என்டிடிவி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்ட ஒருநாள் தடை உத்தரவை
மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. பதான்கோட் விமானப் படைத்
தாக்குதலின்போது இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட பாதுகாப்பு உத்திகளை,
விதிகளை மீறி ஒளிபரப்பியதாக கூறி என்டிடிவியின் ஹிந்தி செய்தி சேனலுக்கு
வரும் 9-ஆம் தேதி ஒருநாள் மட்டும் மத்திய அரசு தடை விதித்திருந்தது. இது
பல்வேறு தரப்பினர் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 9ம் தேதி
ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி என்டிடிவி நிறுவனம் உச்ச
நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளது. மனுவில், இந்த மாதிரியான தடை
முறையற்றது என்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை
அமைச்சகம் என்.டி.டி.வி மீதான தடை உத்தரவை தற்காலிகமாக
நிறுத்திவைத்துள்ளது.thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக