சனி, 18 ஜூலை, 2015

நாஜி வணக்கம் செலுத்திய இங்கிலாந்து ராணியின் போட்டோ வெளியானது!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், சிறு வயதில் அவரது சகோதரி மற்றும் தாயாருடன் சேர்ந்து நாஜி வணக்கம் செலுத்திய புகைப்படத்தை இங்கிலாந்தில் இயங்கி வரும் த சன் பத்திரிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள பால்மோர் கேசலில் கடந்த 1933-ஆம் ஆண்டு வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ கசிந்தது ராணியைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராணி 6 வயது கூட நிரம்பாதபோது எடுக்கப்பட்ட அந்த படத்தை வைத்து இப்போது தவறாக பேசக்கூடாது. நாஜிக்களை பற்றிய உண்மை வெகுகாலம் கழித்துதான் இந்த உலகின் பார்வைக்கு வந்தது.

நீரிழிவு நோயை தடுக்கும் மஞ்சள், ஒமேகா 3

சிட்னி: மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனப்படும் வேதிப் பொருளும், சில வகை மீன்களில் இருக்கும் ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்களும் நீரிழிவு நோயை வரவிடாமல் தடுப்பதாக சமீபத்ய ஆய்வுகள் மூலம் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் நியூகேஸ்டில் பல்கலை விஞ்ஞானிகள், இந்திய மரபு வழி மருத்துவ விஞ்ஞானி மனோகர் கார்க் தலைமையில் நடத்திய ஆய்வில் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. மனோகர் கார்க் கூறுகையில், ' நீரிழிவு நோய்க்கு மூல காரணமாக இருப்பது மண்ணீரலில் ஏற்படக்கூடிய அழற்சியால் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படுவது தான்' என்றார். இயற்கையாக கிடைக்க கூடிய மஞ்சளில் இருக்கும் குர்குமின் வேதிப்பொருளும், ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலமும் ஒரே நேரத்தில் உட்கொள்ளப்படும் போது, மண்ணீரலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளதால், மண்ணீரலில் அழற்சி தடுக்கப்பட்டு நீரிழிவு நோய் தடுக்கப்படுவதாக ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

நிலத்தை வாங்க ஆள் இல்லை!பணப்புழக்கம் குறைந்துவிட்டது! ஸ்டாலின் கவலை?

கடலூரில் தி.மு.க., நடத்தும் நீதி கேட்கும் பேரணியில் மு.க., ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில்; இன்றைய தமிழகத்தில் நிலம் விற்க பலர் முன் வந்துள்ளனர். ஆனால் நிலத்தை வாங்கிட யாரும் இல்லை. காரணம் பணப்புழக்கம் முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்; இந்தக்ககூட்டம் வெற்றி பெற அயராது பாடுபட்ட, ஆரவாரத்தோடு, ஆர்வத்தோடு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ள எம்.ஆர்.கே., பன்னீர்செல்வத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்து கொள்கிறேன். இங்கு வந்துள்ள கூட்டத்தை கண்ட நான் பெருமை கொள்கிறேன். இந்த கடலூர் மாவட்டம் பெருமை கொண்டது. ஓமந்தார், வள்ளலார், உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை தந்தது இந்த பூமி. புரட்சி ஏற்பட காரணமாக இருந்த தி.மு.க.,வில் உங்களில் ஒருவனாக நான் மக்களை சந்திப்பதில் பெருமை கொள்கிறேன். நிலத்தை விற்க கூடிய புரோக்கர்கள் என்னை சந்தித்தனர். வீடுகளை விற்க , நிலங்களை விற்க பலர் முன் வருகின்றனர்.

வேல்முருகன் : கேரளா நிறுவனங்களை இழுத்துமூடுவோம்! தமிழக காய்கறிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு........

காய்கறிகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்றிதழ் கோரும் கேரளாவின் அடாவடிக்கு மத்திய அரசை தடை விதிக்கக்கோரியும்,நிபந்தனையை விலக்காவிட்டால் தமிழகத்தில் இயங்கும் கேரளா நிறுவனங்களை இழுத்துமூடுவோம் எனதமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.<இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,<>காய்கறிகளை வெளிமாநிலங்களில் இருந்து ஏற்றிவரும் வாகனங்களுக்கு கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.வெளிமாநில காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக புகார் கூறி கேரளா இத்தகைய அடாவடியை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

சன் குழுமத்திற்கு அனுமதி மறுப்பு கருத்துச்சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ! ஜி. ராமகிருஷ்ணன்

சன் குழுமத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அனுமதி வழங்க மறுத்திருப்பதற்கும், நடைபெறவிருக்கும் பண்பலை வானொலி ஏலத்தில் பங்கேற்க தடை விதித்திருப்பதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஒரு நிறுவனம் அல்லது குழுமம் பொருளாதாரக் குற்றங்களை செய்திருந்தால் உரிய முறையில் சட்டப்படி விசாரித்து அதனடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அதேசமயம் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி எந்தவொரு நிறுவனத்திற்கும் அவர்களது தொழிலுக்கு, வணிகத்திற்கு, சேவைக்கு மறுப்பு தெரிவிப்பது நியாயமற்ற நடைமுறை.

அரவிந்தர் ஆசிரமவாசி ஹேமலதா உண்ணாவிரதத்தை வாபஸ்பெற்றார்!


ஆசிரம குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹேமலதா தனது உண்ணாவிரதத்தை வாபஸ்பெற்றார்.
தற்கொலை புதுவை அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் தங்கியிருந்த ஹேமலதா, நிவேதிதா உள்பட சகோதரிகள் 5 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரம குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தங்களை மீண்டும் ஆசிரம குடியிருப்பில் அனுமதிக்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள் பெற்றோருடன் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து கடலில் குதித்தனர். இதில் ஹேமலாதாவின் தாய் மற்றும் சகோதரிகள் இருவர் பரிதாபமாக செத்தனர்.அரவிந்தர் ஆஸ்ரமம் ஒரு குண்டா ராஜ்ஜியம்! பெரிய மனிதர்களின் விபச்சாரம் மற்றும் .........

பாஜகவை விட தனியார் துறைக்கே மோடியின் தலைமை அதிகம் தேவை!

குஜராத் முதல்வராக இருந்தபோது 2013-ல் இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் பேசிய மோடி, “அரசாங்கம் போட்ட சாலைகளில் தனியார் வாகனங்கள் போகும்போது, தனியார் விமானங்கள் அரசின் விமான நிலைய ஓடுபாதைகளில் பறக்கும்போது, ஏன் அரசாங்க தண்டவாளத்தில் தனியார் ரயில்கள் ஓடக்கூடாது?” என்று தனியார்மயமாக்கலை வெறியோடு ஆதரித்துப் பேசினார். பிரதமரான பின்னர், மேகாலயாவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ரயில் சேவை தொடக்க விழாவில் பேசிய மோடி, ரயில்வே என்பது ‘வளர்ச்சி’யின் வாகனம், ரயில் நிலையங்களைத் தனியாரிடம் கொடுத்து விமான நிலையங்களைப் போல நவீனப்படுத்த வேண்டுமென்றார். மோடியின் நோக்கமே காங்கிரசு அரசை விஞ்சும் வகையில் தனியார்மயமாக்கலைத் தீவிரமாக்குவதுதான்.

ஒரு ரூபாய் விமானப் பயணம் – ஆடித் தள்ளுபடியின் பின்னணி!

ஒரு ரூபாய்க்கு பேருந்து டிக்கெட்டே கிடைக்காத நிலையில் விமானப் பயணமா? ஆச்சரியப்படுகிறது தினமணி. இதையே தி இந்து, விகடன், புதிய தலைமுறை.. அனைவரும் தலைப்பில் போட்டு செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதில் செய்தி எவ்வளவு விளம்பரம் எவ்வளவு என்பதில் ரகசியம் இல்லை. எல்லா செய்திகளிலும் இந்த தள்ளுபடியின் உண்மை முகத்தை போகிற போக்கில் சொல்கிறார்கள். அதாவது இருவழிப் பயணத்திற்கான கட்டணத்தில் ஒரு வழி மட்டும் ஒரு ரூபாய் மற்றும் வரியோடு வசூலிக்கப்படும். சான்றாக ரூ.10,000 மதிப்புள்ள இருவழிப் பயணச் சீட்டில் தோராயமாக ரூ.4500 தள்ளுபடி செய்கிறார்கள். மேலும் ஸ்பைஸ் ஜெட் செல்பேசி செயலியை நிறுவிக் கொண்டு அதிலிருந்து மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் இந்த சலுகையின் படி அடுத்த வருடம் மார்ச் வரை முன்பதிவு செய்ய முடியும்.

கனிமொழி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். திமுக தலைவர் கலைஞர், கனிமொழியை பார்த்து நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலுவும் வந்திருந்தனர். பின்னர் வெளியே வந்தவரிடம், செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். செய்தியாளர் :- கனிமொழிக்கு என்ன உடல் நிலை? கலைஞர் :- கனிமொழியின் கழுத்தில் பிடரிக்குப் பக்கத்தில் “தைராய்ட் கிளாண்ட்ஸ்” ஒன்றை அகற்றுவதற்காக டாக்டர்கள் கூறி,அதற்கேற்ற சிகிச்சையை செய்த டாக்டர்கள் இன்று காலையில் அறுவை சிகிச்சை மூலமாக அந்தக் கட்டியை அகற்றி விட்டார்கள். கனிமொழி உடல் நலம் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கிறார். ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார்.nakkheeran.in

வெள்ளி, 17 ஜூலை, 2015

அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை! ஜெயலலிதாவின் உடல் நிலைபற்றிய தகவல்களால் மனமுடைந்தாராம்? தொடங்கிட்டாய்ங்க!

suicide for amma Rs 3 Lakh Paid To Each to Portray Jayalalithaa As A Goddess? ... The mass hysteria that erupted after the sentencing of the ex CM is ... here is that the AIADMK seems to have appropriated death numbers to .
திருச்சி : முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி ஊடகங்களில் வெளியான தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார். கீழகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் 58 வயதான வீரராகவன். அ.தி.மு.க. பிரமுகரான இவர், தீவிர முதலமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசியாவார்.  இந்த நிலையில் நேற்று வீரராகவன் வீட்டில் உள்ள அறை மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்மலை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீரராகவன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் உடல் மண்ணுக்கு, உயிர் புரட்சித் தலைவி அம்மாவுக்கு என்று வீரராகவன் எழுதியிருந்தார். கடந்த சில நாட்களாக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வந்த வதந்தியால் வீரராகவன் சோகமுடன் காணப்பட்டாராம். நாம நெனைக்கிற மாதிரியே தற்கொலை படலம் ஆரம்பிச்சுட்டாய்ங்க! அவிங்க அவிங்க குடும்பங்க இனி  மூணு லட்சத்தை வச்சு புழச்சுக்கும்!  

வியாழன், 16 ஜூலை, 2015

கும்பகோணம் பள்ளி தீ விபத்து:11 ஆண்டுகள் கடந்தும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை!

கும்பகோணம் : அனைவரின் நெஞ்சையும் பதற வைத்து கோர விபத்துகளில் ஒன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்து. இந்த பயங்கர தீ விபத்து நடைபெற்றதன் 11வது ஆண்டு நினைவு தினம் இன்று. ஆண்டுகள் பல கடந்து விட்டாலும், தீயின் கோர பசிக்கு தங்களின் பிஞ்சுக் குழந்தைகளை பறி கொடுத்து விட்டு தவித்து நிற்கும் பெற்றோர்களின் சோகம் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. 2004ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 16) தான் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இந்த விபத்து நடைபெற்று 10 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் கூட கிடைக்கவில்லை.

சராசரியாக ஆண்டுக்கு 16,743 விவசாயிகள் தற்கொலை

கர்நாடக மாநிலத்தில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் ஆறு விவசாயிகள் கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 11) தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 42 நாட்களில் மட்டும் கர்நாடகாவில் 43 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். >மாண்டியா மாவட்டத்தில் நான்கு விவசாயிகளும், சாமராஜ்நகர் மற்றும் பீடார் மாவட்டங்களில் தலா ஒரு விவசாயி என ஒரே நாளில் ஆறு பேர் மீண்டும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.மாண்டியா மாவட்டம் அர்ப்பன ஹள்ளியைச்சேர்ந்த 35 வயதான ராமகிருஷ்ணா தனது நிலத்தில் இரண்டுஆழ்துளை கிணறு அமைப்பதற்காக வங்கியில் ரூபாய் 2.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த இரண்டு ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வராமல் போகவே ,வீட்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவண்ணா, ராமகிருஷ்ணாவின் வயதை ஒத்தவர். விவசாயத்துக்காக 3 லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி அதை கட்டமுடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தன் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார்.

அஜினோமோட்டோ? மோனோ சோடியம் க்ளூட்டமின்கள் நேரடியாக நமது மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதியை பாதிக்கிறது


என்ன தம்பி நல்லா எளைச்சிடியளே.. நீங்க வாறியன்னி முன்னெயே சொல்லிருக்கலாமே? இந்நா இருங்க சோறு பொங்கிட்டேன்.. ரசம் வச்சி கொண்டாறேன், சாப்பிடுங்க”
நண்பனின் ஆச்சி வைக்கும் ரசம் எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ரொம்பவே பிரசித்தம். நாங்கள் தம்ளர் தம்ளராக மிளகு ரசம் வாங்கிக் குடிக்கவே நண்பன் வீட்டுக்குப் படையெடுப்போம்.
அஜினோமோட்டோ
அஜினோமோட்டோ ஜப்பானிய செயற்கை உப்பு நமது சமையல் கட்டில் புகுந்ததோடு மட்டுமின்றி சகல விதமான துரித உணவுகளிலும் நீக்கமற நிறைந்து விட்டது.
ஆச்சி ரசம் வைக்கும் முறை மிகவும் அலாதியானது. முதலில் ஒரு சின்ன கல்லுரலில் சீரகம், மிளகு, பூண்டு, கருவேப்பிலை போன்றவற்றைப் போட்டு நறநறவென நசுக்கி எடுப்பார். அதைத் தனியே வைத்து விட்டு ஒரு பொறிக்கான் சட்டியை அடுப்பில் வைத்து கடலை எண்ணை விட்டு அதில் வெந்தையம் கடுகைப் போட்டு தாளிப்பார். கடுகு குதிக்கும் போது ரெண்டு மிளகாய் வற்றலை கிள்ளிப் போடுவார். மிளகாய் வற்றல் பொறியும் நிலை வந்ததும் ஒரு தக்காளியைக் கையால் நசுக்கிப் போடுவார். தக்காளி வதங்கிக் கொண்டிருக்கும் போதே தண்ணீரில் புளியைக் கரைத்து எடுத்து வைப்பார்.

டில்லியிலும் அம்மா உணவகம்? ஆம் ஆத்மியின் மலிவு விலை உணவகங்கள் விரைவில்!

தமிழகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற ’அம்மா உணவகம்’ போன்று புதுடெல்லியிலும் மலிவான விலையில் உணவு வழங்கும் ஆம் ஆத்மி உணவகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பல சர்ச்சைகளையும் சறுக்கலையும் சந்தித்து வந்தாலும் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது டெல்லி மக்களுக்கு மலிவான விலைக்கு உணவு வழங்கும் ஆம் ஆத்மி கேன்டீன் தொடங்க திட்டமிட்டு வருவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கேன்டீனில் மீல்ஸ் (meals) ஐந்திலிருந்து பத்து ரூபாய்க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மலிவு விலை கேன்டீன் முதற்கட்டமாக தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக ரீதி கல்விநிலையங்கள் உள்ள இடங்களில் அமைக்கப்பட உள்ளது. ஆம் ஆத்மி அரசு, அம்மா உணவக மாதிரியை பின்பற்றி இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அம்மா உணவகத்தில், தரமான உணவை, மலிவான விலைக்கு காலை,மதியம்,இரவு என மூன்று வேளையும் உணவு விற்கப்படுவது போல் டெல்லி அரசின் ஆம் ஆத்மி கேன்டீனிலும் உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது nakkheeran.in

