tamil.oneindia.com -Shyamsundar : மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் பாஜகவில் இருந்துதான் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தற்போது முதல்வராக உள்ள சிவசேனாவின் ஷிண்டே முதல்வராக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
மகாயுதி கூட்டணியில், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அகியோர் போட்டியில் உள்ளனர்.
இதில் ஏக்நாத் ஷிண்டே தற்போது முதல்வராக உள்ளார். பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார் என்கிறார்கள். ஆனால் பாஜக கிட்டத்தட்ட தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது.