சனி, 4 ஜூன், 2016

புதுச்சேரியில் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் அமைச்சர்கள்.. வைத்திலிங்கம் சபாநாயகர்

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை நாளை மறுதினம் பதவியேற்க உள்ளது. புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சர் பதவிக்கு முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிட்டனர். வைத்திலிங்கம் விலகி கொண்டதால் நாராயணசாமி, நமச்சிவாயம் இடையே போட்டி உருவானது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலானோர் நாராயணசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் பதவி ஏற்பு தள்ளிப்போனது. முதல்-அமைச்சர் பதவி போட்டியில் இருந்து விலகிய வைத்திலிங்கம் தனக்கு 2-ம் நிலை அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டார். அதே பதவியை நமச்சிவாயமும் கேட்டார். இதனால் யாருக்கு 2-ம் நிலை அமைச்சர் பதவி வழங்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அதிமுக மத்திய அரசில் அங்கம்? விரைவில் மத்திய அமைச்சரவையில்? கேசுகளை ஊத்தி மூட ஜெயா - மோடி ஒப்பந்தம்?

டெல்லியில் வருகிற 14-ம் தேதி, பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அ.தி.மு.க உள்ளது' என்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, அன்று காலை 10 மணிக்கே தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. 'இவ்வளவு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?' என்ற கேள்வியை நேற்று எழுப்பியிருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மோடியை சந்திக்க டெல்லிக்குச் செல்கிறார் ஜெயலலிதா.  இதிலென்ன புதிசா செய்தி இருக்கிறது? (RSS)பாஜகவின்  தமிழ்நாட்டு கிளையாகத்தான் அதிமுக இருக்கிறது ... அதிமுக ஆரம்பனதே திமுகவின் தமிழ் இன உணர்வுக்கு எதிராகத்தானே?  

சிலை கடத்தல் தீனதயாளனை இயக்கும் சினிமா அரசியல் புள்ளிகள்.... 120 கலைப்பொருட்கள்..


சிலை கடத்தல் புகாரில் தேடப்பட்டுவந்த தொழிலதிபர் தீனதயாளன், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டை, முரேஷ் கேட் சாலையில் ஒரு பங்களாவில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கடந்த சில தினங்களுக்குமுன் சோதனை நடத்தினர்.
முதற்கட்டமாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள 55 சிலைகள் கைப்பற்றப்பட்டன.

எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல் !

kancha-ilya-threatened-by-brahmin-thugsகாஞ்சா அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர், தலித் அரசியல் சிந்தனையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர். “நான் ஏன் இந்து அல்ல”, “பின் இந்து இந்தியா”, “அய்யங்காளி” போன்ற நூல்களின் ஆசிரியர். அச்சமின்றி பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி வரும் அறிவு ஜீவிகளில் ஒருவர். தற்போது ஐதரபாத் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உருது பல்கலைகழகத்தில் சமூக நீதி ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

குஜராத் அதானிகளின் 50,000 கோடி மின்சார ஊழல்...

gautam_adani_narendra_modi_mukesh_ambani_624x351_epa நிலக்கரி இறக்குமதியின் போலி விலையேற்றத்தின் மூலம் சுமார் 29,000 கோடி, மின்னுற்பத்தி நிலைய உபகரணங்கள் இறக்குமதியின் போலி விலையேற்றம் என்கிற வகையில் சுமார் 9,000 கோடி, இழப்பீட்டு கட்டணம் என்கிற வகையில் சுமார் 10,000 கோடி என கிட்டத்தட்ட 50,000 கோடி அளவில் கொள்ளை நடந்துள்ளது.
மின்சார துறையில் ரூ. 50,000 கோடி வரையில் நடந்திருக்கும் கொள்ளையை எக்னாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.  தேர்தலில் மோடிக்கு செலவழித்தஅதானி, டாடா, எஸ்ஸார், இந்தியா சிமெண்ட்ஸ், ஜிண்டால் உள்ளிட்ட 40 நிறுவனங்கள் இதில் சமபந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இம்மோசடி மூன்று முறைகளில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

மதிமாறன்: கலைஞர் எதிர்ப்பாளர்கள் எல்லாருமே ஜாதியவாதிகள்தான்

ஒரே நேரத்தில் தலித் விரோதக் கட்சி, தலித் கட்சி இரண்டையும் ஒரு சேர ஆதரிக்கிற பார்ப்பன அறிவாளிகளுக்கு அடிப்படை இரண்டும் திமுக எதிர்ப்பில் இருந்தால் போதும்.
கலைஞரை ஆதரிப்பவர்களிடம் ஜாதி உணர்வு இருக்கலாம். கலைஞரை ஆதரிப்பதில் ஜாதி இல்லை. காரணம் அவர் ஜாதியில் ஆட்களே இல்லை.
ஜாதி பின்புலம் இல்லாத ஒருவர் மிகப் பெரிய தலைவராக இருக்கிற முறை கலைஞரோடு முடிவுக்கு வருகிறது.
ஆனால், கலைஞரை கடுமையாக விமர்சிக்கிற பலரிடம் ஜாதி இருக்கிறது.
என் ஜாதிக்காரருக்கு எதிராகச் சதி செய்தார். என் ஜாதிகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. என் ஜாதிக்காரைரை பின்னுக்குத் தள்ளி அவர் சதி செய்து தலைமை பொறுப்புக்கு வந்தார்.
இப்படிப் பல வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத ‘உள்’ காரணங்கள் நிறைய இருக்கிறது.

கலைஞர்: தேர்தல் ஆணையத்தில் அயோக்கியர்கள் இருக்கிறார்கள்

சென்னை: தமிழக தேர்தல் ஆணையத்தின் கண்ணியத்தின் மீது மதிப்பில்லாமல் போய்விட்டது என இன்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கருணாநிதி குற்றம்சாட்டினார். தேர்தல் ஆணையம் எவ்வளவு புனிதமானது, அதை யாரும் அசைக்க முடியாது என்பதற்கு மதிப்பில்லாமல் போகும் அளவுக்கு தேர்தல் ஆணையத்திலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள் என்றும் கருணாநிதி கடுமையாக தாக்கியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற 93 வது பிறந்தநாள் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், திமுகவை வீழ்த்த வேண்டும் என்று யாரோ முயற்சி செய்து வருகிறார்கள் 50 ஆண்டுகளாக எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாத இயக்கமாக திமுக இருப்பதாக கூறினார்.
என்னை இங்கே பாராட்டி பேசியவர்கள், நான் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்கள். இந்த நாட்டில் இவ்வளவு பிற்போக்கு தன்மை ஏற்பட்டுள்ளது. கொண்ட கொள்கைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டன. இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இன்னும் சில காலம் வாழ வேண்டுமா என்ற கேள்வி என்னை துளைத்தெடுக்கிறது.

உலக ஒலிம்பிக் கமிட்டிக்கு அம்பானியின் மனைவி நிடா அம்பானி தேர்வு... எல்லாம் ஒரு வியாபரம்தாய்ன்

புதுடில்லி : சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு, ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவர் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் 3வது இந்தியர் மற்றும் முதல் இந்திய பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு நீடா தேர்வு செய்யப்பட்டதற்கு ஷாருக்கான், சானியா மிர்சா, சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர் dinamalar.com

Cassius Clay உலக குத்துச்சண்டை சாம்பியன் முகமதலி காலமானார்


நியூயார்க்: உலக அளவில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் முகமது அலி இன்று காலமானார். இவருக்கு வயது 74. இவர் 3 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவார் .அமெரிக்காவை சேர்ந்த இவர், குத்துச்சண்டையில் பங்கேற்ற 61 போட்டிகளில் 56 முறை வெற்றி பெற்றவர். பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக மரண போராட்டத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சுவாசக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார்.இவர் 1981 ம் ஆண்டில் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற்றார். தி கிரேட்டஸ்ட், பீப்பிள் சாம்பியன் போன்ற பட்டங்களை பெற்றவர் முகம்மது அலி.
முகமது அலியின் மறைவு உலக குத்துச்சண்டை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நரம்பு மண்டல பாதிப்பு; அவர் கடந்த 2014-ல் நிமோனியா காய்ச்சல் மற்றும் 2015-ல் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு பார்கின்சன்'ஸ் நோய் ஏற்பட்டதான் காரணமாக மீண்டும் முருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பார்கின்சன்'ஸ் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடலின் தசைகள் விறைப்பு ஏற்படும் விதமான நோய் தினமலர்.கம

இளங்கோவன் : பிடிபட்ட 570 கோடியில் அருன்ஜெட்லிக்கும் 30 வீதம் கமிஷன் கொடுத்துள்ளார்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது,திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி சிக்கிய விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 30 சதவீதம் வரை மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான் அந்த பிரச்சினையை மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். அதை நானும் வலியுறுத்துகிறேன்.சி.பி.ஐ. விசாரணை கேட்பது தவறு என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சொல்கிறார்.    உலகத்தில எந்த நாட்டிலையும் இவ்வளவு பகிரங்கமாக ஊழல் நடக்காது. அடங்கப்பா எங்கேயோ போயிட்டீங்க... அடுத்த பொருளாதார (ஊழல்)  நோபல் பரிசு அம்மாவுக்குதாய்ன்  

முதல்வர் ஜெயலலிதா: ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இருபக்கங்கள் ! முதல்ல எதிர்க்கட்சி MLA க்களை பேச விடுவீர்களா? இல்லையா?

சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டம் இன்று துவங்கியது. கூட்டத்தில் புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய முதல்வர் ஜெ., ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் நாணயத்தின் இரு பக்கமாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், திமுக., எதிர் கட்சியாக செயல்படுமே தவிர எதிரி கட்சியாக இருக்காது என்றார். இன்றைய கூட்டத்தில் சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இருவருக்கும் முதல்வர் ஜெ., வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 2ம் முறை தேர்வான தனபால் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. தராசு முள் போல் சபாநாயகர் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல் செயல்பட வேண்டும்.   இந்த அம்மா பம்முறது  நல்லதுக்கில்ல  ஊரையும் சட்டத்தையும் ஏமாற்ற எதோ  ஒரு பெரிய  தில்லு முள்ளுக்கு ப்ளான் பண்றாரு

வெள்ளி, 3 ஜூன், 2016

டாஸ்மார்க் 500 ரகசியம் இதுதாய்ன் :லெஸ் பிரான்ச் மோர் ப்ரோபிட் less branches more profits

தமிழகமெங்கும் கிளை பரப்பி ஜோராக வியாபாரம் செய்து வரும் இனிப்பகத்தின் (ஸ்வீட் ஸ்டால்) முக்கியமான போர்ட் மீட்டிங் அது...
பெண் சி இ ஓ தான் சேர் பண்ணுகிறார். விபி மார்கெட்டிங் மற்றும் விபி ஃபைனான்ஸ் இருவரும் புள்ளி விவரங்களோடு எதிரெதிரே அமர்ந்திருக்க மற்றும் இன்னபிற மெம்பர்கள் எல்லாம் ஆவலும் பரபரப்புமாய் காத்திருக்கின்றனர்.
சி இ ஓ தான் ஆரம்பிக்கிறார்...
இப்போ தமிழகம் முழுக்க நமக்கு எத்தனை கிளைகள் இருக்கு?
650 கிளைகள் இருக்கு மேம்... இது விபி மார்கெட்டிங்..
குரோத் எப்படி இருக்கு சொல்லுங்க...
கடந்த அஞ்சு வருஷத்துல ஹண்ட்ரட் பர்சண்ட் குரோத் காமிச்சிருக்கோம் மேடம். ஆவரேஜா பார்த்தா வருஷத்துக்கு 20% க்ரோத் இருக்கு.
ப்ரான்ச் க்ரோத் சரி... சேல்ஸ் க்ரோத் எப்படி இருக்கு?

வேந்தர் மூவீஸ் மதன் உயிரோடு உள்ளாரா? SRM பச்சமுத்துவுக்கு இந்த நாடகத்தில் என்ன ரோல்?

வேந்தர் மூவிஸ் நிறுவன அதிபர் எஸ்.மதன், காணாமல் போனதாக சொல்லப்பட்டு 6 நாட்கள் கடந்துவிட்ட நிலையில்,  அவரின் நடமாட்டம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் உறவினர்களும், விசாரணை மேற்கொண்டுள்ள போலீசாரும் குழப்பத்திலும் தவிப்பிலும் இருக்கிறார்கள். இதனால் அவர்  உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர் போலீசார். தமிழகத்தின் பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 'சீட்' வாங்கிக்கொடுக்கும் ஏஜென்ட் வேலையைச் செய்துவந்தவர் மதன். கடந்த 20 ஆண்டுகளாக இதே வேலையில் ஈடுபட்டதால் தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் நிறையத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

ஆயத்த ஆடை நிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை?

தாமரைக்கண்ணன், மனைவி மற்றும் மகன்களுடன்.
தாமரைக்கண்ணன், மனைவி மற்றும் மகன்களுடன்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வந்த ஒருவர் தனது மனைவி, மகன்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் அஞ்சுகின்றனர்.
கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். அவரது மனைவி பிரபாவதி. மகன்கள் தனுஷ். மற்றும் அனுஷ்.

கலைஞர் உருவாக்கிய ஒவ்வொரு திமுக தொண்டரும் ஒவ்வொரு கலைஞர் கருணாநிதிதான்

அய்யா கலைஞர் அவர்களே ! லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான திமுக தொண்டர்களை எல்லாம் உங்களை போலவே சிந்திக்கும் ஒரு குட்டி கலைஞர் கருணாநிதிகளாக உருவாக்கி விட்டீர்கள் அய்யா.
காந்தியின் எத்தனை சீடர்கள் காந்தி மாதிரியே சிந்திக்க தொடங்கினார்கள்?
ஐன்ஸ்டீனின் மாணவர்கள் எத்தனை பேர் ஐன்ஸ்டீன் மாதிரி சிந்தித்தார்கள்?
கலைஞரின் கருத்துக்களை உள்வாங்கியே தனது சமுக அரசியல் அறிவை வளர்த்துக்கொண்ட  தொண்டர்கள் எல்லாருமே தற்போது கலைஞர் போலவே சிந்திக்கிறார்கள்.
ஒரு விடயத்தை பற்றி கலைஞர் என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்க தொடங்கும் முதலே ஒரு அடிமட்ட திமுக தொண்டனிடம் கேட்டால் அவன் கலைஞர் என்ன சொல்லியிருப்பார் என்று ஊகித்தே சொல்லிவிடுவான்.
அது மிகவும் சரியாகவும் இருக்கும்.
அந்த அளவு கலைஞரின் சிந்தனை செயல் எல்லாமே வகுத்துக்கொண்ட கொள்கை அடிப்படையிலேயே இருக்கும்.
இப்படி ஒரு ஆழமான கொள்கை பிடிப்புள்ள முதறிஞர் இன்று வேறு யார்?
கலைஞர் தமிழகத்துக்கு மட்டும் அல்ல உலகில் எங்கெங்கு தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கலைஞர்தான் காவல் நாயகன்.
பல நாடுகளில் வாழும் தமிழர்களின் உள்ளூர் பகைவர்கள் கலைஞரை வெறுப்பது போல வேறு எந்த இந்திய தலைவரையும் வெறுத்ததில்லை. அது ஏன்?

பாரிஸ் வெள்ளம்... வரலாறு காணாத பெருமழை.. அணைகள் உடையும் அபாயம்

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் பெரும் வெள்ளக்காடாகியுள்ளது. தொடர்ந்து பெரும் மழை பெய்து வருவதால் நகரமே மூழ்கியுள்ளது. மேலும் செய்ன் நதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து வருவதாலும் அது பல இடங்களில் உடையும் அபாயம் பெருகி வருவதாலும் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.
செய்ன் நதிக் கரை பெரிய அளவில் உடைந்தால் மிகப் பெரிய பேரவலம் ஏற்படும் நிலை காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் பாரீஸ் வெள்ள நிலைமை மேலும் மோசமடையும் என்று தெரிகிறது.
பாரீஸ் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாலங்கள், ரயில் நிலையங்கள், சாலைகள், விமான நீலையம் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன. ஈபிள் டவர் பகுதியில் பெரிய அளவில் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.

எனது மகனின் கதி என்னவென்று தெரியவில்லை: பாரிவேந்தர் சந்திக்க மறுப்பு

மதன் தாயார் பேட்டி வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியுள்ளதாக கடிதம் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். மதன் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் பாரிவேந்தருக்கு நெருக்கமாக இருந்தவர். இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதன் தாயார் தங்கம், எனது மகனின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம். முதல் அமைச்சரின் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளோம். மதன் கிடைக்க ஊடங்கள் உதவி செய்ய வேண்டும். எனது மகன் எழுதிய கடிதத்தில் யாருக்கும் மிரட்டல் விடுக்கவில்லை. பாரிவேந்தர், ரவி, மதன் ஆகியோரிடையே எழுந்த பணிப் பூசல் காரணமாக மதன் மாயமாகியிருக்கலாம். எஸ்.ஆர்.எம். கல்வி குழும நிறுவனர் பாரிவேந்தர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார். எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை. இந்த ஆண்டு மாணவர்கள் தந்த பணம் எஸ்.ஆர்.எம். நிறுவனத்திடம் தான் உள்ளது என்று மதன் கூறியுள்ளார் என்றார்நக்கீரன்,in

கிருஷ்ணகிரி சாலை விபத்து ; 17 பேர் பலி : 30 பேர் காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நடந்த சாலை விபத்தில் 10 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என 17 பேர் உயிரிழந்துள்ளனர். காயமுற்ற 30 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. மறுமார்க்கத்தில், ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி நிலக்கடலை ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. சூளகிரி அடுத்த மேலுமலை நெடுஞ்சாலையில், இறக்கத்தில் லாரி இறங்கும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் எதிரே வந்த பஸ் மீது மோதியதுடன், பின்னால் வந்த கார்கள் மீதும் மோதியது. லாரியில் வந்த 2 பேர் மற்றும் பஸ்சில் பயணித்த பயணிகள் 17 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களில் பலருக்கு எழும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.

மதுராவில் கலவரம் 24 பேர் கொல்லப்பட்டதாக... 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட

ஜூன் 2016":  உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொல்லப்பட்டவர்களில், மதுரா நகர போலீஸ் கண்காணிப்பாளர் முகுல் திவேதி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் யாதவ் ஆகியோரும் அடங்குவார்கள்.
இந்த வன்முறையில், நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உத்தரப் பிரதேச காவல்துறை தலைவர் ஜாவித் அஹமது தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தபோது இந்த வன்முறை ஏற்பட்டதாக போலீஸ் தரப்பு பேச்சாளர் தலித் செளத்ரி தெரிவித்தார்.வியாழக்கிழமை மாலை போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கியபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலில் போலீசார் மீது கற்களை வீசித் தாக்கியதாகவும், பின்னர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிலைகள் கடத்தல் விசாரணை: ஆயிரம் ஆண்டுகள் பழமையான 42 ஓவியங்கள் கண்டுபிடிப்பு - சோழர் காலத்து

ஆழ்வார்பேட்டை பங்களா வீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 42 ஓவியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தெரிவித்து உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை அருகே முரேஸ்கேட் சாலையில் ஒரு பங்களா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 31-ம் தேதி சோதனை நடத்தி, கற்களில் செய்யப்பட்ட 54 பழங்கால சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர். சிலைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் தீனதயாள்(78) சோதனையின்போது வீட்டில் இல்லை. அங்கிருந்த அவரது கூட்டாளிகள் மான்சிங்(58), குமார்(58), ராஜாமணி(60) ஆகி யோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் ஏஜெண்டுகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

நடிகன் சூர்யா குற்றத்தை ஒப்புக்கொண்டு பிரேம்குமாருக்கு மானநஷ்டம் வழங்கி மன்னிப்பு கேட்கவேண்டும்!

நடிகன்

சூர்யா பெரிய பெரிய மீடியாக்களை வைத்துகொண்டு நாடகம் ஆடுகிறார். சடன் ப்ரேக் போட்ட அந்த பெண்மணி புஷ்பா வேற சூர்யாவுக்கு தாங்க்ஸ் சொல்கிறார்.  எந்த காரணமும் இல்லாமல் தனது சினிமா பணத்திமிரும் சிக்ஸ் பக் உடம்பு திமிரும் தினவெடுக்க நிஜவாழ்வில் ஒரு கீரோ போல காட்டி கொள்ள பாவம் ஒரு ஏழை கருத்த மெலிந்த இளைஞனின் தன்மானத்தை தாக்கி உள்ளார். அதுவும் நடுரோட்டில். விகடன் பத்தரிகையில் பச்சை விபசாரதனமாக சூர்யாவின் ஹீரோ இமேஜ் கதை அளகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துணிந்து தெருவில் இறங்கி கன்னத்தில் அறைந்து அறைந்து பாடம் புகட்டினாராம். யாருக்கடா கதை விடறீங்க?  சல்மான் கான் குடித்துவிட்டு தெருவில் படுத்திருந்த ஏழைகள் மீது காரை ஒட்டி கொன்றதற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை . இரண்டிலும் ஒரே விதமான கரெக்டர்கள்தான் ஒரே விதமான சம்பவங்கள்தான்.  இவனுகளுக்கு எல்லாம்  ஏன் சமுக வலைத்தளங்கள் மீது கோபம் என்பது புரிகிறது . பெரிய மீடியாக்கள் எல்லாம் இவர்களின் பணத்துக்காக எழுத்து விபசாரம் செய்கின்ரண. சமுக வலைதளங்கள்தான்  தனிமனிதனுக்காக குரல் கொடுக்கின்றன. சூர்யாவுக்கு ஒரு வேண்டுகோள் , தவறை திருத்தி கொள்ளவிட்டால் அதற்கு உரிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும், இந்த சம்பவத்தை இலகுவில் மறக்கடிக்க முடியாது. ஏனினில் அந்த ஏழை இளைஞன் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான். உங்களை போன்றவர்களின் தவறுகள் திருத்தபடாவிட்டால் இது ஒரு பெரும் சமுக சீரழிவாக மாறிவிடும்.      

கலிபோர்னியாவில் மனைவியையும் பேராசிரியரையும் சுட்டு கொன்ற இந்திய மாணவன். காராக்பூர் ஐ ஐ டியில் படித்தவன்

லாஸ்
ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர்  பலியானதும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இவன் தனது அமெரிக்க  மனைவியும் சுட்டு கொன்றமை தற்போது தெரியவந்துள்ளது இது தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

ஜெ.'வை ஜெயிக்க வைத்த குடிகாரர்கள்...! எப்படிங்க எங்களால விடமுடியும்... அம்மாவுக்கு என்றென்றைக்கும்.... கண்றாவி!

ப டிப்படியாக மதுவிலக்கு’என "ஜெ'’கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி, தற்போது டாஸ்மாக் கடைகளின் நேரம், மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைக்கப்பட்டிருக்கிறது. அதே போல் ஜெ.வின் முதல் அரசாணைப்படி முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இந்த அதிரடி நட வடிக்கைகள் குறித்து ’குடிமகன்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை அறிய விரும்பினோம். உடனே குடிகாரர் கள் சங்கத்தினரை சந்திக்க, திண்டுக்கல் மாவட்ட கன்னிவாடிக்கு விரைந்தோம்.>எப்போதும் கருப்பணசாமி கோயில் அருகேதான், அந்த சங்கம் களைகட்டும். ஆகவே அங்கே ஆஜரானோம். சபை வெறிச்சோடிப் போயிருந்தது. சங்கப் பொருளாளர் கோல்டு மட்டும் தனியே உட்ர்ந்து, குவார்ட்டர் பாட்டில் மூடி யைத் திருகித் திறந்து, அந்த பொன்நிற திரவத்தை குவளையில் சரித்து, தனி ஆவர்த்தனம் பண்ணிக்கொண்டிருந்தார்.  

திருப்பூரில் நைஜீரியர்களால் அடிதடி மோசடி... சட்டவிரோதமாக பல காரியங்கள்?

திருப்பூர்: இந்தியாவில் ஆப்பிரிக்க குடிமக்கள் ஆங்காங்கு தாக்குதலுக்குள்ளாகி வருவது பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் ஆப்பிரிக்க குடிமக்கள் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்களும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில் ஆப்பிரிக்க மக்களால் நமக்கு பிரச்சினைகள் எழுகிறதா?.. திருப்பூரிலேயே அதற்கு ஒரு விடை உள்ளது. திருப்பூரில் உள்ள ராயபுரம் பகுதி சமீப ஆண்டுகளாக தொடர்ந்து டென்ஷனில் உள்ளது. காரணம், அங்கு வசித்து வரும் நைஜீரிய நாட்டவர்கள். இவர்களை காலி செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட திருப்பூர் முழுவதுமே நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏன் இந்த நைஜீரியர்கள் மீது திருப்பூர்வாசிகளுக்கு இத்தனை கோபம்...? காரணம், இவர்கள் பல்வேறு சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுவதால் பொது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அபாயம் இருப்பதாக திருப்பூரைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

1,300 பொறியியல் பட்டதாரிகளை மோசடி செய்த எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம் L&T infotech

l&t-infotech-recruitment-scam-posterவேலை கொடுப்பதாக 1,300 பொறியியல் பட்டதாரிகளை மோசடி செய்த எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம் ல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக ஒன்றரை வருடம் இழுத்தடித்து மோசடி செய்திருக்கிறது. 2014-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்த இந்த மாணவர்களை பல கட்ட தேர்வுகளில் சோதனை செய்த பிறகு வேலை வழங்கும் கடிதத்தை (offer letter)-ஐ கொடுத்தது, எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம். ஆனால், வேலையில் சேர்வதற்கான தேதியை பல முறை ஒத்திப் போட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு இன்னும் ஒரு தகுதித் தேர்வு நடத்துவதாக போக்கு காட்டி, (offer letter)-ஐ ரத்து செய்திருக்கிறது.

திமுகவில் கடும் உள்வீட்டு விசாரணை... உள்ளடி வேலை பார்த்தவங்களுக்கு சீட்டு காலி?

சட்டசபை தேர்தலில், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்து, கட்சித் தோல்விக்கு காரணமாக இருந்தவர்கள் மீது தலைமைக்கு குவியும் புகார்கள் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க துவங்கி உள்ளது தி.மு.க., அதில் முதல் பலி - அ.தி.மு.க., அமைச்சரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதற்காக, கடந்த இரண் டாண்டு களாக கடும் பணியாற்றி வந்தார், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின். கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும், தேர்தல் பணியில் ஈடுபட துாண்டினார். அந்தப் பணியில் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்ட மொத்த குடும்பமும், தீவிரமாக களம் இறங்கி செயல்பட்டது. கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழியும், களம் இறங்கி பணியாற்றினார்.

Updated List ஜெயலலிதாவின் சொத்து பட்டியல்.... "மாக்களால் நான் மாக்களுக்காக நான்"

சிறுதாவூர், கொடநாடு, பையனூர்… எஸ்டேட்டுகள் என அத்தனை சொத்துக்களும் சசிகலா பெயரிலும் அவரது உறவினர்கள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது...இது போக, கீழே உள்ள நிறுவனங்களின் பதிவு முகவரி, ஜெயாவின் போயஸ்கார்டன் வீட்டின் முகவரியாக இருந்தது...
1. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், சென்னை
2. ஜே. பார்ம் ஹவுசஸ், சென்னை
3. ஜெயா கான்ட்ராக்டர் அண்ட் பில்டர்ஸ், சென்னை
4. கிரீன் பார்ம் ஹவுசஸ், சென்னை
5. ஜே.ஜே லீசிங், சென்னை
6. ஜே.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், சென்னை 7. ஏபி அட்வர்டைசிங், சென்னை
8. ஃபிரஷ் மஷ்ரூம்ஸ், சென்னை
9. ரிவர்வே அக்ரோ ப்ரோடக்ஷன், நீலாங்கரை
10. சூப்பர் டூப்பர் டி.வி, சென்னை
11. லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை 12. மாஸ்டர் ஜே விவேக்ஸ், போயஸ் கார்டன், சென்னை
13. மெடோ அக்ரோ பார்ம்ஸ் சென்னை

வியாழன், 2 ஜூன், 2016

RPS ஸ்டாலின் மறைந்தார்.. பெரியாரின் அணுக்க தொண்டன் ... பத்மநாபாவின் ஆருயிர் நண்பன்


எம்முடன் இமயம் என நின்றிருந்தவர். சமூகமாற்றத்துடன் இணைந்த ஈழவிடுதலைக்கு கைமாறு கருதாது உழைத்த மனிதர்.
உயர்ந்த வசிகரமான அந்த மனிதருக்கு ஸ்ராலின் என்று பெயரிட்டவர் ஈ.வெ.ரா பெரியார்.
ஒரு சட்டதரணியான ஸ்ராலின் அண்ணர்75 முழுதாகவே சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்.
மார்க்சியம்;- பெரியாரியம் இரண்டையுமே தனது வழிகாட்டல் கொள்கைககளாக வரிந்த கொண்டவர்.
ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி பாரம்பரியத்தைச் சேர்ந்த எமக்கு கும்பகோணம் -தஞ்சாவூர் அதன் சுற்றயல் கிராமங்களில் ஒரு பெரும் ஆதரவுத் தளத்தை ஏற்படுத்தி தந்தவர்.
நீங்கள் ஆயிரம் என்ன பத்தாயிரம் பேர் வந்தாலும் அத்தனைபேருக்கும் இருப்பிடமும் -உணவும்- பாதுகாப்பும் வழங்குவேன் புன்முறுவலுடன் அசாதாரண தன்னம்பிக்கையுடன் மலையென நின்று காரியமாற்றயவர்.

இந்தியா சில ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகும்: ஜேட்லி உறுதி

நிதியமைச்சர் அருண் ஜேட்லி. | கோப்புப் படம்.;பொருளாதார சீர்த்திருத்தங்களை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருளாதார நாடாக வளர்ச்சியடையும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள அருண் ஜேட்லி, ஒசாகாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியாவில் முதலீடு வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் பேசும் போது கூறியதாவது: இந்தியாவின் ஜிடிபி வெகு வேகமாக வளரும் நிலையில் உள்ளதால், ஒவ்வொரு சில ஆண்டுகளிலும் 1 டிரில்லியன் டாலர்கள் மதிப்பில் பொருளாதாரம் வளர்ச்சியடையும். தற்போது 2 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக உள்ளது இந்தியா, இன்னும் சில ஆண்டுகள்தான், 5 டிரில்லியன் பொருளாதார நாடாக வளர்ச்சியடைந்து விடும். பொருளாதாரம் எந்த விதமான விரிவாக்கம் அடையப்போகிறது என்பதை இது எடுத்துரைப்பதாக அமையும்.

570 கோடி- 3 கண்டேயினர்கள்.. நக்கீரன் மீது அவதூறு வழக்கு... ஜெயலலிதாவுக்கு களங்கமாம்?


தமிழக சட்டசபை தேர்தலின் போது கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி விவகாரத்தில் ஜெயலலிதா குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி நக்கீரன் பத்திரிகை மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது தேர்தல் சமயத்தில் திருப்பூரில் 570 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரியில் தேர்தல் ஆணையத்தால் பிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை தொடர்புபடுத்தி நக்கீரன் வார இதழில் செய்தி வெளியானது.இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் நக்கீரன் ஆசிரியர் கோபால், செய்தியாளர்கள் பிரகாஷ் மற்றும் அருண் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரசின் முதல் அவதூறு வழக்கு இதுவாகும், இந்த மனுவில் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறாக நக்கீரன் வார இதழில் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  வெப்துனியா.காம்

அதிமுகவுக்கு ஆதரவாக லக்கானி மனச்சாட்சிப்படி நடந்து கொண்டிருக்கிறார்: திருமாவளவன்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று அவர் காட்டுமன்னார்குடி சென்றார். முன்னதாக சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் சட்ட விரோதமாக நடந்துள்ளது. ஒரு தொகுதிக்கு ரூபாய் 28 லட்சம்தான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு தொகுதிக்கு ரூபாய் 28 கோடி செலவு செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். தஞ்சாவூர், அரவக்குறிச்சி மட்மல்லாமல் தமிழகம் முழுவதும் விதி மீறல் நடந்துள்ளது.

ஜெயலலிதா ...பணம் +பதவி+ பார்ப்பனர்கள்+ பாஜக = சகல வழக்குகளிலும் வெற்றி?

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்றும், பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில்; இன்று இறுதி வாதம் தொடங்கியது. முதலில் கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, வழக்கின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக விவரித்து ஆச்சார்யா வாதிட்டார். அவரது வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், "வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம். மேலும் இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையது என்று நிரூபிக்க முடியுமா... அதற்கு என்ன ஆதாரம் உள்ளது?" என்று  கேட்டனர்.நீதிபதி குமாரசாமி போன்றவர்களை பற்றி அன்றே பகுத்தறிவு சிங்கம் எம்.ஆர்.ராதாஅன்றே சொன்னார் 

2002 குஜராத் படுகொலைகள் தீர்ப்பு :24 பேர் குற்றவாளிகள்! குல்பர்க் சொசைட்டி ... இந்துத்வா வெறியாட்டம்


குஜராத்தில் 2002ம் ஆண்டு கலவரங்களின் போது, குல்பர்க் சொசைட்டி என்ற குடியிருப்புப் பகுதியில் நடந்த படுகொலைகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் 24 பேரை குற்றவாளிகள் என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.>குஜராத்தில் நடந்த இந்த கலவரங்களில் 1000க்கும் மேற்பட்ட பெரும்பாலும் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்கள் கோத்ரா என்ற இடத்தில் ரெயில் பெட்டி ஒன்று தீவைக்கப்பட்டதில் இந்துப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து நடந்தன. இந்த கோத்ரா சம்பவத்தில் சுமார் 60 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.>குல்பர்க் சொசைட்டி கொலைகள் குறித்து விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த வேறு 36 பேரை விடுதலை செய்துவிட்டது.
இந்த சம்பவத்தில் ஒரு கும்பல் இந்த குடியிருப்புப்பகுதியைத் தாக்கி, வீடுகளை எரித்து, அங்கிருந்தவர்களை வெட்டிக் கொன்றது. மொத்தம் 69 பேர் கொல்லப்பட்டனர்.

ஜெயலலிதா ஒரு கோழை... எல்லா சர்வாதிகாரிகளும் வீரவேஷம் போடும் கோழைகள்தான்!

வரலாற்றுக் கரும்புள்ளி..
ஜெயாவை துணிச்சல் மிக்கவர்..போல்ட் லேடி என்று கூவி.. சில அரைவேக்காடுகள் துள்ளி குதிக்கும்
உண்மையில் ஜெயா ஒரு படு கோழை.
ஆதாரங்களை அடுக்குகிறேன் சிந்தித்துப் பாருங்கள்.
1...எம்ஜிஆர் கூட இருந்த அத்தனைப்பேரையும் ஏன் துரத்தினார்...பயம் பயம்..அவர்கள் வளர்ந்து தன்னை ஒழித்துவிடுவார்கள் என்ற அந்த பயம்
2...இப்போதுள்ள கட்சிக்காரர்கள் அமைச்சர்களை ஏன்
..வாய்ப்பூட்டு போட்டு ...குனியவைத்து....காலில் விழவைத்து மிதித்து வைத்திருக்கிறார் ?...பயம்..பயம்...இவர்களில் எவனாவது நம்மை ஏதாவது பண்ணிடுவானோ என்ற பயம்...
3. ஊடகங்களை ஏன் விலைக்கு வாங்கி பொய் உற்பத்திச் சாலைகளாகவும் பஜனை மடங்களாகவும் வைத்திருக்கிறார் ??? பயம்..
ஊடகங்களை சுதந்தரமாக விட்டால் தன சாயம் வெளுத்துவிடும் என்ற பயம்.
4....உலகம் சிரிக்குமே என்ற கூச்சமே இல்லாமல் பொய்களையே சொல்லி வருவது ஏன்.? உண்மையை சந்திக்க பயம் ..உண்மை பேச பயம்..

என்றும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம்....கலைஞர் உள்ளம்

1. மக்களால் புறம் தள்ளப்பட்ட அரவாணிகளுக்கு ... திருநங்கையர் என்று அழகு பெயர் சூட்டி .. தமிழக அரசில் மட்டுமல்ல...மத்திய அரசிலும் போராடி அவர்களை...மூன்றாம் பாலினமாக உருவாக்கி..சட்ட அங்கீகாரமும் கெசட்பதிவும் பெற்றுத் தந்து ... அவர்களுக்கு வாக்குரிமைகள் தொடங்கி வேலைவாய்ப்புகளிலும் ஒதுக்கீடு தந்து அவர்களுக்கு சமூக அங்கீகாரமும் வாழ்வாதரங்களையும் உருவாக்கித் தந்த .... கலைஞருக்கு ... அவர்கள் செய்த கைம்மாறு என்ன தெரியுமா ? இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மா வெற்றியை ???? கும்மி அடித்து கொண்டாடினார்கள். கருணாநிதி எங்களுக்கு என்னத்தை செஞ்சு கிழிச்சாரு..எங்களுக்கு எல்லாமே எங்க அம்மா தான் செய்தாங்க என்று ஏசுகிறார்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே !

2. கலைஞர் அருந்ததியருக்கு 3 % உள் ஒதுக்கீடு தந்தார்...அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பயில பெரும் தொகையை கொடை அளித்தார்... அதன் விளைவாக சில ஆயிரம் பேர்கள் படித்து பட்டம் பெற்று அரசுப்பணிகளை பெற்றார்கள்... அனால்... எல்லா சாதிகளும் எங்களை சரி சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடும் விசிக ..திருமா ... அருந்ததியினரை தனக்கு சமமாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்..போராட்டங்கள் நடந்தன......அன்றே அவர் கலைஞருக்கு எதிராக மாறிவிட்டார்.... சரி போகட்டும்.... கலைஞரால் பயனடைந்த அருந்ததி இன மக்கள்...தேர்தலில் தினுகவினருக்கு ஆதரவு அளித்தார்களா ??? இல்லையே !..அதன் தலைவகள் திமுக எதிர்த்து போட்டி இட்டார்களே.. இது பச்சைத் துரோகம் இல்லையா ? நினைக்க...நெஞ்சம் பதறவில்லையா ?

தலாக்'குக்கு தடை கோரி 50,000 முஸ்லிம்கள் மனு.. பாரதீய முஸ்லிம் மகிலா அந்தோலன்...

முஸ்லிம்
தங்களது மனைவிகளிடம் மூன்று முறை "தலாக்' கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரி, பாரதிய முஸ்லிம் மஹிளா அந்தோலன் (பிஎம்எம்ஏ) என்ற இஸ்லாமிய பெண்களின் அமைப்பின் சார்பிலான மனுவில், 50,000 முஸ்லிம்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
 மேலும், இந்த நடைமுறை குரானுக்கு எதிரானது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 இதுகுறித்து பிஎம்எம்ஏ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஜாகியா சோமா, தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்ததாவது:
 தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரும் எங்களது மனுவில், வலைதளம் மூலமாக 50,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். எங்களது கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு, தேசிய மகளிர் ஆணையத்தை அணுகியுள்ளோம்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு டென்ஷனில் அர்ச்சகர்கள், ஜோதிடர்கள், யோகா மாணவர்கள்

மின்னம்பலம் : . ‘‘தேர்தல் முடிவைவிட ஜெயலலிதா அதிகம் எதிர்பார்த்திருந்தது சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின் தீர்ப்பைத்தான். அது இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்துவருகிறது. கடந்த மாதம் 12ம் தேதி நடந்த விசாரணையின்போது, ஜுன் 1ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைப்பதாகவும், அனைத்துத் தரப்பினரும் அன்றே தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் சொல்லியிருந்தனர். அந்த இறுதிக்கட்ட விசாரணை இன்று நடந்தது. இன்று காலையிலிருந்தே ஜெயலலிதா சற்று டென்ஷனாகவே இருந்தாராம்.
 வழக்கம்போல எழுந்தவர், இன்று நீண்டநேரம் பூஜையில் உட்கார்ந்திருந்தாராம். டெல்லியில் இருந்த படியே வழக்கறிஞர்கள் கார்டனில் இருக்கும் பூங்குன்றனுக்கு வழக்கு பற்றிய தகவல்களைச் சொல்ல அதை உடனுக்குடன் ஜெயலலிதாவிடம் இண்டர்காம் மூலமாக சொல்லிக்கொண்டே இருந்தாராம் .. பூங்குன்றனின் போனில் சொன்ன தகவல்களுக்கு ஜெயலலிதா எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் இருந்தாராம்.

நடிகன் சூர்யாவின் தெருவோர சினிமா.... கருப்பாகவும் ஏழையாகவும் இருப்பதுதான் குற்றமா? பிரவீன்குமாரின் புரட்சிகர கேள்வி?


கடந்த இரு நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட சூர்யா தாக்குதல் விவகாரம் எதிர்பார்த்த ஒரு முடிவை எட்டியுள்ளது.>சென்னை பிராட்வே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பிரவீண்குமார் (வயது 21). சுங்கத்துறை கால்பந்து அணிக்காக போட்டிகளில் விளையாடி வரும் இவர், நேற்று முன் தினம்(மே-30) தனது நண்பர் லெனினுடன் அடையாறில் உள்ள கல்லூரியில் பயிற்சியை முடித்து விட்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அடையாறு திரு.வி.க. மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது, முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென்று ‘பிரேக்’ போட்டதால், எதிர்பாராதவிதமாக அந்த கார் மீது பிரவீண்குமாரின் பைக் மோதிவிட்டது.  சூர்யாவும் ரொம்ப கிரிமினலாகிட்டாறு.  பிரவீன் குமார் கூறியது போல சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான நடவடிக்கை வேண்டும்

சொத்துக்கள் குவிப்பது குற்றமல்ல : ஜெ., வழக்கில் மனுநீதி / சுப்ரீம் கோர்ட் கருத்து

சூத்திர ஜாதிகளால் வணங்கப்படும்  ஒரு பாப்பாத்தியை தண்டிக்க அவாளுக்கு ஏன்னா பைத்தியமான்னோ? புதுடில்லி:'வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பது குற்றமல்ல; சொத்துக்கள், சட்டப்பூர்வமான வருமானத்தில் வாங்கப்படவில்லை என, அரசுத்தரப்பு நிரூபிக்க முடியும் என்றால் மட்டுமே, அது குற்றமாகிறது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின் போது, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேரை விடுதலை செய்து, கர்நாடகா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள், பினாகி சந்திரகோஷ், அமிதவ் ராய் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது, கர்நாடகா அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, ''ஜெயலலிதா உட்பட நான்கு பேரை விடுதலை செய்து, கர்நாடகா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் ,விசாரணை நீதிமன்றம் வழங்கிய நான்கு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்ய வேண்டும்,'' என, வாதிட்டார். பேசாம பார்பனர்கள் என்ன செய்தாலும் குற்றம் இல்லை என்ற மனுநீதியை குற்றவியல் சட்டமாக்கி விட்டால் நேரம் செலவு எல்லாம் மிச்சம்

நாறிய வேந்தர் .....என்னதான் நடக்குது நாட்டில்? பாலியல் குற்றம் கூட இனி குற்றம் இல்லையா?

பாரி வேந்தர். பாரிவேந்தர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும், பச்சமுத்து யார் ? பச்சமுத்து, தமிழகத்தின் நம்பர் ஒன் கல்விக் கொள்ளையன். பச்சமுத்து நடத்தும் மருத்துவக் கல்லூரியில் ஒரு எம்பிபிஎஸ் சீட்டின் விலை 75 முதல் 80 லட்சம். ஒரு எம்.எஸ் அல்லது எம்.டி சீட்டின் விலை ஒன்றரை கோடி.
சமீபத்தில் வருமான வரித்துறையினர் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களில் நடத்திய சோதனைகளை அடுத்து, மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி விற்பனை செய்யப்படும் இடமாக மாறியிருப்பது பச்சமுத்து நடத்தும் இந்திய ஜனநாயகக் கட்சியின் அலுவலகம். இந்த அலுவலகத்தில் வசூலை கவனிப்பவர், வேந்தர் மூவிஸ் நிறுவனத்தை நடத்தும் எஸ்.மதன். இவரிடம் சென்று மருத்துவ சீட்டுக்கான தொகையைக் கொடுத்தால், அவர் ஒரு ரோஸ் நிற டோக்கனைக் கொடுப்பார். அந்த டோக்கனை எடுத்துச் சென்று கல்லூரியில் கொடுத்தால், எம்.பி.பி.எஸ் சீட் வழங்கப்படும்.

SRM பச்சை முத்து பதில் சொல்லவேண்டும்! தயாரிப்பாளர் மதன் எங்கே? உயிரோடுதான் இருக்கிறாரா?

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும் கல்வி வியாபாரியுமான பச்சை முத்து என்னவோ முழு பூசணிக்காயை அமுக்குகிறார்?  கல்வி கொள்ளை கணக்கில் வராத பணத்தையும் பினாமி மதன் மூலம் சினிமாவில்  முதலீடு செய்து விட்டு.... மதனை என்ன  பண்ணினார்.....?  இப்படியாக தானே மக்கள் பேசி கொள்கிறார்கள் ?/எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்பு இடம் வாங்கித்தருவதாகக்கூறி ஒவ்வொருவரிடமும் 1 கோடி முதல் 3 கோடி வரை வசூலித்திருக்கிறார் மதன்.  100 கோடி வரை வசூலித்து மோசடி செய்திருப்பதாக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்>முன்னதாக,  சென்னை வளசரவாக்கத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி நிறுவனர் பாரிவேந்தரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் போராட் டம் நடத்தினர் .;எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையின் போது ஒவ்வொரு ஆண்டும் பணம் வாங்கிக்கொண்டு வந்ததாகவும், தற்போது பணம் கொடுத்தவர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.  உங்கள் பணம் எல்லாம் எஸ்.ஆர்.எம். நிறுவனத்திடம் உள்ளது என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் மதன்.   ஆனால், எஸ்.ஆர்.எம். நிறுவன அதிபர் பாரிவேந்தர், மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தார்கள் எல்லோரும் போலீசாரிடம் சென்று முறையிடுங்கள் என்று அறிக்கை விட்டார்.;இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பாரிவேந்தர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நக்கீரன்,in

புதன், 1 ஜூன், 2016

ஜாதியா ? அப்படீன்னா? இப்படியும் ஒரு புதுமண தம்பதிகள் ... சென்னையில்...

இருவரும் என்ன ஜாதி’ –
கலந்து கொண்ட எங்களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, மணமக்களுக்கே தெரியாது.
திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், வேறு வேறு ஜாதியைச் சேர்ந்த இருவருக்கும் திருணம் ஏற்பாடுகள் செய்தனர்.
மணமக்களின் பெற்றோர்களும் ‘மணமகன், மணமகள் தன் ஜாதியைச் சேர்ந்தவர் இல்லை’ என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு, ‘என்ன ஜாதி?’ என்ற கேள்வியையே தவிர்த்து விட்டனர்.
ஜாதியைக் கேட்டு மணமகனின் தலையை வெட்டுகிற தலித் விரோதிகளுக்கும், ஜாதிக்குள் தமிழனைத் தேடும் இனவாதிகளுக்கும்,
‘உட்ஜாதியைக் கூட ஒத்தக் கொள்ள முடியாது. தன் ஜாதியிலேயேதான் தலைவர் வேணும்’ என்று அடம் பிடிக்கிற ‘ஜாதி ஒழிப்பு’ அறிவாளிகளுக்கும் இந்தத் திருமணம் ஒரு பாடம்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு தண்டனை...4 கோடியே 75 லட்சம்..... யமுனா நதியில் ரசாயன கழிவுகளை தூவினார்

அபராதத் தொகை ரூ. 4 கோடியே 75 லட்சத்தை உடனே செலுத்த வேண்டும் என்று வாழும் கலை அமைப்புக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலைஅமைப்பு, டெல்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகக் கலாச்சார விழாவை நடத்தியது.அப்போது, விழாவுக்காக, யமுனைநதிக் கரையில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டது. யமுனை ஆற்றில் மிதவைப் பாலமும் அமைக்கப்பட்டது.மேலும், யமுனை நதியில் ரசாயனப் பொடிகளைத் தூவி இயற்கைத் தாவரங்கள் அழிக்கப்பட்டது. இந்த விழா குறித்து, பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், இந்த விழாவிற்கு முன்பு, வாழும் கலை அமைப்பு ரூ. 5 கோடி செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது.

சிலைகள் கடத்தல்...நடிகை சிக்கினார்.... 50 கோடி... சர்வதேச கடத்தல்காரன் தப்பிவிட்டான்?

Some of the stolen artefacts seized after a raid in Chennai. Photo: R. Ragu
 சென்னை : சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரின் நெருங்கிய கூட்டாளியின் சென்னை வீட்டில், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 55 சுவாமி சிலைகளை போலீசார் நேற்று மீட்டனர்; இது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவன் தீனதயாள், 68. சென்னை, ஆழ்வார்பேட்டை, முரேஷ் கேட் சாலையில், இரண்டு மாடிகள் உடைய வீட்டில் வசித்து வந்தான். வீட்டின் தரை தளத்தில், அவன், பழங்கால கலைப்பொருட்கள் விற்பனை செய்யும், 'ஆர்ட் கேலரி'யை நடத்தி வந்தான்.
ஐம்பொன் மற்றும் கற்களால் செய்யப்பட்ட, பழங்கால சுவாமி சிலைகளை, மும்பை வழியாக, வெளிநாடுகளுக்கு அவன் கடத்தி வருவதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் ! விநியோகஸ்தர்கள் கோரிக்கை!

மதுரை: நடிகர் நடிகைகளின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று மதுரை-ராமநாதபுரம் சினிமா வினியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் செல்வின்ராஜ் தலைமை தாங்கினார்.>இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ் திரைப்படங்களின் விலை மிக அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான பெரிய படங்கள் வசூல் வினியோகஸ்தர்களுக்கு லாபமாக இல்லை. அவர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள் ஆகியோர் தங்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்.

ஓசூர் நில அளவையர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட எட்டு பேர் கைது( படங்கள் )

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது இராமமூர்த்தி நகர். இந்த ஊருக்கு அருகிலுள்ள சாலயோர பள்ளத்தில் கடந்த 28–ந் தேதி அதிகாலை ஒரு கார் கவிழ்ந்துள்ளது.பின்னர் சிறிது நீரத்தில் தீப்பிடித்து எறிந்த அந்த காரிலிருந்து இறங்கிய ஒருவர் உடலில் லேசான நெருப்பு காயங்களுடன் பக்கத்திலிருந்த சாமந்திப்பூ தோட்டத்துக்குள் ஓடியுள்ளார்.
;தீப்பற்றி எரியும் காரிலுள்ள முதலாளியை காப்பாற்றவேண்டும் என்று சொல்லிக்கொண்டு எதற்காக பூந்தோட்டத்துக்குள் ஓடிவந்து ஒளிகிறான் என்று சந்தேகப்பட்ட மக்கள் இவன் திருடனாக இருக்குமென்ற சந்தேகத்தில், அங்கிருந்த மரத்தில் அவனை கட்டிப்போட்டுவிட்டு, விபத்து நடந்ததாக கூறிய  இடத்துக்கு சென்று பார்த்துள்ளனர்.
தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த காருக்குள் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில், இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்."

அங்கு சென்ற போலீசார், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த ஓமலூரை அடுத்த வெள்ளாளபட்டி, சக்தி விநாயகர் தெருவைச் சேர்ந்த சக்திவேல் (வயது-36) என்பவரை விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த நில அளவையர் குவளை செழியன் என்பது தெரிந்துள்ளது.;

ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில்.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன.  பி.வி. ஆச்சார்யாவின் வாதம் நிறைவு பெற்றது. சுப்பிரமணிய சாமியின் வாதம் எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.  கர்நாடக அரசு தனது தரப்பு வாதத்தை நிறைவு செய்தது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தமிழக லஞ்ச  ஒழிப்பு துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும்,  ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடியே ஒரு லட்சம் அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி 10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி  மைக்கேல் டி குன்கா தீர்ப்பளித்தார்.  காண்டேயினர் கரன்சிகளை  இந்த வழக்கில் சேர்க்க முடியாது. அதை பின்பு  ஜெயாவோடு , மோடி,அருண்ஜெட்லி மாற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் எதிர்கால  சொத்து குவிப்பு வழக்கில்  சேர்க்கலாம் என்று மக்களுக்கு  பரிந்துரை செய்கிறோம் ..

புத்த கோயிலில் 40 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிப்பு


தாய்லாந்தில் உள்ள புத்த கோயிலில் குளிர் சாதன பெட்டி ஒன்றில் நாற்பது புலிக் குட்டிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். Image copyright AFP இந்தக் கோயிலின் மூலம், வன உயிர்கள் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது . கான்சனாபுரி மாகாணத்தில் உள்ள இந்த இடத்தில் இருந்து 130 உயிருள்ள புலிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் போது இறந்து கிடந்த புலிக்குட்டிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ள இந்தப் புலிக்கோயில் மூலம் வருடத்திற்கு பல மில்லியன் டாலர் அளவு வருமானம் வருகிறது. விலங்கின ஆர்வலர்கள் இந்த புலிக் கோயிலை மூடுவதற்காக நெடுங்காலமாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர். Image copyright Getty கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து வன உயிர்கள் கடத்தப்படுவதாகவும் தவறாக நடத்தப்படுவதாகவும் எழுந்த புகார்களை அடுத்து அங்குள்ள புலிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் இந்தக் கோயிலின் புத்த துறவிகளுடன் போராடிக் கொண்டிருந்தனர். எனினும் புத்த மதத் துறவிகள் அங்கு எந்த விதத் தவறும் நடக்கவில்லை என மறுத்துள்ளனர்.bbc.com

87 votes Versus 570 Crores ? திருமாவளவனின் கோரிக்கையை லக்கானி நிராகரித்தார்... காட்டுமன்னார் கோவில் வாக்குகளை மீண்டும் எண்ணமுடியாது!

சென்னை: காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் அந்தத் தொகுதியின் வாக்குகளை எண்ண வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிராகரித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.  வெறும் 87 ஓட்டுகள்தான் என்று சொல்லாதே அதன் ஸ்ட்ரீட் வல்யு  570 கோயும் 3  காண்டேயினர்களும்  என்பதை மறவாதே 
இது தொடர்பாக அவர்,'வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாகவும், வாக்குச்சாவடி எண் 81ல் முறையாக வாக்குப்பதிவு நடக்கததாலும் தாம் தோல்வியுற்றதாகவும், எனவே ஒரு வார்டில் மறுவாக்குப்பதிவு மற்றும் அத்தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.

Actor Surya Foul Play.....சூரியாவிடம் அடிவாங்கிய இளைஞன் பயத்தில் புகாரை வாபஸ் வாங்கினார்...


சென்னை: தன்னை சூர்யா அடித்துவிட்டதாக போலீசில் நேற்று புகார் செய்த இளைஞர் பிரேம் குமார், இன்று மாலை புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார். நேற்று சென்னை அடையாறு சாலையில் கார் - பைக் மோதிக் கொண்ட விவகாரத்தில், இருவருக்கு இடையே நடந்த சண்டையின்போது திடீரென குறுக்கிட்டு நடிகர் சூர்யா பைக்கில் வந்த வாலிபர் பிரேம் குமாரை அடித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Youth withdraws assault complaint on Surya இதுதொடர்பாக அந்த வாலிபர் அடையாறு காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார்.  ஏழை பாழை என்றால் எவ்வளவு இளக்காரம் ?

செவ்வாய், 31 மே, 2016

திட்டமிட்டு தமிழகத்தை வஞ்சிக்கும் ஆரியம், ஆந்திரம், கன்னடம், மலையாளம் ... புரிந்துகொள்வார்களா?

ஒரு நாட்டையோ ...ஒரு இனத்தையோ அடியோடு அழிக்க
ஒரு எளிய வழி உண்டு.
!...அந்த மக்களுக்கு கல்வி கிடைக்க விடக்கூடாது.அந்த இனத்தை கல்வி கற்க விடமால் தடுக்கவேண்டும். அவர்களை நல்லது கெட்டது சிந்திக்க விடக்கூடாது
2. அந்த மக்களுக்கு வயிறு காய விட வேண்டும் ...அவர்களுக்கு உணவு கிடைக்கக் கூடாது...அவர்களது...விவசாயம்...செய் தொழில்களை அழித்தால் வருவாய் இல்லாமல் பட்டினி கிடக்க நேரிடும்... வயிற்றில் அடித்தால்.....அந்த இனம் தன்னால் அடிமைப் பட்டுவிடும்
இந்த இரண்டு வேலையை செய்தாலே போதும் ......ஒரு இனத்தை அடியோடு அழித்து விடலாம்.
சரி...இப்போது...தமிழ்நாட்டில் ...ஜெயாவின் ஆட்ச்சியை உற்றுப்பாருங்கள் உண்மை புரியும்.
சமச்சீர் கல்வி ...தமிழ் வழி கல்விக்கு பதில் ...அரசு பள்ளிகளை மெல்ல மெல்ல பாழ் படுத்தி...தனியார் ஆங்கில வழி கல்வி கொண்டுவருவது மூலமாக தமிழக ஏழை எளிய மக்களுக்கு கல்வியை எட்டாக்கனி யாக்கி...அவர்களை கூலிக்காரர்களாகவே...அடிமைகளாகவே வைத்திருப்பது ஆட்சியின் நோக்கம் என்று புரிகிறதா ?//
அண்ணா நூற்றாண்டு விழா நூலகம் மற்றும் செம்மொழி நூலக அழிப்பு வேலைகள் எல்லாம் எதற்காக என்று புரிகிறதா ஏமாளிகளே ?
அடுத்தது...........

ஐ.ஜே.கேவின் வாக்குகள் அதிமுகவுக்கு... மோடி ஜெயலலிதா ரகசிய கூட்டணி! ...

வாக்கு எண்ணிக்கை சென்று கொண்டு இருந்தது. நான்கு சுற்று பாக்கி இருந்தது. அப்போது நான் சொன்னேன்," இப்ப நாலாயிரம் ஓட்டு முன்னணினா வெற்றி. இல்லன்னா சான்ஸே இல்ல". அப்போது ஆயிரம் வாக்குகள் தான் முன்னணி. "அவ்ளோ தான்" என்றேன்.
கடைசி மூன்று சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் அண்ணன் தாமரை.ராஜேந்திரன் முன்னணி பெற்று 2048 வாக்குகளில் வெற்றி பெற்றார். உடன் இருந்தவர்கள், அந்த ஊர் ஏமாற்றி விட்டது, இந்த ஊர் கை கொடுத்தது என சில செய்திகளை விவாதித்தார்கள். இதைத் தாண்டி காரணம் இருக்கும் என்பது தான் என் எண்ணம்.
வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜேந்திரன் சான்றிதழ் பெற்று செல்ல காத்திருந்து, அலுவலகம் சென்றேன். காரணம், வாக்கு எண்ணிக்கை மையமான அரசு கலைக்கல்லூரி எதிரில் தான் மாவட்டக் கழக அலுவலகம். கழகத் தோழர்கள் குழுமியிருந்தனர்.