தி.மு.க., மீது வைகோ வருத்தம்: கூட்டணி சேர்வதில் சிக்கல்

தி.மு.க.,வுடன் நெருக்கமாக இருந்த கட்சிகளான ம.தி.மு.க., - புதிய தமிழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கடும் அதிருப்தியில் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தல் வரையில் தி.மு.க., கூட்டணியில் நீடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது இடதுசாரி கட்சிகளுடன் கைகோர்த்து தனி அணி அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த அணியில் சமீபத்தில் ம.தி.மு.க.,வும் இணைந்துள்ளது. அதற்கான காரணம் தி.மு.க., தலைமை மீது வைகோவுக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் தான் என கூறப்படுகிறது. இதுபற்றி சென்னையில் நேற்று தன்னை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடம் வைகோ பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ம.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தி.மு.க., கூட்டணியில் சேரும் திட்டத்தில் தான் வைகோ நெருக்கம் காட்டினார். ஆனால் கருணாநிதி பேரன் திருமண விழாவில் வைகோ பேசிய பின் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசையை பேச வைத்தனர். அம்மாவின் ஆசியால் 19 மாதம் வேலூர் சிறையில் இருந்து விட்டு வெளியில் வந்து நேராக அம்மாவிடம் சென்று 19 சீட்டுக்காக கெஞ்சி கூத்தாடி கிடைக்கவில்லை என்றதும் அம்மாவை ஆதரிக்காமல்.....

ஆம்பூர் கலவரம்! தினமலர் / ஆர்.எஸ்.எஸ் அரங்கேற்றிய பார்ப்பன விஷ பிரசாரம்....!

ambur 450
கடந்த 26 ஆம் தேதி ஆம்பூரில் கலவரம் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும். ஷமில் அகமது என்ற இளைஞர் மரணமடைந்ததை ஒட்டி ஏற்பட்ட பெரும் கலவரத்தில் பல போலீஸ்காரர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பழனி என்பவர் தன்னுடைய மனைவி பவித்ராவை ஷமில் அகமது என்பவர் கடத்திச் சென்று விட்டதாகவும் அவரை மீட்டுத்தருமாறும் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் கைது செய்யப்பட்ட ஷமில் அகமதுவை காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் தன்னுடைய வீட்டில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார், இதில் படுகாயம் அடைந்த ஷிமில் அகமது கடந்த 26 ஆம் தேதி மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே கலவரம் மூண்டுள்ளது. இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
கலவரத்துக்கான காரணம் ஷமில் அகமதுவா இல்லை பவித்ராவா என்று ஊடகங்கள் விவாதித்துக்கொண்டு இருக்கையில், பார்ப்பன தினமலர் தன்னுடைய ஆர்.எஸ்.எஸ் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கின்றது. தினமலர் பத்திரிக்கையில் வேலை செய்யும் பல எழுத்தாளர்கள் போனோகிராபி வகையறாக்கள் என்பதும் ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்களை அணிந்துகொண்டு அலுவலகத்துக்கு வருபவர்கள் என்பதுவும் நமக்கு ஏற்கெனவே தெரியும்.

ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் - ஒரு சுயமரியாதை கிராமம் ! அதுவும் தர்மபுரியில் !

மிழ்நாட்டில் ஆச்சரியமான காதல் கிராமம் ஒன்று இருக்கிறது. 1500 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். இந்த அதிசய காதல் கிராமத்தின் பெயர் எஸ்.பட்டி. தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காதல் திருமணங்களுக்கும், கலப்பு திருமணங் களுக்கும்  அடையாள சின்னமாக விளங்கி வரும் எஸ்.பட்டியில் இதுவரை நூற்றுக்கணக்கான காதல் திருமணங்கள் நடந்துள்ளன. அந்த காதல் தம்பதிகள் சமூக இடர்பாடுகளை எல்லாம் கடந்து வெற்றிகரமாக வாழ்ந்து, காதலை ஜெயிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதில் ‘ஹைலைட்’!

புதன், 15 ஜூலை, 2015

பஹுபாலி ? மார்கெட்டிங் டெக்னிக்கில் கோகா கோலாவையும் மிஞ்சிய லோ கிளாஸ் விட்டலாச்சாரியார் சினிமா?

karundhel.com :
இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்’, ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி’, ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்’ என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி’ என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். ‘ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்’ என்ற டாக்லைன் இப்படத்துக்குப் பொருந்துகிறதா? ‘ஒரு திரைப்படம்’ என்ற அளவில் பாஹுபலி (தெலுங்கில் பாஹுபலி. தமிழில் பாகுபலி. பாஹுபலி என்பதே சரியான வார்த்தை. பரந்த தோள்களை உடையவன் என்பது அதன் பொருள்) எப்படி?
முதலில் நான் சொல்லவிரும்பும் ஒரு விஷயம் – இப்படம் நமக்குப் பிடித்திருக்கிறது/பிடிக்கவில்லை என்பதைத்தாண்டிப் பல விஷயங்கள் உள்ளன. ஒரு படம் இப்படி நாடு முழுதும் வெறித்தனமாக மார்க்கெட்டிங் செய்யப்படும்போது, கிட்டத்தட்ட எல்லாத் திரைப்பட ரசிகர்களின் பின்னங்கழுத்தையும் பிடித்துத்தள்ளி, இப்படத்தைப் பார்க்கச் செய்யும் அளவு விளம்பரங்கள்

காசி ரயில் நிலையம் : 4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம்! உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ......

காசி ரயில் நிலையம் அருகே 4 வயது குழந்தையை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அந்த குழந்தையின் முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு நசுக்கிவிட்டுச் சென்ற அவலம் செய்தியை படிப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.
மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பெற்று வருகிறாள்.
திங்கட்கிழமை இரவு, அதம்பூர் பகுதியைச் சேர்ந்த பெற்றோருடன் காசி ரயில் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள் அந்த சிறுமி.
அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர், குழந்தையைத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து, மிகக் கடினமான பொருளால், குழந்தையின் தலையை நசுக்கி விட்டுச் சென்றுள்ளான்.

ஜெயாவை சந்திக்க வைகோ அனுமதி கேட்டு கடிதம் !ஆந்திர 20 தமிழர்கள் சுட்டு படுகொலை விடயம்...

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு  அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக ம.தி.மு.க. தலைமையகம் தாயகத் தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தை சார்ந்த ஹென்றி திபேன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.அந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்திப்பதற்காக தமிழக முதல்வர்  நேரம் ஒதுக்கி தரக் கோரி வைகோ கடிதம் எழுதுவதெனவும் முடிவு செய்யப்பட்டு, அதற்கான கடிதத்தை தமிழக முதல்வருக்கு வைகோ  இன்று எழுதியுள்ளார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் ,மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா, கொளத்தூர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.nakkheeran.in 

குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடு

 மும்பை : மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளி யாகுப் மேமனுக்கு ஜூலை 30ம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் யாகுப்பின் கருணை மனு மீது ஜூலை 21ம் தேதி சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய உள்ளது.
1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டுவெடித்தது. இந்த தாக்குதலில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்ட யாகுப் மேமன் உள்ளிட்ட பலர் இவ்வழக்கில் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

மகாபுஷ்கரம் புனித நீராடல் நெரிசலில் சிக்கி 29 பேர் பலி! ஆந்த்ரா ராஜமுந்திரியில் ....

ராஜமுந்திரி: ஆந்திராவின்
ராஜமுந்திரி நகரின், கோதாவரி நதியில், கோட்டகும்மம் புஷ்கரகாட்டில் நேற்று விமரிசையாக துவங்கிய, 'மகாபுஷ்கரம்' எனப்படும், புனித நீராடல் சடங்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடிய நிலையில், திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 13 பெண்கள் உட்பட, 29 பேர் இறந்தனர். இதனால், அந்த நிகழ்ச்சியில் சோகம் ஏற்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திராவின் ராஜமுந்திரி நகரில், மகாபுஷ்கரத்திற்கான ஏற்பாடுகள், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. முதல்வர் சந்திரபாபு நாயுடுவே, பல தடவை, ராஜமுந்திரி வந்து, ஏற்பாடுகளை பார்வையிட்டார்.நேற்று அதிகாலை துவங்கிய புனித நீராடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர், ராஜமுந்திரியில் கூடியிருந்தனர். மகாபுஷ்கரத்திற்கான நேரம், நேற்று அதிகாலை துவங்கியதும், சாதுக்களும், சன்னியாசிகளும், கோதாவரி நதியில் நீராடினர்.  இந்த செய்தி கேட்டவுடன் எனக்கு கும்பகோணம் மகாமகம் தான் ஞாபகம் வருகிறது.

ராமஜெயம் கொலை விரைவில் கைது நடவடிக்கை! அரசியல் கட்சி பிரமுகர் போலீசாரின் சந்தேகப்பட்டியலில்.....

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் வருகிற 24–ந்தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது. கெடு முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையிலான 12 இன்ஸ்பெக்டர்களை கொண்ட டீம் தனித்தனியே பிரிந்து சென்று வெவ்வேறு இடங்களில் ரகசியமாக விசாரணை நடத்தியது. 2012 மார்ச் 29–ந்தேதி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். அரசியல் பகை, கிரானைட் தொழில், ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில் மோதல், கட்டப்பஞ்சாயத்து, பெண் பிரச்சனை என விசாரணை நடந்தது. இதில் கொலைக்கான பின்னணியை கண்டுபிடித்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலையாளிகளை நெருங்கி வருகின்றனர். 10 முக்கிய பிரமுகர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் சந்தேகப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கையின் ISIS பயங்கரவாதி சிரியாவில் மரணம் - இன்னும் எத்தனை பேர் ? இது ஒரு எச்சரிக்கை?

புகைப்பட உதவி : மடவளை நியூஸ்
jamathgames.blogspot.ca 
 வாசகர் ஆக்கம் : அபூ அம்மார்
இலங்கையின் ISIS போராளி / பயங்கரவாதி மரணம் தொடர்பான செய்தி அரசால் புரசலாக கசிந்துள்ள நிலையில், குறித்த நபரின் ஊருக்கு இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ள செய்தி உறுதி செய்யப்பட்டு மிகுந்த அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. இது இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் ஒரு அபாய எச்சரிக்கை ஆகும். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு இளைஞன் சிரியா வரை சென்று தற்கொலை செய்கின்றான் என்னும் பொழுது, இது இயல்பாக நடக்கமுடியாத ஒன்றாகும். இப்படி செய்தது ஒன்றும் தெரியாத இரத்தம் கொத்திக்கும் டீனேஜ் இளைஞன் அல்ல. 7 குழந்தைகளின் தந்தை இப்படி செய்தால், இதற்கு பயங்கரமான பின்னணி இருக்க வேண்டும். இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள் என்று சொல்லி பிரச்சாரம் செய்யும் எதோ ஒரு இயக்கம் இதன் பின்னணியில் இருக்க வேண்டும். இப்படியான நயவஞ்சகத் தனமாக அடுத்தவர்களின் பிள்ளைகளை உசுப்பேற்றி பலி கொடுக்கும் இயக்கங்களின் செயல், நாளை இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழவே முடியாத சூழலை உருவாக்கலாம்.

செவ்வாய், 14 ஜூலை, 2015

நெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு !தண்ணீர் மக்களின் அடிப்படை உரிமை... .இல்லையாமே?

“நெஸ்லேவைப் புறக்கணிப்போம்”நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீதான தடையை ஒட்டி எழுந்த பரபரப்பு அதே வேகத்தில் வடிந்து விட்டது. உடல் நலன், உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு என்றெல்லாம் கவலைப்பட்ட ஊடகங்கள், இப்போது சுதி இறங்கி ’நெஸ்லே போன்ற ஒரு பாரம்பரிய பெருமை மிக்க நிறுவனம் இப்படிச் செய்யலாமா?’ என்று வருத்தப்படுகின்றன. நுகர்வோர் மீதான கவலையை கார்ப்பரேட் மீதான பக்தி வென்று விட்டது.
மேகி பிரச்சினையின் போது நெஸ்லே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) தில்லிக்கு வந்திறங்கினார். அதன் பிறகு ஊடகங்கள் கவலையை மாற்றிய சக்தி எது என்பதை ‘துப்பறிந்து’ கண்டுபிடிக்க வேண்டியதில்லை.
ஒருபுறம்ம், நெஸ்லேவின் வணிக சின்னம் (Brand image) மீதான கருணைக் கட்டுரைகள்; மறுபுறம் நெஸ்லே மேகியில் உள்ள அதிகமான காரீயத்திற்கு அதில் பயன்படும் வெங்காயம் விளையும் மண்னின் தன்மையே என்பதை விளக்கும் அறிவியல் கட்டுரைகள். நீ மட்டும் யோக்கியமா போன்ற கிரிமினல்களின் மொழியில், மேகியில் மட்டுமில்லை, பல பொருட்களிலும் கலப்படம் உள்ளதை விவரிக்கும் தந்திரமான கட்டுரைகள்,

எம்.எஸ்.வி மரணம்; இந்திய அரசு இறுதிவரை கண்டுகொள்ளவே இல்லை ! விபசாரமாகிவிட்ட பத்ம விருதுகள் !

msvதமிழர்களின் கண்ணீர், கவலை, துக்கம் என்று எல்லாச் சோக உணர்வுகளின் போதும் ஆறுதல் அளித்துத் துணை நின்று, பதிலுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அள்ளித் தெளித்த அந்த மாமேதை இன்று மரணித்தார்.
பத்ம ஸ்ரீ உட்பட மத்திய அரசு விருதுகள் கடைசி வரை அவருக்குத் தரப்படாமல், இழிவான, மலிவான அரசியலை நடத்தி அம்பலப்படுத்திக் கொண்டன.
விருதுகளால் மேதைகள் அங்கீகரிக்கப்படுவதில்லை, மேதைகளால் தான் விருதுகள் அங்கீகாரம் பெறுகின்றன. மெல்லிசை மன்னரின் மரணத்தால் அவமானப்பட்டுப்போனது விருதுகள்.

MSV க்கு தேசிய அங்கீகாரம் கொடுக்காத இந்தியா ஒரு நாடா?: ஒய்.ஜி.மகேந்திரன் ஆவேசம்

எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு ஒய்.ஜி.மகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், மெல்லிசை மன்னருக்கு இறப்பில்லை. எனக்கு தெரிந்த ஒரே கம்போஸர் எம்.எஸ்.வி மட்டும் தான். சின்ன வயதில் இருந்தே அவருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன். இனிமேல் மெலடி பாடல்களைப் போடுவதற்கு ஆளே கிடையாது.இவர் போட்டுக் கொடுத்த பாதையில் மற்றவர்கள் வந்துக் கொண்டிருக்கிறார்கள்
நான் இந்தியனாக பிறந்ததற்கு பெருமைப்பட்டேன். ஆனால் இன்றைக்கு வெட்கப்படுகிறேன். இந்த மாதிரியான ஒரு மாமேதைக்கு தேசிய அங்கீகாரம் கொடுக்காதா இந்தியா ஒரு நாடா? இப்படி ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பது எனக்கு அவமானமாக இருக்கிறது. இவருக்கு கொடுக்காத அந்த விருதுக்கு இனிமேல் மதிப்பே கிடையாது என்றார் dinamani.com 

எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் !

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த, இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.< 87 வயதான விஸ்வநாதன், 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். தமிழ்தாய் வாழ்த்துப்பாடலான ‛நீராரும் கடலுடத்த..' பாடலுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர் எம்.எஸ்.வி., இவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் நாளை நடைபெறுகிறது. வாழ்க்கை வரலாறு: இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளியில் 1928 ஜூன் 24ல் பிறந்தார். அவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்

நாமக்கல் நரபலி கொடுக்க சிறுவனைக் கடத்த முயற்சி: 5 பேர் கும்பல் கைது

புதையல் எடுக்க சிறுவனை நரபலி கொடுக்கப் போவதாக கிடைத்த தகவலையடுத்து, மந்திரவாதி உள்ளிட்ட 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
 நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை அடுத்த கோணாங்கிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராசம்மாள் (60), அவரது மகன் ரவிக்குமார் (40), மருமகள் பானுமதி (31).கட்டட மேற்பார்வையாளரான ரவிக்குமாரின் வீட்டில் புதையல் எடுக்க, மரக்காணத்தைச் சேர்ந்த மந்திரவாதி சத்யமூர்த்தி (27) கடந்த 6 மாதங்களாக தினமும், நள்ளிரவில் சிறப்புப் பூஜைகள் செய்து வந்தாராம்.

