சனி, 6 செப்டம்பர், 2014

ஊருக்கு ஒரு சலீம் இருக்கக்கூடாதா ?

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம் ‘சலீம்’. அவர் இதற்கு முன்பு நடித்த ‘நான்’ படத்தின் தொடர்ச்சியாகவே கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் என்.வி.நிர்மல் குமார். சமூகத்தில் நடந்து வருகிற மிக முக்கியமான ஒர் அவலத்தை அடிப்படையாகக் கொண்டு நகர்கிறது திரைக்கதை.வழக்கமாக பல படங்களில் தோன்றிய கதாபாத்திரத்தைத் தான் நினைவுபடுத்துகிறது சலீம். நீதி, நேர்மை, நியாயம் பேசுகிற, மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று வாழ்கிற ஒருவன். இன்னும் சொல்லப்போனால், ரூல்ஸ் ராமானுஜம், சின்சியர் சிகாமணி என்று பலரும் கிண்டலடிக்கிற லிஸ்டில் சலீமும் ஒருவன். ஆனால் இதற்கு முன்பு எடுத்துக்காட்டாக இருந்தவர்களுக்கும் இவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், சலீம் ஒரு இஸ்லாமியர்.பொதுவாகவே தமிழ் சினிமாவில் இப்படி நேர்மையாக நடந்து கொள்கிறவர்கள் உபநயனம் செய்தவர்களாக இருப்பார்கள்

டாக்டர் அம்பேத்கர் : ராமனுக்கு பலதாரங்கள் ! இதுதான் ஒரிஜினல் ராமாயணம்

டாக்டர் அம்பேத்கர்இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் –
வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.
டாக்டர் அம்பேத்கர் – இராமன், வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தின் கதைத் தலைவன். இராமாயணக் கதையே மிகச் சுருக்கமானது தான். இராமாயணக் கதை எளியது, நயமானது என்பது தவிர வேறு சிறப்பு எதுவும் அதில் இல்லை. தற்காலத்தில் வாரணாசி என வழங்கும் அயோத்தியை ஆண்டு வந்த மன்னன் தசரதனின் மகன் இராமன். தசரதனுக்கு கௌசல்யா, கைகேயி, சுமித்ரா என மனைவியர் மூவர் இருந்தனர். இவர்களைத் தவிர நூற்றுக்கணக்கான வைப்பாட்டிகளைத் தசரதன் தன் ஆசை நாயகிகளாக கொண்டிருந்தார். கைகேயி தசரதனைத் திருமணம் செய்து கொண்ட போது இன்னதென்று குறிப்பிடாத ஒரு நிபந்தனையை விதித்திருந்தார். கைகேயி விரும்பிக் கேட்கும்போது மன்னன் தசரதன் அவள் விரும்பியதை நிறைவேற்ற வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

இனி மூளை டூ மூளை எஸ்.எம்.எஸ்: டெலிபதியில் சாதனை

டெல்லி: இப்பத்தான் உன் கூட பேச நினைச்சேன் நீ போன் பண்றே என்று நண்பர்களுக்குள் அடிக்கடி கூறுவார்கள். நம்முடைய எண்ணங்கள் அலைவடிவில் பரவி அது நாம் யாரைப் பற்றி நினைக்கிறோமே அவர்களைச் சென்றடைகிறது. இதனை டெலிபதி என்றும் கூறுவார்கள். காதலர்கள், தம்பதியர்கள் கூட நான் நினைச்சேன் நீ சொல்லிட்ட... என்னுடைய மனசுல இருக்கிறதை நீ புரிஞ்சிக்கிட்ட என்பார்கள். அதுபோன்ற ஒரு டெலிபதியை இப்போது அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர். இவ்வரிகளுக்கு ஏற்ப ஒருவர் மனதில் நினைக்கும் செய்தி ஒன்றை டெலிபதி மூலம் ஆயிரம் மைல்களுக்கு மேல் உள்ள ஒருவருக்கு பரிமாற முடியும் என்பதை சோதனை முயற்சியாக நாடு விட்டு நாடு அனுப்பி விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

கட்டை விரலை வாங்கிய துரோணாச்சாரி விளையாட்டு தொடர்ச்சியே குரு உத்சவ் !

