ஞாயிறு, 25 ஜனவரி, 2026

ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு - பாஜக விஜய்க்கு கண்டிஷன்... ஆட்சியில் பங்கு

 K.K.   :  ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு... பாஜக பக்கம் சாயும் விஜய்... பாஜக விஜய்க்கு போட்ட கண்டிஷன்... 
ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், தற்பொழுது இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது. தவெக என்கிற ஆப்சன் இருப்பதை பயன்படுத்தி கொண்டு திமுகவிடம் அதிக தொகுதிகள் மிரட்டு பெற்று விடலாம் என காங்கிரஸ் போட்ட திட்டம் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் போட்ட கூச்சலுக்கு திமுக செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் திமுக உடன் கூட்டணியை தொடர்வதா அல்லது தவெக பக்கம் செல்வதா என காங்கிரசை கட்சி ஆலோசனையில் சமீபத்தில் ஈடுபட்டது, அப்போது செல்வப்பெருந்தகை உட்பட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள்  திமுக உடன் கூட்டணியை தொடரவில்லை என்றால் வரும் சட்டசபை தேர்தலில் 1 தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது, தொடர்ந்து திமுக மீது சவாரி செய்து தான் நமக்கு தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என தங்கள் தரப்பு வாதத்தை வைத்து இருக்கிறார்கள்.

”பனையூர் பண்ணையார்”, “ப்ளாக் டிக்கெட்” விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்

AIADMK Vijay

  minnambalam.com - Mathi   :  அதிமுகவை விமர்சித்து பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அக்கட்சியின் ஐடி விங் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரத்தில் இன்று ஜனவரி 25-ந் தேதி நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவுக்கு அடிமை கட்சி என்றும் விமர்சித்தார்.
இதற்கு அதிமுகவின் ஐடி விங் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதில்: பனையூர் பண்ணையார் அவர்களே,
ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்
@actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.

தார் ரோட்டில் காயவைக்கும் நெல் தாரொடு சேர்த்து உண்ணவைக்கும்

May be an image of combine and text that says "P ரோட்டில் நெல்: விஷம் கலந்த சோறு -விழித்துக்கொள்!"
Atputha Piratheep : நம்ம ஊர் 'விஞ்ஞானிகள்' செய்யும் இந்த 'காப்பெட்ரோட் களம்' நெல் காயப்போடும் வைபவத்தை, கொஞ்சம் அறிவியலையும் கலந்து மூளையை களட்டி கிணத்து தண்ணீல கழுவீட்டு வாசியுங்கோ.....
இதை வாசிக்கும்போது சில 'மோட்டு மேதாவிகளுக்கு' கோபம் வரலாம். வரட்டும், அதுவும் ஒருவிதத்தில் உடம்புக்கு நல்லதுதான்!
#கார்ப்பெட் ரோட்டு தார் #tar. இது நெல் காயப்போடும் களம் அல்ல, எமன் பாசம் வீசும் தளம்!
எங்கடை சனத்துக்கு எப்பவுமே ஒரு 'விபரீத புத்தி' உண்டு. "அரசாங்கம் நமக்காக ரோடு போட்டிருக்கு" எண்டு நினைச்சியளோ? இல்ல, நம்மட ஆட்கள் அதை 'இலவச களம்' (Free Drying Floor) எண்டுதான் நினைப்பினம் விளங்குதோ மோனே??
தார்ப்பாய் வாங்க காசு செலவழிக்க மனமில்லாம, "ரோடு கறுப்பா இருக்கு, வெயில் நல்லா அடிக்கும்" எண்டு வியாக்கியானம் பேசுற கூட்டத்துக்குத் தெரியறதில்லை, அவங்கள் அரிசியோட சேர்த்து 'விஷத்தையும்' அவிச்சுச் சாப்பிடுறாங்கள் எண்டு.
அந்த 'ரோட்டு நெல்' தின்னும்போது இலவசமாகக் கிடைக்கும் 'சத்துக்கள்'...?!
1. தார் (Bitumen) எனும் ஸ்லோ பொய்சன் (Slow Poison)

திமுக கூட்டணியில் தொகுதிகள் ஓரளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது லீக்கான பட்டியல்

No photo description available.

 Oneindia Tamil: ஏரியா பிரிச்சாச்சு.. கமலுக்காக விட்டுக் கொடுத்த திமுக! காங்கிரஸுக்கு அதே தான்! லீக்கான திமுக லிஸ்ட்!
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் களத்தில் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், கூட்டணியின் இறுதி வடிவம் குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக போன்ற பல கட்சிகள் உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணி தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவைத் தேர்தலில் தான் மக்கள் நீதி மய்யம் அந்த கூட்டணியில் இடம்பெற்றது.