சனி, 28 நவம்பர், 2020

இலங்கை வடபகுதி இந்திய வம்சாவழி மக்கள்

updrf.blogspot.com  :வடபகுதி இந்திய வம்சாவழி மக்கள்! இக்கட்டுரை யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர்களால் 1980இல் வெளிக்கொணரப்பட்ட பொதிகை ஆண்டு மலரில் வர்த்தகமானி 1ம் வருட மாணவர் மா. நாகராஜா எழுதிய கட்டுரை. அண்மைக் காலங்களில் ஏற்பட்டுவரு பல மாற்றங்கள், குறிப்பாகப் பொருளாதார, சமூக, அரசியல் மாற்றங்கள் இலங்கையிலுள்ள பல்வேறினங்களிடையேயும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களையும் ஒரு தேசிய இனமாகக் கணிக்கும் நிலேப்பாடு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேசிய இனமாகக் கணிக்கும்பொழுது அது பெரும்பாலும் இலங்கையில் மலையகத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழில்புரியும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களையே குறிப்பிடுவதாக அமைகின்றது. அதே சமயத்தில் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக இலங்கையின் வடபகுதியில் வாழும், இந்திய வம்சாவளித் தமிழின மக்களைப் பற்றிச் சில குறிப்புகளை சுட்டிக்காட்டவேண்டிய சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது. இவ்வடபகுதியில் இம் மக்கள் எத்தகைய பொருளாதார அடிப்படையையும், எவ்வாறான சமூக இருத்தலையும், அரசியல் அமைப்புக்களையும் இலக்கியப் பரிமாணங்களையும் கொண்டுளனர் என்பதனை ஒரு மேலோட்டமா பார்வையில் இக்கட்டுரை ஆராய்கின்றது

வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களை இரு பிரிவுகளின் அடிப்படையில் பிரித்து ஆராய்ந்து பார்க்கலாம் அப்பிரிவினை அவர்களின் குடியேற்ற காலத்தின் அடிப்படையில் பிரிக்கலாம்.
1. தென்னிந்தியாவில் ஏற்பட்ட வரட்சியின் பாதிப்பினால் நேரடியாக யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழின மக்கள்.

2. மலையகத்தில் ஏற்படுத்தப்பட்ட, காணிச் சுவீகரிப்புப் போன்றவற்றினுல் பாதிப்படைந்து மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா, மன்னர், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழின மக்கள்.

வடமொழிச் சொற்கள் நமக்கே தெரியாது பேச்சு வழக்கிலும் பதிவுகளிலும் கலந்து பயன் படுத்துகிறோம்

Image may contain: text

  Sundar P : · நாம் பதிவுகளில் பல வடமொழிச் சொற்கள் கலந்து இருக்கிறது. நமக்கே தெரியாது பேச்சு வழக்கிலும் அதையே பயன் படுத்துகிறோம். நமக்கு கற்பித்த ஆசிரியர்களும் திருத்திச் சொல்லித் தரவில்லை. . மெல்ல அகற்றி தூய தமிழை வளர்ப்போம்.சில வடமொழிச் சொற்களுக்கு தமிழாக்கம் தரப்பட்டிருக்கிறது. முடிந்தவரை பயன் படுத்துங்கள் . அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல

சந்திரசேகரன் மக்கள் முன்னணி ! மலையகத்தில் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அனுஷா சந்திரசேகரன்!


சந்திரசேகரன் மக்கள் முன்னணி"
மலையக அரசியலுக்கு புது இரத்தம் பாய்ச்சிய என் தந்தையின் மறைவுக்குப் பின் அரசியல் களம் மாத்திரமல்ல அவர் ஆரம்பித்த கட்சியின் செயற்பாடுகளும் மௌனித்துள்ளதை மறக்க முடியாது.
இதனை பார்வையாளராக இருந்து விமர்சிப்பதோடு என் கடமையை மட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன் என் தந்தை வழியில் எனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய 17 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை அடுத்தகட்ட சமூக செயல்பாடுகளுக்கான அடித்தளமாக அமைத்துக்கொண்டு மக்களுடன் இணைந்து பயணிப்பேன்.
இதன் ஊடகமாக "அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி" என்ற தொழில் சங்கத்தையும் "சந்திரசேகரன் மக்கள் முன்னணி" என்ற அரசியல் கட்சியையும் பதிவு செய்து என் பணியை ஆரம்பிக்க உள்ளேன்.
ஆரோக்கியமான முற்போக்கான தூய நோக்குடைய அனைத்து சக்திகளின் ஆதரவுடன் நிச்சயமாக புதிய அரசியல் தொழிற்சங்க கலாசாரத்தை உருவாக்கும் மக்கள் சக்தியுடனான வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிப்பேன்.
மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்.

 ராதா மனோகர் :  மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் முன்பு  ஏழு  நாடாளுமன்ற பிரதிநிதிகள் அங்கு தெரிவாகி இருந்தனர் .வாக்குரிமை பறிக்கப்பட்ட பின்பு மக்களின் நாடாளுமன்ற அரசியல் என்பது ஒரு முடிவுக்கு வந்தது என்று சிலர் எக்காளமிட்டனர் . 

நம்மை உருவாக்கிய தலைவர்களோடு (எவரையும்) ஒரு போதும் ஒப்பிட முடியாது.. திராவிடர் கழகம் அருள்மொழி

Annamalai Arulmozhi : திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
நாம் ஆதரித்த ஒரு போராளித் தலைவரை நம்மை உருவாக்கிய

தலைவர்களோடு ஒப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கொரோனா காலத்தின் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், வெளிப்படையாகப் பேச முடியாத விவாதங்களில் கண்டிப்பாக நம் நிலைப்பாட்டை மட்டும் எடுத்துச் சொல்வதுதான். நான் விளக்கங்களை விவரிக்கவிரும்பவில்லை. ஏனெனில் ஒவ்வொரு சொற்றொடரும் பல உள் விவாதங்களை எழுப்பும். அதை முகநூலில் ஒற்றை எதிர் தரப்புடன் விவாதிக்க முடியாது. மற்ற தரப்புகள் உள்ளே வரும். விவாதம் திசைமாறும் ஆபத்தும் உண்டு .
நாங்கள் ஈழத் தமிழர்களை ஆதரித்தவர்கள். அவர்களது உரிமைப் போருக்குத் துணை நின்றவர்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை மாவீரன் என்று கொண்டாடியவர்கள். அவர்கள் மீதான குறைகள் பேசப்பட்டபோது அது உண்மையாக இருக்காது என்று நம்பியவர்கள்.
ஈழ விடுதலைப் போராட்டங்களுக்கான ஆதரவுக்காக இழப்புகளை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள்.வேலையை இழந்தவர்கள். இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். சொத்துக்களை அழித்து பொருளாதார உதவி செய்தவர்கள். அதற்காக தற்கொலை செய்து கொண்ட எங்கள் இளைஞர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாத கையறு நிலைக்கு ஆளானவர்கள்.

சென்னையில் திருடர்களை விரட்டி பிடித்த போலீஸ் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

BBC: சென்னையில் திருடப்பட்ட இருசக்கரவாகனத்தில் செல்லும் மொபைல் திருடர்களை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் அண்டிலின் ரமேஷ் துரத்தி சென்று மடக்கிப் பிடிக்கும் சிசிடிவி காட்சியினை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கோவையில் வழிப்பறி கொள்கையர்களால் இளைஞர் விக்னேஷ் கொலை

hindutamil.in :  கோவை கள்ளிமடை, கற்பகம் கார்டன் அருகே காவல்துறையினரின் வாகனச் சோதனையைப் பார்வையிடும், துணை ஆணையர் ஸ்டாலின்.கோவையில் வழிப்பறிக் கொள்ளையர்களால் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மாநகரில் 42 புதிய இடங்களில், வாகனத் தணிக்கையைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை விமான நிலையம் அருகேயுள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(25). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 26-ம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில், விமான நிலைய சாலையில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ் காலனிக்குச் செல்லும்போது, வழிப்பறிக் கொள்ளையர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல்துறையினர், கொலை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கடந்த பிப்ரவரி மாதம் இதேபோல் இரவு நேரத்தில், நடு அரசூர் அருகேயுள்ள, சடையன் தோட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழ்செல்வன் (20) பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றபோது, செல்போன் பறிக்க வந்த வழிப்பறிக் கொள்ளையர்களால் குத்திக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பிணையில் வெளியே வந்துள்ளனர். இவர்களுக்கு விக்னேஷ் கொலைச் சம்பவத்தில் தொடர்புள்ளதா என, தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தவிர, சந்தேகத்துக்குரிய சிலரைப் பிடித்தும் விசாரித்து வருகின்றனர்.

சந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை

maalaimalar.com :சென்னை:உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

இதில் சில முக்கிய நிறுவனங்களின் மருந்துகள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன. சில மருந்துகளின் செயல்திறன் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியை ரஷியா உருவாக்கி உள்ளது. இதனை விரைவில் சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் என்ற அளவில் இந்த மருந்து உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் மேலும் சில மருந்துகளும் செயல் திறனை நிரூபித்துள்ளன. இந்த நிறுவனங்களின் மருந்துகளை பெறுவதற்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளன.இவ்வாறு விரைவில் சந்தைக்கு வருவதற்கு தயாராக உள்ள சில நிறுவனங்களின் மருந்துகள் குறித்த தகவல்களை சுருக்கமாக பார்ப்போம். ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா:வைரல் வெக்டர் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியானது, 62 முதல் 90 சதவீதம் வரை நோய்த்தடுப்பு திறன் கொண்டது என்று பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் கொடுத்து நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவுகள் வந்துள்ளன. இந்த மருந்தை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பயன்படுத்த முடியும். எனவே, இந்த மருந்து சந்தைக்கு வரும்பட்சத்தில் கையாள்வது எளிதாக இருக்கும்.

கட்டாய மதம் மாற்றத்துக்கு எதிராக அவசர சட்டம்...மீறினால் 10 ஆண்டுகள் சிறை...ஆளுநர் ஒப்புதல்

webdunia :உத்தரபிரதேசத்தில் கட்டாய மதம் மாற்றத்துக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.; இந்த அவசர சட்டத்திற்கு உ.பி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களில் வட மாநிலங்களில் கட்டாய மதம் மாற்றத்துக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.                                      இந்நிலையில் லவ் ஜிகாத்தை கட்டுப்படுத்த சட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.                                             இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள ம.பி அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படும் என்றும், அதில் 5 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தார். 

அதேபோல் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநிலத்திலும் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் இயற்றப்படுவதாகவும் , லவ் ஜிகாத்தினால் மதம் மாறி திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதற்கு எதிரான விரையில் சட்டம் இயற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், காதலித்து கட்டாய மதம் மாற்றம் செய்து திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்ட மசோதாவுக்கு உ.பி, ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். 

குளத்தில் மூழ்கிய வாலிபரை காப்பாற்ற உதவிய தெருநாய்

 குளத்தில் மூழ்கிய வாலிபரை காப்பாற்ற உதவிய தெருநாய்

maalaimalar :பாலக்காடு:  வாயில்லா ஜீவனாக சுற்றித்திரியும் நாய்கள் நன்றி உணர்வு மிக்கது. தனக்கு உணவளிக்கும் எஜமானியரின் கட்டளைக்கு கீழ்படிந்து வீட்டுக்கு நல்ல காவலாளியாக இருப்பவை.

இந்த வகையில் வீட்டு நாய்கள் மட்டுமின்றி, தெருநாய்களும் தங்களது பகுதிக்கு சந்தேகப்படும்படியான வெளி நபர்கள் யாரும் வந்தால் விடாமல் குரைத்து அந்த வீதியில் உள்ளவர்களை விழிப்படைய வைக்கும். ஆகவே நாய்களும் மக்களுக்கு உதவிகரமாகவே உள்ளன. இந்த வகையில் தெரு நாய் ஒன்று குளத்தில் உயிருக்கு போராடிய ஒரு வாலிபரை காப்பாற்ற உதவிய சம்பவம் நடந்துள்ளது. அது பற்றி பார்க்கலாம்:-   
கேரளமாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜோன் (வயது 24). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.                     இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் நிறுவனத்துக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பினார். அப்போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள குளத்தில் விழுந்தார். இதனால் ஜோன் மயங்கிய நிலையில் குளத்தில் மூழ்கதொடங்கினார்.

அமித் ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்-அதிமுகவின் பதில் என்ன?

minnambalam :“அதிமுகவில் சில நாட்களாகவே தலைமைக் கழக நிர்வாகிகளிடமும், மண்டலப் பொறுப்பாளர்களிடமும் ஒரு பட்டியலைக் கொடுத்து இது சரியாக வருமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். தென் மாவட்டத்தில் சில தொகுதிகள், கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகள், சென்னையில் சில தொகுதிகள் என தனித்தனியாக இருக்கும் அந்த பட்டியலை அந்தந்த பகுதி மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார் எடப்பாடி. அப்படி என்ன முக்கியத்துவம் அந்த பட்டியலில்?
டிஜிட்டல் திண்ணை:   அமித் ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்-அதிமுகவின் பதில் என்ன?

நவம்பர் 21 ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அன்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமித் ஷா முன்னிலையில், ‘அதிமுக பாஜக கூட்டணி தொடரும்’என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச, அதன் பின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ‘அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் அமித் ஷா இந்த நிகழ்வில் அரசியல் பேசினாலும் அதிமுக கூட்டணி பற்றி ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அமித்ஷா தான் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்குத் திரும்பினார்.

விவசாயிகள் போராட்டம்: டெல்லியைச் சுற்றி கடுங்குளிர், கொரோனாவை மீறி போராட்டம்.. BBC

இந்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து போராடி வரும் வட மாநில விவசாயிகள் டெல்லியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று டெல்லி காவல்துறை நேற்று, (வெள்ளிக்கிழமை) கூறியிருந்த போதும் டெல்லி மாநில எல்லையில் இன்னும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடியுள்ளனர். டெல்லிக்குள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் குறைவானவர்களே உள்ளனர். இந்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் டெல்லியை நோக்கி வரும்போது அவர்கள் காவல்துறையினரால் கண்ணீர் புகை குண்டு வீச்சு, நீரைப் பாய்ச்சி அடித்தல், தடியடி உள்ளிட்ட காவல்துறையின் பல தாக்குதல்களை எதிர் கொண்டனர். டிராக்டர்களில் தங்களுக்கு தேவையான உணவுகளை ஏற்றிக் கொண்டு டெல்லியை நோக்கி நடந்து வரும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் படங்களும், அவர்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகும் படங்களும் இந்த வாரம் முதலே இந்திய சமூக ஊடகங்களில் மிகவும் அதிக அளவில் பரவி வருகின்றன.

சமணம் ! தமிழுக்கு அதிக இலக்கியங்களை கொடுத்தது ! எல்லாருக்கும் பொதுவான அற ஒழுக்க நூல்களை போதித்த ஒரே சமயம்

Gks Mani : · தமிழுக்கு அதிக இலக்கியங்களை கொடுத்த சமயம் எது விளக்கம் கீழே:- 1)       ஐம்பெருங்காப்பியங்கள்:- சிலப்பதிகாரம் -சமணம் மணிமேகலை - பௌத்தம் சீவகசிந்தாமணி -சமணம் வளையாபதி -சமணம் குண்டலகசி - பௌத்தம் இவ்வாறு தமிழுக்கு ஐஞ்பெருங் காப்பியங்கள் அனைத்தையும் தந்தது சமணமும் பௌத்தமும்.
2)ஐஞ்சிறுங் காப்பியங்கள் :-
சூளாமணி -சமணம்
நீலகேசி -சமணம்
யசோதர காவியம் -சமணம்
உதயண குமார காவியம் -சமணம்
நாக குமார காவியம் -சமணம்
ஐஞ்சிறுங் காப்பியங்கள் அனைத்தையும் தந்தது சமண சமயம்.
3) எட்டு தொகை நூல்கள் :-
நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறு நூறு,பதிற்றுப்பத்து,பரிபாடல்,கலித்தொகை,அகநானூறு,புற நானூரு
என்று எட்டு தொகை நூல்கள் அனைத்தையும் தந்தது சமண சமயம்.
4) பத்துப்பாட்டு:-
தமிழில் உள்ள பத்து பாட்டு பின்பே பெயரிடப்பட்டு பல்வேறு காலங்களில் இயற்றப்பட்ட இலக்கியங்களை தொகுத்து பத்து பாடல்கள்களை கொண்டது
பத்து பாடல்களில்
திருமுருகாற்றுப்படை நூலை தவிர
பொருநராற்றுப்படை - சமணம்
சிறுபாணாற்றுப்படை - சமணம்

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு

thinathanthi : இலங்கை பிரதமர் ராஜபக்சேவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார். 

இலங்கை, மாலத்தீவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.  கொழும்பு, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய பெருங்கடல் நாடுகளான இந்தியா, இலங்கை, மாலத்தீவு இடையே 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.                                              கடந்த முறை, 2014-ம் ஆண்டு டெல்லியில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தநிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நேற்று இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் தொடங்கியது. இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று கொழும்பு சென்றார்.                           அவரை இலங்கை ராணுவ தளபதி சில்வா ஷாவேந்திரா வரவேற்றார். பின்னர் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், இந்திய குழுவுக்கு அஜித் தோவலும், மாலத்தீவு குழுவுக்கு அதன் ராணுவ மந்திரி மரிய தீதியும் தலைமை தாங்கினர். 

அந்த வெள்ளை கொடியேந்திய நாட்களில் நடந்தவை .. சமூக வலை லீக்ஸ்

Sugan Paris : · மே- 15 இல் மகிந்த ஜோர்தானிலிருந்து அவசரமாகத் திரும்பிவந்தபோது, ஓமஸ்த மாத்ரு பூமிய . பின் மூன்று நாட்கள் கால இடைவெளி. ....    

· மாவீரம் எல்லா இயக்கங்களிலிருந்தும் போராடவேண்டும் எனப்போன அடிமட்டப் போராளிகளுக்குப் பொருந்தும் பிரபாகரனுக்குப் பொருந்தாது. தன்புகழைக் காப்பாற்ற தான் சார்ந்தவர்களையும் அனைவரையும் பலிகொடுக்கத் தயங்காத போர் மனநோயாளி அவன். A Killer-Psychopath(கொலைமனநோயாளி). "போராளி 'எனும் மகத்தான சொல்லிற்கு எவ்விதத்திலும் பொருத்தமில்லாத முழுமூட அறிவிலி..

 
பிரபாகரன் சரணடைந்தபின் அவசரமாக ஜோர்தானில் இருந்து திரும்பிவந்து நிலத்தில் மண்டியிட்டு வணங்கும் மகிந்த.
ஒருநாளிற்கும் மேலதிகமாக வைத்திருந்து பின் தொலைதூரத்தில் ஓரிடத்தில் சுட்டுமுடித்து எரித்துவிட ஆயத்தமான நேரத்தில் அருகில் இருந்த ஒரு ராணுவவீரன் இவனை எங்காவது கொண்டுபோய் தப்பவைத்தோ ஒரு சர்வதேசத்திடம் ஒப்படைத்தோ மேலும் சிக்கலாக்கியோ சொதப்பியோவிடுவார்கள் என தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொன்றபின்னர் பிரபாகரன் வாழ்வு முடிவிற்கு வந்தது. உயிரோடு இராணுவச் சிறையிலிருந்தபோது அழைத்துக் காண்பிக்கப்பட்டவர்களில் தமிழ்த்தரப்பில் ஒருவர் இன்னும் இருக்கிறார்.
போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதெல்லாம் ஒரு போர்த்தந்திரம்.
சரணடைந்ததே உண்மை.

Nithiyananthan Niroukshan : 100%..

 Dhillu Durai : அய்யா சுகன் ! அந்த ஆசாமி பெயர் ?....

 புலியூர் முருகேசன் : எவ்வளவு வன்மம்...  

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே தெஹ்ரான் அருகே படுகொலை

dailythanthi.com : ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே தலைநகர் தெஹ்ரான் அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே தலைநகர் தெஹ்ரான் அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே  ஈரானின் இரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் சூத்திரதாரி என்று மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் அவரை கருதுகின்றன. அவர்"ஈரான் அணு குண்டின் தந்தை" என்று வர்ணிக்கப்பட்டார்.>மொஹ்சென் பக்ரிசாதே தலைநகர் தெஹ்ரான் அருகே  காரில் சென்று கொண்டு இருந்த் போது அவரது கார் வெடிகுண்டு மூலம் குறிவைக்கபட்டது. தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்றது.இதில் படுகாயம் அடைந்த ஃபக்ரிசாதே மருத்துவமனையில் இறந்தார். 

சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளில் அரசு டாக்டர்கள் சேர நடப்பாண்டு இடஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

thinathanthi : புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு டாக்டர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு டாக்டர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மருத்துவ மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால், இந்த படிப்புகளுக்கு அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என மனுதாரர் கள் தரப்பில் வாதிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்.

சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல ! அது சாதாரணக் coding 'கோடு வேர்ட்'தான்..

செல்லபுரம் ள்ளியம்மா  : சமஸ்கிருதம் மொழியே அல்ல ! -

சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல!      அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று  .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!     ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்: 

 இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து.,  

‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என.ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.!
அதில கூறியிருப்பதாவது :எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை..
இனமே இல்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள்,
ஜ,ப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.
அதுபோல் ,தமிழர் தமிழையும் ,
ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.
அப்படி சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?.
இரண்டாவதாக , எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால்தான் மொழியாகும்! . பேசப்படவி.ல்லை.............யென்றால்...  “First, solve the problem. Then, write the code..
அது ‘குறியீடு' எனப்படும் . 
எந்த இயல்பான மொழியும்  பேச்சில் முதலில் தொடங்கி பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான் எழுத்து வடிவம் பெறமுடியும் .
சமஸ்கிருதம் என்ற மொழி எந்தக் கால கட்டத்திலும் பேசப்பட்டதாக எந்த விதமான சான்றுகளும் இல்லை .

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதி .. விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

Image may contain: one or more people, text that says 'இறுதியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிட்டனர். எந்தத் தடைகளும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது என்பதை நிரூபித்துவிட்டனர். விவசாய விரோத விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கிறார்கள். #FarmersProtest #ModiAgainstFarmers'

Jeyalakshmi C - tamil.oneindia.com : டெல்லி: விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த டெல்லி புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என பல தடைகளை கடந்த விவசாயிகளுக்கு ஒருவழியாக டெல்லிக்குள் நுழைய அனுமதி கிடைத்துள்ளது. மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய  இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது ரயில் மறியலை கைவிட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி 'டெல்லி சலோ' என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மரடோனாவின் கால்களை ஏன் வடசென்னை இளைஞன் கொண்டாடினான்? Maradona


 S
halin Maria Lawrence -
Vikatan :  ஓரிடத்தில் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மேஜை ஒன்றின் மீது வெள்ளை, நீல நிற கோடுகள் போட்டு பத்தாம் நம்பர் அச்சிடப்பட்ட ஜெர்சி ஒன்றை இயேசு சிலுவையில் தொங்குவதைப்போல் ஆணிகளால் அடித்து தொங்க விட்டு அதற்கு மாலை அணிவித்து கும்பிட்டு கொண்டிருந்தார்கள். 

கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்திற்காக ஒரு காலை வேலையில் ராயபுரத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தோம். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கியிருந்தது. சமூக வலைத்தளங்கள் முழுக்க கால்பந்து போட்டிகளைப் பார்க்காதவர்கள்கூட தங்களைத் தாங்களே கால்பந்து ரசிகர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டிய சமூக நிர்பந்தத்தில் இருந்தனர். ஆகப்பெரிய சண்டைகள் வேறு. ஜெர்மனியா, பிரேசிலா என்று முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள். பல இடங்களில் ஆட்டத்துக்கு ஆட்டம் பெட்டிங் வேறு நடந்தது. அதை சாதாரணமானவர்கள் பார்த்தால் கால்பந்து ஏதோ மேல் தட்டு வர்க்க விளையாட்டோ என்று நினைத்து விடுவார்கள். அந்த அளவிற்கு அந்த விளையாட்டை சுற்றி ஒரு வர்க்க பூச்சை பூசி இருந்தார்கள். அதை ஒரு கவர்ச்சிகரமான விஷயமாக மாற்றியிருந்தார்கள்.

வெள்ளி, 27 நவம்பர், 2020

1982 முதல் 1987 வரை .. அமிர்தலிங்கத்தை இந்திய அரசு வளர்த்து விடும் என்ற பயத்தில் ..

Vetri Chelvan : பகுதி 32 .. 1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களு
1985ஆண்டு டெல்லியில் இலங்கையிலுள்ள விடுதலை இயக்கங்களுக்கும் இந்திய அரசுக்கும் முக்கிய சந்திப்புகள் நடந்தன. முதலில் அதைப் பற்றி பார்ப்போம்.இந்திரா காந்தி மறைவுக்குப் பின் ராஜீவ் காந்தி பிரதமராக வந்து இரண்டொரு மாதங்களில் எல்லா விடுதலை இயக்கத் தலைவர்களுக்கும் டெல்லி வரும்படி அழைப்பு வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி அழைப்பு வரவில்லை. விடுதலைப் புலிகளின் சார்பில் பிரபாகரன், திலகர், ஈபிஆர்எல்எஃப் சார்பில் பத்மநாபா, கேதீஸ்வரன் ஈரோஸ் சார்பில் பாலகுமார், ரத்ன சபாபதி, டெலோ சார்பில் ஸ்ரீ சபாரத்தினம் கூட வந்த பெயர் நினைவில் இல்லை, புளொட்சார்பில் செயலதிபர் உமாமகேஸ்வரன் மட்டும் வந்தார், டெல்லியில் அவருடன் நானும் சேர்ந்து கொண்டேன். எல்லா விடுதலை இயக்கங்களுக்கும் ஒரே ஓட்டலில் தங்கும் இடம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ஹோட்டல் தாசப்பிரகாஷ் என நினைக்கிறேன். செயலதிபர் உமா தனக்கு ரூம் வேண்டாம் என்று கூறி விட்டு என்னோடு வந்து தங்கிவிட்டார். அடுத்த நாள் காலை 10 மணிக்கு ஹோட்டல் தாசப்பிரகாஷ்வரச்சொன்னார்கள்.
காலையில் நாங்கள் அங்கு போனபோது எல்லா இயக்கத்தவர்களும் தயாராக வரவேற்பறையில்இருந்தார்கள் இந்திய அதிகாரிகள் தனித்தனி கார்களில் எங்களைக் கூட்டிக்கொண்டு பெரியவர் ஜி பார்த்தசாரதி அவர்களின் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.ஜிபி அவர்களும் அவர்களின் செயலாளர் அய்யாசாமி அவர்களும் எல்லோரையும்வரவேற்றார்கள். இதுதான் எல்லா இயக்கமும் சேர்ந்து ஒரு இந்திய அதிகாரிகளை சந்தித்த முதல் நேரம். பெரியவர் ஜி பார்த்தசாரதி எல்லா தமிழில் விடுதலை இயக்கத் தலைவர்களுக்கும் தெளிவாக ஒரு செய்தியைச் சொன்னார். அதை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது.

சுய விமர்சனமே பெரியாரியம் ... Devi Somasundaram

Devi Somasundaram : · தோழர் ஜெகத் கஸ்பர் அவர்களோட பிரபாகரன் பிறந்த தின உரையாடல் பார்த்தேன். எனக்கு ஜெகத் கஸ்பரின் கள அரசியலில் ( கொள்கைல தனி ,அதை அப்றம் பேசுவோம் ) விமர்சனம் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைவாதிகளில் ஒருவர் என்பதால் இதை சொல்ல நேர்ந்தது அவருடைய தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடு ஈழ நலன் தவிர்த்து தமிழகத்தின் வளர்ச்சிகானதா இருக்கின்றதா என்ற கேள்வியை தமிழ் நாட்டில் பிறந்த ஒரு தமிழராய் கேட்க எனக்கு உரிமை உண்டு .
தமிழ் தேசிய அரசியல் என்பது தமிழ் நாட்டின் வளர்ச்சியை உள்ளடக்கியது என்ற உணர்வை உங்களால் என் போன்ற இளைஞர்களுக்கு தர முடியாமல் போனதன் காரணம் என்ன ? .நீங்கள் யாருக்கான அர்சியலை பேசுகிறீர்கள் ? .
உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுஙகள் கஸ்பர், ஈழம் என்று ஒரு தேசம் இருக்கு, அதில் தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரை அனுப்பவிக்கின்றார்கள் .அவர்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற குரல் இந்த சமூக பொறுப்பற்ற சமூகத்தின் காதுகளின் இரும்பால் மூடிக்கொண்ட செவிப்பறையை தட்டி ,கிழித்து ,சொன்னது யார் ? .யாரால் ஈழ மக்களின் துயர் பொது சமூகப் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது ..கலைஞராலா ?? ..எம் ஜீ ஆராலா ? .
கலைஞர் என்ற ஒற்றை மனிதரின் இன உணர்வால் தட்டிதிறக்கப்பட்டது தான் ஆதிக்கத்தின் கதவுகள் ..அவரை சமாளிக்க முடியாமல் அதே ஆதிக்கம் எம்ஜீ ஆர் என்ற மாய வலையால் எல் டி டி இ மூலம் இந்த தமிழ் சமூகத்தை மடை மாற்ற முயன்றது ..

​முருங்கை இலை டீ குடிப்பதால் . மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது.

Drumstick Leaf Tea

  webdunia :முருங்கை டீ முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி, அரைத்த பொடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது இது இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது.முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, விதை, பட்டை, வேர், பிசின், மலர் என அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது.          அதிலும் குறிப்பாக, முருங்கை இலைகளில் க்ளோரோஜெனிக் ஆசிட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.... 

முருங்கை இலையில் செறிந்துள்ள விட்டமின் சி, டைப் -2 வகை நீரிழிவு நோயளிகளின் இரத்த சர்க்கரையையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது..                 ..முருங்கைக்கீரை உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதால் இதய நோய்களின் ஆபத்தைக் குறைத்து இதய நோயாளிகளுக்கும் உதவுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது.     

அதானிக்கு கடன் கொடுக்க வேண்டாம்! ’இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு இடையே பரப்பரப்பு...

webdunia : இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியினிடையே அதானிக்குக் கடன் வழங்காதீர்கள் என்ற பதாகையுடன் மைதானத்தில் ஒரு நபர் இறாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா கால ஊரடங்கில் ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் அனைத்துப் போட்டிகளும் முடிவடைந்தன. இதையடுத்து, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதி; மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 374 ரன்கள் குவித்தது. இப்போட்டியின் 6 வது ஓவரின்போது, ஒரு ரசிகர் , கையில் பாதையுடன் மைதானத்திற்குள் நுழைந்தார். அதில், அதானிக்குக் கடன் வழங்காதீர்கள்…என்று எழுதப்பட்டிருந்தது. அந்த ரசிகரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் விளையாட்டு தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரு நாட்கள் வெளிவராத முரசொலி

minnampalam : திமுகவினருக்கு மட்டுமல்ல கலைஞர் ரசிகர்களுக்கும் கலைஞரின் அபிமானிகளுக்கும் கலைஞரின் அதிதீவிர நேசர்களுக்கும் ஒவ்வொரு நாள் காலையிலும் அவரது மூத்த குழந்தையான முரசொலியை படிக்காவிட்டால் அந்த நாள் நன்நாளாகவே இருக்காது.

இரு நாட்கள் வெளிவராத முரசொலி
Add caption
தன்னுடைய அரசியல் வாழ்வில் ஒரு நாள் கூட முரசொலியை இடைவிடாமல் வெளியிட்ட பெருமை கலைஞருக்கு உண்டு. 1991 மே 21ஆம் தேதி இரவு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டபோது தமிழ்நாடு முழுவதும் வன்முறை வெடித்ததில் சென்னையில் இருந்த முரசொலி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு கடும் சேதமாக்கப்பட்டது. ஆனால் விடிந்த நாள் மே 22ஆம் தேதி கூட முரசொலி வெளிவந்தது என்பது தான் கலைஞரின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்குமான சாட்சி.

மத்திய, மாநில அரசுக்கு எதிராக திமுக வழக்கு!.. “ஓபிசிக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு ...

minnambalam :மத்திய, மாநில சுகாதாரத் துறைச் செயலாளர்களுக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்பட வேண்டிய 50 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைத்து 3 மாதங்களுக்குள் இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசு, அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வாதத்தை ஏற்று, இந்த ஆண்டு ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை என உத்தரவிட்டது. தமிழக அரசு, அரசியல் கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது.  தமிழக அரசு மெத்தனப்போக்குடன் நடந்ததும், மத்திய அரசுக்கு முறையான அழுத்தம் அளிக்காததும்தான் இந்த தீர்ப்புக்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.

இந்திய பொருளாதார மந்தநிலை - ஜிடிபி முடிவுகள் காட்டும் ... 15 குறிப்புகள்

BBC : இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் -7.5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. முதலாவது காலாண்டில் இது -23.9 சதவீதமாக இருந்தது. கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் இந்த சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில், 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி சரிவை நோக்கிச் செல்வது அசாதாரணமான தாக்கமாக கருதப்படுகிறது. ஜிடிபி வளர்ச்சிச் சரிவு இரண்டாவது காலாண்டில் 8.8 சதவீதமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், தற்போது வெளியான முடிவுகளின்படி 8.5 சதவீதம் என்ற அளவுக்கே வளர்ச்சி சதவீதம் சரிந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்டுள்ள இரண்டாவது காலாண்டின் ஜிடிபி முடிவுகள் தொடர்பாக நீங்கள் அறிய வேண்டிய 15 முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.

1. 2020-21 நிதி ஆண்டின், இரண்டாவது காலாண்டான, ஜூலை 2020 முதல் செப்டம்பர் 2020 வரையான செப்டம்பர் காலாண்டில், இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி -7.5 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.

திமுகவில் மீண்டும் இணைகிறாரா முக அழகிரி? பேச்சு வார்த்தையில் சுமூகம் என தகவல்

வெப்துனியா  :தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன அந்த வகையில் திடீரென அரசியலில் மீண்டும் குதிக்க இருப்பதாக முக அழகிரி அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். 

மேலும் முக அழகிரி பாஜகவில் சேரப் போவதாகவும் வதந்திகள் வெளியாகின. இந்த நிலையில் முக அழகிரி மற்றும் முக ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் இந்த பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.          இதன்படி இருவருக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் திமுகவில் முக அழகிரி சேர அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கு திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது . இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதையும், முக அழகிரி திமுகவில் சேருவாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரான்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பங்களாதேஷ் பிரஜைகள் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தல்

தினக்குரல் - சண்முகலிங்கம் : பிரான்ஸ் நாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பங்களாதேச நாட்டவர்கள் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். பிரான்சில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் போது பிரெஞ்சு அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புக் கோஷங்களைப் பதிவு செய்தார்கள் என்ற காரணத்தினால் 15 பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்களை சிங்கப்பூர் அரசு, நாடு கடத்தியிருப்பதாக அறிவித்துள்ளது . உள்துறை அமைச்சு வெளியிட்ட தகவலின்படி இஸ்லாமிய இறைதூதரின் கேலிச்சித்திர படங்களை வெளியிட்ட பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகை தொடர்பாக இவர்கள் வன்மையான தகவல்களை வெளியிட்டு இருந்ததை அவதானித்த சிங்கப்பூர் உளவுத்துறை இவர்களை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது. சிங்கப்பூரில் வேலை ரீதியாக வந்ததாகவும் அதிகமானவர்கள் கட்டிட வேலைகளில் ஈடுபட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமுக நீதி காவலர் வி பி சிங்.. 11 மாதங்களே பிரதமர்.. நூற்றாண்டு சாதனை.... நவம்பர் 27 - நினைவுதினம்

 Sivasankaran Saravanan : தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்தில் கலைஞரின்
உதவியாளர் திரு. சண்முகநாதனிடம் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது! தேசிய அளவில் உள்ள தலைவர்களில் கலைஞர் யாரிடம் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்? என. அதற்கு அவர் சொன்ன பதில் வி.பி சிங்!
யார் இந்த வி பி சிங்?! வெறும் 11 மாதங்களே இந்த நாட்டை ஆட்சி செய்த இவர் பெயரைக்கேட்டால் இன்றும் மதவாத சக்திகள், பார்ப்பனிய சக்திகள் அலறுவது ஏன்??
1950 ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்துகிறார் அண்ணல் அம்பேத்கார்! ஆங்கிலேயர்கள் செய்த நிர்வாக நடவடிக்கைகளால் பட்டியல் வகுப்பினர் என்ற பிரிவு மட்டுமே அப்போது இந்திய அரசிடம் இருந்தது! யார் யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற விபரம் இல்லை. எனவே பட்டியல் பிரிவினருக்கு இட ஒதுக்கீடை செயல்படுத்துகிற அம்பேத்கார், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளங்காண பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒன்றை அமைக்கிறார்!
1978 ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் ஆட்சியில் அந்த ஆணைய வழிகாட்டுதலில் மண்டல் என்பவரது தலைமையில் கமிசன் ஒன்று அமைக்கப்படுகிறது!
தமிழ்நாடு கேரளாவில் எப்படி எல்லா சமூகங்களும் ஒன்றுபட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறுகின்றன, மருத்துவம் உள்ளிட்ட அரசுப்பணியாளர்கள் எப்படி அந்தந்த மக்களிடமிருந்தே உருவாகிறார்கள் என்பதை ஆய்வு செய்கிறது!

கவிஞர் தஞ்சை இராமையாதாஸ் (சூன் 5, 1914 - சனவரி 15, 1965) காலத்தை வென்ற பாடல்களை எழுதியவர்

Image may contain: 3 people, people standing and outdoor, text that says 'கஞ்சை ராமையாதாஸ்' Sukumar Shan :காலத்தை வென்ற பாடல்களை எழுதிய கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் - தஞ்சை இராமையாதாஸ் (சூன் 5, 1914 - சனவரி 15, 1965) தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆவார். ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியிருக்கிறார். சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா" பாடலும் தருவார். மாயாபஜார் படத்துக்கு "கல்யாண சமையல் சாதம்" பாடலும் தருவார். காதலை நெஞ்சில் பதிக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்" படப்பாடலான "அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா"வும் தருவார். நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் "மலைக்கள்ளன்" படப்பாடலான "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாடலும் தருவார். புரியாத மொழியில் 'ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் "ஜாலியோ ஜிம்கானா" பாடலை எழுதியதும் இவரே.

கலைஞர் மீது புலிகளுக்கு ஏனிந்த கடும் கோபம்?

செல்லபுரம் ள்ளியம்மை  : புலிகளுக்கு கலைஞர் மீதும் ரணில் விக்கிரமசிங்க மீதும் இருக்கும் அசாத்திய கோபம் ஒரு சாதாரண விடயம் அல்ல.
புலிகளின் கூட்டு அறிவியில் என்பது ஒரு விசித்திரமான வளர்ச்சியை கொண்டிருந்தது.
சாதாரண மனிதர்கள் சிந்திப்பது போல அவர்களின் கூட்டு மனோ நிலை ஒருபோதும் இருக்கவில்லை.
அதற்கு பல காரணிகளை நாம் ஆய்வு செய்யவேண்டி இருக்கிறது.
மதங்களின் அதீத கட்டுப்பாட்டு கோட்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தி இருக்க கூடும் .
அப்படியாயின் இலங்கை நிலப்பரப்பில் தோன்றிய எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத ஒரு வித்தியாசமான சிந்தனை போக்கு புலிகளிடம் மட்டுமே எப்படி உருவானது?
இதை ஆய்வு செய்யப்புகின் தவிர்க்கவே முடியாதவாறு புலிகள் இயக்கம் தோன்றிய நிலப்பிரதேசம் பற்றி செய்திகள் கொஞ்சம் கவனத்திற்கு உரியதாகும்.
அந்த இயக்கம் தோன்றியது வடஇலங்கையில் வல்வெட்டி துறையாகும்.
வரலாற்று ரீதியாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடைபெற்று வந்த வணிக  கடல் போக்குவரத்தில் ஒரு முக்கிய இடமாக வல்வெட்டி துறை விளங்கிற்று.
1950 இல் இருந்து  1960 களில் இலங்கை போலீசும் கடற்படையும் இந்திய இலங்கை கடலில் பண்டங்களை அங்கும் இங்குமாக ஏற்றி இறக்கி செல்லும் கட்டுமரங்களை கண்காணிக்க தொடங்கியது.
வட இலங்கையின்  கரையோர பகுதிகளில் பரவலாக இது நடந்து கொண்டிருந்தாலும் வல்வெட்டி துறையில் மட்டும்தான் மிக அதிகமாக நடந்தது.

வியாழன், 26 நவம்பர், 2020

வன்னி பரப்பில் சுமார் ஒன்றரை லட்சம் மலையக மக்கள் .. பலருக்கு காணி உறுதி இல்லை, வாக்குரிமை இல்லை, புலிகளின் பிடியில் சிக்கிய கொடுமை..

Image may contain: one or more people, people standing, tree, sky, child, outdoor and nature

வரதன் கிருஸ்ணா : · வன்னியும் மலையகமும் ஒரு பார்வை! யுத்தம் முடிவுற்று பதினோரு வருடங்கள் ஆகிவிட்டன அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் தரப்பினர் இந்த நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதில் மும்முரமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த வன்னி பெருநிலப்பரப்பு என்பது மிகவும் ஜனத்தொகை குறைந்த ஒரு நிலமாகவும் அதைவிட பெருங்காடுகளை கொண்ட ஒரு நிலப்பகுதியாகும். 

58, 77 , 83 தென்னிலங்கை கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தவர்கள் இந்த நிலப்பகுதிக்கு இடம்பெயர்ந்தனர் அதைவிட தன்னார்வ அமைப்புக்களின் உதவிகளோடு குடியமர்த்தப்பட்டனர். இதில் முன்னணியாக செயற்பட்ட அமைப்பு காந்தீயமாகும் அடுத்தது தமிழர் புனர்வாழ்வு கழகம் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் குடியேறினர். அவர்களுக்கு தரிசு நிலங்கள் மற்றும் காடுகளை வெட்டி நிலங்கள் வழங்கப்பட்டு இருந்தன எனினும் அவர்கள் பெரும்பாலானோர் கூலி வேலைசெய்தும் சிறு விவசாயங்கள் ஊடாக வாழக்கை நடத்தி வந்தனர்.

எழுபதுகளுக்கு பின்னர் அங்கு குடியேறியபோது வடக்கு மற்றும் கிழக்கில் தனிநாட்டு கோரிக்கை உருவெடுத்த நிலையில் வன்னிக்கு குடிபெயர்ந்த மலையகத்தவர்கள் நிம்மதியான ஒரு வாழ்க்கைமுறையை ஏற்படுத்த முடியவில்லை நிலவுரிமை சட்டப்பூர்வமாக இருக்கவில்லை வாக்குரிமை பதிவுகளில் இல்லை வெறுமனே அங்கு வாழும் ஒரு நிலைமட்டுமே இருந்தது.

மரடோனாவின் 'கடவுளின் கை ..விளையாட்டு உலகின் மோசமான முன்னுதாரணம் மரடோனா?

Rishvin Ismath : விளையாட்டு உலகின் மோசமான முன்னுதாரணம் மரடோனா.
(நீதி, நியாயங்களுக்கு அப்பால் மரடோனாவின் பித்துப்பிடித்த ரசிகனான இருந்தால் இதனை வாசிக்காமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. இந்தப் பதிவு பலருக்கு எரிச்சலை உண்டாக்கலாம், உணர்வுகளை, சொந்த விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி உண்மையை நோக்குவது சிரமமானது, மதங்கள் என்று வரும்பொழுதும் பலபேர் தோற்றுப் போகும் இடமும் அதுதான்.)
மரணம் மட்டுமே ஒரு மனிதனை புனிதனாக்கி விடுவதில்லை, அவன் எப்படி வாழ்ந்தான் என்பதும் மிக முக்கியமானது. மரடோனா உலகில் அறியப்பட்டதெல்லாம் ஒரு உதைப்பந்தாட்ட விளையாட்டு வீரனாகவே, அதன் பின்னரே மற்றைய அறிமுகங்கள்.
கியூபாவின் காஸ்ட்ரோவுடனும், வெனிசுலாவின் சாவேஸ் உடனும் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்ததற்காகவோ,சேகுவேராவின் படத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்ததற்காகவோ மட்டும் மரடோனாவை புனிதப் படுத்திவிட முடியாது, அப்படி செய்வது மதவெறிக்கு சற்றும் சளைக்காத தூய கம்யூனிஸ வெறியாக மட்டுமே அமையும். யூதர்களை பெரும் எண்ணிக்கையில் கொன்றான் என்ற ஒரே காரணத்திற்காக ஹிட்லரை ஒரு ஹீரோவாகப் பார்க்கும்படியாக இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு காலத்தில் எம்மை மாற்றியிருந்தன என்பதையும் ஞாபகப் படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. சட்டென்று மாறிய வானிலை .. வெதர்மேனின் பிரத்யேக தகவல்

Vishnupriya R -  tamil.oneindia.com:  சென்னை: சென்னையில் நிவர் புயல் கரையை கடந்த நிலையில் கடுங்குளிர் வீசுகிறது. 

புயலை நமக்கு வெகு அருகில் இருப்பதால் இந்த நிலை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.                    வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் நேற்று முதல் சென்னையில் மழை வெளுத்தெடுத்தது.                     மழை பெய்த போது குளிர்ந்த காற்று வீசினாலும் ஜில்லென இல்லை.                 ஆனால் இன்று நிவர் கரையை கடந்த நிலையில் காலை முதல் சென்னையில் மழை பல்வேறு இடங்களில் இல்லை. வானமும் வெளீர் என இருந்தது.                    இந்த நிலையில் மதியம் முதல் குளிர் வாட்டி எடுக்கிறது. ஏதோ மலை பிரதேசங்களில் இருப்பது போன்ற ஒரு எண்ணம் தோன்றுகிறது.          வாவ்.. சென்னை பக்கிங்காம் கால்வாயில் அரிதான சிறிய சூறாவளி.. வீடியோ வெளியிட்ட வெதர்மேன் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக தகவலில், நிவர் புயலானது நம்மை வெகு விரைவில் கடந்து சென்றதால் அதிகமான குளிர் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் கற்கக்கூடாதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி

 maalaimalar :  தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் தமிழ் கற்கக்கூடாதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி

கோர்ட் மதுரை கிளை
சென்னை:தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ்மொழி கற்பிக்கப்படும் என திருத்தம் செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொன்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.அதில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. அதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடியமாணவ, மாணவிகளுக்கு தமிழ்மொழி கற்றுக்கொடுப்பதில்லை. 
கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ்மொழியை கட்டாய கல்வி மொழியாக ஆக்க வேண்டும். கேந்திரிய பள்ளியில் தமிழ் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க உத்தரவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தூத்துக்குடி: ரூ. 500 கோடி மதிப்பிலான ஹெராயின்! – நிவர் புயல் பரபரப்புக்கு இடையே சிக்கிய கும்பல்

vikatan - இ.கார்த்திகேயன் : கடத்தல் படகு தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த படகை, கடலோர காவல்படையினர் சோதனையிட்டதில், ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ூத்துக்குடி `தொழிற்சாலை நகரம்’ என்பதால், உடலுழைப்புத் தொழிலாளர்களைக் குறிவைத்து கஞ்சா தாராளமாக விற்பனை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும்வருகிறது. அதேபோல, தூத்துக்குடி, ராமநாதபுரம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பிடித்து, மருந்துப் பொருள்கள் தயாரிப்புக்காக இலங்கைவழியாக கடத்திவருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தப்படுவதும், கடல் அட்டைகள் கடத்தப்படுவதும் தொடர்கதையாகிவருகிறது.
ஹெராயின் பறிமுதல்
ஹெராயின் பறிமுதல்

ஆனால், கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் கடல் பகுதியில், இலங்கைக்குக் கடத்த முயன்ற ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்புகள் தங்களின் வருவாய்க்காக இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்குக் கொடிய போதைப்பொருள்களைக் கடத்திவருகின்றன.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மாலைமலர் :  சென்னை: வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை மற்றும் புயலால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடந்துள்ளபோதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது தென் தமிழகத்திற்கு மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் : 3வது அணி அமைக்க காங்., முயற்சி?

.dinamalar.com  :  ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, கவர்னரிடம், தி.மு.க., கடிதம் வழங்கிய விவகாரம், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் புயலை கிளப்பியுள்ளது. 

தி.மு.க.,விடம், அதிக தொகுதிகளை கேட்டு, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விடுத்துள்ள மிரட்டலை தொடர்ந்து, அக்கட்சியை, 'கழற்றி' விடுவதற்கு, தி.மு.க., மேலிடம் நேரம் பார்த்து வருகிறது. ராஜிவ் அதனால், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் சிலர், மறைமுக பேச்சு நடத்தி வரும் தகவல் வெளியாகி உள்ளது.                     இந்நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் மூத்த நிர்வாகிகள், நேற்று முன்தினம் சந்தித்து, கடிதம் ஒன்றை வழங்கினர்.                            அதில், 'ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. கவர்னரிடம் வேறு சில விஷயங்களும் பேசியதாகவும், அது குறித்து வெளியே சொல்ல முடியாது எனவும், ஸ்டாலின் தெரிவித்த கருத்து, பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

அதிமுகவுடனான கூட்டணி: முடிவு செய்யாத பாஜக!

minnambalm : அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.    நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று இரவு மாமல்லபுரம் -காரைக்கால் இடையே கரையைக் கடந்தது. இதன் காரணமாக உதயநிதி பிரச்சாரம், பாஜகவின் வேல் யாத்திரை, காங்கிரஸின் ஏர்கலப்பைப் பேரணி ஆகியவை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள், நிவர் புயல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டுமென தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் திருச்சியில் (நவம்பர் 25) செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “நிவர் புயல் காரணமாக இனிவரும் நாட்களில் நடைபெற இருந்த வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது. டிசம்பர் 4ஆம் தேதி மட்டும் மீதமுள்ள 4 அறுபடை வீடுகளிலும் சாமி தரிசனம் செய்து 5ஆம் தேதி திருச்செந்தூரில் யாத்திரையை நிறைவு செய்கிறோம்” என்றார். தமிழக அரசு நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக முழுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கரையைக் கடந்தது நிவர்: தொடரும் மழை!

minnampalam :வங்கக் கடலில் உருவான அதிதீவிர புயல் நிவர் கரையைக் கடந்ததாக இன்று காலை 5.20 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக நேற்று முதல் சென்னை, கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதீத கன மழை பெய்து வருகிறது. இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்குக் தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்குத் தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

அதன்பின் இரவு 11.30 முதல் கரையைக் கடக்கத் தொடங்கி, அதிகாலை 2.30 வரை நிவர் புயல் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 மணி நேரத்தில் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் கரையைக் கடந்துள்ளது. வேலூர் நோக்கி நிவர் செல்லும் நிலையில் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இருக்கும் என்று கூறியுள்ளது.

வர்ணம் சாதி என்பதே வைதிகத்தின் ஆணிவேர்.

Image may contain: text that says 'மனித நேயமும் சமத்துவமும் இல்லாத 'சாதி முறை வைதிக சனாதன ஒழிப்பிலேயே அடங்கியுள்ளது. காரணம் வர்ணம் சாதி என்பதே வைதிகத்தின் ஆணிவேர். வைதிகத்திலிருந்து விடுதலை இல்லாதவரை நம் சமூகத்தில் சுய சிந்தனை இருக்காது.சுய சிந்தனை இல்லாத சமூகம் என்றும் முன்னேறாது!'
  Dhinakaran Chelliah : · ஹிந்து எனும் அடையாளத்தில் ஒளிந்து ஆதிக்கம் செலுத்தும் வைதிக சனாதன தர்மம் மற்றும் வைதிக சனாதன நூல்கள் பற்றியும் WhatsApp மற்றும் Facebook குழுக்களில் எழுதினால்,ஹிந்துக்களாக தங்களை தவறாக அடையாளப் படுத்திக் கொள்கிறவர்கள் பொங்கி எழுகிறார்கள். “இந்தக் குழுக்களில் மதங்களைப் பற்றி அதிலும் குறிப்பாக ஹிந்து மதத்தைப் பற்றி மட்டுமே தவறாக எழுதுகிறார்கள்” என எழுதுகிறவர்களை முத்திரை குத்தி, admin உதவியோடு அவர்களை குழுக்களிலிருந்து வெளியேற்றுவதோடு அல்லாமல்,பெரும் சமூகத்திலிருந்து தனிமைப் படுத்திவிடுகிறார்கள்.விமர்ச்சிக்கிறவர்களை ஹிந்து விரோதிகளாகவும் தேசத் துரோகிகளாகவும் முத்திரை குத்திவிடுகிறார்கள்.இந்த அடக்குமுறையை இப்போதுள்ள எல்லா சமூக ஊடகங்களிலும் (social media)பரவலாக காண முடிகிறது.

தங்கக்காசுகள் நகைக்கடையில் கிடைத்த துப்பு! – கலக்கத்தில் ஆளும் தரப்பு பிரீமியம் ஸ்டோரி

பூமிக்கடியில் புதையல்... தென்னை மரத்தில் தங்கக்காசுகள்...

vikatan : “மோகன்லால் கட்டாரியாவின் நிறுவனத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில் நாங்களே எதிர்பாராத அளவுக்கு சுமார் ஐந்நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 814 கிலோ தங்கம் பிடிபட்டது. சில ரகசிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் தங்க வியாபாரி களுடன் இந்தச் சோதனை நிற்கப்போவதில்லை… தமிழகத்தில் அரசியல் புள்ளிகள் பலருக்கும் ஸ்கெட்ச் போட்டிருக்கிறோம்” என்று கமுக்கமாகக் கண்களைச் சிமிட்டுகிறது வருமான வரித்துறை வட்டாரம். மும்பையைச் சேர்ந்த மோகன்லால் கட்டாரியாவுக்கு மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நகைக்கடைகள் இருக்கின்றன. அங்கிருந்து தங்கத்தைச் சென்னைக்கு கொண்டு வந்து மொத்த வியாபாரம் செய்து வந்திருக்கிறார். சென்னை செளகார் பேட்டையைத் தலைமையிடமாகக்கொண்டு மோகன்லால் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் மோகன்லாலுக்குச் சொந்தமான 32 இடங்களில், நவம்பர் 10-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். சென்னையில் இரண்டு நாள்கள் நடந்த சோதனையில் மட்டும் கணக்கில் வராத 814 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் மலைக்கவைக்கும் தகவலைச் சொன்னார்கள். அத்துடன், ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருக் கின்றனவாம்!

இஸ்லாத்தை காப்பாற்றுகின்றேன் என்று துள்ளி வருகின்றவர்கள் யாருமே இஸ்லாத்தை படித்தவர்கள் இல்லை!

Rishvin Ismath : · இஸ்லாம் முறையாக விமர்சிக்கப்படும் பொழுது 'இஸ்லாத்தை காப்பாற்றுகின்றேன்' என்று துள்ளிக் குதித்து கிளம்பி வருகின்றவர்கள் யாருமே இஸ்லாத்தை படித்தவர்கள் இல்லை, குறைந்த பட்சம் குரானின் மொழிபெயர்ப்பைக் கையால் தொட்டது கூடக் கிடையாது. சஹீஹுல் புகாரி என்ற பெயரை காதல் கேட்டதைத் தவிர அதனை கண்ணால் கூடக் கண்டது கிடையாது முஹம்மது நபி மலம் கழித்த விடயம் போன்றவை எல்லாமா ஹதீஸில் வரும் என்று என்னிடமே கேட்கின்றார் ஒருவர், ஆக இவருக்கு ஹதீஸ் என்றாலே என்னவென்று தெரியாது. மலம் கழித்தது மட்டுமல்ல, எப்படி காலை வைத்து குந்தினர், எந்தத் திசையை பார்த்துக் குந்தினார் என்பதில் இருந்து அவரது தாடியில் எத்தனை மயிர்கள் நரைத்து இருந்தன என்பது வரை ஹதீஸில் வரும் என்று நான் தான் படித்துக் கொடுக்க வேண்டியாகி விட்டது.
ஒரு காலத்தில் கத்த வீட்டில் தலைக்கு கைக்குட்டையைப் போட்டுக்கொண்டு கூட்டத்துடன் கோரஸாக "யாஸீன்" என்று ஸீன் போட்டுக்கொண்டு இருந்த கேஸ் எல்லாம் இன்றைக்கு எதோ PJ, சாகிர் நாயக் வகையறாக்களின் இரண்டொரு விடியோக்களை, அதுவும் இடை நடுவில் நடுவில் பார்த்துவிட்டு இஸ்லாத்தை காப்பற்றுகின்றேன் என்று புறப்பட்டு வந்துகொண்டு இருக்கின்றன.
இஸ்லாத்தை முறையாக கற்ற யாருமே இந்தப் பக்கம் வருவதில்லை, ஏனென்றால் அவர்களுக்குத்தான் தெரியுமே, 'இஸ்லாத்தை காப்பாற்ற முடியாது' என்கின்ற உண்மை.

சட்டத்தைக் கொளுத்துங்கள்! - ‘விடுதலை’ – அறிக்கை 21.11.1957

Image may contain: text that says 'நவம்பர் 26 1957 ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைக் கொளுத்திய ஜாதிஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் திராவிடர் விடுதலைக் கழகம்'
Add caption
Gomathy Bsr : · அரசியல் சட்ட எரிப்பு ஏன்? ‘பிராமணன் என்று ஒரு சாதி சட்டத்தில் இருக்க அனுமதிக்க மாட்டோம். அப்படி இருந்தாலும், அவன் பிராமணனாக வாழ அனுமதிக்க மாட்டோம் என்று அரசாங்கம் சொல்லட்டும்’. - தோழர் பெரியார் தோழர்களே! இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள், பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது.சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம்’ என்று அறிக்கை வராவிட்டால் அரசாங்கச் சட்டப்புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம். இதை நாங்கள் வருத்தத்துடனேயே சொல்கிறோம், வெறும் குறும்புக்காகவோ, விளம்பரத்திற்காகவோ, ஜெயிலுக்குப் போய் வந்ததைக் காட்டி ஓட்டு வேட்டையாடவோ நாங்கள் அந்தக் காரியம் செய்யவில்லை.
எனக்கு 79 வயதாகிவிட்டது. நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும்.இல்லையென்றால், நம் மக்களுக்கு உணர்ச்சியுட்டுவிட்டுச் சாகவேண்டும். இன்றைய தினம் எல்லாப் பார்ப்பனப் பத்திரிக்கைகளும் கட்டுப்பாடாக, நான் பார்ப்பனரை வெட்டச் சொன்னேன், குத்தச் சொன்னேன் என்று கூப்பாடு போடுகின்றன! எந்தப் பார்ப்பானிடம் எனக்கு விரோதம்? யார்மீது துவேஷம்?நேற்று எனக்கு நடைபெற்ற விழாவுக்குப் பார்ப்பனர் பணம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ‘செக்’ என்னிடம் இருக்கிறது. ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், எனக்குத் தனிப்பட்ட முறையில்யார்மீதும் துவேஷம் இல்லை என்பதைக் காட்டவே!

கால்பந்து வீரர் மாரடோனா காலமானார் - என்ன நடந்தது?

Image may contain: one or more people, people playing sports, stadium and outdoor
BBC : கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆம் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். பிறகு அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அது வெற்றிகரமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

புதன், 25 நவம்பர், 2020

ஸ்டாலின் முழக்கம் : நாங்கள் அனைவரும் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள்

நான் கலைஞரின் மகன்தான் .இதைவீட எனக்கு வேறு பெருமை தேவை இல்லை . நான் வெறும் இரத்த வாரிசு மட்டுமல்ல .. கொள்கை வாரிசு .. 

முத்தமிழ் அறிஞரின் கொள்கைக்கு கோட்பாட்டுக்கு இலட்சியத்துக்கு வாரிசு நாங்கள் ஆமாம் திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது .தந்தை பெரியாரின் கொள்கைக்கு வாரிசு நாங்கள் . பேரறிஞர் அண்ணாவினுடைய கொள்கைக்கு வாரிசு நாங்கள் . 

திராவிட இயக்கத்தின் வாரிசு நாங்கள் . நூறாண்டுகளுக்கு முன்னால் தமிழ் சமூகத்தின் விடியலுக்காக சமூக நீதியை நிலைநாட்ட உருவான நீதிக்கட்சிக்கு வாரிசு நாங்கள் . 

