கலைஞர் செய்திகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலையாளத்தில் பேசத் தொடங்கி பின்னர் தமிழில் உரையாற்றினார்.
“எல்லாத்திலும் மேல் என்ட பேரு ஸ்டாலின்” : கேரளாவில் மலையாளத்தில் பேசி அசத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநாடு, கேரளாவின் கண்ணூரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று கலந்துகொண்டு ஒன்றிய - மாநில அரசு உறவுகள் எனும் தலைப்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இடையேயான உறவு என்பது சங்க காலம் தொட்டு உள்ளது. திராவிட - கம்யூனிஸ்ட் உறவு என்பது 80 ஆண்டு கால வரலாறு கொண்டது. வ.உ.சிதம்பரனார் சிறை வைக்கப்பட்ட கண்ணூர் மண்ணில் மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்தார். எல்லாவற்றிற்கும் மேலாக என் பெயர் ஸ்டாலின்” என மலையாளத்தில் உரையாற்றினார்.
“எல்லாத்திலும் மேல் என்ட பேரு ஸ்டாலின்” : கேரளாவில் மலையாளத்தில் பேசி அசத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனி, 9 ஏப்ரல், 2022
கேரளா மாநில சுயாட்சி மாநாட்டில் மலையாளத்தில் முழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ரணில் விக்கிரமசிங்க - ஒரு நல்ல மனிதன் .. மகத்தான அரசியல் ஞானி
மலையக தாய் : திரு ரணில் விக்கிரமசிங்கா ஐந்து தடவைகள் பிரதமர் ஆசனத்தை அலங்கரித்தார் ஆனால்....
1. கொழும்பு , கொள்ளுப்பிட்டி, 5 ஆம் ஒழுங்கையில் உள்ள தனது பாரம்பரிய இல்லத்தைக் கூட பெரிய அளவில் மறுசீரமைப்புச் செய்து கொள்ளவில்லை.தனகென்று இருக்கும் அந்த ஒரேயொரு வீட்டையும் தனது மரணத்தின் பின்னர் தனது பாடசாலையான ரோயல் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்து உயில் எழுதி கொடுத்து விட்டார்.
2 . அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் யார் யார் என்பது பொது மக்களுக்கு பெரிதாகத் தெரியாது. அவர்கள் எவரையுமே அரசாங்கப் பதவிகளில் ஒருபோதுமே இருக்கவில்லை. வாரிசுகளும் இல்லை. வாரிசுகளுக்காக பதினான்கு தலைமுறைகளுக்கு நாட்டைக் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்க்க வேண்டிய தேவையும் அவருக்கு இல்லை.
வெள்ளி, 8 ஏப்ரல், 2022
மகளிர் உதவி குழுக்களுக்கு கடன் தொகை உயர்வு: அமைச்சர் ஐ.பெரியசாமி
மின்னம்பலம் : தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகரும் கூட்டுறவு வங்கி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
கூட்டுறவு துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி கொள்கைகள் உருவாக்கப்படும்.
7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. கர்நாடக பள்ளிகளில் போலிஸார் தீவிர சோதனை
கலைஞர் செய்திகள் : கர்நாடகா மாநிலம் பெங்களூர் புறநகர் பகுதிகளில் உள்ள 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் புறநகர் பகுதியில் சுலகுண்டேயில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி, மகாதேவபுராவில் உள்ள கோபாலன் இன்டர்நேஷனல் பள்ளி, மாரத்தஹள்ளியில் உள்ள நியூ அகாடமி பள்ளி, எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள எபினேசர் இன்டர்நேஷனல் பள்ளி, ஹென்னூரில் உள்ள செயின்ட் வின்சென்ட் பலோட்டி பள்ளி மற்றும் கோவிந்தபுராவில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அமித் ஷாவின் இந்தி - இந்தியாவின் ஒருமை பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நக்கீரன் செய்திப்பிரிவு : டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்.
வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சரின் இத்தகைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
: சாத்தான்குளம் போலீஸ் நிலைய தந்தை மகன் கொலை வழக்கு.. : முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனர் வாக்குமூலம்
தினகரன் : சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனர் பரபரப்பு வாக்குமூலம்
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையில் காவல்நிலையத்தில் இருந்து இரத்தத்துடன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வெளியில் வந்தனர் என முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனரான தலைமைக்காவலர் ஜெயசேகர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது
தினமலர் : விழுப்புரம்: திமுக அரசை கண்டித்து விழுப்புரம் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக.,வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டு அதிமுக.,வினர் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
12 ஆயிரம் ரூபாயை தொலைத்த மகனை பெட்ரோல் வீசி கொலை செய்த தந்தை கர்நாடகாவில்
கலைஞர் செய்திகளை : ரூ.12,000 பணத்திற்காக பெற்ற மகன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த தந்தை.. பட்டப்பகலில் கொடூரம்!
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் டி.ஜே ஹள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆசாத் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரா. இவரது மகன் அர்பித் என்பவர் கடந்த வாரம் 12 ஆயிரம் பணத்தை தொலைத்து விட்டார்.
இதனால் தந்தை மகன் ஆகியோருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம், பணத்தைக் கேட்டு தந்தை சுரேந்திரா மீண்டும் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் இருந்த சுரேந்திரா, வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மகன் மீது ஊற்றி பட்டப்பகலில் தீ வைத்துள்ளார். இதில் தீப்பற்றிய நிலையில் அலறி அடித்து ஓடிய அர்பித்தை அப்பகுதி மக்கள் மீட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அமித் ஷா : ஆங்கிலத்துக்கு பதில் இனி இந்தியைத்தான் ஏற்கவேண்டும்
உள்துறை அமைச்சரான அமித் ஷா, நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
ஏப்ரல் 7ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய அமித் ஷா,
"ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்திதான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வேறு உள்ளூர் மொழிகளை அல்ல.
நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக, அலுவலக ரீதியான மொழியை மாற்றுவதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. ஆட்சியை நடத்தும் ஊடகம் அலுவல் மொழிதான் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
மாநிலங்களின் குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது பிராந்தியமாக இருந்தாலும் அல்லது மாநிலம் சார்ந்ததாக இருந்தாலும் அது இந்திய மொழியாக இருக்க வேண்டும்.
தற்போதைய அலுவல் மொழிக் குழு செயல்படும் வேகம் இதற்கு முன்பு காணப்படவில்லை. இந்தக் குழுவின் ஒரே பதவிக்காலத்தில் மூன்று அறிக்கைகளை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது அனைவரின் கூட்டுச் சாதனையாகும்.
வியாழன், 7 ஏப்ரல், 2022
நீட் தேர்வு கட்டணத்தை உயர்த்தியது தேசிய தேர்வு முகமை தொடர் அதிர்ச்சி
நாடு முழுவதும் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தேசிய தேர்வு முகமை மூலமாக தேர்வை நடத்தி வருகிறது.
நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது.
7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி
மாலைமலர் : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.50% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்திருக்கிறது. மாணவர் நலன் காக்கும் இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவக் கல்வியில் 7.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகளின் மாணவர்களுடன் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிட முடியாத நிலை இருப்பதை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்று கூறியுள்ளது.
ஜெய்சங்கருடன் ஸ்டாலின் பேச்சு!
மின்னம்பலம் : இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,
அந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் சார்பில் அனுப்பப்படும் பொருட்களை இந்திய தூதரகம் மூலம் அந்த மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று ஏப்ரல் 7ஆம் தேதி இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த மார்ச் 31ம் தேதி பிரதமர் மோடியை தான் சந்தித்த போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவி சென்றடைய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதை நினைவுபடுத்தினார்.
வகுப்பில் மது அருந்திய கல்லூரி மாணவிகள்- காஞ்சிபுரத்தில்
மாலைமலர் : காஞ்சிபுரத்தில் வகுப்பறையில் அமர்ந்து கல்லூரி மாணவிகள் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு பகுதியிலிருந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறையில் உள்ள மேஜை மேல் அமர்ந்துகொண்டு வெளிமாநில பாக்கெட் மதுபானத்தை குளிர்பானத்தில் கலந்து அருந்தியுள்ளனர்.
அதிபர் பதவியே வேண்டாம்! இலங்கையின் அஸ்திவாரத்தை ஆட்டும் மூவ்! என்ன நடக்குதுன்னு புரியலயா?
Shyamsundar - Oneindia Tamil : கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையில் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. அங்கு ஆளுநர் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இதனால் அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிரதமர் மகிந்தாவின் ஆட்சி கவிழ்க்கப்படும்.
மக்கள் போராட்டத்தால் நடுங்கி போன ராஜபக்சே குடும்பம்!
இலங்கையில் என்ன நடந்தது?
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகிறது. இந்த போராட்டத்தை தொடர்ந்து இலங்கையில் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை.
புதன், 6 ஏப்ரல், 2022
ஆந்திராவில் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய ஜெகன்மோகன் உத்தரவு... நடப்பது என்ன?
கலைஞர் செய்திகள் : ஆந்திர அரசின் புதிய அமைச்சரவை வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்யுமாறு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில், 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டமாக மாற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் ஜெகன்மோகன். அதன்படி, ஆந்திர மாநிலத்தில் இருக்கும் 13 மாவட்டங்களை பிரித்து புதிதாக 13 மாவட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் உருவாக்கினார். இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.
லெஸ்பியன்ஸ் படத்தை திரையிட மறுக்கும் தியேட்டர்கள்!
மின்னம்பலம் : இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் லெஸ்பியன்ஸ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘காட்ரா’ என்ற இந்தி திரைப்படத்தை திரையிட ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் திரையரங்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
இயக்குநர் ராம்கோபால் வர்மா தற்போது ‘காட்ரா’ என்ற இந்தி படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தெலுங்கில் ‘டேஞ்சரஸ்’ என்ற பெயரிலும், தமிழில் ‘காதல் காதல்தான்’ என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 8-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது' - முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் விளக்கம்
.hindutamil.in : சென்னை: "உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்து தற்போதுள்ள நிலையில் எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும்" என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. முன்னதாக கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது சொத்து வரி உயர்வு குறித்து எழுப்பப்பட்ட முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின்: "சொத்து வரி உயர்வு குறித்து அமைச்சரே விளக்கம் அளித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்பு தேர்தல் நடைபெறவில்லை.
கர்நாடக ஹிஜாப் பெண்ணுக்கு அல் கொய்தா தலைவர் Wanted Terrorist பாராட்டு
மாலைமலர் : கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கோஷமிட்ட மாணவியை அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி பாராட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தின்போது அங்குள்ள தனியார் கல்லூரியில் முஸ்கான் என்னும் மாணவி ஹிஜாப் அணிந்து வந்தபோது, சில மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த மாணவி பதிலுக்கு, அல்லாஹூ அக்பர் என கோஷமிட்டார்.
இந்நிலையில், அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி வெளியிட்டுள்ள 8 நிமிட வீடியோவில், கர்நாடக மாணவி முஸ்கானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ரத்து - அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீர் உத்தரவு..!!
மாலைமலர் : கொழும்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. இந்த நெருக்கடியை முன்வைத்து இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர்.
எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்து, இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அரசில் இணைந்து மந்திரி பதவிகளை பெறுமாறு அனைத்துக்கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுத்து விட்டன. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்று அவை வலியுறுத்தி உள்ளன. இதனால் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றி வருகிறது.
இந்நிலையில் இலங்கையில் ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வரும் அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு முதல் அவசர நிலை சட்டம் திரும்பப் பெறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 5 ஏப்ரல், 2022
இலங்கை சுயமரியாதை இயக்க முன்னோடி எஸ் டி சிவநாயகம்
இராதா மனோகர் : அமரர் எஸ் டி சிவநாயகம்
RM.veerappan S.Rasathurai S.T.sivanayakam |
இலங்கை பகுத்தறிவு கழக முன்னோடி
மட்டக்களப்பு பகுத்தறிவு கழக நிறுவனர்
இலங்கை திராவிட இயக்க முன்னோடிகளில் முக்கியமானவர்
அமரர் எஸ் டி சிவநாயகம் அவர்களின் மிக நெருங்கிய நண்பர் திரு செல்லையா ராசதுரை (முன்னாள் அமைச்சர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் திரு எஸ் டி சிவநாயகம் பற்றி சில நினைவுக
ST.Sivanayakam Manavai Thambi Nedunchezhiyan |
ளை காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் திரு ந.வித்தியாதரனிடம் பகிர்ந்திருந்தார்
அதில் இருந்து சில பகுதிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
எனக்கு இப்போது வயது 95 . அந்த தலைமுறையில் தந்தை செல்வா , வன்னியசிங்கம். ராஜவரோதயம் போன்ற தலைவர்களோடு நெருங்கி பழகியவர்களில் நான் மட்டும்தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று நினைக்கிறேன்
எஸ் டி சிவநாயகம் அண்ணன் குறித்து நினைவுகளை மீட்க எனக்கும் பல விடயங்கள் உண்டு.
ரஷ்யா – யுக்ரேன் மோதல்: எரிந்துபோன பீரங்கிகளின் மிச்சமும் பிணங்களும் – யுக்ரேன் நகர வீதிகளில் அழிவின் சாட்சிகள்
பிப்ரவரி 24-ஆம் தேதியன்று ரஷ்ய படைகள் யுக்ரேனுக்குள் நுழைந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, யுக்ரேன் படைகள் புச்சா நகரத்தின் வழியாக கீயவ் நகருக்குள் நுழைய முயன்ற ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களின் நீண்ட வரிசையை அழித்தனர்.
பல யுக்ரேனிய படைகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில், ரஷ்ய படைகளின் முன்னேற்றம் தடுக்கப்பட்டு, அந்த வாகனத் தொடர்வரிசை அழிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் மாளிகையின் முடிவுகளின் ஒரு பகுதியாக, கிழக்கு யுக்ரேனில் நடத்தப்படும் போரில் கவனம் செலுத்தத் தொடங்கியதால், வெள்ளிக்கிழமை அன்று கடைசி ரஷ்ய வீரர்களும் புச்சாவிலிருந்து வெளியேறினார்கள் இதனால் பிபிசி குழுவால் புச்சாவுக்குள் செல்ல முடிந்தது.
சுப்பிரமணியன் சாமி : இவர்களின் (பாஜக) அறிவு வறட்சியே இதற்கு காரணம்”.. ஒன்றிய அரசை வறுத்தெடுக்கும் சாமி
கலைஞர் செய்திகள் : ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாட் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்தது. இதையடுத்து உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதால் 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது.
கோத்தபய ராஜபக்சே ஆட்சி கவிழும் அபாயம்- பாராளுமன்றத்தில் பலம் குறைந்தது
மாலைமலர் : இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் குழப்பமும் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளது. பொது மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக எதிர்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
ஏற்கனவே டீசல், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மின்சாரம் சுமார் 15 மணி நேரம் வருவதில்லை. இந்த நிலையில் இலங்கை முழுவதும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதையடுத்து இலங்கையில் மருத்துவ நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று காலை அறிவித்தார். இதனால் மருந்து பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். மருந்து, மாத்திரை விலைகள் அதிகரித்து வருகின்றன.
அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் இன்றும் தெருக்களில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் எம்.பி.க்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அதானி உலகின் 10-ஆவது பெரும்பணக்காரர் ஆனார் .... முகேஷ் அம்பானியை முந்தினார்!
தீக்கதிர் : புதுதில்லி, ஏப். 4 - அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் தரவரிசையில் முகேஷ் அம்பானியை முந்தி, 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். உலகின் 100 பெரும்பணக்காரர் களின் பட்டியலை, புளூம்பெர்க் நிறு வனம் (BLOOM BERG BILLIONAIRES INDEX) வெளியிட்டுள்ளது. இதில், உலகின் முதல் 10 பணக்காரர்கள் தரவரிசையில், இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானி 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்பு அந்த இடத்திலிருந்த ரிலையன்ஸ் இண்டஸ் ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை அவர் 11-ஆவது இடத்திற்கு தள்ளியுள் ளார். பட்டியலில் ‘டெஸ்லா’வின் எலான் மஸ்க் 273 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் நம்பர் ஒன் பணக்காரராகத் தொடர்கிறார். அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெஸோஸ் 188 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மோடி குடும்பத்தின் சொத்து விபரங்கள் .. பட்டியல்
Kuttimani Thala : மோடியை பற்றி உண்மையான வரலாறு: (சொத்து விபரம்) மோடியின் குடும்ப உறவினர்களைப்பற்றி தேடி கண்டடைந்த சில தகவல்கள்.
1.சோமாபாய் மோடி (75 வயது) ஓய்வு பெற்றமாநில சுகாதார துறை அதிகாரி - தற்போது குஜராத்தில் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்.
2.அமிர்தபாய் மோடி (72 வயது) முன்பு ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்,தற்போது அகமதாபாத் மற்றும் காந்திநகரில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்.
3.பிரஹ்லாத் மோடி (64 வயது) ஒரு ரேஷன் கடை வைத்திருந்தவர,தற்போது இவர் வசம் ஹூண்டாய்,மாருதி மற்றும் ஹோண்டா ஃபோர் வீலர் ஷோ ரூம்கள் வதோதரா மற்றும் அகமதாபாத்தில் உள்ளன.
4.பங்கஜ் மோடி (58 வயது) முன்னதாக மாநில தகவல் துறையில் வேலை செய்தவர்.இன்று சோமா பாய் உடன் மாநில பணியாளர் தேர்வாணையத்திற்கு துணைத் தலைவராக உள்ளார்
மேலே உள்ள நால்வரும் மோடியின் உடன் பிறந்த சகோதரர்கள்.
5.போகிலால் மோடி (67 வயது) முன்னாள் மளிகைக் கடையின் உரிமையாளர்.இன்று அகமதாபாத்,சூரத் மற்றும் வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மாலின் உரிமையாளர்
திங்கள், 4 ஏப்ரல், 2022
திமுகவின் பொதுத்தேர்தல் இலாக்கா (சுதந்திரன் - 1954 ஒக்டோபர் 10 ) எஸ் டி சிவநாயகம்
எதிர்கால பொதுச்செயலாளர். திரு இரா நெடுஞ்செழியன் இலங்கை விஜயம் கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழாவில் மூன்று சொற்பொழிவுகள் ஆற்றுவார் திராவிட முன்னேற்ற கழகத்தின் எதிர்கால பொதுச்செயலாளரும் மன்றம் மாதமிருமுறை இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு இரா.நெடுஞ்செழியன் எம் ஏ இம்மாதம் 14 ஆம் தேதி கொழும்பு வருகிறார்
சுமார் பத்து தினங்கள் இலங்கையில் தங்கும் நெடுஞ்செழியன் கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழாவில்
முத்தமிழ் , இலக்கிய இன்பம் , புரட்சி கவிஞர் என்ற மூன்று தலைப்புக்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவர் என்றும்.
கொழும்பு திராவிட முன்னேற்ற கழக ஆதரவில் மருதானை கிண்னெர்ஸ் ரோட் அரசினர் பாடசாலை மண்டபத்தில் 24 ஆம் தேதி ஒரு இயக்க சொற்பொழிவாற்றுவர் என்றும் தெரிகிறது.
கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழா வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில் இம்மாதம் 15. 16 . 17 ஆம் திகதிகளில் நடைபெறும்.
திரு நெடுஞ்செழியன் இலங்கையில் நிற்கும் காலை இலங்கையின் பல பாகங்களுக்கும் சுற்று பிரயாணம் செய்து இடங்களையும் திமுகவின் வளர்ச்சியையும் பார்வையிடுவார்.
சுதந்திரன் ஆசிரியர் திரு எஸ் டி சிவநாயகம் கடந்த ஆவணி மாதத்தில் சென்னை சென்றிருந்த போது அறிஞர் அண்ணாதுரை திரு நெடுஞ்செழியனை அறிமுகம் செய்து வைக்கையில் நெடுஞ்செழியன் திமுகவின் எதிர்கால பொதுச்செயலாளர் . அநேகமாக அடுத்த ஆண்டு தெரிவுசெய்யப்படுகிறார் என்றார்.
ஜனாதிபதி கோத்தாவின் அழைப்பை நிராகரித்தது சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி
வீரகேசரி : தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜன பலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, “பொதுமக்களின் வேண்டுகோள் கோட்டா வீட்டிற்கு செல்ல வேண்டும், நாங்கள் அந்த போக்கை ஆதரிப்போம் மற்றும் ராஜபக்ஷக்களின் கீழ் எந்த பதவியையும் ஏற்க மாட்டோம்” என்றார்.
ராஜபக்ஷ அரசின் பதவிக்காலத்தின் கடைசி சில நாட்கள் இது என்று கூறிய அவர், மீண்டும் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த வகையிலும் உதவாது என்றார்.
கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது தமிழ்நாடு அரசு - தடுப்பூசி கட்டாயம் இல்லை!
கலைஞர் செய்திகள் : தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவியதை அடுத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூ செலுத்தப்பட்டு வந்தது. மேலும் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை வாரம்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 23 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம், கை கழுவுதல், கூட்ட நெரிசல் தவிர்த்தல் ஆகியவற்றைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவை ராஜினாமா . அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் எதிரொலி
கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கும் போடப்பட்டதால் கொழும்பு நகர வீதிகளில் ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் பொய்யானது என்றும், தற்போது அப்படி எந்த திட்டமும் இல்லை என்றும் இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
ஞாயிறு, 3 ஏப்ரல், 2022
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்! கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி
மாலைமலர் : திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல் - அதிர்ச்சி அடைந்த பக்தர்கள்
உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது திடீரென கடல் சில மீட்டர் தூரம் உள்வாங்கியதால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால் கடற்கரைக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து விலகிச்சென்றனர்.
திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியதற்கு என்ன காரணம் என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூரில் இன்று காலையிலும் கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியதில், பாறைகள் வெளியே தெரிய தொடங்கின. இதனால் கடற்கரையில் இருந்த பக்தர்கள் அச்சமடைந்தனர்.
Sri Lanka அவசர நிலை பிரகடனம்.. சமூக வலைதள தடை நீக்கம்.. இலங்கை அரசின் திடீர் விளக்கம்..
Thanalakshmi V - tamil.asianetnews.com : பொருளாதார நெருக்கடி:
இலங்கையில் முடக்கப்பட்டிருந்த சமூக வலைதள சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது என்று தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
இலங்கை அரசு அந்நிய செலாவணி கையிருப்பு குறைவால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும் பிற நாடுகளிடமிருந்து பெற்றுள்ள கடன் அளவு அதிகமானதால், அன்னியச் செலாவணி கையிருப்பு 2000 கோடி டாலருக்கும் குறைந்துவிட்டதால் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், அத்தியாவசியப்பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால அனைத்து பொருடகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா!
etvbharat.com : கொழும்பு : இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் தவித்துவருகின்றனர். இந்நிலையில் மூன்று நாள்கள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.3) நள்ளிரவு முதல் சமூக வலைதளங்கள் மீதான தடை அமலுக்குவருகிறது. நாடு முழுக்க 36 மணி நேரம் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
மேலும் சமூக வலைதளங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகையால் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூடியூப், ஸ்நாப்சாட், டிக்டாக் மற்றும் இன்ட்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கிபோய் உள்ளது.
பார்ப்பனர்களுக்கு தானம் கொடுத்தால் கிடைக்கும் அதிஷ்டங்கள்! .. வருண சிந்தாமணி என்கின்ற சுரண்டல் தத்துவ சிந்தாமணி
Dhinakaran Chelliah : “வருண சிந்தாமணி” விமர்ச்சிக்கும் பிராமணர்க்கீந்த தானபலன்;
சகலதானமும், அந்தணர்க்கே கொடுக்கவேண்டும்.
அவர்களுக்குக் கொடுக்கும் பூதானத்தால் சொர்க்கமும்,
கோதானத்தால் வைத்தரணி என்னும் அக்கினி ஆற்றைக் கடத்தலும்,
கிருக தானத்தால் சொர்க்கம் பெறுதலும், குடைத் தானத்தால் உஷ்ண நிவிர்த்தியும்,
பாதரட்சைத் தானத்தால் நடையில் உண்டாகும் உபாதியொழிவும், கந்தத்தானத்தால் துர்காற்றம் ஒழிவும், அன்னதானத்தால் சுகமும் அடைவன்.
வீட்டின்மேலே கழுகு வந்து இருந்தால் அதைப்பிராம ணனுக்குத்தானஞ்செய்தாற் பாவவிமோசனமாம்.
பூனையைக்கொன்றால் பொன்னாற் பூனை செய்து பிராமணனுக்குத் தானஞ் செய்தால் பாப விமோசனமாம். இவை போலுந் தானபலன்கள் பலவுள விரிக்கிற் பெருகும்.
நடிகர் ஷாருக் கான் மகன் வழக்கில் முக்கிய சாட்சி திடீர் உயிரிழப்பு! சாட்சியின் இறப்பு சந்தேகம் தருகிறது
கலைஞர் செய்திகளை : நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய சாட்சி திடீரென மரணம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்ய்யப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். சொகுசு கப்பலில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வழக்கில், தனியார் புலனாய்வாளர் கேபி கொசாவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
ஆர்யன் கான் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட பிரபாகர் தாக்கல் செய்த அறிக்கையில், “சொகுசு கப்பலின் வரவேற்பறையில் இருந்தபோது, கப்பலில் உள்ளவர்களை அடையாளம் காட்டும்படி என்னிடம் தெரிவித்தனர். இதற்காக வாட்ஸ்-அப் மூலம் படங்களை அனுப்பினர்.
மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும்- மகாராஷ்டிரா அரசுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை
மாலைமலர் : தேர்தலின் போது தாம் எதிர்த்த கட்சிகளுடன் கூட்டணி வைத்து வாக்காளர்களுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும், ராஜ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது:
மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு மகாராஷ்டிரா அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகின்றன? இதை நிறுத்தாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் ஹனுமான் சாலிசா ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கும்.