சனி, 18 ஜூன், 2011

தாத்தா சன் டி.வி.யையும் தி.மு.க.வையும் பிரிப்பதற்கு பார்ப்பனர்கள் சதி

சமீபத்தில் கலைஞரை சந்தித்த தயாநிதி, "தாத்தா சன் டி.வி.யையும் தி.மு.க.வையும் பிரிப்பதற்கு பார்ப்பனர்கள் சதி செய்கிறார்கள் . அதில் சிக்கிக்கொள்ளக் கூடாது' என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கலைஞர், "ஆட்சி யிலிருந்தப்பவே அரசுக்கு எதிராகத் தானே பேப்பரிலும் சேனலிலும் செய்தி வந்துக்கிட்டிருந்தது. இதில் பிரிக்கிறதுக்கு யார் சதி செய்யப்போறா?' என்று கேட்டிருக்கிறார்.

கலைஞரிடம் தயாநிதி, "என்னைத் தாக்குவது மூலமா உங்களைத் தாக்குவதா அவங்க நினைக்கிறாங்க தாத்தா. இதையெல்லாம் அவங்க திட்டமிட்டே தொடர்ந்து செய்துகிட்டிருக்காங்க. நீங்க கவனிச்சிக்கிட்டிருப்பீங்க' என்று சொல்ல, "நானும் கவனிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன்' என்ற கலைஞர், "2ஜி விவகாரம் ஆரம்பிச்சப்ப ராசா என்ன சொன்னார்? தயாநிதி என்ன செஞ்சாரோ அதைத்தான் நான் செய்தேன்னு சொன்னார். அவரையும் எதிர்த்துதான் நீங்களும் நடந்துக்கிட்டீங்க. இப்ப அவர் ஜெயிலில் இருக்கிறார். என்ன செய்ய முடியும்? இப்ப நான் யாரையும் சந்திக்க முடியாது. எதையும் பேசுறதா இல்லை. நீங்களே பார்த்துக்குங்க' என்று தயாநிதியிடம் சொல்லிவிட்டாராம்.

டெல்லியில் பிரதமர் அலுவலக வட்டாரத்திலும் தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பான பேச்சுகளே அதிகளவில் நடை பெறுகின்றன. சி.பி.ஐ.யிடம் பல ஆதா ரங்களைக் கேட்டு வாங்கி, பிரதமர் அவற்றைப் பார்வையிட்டிருக்கிறார் என்கிறது அவரது வட்டாரம். தொலைத்தொடர்புத் துறைக்கு தயாநிதி அமைச்சராக இருந்தபோது நடந்த வில்லங்கங்கள் பற்றிய பல விவரங்கள் அவருக்குத் தெரியும் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரம்.

தயாநிதி தொலைத்தொடர்புத்துறை அமைச்ச ராக இருந்தபோது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு உத்தர விட, அவருடைய சென்னை வீட்டிற்கு அந்த இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஒரு மினி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அளவுக்கு அமைந்த இந்த இணைப்புகளுக்காக சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளத் திற்கு ரோட்டில் கேபிள்கள் பதிக்கப்பட்டன. அதாவது, மாறன் சகோதரர்களின் போட் கிளப் சாலை வீட்டிலிருந்து சன் டி.வி.யின் பழைய அலுவலகம் வரையில் இந்த இணைப்பு களைப் பயன்படுத்துவதற் காகத்தான் இந்த கேபிள் பதிப்பு வேலை நடந்தது.

அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லின் 323 இணைப்புகளும் சன் டி.வி. குழுமச் சேனல் களில் நடை பெறும் நிகழ்ச்சி களுக்குப் பயன் படுத்தப்பட்டன என்பதுதான் முக் கியமானது. இவை சாதாரண தொலை பேசி இணைப்புகளை விட விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என் இணைப்பு களைக் கொண்டவை. செயற்கைகோள்களை விட அதிக விரைவாக உலகின் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களை யும் வீடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டு போய்ச் சேர்க்கும் அதிநவீனத் தகவல் தொடர்பு இணைப்பு களாகும்.

டிஜிட்டல் வழியிலான தகவல் களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும், வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும், ஆடியோ-வீடியோ சேவை களை அளிக்கவும் இந்த இணைப்புகள் வலிமையானவை. இவற்றைத் தனியார் மூலம் பெறவேண்டுமானால் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.

ஆனால், தொலைத்தொடர்புத் துறைக்கு தயாநிதி மாறன் பொறுப்பு வகித்ததால், அவற்றை இலவசமாகவே சன் டி.வி. நிறுவனம் பெற்றுக்கொண்டது. இதன் மூலமாக மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறைக்கு சுமார் 440 கோடி ரூபாய் இழப்பு என்றும் மேலே குறிப்பிட்ட அனைத்துக் குற்றச் சாட்டுகளையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்தது.

பத்திரிகைகளில் சமீபத்தில் இந்தத் தகவல் வெளியாகியிருந்தாலும், இந்த இணைப்புகள் கொடுக்கப்பட்ட 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதுபற்றிய புகார்கள் கிளம்பியதால், மத்திய உளவுத்துறை மூலம் இது சம்பந்தமான அறிக்கை, பிரதமர் மன்மோகன்சிங்கின் கைக்குப் போனதாம். அவர் அதைக் கவனமாகப் பரிசீலித் திருக்கிறாராம்.

தொழிலதிபர் சிவசங்கரன், சி.பி.ஐ யிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் எதிர்பாராத பல முக்கிய விஷயங்கள் இருப்பதாக, அவரது வட்டாரத்திலிருந்து தகவல் வருகிறது. பல ஆவணங்களையும் அவர் கொடுத்திருக்கிறாராம். இதை அறிந்தவர்கள் சிங் கப்பூரிலிருந்த சிவ சங்கரனிடம் பொது நண்பரை அனுப்பி பேசி யிருக்கிறார்கள். அர சியல் சூழ்நிலைகள் அப்படியும் இப்படியும் மாறக்கூடியவை. பிசினஸ் அப்படிப் பட்டதல்ல என்று சொல்லி நீண்ட நேரம் பேசியிருக்கிறார் அந்த நண்பர்.

அப்போது சிவசங்கரன், "எனக்கு இதுவரை அவர்களால் 7000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. அவங்க நிறுவனத்தில் எனக்கு ஷேர் கொடுப்பார்களா? எனக்கு என்னென்ன நிலைமைகள் ஏற்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும். என்னைத் தமிழ்நாட்டிற்கே வரமுடியாதபடி, கேஸ் போட்டு விரட்டியடித்தார்கள். என்னுடைய உறவினர்கள் எல்லோரையுமே பொய் வழக்கில் போலீஸ் தேடியதால் பல கஷ்டங்களை அனுபவித்து வெளிநாட்டுக்கு போனார்கள். இதையெல்லாம் நான் எப்படி மறக்க முடியும்?' என்று கேட்டிருக்கிறார்.

2ஜி விவகாரத்தின் அடுத்த கட்டம் பற்றி, பிரதான எதிர்க்கட்சி யான பா.ஜ.க கேள்வி எழுப்பத் தொடங்கி யிருக்கிறது. நாடாளு மன்றக் கூட்டத் தொடரில் தயாநிதிக்கு எதிரான கேள்விகள் தான் அதிகம் இருக் கும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆரம்பத்திலிருந்தே, 2ஜி விவகாரத்தில் தன் மீது எந்தக் குற்றச்சாட்டும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங், தயாநிதி மாறன் தொடர்பான சர்ச்சைகளிலும் அதே நிலையைத்தான் மேற்கொள்வார் என பா.ஜ.க எதிர்பார்க்கிறது.

சி.பி.ஐ.யும் இதே எதிர்பார்ப்பில்தான் உள்ளது. ஜூலை முதல் வாரம் முதல், தன்னுடைய அடுத்த கட்ட விசா ரணையை விரைவுபடுத்துவதில் சி.பி.ஐ. தீவிரமாக இருக்கிறது. ஜூலை 4ஆம் நாள், தயாநிதியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாநிதிக்கு முன்பாக, தொலைத்தொடர்புத்துறைக்குப் பொறுப்பு வகித்த பா.ஜ.க அமைச்சர் அருண்ஷோரியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. தயாநிதி குறித்து சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் முக்கியமான சில தொழிலதிபர்களும் தங்களுக்கு வந்த மிரட்டல்கள், நெருக்கடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றை சி.பி.ஐ.யிடம் பல வழிகளிலும் தெரிவித்தபடியே இருக்கி றார்களாம். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பிரதமரின் கவனத்திற்கும் சென்றுவிடுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சி.பி.ஐ.யும் மேலும் பல விவரங்களைத் திரட்டியபடியே இருக்கிறது.

தற்போது மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ள தயாநிதியை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்றால், அதற்கு பிரதமரின் அனுமதி தேவை. விசாரணை யைத் தொடர்ந்து, சி.பி.ஐ. தாக்கல் செய்யவிருக்கும் 2ஜி தொடர்பான மூன் றாவது சார்ஜ் ஷீட்டில் தயாநிதி யின் பெயர் இடம் பெறும் என்ற தகவலும் தலை நகரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. சி.பி.ஐ. விசா ரணை என்று வரும்போது அவரை ராஜினாமா செய்யச் சொல்லும் பிரதமர் அலுவலகம் என்கிறார்கள் டெல்லி காங் கிரஸ் பிரமுகர்கள்.

சி.பி.ஐ. விசாரணை, சார்ஜ் ஷீட் எனத் தொடர்ச்சியாக புயல் வீசும் என்பதையே தலைநகர அரசியல் தட்பவெப்ப நிலை காட்டுகிறது. அதனைத் தடுப்பதற்கான வேலைகளை தயாநிதியும் அவரது தரப் பினரும் வேக வேகமாக மேற்கொண்டு வருகிறார்கள். புயலைத் தடுக்க முடியுமா, அது கரை கடக்கத்தான் செய்யும் என்கிறார்கள் டெல்லி அரசியல் பிரமுகர்கள்.

விஜயகாந்த் வளர்வதைவிட சரத்குமாரை வளரவிடுவோம்,admk

சட்டமன்ற தேர்தல் சமயத்தில், கூட்டணி விஷயத்தில் தே.மு.தி.க இழுத்தடிச்சதுக்குப் பதிலடியா இப்ப ஜெ சைடில் இழுத்தடிக்கிறாங்களோன்னு விஜயகாந்த் வட்டாரம் நினைக்குது. ஜெ.வோ விஜயகாந்த் வளர்வதைவிட, சரத்குமாரை தன் கட்சி பக்கம் வச்சிக்கிட்டு அவரை தட்டிக்கொடுக்கலாம்னு நினைக் கிறாராம். புதிய சபாநாயகரை வாழ்த்தி ஒவ்வொரு கட்சியும் பேசியதே, அப்ப சரத்குமாரையும் பேச அனுமதிக்கணும்னு சட்டப்பேரவைச் செயலாளர்கிட்டே ஜெ. சொல்லியிருக்கிறார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு சரத்குமார் தலைவரா இருந்தாலும், அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்னு ஜெயிச்சதால அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகத்தான் கணக்கில் வருவார். அ.தி.மு.க. சார்பில் ஜெ.தான் சபாநாயகரை வாழ்த்திப் பேச வேண் டியவர், அதனால அதே கட்சி எம்.எல். ஏ.வான இன்னொருவரை பேச அனு மதிப்பது மரபில்லைன்னு பேரவைச் செயலாளர் சொன்னபோதும், சரத்துக் கும் பேச அனுமதி கொடுக்கணும்னு ஜெ. சொல்லிட்டாராம். விஜயகாந்த் துக்கு அப்பாயிண்ட்மெண்ட் லேட்டா வதையும் சரத்துக்கு வலிய வாய்ப்பு தரப்படுவதையும் அ.தி.மு.க. வட்டா ரத்தில் அர்த்தத்தோடு பேசிக்கிறாங்க.''

அனந்தகிருஷ்ணன். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100 பேரில்

Malaysia's Telecom Billionair Malaysian Ananda Krishnan develops his country's talent behind the scenes.

3 செயற்கைக் கோள்கள்.. 13 மின்சார நிலையங்கள்!

'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் வசம் இருந்த ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதை மையம்கொண்டு 2ஜி விவகாரத்தில் புதிய புயல் வீசுகிறது. அதை வாங்கியது அனந்தகிருஷ்ணன்; விற்றது சிவசங்கரன். விற்கச் சொல்லி அழுத்தம் கொடுத்ததாக, அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு!

'எட்டுத் திக்கும் கத்தி சுத்தும் ஜெகதலப் பிரதாபன் என்று வர்ணிக்கப்படும் சிவசங்கரனிடம் இருந்து, கத்தி இன்றி ரத்தம் இன்றி அவரது நிறுவனத்தைப் பறிக்கும் அளவுக்கு அனந்தகிருஷ்ணன் அத்தனை பெரிய கில்லாடியா!’ என்று ஒரு சிலர் புருவம் உயர்த்தக்கூடும். யார் இந்த அனந்தகிருஷ்ணன்?

மலேசியாவில் இருக்கும் பணக்காரர்களைத் தர வரிசை இட்ட அமெரிக்காவின் ஃபோக்ஸ் நிறுவனம், தனது பட்டியலில் இரண்டாவது இடத்தை அனந்தகிருஷ்ணனுக்குக் கொடுத்து இருக்கிறது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100 பேரில் அனந்தகிருஷ்ணனும் ஒருவர்!

ஆங்கிலேயர்களிடம் குமாஸ்தா வேலை செய்ய... இலங்கையில் இருந்து மலேசியா சென்ற தமிழர்களுக்கு, செங்கல் சூளை அமைந்திருக்கும் பகுதியில்தான் தங்க இடம் கிடைத்தது. அங்குதான் அனந்தகிருஷ்ணனின் அப்பா, தன் குடும்பத்தோடு தங்கி இருந்தார். அனந்தகிருஷ்ணன் பிறந்ததும் அங்குதான். விவேகானந்தா பள்ளியிலும், விக்டோரியா கல்லூரியிலும் படித்தார். இலங்கையில் இருந்து மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத் தமிழர்கள், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பி.ஏ., (ஹானர்ஸ்) எம்.பி.ஏ. முடித்த அனந்தகிருஷ்ணன், ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

படித்து முடித்து மலேசியா திரும்பிய அனந்தகிருஷ்ணனின் எண்ணம் எப்போதும் ஊடகத்தைச் சுற்றித்தான் இருந்தது. படிக்கும் காலத்திலேயே ரேடியோ மற்றும் நாளிதழ்களில் பகுதி நேரப் பத்திரிகையாளராகப் பணி ஆற்றியவர். இருந்தாலும், பூமியைப் பிளந்துகொண்டு பணம் கொட்டும் என்பதால், பெட்ரோல் துறையில்தான் முதல் அடி எடுத்துவைத்தார். முதல் இடமே அவரை வான் அளவுக்கு உயர்த்தியது!

மலேசியா என்றதும் நினைவுக்கு வருவது கோலாலம்பூரில் இருக்கும் 88 மாடிகளைக்கொண்ட பெட்ரோனாஸ் கோபுரம். இந்தக் கோபுரத்தைக் கட்டுவதற்கு மூல விதைகளாக இருந்தவர்களில் அனந்த கிருஷ்ணனும் ஒருவர். குதிரைப் பந்தயத்தில் இருந்து, ஆன்லைன் லாட்டரி வரை பணம் கறக்கும் காமதேனுக்களும், செல்வம் கொழிக்கும் கற்பக விருட்சம் மாதிரியான நிறுவனங்களும், அவரிடம் ஏராளமாக இருக்கின்றன. மலேசியாவில் மட்டும் இவருக்கு 100-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. அரபு நாடுகள் மற்றும் ஆசியாவில் 13 மின் உற்பத்தி நிலையங்கள் இவருக்குச் சொந்தம்.

ஜெர்மனிக்கு அருகில் இருக்கும் ஒரு தீவை சுற்றுலா சொர்க்கமாக மாற்றி நடத்தி வரும் அனந்தகிருஷ்ணனுக்கு சொந்தமாக ஒரு விமானம் இருக்கிறது. ஆனால், மூன்று செயற்கைக்கோள்களை தனது சொந்தப் பயன்பாட்டுக்காகச் சுற்றவிட்டு இருக்கிறார். எதற்கு செயற்கைக்கோள் என்று கேட்காதீர்கள். அவை இல்லாவிட்டால், பிறகு எப்படி எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு டி.வி. சேனல்களையும் செல்போன் நிறுவனங்களையும் நடத்துவது?

பங்கு வர்த்தகத்திலும் கரை கண்ட அனந்தகிருஷ்​ணனுக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட உலகின் பல இடங்களில் பங்களாக்கள் இருக்கின்றன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல ஓவியங்கள் இவருக்கு சொந்தமான கலைக்கூடத்தை அலங்கரிக்கின்றன. இளம் வயதில் அவர் படித்து ரசித்த இங்கிலாந்து பத்திரிகைகளை (பத்திரிகை நிறுவனங்களை) எல்லாம் விலைக்கு வாங்குவதுதான் அனந்தகிருஷ்ணனுக்கு இப்போதைய பொழுதுபோக்கு. நம் ஊர் 'கலைமாமணி’ மாதிரி மலேசியாவில் ஆயிரம் விருதுகள் இருக்கின்றன. ஆனால், இதுபோன்ற பட்டங்கள் எதிலும் ஆர்வம் காட்டாதவர் அனந்தகிருஷ்ணன். இவருக்கு மூன்று வாரிசுகள். இதில் ஒருவர் துறவறம் பூண்டுவிட்டாராம்!

73 வயதாகும் அனந்தகிருஷ்ணனுக்கு, சுய விளம்பரம் பிடிக்காத ஒன்று. எத்தனை பெரிய டி.வி-யாக இருந்தாலும் அவரிடம் பேட்டி வாங்கவே முடியாது. இருந்தாலும், டி.வி. என்றால் அனந்தகிருஷ்ணனுக்கு அபார ஈடுபாடு. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை போன்ற நாடுகளில் பிரதானமான டி.வி. சேனல்களை நடத்துவது இவர்தான். நம் ஊர் மெகா சீரியல்களில் இருந்து சினிமாக்கள் வரை அத்தனையும் தென் கிழக்கு ஆசிய நாட்டில் இருக்கும் தமிழர்களைச் சென்றடைவது இவரது ஆஸ்ட்ரோ டி.வி. மூலமாகத்தான். இவருடைய மேக்சிஸ் நிறுவனம்தான், மலேசியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனம். இதற்கு, அந்த நாட்டில் மட்டும் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மேக்சிஸ் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை பல கோடிகள் கொடுத்து வாங்குவார். அதில் கொஞ்சத்தை அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பார். இன்னொரு பக்கம், பொதுமக்களிடம் இருந்து தனது நிறுவனத்துக்குப் பணம் திரட்டுவார். இருந்தாலும் மேக்சிஸ் நிறுவனத்தைத் தனது இரும்புப் பிடிக்குள் தொடர்ந்து வைத்து இருப்பார்.

ஆக மொத்தம், சிவசங்கரன் கில்லாடி என்றால், அனந்தகிருஷ்ணன் கில்லாடிக்குக் கில்லாடி!

முஸ்லிம் அரச நிர்வாகிகளின் கொலை முதலில் புலிகளால் மூதூர் உப அரச அதிபர்


இற்றைநாள் வரையிலும் அறமிலா மறவர்
குற்றமே தமது மகுடமாக கொண்டோர்”
சுப்ரமணிய பாரதி
தமிழ் ஆயுதப் போராட்டம் தொடங்கி புலிகள் ஆதிக்கம் பெற்று அழிந்து போகும் வரை ஆயுத அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிப் போன முஸ்லிம் அரச நிர்வாகிகளின் கொலை முதலில் புலிகளால் மூதூர் உப அரச அதிபர் ஹபீப் முகம்மது எனும் இளைஞரை சுட்டுக் கொன்றதுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹபீப் முகம்மது அனுராதபுரத்தை சேர்ந்த இளைஞர் முதன் முதலில் நிர்வாக சேவையில் தெரிவு செய்யப்பட்டு பல எதிர்கால கனவுகளுடன் மூதூருக்கு உப அரச அதிபராக தெரிவு செய்யப்பட்டவர். தனது நேர்மைக் குணத்தினால் மத ஈடுபாட்டினால் மக்களால் பெரிதும் விரும்பபப்படும் வகையில் எவ்வித பந்தாவு மில்லாமல் மக்களோடு மிக நெருக்கமாக இணைந்து சேவையாற்றியவர். எவ்வித அரசியல் அணியையும் சாராத கடமையே கண்ணாக கொண்டு செயற்பட்டவர். இவர் மூன்றாம் திகதி செப்டம்பர் மாதம் எண்பத்தி ஏழாம் ஆண்டு (03.09.1987) புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரின் குருதி தேய்ந்த உடலமும், கபனிட்ட ( அடக்கம் செய்யப்பட அணியப்படும் ஆடை) உடலையும் கொண்ட படங்கள் முஸ்லிம்களை முழு இலங்கையிலும் அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த கொலை மூதூர் மக்களையும் குறிப்பாக சிவில் சமூகத்தையும் மீளாத் துயரில் தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் தம்மை விட்டு மரணித்துவிட்ட சூழ்நிலையை ஏற்படுத்தியது. குறிப்பாக மூதூர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் பலர் இதனை முதன் முதலில் புலிகளின் கீழ் முஸ்லிம் கல்வி சமூகம் எதிர்கொண்ட அச்சுறுத்தலை எடுத்துக் காட்ட, குறிப்பாக மூதூர் சரிப்தீன் ஹாஜியார், அக்பர் போன்றோர் ஹபீப் முகமத்தின் கொலையை ஆவணப்படுத்தி வெளியிட்டனர் என்பது எனது ஞாபகத்தில் உள்ள குறிப்பு. இந்த சம்பவம் முழு கிழக்கிலங்கை முழுவதும் ஏற்படுத்திய அச்ச, அனுதாப அதிர்வலைகள் புலிகளுக்கு எதிரான முஸ்லிம் நிலைப்பாட்டினை தோற்றுவித்ததையும் சில மனித உரிமை செயற்பட்டாளர்கள் சுட்டிக் காட்ட தவறவில்லை.
இன விகிதாசார அடிப்படையில் நோக்கும்போது மிக சிறியளவிலான முஸ்லிம்களே நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்குள் அரச உயர் பதிவிகளை, குறிப்பாக அரச நிர்வாக சேவையில் அதி உயர் கல்வி பெற்றோராக இருந்த காலகட்டங்களில், அதிலும் குறிப்பாக வட கிழக்கில் அரச நிர்வாக சேவையில் துணிச்சலாகவும் நேர்மையாகவும் கடமையாற்றியவர்கள் புலிகளினால் கொல்லப்பட்டும் கிழக்கிலே ஹபீப் முகமதுவை கொன்று சுமார் நான்கு மாதங்களின் பின்னர் புலிகள் மன்னார் வட மேற்கு அரச அதிபரான ஜனாப் எம்.எம்.மக்பூல் என்பவரை கொன்றனர். அவரை கொன்றது பற்றி நான் முன்னர் எழுதியுள்ள பகுதிகளை இங்கு விரிவாக தெரிந்து கொள்ள பதிவிலிடுகிறேன்.
இந்திய அமைதி காக்கும் படையினரின் வருகையின் பின்னர் அரச நிர்வாகங்களை நடத்த விடாமல் புலிகள் பல தடைகளை அரச நிர்வாகிகளுக்கு விதித்தனர். அந்த வகையில் குடியியல் நிர்வாகத்தை நடத்தக் கூடாது என எச்சரிக்கை சுவரொட்டிகளையும் வடக்கு கிழக்கில் ஒட்டியுமிருந்தனர். புலிகளின் கட்டளையை மீறியமைக்காக அரச நிர்வாகியாக தனது கடமையை சரியாக செய்தமைக்காகவே மக்பூல் புலிகளால் ஈவிரக்கமின்றி அழைத்து செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.
வடமாகாணத்திலும் யாழ்பாணத்தில் பிறந்த இரண்டாவது அரச அதிபரான மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னா புலிகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்” (http://www.bazeerlanka.com/search?updated-max=2011-04-13T21%3A07%3A00%2B01%3A00&max-results=10&reverse-paginate=true)
ஜனாப். மர்கூம் மக்பூல் அவர்கள் 1966/67 அளவில்தான் நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் யாழ்ப்பாணத்தில் நிர்வாக சேவைக்கு தெரிவான இரண்டாவது முஸ்லிம் நபராவார். இவருக்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் முதன்முதல் சிவில் சேவைக்கு தெரிவான முஸ்லிம், கலாநிதி ஏ. எம். ஏ அஸிஸ் அவர்களின் பின்னர் இவர் தெரிவாகி இருந்தார் . மக்பூல் நிர்வாக சேவைக்கு தெரிவாகி சம்மாந்துறையில் பிராந்திய இறைவரி உத்தியோகத்தர் ((DRO-–Divisional Revenue Officer)எனும் பதவிவகித்தபோது அரசியல் செல்வாக்குமிகு யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரமுகர்களின் முயற்சியால் யாழ்ப்பான நிர்வாகத்தின் கீழிருந்த கிளிநொச்சி மாவட்டத்திற்கு மாவட்ட காணி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டார். அப்போது “தமிழ பேசும் மக்களின்” கட்சியாக தம்பட்டம் அடித்த தமிழ் அரசுக் கட்சியின் கட்சி பத்திரிகையான “சுதந்திரன்” தனது முதற்பக்க தலைப்புச் செய்தியாக முழு முஸ்லிம் இனவாதத்தினை கக்கி ” தமிழரின் பதவி முஸ்லிமுக்கு பறிபோவதா” என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த செய்தி சுதந்திரனில் வெளியானபின்னர் நடைபெற்ற தலித் சமூகத்தினரின் பகிரங்க கூட்டமொன்றில் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட போது எனக்கு அறிமுகமான யாழ் முஸ்லிம் பிரமுகர் அக்கூட்டததில் கலந்துகொண்டு பதில் தர வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விட அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் யாழ் பல்கலைக்கழக விவுரையாளரும் பின்னாளில் இலண்டனிலுள்ள “தீபம்” தொலைக்காட்சி நிறுவனத்தின் செயதி தயாரிப்பாளராகவும் கடமையாற்றிய வித்தியானந்தன் “முஸ்லிம்களின் உள்ளக் குமுறலை கேட்டீர்கள்” என்றும் இதற்கான பதிலை அன்றைய கூட்டணி நாயகன் “”தளபதி” அமிர்தலிங்கம் வழங்குவார் என்று எதிர்பார்த்து கூற அமிர்தலிங்கம் அலட்சியம் செய்து இது பற்றி மூச்சு விடாமல் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சென்று விட்டார்”
(http://www.bazeerlanka.com/search?updated-max=2011-04-17T20%3A51%3A00%2B01%3A00&max-results=10&reverse-paginate=true)
பின்னர் இந்திய அமைதி காக்கும் படை இலங்கையை விட்டு சென்ற பின்னர் இருபத்தி ஆறாம் திகதி டிசம்பர் மாதம் தொன்னூற்றி இரண்டாம் ஆண்டு (26.12.1992) ஓட்டமாவடியின் முதல் பட்டதாரியும் எழுத்தாளனும் கல்விமானுமான வை. அகமத் புலிகளின் கிளைமோர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இவரும் மூதூரில் அதிபராக முன்பு பனி புரிந்தவராகும். அவ்வாறே குச்சவெளி உப அரச அதிபர் இப்ராகிம் என்பவரும் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். முஸ்லிம் சமூகத்தை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் தமது நாடு என்ற நிர்வாக கட்டமைப்பை உறுதிப்படுத்தும் பணியில் தடையாகவிருந்த முஸ்லிம்களையும் தமக்கு கீழ்படியாத தமிழ் அரச நிர்வாகிகளையும் கூட புலிகள் விட்டு வைக்கவில்லை. முஸ்லிம்களை பொறுத்தவரை நிர்வாக ஆளுமையிலிருந்து ஒரு சமூகத்தை அநாதையாக்கும் கைங்கரியத்தை மிக குரூரமாக புலிகள் செயற்படுத்தினர். நேர்மையும் நெஞ்சுறுதியும் கொண்டு கடமையே கண்ணென நின்று தம்மையே பலிகொடுத்த அந்த வீர அரச நிர்வாகிகள் எமது நினைவுகளில் நிறைந்திருப்பார்கள்.
http://www.bazeerlanka.com/

arundhati roy தமிழ் நாட்டிலே உங்களது முற்றத்திலே விலங்குகளாக நடத்தப்படும் உங்கள் ‘தொப்புள் கொடி உறவுகள்’

‘நான் தமிழ் நாட்டிற்குச் சென்றிருக்கிறேன். பிரதான அரசியல் வாதிகள் தமது அரசியல் ஈழத் தமிழர் குறித்துப் பேசியே தம்மை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். நான் ஈழத் தமிழ் அகதிகள் வாழும் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன்.   அவர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள்.   சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.  பலர் அங்கேயே பிறந்து வழர்ந்து  பெரியவர்களாகியிருக்கிறார்கள்.
அவர்கள்   சுதந்திரமாக பதிவின்றி வெளியே சென்றுவர முடியாது.   வேலை செய்யமுடியாது.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தமிழ் பிரதான அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? பலர் செய்வது போல, தமிழ் அடையாளம், தேசியம் என்பவற்றை உருவாக்கி அதனை மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்.    அவர்களுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை  இருந்திருக்குமானால்  அந்த அக்கறை முதலில் முகாம்களில் அடைக்கப்ப்படுள்ள மக்கள் மீதே செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.”
இதை யாரும் புலி எதிர்ப்புப் பன்னாடை சொல்லவில்லை. லண்டனில் புலி ஆதரவு அமைப்புக்கள் ஒன்றிணைந்து அருந்ததிராய் ஐ பேச அழைத்த போது அவர் கூறிய விடையங்கள். தமிழ் நாட்டிலே உங்களது முற்றத்திலே விலங்குகளாக நடத்தப்படும் உங்கள்   ‘தொப்புள் கொடி உறவுகள்’ என்ன தவறு செய்தார்கள்?   இன்று நேற்ற்றல்ல    கடந்த 25 வருடங்களாக தஞ்சம் தேடிச் சென்ற இடத்தில் அதிகார வர்க்கத்தால் சிறை வைக்கப்படிருக்கிறார்கள்.
நீங்கள் புல்லரித்துப் புழகாங்கிதமடையும் ‘அன்னை ஜெயலலிதா’ வின் தமிழுணர்வும், இதுவரை நீங்கள் தமிழர் தலைவனாக வேடம்  கட்டியிருந்த ‘இரத்ததின் இரத்தம்’ கருணாநிதியும்   காலாகாலமாக    ஆண்டு   மகிழ்ந்த மாநிலைத்தில் தான் இந்த மனித அவலமும் நடக்கிறது.
இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். உங்களோடு நீண்ட தொலைவிலிருக்கின்ற அருந்ததிக்குத் தெரிகின்றதென்றால்   “விலங்குப் பண்ணையை” சுற்றிக் குறுக்கும்  மறுக்குமாக     நடந்து திரியும் உங்களுக்கு இதெல்லாம் அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்திருக்கும்.
தேசியம்   அடையாளம்   என்பவற்றை நீங்கள் உங்களை வளர்த்துக் கொள்வதற்கான முதலீடாகப் ப்யன்படுத்திக் கொள்கிறீர்களா இல்லையா என்பது தான் இங்கு வினா. இதற்கு ஆயிரம் பேசுக்களில் நீங்கள் பதில் சொல்லலாம். நரம்பு புடைக்க உணர்ச்சிவயப்படும் சீமானைப் பார்த்திருக்கிறோம். சினிமாவில் வந்த வீரபாண்டியக் கட்டப்பொம்மனுக்கு மறு அவதாரம் கொடுப்பது போல் பேசும் வை.கோபாலசாமியைக் கண்டிருக்கிறோம்.
தமிழ் நாட்டில் முதிர்ந்த   ‘தேசியத் தலைவராகும்’   நெடுமாறனைப் பார்த்திருக்கிறோம். ஈழப் பிரச்சனை, ரியல் எஸ்டேட் பிரச்சனை என்பவற்றோடு தலித் ‘பிளேவரையும்’ கலந்து தேசிய உணர்விற்குச் சாம்பார் படைக்கும் தொல்.திருமாவளவனைக் கேட்டிருக்கிறோம்.
நீங்கள்   ‘விலங்கு கூடங்கள்’ குறித்து என்ன செய்யப் போகிறீர்கள். வழமை போலவே ஒளிந்திருக்கும்   “தேசியத் தலைவர் பிரபாகரன்” நாளை   வந்து தமிழ் நாட்டின் அகதிகளையும் சேர்த்து விடுவிப்பார் என்றா சொல்லப் போகிறீர்கள்? இன்றைய திகதியில் பிரபாகரன் வருவார் என்று ஜெனீவாவில் வை.கோ அதிர்ந்ததையே கோமளித் தனமாகத் தான் புலம்பெயர் தமிழர்களே நோக்கினார்கள்.
அருந்ததி ராய் இன் கூற்றைக் கண்டு அஞ்சிவிடாதிர்கள்     அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள்கள். கருணாநிதி ஈழம் பெற்றுத்தரும், அமரிக்க வரும்,       ஐரோப்பா கடைகண் திறக்கிறது என்று மக்களை நம்பவைத்தே நீங்கள் நன்றாக முதலிட்டிருக்கிறீர்கள். இப்போது ஜெயலலிதா பெற்றுத் தருவார் என்று இன்னொரு கதையை பரப்பியிருக்கிறீர்கள்.
இனிமேல் அதிகமாக மக்கள் உங்களை நம்பத் தயாரில்லை. இந்த நூற்றாண்டின் அறிவு சார் சமூகத்தில் தகவல்கள் காட்டுத் தீ வேகத்தில் பரவி விடுகின்றன. ஆயிரம் வியாபாரிகள் உங்கள்   ‘தேசிய’      முதலீட்டுகளுக்கு ஆதரமாக நின்றாலும் எங்காவது, ஏதாவது ஒரு சந்தில் சமூகப் பற்றுள்ள குரல் ஒலிக்கும்.
ஆக, அருந்ததி ராய் கூறியதை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முதல்.. .

சீமான், நெடுமாறன், வை.கோபாலசாமி, திருமா, த.பாண்டியன் போன்ற இன்னோரன்ன தமிழினவாத அரசியல் வாதிகளுக்கு இது பகிரங்க வேண்டுகொள் மட்டுமல்ல சவாலும் கூட.
- விலங்குக் கூடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்யப் போராடுங்கள்.

- அவர்களின் சுதந்திர நடமாட்டத்தை உறுதி செய்யுங்கள்.
-விரும்பியவர்களுக்குப் பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்க பரிந்துரை செய்யுங்கள், மறுத்தால் தெருவிலே போராடுங்கள்.
-அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை முன்வையுங்கள்.
-இந்தியாவில் பிறந்து ஈழப் போராட்டத்தின் வரலாற்றோடு வளர்ந்து பெரியவர்களாகியிருக்கும் விலங்குக் கூடங்களின் குழந்தைகளின் கல்வியை உறுதிசெய்யுங்கள்.
-ஈழத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றவர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய அரசியல் போராட்டங்களை முன்னெடுங்கள்.

-இந்த அவலங்களை உலக மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள்.

இதற்கெல்லாம் உங்கள் சொந்தப் பணத்தில் ஒரு பைசா கூடத் தர வேண்டாம். இப்போது தான் சடுதியாகத் தமிழ் உணர்வு மேலெழுந்து தேசியக் கூத்தாடும் அன்னை இருக்கிறாரே.
அவர் பெரும் பண முதலைகளிடம் பெட்டி வாங்கும் போது அகதிகளுக்கும் சேர்த்து வாங்கச் சொல்லுங்கள். அப்படி வாங்காவிட்டால் அம்பலப்படுத்துங்கள்.
தமிழ் அடையாளக் கனவில் மூழ்கிய நேரம் போக மிகுதியானவற்றில், சிறைவைக்கப்படிருக்கும் அகதிகளிடம் பேசிப் பார்த்தாலே இன்னும் கோரிக்கைகளைக் கண்டறியலாம்.
இனிமேலும்       பிரபாகரன் வருவார் என்பதை மட்டும் முன்வைத்து அரசியல் நாடகம் போட முடியாது.    நேர்மையாக மக்கள் பற்றிருந்தால் இந்த எரியும் பிரச்சனையை அதுவும் 25 வருடங்களாக தீபந்தம் போல எரியும் பிரச்சனையை முன்வைத்துப் போராடுங்கள். உங்கள் முற்றத்தில் நிகழும் அவலம் அல்லவா?

ரூ.5,000 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, நாடாளுமன்ற கூட்டுக் குழு, நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறையினரின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வருகிறது.

இந்த ஊழலால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத்துறை கூறியுள்ளது. ஸ்பெக்ட்ரத்தை வேண்டிய நிறுவனங்களுக்கு, மிகக் குறைந்த விலையில் தருவதற்காக ரூ. 30,000 கோடி வரை பணம் கைமாறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 2 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அதில் பெயர்கள் இடம் பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நி்ர்வாக அதிகாரி சரத்குமார், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர யுனிடெக் வயர்லஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாம் (இப்போது எடில்சாட் டிபி) நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்களை முறைகேடாகப் பெற்ற இந்த நிறுவனங்கள் அவற்றை விற்று கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன. குறிப்பாக யுனிடெக் நிறுவனம் தான் இதில் மிக அதிகமான லாபம் சம்பாதித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை வாங்கியதும் இந்த நிறுவனம் தனது 66.5 சதவீத பங்குகளை நார்வேயின் டெலிநார் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததன் மூலம் ரூ. 6,135 கோடி லாபம் ஈட்டியது.

முறைகேடாக லாபம் ஈட்டிய இந்த நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கும் பணிகளை அமலாக்கப் பிரிவு தொடங்கியுள்ளது. யுனிடெக் வயர்லஸ் (தமிழ்நாடு பிரிவின்) ரூ.5,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கப் போவதாக அந்த நிறுவனத்துக்கு அமலாக்கப் பிரி்வு நோட்டீஸ் அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.

இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதன் துணை நிறுவனமான சினியுக் பிலிம்ஸ் (இதன்மூலம் தான் கலைஞர் தொலைக்காட்சிக்கு டிபி ரியாலிட்டி நிறுவனம் ரூ. 214 கோடியைத் தந்தது) ஆகிய நிறுவனங்களின் சொத்துக்களையும் அமலாக்கப் பிரிவு முடக்கும் என்று தெரிகிறது

9 லட்சம் இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்

இந்த விஷயத்தில் அம்மா கருணாநிதியை FOLLOW செய்கிறார் ! இனி மேல லேப் டாப் மலிவா தமிழ் NAATULA கிடைக்கும் ! வாழ்க இலவசம் !

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, 9 லட்சத்து 12 ஆயிரம் இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, சர்வதேச அளவிலான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் லேப்-டாப் மாதிரியை, "எல்காட்' நிறுவனத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அளவில் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அளவில், 10ம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 மாணவர்கள் 7.5 லட்சம் மாணவர்கள் உள்ள விவரத்தை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அரசிடம் சமர்ப்பித்தனர். அது தவிர, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் "எல்காட்' அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே கவர்னர் உரையில், இலவச லேப்-டாப் வழங்குவதை அரசு உறுதி செய்தது. இலவச லேப்-டாப் தயாரிப்பதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் அறிவிப்பை எல்காட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: முதல் கட்டமாக, 9 லட்சத்து 12 ஆயிரம் லேப்-டாப்கள் கொள்முதல் செய்ய, சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது. நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 11. அதற்கான வைப்புத் தொகை 20 லட்சம். கடைசி தேதியன்று மாலை, டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படுகின்றன. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, லேப்-டாப் கொள்முதல் செய்வதற்கான அனுமதி உடனே வழங்கப்பட மாட்டாது. முதலில், தொழில்நுட்ப ரீதியாக டெண்டர் பரிசீலிக்கப்படும். இதில், அந்நிறுவனங்கள், அரசு விதித்துள்ள தொழில்நுட்ப தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அடுத்த கட்ட டெண்டருக்கு தேர்வு செய்யப்படும். முதல் டெண்டரில் தகுதிபெற்ற நிறுவனங்களுடன், அடுத்த கட்டமாக, விலை நிர்ணயம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் ஒத்துவரும் நிறுவனங்களுக்கு, லேப் -டாப் கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் வழங்கப்படும். லேப்-டாப்பில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய, தயாரிப்பு நிறுவனம், தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் முடியும் வரை இலவச சர்வீஸ் செய்து தர வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், மாதிரி லேப்-டாப்களை, "எல்காட்' நிறுவனத்திடம் இந்த மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எடை 2 கிலோ 700 கிராமுக்குள் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில மொழி விவரங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்' என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 22ம் தேதி, சென்னை அண்ணாசாலையில் உள்ள "எல்காட்' நிறுவனத்தில், லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில், லேப்-டாப் தயாரிப்பில் ஏற்படும் சந்தேகங்களை, எல்காட் அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

வசதிகள் அதிகம்: விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறையில் லேப்-டாப்பை இயக்கலாம். ஸ்டாட்டர் எடிஷன், கேமரா, ஒயர்லெஸ், "டிவிடி' ரைட்டர், வேர்டு, எக்சல் மற்றும் டேட்டா பேஸ் புரோகிராம்கள் மற்றும் கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள் இணைக்கப்பட்டிருக்கும். பெரிய அளவிலான ஸ்கிரீன், 2 ஜி.பி., ரேம், 320 ஜி.பி., ஹார்டுடிஸ்க் இருக்கும்.
maria alphonse - chennai ,இந்தியா
2011-06-18 08:21:15 IST Report Abuse
அம்மா செய்யும் இந்த திட்டம் பாராட்டுக்குரியது..இதையே கலைஞர் செய்திருந்தால் திட்டி தீர்த்திருப்போம்..நாட்டை இலவசங்களால் சோம்பேறி ஆக்குகிறார் என்று ...இதுதான் எங்கள் நடுநிலைமை.
RAMASAMY SEKAR - chennai,இந்தியா
2011-06-18 08:31:16 IST Report Abuse
மத்திய அரசு ரூபாய் .1500 க்கு, மானியத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குகிறது. ஆனால் நமது மாநில அரசு ரூபாய் 20000 க்கு சர்வதேச அளவில் டெண்டர் கோருகிறதே? அடுத்த திகார் அம்மாவுக்குத் தானோ?...
karunkal pa. mohankumar - chennai ,இந்தியா
2011-06-18 06:58:55 IST Report Abuse
இந்த லேப்-டாப் தற்போது வழங்ககூடாது.காரணம் மாணவர்கள் இதனை ஒரு பொழுதுபோக்கு கருவியாக பயன்படுத்துவார்கள்.+2 மாணவர்கள் தேர்வு எழுதி பள்ளியில் இருந்து T .C வாங்கும்போது வழங்க வேண்டும் . அப்போதுதான் இது பயன் உள்ளதாக இருக்கும். இல்லையெனில் தற்போது செல்போன் பயன்பாடு மாதிரி தேவை இல்லாத விசயங்களை டவுன்லோட் செய்தும் pendrive பயன்படுத்தியும் படிப்பை கெடுத்து விடுவார்கள்.அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். நல்ல படிப்புக்காக பல ஏழை குடும்பத்தினர் பணம் செலுத்தி பல்வேறு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.அவர்கள் ஏமாறகூடாது. நல்ல திட்டம் கல்விக்கும் மருத்துவத்துக்கும் விவசாயத்துக்கும் எவ்வளவு இலவசம் கொடுத்தாலும் நல்லதுக்கே.
 
Saravanan Marimuthu - canada,கனடா
2011-06-18 06:31:01 IST Report Abuse
இதுல உள்ள பிரக்டிகல் பிரச்னை பாதி ரொம்ப யோசிக்கணும். 1 ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு தர வேண்டும். கலர் டிவி , மிக்சி மாதிரி இது ஒரு முறை கொடுக்கும் இலவசம் அல்ல. 2 என்ன தான் பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தாலும் அவங்க எக்ஸாம் க்கு பாட புத்தகத்தை தாண்டி எந்த கேள்வியும் கேக்க போவது இல்லை . எனவே மாணவர்க எதற்ககா லேப்டாப் ஐ படிப்புக்கு பயன்படுத்த போகிறார்கள். அதை ஒரு பொழுது போக்கு விசயமாக மட்டுமே பயன்படுத்துவார்கள்.
Thennavan - Chennai,இந்தியா
2011-06-18 04:58:15 IST Report Abuse
இது முந்திய திமுக அட்சியில் செய்யப்பட்ட இலவச டிவி திட்டத்தை விட மோசமான இலவச திட்டம்......இங்கு சொல்லபட்டு இருக்கிற லேப்டாப் வசதி குறைந்த பட்சம் 20 ஆயரம் ரூபாயாவது ஆகும்...இவர்கள் சொல்லி இருக்கிற 18 லட்சம் பேருக்கு வழங்க குறைந்தது 3600 கோடி வேண்டும்...அதுவும் ஒவ்வொரு ஆண்டும்....இது தேவையா......ஆனால் அதை முறையாக பயன்படுத்துபவர் ஒரு பத்து சதவிதம் பேர் இருந்தாலே ஆச்சரியம் தான்.....இதற்க்கு பதிலாக எல்லா பள்ளி,கல்லூரிக்கும் அரசு செலவில் ஒரு லைப்ரரி கம்ப்யூட்டர் இன்டர்நெட் வசதியுடன் செய்து தரளாம்....அதன் முலம் மாணவரும் பயன் பெறுவார்......அதை விட்டு எல்லாத்துக்கும் லேப்டாப் கொடுத்தா அதுவும் ஒரு இலவச டிவியாக மாறி நம்ம பசங்க உட்கார்ந்து சிடி போட்டு படம் பாத்துகிட்டு இருப்பான்..
 

பா.ம.க.வில் திடீர் பிளவு: நிர்வாகிகள் தலைவர் மணி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக

தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பா.ம.க.,வின் தொடர் தோல்விக்கு அக்கட்சியின் தலைவர் மணியே காரணம். அவர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, இடைப்பாடி பா.ம.க., முன்னாள் , எம்.எல்.ஏ., காவேரி திடீர் போர்க்கொடி தூக்கி உள்ளார். மேலும் பல எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு குரல் கொடுக்க தயாராக உள்ளதால், பா.ம.க., தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

கடந்த, 1989 முதல் 2011 வரை நடந்த ஒன்பது தேர்தல்களில் ஆறாவது முறையாக கூட்டணி மாற்றத்தை அரங்கேற்றிய, பா.ம.க., நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தான் போட்டியிட்ட, 30 தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மணி போட்டியிட்ட, மேட்டூர் தொகுதியில் தோல்வியை தழுவினார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதிலும், பல்வேறு தில்லு முல்லுகள் அரங்கேறின. பலர் தொகுதி மாறி போட்டியிட்ட நிலையிலும், தோல்வியே பரிசாக கிடைத்தது. இந்த தோல்வியால், பா.ம.க.,வின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ள நிலையில், 'தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர், பதவியில் இருந்து மணி விலக வேண்டும்' என, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், ஒன்றிய செயலர்கள் பலர் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இடைப்பாடி முன்னாள், பா.ம.க., எம்.எல்.ஏ.,வும், மாவட்ட செயலருமான காவேரி திடீர் என, மணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்பது போல, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., - தி.மு.க.,வுடன் கூட்டணி ஏற்பட, தலைவர் ஜி.கே.மணி முன் கூட்டியே திட்டம் தீட்டி விட்டார். பென்னாகரம் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, ராமதாசிடம் சென்று முறையிட்டு, தன் மகன் தமிழ்குமரனுக்கு, அடம் பிடித்து சீட் வாங்கினார். பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, கருணாநிதி ஆட்சியை பாராட்டி பேசினார். இது பென்னாகரம் தொகுதி பா.ம.க.,வினர் மத்தியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பா.ம.க.,வின் வெற்றியை பாதித்து, இரண்டாம் இடத்தை பெற்றுக் கொடுத்தது. ராமதாஸ் பேரனின் திருமண அழைப்பிதழை வழங்க, முன்னாள் முதல்வர் கருணாநிதியை ராமதாஸ் சந்திக்க சென்றார். அதற்கு முன்பாகவே, மணி, கருணாநிதியிடம் பேசி, ராமதாஸ் வருகிறார். கூட்டணியை பேசி முடிவு செய்து விடுங்கள் என, தெரிவித்து, அதற்கு ஏற்றபடி காய் நகர்த்தி கூட்டணியை அமைத்து விட்டார்.

தி.மு.க., ஆட்சியின் போது பா.ம.க., - தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே தொடர் மனக்கசப்பு, அக்கட்சியினரின் அடாவடிகள் ஆகியன இணைந்ததால் பொதுமக்கள், பா.ம.க.,வை தோல்வி அடைய செய்து விட்டனர். "ஆக்டோபஸ்' போன்று செயல்பட்டு, தேர்தலின் போது வேறு பக்கமும் பேச முடியாமல் செய்து, பா.ம.க.,வை பலவீனமடைய செய்து, தோல்வியை பெற்றுத் தந்த தலைவர் மணி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதே போல் மேலும் பல முன்னாள் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள், கட்சி தலைமைக்கு தங்கள் அதிருப்தியை தெரியப்படுத்தி உள்ளனர். காவேரி தலைமையில் அணி சேர தயாராகி வருகின்றனர். அதனால், கட்சி தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. அதே சமயம் காவேரி போன்றவர்கள், கட்சியை உடைக்க சதி செய்கின்றனர் என, ஜி.கே.மணி தரப்பினர் ராமதாசிடம் புகார் கூறியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

சாய்பாபாவின் யஜுர் மந்திர் திறக்கப்பட்டது.98 கிலோ தங்கமும், ரூ.12 கோடி ரொக்கமும்,

New Delhi: Sathya Sai Baba's personal chamber was opened on Friday. Known as Yajur Mandir, the chamber yielded large quantities of cash and gold. The contents of the chamber were inventoried by 20 people and reportedly took 36 hours to complete.
About Rs 12 crores from the chamber will now be deposited in the State Bank of India (SBI) account of the Sai Trust in Puttaparthy.
Also, close to 100 kilograms of gold and 307 kilograms of silver was found - which will be handed over to central excise.
Other important souvenirs will be exhibited later. All valuables will be sent to SBI for safekeeping.
சத்ய சாய்பாபாவின் தனி அறை திறந்து பார்க்கப்பட்டபோது, அதில் 98 கிலோ தங்கமும், ரூ.12 கோடி ரொக்கமும், 307 கிலோ வெள்ளியும், 4 தங்க சாமி சிலைகளும் இருந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் பிரசாந்தி நிலையம் என்ற ஆசிரமத்தில் சாய்பாபா மட்டும் பயன்படுத்தும் யஜுர் வேத மந்திர் என்ற பகுதி இருக்கிறது. சாய்பாபா உடல் நலம் குன்றி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும், கடந்த ஏப்ரல் 15 ந் தேதி இந்த பகுதியை பூட்டு போட்டு பூட்டி விட்டனர்.
இந்த நிலையில் சாய்பாபாவின் சகோதரர் ஜானகி ராமனின் மகனும், அறக்கட்டளை உறுப்பினருமான ரத்னாகர் கூறியதாவது:
சத்ய சாய்பாபாவின் அறையை திறந்து பார்த்தோம். அதில் இருந்த பணத்தை வங்கி அதிகாரிகளை கொண்டு 36 மணி நேரமாக எண்ணி முடித்து விட்டோம். இதன் படி மொத்தம் 11 கோடியே 86 லட்சத்து 47 ஆயிரத்து 409 ரூபாய் இருந்தது.

மேலும் 98 கிலோ தங்க நகைகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.20 கோடி ஆகும். தங்கத்தால் ஆன ராமர், ஆஞ்சநேயர், விநாயகர், மகாலட்சுமி சிலைகள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் 10 செ.மீ. உயரம் இருக்கின்றன. மற்றும் 2 தங்க பாதுகைகளும் இருந்தன. இது தவிர ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 307 கிலோ வெள்ளி பொருட்களும் இருந்தன. அவற்றை பாதுகாப்பாக வைத்து இருக்கிறோம். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முறைப்படி தகவல் கொடுத்து இருக்கிறோம்.

சத்ய சாய்பாபாவின் சமாதியை அழகுற கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த சமாதி வரும் ஜுலை 15 ந் தேதி திறக்கப்படும். அத்துடன் சாய்பாபா பயன்படுத்திய பொருட்களை கொண்டு கண்காட்சி ஒன்றை அமைக்கிறோம். அதுவும் ஜுலை 15 ந் தேதி திறக்கப்படும்.

பாபாவின் அறையில் அவர் எழுதி வைத்த உயில் எதுவும் இல்லை. இவ்வாறு ரத்னாகர் கூறினார்.

கனிமொழி தரப்போ, தயாநிதியை விடப்போவதில்லை என்று தீவிரமாக

தயாநிதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

அழகிரிக்கும் மாறன் குடும்பத்துக்கும் பகை ஏற்பட்ட போது செல்விதான் இருவருக்கும் இணைப்புப் பாலமாக இருந்தார். இப்போது டெல்லியில் அவருக்கு சிக்கல் வருகிறது என்பதால் அவர்தான் தீவிரமாக,குடும்ப உறுப்பினர்களிடம் பேசி வருகிறார். தயாநிதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். கனிமொழிக்கும் செல்விக்கும் ஆகாது.எனவே அழகிரி மூலமாக கனிமொழியை சமாதானப்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகிறாராம்...’’

‘‘இதில் எதுக்கு கனிமொழியை சமாதானப்படுத்த வேண்டும்?’’ .

‘‘சிவசங்கரன் புகாரின் பின்னணியில் கனிமொழி, ராசா, ரத்தன் டாடா இருப்பதாக ஏற்கெனவே சொல்லியிருந்தேனே...தாங்கள் சிறையில் இருக்க தயாநிதிதான் காரணம் என்று கனிமொழி தரப்பு நினைக்கிறது. அவர்கள்தான் சிவசங்கரனை தயாநிதிக்கு எதிராக புகார் செய்ய வைத்திருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். எனவே, கனிமொழி மூலம் சிவசங்கரனை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்கள். ஏற்கெனவே தயாநிதியே கனிமொழியைப் பார்த்து இது தொடர்பாக பேசியிருக்கிறார். அப்போது, அவர் ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று கை விரித்துவிட்டாராம்.அதனால் அடுத்த அஸ்திரமாக அழகிரியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.’’

‘‘அவர் கனிமொழியிடம் பேசினாரா?’’

‘‘பேசியதாகச் சொல்கிறார்கள். ‘தயாவும் நம்ம குடும்பத்தைச் சேர்ந்தவர்தானே... அவன் ஏதோ தவறு செய்துவிட்டான். அவன் உள்ளே போனால் குடும்பத்துக்குத்தானே கெட்ட பெயர். கொஞ்சம் பொறுமையாக இரு.உன்னை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடுகிறேன். சிவசங்கரனை புகாரை வாபஸ் வாங்கச் சொல்’என்று கேட்டுக் கொண்டாராம்.’’

‘‘கனிமொழி என்ன சொன்னாராம்...?’’

‘‘தயாநிதிக்கு சொன்ன பதிலையே இவருக்கும் சொன்னாராம். ஆனால் மிகவும் சாஃப்டாக சொன்னாராம்...ஆனால் கனிமொழி தரப்போ, தயாநிதியை விடப்போவதில்லை என்று தீவிரமாக இருக்கிறார்களாம். ஸ்பெக்ட்ரம் பிரச்னையை எடுத்த போது,அவருக்கே பாதகமாக வரும் என்று நினைத்திருக்க வேண்டாமா? எங்களை சிக்க வைக்க டெல்லியில் அவர் என்னென்ன செய்தார் என்பதும் எங்களுக்குத் தெரியும் என்று சொல்கிறார்கள்...ஆனால் சிவசங்கரன் தரப்போ யார் சமாதானம் செய்தாலும் புகாரை வாபஸ் வாங்கப்போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம்.தன்னுடைய நிறுவனத்தை குறைந்த விலைக்கு விற்க வைத்ததோடு,முழுப் பணமும் கிடைக்கவில்லை என்பதில் ரொம்பவே கோபமாக இருக்கிறாராம்.’’

‘‘தயாநிதி தரப்பில் என்ன சொல்கிறார்கள்...?’’

‘‘அவர்கள் எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொல்லி வருகிறார்கள். அதோடு, ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசி, அவரது உதவியைக் கோர இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.’’

‘‘காங்கிரஸ் உதவினால் எதிர்க்கட்சிகள் சும்மா இருக்குமா?’’

‘‘அதான் பிரச்னையே... ஜூலை மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூட உள்ளது.கூட்டத்தொடரை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் ரகளை செய்தால் என்ன செய்வது என்ற கவலை காங்கிரஸ் வட்டாரத்தில் பரவிக் கிடக்கிறது. அதற்கு முன்னதாகவே தயாவை ராஜினாமா செய்யச் சொல்லி வருவதாகவும் சொல்கிறார்கள்.’’

‘‘ராஜினாமா செய்வாரா?’’

‘‘கட்சியின் மொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தால் நல்லது என்று நினைத்திருந்தார்,தயாநிதி.கூட்டத்தோடு ராஜினாமா செய்தால் பெரிதாகத் தெரியாது என்று நினைத்தார். ஆனால் தனியாக ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் வந்துவிடும் என்கிறார்கள்.’’

‘‘இவர் ராஜினாமா செய்தால் நிறைய துறைக்கு அமைச்சர்கள் இல்லாமல் இருப்பார்களே...’’
‘‘வெளிநாடு சென்று இருக்கும் சோனியா இம்மாத இறுதியில் டெல்லி திரும்புகிறார். அவர் வந்ததும் மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என்கிறார்கள்,டெல்லியில்.வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பெரிய மாநிலத்துக்கு கவர்னராக போகப்போகிறாராம். ஏற்கெனவே ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அந்த இடத்துக்கும் புதிய அமைச்சர் போட வேண்டும். எனவே கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறார்கள். உள்துறை அமைச்சராக இருக்கும் சிதம்பரம் அநேகமாக வெளியுறவுத்துறை அமைச்சராக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். ராணுவ அமைச்சரான ஏ.கே. அந்தோணி, உள்துறைக்கு வர வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.அல்லது நிதி அமைச்சகத்தை பிரதமர் எடுத்துக்கொண்டு, உள்துறையை பிரணாப்பிற்கு கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம்.அதோடு ரசாயனத் துறை அமைச்சராக இருக்கும் அழகிரிக்கும் இலகுவான துறை கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்களாம்.’

Subramaniam Swamy திராவிட இனம் என்பதே இல்லை.கருணாநிதி போன்றோர்

மதுரை:""திராவிட இனம் என்பதே இல்லை. திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர்,'' என, மதுரையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி குறிப்பிட்டார்.மதுரைக் கல்லூரியில் ஆங்கில துறை பேராசிரியர் சுப்ரமோனி எழுதிய "பரமஹம்சா-த வேதாந்திக் டேல்' நூல் வெளியீட்டு விழா நடந்தது.
நூலை வெளியீட்டு சுப்ரமணியசாமி பேசியதாவது: அமெரிக்காவில் பொருளாதார மேம்பாடுக்கு உதவும் இந்துத்துவா கொள்கை என்ற தலைப்பில் என்னை பேச அழைத்தனர். அந்தளவுக்கு அமெரிக்காவில் இந்துத்துவா, சனாதன தர்மத்தை கைபிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியா ஆசிரமங்களில் அமெரிக்க சாதுக்கள் அதிகளவில் உள்ளனர்.திராவிட இனம் என கருணாநிதி போன்றோர் பேசுகின்றனர். திராவிட இனம் என்பதே இல்லை. திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர்.

தென்னிந்தியாவின் ஒரு பகுதி திராவிடம் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். ஆங்கிலேயர் திராவிடர், ஆரியர் என இன பாகுபாட்டை ஏற்படுத்தினர்.ராவணன் ஒரு பிராமணர். ஆனால் ராமர் சத்தியர் குலத்தில் தோன்றியவர். ராவணனை கொன்ற ராமரை தான் வழிபடுகின்றனர். பெண் ஆசை காரணமாக ராவணன் உயிரிழந்தான். அனைவரும் சட்டத்திற்கு, தர்மத்திற்கு கட்டுப்பட வேண்டும். முன்னோர்கள் தர்மத்திற்கு முக்கியம் கொடுத்தனர். பிறப்பு, நிறம், மொழியை வைத்து வேறுபாடு கூடாது. சமஸ்கிருதம், தமிழ் போன்றவை பிராமி எழுத்துக்களில் இருந்து உருவானவை. அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் கூட, கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் என தெரிவித்துள்ளனர். அங்கு சமஸ்கிருதம் கற்க ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. ஊழலுக்கு காரணம் பேராசை. வீடு, வாகனம் வாங்கும் ஆசையே ஊழலுக்கு வழிவகுக்கிறது. மாணவர்கள் தொடர்ந்து கற்க வேண்டும். இந்தியாவில் இளைஞர் வளம் அதிகம். அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கு அரசு உதவிகளை செய்ய வேண்டும், என்றார்.

புகைவிடும் வாகனங்களைக் கண்டால் இனி பொங்கி எழவும்!

வீதிகளில் செல்லும் வாகனங்கள் கறுநிற புகை கக்க்கிச் செல்லுமாயின் அது குறித்து முறைப்பாடுகளைப் பதிவு செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

அப்படி கறுநிற புகை கக்கும் வாகனங்களைக் கண்டால் 011-3100152 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் dmtvet@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் முறைப்பாடு தெரிவிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அப்படியின்றெல் மோட்டார் வாகன திணைக்களம் தபால் பெட்டி இலக்கம் 533, கொழும்பு 5 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் முறைப்பாடுகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், 011-2669915 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாகவும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும்.

மோட்டார் வாகன சட்டமூலத்தின் 1533/17 இலக்க கட்டளையின்படி அனைத்து வாகனங்களுக்கும் வருடாந்தம் அனுமதிப் பத்திரம் வழங்கப்படும்போது புகைப் பரிசோதனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணி திரளுங்கள்: கோதாபய ராஜபக்ஷ வேண்டுகோள்!


புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சகல தேசப்பற்றுள்ள மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு பெற்றுக்கொண்டுள்ள வெற்றியைக் காட்டிக்கொடுத்து பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு உறுதுணை புரிவோருக்கு எதிராகவும், நாட்டை பாதுகாப்பதற்கும் மக்கள் மீண்டும் அணிதிரள வேண்டுமெனவும் அவர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காக 30 வருட காலங்களுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை மறந்து செயற்பட்டால் மீட்கப்பட்ட நாடு எம்மிடமிருந்து கைநழுவிப் போய்விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதிகள் எமது நாட்டைப் பிளவுபடுத்தி அதனை துண்டாட முயற் சிசெய்தனர். தற்போது சர்வதேசத்துக்கூடாக அதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி களை மேற்கொண்டுள்ளனர். பிரபாகரனுக்கு எதிராகப் போராடிய படையினருக்கு எதிரான வீடியோ கசட்டுக்களைத் தயாரித்து சர்வதேசத்திடம் முன்வைத்துள் ளனர். படையினரின் வெற்றி இதன்மூலம் மலினப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறுசம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் தெரிவித்தார். கட்டுநாயக்காவில் இடம் பெற்ற சம்பவங்கள் நேரடியாக ஜேர்மன் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசமெங்கும் எமதுநாடு அபகீர்த்திக்கு உள்ளாகும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகின்றனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக சனல்-4 வீடியோ காட்சிமூலம் கூறப்படுகிறது. எனினும், கிழக்கில் பெளத்த மத தேரர்கள் கொல்லப்பட்டதையோ, நிராயுதபாணியான 600 பொலிஸாரைக் கொலை செய்ததையோ சாதாரண அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகளைக் கொலை செய்ததையோ சனல்-4 காண்பிக்கவில்லை.
இராணுவத்தளபதி அண்மையில் நடத்திய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் மேற்குலக நாடுகள் அதனை நிராகரித்துவிட்டன.
அங்கு பயங்கரவாதத்தை ஒழித்த முறை மற்றும் சிக்கல்களுக்கு பதிலளிக்கவும் நாம் தயாராகவிருந்தோம். எனினும், எம்மை குற்றஞ்சாட்டுபவர்கள் அம்மாநாட்டுக்கு சமுகமகளிக்கவில்லை. அவர்கள் புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு உதவி செய்பவர்கள்.
இவற்றுக்கு எதிராக மீண்டும் நாம் போராடவேண்டியுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
நுகேகொட ஆனந்த சமரகோன் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற படைவீரர்களின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் வீடு செல்ல அனுமதி


பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 26 பேர் இன்று மாலை வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  1பிரிட்டனில் அரசியல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 6 தமிழர்கள், 7 முஸ்லிம்கள், 3 சிங்களவர்கள் உட்பட 26 பேர் பிரிட்டனிலிருந்து நேற்றுமாலை விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டனர். அவர்களுடன் பிரித்தானிய எல்லை முகவரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்றும் விமானத்தில் வந்திருந்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கை வந்தடைந்த, நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்தபின் இன்று மாலை விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சற்றுமுன் வெளியேறினர்

திருப்பி அனுப்பியது சரியே'-பிரிட்டன்,இலங்கையர்கள் 26 பேரை


இலங்கையர்கள் 26 பேரை பிரிட்டனில் இருந்து அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பிய தமது நடவடிக்கையை பிரிட்டன் நியாயப்படுத்தியுள்ளது.

அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரனைகளில், அவர்களுக்கு இலங்கையில் எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை என்று தாம் திருப்தியடைந்துள்ளதாக அது கூறியுள்ளது.

ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்கள் தமது நாடுகளில் தொந்தரவுக்குள்ளாகலாம் என்று அச்சம் தெரிவித்து ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் உட்பட மனித உரிமை அமைப்புக்கள் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்துள்ளன.

திருப்பி அனுப்பப்பட்ட இந்த 26 பேரும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் உறுதி செய்துள்ளார்.

இந்த 26 பேருக்கும் பிரிட்டனில் தங்குவதற்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்று கண்டறியப்பட்டுள்ளதாக லண்டனில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

இவர்கள் அனைவரது வழக்குகளும் தனித்தனியாக கவனத்துக்கு எடுக்கப்பட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்பது அந்த விசாரணைகளில் கண்டறியப்பட்டிருந்தால், அவர்களுக்கு தஞ்சம் வழங்கப்பட்டிருக்கும் என்றும் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

மனித உரிமை அமைப்புக்களால் இது குறித்து எழுப்பப்பட்ட கரிசனைகளை வெளியுறவு அமைச்சு நிராகரித்துள்ளது.

இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்களில் உள்ள தமிழர்கள் இலங்கையில் தவறாக நடாத்தப்படுவதற்கான ஆபத்து இருப்பதாக சர்வதேச அபய ஸ்தாபனம் கூறியுள்ளது.

இவ்வாறு திருப்பி அனுப்பப்படவிருந்தவர்களில் ஒருவரான, விடுதலைப்புலிகளால் படைக்கு சேர்க்கப்பட்டிருந்த ஒருவர், விமானத்தில் ஏற்றப்படுவதற்கு முன்னதாக தற்கொலைக்கு முயன்றிருந்தார் என்று அது கூறுகிறது.

ஆனால், அவர் திருப்பியனுப்பப்படுவதை தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவை அவரது சட்டத்தரணி இறுதிக் கட்டத்தில் பெற்றுவிட்டார்.

கடந்த மார்ச் மாதந்தான் எதேச்சையான காணாமல் போதல்களும், கைதுகளும் இலங்கையில் தொடர்வதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சு கவலை வெளியிட்டிருந்தது.

இவர்கள் ஒவ்வொருவரும் காலை முதல் மதியம் வரை ஒவ்வொருவராக இலங்கை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களில் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களும், விசா காலவதியாகிவிட்ட பின்னரும் பிரிட்டனில் தங்கியவர்களும் இருந்தனர்.

இவ்வாறு திரும்பி வந்த அனைவரும் ஏதாவது கிரிமினல் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருந்தார்களா என்பது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் அவர்களை விசாரிப்பதாக இலங்கை பொலிஸ் தரப்புப் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி கூறினார்.

பின்னர் ஐ ஓ எம் என்று அழைக்கப்படுகின்ற குடிபெயர்ந்தவர்களுக்கான சர்வதேச நிறுவனம் அவர்களுக்கு சிறிய நிதி உதவிகளை வழங்கியது.

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம்

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்
1. ஏன் இதை எழுதுகிறேன்?
அன்பான ‘தேனீ’ வாசகர்களுக்கு,
நான் ஏன் இந்தத் தொடரை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்கு சொல்லி விடுவது அவசியமானது.
அதற்கு முன்னதாக எனது புலி வதை முகாம் பற்றிய அனுபவங்களை எழுதுவதற்கு ‘தேனீ’ இணையத்தளத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதை விளக்கி விடுவதும் முக்கியமானது.
ஏறத்தாழ 10 ஆண்டுகளாக நான் தேனீ இணையத்தளத்தின் ஓரு வாசகனாக இருந்து வருகின்றேன். அத்துடன் அவ்வப்போது முக்கியமான சில விடயங்களில் எனது கருத்தை அதன் ஊடாக வெளிப்படுத்தியும் வந்திருக்கிறேன். இவற்றுக்காக நான் தேனீயைத் தேர்ந்தெடுத்ததிற்குக் காரணம், அது எந்தவொரு கட்சியையோ, இயக்கத்தையோ அல்லது குழுவையோ சாராத சுதந்திரமான ஒர் ஊடகம் என்பதனாலாகும்.
அத்துடன் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பின்பற்றும் தமிழ் தேசியவாத சேற்றுக்குள் அமிழ்ந்துவிடாமல், தேனீ தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய திசைமார்க்கமான ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிற்போக்கு எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியுடன் ஊன்றி நின்றதுமாகும். குறிப்பாக பாசிசப் புலிகளை அழித்தொழிப்பதற்கான பொதுப் போராட்டத்தில் தேனீ ஆரம்பம் முதல் இறுதிவரை எவ்வித ஊசலாட்டமுமின்றி நிலை தழும்பாது நின்று வந்துள்ளதுமாகும்.
இதுதவிர இன்று தமிழில் செயற்படுகின்ற இணையத்தளங்களில் தேனீ மட்டுமே மிக அதிக எண்ணிக்கையான வாசகர்களால் பார்வையிடப்படுவது என்பதும், இலங்கையில் வெளிவருகின்ற பிரதான தமிழ் தினசரிகளின் வாசகர்களுக்கு இணையான வாசகர்கள் தினசரி தேனீயைப் பார்வையிடுகிறார்கள் என்பதும் இன்னொரு காரணமாகும். அத்துடன் தேனீ எனது இந்தத்தொடரை எவ்வித நிபந்தனைகளுமின்றி வெளியிட வந்ததிற்காக, அதன் நிர்வாகிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரி, இனி விடயத்துக்கு வருவோம்.
2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போருடன் புலிகளுடனான அரசாங்கத்தின் 30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த முடிவுடன் புலிகளால் இலங்கையில் - குறிப்பாக தமிழ் சமூகத்தில் உருவாக்கி வைத்திருந்த மனித நேயம், நாகரீகம் என்பனவற்றுக்கு அப்பால் உருவாக்கி வைத்திருந்த கொடூரமான பாசிச கட்டமைப்பு முற்றுமுழுதாக நொருங்கி விழுந்து மக்களுக்கு ஓரளவு நிம்மதியும் ஏற்பட்டது உண்மைதான்.
ஆனால் அதை அறுதியும் இறுதியுமான வெற்றியாக மக்கள் கருதிவிடக்கூடாது. தமிழ் தேசியவாதத்தின் பெயரால் தமிழ் பிற்போக்கு உருவாக்கி வைத்திருந்த ஒரு கட்டமைப்பு மட்டுமே, புலிகளின் அழிவுடன் அழிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். அந்த கட்டமைப்பை உருவாக்கிய பிற்போக்கு தமிழ் தேசியவாதம் (அதற்குரிய சரியான பதம் ‘யாழ்ப்பாணியம்’ என்பதே. நாசிசம், பாசிசம், சியோனிசம், பார்ப்பனியம் என்ற சொற்கள் மனித விரோத செயற்பாடுகளை விளிக்க எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றனவோ, அவ்வாறான அர்த்தத்தில் ‘யாழ்ப்பாணியம்’ என்ற சொல்லையும் நாம் பயன்படுத்த முடியும்) மீண்டும் மீண்டும் தமிழ் சமூகத்தில் பாசிச சக்திகளை உருவாக்க முயன்று வருகிறது. அது தனது இறுதி மூச்சுவரை அதைச் செய்து கொண்டே இருக்கும். இதில் இன்னொரு  விசேட அம்சம் என்னவெனில், தற்போது தமிழ் பாசிசம் சர்வதேசிய ரீதியாக நன்கு வேரூன்றியுள்ளதுடன், அது முன்னெப்போதையையும்விட நெருக்கமான ஏகாதிபத்தியத் தொடர்புகளையும் கொண்டுமுள்ளது என்பதாகும்.
எனவே இன்று இலங்கையில் மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மேட்டுக்குடி சக்திகளால் உருவாக்கி பாதுகாக்கப்படுகின்ற பிற்போக்கு தமிழ் தேசியவாத பாசிச சக்திகளை முறியடிக்கும் போராட்டம் இன்னமும் முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்வதுடன்,  அதை இல்லாதொழிக்காமல் தமிழ் மக்களின் உண்மையான தேசிய ஐக்கியத்தையோ, விடுதலையையோ நாம் அடைய முடியாது என்பதையும், அச்சமூகத்தின் எதிர்காலத்தில் அக்கறையுள்ளவர்கள் புரிந்து கொள்வது அவசியமானது. அதுவே நான் இத்தொடரை எழுதுவதற்கு தீர்மானித்ததின் அடிப்படைக் காரணமாகும்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் புலிகளை தமது ‘மீட்பர்கள்’ என்றும், ;விடுதலை வீரர்கள்’ என்றும், ஏன் ‘கடவுளர்கள்’ என்றும் கருதிய ஒரு காலம் இருந்தது. இன்றும்கூட அவ்வாறான ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்க சில சக்திகள் முயன்று வருகின்றனர். ஆனால் அவர்களது நிஜமுகம் என்ன என்பதை எனது இந்த அனுபவத்தொடர் ஓரளவு தன்னும் மக்களுக்கு விளக்கும் என நான் நம்புகின்றேன். நான் அவர்களது கைதியாக இருந்த காலத்தில் நான் அனுபவித்த உடல் - உள வேதனைகளை மட்டுமின்றி, அவர்களால் அந்தக் காலகட்டத்தில் என்னுடன் வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் அனுபவித்த  வேதனைகளையும் இங்கு பதிவு செய்வது அவசியம் என்று கருதுகின்றேன். இதில் அவர்களது இயக்க உறுப்பினர்களாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ‘சீவன்களின்’ துன்பங்களையும் உள்ளடக்குவது அவசியமானது.
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மட்டுமின்றி, அவர்களது சிந்தனைகள், செயற்பாடுகள், பழக்க வழக்கங்கள் என்பன பற்றியும், அவர்கள் தமிழ் சமூகத்தின் மீது கட்டமைத்து வந்த பாசிச நிர்வாக இயந்திரத்தின் தன்மை பற்றியும் நான் அவதானித்தவை, அவர்கள் சிலருடன் மேற்கொண்ட உரையாடல்கள் மூலம் பெறப்பட்டவை என்பனவற்றையும் நான் இங்கு தெரிவிப்பது அவசியமானது என்று கருதுகிறேன்.

புலிகளால் நான் 1991 டிசம்பர் மாதம் 26ம் திகதி கைதுசெய்யப்பட்டு, 1994 ஜூன் 06ம் திகதி வரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களது வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டேன். அவர்கள் ‘மனமிரங்கி’ என்னை விடுதலை செய்திராவிட்டால், இன்று நான் உங்களுடன் எனது கருத்துகளைப் பகிர்வதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அவர்கள் என்னை விடுதலை செய்ததை எனது இரண்டாவது பிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

எனது புலிகள் பற்றிய அனுபவங்கள் அவர்களின் கொடூரமான உருவத்தின் ஒரு வெட்டுமுகம் மட்டுமே. அதாவது ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல. அவர்களுடைய உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்த இது போதுமானதல்ல. அதனை முழுமையாகக் கொண்டுவருவதாக இருந்தால், அவர்களால் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு, ஏதோ சில காரணங்களால் தப்பிப் பிழைத்து வெளியே வந்து, தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இன்னமும் பயத்துடன் முகம் காட்டாது வாழும் நூற்றுக்கணக்கான முன்னாள் கைதிகள் முன்வர வேண்டும். அது அவர்கள் தமிழ் சமூகத்துக்கும், மனித குலத்திற்கும் செய்யும் வரலாற்றுக் கடமையாகும்.

எனது புலி வதை முகாம் அனுபவங்கள், அது ஏற்பட்டு 18 வருடங்கள் தாமதமாக வெளிவருவதற்கு காரணங்கள் உண்டு. நான் விடுதலையாகி வெளியே வந்ததும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வந்த எனது ஆத்ம தோழர்களும், நண்பர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வேறு பல சமூக ஆர்வலர்களும், நான் புலிகளின் இரும்புப் பிடியின் கீழ் இருந்த போது பட்ட அவலங்களின் துன்பங்களின் அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்து, உலகின் முன் வெளிச்சத்தில் வைக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ஆனால் 1995ல் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்படும் வரை, நான் அவர்களது தீவிர கண்காணிப்புக்குள் இருந்ததினால், அந்தச் சூழ்நிலையில் எனது சுண்டு விரலைக்கூட அவர்களுக்குத் தெரியாமல் அசைக்க முடியவில்லை.

1999ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு சென்ற பின்னரும்கூட, அவர்களது வேவுக்கண்கள் என்னைப் பின்தொடர்ந்த வண்ணமே இருந்தன. மீண்டும் நான் அவர்களது தீவிர கண்காணிப்பு  வட்டத்துக்குள் படிப்படியாகக் கொண்டுவரப்படுகிறேன் என்று உணர்ந்த நிலையில், தவிர்க்க முடியாமலும், மனம் விரும்பாத நிலையிலும், எனதும் எனது குடும்பத்தினதும் பாதுகாப்புக் கருதி நான் நாட்டை விட்டு 2004 டிசம்பர் 04ம் திகதி வெளியேறினேன். நான் புலம்பெயர்ந்து குடியேறிய நாட்டிலும்கூட புலிகளின் மரண நிழல் என் போன்றவர்கள் மீது படிந்து கொண்டே இருந்தது. அதனால் வெளிநாட்டுக்குத் தப்பி வந்தும்கூட, கடந்த 6 வருடங்களாக ஓரளவு ஒதுங்கி மறைந்து வாழ வேண்டியே இருந்தது. இப்பொழுது புலிகள் தாயகத்தில் பெரும்பாலும் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும்கூட, இன்றும்கூட அவர்கள் வைத்திருக்கும் பலமான சர்வதேச வலைப்பின்னல் காரணமாக, அந்தப்  பாசிஸ்ட்டுகளுக்கு எதிரானவர்களுக்கு உலகின் எந்த மூலையிலாவது பூரண பாதுகாப்பு உள்ளது என்று சொல்ல முடியாது.

இருப்பினும் எமக்குள்ள வரலாற்றுக் கடமையை ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது நாம் நிறைவேற்றியே தீர வேண்டும். இது வரலாறு எமக்கு இடும் கட்டளையாகும். தவறுவோமாக இருந்தால், அது எமது மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். அதற்காக சில துன்பங்கள் ஏற்படினினும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அந்த உணர்வின் காரணமாகவே நான் இத்தொடரை எழுத எண்ணினேன்.

நான் இதை எழுதும் போது உண்மையுடனும் சத்தியத்துடனும் அணிவகுத்துச் செல்லவே எப்பொழுதும் விரும்புகின்றேன். புலிகள் என்னைக் கைது செய்ததால்தான் நான் அவர்கள் மீது கோபம் கொண்டு இதை எழுதுகிறேன் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் மறுபக்கமாகப் பார்த்தால் நான் ஏதோவொரு வகையில் அவர்களது தீய செயற்பாடுகளை எதிர்த்ததாலேயே, அவர்கள் என்னைக் கைதுசெய்து சித்திரவதைக்குட்படுத்தினர் என்பதே உண்மையாகும். அந்த வகையில் பார்த்தால் மனிதகுல விரோதிகளான புலிகள் எனக்கு மாபெரும் கௌரவத்தை வழங்கியுள்ளனர் என்றே கூற வேண்டும். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

மனிதர்கள் எல்லோரும் பிறக்கின்றனர் வாழ்கின்றனர். இனப்பெருக்கம் செய்கின்றனர். தமது சந்ததிகளுக்காக சொத்துக்களைத் தேடி வைத்துவிட்டு மரணிக்கின்றனர். சொத்துத் தேடுவதைத் தவிர ஏனைய அனைத்தையும் மிருகங்ளும் கூடச் செய்கின்றன. எவன் ஒருவன் தான் வாழும் காலத்தில் தனது சக மனிதனுக்கு எதிராகவும், தன்னுடைய இன்றியமையாத சுற்றுச்சூழல் நண்பர்களான விலங்குகள், தாவரங்கள் என்பனவற்றுக்கு எதிராகவும் உருவாகும் அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறானோ, அவன்தான் உண்மையான மனிதன் ஆவான். இது நமது முன்னோடிகளால் எமக்கு தொடர்ந்து போதிக்கப்பட்டு வரும் பேருண்மையாகும

இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் நேரத்தில், என்னுடன் புலிகளின் வதை முகாம்களில் சக கைதிகளாக இருந்து, எம்மில் சிலருக்கு கிடைத்த மீண்டும் வாழும் சந்தர்ப்பம் கிடைக்காமல், புலிகளின் கொலைக்களங்களில் பலியிடப்பட்டவர்களுக்கும், எமக்குத் தெரியாமல் அவர்களால் மரணிக்க வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும், எனது கண்ணீராலும், இதயத்தில் கசியும் செந்நீராலும் அஞ்சலி செய்கின்றேன். அவர்களது துன்பப்படும் ஆத்மாக்கள் சாந்தி பெற மனதார பிரார்த்திக்கிறேன்.

அதேநேரத்தில், இடதுசாரித்துவம் பேசியவர்கள் சிலரும், மாற்றுக்கருத்துக் கதைத்தவர்களும், மனித உரிமைக் கோசம் போட்டவர்களும் சந்தர்ப்பவாதிகளாகவும், பதவி வேட்டைக்காரர்களாகவும், ஓடுகாலிகளாகவும் மாறிப் புலிகளின் காலடியில் சரணாகதி அடைந்துவிட்ட நிலையிலும்கூட, உயிராபத்துகள், பல இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் நிலை தழும்பாது நின்று, புலிகளின் பாசிசச் செயற்பாடுகளை இறுதிவரை நம்பிக்கையுடன் எதிர்த்துப்  போராடிய இன்றும் போராடுகின்ற உண்மையான முற்போக்கு – ஜனநாயக சக்திகளுக்கும் சிரம் தாழ்த்துகின்றேன்

நன்றி.

அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்

Alaveddi, சரவணபவானின் பேச்சு இனக் குரோதத்தையூட்டும்,கூட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை


அளவெட்டியில் அமளி துமளியில் முடிந்த கூட்டமைப்பு கூட்டம் !
உண்மையில் நடந்தது என்ன ?
- நமது யாழ் நிருபர், யூன் 17
நேற்று புதன் கிழமை யாழ் அளவெட்டி மகாஜனா சபை மண்டபத்தில் நடைபெற்று அமளி துமளியில முடிவடைந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் காங்கேசன்துறைப் பொறுப்பாளர் மற்றும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களிடமிருந்து தெரியவரும் விபரங்களின்படி நடந்த உண்மைச் சம்பவங்கள் வருமாறு.

நேற்று மாலை 3 மணியளவில் இக்கூட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் மாலை 6 மணிக்குப் பின்னரே கூட்டம் ஆரம்பமாகியிருந்துள்ளது. அத்துடன் இக் கூட்டத்தில் ஆகக் கூடியளவு 50 பேர்கள் வரையிலேயே சமூகமளித்திருந்துள்ளனர் அத்துடன் இவர்களுள் 25 பேர்கள்வரை உள்ள+ராட்சி சபை வேட்பாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இக் கூட்டம் பற்றிய விபரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்த பின்னர் இக் கூட்ட ஏற்பாட்டுக்கான அனுமதியைப் பெறும்படி இக் கூட்ட ஏற்பாட்டாளர் உள்ள+ர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரத்திலுள்ள ஒருவரினால் ஒன்றுக்கு மேற்பட்டதடவைகள் அறிவுறுத்தப்பட்டிருந்துள்ளார் எனத் தெரியவருவதுடன், இதுவரை தெரியவராத காரணங்களுக்காக இவ் அறிவுறுத்தல் உதாசீனப்படுத்தப்பட்டு கூட்ட ஏற்பாட்டாளர்களினால் இக் கூட்டத்திற்கான பொலிசாரின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இக் கூட்டம் ஆரம்பமாகிய பின்னர் இராணுவத்தினர் வந்திருந்து கூட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டிருந்ததா என விசாரித்துள்ளனர். அப்போது அவ்வாறு அனுமதிகள் ஏதும் பெறப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் அனுமதியின்றி கூட்டத்தை நடாத்துவது சட்டப்படி தவறு என்றும் கூட்டத்தை நிறுத்தமாறும்கூறி திரும்பிச் சென்றுள்ளனர். அவர்களுடைய இந்த அறிவுறுத்தலையும்மீறி கூட்டம் தொhடர்ந்து நடந்துள்ளது. அத்துடன் இக் கூட்டத்தில் பேசியவர்கள், குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் திரு சரவணபவானின் பேச்சு இனக் குரோதத்தையூட்டும் வகையில் அமைந்திருந்ததாக இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஒருவர் கவலை தெரிவித்தார்.

இப் பிரச்சாரக்கூட்டம் ஆரம்பமாகி, இரண்டு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் முடிவடைந்து மூன்றாவதாக ‘உதயன்’ பத்திரிகை நிறுவனர் திரு சரவணபவான் பேசிக் கொண்டிருந்தபோது சீருடையில் வந்திருந்த ஏறத்தாள பத்து இலங்கை ராணுவத்தினர் கூட்டத்தை கலைக்க முற்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புப் பிரிவினருடன் வாய்த் தர்க்கம் ஏற்பட்டு இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில் வந்திருந்த ராணுவத்தினர் சிலர் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களை பொல்லுகளால் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். இது தவிர அங்கிருந்த வாகனங்கள் எவையும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கவில்லையென்றே தெரியவருகிறது. அக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தமது வாகனங்களில் வந்திருந்தனர் எனவும், ஏனையோர் மோட்டார் சையிக்கில்களிலும், துவிச்சக்கர வண்டிகளிலுமே வந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரினதும் வாகனங்கள் எவையும் தாக்குதல்களுக்கு உள்ளாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் அல்லோகல்லோலப்பட்டு எழுந்து ஓடும்போது அங்கு தரித்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சையிக்கில்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் ஒன்றில்மேல் ஒன்று விழுந்து சில சேதங்கள் ஏற்பட்டிருக்கலாமெனவே பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அத்துடன், கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் இன்று காலையே திரும்பிச் சென்று தமது மோட்டார் சையிக்கில்களையும், துவிச்சக்கர வண்டிகளையும் எடுத்துச் சென்றதாகவும், அவைகள் எவையும் அடித்து நொருக்கப்பட்டதாக அடையாளங்கள் எவையும் இருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர். 

இவைகiளே உண்மையில் நடந்த சம்பவமாயிருக்க யாழ் குடாநாட்டுப்பத்திரிகைகள் சில இச்சம்பவத்தை திரித்து ஊதிப் பெருப்பித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக யாழ் ‘தினக் குரல்’ மற்றும் ‘உதயன்’ பத்திரிகைகள் மிக மோசமான முறையில் செய்திகளை திரித்து வெளியிட்டுள்ளன. இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே இக்கூட்டத்திற்கு பொலிசாரின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லையெனவும், 10ற்கும் 15ற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான ராணுவத்தினரே ரகளையில் ஈடுபட்டதாகவும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள நிலையில், பொலிசாரின் அனுமதிபெற்றே இக்கூட்டம் நடாத்தப்பட்டதாகவும், கூட்ட மேடையில் மட்டும் 50ற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் ஏறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இப் பத்திரிகைகள் செய்திகளை திரித்து வெளியிட்டுள்ளன. ‘உதயன்’ பத்திரிகை, இக் கூட்டத்திற்கு பொலிசாரின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்ற விடயத்தை மறைத்துள்ளதுடன், வழமைபோல தமது நிறுவன இயக்குனர் நூழிழையில் உயிர் தப்பினார் என கதை எழுதியுள்ளது.

வெள்ளி, 17 ஜூன், 2011

மோசடி.கல்வி முதலாளிகளை கல்வியாளர்கள் என சமசீர் கல்வி திருத்தகுழுவில் சேர்த்திருப்பது


சமச்சீர்க் கல்வி குழுவில் மாற்றம் வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் 

டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.
ஆனால், 
கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர்.

கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது

அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.
சமச்சீர்க் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டுவிட்டனர்.

எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் ஒசார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலை பிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

நமது கருத்து : அய்யா நீங்கள் மட்டும்தான் மிகச்சரியான ஒரு எதிர்கட்சியாக உங்கள் கடமையை செய்துள்ளீர்கள். ஏனைய எதிர்கட்சிகள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒய் ஜி பார்த்தசாரதியை சுட்டி காட்டினால் ரஜனியின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவருமே என வாய்மூடி கொண்டிருக்கிறார்கள். கப்டன் மற்றுமொரு கல்வி முதலாளி போதாக்குறைக்கு  ரஜனியை வேறு பகைக்க அவருக்கு என்ன பைத்தியமா/?
ஒரு கொசுறு செய்தி, ஜெயலலிதாவின் சித்தி ஸ்ரீ வித்யா பிரபல நாடக நடிகையாவார். அவர் நீண்ட காலமாக இதே பார்த்தசாரதி குடும்பத்தின் நாடகங்களில் நடித்து வந்துள்ளார். இந்த ஒய் ஜி பார்த்தசாரதியின் மகன்தான் பிரபல காமடி நடிகன் ஒய் ஜி மகேந்திரன். 
 Kopi ,Montreal
அடடே, கல்வியாளர் என்பதற்கு புது விளக்கத்தினை அரசாங்கம் கொடுத்திருக்கிறதே. மகிழ்ச்சி. பெருமளவிற்குப் பணம், பெரிய அந்தஸ்து கொண்ட மனிதர்கள் தங்கள் பிள்ளைகளை பெருமளவிற்கு பணம் செலுத்தியும், இக்கல்வி நிலையங்கள் ஏழை குழந்தைகளை தகுதியில்லாதவர்கள் என சேர்க்க மறுக்கும் கல்வி நிலையங்களின் தாளாளர்கள் தான் கல்வியாளர்கள் என்றால், சபாஷ், பலே. இந்த இரு கல்வியாளர்களும் எனக்கு தெரிந்த வரையில் சமசீர் கல்வி சம்பந்தமாக இதுவரை ஏதும் வாய் திறக்கவில்லை என்றே அறிகிறேன். ஜெயலலிதாவிற்கு கருணாநிதியின் மீது இருக்கும் கோபத்தின் அளவு எத்துனையானது என்று எவரும் நினைக்க வேண்டாம். மெட்ரிக் பள்ளிகள் இந்த அரசிற்கு கொடுக்கும் பிரஷர் எத்துனையானது என்பதே இதிலிருந்து விளங்குகிறது.

சாய்பாபா அறையில் குவியல் குவியலாக சிக்கிய பணம், நகை!

அனந்தபூர்: புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சத்ய சாய்பாபாவின் பிரத்யேக அறையான யஜூர்வேத மந்திர் மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு கோடி கோடியாக பணமும், பெருமளவில் நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. ஏராளமான கம்ப்யூட்டர்களும் கிடைத்துள்ளன. பணம், நகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 28-ம் தேதி பகவான் சத்யசாய் பாபா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 24 ம் தேதி இறையடி சேர்ந்தார். அப்போது அவர் வசித்து வந்த பிரத்யேக அறையான யஜூர்வேதமந்திர் பூட்டப்பட்டது.

தற்போது ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பகவான் சத்யசாய்பாபா வசித்து வந்த அறை திறக்கப்பட்டது. முன்னாள் தலைமை நீதிபதியும், சத்ய சாய் டிரஸ்ட் உறுப்பினருமான பி.என். பகவதி, செயலாளர் சக்ரவர்த்தி, சாய்பாபாவின் சீடரும் பாதுகாவலருமான சத்யஜித் ஆகியோர் யஜூர்வேத மந்திரினுள் சென்றனர்.

