சனி, 12 மே, 2018

மம்தா பானர்ஜி : என்னைக் கொல்ல சதி !

என்னைக் கொல்ல சதி: மம்தாமின்னம்பலம்: கூலிப்படை மூலம் தன்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, சாவுக்குத் தான் அஞ்சவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இயங்கிவருகிறார். இதற்காக பல்வேறு தலைவர்களிடமும் அவர் பேச்சு நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று (மே 11) மாலை ‘ஜி 24 கண்டா’ என்ற வங்க ஊடகத்துக்கு மம்தா பேட்டியளித்திருந்தார். அப்போது, “ என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அரசியல் கட்சி என்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளது என்பது எனக்குத் தெரியும். என்னைக் கொலை செய்யும் பணி கொடுக்கப்பட்டு உள்ள நபர்கள் என்னுடைய வீடு, அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை எல்லாம் உளவு பார்த்துவிட்டார்கள்.
கலிகட் பகுதியில் உள்ள வீட்டை மாற்றுமாறு எனக்கு போலீசார் பலமுறை அறிவுரை வழங்கினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இறப்பதற்கு நான் பயப்படவில்லை. பாதுகாப்புடன் நான் வாழ்ந்தால், மக்களுக்கும் எனக்குமான தூரம் அதிகரித்துவிடும்” என்று தெரிவித்தார்.

100 நாள் வேலைனதான் பேரு. ஆனா 20 நாள் கூட வேலை தர மாட்டீங்கறாங்க. ஒரு நாளைக்கு 110 ரூபாய்தான்

மின்னம்பலம் :
சிறப்புக் கட்டுரை: வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்குக் காவிரி கிடைக்குமா ? (பாகம் 4)சிறப்புக் கட்டுரை: வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்குக் காவிரி கிடைக்குமா ? (பாகம் 4)
பிரகாசு
பயன்படாத ஊரக வேலை, பயிர்க் காப்பீடு:
வேலையில்லாத மக்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பயனளிக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். "100 நாள் வேலைனதான் பேரு. ஆனா 20 நாள் கூட வேலை தர மாட்டீங்கறாங்க. ஒரு நாளைக்கு 110 ரூபாய்தான் சம்பளமும் தராங்க" என்று ஆதங்கப்படுகிறார் லட்சுமி. "எங்களுக்கு சம்பளம் தர மாதிரி கணக்கு காட்டத்தான் ஒரு நாளுக்கு 110 ரூபாய் கொடுத்து 25 நாள் வேலை தராங்க" என்கிறார் ராஜேந்திரன். 100 நாள் வேலைத் திட்டத்தில் தார் சாலை அமைத்தல் போன்ற பணிகளை உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு, அப்பாவி மக்களுக்கு வேலை தராமல் ஏமாற்றுகிறார்கள் என்கிறார் பொன்னி கைசலாம். அரசாங்கம் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு நிர்ணயித்த ஊதியத் தொகை 150 ரூபாய். ஆனால் நாம் பேசியவரை இந்த இரு மாவட்டங்களிலும் எங்குமே 120 ரூபாய்க்கு மேல் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில்லை. முழுதாக 100 நாட்கள் வேலை அளிப்பதும் இல்லை. இந்த குறைந்தபட்சத் தொகையும், வேலையும் கூட ஊழியர்களுக்குக் கிடைக்காமல் ஊழல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

வைகோ : இந்தியா என்பது இடைக்கால ஏற்பாடுதான் ! இந்த இடைக்கால ஏற்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும்?

மின்னம்பலம் :இந்தியா என்பது இடைக்கால ஏற்பாடுதான் என்று குறிப்பிட்ட
வைகோ, மத்திய அரசின் அலுவலகங்கள் தமிழ்நாட்டின் அலுவலகங்களாக மாற்றப்படும் என்று பேசியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, காவிரி பாதுகாப்பு இயக்கம் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் அறப்போர் பிரச்சார வாகனப் பயணம் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரச்சார வாகனம் இன்று (மே 12) திருவாரூர் வந்தது. திருவாரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு காவிரிப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே காவிரி நதி நீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு. தமிழ்நாட்டை காங்கிரஸ், பாஜக மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை வஞ்சித்துவிட்டன” என்று குறிப்பிட்டார்.

இளையராஜா வழக்கு: ஏமாற்றப்பட்டாரா முத்துசாமி?

இளையராஜா வழக்கு: ஏமாற்றப்பட்டாரா முத்துசாமி?

மின்னம்பலம் : இளையராஜாவின் உரிமை எழுப்பும் குரல் மீண்டும் ஒலித்திருக்கிறது. இம்முறை கோவையில் இயங்கிய ‘ஹனி பீ மியூசிக்’(Honey Bee Music) நிறுவனத்தின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தனது பாடல்களை டிஜிட்டல் வெர்ஷனில் மாற்றும் முயற்சியில் இறங்கியதிலிருந்து, பெருமளவில் பாடல் சிடிக்களை விற்று வந்த அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் இளையராஜா. அதற்காக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் பெரும்பாலானவை இளையராஜாவுக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கப்பட்டன. காரணம், அவற்றுக்கான காப்புரிமை ராஜாவிடம் இருந்தது. ஆனால், தற்போது கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இளையராஜாவின் கோவை வழக்கறிஞர் சிவசாமி கொடுத்துள்ள புகார், இளையராஜாவின் காப்புரிமை போர் நிலையை வேறு விதமாக மாற்றியிருக்கிறது.

