ராதா மனோகர் : 2000 இலங்கை போரில் ஒரு முக்கியமான காலகட்டம் குறிப்பாக புலிகளுக்கு எதிராக பலநாடுகள் ஒற்றுமையாக செயல்பட தொடங்கியது இந்த காலக்கட்டத்தில்தான். இந்த திருப்பத்தை சரியாக கணித்திருந்தால் ஒரு சிலவேளை பின்பு நடந்த அவலங்களை புலிகள் தவிர்த்திருக்க முடியும். யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்கத்தில் புலிகளின் ஓயாத அலைகள் 4 செப்டெம்பர் மாதம் ஆரம்பித்தது கருணாவின் ஜெயந்தன் படையணி யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் முனைப்புடன் எழுதுமட்டுவாளில் நிலை கொண்டிருந்தது.. கிழக்கு முனையில் நாகர் கோவில் வாசலில் காத்து நின்றது மேற்கு பக்கமான கிளாலி முனையில் தயார் நிலையில் நின்றது. 2000 ஆண்டு எப்பிரல் 30 ஆம் தேதி பலாலி ராணுவத்தளத்தின் மீது புலிகளின் கனரக ஆர்டிலரி குண்டு தாக்குதல் செய்வதற்கு இன்னும் சரியாக ஐந்து கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது என்று அமைச்சர் மங்கள சமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதை கேட்டு முழு இலங்கையும் அதிர்ச்சி அடைந்தது, பலாலியில் நிலை கொண்டிருந்த (40000) நாற்பதாயிரம் ராணுவத்தினருக்கு உரிய உணவு மருந்து மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்வதற்கு உரிய வழிகள் பெரும்பாலும் அடைக்க பட்டுவிட்டன.
oneindia.tamil : சென்னை: பாரதிராஜா தனியாகக் கஷ்டப்பட்டு, தூக்கத்திலேயே அவரது ஆன்மாவும் பிரிந்துவிட்டது. இது மிகவும் கொடுமையான விஷயம். அவர் மறைந்தாலும், தனது மகன் மனோஜின் குடும்பத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையாவது இனி நிறைவேற்றப்பட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள வெங்கடேச்ன், "பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் கங்கை அமரன், அங்கிருந்த குடும்பத்தினரை நோக்கி, "கடைசியில எல்லாரும் அவரை அனாதையாகத் தவிக்க விட்டுட்டு போயிட்டீங்க இல்லை?" என்று ஆவேசமாகத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
Dhinakaran Chelliah · : சுயமரியாதைச் சமரசச் சடங்கு விளக்கம் அங்கிங் கெனாதபடி எனத்தொடங்கும் தாயுமானவரின் பாடலையும், ‘ஏகமாய்ப் பலவாய்’ எனத்தொடங்கும் அ.சிவப்பிரகாசரின் பாடலையும்,’உலகம் யாவையுந்’ எனத்தொடங்கும் கம்பனின் பாடலையும்,’பூநுலாய வைந்துமாய்’ எனத்தொடங்கும் திருமழிசையாழ்வாரின் பாடலையும் கடவுள் வாழ்த்தாக நூலிற்கு வைத்துள்ளார் ஆசிரியர் C.P.R.பாரதி எனும் திரு.ஸி.பி.ராஜகோபால பாரதி. இந்நூலின் பெயர் ‘சுயமரியாதைச் சமரசச் சடங்கு விளக்கம்’ ஆகும். 1929 ல் வெளிவந்த நூல். நீண்ட முன்னுரைக்குப் பின், சுயமரியாதை வழியில் விவாகம் எனும் மணம் எப்படி நடக்கவேண்டும் அதன் வழிமுறை விளக்கங்களை எழுதியியுள்ளார்.
ராதா மனோகர் : ஜீவா டுடே ஜீவா சகாப்தன் அவர்கள் ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது நடிகர் விஜய்க்கு திமுக குடும்பங்களில் இருந்து சுமார் 10 வீத வாக்குகள் சென்றிருக்கிறது என்றார். இது உண்மையாக இருக்க கூடும் ஏனெனில் ஏற்கனவே இது பற்றி செய்திகள் உள்ளன. இதற்கு பலரும் பல காரணங்களை கூறக்கூடும் முன்பெல்லாம் திமுக குடும்பங்கள் என்ற பெரிய திமுக கிளைகள் இருந்தன. ஒவ்வொரு திமுக குடும்பமும் ஒரு திமுக கட்சி கிளைபோல் செயல் பட்டன இந்த திமுக குடும்பங்களில் இருந்துதான் திமுக ஆட்சிக்கு வந்தது மட்டுமல்ல திமுக படுமோசமாக தோற்றபோதும் திமுகவின் வேர்களை காப்பாற்றி அதற்கு நீரூற்றி மீண்டும் ஆட்சிக்கு திமுகவை கொண்டுவந்தது இந்த திமுக குடும்பங்கள்தான் இந்த குடும்பங்களில் யாரவது ஒருவர் அல்லது இருவர் திமுகவோடு கொஞ்சம் நெருங்கிய தொடர்பில் இருப்பார்
tamil.oneindia.com - Nantha Kumar R ; கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக முறைகேடு செய்து ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்நிலையில் தான் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வாக்குகள் பதிவாகி இருந்த 4 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் எரிந்து கருகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் 2026 மே 4ம் தேதி வரை 3 முறை முதல்வராக இருந்தவர் மம்தா பானர்ஜி. இந்நிலையில் தான் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது.
ilakkiyainfo.com : வயிற்றில் போதைப்பொருள் கப்சுயூல் வெடித்ததில் ஆள் அவுட் இவ்வாறு உயிரிழந்தவர் மொதரவான, ருக்தெனகஹ கொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பஸ்நாயக்ககே குணரத்ன (வயது 51) என்பவர் ஆவார். தங்காலையிலிருந்து மாகும்புர வரை பயணிக்கும் தனியார் பேருந்தொன்றில் தற்காலிக நடத்துனராகப் பணியாற்றி வந்த இவர், கொழும்புப் பகுதியில் இரவைக் கழித்துவிட்டு, பின்னர் மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கிப் பேருந்தில் வந்துள்ளார். பேருந்து தங்காலை வந்தடைந்ததும், அதன் உரிமையாளரிடம் பேருந்தின் சாவி மற்றும் அன்றைய தினத்திற்கான பணத்தை ஒப்படைத்துவிட்டு, தங்காலை நகரில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் நடைபெற்ற மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளார்.
ராதா மனோகர் : வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பலஸ்தீன் பலஸ்தீன் என்று மூச்சு விடும் எலைட் மனிதர் உரிமையாளர்கள் ஒருபோதும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இப்படி வரும் பிரேத பெட்டிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை இந்த பெட்டிகளின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்க எந்த எஞ்சியோவும் பணம் தாராது இந்த பெட்டிகளுக்காக எந்த வெளிநாடுகளும் மனித உரிமை சுற்றலா வாய்ப்பு தராது இந்த பெட்டிகளுக்காக எந்த நாடும் எந்த ஸ்காலர்ஷிப்பும் தராது இந்த பெட்டிகளுக்காக பேசினால் எந்த தொலைக்காட்சியும் மைக்கோடு வந்து உங்களை மொய்க்காது இந்த பெட்டிகள் எந்த ஊடகத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான செய்திகள் அல்ல
மின்னம்பலம் -Mathi : இந்தியா கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? “வீட்டுக்கு கூட்டியாந்து விருந்து வெச்சா விளாசிட்டுப் போறாங்க”ன்னு சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப். என்னங்க ப்ரோ.. சொலவடையோடு ஆரம்பிக்கிறீங்க.. யாரு விருந்து வெச்சதாம்? நம்ம ஜென்சி யூத்ஸ்-க்கு இதுவும் தெரியனுமே.. நீங்க கேட்ட கேள்விக்கு வர்றேன் ப்ரோ.. டெல்லியில இந்தியா கூட்டணி கூட்டத்தை நேத்து காங்கிரஸ் கூட்டியிருந்துச்சு… இந்த கூட்டத்துல திமுக (DMK) கலந்துக்க முடியாதுன்னு சொல்லிடுச்சு இல்லையா?. டெல்லியில நேத்து இந்த கூட்டம் நடக்குறதுக்கு முன்னாடி 2 சம்பவங்கள் நடந்துச்சு.. ஒன்னு சிபிஎம் தேசிய செயலாளர் எம்ஏ பேபி , மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஒரு லெட்டர் அனுப்பினாரு..
தினத்தந்தி :‘16 வயதினிலே’ மூலம் இயக்குநராக அறிமுகம் 1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கிய அவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்
மின்னம்பலம் - Kavi : எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நான்கு பேர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், எஸ் ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழகம், குதிரை பேரத்தில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினர்களை தன் வசப்படுத்திக் கொண்டது என குற்றம்சாட்டப்பட்டது.
hindutamil.in - ஆர்.பாலசரவணக்குமார் : கேரளா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது. அந்த முடக்கத்தை அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது.
hindutamil.in -ஆ.நல்லசிவன் : திண்டுக்கல்: பழநியில் உள்ள இடும்பன் கோயிலில் 17 பவுன் தங்க நகைகள், 52 கிராம் வெள்ளி வேல் மாயமானது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பழநி அடுத்த சிவகிரிப்பட்டியில் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் மூலவர் இடும்பன் ஜடா முடியோடும், இடது தோளில் சிவகிரி, சக்திகிரி ஆகிய 2 மலையை காவடி தூக்கிக் கொண்டு, கையில் அரிவாளும், பிரம்ம தண்டத்தோடும் அருள்பாலிக்கிறார்.
