சனி, 29 டிசம்பர், 2012

Delhi Gang Rape வயிற்றிலே நெருப்பை கட்டி கொண்டு பெற்றோர்

ஒவ்வொரு பெண்ணை பெற்ற தகப்பனும் கல்லூரிக்கோ, பள்ளிக்கோ அனுப்பிவிட்டு வீடு திரும்பும் வரை வயிற்றிலே நெருப்பை கட்டி கொண்டு இருக்க வேண்டி உள்ளது. நடைபெறும் சம்பவங்கள் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்து பெற்றோர்களையும் நிம்மதி இல்லாமல் ஆக்கிகொண்டுள்ளது. வெறும் மரண தண்டனை தீர்வாகிவிடாது. சில நாளில் மற்றொரு சம்பவம் இதனை இருட்டடிப்பு செய்து விடும். கடுமையான சட்டங்களும், ஊழலில் கரைந்து போகாத காவல் துறையும், சமயம் பார்த்து சறுக்கி ஓடாத  அரசியல் வாதிகளால் மட்டுமே அமைதியான மக்களாட்சியை கொண்டுவர முடியும் 
டில்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமாணவி, சிங்கப்பூரில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவிக்கு மூளைப் 
பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவி உயிரிழந்ததற்கு இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர், மக்களவை சபாநாயகர், டெல்லி முதல் அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மருத்துவ மாணவி உயிரிழந்ததற்கு, அவரது மூளையில் ஏற்பட்ட வீக்கமே முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து சிங்கப்பூர் மருத்துவமனை அதிகாரி கூறுகையில், மாணவி மரணத்திற்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பே முக்கிய காரணம். டில்லி மருத்துவமனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக பல்வேறு உறுப்புகள் செயலிழந்து விட்டது என கூறினார்.

One woman gets raped every 22 minutes in India.


Sun DTH 10ம் தேதி வெளியாகிறது விஸ்வரூபம்

சென்னை:கமல் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்Õ படத்தை ஜனவரி 11ம் தேதி வெளியிடுகிறார். அதற்கு முதல்நாள் 10ம் தேதி இரவு 9.30 மணிக்கு படத்தை டிடிஎச் மூலம் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கு தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று இது தொடர்பாக கமல் பேட்டியளித்தார். அவர்கூறியதாவது:இது உலகிலேயே முதல் முதன் முயற்சி. உலகம் இப்போது நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. சேட்டிலைட் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் இது. தொலைக்காட்சியில் திரைப்படங்களை இலவசமா ஒளிபரப்புகிறார்கள். இது பணம் கொடுத்து பார்ப்பது, இதனால் படைப்பாளிக்கும் பணம் கிடைக்கும், திருட்டு விசிடி, கள்ள சந்தை மூலம் விரயமாகும் பணம் எங்களுக்கே வந்து சேரும். இதுஒருகூட்டு முயற்சி, வியாபாரத்தில் புதிய பரிமாணம்.

பா.ம.க சாதிவெறிக்கு துணை போகும் விடுதலைச் சிறுத்தைகள் !

திருமா - ராமதாஸ்vinavu.com தர்மபுரியில் நவம்பர் ஏழு அன்று நடத்தப்பட்ட வன்னிய சாதி வெறியாட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு மாத காலமாக கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டிசம்பர் 25-ல் வெண்மணியில் நடந்த படுகொலை நாளையொட்டி, வெண்மணி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம் என்ற அடிப்படையில் புதுச்சேரியில் திருப்புவனையில் பேரணி-பொதுக்கூட்டம், புரட்சிகர கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். இதற்காக 16000 துண்டறிக்கைகளும், 1100 சுவரொட்டிகளும் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பிரச்சார இயக்கத்துக்கு வன்னியர்-தாழ்த்தப்பட்ட மக்களில் உள்ள உழைப்பாளிகளிடம் கணிசமான ஆதரவு, நிதி உதவி, கிடைத்தது. இன்றைய சமூக யதார்த்தத்தில் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளை அனுபவித்து வரும்  உழைக்கும் மக்கள் தனது பொது எதிரிக்கு எதிராக ஒரு வர்க்கமாகத் திரள்வதற்குத் தடையாக உள்ள சாதி உணர்வையே தூக்கியெறிந்து ஜனநாயக உணர்வைப் பெற வேண்டும் என்பதே இந்தப் பிரச்சாரத்தின் மையப் பொருளாக கொண்டு செல்லப்பட்டது.
திட்டமிட்டபடி அன்று காலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடிகளை நடுவதற்குத் தயாரான போது புதுச்சேரி திருபுவனை பகுதியிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிலுள்ள சில பொறுப்பளர்கள் கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என்று எந்தக் காரணமும் கூறாமல் நேரடியாக தோழர்களிடம் வாக்கு வாதம் செய்துள்ளனர்.

டில்லியில் கடும் பதட்டம்! எங்கும் போலீஸ் தலைகள்!! தடுப்பு வேலிகள்!!!

Hospital staff carry the body of the Indian gang-rape victim to the police morgue vehicle at the Mount Elizabeth hospital in Singapore. Picture: AFP/Rosland Rahman  
 மருத்துவ மாணவி சிங்கப்பூரில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, டில்லியில் பதட்ட நிலை தோன்றியுள்ளது. முக்கிய சாலைகள் இன்று காலையில் இருந்தே மூடப்பட்டன. வேறு சில சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூடப்பட்ட சாலைகளிலும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டில்லியின் பிரதான சாலை, ஜனாதிபதி மாளிகை செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்‌ சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ஸ்டேஷன்களின் முன்னும் போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர்.
இன்று காலையில் டில்லி போலீசார், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாத்து வருகின்றனர். அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் எந்த நிமிடமும் வீதிகளில் இறங்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது. Viruvirupu

மருத்துவ மாணவி உயிரிழந்தார் Delhi bus gang-rape victim dead


The 23-year-old girl, who was gang-raped and brutally assaulted in a Delhi bus nearly a fortnight ago, died at a hospital in Singapore on Saturday
சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்ச‌ை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவுமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர்.
இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரினர்.
இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிறு பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
உடல் உறுப்புக்கள் செயல் இழந்தன
இந்த மாணவி தற்போது கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணி்யளவில் (சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு ) இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் உறுப்புக்கள் ‌கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்துவிட்டதால் அவரது உயிர்பிரிந்தது. கடந்த 13 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த மாணவி இறுதியில் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டார்.

முன்னதாக மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கெல்வின் லோக் , அதிகாலை 2.15 மணியளவில் மாணவி உயிரிழந்தது குறித்த தகவலை இந்திய தூதரகத்திற்கு தெரிவித்தார். இறந்த மாணவிக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். thenee.com/

வியாழன், 27 டிசம்பர், 2012

டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண் கவலைகிடம்

  "extremely critical condition"
டெல்லி பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் நிலை மிகவும் கவலைக்கு இடமாக உள்ளதாக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் வைத்திய நிலையம் அறிவித்து உள்ளது . எல்லோரும் அவருக்காக பிரார்த்தனை செய்யவேண்டும்  

Tehelka.. போலீசார் நியாயமாக நடக்கப்போவதில்லை? கற்பழிப்பு குற்றச்சாட்டுக்களில்


Tehelka.com  மீண்டும் ஒரு அதிரடி புலனாய்வு செய்தியை பகிரங்கமாக வெளியிட்டு உள்ளது . கற்பழிப்பு குற்றச்சாட்டுக்களில் பொலிசாரின் அணுகுமுறை எவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது என்பதை இந்த ரகசிய வீடியோ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது .இப்படிப்பட்ட போலீஸ் இருக்கும் வரையில் கற்பழிப்புகள் தொடரவே செய்யும் . பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு துளியேனும் இந்த போலீசார் நியாயமாக நடக்கப்போவதில்லை என்பதை இதை விட தெளிவாக விளக்க முடியாது , குற்றவாளிகளுக்கு சாதகமாக நடக் கும் போக்கே போலீசாரிடம் காணப்படுகின்றது , பல போலீஸ் நிலையங்களில் கற்பழிப்பு நடைபெறுவது ஏன் என்று இனியாவது எல்லோருக்கும் புரியும் 

Again டெல்லியில் கற்பழித்து தெருவில் வீசிய கொடுமை

டெல்லியில் நேற்றிரவு மூன்று பேர் கொண்ட கும்பல் ஒ‌ன்ற 42 வயதுடைபெண்ணை கொடூரமாக கற்பழித்து தெருவில் வீசிய அர‌ங்கே‌றியு‌ள்ளத வி‌ரிந்தாவன் என்னும் இடத்திலிருந்து வீடு திரும்ப கொண்டிருந்த 42 வயதுடைய பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து மூன்று பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கற்பழித்திருப்பது தெரியவந்துள்ளது.இன்று காலை டெல்லி கல்காஜி பகுதியில் உ‌ள்ள தெருவில் மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மூவரில் ஒருவரான திலிப் வர்மா, கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 வருடங்களாக தெரிந்தவர். அதனால் அப்பெண் திலிப் வர்மாவுடன் காரில் வீடு திரும்பியுள்ளார்.வழியில் இவர்களுடன் திலிப் வர்மாவின் வேறு 2 நண்பர்கள் காரில் ஏறிக்கொண்டனர். சிறிது நேரம் கழித்து பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து காரில் இருந்த மூவரும் அப்பெண்ணை கற்பழித்திருக்கிறார்கள்.இது குறித்து போலீசார் கூறுகை‌யி‌ல், பாதிக்கப்பட்ட பெண் எ‌ய்‌ம்‌ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட திலிப் வர்மாவை கைது செய்திருப்பதாகவும், தலைமறைவாக இருக்கும் அவரின் 2 நண்பர்களை ‌பிடி‌க்க 3 தனிப்படைகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.<மருத்துவ மாணவி கற்பழிப்‌பி‌ன் தாக்கம் அடங்குவதற்கு முன்பே டெல்லியில் தொடர்ந்து கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துரைதயா‌நி‌தி இ‌ன்று ஆஜராவாரா? கைது செ‌ய்ய ‌தி‌ட்ட‌‌ம்

ிரானைடகுவாரி முறைகேடவழக்கிலமதுரகாவல்துறகண்காணிப்பாளரஅலுவலகத்திலமத்திஅமைச்சரு.க.அழகிரியினமகனதுரதயாநிதியிடமஇன்றவிசாரணநடத்தப்பஉள்ளதா‌ல் அவரை கைது செ‌ய்ய ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளது.ிரானைடகுவாரி முறைகேடவழக்கில் நிபந்தனா‌மீனபெற்று கீழவளவகாவல்நிலையத்திலகையெழுத்திவந்துரதயாநிதியிடமபோலீசாரநேற்றசம்மனவழங்கினர்.அதில், இன்றகாலை 11.30 மணியளவிலமாவட்கண்காணிப்பாளரஅலுவலகத்திலவிசாரணைக்காஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்றதுரதயாநிதியிடமபோலீஸஅதிகாரிகளவிசாரணநடத்உள்ளனர்.  பேரம் படியலையோ 

Kerala 300 கோடி நகை கொள்ளை! மாவேலிக்கரா Royal Family

Royal family member robbed of precious stones worth 300 crore, killed
திருவனந்தபுரம்: கேரளாவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திருவனந்தபுரத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது ரூ. 300 கோடி நகைக்காக இந்தக் கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவரின் பெயர் ஹரிஹர வர்மா. இவர் மாவேலிக்கரை மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 59 வயதான இவர் திருவனந்தபுரம் புறநகரான வெட்டியூர்காவு என்ற இடத்திற்கு அருகே உள்ள புத்துதூர்கோணம் என்ற இடத்தில் வசித்து வந்தார். இவர் வைர வியாபாரியாக இருந்து வந்தார் திங்கள்கிழமை இவர் கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கொலைக்குப் பின்னர் ஹரிஹர வர்மா வீட்டில் இருந்து ரூ. 300 கோடி மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகளை அக்கும்பல் கொள்ளையடித்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

கோவை, திருப்பூரில் ஆள் தூக்கி'கள் அதிகரிப்பு: போலீசுக்கு அதிர்ச்சி

நிதிமோசடி குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், மர்ம நபர்களால் கடத்தப்படும் சம்பவங்கள் கோவை, திருப்பூரில் அதிகரித்து வருகின்றன. "மோசடி வழக்குகளில், போலீஸ் நடவடிக்கை மீதான நம்பிக்கை, முதலீட்டாளர்களிடம் குறைந்து வருவதே, இதுபோன்ற கடத்தல்களுக்கு முக்கிய காரணம்' என, கூறப்படுகிறது.< கோவை, திருப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில், நிதி மோசடி குற்றங்கள் அதிகரித்துள்ளன. நடப்பாண்டில், புற்றீசல்போல முளைத்த எண்ணற்ற ஈமு கோழி நிறுவனங்கள், பொதுமக்களிடம் பல கோடி ரூபாயை சுருட்டின. அடுத்ததாக, நாட்டுக்கோழி, வான் கோழி, ரியல் எஸ்டேட் என்ற பெயரில், மேலும்பல மோசடி நிறுவனங்கள் தோன்றி, தங்கள் பங்குக்கு பணத்தை அபகரித்தன.இம்மோசடிகளை எல்லாம் விழுங்கும் வகையில், "பைன் பியூச்சர்' "பைன் இந்தியா' என்ற பெயரில், கோவையில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 8,000 ரூபாய் வரை வருமானம் அளித்து, இரண்டாண்டு முடிவில், முதலீட்டுத்தொகையை திரும்ப வழங்குவதாகவும் அறிவித்தன. இதையடுத்து, பல ஆயிரம் முதலீட்டாளர்கள் தலா 5 லட்சம், 10 லட்சம் என, பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்தனர்; இரு மாதங்களில் அந்நிறுவனம் மூடுவிழா கண்டது; முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர போலீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் அலுவலகங்களில் புகார் அளித்தனர். எனினும், மோசடி நபர்கள் மீதான நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டாததால், தங்களது முதலீட்டுத் தொகை திரும்பக்கிடைக்குமா? என, விரக்தியடைந்துள்ளனர். 
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

எல்லாம் நடப்பாண்டில் நடக்கும் பயங்கரம்.. குற்றங்களை குறைப்பேன் என்று குதித்துக் குதித்து வந்த கோமளவல்லி.. இதற்கும் மத்திய அரசையும், பழைய அரசையும் தான் குற்றம் சொல்லுவாரா ?

Delhi Rape Victim சிங்கப்பூர் அனுப்பப்பட்டார்! நேற்று நள்ளிரவு ரகசிய ஏற்பாட்டில்

டில்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவ ம‌ாணவி, வெளியே தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், நள்ளிரவில் ஏர்ஆம்புலன்ஸ் மூலமாக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அவர் சிங்கப்பூர் அனுப்பப்படும் விஷயம், ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இரவு 10.30 மணியளவில், டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில்...இந்த மாணவி தொடர்பான போராட்டங்கள் டில்லியில் நடைபெறுவதால், மாணவியை சிங்கப்பூர் அனுப்பி வைக்க மேற்கொள்ளப்பட்ட முடிவு, மீடியாக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது. ஆனால், ஏற்பாடுகள் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவே தொடங்கியிருந்தன என தற்போது தெரியவருகின்றது.
இரவு 10.30 மணியளவில், டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில்…
சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட வெளியுறவு அமைச்சு, மாணவிக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.
அதையடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்துக்கும், வெளியுறவு அமைச்சுக்கும் இடையே, மாணவிக்கு கொடுக்கப்பட வேண்டிய சிகிச்சை, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) காலை ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.
இந்த ஏற்பாடுகள் சிங்கப்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்க நேற்று காலை டில்லி சப்தர்ஜங் வைத்தியசாலைக்கு பிரபல cardiovascular சர்ஜன் டாக்டர் நரேஷ் ட்ரிஹான் அழைக்கப்பட்டார்.
மாணவியை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் அனுப்புவதற்கு, மாணவியில் உடல் நிலை இடம்கொடுக்குமா என பரிசோதனை செய்து ரிப்போர்ட் கொடுத்தார் அவர்.
மாணவியை அழைத்துச் செல்லலாம் என அவர் ரிப்போர்ட் கொடுத்த ஓரிரு மணி நேரத்தில் டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சு, மாணவி, பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தோருக்கான பாஸ்போட், விசா ஏற்பாடுகளை செய்தது. 

புதன், 26 டிசம்பர், 2012

பலாத்கார குற்றத்திற்கான சட்டதிருத்தம் குறித்து மக்கள் கருத்து கூற வாய்ப்பு

 அசிட் வீச்சுக்கு ஆளாகி உயிருக்கு போராடி வரும் வினோதினி இவர்தான் ,   வாய் கிழிய பேசும் அரசுகள் இவருக்கு இன்னும் போதிய அளவு உதவிகள் வழங்கவில்லை 
 justi-ce.ve-r-ma@nic.in என்ற இ-மெயில் முகவரியிலும், 011-23092675 என்ற எண்ணுக்கு பேக்ஸ் மூலமும் ஜனவரி 5ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
சென்னை: பெண்கள் பாதுகாப்பு மற்றும் பலாத்கார செயலுக்குரிய தண்டனை குறித்து பொதுமக்கள் ஜனவரி 5ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று நீதிபதி வர்மா தலைமையிலான குழு அறிவித்துள்ளது.டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து பெரும் கலவரம் நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசார் இடையே நடந்த மோதலில் ஒரு போலீஸ்காரர் இறந்தார். சம்பந்தப்பட்ட மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்டங்களை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கிலும் எழுந்துள்ளது.

மாணவி புனிதாவின் கொலையை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்த 7ம் வகுப்புமாணவி புனிதா பாலியல் பலாத்கார முயற்சியில் கொலை செய்யப்பட்டார். இதற்கு, எதிர்ப்புதெரிவித்து இன்று (26.12.2012) தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. எம்.பி. கனிமொழி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Delhil bus rape பெண்ணின் உடல் நிலை கவலைகிடமாக உள்ளதாக

 டெல்லியில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை கவலைகிடமாக உள்ளதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது , அவரது இதய துடிப்பு அபாயகரமான அளவு குறைந்தது வைத்தியர்களின் உதவியால் அவர் அதில் இருந்து மீண்டு உள்ளார் , ஆனாலும் நிலைமை அவ்வளவு திருப்ப்திகரமாக இல்லையாம்
New Delhi: The health condition of the 23-year-old victim of the Delhi gang-rape case is reported to have deteriorated further on Wednesday and she is believed to be critical. Reports said the girl suffered bradycardia wherein the pulse rate drops and heart beats too slowly. Her blood pressure is also reported to have fallen. Sources said the doctors had to revive the victim through pumping of the chest. She continues to be on ventilator support. Reports said senior doctors and a cardiac surgeon were called from private hospitals to discuss the victim’s health condition. The girl is currently admitted at Delhi’s Safdarjung Hospital. Hospital's PRO said a medical bulletin due at 4.30 pm will not be issued in the absence of Dr BD Athani. Also, authorities are mulling to shift the victim to Medanta Medicity after renowned cardiac surgeon Dr Naresh Trehan suggested the same.

Priyanka Chopra:பெண்ணுரிமை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்

பெண்ணுரிமை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும், ஆணுக்கு சமமாக பெண் மதிக்கப்பட வேண்டும் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.டெல்லியில், ஐ.நா. அமைப்பான யுனிசெப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார நிகழ்ச்சியின் தொடக்கவிழா நடைபெற்றது. அதில், பிரபல இந்தி நடிகையும், தமிழில் தமிழன் படத்தில் நடித்தவருமான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:டெல்லியில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், மிகக்கொடிய குற்றம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். முதல்முறையாக இளைஞர்கள் ஒன்றாக போராட முன்வந்துள்ளனர். அதே சமயத்தில், போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும்.பெண்ணுரிமை குறித்து மறுஆய்வு செய்யப்படுவதை நான் விரும்புகிறேன். நாம் ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்கிறோம். பெண்கள் குறித்த அணுகுமுறை மாற வேண்டும். ஆணுக்கு சமமாக பெண்களை மதிக்க வேண்டும்.இதுபோன்ற பிரச்சினைகளில் இந்தி திரையுலகம் உதட்டளவில் மட்டும் குரல் கொடுப்பதாக கூறுவது தவறு.

நில ஆவணப் பறிப்பு வழக்கு. Hindu N.ராம், ரமேஷ் ரங்கராஜன் கோர்ட்டில் சரண்

கோயமுத்தூர்: 400 ஏக்கர் நிலம் தொடர்பான சொத்துப் பத்திரங்களைப் பறித்துச் சென்றதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்ஜாமீன் பெற்ற இந்து என். ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் கோவை முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.
முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி, கோவை அரசு கலைக்கல்லூரி அருகே சேரன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்து நாளிதழை நடத்தும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்போர்ட்டிங் பாஸ்ட்டைம் இந்தியா என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள 400 ஏக்கர் நிலத்தை பழனிச்சாமி ரூ. 30 கோடி விலை கொடுத்து வாங்கினார்.கடந்த 2004ம் ஆண்டு வாங்கப்பட்ட அந்த நிலத்தின் விலை அடுத்த ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தை திரும்ப தருமாறு கஸ்தூரி சன்ஸ் நிறுவனம் கேட்டுள்ளது. பழனிச்சாமி தர மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த நிலையில்,கோவையில் உள்ள தனது அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை பறித்து சென்றதாக அப்போது இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியராக இருந்த என்.ராம், இந்து இயக்குநர் ரமேஷ் ரங்கராஜன், பிரேம் வாட்சா, ராமசாமி அத்தப்பன் உள்ளிட்ட 10 பேர் மீது கோவை போலீசில் பழனிச்சாமி புகார் கொடுத்தார்.போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார்.

கமல் ஹாசன்: எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை


சென்னை: தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை. நான் திருமணமே முடிக்காமல் இருந்திருக்கணும்.
ஆனால் வாணி, சரிகாவின் வசதிக்காக திருமணம் செய்து கொண்டேன். வாணி லிவ் இன் முறைக்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார். அவரை சம்மதிக்க வைக்க நான் அப்போது தயாராக இல்லை. இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் நானும், சரிகாவும் ஒன்றாக ஹோட்டலில் தங்கினால் ஒரு மாதிரி பேசும் சமூகமாக இருந்தது.சரிகாவுக்கும், எனக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். 12 ஆண்டுகள் கூட இந்த திருமணம் நீடிக்காது என்று நினைத்தேன். ஆனால் எங்கள் பிரிவு குழந்தைகளை பாதிக்கும் என்பதால் தள்ளிப்போட்டுக் கொண்டே போனோம். குழந்தைகள் ஓரளவுக்கு பெரியவர்களாக ஆகும்வரைகாத்திருந்தோம்.கௌதமி மிகவும் வித்தியாசமானவர். அவர் தன்னை மணந்து கொள்ளுமாறு ஒரு நாளும் என்னை வற்புறுத்தியதில்லை என்றார்

ஒடிசாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 354 தொழிலாளர்கள் கும்மிடிப்பூண்டியில் மீட்பு

கும்மிடிப்பூண்டி: ஒடிசாவில் இருந்து கும்மிடிப் பூண்டிக்கு அழைத்து வரப்பட்ட 354 தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டு, திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு வேலை செய்ய ஒடிசாவில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ரயிலில் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர்டிஓ கந்தசாமி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் வெங்கடேசன், டிஎஸ்பி ஜோஸ் தங்கையா ஆகியோர் நேற்றிரவு ரயில் நிலையத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது ரயிலில் வந்து இறங்கிய ஒடிசாவை சேர்ந்த 354 பேரை அதிகாரிகள் மீட்டனர். அவர்களை கும்மிடிப்பூண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். தொழிலாளர்களை ஏஜென்ட்கள் யாராவது அழைத்து வந்தார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். tamilmurasu.org

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி

கோழிக்கோடு : கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மாணவி, 60க்கும் மேற்பட்ட, கர்நாடக இசை கச்சேரிகளை நடத்தி, இசை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.கேரள மலப்புரம் மாவட்டம், வடக்கன்கரா என்ற இடத்தை சேர்ந்த, கருவட்டில் யாசிர் - சகீரா தம்பதியின் மகள், ஹன்னா யாசிர். மலப்புரத்தில் உள்ள, மேல் நிலை பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், கேரளா மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும், 60க்கும் மேற்பட்ட, கர்நாடக இசை கச்சேரிகளில் பாடியுள்ளார்.கடந்த எட்டு ஆண்டுகளாக, கர்நாடக இசை பயின்று வரும் இந்த முஸ்லிம் மாணவி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கர்நாடக இசை கச்சேரிகளில் பாடி வருகிறார். பாரம்பரிய முஸ்லிம் பெண் போல, முகத்தை மட்டும் வெளியே காட்டியவாறு, மேடைகளில், கீர்த்தனைகளையும், ஆலாபனைகளையும் அருமையாக இசைத்து, இசை ரசிகர்களை மகிழ்ச்சியூட்டி வருகிறார். ""இசைக்கு முன், மதம் கிடையாது; நான் முஸ்லிமாக இருப்பதால், எனக்கு, கர்நாடக இசை பாடல்களை கற்பதிலும், பாடுவதிலும் எந்த கஷ்டமும் இல்லை. அதுபோல, முஸ்லிம் உடையில் மேடையில் தோன்றுவதில் எந்த சிரமமும் இல்லை; என் ரசிகர்களுக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை,'' என்கிறார்,

செவ்வாய், 25 டிசம்பர், 2012

குஜராத் புதிய எம்எல்ஏக்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள்

 குஜராத் பணக்கார மாநிலமாகி விட்டது  என்பதற்கு சரியான சான்று வாழ்க மோடியும் அவரது கிரிமினல்களும் 
அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 13, 17ம் தேதிகளில் இரு கட்டமாக நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வாரம் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 115 தொகுதிகளில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரசுக்கு 61 இடங்கள் கிடைத்தன. ‘நேஷனல் எலெக்ஷன் வாட்ச்’ என்ற அமைப்பு புதிய எம்எல்ஏக்களின் சொத்து குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 182 எம்எல்ஏக்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். 86 பாஜ எம்எல்ஏக்களும், 43 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் இதில் அடங்குவர். குஜராத் சட்டசபைக்கு பாஜ சார்பில் மீண்டும் தேர்வான 65 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு 5 வருடங்களில் சராசரியாக 4.66 கோடி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் மீண்டும் தேர்வான 33 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 5.94 கோடி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ ஜவஹர் சவுதாவுக்கு அதிகபட்சமாக 64 கோடி சொத்து அதிகரித்துள்ளது. 2007ல் ரூ.18 கோடியாக இருந்த அவர் சொத்து மதிப்பு தற்போது ரூ.82.9 கோடி. இவருக்கு அடுத்த இடத்தில் பாஜ எம்எல்ஏ தினேஷ் படேல் இருக்கிறார். 2007ல் ரூ.4.5 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது ரூ.39 கோடியாக அதிகரித்துள்ளது.

Delhi சமூக விரோதிகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்

 இப்போது டில்லியை சமூக விரோதிகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்; அங்கு கலந்து கொண்ட மகளிரே கூறுகின்றனர். குடித்துக் கும்மாளம்போட்டு, மகளிரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்து, அருவருப்பாக பலரும் நடந்து கொள்ளும் நிலை என்றால், அப்பெண் பிரச்சினை வேறு எதற்கோ மூலதனமாக்கி விட்டுள்ளது.
டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவியை சில மனித மிருகங்கள் வன்புணர்ச்சி, வல்லுறவு கொண்டதினால் அவரது மானம் பறிபோய், உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தலைநகர் டில்லியிலா இப்படி என்ற நியாயமான கேள்வியை, அனைத்துத் தரப்பினரும் ஆத்திரம் பொங்க எழுப்பினர். மாணவர்கள் கொதித்து எழுந்தனர்; மகளிர் திரண்டனர் - அதெல்லாம் துவக்கத்தில். நியாயமானவையும்கூட.
மத்திய ஆட்சியாளரும் இதில் மெத்தனம் காட்டாமல், விரைந்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு எவரையும் காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாமல்  விரைந்து நியாயம் கிடைக்கவும், அப்பெண்ணின் உயிர் காப்பாற்றப்படவும் ஆன அத்துணையும் செய்து கொண்டுள்ளனர். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ஷிண்டே, டில்லி முதல்வர் திருமதி ஷீலாதீட்சத் ஆகிய எல்லோரும் உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கை, குற்ற வழக்கில் துரித நீதி, இனி இப்படி நடக்காத அளவிற்கு அரிய ஆலோசனைகள்,  செயல் திட்டங்கள்பற்றிய சிந்தனை எல்லாம் செய்யும்போது,

கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும்

அன்புள்ள…..
உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு,  எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள்.  உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர்  பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.

Delhi காவலர் மரணம் 8 பேர் மீது கொலை வழக்குi

மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் காவலர் உயிரிழந்ததை அடுத்து 8 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிறன்று புது தில்லியில் நடந்த போராட்டத்தின் போது, வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் தாக்கியதில் காவலர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.

Bus Rape Case போலீஸ் குறுக்கீடு நீதிபதி குற்றச்சாட்டு

டெல்லி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பெற சென்ற சப் டிவிசனல் நீதிபதி உஷா சதுர்வேதி முன்று உயர் போலீஸ் அதிகாரிகளால் கடமை செய்ய விடாமல் தடுத்த சம்பவம் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த போலீஸ் உயர் அதிகாரிகள் தாங்கள் தயாரித்து வைத்திருந்த கேள்விகளையே கேட்குமாறு நீதிபதியை வற்புறுத்தியதாக தெரிய வருகிறது . மேலும் பெண்ணின் பெற்றோரின் அனுமதி பெறாமலேயே போலீஸ் வீடியோ எடுத்தும் உள்ளது .இது பற்றி முதல்வர் ஷீலா தீசிதிற்கு உஷா சதுர்வேதி கடிதம் எழுதியுள்ளார் . இந்த கடிதம் எப்படி மீடியாக்களுக்கு தெரியவந்தது என்றும் உள்துறை அமைச்சு  விசாரணை செய்ய உள்ளது . , குற்றவாளிகளின் பின்னணியில் பெரும் மனிதர்கள் யாரவது சம்பந்தப்பட்டு உள்ளார்களோ என்ற சந்தேகம் உருவாக்கி உள்ளது     

டெல்லி Bus Rape போராட்டம்: காயமடைந்த போலீஸ் மரணம்!

Webdunia
கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த போலீசார் மரணம் அடைந்தார்.கடந்த 16ந் தேதி அன்று டெல்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக தொடர்ந்து மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.புதுடெல்லியில், கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு நீதி அளிக்க வேண்டும் என்று மக்கள் இந்தியா கேட் பகுதியில் பேரணி நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தும் போராட்ட குழுவினரை விரட்ட முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். இதில் சுபாஷ் தோமர் என்ற காவலரும் பலத்த காயம் அடைந்தார்.

Delhi rape victim பெண்ணின் உடல் நிலை மீண்டும் கவலை அளிப்பதாக வைத்தியர்கள்

டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்ணின் உடல் நிலை மீண்டும் கவலை அளிப்பதாக உள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர் அவர் இன்னும் ஆபத்து கட்டத்தை கடக்கவில்லை 
NEW DELHI: The condition the 23-year-old victim who was gang-raped in a running bus has worsened due to internal bleeding but her vital parameters remain stable, doctors said."Her conditions is bad and serious compared to yesterday (Sunday) due to internal bleeding," P.K. Verma, ICU in-charge at the Safdarjung Hospital, told reporters.
Verma said the good part is that despite internal bleeding, her white blood cell count and platelet count remain stable. "She continues to be critical but her kidneys are making urine and lungs are fine. She is conscious and communicating," he said.
Verma said that internal bleeding was due to infection and fresh blood plasma was injected.

உங்கள் பணம்; உங்கள் கையில் 2013க்குள் இந்தியா முழுவதும்

புதுச்சேரி : மானிய தொகையை பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி மூலம் செலுத்தும்  ‘‘உங்கள் பணம்; உங்கள் கையில்'' என்ற திட்டம் புதுச்சேரியில் வரும் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. 2013க்குள் இந்தியா முழுவதும் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இந்த திட்ட ஆய்வுக்காக நேற்று புதுச்சேரி வந்த அவர், அதிகாரிகள் கூட்டத்தில் பேசியதாவது: மத்திய அரசின் ஏராளமான திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு பணமாக செல்கிறது.  மத்திய அரசின் 2 லட்சம் கோடி மானியம் மக்களுக்கு நேரடியாக போய் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வதோடு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு, ஆதார் அடையாள எண்ணை இணைக்க வேண்டும். இதில் ஊழலுக்கு இடம் கிடையாது. ஜனவரி மாதம் முதல் புதுச்சேரியில் செயல்படுத்தப்படுகிறது. 2013ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.

பொது கட்டடங்களில் CCTV Camera கட்டாயம்: தமிழக அரசு

க்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்கள் அனைத்திலும், "சி.சி.டிவி' கேமரா பொருத்த வேண்டும்' என, புதிய அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கட்டடங்களில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, "சி.சி.டிவி' எனப்படும், "க்ளோஸ்டு சர்க்யூட் டெலிவிஷன் யூனிட்ஸ்' பொருத்துவதற்கு, தமிழக அரசின் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, புதிய அரசாணை பிறப்பித்து உள்ளது."தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் - 2012' என, இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது. எந்தெந்த கட்டடங்கள், மக்கள் பயன்பாட்டுக்கு உரியவை எனவும், இதில் விளக்கப்பட்டு உள்ளது.அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகள் மற்றும் இது போன்ற கல்வி மையங்கள், இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளன.

UP பாலியல் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து  கொலை செய்யப்பட்ட வழக்கில்  முக்கிய குற்றவாளியான சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை விதித்து டெல்லி காசியாபாத் சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு உ.பி. மாநிலம் நொய்டாவில் உள்ள நித்தாரியில் 5 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேந்தர் கோலி மீதான வழக்கு டெல்லி காசியாபாத் சிபிஐ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் 24.12.2012 திங்கள்கிழமை நடந்த விசாரணையில் கோலிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை செய்து பலரைக் கொன்ற வழக்கில் கோலிக்கு இது 5வது மரண தண்டனை ஆகும். 4 கொலை வழக்குகளில் கோலிக்கு ஏற்கனவே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிதாரியில் காணாமல் போன பல பெண்களின் சடலம் 2006ல் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கொலைகள் தொடர்பாக மொகிந்தர் சிங், சுரேந்தர் கோலி ஆகியோர் 2006ல் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சிபிஐ 19 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது

AP Cong Leader பெண்கள் இஷ்டத்திற்கு திரியக்கூடாதாம்

ஐதராபாத் :"" நம் நாட்டுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக, பெண்கள், நள்ளிரவில், இஷ்டத்துக்கு சுற்றித் திரியக் கூடாது,'' என, ஆந்திர மாநில காங்., தலைவர் சத்யநாராயணா கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தான் பேசியதற்கு, அவர் வருத்தம் தெரிவித்தார்.
ஆந்திர மாநில, காங்., தலைவரும், மாநில போக்குவரத்து அமைச்சருமான, பொஸ்தா சத்யநாராயணா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நம் நாட்டுக்கு, நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது உண்மை தான். அதற்காக, நள்ளிரவில், ஊர் சுற்றக் கூடாது. குறிப்பாக, பெண்கள், நள்ளிரவில், வெளியில் சுற்றுவது, ஆபத்தானது. நள்ளிரவு நேரங்களில், தனியார் பஸ்களில் பயணிக்காமல் இருப்பதும், நல்லது தான்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.

கற்பழிப்பு குற்றவாளிகள் பலர் அமைச்சர்களாகவும் உள்ளனர்


உத்தர் பிரதேசில்   48 அமைச்சர்களில், 26 பேர், குற்ற பின்னணி உடையவர்கள்.
லக்னோ :"உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அமைச்சரவையில், இடம் பெற்றுள்ள, 48 அமைச்சர்களில், 26 பேர், குற்ற பின்னணி உடையவர்கள். இவர்களில், நான்கு பேர் மீது, கற்பழிப்பு, கொலை, கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளன' என, ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பான, ஏ.டி.ஆரின், நிறுவனர், திரிலோச்சன் சாஸ்திரி, தேசிய தேர்தல் கண்காணிப்பகமான, என்.இ.டபிள்யூ.,வின், உ.பி., மாநில ஒருங்கிணைப்பாளர், சஞ்சய் சிங் ஆகியோர், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. உ.பி.,யில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது, "மாநிலத்தில், சட்டம்-ஒழுங்கை, மேம்படுத்துவதே, எங்களின் முதல் குறிக்கோள்'என்ற கோஷத்தை, அகிலேஷ் யாதவ், முன் வைத்தார்.ஆனால், தற்போது, அவரது அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்களில், 54 சதவீதம் பேர், குற்றப் பின்னணி உடையவர்கள் என, தெரியவந்துள்ளது. சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்தபோது, தங்களின் சொத்து விவரம், தங்கள் மீதுள்ள வழக்குகள் ஆகியவை குறித்தும், அதில் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 24 டிசம்பர், 2012

ஜெயலலிதா வரும்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமல்ல போலீசும் இது நம்ம ஆட்சி



ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு போலீசும் “இது நம்ம ஆட்சி” எனக் குதூகலிக்கத் தொடங்கிவிடுகிறது.
மக்கள் போராட்டங்களைக் கொடூரமாக ஒடுக்கியும், பல கொட்டடிப் படுகொலைகளையும், போலிமோதல்களையும் செய்துவரும் இந்த செல்லப் பிராணிக்கு, இராணுவத்துக்கு உள்ளது போன்ற அத்தியாவசிய பொருட்களை மலிவாக விற்கும் சிறப்பங்காடி, அதிநவீன சொகுசுக்கார்கள், பல லட்சம் மதிப்பிலான சொகுசு மாடிக் குடியிருப்புகள் என வெகுமதிகளை வாரிவழங்கி வருகிறார் ஜெயலலிதா.

தமிழகத்திலே கற்பழித்துக் கொலையும் செய்திருக்கிறார்கள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 டெல்லியில் நடைபெற்றதும் கற்பழிப்பு தான், தமிழகத்திலே நடைபெற்றதும் கற்பழிப்பு தானே? டெல்லி சம்பவத்திற்காக பிரதமரே அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் தமிழகத்திலே கொலையே செய்யப்பட்ட புனிதாவின் குடும்பத்தாருக்கு அரசின் சார்பில் யாரோ ஒரு அமைச்சராவது சென்று ஆறுதல் கூறியது உண்டா? தமிழகத்திலே அரசு என்ற ஒன்று இருக்கிறதா? தமிழ்ச்சாதி என்பதால் புனிதாவின் கொலை சாதாரணமாகி விட்டதா?
 டெல்லியில் பேருந்து ஒன்றில், 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மாணவி கற்பழிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு நீதி கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் மாணவர்கள் 100 பேர் காயமடைந்துள்ளனர்.;அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்& சோனியா காந்தி வீட்டிற்கு முன்பு மாணவர்கள் தர்ணா நடத்தியிருக்கிறார்கள். நள்ளிரவு 12.30 மணியளவில் சோனியா காந்தி வீட்டிலிருந்து வெளியே வந்து, போராட்டம் நடத்திய மாணவர்களோடு தரையிலே அமர்ந்து, “நான் உங்களோடு இருக்கிறேன், இந்தப் பிரச்சினை யில் விரைவிலே நீதி கிடைக்கும்” என்று ஒரு பெண்ணுக்கே உரிய மாண்பு குறையாமல் பதிலளித்திருக்கிறார். அதற்குப் பிறகும் போராட்டம் நடத்திய மாணவர்கள் விடிய விடிய கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அங்கேயே அமர்ந்திருந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் போலீஸ்காரர் ஒருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்.போராட்டம் நடத்திய மாணவர்கள் ஐந்து பேர் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளையெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள். கோரிக்கைகள் அனைத்தையும் அனுதாபத் தோடு கேட்டுக்கொண்ட சோனியா காந்தி அவர்கள், அவர்களது முக்கிய கோரிக்கையான பலாத்காரக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதை ஏற்கத்தயார் என்று உறுதி அளித்திருக்கிறார்.

Damini தாமினி..டில்லி பஸ் பலாத்கார மாணவிக்கு போராட்டக்காரர்கள் வைத்த பெயர்

Viruvirupu

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ படிப்பு மாணவிக்காக வீதிகளில் இறங்கி போராடும் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், அந்த மாணவிக்கு தாமினி என்று பெயர் வைத்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு வீசப்பட்ட அந்த மாணவிக்கு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று வரை 6 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் ஏராளமானோர் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் வெளியிடப்படவில்லை. அதையடுத்து போராட்டக்காரர்கள், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தாமினி என்று பெயர் வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த அட்டைகளில் ‘போராடு தாமினி, நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்’ என்று எழுதி வைத்திருந்தனர்.

லாலு பிரசாத் யாதவ் : கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை


Delhi மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, இதுபோன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் இணைந்துள்ளார். பீகாரில் லாலு பிரசாத் யாதவ், இன்று நிருபர்களிடம் கூறியதவாது:பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு சட்டப்படி வழங்கும் குறைந்தபட்ச தண்டனையான 7 ஆண்டுகள் என்பது போதாது. இதுபோன்ற பாலியல் அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமானால், ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தம் செய்யப்படவேண்டும்.டெல்லியில் மாணவி பாலியல் பலாத்கார சங்பவம் குறித்து பாராளுமன்றதில் விவாதத்திற்கு வரும்போது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் வலியுறுத்தும். பீகார் மற்றும் கர்நாடகாவில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்

விஸ்வரூபத்திற்கு மின்தடை தான் பெரும் வில்லன் தியேட்டர் உரிமையாளர்கள் அல்ல

விஸ்வரூபம் படத்தைப் பார்க்க டிடிஎச்சுக்கு ரூ.1,000 கட்டி படம் பார்க்கையில் மின்வெட்டு ஏற்பட்டால் என்ன செய்வது என்று தமிழக ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கமல் ஹாசனின் விஸ்ரூபம் படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் 8 மணிநேரத்திற்கு முன்பு டிடிஎச்சில் ரிலீஸ் செய்யப்படும் என்று படத்தின் நாயகன் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். பல்வேறு நிறுவனங்கள் விஸ்வரூபத்தை ஒளிபரப்ப ஆர்வம் காட்டியபோதும் ஏர்டெல் நிறுவனம் படத்தின் டிடிஎச் உரிமையைப் பெற்றுள்ளது. இதனால் வீடுகளில் ஏர்டெல் டி.டி.எச் வைத்திருப்பவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் வீடுகளில் உள்ள டி.விக்களில் காண முடியும். ஏர்டெல் டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே விஸ்வரூபம் படம் ஒளிபரப்பு இணைப்பு கிடைக்கும். இப்பொழுது தமிழக ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. மாநிலத்தில் 12 மணிநேரத்திற்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில் ரூ.1,000 கட்டி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின்தடை ஏற்பட்டுவிட்டால் படம் அவ்வளவு தானா என்று அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 2 மணிநேரத்திற்கு மேல் ஓடும் படத்தை தமிழக ரசிகர்களால் நிச்சயம் தொடர்ந்து பார்க்க முடியாது. ஏனென்றால் ஒரு மணிநேரம் மின்சாரம் இருந்தால் அடுத்த ஒரு மணிநேரம் இருக்காது. கமல் சார் இந்த சந்தேகத்தை நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். மின்தடையில்லா நேரத்தில் படத்தை வெளியிட நினைத்தால் அது நடக்காத காரியம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வரூபத்திற்கு மின்தடை தான் பெரும் வில்லன் தியேட்டர் உரிமையாளர்கள் அல்ல 

Malnutrition சோமாலியாவை விட குஜராத்தில் தான் பரிதாபமாக உள்ளது.

போபால், டிச. 24- இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், மார்கண்டேய கட்ஜு, மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்தார். போபாலில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:குஜராத் மாநிலம் முன்னேறி விட்டதாக நரேந்திரமோடி கூறிவருகின்றார். இந்த முன்னேற்றம் சராசரி மனிதனின் முன்னேற்றத்துக்கு எந்த வகையிலும் உதவிடவில்லை.மோடியின் தற்பெருமை பேச்சால், தங்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதை குஜராத் மக்கள் உணரும் காலம் வரும். குஜராத்தில் வாழும் ஏழைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது. ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஏழை நாடான சோமாலியாவை விட குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது. தொடர்ந்து, 3 ஆவது முறை முதலமைச்சராவது என்பது பெரிய காரியம் அல்ல. தற்போது, நம் நாட்டில் தேர்தலில் போட்டியிடுபவர்கள், எப்படி வெற்றியடைகின்றார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் மூலம், மோடியின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை எதன் மூலமாகவும் துடைக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்

கிருஷ்ணகிரி: மலை முழுங்கி கொள்ளையனை கைது செய்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒரு கிரானைட் மாவட்டம் என்றே சொல்லலாம். பெங்களூர் செல்லும் வழி எங்கும் பாறைகளையும், வெடி வைத்து பிளக்கப்பட்டு பள்ளமாக்கப்பட்டிருக்கும் நிலங்களையும் நீங்கள் தொடர்ச்சியாக காண முடியும். பி.ஆர்.பி போன்ற கிரானைட் கொள்ளையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இன்றி அரசு ஆதாரவோடு ஆட்சி நடத்துகிறார்கள்.

PMK :பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு இவ்வாறு தடைவிதிக்கப்பட்டால்

ராமதாஸ் மதுரை வருவதை தடுத்து விட்டு, அவர்கள் அரசியல் செய்துவிட முடியுமா?

ஐயகோ கலெக்டருக்கு தமிழ் புரியலையா?Viruvirupu
ஐயகோ கலெக்டருக்கு தமிழ் புரியலையா?
அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு தடைவிதிக்கப்பட்டால், தமிழகத்தில் எந்த தலைவருமே அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். கலகத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி டாக்டர் ராமதாஸுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது கண்டனத்துக்குரியது என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் இருந்து அறிக்கை ஒன்று வந்துள்ளது.
“மதுரையில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தெரிவித்த கருத்துகள் பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், கலகத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஷ்ரா கூறியிருக்கிறார். இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144-வது பிரிவின்படி மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைவதற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்று விளக்கம் கோரி ராமதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
ஆட்சியரின் இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதுமுள்ள பா.ம.க.வினரையும், அனைத்து சமுதாய மக்களையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மதுரையில் நடந்த அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவைக் கூட்டத்திலோ, அல்லது செய்தியாளர் சந்திப்பிலோ, கலகத்தை தூண்டும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ எந்தக் கருத்தையும் ராமதாஸ் தெரிவிக்கவில்லை. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும், பின்னர் ராமதாஸ் அளித்த நேர்காணலிலும் வன்கொடுமை தடுப்பு சட்டம் சிலரால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் கருவறை நுழைவு போராட்டம் பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது

கோவில் கருவறை நுழைவு போராட்டம்: தந்தை பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது சென்னை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவில் கருவறை நுழைவு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு ஊர்வலமாக செல்லப்போவதாகவும் அறிவித்திருந்தனர். இதையொட்டி இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செலயாளர் கோவை ராம கிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் லஸ்கார்னர் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பார்க் அருகே திரண்டனர். தீண்டாமை ஒழிப்பு என்பதற்கு பதில் சாதி ஒழிப்பு என்று சட்டத்தை திருத்துமாறு கண்டன வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஊர்வலத்தினர் ஏந்தி வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து கபாலீசுவரர் கோவிலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள். இதற்கிடையே இந்து அமைப்பினரும், பாரதீய ஜனதா கட்சியினரும் கபாலீசுவரர் கோவில் முன்பு திரண்டு நின்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு எதிராக கோஷ மிட்டபடி நின்றிருந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்பட்டதால் ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.maalaimalar.com

புருனே சுல்தான்: உலகின் நம்பர் 1 ஆடம்பர-வக்கிரம்!

புருனே சுல்தான் ராணியுடன்
கெபாவா துலி யாங் மஹா முலியா பாதுகா சேரி பாகிந்தா சுல்தான் ஹாஜி ஹஸ்ஸனல் போல்கியா அல் முயிஜாதீன் வதாவுல்லா இப்னி அல்மார்ஹம் சுல்தான் ஓமர் அலி சாய்புதீன் சாஅதுல் காய்ரி வாத்தியன் ஜிசிபி, ஜிசிஎம்ஜி (கொஞ்சம் மூச்சு வாங்கிக்குங்க) என்ற பெயர் படைத்த புருனே சுல்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர்.
1946-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்த சுல்தானுக்கு கடைசியாக கிடைத்த தகவல்களின் படி 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர்.  ராணி அனக் சலேஹா முதல் மனைவியாக செயல்படுகிறார். சுல்தானது இரண்டாவது மனைவி ராணி மரியத்தை 2003-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்போதைய இரண்டாவது மனைவி அஸ்ரினாஸ் மஹர் ஹக்கீம் சுல்தானை விட 32 வயது இளையவர்.

விஜயகாந்: திமுக 7000 மெகவாட் மினுற்பத்திக்கு திட்டமிட்டது அதை கிடப்பில் போட்டதே தட்டுப்பாட்டுக்கு காரணம்

“கருணாநிதியை சட்போட் பண்ண 1008 வழிகள் உள்ளன!” விஜயகாந்தின் முதல் சிக்னல்!!

Viruvirupu
வெட்டினாலும் ஒட்டும் ‘கட்’டும் எனக்கு தெரியும்! ஒட்டியதை வெட்டும் ‘கட்’டும் எனக்கு தெரியும்!
“கருணாநிதிக்கு நான் இப்படி ‘சப்போர்ட்’ பண்ண வேண்டியதில்லை. ‘சப்போர்ட்’ பண்ண வேண்டுமென்றால், எனக்கு ‘வேறு வழிகள்’ பல இருக்கின்றன” என்று முதல் தடவையாக சிக்னல் கொடுத்திருக்கிறார், விஜயகாந்த். கருணாநிதியுடன் விஜயகாந்த் நெருங்கி வருகிறார் என்று கூறப்படும் நேரத்தில் இப்படி பேசியிருக்கிறார், கேப்டன்.
சென்னை, கோயம்பேடு, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் பேசிய விஜயகாந்த், “கடந்த ஆட்சியைப் பற்றி, ஜெயலலிதா, கடும் விமர்சனம் செய்தார். அப்போதைய முதல்வர் கருணாநிதி, அதை பெருந்தன்மையாக விட்டுவிட்டார். இப்போது, மின்வெட்டு, விலைவாசி உயர்வு பற்றிப் பேசினால், வழக்குப் போடுகின்றனர்” என்றார்.

Delhi bus rape சென்னை கடற்கரையில் ஆர்ப்பாட்டம்

 Delhi gang-rape: Chennai women march in protest at midnight
Around four hundred people mostly young women took to the streets along the Marina beach past midnight demanding a safer environment for women across the country to move freely without being raped as they put it.
நேற்று நள்ளிரவில் சுமார் நானூறுக்கும் அதிகமான மக்கள் சென்னை மெரினா கடற்கரையில் கூடி டெல்லி பாலியல் சம்பவத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை காட்டினர் .  

ஆங்கிலத்தில் கண்ணதாசனின் உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும்

ஆங்கிலத்தில் கண்ணதாசன் பாடல் சென்னை : ‘பாசம்’ படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல், ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக...’. இதை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பாடியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சேதுமணி அனந்தா என்பவர் இயக்கி வரும், ‘மனிதனாக இரு’ என்ற படத்தில் இது இடம்பெறுகிறது.
இதுபற்றி அவர் கூறியதாவது: நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவர் அடிக்கடி கூறும் மனிதனாக இரு என்ற வார்த்தையையே தலைப்பாக வைத்து படம் இயக்குகிறேன். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கூட்டுக்குடும்ப வாழ்க்கை, தேசப்பற்று இவற்றை வலியுறுத்தும் படம். எம்.எஸ்.விஸ்வநாதன் 19 பாடல்கள் போட்டுள்ளார். அதில் 10 பாடல்கள் இதில் இடம்பெறுகிறது. ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்ற நோக்கில் உலகம் பிறந்தது எனக்காக பாடலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமைத்திருக்கிறோம்

200 ஆண்டுகால வரலாறு...கேட்பதற்குத்தான் நாம் தயாராக இல்லை

 கேளாத செவிகள்   பாராத விழிகள் BR. மகாதேவன்; sedition மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 21
கடந்த கால சாதிய வாழ்க்கை குறித்து பெரும்பாலானவர்களால் தீட்டப்படும் பொதுவான சித்திரம் ஒன்று இருக்கிறது. அதில் இருண்ட ஓர் அறையில், எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாத வகையில் சிறிதளவே வெளிச்சம் இருக்கும். ஒரு நடுத்தரவயது ஆண்மகன் ஒட்டிப் போன வயிறு, இடுங்கின விழிகள், சுருக்கம் விழுந்த நெற்றி என்ற தோற்றத்தில் இருப்பார். கோமணம் மட்டுமே அணிந்திருப்பார். அவருடைய தோளில் ஒரு பறை தொங்கிக் கொண்டிருக்கும். இடுப்புக் கயிற்றில் பறையை அடிப்பதற்கான குச்சிகள் செருகப்பட்டிருக்கும். அந்த ஆண் மகனுக்குப் பக்கத்தில் ஒரு பெண் கிட்டத்தட்ட சம வயது கொண்டவர் நின்று கொண்டிருப்பார். புடவையை மட்டுமே உடுத்தியிருப்பார். ரவிக்கை கிடையாது. தோளில் ஒரு கள்ளு கலயம் இருக்கும். இடுப்பில் ஒரு குழந்தை. வயிற்றில் ஒன்று. காலடியில் இரண்டு மூன்று குழந்தைகள் இருப்பார்கள். இந்த குடும்பத்தினரின் கையில் வயதுக்குத் தகுந்த பிச்சைப் பாத்திரங்கள் இருக்கும். இருண்ட அவர்களுடைய வீட்டில் நான்கு ஜன்னல்கள் இருக்கும்.

ராமதாசுக்கு கலெக்டர் நோட்டீஸ்,, சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில்

சாதி கலவரத்தை தூண்டும் பேச்சு: டாக்டர் ராமதாசுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ் மதுரை: தமிழகத்தில் சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியுள்ளார் மதுரையில் 51 சாதி சங்கங்களை திரட்டி அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையை சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் உருவாக்கியிருந்தார். இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், நாடக காதல் திருமணங்களால் பாதிக்கப்படும் பெற்றோர்களைப் பாதுகாக்கவும் அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுவதாகக் கூறினார். மேலும் இந்த அமைப்பின் சார்பில் ஜனவரி 24-ந் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ராமதாஸ் கூறியிருந்தார். ராமதாசின் இந்த பேட்டிக்காக ஏன் உங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டும் உங்கள் பேச்சு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரியும் ராமதாசுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.மேலும் அந்த நோட்டீசில் குற்றவியல் சட்டம் 144-வது பிரிவின் கீழ் இந்த பேச்சுக்காக மதுரை மாவட்டத்துக்குள் நீங்கள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என்றும் கேட்கப்பட்டிருக்கிறது.

Delhi 6 பேரும் என்னை சீரழித்து விட்டனர். 30 நிமிடம் வரை அந்த பயங்கரம்

 பஸ்சில் நடந்த பயங்கரத்தை விவரித்த மாணவி: மாஜிஸ்திரேட்டிடம் உருக்கமான வாக்குமூலம்.
புதுடெல்லி, டிச.24 - பஸ்சில் நடந்த 30 நிமிட பயங்கரத்தை மாணவி வாக்குமூலமாக அளித்தார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட மாணவி ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெற்று வருகிறார். 3 நாட்கள் அவர் அபாய கட்டத்தில் இருந்தார். வயிற்றில் இரும்பு கம்பியால் தாக்கியதால் குடல் பகுதி பாதிப்பு அடைந்தது. இதற்கு பல ஆபரேஷன்கள்  நடந்தன. தற்போது மாணவி குணம் அடைந்து வருகிறார். அவருக்கு சுய நினைவு திரும்பியது. செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. நண்பர் சந்திப்பு நேற்று மாணவியை அவரது சாப்ட்வேர் என்ஜினீயர் நண்பர் சந்தித்து நலம் விசாரித்தார். அவரைப் பார்த்ததும் மாணவி தெம்பாக காணப்பட்டார். அவரது உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு உடல் உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கின. இதையடுத்து அவரை அடிக்கடி வந்து பார்த்துச் செல்லுமாறு நண்பரிடம் டாக்டர்கள் அறிவுறுத்தினர். நேற்று இரவு முழுவதும் நண்பர் மாணவியுடன் அருகில் இருந்தார்.  மாணவியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பெற முடிவு செய்யப்பட்டது. இரவு 9.30 மணிக்கு டெல்லி மாஜிஸ்திரேட்டு, ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் மாணவி பஸ்சில் நடந்த கொடூர பயங்கரத்தை விவரித்தார். மாணவி தெரிவித்த விவரங்கள் டேப்பில் பதிவு செய்யப்பட்டது. அப்போது தெற்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சாயாசர்மா உடன் இருந்தார். மாணவி அளித்த வாக்குமூல விவரங்களை அவர் வெளியிட்டார். வாக்குமூலத்தில் மாணவி கூறியிருப்பதாவது.
கடந்த 16-ந் தேதி இரவு நான் எனது நண்பருடன் முனிர்கா பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது ஒரு பஸ் வந்து எங்கள் அருகே நின்றது. 16 வயது சிறுவன் ஒருவன் படிக்கட்டில் நின்றவாறு எங்களைப் பார்த்து பஸ் பாலம் நோக்கி செல்கிறது ஏறிக்கொள்ளுங்கள் என்றான்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

Delhi Bus Rape போராட்டம் புரட்சியாகவெடித்திருக்கிறது

டெல்லியில் நடந்த பேருந்து கற்பழிப்பு சம்பவம் இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆட்சியாளர்கள்  எண்ணியிருக்க மாட்டார்கள், தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் வெறும் ஒரு சம்பவத்திற்காக என்று நினைத்தால் அது தவறாகும் . ஆண்டாண்டு காலமாக பெண்கள் ஒடுக்கப்பட்டு வருவதற்கு எதிரான ஒரு புரட்சியாக இது வெடித்திருக்கிறது . பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு பெரிய தண்டனை வழங்கும் சட்ட சீர்திருத்தம் உடனே கொண்டு வருவது அவசியம் 
புதுடெல்லி: பஸ்சில் மாணவியை பலாத்காரம் செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வலியுறுத்தி, டெல்லியில் விடிய விடிய போராட்டம் நடத்தியவர்களை போலீசார் இன்று காலை அப்புறப்படுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரள்வதை தடுக்க இந்தியா கேட், ரெசினா ஹில்ஸ் பகுதியில் உள்ள 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் போலீசார் தடை உத்தரவும் பிறப்பித்துள்ளனர். இதற்கிடையே, போராட்டக்காரர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு திடீரென சந்தித்து, ‘குற்றவாளிகளுக்கு நிச்சயம் கடும் தண்டனை வழங்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் பஸ்சில் மருத்துவ மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு வெளியில் தூக்கி வீசப்பட்டார். கடந்த 6 நாட்களாக அளித்த தீவிர சிகிச்சைக்கு பிறகு மாணவியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பலாத்காரம் செய்தது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், மாணவியை பலாத்காரம் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், தன்னார்வ அமைப்புகள், மகளிர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

போராட்ட செய்தி சேகரிக்க சென்ற டி.வி. நிருபர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலி!

Viruvirupu
நடிகை மொமோகோ
நடிகை மொமோகோ
மணிப்பூரில் நடிகை மொமோகோ விவகாரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், செய்தி சேகரித்துக் கொண்டிருந்த டிவி நிருபர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
தாக்கப்பட்ட பின் நடிகை மொமோகோநடிகை மொமோகோ மீது கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலுக்கு இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து இம்பாலில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, நாகலாந்து அமைப்பினருக்கு எதிராக திரண்ட இளைஞர்கள் சிலர் பஸ் ஒன்றுக்கு தீ வைக்க முயற்சித்தனர். அதைத் தடுக்கும் வகையில் கலவரக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது அங்கு நின்று செய்தி சேகரித்துக் கொண்டிருந்த டி.வி. நிருபர் ஒருவர் மீது 2 குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அந்த நிருபர் உயிரிழந்திருக்கிறார்
மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்தில் கடந்த 18-ம் தேதி நடிகை மொமோகோ இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். தாக்கப்பட்ட பின் நடிகை மொமோகோ< சாண்டல் பஜார் ஹைஸ்கூல் மைதான விழா மேடையில் இருந்த மொமோகோவை அங்கு வந்த NSCN (National Socialist Council of Nagaland – நாகலாந்து தனிநாடு கோரும் இயக்கம்) தளபதிகளில் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாகத் தாக்கி வீழ்த்தினார். எழுந்த நடிகையை மீண்டும் மீண்டும் தாக்கி வீழ்த்திய இந்த சம்பவம் மணிப்பூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாஞ்சில் சம்பத் மீதிப் பணத்தில் எஸ்டேட்​டும் வாங்கிப் போட்டார்.

நாஞ்சில் சம்பத்தை விரட்டும் மறுமலர்ச்சி பஞ்சாயத்து! புதுக் கட்சி, புதுப் பதவி, புது காரு, கலக்குற சம்பத்!’ என்று சொந்தங்கள் தட்டிக்​கொடுக்க, அ.தி.மு.க. சாதனை விளக்கக் கூட் டங்களில் பங்கேற்க தமிழகம் முழுவதும் பயணிக்​கிறார் அ.தி.மு.க-வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்! இந்த நிலையில், நாகர்கோவிலில் நடந்த மாவட்ட ம.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில், நாஞ்சில் சம்பத்துக்கு ஒரு செக் வைத்துள்ளனர் அந்தக் கட் சியினர். இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லை செல்வம், ''ம.தி.மு.க-வை வீதி எல்லாம் சென்று விதைத்ததாக நாஞ்சில் சம்பத் மீடியாக்களில் பேட்டி கொடுக்கிறார். இவருக்காகக் கூட்டம் கூடியது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், ஒரு பேச்சாளர் என்ற முறை​யில் கறாராகப் பணம் வாங்கிக்கொண்டுதான் கூட்டங்​களுக்கு வருவார். கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், எங்காவது இலவசமாகப் பேசி இருக்கிறாரா? ஒரு பேச்சாளர் என்ற தளத்தையும் தாண்டி, மேடை அமைப்பு மற்றும் கூட்டம் நடத்தும் இடம் என்றெல்லாம் சகல விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார். கட்சிக்கு உழைத்ததால் இவர் மீது 48 வழக்குகள் இருப்பதாக அனுதாபம் தேடுகிறார். ஆனால், அத்தனையும் இவரது அவதூறுப் பேச்சுக்குக் கிடைத்த பரிசுதான். குருவாயூர் கோயி​லுக்கு யானை கொடுத்த சமயத்தில் ஜெயலலிதாவையும் சசிகலா​வையும் பற்றி இவர் கேலியாகப் பேசியதும், கனிமொழி, ஸ்டாலின் போன்றவர்​களைத் தரக்குறைவாக விமர்சித்ததும் வைகோ சொல்லிக்கொடுத்தா பேசினார்?

Tamilnadu இந்த ஆண்டு 528 கற்பழிப்பு குற்றங்கள் நடந்துள்ளன

சென்னை: தமிழகத்தில் கற்பழிப்பு குற்றங்கள் பெருகி வருகின்றன. இந்த ஆண்டு 528 கற்பழிப்பு குற்றங்கள் நடந்துள்ளன என்று கருணாநிதி கூறியுள்ளார்.   திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில்:
 மீண்டும்.தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாரே?டெல்லியில் பேருந்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலேயே பிரச்னை எழுப்பப்பட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையை பெண்களே முற்றுகையிட முயற்சி செய்கின்ற அளவுக்கு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் என்ன நிலை? 21&12&2012 ஆங்கில நாளிதழில் தமிழகத்தில் கற்பழிப்பு குற்றங்களைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் கற்பழிப்புக் குற்றங்கள் 9 சதவீதம் அதிகம் என்று கூறியுள்ளது. தமிழ்நாடு போலீஸ் பற்றிய வலைதளத்தில், 2011ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை தமிழ கத்தில் 484 கற்பழிப்பு குற்றங்கள் என்பதற்கு மாறாக 2012ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 528 கற்பழிப்புக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 528 குற்றங்களில், பெரும்பாலானவை அதாவது 75 கற்பழிப்புக் குற்றங்கள் சென்னை மாநகரில் மட்டும் பதிவாகியுள்ளன.
பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாகப் பணியாற்றும் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் தரப்பட்டு, அந்தப் பெண் ஊழியர் விஷம் அருந்தியதாக செய்தி வந்துள்ளது.அதுமாத்திரமல்ல, திருவைகுண்டம் அருகில் பள்ளிக்குச் சென்ற 7ம் வகுப்பு மாணவி 12 வயதான புனிதா, மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, அனைத்து நாளேடுகளிலும் அது பற்றிப் பெரிதாகச் செய்தி வந்துள்ளது. ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் போதே, தமிழகத்துப் பெண்களுக்கு நேர்ந்து வரும் கொடுமைகள் பெருமைப்படும்படியாகவா இருக்கின்றன?

அன்று கருணாநிதி என்னை வற்புறுத்தினார்

Viruvirupu
என்னை வற்புறுத்திய அவரும் கறுப்பு கண்ணாடிதாங்க போட்டிருந்தார்!
என்னை வற்புறுத்திய அவரும் கறுப்பு கண்ணாடிதாங்க போட்டிருந்தார்!
“ஜெயலலிதாவை விட்டு விலகி, அவருக்கு எதிராக சாட்சியம் சொல்லும்படி கலைஞர் என்னை வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னரே என்மீது வழக்கு தொடரப்பட்டது” இவ்வாறு பெங்களூரு நீதிமன்றத்தில் தெரிவித்தார், சசிகலா.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட, அளவுக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் கலந்துகொண்ட சசிகலா, நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணாவின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது அவர், இந்த வழக்கில் எனது பெயர் இடைச் செருகலாக பின்னர் சேர்க்கப்பட்டது என்றார்.
“கடந்த 1996-ம் ஆண்டு ஜெயலலிதாமீது மட்டுமே வழக்கு போடப்பட்டது. அதாகப்பட்டது என்னை எப்படியாவது கழட்டி விட்டுடுங்க சார் ஜெயா வழக்கை என்னவாச்சும் பண்ணிக்குங்க