சனி, 29 ஜூலை, 2023

திருவனந்தபுரம்: முதியவரை உல்லாசத்திற்கு அழைத்து ரூ 11 லட்சம் பணம் பறித்ததாக நடிகை நித்யா சசி கைது செய்யப்பட்டுள்ளார்.

zeetamil : கேரள மாநிலம், திருவனந்தபுரம் பட்டம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர். 75 வயதான இவர் கேரள மாநிலத்தில் பல்கலைக்கழக ஊழியராகவும் இருந்து வருகிறார். இவர் கொல்லம் பரவூரில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக விளம்பரம் செய்துள்ளார்.
அந்த விளம்பரத்தில் முதியவர் தனது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார். அந்த செல்போன் எண்ணுக்கு கடந்த மே மாதம் ஒரு பெண் பேசியுள்ளார். தனக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டுள்ளார்.

வீடு வாடகைக்கு விடுவது தொடர்பாக அந்த பெண் அடிக்கடி முதியவரிடம் பேசியுள்ளார், அப்படி பேசும் போது அவர் ஆசை வார்த்தைகளை பேசி முதியவருடன் நட்பாக பழகியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இரு இலங்கை பயணிகள் மரணம்!...

 தினமணி :சென்னை விமானநிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த பெண் பயணி ஒருவா் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். விமானநிலைய மருத்துவா்கள் அந்த நபரை பரிசோதித்ததில், அவா் மாரடைப்பால் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நடத்திய விசாரணையில், அந்த பெண் பயணி இலங்கை யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த சிவகஜன்லிட்டி (43) என்பதும்,
சில தினங்களுக்கு முன் இந்தியா வந்த அவா் மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த போது மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது.
இதேபோல்,
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்திலிருந்து இறங்கிய ஆண் பயணி ஒருவரும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளாா்.
விசாரணையில், இவா் இலங்கையிலிருந்து வந்த ஜெயக்குமாா் என்பதும், இலங்கையிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவா், குடியுரிமை சோதனை முடித்துவிட்டு சுங்கச்சோதனை பிரிவுக்காக நடந்து சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதும் தெரியவந்தது

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தது எப்படி? நடந்தது என்ன?

 bbc.com : கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில், நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார்.
அந்த கடைக்கு அருகிலேயே, ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.
அதே பகுதியில், வெல்டிங் கடை, ஹோட்டல்,வாட்டர் கம்பெனி மற்றும் குடியிருப்புகள் இருந்துள்ளன.
ரவி, வழக்கம் போல் பட்டாசு குடோனில் பட்டாசுகளை பேக்கிங் செய்துள்ளார்.
அப்போது அவரது மனைவி ஜெயஸ்ரீ, குழந்தைகள் ருத்திகா,ருத்தீஸ் ஆகியோர் இருந்துள்ளனர்.
நடந்தது என்ன?
இன்று காலை,9:30 மணி அளவில் திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்த பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்துள்ளது. அருகில் உள்ள கடைகள் குடியிருப்பு பகுதிகளில் தீ பரவி வெடித்து சிதறியும் உள்ளது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்பு, இடிந்து விழுந்த கட்டிடங்களை,பொக்லைன் மூலம் அகற்றி சடலங்களை மீட்டு வருகின்றனர்.

பத்ரி ஷேஷாத்ரி அதிரடி கைது..!

 zeenews.india.com : Yuvashree கும்பகோணத்தில் பிறந்து பல புத்தகங்களை எழுதி பிரபலமானவர், பத்ரி ஷேஷாத்ர. இவர், சென்னையில் வசித்து வருகிறார். மணிப்பூர் கலவரம் குறித்து சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு நேர்காணல் கொடுத்திருந்தார்.
இந்த நேர்காணலில் அவர் கூறிய கருத்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் சர்ச்சை,  

மும்பை: குற்றத்  தலைக்நகரம் போன்ற புத்தகங்களை எழுதி பிரபலமானவர் பத்ரி ஷேஷாத்ரி.
புத்தகங்கள் எழுதுவது மட்டுமன்றி, இவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் அவ்வப்போது கருத்துகளை சமுக்க வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இவரது கருத்துகள் மக்களிடையே பகிரப்பட்டு பெரும் சர்ச்சையாக மாறுவதுண்டு.
அவர் அப்படி மணிப்பூர் கலவரம் குறித்து ஒரு நேர்காணலில் பேசியதால் தற்போது போலீஸாரின் பிடியில் வசமாக சிக்கியுள்ளார்.
சர்ச்சை கருத்து:

வெள்ளி, 28 ஜூலை, 2023

நெய்வேலியில் பாமகவினரின் போராட்டம் கலவரமாக மாறியது ..போலீஸ் மீது கல்வீச்சு

  maalaimalar :பா.ம.க.வினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக நெய்வேலியில் பரப்பான சூழ்நிலை நிலவியது. போலீசார் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பா.ம.க. தொண்டர்களை கலைந்து செல்ல கூறினார்கள். நெய்வேலி:I கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 3 திறந்த வெளிசுரங்கங்களை அமைத்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதனிடையே நிலக்கரி எடுக்க போதிய இடமில்லை எனவும், நிலக்கரி தட்டுப்பாட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது

சுய இன்பம் இரு பாலாருக்கும் நல்லதா? சுய இன்பம் பற்றிய உண்மை விளக்கம்

zeenews.india.com - Yuvashree : ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல்-காமம் போன்றவை தவிர்க்க முடியாத உணர்வுகள். அதிலும் காமம் என்று வந்துவிட்டால் இச்சை கொள்வதில் ஆண்களை பெண்கள் மிஞ்சிவிடுவதாக ஒரு கருத்து உள்ளது.
ஆண்கள்தான் அதிகம் சுய இன்பம் அடைவர் என நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், பெண்களுக்குள்ளும் அடிக்கடி சுய இன்பம் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும், சமூக கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்கள் இது குறித்து அதிகம் பேசுவதில்லை. உண்மையாகவே சுய இன்பம் நம் உடலுக்கு நண்மை பயக்கிறதா..?
இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன..?
 இங்கே தெரிந்து கொள்வோம்.
சுய இன்பம் என்றால் என்ன..?

மணிப்பூர் செல்லும் எதிர்க்கட்சிகள் குழு- திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு

 மாலை மலர்  :   மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அடைய வைத்தது.
காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகாய், வந்தனா சௌஹான் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளன.
 மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அடைய வைத்தது. மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு வசித்து வந்த மக்கள் பலர் வீட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

வியாழன், 27 ஜூலை, 2023

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை வருகை .ரணில் - மக்கிறோன் சந்திப்பு! .உச்சக்கட்ட பரபரப்பில் சீனா?

 hirunews.lk : ரணில் – மக்ரோன் சந்திப்பை கழுகு பார்வையுடன் நோக்கும் சீனா!
பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை மேற்குலக நாடுகள் எதிர்ப்பது போன்று இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா கடுமையான எதிர்த்து வருகின்றது
இந்த சூழ்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் பசிபிக் பிராந்தியத்தில் “புதிய ஏகாதிபத்தியம்“ உருவாகி வருவதாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நியூ கலிடோனியா, பப்புவா நிவ் கினியா, வனுவாட்டு குடியரசு (Vanuatu) ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கடந்த 24ஆம் திகதி முதல் உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொண்டார்.
பசுபிக் பிராந்திய நாடான பப்புவா நிவ் கினியாவில் அரச தலைவருடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட இம்மானுவேல் மக்ரான், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் பசுபிக் பிராந்தியத்தில் பெரும் அச்சுறுத்தல்களை சீனா மேற்கொண்டுவருகிறது.

அமேரிக்காவில் கறுப்பின லாரி ஓட்டுநர் மீது நாயை கட்டவிழ்த்துவிட்ட காவல் அதிகாரி

 மாலை மலர்  :  அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலமான ஒஹியோவின் சர்க்கிள்வில் நகரத்தில் நெடுஞ்சாலையில், ஒரு கறுப்பினத்தவர் மீது தனது நாயை கட்டவிழ்த்துவிட்ட காவல் அதிகாரியை காவல்துறை பணிநீக்கம் செய்துள்ளது.
அந்த அதிகாரியின் பெயர் ரையான் ஸ்பீக்மேன்.
"காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் வைத்திருக்கும் தரநிலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ரையான் ஸ்பீக்மேன் பூர்த்தி செய்யவில்லை. அதனால் அவர் இத்துறையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
"ஸ்பீக்மேன் நியாயமான காரணங்களின்றி நீக்கப்பட்டிருக்கிறார். அவர் சார்பாக குறைகேட்பு மனு ஒன்றை நாங்கள் தாக்கல் செய்வோம்" என காவலர் நலச்சங்கம் கூறியுள்ளது.

ஆசையாக வளர்த்த தாத்தா - பாட்டி தலைகளை பணத்திற்காக வெட்டிய பேரன் கேரளாவில் கொடூரம்

tamil.samayam.com  : பாம்புக்கு பால் வார்த்திருக்கீங்களே! தாத்தா - பாட்டியின் தலையை வெட்டி விளையாடிய கொடூரப் பேரன்!
திருவனந்தபுரம்: தாய் - தந்தை விட்டுச் சென்ற நிலையில் 2 வயதில் இருந்து தன்னை வளர்த்த தாத்தா - பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரனை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.kerala grand parents
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாயரங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா (75). இவரது மனைவி ஜமீலா (64). இவர்களின் மகளான நிமிதாவுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கை விரைவிலேயே கசந்ததால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வேறு வேறு திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் வீட்டு வேலை பார்த்த சிறுமி மர்ம மரணம் .. வெறும் ஐயாயிரம் சம்பளமே வழங்கப்பட்டது

தேசம் நெட் - y அருண்மொழி  : யாழ்ப்பாணத்தில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டு மர்ம மான முறையில் உயிரிழந்த  சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத சம்பளம் ரூபா ஐயாயிரமே..!
 யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சம்பள காசு கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த வட்டுக்கோட்டை, முதலி கோவிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) எனும் சிறுமி, வேலை பார்த்து வந்த வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமியின் உடற்கூற்று பரிசோதனை முடிவடைந்து, மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு உடற்கூற்று மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கனடாவின் முதல் தமிழ் அமைசராக கரி ஆனந்தசங்கரி நியமனம் ..உள்நாட்டு பழங்குடி நலன் அமைச்சு

hirunews.lk : கேரி ஆனந்தசங்கரி கனேடிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமனம்
இலங்கையில் பிறந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி கனேடிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பூர்விக குடிகள் உறவுகள் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் முதன்முதலில் 2015 இல் Scarborough-Rouge Park இன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் கனடாவின் நீதி அமைச்சருக்கும் சட்டமா அதிபருக்கும் நாடாளுமன்றச் செயலாளராகவும், அரச-சுதேச உறவுகள் அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

புதன், 26 ஜூலை, 2023

கை கழுவும் ஸ்டாலின்? ...சிறையில் செந்தில்பாலாஜி மௌன விரதம்!

 minnambalam.com  -  Aara :  வைஃபை ஆன் செய்தவுடன் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பான சென்னை செஷன்ஸ் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் நடந்த விசாரணை தொடர்பான அப்டேட்டுகள் இன்பாக்சில் இடம் பிடித்திருந்தன.
“ஆகஸ்டு 8 வரை இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் உச்ச நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே   புழல் சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு பிரிவினர் மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்து வந்த செந்தில்பாலாஜி தற்போது சிறையில் உள்ள பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மணிப்பூரில் மீண்டும் வெறியாட்டம் ஆளில்லா வீடுகள் தீக்கிரை

 மாலை மலர் :  மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53% மானியர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அதே சமயம் நாகாக்கள் மற்றும் குக்கிகளை உள்ளடக்கிய பழங்குடியினர் 40% மற்றும் முக்கியமாக மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு வசித்து வந்த மக்கள் பலர் வீட்டைவிட்டு வெளியேறினர். இதனால் அங்கு ஏராளமான வீடுகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளன.

பெட்டி நிறைய ஆவணங்கள்... கவர்னரிடம் ஒப்படைத்த அண்ணாமலை

 மாலை மலர் :  டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான கூட்டத்தை கே.என்.நேரு ஏற்பாடு செய்துள்ளார்.
திருச்சியில் நடந்த பொதுக் கூட்டம் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தில் அடித்தளமிட்டது. திருச்சிக்கும், திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திமுகவின் கோட்டை திருச்சி.
பயிற்சி பாசறை கூட்டத்திற்கு வந்துள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகள். சமூக வலைதளங்களில் செயல்படுவது குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இலங்கை: தமிழர் பள்ளிகளில் சாதி பாகுபாடு நிலவுகிறதா? 200 பள்ளிகள் மூடப்பட என்ன காரணம்? - உயர்ந்த சாதியினரே அதிபராக வரலாம் ?

பாடசாலை

bbc.com : இலங்கை: தமிழர் பள்ளிகளில் சாதி பாகுபாடு நிலவுகிறதா? 200 பள்ளிகள் மூடப்பட என்ன காரணம்? எழுதியவர், யூ.எல். மப்றூக்  : இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். கல்விக்கு வழங்கும் நிதியைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால், வடக்கு மாகாணத்தில் 113 பாடசாலைகள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ரி. ஜோன் குயின்ரஸ் பிபிசி தமிழிடம் கூறுகின்றார்.
"யுத்தம் முடிவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றத் திட்டத்தின் பின்னர் 62 பாடசாலைகள் திறக்கப்படவில்லை" என அவர் தெரிவித்தார்..
ஏனைய பாடசாலைகள் மாணவர் தொகைக் குறைவினாலும், நகரத்தை நோக்கி மாணவர்கள் இடம்பெயர்ந்தமைக் காரணமாகவும் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேவகவுடா குமாரசாமி கட்சி நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி! இவர்களின் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து..

மாலை மலர் :  கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார் முன்னாள் பிரதமர் தேவகவுடா. வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என்றார்.
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரசை எதிர்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட போவதாக தேவ கவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார்.
வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹெச்.டி.தேவகவுடா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும்.

தமிழ்நாடு - இலங்கை இடையே பாலம்! சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்

BBC :  இந்தியா-இலங்கை இடையே பாலம் அமைக்கும் திட்டத்தால் 'ராமர் பாலம்' சேதமடையுமா?
இந்தியா, இலங்கை, ராமர் பாலம், மோதி, ரணில்பட மூலாதாரம்,PMD SRI LANKA
கட்டுரை தகவல்
எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்  :இலங்கை, இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சு மீண்டும் தொடங்கியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது இந்த விஷயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய், 25 ஜூலை, 2023

: திருமா மீது அமில வார்த்தைகளை வீசிய மலேசிய சங்கிகள் உங்கள் குப்பையை இங்கே கொட்டாதீர்கள்!

May be an image of 4 people, dais and text that says 'GLOBAL POLITICS POLITICS திருமா மீது சாதிய வன்மத்தை கொட்டிய மலேசிய தமிழர்கள்! மலேசியா *டேய் நிப்பாட்ரா" திருமாவளவனுக்கு மலேசிய தமிழர்கள் தந்த மரியாதை! இராஜேந்திரன், மலாயா பல்க மலேசியா சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் சாதியையும் தீண்டாமையையும் சனாதன'

 ராதா மனோகர்  : உங்கள் குப்பையை இங்கே கொட்டாதீர்கள் என்று மலேசியாவில் கூறுவது ஒரு வராலாற்று நீட்சிதான்!
யாழ்ப்பாணத்தில் அந்த காலத்தில் ஒரு பிரபலமான பழமொழி இருந்தது .. இப்போதும் வழக்கத்தில் ஓரளவு இருக்கிறது!
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அவர் யார் யாருக்கு உறவினர் என்று விசாரித்து கொண்டிருக்கும் பொழுது அவர் இவரின் ஒன்றுவிட்ட சித்தப்பா
இவர் அவரின் மாமியாரின் பெரியம்மா
என்பது போல அவை இருக்கும்   இந்த இடத்தில் தவிர்க்கவே முடியாமல் இருவருமே ..

"சுத்தி சுத்தி பார்த்தால் சுன்னாகத்து பறையனும் சொந்தமாவான் அல்லது சுத்தி சுத்தி பார்த்தல் சுன்னாகத்து பள்ளனும் சொந்தமாவான்"  ..என்று சிரித்து பரஸ்பரம் கூறிக்கொள்வார்கள்

இந்த பழமொழியின் வரலாறு தேடி பார்த்தபொழுது
சுன்னாகத்தில் 1926 இல் திராவிட கோட்பாடு நிலைகொண்டிருந்தது தெரிகிறது

சிவகாசி மங்குண்டாம்பட்டியில் பட்டாசு ஆலை விபத்து- 2 பெண்கள் உடல் சிதறி உயிரிழப்பு

மாலைமலர் : சிவகாசி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மண்குண்டாம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவருவதையொட்டி, சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் இன்று காலை தொழிலாளர்கள் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மத்தாப்பு மருந்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மருந்து பொருட்கள் வெடித்து சிதறின.
இதில் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாமாக இறந்தனர். அவர்கள் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. தகவல் அறிந்ததும் சிவகாசியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் வைக்க தடையில்லை .சென்னை உயர்நீதி மன்றம்

மாலை மலர் :  அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசித்தார். நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும்,
மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திங்கள், 24 ஜூலை, 2023

அதானி அம்பானிக்காக மணிப்பூரில் கலவரம்: திருமாவளவன்

 minnambalam.com - monisha  : அதானி, அம்பானி மணிப்பூரில் நிலம் வாங்கும் அளவிற்கு சட்டத்தை மாற்றியமைக்க அரசே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்களுக்கு நடைபெற்ற கொடுமைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்துள்ளது. அந்த வகையில், மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப்பூர் வன்முறையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். இதில் 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் முதல்வரை கைது செய்ய வேண்டும். தார்மீக பொறுப்பேற்று பிரதமர், உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பெரியார் றந்த நாளில் நடிகர் விஜய் புதிய கட்சி . 17 ஆம் தேதி?

மாலை மலர்  : திரையுலகில் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தனர்.
இன்றைய அரசியலிலும் திரையுலகினர் வலுவாக காலூன்றி உள்ளனர். விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சீமான் உள்ளிட்டவர்கள் தனக்கென தனி பாதை அமைத்து அரசியலில் பயணிக்கின்றனர்.
அந்த வரிசையில் இளம் ரசிகர் பட்டாளங்களை தன்வசம் வைத்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளார்.

முருகன் சமண கடவுள்? சரவணா - சமணம் மருவி ச்ராமணம்(sramana) என்றுதான்

Yahqappu Adaikkalam  : முருகனும் சரவண பெயரும்
முருகனுக்கு சரவணா என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா? இதை நான் தேடி போகும் போது யாரிடமும் பதில் இல்லை ,பல அர்த்தம் இல்லாத கதை தான் இருக்கிறது...
வடநாட்டில் சமணம் மருவி ச்ராமணம்(sramana) என்று அழைப்பர் இது கடும் தவத்தால் வீடுபேறு அடைகிற சமயங்களுக்கு உகந்த சொல்லாக வந்தது.( நாம் "சிரமம்" என்று சொல்வதும் இந்த மூலம் கொண்டிருக்கலாம்)
சைனர்கள், பௌத்தர்கள், அசிவிக்கர்(ஆசீவகர்), சாவக்கர் எல்லாம் இந்த "ச்ராமணா" சொல்லில் அடக்கம் ஆனால் இந்த சொல் பிற்காலத்தில் சைனத்துக்கு(Jain) மட்டும் பயன்பட்டு வந்தது. மௌரிய நாட்டிலிருந்து வந்த சைனர்கள் இப்ப உள்ள பெங்கலூரில் ஒரு வெள்ளைக்குளம் என்ற இடத்தில் தங்கியதால் அதற்கு சரவணபெலகுளா என்னும் கன்னடச் சொல் வந்தது.

