சனி, 1 ஜூன், 2019

துப்பட்டா அவசியம் ....உடை கட்டுப்பாடு.... வேட்டி அணிய அனுமதி!

மின்னம்பலம் : அரசு ஊழியர்களுக்கான உடை கட்டுப்பாடு தொடர்பாகத்
தமிழக தலைமைச் செயலாளரின் அறிவிப்பு வெளியான நிலையில், பாரம்பரிய உடையான வேட்டி அணிவதில் தடை ஏதுமில்லை என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அணியும் உடைகள் தொடர்பாக, நேற்று (மே 31) புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், பணியாளர் கையேட்டில் இதனைக் குறிப்பிடும் திருத்தங்கள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. “ஊழியர்கள் நேர்த்தியான, சுத்தமான உடைகளை அணிய வேண்டும். உடைகள் அலுவலகத்தின் நன்மதிப்பைப் பராமரிக்கும் வகையில் இருக்க வேண்டும். சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டுமே பெண் ஊழியர்கள் அணிய வேண்டும். சேலை தவிர மற்ற உடைகளை உடுத்தும்போது துப்பட்டா அவசியம்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அதிமுகவுடன் இணைப்பா? ஆய்வுக் கூட்டத்தில் தினகரன்

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுடன் இணைப்பா? ஆய்வுக் கூட்டத்தில் தினகரன்மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் லொக்கேஷன் சென்னை அசோக் நகர் என்று காட்டியது. முதலில் அமமுகவின் ஆய்வுக் கூட்ட போட்டோக்களை செண்ட் செய்த வாட்ஸ் அப், சில நிமிடங்களில் செய்தியையும் டைப் செய்யத் தொடங்கியது.
“மே 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடி இன்று (ஜூன் 1 ) காலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆய்வுக் கூட்டம் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. காலை 10.30 மணி வாக்கில் அடையாறிலுள்ள தனது வீட்டில் தலைமைக் கழக நிர்வாகிகள் வெற்றிவேல், பழனியப்பன் ஆகியோருடன் டிபன் சாப்பிட்டு விட்டு கட்சி அலுவலகத்துக்குப் புறப்பட்டார் தினகரன். அப்போதே அவரது கையில் பூஜ்ய ஓட்டு வாங்கிய பூத்துகளின் பட்டியலும், அமமுகவின் ஒவ்வொரு வேட்பாளரும் வாங்கிய ஓட்டு விவரங்களும் இருந்தன.

உலக அளவில் டிவிட்டரில் டிரெண்டாகும் #TNAgainstHindiImposition!!

உலக அளவில் டிவிட்டரில் டிரெண்டாகும் #TNAgainstHindiImposition!!zeenews.india.com/tamil :சமூக வலைத்தளங்களில் இந்தி எதிர்ப்பு தீவிரம் அடந்துள்ளது. உலக அளவில் 3வது இடத்தில் டிரண்ட் ஆகி வருகிறது இந்தி எதிர்ப்பு. சமூக வலைத்தளங்களில் இந்தி எதிர்ப்பு தீவிரம் அடந்துள்ளது. உலக அளவில் 3வது இடத்தில் டிரண்ட் ஆகி வருகிறது இந்தி எதிர்ப்பு.
மத்திய அரசு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை 2019-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான வரைவை தயாரிக்கும் பணியல் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. புதிய கல்வி கொள்கை வரைவில், மும்மொழிக் கல்வி கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 வடகொரிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை

டிரம்ப் உடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 வடகொரிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை
மாலைமலர் : டிரம்ப் உடனான 2-வது சந்திப்பு தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்தார்.
சியோல்: வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் அன் சர்ச்சைக்கு பெயர் போனவர். தனது தந்தையின் மறைவுக்கு பின் கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற இவர் நாட்டில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஐ.நா.வின் தீர்மானங்களை மீறி தொடர்ச்சியாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்வதேச நாடுகளை அதிரவைத்து வந்தார். இது ஒருபுறம் இருக்க தனது அரசில் ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் தனக்கு விசுவாசமாக இல்லாதவர்களுக்கு, கொடூரமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றியதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும்.

வரும் 100 நாட்களில் 42 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அல்லது மூடப்படும்! நிதி ஆயோக் துணைத்தலைவர் அறிவிப்பு


nakkheeran.in - santhoshb : 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக  வெற்றி பெற்று  இரண்டாவது முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. இந்நிலையில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “புதிய அரசின் 100 நாட்கள் பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ், வரும் மாதங்களில் 42 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் அல்லது மூடப்படும் என சூசகமாக தெரிவித்தார். ஏனெனில் சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் மத்திய அரசு, இத்தகைய
நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார திட்டமிடும் நிறுவனமான திட்டக் கமிஷனை, 2014- ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி திட்டக்கமிஷனை கலைத்து 'நிதி ஆயோக்' குழுவை உருவாக்கினார்.
< அதனைத் தொடர்ந்து பேசிய ராஜீவ் குமார், தொழிலாளர்கள் சட்டங்களிலும் மாற்றம் செய்ய உள்ளதாகவும், புதிய தொழில் வளர்ச்சிக்கான இடங்கள் உருவாக்கப்படும்.

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் .. ஒய்வு பெறுவதற்கு ஒரு மணித்தியாலம் முன்பாக


தினத்தந்தி :தமிழக அரசுத் துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்த மு.சுப்பிரமணியன், தமிழக அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவராகவும், ஜேக்டோ ஜியோ அமைப்பில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில் அவர் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஓய்வு பெறுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து, வரும் 3ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தி மொழியை திணிக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு .. 1965 மொழிப் போராட்டத்தை விட ... போராட்டம் வெடிக்கும். வைகோ எச்சரிக்கை!

தினத்தந்தி : இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப்
பாடமாக்குமாறு புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:- புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டால், 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.
கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில், தேசிய கல்வி கொள்கையை உருவாக்கியுள்ள கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக் கூடாது. . மத்திய அரசு முடிவை ரத்து செய்ய வேண்டும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு:- மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது; இது வன்மையாக கண்டிக்கக் கூடியது. தாய்மொழி தான் அவசியம், அதை சீர்குலைக்கும்
நடவடிக்கையை கைவிட வேண்டும். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- மத்திய அரசு இந்தி திணிப்பில் ஈடுபட்டால் மீண்டும் போராட்டங்கள் நடைபெறும். 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
டிடிவி தினகரன்:- தேர்தல் தோல்வியால் நாங்கள் அழிந்து போகப்போவதில்லை; அதிமுகவும் திமுகவும் கூட தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது வரலாறு தமிழக மக்கள் எந்த வகையிலும் இந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள்

370 தொகுதிகள்... பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் - சர்ச்சையில் EVM

vikatan.com - சக்தி தமிழ்ச்செல்வன் :
EVM scamLok shaba Elections 2019
“இந்தியத் தேர்தல் ஆணையத்தினால், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்தத் தேர்தல் முடிவில், பி.ஜே.பி கூட்டணி   350 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன், ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் முதல் முறையாக பயன்படுத்தபட்டு, இந்தத் தேர்தலை நடத்திமுடித்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் நடந்திருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 370 தொகுதிகளில் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. வாக்குப்பதிவு அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், வாக்கு எண்ணிக்கையின்போது இயந்திரத்தில் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது இப்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12,14,086. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் 12,32,417. அதாவது, பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் 18,331 அதிகம்.

அசுதோஷ் சுக்லா இடமாற்றம் .. கிரிஜா வைத்தியநாதன்.. .சாஸ்திரா பல்கலை கழகம்...- 30 ஏக்கர் விவகாரம் ?

அதிகாரிகள் மாற்றம்சுக்லாvikatan.com - இ.லோகேஷ்வரி : தேர்தல் டிஜிபி-யாக இருந்த அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  தமிழகத்தில்,  19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் இன்று வெளியிட்டிருக்கிறார்.
சிறைத் துறை தலைவராக இருந்த அசுதோஷ் சுக்லா, தேர்தல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். தற்போது, தேர்தல் முடிவடைந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் சுக்லா சிறைத் துறை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மண்டபம் முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அசுதோஷ் சுக்லா-வுக்கு இதுபோன்ற பதவிகள் வருமென்று எதிர்பார்த்ததுதான் என்கிறார்கள், காவல் துறை வட்டாரங்கள். மீண்டும் சிறைத்து றை தலைவராக அவரை பொறுப்பேற்கவிடாமல் சதி நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, சிறைச்சாலைகளில் அதிக நெருக்கடி இருப்பதைத் தவிர்ப்பதற்காக, 58.17 ஏக்கர் நிலப்பரப்பில் தஞ்சை திருமலைசமுத்திரம் என்ற இடத்தில், திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கையகப்படுத்திவிட்டயதாகப் புகார் எழுந்துள்ளது.

வைத்திலிங்கத்தின் அமைச்சர் வாய்ப்புக்கு வேட்டு வைத்த பன்னீர்செல்வம் ..

மோடி திட்டம்.vikatan.com - கு.ஆனந்தராஜ்: பிரதமர் மோடியின் அமைச்சரவை நேற்று பதவியேற்ற நிலையில், அ.தி.மு.க-வில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவி கிடைக்காததற்கு அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் பிடிவாதமும் ஒரு காரணம் என்ற புகைச்சல் அ.தி.மு.க தரப்பில் இப்போது எழுந்துள்ளது.
பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை பதவியேற்புக்கு முன்பாக அந்தக் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவை பதவியேற்புக்கு இருதினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். அப்போது, `தனக்கு அமைச்சர் பதவி வேண்டும்' என்று வைத்திலிங்கம் கேட்டிருக்கிறார்.

கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி.. மீட்பதற்கு போராட்டம் ...வவுனியா ..


DSC_1301 கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி DSC 1301
DSC_1296 கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி DSC 1296
DSC_1302 கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி DSC 1302DSC_1316 கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி DSC 1316வீரகேசரி :கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி வவுனியா வடக்கு கனகராஜன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. DSC_1316 கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி DSC 1316வவுனியா கனகராஜன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள ஆயூள் வேத வைத்தியசசாலை அமையும் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு யானை குட்டி ஒன்று தவறி வீழ்ந்துள்ளது. இதையடுத்து அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்த பெருமளவு தண்ணீர் வெளியே இறைக்கப்பட்டு ஜே.சி.பி, பாரம்தூக்கியின் உதவியுடன் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை இன்று காலை முதல் கனகராஜன்குளம் பொலிஸார், வவுனியா, கிளிநொச்சியை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன<

அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பாக இந்தியர் தீக்குளித்து தற்கொலை


மாலைமலர் : அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு இந்தியர் தீக்குளித்து தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க
வெள்ளை மாளிகை முன்பு இந்தியர் தீக்குளித்து தற்கொலை
வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு உள்ள பூங்காவில் இந்தியாவை சேர்ந்த அர்னவ் குப்தா என்பவர் தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அர்னவ் குப்தா உயிரிழந்தார்.

தி.மு. க-வை முதலில் குறிவைத்துள்ளோம்,, திமுக எம்பிக்களில் இருவரை இழுக்கும் வேலை நடக்கிறது .. பாஜக பிரமுகர்

பி.ஜே.பிvikatan.com = சக்தி தமிழ்ச்செல்வன் :
பி.ஜே.பிபி.ஜே.பி அலை சுழற்றி அடித்த போதும், தமிழகத்தில் அந்தக் கட்சி ஒரு இடத்தை கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைச் சரிகட்ட அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகிவருகிறது பி.ஜே.பி.
அதற்கான மாஸ்டர் பிளான் இப்போது செயலுக்கு வர ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள்.
1980 ஆண்டு தொடங்கப்பட்ட பி.ஜே.பி கடந்த தேர்தலில் வகுத்த மாஸ்டர் பிளான் மோடியை இந்தியாவின் பிரதமராக அமர வைத்தது. `மோடி அலை’அந்தத் தேர்தலில் பி.ஜே.பிக்குக் கைமேல் பலன் கொடுத்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பி.ஜே.பி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தனது செல்வாக்கை இந்தியா முழுவதும் பரப்புவதற்கான வேலையைச் செய்தது.

வெள்ளி, 31 மே, 2019

கர்நாடக உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் பெரும் வெற்றி Karnataka Municipal Elections Congress Ahead of BJP in Counting Of Votes For 63 Urban Local Bodies, Wins 509 Wards 2019 Results Live News Updates:

Karnataka Municipal Elections 2019 Results Live News Updates: Congress Ahead of BJP in Counting Of Votes For 63 Urban Local Bodies, Wins 509 Wards" The counting of votes was underway for the Karnataka Urban Local Body Elections 2019. The results of the Karnataka local polls will be out by Friday evening.
The counting of votes was underway for the Karnataka Urban Local Body Elections 2019. The results of the Karnataka local polls will be out by Friday evening. As per the trends that came in by Friday afternoon, the Congress - JDS combine was ahead of the Bharatiya Janata Party (BJP). The Congress had won 509 wards, JDS 174 and BJP 366 so far. Elections were held for 63 ULBs in the state on May 29, six days after Lok Sabha Elections 2019 results were announced. Lok Sabha Elections 2019 Results For All Seats of Karnataka.
Also Read | Narendra Modi Government 2.0: Here is the List of Ministers and Portfolios
While the Congress was leading in all City Municipalities and Town Municipalities, the BJP was ahead in Town Panchayats. Elections were held in 1,361 wards of eight city corporations (CMC), 33 Town Municipal Corporations (TMC) and 22 Taluk Panchayats (TP).
Here is the current ward tally as per Karnataka State Election Commission
Also Read | Smriti Irani, 'The Amethi Giant-Slayer', Gets Women & Child Development Ministry in Addition to Textile Portfolio in Modi Cabinet 2.0
District Name Total Seats Declared Seats BJP INC JD(S) BSP CPM Independents Others
BENGALURU URBAN 27 27 10 17 0 0 0 0 0
BENGALURU RURAL 46







CHITRADURGA 63 63 20 22 3 0 0 18 0

நெல் ஜெயராமனைக் குறித்து எழுதப்பட்டவை மிகைபடுத்தப்பட்ட பொய்களாகும்!

சாவித்திரி கண்ணன் : இதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களை கண்டெடுத்ததில் ஜெயராமனைக் குறித்து எழுதப்பட்டவை மிகைபடுத்தப்பட்ட பொய்களாகும்!
தமிழகத்தில் சுமார் 160க்கு மேற்பட்ட நெல்ரகங்களை கண்டெடுத்தது ஜெயராமன் என்ற ஒற்றை நபரல்ல.
அவருக்கு முன்பும்,அவரது சமகாலத்திலும் இதில் தங்களை அர்பணித்தவர்களின் பட்டியலை நானறிந்த வகையில் பட்டியலிடுகிறேன்.

தஞ்சை கோ.சித்தர்,உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம்,நாகர் கோயில் பொன்னம்பலம்,பரமக்குடி துரைசிங்கம்,மதுராந்தகம்ஜெயச்சந்திரன்,மயிலாடுதுறை ரங்கநாதன்.,புதுக் கோட்டை ரோஸ் தொண்டு நிறுவனம்,குடும்பம் தொண்டு அமைப்பினர்..உள்ளிட்ட பலரையும் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரையும் இருட்டடிப்பு செய்வது போல ஜெயராமனை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
நான் சொல்வது இயற்கை வேளாண்மை களத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழக மின்சார வாரியத்தில் வடஇந்திய பணியாளர்கள் ...

Don Ashok : இந்த பெயர்களை எல்லாம் படிங்க, இவர்கள் தான் உங்கள் பகுதியின் EB Department AE,நம்மையெல்லாம் எதிரியாக பாவித்த, நாம் நம்முடைய எதிரியாக வரித்துக்கொண்ட ஜெயலலிதா செய்யத்துணியாத தமிழ் துரோகத்தை, நாமெல்லாம் துச்சமாக எண்ணும், கோமாளிகள் என கேலி பேசும் எடப்பாடியும், ஓபிஎஸ்சும் செய்திருக்கிறார்கள்.
1) Satya Kumar Behera
2) Pendyala Jothsna Praveena.P
3) Nimmalameher Santhosh
4) Suparna .M Das
5) Soni Kumari.S
6) Guru Prasad Reddy.V
7) Awin Gupta
8) Ramasubba Reddy.Poli
9) Nukala Vijayabhaskar.N
10) Mangala Bhargava Kumar.M
11) Nageswara Rao.Gonna
12) Geddamyugandhar.G
13) Aklavya Kumar.Nil
14) Vamsi Krishna.Yele
15) Prudhvi Raj.Saibaba

ஸ்டாலினை அழைப்பது சொந்தக் காசில் சூனியம் வைப்பது போல!

stalin modinakkheeran.in - ஆதனூர் சோழன் ; நாடாளுமன்றத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்களுக் கெல்லாம் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லை. அவருக்கு அழைப்பு விடுக்காததால் திமுக எம்.பி.க்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்பதை தவிர்த்திருக்கிறார்கள். பாஜகவின் இந்த முடிவுக்கு என்ன காரணமாக இருக்கும்?
வேறு என்ன..?  தனக்குக் கிடைத்த பிரமாண்டமான வெற்றியின் பெருமிதத்தை காவுகொடுக்க வேண்டியிருக்குமோ என்பதுதான் காரணம். ஒருவேளை ஸ்டாலினுக்கு அழைப்புக் கொடுத்திருந்தால் விழாவின் லைம்லைட் ஸ்டாலின் மீதுதானே விழுந்திருக்கும்? தென் மாநிலத்தில் பாஜகவை துடைத்தெறிந்த கூட்டணியின் தலைவர் என்று ஸ்டாலினுக்கு மீடியாக்கள் வர்ணனை கொடுத்திருக்கும். அது உலகம் முழுவதும் பரவியிருக்கும்.

மருத்துவர் பாயல் தாத்வி நாட்டின் முதல் பழங்குடி இன மருத்துவர் தற்கொலை அல்ல .. கழுத்தில் காயம் ..

மருத்துவர் பாயல் தாத்வி
JusticeForDrPayalTadvi : தற்கொலை னு சொல்லப்பட்ட மருத்துவ மாணவி பாயல் கயிற்றால கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதா பிரேத பரிசோதனை அறிக்கையில சொல்லியிருக்கிறார்கள் ..
யார் இந்த பாயல்?
இன்று   உயிரோட இருந்திருந்தால்  இன்னும் சில வருடங்கள்ல இந்தியாவினுடைய முதல் பழங்குடியின MD மருத்துவராக இருந்திருப்பார்..
உங்களோட படுக்கை விரிப்புல எச்சில் துப்பப்பட்டு இருந்தா உங்களுக்கு எப்டி இருக்கும்?
அதுவும் வேண்டுமென்றே  சிலரால திட்டமிட்டு செய்யப்பட்டிருந்தா? ,டாய்லெட் போயிட்டு வந்து உங்க போர்வையில தொடச்சா???
இதெல்லாம் மும்பை நாயர் மருத்துவக் கல்லூரியில MD மகப்பேறு மருத்துவப் படிப்புல சேர்ந்த 'தாட்வி பில்' ன்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவி பாயலுக்கு அவங்க சீனியர்ஸ் 3 பேரால நடந்திருக்கிறது ..
அதுக்குப் பின்னாடி சாதி என்ற விசயத்த தவிர வேற எதுவுமே காரணம் இல்ல...
"பழங்குடியின பெண் நீ லாம் எங்களுக்கு சமமா வரலாமா" ன்ற ஆதிக்க எண்ணம்தான் whatsapp group create பண்ணி "quota ல வந்த உனக்கு எந்த திறமையும் இல்ல,நீ operation பண்ணக்கூடாது" னு அந்தப் பொண்ணுக்கு உளவியல் நெருக்கடி கொடுத்து இப்போ கொலையும் செய்ய வைச்சிருக்கு...
"SC,ST மக்களுக்குத் திறமையில்ல,திறமையும் தகுதியும் இல்லாத அவங்க இட ஒதுக்கீட்ட வச்சுதான் மேல வராங்க, மற்ற எல்லோரோட வாய்ப்புகளையும் தட்டிப் பறிக்கிறாங்க" ன்ற பொதுப்புத்தி இந்தியா முழுக்க படிச்சவங்ககிட்ட இருக்கு....

தமிழ் ராக்கர்ஸில் தினமும் ரிலீஸ் திருவிழா.. Tamil Movies To Free Download In Tamilrockers

tamil movie, tamilrockers, Tamil cinema, ngk tamil movietamil.indianexpress.com : தமிழ் சினிமாவை வேட்டையாடும் தமிழ் ராக்கர்ஸ்:
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், புதிது புதிதாக இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் வந்து விடுகிறது.
தமிழ் சினிமா தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ, தமிழ் ராக்கர்ஸில் தினம் ஒரு படம் ரிலீஸ் ஆனபடியேதான் இருக்கிறது. அதுவும் புதுப்படங்கள் தியேட்டருக்கு வந்த அன்றே ஆன் லைனில் வெளியிடுவது, வேறு எங்கும் நடக்காதது!
இதில் லேட்டஸ்ட் பாதிப்பு, என்.ஜி.கே. திரைப்படம்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், சினிமா உலகுக்கே பெரும் மிரட்டலாக இருந்து வருகிறது. கோலிவுட், டோலிவுட், மாலிவுட், பாலிவுட், ஆலிவுட் என தமிழ் ராக்கர்ஸில் வெளியாகாத மொழிப் படங்களே இல்லை.
சினிமாப் படம் ஒன்று தியேட்டரில் ரிலீஸாகி, அடுத்த சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் வெளியாகிவிடுவதுதான் கொடுமை. லேட்டஸ்டாக பேட்ட, விஸ்வாசம், மாரி 2, சூப்பர் டீலக்ஸ், கனா, காஞ்சனா 3, மிஸ்டர் லோக்கல் என பல படங்களை இப்படி ரிலீஸ் செய்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

2ஜி வழக்கில் விடுதலையான அனைவருக்கும் நோட்டீஸ்..

zeenews.india.com/tam ; புதுடில்லி: 2ஜி மேல்முறையீடு வழக்கில் ஆ.ராசா,
கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2010-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் செய்ததில் ரூ1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்ப்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கை தாக்கல் செய்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைக்கேடு நடந்துள்ளதாகக் கூறி ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் தொடர்ந்தன.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது இந்த வழக்கினால் மத்தியில் காங்கிரஸ் மற்றும் தமிழகத்தில் திமுக மீண்டும் அமையாமல் இருக்க ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2ஜி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை டெல்லி உயர்நீதிமன்றம் அமைத்தது. இதனையடுத்து இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. ஆ.ராசா, கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2ஜி வழக்கை நீதிபதி ஓ.பி ஷைனி தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதி தீர்ப்பில்  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 19 பேரை கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

புதிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திரா சிங் சாரங்கி.. ஒரு இந்துத்வா பயங்கரவாதி புனிதர் போல ஊடகங்களால் ..

Most people may have forgotten, but new Union minister Sarangi was Odisha coordinator of the Bajrang Dal when Graham Staines and his two kids were burned alive two decades ago
அமைச்சர் பிரதாப் சந்திரா சிங் சாரங்கி
Durai Manikandan : யார் இந்த பிரதாப் சந்திரா சிங் சாரங்கி?
இன்று எல்லா ஊடகங்களிலும் புனிதர் போல போற்றப்படும் இவர், அடிப்படையில், பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர். இந்த அமைப்பு ஒரிசாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டைன் மற்றும் அவரது இரு மகன்களை உயிருடன் எரித்துக் கொன்ற அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே.
இவர், ஒரிசாவில் கிறித்துவ மதமாற்றத்தை தடுக்க மட்டுமே RSS சால் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து வருபவர்.
மேலும், இவர் பல முறை, கலவரத்தை தூண்டியது, பொது சொத்து மற்றும் தனிநபர்கள் மீது தீ வைத்து எரித்தது, அடிதடி மற்றும் பொது சொத்தை சூறையாடியது என பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2002இல் இந்து வெறியர்களால், ஒரிசா சட்டசபையை தாக்கிய வழக்கு இவர் மேல் இன்னும் நிலுவையில் உள்ளது. இவர் தான் அடுத்த மோடிபோல் இன்று எல்லா ஊடகங்களிலும் முன் வைக்கப்படுகிறார். 
மிதி வண்டியில் செல்வதாலும் மூங்கில் குடிசையில் வாழ்வதாலும் ஒரு மனிதன் புனிதராகிவிடுவாரா? இவரை பற்றிய பொய் பரப்புரையை தடுக்க, அதனை ஒட்டிய உண்மை நிலையை பரப்ப, நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்கள்- முழு விபரங்கள்