Radhakrishnan
தத்துவத்திற்கான அடிப்படை தகுதிகூட இல்லாத வேதங்களை, புராணங்களை, இதிகாசங்களை இந்திய தத்துவங்களாக உலகெங்கும் பிரச்சாரம் செய்த ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டுமொத்த ஆசிரியர்கள் தினமாக அறிவித்தது முதல் தவறு. அந்த தவறின் சரியான தொடர்ச்சிதான் ‘குரு உத்சவ்’ சும்மா ஒரு பெயருக்கு… மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட காரணத்திற்காகவே வேடன் ஏகலைவனின் கட்டைவிரலை காணிக்கையாக பலி வாங்கியவன் ‘துரோணாச்சாரி’.
இந்த ‘நாலுவர்ண நியாயஸ்தனை’ புனித குருவாக போற்றி, அவன் பெயரில்,
சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது – ‘துரோணாச்சாரியா விருது’.
இப்ப வௌங்குதா, நாட்ல விளையாட்டும் வௌங்காம போனதுக்குக் காரணம்?

தமிழக அரசின் தவறுகளை சேகரிக்கும் சு சாமி : சீண்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறார்

பிடிபட்ட தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை விடுவிக்க வேண்டாம்' என, இலங்கை அதிபர் ராஜபக் ஷேவிடம் வலியுறுத்தினேன் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி சொல்ல, விவகாரம் தமிழகத்தில் பற்றி எரிகிறது. மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சி ஆதரவு நிலைபாட்டில் இருக்கும் சிறிய கட்சிகள் என, பலரும் சாமிக்கு எதிராக கச்சை கட்டியிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சாமியின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, நேற்றும், காஞ்சிபுரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தீனன் என்பவர் தலைமையில், கொடும்பாவி கொளுத்தியிருக்கின்றனர்.   ஆனானப்பட்ட யானைக்கும் அடி சறுக்கும் சு. சாமி தன்னை பெரிய மேதாவியாக காட்டிக்கொண்டு பலருக்கும் குடைச்சல் கொடுத்துகொண்டுள்ளார் அது ஒரு நாள் அவருக்கே தீவினையாய் முடியும் சு சாமியால் மீனவர்கள் விடுவிக்கபட்டார்கள் என்பது கேலிக்குரியானது அப்போ மோடியால் இல்லையா?

பயங்கரவாதிகளுடன் சேர இருந்த ஆந்திர இளைஞர்கள் சிக்கினர்

ஐதராபாத்: சமூக வலைதளங்களில் வெளியாகும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கர வாதிகளின் அழைப்புகளால் ஈர்க்கப்பட்ட, ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், ஈராக் செல்ல முற்பட்ட போது, அவர்களை ஆந்திர போலீசார் பின்தொடர்ந்து சென்று மீட்டனர்.ஐதராபாத்தை சேர்ந்த, இன்ஜினியரிங் படித்த இரு இளைஞர்கள் உட்பட, நான்கு இளைஞர்களின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த அவர்களின் பெற்றோர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.ஐதராபாத்திலிருந்து கோல்கட்டா சென்று அங்கிருந்து நேபாளம் வழியாக, ஈராக் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்ததை அறிந்த போலீசார், அவர்களை பிடித்து, அறிவுரை கூறி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.இளைஞர்களின் எதிர்காலம் கருதி, அவர்களின் பெயர், முகவரியை போலீசார் வெளியிடவில்லை. dinamalar.ocm

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

பெங்களூரில் 50 ஆயிரம் அதிமுகவினர் ! அனைத்து விடுதிகளும் ஹவுஸ்ஃபுல் !

பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ம்தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமையுமா? பாதகமாக அமையுமா? என்று அதிமுகவினர் குழப்பத்தில் உள்ளனர்.  தீர்ப்பு நாளை  அதிமுக வட்டாரம் படபடப்புடன் எதிர்நோக்கியிருக்கிறது.  இந்நிலையில், தீர்ப்பு வரும் நாளில் பெங்களூரில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் தவிர கட்சியினர் என 50 ஆயிரம் பேர் திரள இருக்கிறார்கள் என தகவல் வருகிறது.  இதற்காக பெங்களூரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளையும் 18,19,20 ஆகிய தேதிகளுக்கு புக் செய்துவிட்டார்கள்.மூன்று நாட்களுக்கு தங்கும் விடுதி ஹவுஸ்புல் என்பதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியில் உள்ளனர் nakkheeran.in .  எப்படியும்   கேசை ஊத்தி மூட போராய்ங்க , நிம்மதியா தூங்குங்க அடிமைகளா !

ரகசிய வாக்குமூல அறையில் சிறுமியை நீதிபதி பலாத்காரம் செய்தார் ! உத்தர பிரேதேசம் !

உத்தரபிரதேச மாநிலத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் செய்தன. இப்போது ஒரு ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டே கோர்ட்டில் உள்ள தனது சேம்பரிலேயே சிறுமியை கற்பழித்துவிட்டதாக அந்த சிறுமி புகார் கொடுத்திருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் அசம்காரில் ஒரு சிறுமி தன்னை சிலர் கடத்தி கற்பழித்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன் புகார் கூறியிருந்தாள். இது தொடர்பான வழக்கு அசம்கார் கூடுதல் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட்டு அந்த சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம் பெறுவதற்கும், அதனை கேமராவில் பதிவு செய்யவும் முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியும் அவருக்கு துணையாக அந்த பெண்ணின் சகோதரரும், ஒரு பெண் போலீஸ்காரரும் மாஜிஸ்திரேட்டு சேம்பருக்கு வந்தனர். மாஜிஸ்திரேட்டு சிறுமியின் சகோதரரையும், பெண் போலீசையும் சேம்பரை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார்.

தினமும் 92 பெண்கள் பலாத்காரம் செய்யபடுகிறார்கள் ! டெல்லியில் தான் அதிகமாக 1, 636 பலாத்கார வழக்குகள்

இந்தியாவில் தினமும் 92 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் தினமும் 92 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் நகரங்களில் டெல்லியில் தான் கடந்த ஆண்டு அதிகபட்சமாக 1, 636 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் 24 ஆயிரத்து 923 பலாத்கார வழக்குகள் பதிவாகின். ஆனால் இந்த எண்ணிக்கை 2013ம் ஆண்டில் 33 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் பலாத்காரம் செய்யப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 556 பேர் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
2012ம் ஆண்டில் டெல்லியில் 706 பலாத்கார வழக்குகள் பதிவாகின. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகரித்து 1, 636 ஆக உள்ளது. கடந்த ஆண்டில் டெல்லியில் தினமும் குறைந்தது 4 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன.

வியாழன், 4 செப்டம்பர், 2014

சிவகாசி : கைக்கடிகாரம் கட்டி வந்த தலித் மாணவரின் மணிக்கட்டு துண்டிப்பு.. மாணவர்கள் வெறி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைக்கடிகாரம் கட்டி வந்ததற்காக அவரை தலித் அல்லாத பிற சமூக மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கி, மணிக்கட்டையும் வெட்டி விட்டனர். இந்த செயலால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் திங்கள்கிழமை பள்ளிக்கு வந்தபோது கைக்கடிகாரம் கட்டி வந்ததற்காக ஜாதி வெறியில் இந்த வெறிச் செயலில் அந்த மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருத்தங்கல், திருவள்ளுவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. இவரது மகன் ரமேஷ். 16 வயதான ரமேஷ் திருத்தங்கல் அரசு ஆடவர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். திங்கள்கிழமையன்று பள்ளிக்கு வந்த ரமேஷ் கையில் கைக்கடிகாரம் கட்டியுள்ளார். இதைப் பார்த்த பிளஸ்டூ மாணவர்கள் சிலர் ஏன் கைக்கடிகாரம் கட்டி வந்தாய் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் கடிகாரத்தைக் கழற்றி தூக்கி கீழே போட்டு உடைத்துள்ளனர்.

புதுச்சேரியில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய 8 போலீசார் பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவி வித்யா ராம்குமார் கடந்த ஏப்ரல் மாதம் அப்போது போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றிய காமராஜிடம் புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில் சிறுமிகளை சிலர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுபற்றி விசாரணை நடத்தக்கோரி புதுவை பெரியகடை போலீசாருக்கு டி.ஜி.பி. காமராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அந்த வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கை டி.ஜி.பி. காமராஜ் சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் காயிதே ஆசாம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். அப்போது அருள்மேரி உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. இந்த 5 பேரில் ஒருவர் 16 வயது சிறுமி என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அரவிந்தர்ஆச்சிரமம்   மீதும்   முன்பு  இது போன்ற  பல சந்தேகங்கள் குற்றசாட்டுக்கள் சுமத்தபட்டன.ஆனால் என்ன ஏறக்குறைய எல்லாமே ஊத்தி மூடப்பட்டு விட்டன

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. ரகசிய உடன்பாடு: ஞானதேசிகன் பேட்டி ! அப்ப பிரவீனு ?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,இடைத்தேர்தல் என்பது எப்படி நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இடைத்தேர்தல் எதிர்க்கட்சிகள் சந்திக்கும் விளைவுகளும் எல்லோருக்கும் தெரியும். தேர்தலை எதிர்கொள்வது ஜனநாயக கடமை என்றாலும், தேர்தல் ஆணையம் போதிய கால அவகாசத்தை அளிக்காததாலும், தற்போதை சூழ்நிலை காரணமாகவும் காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி இடைத்தேர்தலில் பங்கேற்பதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறோம்.எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் தயாராக இருந்தார்கள். சில இடங்களில் வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டார்கள். அவர்களிடத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்று விட கூறியிருக்கிறோம்.

கட்ட பஞ்சாயத்து' : எதிர்த்த சிறுமி கற்பழிக்கப்பட்டு படுகொலை ! மேற்கு வங்கத்தில் கொடூரம் !

கோல்கட்டா: மேற்கு வங்க கிராமம் ஒன்றில், பஞ்சாயத்தார் உத்தரவை மதிக்காத, 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, 13 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தின், துப்குரி என்ற கிராமத்தில், விவசாயி ஒருவர், டிராக்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார். வாடகை கொடுப்பதில் தகராறு ஏற்படவே, டிராக்டர் உரிமையாளருக்கும், விவசாயிக்கும் மோதல் ஏற்பட்டது.இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு சென்றது. வாடகை கொடுக்க மறுத்த விவசாயியை, ஆளும் கட்சியை சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அடித்துள்ளனர். அதை பார்த்த அந்த விவசாயியின், 15 வயது மகள், ஓடிச் சென்று தடுக்க முயன்றுள்ளார்.அந்தச் சிறுமியை தடுத்த கும்பல், தங்களை தாக்கியதாக சிறுமி மீது பொய் புகார் கூறி, அதற்காக, தங்களின் எச்சிலை நக்குமாறு, அந்த சிறுமியை நிர்ப்பந்தித்துள்ளது. அந்த தண்டனையை சிறுமி ஏற்கவில்லை; பஞ்சாயத்து கலைந்தது.மறுநாள் காலையில், அந்தச் சிறுமி யின் உடல், அருகில் உள்ள ரயில் பாதையில் சிதைந்து கிடந்தது.

புதன், 3 செப்டம்பர், 2014

அம்பலம் ! MGR திட்டமிட்டே அதிமுகவை தொடங்கினார் ! திமுகவில் பிரச்னை என்பது பொய் !

