சனி, 19 நவம்பர், 2016

குஜராத் 65 சதவீத அங்கன்வாடிகளில் கழிவறை வசதிகள் இல்லை..30 சதவீத அங்கன்வாடிகளில் சமைப்பதற்கு போதுமான பாத்திரங்களே இல்லை

தான் மிக வேகமாக வளர்ந்து வருவதாக பீற்றிக் கொள்ள கிடைக்கும் எந்த வாய்ப்பையும் குஜராத் தவறவிடுவதில்லை. ஆனால் பிரம்மாண்டமான அதிவிரைவுச் சாலைகள், பெரும் தொழிற்சலைகள் மற்றும் பொருளாதார மண்டலங்களுக்குப் பின்னே, குஜராத்துக்கு வேறு ஒரு முகம் உள்ளது.  தீவிரமான ஊட்டச்சத்து குறைபாடும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியச் சீர்கேடும் குஜராத் எதிர்கொள்ளும் இரண்டு கடுமையான சவால்கள் என்று சமூகப் பொருளாதார குறியீட்டெண்கள் தெரிவிக்கின்றன. பிற மாநிலங்களில் இந்தப் பிரச்சினைகள் பழங்குடியின பிராந்தியங்களுடையதாக உள்ள நிலையில், தலைநகர் அகமதாபாத் உள்ளிட்டு குஜராத் முழுவதும் இப்பிரச்சினைகள் நிலவுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட 2014-2015ம் ஆண்டுக்கான சமூகப் பொருளாதார ஆய்வின் படி, குஜராத்தில் உள்ள பானாஸ்கந்தா, பதான், நவ்சாரி, ஜூனாகட் மற்றும் கேடா உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் 46 தாலுக்காக்களில் 1.97 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், 24,762 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

புதிய ரூபாய் தாள்களில் தேவநாகரி எழுத்துக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மனு..

புதிய ரூ.2000 நோட்டு | பட உதவி: ரிசர்வ் வங்கி இணையதளம்.புதிய 2000, 500 ரூபாய் தாள்களில் தேவநாகரி எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பினய் விஸ்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டு, 2000 ரூபாய் தாள்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்துள்ளன. 500 ரூபாய் தாள்களும் புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ளன.
இவ்விரண்டு ரூபாய் தாள்களின் வடிவமைப்பிலும், வழக்கத்துக்கு மாறாக, தேவநாகரி எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பது, 343(1)-வது சட்டப் பிரிவுக்கு முரணானது எனக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பினய் விஸ்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  புதிய நோட்டுக்களில்  குளறுபடிகள் . சில நோட்டுக்களில் சாயம் போய் பல்லிளிக்கிறது ,முக்கியமான எழுத்துக்கள் அழிந்து போய் உள்ளது

பர்வேஸ் முஷராப்: இந்தியாவிலே தமிழர்கள்தான் கல்வியில் சிறந்தவர்கள்


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி ஒன்று அளித்தார். அதில் பேசிய அவர் இந்தியாவிலேயே தமிழர்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என பாராட்டியுள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷராப் மிகவும் வெளிப்படையாக பேசுபவர். அவருடைய வெளிப்படையான கருத்துக்கள் அந்த நாட்டிலேயே பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தென் இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென் இந்தியர்கள் அவர்களுக்கான வளர்ச்சியை அவர்களே செய்து கொள்கின்றனர்.இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தென் இந்தியா கல்வியில் சிறந்து விளங்குகிறது.

ரூபாய் விவகாரம் நடிகர்களுக்கு லீக்கானது எப்படி? .. அதுவும் கரெக்டா மோடியின் அறிவிப்புக்கு முன்

சென்னை: கோலிவுட்டின் இளம் நடிகர் ஒருவர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவிக்கவிருந்த நேரத்தில் ரூ. 40 கோடி கடனை அடைத்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார். மோடியின் அறிவிப்பு சில பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் கோலிவுட்டின் இளம் நடிகர் ஒருவர் மோடியின் அறிவிப்பு வெளியாகவிருந்த நேரத்தில் பைனான்சியர் ஒருவரிடம் வாங்கிய ரூ.40 கோடி கடனை திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதனால் நடிகர் தப்பித்துவிட்டார். அவரிடம் இருந்து கடனை திரும்பப் பெற்ற பைனான்சியருக்கு தான் பல கோடி நஷ்டம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.அன்புதாய்ன்    கொஞ்சம் நஷ்டம் .. கமிஷன் கொடுத்து சமாளிச்சிடுவார்ல?

ரூபாய் நோட்டுக்கள் செல்லாததை அன்னா ஹசாரே வரவேற்றுள்ளார் !மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததையடுத்து, பொதுமக்களிடையே இருந்த பணப் புழக்கத்தில் 80 சதவிகிதம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்குக்கூட கையில் பணமின்றி தவிக்கின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரணமாக நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்படைந்தனர். தங்கள் கையில் வைத்திருந்த பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் குவிந்தனர். வங்கிகளில் போதிய பணம் இல்லாததால், பொதுமக்கள் வங்கிகளின் முன்பும் ஏடிஎம்-களின் முன்பும் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். அவ்வாறு காத்திருந்தாலும், சில்லறை செலவுக்கு பணமில்லாததால் ஏழை-எளியோர், நடுத்தர வர்க்கத்தினர், தினக்கூலி பெறுபவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிப்படைந்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

கலவரம் வெடித்து விடுமோ? அஞ்சும் வங்கி ஊழியர்கள் !


தமிழகத்தில் 5 ஆயிரம் கிளைகளும், 2200 ஏடிஎம் மையங்களும், இந்தியா முழுவதும் 85 ஆயிரம் வங்கிக் கிளைகளும் உள்ளன. கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் தடுக்க, பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
புதிய நோட்டுகளான 2000 ரூபாய் நோட்டுகளை இந்தியா முழுவதும் 9ஆம் தேதி இரவு 12 ஆயிரம் கோடிதான் ரிசர்வ் வங்கி கடைசியாக விநியோகம் செய்தது. அதன் பிறகு இன்றுவரை ஒரு பைசாகூட வரவில்லை என்கிறார்கள் வங்கி ஊழியர்கள். செல்லாத நோட்டுகளை வங்கியில் கொடுத்து 4500 ரூபாய் வரை பெற்றுகொள்ளலாம் என்றார்கள். அதன்பிறகு நேற்று முதல் 2000 ரூபாய்க்கு மேல் எடுக்கமுடியாது என்று ஒரு நிபந்தனை விதித்துள்ளது, அதன் பின்னனி என்ன என்று விசாரித்தோம்.
வங்கியில் பணம் இருந்தால்தானே பணம் கொடுக்கமுடியும். இன்று 99 சதவிகிதம் ஏடிஎம்கள் மூடபட்டன. வங்கிகள் பெயரளவில் திறந்து வைத்துள்ளோம் பணம் இல்லாமல், மக்கள் கோபம் அதிகமாகிவருகிறது, இன்னும் இரண்டு நாட்களில் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற பயம் உள்ளது, காரணம் ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததினால், பணம் வரவில்லை என்கிறார்கள் வங்கி ஊழியர்கள். மின்னம்பலம்.காம்

தமிழகத்தின் அனைத்து தொழில்களும் முடங்கின .. நோயை விட மருந்து கொடுமையானது?

சென்னை: கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் தடுக்க, பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருகிறார்கள். தொடக்கத்தில் ஒரு நபர் ரூ.4 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் என்று இருந்தது, பின்னர் ரூ.4,500 ஆக அதிகரிக்கப்பட்டு, தற்போது ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தினசரி ஒரு அறிவிப்பு வெளியிடுவதால் மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணப்புழக்கம் இல்லாமல், தொழில்கள் முடங்கியுள்ளன. 
ஏடிஎம்களில் பணம் இல்லாத காரணத்தால் உச்சநீதிமன்றம் சொன்னது போல இன்னும் இரண்டு நாட்களில் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. 

பதிவாகி உள்ள வாக்குகள்:அரவக்குறிச்சியில் 81.92%, தஞ்சாவூரில் 69.02%, திருப்பரங்குன்றத்தில் 70.19% வாக்குகள், நெல்லித்தோப்பு தொகுதியில் 85.76% வாக்கு

நெல்லித்தோப்பு தொகுதியில் வாக்களிக்க ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள் | படம்: எம்.சாம்ராஜ்.தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு சில செய்தித் துளிகள்:
* தமிழகத்தில் 3 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. தமிழகத்தில் மொத்தம் 73.71% வாக்கு பதிவானது.
அரவக்குறிச்சியில் 81.92%, தஞ்சாவூரில் 69.02%, திருப்பரங்குன்றத்தில் 70.19% வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் 85.76% வாக்கு பதிவாகியுள்ளது.
* 3 மணி நிலவரப்படி அரவக்குறிச்சியில் 73.29%, தஞ்சாவூரில் 60.54%, திருப்பரங்குன்றத்தில் 62% வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 76% வாக்குப்பதிவாகியுள்ளது.

Hunza - உலகில் அதிக காலம் ஆரோக்கியமாக உயிர்வாழும் மக்கள் .. ஹுன்ஸா மக்ககளுக்கு 130 வயதெல்லாம் சர்வ சாதாரணம்

alakiHealth Secrets Of The Hunzas It is believed that among these people centenarians are a common occurrence, and that it is not unusual for elderly persons to reach the venerable age of 130. It has even been reported that a significant number have survived to the incredible age of 145!
உலகத்திலேயே நம்முடைய உங்களுடைய பரம்பரை தான் அழகும் இளமையும் அதிக ஆண்டுகள் உயிர் வாழும் வரமும் பெற்றிருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு பெருமிதம் பொங்கும்?
ஆனால் அப்படி அத்தனை வரங்களையும் மொத்தமாகப் பெற்று, ஆனால் அதில் எந்த பெருமிதமும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
 குன்சா என்பது அங்குள்ள இஸ்லாமியர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிக்கிறது. இந்த இனத்து மக்களை கோட்டீஸ் என்றும் அழைக்கிறார்கள்.
வடக்கு பாகிஸ்தானில் உள்ள கரகோரம் என்னும் மலைப்பிரதேசத்தில் தான் இந்த சாதியினர் வாழ்கின்றனர்.

சுவாதி - ராம்குமார் கொலைகள் ஒவ்வொன்றாக உண்மகள் வெளிவருகின்றன .

ஸ்வாதி கொலை வழக்கில் கழுத்தறுபட்ட நிலையில் கைதாகி, சிறையிலேயே மின்சார வயரைக் கடித்ததாகச் சொல்லப்பட்டு, மர்ம மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் கடந்த அக்டோபர் 1-ந் தேதி போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு 40 நாட் களைக் கடந்துவிட்டது. ஆனால், ராயப்பேட்டை பிணவறை வாசலி லேயே காத்திருந்து போஸ்ட்மார்ட்டம் (post mortem ) ரிப்போர்ட்டை வாங்கிச்சென்ற விசாரணை அதி காரியும் மாஜிஸ்திரேட்டுமான தமிழ்ச்செல்வி அந்த ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால் மரணத்துக்கான காரணம் மர்மமாகவே தொடர்கிறது. இத்தனை நாட்கள் ஆகியும் பி.எம். ரிப்போர்ட்டை வெளியிடாத மர்மம் என்ன? அந்த ரிப்போர்ட்டில் அப்படி என்னதான் உள்ளது? விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. வாயில் அல்ல… நெஞ்சில்! போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு முந்தைய ராம்குமாரின் புகைப்படத்தை நம்மிடம் காண்பித்த போஸ்ட்மார்ட்டம் டீம் டாக்டர் ஒருவர், ""சிறையில் இருந்த ராம்குமார் ஸ்விட்ச் போர்டை உடைத்து மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டான் என்றுதான் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால், நன்றாக பரிசோதனை செய்து பார்த்துட்டோம். வாயில கரண்ட் ஷாக் அடிச்சதுக்கான காயமோ தடய மோ இல்லை.

பொருளாதாரம் நம்பிக்கை அடிப்படையிலே இயங்குகிறது...


‘பொருளாதார வளர்ச்சி என்பது, ரத்தபந்தம் அல்லாத சமூக உறவுகளில் வெளிப்படும் நம்பிக்கையை அடிப்படையாகவைத்தே இருக்கும்’ என வாதிட்டார் ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா. மனிதர்கள் பரஸ்பரம் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்ளும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு பொருளாதார கோட்பாட்டை முன்வைத்தவர் அவர்.
1996ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘ட்ரஸ்ட்’ என்னும் பெயரிலான ஆய்வில், ‘பொருளாதார வாழ்வை சோதித்துப்பார்ப்பதன்வழியே நாம் கற்கும் முக்கியப் பாடங்களில் ஒன்றாக இருப்பது, ஒரு நாட்டின் நலன். அதன் போட்டித் திறமை, ஒரே ஒரு கலாச்சார குணத்தைவைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அது சமூகத்தில் மக்களிடம் படர்ந்திருக்கும் நம்பிக்கையின் அளவு’ என்கிறார் அவர்.

மூன்று தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு!


minnambalam,com  :தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் பொதுத் தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலுமாக 3 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த முறை நடந்த பொதுத் தேர்தலின்போது தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக - எம்எல்ஏ சீனிவேல், பதவி ஏற்புக்கு முன்னரே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

மோடி - பிரணாப் முகர்ஜி அவசர சந்திப்பு!


கடந்த 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் செல்லாது என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்த நிலையில் அது, நாடு முழுக்க பதட்டத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் சுமார், 55 பேர் வரை இதனால் மரணமும் அடைந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கியிருக்கும் நிலையில், அவைக்கு வெளியே இடதுசாரிகளும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்களும் பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை அறிவித்த மோடி, அவைக்கு வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும் என்பது கட்சிகள், தலைவர்களின் கோரிக்கை.

வெள்ளி, 18 நவம்பர், 2016

பேருந்து டிக்கெட்டுக்களுக்கு கரன்சி கட்டு அமைச்சர்களின் மோசடி பரிமாற்றம்

அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை மாற்றும் வேலைகளை ஆளுங்கட்சி உதவியுடன் கனஜோராக செய்து கொண்டி ருக்கிறார்கள். அரசு போக்குவரத்துக் கழகம், மின்வாரியம், பெட்ரோல் பங்குகளில் இருந்துதான் அதிகமாக 100, 50 தாள்கள் பதுக்கல்காரர்களுக்கு செல்கிறது. அதற்கு மாற்றாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப் படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ. 5 கோடிக்கு மேல் வசூலாகும். மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, பயணிகளிடம் 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வாங்கவேண்டும் என்று நடத்துநர்களுக்கு உத்தரவுகளை போட்டுவிட்டது போக்குவரத்துக் கழகம். இதனால் கொந்தளிப்பாகும் பயணிகளின் ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கொண்டு, 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தவிர்த்து, மற்ற நோட்டுகளையும் சில்லறைகளையும் மட்டும் வாங்கிப்போட்டுக் கொண்டு டிக்கெட் கொடுக் கிறார்கள். அந்தப் பணத்தைக் கொண்டுவந்து டெப்போ அலுவலகத்தில் செலுத்துகிறார்கள். ஆனால் மறுநாள் காலையில் டெப்போவிலிருந்து வங்கியில் செலுத்துவதற்காக காசாளர்கள் எடுத்துச்செல்லும் நோட்டெல்லாம் 1000, 500 ரூபாய் நோட்டுகளாக மாறியிருக்கிறது.

அம்பானியின் ஆலோசகர்தான் ரிசேர்வ் வங்கியின் ஆலோசகர் .. நோட்டு செல்லாது என்கின்ற ஆலோசனை...


""ஹலோ தலைவரே, மோடி கிளப்பிய கரன்ஸி சுனாமி இன்னும் அடங்கலை. மக்களின் அலைக்கழிப்பும் இன்னும் முடிவுக்கு வரலை.'' ""மோடி அறிவிப்பு பற்றி அவருக்கு ஓட்டுப் போட்ட சாதாரண மக்களுக்குத்தான் கடைசி நேரம் வரை எதுவும் தெரியாதுப்பா. ஆனா, அவர் அறிவிக்கிறதுச்கு ஒரு வாரம் முன் னாடியே, நாட்ல இருக்கும் அத்தனை வங்கிகளையும் அலர்ட் பண்ணுங்கன்னு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சைடில் இருந்து சொல்லப்பட்டிருக்கு. அதாவது, நவம்பர் 2-ந் தேதியே, இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் பேங்க் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கு. அதில், 7-ந் தேதிக்குள், அனைத்து வங்கியிலும் இருக்கும் 7 லட்சம் கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை, 100 ரூபாய் நோட்டுகளா மாற்றி, இந்தியா முழுதிலும் இருக்கும் 2 லட்சம் ஏ.டி.எம்.கள் மூலமும் பொதுமக்களுக்கு விநியோகிச் சிடுங்கன்னு குறிப்பிடப்பட்டிருந்தது.'

சென்னையில் வங்கிகள் செயல்படும் கட்டடத்தில் திடீர் தீ: ஊழியர்கள் வெளியேற்றம்


சென்னை பாரிமுனையில் வங்கிகள் செயல்படும் தனியார் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பாரிமுனையில் தாஸ் இந்திய டவர் என்ற பெயரில் கட்டடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் தனியார் வங்கிகள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, பொதுமக்கள் வங்கிகளில் பணம் மாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பாரிமுனை தாஸ் இந்தியா டவர் கட்டடத்தில் உள்ள வங்கிகளில் பணம் மாற்றுவதற்காக பொதுமக்கள் குவிந்து இருந்தனர். ஊழியர்களும் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

சீமான்....நெடுமாறன்....வைக்கோ....தமிழருவி மணியன் வகையறா தமிழைக் காப்பாற்ற என்ன செய்தார்கள் ?.

தமிழ் தேசிய வாதிகளே ....
தமிழ் என்ன உங்களுக்கு மட்டுமே சொந்தமா ? இல்லை...யாராவது உங்களுக்கு பட்டாப் போட்டு கொடுத்திருக்காங்களா ?....என்ன ஓவரா ரவுஸ் உடரீங்க ?....
தமிழ் செம்மொழி என்கின்ற சொல்லை பள்ளி பாடநூல்களில் இருந்து நீக்கிய பொது....திருவள்ளுவர் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்த பொது........செம்மொழி நூலகம் அழிக்கப்பட்ட பொது.....செம்மொழிபூங்கா துணி போர்த்தி மறைக்கப் பட்ட பொது.....பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வந்த பொது....இப்படி தமிழுக்கு அடுக்கடுக்காக ஆபத்தும் அழிவுகளும் வந்த பொது......தமிழ் தேசியவாதிகளே நீங்களும்...உங்கள் தலைவர்களும்...எங்கே பொய் தொலைந்தீர்கள்....உயிரோடுதானே இருந்தீர்கள்..?
உடம்பில் நல்ல தமிழ் இரத்தம் ஓடுகின்ற எவனாவது சும்மா இருந்திருப்பானா ?......அப்போதெல்லாம் நீங்கள் காணாமல் போனது ஏன்?

மோடியின் அறிவிப்பு அரசியல் தமாஷ்': சீன பத்திரிகை விமர்சனம்

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து உலக நாடுகள் பலவும் கருத்து கூறி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து சீனாவின் Global times என்ற பத்திரிகை, 'மோடியின் அறிவிப்பு பாகுபாடற்ற மோசமான சதி, ஒரு காஸ்ட்லி அரசியல் ஜோக் என சொல்லலாம். தைரியமான முடிவுகளை எடுக்கும்போது, அதை செயல்படுத்த போதிய ஞானம் வேண்டும். மக்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்வதில் மோடி அரசு தோற்றுவிட்டது' குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்துதான் இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் மோடி கறுப்புப் பணத்தை ஒழிக்கும் ஒரு ஹீரோ என்ற பிம்பத்தை நிலைநிறுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளனர்' என அந்த பத்திரிகை கூறியுள்ளது   vikatan.com

மும்பை பாஜக அமைச்சர் காரில் 92 லட்சம் ரூபாய் நோட்டுக்கள் சிக்கியது

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த மாநில பாஜக அமைச்சர் ஒருவரின் காரில் 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வழக்கமாக வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க எடுத்து செல்லுவதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லாததால் அந்த பணம் கைப்பற்றப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணம் கைப்பற்றப்பட்ட கார் அந்த மாநில கூட்டுறவுத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுபாஷ் தேஷ்முக்கின் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரம்: மத்தியரசு எந்தவிதத்திலும் தயார் நிலையில் இல்லை !


பிரதமர் மோடியின் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நாளுக்கு நாள் மக்களின் பிரச்னைகள் கூடிக்கொண்டிருக்கிறதே தவிர, நிலைமை சரியாவதற்கான சூழலே உருவாகவில்லை. இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி திடீரென ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது மக்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர். அதை எதிர்கொள்வதற்கு மக்கள் தயார் நிலையில் இல்லை. இந்த நடவடிக்கை மூலம் அவர்கள் மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். இப்போது பிரச்னையைத் தீர்க்க மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் ரூபாய் 500, 1000 நோட்டுகள் சுமார் 2100 கோடி என்ற அளவில் உள்ளன. இத்தனையையும் மாற்றி அதே அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட வேண்டும்.

எப்போது 500 ரூபாய்? பதில் சொல்ல மறுத்த மத்திய அரசு!

எப்போது ரூபாய் 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்ற உயர்நீதிபதியின்
கேள்விக்கு, பாதுகாப்பு கருதி இதுகுறித்து வெளிப்படையாக பதில் சொல்ல முடியாது என்று மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞரும், ரிசர்வ் வங்கி வழக்கறிஞரும் உயர்நீதிமன்றத்தில் மறுத்திருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் தன்னுடைய ரூபாய் 500, 1000 நோட்டை மாற்ற கூட்டுறவு வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், கூட்டுறவு வங்கிகள் பண மாற்றம் செய்யவோ, வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட் பணத்தை செலுத்தவோ ரிசர்வ் வங்கி அனுமதிக்கவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர், “கூட்டுறவு வங்கிக்கணக்கில் என் பணம் இருக்கிறது. அதை எடுக்க வழியில்லை. எனவே, நான் கோரும் பணத்தை எனக்குத் தர ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடுங்கள்” என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

அரவக்குறிச்சி திமுகவினரை மட்டும் வெளியேற்றியது தேர்தல் ஆணையம் .. அதிமுகவினர் விருந்தாளிகளாம்..

திமுக-வினரை மிகுந்த கவனத்துடன் வெளியேற்றியிருக்கிறார்கள். ஆனால் அதிமுக-வினர் மட்டும் விருந்தாளிகள் என்றபெயரில் தொகுதிக்குள்ளேயே முகாமிட்டுள்ளனர்
அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், திமுக வேட்பாளராக கே.சி.பழனிசாமியும் நேரடிப் போட்டியில் உள்ளனர். அதிகாரம் உச்சத்தில் உள்ள அமைச்சரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்., எம்.பி.,க்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஏ.வ.வேலு தலைமையில் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில், நாளை (19/11/2016) இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் அதிகாரிகளும் காவல் துறையினரும் வெளியூர் ஆட்களை தொகுதியிலிருந்து வெளியேற்றினார்கள்.

FOLLOW UPஓ.பி.எஸ் vs எடப்பாடி!


(ஓ.பி.எஸ் -காண்டிராக்டர் முருகன்)
அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆசி பெற்றவரான ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஜெயராமன் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தியதில் ரூ.50 லட்சம் ரொக்கமும் ஏராளமான ஆவணங்களும் சிக்கி பரபரப்புக்குள்ளாக்கியது பற்றியும் அதன் பின்னணி குறித்தும் நமது மின்னம்பலம் இணைய இதழில் நேற்று (17/11/2016) காலை 7:00 மணி செய்தியில் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், கடந்த முறை அதிமுக ஆட்சியின்போது, ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமானவரான காண்ட்ராக்டர் ஆர்.எஸ்.முருகன் நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்ட் விவகாரங்களில் அதிக ஆதிக்கம் உள்ளவராக வலம்வந்தார். துறை அமைச்சரான எடப்பாடி பழனிசாமியின் நேரடி உதவியாளரான மணியுடன் நெருக்கம் வைத்துக்கொண்டு, காண்ட்ராக்ட் விவகாரங்களில் தென்மாவட்டங்களில் சாதிக்கக்கூடியவராக இருந்தார்.

கலவரம் வெடிக்கலாம்:உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

மின்னம்பலம்.காம் : ரூ.500, 1000 நடவடிக்கையை எதிர்த்து, நாடு முழுவதும் கீழ்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தொடரப்படும் மனுக்களை தடைசெய்ய முடியாது என்று, மத்திய அரசிடம் உறுதிபடத் தெரிவித்துவிட்டது உச்சநீதிமன்றம். மத்திய அரசு தொடர்ந்திருந்த வழக்கின்கீழ் இன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வின்முன்பு விசாரணை நடைபெற்றது.
அமர்வின் தொடக்கத்திலேயே நீதிபதி தாகூர், ‘மக்கள் பணத்தை தேடியலைகின்றனர். மணிக்கணக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். இதற்கு எதிராக அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்படுவதே பிரச்னையின் தீவிரத்தையும் பரிமாணத்தையும் அறிவுறுத்துவதாக உள்ளது. மக்கள் நிவாரணம் தேடி நீதிமன்றங்களை நாடுகின்றனர். நாங்கள் அரசுக்காக கதவுகளை அடைக்க முடியாது’ என்று, அரசின் மனுவுக்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.

BBC :முதல்வர் முழுமையாக குணமடைந்துவிட்டார்: பிரதாப் ரெட்டி

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார். சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றின்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் ரெட்டி, முதல்வருக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் கூறினார். ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டபோது வைக்கப்பட்ட குழாய் இன்னும் இருப்பதாகவும், ஆனால் செயற்கை சுவாசம் இல்லாமலேயே அவர் சுவாசிப்பதாகவும் பிரதாப் ரெட்டி கூறினார். ஆனால், நுரையீரல் திடீரென பாதிக்கப்பட்டுவிடாமல் இருப்பதற்காக அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். அவருடைய மனநலன் நல்ல முறையில் இருப்பதாகவும் அவர் புரதம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டுவருவதாகவும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை நகரசபை ஆணையாளர் தற்கொலை!

அருப்புக்கோட்டை நகரசபை ஆணையாளர், தங்கியிருந்த பயணியர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆணையாளர்; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரசபை ஆணையாளராக பணியாற்றி வந்தவர், முத்துவெங்கடேஸ்வரன் (வயது 54). இவர் கடந்த 1½ ஆண்டாக அருப்புக்கோட்டையில் பணியாற்றி வந்தார்.< இவருடைய மனைவி சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக வேலை பார்க்கிறார். இவர்களுடைய மகன், சென்னையில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். தூக்குப்போட்டு தற்கொலை குடும்பத்தினர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்த நிலையில் முத்து வெங்கடேஸ்வரன் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு பயணியர் விடுதியில் தங்கி இருந்தார். தினமும் காலையில் 10 மணிக்கு அவர் நகரசபை அலுவலகத்துக்கு செல்வார். அலுவலக உதவியாளர் வந்து அவரை அழைத்துச்செல்வது வழக்கமாகும்.

ரூபாய் நோட்டு விவகாரம்; கருத்து கூற பில்கேட்ஸ் மறுப்பு.. பாராட்டியதாக வெளிவந்த செய்தி பொய் !

புதுடில்லி: ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து தான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என பில்கேட்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியா வருகை : அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், 'மைக்ரோசாப்ட்' மென்பொருள் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலபதிருமான, பில்கேட்ஸ், இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியின், கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு, அவர் ஆதரவு தெரிவித்திருப்பதாக, செய்திகள் வெளியாகின. ஆனால், தான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, என, அவர் மறுத்துள்ளார். பணியாற்ற தயார்: இது பற்றி அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை குறித்து, நான் எதுவுமே கூறவில்லை.

பழைய நோட்டுக்களுக்கு இனி 2000 ரூபாய் மட்டுமே.. மக்கள் கொதிப்பு ..

சென்னை: ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். மக்களின் கொந்தளிப்பு மத்திய அரசை நோக்கியும், வங்கிகளை நோக்கியும் திரும்பி வருகிறது. இந்த நிலையில் ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை ரூ. 2500 ஆக மத்திய அரசு உயர்த்தியது. அதேபோல தனி நபருக்கு ரூ. 4000 வரை பண மாற்றம் செய்யலாம் என்று இருந்ததையும் ரூ. 4500 ஆக உயர்தியது.  வங்கியில் பணம் மாற்றவும், டெபாசிட் செய்யவும், ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் நாடு முழுவதும் மக்கள் மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சக்தி காந்த தாஸ், இன்று மட்டுமே தனி நபர் ஒருவர் 4,500ரூபாய் பழைய நோட்டுகளை அளித்து புதிய நோட்டுகளைப் பெற முடியும். 18ம் தேதி முதல் 2000 ரூபாய் மட்டுமே வங்கியில் மாற்ற முடியும் என்றார்.

தமிழ்நாட்டின் சுப்பர் Black Money கபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு ?

rajini-stillsசாதா திருடர்கள் மாட்டும் போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு திருடனைப் பிடி என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல் கலாம் கனவு கண்ட, இயக்குநர் ஷங்கர் கிராபிக்ஸாக செய்து பாரத்த இந்தியக் குடிமகன் என்று மக்களும் அதை மெய்மறப்பார்கள், ஆதரிப்பார்கள்.
அம்பானி, அதானி, டாடா போன்றோர் ஸ்பெஷல் திருடர்கள் என்பதால் அவர்களெல்லாம் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தை இயக்குபவர்கள், வெளிப்படையாக பேசமாட்டார்கள். சினிமா உலகம் இன்னும் பழைய சென்டிமெண்டுகளில் முக்குளிப்பதால் அங்கே நட்சத்திரங்களுக்கு அறிவு கம்மி.
நவம்பர் 8 அறிவிப்பு வந்த உடனேயே, “புதிய இந்தியா பிறக்கட்டும், ஜெய் ஹிந்த்” என்று ரஜினி, மோடியின் கருப்புப் பண ஒழிப்பு போருக்கு முரசு கொட்டினார். முரட்டுக் காளையில் துவங்கி கபாலி வரை அவரது நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டதுதான். திரையரங்க டிக்கெட்டிலிருந்து அவர் வாங்கும் ஊதியம் வரை கருப்பே பிரதானம். இது ஊரறிந்த உண்மை என்றாலும் அம்பானியை உழைத்து முன்னேறியவராக நம்பும் உலகம் இவரையும் உழைத்து சம்பாதித்தவராக நம்புகிறது.

மோடி அவர்களே. உங்கள் வீழ்ச்சி விரைவில் நிகழும். மீண்டும் எழ முடியாதவாறு.....


(மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமான வீடியோ இது.)
120+ கோடி மக்களை கொண்ட இந்தியாவில் இது போல் எத்தனை ஏழை படிப்பறிவில்லாத மக்கள் மோடியின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்து அல்லல்பட்டார்களோ, ஏமாந்தார்களோ, ஏமாற்றப்பட்டார்களோ தெரியவில்லை. இங்கு யாருமே கருப்புப் பணத்திற்கு ஆதரவானவர்கள் அல்ல. முறையான அறிவிப்பு வெளியிட்டு, சரியான கால அவகாசம் கொடுத்து மாற்ற நேரம் கொடுக்காமல், இன்னும் நான்கே மணி நேரத்தில் உங்கள் கைகளில் உள்ள பணம் செல்லாது, உங்கள் சேமிப்பு செல்லாது. அதைக் கொண்டு உணவு, மருந்து உள்ளிட்ட எந்த தேவைகளையும் உங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. இரண்டு நாட்கள் கழித்து வங்கிளுக்கு சென்று உங்கள் கையிருப்பை புதிய நோட்டுகளாக மாற்றிக்கொண்டால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அறிவித்த விளம்பர மோகவெறி கொண்டு அலையும் #பாசிசகோமாளி யின் கூத்துகளுக்கு பலிகடாவா இவர்கள்?

அதிமுக அரசை பாஜகவிடம் தாரை வார்த்து விட்டீர்களே? செய்த ஊழல்களை மறைக்க தமிழகத்தை காட்டி...

தமிழக அரசியலில் இருந்து காணாமற்போன #அதிமுக ...சமீபகாலமாக தமிழக ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் அதிமுக வை சேர்ந்த அமைச்சர்களோ, MLA களோ, முன்னணி கட்சி நிர்வாகிகளோ எவருமே இடம்பெறுவதில்லை. மாறாக #பாஜக வின் மாநில பொறுப்பாளர்களான,
#பொன்_ராதாகிருஷ்ணன்
#தமிழிசை
#வானதிசீனிவாசன்
#எச்_ராஜா
#எல்_கணேசன்

உள்ளிட்டோர் தான் முன்னிலைப்படுத்த படுகின்றனர். உதய் மின்திட்டம், கருப்பு பண விவாகரத்தில் சாமானிய மக்களின் பாதிப்பு, GST வரிவிதிப்புக்கு தமிழக ஆதரவு, கிண்டி CIPET மாற்றம், பொது மருத்துவ நுழைவு தேர்வு , காவிரிப் பிரச்சனை ஜல்லிக்கட்டு தடை உள்ளிட்ட தமிழக அரசின் பல்டிகள் , தமிழக நலன் சார்ந்த விசயங்கள் குறித்து எதிர்க்கட்சிகளின் எந்த ஒரு கருத்திற்கும், குற்றச்சாட்டிற்கு முன்னே வந்து கருத்து சொல்வதும் இவர்கள் தாம். அதுபோக தமிழக அரசின் சார்பாக எந்த ஒரு கொள்கை முடிவும், அறிவிப்புகளும் #தலைமைச்செயலர் வாயிலாகவும், பொதுவான விஷயங்களில் தமிழக அரசின் கருத்தாக பிஜேபி நியமித்த தமிழக பொறுப்பு #ஆளுநர் #வித்யாசாகர்_ராவ் ன் கருத்தை முன்னிலை படுத்துவதையும் பார்க்கும்போது ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு நாம் தேர்ந்தெடுத்த ஒரு அரசு இருக்கிறதா, இயங்குகிறதா , என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

சசி அதிருப்தி அதிமுகவினர் இரகசியமாக பாஜகவோடு பேச்சுவார்த்தை... பேரம் படிந்தால் திடீர் திருப்பங்கள் .. விரைவில்?

சென்னை: ஜெயலலிதா ஆக்டிவாக இனி செயல்படமுடியாது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் மத்திய பா.ஜ.க.அரசு, தமிழக தலைமை செயலாளர் மூலமாக சசிகலா தரப்பை தங்கள் வழிக்கு கொண்டுவந்து தங்களுக்கு சாதகமான அரசியல் சூழலை ஏற்படுத்திக்கொண்டது. இதே அணுகுமுறையை அதிமுக எம்.பி.க்கள் பல பேர் பா.ஜ.க.வோடு நெருக்கமாக விரும்பி அதற்கான ரகசிய சந்திப்புகளை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றனர். Many AIADMK MLAS moving closly towards BJP  :   அதாவது, ஜெயலலிதாவின் தற்போதைய உடல்நிலையின் உண்மைத்தன்மையை அறிந்து வைத்திருக்கும் எம்.பி.க்கள், சசிகலாவின் உத்தரவுகளுக்கு முழுமையாக ஆட்படவேண்டுமென்பதை ஏற்கும் மனநிலையில் இல்லை. அதனால், பா.ஜ.க.வில் காரியம் சாதிக்க அல்லது எதிர்காலத்தில் தங்களின் அரசியல் வாழ்வை வளமாக்கிக்கொள்ள பா.ஜ.க.தலைவர்களை ரகசியமாக சந்தித்து பேசுகின்றனர். அந்த வரிசையில், கடந்தவாரம், அதிமுக ராஜ்யசபா எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப் மற்றும் தஞ்சை லோக்சபா எம்.பி.பரசுராமன் இருவரும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமீத்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர்.  tamiloneindia.com

வெங்கையா நாயுடு :ரூபாய் நோட்டு விவாதத்தில் பிரதமர் பதிலளிக்க மாட்டார்...அட வெங்காயமே கல்யாணம் பண்ணிப்பிட்டு ஒண்ணுமே செய்யமாட்டேன்னா..இன்னா அர்த்தம்?

டெல்லி: 500, 1, 000 ரூபாய் செல்லாதது என அறிவிக்கப்பட்டது தொடர்பான நடவடிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க மாட்டார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. Modi won’t reply to demonetisation debate in Parliament: Venkaiah இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடு, 500, 1000 ரூபாய் தடை விவாதத்தை தொடங்கியவர்கள் தற்போது அது எதிர்மறை திசையில் போய்க்கொண்டிருப்பதை புரிந்து கொண்டு அவையில் விவாதத்தை நடத்தவிடாமல் தடுக்கின்றனர். அவர்கள் வெளிப்படையாக ஆதரவாகவும் இல்லை, எதிராகவும் கிடையாது. அவர்கள் குழப்பமான நிலையில் உள்ளனர். இந்த குழப்பமானது தொடரும். நாட்டு மக்களுக்கு தெரியும் யார் பதுக்கி வைப்பவர்கள், கருப்பு பணத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் என்று. அதுபோன்று யார் மத்திய அரசுடனும், பிரதமர் மோடியுடனும் உள்ளனர் என்பதும் தெரியும். விவாதம் நடைபெற வேண்டும். அவையின் விதிகளின் படியும், முந்தைய நடவடிக்கைகளின் முன்னுதாரணங்களின் படியும் பிரதமர் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை, சம்பந்தப்பட்ட அமைச்சரும் மற்றவர்களும் பதில் அளித்தால் போதுமானது என்றார்.tamiloneindia.com

வியாழன், 17 நவம்பர், 2016

தில்லியைக் கலக்கிய கல்வி நீதிப் பேரணி

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்ட பேரணி தில்லியில் இன்று நடந்தது.மக்கள் விரோதக் கல்விக்கொள்கை யெதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இப்பேரணியை, மண்ட அவுஸ் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தொடங்கிவைத்தார். தில்லி பல்கலைக்கழக, கல்லூரி மாணவர் அமைப்பினர், கிறிஸ்துவ கல்வி நிலையங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள், திராவிடர் கழகம், த.பெ.தி.க., சிபிஎம் எல் மக்கள் விடுதலை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமானவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். கவிஞர் மாலதிமைத்ரி, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியின் நிறைவாக ஜந்தர்மந்தர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கனிமொழி, டி.ராஜா, விஜிலா சத்யானந்த் உட்பட ஏழு நா.ம. உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பேசினர்.

1000 ரூபாய் நோட்டுக்கள் இனி வராது .. இப்போதைக்கு வராது .. அருண் ஜெட்லி அருள்வாக்கு ..Jaitley said there is no plan to bring back Rs 1,000 notes.

புதுடில்லி: ஆயிரம் ரூபாய் நோட்டை தற்போதைக்கு வெளியிடும் திட்டமில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.<கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது. வங்கிகளில் பழைய நோட்டுக்களை கொடுத்து ரூ.4,500 வரை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நாளை முதல் பழைய பணத்தை மாற்றும் அளவு 2 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் விரைவில் பணம் தீர்ந்து விடுவதால் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

மம்தா பானர்ஜி மோடிக்கு மூன்று நாள் கெடு ! நிறுத்தணும்.. ஆமா எல்லாம் நிறுத்தணும்..?

நேற்று புதன்கிழமையன்று, எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக ராஷ்டிரபதி பவனுக்கு நடைப்பயணம் சென்ற மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார். பின்னர், மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு பிரச்னையில் தலையிட்டு, அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என பிரணாப் முகர்ஜியை கேட்டுக் கொண்டார். நேற்று நடந்த இந்தச் சந்திப்பின்போது ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்ளவில்லை. அவருடைய சார்பில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பகவத் மன் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய எதிர்ப்புப் பேரணியில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.