சனி, 15 ஏப்ரல், 2017

மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர்

வருமானவரித் துறை ரெய்டுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் நடக்க ஆரம்பித்திருக்கும் களேபரங்களு டன் வரவும்” என்று கழுகாருக்கு மெசேஜ் அனுப்பினோம். அடுத்த சில நிமிடங்களில் கழுகார் வந்துவிட்டார். ‘‘சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை மையம் கொண்டுதான் அ.தி.மு.க அரசியல் நடக்கிறது. அவருக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியும் எதிராக ஒரு கோஷ்டியும் கிளம்பி இருக்கிறது. இந்தச் சூழ்நிலை,  அ.தி.மு.க-வின் அடுத்த பிளவுக்குக்கூட அடித்தளம் அமைக்கலாம்’’ என்றார்.
‘‘எப்படிச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டோம்.
‘‘சசிகலா முதல்வர் ஆக வசதியாக ஓ.பன்னீர்செல்வத்தைப் பதவிவிலக முதலில் சொன்னதே விஜயபாஸ்கர் தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, திவாகரன் உத்தரவுப்படி ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவை முன்னிலைப்படுத்தப் பேசி வந்தவர் அவர்தான். ஒரு காலத்தில் பன்னீர்செல்வத்தின் சிஷ்யர் அவர். பன்னீரின் மகன் ரவீந்திரநாத்தின் நண்பர். ஆனாலும், சசிகலா குடும்பம் விரும்பிய விஷயங்களைச் சரியாகச் செய்துகொடுத்தவர் விஜயபாஸ்கர்.

8 வயது அண்ணன் வேன் எடுத்துகொண்டு 5 வயது தங்கைக்கு சீஸ் பர்கர் வாங்க சென்றான்


அமெரிக்காவில் 8 வயது சிறுவன் தனது தங்கைக்கு பர்க்க வாங்க வேன் ஓட்டிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. By: Kalai Mathi
வாஷிங்டன்: அமெரிக்காவில் 8 வயது சிறுவன் தனது தங்கைக்கு பர்க்க வாங்க வேன் ஓட்டிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் மூலம் கார் ஓட்ட கற்றுக்கொண்டு சிறுவன் வேனை ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிழக்கு பாலெஸ்டின் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் 4 வயது சிறுமியுடன் வேனை ஓட்டிச்சென்றுள்ளான். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்."பெற்றொர் தூங்கிக்கொண்டிருந்தனர் " s இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ் அதிகாரி ஜேக்கப் கோச்லருக்கு தலைமையிலான குழுவினர் சிறுவனையும் வேனையும் தேடி விரைந்து சென்றனர்.

மும்பை மாநகராட்சி எதிர்கட்சி தலைவராக தமிழர் ரவி ராஜ் தெரிவு .. ராஜபாளையத்தை சேர்ந்த ..

முதன் முறையாக மும்பை மாநகராட்சியில் காங்கிரஸ் மாநகராட்சி உறுப்பினர் ரவிராஜா மும்பை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை மாநகராட்சி சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ் மக்கள் அனைவருக்கும் பெருமை ! மகிழ்வோம்! பாராட்டுவோம்!<;நாட்டின் நிதி தலைநகரான மும்பை மாநகராட்சிக்கு கடந்த பிப்ரவரி 21-ந் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் சிவசேனா அதிகபட்சமாக 84 வார்டுகளில் வெற்றி பெற்று மேயர் மற்றும் துணை மேயர் பதவியை கைப்பற்றியது. 82 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா மும்பை மாநகராட்சியில் தங்களுக்கு எந்த பதவியும் வேண்டாம் என தடாலடியாக அறிவித்தது.

தமிழகத்தில் அம்பேத்கார் திரைப்படம் இருட்டடிப்பு செய்யப்பட்டது... ஆஸ்கார் ரவிச்சந்திரனின் சாதி வியாதி


அம்பேத்கர் பிறந்தநாளை சமூக வலைதளங்களில் கொண்டாடிவிட்டோம். வாழ்த்துகள் தெரிவிப்பது, ஹேஷ்டெக் கிரியேட் செய்து பரப்புவது, டிபி மாற்றுவது என நம்மால் முடிந்த சமூகக் கடமையை நிறைவேற்றிவிட்டு நம்மை தொலைக்காட்சிக்கு ஒப்புக்கொடுத்துவிட்டோம். அதில் ஒளிபரப்பப்பட்ட 'கொம்பன்', 'குட்டிப்புலி' படங்களை ரசித்து, கைதட்டி, ஆரவாரித்து, நகைச்சுவைக்கு சிரித்து நம் ஆதரவை தெரிவித்துவிட்டோம்.
இதுதான் நாமா? இல்லை நம் மனநிலையே இப்படித்தான் இருக்கிறதா?
'தேவர்மகன்', 'நாட்டாமை', 'எஜமான்', 'சின்ன கவுண்டர்' படங்களை ரசித்த நம்மால் ஏன் 'அட்டகத்தி', 'மெட்ராஸ்' போன்ற படங்களை முழுமையான கொண்டாட்ட அனுபவத்துடன் அணுக முடியவில்லை. 'மாவீரன் கிட்டு' படத்தை ஏன் புறக்கணிக்கிறோம்?
தலித் சினிமா என்று நம்மால் ஒரு படத்தை உரக்கச் சொல்லி வெளியிட முடிகிறதா? 'அம்பேத்கர்' படம் ஆங்கிலத்தில் 2000-ல் வெளியானது. ஆனால், தமிழில் 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெளிவந்தது. அதுவும் வழக்கு போட்டு முடக்கப் பார்த்த நிலையில் வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், எடிட்டர் பி.லெனின், எழுத்தாளர் வே.மதிமாறன் போன்றவர்களின் அரும்பெரும் முயற்சியால் 'அம்பேத்கர்' படம் தமிழில் வெளியிட சாத்தியமானது.

நானோ கார்களால் டாடாவுக்கு ரூ.6,400 கோடி இழப்பு ... குஜராத்தில் மோடி அரசு வழங்கிய மக்கள் பணம் கோவிந்தா!

அழிவுப் பாதையில் நானோ கார்கள்!கடந்த 2009ஆம் ஆண்டு, டாடா நிறுவனத்தின் தயாரிப்பில் உலகின் மிகவும் குறைந்த விலைகொண்ட காராக ’நானோ’ அறிமுகப்படுத்தப்பட்டது. வெறும் 1 லட்ச ரூபாய் மதிப்பில் வெளியான இந்தக் கார்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்றும் ஆட்டோமொபைல் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆரம்ப காலகட்டத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை இக்கார்கள் பெற்றிருந்தாலும், பின்னாட்களில் பெரும் பின்னடைவையே சந்தித்தது. குறிப்பாக, கடந்த 2012ஆம் நிதியாண்டில் 6.5 லட்சம் கார்களும், 2013ஆம் நிதியாண்டில் 7 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது.

அமெரிக்கா குண்டுவீச்சு : 94 தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டார்களா?

அமெரிக்கா குண்டுவீச்சு : 94 தீவிரவாதிகள் பலி!ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கும் பகுதியின்மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் 94 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் அரசுப் படையினர் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈராக்கிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்படுகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானின் அச்சின் மாவட்டத்தில் உள்ள மோமண்ட் டாரா என்ற பகுதியில் உள்ள குகைகள்தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிகளவில் முகாமிட்டுள்ளனர்.
இந்தக் குகைகளில் இருந்தபடியே ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படையினர் மற்றும் அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.

பெரிய ஊடகங்களே பரப்பிய பொய் செய்தி" இடஒதுக்கீடும் உத்தர பிரதேசமும்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உத்திர பிரதேச முதலமைச்சர் ஆதித்ய நாத், தனியார் மருத்துவ கல்லூரியில் ஓ.பிஸி, எஸ்ஸி, எஸ்டி பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்ததாக செய்தி வெளியானது. இந்தியா டுடே, புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன. சமூக ஊடகங்களில் பரபரப்பாக இந்தச் செய்தி விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு ரத்து என்ற செய்தி உற்பத்தி செய்யப்பட்ட செய்தி என தெரியவந்துள்ளது. இடஒதுக்கீடு ரத்து செய்தி வெளியான உடன் மருத்துவ கல்வி இயக்குனர் வி. என். திரிபாதி அதை மறுத்துள்ளார். மேலும் அவர், தனியார் மருத்துவ கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வு எழுதிய மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீடு நிரப்பப்படுவதாக தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டுமே இடஒதுக்கீடு அமலில் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: thetimestamil.com.  newindianexpress.com/nation/2017/apr/13/quota-scrapping-uttar-pradesh-government-officials-rush-to-counter-false-trending-of-info-1593381.html

கொழும்பு ... குப்பைமேடு தீ விபத்து 11 பேர் மரணம் .. 4 குழந்தைகள் உட்பட ..


இலங்கையின் கொழும்பு புறநகர்ப் பகுதியில் மிகப்பெரிய குப்பைமேடு தீப்பிடித்து சரிந்ததில், 4 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு புறநகர்ப் பகுதியான கொலன்னாவ மீட்டொத்தமுல்லையில் மிகப்பெரிய குப்பைமேடு உள்ளது. இங்கு தினமும் 800 டன் அளவுக்கு குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மொத்தம் 23 மில்லியன் டன் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக பாராளுமன்றம் எச்சரித்தது.
இந்நிலையில், இந்த குப்பைமேட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு, குப்பைமேடு சரியத் தொடங்கியது. அருகில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடிசைப்பகுதியில் குப்பை சரிந்து தீப்பிடித்தது. மளமளவெனப் பரவிய தீ, அடுத்தடுத்த குடிசைகளுக்கும் பரவியதால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். இந்த விபத்தில் 6 பேர் நேற்று உடல் கருகி உயிரிழந்தனர்.

காஷ்மீர் : ஸ்ரீ நகர் இடைதேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றி !

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதியில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.யாக இருந்த தாரிக்கர்ரா பா.ஜனதா கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்தார். இதனால், ஸ்ரீநகர் தொகுதியில் கடந்த 9-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அப்போது நடந்த வன்முறைச் சம்பவங்களால் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியானார்கள். வன்முறை காரணமாக 7.13 சதவீத ஓட்டுகளே பதிவானது. இந்த தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லாவும் அவரை எதிர்த்து ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நசிர் அகமது கானும் போட்டியிட்டனர்.

மாகாதேவன் காலமானார் .. சசிகலாவின் அண்ணன் மகன் ... இறுதி சடங்கில் சசிகலாவுக்கு மறுப்பு !

மகாதேவனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள; சசிகலாவுக்கு சிறைத்துறை அனுமதி மறுப்பு!
சசிகலா குடும்பம் சோகம்சசிகலாவின் பாசத்திற்கு உரியவர்சசிகலா அவரது அண்ணன் மகன் மகாதேவன் இறுதி சடங்கில் பங்கேற்க சிறையிலிருந்து பரோலில் வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Veera Kumar":
சசிகலா, சிறையிலிருந்து பரோலில் வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.
சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகன், மகாதேவன் (47) இன்று மாரடைப்பால் காலமானார். இவர் தஞ்சையில் வசித்து வந்தவர். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, ஜெ. பேரவை மாநில செயலாளராக சில காலம் இவர் பணியாற்றியவர். தஞ்சை வட்டாரத்தில் அதிமுகவில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளவர் மகாதேவன். 2011ல் சசிகலா மற்றும் அவரது உறவினர்களை அதிமுகவிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். அப்போது மகாதேவனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

வேதாரண்யம் ...சாராயம் குடித்து போராட்டம் நடத்தும் பெண்கள்..

சாராயம் குடித்து போராட்டம் நடத்தும் பெண்கள்: விபரங்கள் இதோ..இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு காரணமாக நெடுஞ்சாலைகள் உள்ள சுமார் 3000 டாஸ்மாக் கடைகள் சீல் வைக்கப்பட்டுவிட்டதால் தற்போது அரசு மாற்று இடம் தேடி வருகிறது. திருப்பூர் அருகே மாற்று இடத்தில் மதுக்கடைகளை திறந்ததற்காக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது வேதாரண்யம் (திருமறைக்காடு ) பகுதியிலும் பெண்கள் திரளாக கூடி ஊருக்குள் வைக்க முயற்சிக்கும் மதுக்கடைகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதற்காக வித்தியாசமான முறையில் போராட முடிவு செய்த அந்த பகுதி பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மது குடிக்கும் போராட்டம் செய்தனர்.; அங்குள்ள பெண்கள் ஆளுக்கொரு குவார்ட்டர் பாட்டிலில் உள்ள மதுவை குடித்து போராட்டம் செய்ததால் போராட்டத்தை கலைக்க முயற்சித்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உச்சநீதிமன்றில் வழக்கு ...இந்தி கட்டாயப்பாடம்... அடுத்த வாரம் விசாரணைக்கு ,, .

இந்தி கட்டாயப்பாடம்:  உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம்  ...
பாஜக மூத்தத் தலைவர் அஸ்வின்குமார் உபாத்யாயா, ‘நாடு முழுவதும் இந்தி மொழியை பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயப்பாடமாக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல மொழிகள் பேசுகிற மக்கள் வாழும் இந்தியாவில் மும்மொழி கொள்கையின் அடிப்படையில் இந்தி மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து அதிகாரத்துக்கு வரும் ஆட்சியாளர்கள் தரப்பினரால் அவ்வப்போது ஒரு கோரிக்கையாக எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழக விவசாயிகள் தீண்டத்தகாதவர்களா? கவுதமியும் காஜலும் செய்த புண்ணியம் ...