சென்னை: திமுகவில் ஏற்பட்ட பிரச்சனையால்தான் அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்க நேரிட்டது என்று சொல்லப்படும் சம்பவங்களுக்கு மாறாக நன்கு திட்டமிட்டே மக்களின் நாடித்துடிப்பை எல்லாம் அறிந்த பின்னரே தான் தனிக்கட்சி தொடங்கினேன் என்று எம்.ஜி.ஆரே. சொன்ன ரகசியம் இப்போது வெளியாகி உள்ளது. நக்கீரன் வாரம் இருமுறை இதழில் சினிமா சீக்ரெட் என்ற பகுதியில் சினிமா கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானம் தொடரை எழுதி வருகிறார். இத்தொடரில் தேவர் பிலிம்ஸ் தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்ன ரகசியம் என்று கலைஞானம் எழுதியிருப்பதாவது:
திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் செலவுக்கு... எம்.ஜி.ஆருக்கு உதவும் விதமாக எம்.ஜி.ஆரைச் சந்தித்து பணத்தைக் கொடுத்தார் தேவர். அண்ணே... இந்தப் பணத்தை நீங்களே வச்சுக்கங்க. தேவையான பணம் எனக்கு கிடைச்சிடுச்சு. கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் ஒரு தொகை கொடுத்தார். ஜேப்பியார் ஒரு தொகை கொடுத்தார். அட டா என்னே ஒரு தேச பக்தி ?

அழகிரி மருமகள் கண்காட்சியை திறந்துவைத்த குஷ்பு

தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் ‘வார சந்தை' என்ற பெயரில் ஒரு கண்காட்சியை நடத்தினார். இந்தக் கண்காட்சியை நடிகை குஷ்பூ திறந்துவைத்தார். கடந்த சிலவருடங்களாக திமுகவில் மிகவும் தீவிரமாக இருந்த நடிகை குஷ்பு, சில மாதங்களுக்கு முன்னர் அந்த கட்சியில் இருந்து திடீரென விலகினார். கட்சியில் தனக்குரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதால் விலகுவதாக குஷ்பு அறிவித்திருந்தாலும், கடந்த லோக்சபா தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற கோபத்தில்தான் அவர் வெளியேறியதாக கூறப்பட்டது. மேலும் குஷ்புவை ஸ்டாலின் மற்றும் கனிமொழி தரப்பினர் வெறுத்து ஒதுக்கியதும் அவரது விலகலுக்கு ஒரு காரணமாக இருந்தது. குஷ்புவின் இந்த நிகழ்வு நிச்சயம் பெரிய செய்தியை சொல்கிறது, நல்ல காரியம் விரைவில் நடக்க வாழ்த்துக்கள்.
tamil.oneindia.in

தெலுங்கானாவுக்கும் ஆந்திராவுக்கும் அள்ளி கொடுக்கும் மோடி தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் ?

ஆந்திரா, தெலங்கானாவுக்கு ஆயத்தீர்வை விலக்கு< புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு ஆயத்தீர்வை விலக்கு அளிக்கப்படும் என்று ஓர் உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்த்துள்ளார் என்று செய்தி வந்துள்ளது.இந்த மாநிலங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் ஊக்கம் தரவேண்டும் என்றால், பணமாக வேண்டுமானால் தாருங்கள், ஆனால் ஆயத்தீர்வை விலக்கு கொடுக்கக்கூடாது; அது தமிழகத்துக்கு ஆபத்தாக முடியலாம் என்பது ஜெயலலிதாவின் வாதம். இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு ஆயத்தீர்வை விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க இந்த மாநிலங்களுக்குச் செல்கிறார்கள்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அம்மாவும் பிரவீன் குமாரும் ஏற்கனவே முடிவு பண்ணிட்டாய்ங்க ?

உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில், தேர்தல் கமிஷன் வெளிப்படை தன்மை இல்லாமல் நடந்து கொள்வதாக, புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 1,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், செப்., 18ம் தேதி நடக்கிறது.மனு தாக்கல் செய்ய கால அவகாசம் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது உட்பட தேர்தல் கமிஷன் மீது, பல்வேறு காரணங்களை கூறி, இத்தேர்தலை தி.மு.க., புறக்கணிப்பதாக, அக்கட்சித் தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்து விட்டார். பா.ம.க., - -ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் புறக்கணிப்பு முடிவை அறிவித்துள்ளன.வழக்கமாக ஆளும்கட்சியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுப்பி, தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், இம்முறை மாநில தேர்தல் கமிஷன் மீது, சந்தேகத்தை கிளப்பியுள்ளன. தேர்தல் கமிஷனின் வெளிப்படையற்ற தன்மையே இதற்கு காரணம் என, சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்தே, பல்வேறு தகவல்களை, மாநில தேர்தல் கமிஷன் மறைக்கிறது என்ற புகார் எழுந்துள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன்: கேரள இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் தமிழகத்துடன் குமரி இணைந்திருக்காது!

கேரள இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் தமிழகத்துடன் குமரி இணைந்திருக்காது! பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு! இந்து சமயம் ஒற்றுமையுடன் இருந்திருந்தால், கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்திருக்காது என்று கேரளாவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்கக் கோரி போராட்டம் வெடித்தது. அப்பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மொழிப்போர் தியாகிகள் என கௌரவிக்கப்பட்டனர்.இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இந்து சமயம் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்திருக்காது என்று கூறினார். இவரது பேச்சு மொழிப்போர் தியாகிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாஜகவின் ஒவ்வொரு அழுக்கும் வெளியே வரத்தொடங்கி உள்ளது, சு சாமியின் சனி பிடிச்ச நாக்கால வந்த  நாறல் பேச்சுக்கு அடுத்து கேரளாவுக்கு சப்போர்ட் பண்ணும் பொன் ராதாகிருஷ்ணன் . ரொம்ப சீக்கிரமா சுய ரூபத்தை காட்டுராய்ங்க

மரண தண்டனை பெற்றவர்களின் மறுசீராய்வு மனுக்கள்: பகிரங்கமாக விசாரிக்கப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடில்லி : 'நீண்ட காலம் நடக்கும் வழக்கு விசாரணையால், ஒருவர் சிறையில் இருப்பதை காரணமாக காட்டி, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும்படி கோர முடியாது. அதேநேரத்தில், மரண தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்யும், மறுசீராய்வு மனுக்கள் எல்லாம், பகிரங்கமான முறையில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.செங்கோட்டை தாக்குதல் வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முகமது ஆரிப், 1993ம் ஆண்டு நிகழ்ந்த, மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனை பெற்ற, யாகூப் அப்துல் ரசாக் மேமன் உட்பட, மரண தண்டனை பெற்ற ஆறு பேர், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.அதில், 'மரண தண்டனைக்கு எதிராக நாங்கள் தாக்கல் செய்துள்ள, மறுசீராய்வு மனுக்கள் எல்லாம், உச்ச நீதிமன்றத்தில், பகிரங்கமான முறையில் விசாரிக்கப்பட வேண்டும்' என, கோரியிருந்தனர்.ஏனெனில், இதற்கு முன், மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்கள் எல்லாம், நீதிபதிகளின் அறையிலேயே விசாரிக்கப்பட்டன.

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

வித்தியாசமான படங்களை எடுப்பவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் !

தெனாலி, பஞ்ச தந்திரம், பரமசிவன், ஏகன் மற்றும் பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயராம். இவர் 300-க்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவரின் மகன் காளிதாசன் ‘ஒரு பக்க கதை’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகிறார். இவரை நடிகராக அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், காளிதாசன் குறித்து பேசியதாவது:- காளிதாஸ் என்ற பெயர் சினிமாவில் யாருக்கும் கிடையாது. இந்தப் பெயர் மிக வித்தியாசமான பெயர். ஜெயராம் ஏற்கனவே பிளான் செய்துதான் இப்படி பெயர் வைத்திருக்கிறார். குடும்ப விஷயத்திலும் பிளான் செய்துள்ளார். அதனால்தான் அவருக்கு ஒரு பையன். ஒரு பெண்.

6 இந்திய நிறுவனங்கள் மீதான தடை நீக்கம் ஜப்பான் நடவடிக்கை

டோக்கியோ, இந்தியா கடந்த 1998–ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்துஸ்தான் விமான தொழிற்சாலை (எச்.ஏ.எல்.) உள்ளிட்ட பாதுகாப்பு துறை தொடர்பான 10 இந்திய நிறுவனங்களுக்கு ஜப்பான் தடை விதித்தது. அதில் இந்துஸ்தான் விமான தொழிற்சாலை உள்ளிட்ட 6 நிறுவனங்கள் மீதான தடையை ஜப்பான் நேற்று நீக்கியது.
இந்த தகவலை நேற்று டோக்கியோவில், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கழிவு நீர் துப்பரவு தொழிலாளர்களை தினம் தினம் கொல்லும் ஜெர்மன் காபரெட் !

வாபாக் சுத்திகரிப்பு நிலையம்தெருவில் சென்னை மாநகராட்சியின் அல்லது தனியாருக்குச் சொந்தமான கழிவுநீர் ஏற்றிச்செல்லும் லாரி சென்றால் முகத்தைச் சுழித்துக் கொண்டு மூக்கை மூடிக் கொள்கிறோம். இந்த கழிவுநீர் எல்லாம் எங்கே போகிறது? எப்படி சுத்தப்படுத்தப்படுகிறது? இவற்றை யார் கையாளுகிறார்கள்? என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
நாம் நமது அழுக்குகளை கழுவி விட்டு, சுத்தபத்தமாக நடமாடுவதை சாத்தியப்படுத்தும் துப்புரவு தொழிலாளர்களின் உயிருக்கு மதிப்பே இல்லாமல் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? சம்பவம் நடந்த கொடுங்கையூரில் உள்ள, வெளிநாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் மெட்ரோவாட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கூடி நிற்கும் பகுதி மக்கள்.

நீதிபதி சதாசிவம் கேரளா கவர்னர் ஆகிறார் ! அமித் ஷாவின் நன்றி கடன் ?

கேரள ஆளுநராக நியமிக்க, தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
சில நாள்களுக்கு முன்னர் கேரள ஆளுநர் பதவியில் இருந்து ஷீலா தீட்ஷித் விலகினார். இதையடுத்து, கேரளத்தின் புதிய ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பெயரை, குடியரசுத் தலைவரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு  2 நாள் பயணமாகச் சென்றுள்ளார். அவர் தில்லி திரும்பியதும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் இருந்து அமித் ஷாவை காத்ததாக சொல்றாங்களே நெசமா?

விநாயக சதுர்த்தி முட்டாள்தனம் ! பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார்

பெரியார்ந்து மதம் என்பதில் உள்ள கடவுகளின் எண்ணிக்கை ”எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது,” என்பதுபோல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டு இருப்பதும், அத்தனைக் கடவுளுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை பாட்டு – முதலியதுகள் ஏற்படுத்தி இருப்பவை. அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பொருமானமுள்ள நேரங்களும், பலகோடி பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக் கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்ககூடிய காரியமல்ல.
இக்கடவுள்களின் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புகொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது.”இதனை கணபதி என்றும், விநாயகன் என்றும், பிள்ளையார் என்றும், விக்னேஸ்வரன் என்றும், இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.”

ஜன தன யோஜனா ! கிராமிய பொருளாதாரத்தை காபரெட் கையில் கொடுக்க ஒரு திட்டம் !