ஞாயிறு, 23 ஜூலை, 2023

ஹரியானாவில் காங்கிரஸ் அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது! பாஜகவின் 10 ஆண்டு ஆட்சி முடிவு? தேர்தல் ஆய்வுகள்

tamil.oneindia.com  -  Nantha Kumar R  : சண்டிகர்: ஹரியானவில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் வரும் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக பெரிய அளவில் சரியும் எனவும் பரபரப்பான கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
Haryana Election 2024: Congress may gets majority and BJP will lost its power says Small Box India Opinion poll
இந்நிலையில் தான் கடந்த 2019 ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜேஜேபி கட்சி 10 தொகுதிகளிலும், ஐஎன்எல்டி, எச்எல்பி கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், சுயேச்சைகள் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

கோவையில் கடன் தொல்லையால் குடும்பமே (4 பேர்) தற்கொலை ஜெயபாரத், தீபக் இருவரும் கைது

நக்கீரன்   கோவை அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.
கோவை வடவள்ளி பகுதியில் இன்ஜினியரிங் டிசைனிங் பணியில் ஈடுபட்டு வந்த ராஜேஷ் என்பவர், அவருடைய மகள், அவருடைய தாயார், மனைவி உட்பட நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மற்றவர்கள் விஷம் குடித்தும் ராஜேஷ் தூக்கிடும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பாகவே இக்குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது.

சைதாப்பேட்டை பெண் வியாபாரி கொலை - காதல் திருமணம் செய்த தங்கை உள்பட 5 பேர் கைது

 மாலைமலர் : சென்னை சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 35). இவர் சென்னை மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 19-ந்தேதி இவர் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்தார்.
இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்ற போது பயணிகளுடன் ராஜேஸ்வரியும் இறங்கினார்.
அப்போது, ராஜேஸ்வரியை பின் தொடர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வந்திருந்த அரிவாளால் திடீரென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சோனியா காந்தி ராஜ்யசபாவுக்கு செல்கிறார். கர்நாடகாவில் இருந்து .. ரேபரேலியில் பிரியங்கா?

 மாலைமலர் : பெங்களூரு காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியாகாந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
2004-ம் ஆண்டில் இருந்து அவர் அந்த தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதற்கு முன்பு 1999-ல் அமேதி தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில் 5 முறை எம்.பி.யான சோனியாகாந்தி மேல்சபை எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 4 எம்.பி.க்களுக்கான மேல் சபை தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்கள் உள்ளது. ஜி.சி.சந்திரசேகர், சையத் நசீர் ஹூசைன், டாக்டர் எல்.ஹனுமந்தையா (அனைவரும் காங்கிரஸ்) மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகிய 4 எம்.பி.க்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி முடிவடைகிறது.

கலைஞர் மகனை நம்பினோம்! நடுத்தெருவில் நிற்கிறோம்... ஆசிரியர்கள் குமுறல்!

மின்னம்பலம் - christopher : டெட் 2013 ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
இன்று (ஜூலை 22) சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகே விடிவு கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களது கோரிக்கைகள் என்ன?  
என்று நமது மின்னம்பலம் யூடியூப் சேனல் வாயிலாக  கேட்டறிந்தோம். அவற்றில் சில ஆசிரியர்களின் ஆதங்கங்களை, கோரிக்கைகளையும் இங்கு பதிவு செய்கிறோம்.

எங்க ஓட்டு வாக்கா? வாய்க்கரிசியா?

இளங்கோவன் (மதுரை)

இது எங்களோட 42வது போராட்டம். எங்களோட கோரிக்கை என்னவென்றால், 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்தவேண்டும் என்பது தான். இதனை திமுக, அதிமுக என இரண்டு அரசுகளுக்கும் கோரிக்கையாக வைத்தோம். கடந்த தேர்தல்களில் அவர்களுக்காக களப்பணியாற்றி வெற்றிபெற செய்தோம்.