சனி, 23 மார்ச், 2019

ஜெயலலிதா.. இந்து பத்திரிகையின் பச்சை பொய் .. அப்போலோவில் அம்மையார் குணமடைந்து விட்டார்..

LR Jagadheesan : ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி அவரது உடனுறை
தோழியும் அதிமுக கட்சியும் மட்டுமா பொய்த்தகவல்களை பரப்பினார்கள்?
ஆனப்பெரிய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதற்கான ஒரு சோற்றுப்பதமான சாட்சியங்கள் இந்த screenshotகள்.
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று சொன்ன சி ஆர் சரஸ்வதி போன்ற அதிமுக கட்சிக்காரர்களை இன்றுவரை கலாய்க்கும் யாரும் அதே போன்ற பொய்களை அவர்களை விட அழகாக சொன்ன, பரப்பிய இந்த ஊடகங்களையோ ஊடக ஜாம்பவான்களையோ இன்றுவரை ஒரே ஒரு கேள்வி கேட்கவில்லை என்பது எவ்வளவு பெரிய விசித்திரம்? விடுபடல்?
அதுவும் ஒரு உலகறிந்த ஊடகம். உலக அளவில் இன்றுவரை மதிக்கப்படும் மிகச்சில இந்திய ஊடகங்களில் முதன்மையான ஊடகமும் கூட. உலக அளவில் இருக்கும் இயங்கும் ஆனப்பெரிய ஊடகங்களுக்கான பெரிய பெரிய சர்வதேச நிறுவனங்கள், அமைப்புகளில் எல்லாம் உறுப்பினராக இருந்தபடி இன்றுவரை ஆதிக்கம் செலுத்தும் ஒரு பிரதான இந்திய ஊடகமும் அதன் ஆனப்பெரிய ஆசிரிய பீடத்தை அலங்கரித்தவர்களும் ஜெயலலிதா குறித்து சொன்ன, பரப்பிய பொய்கள் கொஞ்சமா? நஞ்சமா?

சுந்தர தெலுங்காகிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்

Anirutha Brammarayan :
சீமானின் தெலுங்கு வாரிசு அரசியல்
எந்த கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டாலும், உடனடியாக லேப் டெஸ்ட் செய்து யார் யாருக்கு வாரிசு, தெலுங்கு யார் எனக் கூறுவதில் நாம் தமிழர் சீமான் கட்சியினர் கைதேர்ந்தவர்கள்.
சரி இந்த ஒருமுறை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு லேப் டெஸ்ட் செய்து நம்ம அறிவிப்போம் நாங்க ஒரு டீம் கிளம்பினோம். அப்ப தான் விருதுநகர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் அருள்மொழித்தேவன் என்ற தகவல் வந்தது. அருமையான பெயர். இவருக்கே லேப் டெஸ்ட் ஆரம்பிப்போம் என இறங்கினோம்.
முன்னாள் சபாநாயகர் காளிமுத்து எம்எல்ஏ ஆவதற்கு முன் தமிழாசிரியராக வேலைபார்த்தார். அப்போது அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தனர். அவரது மனைவி பெயர் நிர்மலா. தீவிர கிறித்துவரான அவர் காளிமுத்துவின் சாதியான தேவர் சாதியைச் சேர்ந்தவர். அவரது குழந்தைகளுக்கு காளிமுத்துவின் திராவிடத் தமிழும் மனைவியின் கிறித்துவப் பெயர்களும் சேர்ந்து வைக்கப்பட்டன. நிர்மலா-காளிமுத்து தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் மருத்துவர் புனிதா ஆனந்த், டேவிட் அண்ணாதுரை, செந்தமிழ் சாம்ராஜ், தென்றல் வேதமணி, ரோசலின் கிரேஸ்.
இதில் டேவிட் அண்ணாதுரை என்பவர் தான் மதுரையில் டிடிவி தினகரன் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கமிலா நாசர் .. குடும்பத்தை கைவிட்ட கமல் கட்சி தென்சென்னை வேட்பாளர் .. நடிகர் நாசரின் குடும்பம் வறுமையில்

கமல் கமீலா நாசர்
nassar kameelatoptamilnews.com/ :சொந்தக் குடும்பத்தைத் தவிக்க விட்ட கமீலா நாசர் - இது உங்க கண்ணுக்கு தெரியலையா கமல் கமல் கமீலா நாசர் வீட்டிற்கு வெளியே புரட்சி, மாற்றம் என்று சமூகத்திற்காகவே வாழ்வதாக சொல்லிக் கொள்ளும் பெரும்பாலானோரைப் பற்றிய உண்மைகள் அவர்கள் வீட்டில் விசாரித்தால் தான் தெரிய வரும். பொதுவாக ஆண்களில் பலர் இந்த வகையில் வருவார்கள். பொதுவாழ்வில் நல்லவர்கள் போல் காட்டிக் கொண்டு தங்கள் அதிகாரத்தை முழுமையாக வீட்டில் செலுத்துவார்கள் என கேள்வி பட்டிருப்போம். மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர் :
ஆனால், நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்டக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மேல் இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர் குடும்ப உறுப்பினர்களால்.
நடிகர் நாசர் தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தக் கூடிய நடிகர். கமலஹாசனுக்கு நல்ல நண்பரும் கூட. இதனாலேயே மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டதில் இருந்தே நாசர் மனைவி கமீலா நாசரும் கமல்ஹாசனுடன் கட்சி பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

பள்ளி மாணவர்களுடன் உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது

201903221238257312_An-unreliable-relationship-with-school-students-The-teacher_SECVPF.gif  பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு 201903221238257312 An unreliable relationship with school students The teacher SECVPF tamiloneindia : பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
நித்யா, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக உமேஷ்குமார், மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார்.
மேலும் நித்யா இதற்கு முன்பு செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரியும் போது பள்ளி மாணவர்களிடமும் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

2.1 கோடி பெண் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டிருப்பது திட்டமிட்ட சதி?

      தினமலர் :பு துடில்லி : வாக்காளர் பட்டியலில் இருந்து நாடு முழுவதும் 2.1 கோடி பெண் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசும், தேர்தல் கமிஷனும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 2.1 கோடி பெண்களின் பெயர்கள் விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை ? | வழக்கறிஞர் லஜபதிராய் நேர்காணல்


நாடார் வரலாறு கறுப்பா? காவியா? – நூல் வெளியீட்டு விழாவுக்காக கடந்த மார்ச் 22, 2019 அன்று சென்னை வந்திருந்த வழக்கறிஞர் லஜபதி ராய் அவர்களிடம் இந்நூல் உருவான வாரலாறு குறித்தும் இந்த நூல் பேசும் வரலாறு குறித்தும் எடுக்கப்பட்ட நேர்காணல் !
கேள்வி : நாடார்கள் வரலாறு – கருப்பா? காவியா? என்ற இந்த புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டிய அவசியம் என்ன? அதற்கான சமூகக் காரணம் என்ன?
கேள்வி : நடைமுறையில் நாடார் சமூக மக்கள் காவியா என்று கேள்வி எழுப்பும் தேவை இப்போது இருக்கிறதா?
கேள்வி : தென் தமிழக இந்து நாடார் மக்கள் மறக்க நினைக்கும் வரலாறு இது என்கிறீர்கள். அம்மக்கள் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி முன்னேறியது என்பது தங்களை ஒடுக்கிய இந்துமதத்தை எதிர்த்து சண்டையிட்டு மையத்திற்கு வந்தார்களா? இல்லை தனக்கு மேலே உள்ள சாதிகளின் பொருளாதாரத்தோடு போட்டியிட்டு மையத்திற்கு வந்தார்களா?

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டி? ... கேரளா

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டி?மின்னம்பலம் : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கும் மக்களவைத் தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. காங்கிரஸின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமேதி தொகுதியுடன் கூடுதலாக தென்மாநிலங்களில் ஏதாவது ஒரு இடத்தில் ராகுல் போட்டியிட வேண்டுமென தமிழ்நாடு, கேரள, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்திவந்தனர்.

டெல்லியில் இந்து பயங்கரவாதிகள் முஸ்லிம் குடும்பத்தை பாகிஸ்தானுக்கு போகுமாறு அடித்து வீடியோ


பாகிஸ்தானுக்கு போங்க.. குழந்தை, பெண்கள் என பாராமல் முஸ்லிம் குடும்பத்தை அடித்து உதைத்த கும்பல்
Vishnupriya R : டெல்லி: குருகிராமில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினரை குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தை  பாஜகாவை சேர்ந்த  35-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கடுமையாக அடித்து உதைத்தனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் போண்ட்ஸி பகுதியில் நேற்று 4 முஸ்லிம் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வீட்டுக்குள் 35-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்தனர். அவர்கள் கையில் ஹாக்கி குச்சி, இரும்பு கம்பிகள், உருட்டுக் கட்டைகள் ஆகியவற்றை கொண்டு அனைவரையும் தாக்கினர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைவரையும் அவர்கள் தாக்கினர்.
மேலும் அவர்களை கிரிக்கெட் விளையாட கூடாது என்றும் பாகிஸ்தானுக்கு செல்லுமாறும் அந்த கும்பல் அவர்களை விரட்டியடித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் இந்த தாக்குதல் முரட்டுத்தனமானது. கண்டிக்கத்தக்கது. தேர்தல் நேரத்தில் பாஜக நடத்தும் நாடகம் என்பதால் நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர். tamil.oneindia.com/

லாலு - காங்கிரஸ் கூட்டணி ..பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 20 தொகுதிகள் . காங்கிரஸ் 9 தொகுதிகள்

மாலைமலர் : பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
பீகாரில் லாலு கட்சி-காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்து போட்டி பாட்னா: பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கொண்டுள்ள பீகார் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்கு ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், பாரதீய ஜனதா கட்சியும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணிக்கு சரியான போட்டியை ஏற்படுத்துகிற விதத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக்சமதா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது), விகாஷீல் இன்சான் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த கட்சிகள் இடையே நேற்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 40 இடங்களில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் தரப்பட்டுள்ளன.
உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேமுதிகவுக்கு பணம் இன்னும் வரவில்லை ... வந்தாலும் வேட்பாளர்களுக்கு கிடைக்குமா?

தினமலர் : தேர்தல் செலவுக்கு, கட்சி தலைமை பணம் வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன், தே.மு.தி.க., வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய, நான்கு தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது.
கள்ளக்குறிச்சியில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். விருதுநகரில், அழகர்சாமி; வட சென்னையில், மோகன்ராஜ்;திருச்சியில், டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிடு கின்ற னர். இதில், சுதீஷை தவிர, மற்ற மூன்று வேட்பாளர்களும் வசதி குறைந்தவர்கள்.

தமிழக புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு .. சிவகங்கை. இன்னும் அறிவிக்கப்படவில்லை

தேனி-  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
திருச்சி - திருநாவுக்கரசர்
திருவள்ளுர் -  கே.ஜெயகுமார்
புதுச்சேரி- வைத்தியலிங்கம்
கன்னியாகுமரி - எச்.வசந்தகுமார்
ஆரணி  டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத்
கரூர் ஜோதி மணி
விருதுநகர் -  மாணிக்கம் தாகூர்
கிருஷ்ணகிரி -  டாக்டர் ஏ.செல்வகுமார்
சிவகங்கை இன்னும்அறிவிக்கப்படவில்லை
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
மாலைமலர்  : தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை திமுக கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

எடியுரப்பா லஞ்ச டைரி : நீதிபதி 250 கோடி .. அருண் ஜெட்லி 150 கோடி ..நிதின் கத்காரி 150 கோடி ..அத்வானி 50 கோடி .......