நவாஸ் ஷெரிப் : பாகிஸ்தானியர்கள் எல்லையைத் தாண்டி மும்பையில் 150 பேரைக் கொன்றதை அனுமதிக்கலாமா?

26 / 11 தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பங்கு!மின்னம்பலம் :மும்பையில் நடந்த 26 / 11 தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டுக்குத் தொடர்பிருப்பதாக, முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று மும்பையில் 10 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் 150 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்தியவர்களில் அஜ்மல் கசாப் தவிர, மற்றவர்களை இந்தியப் படையினர் சுட்டுக்கொன்றனர். இவர்கள், பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக மும்பைக்கு வந்ததாகக் குற்றம்சாட்டியது இந்திய அரசு. ஆனால், அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது பாகிஸ்தான் அரசு. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு, பாகிஸ்தான் ராவல்பிண்டி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

மாலைமலர் :கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் என இன்றைய வாக்குப்பதிவுக்கு
பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. #KarnatakaElection #ExitPolls #congressparty
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைக்கு உட்பட்ட 222 தொகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தியாவின் பிரபல ஊடகங்கள் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. அதன்படி, ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஓரிரு ஊடகங்களின் கருத்து கணிப்பின்படி அங்கு மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையலாம் என குறிப்பிடுகின்றன.

கர்நாடகா Exit polls தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பு

கர்நாடக சட்டபை தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்மாலைமலர்: கர்நாடக சட்டபை தேர்தல் நிறைவு பெற்றதையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு, கர்நாடகத்தில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று  தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆங்கில தனியார் தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் சில நிறுவனங்கள்  நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை கீழ் காணலாம்

வாட்ஸ் - அப் மூலம் குழந்தை கடத்தல் வதந்தியை பரப்பியவர் கைது

tamilthehindu :குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப் மூலம் தவறான தகவலைப் பரப்பிய கட்டிடத் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனால், சந்தேகத்துக்குரியவர்களைத் தாக்கக்கூடிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தம்புகொட்டான்பாறை கிராமத்தில் காரில் வந்த 5 பேரை குழந்தைக் கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து சரமாரியாக தாக்கினர். அதில், சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி(65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, சமூகவலைதளத்தில் குழந்தைக் கடத்தல் குறித்து தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட எஸ்பி பொன்னி ஆகியோர் நேற்று முன் தினம் எச்சரித்தனர்.

தொங்கிய முகத்தோடு வாக்களித்த எடியூரப்பா.. பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி

பாஜகவுக்கு கர்நாடகாவில் சாதகமான நிலைமை இல்லை .. உளவுதுறை இரகசிய அறிக்கை..?
Veera Kumar  Oneindia : கர்நாடகா சட்டசபை தேர்தல்: பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்- எடியூரப்பா நம்பிக்கை பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே, துவங்கியது கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு 
பெங்களூர்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் காலை 7.05 மணிக்கெல்லாம் பாஜக முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா வாக்களித்தார். ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா. இன்று வாக்குப்பதிவு தினம் என்பதால், எடியூரப்பா காலை 6 மணிக்கெல்லாம் தனது வீட்டு பூஜையறையில் பூஜை செய்தார். அதில் குடும்பத்தார் பங்கேற்றனர். வரிசையாக பூஜைகள் வரிசையாக பூஜைகள் பிறகு, வீட்டுக்கு அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தார். அப்போது அவரது மகன் விஜயேந்திராவும் உடனிருந்தார்.

கே.எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் பரிந்துரை: கொலிஜியம் கூட்டத்தில் முடிவு

etamil.com :உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய கொலிஜியம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் குழு, உத்தரகண்ட் மாநில தலைமை நீதிபதி ஜோசப் மற்றும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரைப் பரிந்துரை செய்தது. இதில் இந்து மல்ஹோத்ரா பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஜோசப்பின் பரிந்துரையை நிராகரித்தது. இதனால் கொலீஜியம் குழு மற்றும் மத்திய அரசு இடையே கருத்து முரண்பாடு நிலவி வந்தது.

கென்யா .. அணை உடைந்து 44 பேர் உயிரழப்பு ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்டன


தினத்தந்தி: கென்யாவில் அணை உடைந்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்தது.
நைரோபி, கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நாகுரு கவுண்டியில் படேல் என்ற அணைக்கட்டு உடைந்ததால் பேரழிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததுடன் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கென்யா செஞ்சிலுவை சங்கத்தால் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டுவின் மதகுகள் உடைந்ததில், அணையில் இருந்த தண்ணீர் வெள்ளமாக பாய்ந்தது. தண்ணீர் கரையோரம் இருந்த வீடுகளையும் அடித்துச் சென்றது. நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. வீடுகளில் இருந்த மக்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் ஒரே வீட்டில் 7 பேர் சுட்டு கொலை !

ஆஸ்திரேலியாவில் ஒரே வீட்டில் 7 பேர் பிணமாக கண்டெடுப்பு: சுட்டுக்கொலையா? போலீஸ் விசாரணை
தினத்தந்தி:  சிட்னி, ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு
முனையில் ஒஸ்மிங்டன் என்ற இடம் உள்ளது. இந்தப் பகுதி ஒயின் உற்பத்திக்கு பெயர் பெற்றதாகும்.<
அங்கு உள்ள ஒரு வீட்டின் உள்ளே 5 பேரும், வீட்டின் வெளியே 2 பேரும் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர்களில் 4 பேர் குழந்தைகள்; 3 பேர் பெரியவர்கள். அவர்களின் உடல்களில் துப்பாக்கியால் சுட்ட காயங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே அவர்கள் 7 பேரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.
இதுபற்றி ஆஸ்திரேலிய நாட்டின் போலீஸ் கமிஷனர் கிறிஸ் டாவ்சன் கூறுகையில், “சம்பவ இடத்தில் துப்பாக்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே துப்பாக்கிச்சூடு நடந்திருக்க வேண்டும். இது ஒரு பயங்கரமான சம்பவம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறினார்.

வன்புணர்வு: கணவரை கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை

BBC :பாலியல் வன்புணர்வு செய்த கணவரை கொலை செய்ததற்காக இளம்
பெண் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி சூடான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நவுரா ஹுசைனை பாலியல் வன்புணர்வு செய்ததாக அவரின் கணவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கணவரின் குடும்பத்தினர் நிதி இழப்பீடு பெற மறுத்ததையடுத்து நவுராவின் தண்டனையை நீதிபதி உறுதி செய்தார்.
16 வயதில் நவுரா ஹுசைனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தற்போது அவருக்கு வயது 19.
படிப்பை முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.
இந்நிலையில், இவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பிப்பெற வேண்டும் என்று மனித உரிமை குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.
கணவரை எப்படி கொலை செய்தார்?
திருமணத்துக்கு பிறகு சிறிது நாட்கள் அத்தை வீட்டில் தங்கியிருந்த நவுராவை, அவரது பெற்றோர்கள் மீண்டும் அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

வாட்சைப் வதந்திகளால் அப்பாவிகளை மீது தாக்கும் தொடர்கிறது பழவேற்காடு கொலையில் 18 பேர் கைது

அப்பாவிகளை கிராமத்தினர் தாக்கும் சம்பவம் தொடர்கிறது பழவேற்காடு கொலையில் 18 பேர் கைதுதினத்தந்தி :குழந்தைகளை கடத்த வந்ததாக சந்தேகப்பட்டு கிராமத்தினர் அப்பாவிகளை தாக்கும் சம்பவங்கள் தொடர்கிறது. பழவேற்காட்டில் மனநிலை பாதித்தவரை கொலை செய்ததாக 18 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக வடமாநில கும்பல் வந்துள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் இந்த மாவட்டங்களில் கிராமத்தினர் அப்பாவிகளை தாக்கி வருகிறார்கள். இதில் பலர் உயிரையும் இழந்துள்ளனர். எனவே போலீசார் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி வைத்து கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்துவருகிறார்கள். சந்தேகப்படும்படியாக யாராவது சுற்றித்திரிந்தால் அவர்களை தாக்க வேண்டாம், உடனே போலீசுக்கு தகவல் தெரிவியுங்கள் என்று கூறிவருகிறார்கள். ஆனால் இதையும் மீறி அப்பாவிகள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

திவாகரனுக்கு சசிகலா : எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது

tamilthehindu :எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பிடமிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவித்துள்ளதாவது:< ''தாங்கள் சசிகலாவின் உடன் பிறந்த சகோதரர். உங்கள் மீது சசிகலா அதிக பாசம் கொண்டவர் என்பது தாங்கள் அறிந்ததே. ஆனாலும், தங்களின் முரண்பட்ட செயல்பாடுகளும் வெளிப்பாடுகளும் சசிகலாவை கனத்த மனதுடன் இந்த அறிவிப்பை தங்களுக்கு அனுப்பும் சூழலுக்கு தள்ளியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரைப் புகழ்ந்தும் அவர்களது துரோகச் செயல்களை மறைக்கும் வண்ணமாக தாங்கள் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதலாக தொடர்ந்து பத்திரிகைகள், காணொளிகள், சமூக வலைதளங்களில் தவறான விஷயங்களை பேட்டிகள் கொடுத்து வருகிறீர்கள்.

50 ஆண்டுகளாக கட்டி எழுப்பிய மருத்துவ கட்டமைப்பை ....

Ganesh Babu : ஒரு சராசரி இந்திய மனம் எப்படி இயங்கும்?
பார்ப்பனர்கள் எல்லாம் அறிவாளிகள் என நம்பும்,
இறைச்சி உண்டால் படிப்பு வராது என நம்பும்,
இந்துமதம் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம் என்று நம்பும்,
வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என நம்பும்,
குடும்பம், பிள்ளைக்குட்டி இல்லாத தலைவர்கள் பெரும்பாலும் யோக்கியர்களாகத்தான் இருப்பார்கள் என நம்பும்,
CBSE மட்டும்தான் தரமான பாடத்திட்டம் என நம்பும்,
ஊழல்தான் இந்நாட்டின் ஆகப்பெரிய பிரச்சனை என்று நம்பும்,
'இப்போ எல்லாம் யார் சார் சாதி பாக்குறது?' என்றக் கேள்வியை நியாயமென நம்பும்,
Salute to Indian Army, Pray for Paris/Syria/Israel என்று முகநூல் photoframeஐ கும்பல் கும்பலாக மாற்றுவதே மிகப் பெரிய சமூகப்புரட்சி என நம்பும்,
குடும்பத்தோடு கிளம்பிச் சென்று காப்பி அருந்தும் சிறிதுநேரத்தில் அந்த ஒரு அமர்விலேயே தனக்கான வாழ்கைத் துணையை தேர்ந்தெடுத்துவிடமுடியும் என்று நம்பும்,
இந்த அமைப்புமுறை, சமூகம் எல்லாவற்றையும் அப்படியே வைத்துக்கொண்டு ஒரேயொரு மனிதர் தேவதூதரைப் போல ஆட்சிக்கு வருவதன்மூலம் நாடு நிமிர்ந்துவிடும் என்று நம்பும்,

வெள்ளி, 11 மே, 2018

காலா ..மேலே கருப்பு - கீழே காவி,, பா.இரஞ்சித் - இரஜினியின் போலி முற்போக்கு..

தமிழ் மறவன் : மேலே கருப்பு - கீழே காவி!
பா.இரஞ்சித் - இரஜினியின் போலி முற்போக்கு..,
"காலா"வில் கருப்புச்சட்டையை இரஜினி அணிந்திருப்பதாய் தோழர்கள் யாரும் மகிழ்ந்துவிட வேண்டாம்.
அப்படியும் இந்துத்வா இச்சட்டை குறித்து கேள்வி கேட்டுவிடக் கூடாதென்றே தன் வேட்டியை காவி நிறத்தில் கட்டியிருக்கிறார் இரஜினி!
சாதிவெறியை கண்டித்து பாடல்கள் வெளிவந்ததை ஆஹா..ஓஹோ வென புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
திராவிட இயக்க கலை,இலக்கிய வளர்ச்சியில் வராத பாடல்களா?
MGRன் நடிப்பில், பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்கு ஈடாகுமா?
பட்டுக்கோட்டையாரின் பாடல்களும், கலைஞரின் வசனங்களும் அநீதியை அடையாளம் காட்டின. சாதிய கட்டமைப்பை உருவாக்கிய பார்ப்பனீயத்தோடு நேராக சமர் புரிந்தன. இவர்களின் கலை, இலக்கிய போராட்டத்தில் தந்தை பெரியாரின் தத்துவ அரசியல் வியாபித்திருந்தது.
அப்படி..
அண்ணலின் தத்துவ அரசியலை முன்னெடுப்பதாககூட பா.இரஞ்சித் சொல்ல இயலாது. பார்ப்பனீய ஆதிக்க வெறியை ஒருக்காலும் அம்பலப்படுத்த துணியாத இரஞ்சித் புரட்சியாளரின் வழியை பின்பற்றுபவர் அல்ல!
விஜயகாந்த்கூட உழைப்பாளர்களுக்கான பாடலில் உணர்ச்சிப் பொங்க நடித்திருப்பார். ஆனாலும் அவரின் அரசியல் வேறுதானே?
அநீதிகளை எதிர்ப்பதென்பது மிகச் சுலபமான ஹீரோயிசம்.!
அநீதிகளை (பார்ப்பனிய,இந்துத்வாவை) ஒழிக்க களமாடுவதே உண்மையான போராளிகளின் பண்பு..!
அநீதிகளை (பார்ப்பனிய,இந்துத்வாவை) மக்களுக்கு அம்பலப்படுத்திக் காட்டுவது தத்துவ அரசியல்..!

புலிகளின் இறுதி அறிவிப்பை தா. பாண்டியன்தான் எழுதி நடேசனுக்கு அனுப்பி வைத்தார் ..

virakesari.lk  : சரணடைகின்றேன் என்று எழுத்துமூலமாக வழங்காது எமது ஆயுதங்கள் மௌமாகின்றன என்று எழுத்துமூலமாக வழங்குங்கள் என்று ஆலோசனை வழங்கினேன். அதனை அறிக்கை வரைபாக அனுப்புமாறும் கோரினார். அச்சமயத்தில் நான் அனுப்பி வைத்தேன். அதனைத்தொடர்ந்து ஒரிரு நாட்களின் பின்னர் “தான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என்றும் நடசேன் கூறினார். “நடுவழியில் என்னையும் வாகனத்தையும் மறித்துவிட்டார்கள். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை” என்பது நடேசன் இறுதியாக என்னுடன் பேசிய வார்த்தைகளாக இருக்கின்றன.
Priyatharshan : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ரூபவ் மாநில பொதுச்செயலாளர் பதவிகளை வகித்தவரும் தேசிய குழு உறுப்பனருமா தா.பாண்டியன் வீரகேசரி இணையத்தளத்திற்கு அளித்த விசேட செவ்வி வருமாறு,

