவைக்கவில்லை. வார்த்தைக்கு நடுவில் ஒற்று எழுத்து வரக்கூடாது என்று சிலர் சொல்ல உடனே கமர்கட் படத்தை கமரகட்டு என பெயர் மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன். அவர் கூறியது: நிறைவேறாத ஆசையில் இறந்தவர்கள்தான் பேயாக வருவார்கள் என்பார்கள். அப்படி வரும் 2 பேய்களை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று திட்டம் வகுக்கும் இளைஞர்களின் கதை. புகை நடுவில் வெள்ளை உருவம், விகார தோற்றம் என வழக்கமான பாணியில் இல்லாமல் புது டெக்னிக்கில் பேய் உருவம் கையாளப்பட்டிருக்கிறது. யுவன், ஸ்ரீராம், பகோடா பாண்டி, ரக்ஷா ராஜ், மனிஷா ஜித் நடித்திருக்கின்றனர். இதில் நடித்த ஜோடிகளை கேரக்டருக்கு ஏற்ப நண்பர்களாக்குவதற்குள் பலமுறை கேஎப்சி ஸ்டாலுக்கும், ஐஸ்கிரீம் பார்லருக்கும் அழைத்துச் சென்று கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து தாஜா செய்ய வேண்டி இருந்தது. எப்.எஸ்.பைசல் இசை அமைத்திருக்கிறார். மே முதல்வாரம் படம் ரிலீஸ். - See more at: tamilmurasu.org/

இந்திய ஜாதிகொடுமை பற்றி ஐநா அறிக்கை!

நியூயார்க், ஏப்.9-_ இந்தியாவில் நிலவும் ஜாதீயக் கொடுமைகள் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை மறுக்கப்பட்ட நிலை குறித்து அய்.நா. மன்றத்தில் பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியம் (IHEU)அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஜாதீய பாகுபாடுகள் குறித்து அய்.நாவின் மனித உரிமைகள் குழுவின் அறிக் கையை பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியம் அளித்துள்ளது.
நீதி மற்றும் அமைதிக் கான அம்பேத்கர் மய்யம் அமைப்பின் நிறுவனரும், தலைமை ஆலோசகருமாக யோகேஷ் வர்கடே கடந்த 40 ஆண்டுகளாக மனித உரிமைக்கான களத்தில் பங்களிப்பை அளித்து வருகிறார்.  அவர் தொடங் கிய நீதி மற்றும் அமைதிக் கான அம்பேத்கர் மய்யம் அமைப்பின் சார்பில் ஜாதி குறித்து மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி வரு கிறார். அய்நா அவையின் மில்லினியம் வளர்ச்சி நோக்கங்கள் ஆலோசக ராகவும் இருக்கிறார்.

திருப்பதி காட்டில் இன்னும் 30 பேரை காணவில்லை ! அவர்களின் நிலை கேள்விகுறி?

வேலூர்: ஆந்திர மாநில காட்டில் துப்பாக்கிச் சூடு நடந்த போது, தப்பி யோடிய, தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள், சேஷாசலம் காட்டில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கதி என்ன என்பது மர்மமாக உள்ளது.கடந்த 7ம் தேதி, ஆந்திர மாநில வனப்பகுதியில், செம்மரம் கடத்தியதாக, துப்பாக்கியால் சுட்டதில், தமிழகத்தை சேர்ந்த, 20 பேர் கொல்லப்பட்டனர். செம்மரம் கடத்தலில் சர்வதேச அளவில், 'பெரும்புள்ளி'களாக, கடப்பாவைச் சேர்ந்த பாஸ்கர் நாயுடு, ஐதராபாத்தை சேர்ந்த ராமா நாயுடு, கர்னூலைச் சேர்ந்த வெங்கடேசம் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள் மூலம் தான், செம்மரம் கடத்தி வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர்களுக்கு, சர்வதேச அளவில் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள சர்வதேச கடத்தல் கும்பல் பட்டியலில், இவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.

வியாழன், 9 ஏப்ரல், 2015

டாக்டர் ராமதாஸ்: மோடி ஏன் இன்னும் பேசாமல் இருக்கிறார் ?. 20 தமிழர்கள் கோரக் கொலை...

சென்னை: 20 தமிழர்களை ஆந்திர மாநிலப் போலீஸார் கொன்று குவித்துள்ளனர். இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மெளனம் கடைப்பிடித்து வருகிறார். இது ஏன் என்று புரியவில்லை என்று கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில சிறப்புக் காவல்படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்திருக்கின்றனர். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக ஆந்திரக் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் கூறிய காரணங்கள் அனைத்தும் பொய் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலையிலிருந்து சித்தூருக்கு கட்டிட பணிக்காக பேருந்தில் சென்ற தொழிலாளர்களை கடத்திச் சென்று ஆந்திரக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். காவல்துறையிடமிருந்து தப்பி வந்த சேகர் என்பவர் இதை உறுதி செய்திருக்கிறார். எந்தவித கோபமூட்டலும் இல்லாத நிலையில், இக்கொடிய செயலை ஆந்திரக் காவல்துறை அரங்கேற்றியிருப்பதன் பின்னணியில் பெரிய சதி இருப்பதாகவே தோன்றுகிறது.

மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான கேரள தொழில் அதிபர் சரிதா நாயர் தான் எழுதிய கடிதத்தில் மலையாள நடிகர் மோகன்லால் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார் என்று உள்ளூர் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சரிதா நாயர். அவர் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் சோலார் பேனல்களை பொருத்திக் கொடுக்கிறேன் என்று கூறி கேரளா மற்றும் தமிழகத்தில் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஆந்திரா Minister Bojjala Reddy: ஆந்திர போலீசார் செய்தது சரிதான்! இது முடிவு அல்ல, ஆரம்பம்? So சந்திரபாபுவுக்கும் தெரிந்தே ?


அதிரடி படையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டதால்தான் தமிழக தொழிலாளர்கள் மீது என்கவுன்ட்டர் நடத்தியதாகவும் இது முடிவு அல்ல ஆரம்பம் என்றும் ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: போலீஸார் மீது ஆயுதங்களால் கடத்தல் கும்பல் தாக்கியது. இதனால்தான் போலீஸார் தற்காப்புக்காக சுட நேர்ந்தது. என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களே. பல முறை எச்சரிக்கை செய்தும் ஏன் இவர்கள் பணத்துக்காக ஆசைப்பட்டு மரங்களை வெட்ட இங்கு வர வேண்டும்? இவர்களுக்கு வனப்பகுதியில் என்ன வேலை? ஆந்திர போலீஸார் செய்தது சரிதான். இது முடிவு அல்ல ஆரம்பம். இதுகுறித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் உண்மை வெளிவரும். ஆந்திர வனப்பகுதிகளில் செம்மரங்கள் கடத்தப்படுவதை முற்றிலுமாக தடுக்க அரசு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.  /tamil.thehindu.com  நம்ம ஆளுங்க திருப்பதிக்கு  போயி ஏன்தான் துட்டை கொட்டுராய்ங்களோ ? சூடு சுரணை இருக்கா?

ஜெயலலிதாவின் தங்கை சைலஜா மரணம்! இப்போதும் ஜெயா கண்டுகொள்ளவே இல்லை! தங்கை மீதுதான் எவ்வளவு பாசம்? .

Mr Vasudevan is Ms Jayalalithaa’s step brother. Their father was married to Jayamma, who was Mr Vasudevan’s mother, and Sandhya, who was Ms Jayalalithaa’s mother. Ms Jayalalithaa has two siblings Ms Shailaja and Mr Jayakumar. Ms Shailaja lives in Bengaluru, while the whereabouts of Mr Jayakumar are not known. Mr Vasudevan’s grandfather N. Rangachar was a Mysore Palace doctor during the reign of Krishnaraja Wadiyar IV.http://www.deccanchronicle.com/140927/nation-politics/article/jayalalithaas-elder-brother-vasudevan-feels-sorry-amma பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை  சைலஜா பெங்களூருவில் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஜெயலலிதா தனது தாய் சந்தியா இவரை வளர்க்க சிரமபட்டு ஒரு மேக்கப் மானிடம் வளர்க்க கொடுத்திருந்தார். சந்தியா வந்து பார்ப்பதை அந்த மேக்கப்மன் அவ்வளவாக விரும்புவதில்லை. எனவே தொடர்புகள் விடுபட்டு போய்விட்டன. என்றாலும் ஜெயலலிதாவை ஓரிரு தடவைகள் கூடி கொண்டு போய் தங்கையை காட்டியுளார். ஆனாலும் ஜெயாவுக்கு ஏனோ அவரை பிடிக்கவில்லை. அவரை மட்டும் அல்ல தனது மூத்த அண்ணனான வாசுதேவனையும் கூட பிடிப்பதில்லை. அவர் இப்போது கர்நாடக அரசின் வயோதிபர் உதவி தொகையில் காலம் கழிக்கிறார் .ஜெயலலிதாவின் பூர்வீகம் மண்டியா மாவட்டத்திலுள்ள மேல்கோட்டையாகும். அவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரிலுள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். இந்நிலையில் சைலஜா என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் தங்கை என்று  கன்னட மீடியாக்களுக்கு பேட்டியளித்திருந்தார். இதையடுத்து அந்த மீடியாக்களுக்கு ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பினார்.  இந்த சைலஜா பெங்களூரின், கெங்கேரி அடுத்த ராமச்சந்திரா என்ற பகுதியில் ஏழ்மை நிலையில் வசித்து வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தனது மகள் அமிருதாவை அழைத்துக் கொண்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலைக்கு ஜெயலலிதாவை பார்க்க வந்தார். ஆனால், ஜெயலலிதா யாரையும் பார்க்க மறுப்பு தெரிவித்துவிட்டதால், சைலஜா ஏமாற்றத்துடன் திரும்பினார்.

பஸ்ஸில் சென்றவர்களை பிடித்துச் சென்று கட்டிவைத்து சுட்டுக் கொன்றார்கள்: பலியானவரின் தம்பி அதிர்ச்சி தகவல்

திருப்பதி அருகே நடந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் தப்பி வந்தவர் கொடுத்த தகவலை யடுத்து, பஸ்ஸில் சென்ற தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் பிடித்துச் சென்று கட்டி வைத்து சுட்டுக் கொன்றார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதி யில் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி 20 தமிழர்களை நேற்று முன்தினம் அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன் றனர். கடத்தல் காரர்களை சுற்றி வளைத்தபோது, அவர்கள் தங்களை தாக்கியதாக வும் தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், இது போலி என்கவுன்ட்டர் என்றும் திட்டமிட்டே தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூறிவருகின்றன. நிச்சயமாக சந்திரபாபு  நாயுடுவுக்கு   தெரிந்தே  இந்த கொலைகள்நடந்திருக்கிறது .யாரையோ காப்பாற்ற  கவனத்தை  திசை திருப்ப  இந்த  படுகொலைகள் ?

சுயமரியாதை பாடகர் நாகூர் ஹனீபா காலமானார் !

பிரபல பாடகர் நாகூர் ஹனீபா( வயது 90 ) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் நாகூர் ஹனீபா. நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்.
பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் நேசத்திற்குரியவர். கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்தின் அன்பைப் பெற்றவர். தமிழக அரசியல் களத்திலும், இஸ்லாமியப் பண்பாட்டுத் தளத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர அவரது பாடல்கள் ஒலிக்காத பெருநாள்கள் இல்லை. அவர் குரல் கேட்காத கூட்டங்கள் இல்லை. அவரது பாடல்களில் உருகாத நெஞ்சங்கள் இல்லை. இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் 1925 டிசம்பர் 25 ஆம் நாள் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நாகூர் ஹனீபா. இஸ்மாயில் முஹம்மது ஹனீபா என்பது இயற்பெயர். அப்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனீபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.

எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்! நூற்றாண்டின் இணையற்ற இலக்கியவாதி திரைப்பட இயக்குனர் ...

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் ( வயது 82) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று(8.4.2015) காலமானார். யாருடைய சாயலும் இல்லாமல் தனக்கென தனி முத்திரை பதித்து, சிறுகதை மன்னன் என்று அழைக்கப்பட்டு, எழுத்துலகில் புகழ்பெற்று விளங்கிய காலத்திலேயே எழுதுவதை நிறுத்தி கொண்டிருந்த ஜெயகாந்தன், கடந்த பல மாதங்களாகவே உடல்குன்றியிருந்து வந்து, சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் இன்று பிரிந்தது. 1934-ல் கடலூரில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார் ஜெயகாந்தன். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.

பிரான்சின் பிராந்திய தேர்தலில் இலங்கை தமிழர் சேர்ஜியா மகேந்திரன் மீண்டும் பெருவெற்றி ! Cergya Mahendran (UDI) with 74,99% votes

பிரான்ஸ் :பிராந்திய தேர்தலில் 95வது நிர்வாக அலகின்,கார்ஜ் லெ கொணேஸ் (Garges les gonesse ), மற்றும் அர்னோவில் (Arnouville ) ஆகிய பகுதிகள் இணைந்த கன்ரோனில்,  UMP சார்பில் போட்டியிட்ட சேர்ஜியா மகேந்திரன் பெற்ற பெரு வெற்றியை பாராட்டியே ஆகவேண்டும்.பொதுச் சேவையில் கடின உழைப்புடனும், நடுநிலையுடனும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள, தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறைப் பெண் சேர்ஜியா மகேந்திரன் பெற்ற இரண்டாவது வெற்றி இத 2013ம் ஆண்டு இடம்பெற்ற கார்ஜ் லெ கொணேஸ் (Garges les gonesse ),பகுதி நகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்று அங்கு துணை மேயராக (Maire Adjoint), தெரிவு செய்யப்பட்ட சேர்ஜியா தற்போது பிராந்திய சபைக்கும் (Conseil Dpartemental )தெரிவு செய்யப்பட்தனை அவரது  பொதுப்பணியின் அடுத்தபடியாகவே நோக்க வேண்டும இளமையின் துடிப்புடன் புதிய பொறுப்பினை ஏற்றுள்ள சோஜியா தனது கடமைகளில் சுறசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.கார்ஜ் லெ கொணேஸ் (Garges les Gonesse ) பகுதியிலிருந்து,  டுனி (Dugny) ஊடாக லி புர்ஜே (le bourget) வரை Tram சேவை,  இந்தப் பகுதியின் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் சீரமைப்பு உட்பட்ட பல வாக்குறுதிகளுடன் தெரிவாகியுள்ள  UMP இன்  பிராந்நிய நிர்வாக குழுவினதும் குறிப்பாக சேர்ஜியா மகேந்திரனிதும் பணிகள் சிறக்க வாழ்த்துவோம்.thenee.com

புதன், 8 ஏப்ரல், 2015

பத்ரி :அஇஅதிமுக ஆட்சியில் ஊழல் மிகவும் தெளிவாக, திட்டமிட்ட வகையில், கட்டுக்கோப்பாக நடக்கிறது.

மிகத் தெளிவாக ரேட் கார்ட் போடப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது. புதிய தனியார் பள்ளி (சமச்சீர்) தொடங்கி 1-8 வகுப்பு வரை நடத்த அனுமதி பெறவேண்டுமானால் ரூ. 6 லட்சம் கல்வி அமைச்சருக்குத் தரவேண்டும். இதனை கல்வி அமைச்சரின் தனிச் செயலர் பெற்றுக்கொள்வார். 9-10 வகுப்புகளுக்கு நீட்டிக்க, மேலும் ரூ. 4 லட்சம். 11-12 வகுப்புகளுக்கு இன்னுமொரு ரூ. 4 லட்சம். பள்ளிகளின் அனுமதி நீட்டிப்புக்குத் தலா ரூ. 2 லட்சம். சிபிஎஸ்இ பள்ளி தொடங்க, மாநில அரசிடமிருந்து நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் பெற 35 லட்ச ரூபாய். என் நண்பர்கள் பலர் பள்ளிகளை நடத்திவருகின்றனர். 
ஊழல் சாம்ராஜ்ஜியம் தற்போது நடந்துகொண்டிருக்கும் அஇஅதிமுக ஆட்சியை தமிழக ஊழல் வரலாற்றின் உச்சம் என்று சொல்லலாம். ஊழல் பற்றி என் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் அதனைப் பெரும்பாலும் “ஜெயலலிதா vs கருணாநிதி” என்று சுருக்கி, “ஏன் திமுக மட்டும் ஊழல் செய்யவில்லையா?” என்று கேட்பார்கள். இவ்விருவரையும் விட்டால் வேறு கதி இல்லை என்பதால், ஊழலை நகர்த்திவிட்டு பிற காரணங்களுக்காக திமுகவா அல்லது அதிமுகவா என்று தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்திலேயே மக்கள் உள்ளனர். நான் இப்போது பேச வருவது தேர்தல் பற்றியே அல்ல. அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது பற்றியல்ல. இப்போதைய ஆட்சியில் நடக்கும் ஊழல் குறித்து மட்டுமே. இதனால் முந்தைய ஆட்சியில் ஊழலே இல்லை என்றோ இனி திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் நடக்காது என்றோ நான் சொல்லவில்லை என்பதை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.

