சனி, 3 அக்டோபர், 2026

தமிழக முகாம் வாழ் மக்களின் வாழ்வோடு விளையாடும் தமிழ் தேசியர்கள்

 ராதா  மனோகர் : போர் காலங்களில் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்தனர் ஈழத்தமிழர்கள் 
அந்தந்த நாடுகளுக்கு செல்லும் அனைவரும் அந்தந்த நாடுகளில் வதிவிட அனுமதி பெற்று தங்கள் வாழ்வை வளமாக்கி கொள்ள முயன்றனர் 
என்ன காரணம் கொண்டும் இலங்கைக்கு திரும்பி சென்றால் கொல்லப்படுவோம் என்று கூறித்தான் தங்கள் அகதி அந்தஸ்து கோரிக்கைகளை இன்றுவரை முன் வைக்கின்றனர்.
ஆனால் இந்தியாவுக்கு புலம் பெயர்ந்து சென்று தங்கி இருப்பவர்கள் மட்டும் இலங்கைக்கு திரும்பி செல்லவேண்டும் என்று செல்வநாயகத்தின் வாரிசுகள் ஒற்றை காலில் நிற்கின்றன.
இலங்கையில் உள்ள தமிழர்களின் குடிப்பரம்பல்தான் அவர்களுக்கு முக்கியமாக தெரிகிறது 

நடிகர் விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்"- டெல்லி ரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்

 மாலைமலர் : டெல்லியில் இளம்பெண் ஒருவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யைச் சந்திக்க வேண்டும் என்று கோரி நடுரோட்டில் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே நடுரோட்டில் ஒரு பெண் படுத்துக்கொண்டு தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் தன்னைச் சந்தித்துக் கட்டிப்பிடிக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார்.
வினோதமான இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

வெள்ளி, 2 அக்டோபர், 2026

திலீபன் சிலைக்கும் ஒரு தகுதி வேண்டும்

 Vijaya Baskaran  :  சிலைக்கும் ஒரு தகுதி வேண்டும்
ஊருக்கு நூறு பேர். இந்திய நக்சலைட் பற்றி ஜெயகாந்தன் எழுதிய நாவல்.ஒருவரை பயிற்சிக்காக வாகனத்தில் ஏற்றிச் செல்கிறார்கள். அனைவர் கையிலும் துப்பாக்கிகள். அதைப் பார்த்து நீங்கள் என்னைக் கடத்திச் செல்வதுபோல உணர்கிறேன் என்று கூற அவர்களில் ஒருவன் தனது ஆயுத்த்தை அவரிடம் கொடுக்கிறான். இப்போது எப்படி உணருகிறீர்கள் என கேட்க நான் உங்களில் ஒருவராக உணருகிறேன் என பதிலளிக்கிறார்.
ஒரு போராளி என்பவன் மக்களுக்கானவன். மக்களுக்காக போராடுபவன். அவனைப் பார்த்து மக்கள் பயந்தால் அவன் போராளியே அல்ல.இலங்கையில் நடைபெற்ற போராட்டம் இன முறுகலின் அடிப்படையில் ஏற்பட்டதால் மொழி அடிப்படையில் தமிழ் பேசும் மக்களிடம் ஆதரவு இருந்தது. ஆனால் மக்கள் ஒருபோதும் முழுமையாக நம்பவில்லை.

ஸ்மித் மச்சாரை தாக்கிய விமானி: பாகிஸ்தான், ஈரான் தொடர்பா?

  minnambalam.com  - Mathi ; துபாய் விமானத்தில் நடுவானில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கிய துணை விமானி யார் என்பது குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் FZ1073 விமானம் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்றபோது, விமானிகள் அறைக்குள் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை துணை விமானி கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பிறகு விமானம் திடீரென பல ஆயிரம் அடி கீழே இறங்கியது. காயமடைந்த நிலையிலும் விமானிகள் அறையின் கதவை திறந்த ஸ்மித் மச்சார், பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளே வருவதற்கு வழி ஏற்படுத்தினார்.

வியாழன், 1 அக்டோபர், 2026

பிரேமலதா : விஜயகாந்த் பற்றி பேசுவதை ஆதவ் அர்ஜுனா நிறுத்திக்கொள்ள வேண்டும்”

 hindutamil.in -டி.ஜி.ரகுபதி : கோவை: “எங்கள் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் விஜயகாந்த் ஆன்மா குறித்து பேசுவதற்கு அருகதையே கிடையாது” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (அக்.01) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

புதன், 30 செப்டம்பர், 2026

விமானியை கத்தியால் குத்திவிட்டு கடத்த முயற்சி - துபாயில் இஸ்ரேல் விமானம் கடத்த முயற்சி முறியடிப்பு

May be an image of text

 சக விமானியை கத்தியால் கு*த்தி விட்டு இஸ்ரேலியர்கள் பயணித்த விமானத்தை விபத்துக்குள்ளாக்குவதற்கு விமானியொருவர் முயன்றார் என, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கி இன்று பயணித்த விமானமொன்று, சஊதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறங்கியது.
விமானிகளுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையின் காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. 
ஆனால், விமானியொருவர் சக விமானியை கத்தியால் குத்தியதாகவும், கிட்டத்தட்ட - முழுவதும் இஸ்ரேலியர்கள் பயணித்த அந்த விமானத்தை, குறித்த விமானி, விபத்துக்குள்ளாக்குவதற்கு முயற்சித்ததாகவும், நெதன்யாகு கூறியுள்ளார்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

உதயநிதி : 2 நாளில் 9 கொலைகள்... ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?

 hindutamil.in - தமிழினி   :  சென்னை: “தமிழகத்தில் கொத்துக் கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர்?” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் நடந்துள்ளது. என்ன செய்கிறார் டம்மி முதல்வர்?
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 28 செப்டம்பர், 2026

பெண்களை நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் தவெக! - கனிமொழி சாடல்

 hindutamil.in - எம்.நாகராஜன் :  தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து, திமுக தேர்தல் பணிமனையில் மகளிர் அணி கலந்தாய்வுக் கூட்டம் இன்று (செப்.28) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து கனிமொழி எம்பி பேசியதாவது:
மக்களின் தீர்ப்பை மதிக்காமல் வேறு கட்சிக்கு மாறியவர்களுக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். ‘ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வருவேன்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, சட்டம்-ஒழுங்கை முற்றிலுமாகச் சீர்குலைத்துவிட்டது. மாநிலத்தில் 300-க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள், 10 -க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் என குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

RTI இல் சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது

 minnambalam.com -Pandeeswari Gurusamy :RTI இல் சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்து எதிர்ப்புக்கு பிறகு ரத்து செய்தது தவெக அரசின் நிர்வாக திறமை இன்மையை காட்டுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது RTI-யில் இருந்து சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, “தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) என்பது நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட அவர்களின் அடிப்படை உரிமையாகும். 2005-ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 24(4)-ன் கீழ் இந்த உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

வஹாபிஸப் பயங்கரவாதத்தின் தோற்றம் இஸ்லாம் உருவாகி பல நூறு ஆண்டுகளின் பின்னர்

May be an image of text

 M R Stalin Gnanam :  வஹாபிஸப் பயங்கரவாதத்தின் தோற்றம் 
இஸ்லாம் உருவாகி பல நூறு ஆண்டுகளின் பின்னர் ஏற்றப்பட்ட புலப்பெயர்வுகள்,வெளியுலகுத் தொடர்புகள், காலமாற்றங்கள்  காரணமாகவும் முஸ்லிம்களின் வாழ்வு மற்றும் வணக்க வழிபாடு போன்றவற்றில் பல்வேறு  விடயங்கள் மாற்றம் பெறலாயின. பல முறைமைகள் அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் போன்றவற்றை அச்சொட்டாக பின்பற்றுவது சிக்கலுக்குரியதொன்றாக மாறத்தொடங்கியது.
இதன்காரணமாக இஸ்லாம் மார்க்கம்  என்பது குறித்த  ஓர் இறுக்கமான அணுகுமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும் என சில பற்றி மார்க்க அறிஞர்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர். அத்தகைய அறிஞர்களில் ஒருவர்தான் இமாம் 'முஹம்மத் பின் அப்துல் வஹாப்' என்பவராகும்.

நல்லூரில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் - காவல்துறையினர் விளக்கம்

  hirunews.lk  : யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் போது, உயிர்நீத்த திலீபனின் உருவச்சிலை இன்று (27) காலை காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.
உருவச்சிலை அமைந்திருந்த இடத்திற்கு காலை 6.30 அளவில் சுமார் 10 காவல்துறை அதிகாரிகள் வருகை தந்து, சிலையை அகற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
திலீபனின் நினைவேந்தல் நேற்று(26) முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இன்று காலை குறித்த சிலை அகற்றப்பட்டுள்ளது.