சனி, 30 ஜனவரி, 2021

பிரிட்டனின் COVID-19 இறப்புகள் 100,000 ! UK COVID-19 death toll exceeds 100,000

இலங்கைநெற் : அரசாங்க அளவீடுகளின்படி, COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பரிசோதனையின் 28 நாட்களுக்குள் செவ்வாயன்று வைரஸ் உயிரிழப்பானது உத்தியோகபூர்வமாக 100,000 ஐ தாண்டியது. அதாவது, பிரிட்டனில் ஒவ்வொரு 100,000 க்கும் 147 பேர் இறந்துள்ளனர், இது பெல்ஜியம் மற்றும் சுலோவேனியா ஆகிய இரண்டு நாடுகளை விட அதிகமாக உள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை விட இங்கிலாந்தில் கோவிட்-19 நோயால் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இந்த இறப்பு உச்சநிலையை எட்டியபோது, பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் ஒரு டவுனிங் ஸ்ட்ரீட் (அவரது குடியிருப்பு) இல் ஊடக சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார், அதில் அவர் அந்த மோசமான புள்ளிவிவரத்திலுள்ள துக்கத்தை கணக்கிடுவது கடினம் என்று துயரத்தை அறிவித்தார். இழந்த வாழ்க்கையின் ஆண்டுகள், குடும்பங்கள் இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை மற்றும், பல உறவினர்கள் இறுதி வழியனுப்பி வைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் — அன்புக்குரியவரை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு சாப்பாடு இலவசம் ! மாநகராட்சி அறிவிப்பு

webdunia.com ;பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பது பூமிக்கும் நமக்கும் தீங்கு என அரசு எத்தனையோ உத்தரவுகளைப் போட்டாலும்கூட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்தபாடில்லை.. இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்காகவுள்ள பிளாஸ்டிக் பொருட்களைக் குறைக்கும் நோக்கில் டெல்லி மாநகராட்சி சார்பில் ஒரு சிறப்பாக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் மாநகராட்சியின் சார்பில் carbage café –ல் உணவை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்காகவே அம்மா உணவகம் போன்று டெல்லியில் சுமார் 20க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சங்கருக்கு 'பிடிவாரண்ட்.. எந்திரன் கதைத்திருட்டு வழக்கில்....

.nakkheeran.in : கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் ஆஜாராகாமல்  வழக்கை இழுத்தடித்து வரும்  இயக்குனர் சங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாகப் பிடிவரண்ட் பிறப்பித்திருக்கிறது.

1996 ஆம் ஆண்டு "இனிய உதயம்" தமிழ் பத்திரிகையில், நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன், எழுதிய "ஜுகிபா" என்ற  கதை வெளியானது. அதே கதை மீண்டும் ‘தித் திக் தீபிகா’ என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில்  2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் "எந்திரன்" திரைப்படம் வெளியான பின்பு தான் ’ஜுகிபா’ கதை திருடப்பட்டு, எந்திரன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் இயக்குனர்  சங்கர் இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில், எந்திரன் படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் காப்புரிமை சட்டப்படி புகார் அளித்திருந்தார்.

சசிகலா நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

tamil.news18.com : கொரோனா சிகிச்சை பெற்று வந்த சசிகலா குணமடைந்து நலமுடன் இருப்பதால் அவரை நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பெங்களூரு விக்டோரிய மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த, 27ல், விடுதலை செய்யப்பட்டார்.அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.        அவருக்கு இப்போது, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.            இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், இன்றுடன் சசிகலாவிற்கு 10 நாட்கள் சிகிச்சை நிறைவு பெற்றது. அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை. 

கனிமொழி குறித்து தரக்குறைவு விமர்சனம்.. சொந்த கட்சிக்காரருக்கு எதிராக பொங்கி எழுந்த குஷ்பு

காங்கிரஸ் மீது கடும் விமர்சனம் – மன்னிப்புக் கேட்ட நடிகை குஷ்பு | |  Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews -  Tamilnadu, India & World - politics, cinema, cricket, video ...
Velmurugan P -tamil.oneindia.com : சென்னை: பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பியை விமர்சித்து ட்விட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, கனிமொழிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். சொந்த கட்சியினர் வெளியிடும் கருத்துக்கள் அவதூறாக இருக்கும் பட்சத்தில் அதை கண்டிப்பதற்கு தட்டி கேட்பதற்கு குஷ்பு தயங்குவது இல்லை. ஏற்கவே பல முறை நடந்துள்ளது. அப்படித்தான் அண்மையில் பாஜக நிர்வாகிகள் இரண்டு பேர் அடுத்தடுத்து போட்ட சர்ச்சை ட்விட்களை குஷ்பு கண்டித்துள்ளார், ராகுல் காந்தி விமர்சனம்....    நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி, நாக்பூர் டவுசர் வாலாக்களால் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது என்று கடுமையாக விமர்சித்தார்.

டெல்லி 25-28 போராட்ட கால நிகழ்வுகள்.... உள்ளூர் ஆட்கள் என்ற போர்வையில் வலதுசாரி...

Image may contain: 1 person, crowd, sky and outdoor
Prakash JP : · 25-28 போராட்ட கால நிகழ்வுகள். 25 ஜனவரி மாலை - தீப் சித்து கூட்டத்தினர் விவசாய தலைவர்களை எதிர்த்து , அரசு சொல்லும் பாதையில் செல்லக்கூடாது என பேசுகிறார்கள். 26 ஜனவரி காலை - ஒரு கூட்டம் மட்டும் ஒத்துக் கொண்ட பாதியில் இருந்து விலகி வேறு பாதையில் டிராக்டர் ஊர்வலம் செல்கிறது.
26 ஜனவரி காலை - காவல்துறை பாதையை தடுத்து பேருந்தையும் , கனரக வாகனங்களை குறுக்கே நிறுத்துகிறது.
26 ஜனவரி காலை - காவல்துறை புகை குண்டு வீசுகிறது , தடியடி நடத்துகிறது. மோதல் வெடிக்கிறது.
26 ஜனவரி மதியம் - தீப் சிந்து கூட்டம் செங்கோட்டை யில் நுழைகிறது. காலியாக இருந்த கம்பத்தில் சீக்கிய மத கொடியையும் , விவசாயிகள் கொடியையும் ஏற்றுகிறது. காவல்துறை இந்த இடத்தில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
26 ஜனவரி மதியம் - எல்லா முக்கிய காட்சி ஊடகங்களும் சொல்லிவைத்தது போல சோங்கோட்டை பக்கம் கேமராவை திருப்புகிறார்கள். குறிப்பாக பாஜகவுக்கு சாதகமாக பேசக்கூடிய எல்லா ஊடங்களும் திரும்ப திரும்ப சொங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டதை ANI யின் feed ஐ மட்டும் ஒளிபரப்புகிறார்கள்.

வெள்ளி, 29 ஜனவரி, 2021

திமுகவில் இணையும் பாமகவினர் .. ராமதாஸ் அதிர்ச்சி! தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளில் இருந்தும் ஏராளமானோர் திமுகவில் இணைகிறார்கள்

Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: டாக்டர் ராமதாஸ் சொந்த ஆதாயத்திற்காக - சுய நலத்திற்காக, தி.மு.க., வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். ராமதாஸ் தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்க விமர்சிக்க, அக்கட்சியில் உள்ள பாட்டாளிகள் தி.மு.க.வை நோக்கி இன்னும் அதிகமாக வரப் போகிறார்கள். 

அதில் சந்தேகம் இல்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி தொ.மு.ச. அலுவலக வளாகத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்திலிருந்து மணிவர்மா தலைமையில் பா.ம.க.விலிருந்து 500 பேர், தே.மு.தி.க.விலிருந்து ஒன்றியப் பொறுப்பாளரும் அரசடிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருமான வீரபாண்டியன் தலைமையில் 60 பேர் ,இணைந்தனர்.
இதேபோல் தே.மு. தி.க.விலிருந்து முன்னாள் ஒன்றியச் செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான அனந்தராமன் தலைமையில் 200 பேர், பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம் பா.ம.க.விலிருந்து ஒன்றிய துணைச் செயலாளர் எ.சின்னத்தம்பி தலைமையில் 90 பேர், நாம் தமிழர் கட்சியிலிருந்து வடக்குத்து ஊராட்சி செயலாளர் பிரபாகரன் தலைமையில் 120 பேர், நெய்வேலி நகர எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் சொரத்தூர் சேகர் தலைமையில் 60 பேர், பண்ருட்டி ஒன்றியம் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து ஒன்றிய அமைப்பாளர் கே.வெங்கடேசன் தலைமையில் 80 பேர் உள்பட பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி; விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை - பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

nakkeeran : டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே குண்டு வெடித்துள்ளது. இதில் சில கார்கள் சேதமடைந்துள்ளன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் டெல்லியின் முக்கியமான பகுதிகள், அரசு கட்டிடங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை, டெல்லியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து விமான நிலையங்கள், முக்கியமான பகுதிகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்: குடிநீர், மின்சாரம், இன்டர்நெட் துண்டிப்பு... டெல்லி எல்லைகளில் நடப்பது என்ன?

vikatan :``வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால், நான் தற்கொலை செய்துகொள்வேன். போராட்டக் களத்தைவிட்டு நாங்கள் நகரமாட்டோம். தேவைப்பட்டால் புல்லட்டுகளைத் தாங்கி நிற்கவும் தயார்!'' - 

டெல்லி எல்லைகளில் நிலவும் பதற்றம்... என்ன நடக்கிறது? மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என, இந்தியத் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் 65 நாள்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது வன்முறை வெடித்தது. விவசாயிகளில் ஒரு பகுதியினர் அனுமதிக்கப்பட்ட பாதைகளிலிருந்து விலகி செங்கோட்டையை நோக்கி பயணம் செய்ததே வன்முறை நிகழக் காரணம் என செய்திகள் வெளியாகின. .... 