கேள்வி:- தமிழகத்தில் திரைப்படத்துறையின் பிரபல்யங்கள் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அரசியலில் பிரவேசிப்பதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- திரைப்பட நடிகர்கள் வருகை தருவதையும் பேசுவதையும் பார்வையிடுவதற்கு ஒரு கூட்டம் கூடுவது வழமையானது. ஊடகங்களும் அவர்களுக்கான முக்கியத்துவத்தினை அளிக்கும். ஆனால் மக்கள் அவர்களுக்கு வாக்குகளால் ஆதரவளிப்பார்களா என்றால் இல்லை. எனினும் எம்.ஜி.ஆர் விடயம் முழுமையாக மாறுபட்டது. எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால் அவர் நடிகர் என்பதை தாண்டி இளமைக் காலம் முதல் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சதாரண உறுப்பினராக இருந்தவர். அதனையடுத்து ஏனைய தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்.

செல்லூர் ராசு : காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் ரஜனி பிடிக்கலாம் ... தமிழக ஆட்சியை ,,,, ம்கூம் ..

வெப்துனியா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தினமும் ஒரு அதிமுக அமைச்சர்கள் டைம்டேபிள் போட்டு விமர்சனம் செய்து கொண்டு வரும் நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் ரஜினியை விமர்சனம் செய்துள்ளார்.
இன்று அவர் அளித்த பேட்டியின்போது ரஜினி பற்றிய கேள்விக்கு ரஜினியால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் அமைச்சருக்கு தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று அமைச்சர் சொல்லியிருப்பது புண்படுத்துகிற பேச்சாகும் என்றும் இதற்காக அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

அவுரங்கபாத் .. வியாபாரி தற்கொலை .. தவறான மின்சார கட்டணம் எட்டு லட்சம்.. உண்மையில் ஆயிரம் ரூபாய்தான்

cur
வெப்துனியா : 2018 காய்கறி வியாபாரி ஒருவருக்கு 8 லட்சம் கரண்ட் பில் வந்ததால், அவர் தூக்க்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ஜெகநாத் ஷெல்கி (36) என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். இவருடைய கடையின் கரண்ட் பில் இம்மாதம் 8 லட்சம், என்ற தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து மின்சார அலுவலகத்திற்கு என்ற அவர், தனக்கு வழக்கமாக 1000 ரூபாய் தான் கரண்ட் பில் வரும், ஆனால் இப்பொழுது கரண்ட் பில் 8 லட்சம் வந்திருக்கிறது என்றார்.

விருதுநகர் . ஆளுநருக்கு கருப்பு கொடி... திமுக உள்ளிட்ட எதிர்கட்சி தொண்டர்கள் கைது!

ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டியவர்கள் கைது!மின்னம்பலம் : விருதுநகர் சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற திமுக உள்ளிட்ட கட்சியின் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக விழாவில் கலந்துகொண்டபோது, முதன்முறையாக அம்மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதிமுக, பாஜக தவிர, திமுக, காங்கிரஸ் உட்பட பெரும்பாலான தமிழகக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பின்னர் பல்வேறு மாவட்டங்களிலும் ஆய்வு நடத்திவருகின்றார். மாவட்டத் தலைநகரங்களில் தூய்மை இந்தியா இயக்கம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது; அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நிர்வாக பணிகள் என்னென்ன என்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

ஈரோட்டில் கி மு 300 ஆண்டுகளுக்கு முந்தய வணிக முத்திரை ,தங்கம் செம்பு ஆபரணங்கள் கருவிகள் ....

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்?மின்னம்பலம்: கீழடியில் மட்டுமல்ல; இன்னும் பல இடங்களில் தொல் தமிழர்களின் அடையாளங்கள் இருக்கின்றன. அவர்கள் வாழ்ந்த ஒவ்வோர் இடமும் அவ்வளவு செல்வங்களைக் கொண்டுள்ளது. ஏற்காடு அருகே 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆநிரைகளைக் காத்த வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது, திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்கெனவே மகேந்திரப் பல்லவனின் பல்லவ கிரந்த எழுத்துகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது கி.பி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இன்னும் இதுபோல பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த வரிசையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கொடுமணல் பகுதியும் இணைந்துள்ளது. கி.மு 500 ஆண்டுகளுக்கு முன்பாகப் பயன்படுத்தப்பட்ட வணிக முத்திரைகள், தங்கம், செம்பு, ஆபரணங்கள் கற்காலக் கருவிகள், நான்கு ஈமக்குழிகள், இரும்பு ஆலைகள், பழங்கால மக்கள் பயன்படுத்திவந்த மண்பாண்டங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள் என்று எண்ணற்ற சான்றுகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. மேலும், இந்த நகரமானது கரூர் மாவட்டம் முசிறி மற்றும் பட்டினம் நகரத்தை இணைக்கும் வியாபாரத் தலமாக விளங்கியதற்கான சான்றுகளும் இருப்பதாக அகழ்வாராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

மும்பை போலீஸ் உயர் அதிகாரி திடீர் தற்கொலை

tamilthehindu :மும்பை காவல்துறை அதிகாரி ஹிமன்ஷூ ராய் - நிழல் உலக தாதாக்களை அதிர வைத்து, மும்பையை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்த மூத்த போலீஸ் அதிகாரி ஹிமன்ஷூ ராய் இன்று திடீரென தற்கொலை செய்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஹிமன்ஷூ ராய் (வயது 54). மிகவும் நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட அவர் பல்வேறு சவாலான வழக்குகளை விசாரித்து திறன்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தவர். கடந்த 2013-ம் ஆண்டு மும்பையை கலக்கிய ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங், சூதாட்ட மோசடியை அம்பலப்படுத்தினார். இந்த வழக்கின் பின்னணியில் இருந்து செயல்பட்ட பல பிரபலங்கள் குறித்து விசாரித்து பெரிய அளவில் பிரபலமடைந்தார். ஐபிஎல் சூதாட்டப் புகாரில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனை கைது செய்ததும் இவரே.

தமிழிசை சௌந்தரராஜன் : காவிரி பிரச்னைக்கு கர்நாடக தேர்தல்தான் காரணம் !

Veera Kumar- Oneindia Tamil சென்னை: பாஜகவின் உண்மை முகத்தை வெளியே
கொண்டு வந்துள்ளார் அக்கட்சி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
நதிநீர் கொள்கைகளில் பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் என்ற காங்கிரஸ் தலைமையிலான அரசின் அதே கொள்கையைத்தான் பாஜகவும் பின்பற்றி வருகிறது. உதாரணம், காவிரி பிரச்சினை. உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும், காவிரி தொடர்பான இறுதி தீர்ப்பை அமல்படுத்த இன்னும் திட்டம் வகுக்கவில்லை. கர்நாடக தேர்தல்தான் இதற்கெல்லாம் காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தபோது,கர்நாடக தேர்தலுக்காகவே காவிரி விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறிய தமிழிசை, அடுத்து கூறியதுதான் டாப், "இது எல்லா கட்சிகளும் செய்யும் அரசியல்தான்" என்றும் கூறியுள்ளார். பாவம், அமித்ஷா. "party with difference" என ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூனில் ஓட்டை போட்டு டமால் என உடைத்துவிட்டார் தமிழிசை.

பழம்பெரும் நடிகர் நீலு ( நீலகண்டன்) உடல்நலக் குறைவால் காலமானார்

பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் மரணம்தினத்தந்தி: சென்னை, பழம்பெரும் நடிகர் நீலகண்டன் (வயது 82) என்கிற நீலு உடல்நலக் குறைவால் சென்னையில் மரணமடைந்தார். மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று மாலையில் மரணம் அடைந்தார்.
மறைந்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நீலு, தனது காமெடியால் பலரையும் கலக்கியவர். அதைத் தாண்டி அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் விமர்சகராகவும் இருந்துள்ளார். பழம்பெரும் நடிகர் நீலு இன்று மரணமடைந்தார். நாடகம் மூலம் திரைப்பட நடிகரான அவர், ஆயிரக்கணக்கான நாடகங்கள், 160 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பினாங்கு சட்டசபை தேர்தலில் துணை முதல்வர் டாக்டர் ராமசாமி அமோக வெற்றி

tamil.oneindia.com : பினாங்கு: Prof. Dr Ramasamy wins in Penang Assembly election
பினாங்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். மலேசியாவின் பினாங்கு மாகாண சட்டசபை தேர்தலில் மகாதீர் முகமதுவின் பக்கட்டான் ஹரப்பான் கட்சி மீண்டும் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 40 இடங்களில் 37ஐ இக்கட்சி கைப்பற்றியது.
பக்கட்டான் ஹரப்பான் தலைமையிலான கூட்டணியில் துணை முதல்வர் டாக்டர் ராமசாமியை செயலராகக் கொண்ட ஜனநாயக செயல் கட்சி இடம்பெற்றுள்ளது.

வியாழன், 10 மே, 2018

மலேசியா மகதீர் மொகமத் மீண்டும் பிரதமரானார் .. 92 வயதில்.. 22 ஆண்டுகள் ஆட்சி..

சுகன்யா பழனிச்சாமி - விகடன் :
மகதீர் முகமது
மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பி.என் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மகதீர் முகமதுவின் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. தனது அரசியில் ஓய்வை விலக்கி, மீண்டும் பிரதமரானார் மகதீர் முகமது.
மலேசியா பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக். இவரின் தலைமையிலான அரசு, நிதி முறைகேடுகளைச் செய்துள்ளதாகவும், சர்வதேச அளவில் மலேசியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மொத்தம் 223 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில், 112 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிதான் ஆட்சியமைக்க முடியும். இந்தத் தேர்தலில் 115 இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது முன்னாள் பிரதமர் மகதீர் முகமதின் கூட்டணி.