tamil.samayam.com :டெல்லி: மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அமித் ஷாவுக்கு உள்துறையும், முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சரானார் அமித் ஷா, நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு</ 17வது மக்களவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இதையடுத்து மோடி தலைமையில் புதிய அரசு நேற்று பதவி ஏற்றுக் கொண்டது. இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 25 கேபினட் அமைச்சர்கள், 9 பேருக்கு தனிப்பொறுப்பு அந்தஸ்து, 24 இணையமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சரவையில் 21 புதுமுகங்களுக்கு மோடி வாய்ப்பு அளித்துள்ளார். அவர்களில் 6 பேருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பும், 14 பேருக்கு இணையமைச்சர் பொறுப்பும், ஒருவருக்கு தனிப் பொறுப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய வெளியுறவு துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஜெய்சங்கர் .. மிக மோசமான வரலாறு கொண்டவர்

political advisor to the Indian Peace Keeping Force (IPKF) in Sri Lanka.
ரவிராஜ் : அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்...
தில்லியில் 1955இல் பிறந்த சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஒரு பழமைவாத சித்தாந்தவாதி. 1970களில் சோவியத் யூனியனில் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக பணியாற்றிய அவர் தொடர்ச்சியாக அமெரிக்கா ,செக் குடியரசு, சைனா, சிங்கப்பூர் என பல தேசங்களில் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆன பின்பு அவருக்கு அமெரிக்கா மறுத்த விசாவை மீண்டும் கிடைக்கச் செய்தது இந்த ஜெய்சங்கர் தான்.
அமெரிக்காவின் ஹைடு சட்டத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பை மீறிய அனு சக்தி ஒப்பந்தத்தில் இந்தியாவை கையெழுத்திட அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றிய அதிகாரி இவர். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீது இவரது தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாகவே இந்தியா அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இவரது பல்வேறு அணுகுமுறைகள் மனித மாண்புகளை மீறிய செயலாகவே இருந்துள்ளது. உதாரணத்திற்கு 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து நேபாளத்திற்கு தேவையான பெட்ரோல், மருந்துகள் உள்ளிட்ட அத்துணை அடிப்படையான பொருள்களையும் நேபாளம் செல்ல விடாமல் தடுத்ததுடன் அந்த நாட்டின் கம்யூனிச அரசாங்கம் கட்டமைத்த அரசியலமைப்பு சாசனத்தில் தனக்குத் தேவையான திருத்தங்களை செய்தாலொழிய உங்களுக்கான எந்த ஒரு உதவியும் கிடைக்காது என மனிதத் தன்மையற்ற முறையில் நடந்து கொண்டவர். நேபாளத்திற்கு குவிந்த அத்துணை நிவாரண பொருட்களையும் கல்கத்தாவில் தேக்கி வைத்துக் கொண்டு தொடர்ச்சியான நிர்பந்தத்தை நேபாளத்தில் உருவாக்கியவர்.

தங்கத்தமிழ் செல்வனுக்கு அதிமுகவில் ராஜ்யசபா பதவி.. தூது தூது தூது

ராஜ்யசபா: தங்கத்துக்கு  அதிமுகவின் புதிய ஆஃபர்!மின்னம்பலம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனை மையமாக வைத்து அடுத்த கட்ட பரபரப்பு பரவிக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே சிலமுறை தங்க தமிழ்ச்செல்வன் தினகரனிடம் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவுக்குச் செல்கிறார், அதிமுகவுக்குச் செல்கிறார் என்றெல்லாம் தகவல்கள் கிளம்ப அதை அவ்வப்போது மறுத்து வந்திருக்கிறார் தங்கம்.
இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி வாய்ப்பை இழந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் பல்வேறு தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.

கங்கை நீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றதல்ல : மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

கங்கை நீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றதல்ல :  மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்
தினத்தந்தி :குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கங்கை நீர் உபயோகமற்றது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, புண்ணிய நதிகளில் ஒன்றான கங்கையில் நீராட ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கங்கை நதி மிக மோசமாக மாசுபாடு அடைந்துள்ளதாகவும், அதை நேரடியாக குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாது என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகையில், “ கங்கை நதி பாயும் வழியில் 86 இடங்களில் கண்காணிப்பு மையம் அமைத்திருந்தோம். அந்த இடங்களில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் 78 இடங்களில் உள்ள நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

வட இந்தியயாவிலிருந்து பிழைப்பு தேடி தமிழகத்தில் நிரந்தரமாக குடியேறிய ஒருவரின் குரல்!

நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்துவம் காட்டிய தமிழக வாக்காளர்களே வணக்கம் !!!. இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நினைக்கையில் நீங்கள் மட்டும் தனி வழியில் சிந்தித்தது தமிழன் தனித்துவமானவன், தமிழ் இனம் தனி இனம், மற்றொரு இனம் எடுக்கும் முடிவை திராவிட இனம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை காட்டி விட்டீர்.*
*நேற்றிலிருந்து புரியாத புதிராக இருந்ததை யோசித்து யோசித்து விடை தேட முற்பட்டு ஒரு நண்பனின் பேச்சில் சிறு பொறி கிட்டியது.*
*ஆம், தமிழகத்திற்கு பிழைப்புத் தேடி வந்த குஜராத் ராஜஸ்தான் மார்வாடிகளை, பட்டேல்களை, ஜெயின்களை, சௌராஷ்டிரர்களை, சிந்திகளை பெரும் செல்வந்தர்களாக்கியது இந்த மண். நாங்கள் மட்டுமா ஆந்திராவிலிருந்தும் கேரளாவிலிருந்தும் வந்தவர்களை திராவிடத்தின் ஒரு தாய் பிள்ளையாக அன்புடன் அரவணைத்துக் கொண்டவர்கள் நீங்கள் !!!. இன்றும் பீகாரிலிருந்து உ. பி. யிலிருந்து ராஜஸ்தானிலிருந்து மேற்கு வங்கத்திலிருந்து தினம் வந்திறங்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வாழவைக்கும் மக்கள் நீங்கள். உங்களின் திராவிடக் குடும்பத்தின் அங்கமான ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்களை வாழ வைக்கும் இனம் திராவிட இனம் என்பது நிதர்சனம் !!!.*
*நான் அதிசயத்துப் போகிறேன் இந்த மண்ணைப் பார்த்தும் மக்களைப் பார்த்தும், யார் இந்த மண்ணை, மக்களை பண்படுத்தியது என்று !!!*
*மிகவும் வெளிப்படையாகவே சொல்கிறேன் நாங்கள் இங்கே வந்து வாழ்வதைப் போல் ஒரு நாளும் எங்கள் மண்ணில் இவ்வளவு சுதந்திரமாக சௌகரியமாக வாழ்ந்து விட முடியாது. தென்னகம் வந்து கெட்டவர்கள் யாருமில்லை.*

பேராசிரியர் சுப வீரபாண்டியன் கடிதம் .. ராஜ்யசபாவுக்கு தெரிவாகிறாரா?

அனைவருக்கும் வணக்கம். சில நாள்களுக்கு முன்பு, "ஒன இந்தியா" வலைத் ்களில் பதிந்திருந்தனர். இவற்றைத் தொடர்ந்து நேரிலும், தொலைபேசி வழியாகவும், வலைத்தளங்களிலும், நண்பர்கள் பலர், வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
தளத்தில், வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில், திமுக சார்பில் எனக்கும் ஒரு இடம் கொடுக்கப்படலாம் என்பது போல ஒரு செய்தி வெளியாகியிருந்தது. என் மீது நல்லெண்ணம் கொண்டு அச்செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம். அதே போல், என் மீது கொண்ட அன்பு காரணமாக, அருமை நண்பர்கள் வன்னியரசு (விடுதலைச் சிறுத்தைகள்), வழக்கறிஞர் கரூர் ராசேந்திரன் ஆகியோரும், எனக்கு அப்பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்னும் தங்கள் விருப்பத்தைத் தங்கள் முகநூல
என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. எனினும், என் மௌனம் சம்மதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக இச்சிறு விளக்கத்தைக் கூற வேண்டியவனாக உள்ளேன்.
இச்செய்தி வெறும் விருப்பத்தின் அடிப்படையிலானதேயன்றி, உண்மையானதாக இருக்க எந்த வாய்ப்புமில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். அப்படியே இருந்தாலும், அதில் எனக்கு எவ்வித உடன்பாடுமில்லை. இவ்விரு செய்திகளையும் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை ஆகும்.

உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்கிறார்

unakkheeran.in - jeevathangavel : தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளராக தற்போது இருப்பவர் முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன்.   நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்க முடிவு செய்துள்ள தி.மு.க. தலைமை அதற்கான வேலையை துரிதமாக செய்கிறது .

ஆண்மையில்லாத்தனம்: இளையராஜாவுக்கு 96 பட இசையமைப்பாளர் பதில்

Ilaiyaraja issue: 96 movie music director responds Siva- tamil.filmibeat.com : 96 Movie: ஆண்மையில்லாத்தனம் என இளையராஜா திட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-
சென்னை: ஆண்மையில்லாத்தனம் சர்ச்சை குறித்து வீடியோ மூலம் இளையராஜாவுக்கு பதில் அளித்துள்ளார் 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.
பிற இசையமைப்பாளர்கள் தங்களின் படங்களில் தன் பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று இசைஞானி இளையராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அந்த பேட்டியை பார்த்த இளையரஜா ரசிகர்களுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. தயவு செய்து நீங்கள் இசை மூலம் மட்டுமே பேசுங்கள், பேட்டிகள் கொடுக்க வேண்டாம்.
பேட்டிகள் மூலம் உங்களின் பெயர் கெடுகிறது என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்திய 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கோவிந்த் வசந்தா தளபதி படத்தில் வரும் கண்மணி கண்ணால் ஒரு சேதி பாடலின் இசையை வாசிக்கிறார். தான் என்றுமே இசைஞானி இளையராஜாவின் ரசிகன் என்று தெரிவித்துள்ளார் அவர்.

வடிவேலு.. பொதுப்புத்தியின் ரகசியங்களை அம்பலப்படுத்திய ஒப்பற்ற கலைஞர் ...

Vivek Gananathan : வடிவேலு இயங்காத தமிழகம்’ என்பதை ஒரு 7
ஆண்டுகளுக்கு முன்பாக யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். கடவுளைக் கல் என சொல்வது எப்படி மதநம்பிக்கைக்கு ஒரு பாவச்செயலோ, அப்படி வடிவேலுவை புறக்கணித்துவிட்டு வாழ்க்கையை நடத்துவதும் பொதுவாழ்வின் ஒரு பெரும்பகுதியை புறக்கணிக்கும் பாவச்செயல் என்றே பார்க்கப்பட்டிருக்கும்.
தமிழகத்தின் உளவியலிலும், வாழ்க்கையிலும் இரண்டற கலந்துவிட்ட ஒரு கலைஞனாக வடிவேலு இருக்கிறார். அவர் நேரடியாக அரசியலில் இயங்காமல், இருக்கும் இக்காலகட்டத்தில் வடிவேலுவைப் பற்றிய ஏக்கம் தமிழ்நாட்டில் மிகுந்திருக்கிறது. இந்த ஏக்கத்தின் பின்னணியில், கடந்த 100 ஆண்டுகளில் பரிணாமம் அடைந்து தமிழ் மனதின், கலை – இலக்கிய உலகின் வரலாறு இருக்கிறது.
கடந்த 100 ஆண்டுகளில் தமிழ் சமூகத்தின் மீது மகத்தான தாக்கத்தைச் செலுத்திய மனிதர்களில் வடிவேலுவின் இடம் முக்கியமானது. மிகக்குறிப்பாக, 1991ல் தாராளமயக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பிறகு மிகச்சிக்கலான வாழ்க்கை முறைக்கு மத்தியில் வடிவேலு மேல் எழுந்துவந்தார்.

நேசமணி ஹெஷ்டேக்! .. மோடியின் பதவி பாசிசத்தை எள்ளி நகையாடி தள்ளி மிதித்துவிட்ட தமிழகம்!

சிவசங்கர் எஸ்.எஸ் : நேசமணி யார் என்று உலகமே கேட்கிறது.
காரணம் Pray_for_Nesamani என்ற ஹேஷ்டேக் உலக டிரெண்டிங்கில் 2ம் இடத்திலும், இந்திய டிரெண்டிங்கில் முதல் இடத்திலும் வந்து துவம்சம் செய்திருக்கிறது.
இதில் என்ன துவம்சம் என்று கேட்கலாம். மற்ற நாட்கள் என்றால், இந்த ட்ரெண்டிங் துவம்சம் ஆகியிருக்காது. வெறும் காமெடியாக கடந்திருக்கும். ஆனால் அது நடந்த நாள், எதேச்சையாக மோடி "பதவியேற்ற நாளாக'' அமைந்து விட்டது.
மோடி பதவி ஏற்ற செய்தி நான்காம் இடத்திலும், நேசமணி செய்தி முதல் இடத்திலும் வந்திருக்கிறது என்றால் ட்விட்டரில் தமிழர்களின் ஆதிக்கம் வெளிப்படுகிறது.
இதில் கொடுமை என்னவென்றால், இந்த நேசமணி ட்ரெண்டிங் எதேச்சையாக நடந்தது.
சுத்தியல் படத்தை போட்டு, " இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர் ?" என்று ஒரு கட்டுமான நிறுவனம் இணையத்தில் கேள்வி கேட்டிருக்கிறது. அதனைப் பார்த்த ஒரு தமிழர், அளித்த பதில் தான் இவ்வளவு அதகளத்திற்கும் காரணம்.
அவர் சொன்னது, "இது சுத்தியல். இது தான் எங்கள் காண்ட்ராக்டர் நேசமணி தலையில் விழுந்து நினைவிழக்க செய்தது". அதற்கு பதிலளித்த இன்னொரு நண்பர், " நேசமணி பிழைக்க வேண்டுகிறேன்", என் பதிலளித்ததாக தகவல்.
பற்றிக் கொண்டது இணையம். காரணம், தமிழ் இணையவாசிகளின் தலைவன் வடிவேலு தானே.

வியாழன், 30 மே, 2019

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி இல்லை .. நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் (தமிழர்களாம்) மத்திய அமைச்சர்களாகி உள்ளனர்

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: அப்படின்னா இவ்வளவு நாள்
அதிமுக காத்து கிடந்ததெல்லாம் வீண்தானா என்று ஆகிவிட்டது. குறிப்பாக ஓபிஎஸ்! மத்திய அமைச்சர் பதவி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று இல்லாமல் போய்விட்டது.. அதாவது அதிமுக தரப்பில் யாருக்குமே சீட் தரப்படவில்லை!
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்னாடி ஆகட்டும், அதற்கு பிறகு ஆகட்டும், முடிந்தது தமிழகத்தின் கதை என்றுதான் நினைக்க தோன்றியது. அவ்வளவு எதற்கு, "மாட்டிக்கிச்சே.. மாட்டிக்கிச்சே" என்று பாஜகவிடம் தமிழகம் சிக்கி கொண்டதாககூட மீம்ஸ்கள் பறந்தன.
அதேபோல, தமிழகம் சார்பில் யாராவது அமைச்சரவையில் இடம் பெறுவார்களா என்ற கிலியும் பற்றிக் கொண்டது. இதற்கு காரணம், சொந்த கட்சி உட்பட அதிமுக, பாமக, தேமுதிக, என ஒருத்தர் கூட ஜெயிக்கவில்லை. அதனால் நமக்காக குரல் கொடுக்க யாருமே இருக்க மாட்டார்களா, தமிழகம் சார்பாக "நாங்கள் இருக்கிறோம்" என்று ஒருத்தராவது சொல்ல மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு இன்று பொழுது விடிந்ததுமே தொத்திக் கொண்டது.

ஆந்திராவில் பாஜக 18 தொகுதிகளில் நோட்டாவை தாண்டவில்லை 24 தொகுதிகளின் வாக்கு விபர பட்டியல் .

G Shanmugakani : தமிழர்களும் மலையாளிகளும் பாஜகவிற்கு மரண அடி கொடுத்துள்ள நிலையில் இவர்களை விட ஒருபடி மேலே சென்று ஆந்திராவில் பல தொகுதிகளில் நோட்டாவை தாண்டாவிடாமல் தெலுங்கர்கள் சங்லிகளை கதற விட்டிருக்கிறார்க‌ள்.
25 ல் 18 தொகுதிகளில் பாஜகவை முந்திய நோட்டா!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் பாரதிய ஜனதாக கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது. எனினும், ஆந்திரா, கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாஜக 1 தொகுதிகளில் கூட வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக, ஆந்திராவில் பாஜக போட்டியிட்ட 24 தொகுதிகளில் 18 தொகுதிகளில் நோட்டா பெற்ற வாக்குகளை விட குறைவாக‌ பெற்று தோல்வியைத் தழுவியுள்ளது. வாக்கு சதவீதத்தை குறிப்பிடுகையில் நோட்டாவை விட பாஜக குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது, அதிக பட்சமாக அரக்கு தொகுதியில் 17,867 வாக்குகளை பாஜகவும், 47,977 வாக்குகளை நோட்டாவும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக, நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் வாங்கிய தொகுதிகள், வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் விவரம் பின்வ‌ருமாறு:
ஆந்திர பிரதேசம்
1. அமலாபுரம்
நோட்டா -16,449 (1.34%)
பாஜக- 11516 (0.94%)
2. அனக்காபள்ளி
நோட்டா- 34,897 (2.82%)
பாஜக- 13276 (1.07%)
3. அனந்தபூர்
நோட்டா - 16,466 (1.23%)
பாஜக-7604 (0.57%)

மோடியின் மனைவி யசோதா பென் தனது கணவர் மோடி ஒரு முறையேனும் தொலைபேசியில் பேச வேண்டும் என விரும்புகிறார்.

அங்கூர் ஜெய்ன் - ஆசிரியர், பிபிசி குஜராத்தி : அப்போதைய குஜராத்
முதல்வராக இருந்த நரேந்திர மோதி 2014 ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த படிவத்தில், தன்னை திருமணம் ஆனவர் என்று குறிப்பிட்டு, மனைவியின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார். 2002, 2007 மற்றும் 2012 என மூன்று முறை முதல்வராக இருந்தபோதும், தேர்தல் வேட்புமனுக்களில் திருமணம் குறித்த கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்த மோதி, 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் இந்தத் தகவலை அளித்தபோது, உலகிற்கு அறிமுகமானவர்தான் யசோதாபென்.
1952ஆம் ஆண்டு, வடக்கு குஜராத்தின் பிரம்மவாடா பகுதியில் பிறந்த யசோதாபென், 1968ஆம் ஆண்டு, நரேந்திர மோதியை திருமணம் செய்தார்.
தற்போதும் அதே கிராமத்தில் தனது இளைய சகோதரருடன் வசித்துவரும் அவர், ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியை.
மோதியின் வேட்புமனு குறித்த தகவல் வெளிவரும் வரையில், அந்த ஊரில் இருந்த பலருக்குக்கூட, இவர் மோதியின் மனைவி என்பது தெரியாது. தகவல் வெளியான பிறகு, பலரும் அவரைச் சந்திக்க தொடங்கினர்.

ஸ்மிருதி ராணியின் உதவியாளரை கொன்றது பாஜகவினர் எனப் போலிஸ் தகவல் !

வெப்துனியா :சில நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட சுரேந்தர் சிங் தனது சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களால்தான் கொல்லப்பட்டார் என உத்தரபிரதேச போலிஸ் தகவல் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது சொந்த தொகுதியான அமேதியில் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார் ஸ்மிருதி ராணி. ஆனால் அந்த வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அமேதி தொகுதியில் ஸ்மிருதிக்கு உதவியாளராக இருந்த சுரேந்தர் சிங் மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
பரௌலியா கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான சுரேந்திரா சிங், அமேதி மக்களவைத் தொகுதியில் ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வெற்றிக்கு முக்கியக் காரணமாக பங்காற்றியவர்.

ரஜினியும், கமலும் மோடியின் கூட்டாளிகளா?: திருமாவளவன்

ரஜினியும், கமலும் மோடியின் கூட்டாளிகளா?: திருமாவளவன்மின்னம்பலம் : ரஜினி,
கமலை மோடியின் கூட்டாளிகள் எனக் கூறுவது உண்மையாக இருக்கலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற விசிக தலைவர் திருமாவளவன், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து நன்றி கூறிவருகிறார். அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (மே 30) சந்தித்த திருமாவளவன், பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய திருமாவளவன், “வன்னிய சமூகத்தினருக்கும் இதர சமூகத்தினருக்கும் நான் எதிரி என்பதுபோல ஒரு தோற்றத்தை ஆதாய அரசியல் செய்யும் சிலர் திட்டமிட்டு பரப்பிவந்தார்கள். அந்த அவதூறு பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது. அனைத்து கட்சிகளைச் சேர்ந்த வன்னியர் சமூகம் மற்றும் பிற சமூக மக்களும் மனமுவந்து வாக்களித்ததன் விளைவாகத்தான் நான் வெற்றிபெற்றேன். வன்னிய சமுதாயத்தின் ஆதரவு கிடைத்தன் விளைவுதான் இந்த வெற்றியை எட்ட முடிந்தது” என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த ஆபத்து இப்போது நீங்கியிருக்கிறது”

  மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் லைனில் இருந்தது. அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் வந்தது.
டிஜிட்டல் திண்ணை:  ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?“மக்களவைத் தேர்தல் முடிவுகளில் திமுக தமிழ்நாட்டை ஸ்வீப் செய்ததோடு, சட்டமன்ற மினி இடைத்தேர்தலில் 22 இல் 13 தொகுதிகளில் ஜெயித்தது. இது தமிழகம் முழுதும் திமுகவுக்கு ஆதரவு ட்ரெண்டை உருவாக்கியிருந்தது. ஆனாலும் எடப்பாடி அரசு தேவையான எம்.எல்.ஏ.க்களைப் பெற்று தப்பிப் பிழைத்தது. இதை அடிப்படையாக வைத்து விரைவில் எடப்பாடி அரசை ஸ்டாலின் கலைத்துவிடுவார் என்று திமுகவினர் பகிரங்கமாக பேச ஆரம்பித்தனர். இது ஒரு பக்கம் என்றால் இன்னொருபக்கம் திமுக நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து எடப்பாடி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வேலைகளிலும் தலைமையின் அறிதலோடு தீவிரமாக ஈடுபட்டனர்.

ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி ..எடப்பாடி கடும் எதிர்ப்பு!

மத்திய அமைச்சர்: ஓபிஎஸ் மகனுக்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு!மின்னம்பலம் : டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மே 30) இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்கிறார். புதிய மத்திய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
பொதுவாகவே புதிய அமைச்சரவை பொறுப்பேற்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாகவே அமைச்சரவை பட்டியல் வெளியிடப்படும். ஆனால் இம்முறை யார் யார் மத்திய அமைச்சர்கள் என்பது ஏனோ ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
பதவியேற்பு நிகழ்வுக்கு முன்னதாக மாலை 4.30 மணிக்கு புதிதாக வெற்றி பெற்ற எம்பிக்களில் முக்கியமான சிலருக்கு பாஜக தலைமை சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. டெல்லி அக்பர் சாலையில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் இந்த விருந்து நடந்தது. இந்த விருந்தில் பங்கேற்றவர்கள்தான் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்க, அதன்படியே உத்தேச அமைச்சரவை பட்டியல் என்று வெளியானது.

மம்தா பானர்ஜி..மோடி பதவி ஏற்புவிழவை புறக்கணித்த காரணம் என்ன?

Sorry Modi ji... Mamata Banerjee decides not to attend PM swearingtamil.asianetnews.com - vinoth-kumar: நாளை பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கபோதில்லை என்று அறிவித்துள்ளனர். நாளை பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கபோதில்லை என்று அறிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மோடியை பின்னுக்கு தள்ளிய #pray_for_nesamani ஹேஷ்டேக்

thanthitv.com :  Pray for nesamani ஹேஷ்டேக், மோடி பதவியேற்பு விழாவை பின்னுக்கு தள்ளி இந்திய அளவில், தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. pray for nesamani ஹேஷ்டேக், மோடி பதவியேற்பு விழாவை பின்னுக்கு தள்ளி  இந்திய அளவில், தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. மோடி 2 வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார் ...
இதனால், டுவிட்டரில், மோடியின் பதவியேற்பு விழா தான் இந்திய அளவில் டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், வடிவேலு
கதாபாத்திரத்தை குறிப்பிடும்,  pray for nesamani என்ற ஹேஷ்டேக் திடீரென உலக அளவில் முதல் இடத்தில் டிரெண்டாக தொடங்கியது. தற்போது வரை இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் 2 வது இடத்தில் டிரெண்டாகி வருகிறது. மோடியின் பதவியேற்பு விழாவை குறிப்பிடும் மோடி சர்கார் 2 என்ற ஹேஷ்டேக், 3 வது இடத்திலே டிரெண்டாகி வருவது  குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில், இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா  அணிகள் மோதும் உலக கோப்பை போட்டிக்கான ஹேஷ்டேக் டிரெண்டாகிறது