நாவலருக்கு பேராசியருக்கு சொல்லின்  செல்வருக்கு புரட்சி கவிஞருக்கு கலைவாணருக்கு சிந்தனை சிற்பிக்கு வாரிசு நாங்கள் . ஸ்டாலின் என்பது எனது தனிப்பட்ட பெயர் அல்ல ஒரு இயக்கத்தின் பெயர் .. நான் மட்டுமல்ல திராவிட முன்னேற கழகத்தில் இருக்கும் யாரும் தனி மனிதர்கள் அல்ல 

நாங்கள் அனைவரும் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள் அதனாலதான் அமித் ஷாவுக்கு எங்களை பார்த்தால் கோபம் வருகிறது . இந்த யுத்தம் இன்று நேற்று வந்த யுத்தம் அல்ல .. பல நூறு ஆண்டுகளாக நடக்கிற யுத்தம் . எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது .     மேலும் ஸ்டாலினின் முழு பேச்சையும் காணொலியில் காண்க 

பிலிப்பீன்ஸ் வரை புட்டு, தாய்லாந்து வரை அப்பம்.. புட்டு இடியாப்பம் எல்லாம் இந்தோனேசிய பிலிப்பைன் தேசத்து வரவு?

Farm to Table - Rubasangary Veerasingam Gnanasangary

: பிலிப்பீன்ஸ் வரை புட்டு, தாய்லாந்து வரை அப்பம்.
"இடியப்பம் (ஒடியப்பம் or string HOPPAH) என்று எப்படி பெயர் வந்தது" என்பதை ரூம் போட்டு ஜோசித்தவர்கள் பலர் உண்டு. சில நாட்களாக இடியப்பம் , புட்டு, இட்லி (இட்டலி) பற்றிய விவாதங்கள் நடந்தன. இந்த பதிவு வழக்கம் போல ஆய்வுகள் செய்தும் சொந்த அனுபவங்களை வைத்தும் எழுதப்படுகிறது. இது வெறும் விக்கிப்பீடியாவின் தமிழாக்கம் அல்ல. விக்கிப்பீடியாவே திருத்திக்கொள்ள வேண்டிய ஒரு பதிவு.
முதலில் தென் கிழக்காசியா நாடுகளில் அப்பம், புட்டு மற்றும் இடியப்பம் போன்ற உணவுகள் எப்படி அழைக்கப் படுகின்றது என்பதைப் பார்ப்போம்.
புட்டு (puttu)
இந்தோனேசியாவில் putu bampu (bambu = bamboo or மூங்கில்) என்று அழைக்கப்படுகிறது. அதே வார்த்தை பிளிப்பீன்சில் puto bumbong என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நம்மைப்போல் அல்லாமல் இங்கு புட்டு என்பது ஒரு இனிப்புப் பண்டம். தேங்காய்ப்பூ, தேங்காய்ப்பால் மற்றும் சக்கரை போட்டு சாப்பிடுவார்கள். பிளிப்பீன்சில் மரவள்ளிக் கிழங்கு மாவு அல்லது இராசவள்ளிக் கிழங்கு மாவை அரிசி மாவுடன் கலந்து பயன்படுத்துவர்.

புயல் கரையை கடந்த பின் 6 மணி நேரம் கழித்தே வலுவிழக்கும்: வானிலை மையம்

Image may contain: text that says 'புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் நிவர் புயல் BREAKING NEWS H செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 9000 கன அடியாக அதிகரிப்பு #NivarCyclone follow f I 25|11|2020 #NivarCycloneUpdates 0.20PM www.puthiyathalaimurai.com'

maalaimalar: புயல் கரையை கடந்த பின் 6 நேரம் கழித்தே வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை மையம் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 11 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல், சென்னையில் இருந்து 214 கி.மீட்டர் தொலைவிலும், கடலூரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுவை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்பும், 6 மணி நேரம் கழித்தே வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் 7,000 கன அடிநீர் திறப்பு- நீர்வரத்து 6,500 கன அடி

Velmurugan P - tamil.oneindia.com/ : சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 7,000 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அடையாறு ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. 

நிவர் புயல்: முழு கொள்ளளவை எட்டப்போகிறது செம்பரம்பாக்கம் ஏரி - வீடியோ ஏரியில் வினாடிக்கு 50000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உள்ளது. அச்சப்பட தேவையில்லை என்றும், ஏரியை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான ஏரி செம்பரம்பாக்கம் ஏரி. 9 கிலோமீட்டர் நீளமும் மொத்தம் 24 அடி உயரம் உள்ள இந்த ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆற்றில் நீர் வரும். அப்படியே அது கடலில் கலக்கும். இந்த ஏரியில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேறியதால் கடந்த 2015ல் வெள்ளம் ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

BBC : நிவர் புயல் நிலவரம்: மரக்காணம் அருகே அதிகாலை 2 மணியளவில் கடக்கும் என கணிப்பு - LIVE UPDATES

 வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல், புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் மரக்காணம் அருகே கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

  1. புயல் தற்போது 14 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
  2. புயலை கடக்கும் போது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இருந்து 120 கி.மீ வேகம் வரை காற்றின் வேகம் இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
  3. இந்த புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு இரான். இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயர் வைத்தது தாய்லாந்து.
  4. நிவர் புயல் கரையைக் கடப்பதால், புதன்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பணிபுரிவார்கள்.
  5. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.
  6. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்,,

கோத்ரா முதல் பாட்னா வரை பாஜக-ஆர்.எஸ்.எஸ் ‘பகீர்’ தாக்குதல்கள்! மனம் திறக்கு முனனாள் முதல்வரும் ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவருமான சங்கர் சிங் வகேலா!!!

கோத்ரா முதல் பாட்னா வரை: பாஜக-ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் ‘பகீர்’ தாக்குதல்கள்! மனம் திறக்கிறார் குஜராத் -முனனாள் முதல்வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான சங்கர் சிங் வகேலா!!! கோத்ரா முதல் பாட்னா வரை நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் , பாஜகவும் தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா குற்றம் சாட்டியிருப்பது ஆர்.எஸ்.எஸ் பாஜக வட்டாரத்தினை கதிகலங்க வைத்திருக்கிறது
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ் -பாஜகவிற்கு எதிராக கடும் குற்றசாட்டுகளுடன் முன் வைத்த வகேலா முசாபஃர் நகர் வண்முறையிலும் புத்தகயா குண்டு வெடிப்புகளிலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்..,கோத்ரா முதல் பாட்னா வரையுள்ள குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஒன்றே ஒன்று தான். அரசியல் ஆதாயம்..!!
இந்துக்களையும் முஸ்லீம்களையும் கொல்லுவது என்பதே அது.
அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை பிரிக்க சதி திட்டம் தீட்டுவது பாஜகவின் அரசியல் தந்திரமாகும். குண்டுவெடிப்புகளிலும், கலவரஙகளிலும் கொல்லப்படும் இந்துக்களை குறித்தோ முஸ்லீம்களை குறித்தோ ஒரு வருத்தமும் அவர்களுக்கு இல்லை. அதிகாரத்தை அடைய இந்த மரணங்கள் அவசியம் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

கூட்டணிக்கு பிடி கொடுக்கலை..திமுக தோற்றால் நாங்க பொறுப்பு அல்ல... தமிழக ஓவைசி கட்சி : 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிடுவோம்.


Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக 2 மாதங்களாக பேசியும் திமுக பிடி கொடுக்காத நிலையில் 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிடுவோம்; 

தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால் நாங்கள் பொறுப்பு அல்ல என்று ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தமிழக தலைவர் வகீல் அகமது கூறியுள்ளார். பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க முதலில் மஜ்லிஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த கூட்டணி முயற்சி பலன்தரவில்லை. இதனால் பீகாரில் ஓவைசி கட்சி தனித்துப் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.                                              ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளின் வாக்குகளையே மஜ்லிஸ் கட்சி பிரித்துவிட்டது; இதனால் ஆர்ஜேடி ஆட்சி அமைக்க முடியாமல் போனது என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது                        இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி போட்டியிடுமா? என்ன செய்யப் போகிறது என்கிற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மஜ்லிஸ் கட்சியின் தமிழக தலைவர் வகீல் அகமது கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஜாதி ஒழிப்பு நாள் நவம்பர் 26.. பெரியார் அரசியல் சட்ட எரிப்பு நாள். 3000 தோழர்கள் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறை...

A
rul Mozh
: ஜாதி ஒழிப்பு நாள் ! 1957 நவம்பர் 26..      3000 தோழர்கள் சிறையில் வாடிய மகத்தான வரலாறு. 1957 நவம்பர் 26இல் பெரியார் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்த நாள். 3000 தோழர்கள் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை பெற்றனர்.     அந்த நாள் நினைவாக சில வரலாற்றுக் குறிப்புகள். இன்றைக்கும் போர் வீரர்களின் நினைவுக் கல்வெட்டுகளில் அவர்களுடைய பெயர்கள் தெரியாத காரணத்தால் ‘பெயர் தெரியாமல் மரித்துப் போன போர்வீரர்கள்’ என்று எழுதப்படுவது வழக்கம். 

அதேபோல்பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்புக்கான அரசியல் சட்டஎரிப்புப் போரில் பங்கேற்று மாதக் கணக்கில் சிறைக்கொடுமைகளை அனுபவித்த பெயர் தெரியாத தோழர்கள்பலர் உண்டு. சட்ட எரிப்புப் போரில் பங்கேற்ற பெரியாரின் கருஞ்சட்டைத் தொண்டர்களின் உறுதிமிக்க தியாக வரலாற்றிலிருந்து சில செய்திகள்: சிறையிலிருந்த தோழர் திருவாரூர் முத்துகிருட்டிணனின்மனைவிதான் அவரது கடையையும் குழந்தைகளையும்
கவனித்துக் கொண்டார். காலராவினால் திடீரென முத்துகிருட்டிணன் மனைவி இறந்து விட்டார். மனைவிக்குஇறுதி மரியாதை செலுத்த முத்துகிருட்டிணன்பரோல்கூட கேட்கவில்லை.

அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் நிவர் - கலைஞர் வீட்டுக்குள் புகுந்த மழைநீர்

Image may contain: plant, outdoor and water
கலைஞர் வீட்டு மழைநீர்

 Jeyalakshmi C /tamil.oneindia.com சென்னை: வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 350 கி.மீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கில் 410 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல் 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நிவர் புயல் மேலும் தீவிர புயலாக வலுவடைந்து இன்று கரையை கடக்கும். வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்க கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

 நிவர் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 410 கிமீ தொலைவில் இப்போது மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. கடலூரின் கிழக்கு- தென்கிழக்கில் 320 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. தற்போது 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. அதி தீவிர புயலாக மாறி புதுச்சேரி காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி

            Devi Somasundaram : · அதாவது மக்கள் பிரச்சனை க்கு துணை நிற்க வரமாட்ட்டார், நீட்ல 13 தமிழக மாணவர் உயிர் அனியாயமா போச்சே அப்ப வர மாட்டாராம், அதிமுக அரசின் திட்டமிடாத கொரானா லாக் டவுன்ல மக்கள் தவிச்சப்ப உதவிக்கு வர் மாட்டார் .இப்ப புயல் ,மழைன்னு வர மாட்டாராம். .நேரா டிக்கிய முதல்வர் சீட்ல பார்க் பண்ண தான் வருவாராம் ..அதுக்கு இந்த அல்லக்கை வெஞ்சாமரம் வீசுவாராம் ..தமிழருவியலாம் ஒரு ஆளுன்னு கொண்டாடற ஆட்கள நினைச்சா தான் பத்திகிட்டு வருது..

தம்பி: BE, ECE படிச்சிருக்கேண்ணே, அப்பாவும் தாத்தாவும் சமையல் வேலைதான்.. திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து நம்மை பிச்சைகாரர்களாக ..

Bilal Aliyar : · துபாயில் என்னுடைய அறைக்கு தமிழகத்தில் இருந்து

திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து BE படித்து விட்டு சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்து அவர்களின் புதிய ப்ராஜக்ட்காக துபாய் அனுப்பப்பட்ட ஒரு 28 வயது இளைஞர் புதிதாக வந்திருந்தார். தம்பி அரசியல் விசயங்களின் வாட்ஸ் அப் தகவல்களை சில நேரம் என்னிடம் காட்டுவார், மேலும் சீமானின் அரசியலை பற்றி என்னிடம் சிலாகிப்பார். நானும் புதிதாக வந்த தம்பி தானே எங்கே சென்று விடுவார் என்று ஒரு புன்னகையுடன் கேட்டு கொள்வேன். ஒரு முறை திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து நம்மை பிச்சைகாரர்களாக ஆக்கி விட்டது என்று கோபம் கொப்பளக்க தன் செல்பேசியை பார்த்து கொண்டே சொன்னார். நான் வழக்கம் போல ஒரு புன்னகையை உதிர்த்தேன். தம்பி டென்சனாகி, என்னண்ணே உங்கள மாதிரி ஆட்கள் எதையுமே உள்வாங்காமத் தான் தமிழ் நாடு இந்தளவிற்கு மோசமாகி விட்டது என்றவுடன், தம்பியுடன் நடந்த ஒரு 15 நிமிட உரையாடலை இங்கு பதிவு செய்கிறேன். நான்: சரி தம்பி, தமிழ்நாடு இந்தளவிற்கு மோசமாக போயடுச்சுன்னு சொல்ற, எந்த விதத்தில் மோசமாக போயிடுச்சு, யாருடன் ஒப்பிட்டு இந்த முடிவை நீ சொல்கிறாய்? ஏன்னா ஒப்பீடு என்று வரும் போது ஏதாவது ஒன்றுடன் தான் மற்றொன்றை அளவிட்டு முடிவு சொய்வோம். இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்துடன் ஒப்பிட்டு தமிழகத்தின் நிலையை முடிவு செய்தாய்?
தம்பி: என்னண்ணே இப்படி கேக்குறீங்க, கல்வியை எடுத்து பாருங்க
நான்: கல்வியில் நாம் மோசமாக இருக்கிறோம் என்பதற்கான தரவுகள் உன்னிடம் இருக்கிறதா?

செவ்வாய், 24 நவம்பர், 2020

தயாரிப்பாளர் சங்க தகிடுதத்தங்கள்…! கமல், ரஜினி, விஜய் பங்களிப்பு என்ன?

சாவித்திரி ண்ணன் : · தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள் அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள் ஊழலை ஒழித்து நல்லாட்சி தருவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிற பிரபல நடிகர்களான கமல்,ரஜினி, விஜய்யின் அப்பா உறுப்பினர்களாக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் வரலாறு காணாத அளவில் பணம் கரை புரண்டோடிய தேர்தலாக உள்ளது! இத்தனைக்கும் வெறும் 1,303 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள ஒரு சங்கம் தான் இது! இதில் தலைவருக்கு போட்டியிட்ட இரு அணிகள் அள்ளிவிட்ட பணம் அசாதரணமானது. முரளி ராமநாதன் அணி ஒரு பிரிவாகவும் டி.ராஜேந்தர் அணி ஒரு பிரிவாகவும் இதில் போட்டியிட்டனர்!
இதில் 1050 பேரின் வாக்கிற்காக இரு அணிகளும் நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துகள் நடத்தின!
32 இன்ச் டிவி, தங்க நாணயம்,ரிசார்ட்கிப்ட், அரிசி-பருப்பு, ரூ 25,000 ரொக்கப் பணம்..என பிரம்மாண்டமாக செலவு செய்தனர்! வெளியூரில் உள்ள தயாரிப்பாளர்கள் வந்து ஓட்டுப் போட விமான டிக்கெட் தந்து ரூம் போட்டு கொடுத்தனர்.

எக்கச்சக்கமான இன்பங்களை (?) தரும் கணவனை எப்போதும் பூஜிக்கவேண்டும்! அபரிமிதமான ஸுகங்களைத் தரும் பர்தாவையே எப்பொழுதும் பூஜை பண்ண வேண்டும்.


Dhinakaran Chelliah
: 40.எந்த ஸ்த்ரீ தனது புருஷன் அடித்தானானால்
அவனைத் திரும்பவும் அடிக்க வேண்டும் என்று மனதில் நினைக்கிறாளோ அவள் புலியாகவோ, காட்டுப் பூனையாகவோ பிறக்கிறாள். எவள் பரபுருஷனைக் கடைக் கண்ணில் வைத்தும் பார்க்கிறாளோ, அவள் மாறு கண்களுடன் அவலக்ஷணமமாகப் பிறக்கிறாள்.
41.எந்த நாரீ புருஷனை விட்டுவிட்டு ருசியான
உணவை உண்கிறாளோ அவள் கிராமப்பன்னியாகவோ, அல்லது தனது மலத்தைத் தானே தின்னும் வௌவாலாகப்
பிறக்கிறாள்.
42.எவள் தன் பர்த்தாவை நீ நான் என்று அலட்சியம் செய்கிறாளோ அவள் ஊமையாகக் பிறக்கிறாள். யார் தன் சக்களத்தியிடம் பொறாமைப்படுகிறாளோ, அவள்
அடிக்கடி துர்பாக்யவதியாகிறாள்.
43.எவள் பதியின் கண்களை ஏமாற்றிவிட்டு
பரபுருஷனை நோக்குகிறாளோ அவள் மறு ஜன்மாவில், அவலக்ஷணமுள்ளவளாயும் ஆகிறாள்.  எக்கச்சக்கமான இன்பங்களை தரும் கணவனை எப்போதும் பூஜிக்கவேண்டும்   part 1

கானா இசைவாணி! BBC 100 WOMEN 2020: சாதனை பெண்கள் பட்டியலில் சென்னை கானா பாடகி

2020ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்கள் பட்டியலில் பா.ரஞ்சித்தின் `The Casteless Collective` குழுவை சேர்ந்த பாடகி இசைவாணி இடம்பிடித்துள்ளார். உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய 100 பெண்களின் 2020ம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள 100 பெண்களும் தற்போது நிலவும் நெருக்கடியான காலகட்டத்தில் நேர்மறையான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியவர்கள். அதில் ஒருவராக இசைவாணி இடம்பிடித்துள்ளார். சரி. யார் இந்த இசைவாணி?

திரைப்படங்களில் எப்போதும் மிக மோசமாக சித்தரிக்கப்படும் பகுதி வட சென்னை. அந்த பகுதியைச் சேர்ந்தவர் இசைவாணி. ஆண்கள் மட்டுமே கோலோச்சிய கானா மேடைகளை தன் வசப்படுத்தியவர் இசைவாணி. "கலை மக்களுக்கானது, அதில் மக்கள் அரசியல் பேசாமல் வேறு எங்கு பேசுவது?" என கேட்கும் தீட்சண்ய பார்வை கொண்டவர் இசைவாணி.

மஹிந்த சமரசிங்க : புலிகளால் மக்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தூதுக்குழு மஹிந்தவிடம் ...

இலங்கை இறுதி யுத்தத்தில், பொதுமக்களை காப்பாற்ற முன்வந்த நாட்டின் உதவியை மறுத்த மஹிந்த ராஜபக்ஷ

BBC :இலங்கையில் இறுதி கட்ட யுத்தத்தின் போது, முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பிணை கைதிகளாக வைக்கப்பட்டிருந்த சிவில் மக்களை மீட்பதற்கு, கப்பலை வழங்க முன்வந்த நாடொன்றின் யோசனையை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்தார் என்று முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இறுதி கட்ட யுத்தம் நடந்த தருணத்தில், அலரி மாளிகைக்கு தன்னை அவசரமாக வருமாறு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்ததாக கூறினார்.

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமை அமைச்சராக பதவி வகித்த தான், ஜனாதிபதியின் அழைப்பை அடுத்து, அலரிமாளிகைக்கு சென்றதாகவும் அங்கு உலகின் பலம் வாய்ந்த வெளிநாடொன்றின் தூதுக்குழு தனக்கு முன்பாக வந்திருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.

அந்த வெளிநாட்டு தூதுக்குழுவிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடந்ததாகவும், இறுதி கட்ட யுத்தம் நடந்து வரும் முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் லட்சக்கணக்கான மக்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மஹிந்தவிடம் கூறியதாக மஹிநத் சமரசிங்க தெரிவித்தார்.