ஆதார், ஜிஎஸ்டி ரத்து செய்யப்படும்: ராகுல் காந்தி அறிவிப்பு,, மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தால்

dinakaran :பெங்களூரு: ‘‘மத்தியில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்தால்
பொதுமக்களுக்கு தொல்லை  கொடுத்து வரும் ஆதார், ஜி.எஸ்.டி. உள்பட சட்டங்கள்  ரத்து செய்யப்படும்’’ என   ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல்காந்தி, நேற்று பெங்களூரு பலதுறை நிபுணர்கள்,  மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவைக்கு வரும் 2019ல் நடக்கும் தேர்தலில் மீண்டும்  காங்கிரஸ் அரசு அமைந்தால் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் ஆதார்,  ஜி.எஸ்.டி.  உட்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

திருநங்கையும், திருநம்பியும்.. ஒரு வரலாற்றுக் காதல்!!.. திருமண வாழ்வைத் தொடங்குகிறார்கள்

transgenderச.ப.மதிவாணன் நக்கீரன் : பிரிவினைகளும், வேற்றுமைகளுமாக பிரிந்து கிடக்கும் நம் சமூகத்தில், சாதி மாறி திருமணம் செய்துகொள்வதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால், உடலில் ஏற்பட்ட உணர்வு மாற்றத்தால் மாற்று பாலினத்தைச் சேர்ந்தவர்களாக வாழத்தொடங்கிய திருநங்கையும், திருநம்பியும் திருமணம் செய்துகொண்டு புதிய வரலாறு படைத்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்தவர் இஷான் கே. கிஷான். இவர் பெண்ணாகப் பிறந்து திருநம்பியாக மாறியவர். அதேபோல் சூர்யா என்பவர் ஆணாகப் பிறந்து திருநங்கையாக மாறினர். இவ்விருவரும் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள். ஒரு கட்டத்தில் தங்களுக்குள் மலர்ந்த காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு திருமணம் செய்துகொள்ளவும் முடிவுசெய்தனர்.

ராகுல் காந்தி உருக்கம் : எனது தாய் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்தான் ஆனால் ..

tamilthehindu :பெங்களூரில் இன்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி - ;படம் உதவி: ட்விட்டர் என்னுடைய தாய் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்தான், ஆனால், சிறந்த இந்தியராகவே வாழ்ந்து, பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடக்கிறது, 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலமுதல்வர்கள் எனப் பல முக்கிய பிரச்சார பீரங்கிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

எழுத்தாளர் சௌபா மகனை கொன்ற குற்றச்சாட்டில் கைது

நான்தான்பா கொன்னேன் : சௌபாமின்னம்பலம: மகனைக் கொன்ற புகாரின் அடிப்படையில் எழுத்தாளர் சௌபா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, அவரது தோட்டத்தில் பணியாற்றிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1980களில் மதுரை வட்டாரத்தில் நிகழ்ந்த சமூகக் கொடுமைகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்தவர் பத்திரிகையாளர், எழுத்தாளரான சௌபா என்ற சௌந்திரபாண்டியன். ஜூனியர் விகடனில் மாணவப் பத்திரிகையாளராகத் தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கியவர். உசிலம்பட்டி பகுதியில் கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது, பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்வதற்காக எருக்கம் பால் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக அவலங்களை வெளியுலகுக்குத் தெரியவைத்தவர்.

எஸ் வி சேகரை கைது செய்ய தடை இல்லையாம் ... ?

மின்னம்பலம்: சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தான் எனக் கூறி நடிகர் எஸ்.வி.சேகரின்
முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து அவரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர் வட்டாரங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி. சேகர் தன் முகநூலில் அவதூறாகப் பதிவிட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. அவர் அந்தப் பதிவைப் படித்துப் பார்க்காமல் ஃபார்வோர்டு செய்ததாகக் கூறி மன்னிப்புக் கேட்டிருந்தார். எனினும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பின்னர், சென்னை போலீஸ் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. இதனால் தலைமறைவான எஸ்.வி. சேகர் உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரினார்.

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினால் குண்டாஸ்!

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினால் குண்டாஸ்!மின்னம்பலம்: குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்பினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் எஸ்.பி. பகலவன் எச்சரித்துள்ளார்.
குழந்தை கடத்துவோர் என சந்தேகப்பட்டு கடந்த இரண்டு நாட்களில் இருவர் மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் வாட்ஸ் அப்பில் பரவும் தவறான தகவல்தான்.
அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து காவல்துறையினரிடம் தான் தகவல் தெரிவிக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோரை சமூக விரோதிகளாக கருதி அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

சாக்கலேட் கொடுத்த ருக்மணி மூதாட்டி அடித்து கொலை .. 23 குண்டர்கள் கைது

குழந்தை கடத்தல் கும்பல் என்று மூதாட்டியை அடித்து கொன்ற 25 பேர் கைது
 ருக்மணி
மாலைமலர்: திருவண்ணாமலை அருகே குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து மூதாட்டியை அடித்துக் கொன்றது தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  போளூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வடமாநில நபர்கள் புகுந்து குழந்தைகளை கடத்திச் செல்வதாக வலை தளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வரும் அடையாளம் தெரியாதவர்களையும் சரமாரியாக தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.< கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் ‘திருடன்’ என வடமாநில வாலிபர் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கிராம மக்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறிலும் திருமண விசே‌ஷத்திற்கு சமையல் வேலைக்கு சென்ற கல்லூரி மாணவன் சதாசிவம். திருடன் என நினைத்து கல்வீசி கொல்லப்பட்டார். இந்த நிலையில் போளூரில் கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டது தனியார் நிறுவனம்; பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்


hydro

தினமணி :புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் பகுதியில் செயல்படுத்த இருந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டுள்ளது.
தொடர் போராட்டம் காரணமாக ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டதாக ஜெம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த நெடுவாசல் கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். தங்களது தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாக இதனைப் பார்க்கும் கிராம மக்கள், தமிழகத்தில் வேறு எங்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக ஜெம் நிறுவனம், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டதாகக் கூறப்பட்டாலும், அதில் உண்மையில்லை என்றும், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைத்தான் கைவிட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கொலிஜியத்தை கூட்டுங்கள் - தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்