Swathi K : நீதிபதி: 250 கோடி
அருண் ஜெட்லீ: 150 கோடி
நிதின் கட்கரி: 150 கோடி
ராஜ்நாத் சிங்: 100 கோடி
அத்வானி: 50 கோடி
முரளி மனோகர் ஜோஷி: 50 கோடி
வக்கீல்: 50 கோடி

மற்றும் பல....
இதெல்லாம் என்ன என்று கேக்குறீங்களா??
எடியூரப்பா பிஜேபி தலைவர்களுக்கு கொடுத்த ஊழல் பணம் பற்றி அவரே 2009 கைப்பட எழுதிய டைரியில் இருந்து கிடைத்த தகவல்..
சில வருடங்களுக்கு முன் எடியூரப்பா வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது.. அதில் மாட்டிய டைரியில் இருந்த இந்த தகவலை கேரவன் பத்திரிக்கை இன்று வெளியிட்டது..
அந்த டைரி குறிப்பு 2009ல் எடியூரப்பா எழுதியது..
10 வருடங்களுக்கு முன்பே ஆயிரம் கோடிகளில் பிஜேபியின் மாநில தலைவர் அவரது கட்சியின் மூத்த தலைவர்கள், நீதிபதிக்கு கறுப்புப்பணம் கொடுக்க முடிந்தால்.. இன்று அந்த கட்சியின் தேசிய தலைவர்களை யோசிச்சு பாருங்கள்.. உங்களுக்கே புரியும் உலகில் மாபெரும் ஊழல் கட்சி பிஜேபி தான் என்று..

தொல்.திருமாவளவன் .. இந்தியாவின் நம்பிக்கை.. Tirumavalavan is a Parliamentarian in all aspects.

Shalin maria lawrence : மக்கள் தலைவர் திருமாவளவன் ஏன் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்?
நாம் நிறைய எம்பிக்களை பார்த்திருப்போம். ஓட்டு கேட்க வருவார்கள், பின்பு தொகுதி பக்கம் பார்க்கவே முடியாது. அவ்வவ்போது சென்னை விமான நிலைய வாசலில் பத்து மைக்குகள் முன்பு பேசுவார்கள். பெரிய பெரிய விழாக்களில் கலந்து கொள்வார்கள். டெல்லிக்கு போய் அங்கே வித விதமாக ஸ்வெட்டர் போட்டு போட்டோவில் நிற்பார்கள். எப்பொழுதாவது மக்களவையில் ஏதாவது ஒரு கேள்வி மேம்போக்காக கேட்டு முடித்துவிட்டு அமர்ந்து உறங்குவார்கள்.
இன்னும் சொல்லப்போனால் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை, பாராளுமன்றத்திற்கு சரியாக செல்லாத, வேலை செய்யாத எம்பிக்கள் பட்டியல் வரும், அதில் சிரித்து கொண்டிருப்பார்கள். இந்த வருடம் அப்படி மிகவும் மோசமான (மாங்கா) எம்பி என்று பெயரெடுத்தவர் ஒருவர் இதே தமிழகத்தில் தான் இருக்கிறார்.
இந்தியாவில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கடமைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
முதலில் பாராளுமன்றதிற்கு ஒழுங்காக செல்லவேண்டும். Attendance.
இரண்டாவது ஆக்கப்பூர்வமான நல்ல பல கேள்விகளை எழுப்ப வேண்டும். Participation.
மூன்றாவது மிக முக்கியமானது பாராளுமன்றத்தில் நடக்கும் முக்கிய விவாதங்களில் தெளிவோடும் முழு மூச்சோடும் கலந்துகொண்டு ஆதாரப்பூர்வமாக அறிவுப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்.

வெள்ளி, 22 மார்ச், 2019

பாஜகவுக்கு ஆப்பு வைக்கப் போகும் வேலையின்மை!


மோடி யசோதா  திருமண படம்
savukkuonline.com : 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு
வெளியானதற்குப் பின் வந்த முதல் வாரத்தில் மற்ற வழக்கமானப்
பிரச்சனைகள் பின்தள்ளப்பட்டன. தேசப் பாதுகாப்பு குறித்த கவலை மட்டுமே நம் முன் நிறுத்தப்பட்டன. ஆனால் நாம் முதல் கேள்வியாக கேட்கவேண்டியது இதைத் தான். ‘இந்தத் தேர்தலில் வேலையின்மை பிரச்சினை என்பது சத்தமில்லாமல் கொல்லுமா?”  என்பதுதான் கேள்வி. நமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு
ஆதாரமும் இது சாத்தியமே என்கின்றன. ஆனால், இதை ஒரு சாத்தியம் என்கிற அளவில் மட்டும்தான் தற்போதைய சூழலில் பார்க்க முடிகிறது.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ‘நீடித்த வேலைவாய்ப்புக்கான மையம்’ (Centre for Sustainable Employment) உரிய தரவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கைக்கு ‘உழைக்கும் இந்தியாவின் நிலை – 2018’ என்று
பெயரிட்டிருக்கின்றனர். வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த இந்த ஆய்வறிக்கையில் (https://bit.ly/2TccoN3), தற்போதைய வேலையின்மை நிலை குறித்து மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலையின்மை என்பது நாள்பட்ட பிரச்சினையாக, ஆனால், கண்ணுக்குத் தெரியாததாக இருந்தது. அரசியல் ரீதியாகச் சமாளிக்கத்தக்கதாகவும் இருந்தது. இன்று அது கடுமையானதாகவும் வெளிப்படையாக உணரத்தக்கதாகவும் மாறிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய பிரச்சினையாக அது இப்போது உள்ளது. கிராமங்களிலும், அங்கிருந்து நகரத்தில் குடிபெயர்ந்தும் வாழ்கிற கிராமவாசிகளின் வேலையின்மைப் பிரச்சனை (Open unemployment) 5 சதவீதம் அதிகரித்திருப்பதாக அசிம் பிரேம்ஜி ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர்கள், படித்தவர்கள் மத்தியில் உள்ள வேலையின்மைப் பிரச்சனை 15 சதவீதத்துக்கும் மேலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் திமுக வேட்பாளர் ரமேஷ் ! .. சொந்தக் கட்சியினரிடமே அறிமுகம் இல்லாத வேட்பாளரை மக்களிடம் எப்படி அறிமுகம் செய்வது?

திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: வெளிநடப்பு செய்த விசிக மா.செ!மின்னம்பலம் : நெய்வேலி தொமுச அலுவலகத்தில் நேற்று முன்தினம் கடலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் மேற்கு மாவட்டச் செயலாளர் வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஒரு கட்சியில் ஒருவருக்குத்தான் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுராந்தகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் சொந்த ஊர் நெல்லிக்குப்பம், கடலூர் தொகுதியில் வருவதால் அழைப்பு இல்லாமலேயே கலந்துகொண்டு பேசிய அவர், “வேட்பாளர் ரமேஷை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. எனக்கும் அவரைத் தெரியாது, அவருக்கும் என்னைத் தெரியாது, இருந்தாலும் தலைமை அறிவிப்பை ஏற்று நாம் வெற்றிபெற உழைக்க வேண்டும்” என்றார்.
விசிக சார்பில் மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தனும், அக்கட்சியைச் சேர்ந்த கடலூர் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் தாமரைச்செல்வனும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய தாமரைச்செல்வன், “விசிகவும் தவாகவும் சேர்ந்து இந்தத் தேர்தலில் மாம்பழத்தை நசுக்கி பிழிந்திடுவோம்” என்று கூறினார்.
தாமரைச்செல்வனுக்குப் பேச அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், மாவட்டச் செயலாளரான முல்லைவேந்தனுக்குப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முல்லைவேந்தன், எனக்கு முக்கியத்துவம் இல்லாதபோது நான் ஏன் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

A biography of the Tamil language reveals its influence on Sanskrit and Hebrew


By Veena Muthuraman
Writing the biography of a living entity, human or otherwise, comes with a certain risk. When the entity in question is a language that effortlessly stakes its claim to both antiquity and continuity, and one rather close to the epicentre of language wars in the sub-continent, emotions can run high. The biographer of such an entity needs to perform a delicate balancing act between doing justice to its history and culture and not giving in to the shrill agendas and counter-agendas of modern day polity.
David Shulman, in his Tamil: A Biography, performs the task with élan, with unaffected erudition and an infectious charm that leaves the reader breathless and, at times, puzzled at how endearing the evolution of a language could turn out to be. There is no doubt that Shulman, the foremost Indologist from the Hebrew University in Jerusalem, is uniquely qualified to do this job given a lifetime of scholarship on south Indian literature and culture. His love for his subject comes alive on every page of the book, and yet this is not a stormy, tortured relationship; instead there is refinement and nuance, things not often seen in language discourse in India.

BBC : திருப்பூர் மக்களவைத் தொகுதி: வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெற்றியை நிர்ணயிப்பார்களா?

தொழில் வளர்ச்சி அதிகமாகவும் பரவலாகவும் உள்ள மேற்குத் தமிழகத்தின்
முக்கியமானதொரு நகரமான திருப்பூர், தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. காலம் காலமாகவே கொங்கு மண்டலம் என்று கூறப்படும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் இரு முக்கிய நகரங்களாக கருதப்பட்ட கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய இரு நகரங்களுக்கு மத்தியில், இருக்கும் திருப்பூர், அந்த இரு நகரங்களில் இருந்தும் கிட்டத்தட்ட சம தொலைவிலேயே அமைந்துள்ளது.
அதனால், நகர்ப்புறங்களை அதிகம் உள்ளடக்கிய கோவை மக்களவைத் தொகுதி, கிராமப்புறங்களை அதிகம் உள்ளடக்கிய ஈரோடு மக்களவைத் தொகுதி ஆகிய இரண்டின் தன்மையையும் ஒருங்கே பெற்றுள்ளது திருப்பூர் தொகுதி.
பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதி, 2009இல் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின்போது இல்லாமல் போனது.
இந்தத் தொகுதியில் இருந்த நான்கு சட்டமன்றத் தொகுதியுடன், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் ஓர் அங்கமாக இருந்த திருப்பூர் சட்டமன்றத் தொகுதி இணைக்கப்பட்டு திருப்பூர் மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

தருமபுரி மாணவிகளை எரித்தவர் அமமுக வேட்பாளர்! கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா.. கருகிய மாணவிகள்

மின்னம்பலம் :அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணைப்
பொதுச் செயலாளர் தினகரன் இன்று (மார்ச் 22) வெளியிட்டார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிடுவதால் அவரை எதிர்க்க வலுவான வேட்பாளர் வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் பழனியப்பனை நிறுத்தியுள்ளார். பழனியப்பனின் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு தருமபுரி மாவட்ட அமமுக செயலாளரான டி.கே.ராஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் இரண்டாண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிகள் எரிப்பு வழக்கில் சிறைசென்றவர் அமமுக வேட்பாளர்!வழக்கின் விபரம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், 2000ஆவது ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று அவருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள இலக்கியம்பட்டியில் நடந்த வன்முறையின்போது, கோவை வேளாண் பல்கலைக் கழகத்திலிருந்து சுற்றுலா சென்று வந்த மாணவிகளின் பேருந்துக்கு சிலர் பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர். இதில் சிக்கி கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல்கருகி பலியாகினர்.

