சனி, 5 டிசம்பர், 2015

சவுதி பணிப்பெண்ணுக்கு ஆதவரவாக சுமந்திரனை பேசவிடாது பாராளுமன்றில் கூச்சல் போட்ட முஸ்லிம் அமைச்சர்கள் எம்பீக்கள்


இலங்­கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒரு­வரை ஷரி ஆ சட்­டத்தின் பிர­காரம் கல்லால் எறிந்து மரண தண்­டனை நிறை­வேற்­று­வ­தற்கு அளிக்­கப்­பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் மேற்­படி தண்­ட­னைக்கு எதிர்ப்பு வெளி­யிட்ட நிலையில்
சுமந்­திரன் எம்.பி.யின் இச்­செ­யற்­பாட்­டுக்கு அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன், உறுப்­பி­னர்­க­ளான நவவி, மரிக்கார் மற்றும் இஷாக் ஆகியோர் எதிர்ப்­புக்­களை தெரி­வித்­தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்­பட்­டது.; பாரா­ளு­மன்­றத்தின் நேற்று வெள்ளிக்கிழமை அமர்­வின்­போது இடம்­பெற்ற 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் நாள் குழு நிலை விவா­தத்தில் பேசிக் கொண்­டி­ருந்த சுமந்­திரன் எம்.பி, இலங்­கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் சவூ­தியில் கல்லால் எரிந்து மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ளார் என்றும் அதற்­காக தனது கவலையை வெளி­யி­டு­வ­தா­கவும் கூறினார்.

கடலூரை மறந்த மீடியாக்கள் ..லட்சம் வீடுகள் சேதம் பரவனாறு, செங்கால் ஓடை, கெடிலம் ஆறுகளில் உடைப்பு.. மாவட்டமே வெள்ளக்காடானது

கடலூர்: தொடர்ந்து பெய்து வரும் மழையால்
கடலூர் மாவட்டம் பாதிப்பை மீடியாக்கள் பெரும் அளவில் கவரேஜ் செய்யவில்லை என்றே சொல்லலாம். தலைநகர் சென்னை பாதிக்கப்பட்டதால் கடலூரில் என்ன பாதிப்பு என்று விவரம் அதிகம் வெளியே வரவில்லை. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், கடலூரை நோக்கி அணி வகுத்து சென்று கொண்டிருக்கின்றன . சமீபத்திய மழையில் ஒரு லட்சம் வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் அனைத்து நீர் நிலைகள் வழிந்து பெருக்கெடுத்து ஓடியது. பரவனாறு, செங்கால் ஓடை, கெடிலம் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டதால் மாவட்டமே வெள்ளக்காடானது. >கனமழை, வெள்ளப் பெருக்கில் இதுவரை மாவட்டத்தில் 86 பேர் இறந்துள்ளனர். 40 ஆயிரம் வீடுகள் முழுமையாகவும் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் பகுதி சேதமடைந்தன. 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 2.5 லட்சம் ெஹக்டேர் நிலங்களில் இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

நடிகர் நடிகைகள் ரெஸ்க்யூ சென்னை குரூப்....வாட்சாப் ...வெள்ள பகுதிகளில்

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது படப்பிடிப்புகளை ரத்து செய்து உதவி செய்யும் பணியில் நடிகர்கள் கார்த்தி, விஷால் களமிறங்கி இருக்கின்றனர். சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கும் பணிகளில் நடிக,நடிகையர் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். Actors Vishal, Karthi Helps for Chenaai People இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் பணியில் தற்போது ஏராளமான நடிக, நடிகையர் கைகோர்த்து உள்ளனர். நடிக, நடிகையர் தமிழகம் மற்றும் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சித்தார்த், ஆர்ஜே பாலாஜி மற்றும் நடிகைகள் கனிகா, ஷாலினி அஜீத் ஆகியோர் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். 
மேலும் சமூக வலைதளங்கள் மூலமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் இவர்கள் செய்து வருகின்றனர். விஷால், கார்த்தி இந்நிலையில் விஷால் மதுரையில் நடந்த மருது படப்பிடிப்பை ரத்து செய்தும், கார்த்தி ஹைதராபாத்தில் நடந்த தோழா படப்பிடிப்பையும் நிறுத்தி விட்டும் சென்னை திரும்பினர். 

நிவாரணத்தை வழிப்பறி செய்யும் அ.தி.மு.க. கும்பல்! சென்னைவாசிகளை கைவிட்ட தமிழக அரசு!

கொடுமை, பிணத்தின் நெற்றியில் வைக்கப்பட்ட காசைப் பறிக்கும் கேடுகெட்டவர்களைப் போல, பொதுமக்கள் தாங்களாக முன்வந்து கொடுக்கும் நிவாரணப் பொருட்களை, உணவுப் பொருட்களை வழிப்பறி செய்து கொண்டு, எங்கள் அம்மாவின் புகைப்படத்தைப் போட்டுத் தருவோம்; இது எங்கள் ஏரியா; நாங்கள்தான் தருவோம் என்று அ.தி.மு.க. கட்சியினர் உருமாறிப் போய்விட்ட கொடுமை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சென்னை: உலக நாடுகளே சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்காக ஆறுதல் தெரிவித்துக் கொண்டிருக்கிறது...தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய எந்த ஒரு முறையான நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 'நிராதரவாக' நடுத்தெருவில் பிச்சைக்காரர்களைப் போல அலையவிட்டிருப்பதால் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர் மக்கள். நிவாரண உதவி செய்ய வரும் தன்னார்வலர்களையும் ஆளும் கட்சியினர் 'இது எங்க ஏரியா' என மிரட்டி விரட்டி பறித்துக் கொண்டு தாங்கள் உதவி செய்வது போல 'பாவ்லா' காட்டுவது மக்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. 

ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி விளம்பரம் தேட முயல்வது மிகவும் மட்டமான அரசியல்: ராமதாஸ் கடும் கண்டனம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு துப்பில்லாத அரசும், ஆளுங்கட்சியினரும் மற்றவர்கள் வழங்கும் உதவிப் பொருட்கள் மீதும் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி விளம்பரம் தேட முயல்வது மிகவும் மட்டமான அரசியல் ஆகும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான இராதாகிருஷ்ணன் நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்ற அமைச்சர்களை விரட்டியடித்து பொதுமக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் பெயரளவுக்குக் கூட மேற்கொள்ளப்படாதது தான் இதற்குக் காரணம் ஆகும்

கமலஹாசன் மீது பன்னீர்செல்வம் கடும்கோபம்: புல்லுருவிகளின் கைப்பாவையாக மாறிவிட்டார் கமலஹாசன்..

சென்னையின் எல்டாம்ஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் நடிகர் கமலஹாசன்,  நகரின் பிற பகுதிகளில் மழை வெள்ளத்தால் மக்கள் படும் துன்பங்களால் கோபமடைந்து, ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு காட்டமாக பேட்டி அளித்தார்.கமலஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டன அறிக்கை  வெளியிட்டுள்ளார்.
;அதில்,  ‘’வரிப்பணம் எங்கே போனது என்கிற சந்தேகம் கமலுக்கு எழவேண்டிய அவசியமே இல்லை.  தமிழக அரசை குறை கூறுவதாக நினைத்துக்கொண்டு தமிழக மக்களை அவமதித்துள்ளார் கமல்.  உள்ளிருந்து கொல்லும் நோய் போல நடிகர் கமலஹாசன் தமிழக அரசை குறை கூறியுள்ளார்.   விசுவாசமான நாய் குரைக்கத்தாய்ன் செய்யும் ..வேற என்னதாய்ன் அது செய்யும்..அது பாவம் வெறும்..இதயதெய்வம் புரட்சி தலைவி ஆத்தா.....தொடங்கிட்டாய்ங்க   .

பங்களாதேசத்தில் இந்துக்கள் திருவிழாவில் குண்டு வெடிப்பு


வங்கதேசத்தின் வடபகுதியில் இந்துக்குகள் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்துள்ளன. திருவிழா நடைபெற்ற இடம் இதில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் வடக்கேயுள்ள தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் நடைபெறும் மதத் திருவிழா காலத்தில் இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்றுள்ளன. இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பில், ஐவர் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றாலும் யாரும் கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் சுமார் 10 சதவீதம் உள்ளனர். அண்மைக் காலத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மை ஷியாப் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள், மதச்சார்பற்றவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீது இஸ்லாமியவாதிகள் தொடர்ச்சியாக கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். bbc.tamil.com

வெள்ளத்தில் காணாமல் போன ஆவணங்களைப் பெறுவது எப்படி?

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
 சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்தவர்களின் உடைமைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. முக்கியமாக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருந்த இடம்தெரியாமல் போயுள்ளன. இவற்றை மீண்டும் பெற முடியுமா என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஒரு நடிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ‘ரோல் மாடல்’ நயன்தாரா.

நடிகை நயன்தாரா ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளதாக மலையாள டைரக்டர் சாஜன் கூறினார்.
முன்னணி கதாநாயகி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 பட உலகிலும் நயன்தாரா முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். காதல் சர்ச்சைகளில் சிக்கியபோதும் ‘மார்க்கெட்’ சரியவில்லை. சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான்’ படங்களின் தொடர்வெற்றியால் மார்க்கெட் அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது.
அவருடன் ஜோடியாக நடிக்க கதாநாயகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தயாரிப்பாளர்களும் சம்பளத்தை உயர்த்தி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். நயன்தாரா ரூ. 3 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் பரவி உள்ளன. தென்னிந்திய பட உலகில் வேறு எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இல்லை.

சென்னை மக்களுக்கு அமெரிக்க அரசு எந்த உதவியும் செய்ய தயார்...இந்திய அரசு இதுவரை உதவி கேட்கவில்லை ....

சென்னை மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா அரசு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது என்றும் இதுவரை எங்களிடமிருந்து எந்த உதவியையும் இந்திய அரசு கேட்கவில்லை  என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் தெரிவித்திள்ளார்.
இது குறித்து  வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்திருப்பதாவது: வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் தமிழகத்தின் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா அரசு தயாராக இருக்கிறது.

அடையாறு வழிகளை அடைத்தால் வாழ முடியாது!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமின்றி, குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள, 50க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகளின், உபரி நீரை கடலுக்கு கடத்தி செல்லும் பெரும்பணியை அடையாறு ஆறு செய்கிறது. இந்த ஆற்றை ஆக்கிரமித்தாலோ, முறையாக பராமரிக்காமல் விட்டாலோ, சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்குவதை யாராலும் தடுக்க முடியாது. வடகிழக்கு பருவமழை, சென்னை நகருக்கு பெரும் பாடத்தை கற்று தந்துள்ளது. சென்னையின் மையப்பகுதியில் கூவம், அடையாறு ஆகிய இரண்டு ஆறுகள் மட்டுமே ஓடுகின்றன. விரிவாக்க பகுதியில் கொற்றலை ஆறு பயணிக்கிறது. இந்த ஆறுகளை தவிர்த்து, செயற்கையாக உருவாக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாய், மாநகராட்சியின் ஏழு மண்டலங்களில் பயணிக்கிறது. நீர்வழித்தடங்களில், பெரும்பாலான நீரை கடலுக்கு கடத்தும் பணியை அடையாறு ஆறு செய்கிறது. இந்த ஆற்றில், செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பால் மட்டுமே வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்ற கருத்து உள்ளது. ஆனால், பெரிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதற்கு முன், 50க்கும் மேற்பட்ட சிறிய ஏரிகள் நிரம்பி, அதன் உபரிநீர் அடையாறு ஆற்றில் பல்வேறு, கிளை கால்வாய்கள் மூலம் இணைவது குறிப்பிடத்தக்கது.

ஆக்சிஜன்' கிடைக்காமல் 18 நோயாளிகள் இறந்த கொடூரம்: சென்னையில் (Miot) தனியார் மருத்துவமனைகள் மூடல்

சென்னையில், இரண்டு தனியார் மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்ததால் அவை மூடப்பட்டன. அங்கு சிகிச்சை பெற்றோர் பிற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒரு மருத்துவமனையில், 'ஆக்சிஜன்' எனப்படும் பிராண வாயு கிடைக்காமல், 18 நோயாளிகள் இறந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வட கிழக்கு பருவ மழையின் தாக்கம், சென்னையை தீவாக மாற்றிவிட்டது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இப்பிரச்னையில் இருந்து, மருத்துவமனைகளும் தப்ப முடியவில்லை.சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, 'மியாட்' மருத்துவமனை, அடையாறு ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. ;மருத்துவமனை நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை இன்மையால், அங்கு சிகிச்சை பெற்று வந்தோர் வெள்ளத்தில் தத்தளித்தனர்.நிலைமையை உணர்ந்த தமிழக அரசால், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, 57 பேர், '108' ஆம்புலன்ஸ் உதவியுடன், பிற தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இங்கு நிலவும் தொடர் மின் தடை; தண்ணீரில் மூழ்கிய ஜெனரேட்டர் ஆகிய பிரச்னைகளால் கூடுதல் சிக்கல் ஏற்பட்டது.

மீண்டும் தொடரும் மழை...அச்சத்தில் மக்கள்

சென்னைக்கு மழை ஆபத்து இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த சில மணிநேரங்களிலேயே கொட்டத் தொடங்கிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. காலை முதல் வானம் தெளிவாக தென்பட்ட நிலையில் லேசாக வெயிலடித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் கனமழை கொட்டத் தொடங்கி சுமார் 4 மணிநேரம் நீடித்தது. பின்னர் ஒருமணிநேரம் ஓய்வெடுத்து இரவிலும் மழை கொட்டியதால் மீண்டும் பெருவெள்ளம் வருமோ என்ற அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர் சென்னைவாசிகள். சென்னையில் கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 40 மணிநேரம் விடாமல் கொட்டிய கனமழைக்கு நகரத்திலும், புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து, இருப்பிடங்கள் இன்றி தவித்து வருகின்றனர். ஏராளமானோர் உயிர் பிழைத்தால் போதும் என்று சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர்.

வெள்ளி, 4 டிசம்பர், 2015

மாற்று திறனாளி குழந்தைகளை படகில் சென்று பார்த்த இளையராஜா

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள லிட்டில் பிளவர் பள்ளியைச் சேர்ந்த பார்வையற்ற, வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளை இசையமைப்பாளர் இளையராஜா படகில் சென்று சந்தித்து உணவு அளித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பலர் தங்களுடைய வீடுகளை இழந்து சாலையோரங்களிலும்,  சமுதாய கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபலங்கள் சிலர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாகனங்கள் மற்றும் உணவு பொட்டலங்களும் வழங்கி வருகிறார். அதுமட்டுமல்ல அவர் சில இடங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டும் வருகிறார்.
நடிகை குஷ்பு வெள்ளத்தில் நடந்து சென்று பட்டினப்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கியுள்ளார்.

பொது ஆப்பிரிக்க பாஸ்போர்ட் விரைவில்....ஆபிரிக்கா முழுவதும் ஒரே விசா போதும் ...

அனைத்து ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அனைத்து ஆப்பிரிக்க குடிமக்கள் ஒரு ஆப்பிரிக்க பாஸ்போர்ட் மற்றும் விசா ஒழித்தல் அறிமுகம்
;ஆபிரிக்க ஒன்றியம் ஆபிரிக்கா விரைவில் ஆபிரிக்க ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரல் 2063 ஒரு பகுதியாக ஒரு ஆப்பிரிக்க பாஸ்போர்ட் அறிமுகம் எல்லைக்கோடில்லாத ஆக முடியும் என்று கூறினார். இந்த சந்தேகத்திற்கு இடமின்றி குடிமக்கள் மற்றும் பொருட்களை இயக்கத்தின் மேம்படுத்தலாம்.அரசியல் விவகாரங்களுக்கான ஏயூ ஆணையர் டாக்டர் ஆயிஷா அப்துல்லாஹியும், ஆபிரிக்கா விரைவில் எல்லைகள் இல்லாமல் ஆக முடியும் மற்றும் ஒரு ஒற்றை ஆப்பிரிக்க பாஸ்போர்ட் திட்டம் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.ஆப்பிரிக்க மற்ற ஆபிரிக்க நாடுகள் அணுக ஒரு விசா தேவையில்லை. பொருட்களை சுதந்திர வர்த்தக இருக்கும், "மேலே டாக்டர் அப்துல்லாஹ் #Africities கூறினார்.

அனைத்து கட்சி குழுவை அமைத்து நிவாரண உதவிகளை ஒழுங்கு படுத்த கோரிக்கை

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அனைத்துக் கட்சி குழுவை அமைத்து நிவாரண உதவிகளை கண்காணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை பெய்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். பச்சிளங் குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் தவிப்பைப் பார்க்கும்போது என் கண்கள் குளமாகிப் போகும் அளவுக்கு வேதனை வாட்டுகிறது.

அமைச்சர்கள் காரை விட்டு இறங்கி தப்பி ஓட்டம்: வெற்றிவேலுக்கு அடி உதை..ஜெ. தொகுதியில் மக்கள் ஆவேசம்

ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகரில் வெள்ளச் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, கோகுல இந்திரா ஆகியோர் இன்று (வெள்ளி) சென்றனர்.
வெள்ளச் சேதங்களை பார்வையிட 3 நாள் கழித்து தாமதமாக வந்ததால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள், வந்தவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொதிப்படைந்தனர். அப்போது காரை விட்டு அமைச்சர்கள் யாரும் கீழே இறங்கவில்லை. இதையடுத்து வயதானவர்களே தண்ணீரில் தத்தளிக்கும்போது உங்களுக்கு கார் தேவையா என்று அப்பகுதி மக்கள் அவர்கள் வந்த காரை முற்றுகையிட்டனர். காரை விட்டு இறங்க மறுத்த நத்தம் விஸ்வநாதனை மக்கள் காரின் கதவை திறந்து இறங்க வைத்தனர்.

அப்போது அவர்களை சூழ்ந்த மக்கள், நேதாஜி நகரில் உள்ள வீடுகளில் இன்னும் வெள்ளம் வடிய நடவடிக்கை எடுக்காதது ஏன். வெள்ள நீரில் கழிவு நீரும் கலந்து வருவதால் வீடுகளுக்குள் இருக்க முடியவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைக்கவில்லை. வெள்ளச் சேதத்தை 3 நாள் கழித்துதான் பார்வையிட வருவதா என்று கேள்வி எழுப்பினர்.
மக்களின் மனநிலையை புரிந்து கொண்ட அமைச்சர்கள், அவர்களிடம் சமாதானம் செய்வதுபோலவே நடந்து சென்று, திடீரென அந்த இடத்தில் இருந்து வேறொரு காரில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த நிலையில் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் வெற்றிவேல் அந்த இடத்தில் இருந்தார். மற்றவர்கள் காரி ஏறி தப்பிச் சென்றதும் கோபமடைந்த மக்கள், வெற்றிவேலை சூழ்ந்தனர். குறைகளை சொல்லிக்கொண்டிருக்கும்போதே காரில் ஏறி ஓடுவதா. அதுக்கு எதுக்கு இங்க வந்தீங்க... என்று அவரை தாக்கியுள்ளனர். நிலைமையை உணர்ந்து பதில் பேசாமல் வேகமாக நடந்தும், ஓடியும் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.nakkheeran.in

35 உடல்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில்! இறந்தவர் தொகை இன்னும் சரியாக தெரியாது.....

சென்னையில் வெள்ளம் வடிந்த இடத்தில் நடந்த மீட்பு பணியின் போது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 35 பேர்களின் உடல்களும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியை  பல அமைப்புக்களும் தனிநபர்களும்  மேற்கொண்டு வருகின்றனர் 

பிரான்சில் 160 மசூதிகள் மூடப்படுகிறது ..France is likely to close up to 160 mosques


France is likely to close up to 160 mosques in the coming months as part of a nationwide police operation under the state of emergency which allows places of worship that promote radical views to be shut down, one of the country's chief imams has said.
France shuts three mosques
Interior Minister Bernard Cazeneuve told journalists on Wednesday that three mosques had been closed over the past two weeks during the state of emergency - marking the first time France had taken such action against places of worship.
On Wednesday, police shut down a suspected radical mosque east of Paris and arrested the owner of a revolver found in related raids as part of the crackdown, Cazeneuve said.
Security officers found "jihadist" documents in the raids at the mosque and related premises in Lagny-sur-Marne.
They placed a total of nine people under house arrest and banned another 22 from leaving the country, Cazeneuve said.

பேரிடர் மேலாண்மை சுத்தமான தோல்வியில்....இது கூடவா தமிழகத்தால் / இந்தியாவால் முடியாது? அறிவியல் ஆலோசகர்...

சென்னையில் பேரிடர் நிகழ்ந்து, 48 மணி நேரமாகியும் பாதிக்கப்பட்ட மக்கள்,
உதவிக்காக கட்டடங்களின் மேல் காத்திருபது, பேரிடர் மேலாண்மை தோல்வி அடைந்துவிட்டதை காட்டுவதாக, முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேதனை கருத்துகள் பரவி வருகின்றன.
மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், முகநுால் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:சென்னையின் மையப்பகுதிகளில் மழை பெய்யாமல் இப்படிப்பட்ட வெள்ளம் உருவானது வரலாறு காணாதது. அடையாற்றை ஒட்டியுள்ள சைதாப்பேட்டை, அசோக் பில்லர், ரங்கநாதன் சுரங்கப் பாதை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள், இதுவரை இப்படிப்பட்ட வெள்ளத்தை பார்த்ததில்லை.நேற்று, மழையும் இல்லை.- அப்படியிருந்தும் ஏரி திறக்கப்பட்டதால், 30 ஆயிரம் கனஅடிக்கும் மேலான தண்ணீர் இந்த பகுதிகளை எல்லாம் சூழ்ந்து கொள்ளும் என்று மக்களுக்கு எப்படி தெரியும்.

வட சென்னையில் மரண ஓலம்..புழல் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர்

சமீபத்திய கனமழையால், தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டன. ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவு மழை நின்றதும், வட சென்னை யின் பல பகுதிகள் மூழ்கியதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வட சென்னையில் உள்ள, எம்.கே.பி., நகர், கண்ணதாசன் நகர், விவேகானந்தன் நகர், எஸ்.எம்., நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தேவர் நகர் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும், தலா, 30 ஆயிரம் - 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். புழல் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கேப்டன் காட்டன் கால்வாய் வழியாக, இப்பகுதிகளில் புகுந்தது. இந்த பகுதி மக்களுக்கு வெள்ள பாதிப்பு குறித்து, அரசு முன் எச்சரிக்கை அறிவிக்கவில்லை.

கைக்குழந்தையுடன் கழுத்தளவு வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் ( படங்கள் )

கனமழை வெள்ளத்தில்  சென்னையின் பல பகுதிகள் தத்தளிக்கின்றன.  கைக்குழந்தைகளூடன் கழுத்தளவு வெள்ளத்திலும் மக்கள் போராடினர்.

வியாழன், 3 டிசம்பர், 2015

நடிகை லட்சுமி நடிகர் ராஜ்கிரண் படகு மூலம் மீட்பு

சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்த  நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சென்னை தற்போது மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றது. இந்நிலையில் மேலும் கனமழை பெய்யும் என்று வேறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எவ்வளவு தான் சினிமாவில் நடித்தாலும் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் கடைசியில் எல்லாருக்கும் ஒரே நிலைதான்...சென்னை மழை பாடம் கற்று கொள்ளுங்கள்.படகு மூலம் மீட்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை லட்சுமி; ஏற்கனவே பார்க்கும் இடம் எல்லாம் வெள்ளமாக உள்ளதே இதில் மேலும் மழை பெய்தால் நாம் எல்லாம் என்ன செய்வது என்று சென்னை மக்கள் கவலையில் உள்ளனர்.

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: காங். அபார வெற்றி..15 ஆண்டுகளில் பின் காங்கிரஸ் வெற்றி....

ஆமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சிகளில் மட்டும், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில், 12 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நரேந்திர மோடி, கடந்த ஆண்டு பிரதமரானார். முதல்வராக அவர் இருந்த போது, அம்மாநில சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தல்களிலும், பா.ஜ., அபார வெற்றி பெற்றது; காங்கிரஸ் ஓரிரு இடங்களைத் தான் பெற முடிந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, ஆனந்திபென் படேல், முதல்வராக உள்ளார். அவர் தலைமையில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., பல இடங்களில் தோல்வி அடைந்துள்ளது.
கடந்த மாதம், இரண்டு நாட்கள் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. அதில், மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து போன்றவற்றில், 15 ஆண்டுகளில் இல்லாத வகையில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அபாய நிலையை சந்திக்கும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.. மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் நிலை

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும் நிலை இருப்பதால், தற்போதைய சூழ்நிலையில் சென்னை அபாய நிலையை சந்திக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழையின் தாக்குதலால் சென்னையில் வரலாறு காணாத இழப்புகள் ஏற்படுத்தியிருப்பதால் மத்திய அரசு “இயற்கை பேரிடர்” என அறிவித்துள்ளது. வெள்ளத்தினால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு தத்தளித்துக்கொண்டு இருக்கறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையினால் ஏரி கரையோரங்களில் இருந்தவர்களின் வீடுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அரசு எச்சரிக்கவும் இல்லை; உதவிக்கு வரவும் இல்லை” அறிவிக்காமலே ஏரிகளை திறந்து விட்டார்கள் bbc.tamil.com

ஏரியா வாசிகளுக்கு முன்னறிவிப்பு கொடுக்காமலேயே ஏரிகளின் மதகுகளை திறந்துவிட்ட கொடுமை. இரவோடு இரவாக மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய கொடுமை. “அரசு எச்சரிக்கவும் இல்லை; உதவிக்கு வரவும் இல்லை” 4 மணி நேரங்களுக்கு முன்னர் தங்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை கொடுக்காமல் சென்னையை ஒட்டிய ஏரிகளின் மதகுகளைத்திறந்துவிட்டதாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் சென்னைவாசிகள் புகார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு அரசின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் சென்றடையவில்லை என்றும் விமர்சனம்.

சென்னையில் உணவுக்காக மக்கள் தவிப்பு - கதறல்! ( படங்கள் )nakkeeran

சென்னையில் ;மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உணவு மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் குடிநீருக்காக மக்கள் தவிப்புடன் காத்திருக்கிறார்கள்.  ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்ட உணவு போதுமானதாக இல்லை என்று மக்கள் குமுறி வருகிறார்கள்.   குறைந்த அளவில் குறைந்த இடங்களில் மட்டுமே உணவு வழங்கப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. >உணவு வழங்க விருப்பம் உள்ளோர் பாதிக்கப்பட்ட கீழ்கண்ட இடங்களுக்கு
>நேரில் சென்று உணவு வழங்கலாம் வேளச்சேரி, பள்ளிக்கரணை, லட்சுமிபுரம், மடிப்பாக்கம், துரைப்பாக்கம், மகாகவி பாரதியார் நகர், பட்டாளம், பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி, ஜி.கே.எம்.காலணி.

கமலஹாசன்: எங்கள் வரிப்பணத்தை என்ன செய்தீர்கள்? மக்கள் பணம் எங்கே போனது? சென்னையில் அரச நிர்வாகமே இல்லை ...

சென்னை: வெள்ள நிவாரணத்திற்காக மக்களிடமிருந்தே பணம் கேட்கிறது அரசு, இதுவரை வரியாய் செலுத்திய மக்கள் பணம் எங்கேபோனது என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையின் சொகுசு ஏரியா ஒன்றான எல்டாம்ஸ் ரோடு பகுதியில் கமல் வசித்து வந்தாலும், நகரின் பிற பகுதிகளில் மக்கள் படும் துன்பங்களால் சற்று கோபமடைந்துள்ளார். இதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கமல் கூறியுள்ளதாவது: இந்த சேதத்தை, இயற்கை பேரிடர் என்று கூறுவது மிகவும் குறைவான வார்த்தை.
சென்னைக்கே இந்த நிலை சென்னைக்கே இந்த நிலைமை எனில், தமிழகத்தின் பிற பகுதிகளின் நிலைமையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். ஏழைகளும், மத்திய வர்க்கத்தினரும் கடுமையான அச்சத்திலுள்ளனர்.
நிர்வாகமே இல்லை நான் பெரிய பணக்காரன் கிடையாது. ஆயினும், எனது ஜன்னலை திறந்து பார்க்கும்போது, மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து வெட்கப்படுகிறேன். சென்னையில் ஒட்டுமொத்த, நிர்வாகமும் உருகுலைந்து கிடக்கிறது. மீண்டும் சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் தேவைப்படும்.
வரி செலுத்தினோமே.. மக்கள் செலுத்திய வரிப் பணம் அனைத்துக்கும் எங்கு சென்றது?

தொலைந்த பொருட்கள், சிதைந்த கட்டிடங்கள், புதைந்து போன வாழ்வாதாரங்கள்...வெள்ளம்!

இது போன்றதொரு இயற்கை பேரிடரை இதுவரை பார்த்திருப்போமா என்று எண்ணும் அளவுக்கு அதி உக்கிரமானதொரு மழைப்பொழிவைக் கண்டிருக்கிறது தமிழகம். சென்னை நகரமும், இதர தமிழக பிரதேசங்களும் தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கின்றன. எத்தனை உறவுகள், நண்பர்கள், முகமறியா நண்பர்கள், மற்றும் ஏனைய ஜீவராசிகள் அல்லலுறுகின்றனர் என்பதற்கு கணக்கேயில்லை. >மனித யத்தனத்தில் சாத்தியப்பட்ட அத்தனை வசதிகளையும், வலிமைகளையும், பாதுகாப்புகளையும் தவிடுபொடியாக்கிக் கொண்டிருக்கிறது இயற்கை. மழையே இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இனி அதனால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து போக, அதன் பின்னர் அந்த சேதங்கள் செப்பனிடப்பட்டு வாடிக்கைக்கு திரும்ப எத்தனை நாட்களோ.

மியான்மர் அதிபருடன் ஆங் சான் சூகி அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை....

கடந்த மாதம் மியான்மரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. புதிய அரசாங்கம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படத் தொடங்கும். ராணுவத்தின் சார்பில் போட்டியிட்ட மேம்பாட்டு கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி கண்டாலும் நாட்டின் அதிகாரம் முழுவதும் ராணுவ தளபதி மின் ஆங் ஹெலாங், அதிபர் தெய்ன்சீன் ஆகியோரிடம்தான் இன்னும் இருக்கிறது. எனவே, அமையவிருக்கும் புதிய அரசாங்கத்துக்கு அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாக ஆங் சான் சூகி அதிபர் தெய்ன் சீனை நேற்று சந்தித்து பேசினார்.

வெள்ளச் சேதங்களை ஆகாய மார்க்கமாக ஜெயலலிதா........ஒருவழியாக பார்வை இடுகிறார் ..

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிடுகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
திருவள்ளூர் மாவட்டத்தில் 2–ந் தேதி சராசரியாக 24 செ.மீ. மழை பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ., பொன்னேரியில் 31 செ.மீ., பூந்தமல்லியில் 33 செ.மீ., செங்குன்றத்தில் 32 செ.மீ., என்ற அளவில் மழை பெய்துள்ளது. அம்பத்தூர், பொன்னேரி, மதுரவாயல், திருவொற்றியூர் மற்றும் மாதவரம் பகுதிகளில் பல இடங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 15 இடங்களில் சாலைப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு சிறிய ஏரிகளில் உடைப்பும், மூன்று பொதுப்பணித் துறை ஏரிகளில் உடைப்பும் ஏற்பட்டது. அவை சரி செய்யப்பட்டு வருகின்றன. 530 நபர்கள் நேற்று இரவில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மந்திரிகள் கூனி குறுகி கூழை கும்பிடு போடுவது...ஒன்றேதான் இதுவரை நடந்தது......

வானத்து சுனாமி' போல், இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கன மழையால், தமிழகத்தின்
தலைநகரான, சிங்கார சென்னை, சீரழிந்து விட்டது. நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டு, ஆறுகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுவதால், இயல்பு வாழ்க்கை முடங்கி, மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். முப்படைகளுடன், தேசிய பேரிடர் படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.; தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, ஒரு வாரத்திற்கு முன் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இடையில், மூன்று நாட்கள் மழை விட்ட நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டன. முழுமையாக மீளாத நிலையில், வங்கக்கடலில், அடுத்தடுத்து ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலைகளால், இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், 'வானத்து சுனாமி' போல் விடாது மழை கொட்டித் தீர்க்கிறது.   ஹெலிகாப்டரில் பறந்தால்? வெள்ளம் வடிஞ்சிடுமா? கும்பிட குப்புற வெள்ளத்தில் விழுந்து, உயிர் போகும் நிலை அல்லவா ஏற்படும்? அந்தகாலத்து "சர்வாதிகார" மன்னர்களையும் விஞ்சி விடுகிறார்கள் இந்தக்காலத்து மக்கள் பிரதிநிதிகள். தேர்தல் முடிந்துவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தாங்கள்தான் நாட்டின் மன்னர்கள் என்று நினைதுகொள்கிறார்கள்.

900 நைஜீரிய பிணைக் கைதிகள் விடுதலை..கமரூன் ராணுவம் 100 போகோ ஹாரம் தீவிரவாதிகளை கொன்று...


Cameroon's army, with backing from a regional anti-Boko Haram task force, has killed at least 100 fighters from the Islamist militant group and freed 900 people it held hostage, the army said on Wednesday. "In the course of this operation, at least 100 members of Boko Haram were killed. Nine hundred hostages detained by Boko Haram were freed," said army spokesman Colonel Didier Badjeck. The defence ministry also cited the same figures in a brief statement on state television. Boko Haram has expanded attacks into Cameroon, Chad and Niger — all countries contributing troops to a regional force intended to wipe out the extremists.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிபராக முகமது புகாரி கடந்த மே மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். இதற்கு முன்பாக குட்லக் ஜோனாதன் என்பவர் பதவி வகித்து வந்தார். நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கி சூடு, போன்ற வன்முறை சம்பவங்கள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். பள்ளி மாணவிகள் மற்றும் இளைஞர்களை கடத்தி விற்பனை செய்கின்றனர். இவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போகோஹாரம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த  நாடுகளை நைஜீரியா உதவிக்கு அழைத்தது. அதன்படி பல்வேறு நாடுகள் போகோஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதன், 2 டிசம்பர், 2015

அடுத்த 48 மணிநேரம் மோசமாக இருக்கும்-72 மணி நேரம் மழை நீடிக்கும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னையில் இன்னும் 3 நாட்களுக்கு அதாவது 72 மணிநேரம் மழை தொடர்ந்து நீடிக்கும்; அதே நேரத்தில் அடுத்த 48 மணிநேரம் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கடந்த 40 மணிநேரத்துக்கும் அதிகமாக பெய்த மழையால் ஒட்டுமொத்த பெருநகரமே பிரளயத்தை எதிர்கொண்டிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் 48 மணிநேர மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. Rains to continue for 72 hours, next 48 hours ‘critical’, says IMD இந்நிலையில் சென்னையில் மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் ரத்தோர் இன்று அளித்த பேட்டி: சென்னையில் இன்று மழையின் அளவு சற்று குறைந்துள்ள போதிலும், இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் 1976-க்கு பிறகு தற்போதுதான் அதிக மழை பெய்துள்ளது இதுவரை மழையானது 50% பதிவாகியுள்ளது. இது 115% வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாம் அடுத்தடுத்து 3 கன மழைகளை இதற்கு முன் சந்தித்து இருக்கிறோம். தற்போது அடுத்தடுத்து 5 முறை குறுகிய இடைவெளியில் கன மழை பெய்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக தலைமைச்செயலாளருடன் விவாதிக்க உள்ளோம். இவ்வாறு ரத்தோர் கூறினார்.:/tamil.oneindia.com/

மத்திய அரசுக்கு திமுக அவசர கோரிக்கை ..வெள்ளம் ...தேசிய இடர் பிரகடன படுத்தவும்!

DMK urges Centre to declare Chennai flood national disaster சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நேற்று மதியம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. துணை மின் நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி, நந்தம்பாக்கம், ராமபுரம், போரூர், வடபழநி, கோட்டூர்புரம் மற்றும் புறநகர் பகுதிகள் இருளில் மூழ்கின. மக்களின் வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், செல்போன்களை சார்ஜ் செய்ய முடியவில்லை. மேலும், 60 சதவீத செல்போன் கோபுரங்களும் பாதிக்கப்பட்டன. இதனால் மக்கள் அவசரத்திற்கு கூட உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல்பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கும் வகையில், ஏ.டி.எம். சேவைகளும் முடங்கின. இதனால் அவசரத்திற்கு கூட மக்களால் பணம் எடுக்கமுடியவில்லை. பெட்ரோல் பங்குகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்ப முடியவில்லை. காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது. webdunia.com

Facebook 99% பேஸ்புக் பங்குகள் நன்கொடை.. மார்க் ஜூக்கர்பெர்கின் அதிரடி முடிவு..!

சான் பிரான்சிஸ்கோ: சமுக வலைத்தளங்களின் கிங்மேக்கரான பேஸ்புக் நிறுவனத்தின், நிறுவனர் மற்றும் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் தம்பதியினருக்கு 2 வாரங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு மேக்ஸ் என்னும் பெயரும் சூட்டப்பட்டது. இந்நிலையில் மார்க்-சான் தம்பதியினரின் குழந்தைக்காகத் தொண்டு நிறுவனத்தைத் துவங்கி அதில், பேஸ்புக் நிறுவனத்தில் தாங்கள் வைத்துள்ள பங்குகளில் 99 சதவீதத்தை நன்கொடையாக அளிக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் மார்க். இன்றைய நிலையில் இதன் மொத்த மதிப்பு 45 பில்லியன் டாலர்< மகளுக்கு ஒரு கடிதம்.. இதுகுறித்துப் பேஸ்புக் பக்கத்தில் மார்க், சான் மற்றும் அவர்களது குழந்தை மேக்ஸ் ஆகியோருடன் இணைந்துள்ள புகைப்படத்தில் தங்களது புதிய தொண்டு நிறுவனம், குறிக்கோள் மற்றும் பங்குகள் நன்கொடை குறித்த செய்திகளை வெளியிட்டார்

வெள்ளம் - மக்கள் தியேட்டர்களில் தங்க மக்களுக்கு அனுமதி..வரலாறு காணாத....

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை தொடர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிளில் மின்சார வினியோகம் தடைபட்டு சென்னை மாநகரம் இருளில் மூழ்கியது. வெள்ளத்தில் சிக்காமல் வீடுகளை விட்டு வெளியேறி தவிக்கும் மக்கள் தங்குவதற்காக ஆங்காங்கே உள்ள பிரபல திரையரங்கங்களும் திறந்துவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரலாறு காணாத வெள்ளத்தால் சிக்கித் தவிக்கிறது சென்னை மாநகரம், தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெள்ள நீர் பல அடி உயரத்திற்கு தேங்கியுள்ளது. ஏராளமான மக்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மின்சாரம் தடைபட்ட காரணத்தால் முன்னதாகவே வீடுகளை விட்டு வெளியேறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புதிதாக 28 முகாம்கள் அமைக்கப்பட்டு அவற்றில் சுமார் 3,0000 பேர் அடைக்கலம் புகுந்தனர். ஆங்காங்கே உள்ள பிரபல திரையரங்கங்களும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு திறந்துவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லைஃபை (Li Fi)..எரியும் பல்பு...இன்டர்நெட் தொழில் நுட்பம் Li-Fi, 100X Faster Than Wi-Fi! | அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.<>கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது.
இது வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது . வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், லைஃபை 10 000 மடங்குகள் பெரியதாகும். லைஃபை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண LED மின்குமிழ், இணைய இணைப்பு, மற்றும் போட்டோ டிரக்டர் ஆகியன போதுமானவை.
வினாடி ஒன்றுக்கு 1 Gb (கிகாபைட்) வரையான வேகத்தில் இணைய பயன்பாட்டைப் பெற லைஃபை தொழில்நுட்பம் வகை செய்கிறது.
ஓளிக்கற்றை வாயிலான இந்த லைஃபை இணையப் பாவனை தொழில்நுட்பம். அலுவலகம் ஒன்றில் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்ட பின்னரே இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையம் மூடப்பட்டது...கடும் மழை

சென்னையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர்காரணமாக விமான நிலையம் மூடல் சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார். சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார். விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

செவ்வாய், 1 டிசம்பர், 2015

காங்கிரஸ் விஜயதரணி....இளங்கோவன் கலாட்டாவால் குஷ்பூவும் நக்மாவும் பின் தள்ளப்பட்டு விட்டாரகள்..

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை எப்படியாவது மாற்ற வேண்டும் என ஒரு சிலர் துடிக்கிறார்கள். அதனால் டெல்லிக்குப் படையெடுத்து வருகிறார்கள். சிதம்பரம் தலைமையில் மூத்த நிர்வாகிகள் சோனியா காந்தியிடம் புகார் அளித்தனர். அந்த டீமில் இடம்பெற்றிருந்த வசந்தகுமாரிடம் இருந்து மாநில வர்த்தகப் பிரிவுத் தலைவர் பதவியைப் பறித்தார் இளங்கோவன். இந்த நிலையில்தான் மகளிர் அணி தலைவி விஜயதரணி எம்.எல்.ஏ-வும் இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார். இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரில் விஜயதரணியின் படம் பெரியதாகவும், இளங்கோவனின் படம் சிறியதாகவும் இருந்துள்ளன. இது இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த, பேனரைக் கிழித்து சத்தியமூர்த்தி பவனில் உள்ள, ‘ஆண்கள் கழிவறை’யில் வீசி இருக்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: தி.மு.க-வில் ஜனவரி திருப்புமுனை!

திராவிடக் கொள்கைகளை வீட்டுக்கு வெளியே பேசுவார்கள். ஆனால், வீட்டுக்குள் பக்தி மணம் வீசும்’’ என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். புதிர் போட்டு அதை அவரே அவிழ்ப்பதுதான் கழுகார் ஸ்டைல் என்பதால் பொறுமை காத்தோம்.
‘‘மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா. கருணாநிதியின் மகள் செல்வி. இருவரும் கோயில் கோயிலாகப் போய் விசேஷ பிரார்த்தனைகள் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள மஞ்சுநாதா கோயிலுக்கு இருவரும் சென்று வந்திருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் கருணாநிதியின் குடும்பத்துக்குப் புதிய திருப்புமுனை நிகழப் போகிறதாம். இதை ஆருடமாகச் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ‘பிரிந்தவர்கள் மீண்டும் கூடுவது, குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு’ தருவதுதான் மஞ்சுநாதா கோயிலின் ஸ்பெஷாலிட்டி. கோயில் அருகே ஒரு மடாபதிபதி எதிர்காலத்தைக் கணித்துச் சொல்வதில் கில்லாடியாம். தயாளு அம்மாளுக்கு மிகவும் வேண்டியவர் அவர். 2ஜி வழக்கில் கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் தயாளு, பல கோயில்களுக்குச் சென்றார். அப்படித்தான் மஞ்சுநாதா கோயிலுக்குப் போனபோது, அங்கிருந்த மடாதிபதியைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். தயாளு அம்மாள் அவரைச் சந்தித்தபோது, ‘இன்னும் ஒரு வாரத்தில் கனிமொழி ஜாமீனில் விடுதலை ஆவார்’ என அருள்வாக்குச் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னபடியே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததாம். அதன்பிறகு அந்த மடத்துக்குச் சென்று 35 லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரை அமைத்துக் கொடுத்திருக்கிறார் தயாளு அம்மாள்.

கார்த்தி சிதம்பரத்தின் வீடு..அலுவலகங்களில் வருமான வரி சோதனை.. வாசன் ஐ கேர், அட்வான்டேஜ் ஸ்ட்டாடெஜிக் கன்சல்டிங்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான  வாசன் ஐ கேர், அட்வான்டேஜ் ஸ்ட்டாடெஜிக் கன்சல்டிங் நிறுவனங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை என இரண்டு துறை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கார்த்தியா  சிதம்பரமா  மாறன் பிறதேர்ஸா பெரிய பணகாரர்ர்ர்

ஜெர்மனியும் யுத்ததில்...ஐ எஸ் சுக்கு எதிராக ரஷ்யாவுடன் களமிறங்குகிறது

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் நடவடிக்கைகளில் ஜெர்மனி அரசும் களமிறங்க அந்நாட்டு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக, நாளை நாடாளுமன்ற கீழ்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், அதிநவீன டோர்னாடோ ரக போர்விமானங்கள், இவ்விமானங்கள் பறந்து கொண்டிருக்கும்போதே நடுவானில் பெட்ரோல் நிரப்பும் வசதி கொண்ட விமானங்கள் மற்றும் சுமார் 1200 ராணுவ வீரர்கள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மாலைமலர்.com

கடும்மழை ..சென்னை தனித்தீவு போல காட்சி அளிக்கிறது

சென்னை: கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தனித்தீவாக மாறியுள்ளது . மின்சார வசதியும் நிறுத்தப்பட்டுள்ளதால் எவ்வித உதவியும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். நகரமே ஸ்தம்பித்துள்ளது.
சென்னையில் காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. போரூர்- வடபழநி சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. நுங்கம் பாக்கம், வள்ளுவர்கோட்டம், அமைந்தகரை சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிண்டி வேளச்சேரி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சராசரிக்கு 50 சதவீத அதிக மழை

தமிழகத்தில் இன்று வரை பெய்துள்ள மழை சராசரியை காட்டிலும் 50
சதவிதம் அதிகமாக உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யுமென்றும் சென்னை வானில மைய இயக்குனர் ரமணன் குறிப்பிட்டார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மீண்டும் கனமழை பெய்ய துவங்கியுள்ள சூழலில், வெள்ளப் பாதிப்புகளிலிருந்து ஏற்கனவே சிக்கித்தவித்த பொது மக்கள், மீண்டும் புதிய பிரச்சனைகளில் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. bbc.tamil.com

ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான வர்த்தகத்தை பாதுகாக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது: புதின் குற்றச்சாட்டு

லே போர்கேட், ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் 2 சுட்டு வீழ்த்தின. இவ்விவகாரம் காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றி உள்ளது. ரஷிய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியது. ஆனால் எச்சரிக்கை விடப்படவில்லை என்று ரஷியா மறுத்தது. ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, போர் விமானங்கள், ஏவுகணை தாங்கிய கப்பல்கள் என தனது ராணுவ பலத்தை சிரியாவை சுற்றிலும் ரஷியா அதிகரித்து உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

வீணான மழை நீர் கணக்கிடுவதில் சிக்கல்

வடகிழக்கு பருவமழையின் போது, வீணாக கடலில் கலந்த வெள்ள நீரை கணக்கிடுவதில், பொதுப்பணித் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் இறுதியில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, தொடர்ந்து பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் சராசரியாக, 50 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பு அளவை விட அதிகம். தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில், சராசரி அளவை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. பல ஆண்டுகளாக
வறண்டு கிடந்த ஆறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி, உபரி நீரை வெளியேற்றும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம், வீணாக கடலில் கலந்த மழைநீரின் அளவை, துல்லியமாக கண்டறிய முடியவில்லை. நீர்நிலைகளில் தேங்கியதை விட, சாலைகளில் அதிகளவு மழைநீர் தேங்கியதே இதற்கு காரணம் .மழை நீரை சேமிக்க தடுப்பணைகள் கூட கிடையாது... பிறகு எப்படி வீணானது என்று சொல்ல முடியும்... அப்படிப்பார்த்தால் நீர் கடலுக்குத்தான் செல்கிறது...

சிறப்பு பூஜை: ஸ்டாலின் ஏற்பாடு!

தொடர் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம், வெள்ள நிவாரணப் பணி என சுற்றித் திரிந்ததால், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. புத்துணர்ச்சி பெற மூலிகை சிகிச்சைக்காக, அவர் கேரளா சென்றுள்ளார்.தமிழகம் - கேரளா எல்லையில், களியக்காவிளைக்கு அருகில் உள்ளது பூவார்; இங்குள்ள பிரபல மூலிகை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் திட்டத்துடன், ஸ்டாலின், கேரளா சென்றுள்ளார். அங்கு, எட்டு நாட்கள் தங்கி, மூலிகை குளியல் உள்ளிட்ட, ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள உள்ளார். பின் அவர், திருவனந்தபுரம் அருகில் உள்ள, கரிக்காகோம் என்ற ஊருக்கு செல்கிறார். அங்குள்ள, சாமுண்டீஸ்வரி கோவிலில், ரத்த சாமுண்டிக்கு, சிறப்பு பூஜை செய்கிறார்; அங்கு, சத்ரு சம்ஹார யாகத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிரிகளிடமிருந்து காப்பதற்காக, இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதில், ஸ்டாலின், மனைவி துர்காவுடன் கலந்து கொள்கிறார் என, அவர் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.- நமது நிருபர் - தினமலர்.com

தள்ளாடுது தமிழகம் ஊத்தி கொடுத்த வானம் ...தூத்துக்குடியின் அவலம்

tuticorin-flood-11மழை வெள்ளத்தில் தூத்துக்குடி – மயக்கத்தில் மாநகராட்சி!;வினவு
 மேற்கு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் தூத்துக்குடி மூழ்கியது. இக்காட்டாறு புதுக்கோட்டை ஓடையில் பாய்ந்து கோரம்பள்ளம் கண்மாயில் கலந்து உப்பாற்று ஓடை வழியாக வங்கக் கடலுக்கு செல்லும். ஆனால் இந்த ஓடை ஆக்கிரமிக்கப்பட்டதால் உடைப்பெடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூழ்கடித்தபடி, தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலையை துண்டித்துக்கொண்டு குடியிருப்பு பகுதிகளை கபளீகரம் செய்தது.
கோரம் பள்ளம் கண்மாயின் கரைகளை பலப்படுத்த தவறியதால் அதில் உடைப்பு ஏற்பட்டது. அதேபோல் உப்பாற்று ஓடையும் ஆக்கிரமிக்கப் பட்டதால் அதிலும் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையை துண்டித்துக்கொண்டு முத்தையாபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளை கபளீகரம் செய்தது.

விஜயகாந்த் :India Today ஆங்கில பத்திரிகைகளின் ஆய்வு குறித்து அரசு மௌனம் சாதிப்பது ஏன்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலப் பத்திரிகை இதழ் ஒன்றின் ஆய்வு குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? கடந்த காலங்களில் தனக்கு சாதகமாக வந்த பத்திரிகைகளின் ஆய்வுகள் குறித்து, சட்டமன்றத்தில் பெருமை பேசியவர் தற்போது இதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்று சட்ட மன்றத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலப் பத்திரிகை இதழ் ஒன்றின் ஆய்வு குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? கடந்த காலங்களில் தனக்கு சாதகமாக வந்த பத்திரிகைகளின் ஆய்வுகள் குறித்து, சட்டமன்றத்தில் பெருமை பேசியவர் தற்போது இதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?அதிமுக அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து வெளிவந்துள்ள செய்திகளின் மூலம், தமிழகம் அனைத்து துறைகளிலும் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: மூவர் குழு திடீர் ஆய்வு

தேனி: முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என கண்காணிப்புக் குழு தலைவர் நாதன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 138 அடியைத் தாண்டியுள்ளது. 3 member deputy team inspects in mullai periyar dam எனவே அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும்போது செய்யப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், உபரி நீரை வெளியேற்றுவதற்கு ஏற்ப அணையின் மதகுகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக துணைக் காண்காணிப்பு குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக அணையை ஆய்வு செய்து வருகின்றனர். எந்தா  சேட்டா அவ்விட  வெள்ளம் வளர ஆபத்தானோ?  பின்னே?

மதரசா பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை நடப்பதாக பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் பரபரப்பு புகார்


Director Ali Akbar reavals his experience that he is also a victim of sexual abuse in Madrasa திருவனந்தபுரம்: கேரளாவில் மதரசா எனும் இஸ்லாமிய பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாக, பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மதராசா எனும் இஸ்லாமிய உள்ளன. அவற்றில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் உள்ள மதரசா பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடப்பதாக பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் திடுக்கிடும் புகாரை கூறியுள்ளார். மதரசா பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அங்கு இருக்கும் மதகுருமார்கள் பாலியல் தொல்லை தருவதாக அவர் குற்றம்சாட்டினார். Filmmaker Ali Akbar Alleges Sex Abuse in Kerala Madrasa மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்த விவகாரத்தை யாரும் வெளியில் சொல்வதில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பு வயநாட்டில் உள்ள மதரசாவில் தனக்கு இக்கொடுமை நடந்ததாகவும் இயக்குனர் அலி அக்பர் குறிப்பிட்டார்.

திங்கள், 30 நவம்பர், 2015

தயாநிதி மாறனிடம் 6 மணிநேரம் சி.பி.ஐ. விசாரணை 700 டெலிபோன்...எக்சேஞ்ச் வழக்கு.....

டெல்லி: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 6 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். 2004- 2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது 700-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று சன் டி.வி. ஒளிபரப்புக்குப் பயன்படுத்தினார் என்பது வழக்கு. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் தயாநிதி மாறனை கைது செய்யவும் காவலில் வைத்து விசாரிக்கவும் சி.பி.ஐ. அனுமதி கோரியிருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தயாநிதிமாறன் தப்பினார்.

வங்காளதேசம்: கலீஜா ஜியாவுக்கு ஜாமீன்..ஊழல்வழக்கு..70 வயது எதிர்கட்சி தலைவர் Begum Khaleda Zia

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா(வயது 70). வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவர். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இவர் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன. இவர் பிரதமராக இருந்தபோது ஒரு கனடா கம்பெனிக்கு எரிவாயு வயலை குத்தகைக்கு விட்டதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு காண்டிராக்ட் விட்ட வகையில் நாட்டுக்கு ரூ.13,777 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கலிதா ஜியா வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் கோர்ட்டு உத்தரவு கிடைத்த 2 மாதத்திற்குள் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து இன்று அவர் டாக்காவில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2040 ஆம் ஆண்டில் துணையைச் சந்திக்கும் “பர்ஸ்ட் டேட்” சாத்தியமே இல்லையாம்- சொல்கிறது ஆய்வு

லண்டன்: உலகில் காதலுக்காகவோ, நட்புக்காகவோ சக மனிதர்களுடன் முதல் முறையாக நேரடியாக சந்திப்பது வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் ஏட்டுகளில் மட்டுமே காணக் கிடைக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்தின் உச்சபட்ச முன்னேற்றத்தால் 2040 ஆம் ஆண்டு எழுபது சதவிகிதம் பேர் தனக்கு பிடித்த நபரை சந்திக்க விர்ச்சுவல் தொழில்நுட்பத்தைத்தான் நாடுவார்களாம். First dates in the real world could be history by 2040, research suggests 
இந்த வித்தியாசமான முடிவு லண்டனின் இம்ப்பீரியல் வர்த்தகக் கல்லூரியின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. துணையைத் தேட உதவும்: இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் நமக்கான துணையைத் தேட எளிதில் உதவும் எனவும் தெரியவந்துள்ளது. 

தமிழக அரசின் கோவனுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது

இடதுசாரிப் பாடகர் கோவனை தமிழகப் போலிஸ் காவலில் எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
கோவன் விடுதலைக்கெதிராக தமிழக அரசின் மனு தள்ளுபடி கோவனை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிஃபுல்லா மற்றும் யு.யு.லலித் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் இந்த கோரிக்கையில், அவர்களுக்கு சாதகமான ஒன்றையும் காண முடியவில்லை என்று கூறிய அந்த அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மது ஒழிப்புப் பிரச்சாரப் பாடல்களைப் பாடி, தமிழக அரசால் கைது செய்யப்பட்டிருந்த இடதுசாரிப் பிரச்சாரப் பாடகர் கோவன், தன்னை போலீஸ் காவலில் எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அதை எதிர்த்தே தமிழக அரசு தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ராகுல் இரட்டை குடியுரிமை விவகாரம் : சுப்பிரமணிய சாமி மனு தள்ளுபடி..

 ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கூறி உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி, லண்டனில் இயங்கி வரும் பேக் காப்ஸ் என்ற கம்பெனி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன் என்று தன்னை குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த இரட்டை குடியுரிமை விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.nakkheeran,in    சு.சுவாமி  பேசாம கனிமொழிக்கு அல்லது வேற திமுககாரனுக்கு எதிரா ஏதாவது மனு கொடுங்க உடன நடவடிக்கை எடுப்பாய்ங்க....

நான் காதலித்தேன்.. நீங்களும் காதலியுங்கள்’ – சித்தாரா

‘‘நானும் காதலித்தேன். ஆனால் அது கல்யாணத்தை சென்றடையவில்லை. அது ஒரு மறக்கமுடியாத வசந்த காலம். எங்கள் இருவரின் தனிமையை பாதுகாக்க வேண்டியதிருப்பதால் இதற்கு மேல் அதை பற்றி பேசவிரும்பவில்லை. ஆனால் எல்லோரும் ஒருதடவையாவது காதலிக்கவேண்டும். காதல் அவ்வளவு அழகானது’’திருமணம் செய்யாததால்தான் இவ்வளவு அழகாக இருக்கிறீர்களா? ‘‘உடல் குண்டாகிவிடுவது எனக்கு பிடிக்காது. முன்பிருந்தே நான் உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறேன். ஒரு சினிமாவுக்காக உடல் எடையை கூட்டினேன். இப்போது அதை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். எனது நீண்ட கூந்தல், அம்மாவிடம் இருந்து பாரம்பரியமாக எனக்கு கிடைத்தது’’ மீண்டும் உங்கள் வாழ்க்கையில் காதல் வருமா?

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை!

சென்னை:'வங்கக்கடலில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை, கடந்த சில நாட்களாக சற்று குறைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், 'தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு, கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.>இதுகுறித்து மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
தென் மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே நிலை கொண்டிருந்த காற்றுஅழுத்தத் தாழ்வு நிலை, அதே இடத்தில் நீடிக்கிறது.அதே நேரத்தில், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமானில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

ஞாயிறு, 29 நவம்பர், 2015

savukku:தேர்தலானாலும் சரி, வழக்குகளானாலும் சரி. ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய் விடுவார்

c30
தமிழக அரசியல் வரலாறை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, ஆணவத்தின் மறுபெயர் ஜெயலலிதா என்பது நன்றாகவே தெரியும்.  எவ்விதமான தவறுகளை இழைத்தாலும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்பதில் அவருக்கு அபார நம்பிக்கை உண்டு.   திமுகவின் மீது அப்படியொரு நம்பிக்கை அவருக்கு.   அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறுதான், திமுகவும் பல்வேறு தவறுகளை இழைத்து, ஜெயலலிதாவை மீண்டும் மீண்டும் மகுடத்தில் ஏற்றி வருகிறது. 1991-1996 ஆட்சிக்கு பிறகு, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என்றே பலரும் கருதினார்கள்.   ஆனால் அந்த கருத்துக்களையெல்லாம் பொய்ப்பித்து, 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே 18 எம்.பிக்களை பெற்றார் ஜெயலலிதா.    தேர்தலானாலும் சரி, வழக்குகளானாலும் சரி.   ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய் விடுவார் என்ற அசாத்திய நம்பிக்கை அவருக்கு உண்டு.
2011ல் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே இந்த ஆணவத் தொனி ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டது.  திமுகவின் திட்டங்களை ஒவ்வொன்றாக முடக்குதையே தனது முதல் நடவடிக்கையாக தொடங்கினார் ஜெயலலிதா.  அண்ணா நூற்றாண்டு நூலகம், தலைமைச் செயலகம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை படிப்படியாக முடக்கினார்.    அந்த கட்டிடங்களில் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான முதலீடுகளைப் பற்றி ஜெயலலிதா துளியும் கவலைப்படவில்லை.   தலைமைச் செயலகம் கட்டுவதில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது என்று கூறி, முதல் பட்ஜெட்டிலேயே, அந்த கட்டுமான ஊழல் குறித்து விசாரிப்பதற்கென்று ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார்.   அந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி ரகுபதி, கடந்த நான்கரை ஆண்டுகளாக தெண்டச் சம்பளம் வாங்கியதைத் தவிர அந்த விசாரணை ஆணையத்தால் எந்தப் பயனும் நடைபெறவில்லை.

நெஸ்லே பாஸ்தாவில் அதிக காரியம்...அனுமதிக்கப்பட்ட 2.5 பி எம் விட என்ற 6 பி எம் அளவில்

இந்த  நெஸ்லே உரிமையாளர்கள்தான்  தண்ணீர் மனிதரின் அடிப்படைஉரிமைஇல்லை அதற்கு அரசுகள் வரி மற்றும் விலைகள்  விதிக்க வேண்டும் என்று கூறியவர். நெஸ்லே பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் 
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நூடுல்ஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ரசாயனப் பொருட்கள் இருந்தது தெரியவந்ததை அடுத்து பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற நூடுல்ஸ் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற ஆய்வு நிறுவத்திடம் ஆய்வு செய்யவில்லை எனக்கூறி தடையை நீதிமன்றம் நீக்கியது. பின்னர் உரிய பரிசோதனைகளுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு மீண்டும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவ் பகுதியில் இருந்த கடையில் சேகரிக்கப்பட்ட நெஸ்லே நிறுவனத்தின் பாஸ்தா பாக்கெட்டுகள் தேசிய உணவு பரி‍சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் நெஸ்லே நிறுவனத்தின் பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட காரீயத்தின் அளவான 2.5 பி.எம் என்பது 6 பி.எம். என்ற அளவில் உள்ளது.

மோடியின் தொகுதியில் கோக்க கோலா நிறுவனத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு..வாரணாசியில் ..


பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியில் கோக்க கோலா நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கோக கோலா நிறுவனம் கோக்க கோலா நிறுவனம் நிலத்தடி நீரை மிக அதிகமாக ஊறிஞ்சி எடுத்து குளிர்பானம் தயாரித்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் கோக்க கோலா நிறுவனம் நிலத்தடி நீரை ஊறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் இங்குள்ள 18 கிராம மக்கள் நிலத்தடி நீர் கிடைக்காமல் பெரும் அவதிப்படுகிறார்கள். விவசாயிகளின் கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டதால் நீர் இல்லாமல் விவசாயிகள் சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

தேமுதிக தேவை இல்லை...கனிமொழி கலைஞரிடம் வேண்டுகோள்?

விஜயகாந்த் கருணையால் தான், தி.மு.க., தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில்லை; அவர் இல்லாமலேயே, தேர்தலை சந்திக்கத் தயாராவோம்' என, அக்கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி, கட்சித் தலைவர் கருணாநிதியிடம் கூறிய தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில், காங்கிரசை கழற்றிவிட்ட தி.மு.க., தலைமை, தே.மு.தி.க.,வை இழுக்க முயற்சித்தது. ஆனால், போக்குக் காட்டிய விஜயகாந்த், கடைசி நேரத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தார்; அனைத்து இடங்களிலும் தோற்றார். வழக்கமாக தேர்தலில், 10 சதவீத ஓட்டுகளை பெறும் விஜய காந்த், 6 சதவீத அளவுக்கு சுருங்கினார். அதே போல, தி.மு.க.,வும், 30 சதவீதத்தில் இருந்து, 26 சதவீத ஓட்டுகளுக்கு சுருங்கியது. இதனால், சட்டசபை தேர்தலில், இரு கட்சிகளும் கூட்டணி சேர வேண்டும் என, தொண்டர்கள் விரும்பினர். அதன் மூலமே, ஜெயலலிதாவை வீழ்த்த முடியும் என்று கணக்குப் போட்டனர். இதற்காக, தே.மு.தி.க., தரப்பிடம் பேச்சு நடத்திய கனிமொழி, அது பலிக்காததால், விஜயகாந்த் மீது கடும் அதிருப்தியடைந்துள்ளார். பிரேமலதா திமுகவை மக்சிமம் வெறுப்பேற்றுவது அதிக சீட் பெறுவதற்கான தந்திரம்தான். இவிங்கள கண்டுக்காம விட்டாலே போதும் காணாம போயிடுவாங்க இதுவெறும் பலூன் கட்சிங்க...  

விஜயதரணி இளங்கோவன் மோதல்...தமிழகத்தில் காங்கிரஸ் சத்தம்தான் தற்போது ஹிட்....

சென்னை: தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியின் ஆதரவாளர்களின் சேலையை பிடித்து இழுத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தியதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் ஜாதியை சொல்லி திட்டியதாக விஜயதாரணி உள்ளிட்டோ மீது இளங்கோவன் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இருதரப்பும் இப்படி கேவலமான புகார்களை தெரிவித்து போலீஸுக்கு போயிருப்பதால் எஞ்சிய காங்கிரஸின் மானமும் கப்பலேறுவதாக அக்கட்சி தொண்டர்கள் புலம்புகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கோஷ்டி சண்டைகள் அகிலம் அறிந்த உண்மை.. இந்த சண்டையில் கிழியாத வேஷ்டிகளே இல்லை.. இதனையும் நாடறியும். இப்போது ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்கிற வகையில் நீங்க மட்டும் கோஷ்டி சண்டையில் இறங்க முடியுமா? உங்களைவிட கேவலமாக எங்களாலும் காங்கிரஸ் கட்சியை நாறடித்துவிட முடியும் என வரிந்து கட்டி களமாடி வருகின்றனர் விஜயதாரணி எம்.எல்.ஏ. தலைமையிலான கோஷ்டியும், இளங்கோவன் ஆதரவு மகளிர் கோஷ்டியும்...

யுவன் சங்கர் ராஜா :சகிப்பின்மையை நான் எதிர்கொண்டதே இல்லை

கோயமுத்தூர்: சகிப்பின்மை போன்ற நிலையை நான் உணர்ந்தது கிடையாது என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இளையராஜாவின் மகனாக இருந்து முஸ்லிமாக சமீபத்தில் மதம் மாறியவர் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:  சகிப்புத்தன்மையற்ற நிலை, இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. எனவே, சகிப்பின்மை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக கூறி எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. கடந்த ஆண்டு நான் 14 படங்களுக்கு இசையமைத்தேன். எனவே ஓய்வு தேவைப்பட்டதால்தான், இந்த ஆண்டு படங்களை குறைத்துக் கொண்டேன். தம்பி யுவன் தாங்களோ  ரஹ்மானோ  இந்துவாக இருந்து முஸ்லிமானால் பிரச்சனை இல்லை ஆனால் உங்களை போன்றோர்  ஒரு முஸ்லிம் நாட்டில் பிறந்து இந்துவாக முடியுமா? கொஞ்சம் மனசாட்சியை கேட்டு பார்க்கவேண்டும் . மதவாதியாக இருக்க வேண்டியதில்லை ஆனால் கொஞ்சம் மனசாட்சியோடு சிந்திக்கவேண்டும் அப்பனே 

ரஷ்யா வான் தாக்குதல் சிரியாவில் 40 பேர் பலி...

ஈராக் மற்றும் சிரியாவில் சில இடங்களை பிடித்து வைத்துக்கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருநாடுகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். அத்துடன் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இதேபோல் சிரியாவில் அதிபருக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளருக்கும் இடையிலும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யா சிரியா அதிபருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் விமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமேற்கு சிரியாவில் உள்ள அரிஹாவின் முக்கிய நகரத்தில் உள்ள மார்க்கெட்டில் விமான தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். ரஷ்ய விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் தப்பதித்த விமானியை பிடித்து சுட்டுக்கொன்றது சிரியாவின் கிளர்ச்சிப்படை. அதன்பிறகு ரஷ்யா தாக்கிய முதல் விமான தாக்குதல் இதுவாகும்.< சமீபத்தில் ரஷ்யா பயணிகள் விமானம் மற்றும் ஜெட் விமானத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாலைமலர்.com

தாய்லாந்தில் குரங்குத் திருவிழா...லோபு பூரியில் உண்டு மகிழ்ந்த குரங்குகள்


தாய்லாந்தில் இந்த ஆண்டும் குரங்குகளை போற்றும் வகையிலான திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவிழாவில் உண்டு மகிழும் குரங்குகள் லொப்புரி மாகாணத்தில் இந்த திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்லாந்தின் இந்த குரங்குத் திருவிழா சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் ஒரு நிகழ்வாகும். சில சமயங்களில் குரங்குகள் ஆட்களை கடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன இந்தத் திருவிழா நாளன்று அங்கு குரங்குகளுக்கு சீனர்களின் முறைப்படியான விருந்தோம்பல் நடைபெறுகிறது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான குரங்குகள் கூடி, உண்டு உறவாடி மகிழ்கின்றன.

தேர்தல் பிரச்சாரத்தில் சவுதி பெண்கள்

சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஆரம்பிதுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் சவுதி பெண்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் தேர்தல் ஒன்றில் சவுதியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.  சவுதியில் பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இருப்பதற்கு கடுமையான தடைகள் உள்ளன.