
ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையை குடந்தை பாலு என்பவர் எழுதியிருக்கிறார். அதில் தனது பள்ளிப் படிப்பை ‘லூத்தரன் மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும்’ தனது பட்டப் படிப்பை வேலூர் ஊரிஸ் கல்லூரியிலும், சென்னை தாம்பரத்திலுள்ள கிறிஸ்துவர் கல்லூரியிலும் பயின்று, இந்து தத்துவங்களின்மேல் அளவு கடந்த ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார் ராதாகிருஷண்ன்.
(‘ஆரம்பத்தில் கிருத்துவ மிஷனரிகள், பார்ப்பனர்களை மதம் மாற்றி விட்டால், அவர்களைப் பார்த்து மற்ற ஜாதியினரும் கிறித்துவத்திற்கு வந்துவிடுவார்கள் என்று தனது கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களுக்கே முக்கியத்துவம் தந்தார்கள். ஆனால் பார்ப்பனர்கள் மிஷனரிகளை ஏமாற்றி விட்டார்கள்’ என்பார் டாக்டர் அம்பேத்கர்.)
இந்தியாவின் மிகப் பெரிய படிப்பாளியான
டாக்டர் அம்பேத்கர், இந்து வேதங்களை, இதிகாசங்களை, புராணங்களை, மனு
தர்மத்தை அம்பலப்படுத்தி அது பார்ப்பன மேன்மையும் நாலு வர்ணமும் ஜாதி
வெறியும் கொண்டது என்று உலகெங்கும் பிரச்சாரம் செய்து அம்பலப்படுத்திக்
கொண்டிருந்த அதே நாட்களில்,