ஆனால், செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறைக்கு, பஞ்சாபி நடிகர் தீப் சித்து தலைமையிலான ஆள்கள்தான் என்றும், அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்றும் விவசாயச் சங்கங்கள் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து. சில விவசாயச் சங்கங்கள் போராட்டத்திலிருந்தும் விலகிக் கொண்டன. அதே நேரத்தில், மீதமுள்ள விவசாய சங்கங்கள், `வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தை திரும்பப்பெறுவோம்' என்று உறுதியாகப் போராடி வருகின்றன.

பெங்களூரு மருத்துவமனையில் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் திடீர் அதிகரிப்பு

thinathanthi : பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே 4 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து உள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவரது உடலில் சர்க்கரை அளவும் 278 ஆக உயர்ந்து உள்ளது. இதற்காக அவருக்கு இன்சுலின் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சசிகலா நாளை (சனிக்கிழமை) டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து இருப்பதால், அவர் டிஸ்சார்ஜ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: 10 ஆண்டுகளில் 153 யானைகள் உயிரிழப்பு!

minnambalam : கோவை வனக்கோட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 153 யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனத் துறையிடமிருந்து பெறப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது. கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய ஏழு வனச் சரகங்களை உள்ளடக்கியது கோவை வனக்கோட்டம். கோவையின் மேற்கு பக்கம் மலைச்சரிவுகளும், கிழக்குப் பக்கம் பட்டா நிலங்களும் இருப்பதால் இடைப்பட்ட மலையடிவாரப் பகுதிகளையே யானைகள் தங்கள் வாழ்விடத்துக்காகவும், உணவுத் தேவைக்காகவும் அதிகம் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் யானை - மனித மோதல் அதிகம் நடைபெறும் இடமாக கோவை வனக் கோட்டம் உள்ளதற்கு, அடிவாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் வந்துள்ள பெரிய அளவிலான கட்டுமானங்களும், விவசாய முறை மாற்றமும் காரணமாக இருந்து வருகின்றன.

புதுச்சேரி நமச்சிவாயம் (Ex minister) தீப்பாய்ந்தான் ( ex MLA ) டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

நாராயணசாமி vs நமச்சிவாயம்: பாஜகவில் சேர்ந்த புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் தலைவர்

BBC : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் இருவரும் டெல்லியில் இன்று‌ (வியாழக்கிழமை) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். கடந்த திங்கட்கிழமை அன்று அவர்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.இதனிடையே நமச்சிவாயம் அவரது ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு இணங்க அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.முன்னதாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தன்னை ஓரம் கட்டுவதாகவும், மத்திய அரசு மற்றும் கிரண் பேடியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த காரணத்தினால் தன்னை சார்ந்தவர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் எதுவுமே செய்ய முடியவில்லை என்றும் கூறி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்வதாக நமச்சிவாயம் கூறியிருந்தார்.

இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை இந்தியா பரிசாக அனுப்பியது. அதிபர் ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்

PM Modi congratulates Sri Lanka's Mahinda Rajapaksa over successful conduct  of polls
dailythanthi.com : கொழும்பு, இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த மாதம் 3-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளை போடும் மிகப்பெரிய பணி இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில் உலகின் பல நாடுகள், இந்தியாவை தடுப்பூசிகளுக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
நேபாளம், வங்க தேசம், மியான்மர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஒரு வாரத்தில் 55 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா பரிசாக அளித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி, கொழும்புவுக்கு நேற்று வந்து சேர்ந்தது. இதனைப் பெற்றுக் கொண்டதும், இலங்கை அதிபர் ராஜபக்சே டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

உதகை மண்டலத்தில் (OOTY)) அதி உயர்ந்த தொட்ட பெட்டா மலையிலிருந்து ..சாஸ்திரி...சிறிமா வதைப்படலம் பழையன நினைத்தல்--07

Image may contain: 8 people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing, outdoor and nature
Image may contain: 8 people, people standing and outdoor
Murugan Sivalingam : · சாஸ்திரி...சிறிமா வதைப்படலம் பழையன நினைத்தல்--07 உதகை மண்டலத்தில் (OOTY)) அதி உயர்ந்த தொட்ட பெட்டா மலையிலிருந்து முழு நீலமலைப் பிரதேசத்தை நோக்கியப் பார்வை.... கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அக்கம் பக்கம் பார்ப்பதை பறவை பார்வை ( Birds View ) என்பார்கள். நீலமலை மக்களைப் பிரியும் அந்த நாள் மனதைக் கலங்கவைத்தது..! கவிஞனின் மொழியில் நெஞ்சுக்குள் கண்ணீர் கசிந்துக்கொண்டிருந்தது... உழைக்கும் மக்களின் வியர்வை.....கண்ணீர்....இரத்தம்...என்ற மையால் தீட்டிய எழில் ஓவியமாக மலைகளெல்லாம் பச்சைக் கம்பளம் போர்த்தியநிலையில் இருந்தன. உலகில் எங்குமே தேயிலை பயிர் நிலமே பெண்களின் கைவண்ணத்தால் லாவண்யம் காட்டிக்கொண்டிருக்கின்றன...! என் ரசனை முடிந்தது. பார்வையைத்திருப்பினேன்.
அடுத்தப் பயணம்...... எனது "பஞ்சம் பிழைக்க வந்த சீமை" என்ற வரலாற்று நெடுங்கதையை எழுதுவதற்கான தகவல்களைச் சேகரிப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வந்த வர்களின் நதிமூலத்தை அறிந்துக்கொள்வதற்கு தமிழகக் கிராமங்களை நோக்கிப் புறப்பட்.டேன்.....
.நவீன உலகில் ....இருபத்தொராம் நூற்றாண்டில் அன்றைய ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையைப் போல.......500 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைப் போன்று ஓலை குடிசையில் மனித அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இந்திய சுதேசியர்கள்
இப்போதும் வாழ்ந்து வருகின்றார்கள்! அங்கு மலையகத் தமிழர்களும் இருந்தார்கள்!

வடலூர் ராமலிங்க சுவாமிகள் சனவரி 30, 1874 மர்ம மரணம் .. நாவலரின் சந்தேக மௌனம்!

வள்ளலாரின் மர்ம மறைவும் நாவலரின் சந்தேக மௌனமும்!
Image may contain: 2 people
ஆறுமுக நாவலர் - வடலூர் ராமலிங்க வள்ளலார்
வடலூர் ராமலிங்க சுவாமிகள் காணாமல் போய் அல்லது மர்மமாக இறந்து ஐந்து வருடங்களுக்கு பின்பாகத்தான் ஆறுமுக நாவலர் காலமானார்.
வடலூர் ராமலிங்க வள்ளலாரை கடுமையாக எதிர்த்து அவர் மீது பொய் வழக்கு போட்டு தோற்றுப்போனவர் ஆறுமுக நாவலர்!
நாவலரின் பின்பலமாக நின்றவர்கள் வைதீகர்கள் .
இராமலிங்க வள்ளலார் மீது நிகழ்த்தப்பட்ட கொடிய தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி இதுவரை ஒருவரும் கேள்விகள் எழுப்பியதில்லை.
எந்த ஆத்மீகவாதிகளும் சரி எந்த வைதீக பெருமான்களும் சரி வள்ளலாரின் மறைவு பற்றி வாயே திறக்கவில்லை என்று தெரிகிறது .
எனவே இவர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள்தான்.
தமிழ்நாடு முழுவதும் அறிந்த ஒரு மாபெரும் ஆத்மீகவாதியின் மர்ம மரணம் பற்றி ஒரு ஆத்மீக பெருந்தகைகளும் சந்தேக கேள்வி எழுப்பாமை அவர்களும் கூட்டு குற்றவாளிகள்தானோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது.
அதிலும் குறிப்பாக ஆறுமுக நாவலர் இந்த குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது.

வாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி? வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம்.

பாலகணேசன் அருணாசலம் : · வாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி? ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா? இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.
இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..
நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு
எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?

வியாழன், 28 ஜனவரி, 2021

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா காலமானார்.

chakkaram.com :ஈழத்து சஞ்சிகையான ‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று (2021.01.28) கொழும்பில் காலமானார். டொமினிக் ஜீவா, ஒரு விளிம்புநிலை மனிதர், படிக்காத மேதை, சிறந்த மனிதாபிமானி, முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த தமிழ் மொழி ஊடகவியலாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, உன்னதமான மேடைப்பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் என பன்முக ஆளுமை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. keetru.com : “கலை, இலக்கியம் என்பனவற்றின் இன்றியமையாத பண்புகளிலொன்று மனித நேய உணர்வாகும். இவற்றைப் படைக்கும் கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோர் தம்மளவிலும் இவ்வுணர்வை உடையவர்களாகவே திகழ்வர் எனச்சமுதாயம் எதிர்பார்ப்பது இயற்கையே. ஆயினும் பெரும்பான்மையான கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோரிடம் இவ்வுணர்வை நிறைவாக நாம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஓரு சிலரிடம் அதனை நாம் முழுமையாக அவதானிக்க முடிகிறது. அத்தகைய மிகச் சிலருள் ஒருவர் நம் மத்தியில் வாழும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா.” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன் புகழ்ந்துரைத்துள்ளார்.

டொமினிக் ஜீவா, ஒரு படிக்காத மேதை, உன்னத மனிதாபிமானி முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த பத்திரிக்கையாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, கனல் கக்கும் பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் - எனப் பன்முக ஆளுமை படைத்தவர்.

திமுகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு மான கூட்டணியின் இன்றைய நிலவரம்...

Minnambalam : இன்றைய கூட்டணி நிலவரம்... திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற எதிர்பார்ப்பு சம்பந்தப்பட்ட கூட்டணிக் கட்சியினருக்கு மட்டுமல்ல திமுகவினருக்கும் அதிகமாகவே உள்ளது.கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திமுக தனக்குப் போதுமான இடங்களில் போட்டியிடாமல் இருந்துவிடக்கூடாது என்பதுதான் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களின் கருத்து. திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு வர இருக்கிற தேர்தல் வலிமையான வெற்றியை கொடுக்கும், அதனால் 200 தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலினிடம் கருத்து கூறியிருக்கிறார்.இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்...   "கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் தங்கள் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு தங்களது சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்துவது வழக்கம் தான். அதே நேரம் நாங்கள் எங்கள் தனித்துவத்தை இழக்காமல் கூட்டணியின் வெற்றிக்கும் பாதிப்பு ஏற்படாமல் நல்ல முடிவெடுப்போம்" என தெரிவித்திருந்தார்.

இரவுக்குள் இடத்தை காலி செய்யுங்கள்: போராடும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை! Delhi Police To End Farmers Protest

dailythanthi.com : புதுடெல்லி, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர். ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர். 

ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

திமுக கூட்டணி பற்றி திமுக ஆதரவாளர்கள் கூறுவது .. அழகிரி ஸ்டாலின் மோதல் முடிவுக்கு வந்தது..

tamil.oneindia.com- Hemavandhana : சென்னை: திமுக தலைவரின் கூட்டணி கணக்கு சரியான திசையிலேயே போய் கொண்டிருக்கிறது என்றும், விரைவில் திமுகவே ஆட்சிக்கட்டிலில் ஏறும் என்றும் உடன்பிறப்புகள் புளகாங்கிதம் அடைந்து சொல்ல ஆரம்பித்துள்ளனர். 

கூடிய சீக்கிரம் தேர்தல் நடக்க போகிறது என்பதால் அரசியல் களமே பரபரத்து காணப்படுகிறது.. ஆனால் கூட்டணிதான் இன்னும் எந்த பக்கமும் முடிவாகவில்லை.. எதிலும் அவசரப்பட்டு விடக்கூடாது என்பதால், பொறுமையாகவும், நிதானமாகவும் கூட்டணி தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.            இதில் திமுகவின் வியூகம் சற்று தூக்கலாகவே இருக்கிறது.. உண்மையிலேயே எந்த கட்சிகள்தான் அதன் கூட்டணிக்குள் இருக்கின்றன? பாமக உள்ளே வருமா? கமலுக்கு சான்ஸ் இருக்கிறதா? காங்கிரசுக்கு எத்தனை சீட்தான் தரப்படும்? வைகோ நிலைமை என்ன? என்பன போன்ற பல கேள்விகளும் வட்டமடித்து கொண்டுதான் இருக்கின்றன.

 இந்த கேள்விகளை தீவிரமான திமுகவினர் சிலரிடம் நாமே முன்வைத்தோம்.. அவர்கள் சொன்னதாவது: முன்னாடி மாதிரி இல்லை தலைவர்.. எதையும் பார்த்து பார்த்து முடிவுகளை எடுக்கிறார்.   . இப்பகூட பார்த்தீங்கன்னா எந்த கூட்டணி கட்சியையும் அவர் கழட்டி விடணும்னு நினைக்கவே இல்லை.. காங்கிரசுக்கு ஒரு சீரியஸ்தன்மை வரணும்னு தான் புதுச்சேரி விஷயத்தை அப்படி டீல் செய்தாரே தவிர, காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி வைக்க யோசிக்கவே இல்லை.

தாய்மகனை கொன்ற வடமாநில கொள்ளையர்கள்! மிரட்டுவதற்கு பயன்படுத்திய பொம்மை துப்பாக்கி

kalaignarseithigal :ொம்மை துப்பாக்கியை வைத்து தாய்மகனை கொன்ற வடமாநில கொள்ளையர்கள்: சூடுபிடிக்கும் சீர்காழி இரட்டை கொலைவழக்கு கொலையாளிகள் ! மிரட்டுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி பொம்மை துப்பாக்கி எனவும் அமேசானில் விலைக்கு வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது! ைத்து தாய்மகனை கொன்ற வடமாநில கொள்ளையர்கள்: சூடுபிடிக்கும் சீர்காழி இரட்டை கொலைவழக்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையை சேர்ந்த தன்ராஜ் வீட்டில் நேற்று துப்பாக்கி காட்டி உள்ளே புகுந்த வடமாநில கொள்ளையர்கள் மூன்று பேர் நகை, பணம் கேட்டு மனைவி, மகனை கழுத்து அறுத்து படுகொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 17 கிலோ தங்க நகைகள், ரூபாய் 6.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களான மணிஷ், ரமேஷ், மணிபால் சிங் உள்ளிட்ட 3 பேரும் தப்பித்து சென்றனர்.

செங்கோட்டையில் அத்துமீறியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு.. குடியரசு தின...

dailythanthi.com : குடியரசு தினத்தில் செங்கோட்டையில் அத்துமீறியவர்கள் மீது டெல்லி போலீசார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.       வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.     அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர். >ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

செங்கோட்டைக்குள் கொடியேற்றியவர் மோடியோடு இருப்பது எப்படி?- விவசாய சங்கங்கள் கேள்வி

செங்கோட்டைக்குள்  கொடியேற்றவர் மோடியோடு இருப்பது எப்படி?- விவசாய சங்கங்கள் கேள்வி
Minnambalam& ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்யில் நடந்த விவசாயிகளின் டிராக்டர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்குக் காரணம் மத்திய அரசின் சதிதான் என்று விவசாயிகள் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. செங்கோட்டையில் ஏறி கொடியேற்றியவர் பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.  ஜனவரி 27 ஆம் தேதி இரவு டெல்லி-சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் செய்தியாளர் கூட்டத்தில் மூத்த பஞ்சாப் விவசாயிகள் சங்க தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் பேசினார்.

Facebook. Like, comment ஏன் போட வேண்டும்???...சோசியல் மீடியாக்களின் System தெரிந்து கொள்ளவே இக்கட்டுரை

No photo description available.
Diwa : · Facebook. பயன்படுத்தும் அனைவருக்குமான பதிவு!. (குறிப்பாக அரசியல் பதிவர்களுக்கு) FBயில் Like, comment ஏன் போட வேண்டும்???... ஒருவா் எழுதிய பதிவு அவரது Page'லேயே தான் இருக்கும்!. அந்த பதிவுக்கு யாரோ ஒரு நபா் Like போட்ட பிறகுதான் Like போட்டவர்களின் முதன்மை நண்பர்கள் 10'நபா்களின் பாா்வைக்கு அந்தபதிவு போய்சேரும்!.
யாரோ ஒருவா் comment போட்டால் அந்த comment போட்டவா்களின் முதன்மை நண்பா்கள் 100'நபர்கள் பாா்வைக்கு அந்த பதிவு போய் சேரும்!.
யாரோ ஒருவர் share செய்தால் அவரின் முதன்மை நண்பர்களுக்கு, அவா்கள் வழியாக, 1000'நபா்களின் பாா்வைக்கு அந்த பதிவு போய் சேரும்!.
இதுதான் சோசியல் மீடியாக்களில் Facebook System ஆகும்!!!...
ஒருவா் பதிவுக்கு, யாவா் ஒருவரும் Like, comments, share, போடாமல் ஒதுங்கி போனால் அவா்பதிவு அவரது page லேயே முடக்கி விடும்!!!...
தற்போதைய காலகட்டத்தில் கட்சிகளின் பொய்யான வதந்திகள் அவதூறு பிரச்சாரம் சோசியல் மீடியாக்கள் வழியாகத்தான் மிக வேகமாக இப்படித்தான் பரப்பபடுகிறது!.

மணிமேகலையின் காதலும் துறவும் .. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ..

keetru.com : மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது ஊர் சீத்தலை என்றும் இவர் மதுரையில் கூல வாணிகம் செய்து வந்தவர் என்றும் அறிகிறோம். பௌத்த மதப் பரப்பலுக்காக ஒரு தனிக் காவியமே படைத்த இச்சாத்தனார் ஒரு பௌத்த நெறியாளர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழின் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரமும் சாத்தனாரின் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சியால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை. இவளே மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி. காப்பியத் தலைவி மணிமேகலையை மாதவியின் கூற்றில் வைத்து காப்பியம் அறிமுகம் செய்யும் பகுதி பின்வருமாறு:

காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய

மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்        (2: 54-57)

இவ்வடிகளில் மாதவி, மணிமேகலையைக் கண்ணகி மகள் என்று சிறப்பிப்பதோடு இவள் தவத்திற்குரியவள் என்றும் கணிகையாகத் தீத்தொழில் புரிந்து வாழமாட்டாள் என்றும் தெளிவு படுத்துகின்றாள். ஆக மணிமேகலை, தாய் மாதவியால் ஆடலும் பாடலும் கூடிய பரத்தமை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டு தவ வாழ்க்கைக்கு உரியவளாகிறாள். 

கலைஞர் நினைவிடத்தில் கோரிக்கை வைக்கும் அதிமுக தொண்டர்கள் .. அம்மாவை கொன்ற குற்றவாளிகளை நீங்கதான் கண்டு பிடிக்கணும்

Venkat Ramanujam : விழாவோ அதிமுகவுக்கு .. கோரிக்கையோ திமுகவுக்கு அதிமுக வின் ஜெயலலிதா சமாதி
ரூ91 கோடி மக்கள் வரி பணத்திலே செலவு செய்து செய்யப்பட்ட விழாவுக்கு பேருந்துகளில் கிராமத்தில் இருந்து தொண்டர்களை அழைத்து வந்தனர்.
மந்திரிகள் MLAக்கள் எல்லாம் பிங்  கலர் கரன்சி பணபட்டுவாடா ஜோரில் உயர் ரக கார் ஜில் AC யில் திளைக்க .. அழைத்து வரப்பட்ட கிராமவாசிகள் மெதுவாக அணி அணியாக கால் நடையாக வேர்க்க விறுவிறுக்க நேராக Kalaignar Karunanidhi யின் நினைவிடத்துக்கு சென்றனர் .
இந்த காட்சியை கண்டுகொண்டிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர்  " அம்மா வின் மர்ம சாவுக்கு நியாயம் உங்க திமுக ஆட்சியிலே வேணும்னு " கலைஞர் புகைபடத்தை பார்த்து கண்கலங்க கேட்டது தான் ஹைலைட் ..

அயோத்தியில் நிகழ்ந்ததற்கும் நேற்று தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்ததற்க்கும் இடையிலான ஒற்றுமை

Image may contain: 1 person, on stage and outdoor, text that says 'TASHI TOBGYAL'
Abilash Chandran  :   ராஜ மௌலி, சங்கர், கேமரோனை மூக்கில் விரல் வைக்க செய்த பாஜக..    நேற்றைய நாளை என்னுடன் வாழ்வின் மிக மோசமான நாட்களில் ஒன்று என்பேன்.
சீக்கிய விவசாயிகளின் டிராக்டர் பேரணி இப்படி கண்முன்னால் சீரழிவதை, அதை சங்கிகள் கொண்டாடுவதை, அவர்களுடைய டி.வி சேனல்களில் நெறியாளர்கள் ஒரு குஷியுடன் “பாருங்கள் பாருங்கள், என்னென்ன செய்கிறார்கள், போராட்டம் கலவரமாவதைப் பாருங்கள்” எனக் கூவுவதைப் பார்க்க சகிக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுத்தியது -
இதுவரை சீராக பொறுமையாக போராடியவர்கள் குதிரை மீது வேஷம் அணிந்து அமர்ந்து கையில் வாளுடன் வருவதை, அவர்களை போலிசார் அமைதியாக அனுமதிப்பதை, சிலர் டிராக்டர்களை போலிசார் மீது மோத வருவதைப் போல செலுத்துவதை, செங்கோட்டைக்கு எதிரில் உள்ள கொடிக்கம்பத்தில் ஒருவன் ஏறி சீக்கிய கொடியை ஏற்றி கொக்கரிப்பதை பார்க்கையில் இவற்றில், இந்த அப்பட்டமான அராஜக செயல்கலில் இதுவரை நாம் பார்த்த விவசாயிகளின் தோரணை, உடல்மொழி, கண்ணியம் இல்லை. இது வேறொரு கூட்டம். இவர்களை எப்படி தலைநகரின் மையம் வரை வந்தார்கள்?

புதன், 27 ஜனவரி, 2021

ஐதராபாத்தில் 18 பெண்களை கொலை செய்த கொடூரன்.. Psycho Serial killer Ramulu Arrested

.maalaimalar.com :ஐதராபாத்தில் ஆசைக்கு இணங்கினால் பணம் என தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து ஆசைக்காட்டி அவர்களை ஒருவன் கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஐதாராபத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவருக்கு, 21 வயதில் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் பெண்கள் மீது அவருக்கு கோபத்துடன் பழிவாங்கும் எண்ணமும் தோன்றியது. இதனால் தனியாக இருக்கும் பெண்களை பார்த்து ஆசைக்கு இணங்கினால் பணம் தருகிறேன் என ஆசைவார்த்துக் கூறி அவர்களை தன்பக்கம் இழுத்துள்ளார். இப்படி கடந்த 24 வருடங்களில் 18 பெண்களை கொலை செய்துள்ளார். சமீபத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள தயக்கம் தேவையா? எவ்வாறு செயல்படுகின்றன?

tamil.indianexpress.com : தடுப்பூசி என்பது நோயெதிர்ப்பு நினைவகத்தை செயற்கையாகத் தூண்டும் ஒரு முறையாகும். மோசமான நோய்க்கிருமியின் ஆன்டிஜென்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நோயெதிர்ப்பு மண்டலம் ஜோடி ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்பு நினைவகத்தை உருவாக்குவதற்குத் தூண்டப்படுகிறது. தடுப்பூசி நிர்வகிக்கப்படுவதால் நோய்த் தொற்று பாதிப்பு விரைவில் கட்டுபடுத்தப்படும் என்பதனை அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன; மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்கள் இப்போது தடுப்பூசியால் தடுக்கக்கூடியவை. பெரியம்மை, போலியோ போன்ற பல்வேறு கொடிய நோய்கள் ஒழிப்பு முயற்சியைப் போல், 20-க்கும் மேற்பட்ட கொடிய நோய்களை தடுப்பூசிகள் செயலிழக்க வைத்திருக்கிறது. உத்தியோகப்பூர்வ அறிக்கையின் படி, ஆண்டுதோறும் 2-3 மில்லியன் இறப்புகளைத் தடுப்பூசிகள் தவிர்க்கின்றன.

இந்தியாவின் சர்வதேச நோய் எதிர்ப்பு சக்தி திட்டம், உலகின் மிகப்பெரியது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 26 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து நிர்வகிக்கப்படுகிறது.

சீர்காழியில் வடமாநில கொள்ளையர்கள் 16 கிலோ நகை கொள்ளை. இருவர் கொலை!

   BBC : சீர்காழியில் இரண்டு பேரைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றவர்களில் ஒருவர் காவல்துறையின் என்கவுன்டரில் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் தன்ராஜ் சௌத்ரி என்பவர் அடகுக்கடை நடத்திவந்தார்.               மொத்தமாக நகைகளை வியாபாரம் செய்தும் வந்தார். இவர் தனது மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்தவந்தார். இந்த நிலையில், புதன்கிழமையன்று அதிகாலையில் அவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் தன்ராஜ் சௌத்ரியின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கொள்ளையர்கள் தாக்கியதில் அவர்கள் அங்கேயே உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தன்ராஜும் அவரது மருமகள் நிகிலும் படுகாயமடைந்தனர்.

சசிகலா விடுதலையானார் . அடுத்து இளவரசி விடுதலையாவார் சுதாகரன் தாமதமாகவே விடுதலை?

Veerakumar - tamil.oneindia.com : பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா இன்று பெங்களூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அதேநேரம், அவரோடு சிறையில் அடைக்கப்பட்ட சுதாகரன் எப்போது விடுதலை ஆவார் என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன். இவரும் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 வருடம் சிறை தண்டனை மற்றும் ஜெயலலிதா தவிர்த்த மற்ற மூவருக்கும், தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இளவரசி ரிலீஸ் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் சசிகலா, நான்காண்டு தண்டனை காலம் முடிந்து இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தினார். இளவரசியும் அபராதத் தொகையை செலுத்தி விட்டார். அவர் பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா இன்று விடுதலை - சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்

dailythanthi.com : 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சிறை அதிகாரிகள் நேரில் சென்று அவரிடம் கையெழுத்து பெறுகிறார்கள். பதிவு: ஜனவரி 27, 2021 02:08 AM மாற்றம்: ஜனவரி 27, 2021 06:06 AM பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார்.

Farmers Protest: விவசாயிகள் மீது போலிஸ் கொடூர தாக்குதல்; விவசாயி பலி : போர்க்களமானது டெல்லி!

nakkeeran : மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் குடியரசுத் தினமான இன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதற்கு டெல்லி காவல்துறையும் அனுமதி அளித்திருந்தது...... 

அதனைத் தொடர்ந்து, டிராக்டர்கள் மூலம் டெல்லிக்கு நுழைந்த விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து மாநில எல்லைகளில் இருந்து செங்கோட்டைக்கு விவசாயிகள் படையெடுத்து வந்தனர்டெல்லி செங்கோட்டையைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் வந்துள்ளனர். பின்னர் செங்கோட்டையில் இருந்த கோபுரம் மீது சிறிய கொடிக்கம்பத்தில் விவசாயிகள் தங்கள் கொடியேற்றினர். வழக்கமாக தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே டெல்லி வன்முறைக்கு காரணம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு 20 இடங்கள் .

tamil.samayam.com : காங்கிரஸ் கட்சிக்கு ஸ்டாலின் ஒதுக்கவுள்ள சீட்டுகளின் எண்ணிக்கை குறித்து தகவல்!. கூட்டணி தொடரும் என ஸ்டாலின் உறுதி
  • வாக்கு வங்கியை சரியவிட்ட காங்கிரஸ்
  • ஸ்டாலின் வைத்துள்ள கணக்கு
  • திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுமா இல்லையா என்று தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் கூட்டணி தொடரும் என மு.க.ஸ்டாலின் நேற்று தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கூட்டணியில் தொடர்கிறதே ஒழிய திமுக இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கையில் மிக கறாராக இருக்கும் என்று கூறுகிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.      கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு இடங்களை வாரி இரைத்ததனாலேயே வெற்றி வாய்ப்பு பறிபோனதாக திமுகவினர் கூறுகின்றனர். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தது. 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவியை தொடர்புபடுத்தி அதிலும் குறிப்பாக கலைஞரின் மனைவி தயாளு அம்மாளை சிபிஐ விசாரித்தது.

    கூட்டணி விவகாரம்: ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடா?

    minnambalam.com : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. ”அதிமுக கூட்டணியில் தற்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கும் பாமக அதே கூட்டணியில் இருக்கப் போகிறதா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.ஏனென்றால் வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வெளியிட்டு வரும் போராட்ட அறிவிப்புகள்தான். இது தொடர்பாக நேற்று (ஜனவரி 26) அன்று பாமக தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

    வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் அடுத்தக்கட்டத்தை அடைந்திருக்கின்றன. அதன்படி, வரும் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டத் தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்படவுள்ளது இதை முன்னிறுத்திதான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார் ராமதாஸ்..

    மகள்களைக் கொன்ற பெற்றோரின் மூடநம்பிக்கை - முஸ்லிம்களின் சிந்தனைக்கு

    Rishvin Ismath   : இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள சிற்றூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் சேர்ந்து தமது 27 மற்றும் 23 வயதான இரண்டு மகள்களை 24.01.2021 அன்று கொலை செய்து இருக்கின்றார்கள். இந்த செய்தி தற்பொழுது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. ..நரபலி இடம்பெற்ற ஞாயிறு தினத்தில் தமது மத நம்பிக்கைப் பிரகாரம் மந்திர வழிபாடுகளில் நால்வரும் ஈடுபட்டு உள்ளனர். கொலை செய்யப்பட மகள்கள் ஒரு நாளைக்குள் மீண்டும் உயிருடன் வருவார்கள் என்று பெற்றோர் நம்பியுள்ளனர்.
    ..பெற்றோர் தமது மகள்களை கொலை செய்ய காரணம் மூட நம்பிக்கையே அன்றி வேறெதுவும் இல்லை.
    இத்தகைய கொலைகளை இஸ்லாம் அங்கீகரிக்காது என்பதிலும், இது தெளிவான மூட நம்பிக்கை என்பதிலும் எந்த முஸ்லிமிற்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று நம்பலாம். எந்த இஸ்லாமியப் பிரிவைப் பின்பற்றினாலும் முஸ்லிம்கள் மேற்படி கொலைகளை சரி காணப் போவதில்லை, அத்துடன் இஸ்லாம் இது போன்ற மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் மார்க்கம் என்றும் அவர்கள் தயங்காமல் கூறுவார்கள். அத்துடன் குறித்த பெற்றோருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூட உறுதியாகச் சொல்வார்கள்.

