சனி, 14 மே, 2011

கை கொடுத்த கன்யாகுமரி

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குக் கன்யாகுமரி மாவட்டம், அவர்களே எதிர்பாராத வகையில் பெரிய ஆதரவு அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் நான்கு இடங்களில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடே திமுக அரசின்மீதும் அதன் செயல்பாடுகளின்மீதும் அதிருப்தி வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் கன்யாகுமரி மாவட்டத்துக்கு மட்டும் ஏன் அப்படியொரு திமுக பாசம்?
இலங்கைப் பிரச்னை இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; முந்தைய தேர்தல்களிலும் ஒரு பெரிய விஷயமாகத் தமிழகத்தில் இருக்கவில்லை. கன்யாகுமரியும் இதற்கு விலக்கல்ல. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ய விடாமல் தேர்தல் கமிஷன் மிகத் தீவிரமான நடவடிக்கை எடுத்த பின்பும் குமரியில் நான்கு இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது!
தொகுதிவாரியாக வாக்கு விவரம்:

1. கன்னியாகுமரி தொகுதி

அதிமுக : 86,903
திமுக : 69,099
பாஜக : 20,094

2. விளவங்கோடு தொகுதி

காங் : 62,898
மார்க்.கம்யூ : 39,109
பாஜக : 37,763

3. கிள்ளியூர் தொகுதி

காங் : 56,932
பாஜக : 32,446
அதிமுக : 29,920

4. குளச்சல் தொகுதி

காங் : 58,428
அதிமுக : 46,607
பாஜக : 35,778

5. நாகர்கோவில் தொகுதி

அதிமுக : 58,819
திமுக : 52,092
பாஜக : 33,623

6. பத்மனாபபுரம்

திமுக : 59,882
அதிமுக : 40,561
பாஜக : 34,491
குமரி கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள மாவட்டம். இங்கே ஜெயலலிதா கிறிஸ்துமஸ் விழாவிற்கு வந்த போதே அச்சமூகத்தினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்பட்டது. ஏனெனில் ஜெயலலிதாதான் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தவர். அப்போதே கிறிஸ்தவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துவிட்டார். பின்பு அதை விலக்கிக்கொண்டாலும், அவர்களது விழாவில் கலந்து கொண்டாலும் இன்னும் வெறுப்பு இருக்கிறது. ஜெயலலிதா இங்கே வந்தபோது அவருக்கு எதிராக வெளிப்படையாக போஸ்டர்கள் எல்லாம் அடித்து ஒட்டியிருந்தார்கள்.
என்னதான் கம்யூனிஸ்ட்கள் அதிமுகவிற்கு ஆதரவாக இருந்தாலும் பெரும்பான்மையான ஓட்டுகள் அதிமுகவிற்கு விழவில்லை; பாஜகவிற்கு கிறிஸ்தவர்கள் ஓட்டு விழ சுத்தமாக வாய்ப்பே இல்லை; ஆகவே இயல்பாக திமுக கூட்டணிக்கு விழுந்திருக்கிறது. இதை கிறிஸ்தவர்களே ஒப்புக்கொள்வார்கள்.
சரி அப்படியே நான்கு தொகுதிகள் போயின என்றாலும், ஆறில் இரண்டு [நாகர்கோவில், குமரி] தொகுதிகள் இந்துகள் அதிகம் உள்ள தொகுதிகள். இந்த இரண்டிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பத்மனாபபுரம் தொகுதியில்கூட முன்பு இந்துக்கள் அதிகம் இருந்தார்கள். ஆனால் இத்தடவை தொகுதி சீர்சிருத்தம் செய்யப்பட்டபோது இந்துக்கள் வசிக்கும் பகுதிகள் பிரிக்கப்பட்டு சமச்சீர் செய்யப்பட்டது. இதிலிருந்து ஓட்டுகள் எந்த வகையில் விழுந்திருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. அது போனதுகூட சரி; நாகர்கோயிலும் கன்யாகுமரியும் எப்படி பாஜகவைக் காலைவாரின?
காரணம் பாஜகவேதான்!
எப்படி என்றால் பாஜக ஓட்டு கேட்கும்போதே சிறந்த எதிர்க்கட்சியாக இருப்போம் என வெளிப்படையாகக் கூறியே இங்கு ஓட்டு கேட்டது. நிச்சயமாக ஆட்சிக்கு வரமாட்டோம் என்று சொல்லியே ஓட்டுக் கேட்ட ஒரு கட்சிக்கு யார் வாக்களிப்பார்கள்? இதனாலேயே, பாஜகவுக்கு வாக்களிக்கலாம் என்று நினைத்திருந்த திமுக எதிர்ப்பாளர்களான இந்து வாக்காளர்கள்கூட அதிமுகவுக்கு வாக்களித்துவிட்டார்கள். பாஜக மட்டுமல்ல; அதிமுகவும் வேண்டாம் என்று நினைத்தவர்கள் திமுக கூட்டணிக்கே வாக்களித்துவிட்டுப் போய்விட்டார்கள். தமிழகத்தில், குமரியில் மட்டுமாவது சற்றே செல்வாக்கு உள்ள கட்சி என்று சொல்லிக்கொள்ள இருந்த வாய்ப்பை பாஜக இதனாலேயே தவறவிட்டது.
அதெல்லாம்கூட சரி; மீனவர்கள் அதிகமுள்ள குமரியில், அவர்கள் ஓட்டு எப்படி திமுக கூட்டணிக்கு விழுந்தது என்பதுதான் மிச்சமுள்ள ஒரே சந்தேகம். தமிழக மீனவர்களை இலங்கை அரசிடம் இருந்து பாதுகாக்கக் கடிதம் எழுதுவதைத் தவிர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக அரசிற்குக் குமரி மாவட்டத்து மீனவர்கள் மட்டும் எப்படி வாக்களித்தார்கள்?
இங்குள்ள மக்கள் யாருக்குமே புரியாத விஷயம் இதுதான். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய எப்படியும் திமுக நடவடிக்கை எடுக்கும். அதனோடு, குமரியில் மட்டும் மீனவர் ஓட்டு எப்படித் தனக்கும் காங்கிரசுக்கும் சாதகமாக விழுந்தது என்றும் சேர்த்து ஆராய்ந்து சொன்னால் நல்லது.

எஸ்வி சேகர் வீட்டின் மீது நள்ளிரவில் தாக்குதல்!

யார் ஆட்சிக்கு வந்தாலும் 'கல்வீச்சு' தொடரும் என்பதற்கு உதாரணமாக, நடிகரும் காங்கிரஸ் பிரமுகருமான எஸ்வி சேகர் வீட்டு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கினர்.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் மைலாப்பூரில் போட்டியிட்டு எம்எல்ஏவானவர் எஸ்வி சேகர். ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் ஜெயலலிதாவின் அதிருப்திக்கு இலக்காகி, திமுக முகாமுக்கு தாவினார். ஆனால் கட்சியில் சேரவில்லை. பின்னர் பாஜக ஆதரவாளராக இருந்தவர், தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்தத்தேர்தலில் மைலாப்பூரில் மீண்டும் போட்டியிட டிக்கெட் கேட்டார். ஆனால் காங்கிரஸ் மறுத்துவிட்டது. அந்தத் தொகுதியில் தன் மனைவியை முதலில் நிறுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேவி தங்கபாலு, பின்னர் தானே வேட்பாளராக மாறினார்.

இதனால் எஸ்வி சேகருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. எஸ்வி சேகரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார் தங்கபாலு. ஆனால் அவரோ ஜிகே வாசன், இளங்கோவன் ஆதரவுடன் கட்சியில் தொடர்கிறார்.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. கேவி தங்கபாலு படுதோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், நேற்று இரவு மந்தைவெளியில் உள்ள எஸ் வி சேகர் வீடு கல்வீசித் தாக்கப்பட்டுள்ளது.

இதைச் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நான் ஜெயலலிதாவை மதிப்பவன்-எஸ்.வி.சேகர்:

இந்நிலையில் இன்று நிருபர்களை சந்தித்தார் சேகர். அவரது பேட்டி..

கேள்வி:  தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த குஷ்பு இது திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் தோல்வி என்று கூறியுள்ளாரே?

பதில்: குஷ்பு அரசியலுக்கு புதுசு. அனுபவம் இல்லாதவர், மக்கள் தீர்ப்பை எப்போதும் கெளரவமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி: சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் இப்போது அதிமுகவில் இல்லையே என்ற வருத்தம் உள்ளதா?

பதில்: நான் எப்போதும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் திமுக தலைவர் கருணாநிதியையும் மதிப்பவன். 2 பேருமே எனக்கு நண்பர்கள். டெல்லியில் உள்ள தலைவர்கள் அரசியல் பகையை மறந்து நண்பர்களாக இருப்பது போல, நானும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதிமுகவில் இருந்து நான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன். தற்போது அதற்காக வருத்தப்படவில்லை என்றார்.
சென்னை: நாளை மறுநாள் (16ம் தேதி ) வரும் திங்கட்கிழமை வாரத்தின் முதல்நாளில் , அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., முதல்வராக பதவியேற்கிறார். ராகு - கேது பெயரும் நேரத்தில் ஜெ., பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்றுள்ள அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மதியம் ஜெ., தலைமையில் நடப்பதாக இருந்தது. ஆனால் இக்கூட்டம் நாளை ( ஞாயிற்றுக்கிழமை ) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கென தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.

நாளை காலை 9. 30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் ஜெ., தலைமையில் எம்.எல்.ஏ., க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் ஜெ., அ.தி.மு.க., சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்படுவார் பின்னர் தொடர்ந்து கவர்னரை சந்தித்து பேசுவார். இதனை தொடர்ந்து அவர் முதல்வராக பதவியேற்க வருமாறு அழைப்பு கொடுப்பார்.

பல்கலை., நூற்றாண்டு மண்டபத்தில் பதவி‌யேற்பு விழா : வரும் திங்கட்கிழமை காலை சென்னை பல்கலை., நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் விழாவில் முதல்வராக ஜெ., பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க குஜராத் முதல்வர் உள்பட முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலையில் 9. 55 க்கு ராகு, கேது பெயர்ச்சி இருப்பதால் இந்நாளில் அவர் பதவியேற்க முடிவு செய்திருக்கலாம் என அ.தி.மு.க.,வின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது .


சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ‌ஜெயலலிதா, நாளை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதாக கூறினார்.

தலைவர்கள் சிலைகளுக்கு ஜெ., மரியாதை செலுத்தினார் : முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெ., இன்று மதியம் கட்சி தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர், மவுண்ட்ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலையிட்டு, தொடர்ந்து மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி மற்றும் அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 198 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க., மட்டும் போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 147ல் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
தமிழகத்தின், 14வது சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடந்த தேர்தலுக்கான, ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை நடந்தது. ஆரம்பம் முதல், அ.தி.மு.க., கூட்டணியே பெரும்பாலான இடங் களில் முன்னணியில் இருந்தது.பெரும்பாலான, அ.தி.மு.க., கூட்டணியினர் வெற்றி முகத்தில் இருந்தனர். தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். அதேபோல, தி.மு.க., தலைமையின் குடும்ப சிபாரிசு மூலம் சீட் வாங்கியவர்களும் தோல்வியடைந்தனர்.அ.தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 148ல் அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற, 118 எம்.எல்.ஏ.,க்களே தேவை என்பதால், அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைப்பது மிக எளிதானது.

தே.மு.தி.க., போட்டியிட்ட, 41 தொகுதிகளில், 29ல் வெற்றி பெற்றது. இதன் மூலம், பிரதான எதிர்க்கட்சி வாய்ப்பு, தி.மு.க.,வுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வே பிரதான எதிர்க்கட்சி ஆகிறது.அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை போன்ற கட்சிகளும், பிரதான கட்சிகளை எதிர்த்து, தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா, திருவாரூரில் கருணாநிதி, ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் அமோக வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியினர், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டு முன்பும், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பும் குவிந்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அதே நேரத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், போயஸ் கார்டனுக்கு படையெடுத்தனர்.

அ.தி.மு.க.,வின் வெற்றி உறுதியானது தெரிந்ததும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, கவர்னருக்கு, கருணாநிதி அனுப்பி வைத்தார்; அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
Arockia Churchill - Chennai,இந்தியா
2011-05-14 14:01:36 IST Report Abuse
இது ஒன்றும் ஜெயலலிதாவுக்கோ அல்லது அதிமுக வுக்கோ கிடைத்த வெற்றி அல்ல. மாற்றம் வேண்டும் என்பதற்காக தமிழக மக்கள் வேறு வழி இல்லாமல் உங்களை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள். ( திமுக அல்லது அதிமுக ). கருணாநிதி மற்றும் திமுக வுக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருந்ததனர். கருணாநிதி நிறைய நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் அவற்றை ஒழுங்காக செயல்படுத்தவில்லை. அனைத்து திட்டங்களிலும் ஊழல். அனைத்து துறைகளிலும் அவரின் குடும்ப ஆதிக்கம். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. ஆனால் கருணாநிதி அரசியல் நாகரீகம் மிக்கவர். ஜெயலலிதா வைகோ வை அவமானப்படுத்தி வெளியேற்றினார், கூட்டணி கட்சி தலைவர்களை மதிக்காமல் செயல்பட்டார். ஜெயலலிதாவிடம் திறமை இருந்தால் மட்டும் போதாது, மற்றவர்களை மதிக்கும் பண்பும், தான் என்ற ஆணவம், அகம்பாவம் ஆகியவற்றை விட்டொழித்து நல்ல தலைவருக்குரிய பண்புகளும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரது ஆட்சி சிறப்பானதாக இருக்கும். ஆனால் ஜெயலலிதாவால் அவரது குணங்களை மாற்றிக்கொள்ள இயலாது. எது எப்படியோ, தமிழக மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டால் நல்லது. வைகோ ஒரு நல்ல தலைவர், ஆனால் அவருக்கு அரசியல் சூது வாது தெரியவில்லை, அவரை ஏமாற்றி விடுகின்றனர். இனிமேலாவது அவர் மதிமுக வை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும். அடுத்த சட்டபேரவை தேர்தலிலாவது தமிழ் நாட்டுக்கு ஒரு நல்ல தலைவர் கிடைப்பாரா?
Raj - Detroit,யூ.எஸ்.ஏ
2011-05-14 12:32:33 IST Report Abuse
ஆரம்பிச்சிடாங்க. அம்மா காலில் விழுந்து தொழிலை தொடங்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாடு மிஞ்சுமா என்று 4 வருடங்களுக்கு பிறகு பார்க்கலாம். நாங்களும் திமுகவுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிப்பார்கள்.
ashokan - thanjavur,இந்தியா
2011-05-14 12:08:26 IST Report Abuse
ராஜீவ் காந்தி இறந்தாலும் பிரபாகரன் இறந்தாலும் பாதிப்பு தி மு க வுக்குதான் தமிழா தமிழா தமிழா
KIm - seoul,தென் கொரியா
2011-05-14 07:26:31 IST Report Abuse
அவனுக திமுக 10 வருஷம் கொள்ளை, இந்தம்மா அதிமுக ஒரு 5 வருஷம் மீண்டும் கொள்ளை அடிக்கணும். அட விடுங்கப்பா, but people watch jaya and sasi !hope not like before adopted son Marriage
Ariharan - Nellai,இந்தியா
2011-05-14 06:14:17 IST Report Abuse
வழக்கம் போல உங்கள் அதிகாரத்தை காட்டி உங்கள் எதிரிகளை அடக்குவதில் காட்டாதீர்கள்.... திமுக ஆட்சியில் நடந்த தவறுகளை சரி செய்யுங்கள்... மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.. அவர்களின் வாழ்வாதாரம் உயர வழி வகை செய்யுங்கள்... திமுக அரசை குறை கூறுவதை விட்டு விட்டு பல தொலை நோக்கு திட்டங்களை தாருங்கள்.. உதாரணம் சட்டம் ஒழுங்கு, மின்சாரம், விலைவாசி,மணல் கொள்ளை, தமிழக மக்களுக்கு வேண்டிய பாசன நீர், இலங்கை தமிழர் பிரச்சனை, இன்னும் பல இதெற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.. மொத்தத்தில் உங்களிடம் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கிறோம்....
Kumar K - Chennai,இந்தியா
2011-05-14 04:49:44 IST Report Abuse
பேய விட நாயே நல்லதுன்னு முடிவேடுதுருக்கொமுங்கோ.. இருக்ற தொழில்துறை எல்லாத்தையும் ஒரு குடும்பத்து வாரிசுகள் மட்டும் கபளீகரம் செய்ய விட்டுட்டு வருங்காலத்துல ஜென்மத்துக்கும் மத்த எல்லாரும் ரெண்டாந்தர முதலாளிகளாகவே இருக்கறத விட சசிகலா & குரூப் பெட்டர்னு தோணுச்சு.. முடிவெடுத்துட்டோம்.. என்ன செய்ய.. இந்த பேயவும் நாயவும் விட்டா எங்களுக்கு வேற நம்பிக்கையான தலைமை இல்லையே..
Santhosh Gopal - Chennai,இந்தியா
2011-05-14 01:19:26 IST Report Abuse
அதிகமான இடங்களில் ADMK அடிஆட்கள் துணையுடன் வாக்கு எண்ணிக்கையின் data entry யில் குளறுபடி செய்து அதிமுக அனைத்து இடங்களிலும் வென்றிருக்கிறது..... தேர்தல் ஆணையமும் இதற்கு துணை போயிருப்பதுதான் மிகவும் கொடுமை மற்றும் வெட்ககேடானது.... இதற்கு உடனே மத்திய அரசு சிபிஐ விசாரணை அமைத்து வாக்கு எண்ணிக்கையை திரும்பவும் முறையாக நடத்தவும்.... இதுமாதிரில்லாம்(ஜெயலலிதா தோற்றிருந்தால் இப்படி தான் புலம்பி இருப்பார்) சொல்லாமல் மக்கள் தீர்ப்பை கண்ணியமாக எற்றுகொண்டதற்கு அவரை பாராட்டியே ஆக வேண்டும்.
Nathan - Manama,பஹ்ரைன்
2011-05-14 14:07:11 IST Report Abuse
திமுக அரசு போகவேண்டியதுதான். ஆனால் இனிமேல் என்னென்ன நடக்கும். இன்னும் இரண்டு வாரத்திற்குள் விஜயகாந்த் ஜே வினால் அவமானப்படுத்த படுவார்., அவர் உண்மையான எதிர் கட்சியாக செயல் பட தொடங்குவார். காம்ரேட்களுக்கும் அதே கதி தான். ஏனென்றால் ஜே காங்கிரஸ் பக்கம் இணைவார். அமைச்சர்கள் , எம் எல் ஏக்கள் எல்லோரும் ஜே காலில் விழுவார்கள், பழ கருப்பய்யா தவிர. ஜே வின் பிறவிக்குணம் மாறாது. ஆனால் திமுக ஆட்சியை விட சற்று பெட்டெர் ஆக இருக்கும்....
 
 

13 மாணவர்கள் கடுமையாகக் எச்சரிக்கப்பட்டு யாழ். நீதிமன்றத்தால் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ மாணவர்களிடையே கடந்த 7 ஆம் திகதி நடந்த கைகலப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 மாணவர்கள் கடுமையாகக் எச்சரிக்கப்பட்டு யாழ். நீதிமன்றத்தால் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
யாழ்.பதில் நீதிவான் மு. திரு நாவுக்கரசு முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு மாணவர்களுடன் மேலும் 11 மாணவர்கள் நேற்று பொலிஸாரால் ஆஜர்செய்யப்பட்டனர். நேற்றைய விசாரணையில் யாழ். பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். வேல்நம்பி மாணவ ஆலோசகர் ஏ.என். சரவணபவன், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்லலித் பிரேமரத்ன ,பிரதான பொலிஸ் அதிகாரி சமன்சி கேரா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
வழக்கை விசாரித்த பதில் நீதிவான் மு. திருநாவுக்கரசு மாணவர்களுக்கு எச்சரித்து அறிவுரை வழங்குகையில் தெரிவித்ததாவது:
பல்கலை மாணவர்கள் பொறுப்புடன் கல்வி கற்று சமூகத்துக்கு உதவுபவர்களாக மிளிரவேண்டும். அதை விடுத்து அடி, தடி கலாட்டா, கோஷ்டி மோதல் என்று அநாகரிகமற்ற முறையில் நடந்து யாழ். பல்கலைக்கழகத்தின் தரத்தையும், நம்பிக்கையையும் அழித்து விடும் நடவடிக்கையில் ஈடுபடாதீர்கள்.யாழ்ப்பாணத்தின் பாரம்பரியங்கள யும், கலாசார விழுமியங்களைக் காக்க வேண்டியவர்களில் யாழ். பல்கலை மாணவர்களுக்கும் முக்கியமான பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.இனிவரும் காலங்களில் இத்தகைய அநாகரிகமான செயல்களில் நீங்கள் ஈட படு வீர்களானால் சுலபமான முறையில் விடுதலை செய்யப்படமாட்டீர்கள், விசாரணைகள் முடியும் காலம் வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவீர்கள் என்று தெரிவித்தார். ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு மாணவர்கள யும் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட 11 மாணவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கைகலப்பின் பின்னர் யாழ். பல் கலைக்கழக வளாகத்தில் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள் ஆகியவற்றை உரியவர்களிடம் ஆவணப் பரிசீலனை செய்து ஒப்படைக்குமாறும் பொலிஸாருக்கு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

செம்மொழி வளாகம் காலி செய்யப்படுகிறது

தமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயருகிறது


 அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்காலத்தில் புதிய கட்டடத்திற்கு மாறிய தமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே இடம் பெயருகிறது. மேலும் தலைமைச் செயலகமும் பழைய கட்டடத்திற்கே இடம் மாறுகிறது.

புதிய கட்டடத்திற்கு தமிழக சட்டசபையை திமுக அரசு மாற்றியதை அப்போதே கண்டித்திருந்தார் ஜெயலலிதா. அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால் கோட்டையில்தான் ஆட்சி அமைப்பேன், அங்குதான் சட்டசபை செயல்படும் எனக் கூறியிருந்தார் ஜெயலலிதா.

இந்த நிலையில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதால், தலைமைச் செயலகமும், சட்டசபையும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே செல்கிறது.

இதையடுத்து தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் திமுக அரசால் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனமாக மாற்றப்பட்ட சட்டசபை வளாகம் காலி செய்யப்படுகிறது. அங்குள்ள நூலகமும் மாற்றப்படுகிறது. அந்த இடத்தில் மீண்டும் சட்டசபை செயல்படும் என்று தெரிகிறது.

அதேபோல முதல்வர் அறை, அமைச்சர்கள் அறைகள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்படுகின்றன. பர்னிச்சர்கள் மாற்றப்படுகின்றன. ஏசிகள் மாற்றப்படுகின்றன. புதுப்பித்தல் வேலைகள் படு தீவிரமாக நடந்து வருகின்றன.

புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக் கட்டடம் என்னவாகப் போகிறது என்பது

அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண்

ராமநாதபுரம்: அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது நாக்கை அறுத்து சாமிக்கு காணிக்கையாக்கியுள்ளார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரிதா என்ற பெண்மணி.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்தவர் சரிதா (28). தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என, வீரபாண்டி கவுமாரியம்மனிடம் வேண்டிக் கொண்டாராம். தனது வேண்டுதல் நிறைவேறினால் , தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டராம்.இந்த நிலையில், வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழாவிற்கு வந்த சரிதா, சாமி கும்பிடச் சென்ற போது, தனது நாக்கை வெட்டி சாமிக்கு காணிக்கையாக்கியுள்ளார்.

அப்போது, அரவது வாயில் இருந்து ரத்தம் கொட்டியதால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள், அவரை திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.பின்பு, திமுக ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சரிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பல கழக கண்மணிகள் தங்கள் தங்கள் அவயவங்களை ஜெயா அம்மாவுக்கு நேர்த்தி காணிக்கையாக்கும் காட்டுமிராண்டித்தனங்கள் இனி அதிக அளவில் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மண்சோறு உண்ணல் அங்கப்பிரதட்சணம் செய்தல் அழகு குத்தல் காவடி எடுத்தல் காலில் விழுந்தது விழுந்தது வணங்குதல் போன்ற அடிமைத்தன கண்றாவிகளை எல்லாம் உலகம் இனி கண்டு கழிக்க வேண்டி இருக்கிறது.
தமிழனின் அடிமைத்தனம் கண்கொள்ளாக்காட்சியாக மேடை ஏறப்போகிறது.

தென் மாவட்டங்களை மொத்தமாக பறிகொடுத்த திமுக கூட்டணி-அதிர்ச்சியில் மு.க. அழகிரி!

மதுரை: மத்தி்ய அமைச்சர் மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள தென் மாவட்டங்களை மொத்தமாக திமுக பறிகொடுத்தது மட்டுமல்லாமல் அந்த மாவட்டங்களில் போட்டியிட்ட அமைச்சர்களும், கூட்டணிக் கட்சியினரும், சபாநாயகரும் படுதோல்வியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து தனிப்பெருபான்மையின்றி ஆட்சியை கைப்பற்றியது. மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் இல்லாமல் மைனாரிட்டி அரசாக இருந்து பல்வேறு, சலுகைகள் திட்டங்களை கொண்டு வந்தாலும் இடை இடையே பல குழப்பங்கள், அதிமுக எம்எல்ஏக்கள், மதிமுக எம்எல்ஏக்கள் கட்சித் தாவல், இடைத்தேர்தல் இப்படி குழப்ப சூழ்நிலைகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும், வாதத்திறமையால் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெறுவதை போல் திமுக அணி தன்னை ஒரு வலுவான ஆளும் கட்சியாக பல்வேறு தருணங்களில் காட்டி கொண்டு அதிகாரத்தை பலப்படுத்தி மத்திய அரசையை ஆட்டி படைத்தது.

காரணம் பிரதான எதிர்கட்சியான அதிமுக வலுவிழந்து விட்டதாக ஒரு கற்பனை காட்சி சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்த வலுவிழந்துள்ளதாக நிலைப்பாடுதான் தமிழகத்திலுள்ள திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை மக்களிடமிருந்து வேறுபடுத்திட என்பதை விட விலகிட வழி வகுத்தது.

திமுக அமைச்சர்களாகட்டும், சபாநாயகராட்டும், எம்எல்ஏக்களாகட்டும் யாரையும் மக்கள் நெருங்க முடியாத நிலைக்கு ஆட்படுத்தியது.

இந்த விலகி நின்ற செயல்தான் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள திமுக அமைச்சர்கள், சபாநாயகர்கள், எம்எல்ஏக்கள் தோல்வியை நோக்கி சுனாமி பேரலையால் அடித்து ஒதுக்கியது எனலாம்.

2006ல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமசந்திரன், 15 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் கீதாஜூவன், 7 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் பூங்கோதை, 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், 11 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆகியோர் பெரும் தோல்வியை சந்தித்தனர். எம்எல்ஏக்களில் காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ், கருப்பசாமி பாண்டியன், வசந்தகுமார், உள்ளிட்டோர் அமைச்சர்களாகவே தங்களை கருதி கொண்டு தனி ஆவர்த்தனம் செய்ததும் தொண்டர்களையும், மக்களையும் மதிக்காத நிலைப்பாடு ஒரு புறம் இருந்தாலும் கருப்பசாமி பாண்டியன், மாலைராஜா, ஆவுடையப்பன் உள்ளிட்டோர் மணல் ராஜாங்கத்தில் கொடிகட்டி பறந்ததும் ஒரு பெரும் காரணம் இவர்கள் தோல்விக்கு உண்டு.

கடந்த தேர்தலில் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தேற்கடித்து வெற்றி பெற்ற அமைச்சரான மைதீன்கானின் வெற்றி இம்முறை வெறும் 605 வாக்குகளில் தான் நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் பூங்கோதை தோல்வியும் 279 வித்தியாசத்தில்தான். அதிமுக அணியில் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையை தவிர அனைத்து தொகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தவிர அனைத்து தொகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் 2 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றியை தட்டி பறித்துள்ளது.

தென் மாவட்டங்களிலுள்ள 58 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அழகிரி அசைமெண்டின்படி திருமங்கலம் பார்மூலாப்படி வெற்றியை தக்க வைக்கலாம் என கருதி காய நகர்த்திய திமுகவுக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. 47 தொகுதிகளை இழந்துள்ளது திமுக. ஒட்டு மொத்ததில் தென் மாவட்டத்தில் திமுக அணி தோல்வியை தழுவியதற்கு காரணம் மணல் பிரச்சனை, மின் தட்டுபாடு, வேலைவாய்ப்பின்மை, எம்எல்ஏக்கள் மக்களோடு நெருங்காமல் ஒதுங்கியது, கூடவே ஸ்பெக்டரம் மோசடி போன்றவை மக்களை வெறுப்படைய செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மொத்ததில் எதிர்பார்க்காத வெற்றியை அதிமுகவும், எதிர்பார்க்காத தோல்வியை திமுகவும் தென்மாவட்டத்தில் சந்தித்துள்ளது.

ஒசாமாவின் அபோத்தாபாத்தில் ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: அல் கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் வசித்து வந்த பாகிஸ்தானின் அபோத்தாபாத் வீட்டிலிருந்து ஆபாச படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க கமாண்டோப் படையினர் பின்லேடனை வேட்டையாடிய பின்னர் இந்த ஆபாச வீடியோக்களை கண்டெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் நவீன முறையில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆபாச படங்கள் இருந்ததாகவும், பெருமளவிலான வீடியோக்கள் சிக்கியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வீட்டில் எங்கு இந்த ஆபாச வீடியோக்கள் இருந்தது, அவற்றை யார் பார்த்து வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை. இருப்பினும் இவற்றை பின்லேடன் வைத்திருந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.

பின்லேடன் வசித்து வந்த வீட்டில் இணையததள இணைப்பும், தொலைபேசி இணைப்பும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். இந்த நிலையில் இந்த வீடியோ படங்கள் இங்கு எப்படி வந்தன என்பது குறித்துத் தெரியவில்லை.

அதேசமயம், பின்லேடன் வீட்டில் டிவி இருந்ததும், அதை அவர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டிருந்ததும் நினைவிருக்கலாம். எனவே இந்த ஆபாசப் படங்களை பின்லேடன் பார்த்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பின்லேடன் மனைவிகளிடம் விசாரணை

இதற்கிடையே, பின்லேடனின் மனைவிகளிடம் அமெரிக்க சிஐஏ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்லேடனை வேட்டையாடிய அமெரிக்கப் படையினர், அவருடன் தங்கியிருந்த மூன்று மனைவியரையும் அங்கேயே விட்டு விட்டுப் போய் விட்டனர். அவர்கள் தற்போது பாகிஸ்தான் படையினர் வசம் உள்ளனர்.

அவர்களை தங்களிடம் ஒப்படைக்க அமெரிக்கா கோரியது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் மறுத்து விட்டது. மாறாக, விசாரணை நடத்திக் கொள்ள அனுமதிப்பதாக அது கூறியது.

இதையடுத்து அமெரிக்க சிஐஏ குழுவினர் இஸ்லாமாபாத் சென்று பின்லேடன் மனைவியரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவினரும் உடன் இருந்தனர்.
English summary
A stash of pornography was found in the hideout of Osama bin Laden by the US commandos who killed him, current and former US officials said. The pornography recovered in bin Laden's compound in Abbottabad consists of modern, electronically recorded video and is fairly extensive, according to the officials. The officials said they were not yet sure precisely where in the compound the pornography was discovered or who had been viewing it. Specifically, they did not know if bin Laden himself had acquired or viewed the materials.
 

K.Veeramany இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு

சென்னை: கருணாநிதிக்கு, “ஓய்வு” என்பது சட்டசபை, ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள், அதிர்ச்சி தரத்தக்கவை வெற்றி பெற்ற அணிக்கும், தோல்வியுற்ற அணியினரான அனைவருக்கும். வெற்றி பெற்ற அ.தி.மு.க. அணியினர்கூட இவ்வளவு சாதகமான அலை போன்ற முடிவைப் பெறுவோம் என்று எண்ணவில்லை. அங்கே இடம் பெற்ற கூட்டணிக் கட்சியினர் பலரும் இதை நேற்று குறிப்பிட்டுள்ளார்கள்!

இந்தத் தோல்வி, தி.மு.க. அரசு சொன்னதையெல்லாம் செய்த அரசு, மேலும் சொல்லாததையும் கூடுதலாகச் செய்த அரசு என்பதால் அதற்குக் கிடைத்த வாக்காளர் பரிசா என்றால், “ஆம்” என்று ஒப்புக் கொள்ளுவதில் உண்மை பேசுவோர் எவரும் வெட்கப்படத் தேவையில்லை.

ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று! இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு என்று கேட்கின்றனர் பல நண்பர்கள்.

பெரியார் ‘குடிஅரசில்’ எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

“நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்”

இவ்வரிகள் மக்களின் இயல்புகளைக் காட்டும் கண்ணாடிகள் அல்லவா?

"இவ்வளவு பெரிய தோல்வி கண்டும் சிறிதும் கலங்காமல், மனந் தளராமல், “மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்று சிரித்துக் கொண்டே கருணாநிதி சொன்னார் நேற்று! எந்த நிலையிலும் எதிர்நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்!

1967 இல் காமராசர்கூட தோற்ற நிலையில், “சாதனைகளை அதிகமாகச் செய்தோம் என்றாலும் நம்மைத் தோற்கடித்தார்கள் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்” என்றார்!

ஏன் இப்படிப்பட்ட தோல்வி தி.மு.க. கூட்டணிக்கு என்று அலசி ஆராய்வதற்கு போதிய அவகாசம் உள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்றுமே கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல கூட்டணி ஆட்சியையோ, தொங்கு சட்டசபையையோ விரும்பியதில்லை என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.வுக்கு அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு தனித்த மெஜாரிட்டியைத் தந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது!

புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையெல்லாம் செய்து முடிப்பதாகக் கூறியுள்ளார். அதனை எதிர்பார்க்க, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகத்தில் அதோடு அதை வற்புறுத்தும் உரிமையும் உண்டு எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?

நல்ல சாதனைக்கு பிறகும் தோல்விகளை சந்திப்பது திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி காலம் முதல் ஜனநாயகத்தில் இது முதல் தடவை அல்ல. புதிதும் அல்ல.

திராவிடர் இனத்தின் தலைவர் கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.

தி.மு.க.விற்குப் பல களங்கள் உண்டே!

கருணாநிதிக்கு, “ஓய்வு” என்பது சட்டசபை, ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக!

திராவிடர் தமிழர் இனமானப் பிரச்சினைகள் என்ற பணிகள், ஈழத் தமிழர் வாழ்வுரிமை விடியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உட்பட பகுத்தறிவுப் பிரச்சாரம் வரை எத்தனையோ களங்கள் காத்திருக்கின்றன தி.மு.க.விற்கு அரசியல் களத்திற்கும் அப்பால்! இவற்றில் சாதிக்கப்பட வேண்டியவை நிரம்பவே உண்டு அரசியலோடு வலிமையாக அந்தப் பணிகளும் தொடரப்பட வேண்டும்.

வெறும் பதவி அரசியலுக்காகத் துவங்கப்பட்டதல்ல தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட வேண்டும். மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பாக இதனைக் கருதி தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

சமுதாயப் புரட்சி இலட்சியங்களை செயல்படுத்த ஆட்சியைக் கருவியாக்கிடத்தான் அரசியல் கட்சியானோம் என்பதுதானே அண்ணா தந்த விளக்கம்?

அரசியல் நாகரீகப்படி நமது வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார்.
English summary
There are many fields are awaiting for DMK leader Karunanidhi. He said that this is not the end for DMK and Karunanidhi. There are many fields for the party and Karunanidhi. He also wished ADMK and Jayalalitha for their victory.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் இலங்கையில் உள்ள அசையாச் சொத்துக்கள் அரசினால் சுவீகரிக்கப்படும் என்ற செய்தியானது தவறானது!

வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் இலங்கையில் உள்ள அசையா சொத்துக்கள் இலங்கை அரசினால் விரைவில் பொறுப்பேற்கப்படும் என்று சாரப்பட சில வெளிநாட்டு தமிழ் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை. ஆதாரம் எதுவும் அற்றவை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.அங்கஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்த சில சக்திகள் முயலுகின்றன. அது குறித்து தமிழ் மக்கள் அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தம் முடிவுற்ற இந்த வேளையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எமது நாட்டிற்கு வந்து முதலீடுகளை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முன் வருமாறு கோரியிருந்தார்.
இந்த கால கட்டத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் எமது தமிழர்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கும் கைங்கரியத்தில் சில சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. எனவே வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் எந்தக் குழப்பமும் அடைய தேவையில்லை.
குறிப்பாக வெளிநாடுகளில் வசிப்பவர்களின் குடா நாட்டிலுள்ள அசையாச் சொத்துக்களுக்கு சட்டபூர்வமற்ற பலர் உரிமை கோரி வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனை நேர் சீர் செய்யும் வகையில் வெளிநாட்டில் உள்ளோர் தங்களின் உடைமைகளுக்கு உரிய பொறுப்பாளர்களை சட்டரீதியாக ஒழுங்கமைத்துக்கொள்ளுமாறு நான் இந்த வேளையில் கேட்டுக்கொள்கின்றேன்.
சட்டரீதியான பொறுப்பாளர்களிடம் குடா நாட்டு காணிகள் ஒப்படைக்கப்படுவதையே அங்குள்ள இராணுவத்தினரும் விரும்புகின்றனர் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவிடம் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனவே குடா நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த 430,000 பேரின் சொத்துக்கள் அரச உடைமையாக்கப்படுவது குறித்து வெளிநாட்டுத் தமிழ் இணையத்தளங்களில் அண்மையில் வெளியான செய்தி தவறானது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் குடா நாட்டிற்கு வந்து தமது அசையா சொத்துக்களை பார்வையிட்டு உரிய பொறுப்பாளரிடம் சட்டரீதியாக ஒழுங்கமைத்து கொள்ளுமாறு இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

Party position in Tamil Nadu and other statsTamil Nadu Result Status
Status Known For 234 out of 234 Constituencies
Party
Won
Leading
Total
Communist Party of India
8
1
9
Communist Party of India (Marxist)
7
3
10
Indian National Congress
5
0
5
All India Anna Dravida Munnetra Kazhagam
132
19
151
All India Forward Bloc
1
0
1
Dravida Munnetra Kazhagam
16
6
22
Pattali Makkal Katchi
2
1
3
Others
27
6
33
Puducherry Result Status
Status Known For 30 out of 30 Constituencies
Party
Won
Leading
Total
Indian National Congress
7
0
7
All India Anna Dravida Munnetra Kazhagam
5
0
5
Dravida Munnetra Kazhagam
2
0
2
Puducherry NR Congress
16
0
16
Kerala Result Status
Status Known For 140 out of 140 Constituencies
Party
Won
Leading
Total
Communist Party of India
13
0
13
Communist Party of India (Marxist)
45
0
45
Indian National Congress
38
0
38
Nationalist Congress Party
2
0
2
Janata Dal (Secular)
4
0
4
Kerala Congress (M)
9
0
9
Muslim League Kerala State Committee
20
0
20
Revolutionary Socialist Party
2
0
2
Others
7
0
7
Assam Result Status
Status Known For 126 out of 126 Constituencies
Party
Won
Leading
Total
Bharatiya Janata Party
5
0
5
Indian National Congress
76
2
78
All India Trinamool Congress
1
0
1
All India United Democratic Front
18
0
18
Asom Gana Parishad
9
1
10
Bodoland Peoples Front
9
3
12
Others
2
0
2
West Bengal Result Status
Status Known For 294 out of 294 Constituencies
Party
Won
Leading
Total
Communist Party of India
2
0
2
Communist Party of India (Marxist)
39
1
40
Indian National Congress
42
0
42
All India Forward Bloc
11
0
11
All India Trinamool Congress
178
6
184
Revolutionary Socialist Party
7
0
7
Samajwadi Party
1
0
1
Others
7
0
7
மே 15ஆம் திகதி பதவியேற்பு விழா
3ஆவது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 147 இடங்களுக்கும் அதிகமாகப் பிடித்து தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்வரும் 15ஆம் திகதி முதல்வராகப் பதவியேற்கிறார். அவரது பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த மூத்த பொலிஸ் அதிகாரிகள் இன்று ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன்போது 15ஆம் திகதி ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இதையடுத்து அன்றைய தினம் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஜெயலலிதா பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவருக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் சிலரும் பதவியேற்பர் என்று தெரிகிறது. மே 16ம் திகதி தற்காலிக சபாநாயகர் தேர்வும், அன்றைய தினமே எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பும் நடக்கும் என்று தெரிகிறது.
வைகாசி 13, 2011
தமிழ் நாடு தேர்தல் முடிவுகள்

இது வரை வெளிவந்த செய்திகளின் படி அதிமுக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை ( 170 இடங்களுக்கு மேல்) வெல்லக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அறிய முடிகின்றது. இதே வேளை திமுக கூட்டணி 50 இற்கும் உள்பட்ட தொகுதிகளை மாத்திரம் பெற்று படு தோல்வியடையும் நிலையில் உள்ளதாக அறிய முடிகின்றது. இதே வேளை பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அதிமுக கூட்டணியை தோற்கடிக்கும் நிலையில் உள்ளதாக அறிய முடிகின்றது. கேரளா, மேற்க வங்கத்தில் இடது சாரிகளுக்கு பின்டைவு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.