கிரீஸ் பொருளாதார நெருக்கடி:தற்காலிகமாக தீர்ந்தது !கடன் வழங்கும் நாடுகளுடன் புதிய ஒப்பந்தம்

பொருளாதார நெருக்கடியிலிருந்து கிரீûஸ மீட்பதற்கு கடனுதவி அளிப்பதற்கான புதிய சமரச ஒப்பந்தம் அந்த நாட்டுக்கும், அதற்குக் கடன் வழங்கும் யூரோ நாணயத்தைப் பொதுவாகப் பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் (யூரோúஸான்) இடையே திங்கள்கிழமை கையெழுத்தானது.
 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தின் மூலம், அந்தக் கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேற்றப்படும் இக்கட்டான நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு மரணதண்டனை ? புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் பலாத்கார கொலையாளிகளுக்கு ...வலுக்கிறது

vidya-murder-jaffna-inquary  வித்தியா கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில்: சுவிஸ் ஆசாமி விவகார அறிக்கையும் சமர்ப்பிப்பு! vidya murder jaffna inquaryபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின்போது புங்குடுதீவில் வைத்து பொதுமக்களின் ஒத்துழைப்போடு கைது செய்யப்பட்ட சுவிஸ் பிரஜை எவ்வாறு  வெள்ளவத்தைக்குச் சென்றார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் வித்தியா கொலை செய்யப்பட்ட நாளில் கொழும்பில் இருந்ததாக மன்றில் அளிக்கப்பட்ட வாக்குமூலம் தொடர்பான விசாரணை அறிக்கையும் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மாணவி வித்தியா காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

திங்கள், 13 ஜூலை, 2015

தனுஷ்கோடிக்கு புதிய சாலை ஜனவரியில் திறக்க ஏற்பாடு


 இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் நுழைவு வாயிலாக ஆங்கிலேய ஆட்சியில் தனுஷ்கோடி துறைமுகம் 1.3.1914-ல் திறக்கப்பட்டது. இதற்காக தமிழகத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதற்காக மண்டபத்தில் இருந்து பாம்பனுக்கு ரயில் பாலமும் கட்டப்பட்டது.
இதன்மூலம் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் பயணம், அதைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து தலை மன்னாருக்கு கப்பல் பயணம், தலைமன்னாரில் இருந்து கொழும் புக்கு மீண்டும் ரயில் என மாறிப் பயணம் செய்ய ஒரே டிக்கெட் போதுமானதாகவும் இருந்தது.
தமிழக அரசால் 1961-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் தனுஷ்கோடியில் 3,197 மக்கள் வசித்ததாகவும், இங்கி ருந்து பருத்தி துணிகள், பித் தளை, அலுமினியம், கருவாடு, முட்டை, காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் பதிவு செய் யப்பட்டுள்ளது.

வியாபம் ஊழல் முதல் ஆஸ்ரம வன்புணர்ச்சி வரை மதவெறியர்கள் சாட்சிகளை கொல்வதை வழக்கமாக்கிவிட்டனர்

பா.ஜ.க - விஜய் மல்லையாப்பிள் நிறுவனத்தில் தலைமை நிர்வாகி டிம் குக்கின் வருட ஊதியம் சுமார் 9.22 மில்லியன் டாலர். இதன் இந்திய ரூபாய் மதிப்பு என்ன? 9.22 மில்லியன் டாலரை 63-ஆல் பெருக்குங்கள்! அத்துடன் ஆறு பூஜ்ஜியங்களை சேருங்கள்! எப்படிப் பார்த்தாலும் அதை மில்லியன், பில்லியன் இன்றி எண்ணிக்கையில் படித்துக் காண்பிப்பது கடினம்!
பீகார் விவசாயத் தொழிலாளிக்கு கிடைக்கும் ஒரு நாள் சம்பளம் சுமார் 118 ரூபாய் மட்டுமே. இதுவும் கூட ஒரு சராசரிதான். உண்மையிலேயே இதைவிடவும் குறைவான ஊதியமே அங்கே நிலவும் யதார்த்தம்.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

பாபநாசம் :பார்ப்பானாகிபோன ஜோர்ஜ் குட்டியின் கதை திருஷ்யம் !

மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனைகள் படைத்து மூன்றாவதாக தமிழில் வெளியாகியிருக்கிறது ஜீது ஜோசப்பின் இந்த கதை. த்ரிஷ்யம் என்ற பெயரில் மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப் பாபநாசம் என்ற பெயரில் தமிழில் தன் கதையை படமாக்கியிருக்கிறார். சாதாரண வேலைக்காரனாக இருந்து வாடகை டிவி கேபிள் வழங்கும் நிறுவனத்தை உருவாக்கி சுயம்புவாக வளர்ந்து நிற்கும் சுயம்புலிங்கமாக கமல். சுயம்புலிங்கத்தின் மனைவியாக மீண்டும் திரையுலகில் கால் பதித்திருக்கும் கௌதமி. மிக முக்கியமாக ஐஜி கேரக்டரில் வரும் ஆஷா சரத், சுயம்புலிங்கத்தின் மகள்கள் கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில், கலாபவன்மணி என சில கதாபாத்திரங்களை சுற்றியே வருகிறது

கோகுல இந்திரா: கருணாநிதி, ராமதாசு, வைகோ விஜயகாந்த் அல்லாரும் துரோஹிங்க?

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இனத் துரோகி என்றால், திமுக தலைவர் கருணாநிதி தமிழினத் துரோகி என்று கூறியுள்ளார் அமைச்சர் கோகுல இந்திரா. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி விழா மற்றும் அ.தி.மு.க. அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அவரது பேச்சிலிருந்து.. நடிகைங்க படம் போட்டா எதாவது எழுதனும்லே? இவுக சீட்டு எத்தனை நாளைக்குன்னு டென்சன்ல ஏதாவது உளறுது பாவம். 

ஜெயலலிதாவின் நோய் நாடகம் ! 1984 இல் எம்ஜிஆர் வென்றதைப் போல தேர்தலிலும், வழக்கிலும் வெற்றி தருமா?

ஒரு வாரத்துக்கு முன்னதாக தமிழகத்தில் அனைவரும் விவாதித்துக் கொண்டிருந்த விவகாரம், ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் பெரும் ஊழல் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு என்ன ஆகும் எனப்து குறித்தே.   ஆனால் தற்போது என்ன விவாதிக்கப்படுகிறது ?   ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியாக இருக்கிறதா?  மக்கள்  வெறும் உணர்ச்சி வசப்பட்ட அடிமைகூட்டம் என்று கணக்கு வைத்திருக்கும் ஜெயலலிதா கும்பலின் தேர்தல் பிரசாரம்தான் இந்த  நோய் நாடகம்! மீண்டும் ஜெயாவின் நோய் முற்றி பலரும் இறப்பதுவும் நடக்கலாம்? அதாய்ன் மரணத்துக்கு மூணு லட்சம் குடுக்கிராய்ங்களே! தற்கொலைக்கு விலை நிர்ணயம் செய்து அரசியல் செய்யும் நாடு இது?

பாலியல் பலாத்கார வழக்கு:சமரச உத்தரவை திரும்பப் பெற்றது உயர் நீதிமன்றம்

பாலியல் பலாத்கார வழக்கில், சமரசம் செய்து கொள்ளும்படி வெளியிட்ட உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர் வி.மோகன். பெற்றோரை இழந்த 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸாரால் கடந்த 2009-ஆம் ஆண்டு மோகன் கைது செய்யப்பட்டார். அப்போது, அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

பிரியங்கா மகன் ரேகன் அமேதிக்கு திடீர் விசிட்


அமேதி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் எம்.பி.,யாக உள்ள அமேதி தொகுதி யில், புது விருந்தாளியாக, அவரது சகோதரி பிரியங்காவின் மகன் வந்து தங்கிச் சென்றது, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உ.பி., மாநிலம் அமேதி, காங்கிரஸ் தலைவர்களின் பாரம்பரிய தொகுதியாக திகழ்கிறது. நேரு குடும்பத்தைச் சேர்ந்த பலர், இத்தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,க்களாகி உள்ளனர். தற்போது, காங்., துணைத் தலைவர் ராகுல், இந்த தொகுதி யின் எம்.பி.,யாக உள்ளார். இவரின் சகோதரி பிரியங்கா, அடிக்கடி அமேதிக்கு வந்து பொதுமக்களுடன் அளவளாவி விட்டு செல்வது வழக்கம்.
பிரியங்காவின் மகன் ரேகன், 14, தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் காரில் வந்து இறங்கியபோது, அமேதி தொகுதி மக்களால், தம் கண்களையே நம்ப முடியவில்லை.  மக்களை முட்டாளாக்குவதில் எந்த கட்சியும் இந்தியாவில் சோடை போனதில்லை

ரோஹிங்கியா ! பர்மிய அரசியல்வாதிகள் ஒடுக்குமுறையை நிறுத்திக்கொள்வதாக இல்லை


மே 2015ல் இந்தோனேஷியா, மலேசியா கரையோரப் பகுதிகளில் சில கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக மிதந்து வந்து கரை ஒதுங்கியபோது இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பிரச்னை ஒன்றும் உலகின் கவனத்துக்கு வந்து சேர்ந்தது. இந்தக் கப்பல்களில் இருந்து பொலபொலவென்று உதிர்ந்த அகதிகளால் கரையை நோக்கி நகரக்கூட முடியவில்லை. கிட்டத்தட்ட எல்லோருமே எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தனர். சிலர் முழுமையான எலும்புக்கூடாகவே மாறியிருந்தனர். கப்பலைவிட்டு இறங்கும்போதே நடுக்கத்துடன் கீழே விழுந்த பலர், தவழ்ந்து தவழ்ந்துதான் முன்னேறியிருக்கிறார்கள். இந்த வாய்ப்பும்கூட கிடைக்காமல் நடுக்கடலில் உயிரை விட்டவர்களின் எண்ணிக்கை தெரியப்போவதேயில்லை. ‘மிதக்கும் சவப்பெட்டிகள்’ என்று மிகச் சரியாகவே இந்தக் கப்பல்களை வர்ணித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.