தெலுங்கு சினிமா வில்லன்களை மிஞ்சிய ஆந்திர போலீஸ் கடத்தல் மாபியாக்களிடம் பணம்.....

தெலுங்கு சினிமா படங்களில் எப்போதுமே... ரத்த வாடை அதிகமாகவே இருக்கும் மசாலா சினிமாக்களில் ரத்தமும், சதையும் கலந்திருக்கும். தோள்களில் துப்பாக்கியை தூக்கி போட்டபடி... நர நரவென பல்லைக் கடித்துக் கொண்டே காட்சி அளிப்பார் வில்லன். ஈவு இரக்கமற்ற மனிதர்களைப் போல மிகவும் கொடூரமாக காட்டப்படும் இந்த வில்லன்கள், சின்ன சின்ன விவகாரங்களுக்கு கூட டுமீல்... டுமீல்... என சுடத் தொடங்கி விடுவார்கள். பெரும்பாலான படங்களில் அடிமைகளாக இருக்கும் ஏழை தொழிலாளிகள் வில்லன் நடிகரின் துப்பாக்கி குண்டுக்கு இரையாவதை பார்த்திருப்போம்.
திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளிகள் 20 பேர் ரத்தம் சொட்ட... சொட்ட... சுட்டு வீழ்த்தப்பட்டிருந்த காட்சிகள் தெலுங்கு சினிமாக் காட்சிகளையும் மிஞ்சும் வகையில் நெஞ்சை உறைய வைப்பதாக அமைந்துள்ளது.

சந்திரபாபுவின் உத்தரவிலேயே 20 தமிழர் சுட்டுப்படுகொலை: ஒய்.எஸ்.ஆர். காங். அதிர்ச்சி தகவல்

திருப்பதி: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நேரடி உத்தரவில்தான் 20 தமிழரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 20 தமிழர் படுகொலை குறித்து ஆந்திராவின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் வாசு ரெட்டி வர்மா கூறியுள்ளதாவது: சந்திரபாபுவின் நேரடி உத்தரவிலேயே 20 தமிழர் சுட்டுப்படுகொலை: ஒய்.எஸ்.ஆர். காங். அதிர்ச்சி தகவல் 20 தமிழக தொழிலாளர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 500 பேர் செம்மரம் வெட்ட வந்ததாக போலீசார் கூறுகிறார்கள். இவர்கள் வரும் போதே போலீசார் ஆந்திர எல்லையில், செக்போஸ்டுகளில் தடுத்து நிறுத்தாதது ஏன்? இந்த கொலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நேரடி ஏற்பாட்டில் நடந்து இருக்கிறது. சந்திரபாபு நாயுடு ஒரு நாளைக்கு முன்பே திருப்பதி வந்து விட்டார். மறுநாள் இரவு 8.30 மணி வரை அங்கு இருந்திருக்கிறார். அவரது ஆலோசனையின் பேரில் தொழிலாளர்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அவரது உத்தரவின் பேரிலேயே போலீசார் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

டாக்டர் நேரு : என்னையே இந்த வாட்டு வாட்டி எடுத்தா மத்தவன் என்ன பாடுபடுவான்? மந்திரி சொல்கிறவர்களுக்கு மட்டும் வைத்தியம் பாருன்னா?

தற்கொலை முடிவை தூண்டியது யார்’ என்பது குறித்து திருச்சி அரசு மருத்துவமனையின் முன்னாள் ஆர்எம்ஓ-வும், மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியருமான நேரு பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து 2 மாதங்களுக்கு முன் மாற்றலாகி, திருச்சி அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ-வாக பொறுப்பேற்றுக் கொண்டவர் நேரு. அவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்தபோது தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து நலமுடன் நேற்று வீடு திரும்பினார். அவர் ஆர்எம்ஓ பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு நேற்று முதல் ஒரு மாதத்துக்கு விடுப்பு எடுத்துள்ளார்.

பாஜக : நிலச் சட்டம் நிறைவேறினால் நிலமில்லா 30 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு! இனி எல்லாம் சொர்க்கம்தான்?

நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறினால், தொழில் துறை மூலம் நிலம் இல்லாத 30 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
சிறிய தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சம் வரையில் கடன் கொடுக்க வழிவகுக்கும் முத்ரா வங்கியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார்.
ரூ.20 ஆயிரம் கோடி நிதி முதலீடு கொண்ட முத்ரா வங்கியின் முதல் கிளையை தொடங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
அப்போது, "நிலம் இல்லாத ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். நிலம் கையகபடுத்தும் மசோதா நிறைவேறினால், நாட்டில் தொழில் நிறுவனங்கள் பெருகும். இதன்மூலம் நிலம் இல்லாத 30 கோடி ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முடியல்ல ,இந்த அளவு டுபாக்கூர் ஆளுங்க இதுவரை மத்தியில் ஆட்சிக்கு வந்ததில்லை!

வசூல் பல ஆயிரம் கோடி ரூபாய் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வீட்டில் பதுக்கல்: இளங்கோவன்!

அதிமுக அமைச்சர்களின் லஞ்ச வசூல் பல ஆயிரம் கோடி ரூபாய் இடைப்பாடி வீட்டில் பதுக்கல்: இளங்கோவன் தமிழக அமைச்சர்கள் தங்கள் துறைகளில் வசூல்வேட்டை நடத்தி, வருகிற தொகை முழுவதும் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் பகுதி மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் புதன்கிழமை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக ஆட்சி லஞ்சத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் பல்வேறு அமைச்சகங்களில் லஞ்ச வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளில் நடத்துகிற வசூல் வேட்டை முழுவதையும் அதிமுக தலைவிக்கு கப்பம் கட்ட வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறார்கள். கப்பம் கட்டுவதில் ஒரு பங்கை சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் எடுத்துக் கொள்வதற்காகத் தான் கொத்தடிமை அரசியலை நடத்தி வருகிறார்கள்.    இதுதாண்டா புதிய டப்பிங்  படம் கொள்ளைக்காரியும்   கொத்தடிமைகளும்!

119 பணியிடங்களை நிரப்ப ரூ .20.80 கோடி லஞ்சம்! ஒப்புதல் வாக்குமூலம்! எல்லா புகழும் கமிசனும் அம்மாவுக்கே !

நெல்லை: வோளாண்மைத்துறையில் காலியாக இருந்த 119 பணியிடங்களை நிரப்ப தலா ஒன்றேமுக்கால் லட்சம் வீதம் 20.80 கோடி லஞ்சப்பணம் பெற்றுத் தரும்படி அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார் என்று வேளாண்மைத்துறை தலைமை பொறியாளர் செந்தில் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நானாக லஞ்சம் கேட்கவில்லை அமைச்சர் சொன்ன தகவலைத்தான் சொன்னேன், முத்துக்குமாரசாமியை நான் மிரட்டவில்லை என்றும் அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த வேளாண்மை துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கு 7 டிரைவர்களை நியமிப்பது தொடர்பாக மேலிடம் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து வேளாண்மைத்துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

புரோக்கர்களின் பணத்தாசையால் அப்பாவி இளைஞர்கள் 'பலிகடா' - ஜவ்வாதுமலை கிராமங்களில் பதற்றம்

புரோக்கர்களின் பணத்தாசையால் ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்டச் செல்லும் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுவதாகவும் கடத்தலில் மூளையாக செயல்படும் நபர்களைப் பிடிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக- ஆந்திர எல்லையில் அதிக அளவிலான செம்மரங்கள் வளர்ந்துள்ளன. சேஷாச்சலம் வனப்பகுதியில் வெட்டி கடத்தப்படும் செம்மரங்கள் பெரும்பாலும் வேலூர் மாவட்டம் வழியாக சென்னைக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. கிறிஸ்டி யான்பேட்டை, பொன்னை சோதனைச் சாவடி மற்றும் சோளிங்கர் வழியாக செம்மரம் கடத்தப்படுகிறது. ஆம்பூர், ராணிப்பேட்டை, சோளிங்கர், காவேரிப் பாக்கம் உள்ளிட்ட பகுதியில் செம்மரங்கள் பதுக்கி சென்னைக்கு கடத்தப்படுகிறது.