    செவ்வாய், 26 ஜனவரி, 2021

    பழைய வாகனங்கள் மீது பசுமை வரி.. நிதின் கட்கரி ஒப்புதல்.. யார் யார் கட்டணும்..!

    tamil.goodreturns.in :  பழைய வாகனங்களின் மீது பசுமை வரி விதிப்பதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான திட்டத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த திட்டத்தின் முறையான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, இந்த திட்டமுன்வடிவு மாநில அரசுகளின் ஆலோசனைக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது....எவ்வளவு வரி வசூலிக்கப்படும்? அதெல்லாம் சரி இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் விதிக்கப்படலாம். இதே தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது பசுமை வரி விதிக்கப்படும்.

    டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு,, விவசாயிகள் போராட்டம் எதிரொலி!

    maalaimalar : புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என டெல்லி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.

    செங்கோட்டையை சுற்றி விவசாயிகள் திரண்டிருப்பதால் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். செங்கோட்டையை சுற்றிலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    இந்நிலையில், செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தலைநகர்டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!

    nakkeeran : சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நாளை நிறைவு செய்ய உள்ளார். தற்போது கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு அவர் விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக அவரிடம் 9 மணி அளவில் கையெழுத்து பெறப்பட்டு சிறை நடைமுறைகள் முடிந்த பிறகு சுமார் 10.30 மணிக்கு அவர் விடுதலை ஆவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாமகவுக்கு கதவு சாத்தியது திமுக.... முற்றுப்புள்ளி!

     பாமகவுக்கு கதவு சாத்தியதா திமுக?

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி அதன் பலனாக மக்களவை தொகுதிகள் எதையும் ஜெயிக்க முடியவில்லை என்றாலும்... ராமதாஸின் மகன் அன்புமணி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற்றார்.     இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க... வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தை அதிமுக அரசை குறிவைத்து துவக்கினார் ராமதாஸ்.

    டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முற்றுகை, தாலுகா அலுவலகங்கள் முன்பு போராட்டம், விஏஓ அலுவலகங்கள் முன்பு போராட்டம் என்று ராமதாஸ் பல போராட்டங்கள் நடத்தியும்... அதிமுக அரசு சார்பில் வன்னியர்களுக்கான ஒதுக்கீடு குறித்து ஏதும் உறுதிமொழி தரப்படவில்லை. இந்நிலையில், கடந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த எம்.பி.சி 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற முழக்கத்தை கையில் எடுத்தார் ராமதாஸ்.

    பேரணி.. கண்ணீர் புகை குண்டு.. தடியடி.. 144 தடை... தலைநகரை திணறடித்த விவசாயிகள் போராட்டம்

    tamil.news18.com  : டிராக்டர் பேரணி நடத்த டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடையை மீறி செங்கோட்டையில் விவசாயிகள் கொடியை ஏற்றினர்.

    டெல்லிக்குள் நுழையும் பிரதான எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிபூர் வழியாக லட்சக்கணக்கான விவசாயிகள் தடைகளை அகற்றி பேரணியை காலையில் தொடங்கினர். குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னர் பேரணியை நடத்த போலீசார் அறிவுறுத்தியிருந்த நிலையில், கர்னல், காசிபூர் பகுதியில் 10 மணியில் இருந்தே விவசாயிகள் வாகனங்களிலும், டிராக்டர்களிலும் அணிவகுத்து சென்றனர்.
    ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்குள் வராததால் சாலைகளில் கண்டெய்னர் லாரிகளை நிறுத்தியும், தடுப்புகளை அமைத்தும் போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். காசிப்பூர் எல்லையில் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி விவசாயிகளை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர்..... காசிபூர் எல்லையில் இருந்து பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பாண்டவ் நகர் பகுதிக்குள் விவசாயிகள் நுழைந்து போராட முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

    முன்கூட்டியே கிளம்பிய டிராக்டர்கள்.. தடுப்புகளை தகர்த்த விவசாயிகள்.. டெல்லி எல்லையில் பதற்றம்

    Veerakumar - tamil.oneindia.com : டெல்லி: டெல்லி எல்லையில் முன்கூட்டியே விவசாயிகள் பேரணியை துவங்கியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 

    டெல்லியில் குடியரசு தின நாளில் டிராக்டர் பேரணி நடத்தி 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு, டெல்லி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.                எனினும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லைப் பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவு மட்டுமே டிராக்டர் பேரணி நடத்த வேண்டும். திக்ரி எல்லையில் இருந்து 63 கி.மீ., சிங்கு எல்லையில் இருந்து 62 கி.மீ., காஜிபூர் எல்லையில் இருந்து 46 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்தலாம். பேரணியில் 5 ஆயிரம் டிராக்டர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஒரு டிராக்டரில் 3 பேர் முதல் 5 பேர் வரை மட்டுமே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 37 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Kisan Tractor Prade 26 January Kisan Farmers .. Live

    டெல்லியில் டிராக்டர் பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்பு ... 26 January Tractor rally farmers protest Kisan andolan

    dailythanthi.com : புதுடெல்லி, இந்தியா முழுவதும் 72-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர். இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.

    டிஆர்பி முறைகேட்டுக்காக ரூ. 40 லட்சம் அர்னாப் லஞ்சம் கொடுத்தார்....

    Image may contain: 2 people
    Chinniah Kasi : தீக்கதிர் : மும்பை: அர்னாப் கோஸ்வாமி தனது ரிபப்ளிக் டிவி-க்கு, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி எனப்படும்- டிஆர்பி (Television Rating Point) மதிப்பை அதிகரிக்க, லஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டு, கடந்த அக்டோபர் மாதம் கையும்களவுமாக சிக்கினார். ‘ரிபப்ளிக் டிவி’ சேனலை அதிகமானவர்கள் பார்க்கும் பட்சத்தில், விளம்பர வருவாய் அதிகரிக்கும் என்பதால், அர்னாப் கோஸ்வாமியே மும்பையிலுள்ள வீடுகளுக்கு மாதந்தோறும் ரூ. 400 முதல் ரூ. 500 வரை லஞ்சம் கொடுத்து தனது சேனல்களை மட்டுமேபார்க்க வைத்தது ஆதாரங்களுடன் அம்பலமானது.இந்நிலையில், டிஆர்பி முறைகேட்டு வழக்கில், 2-ஆவது குற்றப்பத்திரிகையை மும்பை போலீசார் தற்போது தாக்கல் செய்துள்ளனர். அதில், டிஆர்பி மதிப்பீட்டு அமைப்பான ‘ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வுக் கவுன்சிலின்’ (Broadcast Audience Research Council - BARC) முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த்தோதாஸ் குப்தா, கைப்பட எழுதிக் கொடுத்த வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது.

    புலிகளின் சித்திரவதையில் மரணித்த தோழர் முகுந்தனின் செய்தி வரலாற்று ஆவணம்

    Image may contain: 2 people, closeup, text that says 'தோற்றம் 14.01.1959 தோழர் முகுந்தன் ஆறுமுகம் முருகநேசன் (சுழிபுரம்)'
    Dhayalini R Kannan : · முகுந்தன் (முருகநேசன்) தோழர் பற்றிய நினைவுக் குறிப்பு sdpt-mugunthanஎமது விடுதலைப் போராட்டத்தில் விளைந்த உன்னதமான இலட்சிய புருஷர்கள் வரிசையில் வரலாற்றால் கண்டுகொள்ளப்படாது போய்விட்ட சிலரில் முகுந்தன் தோழர் என்று அழைக்கப்படும் முருகநேசன் அவர்களும் ஒருவர். இவ்வாறு அவரது சிறப்புக்கள் மறைக்கப்பட்டதன் காரணம், ஏனைய விடுதலை அமைப்புகளின் பங்களிப்பை நிராகரித்து, இப் போராட்டத்தைச் சுவீகரித்து, அதை அழிவுப் பாதையில் இட்டுச்சென்று பாழாக்கிய வரலாற்றை அவரது மகிமை கேள்விக்குட்படுத்திவிடும் என்பதுதான்.
    அவர் எத்தகைய உன்னதமான மனிதர் என்பதை அறிந்தால், அவரை வதைசெய்து கொலைசெய்தமைதான் அவரது பெரும் பங்களிப்புக்காக எம் போராட்டம் அவருக்குச் செய்த கைமாறா என்ற கேள்வி, எம் சமூகத்தின் மனசாட்சியை நிட்சயம் உறுத்தும்.
    அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகளையும் வெளிக்காட்டுவது, அவரது சகதோழர்களின் மனசாட்சிக்கான கடமையாகும்.

    சசிகலா நாளை விடுதலை - தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு

    சசிகலா நாளை விடுதலை ஆகிறார் - தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு
    maalaimalar : விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை (புதன்கிழமை) விடுதலையாக உள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.
    சசிகலா

    பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை சுப்ரீம் கோர்ட்டால் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவின் தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. 

    Dravidian Languages Day ... tribute to 700+ Tamils Martyrs sacrificed their life in the 1965 Anti Hindi Agitation.

    No photo description available.

