பெரம்பலூர் மாவட்டத்தில் இளம்வயது திருமண முயற்சியில் இருந்து மீட்கப்பட்டு கல்வி வாய்ப்பு வழங்கப்பட்ட 17 மாணவி கள், பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களை ஆட்சியர் தரேஷ் அகமது பாராட்டி, உயர்கல்விக்கான உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
கடந்தாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இளம்வயது திருமண முயற்சியில் இருந்து 92 குழந்தை களை மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள் தலைமை யிலான குழுவினர் மீட்டனர். 13 வயதில் தொடங்கி 17 வயது வரை யிலான இவர்களில் 17 பேர் பிளஸ் 2 மாணவிகள். இந்த 17 பேரும் ஆட்சியர் தரேஷ் அகமது உத்தரவின் பேரில் அந்த மாண விகளுக்கும் அவர்களின் குடும் பத்தினருக்கும் உரிய அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளிலேயே தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப் பட்டது. அவ்வப்போது மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் கல்வித்துறை சார்பில் அந்த மாணவிகளுக்கான ஆலோச னைகள் மற்றும் உரிய உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.