Aiadmk தலைமையை காப்பாற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி பலிகடாவா? வாழ்க தியாகி/அடிமை அக்ரி ?

சென்னை: வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்ததை தொடர்ந்து இந்த விவகாரத்தில் மேலும் சில ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களும் சிக்குகின்றனர். அவர்களை காப்பாற்ற மூத்த அமைச்சர்கள் முயற்சிப் பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணை கோரிக்கை வலுப்பெற துவங்கியுள்ளது.திருநெல்வேலி வேளாண் அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் முத்துகுமாரசாமி. இவர் சமீபத்தில் நெல்லையில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்வதற்கு காரணம் முன்னாள் வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர்கள் தொலைபேசியில் மிரட்டியதும், அதைத் தொடர்ந்தே முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாகவும் தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டின. வழக்கை சிபிஐக்கு மாற்ற விடாமல் தடுக்கத்தான் இந்த கைது நாடகமோ?

20 தமிழர்களை கைது செய்து அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர்!


உறவினர்கள் அதிர்ச்சி தகவல்! >திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20 பேரில் 8 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் போளுரை அடுத்துள்ள வேட்டகிரிபாளையத்தைச் சேர்ந்த பெருமாள், முருகன், சசி, அர்ஜினாபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன், காளசமுத்திரத்தைச் சேர்ந்த பழனி, முருகப்பாடியைச் சேர்ந்த முனுசாமி மற்றும் மூர்த்தி ஆகிய 7 பேரின் விவரங்கள் தெரிய வந்துள்ளன.கடந்த திங்கள்கிழமை இந்த கிராமங்களில் இருந்து திருப்பதிக்கு இந்த தொழிலாளர்கள் சென்றுள்ளனர். தமிழக எல்லைப் பகுதியான திருத்தணில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த அவர்களை போலீசார் கைது செய்ததாகவும், பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு கொலை செய்ததாகவும் அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.>அர்ஜினாபுரத்தில் உள்ள மகேந்திரன் குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

ராசா ஆவேசம் :2ஜி ஸ்பெக்ட்ரம் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு எதுவும் தெரியவில்லை

சேலம்: '2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த புகாரில், சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு நான் தெரிவித்த கருத்துகள் எதுவுமே தெரியவில்லை' என, சேலத்தில் நேற்று நடந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், மாஜி மத்திய அமைச்சர் ராசா ஆவேசமாக பேசினார்.
சேலம் மாநகர் மத்திய மாவட்டம் சார்பில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாஜி மத்திய அமைச்சர் ராசா பேசியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்றாண்டுகள் ஆகி விட்ட நிலையில், என் மீதான புகாரை சி.பி.ஐ., இன்னும் நிரூபிக்கவில்லை. விசாரணைக்காக சி.பி.ஐ., என்னை அழைத்துச் சென்ற நிலையில், எனது மனைவியின் பெயரில் வெளிநாட்டில், 3,000 கோடி ரூபாய் பதுக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., அதிகாரிகள் பத்திரிகைக்கு தவறான தகவலை பரப்பினர். ஆனால், சி.பி.ஐ.,யின் விசாரணைக்காவல் முடிந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், எனது மனைவியின் பெயரில் பணம் பதுக்கி இருந்தால், எவ்வித வழக்கு விசாரணை இன்றி, வாழ்நாள் முழுவதும் சிறை செல்ல தயார் என நீதிபதி முன் தெரிவித்தேன்.

பணம் வாங்க வற்புறுத்தியது அமைச்சர் அக்ரிதான்: தலைமை பொறியாளர் செந்தில் வாக்குமூலம் or ஆப்பு !

உங்கள் விருப்பப்படியே நியமனம் செய்து கொள்ளுங்கள். ஆனால், ஒரு நியமனத்துக்கு, தலா, 1.75 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்து விடுங்கள். இது மேலிடத்து உத்தரவு' என்றார். 'மேலிடத்து உத்தரவு' என்று சொன்னதால், என்னால் மீற முடியவில்லை.
முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தற்கொலை செய்து கொண்ட வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியிடம் இருந்து பணம் வாங்கச் சொல்லி வற்புறுத்தியதாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், வேளாண் துறையின் தலைமை பொறியாளர் செந்தில் தெரிவித்து உள்ளார்.நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும், தலைமைப் பொறியாளர் செந்திலை யும் கைது செய்தனர்.தலைமைப் பொறியாளர் செந்தில், நடந்தவை குறித்து, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.  மேலிடம்னா யாரு? இருக்கறது ஒரே குடும்பம் தானே? அம்மா சின்னம்மா? ஒரு சமயம் பன்னீர் செல்வம் கூறிய வார்த்தை " அதிமுக காரர்களுக்கு சுய சிந்தனை சுயமான செயல் எதுவும் இல்லை எல்லாம் அம்மா வழிகாட்டுதல் தான் என்றார்...ஊழலுக்கு மட்டும் இந்த அடிமைகளா

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

அந்த கால நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி இது என்ன மாயமோ நாயகி

விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘இது என்ன மாயம்' . விஜய் இயக்குகிறார். ரஜினி நடித்த ' நெற்றிக்கண்'  மற்றும் ' ராமாயி வயசுக்கு வந்துட்டா'  படங்களில் நடித்தவர் மேனகா. இவரது மகள் கீர்த்தி. ' இது என்ன மாயம்'  படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மகளுடன் மேனகா விழாவில் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா படத்தில்தான் நான் அறிமுகமானேன். அப்போது எங்களிடம் கார் வாங்கக்கூட வசதி கிடையாது. சென்னை சபையர் தியேட்டர் அருகே அந்த படத்தின் கட் அவுட் வைத்திருப்பதாக கூறினார்கள்.இதை கேள்விப்பட்ட எனது அம்மா, அப்பா என்னை ஒரு ஆட்டோவில் நள்ளிரவு 12.30 மணிக்கு அந்த போஸ்டரை பார்க்க அழைத்துச் சென்றார்கள். அப்போது என்  பெற்றோரின் உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்று என் மகள் கீர்த்தி கதாநாயகியாக நடிக்கிறாள். கீர்த்தியின் அம்மாதான் மேனகா என்று இங்கே கூறும்போது என்னை நினைத்து என் பெற்றோர் எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது'  என இவ்வாறு கூறும்போது மேனகா கண் கலங்கினார். அப்போது விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.நிகழ்ச்சியில் ராம்குமார், பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர், தயாரிப்பாளர் ச - See more :tamilmurasu.org/

BREAKING: Missing MH370 மலேசிய விமானத்தை பார்த்த குடஹுவதூ தீவு மக்கள்

மாலத்தீவு,ஏப்.07 (டி.என்.எஸ்) மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை, குடஹுவதூ தீவு மக்கள் பார்த்ததாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. மலேசிய விமானமான எம்எச் 370 மாயமாகி ஓராண்டுக்கும் மேலான நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மிகவும் குட்டித் தீவான குடஹுவதூ தீவு வாசிகள், அன்றைய தினம் மிகவும் தாழ்வாக பறந்த மிகப்பெரிய விமானம் ஒன்றை பார்த்ததாகக் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி காணாமல் போன விமானம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், குடஹுவதூ தீவு வாசிகள், அன்றைய தினம், மிகவும் தாழ்வாக பறந்த விமானத்தைப் பார்த்ததாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் கூறியுள்ளனர். விமானத்தைப் பார்த்தது பற்றி அன்றைய தினம் தீவுவாசிகள் பேசிக் கொண்டனர். ஆனால், விமானம் மாயமான தகவல்கள் அன்றைய தினம் அவர்களுக்குத் தெரியவில்லை. பிறகுதான் விமானம் மாயமான தகவல் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஒரு வேளை தாங்கள் பார்த்த விமானம்தான் அந்த மாயமான விமானமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். விமானம் பறந்து சென்ற சில நிமிடங்களில் பலத்த சத்தத்தையும் அவர்கள் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.://tamil.chennaionline.com

ஆ.ராசா:வாட்ஸ்-அப், பேஸ்புக் வெற்றிக்கு 3 ஜி தான் காரணம்: அதை அறிமுகம் செய்துவைத்தது நான்தான்

 சேலம்  தொழிற்பேட்டை அருகில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், பொது கூட்டமும் நடந்தது. கூட்டத்திற்கு 3–வது கோட்ட செயலாளர் ஜி.குமரவேல் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர், ''ஸ்பெக்ட்ரமில் தவறு ஏதும் நடக்கவில்லை. இதற்கு ஆதாரம் இல்லை என கூறப்பட்டு விட்டது. கொள்கை முடிவு எடுத்த பின்னர் தான் இதற்கு அனுமதி தரப்பட்டது. தற்போது அனைவரிடத்திலும் செல்போன் உள்ளது. இதன்மூலம் அனைவரும் வாட்ஸ் ஆப், பேக்ஸ்புக், டுவிட்டர் பயன்படுத்துகிறார்கள். இந்த வெற்றிக்கு காரணம் 3ஜித்தான். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் 3ஜியை அறிமுகம் செய்தது இந்த ராசாத்தான். அதையும் சென்னையில் தலைவர் கலைஞரை வைத்து தொடங்கி வைத்தேன்.

சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி தத்து விசாரிக்கக் கூடாது – PRPC

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பிணைக்காலம் முடிவடைவதை ஒட்டி, அவர்களது மனு ஏப்ரல் 17-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தத்து அவர்களிடம் விசாரணைக்கு வருகின்றது.
ஏற்கெனவே திரு தத்து பிறப்பித்துள்ள பிணை உத்தரவு, சட்டத்துக்கும், மரபுகளுக்கும் முரணாகவும், ஒரு தலைபட்சமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. மேற்கூறிய உத்தரவு தொடர்பாக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் உள்ளது. எனவே, இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து அவர் விலகிக் கொள்ள வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர்களின் ஆதரவுடன் குடியரசுத் தலைவரிடம் புகார் மனுவொன்றை அளிக்கவிருக்கிறோம். அப்ப வாங்கின துட்டு ?

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க, வரும் 15-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பவானி சிங் நடுநிலையாக செயல்படவில்லை. எனவே அவரை நீக்கிவிட்டு, அரசு தரப்பில் வாதாட வேறு வழக்கறிஞரை நியமிக்கும் வரை ஜெயலலிதா வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், பானுமதி கொண்ட அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

சோழர்களுக்கு முன்பே உருவான பல்லவர்கள் ஈழத்தவர்கள்! யாழ் குடாநாடுதான் மணிபல்லவம்? மறைக்கப்பட்ட வரலாறு?

சிவமேனகை : புத்தர் இலங்கைக்கு வந்த கி மு 6 ம் நூற்றாண்டு காலத்தில் ஈழத்தில் 3 கோடி நாகர்கள் இருந்தார்கள் என்று வரலாற்றில் வருகின்றது.அதன் பின்னர் கி மு 200/300 இல் ஈழத்தை தாக்கிய 4காவது மிக பெரிய கடல் அழிவு ஈழத்தின் வட பகுதியையும் வட மேற்கு பகுதியையுமே பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியது என கருதப்படுகின்றது. இந்த காலத்தில் கடல் அழிவில் தப்பி பிழைத்த மக்கள் தொண்டை மண்டலத்தில் சென்று வாழ்ந்தார்கள்.
இவர்கள் தொண்டை மண்டலத்துக்கு சென்று வாழ்ந்ததுக்கு ஒரு காரணம் இருக்கிறது.அந்த காலத்தில் அந்த பகுதியை ஆண்ட சோழ அரசன் கிள்ளி வளவன் (சிலர் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் சிலர் இவன் மகன் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் )ஈழத்து மணிபல்லவ நாக இளவரசி பீலியவளையை திருமணம் செய்து இருந்தான்.அவர்களுக்கு பிறந்த மகன் பிற்காலத்தின் தொண்டமான் இளம்திரையன் என அழைக்கபட்டவனும் இந்த கடல் அழிவில் குழந்தையாக தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தவன். இளமையில் (குழந்தையில்) திரையில்(அலையில்)அகப்பட்டு வந்ததால் காரண பெயர் இளம்திரையன்.எனவே அவனுடன் திரையில் பாதிக்க பட்டு வந்த மக்களும் தொண்டை மண்டலத்தில் வந்து வாழ்ந்தார்கள்.இவன் வந்த பின்னரே இந்த இடத்துக்கு தொண்டை மண்டலம் என்று பெயர் வந்தது என்றும் கருத்து இருக்கிறது.

சுப.வீரபாண்டியன் : புலம்பெயர்தமிழர்கள் பார்பனீயத்தை உலகெங்கும் பரப்பிவிட்டார்கள் என்பது வருத்தக்க உண்மையாகும் ....

தாலி தேவையா ? பெண்கள் என்னதான் சொல்கிறார்கள்? நேரடி பேட்டிகள்!

பெண்களுக்கு தாலி தேவையா, தேவை இல்லையா” என்கிற விவாத நிகழ்ச்சியை நடத்த இருந்ததற்காக, பெயர்ப் பலகை இந்து அமைப்பு ஒன்றால் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் கடந்த மார்ச் மாதத்தில் தாக்கப்பட்டது. இது ஏதோ சில அனாமதேய அற்பங்களின் பிரச்சினை அல்ல. ஏனெனில், “இந்த விவாதத்தை நடத்தக் கூடாது” என்று ஆர்.எஸ்.எஸ் வானர கூட்டமே அதிகாரப்பூர்வமான எதிர்ப்பையும், வன்முறையையும் அரங்கேற்றியது.
அதே போன்று பெரியார் இயக்கங்கள் தாலி அகற்றும் நிகழ்ச்சியை அறிவித்து நடத்துவதையும் இவர்கள் தடை செய்ய முயற்சிக்கிறார்கள். மோடி ஆட்சி வந்ததிலிருந்து இத்தகைய பார்ப்பன இந்துமதவெறி திட்டங்கள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட்டே வருகின்றன.
சமஸ்கிருதத் திணிப்பு, சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல், தேவாலயங்கள் மீதான தாக்குதல், மாட்டிறைச்சிக்குத் தடை போன்று நாத்திகத்தையும், பார்ப்பன சடங்குகளின்றி நடத்தப்படும் சுயமரியாதை திருமணத்தையும் தடை செய்ய இவர்கள் கண்டிப்பாக முயல்வார்கள்.

பெண் பத்திரிகையாளர் நடிகை மாயாவினால் தாக்கப்பட்டார்! Flashback ஜெயாவுக்காக தற்கொலை டிராமா ஆடிய ex கவர்ச்சி .....


சென்னையில் பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நடிகை மாயா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான பத்திரிகையாளர் பெயர் மனோஹாரி என்பதாகும். இவர், ஜெயப்பிரியா முரசு என்ற பத்திரிகையில் சப் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்... நடிகை மாயா மீது புகார் சாலிகிராமத்தில் வசித்து வரும் மனோஹாரியின் வீட்டருகே நடிகை மாயா வசித்து வருகிறார். நேற்றைய தினம் பணி முடிந்து வீடு திரும்பிய மனோஹாரியின் வீட்டருகே மாயாவின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாம். தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு இடமில்லை என்று கூறியதற்கு நடிகை மாயா தரக்குறைவாக பேசினாராம். பேச்சுவார்த்தை முற்றவே மனோஹாரியை நடிகை மாயாவும் அவரது மகனும், மகளும் அடித்து காயப்படுத்தியுள்ளார்.

ஆந்திரா -திருப்பதியில் 12 தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் சுட்டு கொலை! வனத்துறையினரின் கொடுரம்!