    We Dravidians 2.0

    Today is the day in 1965, The General Dyers of Cong govt who allegedly killed 700 plus protestors during the language agitation in Tamilnadu.
    Image may contain: text that says 'மொழிப்போரில் உயிர் ஈகை செய்த /கொல்லப்பட்ட 700க்கும் மேற்பட்ட தமிழர்களின் நினைவாக ദ്രാവിഡ ഭാഷാ ദിനം ద్రావిడ భాషా దినోత్సవం திராவிட மொழி கள நாள் ஜனவரி 25 ದ್ರಾವಿಡ ನುಡಿಗಳ ದಿನ Dravidian Languages Day We Are South Indians WE DRAVIDIANS'
    In fact the 700+ Tamils sacrificed their life for India..
    They restored India's integration
    They have secured the state rights
    They have secured English and secured the future of India.
    They have secured the self respect of every Linguistic group of India.
    We observe that day as Dravidians Language Day.
    Vazhga Dravidam

    Kathir RS : · This is an Initiative from Bengal!! আজ এক পবিত্র দিন। ৬৫ বছর আগে আজকের দিনে আমাদের 700 অধিক তামিল ভাইবোন প্রাণ দিয়েছিল হিন্দি সাম্রাজ্যবাদকে ধ্বংস করতে। তাদের আত্মবলিদান ভারতকে হিন্দি রাষ্ট্র হতে দেয়নি। হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা হতে দেয়নি। অহিন্দি জাতির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হিন্দি সম্রাজ্যবাদকে ধ্বংস করাই হবে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের ভয়ঙ্করতম প্রতিশোধ। 

    Today is a holy day. 65 years ago today, more than 700 of our Tamil brothers and sisters gave their lives to destroy Hindi imperialism. Their sacrifice did not allow India to become a Hindi state. Hindi was not allowed to be the state language of India. Our worst revenge against the oppression is to destroy Hindi imperialism through the united movement of the non-Hindi nations.

    திங்கள், 25 ஜனவரி, 2021

    சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி? .....நேரு உண்மையில் நேதாஜியை காப்பாற்றினார்....

    நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணமாக வில்லை.அந்த விபத்து சம்பவம் நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான் நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் தியரி ஒன்று உலவுகிறது, அது நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.
    என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை
    நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.
    இன்றும் கூட பழைய நாசிகளை உலக நாடுகள் வேட்டை ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஹிட்லரின் நாசிப்படையினரின் கொடிய போர்குற்றம் இழைத்ததாக நூரம்பெர்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழைய நாசிப்படையினர் இன்றும் கூட வேறு வேறு
    பெயர்களில் வேறு வேறு நாடுகளில் பயந்து பயந்துதான் வாழ்கிறார்கள்.
    நேதாஜி அவர்கள் நாசிப்படையில் இணையவில்லை என்றாலும் அவர்களிடம் ராணுவ உதவி கேட்டமையானது சாதாரண குற்றம் அல்ல. ஹிட்லரின் மனித குலவிரோத நடவடிக்கைகள் எல்லாம் நேதாஜிக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அவர் அதை பொருட்படுத்தவில்லை.
    நல்ல காலம் ஹிட்லர் நேதாஜிக்கு கடைசியில் கைவிரித்து விட்டார். இந்தியர்களை இன்னும் பல ஆண்டுகள் பிரிட்டிஷாரே ஆளவேண்டும் என்ற கொள்கையை நேதாஜியிடம் கூறி அவரை பக்குவமாக சகல வசதிகளும் செய்து கொடுத்து ஒரு நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார். ஹிட்லர் நினைத்தால் நேதாஜியை என்னவும் செய்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லை.

    30 எம்எல்ஏக்கள் ? சசிகலா தயார்..? உடையும் அ.தி.மு.க! கவர்னர் ஆட்சி?

    nakkeeran - தாமோதரன் பிரகாஷ் : விடுதலைநாள் முடிவான நிலையில், சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்கிற ஃப்ளாஷ் நியூஸ், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களாகவே காய்ச்சல் இருந்த நிலையில், புதனன்று மூச்சுத்திணறலால் கடுமையாக அவதிப்பட்ட சசிகலாவை சிறை மருத்துவர்கள் பரிசோதித்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பரிந்துரைக்க.... ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். பாதுகாப்பு என்ற பெயரில் யாரையும் நெருங்கவிடாமல் 300க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். யாரோ வி.வி.ஐ.பி.யிடம் ஒன் டூ ஒன் பேசி, அரசியல்ரீதியான நகர்வுகளை முன்னெடுக்க சசிகலா முயற்சிக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே சசிகலா மிகுந்த டென்ஷனில் இருந்தார். டிடிவி தினகரன் டெல்லிக்கு சென்று, தமிழக விவகாரங்களை கவனிக்கும் பா.ஜ.க. தலைவரான பூபேந்திர யாதவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதனையடுத்து, சசிகலாவை 27-ஆம் தேதி விடுதலை செய்வதற்கு பதில் 23-ஆம் தேதி விடுதலை செய்ய கர்நாடக அரசு ஆயத்தமானது. கூடுதல் பரோல் காரணமாக இளவரசிக்கு பிப்ரவரி 5தான் விடுதலை என்பதால் ஜனவரி 27-ஆம் தேதியே சட்டப்படி விடுதலை யாகிறேன். யாருடைய சலுகையும் வேண்டாம் என சசிகலா கூறிவிட்டார்.

    மகள்களை நரபலியிட்ட பெற்றோர் உடல் முழுவதும் மஞ்சள் குங்குமம்.. ...ஆந்திர மாநிலம் சித்தூர்

    மூட நம்பிக்கையில் பயங்கரம்:பெற்ற மகள்களை உடற்பயிற்சி அடித்து கொலைசெய்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்
    January 25
    15:14 2021
    ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் அரசுப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பத்மஜா டுடோரியல் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார்
    Image may contain: text that says 'Dr. PURUSHOTHAM NAIDU M.Sc, M.Phil, Ph.D ASSOCIATE PROFESSOR OF CHEMISTRY GOVT. DEGREE COLLEGE MADANAPALLE Smt. V. PADMAJA M.Sc (MATHS) GOLD MEDALIST CORRESPONDENT MASTERMINDS IT TALENT SCHOOL'

     nakkeeran - கலைமோகன் ": கல்வியறிவு, தொழில்நுட்பம் எனப் பல்வேறு வழிகளில் மனித சமுதாயம் மூடநம்பிக்கைகளை கைவிட்டு சற்று விலகி நடந்தாலும் அவ்வப்போது ஆங்காங்கே மூடத்தனமான நம்பிக்கையின் மூலம் சில சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்வியாளர்களாக இருக்கக்கூடிய, படித்த பெற்றோர்களே செய்திருக்கும் இந்த மூடத்தனமான செயல், ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் அரசுப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பத்மஜா டுடோரியல் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இருவரும் நன்கு படித்தவர்கள். கல்வித்துறையில் இருவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 27 வயதில் அலக்கியா என்ற மகளும், 22 வயதில் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

    BBC : பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க. இடம்பெறுமா?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி

    முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் ": தமிழக சட்டமன்றத் தேர்தல், தனிச் சின்னத்தில் போட்டி, பா.ம.கவுடன் கூட்டணி சாத்தியமா என்பது குறித்து எல்லாம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு அளித்த பேட்டியின் இரண்டாவது பகுதி இது. பேட்டியிலிருந்து: 

    கே. தி.மு.க. கூட்டணிக்குள் பாட்டாளி மக்கள் கட்சி வரக்கூடும் என்ற பேச்சுகள் தற்போது அடிபடுகின்றன. அப்படியான சூழலில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பாட்டாளி மக்கள் கட்சி எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கும். இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துவிட்டு, இரு கட்சிகளுடனும் கூட்டணி வைப்பார்கள். நாங்களும் இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்திருக்கிறோம். ஒரு முறை அண்ணா தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். தவிர்க்க முடியாத நிலையில், அந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

    இந்தத் தருணங்களில் கொள்கை ரீதியான விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான விஷயங்கள் குறித்து விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஆனால், தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைத்தது கிடையாது.

    மிரட்டல்- கெஞ்சல்: காங்கிரசுக்கு ஸ்டாலின் போட்டிருக்கும் புதுக் கணக்கு! (காங்கிரசுக்கு 20 தொகுதி?)

    minnambalam : இதுகுறித்து ஸ்டாலினின் நலம் விரும்பிகள் அவரிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.     அந்த நலம் விரும்பிகளின் வட்டாரத்தில் நாம் பேசியபோது... "2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 63 இடங்களை பெற்ற காங்கிரஸ் வெறும் 5 இடங்களில்தான் ஜெயித்தது.                  அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவியை சம்பந்தப்படுத்தி அதிலும் திமுக தலைவர் கலைஞரின் மனைவியான தயாளு அம்மாளை சிபிஐ விசாரணைக்கு அழைத்து...           அந்த விசாரணையை கலைஞர் டிவி அலுவலகத்தில் வைத்து நடத்தி அதே நேரத்தில் கீழ்த்தளமான அறிவாலயத்தில் காங்கிரசுக்கான தொகுதி பேரத்தை அதிகாரத் திமிரோடு நடத்தி 63 தொகுதிகளை வலுக்கட்டாயமாக பெற்றது காங்கிரஸ். மத்தியில் ஆட்சியில் இருந்த போது இப்படி என்றால்... 2016 சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை.

    2011 தேர்தலில் பெற்ற பாடத்தையடுத்து 2016 சட்டமன்றத் தேர்தலிலேயே காங்கிரசுக்கு அதிக பட்சம் 30 தொகுதிகள் தான் என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார். அப்போதைய திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளிடமும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் கலைஞர்.

    டெல்லியில் நாளை பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்

    tamil.news18.com : டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் நாளை குடியரசு தினத்தன்று டெல்லியில் பிராமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். குடியரசுத்தின நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படாமல் பேரணி நடத்த விவசாயிகள் ஒப்புக் கொண்டதையடுத்து, போலீசார் அனுமதியளித்துள்ளனர்.
    இதையடுத்து, காசிப்பூர், சிங்கு, திக்ரி 3 எல்லைகள் வழியாக டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.

    தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை .. மும்பை உயர் நீதிமன்றம்

    Manikandaprabu S | Samayam Tamil : தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறையாக கருத்தில் கொள்ளப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹைலைட்ஸ்:
    • பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை
    • விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது
    • ஆடையின் மேல் அத்துமீறித் தடவுவது பாலியல் வன்முறை அல்லது அத்துமீறலில் வராது          நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு அதிர்ச்சிகரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

    திமுக கூட்டணியில் பாமக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

    மminnambalam :ொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. “திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு சோர்ஸுகள் மூலமும், பல்வேறு தரப்புகள் மூலமும் திமுக கூட்டணி பற்றியும், அதிமுக கூட்டணி பற்றியும் பல தகவல்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. அதிகாரிகள் தரப்பிலும் ஸ்டாலினோடு டச்சில் இருப்பவர்கள் உண்டு. அந்த வகையில் அதிமுக - பாமக கூட்டணியில் இருக்கும் சில பிரச்சினைகளும் ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றன.                இந்தச் சூழலில்தான் கடந்த 21ஆம் தேதி நடந்த மாசெக்கள் கூட்டத்தில், 'திமுகவில் சேர இன்னும் சில கட்சிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.           நான்தான் கிடப்பில் போட்டு வைத்திருக்க்கிறேன்’ என்று கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார். வன்னியர்களுக்கென தனி உள் ஒதுக்கீடு வேண்டுமென்று டிசம்பர் மாதத்தில் இருந்து போராட்டங்களைத் தீவிரப்படுத்திய ராமதாஸ்... அதை அடிப்படையாக வைத்தே பாமகவின் அரசியல் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அதற்காகவே 25ஆம் தேதி நிர்வாகக் குழு கூட்டத்தையும் அறிவித்தார்.ஆனால் முதல்வர் சார்பில் ராமதாஸிடம் இதுகுறித்துப் பேசிய பிறகுதான் 25ஆம் தேதி கூட்டத்தை 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.

    இந்த நிலையில்தான் ஜனவரி 21ஆம் தேதி தர்மபுரி மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணியோடு கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ‘வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டால் கூட்டணி பற்றி டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார்’ என்று பேசியது அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

    கோவையில் மருத்துவர் உமாசங்கர் திட்டமிட்ட கொலை ? உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    கோவையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை விவகாரத்தில் கைதான மருத்துவர் உமாசங்கர் கார் மோதி உயிரிழந்த விவகாரத்தில் நடந்தது விபத்தில்லை திட்டமிட்ட கொலை என்று உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    Vishnupriya R - tamil.oneindia.com : கோவை: மருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கிய சென்னை மருத்துவமனை சேர்மன் டாக்டர் உமாசங்கர் இன்று காலை கண்ணப்ப நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது விபத்தா இல்லை திட்டமிட்ட கொலையா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ோவை காந்திபுரத்தில் இயங்கி வந்தது எல்லன் என்ற பிரபல மருத்துவமனை. பிரபல மருத்துவரான 72 வயதான ராமச்சந்திரன் இதன் உரிமையாளர் ஆவார். இவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த உமாசங்கர் (54) என்ற மருத்துவர். சென்னை மருத்துவமனை என்ற பெயரில், தான் ஒரு மருத்துமனையை நடத்தி வருவதாக கூறியுள்ள உமாசங்கர், அதன் கிளையை கோவையிலும் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். ஏற்கெனவே வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையை நிர்வகிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த ராமச்சந்திரன், எல்லன் மருத்துவமனை கட்டடத்தை வாடகைக்கு விட ஒப்புக் கொண்டுள்ளார்.

    மருத்துவர் சாந்தா : ஒருவேளை நான் நாளை விடைபெறக் கூடும். உடனே அழுது புலம்பி ஒரு நாள் பணி இங்கே கெடக் கூடாது

    Image may contain: 1 person, sitting
    மருத்துவர் சாந்தா
    Adv Suguna Devi : · " இந்த பாருங்க சிஸ்டர்ஸ்! ஒருவேளை நான் நாளை விடைபெறக் கூடும். உடனே அழுது புலம்பி ஒரு நாள் பணி இங்கே கெடக் கூடாது; நாளை எப்போதும் போலான பணி, இன்ஸ்டிடியூட்டில் நடைபெற வேண்டும். நிறைய பேர் மாலை போட வரிசையில் வரக் கூடாது. வேண்டுமானால், மாலைக்கான காசை வாங்கி நம் அறக்கட்டளையில் போடச்சொல்லி, அதனை இன்னொரு புற்றுநோயாளியின் மருத்துவத் தேவைக்கு பயன்படுத்தலாம்; அப்புறம் 'எனக்கு மணி மண்டபம் கட்டுறேன்; நினைவகம் செய்யுறேன்', என நம் இந்த இடத்தையோ, அதற்கு காசையோ வீணாக்க கூடாது. என் சாம்பலை இன்ஸ்டிடியூட்டின் எல்லாப் பக்கமும் தூவி விடுங்கள்; சரியா? நான் பார்க்கமாட்டேன்னு நினைக்காதீங்க.. சொன்னதெல்லாம் ஒழுங்கா நடக்குதா என மேல இருந்து பார்ப்பேன். ஓகேயா?" என சிரித்தபடி கூறிக்கொண்டே நடந்து சென்று, ஆஞ்சியோ சிகிச்சைக்குப் போன அந்த 93 வயது முதிய பேராளுமை மருத்துவர் சாந்தா நிரந்தரமாக விடைபெற்றார் அந்த பேராளுமையின் நிரந்தப் பிரிவு நாளன்று அடையாறு மருத்துவமனையின் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 1000 க்கணக்கான ஊழியர்களும், செவிலியர்களும் கனத்த மனத்தோடு மருத்துவர் சாந்தா வின் வழிகாட்டுதல்படி, மேலிருந்தும் அவர்கள் புன்னகைக்கும்படி அங்கே கண்ணீரோடு காத்திருந்த ஆயிரக்கணக்கான புற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார்கள்.

    மகாபாரதம் என்ற நாவல் கிபி 400க்கு பின்புதான் புனையப்பட்டது .. ஆதாரத்தோடு நிறுவிய திரு. கிருஷ்ணவேல் டி எஸ்

    கிருஷ்ணவேல் டி எஸ் : · மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி நாம் எல்லோரும் படித்திருப்போம், அவர் மூலம் தான் இன்று சங்கீகளுக்கு நாம் ஒரு பர்னிச்சரை உடைக்க போகிறோம் அவர் கிமு 356ல் பிறந்து 323ல் மறைந்தவர், பதிவு செய்யப்பட்ட உலக வரலாற்றில் மொத்த உலகத்தையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வரவிரும்பியவர் அதற்கான வேலையை ஓரளவு வெற்றிகரமாக செய்தும் காட்டியவர். இந்த அலெக்ஸ்சாண்டர், கிரேக்கம், எகிப்து, துருக்கி, அரேபிய, இந்தியா என்று பல்வேறு பகுதிகளின் மீது படை எடுத்து சென்று வென்று அங்கெல்லாம் தன் ஆட்சி அதிகாரத்தை நிறுவியவர் இதில் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால், தன் அதிகாரத்துக்குள் வந்த எல்லா புதிய பகுதிகளிலும், முதல் வேலையாக அலெக்ஸ்சாண்ட்ரியா என்ற பெயரில் ஒரு புதிய நகரத்தை அவர் உருவாக்கினார்
    மேலே சொன்ன கிரேக்கம், எகிப்து, துருக்கி, அரேபிய, இந்தியா உட்பட எல்லா பகுதிகளிலும் சேர்த்து அலெக்ஸ்சாண்ட்ரியா என்ற பெயரில் அவர் உருவாக்கிய நகரங்களின் எண்ணிக்கை 23
    அதிலும் குறிப்பாக அன்று இந்தியாவின் ஒரு பகுதியாக கிரேக்க வரலாற்று ஆசிரியர்களால் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானில் மட்டும் அவர் அலெக்ஸ்சாண்ட்ரியா என்ற பெயரில் உருவாக்கிய நகரங்கள் 4, அவை
    அலெக்ஸாண்ட்ரியா அரியானா, இப்போதைய ஹெராத்,
    அலெக்ஸாண்ட்ரியா புரோப்தாசியா, இப்போதைய ஃபரா,
    அலெக்ஸாண்ட்ரியா அரகோசியா, இப்போதைய காந்தஹார்,
    அலெக்ஸாண்ட்ரியா காகசஸ், இப்போதைய பக்ராம்
    இவற்றில் அலெக்ஸாண்ட்ரியா அரகோசியா என்ற நகரம் சந்திரகுப்த மவுரியன் காலத்தில், செலுக்கஸ் நிகேடார் என்ற அலெக்ஸ்சாண்டரின் கவர்னர் ஆட்சியில் தலைநகரமாக இருந்தது,
    இந்த கவர்னருக்கு 500 யானைகள் பரிசாக கொடுத்து, பதிலுக்கு அந்த கிரேக்கரின் மகளை திருமணம் செய்து கொண்டு அமைதி ஒப்பந்தம் செய்து கொள்கிறார் சந்திரகுப்த மவுரியன்.

    கேரளா கடத்தல் கஞ்சா இலங்கை எங்கும் அமோக விநியோகம்? கட்டுக்கடங்காமல் பெருகும் கஞ்சா பாவனை

    teavadai.com :இலங்கையில் வடக்கின் ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்பது என்ன….? யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வடக்கிற்கான பொருளாதார தடைகள் ஏற்பட்ட போது இந்தியாவில் இருந்தே பெருமளவான பொருட்கள் கடல் வழியாக இலங்கையில் கொண்டு வரப்பட்டன. மண்ணெண்ணெய், கோதுமை மா, பற்றரிகள், பெற்றோல் என பல பொருட்கள் கடல் ஊடாகவே பரிமாற்றப்பட்டன. கடல் வழியாக பலர் இந்தியாவுக்கு சென்று வருவதும் இடம்பெயர்ந்து செல்வதும் சர்வ சாதாரணமாக இடம்பெற்றது. ஆனால் அந்த காலப்பகுதியில் கூட வடக்கிற்கு போதைப்பொருளான கஞ்சா கொண்டுவரப்படவில்லை. அதனைப் பயன்படுத்துபவர்களும் சொல்லக் கூடிய வகையில் வடக்கில் இருக்கவில்லை. இறுக்கமாகவும் கட்டுக் கோப்புடனும் இருந்த தமிழ் சமூகம் இன்று என்ன நிலையில் நிற்கின்றது என்ற கேள்வி எழுகிறது. தமிழ் மக்களின் கலாசார பூமியாக கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்திலும் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் நாளாந்தம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்படுவது என்பது தினமும் பத்திரிகைச் செய்திகளாகிவிட்டன.