கடந்த 30 நாள்களுக்கும் மேலாகத்
தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலவிதமான நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் இதயம் உடைந்து நொறுங்கிய நிலையிலும் தொடர்ந்து போராடத் தீர்மானித்துள்ளார்கள். ‘குடியரசுத்தலைவர்கூட எங்களைச் சந்திக்கும்போது, பிரதமர் மட்டும் எங்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? நாங்கள் தீண்டத்தகாதவர்களா? ஏன் எங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகின்றனர்?’ என்று போராட்டக் குழுவினர் கேட்கின்றனர். ‘வீணாக ஐந்து முறை பிரதமருக்கு மனு கொடுத்துவிட்டோம்’ என்று ஒரு விவசாயி கூறுகிறார்.
டெல்லியில் உயர்ந்து வரும் வெப்ப நிலையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் போராட்டத்துக்குத் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அணி மாறும் அமைச்சர்கள்... ஜெயலலிதா சமாதி காட்சிகள் மீண்டும் அரங்கேற்றம்

பத்து அமைச்சர்கள், ஜெ., நினைவிடம் வந்து வணங்கிய பின், அ.தி.மு.க., - பன்னீர் அணியில் இணையப் போவதாக வெளியான தகவலால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய், பணம் பட்டுவாடா செய்தது தெரிய வந்தது.; இதன் தொடர்ச்சியாக, ஏப்., 9ம் தேதி நள்ளிரவு, ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதற்கு அடுத்த நாள் முதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகார் அடிப்படையில், ஆட்சியை கலைக்க, மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.  கொள்ளை கோஷ்ட்டி ரெண்டா பிரிஞ்சு, மீண்டும் ஒண்ணாகுது.. ஒண்ணா சேர்ந்து கொள்ளை அடிப்பது மீண்டும் தொடரும்.. வித்தியாசம் ஒண்ணுமில்லை.. மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நிலஆக்கிரமிப்பு, டெண்டர் கொள்ளை, மாமூல், வசூல், கட்டப்பஞ்சாயத்து வழக்கம் போல ஆயாம்மா பேரை சொல்லி முழுங்குவாங்க..

கனடா ...மனைவியை வெட்டி கொன்ற ஈழத்தமிழர்

சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது.
சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் !
இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது.

பன்னீர் - பழனி கூட்டணி: வெளியேறுகிறார் தினகரன்?

பன்னீர் - பழனிச்சாமி கூட்டணி: வெளியேறுகிறார் தினகரன்? ...அதிமுகவில் அடுத்தக்கட்ட அதிரடி காட்சிகள் அரங்கேறத் தயாராகி வருகிறது. எதிரெதிர் முகாம்களில் இருந்தவர்கள் இணைகிறார்கள். அதிமுக கட்சி பிளவு, இரட்டை இலை முடக்கம், தலைமைச் செயலகத்தில் ரெய்டு, இறுதியாக ஆளும் அமைச்சர் வீட்டிலேயே ரெய்டு, இடைத்தேர்தல் நிறுத்தம், அடுத்ததாக எப்போது ஆட்சி கவிழும் என்கிற அச்ச நிலையில் அமைச்சர்களும், எல்.எல்.ஏ.க்களும் மன உளைச்சலிலிருக்கிறார்கள்.
அதிமுகவின் ஆட்சிக்காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில் ஆட்சியை கவிழ்த்தால் யாருக்கும் எந்த நன்மையுமில்லை என தொலை நோக்குப் பார்வையில் சிந்தித்த அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புலம்பியிருக்கிறார்கள்.

சீனா அச்சம் : அமெரிக்க வடகொரியா போர் எந்த நேரமும் வெடிக்கலாம் BBC தகவல்

வடகொரியா தொடர்பாக பதற்றம் அதிகரித்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்று சீனா எச்சரித்துள்ளது. போர் ஏற்பட்டால் யாரும் வெற்றி பெற முடியாது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ எச்சரித்துள்ளார். படத்தின் காப்புரிமை AFP Image caption சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்ற எண்ணம்தான் உருவாகியுள்ளதாகவும், சிக்கலை மேலும் அதிகரித்து, நிலைமையை சமாளிக்க முடியாத அளவிற்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்று இரு தரப்பினருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "வார்த்தைகளினாலோ அல்லது செயல்கள் மூலமாகவோ தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என இருதரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன்" என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

BBC :வழக்கு பதிவு .. 3 அதிமுக அமைச்சர்கள்.. ,தளவாய் சுந்தரம் உட்பட ...

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் மூவர் உள்பட ஐந்து பேர் மீது சென்னைக் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.;இந்த மாதம் ஏழாம் தேதியன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது சோதனை நடத்தப்பட்ட அவரது வீட்டிற்குள் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், தில்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டார் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்தது.
மேலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது விஜயபாஸ்கரின் ஓட்டுனர் உதயகுமார், சில ஆவணங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது.

கார்த்திகேயன் Fashura: : ஆரிய வருகையின் அறிமுக அத்தியாயம்!

Karthikeyan Fastura   : மில்லியன் வருட கதையின் தொடர்ச்சி(மீள் பதிவு)
இன்று ஆரியர்கள் என்று குறிப்பிடப்படும் இரானிய ஐரோப்பிய மூதாதையர் கூட்டம் முதன்முதலில் இந்தியாவில் வடமேற்குப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக குடியேற ஆரம்பித்தது. அவர்கள் நூற்றாண்டுகளாக பயணப்பட்டு கொண்டிருந்ததால் நாடோடி நாகரிகம் கொண்ட காட்டுவாசி கூட்டமாகவே இருந்தார்கள்.
அந்த சமயம் சிந்துசமவெளியில் ஹரப்பா, மொஹென்ஜோ-தரோ இரு பெரும் நகரங்கள் கொண்ட நகர நாகரிகத்தை கட்டமைத்து, விவசாயம் செய்து, வியாபாரம் செய்து என்று முன்னேறிய சமூகமாக ஆதி இந்திய கூட்டம் வாழ்ந்து வந்தது. இதற்கு அடிப்படை காரணம் பல நூற்றாண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருந்ததும் போர்கள் எதுவும் இன்றி இருந்ததும் தான். அதனால் ராணுவம், காவல் படை என்று பாதுகாப்பு அரண் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்திருந்த இந்த கூட்டத்தின் மேல் ஆரிய காட்டுவாசி கூட்டம் தாக்குதல் நடத்தியதால் செய்வதறியாது சிந்து மக்கள் சிதறி ஓடுகின்றார்கள். அதில் ஒரு கூட்டம் விந்திய மலையை தாண்டி தென்புறமும், கங்கை நதியை நோக்கி ஒரு கூட்டமும் நகர்கிறது.
இந்தோ-ஆரிய கலப்பின கூட்டம் இன்றைய பஞ்சாப், ஹரியானா பகுதியில் உருவாக ஆரம்பிக்கிறது.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

FB: அன்று கலைஞர் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தாரே ... நன்றி கெட்டவர்களே ஞாபகம் இருக்கிறதா?

கலைஞர் ...விவசாயிகளுக்கு ஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்தாரே...இலவச மின்சாரம் தந்தாரே...ஓசையின்றி ஆரவாரமின்றி..
காவேரி நடுவர்மன்றம் அமைக்கச்செய்து இறுதி தீர்ப்பும் வாங்கித்தந்தாரே...தன செல்வாக்கால்...
இன்று தாமிழ்நாடு முழுக்க நொந்து வேதனையில் வாடி தெருவுக்கு வந்து போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் ...ஊடகங்கள்...மற்ற கட்சியினர் ...பொது மக்கள்
கலைஞரை பாராட்டினார்களா ?...நன்றி சொன்னார்களா ?

மாறாக ...
கலைஞரை தேர்தலில் தோற்கடித்தார்கள் ..
பொய் சொல்லி ஏமாற்றுபவரை தேர்ந்தெடுத்தார்கள்.
இந்த நன்றிகெட்ட விவசாயிகளை கலைஞர் மன்னித்தாலும்...
காலம் மன்னிக்கவில்லை பாருங்கள்.
வினை விதைத்தவர்கள் வினை அறுக்கின்றார்கள்.
இன்றைய நிலையில் கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால்
விவசாயிகளுக்கு இந்த கதி நேர்ந்திருக்குமா ?
ஜெயாவின் அதிமுக எடப்பாடி.. மோடி அரசுகளை போல கலைஞர் மெத்தனமாக பாராமுகமாக இருந்திருந்தால் இந்நேரம் ஊடகங்கள் எப்படி பொங்கி இருக்கும் ?

பாடகர் டி.எம்,கிருஷ்ணா : குழந்தை பிறக்கும்போதே சாதீய படிநிலை ஆரம்பம் ..இது ஒரு சிந்தனை ஊழல் !

தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு பாஜக-தான் காரணம் : பாடகர்  ...
தமிழகத்தில் தற்போது நிகழும் அசாதாரண சூழ்நிலைக்கு பாஜக-வும் ஒரு காரணம் என, பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் டி.எம்.கிருஷ்ணா இசைக் கச்சேரி நடைபெற்றது. பிறகு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கிருஷ்ணா, 'தற்போதைய நிலையில் திராவிடக் கட்சிகள் தங்களது கொள்கையை மறந்து செயல்படுகின்றன. ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஊழல் என்றால் ஆர்.கே.நகரில் நடைபெற்ற ஊழலைப்போல பணத்தில் மட்டுமே செய்வது அல்ல- அது ஒரு சிந்தனை. தற்போது சாதியிலும், மதத்திலும் ஊழல் செய்கின்றனர். குழந்தை பிறக்கும்போதிருந்தே அதன் சாதியப் படிநிலை ஆரம்பமாகிறது. தற்போது தமிழத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைக்கு பாஜக-வும் ஒரு காரணம்' என்று தெரிவித்தார். மின்னம்பலம்

தீபாவும் கணவன் மாதவனும் மட்டுமல்ல தீபாவின் டிரைவரும் ஆட்சியை பிடிக்க கடும் முயற்சி? .

பிரிந்து போன மாதவன் சென்னை: வீட்டிற்கு வந்த மாதவனை தீபாவும் அவரது கார் டிரைவரும் அலட்சியப்படுத்தியதால் ஆதரவாளர்களுக்கு இடையே அடிதடி மூண்டது. ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் தி. நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த 4 மாதங்களாக ஊடக வெளிச்சத்தின் புண்ணியத்தில் தமிழகத்தில் ஒரு சிலரால் அறியப்பட்டுள்ளார். சசிகலாவை பிடிக்காத அதிமுக தொண்டர்கள் தீபாவை தேடி வந்தனர்.
தொண்டர்கள் கூட்டம் வருவதை நம்பி பேரவையை தொடங்கினார். ஆனால் அவரது கணவர் மாதவனாலேயே அந்த பேரவை உடைந்து போனது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். தனி கட்சி தொடங்கப் போவதாக கூறினார் மாதவன்.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து :அதே RSS ஆம்பூர் பிரியாணி அதே தேர்தல் ஆணையம் ! கூட்டு களவாணிகள்!

சகாரா-பிர்லா பேப்பர்ஸுக்கும் விஜயபாஸ்கர் பேப்பர்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அது மோடி உள்ளிட்ட மந்திரிகளுக்குக் கொடுத்ததாக முதலாளி எழுதிய கணக்கு. இது மக்களுக்கு கொடுத்ததாக மந்திரி எழுதிய கணக்கு.
ஆர்.கே. நகர் தேர்தலைத் தள்ளி வைப்பதற்காகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்க அறிக்கையில் காணப்படும் முத்தான வரிகள் கீழ்வருமாறு:
  • “வாக்காளர்களைக் கவர்வதற்குப் பணமும் பரிசுப்பொருட்களும் விநியோகிக்கப்பட்டிருப்பதால் சூழல் நஞ்சாகிவிட்டது. காலப்போக்கில் இந்த நச்சுச் சூழல் மாறி, சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழல் ஏற்படும்போது, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும்.”
  • “வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்டங்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.”
  • “கட்சிகளின் உயர்மட்டத் தலைமைகள், தவறு செய்யும் தங்களது வேட்பாளர்கள் மீது தார்மீக செல்வாக்கையும் அதிகாரத்தையும் செலுத்தி,  அவர்களைக் கட்டுப்படுத்தினால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.”

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் யமுனை பாவக் கணக்கு ! Will take 10 years to restore river bank hit by Sri Ravi Shankar event, panel tells NGT

பத்தாண்டுகளில் இந்த பாதிப்பை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வேலையையும் நிபுணர் குழு கூறுகிறது. முன்னதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த நால்வர் குழு, வாழும் கலை கம்பெனியிடம் யமுனை பழுது பணிகளுக்காக 100 கோடி ரூபாயை இழப்பீடாக கேட்டிருந்தது.
கடந்த 2016-ம் ஆண்டில் கார்ப்பரேட் சாமியார் டபுள் ஸ்ரீ ரவிசங்கர் கம்பெனியார், யமுனைக் கரையில் நடத்திய வாழும் கலை மேளாவின் ‘சாதனை’ தற்போது வெளி வந்திருக்கிறது.
யமுனைச் சமவெளியில் இவர்கள் நடத்திய மேளாவின் பாதிப்பால் அழிந்து போன சுற்றுச்சூழலை மீட்டெடுக்க பத்தாண்டும், 42 கோடி ரூபாய் செலவுக் ஆகுமாம். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்த அழிவுக் கணக்கு இடம்பெற்றுள்ளது.
“தோராயமாக 300 ஏக்கர் சமவெளி நிலம் யமுனைக் கரையின் வலது புறத்திலும், கிழக்கத்திய கரையில் சுமார் 120 ஏக்கர் நிலமும் பல்வேறு அளவுகளில் சுற்றுச்சூழல் அழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்து பௌதீக ரீதியான மீட்புக்கு சுமார் 29 கோடியும், உயிரியில் ரீதியான மீட்புக்கு 13 கோடி ரூபாயும் செலவாகும். இவற்றை நிறைவேற்ற பத்தாண்டுகள் தேவைப்படும்” என்கிறது அந்த அறிக்கை.

சென்னை தெருக்களில் சி சி டிவி கேமெராக்கள் ம் .. திருடர்கள் அகப்படுகிறார்கள்

சென்னை: தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக பொறுத்த  வேண்டும் என மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் மயிலாப்பூர் கோயில் விழாவில் பெண்களிடம் நகை பறித்த 8 பேரை சிசிடிவி கேமரா உதவியால்தான் கைது செய்தோம் என கூறியுள்ளார்.

Youtube யுடியுப் இனி காப்பி அடித்து வருமானம் பார்க்க முடியாது ..