உடனே கொலிஜியத்தை கூட்டுங்கள் - தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்
செல்லமேச்வர்
மாலைமலர் :சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உடனே கொலிஜியத்தை கூட்ட வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம் எழுதியுள்ளார். நீதிபதி செல்லமேஸ்வர்</ புதுடெல்லி:< சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: கைதுக்கு தடையில்லை

HINDU TAMIL: பெண் பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இதுவரை எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியது. காவல்துறை விசாரணை சரியாக இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்திருந்தது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. > இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, பத்திரிகையாளர்கள் பலர் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் குவிந்தன. மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து மனு செய்தன.

மகாநதி ...நடிகையர் திலகம் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் .. துல்கார்

zeenews : நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான 'மகாநதி' தெலுங்கில் இன்று வெளியாகியுள்ளது! நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான 'மகாநதி' தெலுங்கில் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் 'நடிகையர் திலகம்' எனும் பெயரில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருகிறார். சாவித்திரி வேடத்திற்காக தினமும் நான்கு மணி நேரம் மேக்கப் போட்டி நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அதேபோல, படத்தின் நாயகனா "ஜெமினி கணேசன்" வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமந்தா, நாகசைத்தன்யா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும், இந்த படத்தை அஸ்வின் நாக் இயக்கியுள்ளார்.

ஒரே நேரத்தில் தேர்தல் மே 16ல் ஆலோசனை.. 10 Disturbing Similarities Between Narendra Modi and Adolf Hitler

modi_hitler தினமலர் :புதுடில்லி, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடத்தி
முடிக்கும்படி, சட்ட அமைச்சகத்தின் பார்லி., நிலைக்குழு, 2016ல் பரிந்துரை செய்தது. இது குறித்து, தேர்தல் கமிஷனின் கருத்தை, சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது.இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதில், தங்களுக்கும் உடன்பாடு இருப்பதாக தெரிவித்த தேர்தல் கமிஷன், 9,000 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவித்தது. மேலும், 9,000க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தது.இது குறித்து, சட்ட ஆணையத்துடன் கலந்து பேச, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதையடுத்து, சட்ட ஆணையத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான, பி.எஸ்.சவுகான் தலைமையிலான குழு, 16ல், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்த உள்ளது. ஒரே  நேர தேர்தல்..  ஒரே கட்சி தேர்தல் .. ஒரு ஒரு தேர்தல் நிரந்தர சர்வாதிகாரம்

sikh24.com :1) Narendra Modi is for cronyism and is a “business first” politician.  He supports businesses by giving them subsidies and the country’s resources at extremely low prices. Hitler provided German companies with slaves and other financial support in order to seek their support. This is perhaps the greatest similarity between Narendra Modi and Hitler.  Modi’s Lok Sabha campaign depended greatly on businesses for funding, no wonder every major Indian newspaper provided front page space to him during elections.

எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை ...


மாலைமலர் :முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றிய குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருவதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை, திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 16 நாட்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. பேச்சு வார்த்தைக்கு பிறகு ஏப்ரல் 2-ந் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அப்போது, தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற ரசிகர்கள், அரசு குறும்படம் ஒன்றை பார்க்கும் நிலை ஏற்பட்டது.
அதாவது, தமிழக அரசின் செய்தி துறை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி தயாரிக்கப்பட்ட குறும்பட காட்சிகள்தான் அவை. தனக்கு வேலை கொடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு பெண் ஒருவர் கோவிலில் அர்ச்சனை செய்வது போன்று அந்தக் காட்சி இடம்பெற்றிருந்தது.< தமிழக அரசின் இந்த விளம்பரத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தியேட்டரில் ஒளிபரப்பப்பட்ட குறும்பட காட்சி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, அந்த சர்ச்சை ஓரளவு ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘ரமணா’ பட பாணியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையா?

மாலைமலர் :சென்னை, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள்
அளித்த வாக்குமூலம் மருத்துவ ஆவணங்களை ஒப்பிடும்போது முரண்படுவதால் ‘ரமணா’ பட பாணியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு காலகட்டங்களில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 20 மருத்துவர்களின் பட்டியலை சசிகலா ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மருத்துவர்களிடம் தற்போது ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்ற அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் மற்றும் மருத்துவர் ராமச்சந்திரன்(இருவரும் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் ஆவர்) ஆகியோரிடம் நேற்று முன்தினம் ஆணையம் விசாரணை நடத்தியது.