    ஞாயிறு, 24 ஜனவரி, 2021

    தளவனூர் தடுப்பணை உடைந்தது-பொன்முடி தலைமையில் திமுக அதிரடி போராட்டம்!

    Mathivanan Maran - tamil.oneindia.com : விழுப்புரம்: விழுப்புரம் அருகே தளவனூர் தடுப்பணை உடைந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் இன்று திடீரென அங்கு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தடுப்பணை உடைப்பு தொடர்பாக அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவனூரில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. எனதிரி மங்கலம் என்ற இடத்தில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

    கதவணையால் மண் வெளியேற்றம் !  இது தொடர்பாக விசாரணை நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், கட்டப்பட்ட தடுப்பணை உறுதியாகவே உள்ளது. கதவணை திறக்கப்பட்டதால் மண் அடித்துக் கொண்டு வெளியேறுகிறது. இது பைப்பிங் ஆக்‌ஷன் என்போம். இப்படி நிகழ்வது எதிர்பார்த்ததுதான். இதனால் தடுப்பணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்.

    டெல்லியில் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி; போலீசார் அனுமதி

    dailythanthi.com : டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். புதுடெல்லி, டெல்லி எல்லையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து கடும் குளிரிலும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 21ந்தேதி 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

    18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்பு கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இலங்கைக்கு 500,000 தடுப்பூசிகளை பரிசாக வழங்கும் இந்தியா..!

    /zeenews.india.com  :  Covid-19 தடுப்பூசிகளின் 'பரிசு' ஒன்றை அடுத்த வாரம் இலங்கைக்கு அனுப்பப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது என இலங்கை அதிபர் (Gotabaya Rajapaksa) கோட்டபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசி ஜனவரி 27 ஆம் தேதி இலங்கைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.

    இலங்கைக்கு, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட" 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசி (Covishield) டோஸ் கிடைக்கும். ஜனவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய மெகா நோய்த்தடுப்புத் திட்டத்தைத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் Covid-19 தடுப்பூசிகளைப் (Corona vaccines) பெற்ற எட்டாவது நாடாக இலங்கை திகழ்கிறது. புதன்கிழமை தொடங்கி, இந்தியா தனது அண்டை முதல் கொள்கையின் ஒரு பகுதியாக பிராந்தியத்தில் உள்ள ஏழு நாடுகளுக்கு, பூட்டான் 150,000 டோஸ், மாலத்தீவுக்கு 100,000 டோஸ், நேபாளத்திற்கு 1 மில்லியன் டோஸ், பங்களாதேஷுக்கு 2 மில்லியன் டோஸ், மியான்மர் (Myanmar) 1.5 மில்லியன் டோஸ் ஆகியவற்றைப் பரிசாக வழங்கியுள்ளது. சீஷெல்ஸ் 50,000 டோஸ் மற்றும் மொரீஷியஸுக்கு 100,000 Covid-19 டோஸ் பரிசாக வழங்கப்பட்டது.

    தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..

    Oneindia Tamil வழக்கம்போல, இந்த முறையும் விசிகவுக்கு சின்னம் பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது.. விசிகவுக்கு என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.. அந்த கட்சிக்கென்று அடிப்படை உள்ளது.. கொள்கை உள்ளது.. கால் நூற்றாண்டாக தமிழகத்தில் களம் கண்ட கட்சி..! அந்த வகையில், தனித்தன்மை என்ற ஒன்று விசிகவுக்கு தேவையானதாக இருக்கிறது.. அப்படி கேட்பதில் எந்தவித தவறும் கிடையாது.. அது அவர்களின் தார்மீக உரிமையும், விருப்பமும்..!
    திருமா இதே காரணங்களுக்காகத்தான், தனிச்சின்னத்தில் போட்டியிட போவதாக, முதலில் வைகோ சொன்னார்.. பிறகு திருமாவும் அறிவித்தார்.. ஆனால், திமுக எதையுமே கண்டுகொள்ளவில்லை.. அதற்கு காரணம், திமுகவை பொறுத்தவரை , இந்த முறை வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. கூட்டணிகளுக்கு தொகுதிகளை அள்ளி தந்துவிட்டு, பெரும்பான்மையை இழக்கவும் அக்கட்சி விரும்பவில்லை.

    தனிச்சின்னம் கூட்டணி கட்சிகளின் மீது அதிருப்தி எதுவும் இல்லையென்றாலும்கூட, எந்தவித விஷப்பரிட்சையிலும் இறங்க திமுக தயாராக இல்லை. அதனால்தான், இரட்டை இலக்கம் கேட்டு வந்த கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலும் சீட் தரப்படலாம் என்றார்கள்.. அப்படியே தரப்பட்டாலும் பாதி தனிச்சின்னம், பாதி உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டி வரும் என்றும் சலசலக்கப்பட்டது.. இதனாலேயே திமுகவிலும் கூட்டணி முடிவுக்கு வராமல் இழுபறியில் இருந்தது. இதில் விசிக இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. அதேசமயம் உதயசூரியன்தான் என்று உறுதியாகவும் அறிவிக்கவில்லை.

    காங்கிரசின் தடுமாற்றமும் திமுகவின் திசைமாற்றமும்!

    Image may contain: 2 people, closeup

    சாவித்திரி கண்ணன் : காங்கிரசின் தடுமாற்றமும், திமுகவின் திசைமாற்றமும்!·சரியான தலைமையை  அங்கீகரிக்க மறுப்பது, தகுதியற்ற தலைமையை திணிப்பது என்ற சர்வாதிகாரத்திற்கான விலையைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அனுபவித்துக் கொண்டிருக்கிறது புதுச்சேரியில்! கடந்த ஐந்தாண்டுகளாக புதுச்சேரி அரசியலில் கையாலாகத்தனம், கோமாளித்தனம் ஆகியவற்றின் அம்சமாக சொந்தக் கட்சிக்காரர் களாலேயே பார்க்கப்பட்டு வருபவர் தான் நாராயணசாமி! புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கோ, புதுச்சேரி மக்கள் நலனுக்கோ எந்த விதத்திலும் பாடுபட்டு அரசியலில் உயர்ந்தவரல்ல நாராயணசாமி! புதுச்சேரி தலைவர்களில் ஒருவரான ப.சண்முகத்தின் நம்பிக்கையைப் பெற்று, அவருக்கு பின்பு டெல்லி அரசியல் தலைமையின் அணுக்கத்திற்கு உரியவராக மாற்றியவர் தான் நாராயணசாமி! நிர்வாகத் திறமையோ, நாணயமோ, பொது நலன் சார்ந்த அக்கரையோ இல்லாமல் மேலிடத்து லாபி மூலம் அதிரடியாக புதுச்சேரி அரசியலில் பிரவேசித்து, நமச்சிவாயத்திற்கு அல்லது வைத்தியலிங்கத்திற்கு சென்றிருக்க வேண்டிய முதல்வர் பதவியை அடைந்தார்!

    இதனால் சொந்தக் கட்சிக்குள் இன்று வரை நம்பிக்கையானவர்கள் அவருக்கு அமையவில்லை! சதா சர்வகாலமும் தன் தலைமை பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஆட்சியில் அதிகாரப் பரவலையும் அவர் முறையாக செய்யவில்லை! இதனால் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளாமல் தவிர்த்தார்!

    இப்பவெல்லாம் தினம் தினம் பூஜைதான்...அய்யர் காட்டில் அடைமழை தான்.

    பாலகணேசன் அருணாசலம் : · கடவுள் வியாபாரிகள் எந்த ஒரு

    கொறைச்சலும் இல்லாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கிட்டிருக்கானுக... நான் ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் சிவன் கோவிலுக்கு தவறாமல் சென்றுவிடுவேன்...25 வருடத்துக்கு முன்பெல்லாம் எங்க ஊரு சிவன் கோவிலில் விஷேசம் நடப்பதெல்லாம் வருடத்துக்கு ஒருமுறைகூட இருக்காது. . அப்படியே இருந்தாலும் கூட்டம் அவ்வளவாக இருக்காது, மேலும் பிரதோஷத்துக்கு உற்சவர் பிரகாரத்தில் வலம் வர பல்லாக்கை தூக்குவதற்கு ஆள் கிடைக்காது... ரோட்டுல போகிறவர் வருபவரை கெஞ்சி அழைத்து தூக்கவைத்ததாக ஊர்ப் பெரியவர்கள் இப்பொழுது ஆன்மீகம் என்னும் பெயரில் கோவில்ளில் மக்கள் பொழுதுபோக்கு கூத்தடிப்பதைப் பார்த்து வேதனையுடன் சொல்லக் கேட்டிருக்கிறேன்
    இதுபோல ஏகப்பட்டது .. இப்பவெல்லாம் தினம் தினம் பூஜைதான்...அய்யர் காட்டில் அடைமழை தான். ..முன்பு கோவிலுக்கு செல்லும் கூட்டம் குறைந்திருந்தது இப்போது அதிகரித்திருப்பதன் காரணம் கடவுளுக்கு வந்த திடீர் சக்தியினால் அல்ல... மக்கள் கையில் சில்லரை புரளுகிறது அதுதான் காரணம்...இதுமூடநம்பிக்கையா என்றால் கிடையாது
    கையில் ஏத்தம் குறைந்தால் பொழப்பத் தேடித் தானாக போவான்....
    நிற்க..