Kalai Selvi : அடுத்தவர்க்கும் தெரியப்படுத்துங்கள் ! தமிழக உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும்தாம் 1950, 1960களில் திராவிட இயக்கத்தின் நாற்றங்கால்களாக திகழ்ந்தன. அதன் தொடர்ச்சியாக 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு மாநிலமெங்கும் நகரம், சிறுநகரங்களை மையப்படுத்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்துவந்த உயர்கல்வி கிராம மாணவர்களுக்கு அதன்பிறகே கைக்கு எட்ட ஆரம்பித்தது இன்றைக்குத்
தமிழகத்தில் இயங்கிவரும் 91 அரசுக் கல்லூரிகளில் ஏறத்தாழ 50-க்கும்
மேற்பட்ட கல்லூரிகள் பெரியார், அண்ணா, காமராஜரின் பெயரில் தொடங்கி
வைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி நடந்த 1969-1974 வரையிலான காலத்தில்தான்.
சமூகநீதியைச் சட்டரீதியாக உறுதிப்படுத்த கல்வி, வேலை வாய்ப்பைவிடச் சிறந்த
தளம் வேறு இல்லை என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்திருந்தார். அதேநேரம்
அறிவியல், கலை, சட்டம், மருத்துவம், வேளாண்மை, நிதி மேலாண்மை, வணிகம்,
கல்வியியல் படிப்புகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நுழைவதற்கான இட
ஒதுக்கீட்டை விரிவாக்கி அரசுக் கொள்கையையும் மாற்றினார்.
ஆலோசனைக்கு மதிப்பு. கல்வித் துறை மட்டுமின்றி, தமிழக வளர்ச்சிக்கும் கலைஞர் கருணாநிதியின் ஜனநாயக
அணுகுமுறை முக்கியக் காரணமாக இருந்தது. அறிவார்ந்த மனிதர்களின் ஆலோசனைகள்
அவருக்குக் கூடுதல் பலமாக அமைந்தன. அதேபோல அனுபவம் வாய்ந்த இந்திய ஆட்சிப்
பணி அதிகாரிகளும் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.