ரூல்ஸை மாற்றியது யூடியூப்! வீடியோ பதிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் யூடியூப் இணையதளத்தில் வீடியோவை பதிவேற்றி பலர், அதில் கிடைக்கும் விளம்பரம் மூலம் வருமானம் பார்த்துவந்தநிலையில், தற்போது யூடியூப் நிறுவனம் விளம்பரம் வெளியிடுவதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 10000 பார்வையாளர்களுக்கு குறைவான பார்வையாளர்களைப் பெற்றுவரும் வீடியோக்களுக்கு இனி விளம்பரத்தை நிறுத்த யூடியூப் முடிவு செய்தது. இதனால் காப்பி செய்த வீடியோக்கள் மூலம் வருமானம் பார்த்தவர்களை முற்றிலும் ஒதுக்க அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில நிறுவனங்கள், தங்கள் பிராண்டை விளம்பரப்படுத்துவதற்காக வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றிவருவதாகவும், இதுபோன்ற விளம்பர யுக்தி மற்றும் பிறருடைய வீடியோவை காப்பி செய்து பதிவு செய்யப்படும் வீடியோக்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலை கட்டி போராட்டம்!


டெல்லி ஜன்தன் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடிவரும் தமிழக விவசாயிகள் 32-வது நாளான இன்று பெண்களைப் போல வேடமிட்டு நூதன முறையில் போராடி வருகின்றனர். அவர்கள் “கோரிக்கைகளைக் கொண்டு வரும் விவசாயிகளை பிரதமர் கண்டுகொள்வதில்லை, சேலை கட்டிவரும் பெண்களை மட்டும் சந்தித்து அவர்களிடம் குறைகேட்கிறார்” எனக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். - ஜே.டி.ஆர்நக்கீரன்

இரண்டாவது புத்தன் .. டாக்டர் அம்பேத்கார்

stanly rajan :இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால்
அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர், முக்கால உண்மை ஒன்று உண்டென்றால் அந்த மனிதனின் வார்த்தைகள்தான்.
தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும், அவர் அப்படித்தான் பாதிக்கபட்டார், அதனால்தான் அந்த சிக்கல்களை அவரால் பேசமுடிந்தது,போராடமுடிந்தது, முடிவில் சாதி இல்லா புத்தமதத்தில் இணையவும் வைத்தது.
அவர் வாழ்ந்த காலம் அப்படி, மகா கொடுமையானது. அந்த கொடுமையான காலத்திலும் அவர் படித்தார், கல்வியோடு ஜோதிராவ் புலேவின் சீர்திருத்தங்களை உள்வாங்கி படித்தார், வறுமையோடும், அடக்குமுறை சமூகத்தோடும் அவர் போராடிய போராட்டம் கொஞ்சமல்ல, தாழ்த்தபட்டவன் ஒருவேளை உணவினை நன்றாக உண்டாலே பொறுக்கா சமூகம், அவனின் கல்வியினை எப்படி ஆதரிக்கும்?

தூத்துக்குடி பெண் இலங்கையில் இருந்து படகில் ராமேஸ்வரம் வந்தார்

ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து 3 குழந்தைகளுடன், படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்ணிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இலங்கை, கொழும்பு அருகே பண்டாரநாயகபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன்,35. இவர், துாத்துக்குடி மாவட்டம், மணியாச்சியில் உறவினர் வீட்டிற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தார். அப்போது உறவினர் மகளான தங்கம்,26, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு லத்திகா,6, இஸ்மிகா,5, சிபிசன்,1, என 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் 2013ல் இலங்கை சென்றனர். ஓராண்டுக்கு முன் விக்னேஷ்வரன் வேலை தேடி சவுதிஅரேபியா சென்றார். தனது குழந்தைகளுடன் தங்கம் மாமியார், மாமனார் ஆதரவில் கொழும்பில் தங்கி இருந்தார். உணவு கொடுக்காமல் தங்கத்தையும், குழந்தைகளையும் அவர்கள் கொடுமைப்படுத்தினர்.

2000 மேற்பட்ட சி பி எஸ் இ பள்ளிகளுக்கு விளக்கம் கோரி கடிதம்

புதுடில்லி: தங்களை பற்றிய தகவல்களை வழங்காத, 2,000க்கும் அதிகமான பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்.இ., என்கிற மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ், நாடு முழுவதும் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த பள்ளிகள், தங்கள் வளாகத்தில் உள்ள குடிநீர் வசதிகள் உட்பட, அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டது. அத்துடன், வை - பை வசதி, ஒவ்வொரு வகுப்புக்கான மாதாந்திர கட்டணம், மாணவர் சேர்க்கை, முடிவுகள், கையிருப்பு நிதி மற்றும் வரவு - செலவு அறிக்கை ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது.

இந்த விபரங்களை, சி.பி.எஸ்.இ.,யின் இணையதளத்திலும், பள்ளியின் இணையதளத்திலும் கடந்த ஆண்டு அக்டோபருக்குள் வெளியிட வேண்டும் என கூறியிருந்தது.

மைனா கைதாவாரா? நந்தினியின் முன்ஜாமீன் மனு தள்ளுட்படி

முன்ஜாமீன் மனு தள்ளுபடி கார்த்திக் தற்கொலை சென்னை: கணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை நீதிமன்றத்தில் இன்று நந்தினி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. நீதிபதி நசீமா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வம்சம் படத்தில் அறிமுகமான நந்தினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்தார். இதனையடுத்து அவர் மைனா நந்தினியானார். ஜீ தமிழில் டார்லிங் டார்லிங் சீரியலில் நடித்து வரும் அவர், ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்தார்.

ராமநாதபுரத்தில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை

ராமநாதபுரம் அருகே தொண்டியில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.ராமநாதபுரம்- தொண்டியில், பிரபல ரவுடி கோவிந்தன் என்பவன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பி சென்றான். அப்போது மடக்கிய போலீசாரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அவனை என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர். கோவிந்தன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தினமலர்

அதிமுக அடிமைகளை விழுங்க துடிக்கும் இந்துத்வா திமிங்கிலம் பாஜக ... எவ்வளவு மோசமான அரசியல்?


டிஜிட்டல் திண்ணை: தினகரனை மிரட்டும் பிஜேபி! 
‘அமைச்சர் விஜயபாஸ்கர் தலை உருண்டுகொண்டே இருக்கிறது. விஜயபாஸ்கருக்கு அடுத்தடுத்து வைக்கப்படும் செக் எல்லாமே தினகரனுக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டல் என்றே தேவைப்பட்டால் விஜயபாஸ்கரை கைது செய்யவும் தயங்க மாட்டோம். அடுத்த கட்டமாக விஜயபாஸ்கரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருது' என்று, டெல்லியில் உள்ள பிஜேபி பிரமுகர் தினகரன் தரப்பில் ஒரு குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.
சொல்கிறார்கள். விஜயபாஸ்கர் மீது அடுத்தடுத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'பன்னீர் தரப்புல எந்தச் சிக்கலும் இல்ல. நீங்கதான் நாங்க சொல்றது எதையும் கேட்கிறது இல்ல. இப்பவும் எதுவும் கெட்டுப் போயிடல. நாங்க சொல்றதுக்கெல்லாம் ஓ.கே.ன்னா சொல்லுங்க... நான் பேசுறேன். உங்க சப்போர்ட் பிஜேபி-க்கு வேண்டும். டெல்லியில் உங்கள் எம்.பி.,க்கள் யாரும் எங்களுக்கு எதிராக வாய் திறக்கக்கூடாது. அடுத்து வரப்போற தேர்தலில் நாம கூட்டணி அமைக்கணும். தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் இருந்தே கூட்டணிக்கு நீங்க ஓ.கே. சொல்லுங்க. மற்றதையெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். எங்களை எதிர்த்து அரசியல் பண்ணனும்னு நினைச்சா சிக்கல் வரத்தான் செய்யும்.

ஆர் ,கே ,நகர் ..தினகரன் வெற்றி பெறுவார் என்று உளவுத்துறை ,... பணம் பணம் பணம்

ஆ.முத்துக்குமார் : அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்பதில் ஆட்டத்தைத் தொடங்கி...  ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து என்ற பிரேக்கிங் நியூஸ் மூலம் தற்காலிகமாக தனது ஆட்டத்தை மத்திய அரசு முடித்துள்ளது’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடைசி நான்கு நாள்களில் ஆர்.கே. நகர் தொகுதி நிலவரம் அடியோடு மாறிவிட்டது. ஆரம்பத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷும் முன்னணியில் இருப்பதாக வந்த கணிப்புகளை எல்லாம் கடைசி நேரத்தில் தினகரன் நொறுக்கி எடுத்துவிட்டார். ஒட்டுமொத்தமாக ஆர்.கே. நகர் தினகரன் வசம் வந்துவிட்டது. சி.ஆர்.சரஸ்வதி, தம்பிதுரை மீது தக்காளி வீசியவர்கள், தினகரன் போனபோது ஆரத்தி எடுத்தார்கள். அந்தளவுக்கு தினகரன் அணி ஆர்.கே. நகரில் பணத்தை வெள்ளமாகப் பாய விட்டிருந்தது. ‘கள நிலவரம் அடியோடு மாறி தினகரன் கை ஓங்கியதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர்தான் முக்கியக் காரணம்’ என டெல்லிக்கு உளவுத்துறை ஓலை அனுப்பியது. இதற்கிடையில் ஓ.பி.எஸ் தரப்பும்  விஜயபாஸ்கரை குறிவைத்தே குற்றச்சாட்டுக்களை கூறியது. டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த புகாரிலும் விஜயபாஸ்கர் பெயர்தான் ‘ஹைலைட்’ செய்யப்பட்டு இருந்தது. அதனால்தான், ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யும் ஆட்டத்தை விஜயபாஸ்கர் வீட்டில் இருந்தே தொடங்கினார்கள்.

டெல்லி போலீஸ் தமிழக விவசாயிகளை கொலை கேசுல உள்ளே தள்ளுவாங்களாம்... மிரட்டல்!


தமிழக விவசாயிகள் 31வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடித்துக் கொள்ளாவிட்டால் கொலை வழக்கில் உள்ளே தள்ளிவிடுவோம் என்று டெல்லி போலீசார் விவசாயிகளை மிரட்டி வருகின்றனர்.
By: Amudhavalli டெல்லி: தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 31வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று குட்டிக் கரணம் போட்டு போராடி வருகின்றனர்.
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆப்கான் மீது அமெரிக்கா பிரமாண்டமான குண்டு ஒன்றை வீசியுள்ளது 21000 கிலோ எடை?


வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இடத்தை குறிவைத்து அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு முகமை பென்டகான் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் மீது மிகப்பெரிய அணு அல்லாத குண்டை அமெரிக்கா வீசியதாகவும் பென்டகான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நாங்கார்ஹார் மாகாணத்தில் அச்சின் மாவட்டத்தில் உள்ள சுரங்கப்பாதை மீது ஜிபியு - 43பி எனப்படும் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத பேரழிவு ஏற்படுத்தும் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. நேற்று மாலை 7.32 மணியளவில் இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நடத்தப்படும் முதல் போர்முறை தாக்குதல் இது என்று பென்டகர் செய்தித்தொடர்பாளர் ஆடம் ஸ்டம்ப் கூறினார்.

மனைவியுடன் அந்தரங்கம்... நேரடியாக இணையத்தில் வெளியிட்ட தெலுங்கானா கணவன்

Hyderabad techie held for ‘live-streaming sex’ with unsuspecting wife for money
;Karthikeyan: ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் மனைவியுடன் இருக்கும் படுக்கையறை காட்சிகளை லைவாக இணையதளத்தில் வெளியிட்ட கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 33 வயது சாப்ட்வேர் என்ஜினீயர் தன்னுடைய மனைவியுடன் படுக்கையறையில் இருக்கும் ஆபாச காட்சிகளை மனைவிக்கு தெரியாமல் இணையதளம் ஒன்றில் லைவாக வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சைபர்கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வீடியோ பதிவேற்றியது கேரளாவின், திருச்சூரில் என ஐபி முகவரியை வைத்து தெரிந்து, அங்கு சென்று விசாரணை நடத்தியதில், பிடிபட்ட நபர், நான் இதை பதிவேற்ற வில்லை, வேறொரு இணையதளத்தில் இருந்த வீடியோவை நான் டவுண்லோடு செய்து, இந்த இணையதளத்தில் பதிவேற்றினேன் என தெரிவித்துள்ளார்.

வியாழன், 13 ஏப்ரல், 2017

BBC :அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு .. தமிழக விவசாயிகளின் பிரச்சனை குறித்து...

தமிழக விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தில்லியில் விவசாயிகள் போராடி வருவதை சுட்டிக்காட்டியிருக்கும் திமுக, இந்தப் பிரச்சனையை மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லையென குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் மாநிலம் முழுவதும் இந்தப் பிரச்சனைக்காக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் போராடி வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்து, மத்திய - மாநில அரசுகளிடம் கோரிக்கைகளை எடுத்துச்செல்ல அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி கூட்டவுள்ளதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் ... பன்னீர் பாஜக கூட்டணி மீது சந்தேக பார்வை ... முன்பே திட்டமிட்டதா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. அதிமுக தொண்டர்கள் பலரும் அவரது மரணம் குறித்து விடை தெரியாமல் திகைக்கின்றனர். அரசு சார்பிலும் மக்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் விளக்கம் இல்லை. இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஓபிஎஸ் அணியினரும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தொடர்ந்து சசிகலா தரப்பையே விமர்சித்து வருகின்றனர்.<">ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட சசிகலா தரப்புக்கு எதிராக ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்து ஓபிஎஸ் அணி பிரச்சாரம் செய்தது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவை பாஜகவுடன் கூட்டணி வைத்து ஓபிஎஸ் ஏன் கொன்றிருக்க கூடாது?

ஹாலிவூட் நடிகர்களை மிமிக்கிரி ... கமல் ஹாசன் ..

நடிகர் கமல்ஹாசன், அவருக்கு விருப்பமான ஹாலிவுட் நடிகர்கள் பேசி நடித்த வசனங்களை, அவர்களைப் போலவே பேசிக் காட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் சுமார் 50 ஆண்டுகளாக பயணிக்கும் நடிகர் கமல்ஹாசன். தன்னுடைய அழுத்தமான நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் உலக அளவில் அறியப்பட்டவர்.  அவர் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் தேர்வு செய்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றதில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். அவர் வெளிநாட்டு தொகுப்பாளினி ஒருவருக்கு பேட்டி அளிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் கமல்ஹாசன் தனக்கு விருப்பமான உலக நடிகர்களைப் போல பேசிக்காட்டி அசத்தினார். மார்லன் பிராண்டோ, ஜான் வேய்ன், ராபர்ட் டி நிரோ ஆகியோரைப் போல பேசிக் காட்டி அசத்தினார் கமல்.

கட்டிட இடிபாட்டுக்குள் 20 பேர் சிக்கியுள்ளனர் .. வேலூர் தனியார் பள்ளிகூட கட்டிடம் ..

பள்ளிக் கட்டிடம் இடிபாடுவேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் கட்டடம் இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக பள்ளிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்தை கட்டும் பணியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து கட்டடத் தொழிலாளர் பலர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று மதிய நேரத்தில் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. அதில் அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் இடிபாட்டில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீமைக்கருவேல மரத்தை ஏன் அழிக்க வேண்டும்?

nisaptham.com : சமீபமாக ‘சீமைக்கருவேல மரத்தை ஒழிக்க வேண்டியதில்லை’ என்று சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. கீற்று இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியானது. பிறகு விகடன் இணையதளத்தில். இந்தக் கட்டுரைகள் பிரதியெடுக்கப்பட்டு வாட்ஸப், ஃபேஸ்புக் வழியாக பல லட்சக்கணக்கானவர்களை அடைந்து பல்லாயிரக்கணக்கானவர்களின் மனதை மாற்றியிருக்கக் கூடும். சீமைக்கருவேல ஒழிப்புக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிற காரணத்தினாலேயே உடனடியாக பதில் எழுத வேண்டியதில்லை எனத் தோன்றியது. அவர்கள் சொல்வதிலும் கூட உண்மை இருக்கலாம் அல்லவா? அறிவியல் பூர்வமாக சில தகவல்களைத் திரட்டுவதற்கு முன்பாக அனுபவரீதியிலான கருத்துக்களையும் திரட்ட வேண்டியிருந்தது. கடந்த சில நாட்களாகவே விவசாயிகளிடமும் பெரியவர்களிடமும் இது குறித்துப் பேசுவதற்கு நிறைய இருந்தது. 

தமிழக விவசாயிகள் குட்டிக் கரணம் அடிக்கும் போராட்டம் (படங்கள்)

டெல்லி ஜன்தர் மந்தரில் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, 31-வது நாளான இன்று ஜன்தர் மந்தர் வீதிகளில் ‘குட்டிக் கரணம்’ அடிக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார் -

‘வசூல்ராணி’ துணைவேந்தர்! -பொறிவைத்த வருமானவரித்துறை! விரிவான ரிப்போர்ட்!

தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனர் பதவிக்காக, டாக்டர் கீதாலட்சுமி ஐந்துகோடி ரூபாய் கொடுத்து முயற்சித்துக்கொண்டிருக்கிறார் என்று ‘சொன்னா நம்பமாட்டீங்க’ பகுதியில் கடந்த 2013 செப்டம்பர் மாதம் நக்கீரனில் அம்பலப்படுத்தியிருந்தோம். அதே, டாக்டர் கீதாலட்சுமிதான் தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி இயக்குனருமாகி, தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமாகி  ‘வசூல்ராணி’ படத்தைப்பெற்று வருமானவரி ரெய்டிலும் சிக்கியிருக்கிறார். யார் இந்த கீதா லட்சுமி?
;சென்னை மருத்துவக்கல்லூரியில் மைக்ரோபயாலஜி பேராசிரியராக  பணியாற்றிக்கொ ண்டிருக்கும்போதே வைஸ் பிரின்ஸ்பல் பதவியை பிடிக்கிறார். பிறகு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஸ்பெஷல் ஆஃபிஸராக போனவர், சென்னை ஸ்டேன்லி மருத்துவனையின் டீனாக பொறுப்பேற்றார். இவரைவிட சீனியர்களாக ஐந்து டீன்கள் இருந்தும் அவர்களுக்கு மருத்துவக்கல்வி இயக்குனருக்கான சம்பளத்தைக்கொடுத்துவிட்டு… சிறப்பு அரசாணையின் மூலம் மிக மிக ஜூனியரான டாக்டர் கீதாலட்சுமி மருத்துவக்கல்வி இயக்குனர் ஆகிறார். 

பங்காரு அடிகளாரின் ரவுடி மகன் தாக்கிய மாணவன் வேறு கல்லூரியில் தேர்வு எழுத உயர்நீதிமன்றம் அனுமதி!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில்
 மேல்மருவத்தூர் கோவிலுக்கு சொந்தமான  ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 4 ஆம் ஆண்டு கெமிக்கல் என்ஜினியரிங் படித்து வந்த திருநெல்வேலி மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவர் விஜய் என்பவர் கல்லூரியல் நடக்கும் சீர்கேடுகள் குறித்து தனது முகநூலில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.இந்தப்பதிவில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஏதேனும் தவறு செய்தால் “அப்பா’’ திரைப்படத்தில் காட்டுவதைப் போன்று இருட்டு அறையில் துணிகளை அவிழ்த்து அடிப்பதாகவும், மாணவிகளையும் அதுபோன்றே நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். கல்லூரியின் தாளாளரும் பங்காரு அடிகளார் மகனுமான செந்தில்குமார் மாணவர்கள் மீது கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தி வருவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரையும் காவல்துறையினர் பணம் பெற்றுக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்ய கல்லூரியின் தாளாளர் செந்தில்குமாரிடமே அழைத்துச் செல்வதால் காவல்துறைக்கும் செல்ல முடியாமல் பலர் குமுறிக்கொண்டிருப்பதாகவும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.சாமிநாதன் :கடன் தள்ளுபடி மட்டும் போதாது : ஆதார விலையே தீர்வு!


கடன் தள்ளுபடி மட்டும் போதாது : ஆதார விலையே தீர்வு!விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதைவிட, குறைந்தபட்ச ஆதார விலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதே விவசாயிகளுக்கு நீண்டகாலப் பயன் வழங்கும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான எம்.எஸ்.சுவாமிநாதன் கூறுகையில், ‘வறட்சி உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள், தங்களது விவசாயக் கடனை தள்ளுபடி செய்யவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் இந்த குறுகியகால பிரச்னைகளைத் தீர்க்க உடனடி உதவி அவசியம். ஆனால் நீண்டகாலக் கொள்கைகள் வகுத்து விவசாயத்தை பொருளாதாரரீதியில் வலுவானதாகவும் நிலையானதாகவும் உருவாக்குவதே மிக முக்கியமாகும்.

கத்திப்பாரா மேம்பாலத்தில் விவசாயிகளுக்கு ஆதவரவாக போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குநர் கெளதமன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் வறட்சி காரணமாக 350 விவசாயிகள் உயிரிழந்தனர். இதற்கு போதிய நிவாரணமும் அரசு வழங்கவில்லை. எனவே வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் 31 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

சாமளாபுரம் ஈஸ்வரிக்கு ஒரு காது கேட்கவில்லை ... திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் இன்னும் கைது செய்யப்படிவில்லை!

அசுரத்தனமான அறையால் கன்னம் சிவந்திருக்கிறது. தோலில் பலமான சிராய்ப்பு. ஒரு பக்கக் காது கேட்கவில்லை. லத்தியால் காலில் பலமுறை அடித்ததால், சதை கிழிந்துவிட்டது. உட்கார முடியவில்லை'. நின்றுகொண்டே பேசுகிறார் ஈஸ்வரி. < மதுக்கடைகளுக்கு எதிராகத் திருப்பூரில் போராட்டம் நடத்திய சாமான்யப் பெண். நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், திருப்பூர் சாமளாபுரத்தில் புதிய மதுக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதை அறிந்த பொதுமக்கள், சோமனூர் - காரணம்பேட்டை சாலையில் செவ்வாய்க் கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர்தான் இந்த ஈஸ்வரி.
அவர் காலை முதலே ஏராளமான பெண்களுடனும், குழந்தைகளுடனும் உக்கிரமான வெயிலில் சாலையில் அமர்ந்து போராடிக் கொண்டிருந்தார்.

12 இலங்கை பெண்களின் சடலங்கள் சவுதி அரேபியா வைத்தியசாலையில்…

12 இலங்கை பெண்களின் சடலங்கள் சவுதி அரேபியா வைத்தியசாலையில்…இலங்கையை சேர்ந்த 12 பெண்களின் சடலங்கள் சவுதி அரேபியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்பெண்களாக சென்று உயிரிழந்த 12 பேரின் சடலம் சவுதி அரேபியாவின் ஒலேயா வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாக, சுதந்திரத்துக்கான பெண்கள் தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமமாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்னமும் அதிகாரிகளின் அவதானம் செலுத்தப்படவில்லை எனவும், பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான இலங்கை பெண்கள் தினமும் ஒலேய்ரா தடுப்பு மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதென அபேரத்ன தெரிவித்துள்ளார்.

மதுவுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெற்றி பாதையில் .... மாமூல் போலீசும் டாஸ்மாக் ...

Truth behind protests against TASMACஉச்ச நீதிமன்றத்தில் சமீபத்திய அதிரடி உத்தரவுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் இருந்த 6000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் மூடப்பட்டுவிட்டன. காரணம் இவை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அல்லது அவற்றுக்கு அருகாமையில் அமைந்திருந்ததுதான்.. சாலையில் வெகு எளிதில் மது கிடைப்பதால், வாகன ஓட்டிகள் வாங்கிக் குடித்துவிட்டு ஏற்படுத்தும் விபத்துகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டது.
இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். மதுவை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் பாண்டிச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் கிட்டத்தட்ட 25 மீட்டருக்கு ஒரு மதுக்கடை இருக்கும். ஆனால் இப்போது நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டதால் அங்கெல்லாம் வெறிச்சோடிவிட்டன.

ராதிகா சரத்குமார் 4.97 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு .. திரும்ப செலுத்த தயார் .

ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா நிறுவனம் 4.97 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததை சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் ஒப்புக்கொண்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான் வரி ஏய்ப்பு செய்தேன்: ராதிகா வாக்குமூலம்?நடிகர் சரத்குமார் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த அடுத்த நாள், ஏப்ரல் 7ஆம் தேதி அதிகாலை அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால், ஏப்ரல் 10ஆம் தேதி நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான சரத்குமாரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர். பின்னர் ஏப்ரல் 11ஆம் தேதி மீண்டும் சரத்குமாரின் இல்லத்தில் சோதனை நடைபெற்றதுடன், ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா தயாரிப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊழல் ராணி கீதாலட்சுமி இந்திய அரசின் மருத்துவதுறை உயர் விருது பெற்றவராவர்

கீதாலட்சுமியின் மருத்துவ சேவையைப் பாராட்டி, மருத்துவத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பி.சி.ராய் விருது வழங்கியிருக்கிறது இந்திய அரசு.
 விஜயபாஸ்கர் - கீதாலட்சுமி இணைந்த பின்னணி  இதுதான்..?
வருமான வரித்துறையின் ஒரு ரெய்டு, ஓர் இடைத்தேர்தலையே நிறுத்தியிருக்கிறது. உள்குத்து அரசியல், பழிவாங்குதல், உள்நோக்கம் கொண்டதென ரெய்டுகளுக்கு பல காரணங்களை சொன்னாலும் உண்மையில் இந்த ரெய்டில் பல்வேறு உண்மைகளைக் கண்டு கலங்கிப்போயிருக்கிறது வருமான வரித்துறை வட்டாரங்கள். சாதாரண ரெய்டுகளைப் போல இதுவும் கடந்து விடும், சில வாரங்கள், மாதங்கள் தாண்டி இந்த ரெய்டும் இதன் பின்னணியில் நடந்த சம்பவங்களும் நீர்த்துப் போய்விடுமென்று நம்பிய நேர்மையான அதிகாரிகளை புரட்டிப் போட்டிருக்கிறது ஒரு கடிதம். ஆம்... ஏப்ரல் 11இல், வருமான வரித்துறைக்கு வந்த ஒரு ரகசிய கடிதம், தமிழக மருத்துவத்துறையில் நடந்த ஊழல்களையும் விஜயபாஸ்கருக்கும் கீதாலட்சுமிக்கும் இடையே நடந்த பல்வேறு பரிமாற்றங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

புதன், 12 ஏப்ரல், 2017

பெரிய பட்ஜெட் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தயக்கம்

சமீபகாலமாக திரைப்படங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் முக்கியமானவை விநியோகிஸ்தர்களுக்கும்,  தயாரிப்பாளர்களுக்கும் இடையே உருவாகும் பிரச்னைகள்தான். படத்தை விற்பதிலும் வாங்குவதிலும் இழுபறியாக நிற்கும் பணம், வாராக்கடன் என பிரச்னைகள் தலைவிரித்து ஆடியதைத் தொடர்ந்து, நேற்று (11.04.17) நடைபெற்ற விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் மீட்டிங்கில் நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நல்ல முடிவு யாருக்கு? விநியோகஸ்தர்களுக்குத்தான்.
கடந்த 10 ஆண்டுகளாக மினிமம் கியாரண்டி முறையில் விநியோகஸ்தர்கள் படங்களை வாங்கிவருகிறார்கள். இந்த முறையில், குறிப்பிட்ட தொகைக்கு படம் விலை பேசி விநியோகம் செய்யப்பட்டுவிடும். அந்தத் தொகைக்கு மேலே லாபம் சம்பாதித்தால் அதை தயாரிப்பாளருடன் பகிர்ந்துகொள்வார்கள். இனி, இந்த முறை கடைப்பிடிக்கப்படாது என்றும் அவுட்ரைட் அல்லது முழுமையாக படத்தை வாங்கிக்கொள்ளும் வகையில்தான் படங்களை விநியோகத்துக்கு எடுக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

சாமளாபுரம் மதுக்கடையை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி உத்தரவு ... பெண்கள் பெற்ற வெற்றி !

போலீஸ் அறைந்ததால் கேட்கும்  திறனை இழந்த பெண் ஈஸ்வரி என்பவர் என்று தெரிய வந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே சாமளாபுரம் மதுக்கடையை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். சாமளாபுரம் மதுக்கடையை மூட வலியுறுத்தி நேற்று நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது.  பெண்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது தினகரன்
 திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள். இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர். அதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.