திருப்பதி தேவஸ்தானம் அமைந்துள்ள சேசாலம் மலைப்பகுதி சித்தூர், திருப்பதி, கடப்பா, கர்னூல், நெல்லூர் மாவட்டங்களில் உள்ளது. இந்த மலைப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்கள் அதிகம் உள்ளன.இந்த செம்மரக்கட்டைகளுக்கு சீனாவிலும், தெற்காசிய நாடுகளிலும் பெரிய அளவில் கிராக்கி உள்ளது. இதனால், சர்வதேச அளவிலான ஒரு மாபியா கும்பல், செம்மரக்கட்டைகளை வெட்டி, கடத்தி கோடி கோடியாய் வருமானம் பார்த்து வருகிறது.எனவே செம்மரம் கடத்தல் கும்பலை அடியோடு ஒழிக்க முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. செம்மரங்களை கடத்துபவர்ளை ஒழிப்பதற்கென சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து இருக்கின்றனர். 

Chennai ஆசிரியை Jerina கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் பிடிபட்டார்


மாடம்பாக்கம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ரேணுகாம்பாள் நகர் 1வது மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் காலை ஒரு பெண் கொலை செய்யப்பட்டு மழைநீர் கால்வாயில் வீசப்பட்டிருந்தார். இதுகுறித்து, சேலையூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தெரிய வந்ததாவது: பழைய வண்ணாரப்பேட்டை உய்யாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகள் ஜெரினா மரியா (27). சாந்தோமில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெரினா மரியா, பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, கொருக்குபேட்டை போலீசில் அல்போன்சா புகார் செய்தார்.

அ.தி.மு.க தலைமை நிர்ணயித்த கலெக்ஷன் கோட்டா/Target! அமைச்சர் விஜயபாஸ்காரால் மேலும் ஒரு அதிகாரி தற்கொலை முயற்சி ...

அமைச்சர் விஜயபாஸ்கர் துன்புறுத்தலால் மருத்துவர் நேரு தற்கொலைக்கு முயன்றதாக வரும் செய்திகள் கவலைக்குறியது : ஸ்டாலின் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவ பேராசிரியரும், அரசு மருத்துமனையில் ஆர்.எம்.ஓ. பொறுப்பு பதவியில் வகிக்கும் மருத்துவர் நேரு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருப்பது தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தன் முகனூல் வாயிலாக கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூலில், ‘’ வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் அறிவொளி தற்கொலைக்குப் பிறகு இப்போது திருச்சி அரசு பொது மருத்துமனை அசோசியேட் ப்ரபஸர் நேரு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

திங்கள், 6 ஏப்ரல், 2015

சுயமரியாதைத் திருமணத்தை ஒழிக்க பார்ப்பன சதி !

தந்தை பெரியார்சுயமரியாதைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் வேலையின் முதற்கட்டம் நீதித் துறை மூலம் அரங்கேறியுள்ளது.தந்தை பெரியாரின் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த 1967-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இந்து திருமணச் சட்டத்தில் பிரிவு 7-A எனத் திருத்தம் கொண்டு வரப்பட்டு சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாக்கப்பட்டது. இதுவே முதல் தி.மு.. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதல் சட்டமாகும். இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இந்த முற்போக்கான திருமணம் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது; தந்தை பெரியாரின் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்து திருமணச் சட்டத்தில் பிரிவு 7-A என திருத்தம் கொண்டு வரப்பட்டு சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாக்கப்பட்டது. பார்ப்பன புரோகிதர் இல்லாமல் நடைபெறும் திருமணம் சட்டப்படி செல்லும் என்னும் இச்சட்டத் திருத்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சட்டப்படி தமிழகத்தில் ஆயிரக்கணக்காண திருமணங்கள் நடந்துள்ளன; நடந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு சுயமரியாதைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் வேலையின் முதற்கட்டம் நீதித் துறை மூலம் அரங்கேறியுள்ளது. சுயமரியாதை திருமணத்திற்கு உரிமை கொண்டாடும் தி.. மற்றும் தி.மு..வினர், வழக்கம் போல் இப்பிரச்சனையையும் கண்டுகொள்ளவில்லை.
சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் பிரச்சனை மற்றும் வழக்குகளில் ஒதுங்கிக் கொண்டதைப் போலவே இதிலும் நடந்து கொண்டுள்ளனர். கருணாநிதியும், வீரமணியும் எதற்காக கோடிக்கணக்கில் பணமும், இலட்சக்கணக்கான தொண்டர்களையும், நூற்றுக் கணக்கான வழக்கறிஞர்களும் வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இருந்தாலும், பார்ப்பனீயத்திற்கெதிரான தந்தை பெரியாரின் பணிகளை தக்கவைப்பதும், தொடர்வதும் நமது கடமை. அந்த வகையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சுயமரியாதை திருமணத்தைக் காக்க களமிறங்கியுள்ளது.

வயது 25 வேலைக்காக சிங்கப்பூர் சென்றார் ! வெறும் நைட்டியோடு சென்னை விமான நிலையத்தில் மனநோயாளியாக திரும்பி வந்தார் .. நினைத்தாலே கொமட்டும் சிங்கப்பூர்


சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்நினைத்தாலே இனிக்கும் திருநெல்வேலி அல்வா போல கிழக்குலகின் பூலோக சொர்க்கமாக போற்றப்படுவது சிங்கப்பூர். பத்து வருடங்களுக்கு முன் வீட்டு வேலை செய்வதற்காக இந்த சொர்க்கத்திற்கு வண்டியேறியவர் கமலா. கிழக்கு தமிழகத்தைச் சேர்ந்த இவர் ஆட்களை ஏற்றுமதி செய்யும் தரகர் மூலமாக சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்< வயது வந்த பெண்கள் மூவரைக் கொண்ட ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கமலா. ஆஸ்துமாவால் அவதிப்பட்ட அப்பாவால் எந்த வேலையும் செய்ய முடியாது. ஆதலால் கமலாவின் அம்மாவும் வீட்டிலிருந்த மூணு கறவை மாடும் இக்குடும்பத்திற்கு ஏதோ கொஞ்சம் சோறு போட்டனர். வயிற்றுக்கு கிடைத்தாலும் மூன்று பெண்களை திருமணம் செய்து கொடுப்பதற்கு வீட்டில் வழியில்லை. இந்த நிலையில் தான் கடன்பட்டு சிங்கப்பூர் சொர்க்கத்திற்கு சென்றார் கமலா.
குடும்ப கஷ்டம் தொண்டையில் முட்டி கண்ணில் வழிந்து, இதயத்தை கனக்கச் செய்து முடக்கிவிடும். அந்த அவலத்தை தீர்த்துவிடலாமென ஆசைகாட்டிய சிங்கப்பூர் குறித்த கதைகளை அவள் ஏராளம் கேட்டிருந்தாள். அதனால் அவளிடம் உருவாகியிருந்த கற்பனைகள் எதிர்பார்ப்புகளும் ஏராளம்.

உள்ளம் உருகுதையாவை இயற்றிய ஆண்டவன் பிச்சை இவர்தான்! TMS க்கு ஒரு இஸ்லாமிய சிறுவன் மூலம் ......

உள்ளம் உருகுதய்யா!ஆண்டவன் பிச்சை!க.புவனேஸ்வரிந்தக் கடவுளின் நினைவு நம் மனதில் எழும் மாத்திரத்தில், கூடவே அந்த அழகு முருகனைப் போற்றும் தமிழ்ப்பாடல்களும், அவற்றை உள்ளம் உருகிப் பாடிய டி.எம்.சௌந்தர்ராஜன் பற்றிய நினைவும் நம் மனதில் எழுவது நிச்சயம்! குறிப்பாக, 'உள்ளம் உருகுதய்யா...’ பாடலைக் கேட்டு உருகாத தமிழ் உள்ளங்களே இல்லை எனலாம். ஆனால், அந்தப் பாடல் உருவானதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருப்பது பலருக்கும் தெரியாது. ஒவ்வொரு கிருத்திகைக்கும் டி.எம்.எஸ்., பழநிக்குச் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். எப்போதும் ஒரே ஹோட்டலில்தான் தங்குவார். அப்படி அவர் அங்கே தங்கிய ஒரு நாளில், அங்கு பணிபுரியும் ஒரு பையன் அவனுக்குத் தெரிந்த ராகத்தில், 'உள்ளம் உருகுதடா’ என்று ஒரு பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் கேட்டு, அந்தப் பாடலின் சொல்லிலும் பொருளிலும் மனம் லயித்துப்போனார். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai :ஆசிரியை மீது பள்ளி முதல்வரே ஆசிட் வீசினார்

சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி ஆசிரியை மஞ்சு சிங் என்பவர் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை மஞ்சு சிங் வளசரவாக்கத்தில் உள்ள சியோன் கிட்ஸ் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது அந்த பள்ளியின் முதல்வரே திராவகம் வீசியுள்ளார். இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுக்கச் சென்ற ஆசிரியை மஞ்சு மீது திராவக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திராவகம் வீசியதாக பள்ளி முதல்வர் ஃபுளோரா, அவரது மகள் மற்றும் மகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆசிரியையின் கணவர் பஷீர் அகமது புகாரின் பேரில் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவக வீச்சில் காயமடைந்த ஆசிரியை மஞ்சு சிங் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.dinakaran.com

திருச்சி ஜி.எச்.அதிகாரி டாக்டர் நேரு தற்கொலை முயற்சி...அதிமுக வசூல் வேட்டை அடாவடியால் மன உளைச்சல்?

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவமனையில் ஆர்.எம்.ஓ பொறுப்பில் இருந்து வரும் டாக்டர் நேரு திடீரென இன்று அதிகாலையில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் நேரு சமீபத்தில்தான் இப்பதவிக்கு வந்தார். வந்தது முதலே அவருக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் தரப்பிலிருந்து நெருக்கடிகள் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். திருச்சி ஜி.எச். மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி... அரசியல்வாதிகளால் மன உளைச்சல் என தகவல்! பல்வேறு பணி நியமனங்கள், டெண்டர்கள் உள்ளிட்டவற்றில் அவருக்கு கடும் நெருக்கடி இருந்து வந்ததாம். வசூல் வேட்டை அப்புறம் அம்மா போற்றி அம்மாவுக்காக வழிபாடு அன்னதானம்?  என்ன ஜோராக நடக்குது பொம்மலாட்டம்? 

விஜயகாந்த் :ஜெ. ஜெயிலுக்கு போவார்...காவிரிக்காக சோனியாவைத்தான் பார்க்கனும் ~

சேலம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த மேல்முறையீடு செய்துள்ள ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு இருக்காது.. அவர் சிறைக்கு சென்றுவிடுவார் என்றும் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைத்தான் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சேலத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க.வின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:  ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 10 நாட்களில் தீர்ப்பு வந்துவிடும்.. அவர் சிறைக்குப் போவது உறுதி.. தற்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறைக்குப் போயுள்ளார். இதேபோல் அண்ணா தி.மு.க. அமைச்சர்களும் அடுத்தடுத்து சிறைக்குப் போய்விடுவார்கள்.. கர்நாடகாவில் இப்போது இருப்பது காங்கிரஸ் ஆட்சி... அங்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலங்களில்தான் காவிரி பிரச்சனை குறித்து பேசி தீர்வு காண முடிந்திருக்கிறது.. பாரதிய ஜனதா கட்சியால் எதுவும் செய்ய முடியாது. நாம் நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பார்க்க வேண்டும். அவரை சந்திக்க ஒரு குழுவை நானே அழைத்துச் செல்கிறேன். அந்த கட்சியின் முக்கிய தலைவர்களுடன் பேசுவோம்.. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் சோனியாதான் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி தர முடியும். எம்.ஜி.ஆர் .ஆட்சிக் காலத்தில் அப்படித்தான் நடந்தது. நாம் இப்படி சொன்ன பிறகும் சோனியா காந்தி நம்மை சந்திக்க மறுத்தால் அவர் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டமும் நடத்துவோம். இவ்வாறு விஜயகாந்த் பேசினார். இந்த ஆளு பலே கில்லாடிதாய்ன் , மோடியின் பருப்பு  இப்பல்லாம்  வேகலன்னு  கன்பார்ம் பண்ணின உடன காங்கிரசுக்கு துண்டு சீட்டு போட்டுடார்!  Read more tamil.oneindia.com/

நாக்பூர் 55 மாணவிகளை நான்கு ஆண்டுகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 3 ஆசிரியர்கள் கைது


revealed that out of the 359 girls studying at the school, nearly 45 to 50 girls had told her that they have been molested by these teachers.நாக்பூர் - கடந்த நான்கு ஆண்டுகளாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த 3 ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் அகோலா மாவட்டத்தில் பாபில்கவ் என்ற இடத்தில் தனியார் உறைவிட பள்ளி ஒன்று உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் கடந்த 27ம் தேதி மாநில பெண்கள் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. கையெழுத்து இல்லாமல் வந்த அந்தக் கடிதம் தொடர்பாக மாநில பெண்கள் குழு உறுப்பினர் விசாரணை மேற்கொண்டனர். உறைவிடப் பள்ளிக்கே நேரடியாகச் சென்று மாநில பெண்கள் ஆணைய உறுப்பினர் ஆஷா மிர்கே மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த பள்ளியில் படிக்கும் 55 மாணவிகள் சித்ரவதை செய்யப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிகளை மானபங்கப்படுத்திய ராம் சந்த், சைலேஷ்ராம்டேக், சந்தீப் லட்கர் ஆகிய 3 ஆசிரியர்களை கைது செய்துள்ளனர். மாணவிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த இந்த 3 ஆசிரியர்களில் சைலேஷ் ராம்டேக் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

21 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியதை ஒப்புக்கொண்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி ! மேலும் பல அதிமுகவினர் சிக்குகிறார்கள்

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியையும், பொறியாளர் செந்திலையும் நேற்று முன்தினம் இரவு, சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், இருவரிடமும், விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர். குற்றங்கள்: அப்போது, இருவரும் தங்களுடைய குற்றங்களை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரே, இருவரும் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலிக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்த பின், விசாரணைக்கு ஆஜராகும்படி, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும், செந்திலுக்கும், 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதை ஏற்று, இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆஜராகினர். முத்துக்குமாரசாமி கைப்பட எழுதிய டைரி கிடைத்ததே, இந்த வழக்கில், முக்கிய துருப்பு சீட்டு. அதில், எல்லா விவரங்களையும், முத்துக்குமாரசாமி தெளிவாக தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வரும்வரை வழிபாடுகளை தொடருங்கள்! அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் ரகசிய உத்தரவு

கோர்ட் தீர்ப்பு வரும் வரை, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை தொடர வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, கட்சி மேலிடம் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, கடந்த செப்டம்பரில், கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. உடன், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆத்திரமடைந்த, அ.தி.மு.க., தொண்டர்கள், மறியல், உண்ணாவிரதம் என, போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அ.தி.மு.க., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே, போராட்டங்களை கைவிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தும்படி, தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டது. அதை ஏற்று, கட்சியினர் கோவில்களை நோக்கி படையெடுத்தனர். தேவாலயம், மசூதி என, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நெறைய பேர் வழிபாடு செய்யுராங்கோ ஆனா எதுக்குன்னுதான் சந்தேகம்? அவிங்க சுதந்திரமா வந்தா அடாவடி அலப்பறை தாங்க முடியாது . தினம் தினம் குனிந்து குனிந்து  ரிவேர்ஸ்லயே நடந்து அதுவும் குனிந்து கொண்டே ரிவேர்ஸ்ல நடக்கிறதுன்னு இன்னும் என்னன்னவோ? சாமியோவ்  என்னென்னைக்கும் அவிங்க ... அடிமைகளின் உண்மையான வேண்டுதல் மாரியாத்தா கேக்காம போயிடிவாளா ?

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சரத் பவர்: புகையிலையால் நானே புற்று நோய்க்கு ஆளானேன்


புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வராது என்று கூறிய பா.ஜனதா எம்.பி. திலீப் காந்திக்கு, சரத்பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘சிகரெட்டுகள், இதர புகையிலைப்பொருட்கள் சட்டம்–2008’–ல் திருத்தங்கள் செய்வது குறித்து, அகமத் நகரை சேர்ந்த பாரதீய ஜனதா எம்.பி., திலீப் காந்தி தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. இந்தநிலையில், ‘புகையிலை பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பதை உள்நாட்டில் நடந்த ஆய்வுகள் நிரூபித்து காட்டவில்லை’ என திலீப் காந்தி எம்.பி. கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும், புகையிலை பயன்படுத்துவது செரிமானத்துக்கு உதவும் என்று கூறிய அவர், இதை பயன்படுத்துபவர்கள் 100 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது- Too Late Too Little தாமதமான தற்காப்பு நடவடிக்கை ; ராமதாஸ்

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான வழக்கில் வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது காலம் கடந்து எடுக்கப்பட்ட கண்துடைப்பு  நடவடிக்கை ஆகும்.முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்த வேண்டும்; விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக அவரை பதவிநீக்க வேண்டும் என அப்போதே நான்  வலியுறுத்தினேன்.

டெல்லி: பேராசிரியையை முடியை பிடித்து இழுத்து தாக்கிய பேராசிரியர்

டெல்லி: டெல்லியில் பிரபலமான கல்லூரி ஒன்றில் பேராசிரியை ஒருவரை அவருடன் பணிபுரியும் ஆண் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் வேலை பார்த்த பேராசிரியை ஒருவரை அவருடன் பணியாற்றிய ஆண் நபர் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்துள்ளது. ஆனால் வீடியோ தற்போது தான் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு அறையில் ஆண் நபர் பேராசிரியையுடன் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவரை தனது செல்போனில் புகைப்படம் எடுக்க முயல்கிறார். இதைப் பார்த்த அந்த பெண் புகைப்படம் எடுக்காதீர்கள் என்று கூறி அவரின் செல்போனை தட்டிவிடுகிறார். இதனால் கடுப்பான அந்த நபர் பேராசிரியையை அடித்து, தலை முடியைப் பிடித்து இழுக்கிறார். இதை பார்த்த பிறர் ஓடி வந்து அவர்களை விலக்கிவிடுகின்றனர்.

சகாப்தம் படத்தில் விஜயகாந்த்:பணம் பணம்னு ஓடினவங்க எல்லாரும் ஜாமீன் கிடைக்காம வீட்ல உக்காந்திருக்காங்க

சுரேந்திரன் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அறிமுகாகும் திரைப்படம் சகாப்தம். நேஹா ஹிங்கே, ஷுப்ரா ஐயப்பா ஹீரோயின்களாக நடிக்க, தேவையானி, ரஞ்சித், ஜெகன், பவர் ஸ்டார், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.தமிழகத்தின் தென்மாநிலத்திலுள்ள சிறு கிராமத்தில் வசிக்கும் ஹீரோ சண்முகபாண்டியன் ஜெகனுக்கு நல்ல நண்பனாகவும், மாமா மகளுக்கு நல்ல காதலனாகவும் அப்பாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். சண்முகபாண்டியனின் மாமா பவர்ஸ்டார் மலேசியாவில் 5 ஸ்டார் ஹோட்டலில் பணிபுரிபவர். ‘ஊருக்கு வாடா மாப்ள. நான் பாத்துக்குறேன்’ என்ற அவரது பேச்சை நம்பி மலேசியா செல்ல முடிவெடுக்கிறார் சண்முகபாண்டியன். 

அமெரிக்க நீதிமன்றம் அதிரடி! யோகாவுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை! பள்ளிகளில் யோகா கற்பிக்கலாம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: பள்ளிகளில் கற்பிக்கப்படும் யோகா, மாணவர்களுடைய மத சுதந்திரத்தை எந்த வகையிலும் பாதிக் காது என்றும், யோகாவுக்கும் மதத்துக்கும்  சம்பந்தம் இல்லை என்றும், அமெரிக்க நீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு பள்ளிகளில், யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இதில், ஏராளமான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள். பாரம்பரிய உடற்பயிற்சி வகுப்புகளில் பங்கெடுக்க விரும்பாதவர்களுக்கு, யோகா  வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகளில் யோகா கற்பிக்கப்படுவதற்கு எதிராக, சான் டீகோ நீதிமன்றத்தில் 2 மாணவர்களின் பெற்றோர் மனு  தாக்கல் செய்தனர். என்சினிடாஸ் மாவட்ட பள்ளிகளில், யோகா என்ற பெயரில் இந்து மற்றும் புத்த மதத்தின் போதனைகள் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது.

விசாலி கண்ணதாசன் , அதிமுக மலைசாமி பாஜகவில் இணைந்தனர்.

Add caption
பெங்களூரில் சனிக்கிழமை பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் தமிழக அதிமுக முன்னாள் எம்.பி. மலைச்சாமி, கவிஞர் விஷாலி கண்ணதாசன், தலித் தலைவர் புரட்சி கவிதாசன், புதுச்சேரி மாநில திமுக முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பிரமணி ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.dinamani.com

தம்பிதுரை:தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல்! இப்போதே வென்றுவிட்ட குஷியில் நமக்கு வாய்த்த.....

சட்டசபைத் தேர்தல், எந்த நேரத்திலும் வரலாம்; அதனால், தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசி, கட்சியினரை தேர்தலுக்கு உசுப்பி உள்ளார்.தமிழக சட்டசபை பதவிக் காலம், அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் இருக்கிறது.ஆனால், தங்களுக்கு சாதகமான சூழல் நிலவுவதால், சட்டசபையை கலைத்து விட்டு, முன்கூட்டியே தேர்தலை நடத்தும் யோசனையில், ஜெயலலிதா இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான், இரு மாதங்களுக்கு முன், அ.தி.மு.க., தரப்பில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, கட்சியினர் தேர்தலை நோக்கி படு வேகமாக முடுக்கி விடப்பட்டனர்.இவர்)(பன்னீரு)   போட்ட கணக்கொன்று  அவர்(ஜெயா)  போட்ட கணக்கொன்று  இரண்டுமே தவறானது, இருவரும்  நிரந்தர மக்களின் முதல்வர் என்பதே  முடிவானது ?

ஈரான்- அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம்: ஒபாமா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: ஈரானுடன் அமெரிக்கா அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தம் சுமூகமாக முடிந்துவிட்டது. இதற்கு அமெரிக்க மக்கள் பேராதரவு தர வேண்டும்என அதிபர் ஒபாமா கூறினார். அமெரிக்காவின் இந்த முயற்சி பேரழிவை உண்டாகும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஈரானும்,இஸ்ரேலும் எதிரிகள் என்பது உலகறிந்த விஷயம். இந்நிலையில் ஈரானுடன் அணு ஒப்பந்தம் செய்து அமெரிக்கா சுமூக தீர்வினை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக சுவிடர்சலாந்தில் நடந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரியும், ஈரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவியத்தும் சந்தித்து பேசினர்.

கொழும்பு ஹோட்டலில் இந்திய தம்பதிகள் தற்கொலை! காசினோ தோல்வியால் என சந்தேகம்?


இந்தியத் தம்பதியர் சட­ல­மாக மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை: வெள்­ள­வத்தை 40 ஆவது ஒழுங்கை தனியார் ஹோட்டல் ஒன்­றுக்குள் சட­ல­மாக மீட்­கப்­பட்ட இந்­திய தம்­ப­தி­யர் கெசினோ சூதாட்­டத்தில் ஏற்­பட்ட பல லட்ச ரூபா நட்டம் கார­ண­மாக தற்­கொலை செய்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிப்­ப­தாக வெள்­ள­வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்­தினம் இரவு பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லின்­படி மீட்­கப்­பட்ட குறித்த இந்­தி­யர்கள் இரு­வ­ரி­னதும் மரணம் குறித்து வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லரின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும் விஷேட விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த விடயம் தெரிய வந்­துள்­ளது.
இந்­தி­யாவின் தமிழ் நாடு சென்­னையை சேர்ந்த 28 வய­தான மகாலக்ஷ்மி என்ற 6 மாத கர்ப்­பி­ணியும் அவ­ரது கண­வ­ரான 31 வய­து­டைய துட்­விராம் பொட்தா ஆகி­யோரே இவ்­வாறு சட­ல­மாக மீட்கப்பட்டுள்­ள­தா­கவும் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உதய குமார முட்ளர் தெரிவித்தார்.