கே.என்.நேரு,செந்தில்பாலாஜி,பாரிவேந்தர் இணைந்து மிரட்டிய பிரமாண்ட கூட்டம்!

dmk
dmk
dmk nakkheeran.in - ஜெ.டி.ஆர் : பெரம்பலூர் எம்.பி. தொகுதிக்குள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி கரூர் மாவட்டத்தை சேர்ந்த குளித்தலை, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி, என 3 மாவட்டத்தை சேர்ந்த 6 தொகுதிகளை உள்ளடக்கியது என்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தை முசிறியில் நடத்தினார்கள். திருச்சியில் பிரமாண்டமான மாநாடுகளை நடத்திய கே.என்.நேரு ஒருபுறம், கரூரில் அதிரடியாக அரசியலை நிகழ்த்திய செந்தில்பாலாஜி ஒரு பக்கம், தமிழகத்தின் மிக பிரபலமான தொழில் அதிபர் பாரிவேந்தர் ஒரு பக்கம் என்ன 3 பேரும் இணைந்து நடத்திய பிரமாண்டமான பிரச்சார பொதுகூட்டம் எதிர்த்து போட்டியிடும் அதிமுகவினர் கிலியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு இப்படி ஒரு பொது கூட்டத்தை பெரம்பலூர் மாவட்டமே இதற்கு முன்பு பார்த்திருக்கவில்லை என்பதால் எல்லோரும் பிரமிப்போடு பார்த்தனர். இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், நாடும் நமதே, நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தோடுதான் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினேன். 2-வது நாளாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் தொடங்கி இருக்கிறேன். நாடு ஒரு மோசமான சூழ்நிலையில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது.

கானா நாட்டில் இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதல் - 60 பேர் உயிரிழப்பு

கானா நாட்டில் இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதல் - 60 பேர் உயிரிழப்புமாலைமலர் : மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இன்று இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். #60killed #Ghanabuscollision #buscollision அக்ரா: கானா நாட்டின் தெற்கு பகுதியில் சமீபத்தில் கிழக்கு போனோ என்னும் தனி மாகாணம் உருவாக்கப்பட்டது. இந்த மாகாணத்தின் வழியாக சென்ற இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்ததாக கிழக்கு போனோ போலீஸ் உயரதிகாரி ஜோசப் அன்ட்வி கியாவு தெரிவித்துள்ளார்

7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை; திமுக அறிக்கையைக் குப்பையில் போடுங்கள்: சுப்பிரமணியன் சுவாமி

THE HINDU TAMIL ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை சாத்தியமே இல்லை என எம்.பியும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்  சுப்பிரமணியன் சுவாமி. அப்போது அவர் கூறியதாவது:
''ராஜீவ் காந்தி கொலைகாரர்களை விடமாட்டோம். என்ன ஆனாலும் விடுதலை கிடையாது. எழுவர் விடுதலை குறித்துக் கூறப்பட்டுள்ள திமுக அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுங்கள்.
அவர்களை விடவே மாட்டோம். மாநில அந்தஸ்தில் இருக்கிற தமிழிசைக்கு டெல்லியின் கொள்கைகள் தெரியாது. இதுகுறித்து டெல்லிதான் முடிவு செய்ய வேண்டும். எழுவர் விடுதலைக்கு டெல்லி ஒத்துக்கொள்ளாது. 7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை, அது நடக்காது'' என்றார் சுவாமி

திருப்பரங்குன்றம் அதிமுக வெற்றி செல்லாது . ஜெயலலிதாவின் போர்ஜரி கைநாட்டு


தினமலர் :சென்னை: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ்
வெற்றி செல்லாது என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக்கோரிய திமுகவின் சரவணன் கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கூறி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதற்கிடையே எம்.எல்.ஏ. போஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கு, வழக்கை காரணம் காட்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மார்ச் 18 அன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காத தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து மார்ச் 22 (இன்று) க்குள் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

பாலியல் குறைப்பாடுகளை சீரமைக்க யோகாசனங்கள் வீடியோ


tamil.boldsky.com - hari-priy : பல வகையான மருத்துவ முறைகள் இன்று பின்பற்றப்பட்டு வந்தாலும், இவை அனைத்திற்கும் நம் முன்னோர்களின் வழி முறையே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் செய்யும் ஒவ்வொரு முறைகளுக்கும் பின்னும் ஒரு சில அறிவியல் பூர்வமான காரணம் இருந்து வருகிறது. இன்று மக்கள் அவை எல்லாவற்றையும் மறந்து, பயனில்லா பல வகையான செயல்களை செய்கின்றனர். பெரும்பாலான ஆண்கள் இன்று அவதிப்படும் பிரச்சினை விறைப்பு தன்மை, விந்தணு குறைபாடு, மலட்டு தன்மை போன்றவையே. ஆண்களின் இந்த பிரச்சினையை சரி செய்ய நம் முன்னோர்கள் பல்வேறு வழி முறைகளை கடைபிடித்துள்ளனர். அவை என்னென்ன என்பதை பற்றி முழுமையாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

ஈரோட்டில் மதிமுக தனி சின்னத்தில் போட்டி: பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு

tamil.thehindu.com ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அக்கட்சியின் பொருளா ளர் அ.கணேசமூர்த்தி போட்டி யிடுகிறார். அங்கீகரிக் கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை மதிமுக இழந்ததால் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. குறைந்த கால அவகாசத்தில் புதிய சின்னத்தை மக்களிடம் அறிமுகம் செய்வது கடினம் என்பதால் உதயசூரியன்சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கேட்டுக் கொண்டது. இதனை பரிசீலித்து முடிவெடுப்பதாக வைகோவும் கூறியிருந்தார். இது தொடர்பாக மதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வந்தார்.

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியா 140 வது இடம் ..

தினமணி : மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இந்த ஆண்டில் இந்தியா 7 இடங்கள் பின்தங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஒவ்வொரு
நாட்டிலும் மக்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்து ஐ.நா. சார்பில் ஆண்டுதோறும் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில்
இந்தியா 140-ஆவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 67 ஆவது இடத்தில் உள்ளது.
இலங்கை 130-ஆவது இடத்திலும்,
வங்கதேசம் 125-ஆவது இடத்திலும்,
பூடான் 95-ஆவது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் நமது நாடு 133-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில்
இப்பட்டியிலில் மொத்தம் 156 நாடுகள் உள்ளன. பின்லாந்து, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.

அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. தேனி- தங்க தமிழ்ச்செல்வன் வடசென்னை - சந்தான கிருஷ்ணன்,...

அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுதினத்தந்தி :மக்களவை தொகுதி,சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2- ஆம் கட்ட பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். சென்னை அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார். மக்களவை தொகுதி
தேனி- தங்க தமிழ்ச்செல்வன்
வடசென்னை - சந்தான கிருஷ்ணன், 
கிருஷ்ணகிரி - கணேஷ் குமார்
வேலூர் -பாண்டு ரங்கன்
தர்மபுரி - பழனியப்பன்
திருவண்ணாமலை - ஞானசேகர்
ஆரணி- செந்தமிழன்
கள்ளக்குறிச்சி- கோமுகி மணியன்
திண்டுக்கல்- ஜோதி முருகன்
கடலூர் -கே.ஆர். கார்த்திக்
விருதுநகர்- பரமசிவ ஐயப்பன்
தூத்துக்குடி - புவனேஷ்வரன்

ஈரான் .. கல்வியும் செல்வமும் மகிழ்ச்சியும் காணமல் போன கதை ..கைகோர்த்த மதவாதிககளும் சி ஐ ஏயும் .. Iran Before and after 1979

ஒரு
பூலோக சொர்க்கம் போலிருந்த தேசம்தான் ஈரான் . செல்வமும் கல்வியும் நல்ல பண்பும் வரலாற்று பாரம் பரியம் கொண்டிருந்த அறிவார்ந்த மக்களின் தேசம் அது .
அமெரிக்காவுக்கே கடன் கொடுத்த தேசம் அது. மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அழைக்கு முன்பே அதை ஆரம்பித்து வைத்த தேசம் அது. .. அதுவும் நல்ல சம்பளத்தில் கௌரவமாக பண்பாக நடத்தினார்கள்.
படிக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கமே உயர்படிப்புக்கு அனுப்பியது .
அப்படி படிக்க போன மாணவர்கள் மேற்கு நாடுகளின் மாய வலையில் விழுந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக நாடு திரும்பி நாட்டையே சின்னாபின்னமாக்கினர் .
ஈரான் மன்னர் ஷா பல்லவியின் ஆட்சியில் பெண்களின் கல்வியில் அரசு முழு முதல் அக்கறை காட்டியது .
ஈரான் ஒரு மத சார்பற்ற நாடாக விளங்க வேண்டும் என்பதில் மன்னர் ஷா மிகவும் உறுதியாக இருந்தார்.
பெண்கள் எல்லாவிதத்திலும் ஆண்களுக்கு நிகராக இருக்கவேண்டும் என்பதற்காக பல புரட்சிகரமான சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.
பெண்கள் நலம் மற்றும் குடும்பம் ,குழந்தைகள் பராமரிப்புக்கு என தனி சட்டமும் அதற்கு உரிய நீதிமன்றங்களும் அமைத்தார் .
அதனால் அந்த விடயங்களில், குறிப்பாக மணமுறிவு போன்றவற்றில் பெண்களின் சுதந்திரம் உறுதிப்படுத்த பட்டது .
மணமுறிவு விடயத்தில்  ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட்டது .
மதவாதிகளின் எதிர்ப்பையும் மீறி பெண்களின்திருமண வயதை 15 இல் இருந்து 18 ஆக உயர்த்தினார்.
பெண்களுக்கு கரு சிதைவு செய்துகொள்ளும் உரிமையை வழங்கினார். குடும்ப கட்டுப்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்த பட்டது .

வியாழன், 21 மார்ச், 2019

ஜனநாயகம் VS சனாதனம்?... ஷாலின் மரியா லாரன்ஸ்

Shalin Maria Lawrence : மோடி எனக்கு எதிரி அல்ல...
1951 ஆம் ஆண்டு.... காந்தியை கொன்ற "RSS"க்கு ஒரு ஆசை வந்தது. வெறும் இயக்கமாகவே இருக்கும் அது, தேர்தல் அரசியலை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஆசை. அந்த ஆண்டு RSS இன் தேர்தல் அரசியல் வடிவமாக உருவெடுத்ததுதான் பாரதிய ஜன சங்கம்.
பாரதிய ஜன சங்கத்தின் குறிக்கோள் மிகவும் எளிமையானது. "ஹிந்துதுவா".
மதசார்பற்ற நாடு என்று இருக்கும் இந்தியாவை "ஹிந்து ராஷ்டிரமாக மாற்றுவது, ஒரு நாடு, ஒற்றை பண்பாடு, ஒற்றை மொழி, தேசியவாதம், சமஸ்க்ருதமயமாக்கல்", இவைகளை கொள்கையாக கொண்டதுதான் பாரதிய ஜன சங்கம்.
ஜனசங்கத்தின் லட்சியம் எல்லாம் ஒன்று தான். "ஆரிய இனவாத அரசியல்" மூலம் இந்த நாட்டில் வெறுப்பரசியலை பரவ செய்து ஆட்சியை பிடிப்பது.
மனிதனுக்கு எது எளிதாக பிடிக்கும்? மதம்.
ஆக மதவாதத்தையே முக்கிய கொள்கையாக்கி கொண்டார்கள்.
அப்படி மதவாதத்தை நேரிடையாக அணுகும்போது கிடைக்காத வெற்றி, மற்ற அணிகளை அதாவது "இடதுசாரிகள் வலதுசாரிகள்" என்று எல்லோரையும் இணைத்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே பிழைத்து கொள்ள முடியும் என்கிற உண்மை தெரிய வரும்போது, 1977ம் ஆண்டு பாரதிய ஜன சங்கம் "ஜனதா பார்ட்டி" என்று தன்னை பெயரளவில் புதுப்பித்து கொண்டது. அங்கேயும் கொள்கை முரனுக்கு பின்னர் அங்கிருந்து வெளியேறி ஒரு வழியாக "பாரதீய ஜனதா பார்ட்டி" என்ற ஒன்றை நிறுவியது.

இத்தாலியில் 51 பள்ளிக்குழந்தைகள் கடத்தப்பட்டு, கொளுத்தப்பட்ட பேருந்து – குடியேறி பிரச்சனை காரணமா? வீடியோ

விகடன் : இத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, அதன் ஓட்டுநரால் கடத்தப்பட்டது. பின்னர் அந்த ஓட்டுநர் பேருந்துக்கு தீ வைத்துள்ளார்.
பேருந்தில் உள்ள சில குழந்தைகள் அவர்களின் இருக்கையோடு கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் பின்புறம் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர்.
இத்தாலி குடியுரிமை பெற்ற 47 வயதான அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செனகலை பூர்விகமாக கொண்டவர் ஆவார். ”யாரும் இதில் பிழைக்க வாய்ப்பில்லை” என்று அந்த ஓட்டுநர் சொன்னதாக கூறப்படுகிறது. ”குழந்தைகள் அனைவரும் உயிர் தப்பியது ஒரு அதிசயம். இது ஒரு படுகொலையாக ஆகியிருக்கக்கூடும்” என்று மிலன் தலைமை வழக்கறிஞர் பிரான்சுஸ்கோ கிரேகோ கூறியதாக மேற்கோள் காட்டப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இத்தாலியின் குடியேறிகள் தொடர்பான கொள்கை மற்றும் மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழும் குடியேறிகள் மரணம் தொடர்பாக தனது சினத்தை வெளிப்படுத்தியதாக இந்த பேருந்தில் பயணித்த ஒரு ஆசிரியர் கூறியுள்ளார்.

வசூலில் வேகம் காட்டும் வங்கி அதிகாரிகள் - தேர்தல் அறிக்கையில் கடன் ரத்து அறிவிப்பு எதிரொலி ..: வீடு தேடி வருவதால் விவசாயிகள், மாணவர்கள் அதிர்ச்சி

tamilthehindu : அதிமுகவும், திமுகவும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் கல்விக் கடன், விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் வங்கி அலுவலர்கள் தேர்தலுக்குள் முடிந்தவரை கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலோடு, 18 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலும் நடைபெறுவதால் வாக்குகளை எளிதில் பெறுவதற்காக மக்கள் எண்ண ஓட்டத்தை அறிந்து அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் பல சலுகைகளை அறிவித்துள்ளனர்.
குறிப்பாக அதிமுகவும், திமுகவும் மாணவர்களின் கல்விக்கடன், விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப் படும் என அறிவித்துள்ளன. ஆளும் கட்சியான அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், அனைத்து வகையான வங்கிகளில் மாணவ, மாணவியர் பெற்றுள்ள கல்விக்கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும், விவசாயிகளின் கடன் சுமையை நீக்கும் வகையில் உறுதியான திட்டம் செயல்படுத்த வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஆங்கிலம் தொடர இந்தியர்கள் திராவிட இயக்கத்துக்கு நன்றி சொல்ல வேண்டும் வீடியோ


tamil.thehindu.com - செல்வ புவியரசன் : சேவைப் பணித் துறையில் ‘அவுட்சோர்ஸிங்’ எனப்படும் அயலகப் பணி ஒப்படைவுகளைப் பெறுவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டுப் பணித் துறையில் சேவைப் பணித் துறையின் பங்களிப்பு 52.8%. இந்தியாவின் பொருளாதாரத்தில் இன்று ஆங்கிலம் செலுத்தும் செல்வாக்கைக் குறிப்பது இது. இந்தி பேசாத, குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களே சேவைப் பணித் துறையில் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கின்றன. 2015-16-ல் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு 55.6%. தமிழ்நாட்டின் மொத்த உள்மாநில உற்பத்தியில் 54.6% சேவைப் பணித் துறையின் பங்களிப்பு. ஆங்கிலமின்றி இது சாத்தியமில்லை.

தமிழச்சி தங்கபாண்டியன் கூட்டம் .. தென் சென்னையை கலக்கிய உதயநிதி ஸ்டாலின் .. வீடியோ



மின்னம்பலம் :உதயநிதி ஸ்டாலின் தனது தமிழையும், கட்சிப் பற்றையும்தான் அழகு என்று குறிப்பிட்டதாக தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
தென்சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இதனையடுத்து தென்சென்னை தொகுதி தேர்தல் பணிமனையை முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது பேசிய உதயநிதி, “இவ்வளவு அழகான வேட்பாளரை தென்சென்னை தொகுதி மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தவறவிடாதீர்கள். அழகு என்று நான் சொல்வது அவருடைய தோற்றத்தை அல்ல. அவருடைய அழகு தமிழையும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற கொள்கையையும், திமுக மீதான கொள்கைப் பிடிப்பையும்தான்” என்று தெரிவித்திருந்தார். உதயநிதி இவ்வாறு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தென்சென்னை தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னை கே.கே.நகரில் இன்று (மார்ச் 21) நடைபெற்றது.

தேர்தல் : ரூ.2000 வழங்குவது நிறுத்திவைப்பு!

தேர்தல் : ரூ.2000 வழங்குவது நிறுத்திவைப்பு!மின்னம்பலம் : மக்களவை தேர்தலையொட்டி 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 21) தெரிவித்துள்ளது
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை எளியோர், விவசாய தொழிலாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான ..மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு

THE HINDU TAMIL : பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (27). லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பொம்மி (20). கர்ப்பிணியான பொம்மி முதல் பிரசவம் என்பதால் பிரசவத்துக்காக கல்பாக்கத்தை அடுத்த கடலூர் கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றிருந்தார் இந்நிலையில் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்த்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பொம்மி அங்கு அனுமதிக்கப்பட்டார். சுகாதார நிலையத்தில் அந்நேரம் மருத்துவர் இல்லை. பணியில் இருந்த செவிலியர் அவருக்குப் பிரசவம் பார்த்துள்ளார்.

தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு 9 பேருக்கு ஆயுள் தண்டனை.. : 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட

BBC :மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. 2007ஆம் ஆண்டில் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு பணியாற்றிவந்த வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளராக இருந்த அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தது.
கலவரம் நடக்கும்போது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி, ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவர்கள் அனைவரையும் விடுவித்தது. இதனை எதிர்த்து நீண்ட காலமாக முறையீடு செய்யாமல் இருந்த சி.பி.ஐ. 118 நாட்கள் கழித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முறையீடு செய்தது. கொல்லப்பட்ட வினோத்தின் தாயாரும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்தார்.

சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்

தினமலர் :கோவை : கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., கனகராஜ் (64) மாரடைப்பால் மரணம் அடைந்தார். கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனது வீட்டில் இன்று காலை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது கனகராஜிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே, அவரது உயிர் பிரிந்தது. சூலூர் சுல்தான்பேட்டையை சேர்ந்த கனகராஜிற்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வந்த கனகராஜ், மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்துள்ளார்.
அதன் பிறகு கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கனகராஜின் உடல், அதிமுகவினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் பெண் பிரபலங்கள்.. களத்தில் ஜோதிமணி - ஜான்சி - குஷ்பூ ..

 Congress Party female celebrities fight for seat  Congress Party female celebrities fight for seat  Congress Party female celebrities fight for seat nakkheeran.in - ஜெ.டி.ஆர்.: மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். அப்பட்டியலில் பெண்களுக்கு 41% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மம்தா பானர்ஜி, இந்த முறை 41% பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். இதுவே ஒரு பெரிய சாதனையாகும். ஏனென்றால் கடந்த தேர்தலில் நாங்கள் 35% பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தோம்.
இந்தத் தேர்தலில் அதை அதிகரித்துள்ளோம். என்று பெருமையுடன் சொன்னார். அதே நேரம் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த ராகுல்காந்தி வந்த போது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பேசும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கொடுப்போம் என்றார். இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியில் உள்ள பெண் அரசியல்வாதிகள் மத்தியில் தமிழகம் - புதுச்சேரிக்கு ஒதுக்கியுள்ள 10 சீட்டுகளில் கண்டிப்பாக 3 சீட்டு கிடைக்கும் என்கிற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பெண் தலைவர்கள் இடையே பெரிய மல்யுத்தமே நடைபெறுகிறது என்கிறார்கள். 

வசந்தவிழா தமிழர்களின் காதல் விழா

Karthikeyan Fastura : அனைவருக்கும் வசந்தவிழா வாழ்த்துக்கள். இன்று தமிழருக்கு முற்றிலும் அந்நியமாகிவிட்ட இந்த விழா சங்ககாலத்தில் மிக சிறப்புற கொண்டாடப்பட்டிருக்கிறது. பனிக்காலத்திற்கும்
வேனிற்காலத்திற்கும் இடைப்பட்ட இந்த காலத்தை இளவேனிற்காலம் அல்லது வசந்தகாலம் என்று அழைத்தார்கள்.
இந்த காலத்தில் இலையுதிர்ந்து போன மரங்கள் துளிர்க்க ஆரம்பிக்கும். எங்கெங்கும் மலர்கள் பூத்துக்குலுங்கும். தேனிக்கள் பெருகி கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும். இது இயற்கையின் காதல் காலம். இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த அன்றைய தமிழ் சமூகமும் இதை புரிந்துகொண்ட இதை காமன் விழா என்றும், வசந்த விழா என்றும் கொண்டாடினர். இதை இலக்கியங்கள் பதிந்திருக்கின்றன. காமவேள் விழவு, உள்ளி விழவு என்றும் குறிப்பிடுகிறது
ஆண், பெண் சமத்துவம் பேணப்பட்ட அந்த காலத்தில் விழாவானது தனது துணையை தேடிக்கொள்ளும் விழாவாக ஒரு Mating Festival ஆக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்காக இளைஞர்கள், இளம் பெண்கள் காத்திருந்தனர்.

அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் பிறந்த நாள்

Isai Inban : பட்டுக்கோட்டை அழகிரியினுடைய பேச்சு எத்தனையோ பேருடைய மனம் திரும்புதலுக்குக் காரணமாக இருந்தது. அன்றைய முதல்வர்
இராசகோபாலாச்சாரியினுடைய கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி உறையூரிலிருந்து ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்புப் படை வழியெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டே சென்னை முதலமைச்சர் வீட்டிற்கு நடந்தே சென்றது. மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் போன்ற பெண்களெல்லாம் அதில் கலந்து கொண்டிருந்தார்கள்.
பல இடங்களில் அந்தப் படைக்கு பெரும் வரவேற்பும் – ஆதரவும் கிடைத்தன. எதிர்ப்புக்கும் பஞ்சமில்லை. ஓர் ஊரில் தேசிய தீவிரவாதிகள் செருப்புக்களை தோரணமாகக் கட்டித் தொங்க விட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தங்கள் எதிர்பைக் காட்டினார்கள். கோபமுற்ற கழகத் தோழர்கள் தோரணம் கட்டியவர்களை தாக்கத் தயாரானார்கள். பட்டுக்கோட்டை அழகிரி இவர்களைத் தடுத்தார்.
“உனக்கும் எனக்கும் சொந்தமான நம் தமிழுக்கு வருகின்ற கேட்டை எதிர்த்து இந்த கொளுத்துகிற வெயிலில் பாதங்கள் கொப்பளிக்க நாங்கள் நடக்கிறோம். தோழனே! நீ தோரணமாய் கட்டியிருக்கின்ற செருப்புக்களை எங்கள் மீது தூக்கி வீசியிருந்தால் அதை எங்கள் காலில் போட்டுக் கொண்டாவது நடந்திருப்போம்” என்று தன்னுடைய பேச்சைத் துவக்கிய அழகிரி மேடை, ஒலிப்பெருக்கி இல்லாமல் அங்கே ஒரு உணர்வு பெருவெள்ளமாய் உரையாற்றினார். சிறிய கூட்டம் பெருங்கடலாயிற்று. அழகிரி தன் பேச்சை இப்படி முடித்தாராம்.

கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக சீக்கியர் நியமனம்

கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியமனம்வெப்துனியா : கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #CanadaParliament #JagmeetSingh ஒட்டாவா: கனடாவில் கடந்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் (வயது 40) வெற்றிபெற்றார்.