ப்ரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா – மேரா காத்தா பாக்ய விதாதா” சௌகார் பேட்டை சேட்டு பான் பராக்கை புளிச்சென்று துப்பி விட்டு இந்தியில் ஏதோ திட்டுகிறாரா? குழப்பம் வேண்டாம். இது பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த ஒரு புத்தம் புதிய திட்டம். இப்படித்தான் ஊடகங்கள் அதிசயிக்கின்றன. பிரதான் மந்த்தி ஜன் தன் யோஜனா - மேரா காத்தா பாக்ய விதாதா" ப்ரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா – மேரா கட்டா பாக்ய விதாதா” சௌகார் பேட்டை சேட்டு பான் பராக்கை புளிச்சென்று துப்பி விட்டு இந்தியில் ஏதோ திட்டுகிறாரா? மோடி சுதந்திர தின உரையில் பேசும் போது நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளாகியும் 68 சதவீத மக்களுக்குக் கூட வங்கிக் கணக்கு இல்லை என்றும்.. இல்லாத அத்தனை பேர்களுக்கும் உடனடியாக வங்கிக் கணக்கை ஆரம்பித்துக்  கொடுத்து அவர்களை ‘நிதித் தீண்டாமையில்’ இருந்து விடுவிக்கப் போவதாகவும் அறிவித்தார்.

குரு உத்சவ் தினத்தை அரசியல் ஆக்க கூடாதாம் ? ஸ்மிருதி இராணி கோபம் !

'மத்திய அரசு அறிவித்துள்ள, 'குரு உத்சவ்' ஆசிரியர் தினத்தன்று நடத்தப்படும் கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு தான். கட்சித் தலைவர்கள், இதில் அரசியல் ஆதாயம் தேட நினைத்தால், அது கண்டிக்கத்தக்கது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:வரும் 5ம் தேதி, கொண்டாடப்பட உள்ள ஆசிரியர் தினத்தன்று, டில்லியில், பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார். மாணவர்களின் கேள்விகளுக்கு, மோடி பதிலளிப்பதை, நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பார்க்க வசதியாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.மாலை 3:00 முதல் 4:45 மணி வரை, இந்த நிகழ்ச்சி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்கும்படி, எந்த மாணவரையும் கட்டாயப்படுத்தவில்லை. அது, அவர்களின் சொந்த விருப்பத்தை பொறுத்தது. இதை கட்சித் தலைவர்கள் அரசியலாக்குவது கண்டிக்கத்தக்கது. மொதல்ல யாராச்சும் படிச்சா பொண்ணா பார்த்து இந்த பதவியை கொடுங்கப்பா  ! கவர்சிக்காக பதவி கொடுக்கும் பழக்கம் எம்ஜியாரோடு போகட்டும்

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி ? நவாஸ் ஷெரிப் ராணுவ தளபதிகள் சந்திப்பு !

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், எதிர்க்கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பாக்., ராணுவ தளபதி, ரகீல் ஷரீப், பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். அப்போது, அவரை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், பாகிஸ்தானில், எந்த நேரத்திலும், ராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தானில், பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த மாதம், 14ல் ஆரம்பித்த இந்த போராட்டம், பெரும் கலவரமாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளான, பி.டி.ஐ., தலைவர் இம்ரான் கான் மற்றும் பி.டி.ஏ., தலைவர் காத்ரியின் ஆதரவாளர்கள், தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டு வருவதால், நிலைமை மோசமடைந்து உள்ளது.

உற்பத்தி அதிகரிப்பின் பெருமைகள் அனைத்தும் காங்கிரசையே சேரும்

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிபரங்கள் திங்கள்கிழமை வெளியானது. இதில், கடந்த 2 ஆண்டுகளாக தேக்க நிலை கண்டிருந்த இந்திய பொருளாதாரம் மிக வேகமாக ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மீட்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.மேலும், 2014-2015 ஆம் நிதி ஆண்டிற்கான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்த அளவையும் தாண்டி 5.7 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த புள்ளிவிபரங்கள் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி.) அளவு 5.7 சதவீதமாக அதிகரித்திருப்பதற்கு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகளே காரணம். இந்தப் பெருமைகள் அனைத்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியையே சேரும்'' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.