அந்த அறையைத் திறக்கும் ரகசிய எண் சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித்துக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரே அறையைத் திறந்தார்.

பின்னர் உள்ளே போனபோது ஒவ்வொரு அறையிலும் பணமும், நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. பணம் கட்டுக் கட்டாக இருந்ததாம். வைர நகைகள் பெருமளவில் இருந்தன. இவற்றின் மதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பல கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

அங்கிருந்த பணம், நகைகளை கணக்கெடுத்து தனித் தனியாக பிரிக்கும் பணியில் மாணவர்கள் குழுவை ஈடுபடுத்தினர். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் பணத்தையும், நகைகளையும் வங்கிக்கு கொண்டு சென்று டெபாசிட் செய்தனர்.

English summary
The doors of 'Yajurveda Mandir', abode of late spiritual leader Sathya Sai Baba in the Prashanti Nilayam ashram at Puttaparthi in Anantapur district, were opened yesterday.

மங்காத்தா காப்பியா ஒரிஜினலா? Is Jannat is Mankatha?


ஒரிஜினல் திரைக்கதை எழுதுவதைவிட எங்கிருந்தாவது சுட்டு எடுப்பதில் கில்லாடி வெங்கட்பிரபு. இதை நாம் சொல்லவில்லை... சரேஜா படம் வெளியானபோது அவரே சொன்னதுதான்.

அஜீத்தை வைத்து அவர் இப்போது இயக்கியுள்ள மங்காத்தா எந்த ஹாலிவுட் அல்லது வேறு மொழிப் படத்திலிருந்து சுடப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான பதிலை சிலர் ஏற்கனவே எழுதியும் விட்டார்கள். இந்தியில் மேட்ச் பிக்ஸிங் பற்றி வெளியான ஜான்னெட் படத்தின் உல்டாதான் மங்காத்தா என்ற தகவல் பரபரப்பாக உலா வர, பதறிப் போன மங்காத்தா டீம் மறுப்பறிக்கையாக விட்டுக் கொண்டுள்ளது.

எந்த செய்தி வந்தாலும் அலட்டிக் கொள்ளாத மாதிரி காட்டிக் கொள்ளும் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் இப்போது மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வந்தா தெரிஞ்சிடப் போகுது... ஆட்டம் ஒரிஜினா, அப்பட்ட காப்பியா என்று!

English summary
Venkat Prabhu and Dayanithi Azhagiri, the director and producer respectively denied that their forthcoming Ajith starrer Mangatha has copied from a Bollywood movie.

Japan Envoi திமுக அரசு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை

சென்னை: தமிழகத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்காக பெருமளவில் நிதி பெற்ற திமுக அரசு ஆனால் எதையுமே செய்யவில்லை. இப்போதைய அதிமுக அரசாவது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என ஜப்பான் தூதர் அகிடகா சைக்கி பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை நேற்று அகிடகா சைக்கி சந்தித்துப் பேசினார். அப்போது அவருடன் ஜப்பான் தூதரக ஆலோசகர் மசுகா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்தியத் தொழில் கூட்டமைப்பான சிஐஐ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சைக்கி பேசினார். அப்போது அவர் முந்தைய திமுக அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.

அவர் பேசுகையில், முந்தைய திமுக அரசு சாலைகள் மற்றும் துறைமுகத்தை மேம்படுத்துவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இந்த விவகாரத்தை எடுத்துக் கூறினேன். அவர் இந்த விவகாரத்தை கவனிப்பதாக உறுதி அளித்தார். எனக்கும் இந்த விவகாரத்தில் புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தை விரைந்து கவனிக்க வேண்டும். கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை எனில் ஜப்பான் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வேறு மாநிலங்களை பார்க்க வேண்டியிருக்கும்.

ஜப்பானில் இருந்து வர்த்தகக் குழு ஒன்று செப்டம்பரில் இந்தியா வர உள்ளது. அந்தக் குழுவின் முக்கிய நகரங்கள் பட்டியலில் சென்னையும் இடம்பெற்றிருக்கும் என்றார் அவர்.

English summary
Japanese Ambassador Akitaka Saiki has blamed earlier DMK govt for not taking any action to improve infrastructure development in TN. He met CM Jayalalitha yesterday and complained about this to her.
மாநில அரசியலில் ஒரு வெளிநாடு தலையிடுவது போன்றிருக்கிறது ஜப்பான் தூதுவரின் பேச்சு. ஜெயலலிதா மீது இவ்வளவு நல்லெண்ணம் இருப்பதால் இவரையும் பேசாமல் அதிமுகவில் சேர்த்துவிடலாம். அல்லது ஒரு கண் இவர் மீது வைத்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது, இவரின் அதீத அபிலாசை எதோ ஒரு மர்ம முடிச்சின் ஆரம்பம் என்ற அய்யம் எழ வைக்கிறது,

ரஜினியின் Y.G. பார்த்தசாரதி சமச்சீர் கல்விக்கான நிபுணர் குழு உறுப்பினரானார்!

சமச்சீர் கல்விக்கான நிபுணர் குழு நியமனம்-திருமதி ஒய்ஜி பார்த்தசாரதி உறுப்பினரானார்!

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி கல்வி நிறுவன முதலாளிகள் அதுவும் நடிகர் ரஜனிகாந்தின் சம்பந்தி குடும்பம் இந்த சமசீர் கல்வியால் வருமானம் இழக்கபோவதால்தான் ஜெயலலிதா தமிழகத்தை காப்பாற்றிவிட்டார் என்று ரஜனிகாந்த் குறிப்பிட்டார் என்பது மிகத்தெளிவாக தெரிந்து விட்டது.

இனி தமது வருமானமும் மேட்டுக்குடி நலன்களும் பாதுகாக்கும் வகையில் சமசீர் கல்வி திட்டம் அதன் நோக்கங்கள் கொஞ்சம் கூட நிறைவேறாத படி ஓரம்கட்டப்படும். நடிகர் ரஜனியின் குடும்ப கல்வி நிறுவனங்கள் போன்றவைக்கு இனி கொண்டாட்டாம்தான்.

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆராய நிபுணர் குழு இன்று அறிவிக்கப்பட்டது.

நடப்புக் கல்வியாண்டில் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்தலாம். பிற வகுப்புகளுக்கு இதை அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு இன்று அறிவிக்கப்பட்டது.

குழு விவரம்:

1. குழுத் தலைவர் - தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி
2. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா
3. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வசுந்தரா தேவி
4 மத்திய இடைநிலைக்கல்வி வாரிய முன்னாள் இயக்குநர் ஜி.பாபசுப்ரமணியன்
5. சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிக் பள்ளி முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி
6. கோபாலபுரம் டிஏவி பள்ளி நிறுவனர் ஜெயதேவ்
7. பத்மா சேஷாத்ரி பள்ளி இயக்குநர் திருமதி ஒய்ஜி பாராத்திசராதி
8. தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன பேராசிரியர் பி.கே. திரிபாதி
9. பேராசிரியர் அனில் சேத்தி

இந்தக் குழுவினர் 2 வாரங்களுக்குள் தங்களது ஆய்வறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஒரு வாரத்திற்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை 1, 6 ஆகிய வகுப்புகளைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகம் வைத்து பாடம் நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம்.

நோட்டீஸ் போர்டில் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்:

இந் நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கோட்டையில் நிருபர்களிடம் கூறுகையில், 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் விநியோகிக்க நேற்றே உத்தரவிடப்பட்டுவி்ட்டது.

சமச்சீர் கல்வி நிபுணர் குழு அமைக்கப்பட்டு விட்டதால் ஆய்வுப் பணி உடனடியாகத் தொடங்கும். குறிப்பிட்ட தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும்.

தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பெற்றோர்களிடம் இருந்து புகார் வந்தால் மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்கும். இதுவரை குறிப்பிட்டு எந்த பள்ளி மீதும் புகார் வரவில்லை. கட்டணப் பிரச்சனையில் அரசு தலையீடு எதுவும் இருக்காது.

இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பள்ளிக்கூடங்கள் வசூலித்தால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

English summary
Experts panel on USE will be announced today. This panel, headed by TN Govt's chief secretary will review the uniform syllabus education and give its report to Madras HC within two வீக்ஸ்
 நடிகர் ரஜனியின் குடும்ப கல்வி நிறுவனங்கள் தொடர்பான எமது முந்தைய செய்தியை மீண்டும் வாசகர்களின் ஆய்வுக்காக மறுபதிப்பு செய்துள்ளோம்,

கல்வி முதலாளி ரஜனியின் ஜெயலலிதா புராணம்

 வியாழன், 16 ஜூன், 2011
தமிழக தனியார் கல்வி நிறுவனங்களும் அவற்றில் தமது பிள்ளைகளை படிப்பிக்கும் பணக்கார வர்க்கமும் சமசீர் கல்வியின் மிகப்பெரும் எதிரிகளாவர்.
குப்பன் சுப்பனின் பிள்ளைகளும் தமது பிள்ளைகளும் ஒரே விதமான படிப்பை படிப்பதா? பின் எமக்கு என்ன மரியாதை?
இக்கல்வி நிறுவனங்களின்  உரிமையாளர்கள் ஒரு புறம் எப்படியாவது திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று துடியாத் துடித்து அதில் இன்று பெருவெற்றி பெற்றும் விட்டனர். ஆனாலும் என்ன நீதிமன்றங்கள் சமசீர் கல்விக்கு ஆதரவான தீர்மானத்தை வழங்கி விட்டன.

பிரபல கல்வி நிறுவன முதலாளிகளான ரஜனி குடும்பமும் தெய்வங்களை எல்லாம் வேண்டி கலைஞர் அரசை வீழ்த்திவிட்டார்கள்.
ரஜனி ஜெயலலிதாவை பார்த்து தமிழகத்தை காப்பாற்றிவிட்டீர்கள் என்று கூறியது உண்மையில் தனது கல்வி நிறுவனங்களின் வருமானத்தை காப்பாற்றிவிட்டீர்கள் என்பதன் உட்பொருளே.
ரஜனி அண்ணே அவசரப்பட்டு விட்டீர்கள்.
தமிழகத்தில் அரிசியும் சத்துணவும் எப்படி நிரந்தரமாகி விட்டனவோ அப்படியே சமசீர் கல்வியும் தான் என்பதை வரலாறு உம்மைப்போன்ற பார்பனிய  மேட்டுக்குடிகளுக்கு இனி சொல்லும்.
ரஜினியின் 

விபச்சாரத்தில் இந்தியப் பெண் வக்கீல் அமெரிக்காவில் கைது

சிகாகோ: பணம் வாங்கிக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் வக்கீல் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அவரது பெயர் ரீமா பஜாஜ். 25 வயதாகும் இவர் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சைகமோர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டுதான் இவர் வக்கீலாகப் பதிவு செய்து பணியாற்ற ஆரம்பித்தார்.

இவர் மீது டிகால்ப் கவுன்டி கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பணம் வாங்கிக் கொண்டு செக்ஸை விற்றதாகவும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

50 டாலர் பணம் வாங்கிக் கொண்டு தனது வக்கீல்அலுவலகத்திற்கு அருகே ஒரு ஆணுடன் இவர் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்தக் குற்றச்சாட்டு கூறுகிறது.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ரீமா பஜாஜ் மறுத்துள்ளார்.

English summary
An Indian American woman attorney from Sycamore in the state of Illinois has been charged with three counts of prostitution. Reema Bajaj, 25, who had received her law license last year, pleaded not guilty to the two misdemeanor and one felony counts, according to a report in the Chicago Tribune. Bajaj is charged for allegedly performing a sex act with a man last month for USD 50, DeKalb County Assistant State's Attorney Julie Trevarthen said. Police also say they were investigating another case when they found evidence that linked Bajaj to a prostitution case in August 2010

அவன் இவன்... எதிர்பாராத ரெஸ்பான்ஸ்... குஷியான புக்கிங்!!


ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் படத்துக்கு முதல் ஒருவாரம் வரை திருப்தியான புக்கிங் நடந்துள்ளது. படத்தின் பெயர் அவன் இவன். இயக்குநர் பாலா!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்குப் பிறகு, ரசிகர்கள் விரும்பி வந்து ஒரு படத்துக்கு காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தது அநேகமாக அவன் இவனுக்காகத்தான் இருக்கும்.

இதற்கு காரணமும் பாலாதான். படம் குறித்து அவரைத் தவிர ஊரே பேசிக் கொண்டிருக்கிறது.

விஷால், ஆர்யா, ஆர்கே என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு பிரதான இடம் அளித்துள்ளாராம் பாலா.

சென்னையில் கிட்டத்தட்ட 17 திரையரங்குகளிலும், தமிழகம் முழுவதும் 350 திரைகளிலும் அவன் இவன் வெளியாகிறது. நாளை வெளியாகும் இந்தப் படத்துக்கு கடந்த சில வாரங்களாகவே நல்ல பப்ளிசிட்டி. முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் அனைத்து அரங்குகளிலும் ஹவுஸ் புல். அடுத்து வரும் நாட்களுக்கும் கணிசமாக டிக்கெட் விற்பனையாகியுள்ளதாம்.

படம் நன்றாக இருப்பதாக செய்தி வெளியானால், வசூலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என சந்தோஷப்படுகிறார் கல்பாத்தி அகோரம்.

English summary
Bala's Avan Ivan opening on Friday June 17 has created a buzz. The advance booking for the film is good in multiplexes and the tickets for the first 3 days booked well.