சனி, 29 அக்டோபர், 2022

1518 ஆம் ஆண்டில் கீழக்கரையும் காயலும் பின்னே கோரமண்டலமும்! .. முத்துக்குமார் சங்கரன்

No photo description available.

Muthukumar Sankaran Tuticorin  :  கீழக்கரையும் காயலும் பின்னே கோரமண்டலமும்
1518 ஆம் ஆண்டில் நம் பகுதி மக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ளலாமா?
The Book of Duarte Barbosa Volume II
An account of the countries bordering on the Indian Ocean and there inhabitants written by draughtly Barbosa and completed about the year 1518 A.D.
என்கிற இந்த நூல் 1812 இல் போர்ச்சுகீசிய மொழியில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1921 இல் வெளியிடப்பட்டது. கல்கத்தா இம்பீரியல் நூலகத்தில் இருந்த இந்த நூல்  சிறிது சேதம் அடைந்த பிறகு டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது . Indianculture வலைத்தளத்தில் பொதுப் பார்வையில் இருக்கிறது.
மூல நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர் பெயர்களையே நானும் குறிப்பிட்டுள்ளேன் புரிந்து கொள்ள வசதியாக அந்த ஊர்களை பற்றி மட்டும் அடைப்புக்குறிக்குள் தெரிவித்திருக்கிறேன். மற்றபடி அனைத்து வாசகங்களையும் அப்படியே நேரடியாக மொழிபெயர்த்து இருக்கிறேன்

சிலோன் தீவை விட்டுப்  புறப்பட்டு நிலப்பரப்பை நோக்கி வரும் பொழுது குமரிமுனை கடந்தால்  கீழக்கரை  Quilcare என்ற பெயரில் கொல்லம் Coulam  அரசருக்கு சொந்தமான ஒரு நிலப்பகுதி இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினார்

zeenews.india.com  -  க. விக்ரம்  : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனைக்காக அவர் சென்னை போரூரில் இருக்கும் ராமசந்திரா மருத்துவமனைக்கு நேற்றிரவு சென்றார். அங்கு அவரது உடல்நிலையை சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர்.
அந்த பரிசோதனையில் முதலமைச்சருக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண முதுகு வலி என்பது உறுதியானது. தொடர்ந்து பரிசோதனை முடிந்த சூழலில் நேற்றிரவே வீடு திரும்பிவிட்டார். இதுதொடர்பாக ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதுகு வலிக்காக இந்த பரிசோதனை நடந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலிண்டரை வைத்து கோவையை சின்னாபின்னமாக்க முபின் பிளான்.. வீட்டிலிருந்த 109 பொருட்கள்: என்ஐஏ எப்ஐஆர்

tamil.oneindia.com  -  Jeyalakshmi C  :  கோவை: கார் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவரின் வீட்டிலிருந்து 109பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொட்டாசியம் நைட்ரேட்,ஆக்ஸிஜன் சிலிண்டர், சல்ஃபர் பவுடர் உள்ளிட்ட வெடி குண்டு தயாரிக்க பயன்படும் பொருட்களுடன் ஜிகாத் வரிகள்கொண்ட நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்தக் காரை ஒட்டி வந்தஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த வழக்கை உக்கடம் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தனர்.

தெலுங்கானா TRS கட்சி எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து பா.ஜ.க.வுக்கு இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு

தினத்தந்தி  :   தெலுங்கானாவில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து பா.ஜ.க.வுக்கு இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு
ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுக்க ரூ.100 கோடி பேரம் பேசிய வழக்கில், கைதான 3 பேரையும் காவலில் வைக்க மறுத்து கோர்ட்டு விடுவித்தது.
முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிற தெலுங்கானாவில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.
இந்த நிலையில் அங்கு பா.ஜ.க. தனது வலிமையை பெருக்கும் நோக்கத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கு ரூ.100 கோடி தருவதாகக்கூறி, தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரம் பேசப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலராஜு, ஹர்ஷவர்த்தன் ரெட்டி, காந்தாராவ், ரோகித் ரெட்டி ஆவார்கள்.

வெள்ளி, 28 அக்டோபர், 2022

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல் : கடந்த காலங்களை போல இப்போதுள்ள சந்தர்ப்பத்தை நழுவ விடவேண்டாம்!

பாராளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா | தினகரன்

 hirunews.lk  :   13 ஐ அமுல்படுத்த தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடை முறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான ஆர்வத்தை வெளியிட்டு வருகின்றனர்.
எனவே இந்த அரசியல் சூழலை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சத்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சதீஷ் வாக்குமூலம் | Student Sathya Murder Case

tamil.oneindia.com -  Hemavandhana  :  சென்னை: சத்யாவை திட்டமிட்டே ரயில்முன் தள்ளி கொலை செய்ததாக சிபிசிஐடி விசாரணையில் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பரங்கிமலை சத்யாவின் கொலையும், அவரது தந்தையின் அதிர்ச்சி மரணமும் தமிழக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.. சில நாட்களுக்கு முன்பு, ஒருதலைக்காதலால், ரயில்வே ஸ்டேஷனிலேயே சத்யாவுக்கும் - சதீஷூக்கும் மோதல் வெடிக்க, மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைத்தார் சதீஷ்..
இதில் சத்யாவின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது. தப்பி சென்ற சதீஷை போலீசார் கைது செய்தனர்.. இதனிடையே, சத்யாவின் அப்பா மாணிக்கமும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், பிணவறையில் 2 உடல்களும் அருகருகே வைக்கப்பட்டு இருந்ததை கண்டு, உறவினர்கள் கதறியது காண்போரை நிலைகுலைய வைத்தது.

ராசா மீது கோபம்? ஸ்டாலின் கொடுத்த பதில்! டிஜிட்டல் திண்ணை:

minnambalam.com -  Aara : அலுவலகத்துக்குள் நுழைந்ததும் வைஃபை தானாகவே கனெக்ட் ஆனது. வாட்ஸ் அப்பில், திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்ட அறிவிப்பு வந்தது. அதைப் படித்துவிட்டு ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டசை பதிவிடத் தொடங்கியது.
 “அண்மையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கம் பொதுக் கூட்டங்கள் திமுக தலைமைக் கழகம் சார்பாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.ொதுவாகவே திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் தலைமை கழகத்தின் வாயிலாக இதுபோன்று மாநில அளவில் அறிவிக்கப்படும் பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

அதிலும் கட்சியின் தலைவரான ஸ்டாலின் தமிழகத்தில் எந்த மாவட்டத்தை, தான் பேச தேர்வு செய்கிறார்  என்பதற்கு கூடுதல் முக்கியத்துவமும் உண்டு.

கோவை குண்டு வெடிப்பு - சிலிண்டரை வெடிக்க வைப்பதற்கு ஆக்சிஜனை முபின் பயன்படுத்தினாரா

மாலைமலர் : சிலிண்டரை வெடிக்க வைப்பதற்கு ஆக்சிஜனை முபின் பயன்படுத்தினாரா?- தடயவியல் ஆய்வில் விடை கிடைக்கும்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மீண்டும் கோவை சென்று விசாரணை நடத்தினார்.
கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நட வடிக்கைகளை முடுக்கி விட்டார்.
கார் வெடித்து சிதறியபோது அதில் பயணம் செய்த முபினும் கருகி உயிரிழந்து விட்டார். காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்ததாகவே முதலில் கூறப்பட்டது. ஆனால் சம்பவ இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெடி பொருட்களும் சிக்கின. இதனால் வெடி மருந்துடன் சேர்ந்து சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

கர்நாடகா - தற்கொலை செய்துகொண்ட மடாதிபதியின் ஆபாச படம் வெளியாகி உள்ளது

தினத்தந்தி  :  கர்நாடகாவின் ராமநகர் அருகே, தற்கொலை செய்து கொண்ட கர்நாடக மடாதிபதியின் ஆபாச படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா குதூர் அருகே உள்ள பண்டே மடத்தின் மடாதிபதியாக பணியாற்றி வந்தவர் பசவலிங்க சுவாமி.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மடத்தில் உள்ள தனது அறையில் மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் மடாதிபதி அறையில் இருந்து 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அந்த கடிதத்தில் சிலர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும், சிலர் தன்னை மிரட்டி வருவதாகவும், மடத்தை கைப்பற்ற சிலர் முயற்சி செய்வதாகவும் கூறி இருந்தார்.

குஷ்புவிடம் கனிமொழி கேட்ட மன்னிப்பு - நடந்தது என்ன? - BBC News

Kanimozhi (கனிமொழி) - @KanimozhiDMK
I apologise as a woman and human being for what was said.This can never be tolerated irrespective of whoever did it,of the space it was said or party they adhere to.And I’m able to openly apologise for this because my leader @mkstalin
 and my party @arivalayam
 
KhushbuSundar  @khushsundar
When men abuse women,it just shows wat kind of upbringing they have had & the toxic environment they were brought up in.These men insult the womb of a woman.Such men call themselves followers of #Kalaignar
Is this new Dravidian model under H'ble CM @mkstalin rule?

BBC tamil :  பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குறிப்பிட்டு, நடிகை குஷ்பு வெளியிட்ட ட்வீட்டுக்கு, ட்விட்டரிலேயே மன்னிப்பு கேட்டுள்ளார் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

வியாழன், 27 அக்டோபர், 2022

1798 இல் இளம் மனைவியை கணவனின் உடலோடு சேர்த்து தீயிட்டு கொழுத்திய காட்சி ஒரு ஐரோப்பியரின் நேரடி பதிவு

 1798 இல் தஞ்சாவூருக்கு வந்திருந்த திரு டொனால்டு கம்பெல் என்ற ஐரோப்பியர் அங்குள்ள ஊர் மக்கள் ஒரு இளம் பெண்ணை அவளது கணவனின் உடலோடு சேர்த்து கட்டி தீயிட்டு கொழுத்திய (சதிமாதா) காட்சியை நேரில் கண்டார். அது பற்றி அவர் எழுதிய டயரி குறிப்பு
Muthukumar Sankaran Tuticorin  :  Donald Campbell என்கிற ஐரோப்பியன் இந்தியாவைக் காணும் திட்டத்தில் கப்பல் ஏறி பாதி வழியில் கப்பல் உடைந்து ஒரு வழியாக இந்தியக் கரையேறி கைது செய்யப்படுகிறான்.  சிறையில் அடைக்கப்பட்டு தம் நண்பர்களின் உதவியுடன் விடுதலையாகி பின் இந்தியாவைச் சுற்றி வந்து தன் அனுபவங்கள் பற்றி கேம்ப்பெல்  எழுதிய கடிதங்களின் தொகுப்பை வாசித்தேன்.
இந்த நூல் Indian culture என்கிற பொது வலைதளத்தில் வேறு தகவல் தேடிய போது கண்ணில் பட்டது.
இதில் அவர் திருவிதாங்கூரில் இருந்து பாளையங்கோட்டை, மதுரை திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் வழியாக சென்னை சென்று திரும்பிய அனுபவங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் தஞ்சையில் அவர் பார்த்ததை குறிப்பிட்டு இருப்பது மிக முக்கியமான பதிவாகும். இது 1798ல் எழுதப்பட்டது. அப்போது இந்தியர்களை ஐரோப்பியர்கள் Hindu என்ற அடையாளப்படுத்தவில்லை Gentoo என்றே அடையாளப்படுத்தினார்கள்.

