திங்கள், 26 அக்டோபர், 2026

நீதிபதி ஒய்.வி. சந்திரசூட். : அப்போது நாங்கள் கோழைகளாக இருந்தோம்”

 Vijayasankar Ramachandran  :  யாரென்று தெரிகிறதா?
பாபர் மசூதி வழக்கில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு. வழக்கமான உச்ச நீதிமன்ற நடைமுறைகளுக்கு மாறாக மூன்று விஷயங்கள் நடந்தன. 
1. தீர்ப்பை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அது எழுதப்பட்ட விதத்தை வைத்து தீர்ப்பை எழுதியவர தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்தான் எழுதினார் என்று சட்ட வல்லுனர்கள் அன்றே கணித்துவிட்டனர். 
2. எழுதியவரேதான் தீர்ப்பை நீதிமன்றத்தில் வாசிப்பார். அப்போது வாசித்தவர் நீதிபதி கோகோய். (பிறகு மேலவை உறுப்பினர் என்கிற பரிசைப் பெற்றவர்)


3. தீர்ப்பில் பின் இணைப்பு இருக்காது. இத்தீர்ப்பில் ஏராளமான வேதங்களையும் சாஸ்திரங்களையும் அயோத்தியில்தான் ராமன் பிறந்தார் என்பதற்கு சாட்சி போல் குறிப்பிட்டு ஒரு நீண்ட் பின் இணைப்பு இருந்தது (addenda)
இதே சந்திரசூட்தான் தீர்ப்பை வழங்குவதற்கு முன் வீட்டில் கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாகக் கூறினார் (ராமனாகத்தான் இருக்கும்)
தீர்ப்பு வந்தவுடன் அறிஞர் ஏ.ஜி. நூரானி ஃபிரண்ட்லைனில் ஒரு கவர் ஸ்டோரி கட்டுரை எழுதினார். அதை இப்படி நிறைவு செய்திருப்பார்;
1975இல் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனம் செய்தபோது அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கில், அது சரியே என்று ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 
பல ஆண்டுகளுக்குப் பின் நடந்த என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஏன் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கினீர்கள் அந்த நீதிபதியிடம் கேட்டபோது அவர் “அப்போது நாங்கள் கோழைகளாக இருந்தோம்” என்று கூறினார்.
அந்த நீதிபதியின் பெயர் ஒய்.வி. சந்திரசூட். 
நூரானி அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.
அவர் சொல்லாமல் விட்டது அந்த சந்திரசூடின் மகனின் பெயரை.
அந்தப் பெயர்: ஒய்.வி. சந்திரசூட்!
நிற்க,
நீதிபதிகள் நியமனத்திற்கான பெயர்களை உச்ச் நீதிமன்றத்தின் மூத்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட கோலேஜியம் பரிந்துரை செய்யும். இறுதி முடிவினை அரசுதான் எடுக்கும். ஆனால் கோலேஜியம் கூட்டம் நடப்பதற்கு முன்பே அங்கு வரவிருக்கும் பெயர்களை அரசிடம் சொல்லி ஆலோசனை பெறவேண்டும் என்று ஒரு அரிய ஆலோசனையை இதே  சந்திரசூட் கூறியதாக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே. கவுல் தன் நூலில் கூறியிருக்கிறார். 

கருத்துகள் இல்லை: