சனி, 9 மார்ச், 2013

கலைஞருடன் நடிகை குஷ்பு -சுந்தர் சி. சந்திப்பு!

நடிகை குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் சி இன்று (09.03.2013) காலை திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

மகளிர் தின விழாவில் தென்னை மரத்தில் ஏறி மாணவிகள் சாதனை

நாகர்கோவில்: உலக மகளிர் தினத்தையொட்டி நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியில் உள்ள தனியார் இன்ஸ்டியூட் சார்பில், உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவின் ஒரு கட்டமாக பெண்கள் தென்னை மரம் ஏறும் சாகச நிகழ்ச்சி நடந்தது. 40 பேர் அடுத்தடுத்து சுமார் 50 அடி உயரம் உள்ள தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களை பறித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். தென்னை மரம் ஏற பயன்படும் கருவி மூலம் மாணவிகள் வேக, வேகமாக மரத்தில் ஏறியது அனைவரையும் ஆச்சரிய பட வைத்தது. 4 நிமிடத்தில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தனர்.dinakaran.com

நடிகைகளுக்கு தாராளமாக செலவழிச்சோம்: பைன் பியூச்சர் இயக்குனர்கள் வாக்குமூலம்

கோவை: பணம் அதிகளவில் சேர்ந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் இஷ்டத்துக்கு சொத்துக்களை வாங்கி குவித்து செலவழித்ததாக "பைன் பியூச்சர்' இயக்குனர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.கோவை, பீளமேட்டில் "பைன் பியூச்சர்' எனும் இணையதள நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 10 ஆயிரம் வழங்கப்படும், ஓராண்டின் இறுதியில் முதலீடு செய்த பணம் திருப்பித் தரப்படும் என, பலவிதமான அறிவிப்புகளை வெளியிட்டது. இதை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 800 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தனர்.திடீரென இயக்குனர்கள் இருவரும் தலைமறைவானார்கள். தலைமறைவானவர்களை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை வளசரவாக்கத்தில் கைது செய்தனர். இயக்குனர்கள் செந்தில்குமார், விவேக் மற்றும் அவரது சகோதரர் நித்தியானந்தம் ஆகியோரை கோவை "டான்பிட்' கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஒன்பது நாள் "கஸ்டடி' எடுத்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.போலீஸ் வாக்குமூலத்தில் இயக்குனர்கள் இருவரும் கூறியதாவது:
நாங்கள் இரண்டு பேரும் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்தோம். கான்பூரில் செயல்பட்ட "பைன் பியூச்சர் இந்தியா' நிறுவனத்தின் இயக்குனர்கள் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த 140 கோடி பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. அதே போல் இங்கும் ஒரு நிறுவனத்தை துவக்க நினைத்து, 2009ம் ஆண்டு "பைன் பியூச்சர்' பெயரில் இணையதள நிதி நிறுவனத்தை துவக்கினோம்.  என்ஜாய் பண்ணுங்க. கருத்தெல்லாம் சொல்லி என்னத்துக்கு ஆவ போவுது.

கள் என்பது போதைப் பொருள் அல்ல! 1 கோடி ரூபாய் பரிசு "வாத - விவாதம்

கோவை: கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, கோவையில் நேற்று நடக்கவிருந்த, 1 கோடி ரூபாய் பரிசுக்கான, "வாத - விவாதம்' ரத்து செய்யப்பட்டது. கள் ஆதரவு இயக்கத்தினர் காத்திருந்தும், குமரி அனந்தன் அதில் பங்கேற்கவில்லை."கள் இறக்க அனுமதிக்க வேண்டும்' என வலியுறுத்தி, "தமிழ்நாடு கள் இயக்கம்' பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. "கள் என்பது போதைப் பொருள் அல்ல; உணவு தான்' என, கள் இயக்கத்தினர் கூறி வருகின்றனர். ஆனால், "இந்த கோரிக்கையில் நியாயம் இல்லை; கள் என்பது ஒரு போதைப் பொருள் தான்' என, காங்., மூத்த தலைவரான குமரி அனந்தன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக, நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வந்தது. இவ்விஷயத்தில் பொது மேடையில், விவாதம் நடத்த, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, குமரி அனந்தனுக்கு அழைப்பு விடுத்தார். கோவை செஞ்சிலுவை சங்க கட்டடத்தில், இந்நிகழ்ச்சியை நடத்த, கள் இயக்கம், நேற்று ஏற்பாடு செய்திருந்தது. "கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கையில் நியாயமே இல்லை என, குமரி அனந்தன் நிரூபித்துவிட்டால், கள்ளுக்கு ஆதரவான போராட்டம் வாபஸ் பெறப்படும்; 1 கோடி ரூபாய் பரிசும் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விவாதத்தில் குமரி அனந்தன் பங்கேற்காததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. விவாதத்துக்கு காத்திருந்த, கள் இயக்கத்தினர், ஏமாற்றம் அடைந்தனர்.

தோட்டா தரணி: சுதாகரன் திருமணத்துக்கு இலவசமாக மேடை அமைத்து கொடுத்தேன்


பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு, மேடை வாசல் அலங்காரத்தை இலவசமாக செய்து கொடுத்தேன்,'' என, சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், சாட்சிம் அளித்தார்.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், ஜெயலலிதா தரப்பில், சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி நேற்று சாட்சியம் அளித்தார். அவர் கூறியதாவது:கடந்த, 40 ஆண்டுகளாக சினிமா துறையில் ஆர்ட் டைரக்டராக உள்ளேன். 1995ல் நடந்த சுதாகரன் திருமணத்துக்கு, திருமண மேடை, வாசல் அலங்காரம் செய்தேன்.என் குழந்தை பருவத்திலிருந்தே, நடிகர் சிவாஜிகணேசனை தெரியும். அ.தி.மு.க., வை சேர்ந்த காஞ்சி பன்னீர் செல்வம், என்னை சந்தித்து, திருமண மேடை, வாசல் அலங்காரம் செய்யும்படி கேட்டார். என் உதவியாளர் ரமேஷிடம் கூறி, முக்கிய பணிகளை செய்து கொடுத்தேன். இதை, வருமான வரித்துறை அதிகாரிகளிடமும் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளேன்.மேடை, வாசல் அலங்கார வேலைக்காக, பணம் எதுவும் வாங்கவில்லை; திருமணத்துக்காக, இது போன்ற வேலைகளை செய்யும்போது, பணம் வாங்க மாட்டேன்.
அடடா இந்த ஆள் ரொம்ப நல்லவன்டா ..திருமணத்துக்காக, இது போன்ற வேலைகளை செய்யும்போது, .. இது எனக்கு தெரியாம போச்சே... இது தெரிஞ்சிருந்தா என் தங்கச்சி கல்யாணத்துக்கு இவருகிட்டே கேட்டிருப்பேன்...

வெள்ளி, 8 மார்ச், 2013

களப்பிரர்கள் வரலாறு மறைந்து போய்க் கிடக்கிறது

[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 09.09.2012 நாளிதழில் வெளிவந்த கட்டுரை]
உலகத் தமிழர்களுக்குத் திருக்குறளைக் கொடுத்தவர்கள். சீவக சிந்தாமணி, முதுமொழிக் காஞ்சியைக் கொடுத்தவர்கள். கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி அந்தாதி என்று எத்தனையோ காப்பியங்களைத் தந்தவர்கள். நாலாடியாரும் இவர்கள் காலத்தில் வந்தது தான். காரைக்கால் அம்மையாரின் நூல்களும், இவர்களின் காலத்து முதன்மை நூல்கள். முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இவர்கள் காலத்தில் வளர்ந்தவைதான். 
தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகளைத் தமிழ்க் கவிதைகளுக்கு கொடுத்துச் சென்றவர்கள். அதையும் தாண்டி ஒன்று உள்ளது. இப்போது நாம் எழுதுகிறோமே தமிழ் எழுத்துகள், இவை எல்லாம் சிந்துவெளி பாளி எழுத்துகளாக இருந்தவை. அவற்றை வட்ட எழுத்துகளாக மாற்றியதும் இவர்கள்தாம்.
அப்படிப்பட்ட மனிதர்களின் வரலாறு மறைந்து போய்க் கிடக்கிறது. தமிழர்களின் நினைவுச் சுவடுகளில் இருந்து அந்த மனிதர்கள், ஒட்டு மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர். வேதனையான ஆவணங்கள் கோவணங்களைக் கட்டி அழுகின்றன. தயவுசெய்து படியுங்கள். உண்மை புரியும் சோழர்களுக்கு புகழாரங்கள்
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள். இவர்களைத் தெரியும்தானே. அசைந்தால் அங்கே ஒன்று. இசைந்தால் இங்கே ஒன்று என்று தமிழகம் முழுமையும் கோயில்களைக் கட்டி அழகு பார்த்தவர்கள். இதில் கடைசியாக வந்த சோழர்களுக்கு மட்டும் பெரிய பெரிய புகழாரங்கள். ஆர்ப்பாட்டமான சுவர் ஓவியங்கள். உலகத்தின் உச்சிக்கே அவர்களை ஏற்றியும் வைத்து இருக்கிறார்கள்.
ஆனால், பல்லவர்களைப் பற்றி அதிகம் இருக்காது. சாளுக்கிய மன்னன் புலிகேசியை நீயா நானா என்று பதம் பார்த்தவர்கள் இந்தப் பல்லவர்கள். வாதாபியை பாதாம் பருப்பாக வறுத்து எடுத்தவர்கள். பல்லவர்களைப் போல, களப்பிரர்களைப் பற்றியும் தமிழக வரலாற்றில் அதிகம் இருக்காது. உண்மையில் எல்லாருக்கும் சம நீதி வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

30 லட்சம் விவகாரம் : ‘கூடங்குளம்’ உதயகுமார் விளக்கம்

 கூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் குமார். இவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதனால் குமார் மீது பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இவரது மனைவி அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து ஆல்லைன் மூலம் 29 லட்சத்து 92 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் வந்துள்ளது.அணுசக்திக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்பவரின் மனைவியின் கணக்கிற்கு இவ்வளவு பணம் ஒரே நேரத்தில் வந்ததால், அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து வங்கியின் அதிகாரிகள், அம்பிகா மற்றும் அவரது கணவர் குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிய ஆனந்த் பற்றியும், எதற்காக அதிக அளவு பணத்தை மொத்தமாக அனுப்பினார்? என்றும் விசாரணை மேற்கொண்டனர்.இது குறித்து வருமான வரித்துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையமும் விசாரணையில் இறங்கியது. அம்பிகாவிற்கு லண்டனில் இருந்து வந்த பணத்தை, அவருக்கு பட்டுவாடா செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.இதுதொடர்பாக குமார் கூறும்போது, “எனது மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியது எனது நண்பர் ஆனந்த். குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறேன்.ஆகையால் நிலம் வாங்குவதற்காக ஆனந்த் எனது மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினார். அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கும், இந்த பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது தொழிலை முடக்கி என்னை பழி வாங்குவதற்காக போலீசார் வதந்தியை பரப்பியுள்ளனர் என்றார். நம்பிட்டோம் நம்பிட்டோம் நல்லாவே நம்பிட்டோம்   nakkheeran.in

சுப்ரமணியம் சுவாமி இன்று வாஷிங்டனில்! இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி ஆலோசனை!!

இது கடந்த ஆண்டு ஜூலையில் எடுக்கப்பட்ட போட்டோஐ.நா. மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள தீர்மானம் இன்னமும் முழுமை பெறவில்லை என்றே தெரிகிறது. இந்த நேரத்தில், வாஷிங்டன் சென்று இறங்கியுள்ளார், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி. கடந்த வாரம் கொழும்பு சென்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்த சுவாமி, நேற்று முன்தினம் மாலை, அமெரிக்கா நியூயார்க் ஜே.எஃப்.கே. விமான நிலையத்தில் போய் இறங்கினார். அவருக்கு நெருக்கமான இருவர், அவரை வரவேற்க வந்திருந்தனர். மறுநாள் காலை வாஷிங்டன் வந்தடைந்த சுவாமிக்கு, அமெரிக்க நிர்வாகத்தில் இரு முக்கிய அதிகாரிகளை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது. சுப்ரமணியம் சுவாமியின் அமெரிக்க பயணம் தொடர்பாக விறுவிறுப்பு.காமுக்கு கிடைத்த தகவல்கள்: இது கடந்த ஆண்டு ஜூலையில் எடுக்கப்பட்ட போட்டோ

கிராம மோதல் கதையில் Bindu Madhavi

இரண்டு கிராமங்களின் மோதல் கதையாக உருவாகிறது ‘தேசிங்கு ராஜா‘. இப்படம் பற்றி இயக்குனர் எழில் கூறியதாவது: ‘மனம் கொத்திப் பறவை‘ படத்துக்கு பிறகு இயக்கும் படம் ‘தேசிங்கு ராஜா‘. கிராமங்களுக்கு இடையே கலவரம் என்பது அந்த காலந்தொட்டு நடந்து வருகிறது. சமீபத்தில்கூட இதுபோன்ற பயங்கரம் நடந்தது. இப்படத்தின் கதையை பொறுத்தவரை காதல் மையப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு கிராமங்களுக்கு இடையே இருக்கும் கோபம், பகையால் இளம் ஜோடிகளின் காதல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கூறுகிறது படம். அத்துடன் குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவையும் சம விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. விமல் ஹீரோ. பிந்து மாதவி ஹீரோயின். சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவி மரியா, நரேன் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு. டி.இமான் இசை. மதன் வழங்க உமா மகேஸ்வரி தயாரிப்பு. கீவளூர், திட்டச்சேரி, கயத்தார், காரைக்கால், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஹியூகோ சாவேஸ்: ஒரு சகாப்தத்தின் முடிவு

1999 தொடங்கி வெனிசூலாவின் அதிபராக நீடித்துவரும் ஹியூகோ சாவேஸ் (ஜூலை 28, 1954-மார்ச் 5, 2013) இன்று அதிகாலை மரணமடைந்தார். தலைநகரம் காரகாஸில் நடைபெறவிருக்கும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள்  கலந்துகொள்வார்கள் என்று வெனிசூலா எதிர்பார்க்கிறது. அவர்களில் பலர் சாவேஸின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் பயன் பெற்றவர்கள். சாவேஸின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி வீதிகளில் இந்த நிமிடம் இவர்கள் கதறியழுவதை டிவி காமிராக்கள் காண்பித்துக்கொண்டிருக்கின்றன.
கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்குப் பல முறை மரணமடைந்துவிட்ட தனது 86 வயது அரசியல் ஆசானை சாவேஸ் முந்திகொண்டுவிட்டார்.  2005ல் கிரான்மாவுக்கு அளித்த பேட்டியொன்றில்  ’ஃபிடல் எனக்குத் தந்தையும் தோழரும் ஆவார்.’  என்று சாவேஸ் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக அரசியல் மேடையில் இரட்டையர்கள் போல் இருவரும் கம்பீரமாக வலம் வந்ததை மகிழ்ச்சியுடனும் கலக்கத்துடனும் தரிசித்தவர்கள் ஏராளம்.
ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் ஹியூகோ சாவேஸுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. க்யூபாவில் நிலவுவது மக்கள் விரோத அரசு, எப்பாடுபட்டாவது அதைத் தூக்கியெறிந்தே தீரவேண்டும் என்று காஸ்ட்ரோ முடிவு செய்தார். அதே முடிவுக்குத்தான் வெனிசூலாவில் சாவேஸும் வந்து சேர்ந்தார். காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் ஆயுதப் பேராட்டத்தைக் கையில் எடுத்தார். இருவரும் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பிறகு இருவருமே தங்கள் தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டனர்.

நான் ஹரியானாவின் மகாராஜா.பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சரா, ரவுடியா ?

பூபிந்தர் சிங் ஹூடாமாருதி நிர்வாகத்தாலும் மாநில அரசாலும் பழிவாங்கப்படும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்த ஹரியானா முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா அவர்களை ஒரு ரவுடியை போல மிரட்டி திட்டியிருக்கிறார். 2,500 தொழிலாளர்கள் வேலை நீக்கத்தையும் 150 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதையும் எதிர்த்து நடத்தப்படும் அவர்களது போராட்டத்தை கைவிடுமாறு மிரட்டியிருக்கிறார்.
“நான் ஹரியானாவின் மகாராஜா. என் ஏரியாவிலேயே பிரச்சனை பண்ணுவதற்கு உங்களுக்கு என்ன தைரியம்!” என்று முழங்கினாராம் ஹூடா.
மானேசர் தொழிலாளர்கள்
சென்ற ஆண்டு ஜூலை 18 அன்று முதலாளிகளின் அடக்குமுறைகளின் விளைவாக மாருதி மானேசர் தொழிற்சாலைக்குள் மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து நிர்வாகம் கொடுத்த பட்டியலின் அடிப்படையில் 150 தொழிலாளர்களை ஹரியானா போலீஸ் கைது செய்து பொய் வழக்குகளை சுமத்தியது. 546 நிரந்தர தொழிலாளர்களையும் சுமார் 2,000 ஒப்பந்த தொழிலாளர்களையும் மாருதி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது.
மாருதி மானேசர் தொழிற்சாலையில் காலை 5 மணிக்கு புறப்பட்டு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் 7 மணி முதல் 8 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். இடையில் டீ குடிப்பதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் சேர்த்து 7 நிமிடங்கள் இடைவேளையும், 0.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கான்டீனுக்குப் போய் சாப்பிட்டு வருவதற்கு அரை மணி நேர உணவு இடைவேளையும் வழங்கப்படும். ஒரு நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தாலும் அரை நாள் சம்பளம் வெட்டப்படும். பக்கத்து தொழிலாளர்களுடன் பேசக் கூடாது. குற்றம் குறைகளை எடுத்து சொல்லக் கூடாது.

டெல்லியில் மீண்டும் ஓடும் ஆட்டோவில் 3 பேரால் மாணவி பாலியல் பலாத்காரம்

டெல்லி புறநகர்ப்பகுதியான காசியாபாத்தில்,  ஷேர் ஆட்டோவில் பயணித்த மாணவி ஒருவரை, அந்த ஆட்டோ டிரைவர் மற்றும் பயணித்த 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் நிற்காமல் சென்ற ஆட்டோ, 6 போலீஸ் செக் போஸ்ட்களை தாண்டியுள்ளது. ஆனால் எங்குமே போலீசார் அந்த ஆட்டோவை சோதிக்க வில்லை. தன்னை காப்பாற்றும்படி கதறிய மாணவியின் குரலும் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் மாணவியை ரோட்டோர தாபா ஒன்றில் இறக்கி விட்டு சென்றனர். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.nakkheeran.in

பாலக்காட்டில் 2,825 எய்ட்ஸ் நோயாளிகள்

கேரள மாநில எய்ட்ஸ் நோயாளிகள் குறித்து, எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு, கடந்தாண்டு ஆய்வு நடத்தியது. இதில், கேரள மாநில பாலக்காடு மாவட்டத்தில் மட்டும், 2,825 நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், ஒவ்வொரு ஆண்டும், 2,200 பேர் புதிதாக அந்நோய்க்கு ஆளாவதும் தெரிய வந்தது.2010ம் ஆண்டு, எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி, மாநிலம் முழுவதும், 252 பேர் இறந்துள்ளனர். அதில், 26 பேர் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, 25 முதல், 49 வரை வயது வரை உள்ளவர்களுக்கு தான், நோய் அதிகளவில் தாக்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. பாலக்காடு மாவட்டத்திற்கு அடுத்த இடத்தில், திருச்சூர் மாவட்டம் உள்ளது.

கூடங்குளத்தில் கவுன்சிலர் மனைவிக்கு 30 லட்சம் வந்தது எப்படி?

ரகசிய விசாரணை கூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் தவசி. இவர் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் இவரது மனைவி அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.29 லட்சத்து 92 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் வந்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தங்களது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்த தகவல் வருமான வரித்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம், பண பட்டுவாடாவிற்கு தடைவிதித்தது. அம்பிகாவுக்கு வந்தது போல் கூடங்குளம் பகுதியை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து வெளிநாட்டு பண பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது  nakkheeran.in

லஞ்சம் 500 ரூபாய்: பிறந்த குழந்தையை தந்தைக்கே காட்டாமல் அலைக்கழித்த எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை

லஞ்சம் தர மறுத்ததால், பிறந்த குழந்தையை, அதன் தந்தைக்கே காட்டாமல் அலைக்கழித்த, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை பணியாளர்களின் அடாவடி செயல், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, கிண்டியை அடுத்த, நடுவங்கரையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25; ஆட்டோ டிரைவரான இவர், தன் மனைவி கன்னியம்மாளை, 21, பிரசவத்திற்காக, நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தார். மதியம், 12:30 மணியளவில், கன்னியம்மாளுக்கு, சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்த, கன்னியம்மாளின் தாய், பேர குழந்தையை பார்க்கும் ஆவலுடன், பிரசவ வார்டு நுழைவாயிலுக்கு சென்றுள்ளார். குழந்தையை காட்ட வேண்டுமென்றால், 500 ரூபாய் தர வேண்டும் என, மருத்துவமனை பணியாளர்கள் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அவர், பேர குழந்தையை பார்க்க முடியாத மனவருத்தத்துடன், வீடு திரும்பி உள்ளார். மனைவியை பிரசவ வார்டில் அனுமதித்ததில் இருந்து, ஏற்கனவே, 300 ரூபாய் வரை, லஞ்சம் கொடுத்த மணிகண்டன், "மேற்கொண்டு தர என்னிடம் பணம் இல்லை; என் குழந்தையை எனக்கு காட்டுங்கள்' என, கேட்டுள்ளார்.

வியாழன், 7 மார்ச், 2013

மணிரத்னம் இயக்கும் லஜ்ஜோ

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், பலவித நெருக்கடிகளையும் மணிரத்னத்திற்கு ஏற்படுத்திவிட்டது. வழக்கமாக தனது ஒவ்வொரு படத்திற்கும் அதிக இடைவெளி விட்டு பொறுமையாக அடுத்த படைப்பை துவங்கும் மணிரத்னம், கடல் படம் ரிலீஸான ஒரு மாதத்திற்குள் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன் இந்தி நடிகர் ஆமிர்கானை வைத்து இயக்கவிருந்த ‘லஜ்ஜோ’ கதையை கையிலெடுத்துக்கொண்டு மும்பை பறந்திருக்கிறாராம் மணிரத்னம். லஜ்ஜோ திரைப்படத்தின் கதை காதலை மையமாகக் கொண்டது மட்டுமல்லாமல், இந்திய நாடு சுதந்திரமடைவதற்கு முந்தைய காலத்தை கதைக்களமாகக் கொண்டது. அனுராக் கஷ்யப்புடன் இணைந்து படத்தின் அடுத்தகட்ட பணிகளை துவங்கிய போது சில காரணங்களால் இத்திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. >பிரபல உருது எழுத்தாளர் இஸ்மட் சுகாதியின் வாழ்க்கையை அடிபப்டையாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டதால், அந்த கதைக்கான ரைட்ஸ் வாங்குவதில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இந்த கதை அப்போது கிடப்பில் போடப்பட்டதாம்.
 இத்தனை வருடங்களும் மற்ற படங்களில் கவனத்தை செலுத்தினாலும், இந்த கதை சம்மந்தமான பிரச்சனைகளில் இருந்த முடிச்சுகளையும் ஒவ்வொன்றாக அவிழ்த்துக்கொண்டிருந்த மணிரத்னம், இப்போது லஜ்ஜோ திரைப்படத்தை இயக்க தயாராக இருக்கிறாராம். இவ்வளவு வேகமாக மணிரத்னம் செயல்படுவது, அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரமணரை தவிர்த்த மனோதத்துவ மேதை Carl Gustav Jung


ஜெமோ,
ரிச்சர்ட் டாக்கின்ஸும் லாரன்ஸ் கிராசும் நடத்தும் இந்த உரையாடல் நன்றாக இருந்தது.
https://www.youtube.com/watch?v=CXGyesfHzew
சூனியத்தில் இருந்து அனைத்தும் தோன்றியது என்று நவீன இயற்பியல் சொல்வதை ஒரு 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே கிழக்கின் ஞானிகள் கண்டு கொண்டது மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் விஷயமாகப்படுகிறது.
இவர்கள் இருவரும் ‘Nothingness’ ஒரு தத்துவ மதிப்பீடு அல்ல அது ஒரு இயற்பியல் ரியாலிட்டி என்று நிறுவுவதில் மிகவும் முனைப்பாக இருகிறார்கள். இவர்கள் தத்துவம் என்றால் தர்க்கம் சாஸ்திரம் மட்டுமே என்றும், மதம் என்றால் கிருஸ்துவ இறையியல் மட்டுமே என்று எடுத்து கொள்கிறார்கள். அதனால் இயற்பியல் ரியாலிட்டியில் இறையியலுக்கும், தத்துவதிற்கும் எந்தவிதமான வேலையும் இல்லை என்ற கருத்தை உருவாக்குவதில் ஒரு விதமா இன்பத்தை அடைகிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.
நான் ஒரு இயற்பியல் காதலன், ஆனால் இந்த உலகம் வெறும் இயற்பியல் ரியாலிட்டி மட்டுமே என்றால் அது தன்னுடைய சாராம்சம் அனைத்தையும் இழந்து விடும் என்று நினைக்கிறன்.
மனோதத்துவ மேதையான Carl Gustav Jung இந்தியாவிற்கு இந்திய மரபையும், இந்திய மறைவியல் மற்றும் மனோவியல் குறியீடுகளையும் ஆராய வந்து விட்டு ரமணரை சந்திக்காமல் சென்றது [பலர் சந்திக்க சொல்லியும் அவர் ரமணரை தவிர்த்து விட்டார்] எனக்கு நியாபகம் வருகிறது.

டெல்லியில் தினமும் 4 பெண்கள் பலாத்காரம்

புதுடெல்லி: டெல்லியில் தினமும் 4 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச் சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, இது பற்றி அவர் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:டெல்லியில் 2011ம் ஆண்டு 572 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு (2012) மொத்தம் 706 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை மொத்தம் 181 பலாத்கார வழக்குகள்  போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் டெல்லியில் தினமும் 4 பெண்கள் பலாத் காரம் செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு, பலாத்கார சம்பவங்கள் 2 மடங்காக அதிகரித்துள்ளன.  பாலியல் பலாத்கார சம்பவங்களை கட்டுப்படுத்த  போலீசார்  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு பலாத்கார சம்பவங்கள் டெல்லியில் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.ஒருபக்கம் விழிப்புணர்வு பிரசாரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் முழுமையாக ஒடுக்கப்பட வில்லை.

, தே.மு.தி.க ம.தி.மு.க.,வைப் போன்று அல்லல்பட வேண்டியது தான்.


தமிழக அரசியலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, அன்று வைகோவின், ம.தி.மு.க.,வையும், மூப்பனார் உருவாக்கிய, த.மா.கா.,வையும் மக்கள் எதிர்பார்த்து ஏமாந்தனர்.அதன் பின், 2005 கடைசியில், கட்சியைத் துவக்கிய விஜயகாந்த், "மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி' என, கட்சி ஆரம்பித்து, அன்று, 8.38 சதவீத ஓட்டுகளை பெற்றார்.கடைசியாக, 2009 லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 10 சதவீத ஓட்டுக்களைப் பெற்றார். அதுவரை ஒளிந்து பயணம் செய்த அவரின் கப்பல், 2011ல் அ.தி.மு.க.,வுடன் இணைந்து பயணித்ததால், 29 இடங்களில் வெற்றி கிட்டி, எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். ஆனால், அவரின் தனித்துவத்தை இழந்து விட்டார்.எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு, சிறப்பாக பணியாற்றுவார் என, எதிர்பார்த்தவர்களுக்கு, ஏமாற்றத்தைத் தந்தது மட்டும் அல்லாமல், தன் குண நலத்தால் நடுநிலை வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்து வரும் சூழலில், தற்போது இருக்கிறார்.வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து செயல்படப் போவதாக, ஊடகச் செய்திகள் வெளிவருவது, தே.மு.தி.க.,வின் வளர்ச்சிக்கு நிச்சயம் வழி வகுக்காது.ஏனெனில், சென்ற தேர்தலின் போது, தி.மு.க.,வின், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னிறுத்தித் தான் விஜயகாந்த் பிரசாரம் செய்து வெற்றி பெற்றார். இப்போது தன் பேச்சை அவர் மாற்றி பேசினால், யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.தி.மு.க., தனக்கு ஆதரவாக, ஒரு ராஜ்ய சபா எம்.பி., பதவியை, தன் மனைவிக்கோ, மைத்துனருக்கோ கிடைக்க ஆதரவு தரும் என, நினைத்து, தி.மு.க.,வின் பக்கம் அணி மாறினால் பயன் தராது.ஏனெனில், தற்போது ஐந்தாவது எம்.எல்.ஏ.,யாக, சுரேஷ்குமார் அணி மாறிவிட்டார். விரைவில் இன்னும் ஒரு சிலர் அணி மாறி விட்டால், தி.மு.க.,வை விட, தே.மு.தி.க., பலம் குன்றி போகப் போவதும், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை, அவர் இழக்கப் போகும் நாளும் வெகு தொலைவில் இல்லை.எப்போதுமே, ம.தி.மு.க.,வைப் போன்று, கடைசி வரை இவர் கட்சி அல்லல்பட வேண்டியது தான். dinamalar.com அ.குணா, சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்:

புதன், 6 மார்ச், 2013

Neha Ramu பிரித்தானியாவில் IQ சாதனை!

Neha Ramu, daughter of an Indian doctor couple, achieved a score of 162 on a Mensa IQ test - the highest score possible for her age.
The score puts the tween in the top one per cent of brightest people in the UK and means she is more intelligent than physicist Hawking, Microsoft founder Bill Gates and scientist Albert Einstein, who are all thought to have an IQ of 160.
"Neha scored 162 on the Cattell IIIB test, putting her within the top one per cent of people in the country," a spokesman for British Mensa said.
பிரித்தானியாவில் நடைபெற்ற மென்சா நுண்ணறிவு தேர்வில் இந்தியாவைச் சேர்ந்த நேஹா எனும் இந்த சிறுமி 162 புள்ளிகளை பெற்று, பிரித்தானியாவிலுள்ள சிறந்த புத்திஜீவிகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த மாணவி விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இயற்பியல் வல்லுனரான ஸ்டீபன் ஹாவ்கிங் மற்றும் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்சை விடவும் இந்தச் சிறுமி திறமையானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் நுண்ணறிவு தேர்வில் 160 புள்ளிகளையே பெற்றுள்ளனர் ஆனால் இந்தசிறுமி 162 புள்ளிகளை பெற்றுள்ளார் அதே வேளை இந்த மாணவியின் பெற்றோர் மருந்துவர்களாகும் இந்தியாவில் பிறந்த நேஹா, தனது 7 வயதில், இந்தியாவில் இருந்து பிரித்தானியாவிற்குச் சென்றுள்ளார்.

வெனிசுவேலா அதிபர் சாவேஸ் மரணம்!

ஹியூகோ சாவேஸ்மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கியது.
வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ் தனது 58வது வயதில் செவ்வாய்க் கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.25 மணிக்கு தலைநகர் கேரகாஸில் உயிரிழந்தார்.  சாவேஸ் 1998ம் ஆண்டு முதல் தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் வெனிசுவேலாவின் அதிபராக 14 ஆண்டுகளாக பணியாற்றினார்.
சாவேஸின் இறுதி ஊர்வலம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும். துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ இடைக்கால அதிபராக பதவி வகிப்பார். அடுத்த 30 நாட்களில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும்.
முன்னாள் இராணுவ அதிகாரியான சாவேஸ் 1998ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு அதிபரானார்.  அன்று முதல் எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் 4வது இடத்தில் இருக்கும் வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை மக்கள் நலத்துக்கு பயன்படுத்தும் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தினார். 1998ல் புதிய அரசியல் சட்டத்தை ஏற்படுத்த வழி வகுத்தார். பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அதிக ராயல்டி வசூலித்து அதன் மூலம் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மூன்று வேளை சத்துணவு வழங்கும் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ வசதிகள், குடும்பத்துக்கு உழைக்கும் பெண்களுக்கு ஓய்வூதியம் போன்றவற்றை செயல்படுத்தினார். குழந்தை பேறின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் குழந்தைகளிடையே ஊட்டச் சத்துக் குறைவும் பெருமளவு குறைந்தன.

சினிமா துறைதான் பாலியல் வன்முறைகளை கற்றுத் தரும் ,,

த்ரிஷா: கருத்து காயத்ரிக்களின் அறச்சீற்றம்!"
த்ரிஷா டுவிட்டர்த்ரிஷாவைப் போன்ற நடிகைகளை வேட்டையாடி தமது காதலை ஏற்றே ஆக வேண்டும்’ என்பதுதான் தமிழ் சினிமா நாயகர்கள் நடிக்கும் படங்களின் கதை. இதே வேட்டையாடல்தான் டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திலும் இருக்கிறது. 
இந்த உலகின் சர்வரோக பிரச்சினைகளுக்கும் ரைட் ராயலாக தீர்வு சொல்லும் ஒரே உரிமை கருத்து கந்தசாமிகளுக்கு மட்டும்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. கருத்து காயத்ரிக்களுக்கும் அப்பேர்ப்பட்ட தன்னைத்தானே தத்துவஞானியாக நியமித்துக் கொள்ளும் ரைட் நிச்சயம் உண்டு. அதிலும் அந்த காயத்ரிக்கள் விஐபிகளாக இருந்தால் இன்னும் சிறப்பு.
பாலியல் வன்முறையால் டெல்லி மருத்துவ மாணவி கொல்லப்பட்டது குறித்து உதட்டுச் சாயம் தவிர்த்து வேறு எதற்கும் வாய்திறக்காதவர்களையும் பேசவைத்து அழகு பார்க்கின்றன ஊடகங்கள்! பரபரப்பிலும் கொஞ்சம் விஐபிகளை காக்டெய்லாக கலந்து விட்டால் செய்திக்கு செய்தி, கவர்ச்சிக்கு கவர்ச்சி. அந்த வகையில் 13.2.2013 தேதியிட்ட குமுதத்தில் த்ரிஷாவின் அதிரடி என்னும் செய்தி ஹீரோயின் வாய்ஸ் எனும் கொசுறு உட்தலைப்புடன் வெளியாகியிருக்கிறது.

ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்!

ஒரு சட்டை அல்லது ஜீன்ஸ் பேண்ட் வாங்கினால் அதே போன்று மற்றொன்று இலவசம் என அறிவிப்பு தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. அதன் மூலம் வியாபாரமும் அதிக அளவில் நடக்கிறது.குஜராத்தில் அது போன்ற வியாபார யுத்தியில் ஒரு கார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஒரு கார் வாங்கினால் அதே கம்பெனியின் மற்றொரு கார் இலவசம் என அறிவித்துள்ளது. “ரேபிட் சேடான்” கார் ஒன்று வாங்கினால் “பேபியா” கார் ஒன்று இலவசமாக வழங்கப்படும் என “ஸ்கோடா” கம்பெனி டீலர் உறுதி அளித்துள்ளார்.இது 5 ஆண்டுகள் அதாவது 2018 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார் விற்பனை மந்தமானதை தொடர்ந்து இது போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கார் கம்பெனிகள் வெளியிட்டுள்ளனர்.“வோல்ஸ் வாஜென்” நிறுவனம் அதிரடி சலுகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

கேரள நாட்டிளம் பெண்களுடனே‘

பூ‘, ‘களவாணி‘ போன்ற படங்களுக்கு இசை அமைத்ததுடன் ‘தேனீர் விடுதி‘ என்ற படத்தை தயாரித்து இயக்கிய எஸ்.எஸ்.குமரன் அடுத்து ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே‘ என்ற படத்தை எழுதி, இசை அமைத்து தயாரிப்பதுடன் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: மணந்தால் கேரளத்து பெண்ணை மணக்க வேண்டும் என்று எண்ணுகிறார் ஞான சம்பந்தம். அது முடியாமல் போக தமிழ் பெண்ணை மணக்கிறார். ஆனாலும் தனது பழக்க வழக்கங்களை கேரள கலாச்சாரப்படியே அமைத்துக் கொள்கிறார். மனைவி ரேணுகாவோ தமிழ் கலாச்சாரப்படி குடும்பம் நடத்துகிறார். இந்நிலையில் தனக்கு பிறக்கும் பிள்ளைக்கும் கேரளா கலாச்சாரத்தின் அருமை பெருமைகளை சொல்லி வளர்ப்பதுடன் கேரள பெண்ணையே மணக்க வேண்டும் என்று ஞானசம்பந்தன் வலியுறுத்துகிறார். மகனை தமிழ் கலாச்சாரப்படி வளர்க்க முயல்கிறார் ரேணுகா. இவர்களுக்குள் நடக்கும் போட்டா போட்டியை காமெடியாக சொல்கிறது கதை. அபி ஹீரோ. காயத்ரி, அபிராமி, தீட்சிதா ஹீரோயின். வசனம் கோபி. ஒளிப்பதிவு யுவராஜ். பாடல்கள் வைரமுத்து. இதன் ஷூட்டிங் ஒத்தப்பாலம், எர்ணாகுளம், தொடுபுழா, கொல்லம், ஆலப்புழா என 90 சதவீதம் கேரளாவில் நடந்துள்ளது. இவ்வாறு குமரன் கூறினார்.

கர்நாடக மடத்தை வாங்குகிறார் நித்யானந்தா! மக்கள் போர்க்கொடி

பெங்களூரு: கர்நாடகாவில், மகாலிங்கேஸ்வரர் மகா பீடத்துக்கு, நித்யானந்தாவை மடாதிபதியாக நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. கடைகளை அடைத்து, மக்கள் போராட்டம் நடத்தியதால், மடாதிபதி ராஜேந்திர சுவாமிகள் மடத்திலிருந்து வெளியேறினார்.
மகாலிங்கேஸ்வரர் மகா பீடம் என்ற சித்த சமஸ்தான மடம், 700 ஆண்டு பழமை வாய்ந்தது. 100 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை உடைய, இந்த மகா பீடத்தின், மடாதிபதியாக, தற்போது, ராஜேந்திர சுவாமிகள் உள்ளார். இவர், சமீபத்தில், பெங்களூருவில் உள்ள, நடிகை ரஞ்சிதா புகழ், நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு நித்யானந்தாவிற்கு சால்வை அணிவித்து, ஆசிவழங்கி கவுரவித்தார். அப்போது, மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மடாதிபதியாக, நித்யானந்தாவை நியமனம் செய்வது தொடர்பாக அவர், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், வரும், ஆகஸ்ட்டில், மகாலிங்கபுரத்தில் நடக்கவுள்ள, மகாலிங்கேஸ்வரர் விழாவின் போது, புதிய மடாதிபதி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது என, முடிவு செய்ததாகவும், செய்திகள் வெளியாகின. இதனால், மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மடாதிபதியாக, நித்யானந்தாவை நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜேந்திர சுவாமிகளின் முடிவுக்கு எதிராக, மடத்தின் பக்தர்களும், மகாலிங்கபுரம் பொதுமக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

America டில்லி மருத்துவ மாணவிக்கு, "சர்வதேச வீர மங்கை' விருது

டில்லியில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, உயிரிழந்த மருத்துவ மாணவியின் துணிச்சலை கவுரவிக்கும் வகையில், அவருக்கு, "சர்வதேச வீர மங்கை' விருது வழங்கப் போவதாக, அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
டில்லியில், கடந்த ஆண்டு, ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, வெறிக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம், டில்லி இளைஞர்களிடையே, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கான, தண்டனையை அதிகரிப்பதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ள, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் துணிச்சலை கவுர விக்கும் வகையில், அமெரிக்க அரசு, அவருக்கு, சர்வதேச வீரமங்கை விருதை வழங்கஉள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு, தன்னையே தியாகம் செய்த, இந்திய மாணவியின் துணிச்சல், வியக்கத் தக்கது. அவர், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, போலீசாரிடம், இரண்டு முறை வாக்குமூலம் அளித்தார். அப்போது, "இந்த வழக்கில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும். அதை பார்ப்பதற்காக, நான் உயிரோடு இருக்க வேண்டும்' என, கூறினார். சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த இந்த பெண், பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தை நடத்துவதற்கு, பெரும் உத்வேகமாக விளங்கினார்.

Rahul: காங்கிரஸ்காரங்களுக்கு பதவி ஆசை இல்லையாம்.

புதுடில்லி: ""பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா என, பலரும் என்னிடம் கேட்கின்றனர். இது, தவறான கேள்வி. பிரதமர் பதவி மீது, எனக்கு விருப்பம் இல்லை. உடனடியாக திருமணம் செய்வதிலும், எனக்கு ஆர்வம் இல்லை. திருமணம் செய்தால், குழந்தைகள் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும்,'' என, காங்., துணை தலைவர் ராகுல், பரபரப்பு தகவலை தெரிவித்தார்.லோக்சபா தேர்தலுக்கான, காங்., ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவும், கட்சியின் துணைத்தலைவராகவும், ராகுல், 42, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். "லோக்சபா தேர்தலில், காங்., பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்' என்றும், கூறி வந்தனர்.இந்நிலையில், காங்., எம்.பி.,க்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ராகுல் கூறியதாவது: கட்சியின் அனைத்து விவகாரங்களையும், மேலிடம் தான் முடிவு செய்யும் என்ற மனப்பான்மை, கட்சியினரிடம் உள்ளது. காங்., மேலிட கலாசாரம், 1970களில், இந்திரா காலத்திலிருந்தே உள்ளது. அவரைப் பற்றி, எனக்கு நன்கு தெரியும். அவர், பல்வேறு தரப்பினரின் தாக்குதலுக்கு ஆளானார். இதனால், கட்சி மேலிடத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். அவர் நிலையில் நான் இருந்தாலும், அப்படித் தான் செய்திருப்பேன். என்னை பொறுத்தவரை, கட்சி மேலிடம் என்ற அணுகுமுறைக்கு, முதலில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கட்சிக்காக, பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு, அதிகாரம் கொடுக்க வேண்டும். கட்சியின் அடிமட்டத்திலும், இடையிலும் உள்ள நிர்வாகிகளின் நலனுக்காக, குரல் கொடுக்க விரும்புகிறேன். நம் நாட்டில் உள்ள கட்சிகளை பொறுத்தவரை, பகுஜன் சமாஜ் கட்சிக்கு, ஒரு தலைவரும், சமாஜ்வாதிக்கு இரண்டு தலைவர்களும் உள்ளனர். பா.ஜ.,வுக்கு, ஐந்திலிருந்து ஆறு தலைவர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு, 15லிருந்து, 20 தலைவர்கள் உள்ளனர். என் விருப்பமெல்லாம், அனைத்து கட்சியிலும் உள்ள, எம்.பி.,க்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும், அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பதே.  
ரொம்ப நல்ல முடிவு , திருமணம் செய்தால் அடுத்து உனக்கு ஒருவன் பிறப்பான் , அவன்தான் அடுத்த பிரதமர் என்று எல்லோரும் அவன் பின்னால் போவதற்கு , நீங்கள் இப்படியே இருக்கலாம் , அடுத்த தலைமுறையாவது உங்கள் குடும்ப தொந்தரவு இல்லாமல் இருக்கட்டுமே ப்ளீஸ்

Hugo Chavez வெனிசுலா அதிபர் சவேஸ் காலமானார்

கார்கஸஸ்: புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹுவே சவேஸ் இன்று காலையில் காலமானார். தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார் சவேஸ் (58). புற்றுநோய் தாக்கியதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இதுவரை 4 முறை கியூபா சென்று சிகிச்சை பெற்றுவந்தார்.கடந்த ஆண்டு டிசம்பரில் கடைசியாக சிகிச்சைக்காக கியூபா சென்று பின்னர் நாடு திரும்பியநிலையில் கடந்த இரு நாட்களாக சவேசிற்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. வெனிசுலாவில் உள்ள ஈர்னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். சவேஸ் காலமானதை துணை அதிபர் நிக்கோலஸ் மௌர்டோவும் அந்நாட்டு டி.வி. வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். கடந்த 14ஆண்டுகளாக வெனிசுலா நாட்டை ஆண்டு வந்த சவேஸ் மறைவிற்கு தென்அமெரிக்க நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.புரட்சியாளரான சவேஸ் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ வீரராக வாழ்க்கையை துவக்கினார். ஐக்கிய சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார்.பின்னர் தனது திறமையால் வெனிசுலா அதிபராக கடந்த 1999-ம் ஆண்டு பொறுப்பேற்றார். சாகும் வரை அதிபராகவே சவேஸ் காலமானது அந்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது dinamalar.com

செவ்வாய், 5 மார்ச், 2013

நோர்வேயை விட்டு வெளியேறி வரும் வெளிநாட்டு பெற்றோர்கள்

நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் விரக்தியுற்றுள்ள வெளிநாட்டு வதிவிடவாளர்கள் குடும்பம் குடும்பமாகவும் பகுதி பகுதியாகவும் நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 முதல் 35 வருடங்களாக நோர்வேயில் வசித்து வந்தவர்கள் கூட தற்போது நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்களான ஆப்டன் போஸ்ட், என்.ஆர்.கே உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வெளியேறுபவர்கள் இந்தியா,இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை அண்டிச்செல்வதாகவும் கூறப்படுகிறது.
நோர்வேயில் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்கள் சிறுவர் நலன் பேணல் என்ற காரணத்தைக்காட்டி வெளிநாட்டு வதிவிட வாளர்களின் குழந்தைகளை கடத்தல் முறையில் திட்டமிட்ட வகையில் பெற்றோரிடமிருந்து பிரித்து செல்கின்றமையால் அங்கு வாழ்கின்ற வெளிநாட்டு பெற்றோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சிறந்த சாராய கம்பெனிகள் இந்தியாவுக்குள் Welcome

விஜய் மல்லையாசிதம்பரத்தின் கவலையை போக்க வந்த பெர்னோ ரிக்கா!"கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய நிதியமைச்சர் ப சிதம்பரம், ‘நாட்டின் பெட்ரோல் தேவை, தங்க மோகம், நிலக்கரி இறக்குமதி, ஏற்றுமதி குறைவு இவற்றால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ரூ 3.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக’ கவலை தெரிவித்தார். ‘இதை சமாளிக்க ஒரே வழி மேலும் மேலும் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதுதான்’ என்றும் ‘அந்த நோக்கத்தில் அன்னிய முதலீட்டாளர்களை கவர்வதற்கான திட்டங்களை செயல்படுத்தவிருப்பதாகவும்’ சொல்லியிருந்தார்.
நிதியமைச்சருக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி இப்போது வெளியாகியிருக்கிறது.
உலகின் இரண்டாவது பெரிய மதுபான நிறுவனமான பிரெஞ்ச் பன்னாட்டு நிறுவனம் பெர்னோ ரிக்கா, ‘இந்திய மதுபானங்கள் சந்தையில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனம்’ என்ற மகுடத்தை முடிசூடா மன்னரான விஜய் மல்லையாவிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது.

2 nd House உங்கள் வார்த்தைகள் எப்படி உங்கள் விதியை உருவாகுகிறது

 நாம்  மாறாதவரை எமது கர்மாவும் மாறாது நாம் மாறினால்தான் எமது கர்மாவும் மாறும்
 எமது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் எமது வாழ்க்கை என்ற   மாளிகையில் அடுக்கப்படும் செங்கற்களாகும்.
அந்த மாளிகை அழகான உறுதியான மகிழ்ச்சியான மாளிகையா என்பது நாம் சதா பேசும் சொற்களும் தான் தீர்மானிக்கின்றன.
அடிப்படையில் ஒன்பது கிரகங்கள் பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் நிலையை ஆதாரமாக  கொண்டு சோதிடகலை உருவாகி உள்ளது.
இது மட்டுமல்லாது கைரேகை சாஸ்திரம் கையில் உள்ள ரேகைகளை கொண்டு பலாபலன்களை கண்டு பிடிக்க உதவுகின்றது
உடலின் தன்மைகளையும் குறிப்பாக முகத்தின் அங்க குறியீடுகளையும் கொண்டு பலாபலன்களை அறிவது சாமுத்திரிக்கா லட்சணம் எனப்படுகிறது.
இன்னும் பலபல விதமான வகையிலான சோதிட முறைகள் உள்ளன. 
இவையெல்லாம் பலன்களை அறிய மட்டுமே உதவும் விஞ்ஞானமாகும்
ஆனால் நாம் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால் வெறுமே பலன்களை அறிவதற்கு மட்டுமே இந்த கலைகள் உருவாக வில்லை
நாம் விரும்பும் விளைவுகள எமது வாழ்வில் நாம் எப்படி பெறலாம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். முதலில் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டை பார்ப்போம். இதை பொதுவாக வாக்கு ஸ்தானம் என்பர் . எமது வாக்கு வல்லமை எப்படி உள்ளது ? மிகவும் அழகாக பேச தெரிந்தவர்களா? அல்லது வெறும் குண்டக்க மண்டக்க என்று குழப்பி அடிப்பவர்களா ?

2ஜி வழக்கில் ராசாவுக்கு பாஜக திடீர் ஆதரவு

ராசா கோரிக்கைப்படி 2ஜி வழக்கு தொடர்பாக விசாரணையை அவரிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.இதுதொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு உறுப்பினராக உள்ள பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் பி.சி. சாக்கோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.2ஜி ஊழல் வழக்கில் ராசா முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அவரை விசாரணைக்காக ஏற்கனவே அழைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தன்னையும் விசாரிக்குமாறு அவரே முன் விந்திருப்பதால், அவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சின்ஹா அவருடைய கடிதத்தில் கூறிப்பிட்டுள்ளார்.இவரை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரியும் ஆ.ராசாவின் கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.webdunia.com

மீண்டும் பாலுமகேந்திரா, மகேந்திரன்

தமிழ் சினிமாவின் இரு துருவ நட்சத்திரங்கள் பாலுமகேந்திராவும், மகேந்திரனும். துருவ நட்சத்திரங்களுக்கு உள்ள சிறப்பு, அவை எப்போதும் இடம்மாறுவதில்லை, மறைவதில்லை.பாலுமகேந்திரா தனது தள்ளாத வயதிலும் (அப்படிச் சொன்னா அவருக்கு கோபம் வரும்) ஒரு படத்தை குறைந்த முதலீட்டில் எடுத்து வருகிறார். இந்தப் படத்தை தயரிப்பவர் சசிகுமார்.மகேந்திரனும் சாசனம் படத்தோடு படம் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். தவறு... இந்த கமர்ஷியல் சினிமா உலகம் அவரை நிறுத்திவிட்டது. தற்போது பழைய உற்சாகத்துடன் புது புராஜெக்ட் ஒன்றை அவர் தொடங்கயிருக்கிறார். பிற விவரங்கள் விரைவில் அவராலேயே தெ‌ரிவிக்கப்படும்.இந்த இரு இயக்குனர்களின் படங்களுக்கும் தாலாட்டு சேர்த்தவர் இளையராஜ என் படத்துக்கு எப்போதும் இளையராஜாதான் என்று பாலுமகேந்திரா உறுதி செய்திருக்கிறார். மகேந்திரன்..?கூட்டணியில் மாற்றம் வரலாம் என்கிறார்கள் tamil.webdunia.com

நேர்மையும் செல்வமும் நல்ல சிந்தனையும் நிச்சயம் பலன் தரும்

கீதா பிரேம்குமார்
truth
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 30
சிலர் பத்து, பதினைந்து ஆண்டுகளாக நல்ல பெயருடன் சிறுதொழில் நடத்திக்கொண்டிருப்பார்கள். ஆரம்பித்துவிட்டு திணறுபவர்களும் இருப்பார்கள். பணமுடையால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு, தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் தங்கள் வாழ்வையே சிக்கலாக்கிக் கொண்டவர்களும் உள்ளனர். ஒரு சில செல்வந்தர்களுக்கும் சிறுதொழில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கான பொறுமை இருக்காது. வேறு சிலரைப் பயன்படுத்தி இவர்கள் தங்கள் கனவைப் பூர்த்தி செய்துகொள்வார்கள்.
சேகர் என்பவர், எலக்ரானிக்ஸ் துறையில் அனுபவம் வாய்ந்தவர். இவரது சிறுதொழில் நிறுவனம் சுமார் இருபது வருடங்களாக மார்க்கெட்டில் நிலைத்து வருகிறது. சுமார் இரண்டு கோடி வரை டர்ன்ஓவர் செய்துவந்தார். ஒரு கட்டத்தில், ஒரேயடியாக லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் தவறான நபர்களை தன் வியாபாரத்தில் இவர் இணைத்துக்கொண்டார். அவர்களோ இவருடைய பலவீனத்தை உணர்ந்து, பணப் பற்றாக்குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சிறிது சிறிதாக நிறுவனத்தின் அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர்.
சேகர் மன உளைச்சலுக்கு ஆளானார். தொழில் கைவிட்டுப்போவதை அவர் உணர்ந்த பொழுது காலம் கடந்துவிட்டது. இவரை நம்பி, நிறுவனத்துக்குக் கச்சாப்பொருட்களைக் கொடுத்த மற்ற நிறுவனங்கள் நெருக்க ஆரம்பித்தனர். மற்றொரு பக்கம் வங்கிகள் கடனுக்காக அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. தொழிலாளர்களுக்குச் சம்பள பாக்கி வேறு.

சூரிய சக்தியில் இயங்கும் "பம்ப்': டெல்டா விவசாயிகளுக்கு தர திட்டம்

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, சூரிய சக்தியில் இயங்கும், "பம்ப்'களை, தமிழக அரசு வழங்க உள்ளது. இதற்காக, 530, "சோலார் பி.வி., பம்ப்'களை கொள்முதல் செய்ய, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை, ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததாலும், காவிரியில் உரிய நீர் கிடைக்காததாலும், நிலத்தடி நீரை நம்பியே, தமிழக விவசாயிகள் உள்ளனர். ஆனால், தொடரும் மின்வெட்டால், பல மாவட்டங்களில், மின் மோட்டார்களை இயக்க முடியாததால், குடிநீர்த் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலவுகிறது. தமிழக அரசு மின்வெட்டை சீர்செய்ய, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, உடனடி நிவாரணமாக, சூரிய சக்தியில் இயங்கும், பம்ப்களை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, சோலார் பி.வி., பம்புகள் வழங்கப்பட உள்ளன.

அமெரிக்க வர்த்தக பள்ளியில் மோடி உரையாற்றுவது ரத்து

புதுடில்லி: "" அமெரிக்க வர்த்தக பள்ளியில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது, சிறிய விஷயம் தான். அதை, பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
அமெரிக்காவின், பிலடெல்பியாவில், புகழ் பெற்ற, "வர்டன் வர்த்தக பள்ளி' உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களிடையே, உரையாற்றுவது, பெருமைக்குரிய விஷயம். இங்குள்ள மாணவர்களிடையே, வீடியோ கான்பரன்சிங் மூலமாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வரும், 22 மற்றும் 23ம் தேதிகளில், உரை நிகழ்த்த, வர்த்தக பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், நரேந்திர மோடி உரையாற்றுவதற்கு, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நரேந்திர மோடி உரை நிகழ்த்தும் நிகழ்ச்சியை, அந்த கல்வி நிறுவனம் ரத்து செய்தது.

கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் லண்டன் புதுமைப்பெண்

லண்டன்: பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண், கணவர், காதலர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.லண்டனில், தனியார் நிறுவனம் ஒன்றில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர், மரியா பட்ஸ்கி, 33. இவருக்கும், பால், 37, என்பவருக்கும் முறைப்படி திருமணமாகி, 9, 7 வயதுகளில் குழந்தைகள் உள்ளன.தற்செயலாக மரியாவை சந்திக்க வந்த பீட்டர், 33, என்பவருக்கும், மரியாவுக்கும், காதல் ஏற்பட்டுவிட்டது. கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு, காதலருடன் ஓராண்டு வாழ்க்கை நடத்திய மரியா, இப்போது, ஒரே வீட்டில் கணவர், காதலர், குழந்தைகளுடன் வாழ்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: கணவர் பாலுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்து வந்த நிலையில், என் மனதில் திடீரென பீட்டர் நுழைந்துவிட்டார். இருவரையும் மறக்க முடியாமல் தவித்த நான், ஒரு கட்டத்தில், பீட்டருடன் சென்றுவிட்டேன். ஓராண்டு வரை, அவர் வீட்டில் நாங்கள் வசித்தோம். தினமும் எனக்கு, என் கணவர் பால் மற்றும் குழந்தைகள் நினைவு வாட்டி எடுத்தது. குழந்தைகளும் என்னை காணாமல் அழுதன. இதனால், கணவர் மற்றும் குழந்தைகளை சந்திக்க அவ்வப்போது வந்து சென்றேன்.இப்படியே, அங்கும், இங்குமாக ஓராண்டு நகர்ந்தது. அதற்கு பிறகு, மூன்று பேரும் ஒரு நாள் ஒன்றாக உட்கார்ந்து பேசினோம். முதல் சந்திப்பிலேயே, பீட்டரும், பாலும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். இது எனக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது. மூவரும் ஒரே வீட்டில் ஏன் வசிக்க கூடாது என, விவாதித்தோம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக்கூடாது என, பேசி முடிவு செய்தோம். அதை, குழந்தைகளும் ஏற்றுக்கொண்டன. ஓராண்டாக கணவர் பால், காதலர் பீட்டர், குழந்தைகளுடன் நான் ஒரே வீட்டில் உள்ளேன்; எங்களுக்குள் எந்த பிரச்னையும் இதுவரை இல்லை. படுக்கையை மூவரும் ஒன்றாக பகிர்ந்து கொள்வதில்லை. பீட்டர் இருக்கும் போது, பால் வருவதில்லை; பால் இருக்கும் போது பீட்டர் வருவதில்லை.பிறருக்கு வினோதமாக தெரியும் எங்கள் வாழ்க்கை, எங்களுக்குள் நல்ல சுமூகத்தையும், புரிதலையும் கொடுத்துள்ளது. பால், பீட்டர் இருவரும், என் குழந்தைகளை கண் போல பார்த்து கொள்கின்றனர். என்னையும், அவர்கள் இருவரும் தரையில் விடுவதில்லை. இது போன்ற அதிர்ஷ்டம் வேறு எந்த பெண்ணுக்கும் வாய்க்காது. இவ்வாறு, மரியா கூறியுள்ளார் dinamalar,com   நம்ம நாட்டில் அஞ்சுக்கு ஒன்னு புனிதமா இருக்கும் போது ரெண்டுக்கு ஒன்னு தப்பில்லை

திங்கள், 4 மார்ச், 2013

இயக்குனர் பாலா: குறை தீர்த்து களை எடுக்கிறேன் அதனால் பயிர் தனியாக தெரிகிறது.பாலா படத்திற்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாலா கையில் எடுக்கும் கதைக்களமும் திரையில் காட்டும் கதாபாத்திரங்களும் உண்மையையும், உள்ளதை உள்ளபடியேவும் பிரதிபலிப்பன.

எனவே தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் பாலாவின் படத்தில் நடிப்பதற்காக காத்து கிடக்கின்றனர். அந்த வரிசையில் தானாக முன்வந்து பாலாவின் ஹீரோ லிஸ்டில் தனது பெயரை பதிவு செய்தவர் நடிகர் விஜய். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது “பாலா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை” என்று சொன்னார்.>இதுபற்றி சமீபத்தில் ஒரு வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாலா “ என் இயக்கத்தில் நடிக்க ஏன் ஆசைப்படுகிறார்கள் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். என் படத்தில் நடிக்க வந்தால் சிறந்த நடிகனாக வர வாய்ப்பு இருக்கிறதாக சொல்கிறார்கள். அனால் நான் அப்படி நினைக்கவில்லை. பொதுவாக நடிகர்களை நான் நடிக்க வைப்பதில்லை.அவர்களது நடிப்பில் இருக்கும் குறைகளை மட்டுமே நீக்குவேன். குறைகளை நீக்கிவிட்டால் அவன் முழுமையான நடிகனாகிறான். நான் ஹீரோக்களுக்கு இதை இதை சொல்லி கொடுத்தேன், நான் போட்டுக்கொடுத்த பாதையில் செல்கிறார்கள் என்றேல்லாம் சொல்லிக் கொள்ள எனக்கு தகுதியே கிடையாது. அவர்களின் குறை தீர்த்து களை எடுக்கிறேன். அதனால் பயிர் தனியாக தெரிகிறது. இது என்ன கம்பசூத்திரமா?” என்று கூறியுள்ளார்.

சென்னை: ஒரு மாத குழந்தை கொலை ; சடலத்தை வாஷிங் மெஷினில் போட்ட அம்மா

சென்னை: கணவரை பிடிக்காததால் ஒரு மாத பெண் குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்று வாஷிங் மெஷினில் போட்ட அம்மா கைது செய்யப்பட்டார். புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் டைமன்ட் பேலஸ் என்ற 5 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 10 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ் என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக இங்கு காவலாளியாக இருக்கிறார். மகள் ரம்யா (19)வுடன், குடியிருப்பில் தனியாக உள்ள சிறிய அறையில் வசித்து வருகிறார். இதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக இருக்கும் ஆந்திராவை சேர்ந்த பாபு (24), என்பவருக்கும் ரம்யாவுக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதியருக்கு கடந்த ஜனவரி 28ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. வர்ஷா என பெயர் வைத்தனர்.

இசுலாமிய மதவெறியர்களை எதிர்த்து வங்கதேச எழுச்சி!


ஷாபாக் சதுக்கம்ரஜீப் ஹைதர்டந்த 4 வாரங்களாக இஸ்லாமிய மத வெறியர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் வங்கதேசத்தில் (பங்களாதேஷ்) நடந்து வருகிறது.
1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இணைந்திருந்த அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பங்களாதேச மக்கள் வங்காள தேசியத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக போராடினர்.
அந்த போராட்டங்களை அடக்குவதற்கு பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் இறக்கி விடப்பட்டனர். அவர்களுடன் உள்ளூர் மத வெறியர்களும் சேர்ந்து கொண்டனர். லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். ரஜாக்கர்கள் என்று அழைக்கப்படும் உருது பேசும் பாகிஸ்தானிய ஆதரவு இஸ்லாமிய மத வெறியர்கள் விடுதலை போராட்டத்தை நசுக்குவதற்காக நாடெங்கிலும் வன்முறையை அவிழ்த்து விட்டனர். ரஜாக்கர்கள் என்ற சொல் பங்களாதேஷில் துரோகிகள் என்ற பொருள் உடையதாக மாறி விட்டது.
சுமார் 10 லட்சம் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் வந்தனர். இதை சாக்காக வைத்து இந்திய அரசு பாகிஸ்தானை தனிமைப்படுத்தி இராணுவ நடவடிக்கை மூலம் பங்களேதேஷ் தனி நாடாக வழி வகுத்தது. வங்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட ஷேக் முஜிபூர் ரஹ்மானின் தலைமையில் அவாமி லீக் கட்சியின் ஆட்சி அமைக்கப்பட்டது.
ராணுவ தளபதிகளால் ஷேக் முஜிபூர் ரஹ்மான் கொலை செய்யப்பட்டு ராணுவ ஆட்சி, ராணுவ தளபதி ஜியா உர் ரஹ்மான் பொறுப்பேற்று பங்களாதேஷ் தேசியக் கட்சியை உருவாக்குதல், ராணுவத தளபதிகளால் ஜியா உர் ரஹ்மான் கொலை செய்யப்பட்டு 1982ல் ஹூசைன் முகமது எர்ஷாத் என்ற இராணுவ தளபதி இராணுவ ஆட்சியை ஏற்படுத்துதல் என்று வன்முறை நிறைந்த வரலாறு தொடர்ந்தது.
1991ல் இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டு முஜிபூர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா பேகம் தலைமையில் அவாமி லீகும், ஜியா உர் ரஹ்மானின் மனைவி பேகம் கலீடா ஜியா தலைமையில் பங்களாதேஷ் தேசியக் கட்சியும் மாறி மாறி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகின்றனர்.
2008ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 1971ல் போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் மீதான சிறப்பு விசாரணை ஆணையம் நியமிப்பதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்தார் ஹசீனா பேகம். அதன்படி 2010ம் ஆண்டு 3 உறுப்பினர்கள் கொண்ட பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்றம், 7 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு, 12 உறுப்பினர்கள் கொண்ட வழக்கறிஞர்கள் குழு ஆகியவை உருவாக்கப்பட்டன.

அமைச்சர் திருமணத்தில் 22 ஹெலிபேடுகள் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை

அமைச்சர் திருமணம்
 ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்ப‍டி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் – இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
டந்த மாதம் மத்திய அமைச்சர் ச‌ரத்பவாரின் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த, மராட்டிய மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் தனது மகன் மற்றும் மகளுக்கு ஒரு ஆடம்பர திருமணத்தை நடத்தி உள்ளார். ஒரு திருமணத்தில் என்ன விசேசம் என்று நினைத்து விடாதீர்கள்! இது பத்தோடு ஒன்று அல்ல.
படம் : என்.டி.டி.வி
மும்பையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள சிப்லன் பகுதியில் 5 லட்சம் சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட கோட்டை போன்ற செட் போடப்பட்டிருந்தது. ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்ப‍டி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் – இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த விருந்தில் வெட்டப்பட்ட ஆடுகள், கோழிகள், வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் மதிப்பு, ஆபரணங்கள் மற்றும் மது வகைகளைப் பற்றிய கணக்கை மத்திய வருமான வரித் துறையினர் தற்போது கவனமாக ஆராய்ந்து வந்தாலும் கணக்கு போட்டு முடியவில்லை.

கல்யாணத்துக்காக பெண்களை வளர்ப்பதா? : ரீமா கல்லிங்கல் ஆவேசம்

 ‘கல்யாணம் பண்ணித்தர மட்டுமே பெண்ணை வளர்க்கக்கூடாது’ என்று ஆவேசப்பட்டார் ரீமா கல்லிங்கல். ‘யுவன் யுவதி’ படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். ‘டேம்’ படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில் இவர் நடித்த ‘22 பிமேல் கோட்டயம்’, ‘நித்ரா’ ஆகிய 2 படங்களுக்காக கேரளா அரசின் சிறந்த நடிகை விருது பெற்றார். அவர் கூறியதாவது: ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களாகவே 22 பிமேல் கோட்டயம், நித்ரா பட வாய்ப்புகள் அமைந்தது. இதில் நடித்தபோது என்னைவிட படத்திற்கும் அதில் நடித்தவர்களுக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். எனக்கு விருது கிடைத்தது பெரிய கவுரவமாக கருதுகிறேன். தற்போது வரும் படங்கள் புதிய தலைமுறையினருக்கான படங்கள் என்கிறார்கள்.

வாழ்கை கற்று கொடுத்த அனுபவம்” - அஜித் பேட்டி!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அஜித்குமார் அடுத்ததாக ’சிறுத்தை’ சிவா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சமீப காலமாக தமிழ்த் திரையுலகின் இளம் நடிகர்களுடன் நடிப்பதிலும், திரைத்துறையில் அவர்கள் முன்னேற பல வழிகளில் ஊக்கமளித்து வருகிறார் அஜித்.அந்த வகையில் விஜயா productions நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு  சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் பெயிரடபடாத படத்தில் பாலா, விதார்த், முனீஸ், சுஹைல் என  இளம் நடிகர்கள் அஜீத்துடன் நடிக்க உள்ளனர். இவர்களில் ஒருவரான முனீஸ் சமீபத்தில் அஜீத்தை விஷ்ணுவர்தன் படப்பிடிப்பில் சந்தித்து  வாய்ப்புக்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்ற போது அஜீத், அவர் வெற்றி பெற்றதற்கான காரணங்களை எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறார்.

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சிக்குள் ஆதரவு

பா.ஜ. அணியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க கட்சிக்குள் ஆதரவு பெருகி வருகிறது. எதிர்பாராத இந்த ஆதரவால் பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரசும் பா.ஜ.வும் இப்போதே தயாராகி வருகின்றன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் தேர்தலை சந்திக்கப் போவதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது. காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. காங்கிரஸ் தலைவர்களும் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதற்கு போட்டியாக பா.ஜ. சார்பிலும் வலுவான வேட்பாளரை முன்னிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால், பிரதமர் பதவிக்கு அத்வானி, சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடி உட்பட பல தலைவர்களின் பெயர்கள் அடிபடுவதால் பிரதமர் வேட்பாளரை அக்கட்சி அறிவிக்கவில்லை. சரியான நேரம் வரும்போது பிரதமர் வேட்பாளரை அறிவிப்போம் என்று பா.ஜ. தலைவர்கள் சமாளிக்கின்றனர். இந்நிலையில், பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்தது. அரசியல், பொருளாதார சூழ்நிலை, கட்சியின் வியூகம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குழப்பத்தை தவிர்ப்பதற்காக பிரதமர் வேட்பாளர் பற்றி யாரும் பேசக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஆனால், செயற்குழுவில் கலந்து கொள்ள வந்த நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் அதிக பெண் கரு. சிசு கொலைகள்

தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரகமும், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி என்.சி.சி., மாணவர்களும், தமிழகத்தில் உள்ள, 18 மாவட்டங்களில், மேற்கொண்ட ஆய்வில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், அதிகபட்சமாக, பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலைகள் நடந்ததாக, 42.15 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
சென்னை, அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி என்.சி.சி., மாணவர்கள் 20 பேர், தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனரகத்தோடு இணைந்து, பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்கள் மூலம் கடந்த மாதம், 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை, விழிப்புணர்வு பிரசார பயணத்தை மேற்கொண்டனர்.
மொத்தம், 16 நாட்கள் நடந்த இப்பயணத்தில், வேலூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட, 22 மாவட்டங்களில், 3,160 கி.மீ., தூரம் பயணித்து, 1.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களிடம் துண்டு பிரசுரம் மற்றும் வீதி நாடகங்கள் மூலம், பெண் குழந்தையின் முக்கியத்துவம் குறித்தும், அவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.விழிப்புணர்வு பிரசார பயணத்தில், 18 மாவட்ட பகுதிகளில், பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலை நடந்துள்ளதா?கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி அறிந்து கொள்வது குற்றம் என்பது மக்களுக்கு தெரியுமா? பிறக்கும் முதல் குழந்தை பெண் என்றால் விரும்புகிறார்களா? உள்ளிட்ட, 11 கேள்விகள் மூலம், 7 ஆயிரத்து 641 பேரிடம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வறிக்கை நேற்று டி.ஜி.வைஷ்ணவ்கல்லூரியில் வெளியிடப்பட்டது. ஆய்வில் தெரியவந்துள்ளவை:
18 மாவட்டங்களிலும் 18.41 சதவீதம் பேர், தங்கள் பகுதிகளில், பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலை நடந்துள்ளதாக, தெரிவித்துள்ளனர். இதில், அதிகளவாக 42.15 சதவீதம் பேர்,கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது.

ஞாயிறு, 3 மார்ச், 2013

தமிழக காங்கிரஸ் உடைகிறதா? G.K.வாசன் வீட்டில் ஆதரவாளர் கூட்டம்!

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நீக்கப்பட்டதன் எதிரொலியாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ஆதரவாளர்கள் இன்று சென்னையில் அவரது வீட்டில் கூடி ஆலோசனை செய்து வருகின்றனர். காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் தனிக் கட்சி (தமிழ் மாநில காங்கிரஸ்?) தொடங்க வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து யுவராஜா, அமைச்சர் வாசனின் ஆதரவாளர். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவி ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதற்கு யுவராஜாதான் காரணம் என்று பரவிய செய்தியை ஆதாரமாக வைத்து, இரண்டு வாரங்களுக்கு முன்பே அவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லும்படி காங்கிரஸ் மேலிடம் வாசனிடம் கூறியுள்ளனர்.
ஆனால், ஆதாரம் இன்றி யுவராஜாவை ராஜினாமா செய்யச் சொல்ல முடியாது என்று வாசன் கூறிவிட்டார்.

Delhi பள்ளி மாணவி பலாத்காரம் வெளி நபருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை

புதுடில்லி: "டில்லியில், 2ம் வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், வெளி நபருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை. மாணவியைப் பற்றி நன்கு தெரிந்தவர் தான், இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருக்க வேண்டும்' என, போலீசார், சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
டில்லி, மாங்கோல்புரி பகுதியில் உள்ள, மாநகராட்சி பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமியை, மர்ம நபர் ஒருவன், சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த சம்பவம், அந்த பகுதியில், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த பொதுமக்கள், சிறுமி சிகிச்சை பெற்று வந்த, மருத்துவமனை முன், நேற்று முன்தினம் திரண்டனர். அந்த வழியாக சென்ற வாகனங்களை, அடித்து நொறுக்கினர். கடைகள் மீது, கல்வீச்சு நடத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர், பள்ளிக்கு தொடர்பில்லாத, வேறு நபராக இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்தது. ஆனால், போலீஸ் தரப்பு, இதை மறுத்துள்ளது.  dinamalar,com

BJP கூட்டணியிலிருந்து காங்., அணிக்கு நிதிஷ் குமார் மாறுவாரா?

பாட்னா: மத்திய பட்ஜெட்டுக்கு, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான, நிதிஷ் குமார், பாராட்டு மழை பொழிந்திருப்பது, தேசிய அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. "அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியிலிருந்து, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணிக்கு, தாவுவதற்கு அச்சார மாகவே, நிதிஷ் குமார், பட்ஜெட்டுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து உள்ளார்' என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றி விடப்படும்?

லோக்சபா தேர்தலில், பெரியண்ணன் போக்கில் கொடுக்கிற சீட்டுகளை பெற்றுக் கொள்ள வைப்பது அல்லது கூட்டணியிலிருந்து கழற்றி விடுவது என்ற அடிப்படையில், காங்கிரஸ் கட்சிக்கு, படிப்படியாக நெருக்கடிகளை அளிக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது என, தி.மு.க., கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "டெசோ' மாநாடு, டில்லியில், இம்மாதம் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்றும், பா.ஜ., கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கும் என, தி.மு.க., தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில், காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன், இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு குறித்த மாநாடு நடத்துவது, காங்கிரசுக்கு, தி.மு.க., தரும் நெருக்கடியாக கருதப்படுகிறது. "2ஜி' ஊழல் வழக்கு விவகாரத்தில், பார்லிமென்ட் கூட்டுக்குழு நடவடிக்கை விசாரணையில், தனது சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது சாட்சியத்தை பதிவு செய்தால், அதன் அடிப்படையில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்க்கவே, கூட்டுக்குழு நடவடிக்கையில், ராஜாவிடம் சாட்சியம் கேட்க அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி உருவாகியுள்ளது. ராஜாவை சாட்சியம் சொல்ல அழைக்கவில்லை என்றால், மத்திய அரசு மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டை பா.ஜ., திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எழுப்பவும் வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரசை ஒரு வழி பண்ண அயாராது பாடுபடும் ராகுல் வேற கலைஞரை எதிரியாக பார்க்கிறார் எனவே இந்த ஒரு காரணத்தை வைத்தே கலைஞர் வெளியேறலாம் இது ஒரு  நல்ல வாய்ப்பு  என்றே கலைஞர் கருதலாம்