1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள பாட்சா மகன் கார் வெடித்த சம்பவத்தில் கைது

தந்தி டிவி  :  கோவை  கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், அல் உம்மா தீவிரவாத இயக்க தலைவர் பாட்ஷாவின் உறவினர் கைதாகி உள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதாகியுள்ள 5 பேரில் ஒருவர் முகமது தல்கா.
இவரது தந்தை நவாப் கான், தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர். தற்போது கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்,
கோவை குண்டு வழக்கில் தொடர்புடைய அல் - உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர்.
இந்த நிலையில், தற்போது கைதான முகமது தல்காவின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சம்பவம்- தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

மாலைமலர் : கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க : என்னைக் கொலை செய்ய முயற்சித்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியானது

file video ;வீரகேசரி - மனோசித்ரா   : என்னைக் கொலை செய்ய முற்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களை சிறையிலடைத்து வைத்திருப்பதால் எனது கண் மீளக் கிடைக்கப் போவதில்லை.
அவர்களுக்கு தண்டனை வழங்கி 8 ஆண்டுகள் கடந்த போதே , அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பமாகக் காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
என்னைக் கொலை செய்ய முற்பட்ட சந்தேகநபருக்கு கொழும்பு – கொட்டாஞ்சேனை ஆலய பூசகர் ஒருவரும் அவரது மனைவியும் உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக மீனவர்களை கைகளை பின்னால் கட்டி கம்பியால் தாக்கியது இந்திய கடற்படை .. இந்தியில் பேசுமாறு அடி உதை

 *இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது*
*இந்தியக் கடற்படை தாக்குதல்!*
*வைகோ கடும் கண்டனம்*
மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளிலிருந்து சுதீர் (30), செல்வகுமார் (42), செல்லதுரை (46),  சுரேஷ் (41), விக்னேஸ்வரன் (24), மகேந்திரன் (31), பாரத் (24), பிரசாந்த் (24), மோகன்ராஜ் (32), வீரவேல் ஆகிய 10 பேர் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் கடந்த அக்டோபர் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இரவு 3 மணிக்கு ஜெகதாம்பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது.
பின்னர் மீனவர்களின் படகிற்குள் சென்று சோதனையிட்ட பிறகு, நீங்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளீர்களா ? போதைப் பொருட்கள் ஏதும் கடத்துகிறீர்களா ? என கேட்டுள்ளனர். என்ன நடக்கிறது என புரியாமல் மீனவர்கள் தவித்துள்ளனர்.

பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவிகள் கிரேக்க இறக்குமதி தேவதைகள்தான்

Greek Orthodox Icons :: Hand painted icons of the Saints :: The Three  Archangels

Dr Shalini :  முப்பெரும் தேவியரான பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவருமே கிரேக்க இறக்குமதி என்றால் உங்களுக்கு ஆட்சரியமாக இருக்கும். ஆனால் அது தான் உண்மை.
கிரேக்க புராணத்தில் ஹீரா என்பவள் மலைமகள். அஃரதைத்தி கடலில் இருந்து சாகாவரம் கொண்டு வந்த அலைமகள். எதெனா கல்விக்கான கலைமகள்.
இந்த மூன்று கடவுளர் உருவான கதை, தோற்றம், ஐகனோகிராபிஃக் குறியீடுகள் எல்லாம் அச்சு அசல் அப்படியே காப்பி அடித்து, இவர்கள் இந்திய கடவுளர் ஆனார்கள். பிறகு ஹிந்து பாந்தியனிலும் இவர்கள் இடம் பெற்றார்கள்.

ராஜபக்‌ஷர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

.tamilmirror.lk : முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து, நாட்டை விட்டு ஓடிப் போய், தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்து, மூன்றரை மாதங்களாகப் போகின்றது.
கோட்டாவுக்கு முதலே மஹிந்த, பசில், சமல், நாமல், சசீந்திர என மற்றைய ராஜபக்‌ஷர்களும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர்.
கோட்டா நாட்டை விட்டு ஓடியதிலிருந்தே, பொதுவௌியில் பெருமளவுக்கு அமைதிகாத்த ராஜபக்‌ஷர்கள் தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கூட்டங்களை நடத்தி, தமது இருப்பைத் தக்க வைப்பதற்கான அடுத்தகட்ட காய்நகர்த்தலுக்காக களநிலைவரத்தை பரிசீலித்து வருகிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு, அவர்கள் வைத்துள்ள பெயர் ‘எக்வ நகிட்டிமு’ (ஒன்றாக எழுவோம்) என்பதாகும்.

இப்போது தான் நான் நிம்மதியாக உணர்கிறேன்” - மல்லிகார்ஜுன கார்கே பற்றி சோனியா காந்தி

minnambalam.com - monisha  :  மல்லிகார்ஜுன கார்கேவிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஒப்படைத்த பிறகு தான் நிம்மதியாக இருக்கிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவருக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று (அக்டோபர் 26) டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பதவியேற்றார்.
நிம்மதியாக உணர்கிறேன்!

தெற்காசியாவின் கல்வி தந்தை மெக்காலே பிரபு பிறந்த நாள் 25 -oct 1800 - 28 dec 1859

தாமஸ் பாபிங்டன் மெக்காலே : ஒரு நல்ல ஐரோப்பிய நூலகத்தின் ஒரு ஷெல்ப் ஒட்டுமொத்த இந்தியா மற்றும் அரேபியாவின் முழு பாரம்பரிய நூல்களுக்கு இணையானது


Shali Mary   இன்று லார்ட் மெக்கலே அவர்களின் பிறந்த நாள்.
அவரை நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள்.
“இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்று தான் எனக்கும் அவர் அறிமுகம்.
அப்புறம் நானே யோசித்தேன்.
என் பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் எப்படி படித்த பெண்களாக முடிந்தது? அதுவும் பெண்கள் படிக்கவே கூடாது, குருக்குலக்கல்வி என்பது பிராமண மாணவர்களுக்கு மட்டும் தான் என்றிருந்த அந்தக் காலத்தில் இந்த பெண்கள் எப்படி கல்வி பெற்றார்கள்?
என் குடும்பம் என்கிற குட்டி வட்டத்தை விட்டு வெளி உலகையும் நான் கவனிக்கிறேன்....
மோதிலால் நேரு எங்கு படித்தார்?
வங்காளிகள் ஏன் இவ்வளவு அதிக நோபல் பரிசு வாங்குகிறார்கள்?
இந்தியாவின் முதல் செக்யூலர் பள்ளி/ கல்லூரிகளை யார் துவக்கினார்கள்....?

சிறுமி கூட்டு பாலியல் கொடுமை... புதுக்கோட்டை ..." - விஷம் குடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை

  நக்கீரன் : புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு, 17 வயது சிறுமியை அவரது உறவுக்கார இளைஞர்கள் 3 பேர் கூட்டுப் பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுமி விஷம் குடித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 3 இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில்,
 செவ்வாய்க் கிழமை இரவு 17 வயது சிறுமியான எனது மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் மகன் ராஜா (22), மற்றும் கணேசன் மகன் சின்ராஜ் (21), சின்னையா மகன் பிரசாத் (19) ஆகிய 3 பேரும் தூக்கிச் சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து தாக்கியதில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்தபோது 3 பேரும் ஓடிவிட்டனர்.

சத்தியாவை ரயிலில் தள்ளி கொன்ற சதீஷ் திருமா கட்சிக்காரனா?

நிலவினியன் மாணிக்கம்  :  இதுல திருமாவளவன் சொன்ன சரக்கும், மிடுக்கும் வேலை செய்யல போல..
சதீஷ் செய்த சத்யா கொலை  பற்றி ஏன் இணைய சமூக ஊடகங்களில் அதிகமாக விவாதம் நடைபெறவில்லை?
இந்நேரம் தலித்திய அடையாள சாதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இப்படி நேர்ந்திருந்தால்
பெரியார் பெயரில் இயங்கும் முற்போக்கு என தங்களை மார்தட்டும் நடுநிலை நக்கிகள் உட்பட அனைத்து தரப்பு நடுநிலை நக்கிகளும் பொங்கியிருப்பானுகளே!
ஒட்டு மொத்த இடைநிலை சாதிகளையும் மொத்தமாக தெருவுக்கு இழுத்து சாடித் தீர்க்கும் வல்லமை கொண்ட
நாங்கள் மட்டுமே உலகத்திலேயே ஒரே ஒரு இன்டலக்சுவல் சமூகம் என நச்சுஆள் சுகந்திக்கா பிதற்றிக்கொள்ளும் சுயசாதி வெறிக்கட்சியினர் அமைதி காப்பதில் அர்த்தம் இருக்கிறது..

புதன், 26 அக்டோபர், 2022

நடிகை கஸ்தூரி எனும் கட்டதுரை.... மருத்துவர் ஷாலினி

ஒரு பெண் விரும்பவில்லை என்றால் அவளை தொடக்கூடாது என்ற..." - மனநல மருத்துவர்  ஷாலினி! | nakkheeran

Shalini  : நடிகை கஸ்தூரி எனும் கட்டதுரை....
Me Too Movement சென்னையில் சூடு பிடித்த காலம். Behindwoods ஸ்டுயோவில் எனக்கும் நடிகை கஸ்தூரிக்கும் ஒரு டிபேட் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நான் கிளினிக்கில் வேலையை முடித்துவிட்டு அப்படியே அங்கே போய்விட்டேன்... வழக்கம் போல மேக்கப்பாமல்...

அவருடைய அனைத்து கருத்துகளோடும் நான் ஒத்துப்போகவில்லையென்றாலும்”- நடிகை  கஸ்தூரி | nakkheeran

நான் ஸ்டுடியோ போய் ரொம்ப நேரம் கழித்துத்தான் கஸ்தூரி வந்தார். வந்ததும் மேக்கப் போடணும் என்றார்.
ஏற்கனவே ரொம்ப லேட் என்று நான் சுட்டிக்காட்ட, "நீங்க நாச்சுரல் ப்யூட்டி, எனக்கு மேக் கப் போட்டா தான்" என்று வைஸ்கிராக்கிவிட்டு போனார்.
மேக் அப் முடித்து வந்தும் நாற்காலியில் உட்கார்ந்து பல தடவை சரி பார்த்து டச் அப் பண்ணி....
எனக்கு வேறு டாக்சிக் ஃபெமினிட்டி என்றால் ரொம்ப அலர்ஜி...
ஏதோ occupational conditioning உபயத்தால் பொறுமையாக இருந்தேன்.
கடைசியில் டிபேட்டினோம். பேச ஆரம்பித்ததும் நேரம் வேகமாக ஓடியது. பேசி முடித்து விட்டு நான் கிளம்ப, கஸ்தூரி நின்று பேரம் பேசி பணம் வாங்கினார்.

“உ.பி யைச் சேர்ந்த ஆளுநருக்கு கேரளாவைப் பற்றி என்ன தெரியும்” - முதல்வர் பினராயி விஜயன் பதிலடி! அமைச்சரை நீக்க முடியாது

நக்கீரன் :கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமதுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இது தொடர்பாக சட்டத் திருத்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியும் அது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஆளுநர், " என்னை விமர்சித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும்" என சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மத்தியில் பாஜக அரசு, பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசுக்கு ஆளுநர் மூலம் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்ற நிலையில், இந்த சம்பவம் அதனை உறுதி செய்வது போல உள்ளதாக அம்மாநில ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்தார் முதலமைச்சர்

மாலைமலர் : சென்னை  கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 3 சகோதரிகள்.. தமிழ்நாட்டில்

ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 3 சகோதரிகள்
dailythanthi.com : தமிழகத்தில் 9,791 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 7 மாதம் அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது.

இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான பிரீத்தி (வயது 28), வைஷ்ணவி (25), நிரஞ்சனி (22) ஆகிய 3 பேரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
இதில் பிரீத்திக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் சகோதரிகள் 3 பேரும் 2-ம் நிலை காவலர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

காந்தியின் ஹரிஜன் லேபிள் . ஆளுநர் ரவியும் அந்த கால இலங்கையும்

ராதா மனோகர் :  ஆளுநர் ஆர் என் ரவி , பட்டியல் இனமக்களை குறிக்கையில் ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார். இக்குற்றத்திற்கு  வன்கொடுமை தடை சட்டத்தில் தண்டிக்க வழி உண்டா என்று தெரியவில்லை  தெரிந்தால் கூறுங்கள்!
மேலும் மோகன் கரம்சந்த்  காந்தியின் ஹரிஜன் என்ற லேபிள் மாற்றம் தொடர்பான ஒரு இலங்கை வரலாற்று செய்தி முன்பு பதிவிட்டிருந்தேன்   அந்த செய்தியும் முக்கியமானதுதான் :
இதோ அதன் மீள்பதிவு :    இலங்கையில் ஹரிஜன் என்ற சொல் எந்த காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை.
இந்த சொல்லே பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை .
இந்நிலையில்  தமிழக பார்ப்பனர்கள் எப்படி ஒவ்வொரு பார்ப்பனீய கருத்துக்களாக அங்கு விதைத்தார்கள் என்பதை இந்த 1956 ஆம் ஆண்டு இலங்கை வீரகேசரி பத்திரிகை காட்டுகிறது.
இலங்கை அரசியல் அமைப்பிலோ சட்டத்திலோ ஜாதி இல்லை . நடைமுறையில் ஜாதி பாகுபாடு மட்டுமல்ல குற்றங்களும் இருந்தன தற்போதும் ஓரளவு இருக்கின்றன..
ஆனால் அந்த ஜாதி ஏற்றத்தாழ்வுக்கு ஒரு சமூக அங்கீகாரம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த செய்தியும் தலைப்பும் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என்றெண்ணுகிறேன்.

‘ஹரிஜன்’ என கூறக்கூடாது என்பது ஆளுநருக்குத் தெரியாதா?” - திருமாவளவன்

 minnambalam.com  - christopher  : பட்டியல் சமூகத்தவரை ‘ஹரிஜன்’ என குறிப்பிடக் கூடாது என்ற இந்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியாதா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநருக்குத்‌ தெரியுமா? தெரியாதா?
இது குறித்து திருமாவளவன் இன்று (அக்டோபர் 25) வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த அக்‌ -17 ஆம்‌ தேதி சென்னையில்‌ மாணவர்‌ விடுதியொன்றைத்‌ திறந்து வைத்துப்‌ ‘பேசிய தமிழ்நாடு ஆளுநர்‌ மேதகு ஆர்‌.என்‌.ரவி அவர்கள்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள பட்டியல்‌ சமூகத்தவரை “ஹரிஜன்‌’ எனக்‌ குறிப்பிட்டுப்‌ பேசியிருக்கிறார்‌. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஹரிஜன்‌ என்பது கடவுள்‌ ஹரியின்‌ குழந்தைகள்‌ எனும்‌ பொருளைத்‌ தருவதால்‌, அது பட்டியல்‌ சமூகத்தினரை இழிவுபடுத்தக்‌ கூடியதாகவுள்ளது என அக்காலத்திலேயே அதற்கு கடுமையான எதிர்ப்புக்‌ கிளம்பியது.

கோவையில் இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இணையான பயங்கரவாத தாக்குதலுக்கு... ? இந்திய புலனாய்வு அமைப்பு சந்தேகம்

hirunews.lk   இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இணையான பயங்கரவாத தாக்குதலுக்கு... ? இந்திய புலனாய்வு அமைப்பு சந்தேகம்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு %E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%3F+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8Dகுண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவில் நடத்த திட்டம் இருந்ததா என்பது குறித்து இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நியுஸ் ரிவிட்டின் (newsriveting) என்ற செய்தித்தளம் பிரசுரித்துள்ளது.
தமிழகத்தின் கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சிற்றூந்து குண்டுவெடிப்பு தொடர்பில் முதற்கட்ட விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு ஆரம்பித்துள்ளது.

செவ்வாய், 25 அக்டோபர், 2022

சென்னையில் மோசமான காற்று மாசு.. -மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல் ! தீபஒளி பட்டாசின் எதிரொலி

கலைஞர் செய்திகள் . கே எல் ரேஷிமா : தீபஒளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில், சென்னையில் ஆங்காங்கே காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபஒளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் வெவ்வேறு நாளில் நடைபெறும் இந்த பண்டிகை இந்தாண்டு அக்டோபர் 25 (நேற்று) கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்து பூஜை செய்து புத்தாடை அணிந்து தீபஒளியை கொண்டாடினர். சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து காணப்படும்.

ரிஷி சுனக் பகவத் கீதையின் மீது பதவிப் பிரமாணம்’- மன்னரைவிட இருமடங்கு சொத்து; பிரிட்டன் பிரதமரின் கதை


BBC tamil :  லண்டனில் ஆடம்பர வீடு, அடுக்குமாடிக் குடியிருப்புகள், நார்த் யார்க்ஷயரில் பாரம்பரிய பங்களா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வீடு என சொகுசு வாழ்க்கை வாழும் குடும்பம்.
”வாழ்த்துகள் ரிஷி. உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம். புதிய பதவியில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். ஒரு பிரதமராக பிரிட்டன் மக்களுக்கு மிகச் சிறப்பான சேவையை நீங்கள் செய்வீர்கள்” என்று தன் மருமகன் ரிஷி சுனக்கை வாழ்த்தியிருக்கிறார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி.
42 வயதில் பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக், பல வரலாறுகளை இதன்மூலம் படைத்திருக்கிறார்.

கோவை கார் வெடிவிபத்து - 5 சதிகாரர்கள் கைது . உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்

மாலை மலர்  : கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காரில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுச்சதி, 120பி, 153ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திராவிடியா பசங்க..” நடிகை கஸ்தூரியின் “ ட்வீட்.. கொந்தளித்த திமுகவினர்

கஸ்தூரியின் கொச்சை ட்வீட்
tamil.oneindia.com.. - Noorul Ahamed Jahaber Ali  :  சென்னை: திராவிட பசங்க என்று போடுவதற்கு மாற்றாக அதில் உள்ள சில எழுத்துக்களை மாற்றி திராவிட சிந்தனை கொண்டவர்களின் தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் கெட்ட வார்த்தையில் ட்வீட் செய்த நடிகை கஸ்தூரிக்கு திமுகவினர் மற்றும் திராவிட இயக்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை கஸ்தூரி தொலைக்காட்சி விவாதங்களி கலந்துகொண்டு அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை பேசி வருகிறார். அதேபோல் ட்விட்டரில் அரசியல் விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார்.

திங்கள், 24 அக்டோபர், 2022

கோவையில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு - காத்திருக்கும் ஆபத்து!.. Ex-Muslims of Tamil Nadu

 Rishvin Ismath  

குண்டு  வெடிப்பிற்கு சுமார் 5 மணி நேரத்திற்கு முன்னர், அதாவது 22 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் இதுவரை அடையாளம் காணப்படாத 4 நபர்கள், தவறுதலாக காரில் குண்டு வெடித்ததில் கொல்லப்பட்ட அப்துல் காதர் ஜமீஷா முபீன் வீட்டில் இருந்து மர்மப் பொருளை எடுத்துச் செல்லும் CCTV காட்சி. காவல் துறையினரும், புலனாய்வுத் துறையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
விரிவாகப் பேச வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளதால் இந்திய இலங்கை நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு கிளப்ஹவுசில்....
குண்டு தாரி வேறு திட்டத்துடன் சென்ற பொழுது குண்டு தவறுதலாக வெடித்து இருக்கலாம் என்று கருப்படுகின்றது. குண்டு வெடித்த இடத்தில் இருந்தும், குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அப்துல் காதர் ஜமீஷா முபீன் உடைய வீட்டில் இருந்தும் வெடி குண்டுகள் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், ரசாயனக் கலவைகளை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
அப்துல் காதர் ஜமீஷா முபீன் உடைய வீட்டில் இருந்து மர்மப் பொருட்களை எடுத்துச் செல்லும் நான்கு பேர் குறித்து CCTV பதிவுகள் மூலம் அறிந்து கொண்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

48 இலங்கை ஏதிலிகளுக்கு இந்திய பாஸ்போர்ட்டுக்கள். தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு

gingee k s masthan, திண்டுக்கல்லில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள்.. விரைவில்  முதல்வர் திறந்து வைப்பார்- அமைச்சர் மஸ்தான் உறுதி! - minister gingee k s  masthan ...hirunews.lk  :தமிழகம் மரக்காணம் முகாமின் 48 இலங்கை ஏதிலிகளுக்கு இந்திய பாஸ்போர்ட்டுக்கள்!
தமிழக, மரக்காணம் முகாமில் வசிக்கும் 48 இலங்கை ஏதிலிகளுக்கு இந்திய கடவுச்சீட்டு மற்றும் பிற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அறிவித்துள்ளார்.
மரக்காணம் கீழ்புதுப்பட்டு கிராமத்தில் ஏதிலிகளுக்கு 440 இலவச வீடுகளை நிர்மாணிக்கும் ஆரம்ப நடவடிக்கை இடம்பெற்றபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இலங்கை ஏதிலிகளின் புனர்வாழ்வு முகாமுக்கு மாதாந்த நிதியுதவி வழங்கும் செயல்முறை அடுத்த மாதம் முதல் எளிமைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை புனர்வாழ்வு முகாம்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெறும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

சமணர்களின் தீப ஒளியும் இந்துக்களின் தீபாவளியும்

 keetru.com :  சமணர்களின் தீப ஒளியும் இந்துக்களின் தீபாவளியும்
எழில்.இளங்கோவன்
புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் வர்த்தமான மகாவீரர். 25ஆம் தீர்த்தங்காரர் என்று இவரைச் சொல்வார்கள். இவரால் தொடங்கப் பட்ட சமயம் - சமணம். ஜைனமதம் என்று இன்று மாறிவிட்டது.
சமணமும் பவுத்தமும் ஆரியத்தை மிகக் கடுமையாக எதிர்த்தன. ஆரியத்தால் தாக்குபிடிக்க முடியவில்லை.
சமணம் மக்களைக் கல்வி அறிவுடையவர் களாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சமணத் துறவிகள் தாம் தங்கியிருக்கும் இடங்களில், கல்வியைச் சொல்லிக் கொடுத்தார் கள். ஒரு படிமேலேயே சென்ற பவுத்தம், மக்களுக்குக் கல்விமட்டும் போதாது, பகுத்தறிவும் சுயசிந்தனையும் பெற வேண்டும் என்று, அவர்கள் தங்கி இருக்கும் இடங்களில் கல்வி கற்பித்தார்கள்.

இங்கிலாந்தின் அடுத்த பிரதமரானார் ரிஷி சுனக்

 

.instanews.city : பென்னி மோர்டான்ட் பந்தயத்தில் இருந்து வெளியேறியதால், ரிஷி சுனக் புதிய இங்கிலாந்து பிரதமராகிறார். ரிஷி சுனக் முதல் இந்திய வம்சாவளி இங்கிலாந்து பிரதமர் ஆவார்

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஞாயிற்றுக்கிழமை ஆச்சரியமான முறையில் தலைமைப் போட்டியிலிருந்து விலகியதை அடுத்து, இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமரானார் ரிஷி சுனக். பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் தலைவர் பென்னி மோர்டான்ட்டும் இன்று 10 டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கான பந்தயத்தில் இருந்து விலகி, சுனக் அடுத்த பிரதம மந்திரி ஆவதற்கு வழி செய்தார்.

இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் 5-ந்தேதி லிஸ் டிரஸ் பொறுப்பேற்று கொண்டார். டிரஸ்சுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டன. இதனால், கடந்த 20-ந்தேதி லிஸ் டிரஸ் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

தமிழக மாணவர்கள்- ஊழியர்கள் மோதல்... போர்க்களமாக மாறிய திருப்பதி சுங்கச்சாவடி

மாலை மலர்  ; திருப்பதி:  ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சுங்கச்சாவடியில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.
நேற்று தேர்வு முடிந்து தமிழகம் திரும்பிய மாணவர்களில் ஒருவரின் வாகனத்திற்கு, எஸ்.வி.புரம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தும்போது,
அந்த வாகனத்திற்கான பாஸ்டேக் வேலை செய்யவில்லை. இதனால் பணம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து
அந்த வாகனத்தை மட்டும் ஓரங்கட்டிவிட்டு, மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கும்படி ஊழியர்கள் கூறி உள்ளனர்.

வடிகால் பள்ளத்தில் விழுந்து புதிய தலைமுறை tv ஊழியர் பலி - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

மாலை மலர் : சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை எம்ஜிஆர் நகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சென்னையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் முத்துக்கிருஷ்ணன் என்பவர் நேற்று இரவு பணி முடிந்து சென்றுள்ளார்.
அப்போது எம்ஜிஆர் நகரில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் பள்ளத்தில் உள்ள இரும்பு கம்பிகள் முத்துக்கிருஷ்ணனின் உடலில் குத்தி படுகாயம் அடைந்தார்.
படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணனை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

"தமிழ்நாட்டில் புதிதாக 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது" அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு !

kalaignarseithigal.com - KL Reshma  :  தமிழ்நாட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25, நகர்புற சுகாதார நிலையங்கள் 25 என மொத்தம் 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆரம்ப மற்றும் நகர்புற சுகாதார நிலையங்கள் பற்றிய ஒதுக்கீடு விவரங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில்
 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், இன்று சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25, நகர்புற சுகாதார நிலையங்கள் 25 என மொத்தம் 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கு முன் புதிதாக சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு ஆறேழு ஆண்டுகள் ஆகிறது.

142 எம்பிக்கள் ஆதரவு.. Rishi Sunak இன்று பிரதமராக பதவியேற்க “சான்ஸ்

tamil.oneindia.com -  Noorul Ahamed Jahaber Ali  :  லண்டன்: போரிஸ் ஜான்சனை தொடர்ந்து பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் சில நாட்களிலேயே பதவி விலகிய நிலையில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்று பிரிட்டன் பிரதமராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, பிரிட்டன் நிதியமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரதமர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிரதமர் பதவிக்காக போட்டியிட்ட அவர், லிஸ் டிரஸிடம் தோல்வியடைந்தார். அதிக எம்.பிக்கள் ஆதரவு இருந்த காரணத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் லிஸ் டிரஸ்.

கோவை கார் வெடிப்பு: இறந்த ஜமேஷா முபின் வீட்டில் வெடிகுண்டு கச்சாப் பொருள்கள் - போலீஸ் தகவல்

BBC News தமிழ்  : கோவை காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்டதாக கருதப்படும் சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஜமேஷா முபின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும்,
அவருடைய வீட்டில் சோதித்தபோது, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் போன்ற பொருள்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு "கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தெற்காசியாவின் டிஸ்னிலாண்ட் இலங்கையில் அமைகிறது .. ஹம்பாந்தோட்டையில்

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%21+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%21

hirunews.lk : இலங்கையில் டிஸ்னிலேண்ட்! ஆராய்வதற்காக இலங்கை வரும் குழு!
தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டை ஹம்பாந்தோட்டையில் திறப்பது குறித்து ஆலோசிக்க டிஸ்னிலேண்டின் குழு ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது.
சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் வேவால்ட் டிஸ்னியின் அழைப்பைத் தொடர்ந்து 18 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்க டயானா கமகே விரைவில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

nakkheeran.in : கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, இன்று அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
அதற்குள் காரில் இருந்த ஒருவர் முற்றிலுமாக தீயில் எரிந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

ராமஜெயம் கொலை வழக்கு; கொலையாளியை நெருங்கிவிட்டதா சி.பி.சி.ஐ.டி? - டி.ஜி.பி ஷகீல் அக்தர் பதில்

nakkheeran.in  :  தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தி  கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச் சோலையில் காவிரி ஆற்றின் கரையோரம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பரபரப்பு ஏற்படுத்திய இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார், என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.
இந்த நிலையில் வழக்கை எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான டி.எஸ்.பி மதன் மற்றும் ஆய்வாளர்கள் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

புது மனைவிக்கு நிர்வாண பூஜை.. கட்டாயப்படுத்திய கணவர், மாமியார்..கேரளா .. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி!

Kalaignar Seithigal  - KL Reshma  :  இந்தியா  புது மனைவிக்கு நிர்வாண பூஜை.. கட்டாயப்படுத்திய கணவர், மாமியார்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி!
கேரளாவில் இளம்பெண் ஒருவரை நிர்வாண பூஜை செய்யுமாறு கணவர் மற்றும் மாமியார் கொடுமை செய்ததாக பெண் கொடுத்த புகாரின் மேல் 5 வருடத்திற்கு பிறகு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில், பணத்திற்கு ஆசைப்பட்டு தம்பதியினர் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். அதோடு அந்த சடலத்தை சமைத்தும் சாப்பிட்டனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது கேரளாவில் மீண்டும் ஒரு மாந்திரீக பூஜை சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி வெங்கடாசலபதி சிலை சமணர்களின் நேமி நாத தீர்த்தங்கரரின் சிலையா? ஜெயின் ஆய்வு கட்டுரை.. திரு. பால் பாட்டீல்

ராதா மனோகர்  : திரு பால் பட்டேல் (1932–2011) வழக்கறிஞர் . பிரபல எழுத்தாளர்  ஜெயின் சமூகத்தின் மிக பெரிய ஒரு ஆளுமை . இந்திய ஒன்றிய சிறுபான்மை பிரிவில் ஜெயின் மதத்தையும்  அங்கீகரிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இவர் தொடுத்த ஒரு வழக்கின் மூலம்தான் கிடைத்தது.
மகாராஷ்ட்ரா அரசின் சிறுபான்மை நல வாரிய உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
அனைத்திந்திய ஜெயின் அமைப்பின் பொது செயலாளராக இறுதி வரை இருந்தார்
புகழ் பெற்ற வழக்கறிஞர் சோலி சொராப்ஜி ( Soli Jehangir Sorabjee, Indian jurist who served as Attorney-General for India)   டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஜெயின் மதத்தை பற்றிய ஒரு தவறான கருத்தை எழுதியிருந்தார்  . அதை கண்டித்து பிரஸ் கவுன்சிலில் திரு பால் படேல் முறையிடடார்
அந்த கருத்துக்கு தான் மன்னிப்பு கேட்பதாக வழக்கறிஞர் சோலி சொராப்ஜி அறிவித்தார்

திரு பால் பாட்டீலை பற்றி பல செய்திகளை கூறலாம் . இவர் பற்றி நான் இங்கே எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணமாக திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் சமண வரலாறு இருக்கிறது
திருப்பதி கோயில் சமணர்களின் நேமி நாத தீர்த்தங்கரரின் கோயில் என்ற கருத்தை இவர் கொஞ்சம் ஆதாரத்தோடு எழுதியிருந்த கட்டுரை என்னை ஈர்த்தது
இவரின் அந்த ஆங்கில கட்டுரையின் சாராம்சத்தை கொஞ்சம் தமிழில் தந்துள்ளேன்