Dhinakaran Chelliah விவேகானந்தரின் உண்மை முகம்!(2) வங்காளத்தில் இந்து சமூகம் பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரண்டு வர்ணங்களாக மட்டுமே பிரிக்கப்பட்டது. வங்காள காயஸ்தர்களும் வைத்யாக்களும்(பரம்பரை வைத்தியர்கள்) பிராமணர்களுடன் சேர்ந்து உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தவர்கள். காயஸ்தர்கள் தங்களை பிரணர்களுக்கு அடுத்த நிலையில் ஆனால் க்ஷத்திரியர்களுக்கு மேலானவர்கள் எனக் கூறிக்கொள்வார்கள். விவேகானந்தருக்கு ஹைதராபாத் நிஜாம் உட்பட பொருளுதவி செய்த மன்னர்கள் பலர் இருந்தனர். அதில் பெரும்பாண்மையினர் ஹிந்து க்ஷத்திரிய மன்னர்கள் அதிகம். அதற்கு முக்கிய காரணம் அந்த மன்னர்களைச் சந்திக்கும் போதெல்லாம் கடிதம் எழுதும்போதெல்லாம் க்ஷத்திரியர்களின் புகழை விவேகானந்தர் பாடியதுதான். இந்த வகையில்,இராஜஸ்தானில் உள்ள Khetri (கேத்ரி) மஹராஜாவிற்கு விவேகானந்தர் எழுதிய கடிதம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதுகிறேன்.
Bala Bharathi ·: பாதிக்கப்பட்டவர் ஓர் இளம்பெண். தவெக வைச்சேர்ந்தவர். அவரிடம் பாலியல் குற்றம் புரிந்தவர்கள் குற்றவாளிகள். அவர்களும் தவெகவைச்சேர்ந்தவர்கள்.TVK’s Thoothukudi west district youth wing organisers Balasubramanian and Jeyabal of Ramanathapuram for sexual assault of the survivor, இந்தக் குற்றவாளிகளை கேரளாவில் மறைத்து வைத்தவர் ஒரு MLA. இவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த தவெக எம்எல்ஏ. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டுப் போராடியது ஜனநாயக மாதர்சங்கம்.
hindutamil.in -தமிழினி : சென்னை: மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற, செய்யூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பனையூர் பாபு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றும் போது, '' திமுகவைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் உழைப்பதற்குத் தயாராக நாங்கள் இருக்கிறோம், "நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம்" என்று நமக்கு இன்றைக்குத் துணையாக வந்து சேர்ந்திருக்கும் பாபுவை வரவேற்கிறேன்.
தினமலர் : புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிர்க்பெக் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, நம் உச்ச நீதிமன்ற த லைமை நீதிபதியிடம், அவரது கரப்பான்பூச்சி கருத்து குறித்து சிலர் கேள்வி கேட்டதால் சர்ச்சை வெடித்தது. கடும் கண்டனம் இந்த சம்பவத்திற்கு லண்டனில் உள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி, ஒரு வழக்கில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வாய்மொழியாக சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். அப்போது அவர், 'வேலையில்லாத இளைஞர்கள் சிலர், சமூக வலைதளங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். கரப்பான்பூச்சிகள் போல சமூகத்தை சீரழிக்கின்றனர்' என, விமர்சித்து இருந்தார்.
சிங்களரும் தமிழரும் ஒன்றே இலங்கை சிங்கள மக்களின் மரபணு கூறுகள் வரலாறு May be a doodle of text that says "சிங்கள மக்களின் மரபணு வரலாறு GENE GENETICHISTORYOFTHESINHIALESE GENETICHISTORYOF TIC HISTORY OF SINHALESE का Z ጣ த ர ma 斗 ಇ यी 99 தாம் கி எ" Rajasekar Pandurangan : சிங்களரும் தமிழரும் ஒன்றே இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு: புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன? இலங்கைத் தீவானது பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் இனங்களின் சங்கமமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த அழகிய தீவு, வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிங்கள மக்கள் ஆவர். இவர்களின் தோற்றம், வரலாறு மற்றும் இவர்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் சிங்களவர்களின் தோற்றத்தை வட இந்தியாவுடன் இணைக்கின்றன. அதேவேளையில், புவியியல் ரீதியாக அவர்கள் தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இந்த இரண்டு கருத்துக்களில் எது சரியானது? அல்லது இரண்டுமே உண்மையானதா?