சனி, 2 மே, 2020

இக்கால பெண்களுக்கு மொழியின் முக்கியத்துவம் புரிவதில்லை? கொளத்தூர் மணி வீடியோ


Devi Somasundaram : அரக்கர் டிவியில் திவிக தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் இயக்கமும் பெண்ணுரிமையும் என்ற தலைப்பில் ஒரு நீண்ட உரை தந்தார்
பொதுவா பெண்ணுரிமை பற்றி பேசும் போது எல்லோரும் பெரியார் என்ன எழுதினார், என்ன கூறினார் என்று தான் சொல்வார்கள் .மணி அண்ணன் பெரியார் இயக்கத்தில் பெண்கள் என்னவா இருந்தனர், என்ன செய்தனர் என்ற செயல்பாட்டு அடிப்படையில் தகவல் தந்தார் .
பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள், அவர்கள் அந்த காலத்திலயே ஆழ்ந்த ஆங்கில அறிவோடு எழுதிய கட்டுரைகள், நடத்திய மாநாடுகள் ..என்று பெண்கள் ஒரு இயக்கத்தின் முழு செயல்பாட்டையும் நடத்தி காட்டியதை அடையாளப் படுத்தினார் .
அதில் என்னை கவர்ந்த தகவல் .மொழிப்போராட்டத்தில் பெண்கள் ..இத்தனை வளர்ந்த இந்த காலத்தில் மொழியின் முக்கியதுவம் பல பெண்களுக்கு புரிவதில்லை .
அதை காக்க வேண்டிய அவசியம் புரிவதில்லை ..தன் தேவை தாண்டி சிந்திப்பதே இல்லை ..ஆனால் 1930 களில் ராஜாஜிக்கு எதிரா நடந்த மொழி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள் 73 பேர் .
அதில் ரொம்ப ஆச்சர்யமா 42 பேர் கைக் குழந்தையோடு கைது செய்யப் பட்டனர் . நல்லா யோசித்து பாருங்க ..மொழிப்போர்காக கைக் குழந்தையோடு இன்னிக்கு எத்தனை பெண்கள் வருவார்கள் .

பிரபாகரனின் மறுபக்கத்தை கிளற தேவையில்லையா? மே மாத வசூல் ஆரம்பம்

ஆலஞ்சியார் : ஈழம் மட்டுமே தங்களின் பிழைப்பாக கொண்டு திரியும் திருமுருகன் காந்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கரனை விமர்சிப்பதை பார்பனீய மனநிலை என்கிறார் ..
முதலில் இவர்களுக்கு ஈழம் பிரபாகரன் தவிர வேறெதும்,தெரியாது .. பத்தாண்டுகளுக்கு முன்பே தோற்றுவிட்ட ஈழ போராட்டத்தோடு நூற்றாண்டுகளாய் எம்மை அழுத்தி நிற்கும் பார்பனத்தோடு முடிச்சு போடுகிறார் .. மக்களின் ஆதரவு பெற்ற ஜனநாயக பாதையில் பயணிக்கும் திமுக உறுப்பினரை விமர்சிக்க கூட ஒரு தகுதி வேண்டும் அது ஈழ பிழைப்புவாதிகளுக்கெல்லாம் இல்லை ..
பிரபாகரனின் மறுபக்கத்தை கிளற தேவையில்லை ஆனால் என்பதாண்டுகள் இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்த மிகச்சிறந்த ஜனநாயகவாதி .. மாபெரும் கட்சியின் தலைவர் இந்தியா கண்ட ஆகசிறந்த ஆளுமை கலைஞரை சில சில்லுவண்டிகள் அரைகுறைகள் வாய்க்குவந்ததை பேசி திரிந்தபோதெல்லாம் இந்த மயிராண்டிகள் எங்கு போனார்கள் .. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லை #கலைஞர் ஆனால் வரம்புமீறி திரும்ப திரும்ப ஒரே பொய்மூட்டைகளால் கேலியும் கிண்டலும் செய்தபோதெல்லாம் வராத கோபம் ..
பிரபாகரனை விமர்சித்தால் வருகிறது

அவர்களை மன்னிப்பு கேட்க வேண்டுமென்கிறார் .. பிரபா

சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் .. வீடியோ


updatenews360.com :சென்னை : சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்கக்கோரி, சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மே 3-க்கு பிறகு சொந்த ஊர் செல்லலாம் என்ற எண்ணம் கேள்விக்குறியானது. ஆனால், வெளி மாநிலங்களில் இருப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் கிண்டி, வேளச்சேரி, முகப்பேறு ஆகிய பகுதிகளில் அரசினால் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி, தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, பல்லாவரம் பகுதியில் வெளிமாநிலத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீசாரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். ஏற்கனவே சென்னை கொரோனாவால் ஸ்தம்பித்துள்ள நிலையில், வெளி மாநில தொழிலாளர்கள் கூட்டமாக கூடியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்று வவ்வால் மூலம் பரவாது- ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனா தொற்று வவ்வால் மூலம் பரவாது- ஆய்வில் கண்டுபிடிப்புமாலைமலர் : : வவ்வால்களிடம் ஆய்வு மேற்கொண்டபோது கொரோனா வைரஸ் வவ்வால் மூலம் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை என்று மதுரை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கூறினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறை வவ்வால் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் 35 மாணவர்கள் வவ்வாலின் குண நலன்கள் தொடர்பான டாக்டர் பட்ட (பி.எச்.டி) ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

H1B விசா விதிகளில் தளர்வு: அமெரிக்கா!

H1B விசா விதிகளில் தளர்வு: அமெரிக்கா!மின்னம்பலம் : H1B விசா வைத்துள்ளவர்களுக்கும், அமெரிக்க குடியுரிமைக்காக விண்ணப்பித்து உள்ளவர்களுக்கும் கருணை காலத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புவதும், ஊதிய குறைப்பு செய்வதும் தொடர்ந்து அமெரிக்காவில் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் அமெரிக்காவில் குடியுரிமை வாங்குவதற்காக முயற்சித்து வருகிறார்கள். இவற்றில் இரண்டு லட்சம் பேர் H1B விசா மூலம் அந்த நாட்டில் தங்கி உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கரோனா; சென்னையில் 174 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆனது

coronation-for-231-tamil-nadu-people-today-174-people-infected-in-chennai-the-casualty-figure-was-2-757hindutamil.in :தமிழகத்தில் 231 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் 174 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 231 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 90 சதவீதத்துக்கும் மேல் அதாவது 174 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 1,083 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 1,257 ஆக அதிகரித்துள்ளது. முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
< தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா சிவப்பு மண்டலங்கள் . தமிழகத்தில் 12 மாவட்டங்கள்; இந்தியா முழுதும் 130 மாவட்டங்கள் அறிவிப்பு

.hindutamil.i : தமிழகத்தின் சிவப்பு மண்டலங்கள்:
1. சென்னை
2. மதுரை
3. நாமக்கல்
4. தஞ்சாவூர்
5. செங்கல்பட்டு
6. திருவள்ளூர்
7. திருப்பூர்
8. ராணிப்பேட்டை
9. விருதுநகர்
10. திருவாரூர்
11. வேலூர்
12.காஞ்சிபுரம்
மத்திய சுகாதார அமைச்சகம் கரோனா பாதிப்பை 3 விதங்களாகப் பிரித்ததில் 130 மாவட்டங்களை இந்தியா முழுதும் அதிபாதிப்பு ஹாட்ஸ்பாட் சிவப்பு மண்டலங்களாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மே 4 முதல் 17ம் தேதி வரை நீட்டித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை லாக்டவுன் குறித்து அறிவித்துள்ளனர்.
284 சுமார் பாதிப்பு மண்டலங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும் 319 மண்டலங்கள் பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களாகவும் அறிவித்துள்ளது, இது மே 4 முதல் ஒரு வாரத்துக்கான அறிவிப்பாகும்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

வடகொரியா தலைவர் 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில்..

உயிருடன் இருக்கிறார்...? 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடகொரிய தலைவர் தினத்தந்தி : 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடகொரிய தலைவர் கின் ஜாங் உன் .உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சியோல்; வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொது வெளியில் தோன்றியுள்ளார். வட கொரிய தலிவர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு பின் பொது வெளியில் தென்படாததால், அவர் இறந்துவிட்டதாகவும், இதய அறுவை சிகிச்சை காரணமாக அவரால் எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின
ஆனால் தென்கொரியா அவர் ஆரோக்கியமாகவும், நலமுடனும் இருப்பதாகவும் கூறி வருகிறது. ஆனால் அவர் பொதுவெளியில் தென்படாத காரணத்தினால் பலத்த சந்தேகம் எழுந்து வந்தது.இந்நிலையில் கிம் ஜாங் உன், 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொதுவெளியில் தென்பட்டதாக, வடகொரியா அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பார்ப்பன வலையில் சிக்கிய திமுக உடன்பிறப்புகள்..!

தமிழரிமா வனத்தையன் : சீமான் போன்றவர்கள் ஈழத்தை ஆதரித்துக்கொண்டே திமுக வை எதிர்ப்பது , சீமான் எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவை தமிழின விரோத கட்சியாக மாற்றவே..!
இந்த மிக நுட்பமான சதி வலையில் இப்போது திமுகவினர் விழுந்து விட்டனர் என்ற புள்ளியில் பார்ப்பன சூழ்ச்சி வென்று விட்டது என்றே நாம் கருதவேண்டியுள்ளது..!
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் திமுக மீது வன்மம் கக்குவது வெளிநாடு வாழ் பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு அவர்கள் பலியாகி விட்டார்கள் என்பதுதான்.
ஈழ இன அழிப்புக்கு திமுக தான் காரணம் என்று பரப்பியவர்கள் எல்லாம் சிவசங்கர் மேனன், மற்றும் சதீஷ் நம்பியாரின் வகையறாக்கள் தான்..!
பார்ப்பனியம் தான் ஈழத்தை அழிப்பதில் முன்வரிசையில் நின்றது. ஒரு யூகத்துக்கு ஈழ இன அழிப்புக்கு திமுக துணை போயிருந்தால் பார்ப்பனர்கள் திமுக வை கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசியலில் என்ன நடக்கிறது என்பது தமிழ் தேசிய போதையில் திரியும் மூடர்களுக்கும் புரியவில்லை..!
அண்ணா மற்றும் கலைஞர் ஊட்டி வளர்த்த இன உணர்வை நெஞ்சில் தாங்கியுள்ளதாக சொல்லிக்கொள்ளும் சில திமுகவினருக்கும் புரியவில்லை...!!
ஆரியத்தை முன்னிறுத்தி தமிழினத்தை வசியம் செய்வதும், திராவிடத்தை முன்னிறுத்தி தமிழினத்தை வஞ்சிப்பதும் பார்ப்பன சித்து விளையாட்டுகளில் ஒன்று. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..!!
நமக்கு மிகப்பெரிய அறிவாற்றல் இல்லாவிட்டாலும் பார்ப்பான் எதை தீவிரமாக ஆதரிக்கிறானோ அதை நாம் எதிர்த்து விட்டாலே நாம் சரியான முடிவை தான் எடுத்துள்ளோம் என்பதை புரிந்து கொள்ளலாம் என்று அய்யா பெரியாரே சொல்லி சென்றிருக்கிறார்..!!
ஆனால் பார்ப்பனர்கள் எதிர்ப்பதை நாமும் எதிர்க்கிறோம், அவர்கள் ஆதரிப்பதை நாமும் ஆதரிக்கிறோம்..! இது நம் இனத்தின் வீழ்ச்சிக்கு வித்திடும் மகா முட்டாள்தனம்.

குழந்தைகள் சோடா பீமாக இருப்பதிலும் Popeyeயாக இருப்பதிலும் நம் பங்கு அதிக அளவு இருக்கிறது

சுமதி விஜயகுமார் : குழந்தைகள் பள்ளிக்கு அடுத்து அதிக நேரம்
செலவழிப்பது தொலைக்காட்சிகளில் தான். கார்ட்டூன்கள் என்றில்லை, திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகள், நிகழ்ச்சிகள் என்று அனைத்தையும் பார்க்கிறார்கள். தொலைக்காட்சிகளுக்கு parental lock என்று ஒரு option இருந்தாலும், அந்த lockஐ எடுத்துவிட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு யாரும் அவர்களுக்கு சொல்லி தர தேவையில்லை. 10 வயது குழந்தைகூட செய்துவிடும்.
நம் நாட்டில் திரைப்படங்களுக்கு மட்டும் தான் பார்வையாளர்கள் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள், செய்திகள் அல்லாத மற்ற நாடகங்களுக்கு கூட சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. சிறு குழந்தைகளை போட்டி என்ற பெயரில் ஆட/பாட வைப்பதெல்லாம் மிக மிக குறைவு. பொது அறிவு மற்றும் விளையாட்டு போட்டிகள் மட்டும் இருக்கும். தமிழ் தொலைக்காட்சிகளில் குழந்தைகள் ஆடுவதும் பாடுவதும் பார்க்கவும் கேட்கவும் இனிமையானது. ஆனால் வெற்றி இலக்கை நிர்ணயித்து அவர்களை ஒரு வித அழுத்தத்திற்கு உட்படுத்துவதும், பெற்றோர்களின் ஆசைக்காக குழந்தைகளை வற்புறுத்துவதும் ஏன் இன்னும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதில்லை என்று தெரியவில்லை.

கொரொனா நிதி வழங்கியவரகள் பட்டியல்..

Sundar P : கொரொனா நிதி வழங்கியவர் பட்டியல்... (பாகிஸ்தானுக்கு போகவேண்டியவர்கள் கொடுத்தது...).
1.ஷாருக்கான்..... 33 கோடி +வென்டிலேட்டர்ஸ்.
2.சல்மான்கான்..... 15 கோடி + 1000 ஆம்புலன்ஸ்.
3.அமீர்கான்..... 23 கோடி + வென்டிலேட்டர்ஸ
4.இர்பான்பதான்..... 18 கோடி.
5.ஜாவித்அக்தர்..... 6 கோடி.
6.அஜீம்பிரேம்ஜி..... 1, 250 கோடி.
7.டெல்லி ஜும்மா மசூதி..... 5 கோடி.
8.வக்ப் போர்டு..... 38 லட்சம்.
9.டெல்லி சாகி இமாம்..... 46 லட்சம்.
10.MPLP நிறுவனம்..... 75 லட்சம்.
11.டெல்லி நிஜாமுதீன் மர்கஸ்..... 1 கோடி.
12.அஜ்மீர் தர்கா..... 3 கோடி.
13. U P தேவ்பந்த் அரபி மத்ரஸா..... 12 லட்சம்.
14.ப்ரெய்ல்லி மத்ரஸா..... 21 லட்சம்.
15.யூசுப்காஜா CIPLA..... 2 கோடி + டெஸ்ட் கிட்ஸ்.
16.அசவுதின்_உவைஸி..... 95 கோடி.....

தேசபக்திக்கு சொந்தக்காரர்கள் வழங்கிய நிதி....
RSS..... 000.....
பஜ்ரங்தள்..... 000.....
பசு_பாதுகாப்பு_இயக்கம்..... 000.....
அபினவ்_பாரத்..... 000..... இந்துமகா_சபை..... 000..... யுவவாஹினி..... 000.....
யார் தேசபக்தர்கள்....???

மருத்துவர் பிரதீபா உயிரிழப்பு .. கொரோனா தடுப்பு கிட்ஸ் பற்றாக்குறை காரணமா..

tamil.news18.com/ :கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்த இறுதியாண்டு மாணவி விடுதியில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிப்பவர் பிரதீபா. பிரதிபாவின் சொந்த ஊர் வேலூர் ஆகும். கொரோனா காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், கொரோனா தடுப்பு பணிக்கு தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு பணியில் ஈடுபடுபவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் விடுதியில் தங்கி பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்த மாணவி பிரதீபா, கடந்த 16-ம் தேதி முதல் பணி முடித்துவிட்டு பெரம்பூரில் உள்ள வீட்டிற்குச் செல்லாமல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியர் விடுதியில், தனியாக அறை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலினுக்கு அதிமுக உறுப்பினர் எழுதிய நெகிழ்ச்சிக் கடிதம்!

ஸ்டாலினுக்கு அதிமுக உறுப்பினர் எழுதிய நெகிழ்ச்சிக் கடிதம்!மின்னமபலம் : ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பயனடைந்த அதிமுக உறுப்பினர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா மற்றும் அதன் காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக கிராமம், நகர்ப்புறம் என பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவக் கூடிய வகையில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தினை திமுக முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் திமுகவினர் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

வெள்ளி, 1 மே, 2020

இரு வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு -உள்துறை அமைச்சகம்

 தினத்தந்தி :  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்  வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

டி ராஜேந்தர் .. இளையராஜா ரசிகர்களையும் கட்டிப்போட்டு வைத்த கலைஞர்

வெங்கடேஷ் ஆறுமுகம் : கவியரசு தெரியும் கவிப்பேரரசு தெரியும் காதல் கவியரசு யார் தெரியுமா? மக்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில்
கிண்டலடிக்கும் டி.ஆர் தான்..எப்படின்னு கேட்டா இந்தப் பதிவினை படித்தால் உங்களுக்குத் தெரியும்! தாடி என்றோ, டண்டணக்கா என்றோ, நாம் கலாய்க்கும் டி.ஆர். காதல் வரிகளில் கிங்!
இளையராஜா ரசிகர்களையும் ஏற்றுக் கொள்ள வைத்த அவரது திறமை அளவிட முடியாதது. இசையை விடுங்கள் அவரது பாடல் வரிகளில் துள்ளும் காதலைப் பாருங்கள். இனி அவரது பாடல்களின் லிஸ்ட்.
"இது குழந்தை பாடும் தாலாட்டு" இது இரவு நேர பூபாளம்.. இது மேற்கில் தோன்றும் உதயம் (ஒரு தலை ராகம்) இந்தப் பாடல் வரிகளில் எல்லாமே நெகட்டிவாக இருக்கும். ஆனால் அமங்கலமாக இருக்காது! தமிழ் விளையாடும், "நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன், வெறுங் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்" அற்புதமான கற்பனையது!
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி விட இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா.!
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் பாடலில் செம்மார்ந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள் ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்(இரயில் பயணங்களில்)

அமெரிக்காவில் நான்கு லொறிகளில் 60 சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீரகேசரி : நியூயோர்க்கின், புரூக்ளினிலுள்ள மலர்ச்சாலைக்கு வெளியே நான்கு லொறிகளில் 60 சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறிகளிலிருந்து ஒரு வித திரவம் வடிவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகளினால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவ்வாறு சடலங்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புரூக்ளினிலுள்ள ஆண்ட்ரூ கிளெக்லி மலர்ச்சாலைக்கு வெளியிலேயே இவ்வாறு குளிரூட்டப்பட்ட லொறிகளில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமுலாக்க வட்டாரம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட சட்ட அமுலாக்க அதிகாரிகள், குறித்த உடல்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக லொறிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அழுகிய நிலையில் உள்ளமையினால் துர் நாற்றம் வீசுகின்றது. அதேநேரம் இந்த உடல்களில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த அநேகமானோரின் உடல்கள் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இங்கிலாந்து 24 மணிநேரத்தில் 674 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி
தினத்தந்தி : இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலியாகி உள்ளனர். பதிவு: மே 01, 2020 07:00 AM லண்டன், கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர் பலியாகி இருந்தனர் என சுகாதார மற்றும் சமூக நல துறை கூறியிருந்தது. இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்பொழுது, கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 674 பேர் பலியாகி உள்ளனர். இது முந்தைய நாள் எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். இதனால் பலி எண்ணிக்கை 26 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று 6 ஆயிரத்து 32 பேருக்கு புதிய பாதிப்புகளை பொது சுகாதார அதிகாரிகள் உறுதி செய்து உள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

எம்ஜியார் - பிரபாகரன் .. இரு பிரைவேட் ஆர்மிகளின் தயாரிப்பாளர்கள்

 புலிகள் இயக்கத்திற்கும் எம்ஜியாருக்கும் ஏற்பட்டதொடர்புகள் பற்றிய தெளிவான விபரங்கள் ஊடகங்களில் பெரிதாக வரவில்லை.
எம்ஜியாருக்கு இலங்கையில் பல நண்பர்கள் இருந்தார்கள் . வெளிப்படையாக தெரிந்தவர்கள் சிலர் மட்டுமே! புலிகளோடு எம்ஜியாருக்கு ஏற்பட்ட விசேட தொடர்புக்கு இலங்கையில் எம்ஜியாரின் திரைப்படங்களை விநியோகம் செய்தவர்களும் ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கிறார்கள் ..
இலங்கையில் மூன்று பெரிய திரைப்பட நிறுவனங்கள் இருந்தன .
நான்காவதாக ஒரு தியேட்டர் முதலாளியும் சிறு சிறு படங்களை வாங்கி திரையிட்டு கொண்டிருந்தார்.
அவர் எம்ஜியார் ரசிகர் என்று அறியப்பட்டு இருந்தவர்.
அவருக்கும் எம்ஜியாருக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பினால் எம்ஜியார் பெரிய மூன்று விநியோகஸ்த்தர்களையும் தவிர்த்து விட்டு தனது பிரமாண்ட வெற்றி படங்களின் விநியோக உரிமையை இந்த சிறு தியேட்டர் முதலாளிக்கு கொடுத்தார்.
ஸ்ரீமாவோ ஆட்சிகாலத்தில் தமிழ் படங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதுவரை ஏழு முதல் பத்து பிரதிகள் வரையில் இறக்குமதி செய்து கொண்டிருந்தவர்கள் இனி மூன்று பிரதிகள மட்டுமே இறக்குமதி செய்யலாம் என்று உத்தரவு பிறப்பிக்க பட்டது.
பெரிய இக்கட்டில் தியேட்டர் முதலாளிகள் சிக்கினார்கள். ஏழு எட்டு பிரதிகள் ஓடவேண்டிய இடத்தில வெறும் மூன்று பிரதிகள் மட்டுமே!
அவை மீண்டும் மீண்டும் ஓடி களைத்து காய்ந்து அறுந்து பீஸ் பீசாக பிய்ந்து ஒட்டி காட்ட வேண்டிய நிலையில் இருந்தது.
இந்த இக்கட்டில் இருந்து மீள்வதற்கு தியேட்டர் முதலாளிகளுக்கு கள்ளகடத்தல்காரர்கள் பேருதவி புரிந்தனர்.
சாதாரண படங்களை மூன்று பிரதிகள் மட்டுமே ஒருவாறு ஓடி முடிந்தன.
பிரமாண்ட வெற்றி படங்கள்ன் பிரதிகள் அதிகம் தேவைப்பட்டது.
பழுதடைந்த பிரதிகளை அப்படியே மறைத்து விட்டு அதே இடத்தில் கள்ளகடத்தல் வள்ளங்களில் வந்து சேரும் புத்தம் புது பிரதிகளை கொண்டு படம் காட்டினார்கள் .

வியாழன், 30 ஏப்ரல், 2020

சூத்திரர்களுக்கு அறிவு கிடையாது! .. ஹரே கிருஷ்ணா ஹரே ராமாவின் கோட்பாடு . ISKCON இலவச உணவும் ஜாதி விஷமும்

ஆப்பிரிக்க இனத்தவர்களை, அமெரிக்க பழங்குடி மக்களைத் தாழ்த்தியும் இழிவாகவும் பல முறை பிரபுபதா அவர்கள் பொதுக் கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார். ஆரியர்களை அவர் உயர்த்திப் பிடித்த காரணத்தினால் ஆரியர்கள் அதிகம் உள்ள ஐரோப்பா முழுவதிலும் ISKCON இயக்கம் படு வேகமாய் பரவி வருவதை எளிதாக அவதானிக்க இயலும்.அதாவது ஆரியர்கள், ISKCON என்பது தங்களது சொந்த பூர்வீக மதமாக கருதத் துவங்கியிருக்கிறார்கள்,
Dhinakaran Chelliah : Sudras have no brain ஶ்ரீலஶ்ரீ_பிரபுபதா
உலகத்தில் அதி வேகமாய் வளர்ந்து வரும் மதவாத,இனவாத அடிப்படைவாத அமைப்பு எதுவென்றால் அது ஹரே கிருஷ்ணா அமைப்பான ISKCON தான்.
அமைதி அமைதி ....எப்படிங்க ஶ்ரீகிருஷ்ணரையும் கீதையையும்
உலகமெங்கும் பரப்பும் இந்த இயக்கம் இனவாத அமைப்பாகும்?!
ISKCON இயக்கத்தை தொடங்கியவரான பிரபுபதா.

ஜல்சக்திக்கு எதிராக விவசாயிகள் கடும் எதிர்ப்பு

m
m
nakkheeran.in t;எஸ்.பி. சேகர் : ஏறத்தாழ 43 ஆண்டுகாலமாக உச்சநீதிமன்றத்தில் காவிரி நீரை பெறுவதற்கு தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. போராடியது மட்டுமல்லாமல் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதை மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் உச்சநீதிமன்ற ம் காவிரி மேலாண்மை வாரியம் ஒழுங்காற்று குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்மூலம் வழிகாட்டு முறைகளையும் தீர்ப்பாக வழங்கியுள்ளது.  அதை மத்திய அரசு மதிக்கவில்லை.  மீண்டும் மீண்டும் தமிழகம் போராடியது. அதன் பிறகு காவிரி ஆணையம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இவைகளுக்கு அதிகாரம் குறைவாக இருந்தாலும் கூட தமிழக மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதையும் ஏற்றுக் கொள்ள மனமில்லாத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழக விரோத அரசாக மாறி உலக மக்கள் கவனம் முழுவதும் கரோனா பக்கம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மத்திய அரசு காவிரி ஆணையத்தை மத்திய அரசின் ஜலசக்தி துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. அதை வன்மையாக கண்டிக்கிறோம்.  அதை கைவிட வேண்டும் .

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு - மாமாவட்ட வாரியாக--. ஒரே நாளில் 161 பேருக்கு ...- சென்னையில் 138 பேர் பாதிப்பு

தினத்தந்தி ": தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.  தமிழகத்தில் இன்று மட்டும் 161பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று  5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இன்று மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஏன் மே 17 க்கு அரக்கர் டிவி ய பார்ததால் பயம் ?

Devi Somasundaram :; கார்த்திக் ராமசாமி அண்ணன் தன் பக்கத்தில எப்பவும்
நிறைய கேள்வி கேட்பார்.. உரையாடல் தான் அறிதலுகான தீர்வு என்பதில் அவருக்கும் நம்பிக்கை உண்டு...எல்லா டாபிக் பத்தி எல்லா அமைப்பு பற்றி கேள்வி கேட்பார், சம்பந்தபட்ட இயக்க நபர்களை டேக் செய்தும் கேட்பார்
இரண்டு நாள் முன்ன யாரை உங்க தலைவரா ஆதரிக்க்கிறிங்க .அண்ணா ? பிரபாகரனா ? அப்படின்னு கேட்டு இருந்தாங்க ..
அதுல பலர் பல பதில் சொன்னாலும் அந்த பதிவின் நோக்கம் நம் உரிமை தீர்வுக்கு ஆயுத வழியை ஏற்கிறோமா ? அரசியல் தீர்வை ஏற்கிறோமா ? என்பது தான்..
அதில் பலர் அண்ணாவ எப்படி பிரபாகரன் கூட ஒப்பிட்டன்னு பாய்ந்தார்கள் ..இது ஒரு வித பக்தி நிலை..நாம் நேசிக்கிற தலைவரை யாரோடும் ஒப்பிடாதே என்பது ஒரு வகையில் ஹீரோ ஒர்ஷிப் தான் ..பிரபாகரன பேசுனா அதை இனத்துரோகின்னு விமர்சுப்பதும் இதும் ஒன்று தான் ..அதை விட்றுவோம்.
கலைஞரே பிரபாகரனை விமர்ச்சதில்ல தெர்யுமான்னு பலர் பதிவ பார்த்தேன் ..அவர்களிடம் பிரபாகரனே திமுக விமர்சிச்சதில்ல தெரியுமான்னுலாம் அரசியல் பேசினா அது வாட்ஸ் வாதிகளின் அரசியலா தான் இருக்கும். கலைஞருக்கு இருந்த ஆழ்ந்த தமிழின பற்று அவரை பேச விடாமல் செய்து இருக்கலாம் ..அதனால நாங்களும் பேசக் கூடாது என்பது இல்லை .
கார்த்தி அண்ணன் அடுத்த பதிவில் அரக்கர் டிவியில் பேச மே 17 இயக்கத்தை அழைத்தார் ..மே மாதம் வந்துவிட்டதால் அடுத்து மேடை ஏறும் காட்சிகாக அவர் அழைத்து இருக்கலாம் .. மே 17 அரசியல் சிந்தனைகளை பொது சமூகம் அறியட்டும் என்ற அக்கறையில் அழைத்தார்...

சசிகலாவின் இரட்டை இலை சின்னம் ஆய்வு மனு தள்ளுபடி .. உச்ச நீதிமன்றம்

இரட்டை இலை சின்னம்: சசிகலா மனு தள்ளுபடி!மின்னம்பலம் : இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று உத்தரவிட்டது. சசிகலா, தினகரன் ஆகியோர் தனித் தனியாக தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அறிவிக்கப்படாமலேயே முழு முடக்கம்?

டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாமலேயே முழு முடக்கம்? மின்னம்பலம : “சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் கொரோனா பரவல் அதிகரிப்பும், மக்கள் வெளியே வருவதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக ஊரடங்கைக் கடுமையாக்க எண்ணிய தமிழக அரசு 26ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அதாவது மெடிக்கல், மருத்துவமனைகள் தவிர வேறு எந்தக் கடைகளும் திறந்திருக்காது என்று ஏப்ரல் 24ஆம் தேதி அறிவிக்க, ஏப்ரல் 25ஆம் தேதி சென்னை மற்றும் மதுரையில் கடுமையான மக்கள் திரள் வெளியே வந்தது. நான்கு நாட்களுக்கான காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு என்ற பெயரில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்தனர். இதனால் அன்று மாலை 3 மணி வரை கடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு மேற்கண்ட மாநகராட்சிப் பகுதிகளில் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

H- ! B visa அமெரிக்காவில் இருந்து இரண்டு லட்சம் பேர் வெளியேறவேண்டும் ..


தினமலர் : வாஷிங்டன்:'ஹெச் - -1பி' விசா வாயிலாக, அமெரிக்காவில் பணியாற்றி வரும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள், தங்கள் வேலையை இழந்த காரணத்தால், ஜூன் மாத இறுதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.;
கடும் பாதிப்புபல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வெளிநாட்டினர், அமெரிக்கா சென்று பணியாற்ற, ஹெச்- - 1பி எனப்படும் விசா வழங்கப்படுகிறது. பெரும்பாலும், கணினி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள், இந்த விசாவில் அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலால், அமெரிக்கா கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் வேளையில், அங்கு லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து வருகின்றனர். பல்வேறு துறைகளிலும், ஊதிய குறைப்பு செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக, ஹெச் -- 1பி விசாவில் பணியாற்றும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

காவிரி நீர் மேலாண்மையை மத்திய அரசு பறித்தது .. கொரோனா நேரத்தில் ஜல்சக்தி கொள்ளை


தினகரன் : அரசிதழ் திரும்ப பெறாவிடில் போராட்டம் !  ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய விவகாரம் தமிழக ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல். மத்திய அரசின் அரசிதழ் திரும்ப பெறாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அதிமுக அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்ச நீதிமன்றத்தில் 14.75 டிஎம்சி நீரை கோட்டை விட்டது. காவிரி நடுவர் மன்றம் தந்த “காவிரி மேலாண்மை வாரியத்தையும்” கை நழுவவிட்டது. 2018, பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பு அடிப்படையிலான காவிரி நதிநீர் பங்கீட்டை செயல்படுத்துவதற்கு ஒரு “வரைவுத் திட்டத்தை” 6 வாரத்திற்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் 3 மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு தாமதம் செய்தது.

புதன், 29 ஏப்ரல், 2020

கண்ணீர் வரவழைக்கும் இர்ஃபான் கானின் இறுதி கடிதம்


splco.me/tam  :நியூரோ எண்டோக்ரைன்’ புற்றுநோய் காரணமாக 53 வயதில் மரணம் அடைந்த நடிகர் இர்ஃபான் கான் எழுதிய கடைசி கடிதம் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான். எனக்கு ‘நியூரோ எண்டோக்ரைன்’ புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன.
 எனது சொல்வளத்தில் ‘நியூரோ எண்டோக்ரைன்’ புதிய வார்த்தை. இது அரிய வகை புற்றுநோய் என்றார்கள். அப்படித்தான் போல. ஏனெனில், நான் அது குறித்து தேடியபோது மிக சொற்பமான தகவல்களே கிடைத்தன. அந்த வகை புற்றுநோய் பற்றிய ஆய்வுகளும் குறைவு என்பதால் தரவுகளும் குறைவாகவே இருந்தன. அதனாலேயே அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்பதை கணிக்க இயலா நிலை என்னை சூழ்ந்திருந்தது. கிட்டத்தட்ட நான் முயல்வும் பிழைத்தலுமான சோதனை விளையாட்டில் இருந்தேன் என்றே சொல்ல வேண்டும். அந்த நோய் என்னுள் வரும் வரை நான் முற்றிலுமாக மாறுபட்ட விளையாட்டு ஒன்றில் இருந்திருக்கிறேன். ஒரு விரைவு ரயில் பயணத்தில் நானிருந்தேன். எனக்கு கனவுகள் இருந்தன. எதிர்கால திட்டங்களும், இலக்குகளும், ஆசைகளும் இருந்தன. நான் அவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன். அப்போது திடீரென என் தோளை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தால் டிக்கெட் பரிசோதகர். அவர் என்னிடம் “நீ இறங்க வேண்டிய இலக்கு வந்துவிட்டது. கீழே இறங்கு” என்றார்.

தமிழ் வளர்த்த சினிமா கவிஞர்கள்….. திரைப்படக் கலை இலக்கிய செல்நெறி..

Murugan Sivalingam  : தமிழ் வளர்த்த சினிமா கவிஞர்கள்…!
தமிழ் மொழியின் மொழி வளத்தை பாமர மக்களுக்கு சங்க இலக்கியங்களால் தரமுடியாமல் போனது. !அந்த இயலாமையைப் பாரதியார் காலமே
சாத்தியமாக்கியது… அவரின் காலத்தைத்
தொடர்ந்த தமிழ்க் கவிஞர்களை சினிமா என்னும் ஓர் அற்புத ஊடகம் துணைக்கு அழைத்துக்கொண்டது… அவர்களை சினிமா பாடலாசிரியர்களாக்கியது…. அந்த வழித் தோன்றலே இந்த பிரபல்யங்கள் ஆவர்.. அ.மருதகாசி.. உடுமலை நாராயண கவி… .பாபநாசம் சிவன்… கு.மா.பாலசுப்பிரமணியம்…..
கா.மு.ஷெரிப்….. சுரதா.. ஞானகூத்தன்.. தஞ்சை ராமையா தாஸ்.. பாரதிதாசன்... கண்ணதாசன்.. பஞ்சு அருணாசலம்.. கம்பதாசன்.. புலமைப்பித்தன்.. பூவை செங்குட்டுவன்.. குயிலன்.. போன்றோர்களே ஞாபகத்திலுள்ளனர்… இன்னும் பலரும் பாடல்களை இசையுடன் அள்ளிக் கொடுத்தனர்.
அவர்களில் 50 களில் திகழ்ந்த மூன்று கவிஞர்களை முத்தமிழாக.... இங்கே காணுகின்றோம்.. இவர்களைத் தரம் பிரித்து வரிசை படுத்தமுடியாது..! ஒவ்வொருவரும் ஒவ்வொரு புலமையைக் கொண்டவர்கள்… கண்ணதாசன்.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.. வாலி ஆகியோரின் பாடல்களை மூத்த.. நடுத்தர.. ஏன் இன்றைய இளைய தலைமுறை வரை அறியாதவரில்லை.. அன்று விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற முன்னணி

சவுதி அரேபியாவுக்கே இந்த கதியா! பில்லியன் கணக்கில் கடன் வாங்க இருக்கிறார்களா? ஏன்?

நிதி அமைச்சர்tamil.goodreturns.in/  :கொரோனா வைரஸே, இன்னும் என்ன பிரச்சனைகளை எல்லாம் கிளப்ப இருக்கிறாய் என உலக பொருளாதாரத்தை கெஞ்சிக் கேட்க வைத்திருக்கிறது கொரோனா லாக் டவுன். அந்த அளவுக்கு கொரோனா வைரஸால் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று தான் சவுதி அரேபியா பிரச்சனை. இந்த ஜனவரி 2020-ல் கூட, "சவுதியில் பணப் பிரச்சனை" எனச் சொல்லி இருந்தால்.. நம்மைப் பார்த்து சிரித்து இருப்பார்கள். ஆனால் இப்போது அங்கு பணப் பிரச்சனை இருக்கிறதாம்.
கச்சா எண்ணெய் உலக அளவில் அதிகம் கச்சா எண்ணெய் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் முன் வரிசையில் சவுதி அரேபியாவும் ஒன்று. இன்று உலகில் கச்சா எண்ணெய் சப்ளையிலும் சவுதி டாப் 5 நாடுகளில் ஒன்று. சுருக்கமாக, கச்சா எண்ணெய் ராஜாக்களில் இந்த சவுதி அரேபியாவும் ஒன்று. கச்சா எண்ணெய் விலை, இந்த ராஜாவையும் கண்ணீர் விட வைத்திருக்கிறது

சொந்த மாநிலத்தவர்களை அழைத்துக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!!

nakkheeran.in - கலைமோகன் :  Home Ministry advice to state govts இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில், உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அழைத்து கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தங்களது மாநிலங்களை சேர்ந்தவர்களை, அந்தந்த மாநில அரசுகள் அழைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்களை அழைத்துக் கொள்ளலாம். சிக்கியவர்களை அழைத்துக்கொள்ள மாநில அரசுகள் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்கலாம்.

இந்தி நடிகர் இர்பான் கான் காலமானார்

 NDTV  New Delhi:
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சைப்பலனின்றி மரணமடைந்தார்.
53 வயதான நடிகர் இர்பான் கான், 2018-ல் தான் புற்றுநோயால் (நியூரோஎண்டோகிரைன் டியூமர்) பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதற்காக லண்டனில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் (குடல் தொற்று) பாதிக்கப்பட்டதால் இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, உடல்நிலை மோசமாக உள்ளதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைபலனின்றி மரணமடைந்தார்.
1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான 'ஹிந்தி மீடியம்' படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது. 2011-ல் 'பான் சிங் தோமர்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

தமிழக தெலுங்கர்களின் அரசியல் தலைவராக ராம மோகன ராவ் .. கும்மிடு பூண்டிக்கு குறியாம்

 கும்மிடிப்பூண்டியை குறிவைக்கும் ராம மோகன ராவ்மின்னம்பலம் : முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுதும் பயணித்து தெலுங்கு பேசும் மக்களை ஒன்றிணைத்து வந்தார். இதன் அடிப்படையில் மதுரையில் திருமலைநாயக்கர் பிறந்தநாளை ஒட்டி பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். பின் ஆர்.எம்.ஆர். பாசறை என்று ஆரம்பித்து தமிழகம் முழுக்க இருக்கும் தெலுங்கு பேசும் அமைப்புகளை எல்லாம் ஒன்று திரட்டி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். ரஜினியுடன் கூட ராம மோகன் ராவ் தொடர்பில் இருக்கிறார் என்று தகவல்கள் வந்தன.

லண்டனில் தனது இரு குழந்தைகளை குத்திக் கொன்ற இலங்கைத் தமிழர்

  வீரகேசரி : லண்டன் நகரில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்;. ஒரு வயதுடைய பெண் குழந்தையும் மூன்று வயதுடைய ஆண்குழந்தையும் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் தமது தந்தையால் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்குழந்தைகளின் தந்தையான 40 வயதான நிதின் குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்று காயமடைந்த நிலையில் பொலிஸ் காவலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இக்கத்திக்குத்து தொடர்பாக வேறு யாரையும் தாம் தேடவில்லை என பொலிஸர்ர தெரிவித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த இந்தக்குடும்பம் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் லண்டனுக்கு குடிபெயர்ந்தவர்கள். நிதின்குமாhர் கடையொன்றில் பணியாற்றி வந்தார்.

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தகவல்...?வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தகவல்...?    தினத்தந்தி :  வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. வாஷிங்டன் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் குறித்து உறுதிபடுத்தாத பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது கிம் ஜாங்  மரணமடைந்தார் என்ற ஊகத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொதுவாக இல்லை. இதய சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் கோமாவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில், ஏவுகணை சோதனையின் போது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியா


USCIRF ✔ @USCIRF  Countries of Particular Concern in #USCIRFAnnualReport2020: Burma, China, Eritrea, India, Iran, Nigeria, North Korea, Pakistan, Russia, Saudi Arabia, Syria, Tajikistan, Turkmenistan, and Vietnam
தினத்தந்தி :மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் வைக்கபட்டத்தற்கு அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய ஆணையத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி   சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) ஆண்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளது அதில் இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. மத சுதந்திரத்தை மீறும்  நாடுகள் என பர்மா, சீனா, எரித்ரியா, இந்தியா, ஈரான், நைஜீரியா, வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, சிரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வியட்நாம் என 14 நாடுகளை பட்டியலிட்டு உள்ளது. சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் செயலற்ற நிலைக்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்டது தான் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம். இதன் பரிந்துரைகள் வெளியுறவுத்துறைக்கு கட்டுப்படாதவை ஆகும்
2004 முதல் முதல் முறையாக பாகிஸ்தான், சீனா, வட கொரியா உள்ளிட்ட 14 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்து உள்ளது.

தமிழகத்தில் 121 பேருக்கு கரோனா; சென்னையில் 103 பேருக்கு பாதிப்பு எண்ணிக்கை 2,058 ஆக அதிகரிப்பு

2-058-persons-affected-by-corona-virus-in-tamilnadu
பிரதிநிதித்துவப் படம்

hindutamil.in : தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அல்லது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அன்றைய நாளில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்களை அளித்து வந்தனர் இந்நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக வழக்கமாக நடைபெறும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதில்லை. மாறாக, தினந்தோறும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்படும் அறிக்கை மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது.

தொழிலதிபர்களின் 68,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி - அதிர்ச்சிப் பட்டியல்!

தொழிலதிபர்களின் 68,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி -  அதிர்ச்சிப் பட்டியல்!  மின்னம்பலம : கொரோனா தடுப்புப் பணிகளுக்காகவும், நிவாரணப் பணிகளுக்காகவும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பொருளாதார உதவி வேண்டி மத்திய அரசிடம் வேண்டுகோளுக்கு மேல் வேண்டுகோள்கள் வைத்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில்தான்... நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்டோரின் வங்கிக் கடன்கள் 68,607 கோடி ரூபாயை மத்திய மோடி அரசு தள்ளுபடி செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சாகேத் கோகலே என்பவர் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். கடந்த 24ஆம் தேதி, 2019 செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி ரிட்டர்ன் ஆஃப் - அதாவது கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி கொடுத்திருந்தது. அந்தப் பட்டியலில்தான் நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டு அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாகக் கூறியுள்ளது ரிசர்வ் வங்கி.

புலிகளால் ஈழப்போராளிகள் உயிரோடு கொழுத்தப்பட்ட நாள் 29- April 2006

50 THOUGHTS ON “TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 34 ஆண்டுகளின் பின் : சபா நாவலன்”
sivamathi
ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் வாசுதேவன் ஆற்றிய உரை.
மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும்.
மன்னிப்பு இல்லையேல் எதிர்காலம் இல்லை என்று நிற வெறிக்கெதிராக குரலெழுப்பிய Desmond Tutu ஆணித்தரமாக கூறுகிறார். மன்னிப்பு என்பது மறப்பதற்காக அல்ல! மாறாக மன்னிப்பு இல்லாவிட்டால் மனித எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று கூறுகிறார். இன்று நான் உங்கள் முன்நின்று உரையாற்றுவது எனது கடந்த காலத் தவறிற்கு பிராயச்சித்தம் தேட அல்ல. நாம் விட்ட தவறுகளை நீங்கள் இன்று மன்னித்தபோதும் நாம் இறக்கும் வரை அது நம்முடன் கூடவே பயணித்து அது எம்மை சித்திரவதை செய்யும். ஆனால் இன்று நீங்கள் என்னை இங்கு பேச அழைத்ததன் மூலம் அந்த சித்திரவதையில் இருந்து ஒரு சிறிய அசுவாசத்தை பெற உதவியிருக்கிறீர்கள். அதற்கு நான் உங்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது.

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

முதலாளிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி.. Banks write off over Rs 68,000 cr loans, Choksi among 50 top wilful defaulters: RTI

Indian banks have technically written off a staggering amount of Rs 68,607 crore due from 50 top wilful defaulters, including absconding diamantaire Mehul Choksi, according to a reply under RTI from the Reserve Bank of India (RBI)
மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : · வெளிநாடு தப்பியோடிய முதலாளிகளுக்கும் சேரத்து 68,000 கோடி கடன் தள்ளுபடி..! -
நிர்மலா சீதாராமனின் பித்தலாட்டம் அம்பலம்
 வங்கிகளில் 13 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிய மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 பனியா முதலாளிகளின் 68,607 கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன.
 2019 செப்டம்பரிலே இந்த தள்ளுபடி சம்பவம் நடைபெற்று இருந்தாலும், இது குறித்து 2020 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்டபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல மறுத்திருக்கிறார். இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது

அரசு ஊழியர்களின் ஊதிய குறைப்புக்குத் தடை!

மின்னம்பலம் : கொரோனாவால் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, மத்திய மாநில அரசுகள், அரசு ஊழியர்கள் ஊதியத்தை பிடித்தம் செய்வது. அகவிலைப்படி உயர்வை  நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
அரசு ஊழியர்களின் ஊதிய குறைப்புக்குத் தடை!இந்நிலையில் அண்மையில் கேரள அரசு  ஊழியர்களுக்கு 6  நாட்கள் ஊதியம்,அடுத்த 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் என்று கேரள அரசு அறிவித்தது. ரூ.20,000 ஊதியம் வாங்குபவர்களுக்கு, பிடித்தம்  செய்யப்படாது. அரசு நிறுவனங்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு, தனியார் கூட்டு நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும்அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், ஆணையங்களில் பணியாற்றுபவர்களின் ஊதியம் 30 சதவிகிதம் பிடிக்கப்படும். ஆனால் இந்த உத்தரவு, கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை அளித்து உதவி செய்தவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக அறிவிப்பு

கொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக அறிவிப்பு  தினத்தந்தி : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,058 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாவட்டங்களின் நிலவரம் குறித்து காண்போம்...
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு 1,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரங்கள் பின்வருமாறு:- கோயம்புத்தூர் 141, திருப்பூர்- 112, திண்டுக்கல்-80, ஈரோடு- 70, மதுரை-79, திருநெல்வேலி-63, செங்கல்பட்டு -70, நாமக்கல் -61, தஞ்சாவூர்- 55, திருவள்ளூர் -53, திருச்சி-51, விழுப்புரம் - 48, நாகப்பட்டினம் - 44, தேனி -43, கரூர் -42, தென்காசி-38, விருதுநகர் -32, சேலம்- 31, ராணிப்பேட்டை -31, திருவாரூர் - 29, தூத்துக்குடி-27, கடலூர் -26, வேலூர் -22, திருப்பத்தூர் - 18, கன்னியாகுமரி-16, திருவண்ணாமலை- 15, ராமநாதபுரம் -15, சிவகங்கை -12, காஞ்சிபுரம் -20 நீலகிரி-9, பெரம்பலூர் -7, கள்ளக்குறிச்சி- 9, அரியலூர்-6, புதுக்கோட்டை-1, தர்மபுரி-1

ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும்


தினத்தந்தி :  ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் உறுதி அளித்துள்ளார்.
 புதுடெல்லி: செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி விற்பனைக்கு வந்து விடும் என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் கூறி உள்ளார். இதன் விலை சுமார் ரூ .1,000 இருக்கும் என்று அவர் கூறினார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதார் பூனவல்லா கூறியதாவது:- மே மாத இறுதிக்குள் நாங்கள் உற்பத்தியைத் தொடங்கி விடுவோம். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். இந்தியாவுக்கும் உலகத்துக்கும் கொடுக்கக்கூடிய ஒரு தயாரிப்பு எங்களிடம் இருக்கும்.

கிம் எங்கே….? அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?


tamil.news18.com  : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் தோன்றாததால், அவர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.
கிம் எங்கே….? அவர் உயிருடன் இருக்கிறாரா? கொரோனா தொற்றால் உலகமே உறைந்துபோயுள்ள இந்த சமயத்திலும், கடந்த சில நாட்களாக இந்த கேள்விக்கான விடை தேடி களமிறங்கியுள்ளன சர்வதேச ஊடகங்கள்.
அனைத்து பலங்களும் பொருந்திய அமெரிக்காவையே மிரட்டும் வல்லமை படைத்த மிகச்சிறிய நாடு வட கொரியா. அந்தவகையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், வல்லரசுகளுக்கு சிம்மசொப்பனம் என்றால் அது மிகையாகாது. மார்ச் மாத இறுதியில் கொரேனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கியிருந்த நிலையில், வடகொரியாவோ வழக்கம்போல் ஏவுகணை சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தது.
உலக வரைபடத்தில் ஒரு புள்ளி விடாமல், அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா பரவியுள்ள சூழ்நிலையில், வட கொரியா மட்டும் அதற்கு விதிவிலக்கு என்று கூறி வருகிறது அந்நாட்டு அரசு. இருந்தபோதும், கொரோனா பரவலை வடகொரியா மறைப்பதாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டியபோதும், அது பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை அதிபர் கிம் ஜாங் உன்

கன்டெயினர் லாரியில் பிடிபட்ட ராஜஸ்தான் இளைஞர்கள் வீடியோ

   ஸ்பெல்கோ :  முன்னறிவிப்பில்லாத தொடர் ஊரடங்கால், கேரளாவில் இருந்து தங்கள் சொந்த ஊரான ராஜஸ்தான் செல்ல கன்டெயினர் லாரிக்குள் பதுங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் சுமார் 26 பேர் காவல்துறையால் கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊடரங்கு உத்தரவால், அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் வெளியில் செல்பவர்கள் மீது போலீசர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எனினும், பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி, போதிய உணவின்றி, தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். சிலர் தங்களது சொந்த ஊரை நோக்கி நடைபயணமாக சென்று உயிரிழந்த அதிர்ச்சி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

திங்கள், 27 ஏப்ரல், 2020

8,538 பயிற்சி காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு!

8,538 பயிற்சி காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு!மின்னம்பலம் : கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 27) பயிற்சி காவலர்களை உடனடியாக பணியில் சேர உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் தமிழக போலீசார் அயராது பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8,538 பயிற்சி காவலர்களை உடனடியாக பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில், 8,538 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

சலூன்காரருக்கு கொரோனா முடிவெட்டிய 6 பேருக்கு கொரோனா ..சென்னை

தினகரன் : சென்னை: சலூன் கடை உரிமையாளருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் முடிவெட்டியவர்களில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உரிமையாளருக்கு சொந்தமான 2 கடைகளிலும் முடிவெட்டியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

245 ரூபாய் பொருள் 600 ரூபாய்: அம்பலத்துக்கு வந்த ரேபிட் கிட் ஊழல்!

245 ரூபாய் பொருள் 600 ரூபாய்: அம்பலத்துக்கு வந்த ரேபிட் கிட் ஊழல்!மின்னம்பலம் : கொரோனா தொற்றினை சுகாதாரப் பேரிடர் என்று மத்திய
அரசு அறிவித்து, அது பொருளாதாரப் பேரிடராகவும் மாறிவிட்ட நிலையில்... ரேபிட் கிட் விலை 400 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ரேபிட் கிட்ஸ் இறக்குமதி செய்த நிறுவனத்துக்கும், விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கும் இடையே நடந்த வழக்கில்தான் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது நீதிமன்றம்.
ரேர் மெட்டாபாலிக் லைஃப் சயின்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கும், மேட்ரிக்ஸ் லேப்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இடையில் நடந்த வழக்கில்தான் டெல்லி உயர் நீதிமன்றம், “தனியார் நிறுவனங்களின் ஆதாயம் என்பது பொது ஆதாயத்தை விட பெரிது கிடையாது. இந்த விஷயத்தில் பொது நலனே முக்கியம்’ என்று உத்தரவிட்டுள்ளது.

இலங்கை 28 ஏப்ரல் இல் போரை நிறுத்துவதாக அறிவித்த பின்பும் கூட புலிகள் போரை நிறுத்துவதாக அறிவிக்கவே இல்லை

கிளிமூக்கு அரக்கன் Kilimookku Arakkan:; போர் நிறுத்தம் என்றால் என்ன
சண்டை போடும் இரு தரப்பும் நிறுத்துவது
ஒரு தரப்பு மட்டும் போரை நிறுத்தி அடுத்த தரப்பு நிறுத்தாவிட்டால் அது போர் நிறுத்தமா
கண்டிப்பாக கிடையாது
14 அக்டோபர் 2008
போரை நிறுத்த உதவக்கோரி நடேசன் அவர்கள் திமுகவிற்கு கடிதம் எழுதுகிறார்
திமுக இந்திய அரசு மூலம் இலங்கை அரசிடம் பேசிய போது
இலங்கை தரப்பில் “புலிகள் தனி ஈழம் கோரிக்கையை கைவிடுவதாக” அறிவித்தால் இலங்கை போரை நிறுத்தலாம் என்று கூறினார்கள்
ஆனால்
புலிகள் அதை ஏற்கவில்லை
இது யார் தவறு
திமுகவின் தவறா, அல்லது புலிகளின் தவறா
பிறகு மார்ச் 30 அன்று நடேசன் மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறார்
போரை நிறுத்த உதவ வேண்டும் என்கிறார்
புலிகள் தனி ஈழ கோரிக்கையை கைவிடுவதாக கூறுகிறார்
கண்கெட்ட பிறகு பரிதி வழிபாடு
இலங்கை தரப்பில் “புலிகள் தனி ஈழம் கோரிக்கையை கைவிடுவதாக” அறிவித்தால் இலங்கை போரை நிறுத்தலாம் என்று 2008 அக்டோபரில் கூறினார்கள்
ஆனால்
கிளிநொச்சியை கைப்பற்றி பலமாக இருந்த இலங்கை இம்முறை தங்களின் கோரிக்கையை அதிகப்படுத்தியது
“தனி ஈழம் கோரிக்கையை கைவிட்டால் மட்டும் போதாது. புலிகள் ஆயுதங்களை துறக்க வேண்டும்” என்று கூறியது
திமுக தரப்பில் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் பிரபாகரன் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை

கொரொனா : விஞ்ஞானிகள் பரிந்துரையை உதாசீனப்படுத்திய மோடி அரசு

savukkuonline.com/ மும்பை தாராவி  கொரொனாவை கையாளும் விவகாரத்தில் மத்திய அரசின் விஞ்ஞானிகள் அளித்த அறிவுரையையே அரசு உதாசினப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
 கொரொனாவை கையாள அரசு நியமித்த கோவிட்19 குழுவினர், மார்ச் இறுதியில், அரசு போதுமான தயாரிப்பு நடவடிக்கைகளை செய்யவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.   ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை, கொரொனா சோதனை, கண்காணிப்பு ஆகியவற்றுக்கான எவ்வித தயாரிப்புகளும் செய்யப்படவில்லை.
 மத்திய அரசின் விஞ்ஞானிகள் கொரொனா நோய் பரவலை எதிர்கொள்ள அளித்த அறிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தாமல் அரசு தாமதப்படுத்தியது என்பது குறித்து இக்கட்டுரைத்தொடரின் முதல் பாகத்தில் அம்பலப்படுத்தப்பட்டது.
 அகில இந்திய மருத்துவக் கழகத்தின் மருந்தியல் துறையின் தலைவர் நவீத் விக், “நடவடிக்கைகளை எடுத்தால் நாம் தப்பிக்க முடியும்” என்பதை, கொரொனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவிடம் 29 மார்ச் 2020 அன்று  வலியுறுத்தினார்.

"அரசின் பேரால் அல்லது பதவியின் பேரால் திருட்டு" .

Devi Somasundaram : பி எம் கேர்ஸ் ல வரும்  நிதியை CAG ஆடிட் செய்ய போறதில்லயாம்..  இண்டிபெண்டண்ட்   ஆடிட்டர் ஆடிட் செய்வாராம் . .இந்த CAG ரிப்போர்ட் அடிப்படையா வச்சு தான் மன் மோகன் அரசு மேல அத்தனை குற்றச்சாட்டு சொன்னார்கள் .. அப்ப CAG தன் வேலை தாண்டி ஆடிட் மட்டும் செய்யாம எது இழப்புன்னுலாம் ராமாயண கதை எழுதுச்சு. அப்ப CAG < இவர்களுக்கு சரின்னு தோணுச்சு ..இப்ப இண்டிபெண்டண்ட் ஆடிட் ஏன் ? .
ஏன் என்றால் CAG ஆடிட் ஒரு ரெக்கார்ட் ..அரசோட கோப்பில் இருக்கும் ..பார்லிமெண்ட்ல அது சமர்பிக்கப் படனும் ..அதன் மீது நாடாளுமன்ற கூட்டு குழு ஆய்வு செய்யும் ..இது வரலாற்ற பதிவு செய்வது போல் ..
இன்னும் ஆயிரம் வருடம் சென்று கேட்டாலும் பதில் சொல்லனும்.. இண்டிபெண்டண்ட் ஆடிட் அறிக்கை அப்படி பதிவாக வாய்ப்பில்லை ..
ஆடிட் ல சமர்பிக்கப் படும் அறிக்கை நேர்மையா இருக்கனும் என்ற அவசியமில்லை . .அப்படி நேர்மையா இல்லாத பட்சத்தில் அது விவாதப் பொருள் ஆக மாறும் வாய்ப்பு இண்டிபெண்டண்ட் ஆடிட்லகிடையாது ..

இப்ப திமுக பத்தி எதும் போலி குற்றச்சாட்டு வச்சா நாம ஆதாரம் கேட்கிறோம்ல ...அவை குறிப்பில் இருக்கும், நீக்கபட்டா நீக்க தந்த ரெக்வெஸ்ட் இருக்கும் அதை குடுன்னு கேட்கிறோம் .
இருந்தா தான தர முடியும்...நடக்காதற்கு ஆதாரம் இருக்காது .உடனே உதயனிதி சொம்பு , 200 உபிஸ்னு கூவிட்டு ஓடிடுவாங்க ..
இப்ப இவர்கள் செய்யும் திருட்டுக்கு அப்டி யாரும் ஆதாரம் குடுன்னு கேட்ற கூடாதுல்ல ..அதனால தான் கேள்வியே வராம தடுக்க இந்த இண்டிபெண்டண்ட் ஆடிட் ..

கொரோனா ஊரடங்கு சில மாதங்கள் மேலும் தொடர்ந்தால் என்ன நடக்கும்?

Kathir RS : மார்ச் 29, ஏப்ரல் 8 ஆகிய தேதிகளில் நான் எழுதிய மூன்று "அதீத கற்பனை" பதிவுகள்:
***
கேள்வி: இந்த கொரோனா ஊரடங்கு சில மாதங்கள் மேலும் தொடர்ந்தால் என்ன நடக்கும்?
பதில்: இதுவரை இந்த ஊரடங்கு பலருக்கு மோசமான
கால கட்டமாக இருக்கிறது என்றாலும் சமாளிக்கவே முடியாமல் வெடிக்கும் நிலையில் இல்லை.
உழைப்பு அதன் மூலம் உருவாகும் வருவாய் வருவாய் உருவாக்கும் வரி..வரி உருவாக்கும் அரசு திட்டங்கள் என தொடரும் இந்த சங்கிலி யின் தொடர்பு அறுபட்டிருக்கிறது.
ஆனால் இதுவரை ஈட்டிய உருவாக்கிய வெல்த் எனப்படும் செல்வம் உணவு தானியங்கள் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக்கொண்டிருக்கிறோம்.
இது சில மாதங்கள் தொடர்ந்தால் கூட பல மோசமான விளைவுகள் ஏற்படலாம்.
பணம் உணவு இரண்டுக்கும் ஒரு கட்டத்தில் தட்டுப்பாடு வரும்..
அரசு இப்போது இலவசமாக இல்லாத இயலாதவர்களுக்கு உணவளித்துவரும் சூழல் ஒரு கட்டத்தில் நின்று போகலாம்.
அப்போது, உணவின் விலை உயரும்.பணத்தின் மதிப்பு குறையும்.
ஆடம்பர உலகம் சுருங்கும்..
சமானியர்களின் வாழ்வு படுமோசமாகி ஏழ்மையில் வீழ்வார்கள்.
திருட்டு வழிப்பறி கொலைகள் முதலிய குற்றங்கள் அதிகரிக்கும்.
உருவாக்கி வைக்கப் பட்டிருக்கும் தொழில் கட்டமைப்புகள் அனைத்தும் நஷ்டத்தால் மூடப்படும்..

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என தென்கொரியா

நன்றாக இருக்கிறார் சீனா tamil.oneindia.com - vishnu-priya. : சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என தென்கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.
கிம் ஜாங் உன்னின் தாத்தாவின் 108 ஆவது பிறந்த நாள்விழாவில் அவர் கலந்து கள்ளவில்லை. இதிலிருந்து அவரது உடல்நிலை குறித்த வதந்திகளும் ரெக்கை கட்டி பறக்கத் தொடங்கின.
இந்த பிறந்த நாள் விழா அந்நாட்டு நாள்காட்டியில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியிலேயே கிம் கலந்து கொள்ளாததால் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது.
இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் அண்டை நாடான தென்கொரியாவோ அந்த நாட்டில் நடப்பதை பார்த்தால் கிம்மிற்கு உடல்நிலை மோசமாக இருப்பது போன்ற அசாதாரண சூழல் நிலவவில்லை என தெரிவித்தது. இதையே சீனாவும் தெரிவித்தது.

பணக்காரர்களுக்கு 40 சதவீத வரி விதிக்க சிபாரிசு; வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் கூடுதல் வரி

 தினத்தந்தி :  கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக நாடு போராட உதவும் வகையில் பணக்காரர்களுக்கு 40 சதவீத வரி விதிக்கவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த வகையில் பெரும் தொகையை செலவிட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு முன்வரிசையில் நின்று சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு சுய பாதுகாப்பு கருவிகள், முக கவசங்கள், சானிடைசர் வழங்கவும், நோயாளிகளுக்கு செயற்கை சுவாச கருவிகள் வாங்கவும், பொதுமக்களுக்கு பெருமளவில் சோதனை செய்வதற்கு சோதனை கருவிகள் வாங்கவும் பெரும்தொகையை மத்திய அரசு செலவிட்டு வருகிறது.
 அது மட்டுமின்றி சிறப்பு ஆஸ்பத்திரிகள், தனிமை வார்டுகள், படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டியதும் இருக்கிறது.

இலங்கையில் 95 கடற்படையினருக்கு கொரோனா ! இராணுவ கப்டனுக்கும் தொற்று !

95 கடற்படையினருக்கு கொரோனா ! இராணுவ கப்டனுக்கும் தொற்று ! சீதுவை இராணுவ முகாம் முடக்கம் ; இலங்கையில் கொரோனா குறித்த முழு விபரம் இதோ ! வீரகேசரி : இலங்கை  சீதுவை இராணுவ முகாம் முடக்கம் ;
இலங்கையில் கொரோனா குறித்த முழு விபரம் இதோ !நாட்டில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் -19 தொற்று காரணமாக  இன்று இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் 95 கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும்  வெலிசறை கடற்படை முகாமில் சேவையாற்றியவர்கள் என தெரிவிக்கும்,   கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா, அவர்களில் 27 பேர் விடுமுறைகளில் வீடு சென்றிருந்த நிலையில், அவ்வந்த பிரதேச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை - தமிழக அரசு அவசர சட்டம்

வெப்துனியா : நோய்த்தொற்றால் இறந்தவர் உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழக அரசு அசசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. ஆம், நோய்த்தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம்/தகனம் செய்வதை தடுத்தால் குறைந்தபட்சமாக ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது

320 கி.மீ சைக்கிளில் வந்த முதியவரை அனுமதிக்க மறுத்த மே.வங்க கிராமம்

மின்னம்பலம் : 320 கி.மீ சைக்கிளில் வந்த முதியவரை அனுமதிக்க மறுத்த கிராமம்!ஊரடங்கினால் வருமானமின்றி தவித்த 70 வயது முதியவர், பிகாரிலிருந்து 320 கி.மீக்கு அப்பால் மேற்கு வங்கத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு மூன்று நாட்கள் சைக்கிள் மிதித்து சென்றுள்ளார். கொரோனா அச்சத்தால் கிராம மக்கள் அவரை அனுமதிக்கவில்லை.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் வராததையடுத்து, ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களுக்கு பிழைப்பு தேடி தினக்கூலிகளாக சென்றவர்கள் வருமானம் நின்று போனதால் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பலர் தங்களது ஒரே நம்பிக்கையான சொந்த ஊரில் உள்ள வீட்டை தேடி சென்று கொண்டிருக்கின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!மின்னம்பலம் : நூறு பெண்களை மிரட்டி பணம் பறித்த இன்ஜினீயரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
பொள்ளாச்சியில் கடந்த ஆண்டு பெண்களை ஏமாற்றி சில இளைஞர்கள் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் அதுபோலவே மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் ஆன்லைன் மூலமாகக் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குக் கடந்த 24ஆம் தேதி இரவு புகார் ஒன்றை அனுப்பினார். அதில் காசி என்பவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருப்பதாகவும், லட்சக்கணக்கில் பணமும் பறித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, நடந்த விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை காசி ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.

கொரோனா நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் வெளியீடு!!

Release of List of Foods Provided to Corona Therapistsநக்கீரன் : தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 60 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் தமிழகத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா உறுதியாகி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தரப்படும் உணவு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி  காலை 4 மணிக்கு ரொட்டி, பிஸ்கட். 4.30  மணிக்கு கபசுரக் குடிநீர்.
இரவு 7 மணிக்கு பால்,வாழைப்பழம்.
இரவு ஒன்பது முப்பது மணிக்கு சாதம், சாம்பார், ரசம், பொரியல், முட்டை. இரவு 10 மணிக்கு சிறிது பூண்டுடன் பால்.
இதர நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கு காபி, பிஸ்கட் .காலை 8.30 மணிக்கு  இட்லி சாம்பார் வழங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு கபசுரக் குடிநீர், காலை 11 மணிக்கு வேகவைத்த சுண்டல்/வேர்க்கடலை, எலுமிச்சைச்சாறு (உப்பு/சர்க்கரை) வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் கரோனா  பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் ரமலான் நோன்பு கடைப்பிடிப்போருக்கு அதற்கு தகுந்தார்போல் உணவுகள் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா: - 1020 பேர் குனமடைந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா: டிஸ்சார்ஜ் - 1020மாலைமலர் : தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா
சென்னை:< கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இருந்தாலும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 1885-ஆக உயர்ந்துள்ளது. 1020 பேர் குணமடைந்துள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 64 பேரில் 28 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது